Thursday, May 30, 2024
முகப்புஅரசியல்ஊடகம்குமுதம் மடத்தில் ரஜினி சுட்ட வடை !

குமுதம் மடத்தில் ரஜினி சுட்ட வடை !

-

ஜால்ராகிராமத்துல மோடி அலை, உபியில நக்மா வலை, கூட்டணி எப்போன்னா கேப்டன் சிலை, மோடிக்கு வைகோ போட்ட மாலை, கூட்டணியில்லாத கலைஞர் நிலை, சிபிஎம், தாபாவை சீப்பா அம்மா விரட்டுன கலை…….. இதெல்லாம் ஞாபகம் இருக்காடே? ஒத்தக்கடை மச்சான் பாட்டுக்கு போட்டியா ஒத்த விரலை காட்டி ஓட்டு போட்டேன்னு பீத்திக்கிட்டீல்லா? ஒன்னை மலிவா பட்டி பாத்து ஓட்டுப்போட அனுப்பன பத்திரிகைக்காரனுவ அதுல ஜூவிக்காரன்லேர்ந்து, சூம் பண்ற டீவிக்காரன் வரை இப்பிடித்தாம்லே எலக்சன் நியூஸ்ன்னு அடிச்சு வுட்டானுவ!

ராதா வூட்ல பாதாம் அல்வா, சிம்ரன் காருல சிங்கப்பூர் குல்லா, சமந்தா பேக்குல சீனத்து கல்லுன்னு ஒன்னோட பொது அறிவ வளர்க்குற ஊடக விளக்கமாறுங்க, சினிமா கிசகிசுவ வெச்சுத்தாம்டே கல்லா கட்டுதானுவ. பெறவு இதே லேகியத்தை அரசியல் செய்திலயும் போட்டுத் தாளிச்சு உன்னோட மூளையில மொக்கை வைரசை புகுத்தி அல்லாரையும் இம்ச பண்ணுதான். கலைஞர் வூட்டுக்கு வந்த மர்மக்கார், அம்மா கேட்டுக்கு வந்த செவப்பு சூட்கேஸ், கேப்டன் காருக்கு வந்த பாரின் ஃபுல்லுன்னு இவனுவ எழுதுத நியூசக் கேட்டா அந்த செய்தி தேவதையே ப்ராந்து புடிச்சு தூக்கு மாட்டுவா!

ஐயர் கடையில கும்பகோணம் டிகாஷன் காப்பிக்கு ஒன் நாக்கு பழகுன மாறி குமுதம், விகடன் லேகிய மசாலாவுக்கு ஒன் மூளையும் பழகிடுச்சுடே!

இன்னைக்கு காத்தால பக்கத்து தெருவுல, கொல்லம் சேட்டன் கடையில ஆமை வடை துன்னு, தேத்தண்ணி குடிச்சப்ப பக்கத்து பெட்டிக்கடை தாத்தா கடையில குமுதம் போஸ்டர் பாத்தம்டே!

“மாறு வேட ரஜினி, சாலை ஓர கிழவி” எக்போளோசிவ் ன்னு டைட்டில போட்டு பின்னாடி ரஜினி, நம்ம சோதா சரத்துகுமார் நாட்டாமை கெட்டப்புல நிக்காறு. சரிப்பா அப்பிடி என்ன குண்டபோட்டுருக்கான்னு 15 ரூபாய தண்டம் கட்டி வாங்கிப் பாத்தா………………..

பெறவு என்ன, வந்த வெப்றாளத்துக்கு ஆபிசுல மட்டம் போட்டு இத எழுதுதம்டே. வினவு தோழக்கமாறுகிட்ட சொல்லி உடனே போட்டாத்தான் எம் மனசு ஆறும்னு சிபாரிசெல்லாம் பண்ணித்தாம்டே இத நீ படிக்க. இல்லேன்னாலும் நீ என்ன படிச்சு புண்ணியம்டே, விடு, கழுதைக்கும் தன் குட்டி பிளாட்டினம் குட்டி, மேல படி!

