Tuesday, May 28, 2024
முகப்புசமூகம்சாதி – மதம்தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் - வன்னியர்) புரட்சிகர மணவிழா !

தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !

-

லித், வன்னிய சாதிகளைச் சேர்ந்த இளவரசன் – திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும், இதை ஒட்டி பாமக தலைமையில்ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களின் வீடுகளை எரித்து சூறையாடியதையும் தமிழக மக்கள் அறிவார்கள். அதனைத் தொடர்ந்து தர்மபுரியில் சாதிய உணர்வு, முரண்பாடு தீவிரமடைந்தது. சாதி பெருமிதம் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட சாதிய கருத்துகளுக்கு ஆட்பட்டனர், சாதி வெறிக்கு பலியாகினர்.

சாதி கடந்து உழைக்கும் மக்களை ஒரே வர்க்கமாக அணிதிரட்டுவது தான் இப்பகுதியில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியின் கொள்கை, நடைமுறை. மேலே குறிப்பிட்ட சாதிவெறி தாக்குதலுக்கு பிறகும் வர்க்க ஒற்றுமையை கட்டியமைக்கும் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்றோம்.

சாதி என்பது இந்த சமூகத்தை பீடித்திருக்கும் நோய், அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் முதலில் சமூகத்தை நேசித்து அக்கறை கொள்ள வேண்டும். மேலும் சமூகம் சீரழிகிற போது அதை மாற்றியமைக்கும் அறிவியல் விதிகளை புரிந்திருப்பதோடு, அதை நடைமுறையில் சாதிக்க துணிவும் தியாகமும் தேவை. இவற்றை ஒருங்கே கொண்ட அமைப்பு தான் விவசாயிகள் விடுதலை முன்னணி.

வி.வி.மு தோழர்கள் தமது பிள்ளைகளை சாதி மறுத்து பள்ளிகளில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை செய்து சாதியை மனதளவில் கூட நினைக்காமல் வாழ்ந்து வருகின்றனர். அதே போல பல சாதி மறுப்பு திருமணங்களை தர்மபுரி மாவட்டத்தில் நடத்தி வருகிறோம்.

எனினும் இளவரசன் மரணத்திற்குப் பிறகு தர்மபுரி மாவட்டத்தில் சாதிய கருத்துக்கள் மேலோங்கியுள்ள இன்றைய நிலையில் சாதி மறுப்பு புரட்சிகர மணம் புரிவது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

விவசாயம் அழிந்து வாழ வழியின்றி தர்மபுரி மக்கள் நாடோடிகளாவது இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை எந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியாலும் மாற்றிவிட முடியாது. ஆனால் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்ற வகையில் மக்களிடம் நிலவும் மூடத்தனமான சாதி உணர்வைத் தூண்டிவிட்டு அதையே தனது பிழைப்புக்கு மூலதனமாக மாற்றி வருகின்றனர், சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள். உழைக்கும் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கும் போது மட்டுமே ஓட்டுச்சீட்டு சதிகாரர்களின் இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள முடியும். எனவே மக்கள் ஒற்றுமையின் அவசியம் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாகத் தான் 27.06.2014 அன்று தர்மபுரி மாவட்டம், பொன்னாகரம் பகுதியில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தினோம்.

சொல்லப்படுகிற வன்னிய சாதி ம்ற்றும் தலித் சாதி பின்னணியாகக் கொண்ட மணமக்கள் மணக்கோலம் பூண்டனர். மணமகன் தோழர் கோபிநாத், பொன்னாகரம் வட்டம் கரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். மணமகள் தோழர் ஜெயந்தி கரியம்பட்டிக்கு அருகில் உள்ள கள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தோழர் கோபிநாத் விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்டாரச் செயலாளர். இவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் காதலித்துக் கொண்டது மட்டுமல்ல, இந்த சமூகத்தையும் காதலித்தனர். சமூக மாற்றத்திற்காக போராடிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் முன்னணித் தோழர்களாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது என்பது தான் இதன் சிறப்பு.

மாலை 5.00 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு உறவினர்களும் தோழர்களும் புடை சூழ மணமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பறை இசை முழக்கத்துடன் ”வர்க்க ஒற்றுமையை கட்டியமைத்து சாதியை ஒழிப்போம்” என்ற பேனர் முன் செல்ல, மணக்கோலத்தில் இருந்த மணமக்களைப் பின் தொடர்ந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட தோழர்களும் உறவினர்களும் ஊர்வலமாக வந்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை கடைவீதியில் இருந்த ஆயிரக்கணக்காண மக்கள் ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும் கவனித்தனர். இவ்வாறு ஒரு கிலோமீட்டர் மணமக்கள் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பிறகு திருமண மண்டபத்திற்கு வந்து உணவு விருந்தை முடித்துக் கொண்டு மாலை 6.00 மணிக்கு இருவீட்டார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நடந்தேறியது. 1500-க்கும் மேற்பட்ட மக்கள் இத்திருமணத்தில் சாதி கடந்து கலந்து கொண்டனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தலைமை தாங்க, மக்கள் கலை இழக்கிய கழகத்தின் கவிஞர் துரை சண்முகம் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சடங்கு, சம்பிரதாயம், தாலி, சாதி, தட்சணை, மொய் ஏதுமின்றி நடைபெற்ற இத்திருமணம் தர்மபுரி மக்களிடையே புரட்சிகர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அழைப்பிதழ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படிக்கு,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தர்மபுரி (மாவட்டம்).

 1. தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !
  Correction :
  தர்மபுரியில் சாதி மறுப்பு (தளித்தியர் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !

  Note:வினவு பக்கம் பக்கமாக வீளக்கம் கொடுக்காமல் தவறை திருத்திகொள்ளுமா ?