ரஜினி அமெரிக்கா போய் மொட்ட போட்ட கதை, இமயத்தக்கு போய் தாடி வளத்த கதைன்னு அப்பைக்கப்ப எடுத்து வுடுவாம்னு தெரியும்னாலும், இந்த தபா இன்னா எழுதிக்கீறான்னு ஒரு கொதியில மதிகெட்டு வாங்குனேன்.

ரஜினி குடியிருக்க ஏசி போட்ட போயஸ் தோட்ட வீடுன்னா, அவர் ஈசி சேருல குந்தி கனாக்கான கேளம்பாக்கம் பண்ணை வீடாம். வாடகை குடித்தனத்துல மீட்டர் ரீடிங்கிற்கு ஐஞ்சு ரூபாயான்னு சண்டை போடுற காலத்துல, நம்ம நடுத்தர வர்க்க தம்பிமாறுங்க கடனை கிடனை வாங்கி மவுலிவாக்கத்துல பறி கொடுத்த நேரத்துல நாம பண்ணைய பாத்தமா, போயஸை நினைச்சமா!

அந்த பண்ணை வூட்டுல ரஜினி செஞ்ச சாதனையத்தாம்டே குமுதம் காரன் “உள்ளம் உருகுதய்யான்னு” டிஎம்எஸ் குரல்ல டூரிங் டாக்கிஸ் ரிக்கார்டாட்டம் இழுத்து பாடுதான்.

அந்த பண்ணை வீட்டுல ஒரு தபா ரஜினி வந்தப்போ, அவரை மீட் பண்ண ஒரு சாதாப் பய வந்தானாம். வந்தவன் அண்ணே தெருவுல ஒரு ஆயா சூப்பரா வடை சுடும்ணே, நாக்குல தண்ணி கொட்டும்னே சொல்ல, சரி போய்த்தான் சாப்புடுவோம்னு ரஜினி சொன்னாராம். அதக்கேட்டு அந்தப்பய ஜெர்க்காகி, தல நீங்க வட துன்ன வந்தா, ட்ராபிக்குல ஜாம் சேரும்னு சொன்னானாம்.

உடனே சூப்பர் ஸ்டார் உள்ள போய் வெளிய வரச்சே ஓல்டுகெட்டுப்பல தாத்தா மாதிரி வந்தாராம். இந்த மாறுவேடத்துல பழைய அம்பாசிடர் காரை எடுத்துக்கிணு, அந்த சாதாப்பயலையும் கூட்டிக்கிணு வடை துன்ன போனாராம். பெறவு கதையில ஒரு ட்விஸ்ட்டு. பாதி தூரம் போனப்போ சைடுல ஒரு கிழவு குந்திக்கிணு இருந்தாங்களாம். உடனே தல சடர்ன் பிரேக்க போட்டு ஜம்ப் பண்ணி, கிழிவியண்ட, மைடியர் மாம், வாட் ஹேப்பண்ட் டு யூன்னாராம். அதுக்கு அந்த கியவி என்பாடு எனக்கு ஒன் சோலியப் பாத்துத்துக்கிட்டு போப்பான்னுச்சாம்.

ஆனா நானு ஃபீலான்னது ஃபீலானதுதான்ன்னு நம்ம தல சாதிச்சு கிழவியம்மா கதையைக் கேட்டுச்சாம். கதன்னதும் வாயப் பெளக்காதடே! பெருசா ஒண்ணுமில்ல,ராணி, தேவி மேறி குடும்ப பத்திரிகைங்கள்ள தீபாவளி சிறப்பு ஸ்டோரின்னு வருமுல்லா அதாம்டே! கிழவிக்கு ஆத்துக்காரரு இல்லேன்னு ஆனதுக்கு பெறவு, பெத்த பசங்க ரெண்டு பேரும் கைவிட்டுட்டாங்களாம், வேற வழியில்லாம ரோட்டுல உக்காந்துக்கிறேன், கதையக் கேட்டாச்சுல்லா, இடத்த காலி பண்ணுண்ணு அந்த அம்மா சொல்லிச்சாம்.

அம்மா ரெண்டு நாளா பட்டினின்னு விசாரிச்சு கேட்ட உடனே, காரை ஷூமேக்கரு வேகத்துல நாலடி தள்ளி இருந்த பக்கத்து கடைக்கு போய் ரெண்டு மோரிஸ் பழம், நாலு ட்ரூ பிஸ்கெட்டு பாக்கெட்டு வாங்கி கொடுத்துட்டு, அம்மா சீக்கிரம் உனக்கு நல்ல சேதி வரும் ரெடியார இருன்னு தல போயிருச்சாம்.

குமுதம் ரஜினி அட்டை
இதுதாம்லே நாட்டாமை கெட்டப்புல ரஜினியோட வெடிகுண்டு கவர் ஸ்டோரி!

அப்பால பண்ணைக்கு போன தல, பக்கத்துல ஒரு ஆசிரமத்துல சொல்லி அம்மாவ கூட்டிக்கிணு போய் பாத்துக்கண்ணு ஆர்டர் போட, அடுத்த செகண்டு ஆசிரமத்து ஏசி காரு அந்த சாதா பயலோட கிழவிய தூக்கிக்கிணு போச்சாம். அப்பத்தாம் அந்த சாதா சொல்லி வந்தது ரஜினின்னு அந்த கிழவிக்கு தெரிஞ்சிச்சாம். மதுரை கிழவிக்காக சிவபெருமான் புட்டுக்கு மண்ண சொமந்த மேறி, சென்னைக் கிழவிக்காக ரஜினி போன் பண்ணி உதவிக்கீறாரு….இதுதாம்டே மெயின் ஸ்டோரி.

இந்த மேட்டர இத்தோட வுட்டா கவர் ஸ்டோரி கெத்து பத்தாதுன்னு, இன்னொரு குட்டி கதையும் சேத்தருக்கான். பண்ணை வூட்டு பக்கத்துல வாழுர ஒருத்தரு மழைக்காலத்துல கஷ்டப்பட்டப்போ சினிமா கேரியருல சாப்பாடு கொடுத்தாராம் ரஜினி. பெறவு அந்த வூட்டுக்கு போய் ஒரு பாப்பாவுக்கு பேபி டார்ல் கொடுத்துக்கிணு, 1000 ரூபாயும் வச்சுக்கோன்னு சொல்லிட்டு வந்தாராம். கிளைமாக்சா, கேளம்பாக்கம் பண்ணை வூட்ல வேலை செய்யுற ஆளுங்களுக்கு, பக்கத்துலயே ரஜினி அவென்யூன்னு கட்டி அடுத்த மாதம் தொறக்க போராறாம். வேலை செய்யுற இடத்துலயே சர்வர் மொதலு, வீட்டு வேலக்காரங்க வரைக்கும் தங்கவச்சா ஆருக்குடே ஆதாயம்?

சரி கூட்டிக் கழிச்சு பாரு, இதுல இன்னா கருணை, எவ்வளவு காசு? கிழவிக்கு ரெண்டு மோரிஸ் பழம் தலா 5 ரூபா, நாலு ட்ரூ 20, பெறவு ஆசிரமத்து காரனுக்கு போன் செலவு 2 ரூபா, பக்கத்து மனிதருக்கு கேரியர் சாப்பாடு 100 ரூபா, பேபி டார்லு 300ரூபா, இனாம் 1000 மொத்தம் 1432 ரூபா செலவு பண்ணிக்கிறாரு தல. இதுக்கு, தான தரும புஜ பல பராக்கிரம கர்ண, அதியமான்னு இந்த உலகத்துலேயே அள்ளிக் கொடுத்த வள்ளல்ங்கிற எபக்டுக்கு காட்டுதாம்லே! அங்கதான் நீ ஆன்னு பாத்துக்கிட்டு ஃபீலாவுத!