  தலித் அல்லது தளித் இரண்டும் தவறு P.ஜோசப். தளித்தியர் என்பதே சரி.
  மிகவும் பிற்பட்டோர், பிற்பட்டோர், முற்பட்டோர், பிராமணர் ,கவுண்டர், நாடார்,சாணார்,தேவர், தேவேந்திர குல வெள்ளாளர், என்று அனைத்து வகைமையீலும் உயர்வுகாக “ர்” விகுதி சேர்பது போல இந்தியாவில் உள்ள 25% ஒடுக்கப்பட்ட மக்களை தளித்தியர் என்று “ர்” விகுதியுடன் அழைப்பது தான் சரி

  • சரவணன் மன்னிக்கவும் சரவணர்,
   ஒரு விசயம் தெரியவில்லை என்றால் கேளுங்கள். மாறாக நீங்களே குத்து மதிப்பாக ஒரு முடிவு செய்து கொண்டு இதை ஏற்றுத்தான் ஆக வேண்டும், விளக்கம் கொடுக்க கூடாது என்று பேசுவது தன்மையில் ஜனநாயக மறுப்பு அல்லது பார்ப்பனியத்தின் மேட்டிமைத்தன்மை கொண்டது. அரிஜன் என்று காங்கிரசு, காந்தி சொன்ன சொல் அடிமைத்தனத்தை ஆதிக்கம் செய்பவன் தரும் கருணை வடிவிலான பிச்சை என்று தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட முற்போக்கு இயக்கங்கள் எதிர்த்து வந்தன.தாழ்த்தப்பட்ட மக்கள் என்று அழைக்கப்படுவது பொருள் ரீதியில் சரியானது. அதையும் நாங்கள் பயன்படுத்துகிறோம்.தலித் என்ற சொல் மராட்டிய உலகிலிருந்து இந்தியாவெங்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த சொல்லின் மூலம்,பொருள் குறித்து இணையத்தில் தேடிப்படித்து தெரிந்து கொள்ளுங்கள். பொதுவில் தாழ்த்தப்பட்ட மக்களின் போர்க்குணமிக்க எதிர்ப்பை சுட்டும் சொல்லாகவும் இது அறியப்படுகிறது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களின் பல்வேறு உட்சாதிப் பிரிவு மக்களையும் இந்த தலித் என்ற சொல் குறிப்பதால் அனைவரும் பயன்படுத்துகின்றனர்.நாங்களும் பயன்படுத்துகிறோம். இது வேற்று மொழியில் இருந்து வந்த ஒரு பெயர்ச் சொல். அதை அப்படியே பயன்படுத்துவதுதான் சரி. இன் இர் விகுதி இங்கே பொருந்தாது. எந்த இலக்கணத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஒரு தமிழாசிரியரிடமாவது அறிந்து கொள்ள வேண்டும். தயவு செய்து இதற்கும் பக்கம் பக்கமாக பதில் போட்டு அனைவரின் நேரத்தையும் விரயமாக்க வேண்டாம் என்று பணிவுடன், தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி.

   • வினவு,

    [1]தலித் என்ற மாற்று மொழி[மராட்டிய] பெயர்ச் சொல்லுக்கு “இன் இர்” விகுதி பொருந்தா என்று தமிழுக்கு தொல்காப்பியம், நன்னூல் இவைகளையும் தாண்டி புது இலக்கணம் படைக்கும் வினவின் புத்தமிழ் முயற்சிக்கும் என் வாழ்த்துக்கள்.

    [2] பிராமணர் என்ற வட மொழி பெயர்ச் சொல் “இர்” விகுதியுடன் பயணிப்பதையும் ,வினவு நோக்கி அறிக !

    [3]சூத்திரன் என்ற வட மொழி பெயர்ச் சொல் “இன்” விகுதியுடன் பயணிப்பதையும் ,வினவு நோக்கி அறிக !

    [4]சிவகாமியின் தலித்திய சபதம் – குற்றம் நடந்தது என்ன ? வினவு கட்டுரையீல்

    “அதில் முக்கியமானது ‘தலித் அல்லாதவர் அம்பேத்கரை குறித்து எழுத தகுதியில்லை’ என்பது. இது தலித்திய அரசியல், தலித் தலைமை….”

    “தலித்திய” என்று “இர்” விகுதி வராமல் வராமல் தயங்கும் காரணம் என்னவோ ?

    //இது வேற்று மொழியில் இருந்து வந்த ஒரு பெயர்ச் சொல். அதை அப்படியே பயன்படுத்துவதுதான் சரி. இன் இர் விகுதி இங்கே பொருந்தாது. எந்த இலக்கணத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஒரு தமிழாசிரியரிடமாவது அறிந்து கொள்ள வேண்டும்.//

    • ஐயா, திரும்பவும் சொல்கிறோம். ஒரு விசயம் தெரியவில்லை என்று கேட்டால் நீங்கள் எந்த தகுதிக் குறைவையும் அடையப் போவதில்லை. மாறாக தெரியாமல் அடம் பிடிப்பதுதான் வறட்டு கௌரவம். பிராமணன் அல்லது பிராமணர், சூத்திரன் அல்லது சூத்திரர் என்று அன் இர் விகுதி வேறுபடுவதாக நாம் பயன்படுத்துவது ஒருமை, பன்மைக்காக மட்டுமே. அடுத்து ஒருவர் பிராமணன் என்று அழைக்கப்பட்டால் இழிவு, சூத்திரர் என்று அழைத்தால் பாராட்டு-கௌரவம் என்று நீங்கள் புரிந்து கொள்வது இந்த உலகில் மிகப்பெரும் அறியாமையாகும் அல்லது அடிமுட்டாள்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம். பிரமாணனின் இன் இர் ஏது வந்தாலும் அவன் அல்லது அவள் அல்லது அவர் ஒரு உயர்குடிப் பிறப்பாளன் என்றே அந்த வார்த்தை சொல்லுகிறது.சூத்திரனில் இன்இர் எது வந்தாலும் அவர் அல்லது அவள் அல்லது அவன் வேசிமகன் அல்லது இழி பிறப்பாளன் என்றே பொருள். இரண்டு பெயர்களும் சுட்டும் பொருள்தானே முக்கியம்? இங்கே இன் இர் விகுதியால் எந்த பயனுமில்லை. தலித் என்பது ஒருமை பன்மையைத் தாண்டிய போராட்ட உணர்வைச் சுட்டுகிற ஒரு சொல். தலித் இளைஞர், தலித் மக்கள், தலித் பெண் என்ற பயன்படுத்துவதுதான் சரி. மற்றும் தலித் என்றே சொல்லை ஒடுக்கப்ப்ட்டோரின் எதிர்ப்பு உணர்வை பிரதிபலிக்கிறது.இர் இல்லை என்பதால் இது தகுதிக் குறைவு என்று நீங்கள்தான் அறியாமையால் கருதிக் கொள்கிறீர்கள். மேலும் முழு இந்தியாவும், தமிழகமும் தலித் என்றே பயன்படுத்தி வருகிறது.ஆகையால் நாங்களும் தலித் என்றே எழுதுகிறோம், எழுதுவோம். நீங்கள் தளித்தியர் என்று தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் அப்படித்தான் எழுத வேண்டும் என்று உத்திரவு போடாதீர்கள்.