ஏலே நம்ம உண்மைத்தமிழன் அண்ணாச்சிய எடுத்துக்கடே, அவரு காலையில எந்திரிச்சு அழுக்கு கைலியோட சேட்டன் கடைக்கு போய் கையில தினத்தந்தி, வாயில காபின்னு குடிச்சிட்டு ஒரு பிஸ்கெட் பாக்கெட்ட வாங்கி தெருவோர பைரவக்கமாருங்கள கூட்டி பிச்சு போடுத அழகு இருக்கே, அத நம்ம மருது ஐயாதாம்டே ஆர்ட்டா வரையணும்! மாசம் 200ரூபான்னா, வருசத்துக்கு 2,400 ரூபாக்கு நம்ம அண்ணன் பிஸ்கெட் வாங்கி போட்டுருக்காருடே, இப்படி உழைக்கிற ஜனங்க உலகம் பூரா உதவிக்கிட்டுத்தாம்லே இருக்காக, அதையெல்லாம் தினத்தந்தியில விளம்பரமா போட்டா பத்திரிகைக்கு பேப்பரும் அடிக்கதுக்கு மையும் பத்தாதுடே!

போயஸ் தோட்டத்துல ஒரு பணக்கார பாய் போய் வாடகைக்கு வீடு கேட்டா எந்த பணக்காரனும் வூடு கொடுக்க மாட்டான். ஆனா நம்ம சேத்துப்பட்டுல ஏழை பாய்மாருங்க எப்ப வந்தாலும் வீடு ரெடியா இருக்கும்லா! சரி அவங்கள விடு, திருநங்கை அக்காமாரெல்லாம் எங்க சேத்துப்பட்டு மேறி ஏழைங்க இடத்துலதான் பிரச்சினை இல்லாம இருக்காக, மக்களும் பழகுதாக.

மவுலிவாக்கத்துல இடிஞ்சு வுழுந்தப்போ எவனாவது ஆக்சன் ஹீரோவாட்டம் சம்மர்சால்ட்டு அடிச்சு வந்து காப்பாத்துனான்? அவனுகதாம்டே டிவியில ரியல் எஸ்டேட் வெளம்பரத்துல நடிச்சு சம்பாதிச்சிக்கிணு, நம்மள கொல்லுதான்! போலிசு, தீயணைப்பு படை, தொழிலாளின்னு ராப்பகலா நின்னு காப்பாத்துனது எங்கடே கவர் ஸ்டோரியா வந்துருக்கு?

ரஜினிக்கு சொத்து எப்படி வந்துச்சுன்னு கேட்டா அவரு உழைச்சு சம்பாதிச்சாருன்னு சொல்லுவ. கோச்சடையான்ல அவருக்காக டூப் போட்டு உழைச்ச அந்த டீவி தம்பிக்கு 5, இல்லேன்னா பத்து ஆயிரத்த கொடுத்துக்கிணு, ரஜனி வாய்சுக்குணு கோடியில கொடுத்துட்டு, இதாம் உழைச்சா இலட்சணமான்னு அந்த கேளம்பாக்கத்து கிழவிட்ட கேட்டா காறித் துப்பாது?

இல்லை பாட்சாவா முத்துவா எந்தப்படம் எப்படி ஓடிச்சுன்னு கேளு? ரஜினிக்கு பத்து கோடி சம்பளம்னா, விநியோகஸ்தரு, தியேட்டரு ஓனரு எல்லாம் எக்குத்தப்பா படத்த வாங்கி பத்து நாளைக்கு அவனே பிளாக்குல ஒன்னுக்கு பத்தா வித்தாம்டே காசு. அதுதாம்டே சம்பளம்ணு ரஜினிக்கு போய்ச் சேருது! ஏலேய் பஸ்ல அடிச்சா பிக்பாக்கட்டு, பிளாக்குல அடிச்சா அது உழைப்பாடே?

இப்படி இருக்கையில அஜித் மட்டன் பிரியாணி போட்டாரு, விஜய் கப் ஐஸ் கிரீம் கொடுத்தாருன்னு மாசத்துக்கு ரெண்டு மூணு எழுதிப் போடுதான், வேலவெட்டி இல்லாத ஊடகக்காரனுவ. இதையே பெறந்த நாளைக்கு ரெண்டு சைக்கிள், நாலு அயர்னிங், நாப்பது நோட்டு புக்குன்னு அல்லா நடிகருங்களும் கொடுத்துக்கிணு உடனே கோட்டையில கொடி, பியூச்சருல முதலமைச்சருன்னு காசு கொடுத்து கோசம் பொட வைக்கான். இல்லேன்னா கேப்டன் மாறி தண்ணி வண்டிங்கள்லாம் இப்படி ஒரு கச்சி கூட்டணின்னு கெத்தா வரமுடியுமாலே?