     • மேலும் தலித்தியம் என்ற பதம் மார்க்சிசம் அல்லது மார்க்சியம் போன்று தத்துவ சமூக அரசியல் பொருளில் பயன்படுத்தப்படுகிறது. இதை நாங்கள் ஏற்கவில்லை. தலித்தியம் என்று ஒரு இயம் ஒரு தத்துவமாக உலகம் முழுவதும் உள்ள மனித சமூக பிரச்சினைகளை ஆராய்ந்து விதிகளையோ, மாற்றத்தையோ,வளர்ச்சியையோ கூறும் அடிப்படை கொண்டதல்ல. அதனால்தான் அதை மார்க்சியம் போன்று ஒரு இயமாக ஏற்க இயலாது.மேலும் மனித சமூகத்தின் அனைத்தும் தழுவிய இயக்கத்தை மார்க்சியம் மட்டுமே எடுத்து சொல்கிறது என்றும் இதை பெரியாரியமோ, இல்லை தலித்தியமோ செய்ய இயலாது என்றும் கூறுகிறோம். ஆகையால் தலித் வேறு, தலித்தியம் வேறு. அதே நேரம் தலித்தியம் என்று இலக்கியவாதிகளும், அரசியல்வாதிகளும் பயன்படுத்துவதால் அவர்களை விமரிசிக்கும் பொருட்டு அதை தலித்தியம் என்று அழைத்து விமரிசிக்கிறோம்.

     • வினவு,

      [1]இன்றைக்கு பிராமணர்கள், பார்ப்பனர்கள், அந்தணர்கள் என்ற சொற்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைக்[பன்மை] குறிக்க வழங்குகின்றன.பிராமணர், பார்ப்பனர், அந்தணர் என்ற சொற்கள் ஒருமையில் குறிப்பிட்ட வழங்குகின்றன. இதை வினவு நினைவு கொள்ள வேண்டும்.
      நன்றி தமிழ் பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
      http://siragu.com/?p=2623
      //பிராமணன் அல்லது பிராமணர், சூத்திரன் அல்லது சூத்திரர் என்று அன் இர் விகுதி வேறுபடுவதாக நாம் பயன்படுத்துவது ஒருமை, பன்மைக்காக மட்டுமே//

      [2]நான் பிராமணர், சூத்திரன் என்று “இர்”, “இன்” என்று கொடுத்த உதாரணத்தை திரித்து “சூத்திரர் என்று அழைத்தால் பாராட்டு-கௌரவம் என்று நீங்கள் புரிந்து கொள்வது இந்த உலகில் மிகப்பெரும் அறியாமையாகும் அல்லது அடிமுட்டாள்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்” என்று வினவு என்னை இட்டு கட்டி பேசுவது கயமை தனம்.

      //அடுத்து ஒருவர் பிராமணன் என்று அழைக்கப்பட்டால் இழிவு, சூத்திரர் என்று அழைத்தால் பாராட்டு-கௌரவம் என்று நீங்கள் புரிந்து கொள்வது இந்த உலகில் மிகப்பெரும் அறியாமையாகும் அல்லது அடிமுட்டாள்தனமாகவும் எடுத்துக் கொள்ளலாம்//

      [3]முதலில் தலித் என்பதை பெயர் சொல் என்றது வினவு. இப்போது போராட்ட உணர்வை குறிக்கும் பண்புப் பெயர் ஆக்குகின்றது வினவு.
      //தலித் என்பது ஒருமை பன்மையைத் தாண்டிய போராட்ட உணர்வைச் சுட்டுகிற ஒரு சொல் தலித் இளைஞர், தலித் மக்கள், தலித் பெண் என்ற பயன்படுத்துவதுதான் சரி.//

      [4]வினவு கொள்கை படி ஒடுக்க பட்ட மக்களீன் சாதிகளை குறிக்க “இர்” அல்லது “இன்” பயன்படுத்துவார்களா என்பதை வினவு தான் உணர்த்த வேண்டும்.
      //மற்றும் தலித் என்றே சொல்லை ஒடுக்கப்ப்ட்டோரின் எதிர்ப்பு உணர்வை பிரதிபலிக்கிறது.இர் இல்லை என்பதால் இது தகுதிக் குறைவு என்று நீங்கள்தான் அறியாமையால் கருதிக்க கொள்கிறீர்கள். //

      [5]வினவுக்கு என்ன அனைத்து இந்திய மொழிகளும் அத்துபடியா ? வினவுக்கு என்ன அனைத்து இந்திய மொழிகளும் அத்துபடியா ? பிற இந்திய மொழிகளில் தலித் என்ற சொல்லின் இயல்பு [Grammar meaning ] , [Singular,plural ][பயன்பாட்டின் உயர்வு தாழ்வு] வினவுக்கு தெரியுமா என்ன ?
      //மேலும் முழு இந்தியாவும், தமிழகமும் தலித் என்றே பயன்படுத்தி வருகிறது.ஆகையால் நாங்களும் தலித் என்றே எழுதுகிறோம், எழுதுவோம். நீங்கள் தளித்தியர் என்று தாராளமாக எழுதிக் கொள்ளலாம். ஆனால் நாங்கள் அப்படித்தான் எழுத வேண்டும் என்று உத்திரவு போடாதீர்கள்.//

      • அய்யா வினவு அய்யா சரவனன் தலித் ,தளித் ,அரிசன் எதுவும் எங்களுக்கு அடை மொழி ஆக வேண்டாம் பட்டியல் இணத்தவர் என்பது நன்றாகத்தானே இருக்கிறது அதையே பயன்படுத்தலாமே தலித் என்பது போராட்ட உணர்வை பிரதிபலிப்பது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமே மற்றவர்களுக்கு தலித் என்பது இழிச்சொல்லாகவே பயன்படுகிறது, சாதி பாராமல் திருமணம் செய்த மணமக்களுக்கு வாழ்த்துக்கள் உங்கள் வாழ்வின் துவக்கம் சாதி வெறியின் முடிவாக இருக்கட்டும்……..

       • Hi Joseph,

        மற்ற எல்லா பெயர்களைவிட பட்டியல் இனத்தவர்களே தாங்களாக தேர்ந்தெடுத்துக் கொண்ட பெயர்தான் தலித்.

        ‘தலித் முரசு’ பத்திரிக்கை கேள்வி பட்டிருக்கிறீர்களா.

  • Dear Vinavu,

   எனக்கும் தலித்தியர் என்ற பதம் சரியாகத்தான் படுகிறது. (It creates a symmetry among different names).

   இனி நானும் இதையே பயன்படுத்தப் போகிறேன். நீங்களும் பரசீலிக்க வேண்டுகிறேன். நன்றி.

   மணமக்களுக்கு வாழ்த்துக்கள். வி வி மு தோழர்களுக்கு நன்றிகள்.

   • வினவு,

    தனியாக பயன் படுத்தும் போது தலித் இளைஞர், தலித் மக்கள், தலித் பெண் என்ற பயன்படுத்துவது சரி தான்.

    மற்ற ர் போட்ட ஜாதிப் பெயர்களுடன் பயன்படுத்தும் போது சமநிலைக்காகவும் ஒற்றுமைக்காகவும் தலித்தியர் என்று எழதுவது மேலும் சிறப்பானது தான். இந்தப் பதத்தில் ஒரு இயம் இருப்பதாக நாம் பொருள் கொள்ளத்தேவையில்லை.

    • யுனிவர்படி/சரவணன்,
     ஆதிக்க சாதிகளான கவுண்டர்,தேவர்,பார்ப்பனர்,வன்னியர் போன்ற சாதி பெயர்களுக்கும் தாழ்த்தப்பட்ட சாதிகளான சக்கிலியர்,பள்ளர்,,பறையர் போன்ற பெயர்களுக்கும் விகுதியாக ‘ர்’ சேர்ப்பது சரி தான். தலித் என்பது நாம் உருவாக்கிய பெயர்ச்சொல் அல்ல. அடிமைப்பட்ட மக்களை விளிக்கும் பொதுவான ஒரு சொல் ஆகும். ஒரு சொல்லுக்கு விகுதியாக ‘ன்’ இருந்தால் ‘ர்’ போடலாம் தலித் என்ற சொல்லுக்கு அது தேவையில்லை என்பதே எனது புரிதல். நாம் அந்த மக்களுக்கு மரியாதை குடுப்பது என்பது வெறுமனே விகுதியாக ‘ர்’ சேர்ப்பது அல்ல மாறாக ஆதிக்க சாதிகளின் அடையாளங்களை அழிப்பது தான்.

     நன்றி.

     • சிவப்பு,

      “இது வேற்று மொழியில் இருந்து வந்த ஒரு பெயர்ச் சொல். அதை அப்படியே பயன்படுத்துவதுதான் சரி. இன் இர் விகுதி இங்கே பொருந்தாது.எந்த இலக்கணத்தை எங்கே பயன்படுத்த வேண்டும் என்று நீங்கள் ஒரு தமிழாசிரியரிடமாவது அறிந்து கொள்ள வேண்டும். ” என்ற வினவு கூறும் வரையரை எந்த தமிழ் இலக்கணம் சார்ந்தத்து என்பதை கூற முடியுமா? மேலும் தலித்தியம் என்ற சொல் பயன்பாட்டை வினவு ஏற்கின்றது. தலித்தியம் என்பது “பெயர் அல்லது வினைச் சொற்களுடன் விகுதிகளைச் சேர்த்து ஆக்கப்படும் பெயர்ச் சொற்கள் ஆக்கப் பெயர் ஆகும் என்னும் வரையறை படி ” ‘தலித்’ என்ற பெயர் சொல்லுடன் ‘இயம்’ என்ற விகுதியை சேர்க்கும் போது ‘தலித்தியம்’ என்ற ஆக்க பெயர் வருகின்றது அல்லவா ?அது போன்றே ‘தலித்’ என்ற ஒடுக்கபட்ட மனிதர்களை குறிக்கும் பெயர் சொல் விகுதி இன்றி நிற்பது தகுமா ? எனவே தான் தமிழ் இலக்கணப்படி ஒருமையில் ‘தலித்’ ‘அர்’ விகுதி பெற்று தலித்தியார் என்பதும், பன்மையீல் ‘தலித்’ ‘அர்’ மற்றும் ‘கள்’ விகுதி பெற்று தலித்தியார்கள் என்பதும் தான் மிக்க சரியான பயன்பாடு.

      மேலும் வினவு தன் புரியதலில் இருந்து கூறும் விடயம் என்ன என்றால் “தமிழில் அன் இர் விகுதி நாம் பயன்படுத்துவது ஒருமை, பன்மைக்காக மட்டுமே” என்பது தவறானது பார்திர்களா ? ‘அன்’ விகுதி உயர் தினை ஒருமையிலும் , ‘அர்’ விகுதி என்பது உயர் தினை மரியாதை ஒருமையீலும், ‘அர்’ விகுதி என்பது உயர் தினை மரியாதை ஒருமையீலும் தான் வரும் என்பதை அடிப்படை இலக்கணம் by நுமான் என்ற பேராதனை பல்கலைக்கழகம் வெளியீட்டு உள்ள நூல் கூறுகின்றது.