மனிதாபிமானம்னு என்ன கிலோன்னு இவெங்களுக்கு தெரியுமாய்யா?

குமுதம் ரஜினி அட்டை. 2
கோச்சடையான் படத்துல நடிச்சது அந்த லொள்ளு சபா தம்பிங்கிறது எத்தன பேருக்குடே தெரியும்?

வடக்கு சென்னைக்கு சிபிஎம், மத்திய சென்னைக்கு ஆம்ஆத்மி, தெற்கு சென்னைக்கு தாமரைன்னு ஓட்டுப் போடுவேன்னு சொன்ன பத்ரி சேஷாத்ரிகிட்ட, அண்ணே ஒரே தொகுதியல இவங்க மூணு பேரும் நின்னா யாருக்கு ஓட்டுன்னு கேட்டா, இல.கணேசன் வாளுக்குத்தான் போடுவேன், அதுல குயப்பமே கிடையாதுன்னு சொன்னாரு பாரு! இவருகிட்ட சிபிஎம் வாசுகி அம்மா ஓட்டு கேட்டு ஆதரவு கேட்டுச்சுன்னா கார்ல் மார்க்ஸ் கல்லறையில இருந்து பறந்து வந்து அடிக்க மாட்டாரா?

அத வுடு, நம்ம பத்ரி அண்ணன் பெட்ரோல் காசையும், புகை மாசையும் மிச்சப்படுத்த ஹெல்மெட் போட்டு சைக்கிள்ள ஆபிசு வாராராம். அதுல பாத்துக்க, வேர்வையில அந்த சாயம் போன கிழக்கு டீஷர்ட்டு அழுக்காவுதுன்னு இன்னொரு சட்டைய எடுத்துக்கிணு வாராறாம். இந்த ராசா, காரு வச்சுருக்கிற கனவாங்க்கிட்ட பொது போக்குவரத்த யூஸ் பண்ணுங்கோன்னு அட்வைசு பண்ணுதாரு. சரிய்யா, வாடகை வூட்ல இருக்கிறவனையே லோன் வாங்கி காரை திணிச்சு அதையும் தெருவுல நிக்க வைச்சு, ட்ராபிக்குல அல்லா காருலயும் ஒருத்தன்தான் போறான்னா இதுக்கு என்ன தீர்வு?

காருக்கு அதிக வரிபோடு, காருக்காரன் போடுத பெட்ரோலுக்கு விலைய உயத்து, பொது போக்குவரத்துக்கு மானியம் கொடுன்னு சொன்னா அது ஞாயமான பேச்சு? ஆனா நம்ம அண்ணேன் மார்கெட் சுதந்திரத்துல கை வைச்சா மெலடின்னாலும் அறம் பாடியே எரிக்க மாட்டாரு?

நம்ம உலக எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணாச்சி வெள்ளையானைன்னு ஒரு தலித் நாவல் எழுதி களைச்சுப் போய் மேலவளவுக்கோ இல்ல திண்ணியம், பாப்பாபட்டி, கீறிப்பட்டிக்கோ போய் ரெஸ்ட் எடுப்பாருன்னு பாத்தா அவரும் நேரா மகாபலிபுரம் பண்ணை வூட்ல உலகநாயகன் கமலஹாசன் கொடுத்த ஃபாரின் சரக்கு பார்ட்டிக்கு போயிட்டு வந்ததோட நிக்காம அத உருகி உருகி ஒரு போற்றி பதிவே போட்டுருக்காருல்லா? குறிப்பா அந்த அக்கா பேரு என்ன…ஆங்……ஆண்டிரியா எல்லாம் வந்துச்சுன்னு பேரு டீடைலோடு எழுதிக்கிறாரு. சினிமாக்காரன் பார்ட்டியில என்னடே உள்ளொளி தரிசனம் வாழுது!