      மேலும் “கள் ” என்ற விகுதி பன்மையில் பலர் பால் கூறிக்கும் என்பது நாம் அறிந்தது தானே ?

  • தலித் என்பது வன்னியர், தேவர், வெள்ளாளர் போன்று சாதிப்பெயர் அல்ல. தலித் என்ற சொல்லை, ஒடுக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, எழவிடாமல் அடக்கப்பட்ட, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கப்பட்ட மக்கள் அனைவரையும் குறிக்கும் வகையில் தான் மகாராட்டிரத்தில் பெண்ணுரிமை, தீண்டாமை என்பவற்றை எதிர்த்துப் போராடிய மகாத்மா கோவிந்தராவ் பூலே என்பவர் முதலில் பாவித்தார். ஆகவே தலித் என்ற சொல்லைத் தாழ்த்தப்பட்ட சாதியினரை மட்டுமல்லாமல், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட ஏனைய சாதியினரைக் குறிப்பதற்குக் கூடப் பாவிக்கலாம்.

   தலித் என்று சொல்லும் போது சமூகத்தால் ‘அநீதி இழைக்கப்பட்டவர்’ என்ற ஒரு எண்ணம் உருவாகிறது. இந்தச் சொல் உருவாக்கப்பட்டதன் நோக்கமே அது தான் என்று நான் நம்புகிறேன். ஆனால் சரவணர் என்னடாவென்றால், வன்னியர், வெள்ளாளர், பறையர், பள்ளர் என்பது போன்று தலித் என்ற சொல்லுக்கு “இயர்” ஐச் சேர்த்து அதையும் ஏற்கனவே இருக்கிற ஆயிரத்தெட்டு சாதிப்பெயர்களில் ஒன்றாக மாற்றப் பார்க்கிறார்.

   இன்னும் சில ஆண்டுகளில் இன்னுமொரு சரவணர் வந்து, தலித்தியர்களில் படித்த தலித்தியரை மேலோங்கி தலித்தியர் என்றும் கூலி வேலை செய்கிற தலித்தியரை கீழோங்கித் தலித்தியர் என்றும் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமென்று கூடக் கூறலாம். உண்மையில் இப்படி இலங்கையில் நடந்தது. அதனால் அண்ணன் சரவணன் பல நல்ல பல முற்போக்கான கருத்துக்களை இந்த தளாத்தில் உதிர்த்துக் கொண்டிருந்தாலும் கூட, அவரது இந்தக் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக எனக்குத் தெரியவில்லை. அதாவது தலித் என்ற சொல்லைத் தலித்தியர் என்று மாற்ற வேண்டுமென்பது சாதியை ஒழிக்கப் புறப்பட்டவர்களே சாதிப்பாகுபாட்டின் நெழிவு சுழிவுகளுக்கேற்ப வளைந்து கொடுக்கப் பழகிக் கொண்டார்கள் என்பதைத் தான் காட்டுகிறது,

   • viyasan,

    உமது சாதி,மத வெறியை எல்லா பதிவின் பின்னுட்டத்திலும் கழுவி, கழுவி எவ்வளவு தான் ஊத்தினாலும் ,வெட்கம் கேட்டு, புத்தி இன்றி மீண்டும் மீண்டும் உளருகின்றிரே வியாசன் ! மணமக்களை வாழ்த்த மனம் இல்லா நீர் எத்தகையவர் ? நீர் யார் பக்கம் ? இத் திருமண நிகழ்வுகள் பற்றி கருத்து கூற நீர் வக்கு அற்று போனது ஏன் ?

    • vinavu,

     வினவு, நான் வியாசனுக்கு பதில் அளிக்கையில், அளித்த பீன்னுட்டத்தீன் இருதி வரியை, “அந்த பிரச்சினைக்கு” உரிய வரியை மட்டும் நீக்கி உள்ளது. நன்று.ஏற்க்கின்றேன். அது போலவே மற்றவர் இடும் பீன்னுட்டத்த்திலும் அந்த பிரச்சினைக்கு உரிய கருத்துகள் வரும் எனில் வினவு அதனையும் நீக்கும் என்று நம்புகின்றேன்

     vinavu://இனி இந்தப் பிரச்சினை குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம், பதிவின் கருப்பொருள் குறித்து பேசுவது சரியாக இருக்குமென்று அனைவரையும் கேட்டுக் கொள்கிறோம்.//

    • ஏனிந்தக் கொலவெறி அண்ணாச்சி?? நான் மணமக்களை வாழ்த்தத் தான் இங்கு வந்தேன். அதற்கிடையில் உங்களின் உளறலைப் பார்த்து, உங்களுக்குப் பதிலெழுதி முடிந்தவுடன் வாழ்த்த வேண்டியது மறந்து விட்டேன். உண்மையில் இந்தச செய்தி எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது, அடுத்த முறை தமிழ்நாட்டுக்குப் போகும் போது நேரில் கண்டு வாழ்த்த வேண்டும் போல் கூட இருந்தது, அதனால் மணமக்களுக்கு எனது மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழவும், சரவணரைப் போல் அவர் சார்ந்த சாதிக்காழ்ப்புணர்வுடன் எதற்கெடுத்தாலும் சாதி, பேதி என்று உளறாமல், தமிழினத்தில் அன்பும் சமத்துவமும் நிலவ அவர்கள் எடுத்துக்காட்டாக வாழ்வார்கள் என நம்பி, அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.