நாவல படிச்சு உருகுன ஒரு பய கூட இந்த கேவலத்தை கண்டுக்கிடலயே? ஏலேய், உள்ளொளியில தலித்துக்காக உருகுனவரு, வெளியில கமல் கூப்பிட்டப்பவே, தல நானு சாதா, இந்த மேறி ஸ்பெசலெல்லாம் கூடாதுன்னு மறுத்துருக்கணும்லா? மக்கா, புளியம்பட்டி ஏழை வூட்ல அழுதுக்கிணே ஃபீல் பண்ணி கஞ்சி குடிச்சேன்னு எழுதுறவன், உடனே மதுரை, மும்பைன்னு போய் பிளைட்ட பிடிச்சு நியூயார்க் வெஸ்ட்லின் ஹோட்டல்ல ஆயிரம் டாலர் விலைக்கு அதாம்டே 60,000 ரூபாயில பாகலை (இந்த உலகின் அதிக விலையுள்ள தின்பண்டங்களின் ஒன்று) துன்னேன்னு ஒரு அனுபவப் பதிவ எழுதனா கிழிச்சு உப்புக் கண்டம் போடமாட்ட?

ரஜினி 1432 ரூபாக்கி தானம் பண்ணாருன்னு குமுதத்துல ஃபீல் பண்ணி எழுதுன கடற்கரையும் உலக இலக்கியம் படிச்ச ஆளுதாம்டே! இந்தக் கடற்கரை இல்லேன்னா வேறோ எதோ குட்டைக்கரை இருந்தாக்கூட குமுதம்காரன் அதத்தான் எழுதுவான். ஆனா உலக இலக்கியம், ஈரான் படம்னு பவுசு காமிக்கிறவன்தான் குட்டக்கரைங்கெள விட பில்டப்ப டன்கணக்குல கூட்டி கிறுக்குதாம்லா?

ஏலேய் என்னப் பெத்த மக்கா, அம்மணமா போனாக்கூட குத்தமில்ல ராசா, குமுதத்த படிச்சேன்னு வச்சுக்கோ மூளையில்லாத முண்டமாத்தான் திரியணும்டே, பெறவு உன் இஷ்டம்!

–    காளமேகம் அண்ணாச்சி

 

 1. EADHUKKU NEENGA AVARA PATHI THAPPA PEASURINGA ORUTHAVANGA NALLA VALARNDHU VANTHANGANA UNGALUKKU PUTIKKATHA AVAR EANNA PANNARU EADHUKKU AVARA PATHI THAPPA PEUVINGA

  • @JAI…
   Rajini should have avoided such publicity stunts done by such magazines merely to increase their circulation.
   Here why the criticism is focused on Rajini is that, he allowed Kumudam to misuse his popularity and sell such ‘Jalra’ stories about him to people.
   Without his knowledge such cover stories would not have come.

   He is a popular actor who has lots of fans following his image. He never did anything to uplift their lives. At least he should make them aware to not follow them fanatically like this.

 2. அருமையா எழுதியிருக்கலே கட்டுரையை. குமுதம் மட்டுமில்லை பல பத்திரிகைகள் மூளையில்லாத முண்டமாத்தான் நம்மளை ஆக்குதுங்க. முதல்ல அதையெல்லாம் வாங்கறதையும் படிக்கறதையும் விடணும்ல.

 3. ///உடனே சூப்பர் ஸ்டார் உள்ள போய் வெளிய வரச்சே ஒல்டுகெட்டுப்பல தாத்தா மாதிரி வந்தாராம்///

  அவரு உள்ள போய் மேக்கப்ப கலச்சா தாத்தா ஆய்டுவாரு.பெறவு எதுக்கு ஓல்டு கெட்டப்பு?

 4. அட இந்த ரஜினி குசு விட்டாலும் மோந்து பாத்து சூப்பர் வாசனை அப்பிடினு சொல்லுவான் குமுதம் அய்யோ அய்யோ இவ்னுகளேல்லாம் பத்திரிக்கை நடத்தி ……..

 5. இதே போன்று ( போன்றவைகளை ) பேசி ……பேசி யோசித்து…. யோசித்து சொந்த வாழ்வில் அடியை வாங்கியவன் அடியேன்! 🙂 ., என் வாழ்வை காப்பாற்றி கொள்ள அதே போன்ற சிந்தனைகளை உபயோகித்து கொள்ளாமல் விறைப்பாய் இருந்தவன் அடியேன். தற்போது லௌஹீக வாழ்கையை வாழ்வது எப்படி என்று நன்றாக கற்றுக்கொண்டுவிட்டேன் என நினைக்கிறேன். காரணம் நான் அந்த குமுதம் ஆசிரியராக இருக்கவே விரும்புகிறேன்!

 6. ரஜினி காதிக்ராFட் கடையில்
  புதிய டிசைன் கோமணம்
  வாஙிகியதை அடுத்த வாரம் போட்டால்
  10,000 காப்பி கூட விற்குமே!

 7. Indians are like that. Particularly tamilians, they treat cine actors, actress, directors like gods, intelligent humans which is the taste of tamil people. Media their job is to create smoke on fire by fueling it. They don’t think that they are normal human beings, acting is just their profession. They are paid for their acting.

  There are some news journal in tamil, they don’t get sleep if they don’t publish any news about rajini, ajith, vijay everyday or atleast 5 times in a week. If a heroine is above 30, she will be called as aunty or grandma. But, if a hero is above 35 or even 55 he is still be treated like young guy even if they are in uncle and grandpa age. If they breath, sleep, eat it is made as news. Even they go to toilet it will become a news. They are respected like scientists who invented something to enhance the human life. has their movies ever won international awards? or recognised for introducing any new kind of acting or technical stuffs to the world? I don’t know when this culture is going to change and when are we going to become civilized.

 8. காளமேகம் அண்ணாச்சி,

  வெலங்காத ஜெயமோகன் எழுதீய “வெள்ளையானை” என்ன தலித்தியர் நாவலா ?அது முழுக்க கம்யுனிச எதீர்ப்பு நாவல் தானே அண்ணாச்சி ?உழைக்கும் வர்க்க உள் முரன்பாடுகளை [workers in SC VS workers BC,MBC] ice cream ஆக எடுத்துகொண்டு RSS கார அரை லூசு/டவுசர் பயல் எழுதீய நாவல் தான் “வெள்ளையானை” என்ற விடயம் காளமேகம் அண்ணாச்சி கண்களுக்கு தெரியாத அளவுக்கு உங்கள் மூளையில் என்ன குறை அண்ணாச்சி?

  இதே rangeல் நீங்க போனீங்க என்றால் தமிழில் உள்ள எல்லா கம்யுனிச எதீர்ப்பு நாவல்களையும் ,குறிப்பா சுந்தர ராமா சுவாமியீன் ஜெ ஜெ சில அரிப்புகளையும் தலித்தியர் நாவல் என்று சொல்லுவீங்க போல இல்ல இருக்கு !

  //நம்ம உலக எழுத்தாளர் ஜெயமோகன் அண்ணாச்சி வெள்ளையானைன்னு ஒரு தலித் நாவல் எழுதி களைச்சுப் போய் மேலவளவுக்கோ இல்ல திண்ணியம், பாப்பாபட்டி, கீறிப்பட்டிக்கோ போய் ரெஸ்ட் எடுப்பாருன்னு பாத்தா அவரும் நேரா மகாபலிபுரம்….//

 9. “இப்படி இருக்கையில அஜித் மட்டன் பிரியாணி போட்டாரு, விஜய் கப் ஐஸ் கிரீம் கொடுத்தாருன்னு மாசத்துக்கு ரெண்டு மூணு எழுதிப் போடுதான், வேலவெட்டி இல்லாத ஊடகக்காரனுவ. இதையே பெறந்த நாளைக்கு ரெண்டு சைக்கிள், நாலு அயர்னிங், நாப்பது நோட்டு புக்குன்னு அல்லா நடிகருங்களும் கொடுத்துக்கிணு…”

  சரியான பேச்சு!

  சைக்கிள், அயர்ன் பாக்ஸ், தையல் மெஷினையெல்லாம் கண்டு பிடிக்கலைன்னா இந்த நடிகர்கள் ரொம்ப கஷ்டப் பட்டிருப்பாங்க !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க