     • viyasan,

      எம்மை , அண்ணாச்சி என்று அழைத்துகொண்டே ,எம்மை பற்றி “சரவணரைப் போல் அவர் சார்ந்த சாதிக்காழ்ப்புணர்வுடன் எதற்கெடுத்தாலும் சாதி, பேதி என்று உளறாமல்” என்று கூறுவது பொருத்தமாக இல்லையே வியாசன் ! உங்களுக்கு, நான் பிறப்பால் மட்டுமே எந்த சாதியை சார்ந்தவன் என்பது எப்படி/எது தெரியும் ? மேலும் சரவணனுக்கு எந்த சாதிக்காழ்ப்புணர்வு இருக்கிறது என்பதையும் நீங்கள் கூறலாமே ?
      உங்கள் உளறளீன் உச்சம் எது தெரியுமா வியாசன் ? நீங்கள் எமக்கு பதில் அளீக்க முயன்றமையால் மணமக்களை வாழ்த்த மறந்ததாக கூறினிர்களே அது தான். எனவே உங்களுக்கு வினவின் பதிவுகளை படிப்பதை விட சரவணனின் பின்ன்னுட்டங்களை படிப்பதில் தான் மிக்க ஆர்வம் போலும். ஒப்புதல் வாக்கு மூலைங்களை இப்போது எல்லாம் அதிக எண்ணிக்கையில் கொடுகின்றீர்கள் வியாசன் !

      Note:
      [1]என் பின்ன்னுட்டங்களை எல்லாம் நீங்கள் படிப்பது இல்லை என்று சமிபத்தில் உளறினிர்களே !

      //சரவணரைப் போல் அவர் சார்ந்த சாதிக்காழ்ப்புணர்வுடன் எதற்கெடுத்தாலும் சாதி, பேதி என்று உளறாமல், தமிழினத்தில் அன்பும் சமத்துவமும் நிலவ அவர்கள் எடுத்துக்காட்டாக வாழ்வார்கள் என நம்பி, அவர்களை மனதார வாழ்த்துகிறேன்.//

      • இப்பொழுது தான் முதல் முறையாக அண்ணன் சரவணன் என்னோடு ‘சீரியசாக’ கதைக்க வந்திருக்கிறார் போலிருக்கிறது. முதலில், என்னுடைய பதில் அவரது மனதைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். மன்னிக்கவும்.

       //உங்களுக்கு, நான் பிறப்பால் மட்டுமே எந்த சாதியை சார்ந்தவன் என்பது எப்படி/எது தெரியும்? ///

       எடுத்ததற்கெல்லாம் ‘என்னுடைய சாதியைப்’ பற்றி விமர்சனம் மட்டும் செய்யவில்லை. எப்படியெல்லாம் இழிவுபடுத்த முடியுமோ அப்படியெல்லாம் இழிவு படுத்தியவர் நீங்கள். என்னுடைய சாதி என்ன என்று எங்குமே நான் குறிப்பிட்டதில்லை. அதில் எனக்கு நம்பிக்கையுமில்லை. நான் சாதி பார்த்து யாருடனும் இதுவரை பழகியதில்லை. நான் பிறப்பால் மட்டுமே எந்த சாதியை சார்ந்தவன் என்று உங்களுக்கு எப்படி/எது தெரியும் என்பதை முதலில் கூறுங்கள்.

       உண்மையைக் கூறுவதானால் எனக்கு நீங்கள் என்ன சாதி என்று தெரியாது, அதனால் தான் ‘அவர் சார்ந்த சாதியின் காழ்ப்புணர்வென்றேன்”, நீங்கள் என்ன சாதியாக இருந்தாலும் அது பொருந்துமல்லவா? நீங்களாகவே என்னுடைய சாதி இதுவாகத் தான் இருக்குமென்ற ஊகத்தில் என்னை இதுநாள் வரை படாதபாடு படுத்தினார்கள், உங்களின் அந்த வழக்கத்தைத் தான் தான் எதற்கெடுத்தாலும் சாதி, பேதி என்று நீங்கள் உளறுவீர்கள் என்றேன்

       உங்களின் மருந்தில் ஒரு சிறிய அளவை நான் உங்களுக்குத் தந்ததும் (giving someone a dose of their own medicine), நீங்கள் நீதி கேட்ட கண்ணகி போல் கொதித்துப் போய் விட்டீர்கள். பார்த்தீர்களா? ஆனால் நீங்கள் செய்தது போல், நான் எந்த சாதி லேபலையும் உங்களுக்கு ஒட்டவில்லை. 🙂

       //உங்கள் உளறளீன் உச்சம் எது தெரியுமா வியாசன் ? நீங்கள் எமக்கு பதில் அளீக்க முயன்றமையால் மணமக்களை வாழ்த்த மறந்ததாக கூறினிர்களே அது தான்.//

       உண்மையில் எனக்கு பொய் சொல்லிப் பழக்கமில்லை. நான் பதிலே கூறாமல் விட்டு விடுவேனே தவிர தேவையில்லாமல் பொய் சொல்ல மாட்டேன். தலித் என்ற சொல்லை முதலில் யார் பாவித்தது என்பதை எங்கோ படித்திருக்கிறேன். ஆனால் நினைவில்லை, உங்களுக்கு அந்தப் பின்னூட்டத்தை இடுவதற்காக நான் சில கூகிள் தேடுதலைச் செய்து என்னுடைய நினைவை உறுதி செய்ய வேண்டியிருந்தது, அதில் மூழ்கியதால், பதிவின் கருப்பொருளை மறந்து விட்டு, அடுத்த பதிவுக்குப் போய் விட்டேன்.

       // எனவே உங்களுக்கு வினவின் பதிவுகளை படிப்பதை விட சரவணனின் பின்ன்னுட்டங்களை படிப்பதில் தான் மிக்க ஆர்வம் போலும்.///

       உண்மை. உங்களின் பின்னூட்டடங்கள் உயிர்ப்பு மிகுந்தவை, உளறலாக இருந்தாலும் எனது வாயில் புன்னகையை வரவழைக்கின்றன. நீங்கள் பதில் சொல்லாத விடயமே இல்லை, பின்னூட்டமிடாத பதிவுமில்லை. உண்மையில் இந்த தளத்துக்கு, உங்களின் பின்னூட்டங்களை வாசிப்பதற்காக மட்டுமே எத்தனை பேர் வருகிறார்களோ யார் கண்டது, அதற்காக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தினால் மட்டும் தான் அறிய முடியும்.

       //என் பின்ன்னுட்டங்களை எல்லாம் நீங்கள் படிப்பது இல்லை என்று சமிபத்தில் உளறினிர்களே!//

       அதெல்லாம் சும்மா… ஒரு பகிடிக்கு சொன்னது… 🙂

       • வியாசன்,

        [1]சிதம்பரம் தீண்டாமை சுவர் இடிப்பு போராட்ட பதிவில், பீன்னுட்டமாக ம க இ க தோழர்கள்[Turai Sanmukam] பக்கம் பக்கமா உங்க யாழ்பான வெள்ளாள சாதி வெறியை பத்தி வீமர்சனம் செய்து எழுதீயது மறந்து வீட்டதா ? மேலும் அதே பதிவின் நான் உங்கள் blogல் இருந்த கட்டுரைகளில் இருந்த யாழ்பான வெள்ளாள சாதி வெறியை விமர்சனம் செய்ததும் மறந்துவிட்டதா ? எவ்வளவு தான் விமர்சனம் செய்தாலும் நான் யாழ்பான வெள்ளாள சாதி வெறியன் கிடையாது என்று கூற வெலங்காத வியாசனுக்கு கூற மனம் இல்லையே ! ஏன் ?

        [2]நாட்டார் தெய்வங்களுக்கு கெடா வெட்டி ,பொங்கல் வைத்து வழி படுவது தமிழ் மக்கள் பண்பாடு. அதை தமிழ் நாட்டில் சங்கராசாரி, ஜெ தடை செய்ய முனைந்தது போலவே , யாழ் பான கெடா வெட்டுகளை நீர் எதிர்ப்பது ஏன் ? வெட்டும் கெடாகளை மண்ணில் போட்டு புதைத்து வீண் செய்யவா போகீன்றோம் ? உண்ண தானே போகீன்றேம் !இலங்கையில் கெடா வெட்டுகளை தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு வரும் ? உம் போன்ற யாழ்பான வெள்ளாள சாதி வெறியர்களுக்கு தானே வரும் !

        [3]இன்னும் நீங்க title ல் தான் இருகிங்க! பதிவின் matter ருக்கு வரவே இல்லை!வியாசன் இந்த பதிவுக்கு சம்பந்தம் உள்ள, சாதி வெறி பீடித்து அலையும் ராம தாசு, காடு வெட்டி பற்றி உங்க கருத்து என்ன ?

        //நான் பிறப்பால் மட்டுமே எந்த சாதியை சார்ந்தவன் என்று உங்களுக்கு எப்படி/எது தெரியும் என்பதை முதலில் கூறுங்கள்.//

 2. வினவுக்கு,

  சாதி மறுப்பு – புரட்சிகர திருமணம் செய்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள். இதை நடத்தி முடித்த வி வி முக்கும் வாழ்த்துக்கள்.

  ஆனால் திருஷ்டி வைத்தது போல அந்த திருமணத்தை நடத்த முன்னிலை வகித்தவர் தன்னை கவுண்டராக அறிவித்து அதை நாம் திருமண அழைபிதழில் அச்சடித்துள்ளோமே. இது தெரிந்து நேர்ந்து விட்ட தவறா இல்லை அச்சுபிழையா?

  நன்றி.

 3. ஹி ஹி … பேரு சாதி மறுப்பு திருமணம் முன்னிலை கரியப்ப கவுண்டர் …… இதனா உங்க சாதி மறுப்பு திருமணம் …. மாமா டவுசர் கழண்டு போச்சே …..

  • ஐயா, நீங்கள் ஏற்கனவே பாமக பதிவுகளில் ராமதாசுக்கும், ஆதிக்க சாதிவெறிக்கும் ஆதரவாக இரத்தக்கொதிப்புடன் விவாதித்திருக்கிறீர்கள். இங்கே இப்படி ஒரு கருத்து போட்டு ஏன் ஏமாற்றுகிறீர்கள்? ஒருக்கால் கரியப்ப கவுண்டர் உங்க கட்சி, சாதி வெறிக்கு மாறாக இந்த மணவிழாவில் கலந்து கொண்டது உங்களுக்கு பொறுக்கவில்லையோ? இந்த மணவிழாவில் மணமக்களை வாழ்த்த வந்த மக்கள் பலரும் எங்கள் கட்சி தோழர்கள் அல்ல. ஆனால் இந்த சாதிமறுப்பு மணவிழாவை ஏற்று வந்திருக்கிறார்கள். அதன் படி காரியப்ப கவுண்டர் ஊர் தலைவராக இருப்பவர் கலந்து கொண்டிருக்கிறார். எல்லாவற்றையும் விட இளவரசன் ஊரைக் கொளுத்தி உயிரை வாங்கிய சாதிவெறிக்கு மத்தியில் இப்படி ஒரு திருமணம் ஊர் மக்கள், பிரமுகர்கள் முன்னிலையில் பகிரங்கமாக நடந்திருப்பது முக்கியமானது. அதன் தொடர்ச்சியாக காரியப்ப கவுண்டரும் தனது பெயரில் உள்ள கவுண்டரை ஒரு நாள் தூக்குவார். ஆனால் பெயரில் சாதி இல்லாத நீங்கள் முழு உடலிலும் டன் கணக்கில் சாதிவெறியை சுமக்கிறீர்களே, உங்களை எப்படி அறுவை சிகிச்சை செய்வது?

   • இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம் … பெயரளவில் கூட சாதியை விட்டுத்தராத ஒருவருக்கு வக்காலத்து வாங்கும் நீங்கள் … எனக்கு அறுவை சிகிச்சை செய்வது அப்புறம் இருக்கட்டும் முதலில் உங்களின் புரையோடிய புண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்யுங்கள் …. பெயரளவிற்கு உங்களுக்கு ஆதரவு அளித்த ( அது தலித் மக்களின் ஓட்டுக்கு என்பது வேறு விஷயம்) ஒருவரின் பெயரில் ஒட்டியிருக்கும் சாதியை நீக்க திராணியில்லாத நீங்கள் என்னை கேள்வி கேட்பதுதான் விந்தை ….. இதற்கும் நீங்கள் அச்சடித்த அழைப்பிதழில்

 4. வாழ்த்துகள் தோழர் கோபிநாத், தோழர் ஜெயந்தி

  [1]தர்மபுரியில் சாதி மறுப்பு (தளித்தியர் – வன்னியர்) புரட்சிகர மணவிழாவை கேள்வி பட்ட ராம தூசுக்கு சீதபேதி புடுங்கிடுத்தாம். இதை கேள்விபட்ட காடு வெட்டி கசமாலத்துக்கு BP எகிறிச்சாம் !

  [2]தர்மபுரி, நக்சல்பாரி கம்யூனிஸ்ட்களீன் தலைமையில் உழைக்கும் தளித்தியர், வன்னியர் மக்களுடன் இணைந்து வர்க்க போர் செய்யும் நாள் வெகு தொலைவில் இல்லை.

 5. விவசாயிகள் விடுதலை முன்னணி என்ற பெயருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்? இவர்களது திருமணத்திற்கும் இந்த இயக்கத்தின் பெயரான விவசாயிகள் விடுதலை முன்னணி என்ன சம்பந்தம்? இது உள்நோக்கத்தோடு செய்வது போல இருக்கிறது.திருமண பதிவு அரசாங்க அலுவலகத்தில் செய்ய வேண்டும். இது போல் ஊர்வலம் அடுத்தவர்களை வேதனை மட்டுமே செய்யும். இரு மனங்கள் சேர்வதில் எத்தனை அரசியல்? மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கார்த்தீசன்,

   தோழர் கோபிநாத் விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்டாரச் செயலாளர். அவர் திருமணத்தை அவர் தோழர்கள் உழைக்கும் மக்களீன் ஆதரவுடன் நட்த்தி வைக்காமல், சாதி வெறி ராமதாசு, பிழைப்பு வாதி திருமா தலைமையில் தான் நடத்த வேண்டும் என்று நீர் எதிர்பார்பது உமக்கே வெக்கமாக இல்லை ?

   அடுத்தவன் [ராமதாசு, காடுவெட்டி] மனசு புண்பட வேண்டும் என்பதறக்காதானே;, இத் திருமணத்தை ஊர்வலம் நடத்தி ,இதோ பார் நாங்கள் உழைக்கும் மக்கள் , எமக்குள் சாதி வேறு பாடு இல்லை, என்பதை சாதி வெறி ____களுக்கு[ராம தூசுகளுக்கும் ,காடு வெட்டி __களுக்கும்] கூறுவது தானே மணமக்கள் விரும்புவது.

    • இவருக்கு இவர் சாதி தல பேர போடவில்லை என்று கோபம் வந்து விட்ததோ ?

     இது[வினவு என்ன] என்ன உன் சாதி அசிங்க மீட்டிங்க ? …..அவர்களே….,…..அவர்களே….,…..அவர்களே…., என்ரு மரியாதையவா அழைக்க முடியும் ? ஊருக்கு பக்கத்துல கசமாலம், கருமாதி, கழீசடை என்று உமக்கு பீடித்த பட்ட பெயரை எதை வேண்டும் என்றாலும் போட்டுக்க !

     • சரிங்க முந்திரி கொட்ட , பாதம் பருப்பு , பிஸ்தா … _______ மரியாத கொடுக்கலன்னு யாரு அழுதா …. ஊர் பெயர்ன்னு தெரியாம பயன்படுதுறியேன்னு சொன்ன கோவம் பீத்திகிட்டு வந்துடிச்சு பாரு … நாமதான் உலகத்துலேயே ஒன்னாம் நெம்பர்_____ முற்போக்குவாதின்னு நெனச்சா இப்படி சின்ன விசயத்துக்கெல்லாம் கோவம் வரும் ….. அது சரி மேலே சிறுவன்னு ஒருத்தரு கேள்விகேட்டு இருக்காரே அதுக்கு பத்தி சொல்லாமில்ல மிஸ்டர் முந்திரிகொட்ட

 6. சாதிமறுப்பு திருமணங்களை சாதியை ஒழிக்க முடியும்!

  தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்களின் வாரிசுகளாக களத்தில் நாம்,

  சாதி, மத வன்கொடுமைகளை தகர்க்க இந்த வர்க்க போராட்டம் தொடரும்…!

  புதிய ஜனநாயக புரட்சியை நோக்கி வீர நடைபோடுவோம் வாருங்கள்…!

 7. மணமக்களுக்கு வாழ்த்துக்கள். இவர்களுடைய இன்று போல் என்றும் முறையாமல் மேன் மேலும் வளர பரவ வாழ்த்துக்கள்.

  “இதே அழுத்தம் அழுத்தம் இதே அணைப்பு அணைப்பு வாழ்வின் எல்லை வரை வேண்டும் வேண்டும்” என வேண்டும்
  மணவை சிவா

  பிகு
  சாரத்தை விட்டு சக்கையைக் கடித்துக் குதறும் மக்களை என்றுதான் வினவு ஒழுங்கு படுத்துமோ !

 8. “இவர்களுடைய இன்று போல் என்றும் முறையாமல் மேன் மேலும் வளர பரவ வாழ்த்துக்கள்.”

  இவர்களுடைய உறுதி இன்று போல் என்றும் குறையாமல் மேன் மேலும் வளர, பரவ வாழ்த்துக்கள்.

  பிழைக்கு வருந்துகிறேன்.

 9. எந்த மண்ணில் சாதி மறுப்பு மணம் நாடக்க கூடது என்று வேறியாட்டம் போட்டார்கலோ அந்த மண்ணில் இன்று நடத்திகாட்டியா தோழர்களுக்கும் மணமக்களுக்கும் எனது புரட்சிகர வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க