Sunday, November 3, 2024
முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !

-

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி 2014  அனுபவங்கள் – 1

மீபத்தில் சென்னையில் நடந்து முடிந்த இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு  எமது செய்தியாளர்கள் சென்ற போது நூற்றுக் கணக்கான வேடிக்கை, வினோத அனுபவங்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

இந்தப் பகுதியில் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் – Vedic Science Research Centre என்ற திடுக்கிடும் பெயர் கொண்ட கோஷ்டியின் அனுபவத்தை பார்ப்போம்.

விஞ்ஞான ஆராய்ச்சி மையம் என்ற பெயருடன் வேதம் என்பதை ஒட்ட வைத்துக் கொண்டு பெயருக்கேற்றபடி “பருவச் சுழற்சியும் தமிழர் விழாக்களும்”, “பஞ்சாங்கம் ஒரு அறிவியல் பார்வை”, “பெரியபுராணச் சிந்தனை தொடர் சொற்பொழிவு” என்று ‘ஆய்வு’களை செய்து கொண்டிருக்கிறார்கள். விபூதி அணிவது முட்டாள்தனம், இந்து என்றால் திருடன் என்று கருணாநிதி பேசியபோது அவர் மீது வழக்கு தொடுத்த கோஷ்டி இதுதான். மற்றபடி யார் இவர்கள், பின்னணி என்ன என்று தெரியவில்லை. கடையின் பளபளப்பு, விளம்பர பிரசுரங்கள், நூல்களைப் பார்த்தால் ஏதோ இந்து என்ஜிவோ கும்பல் போலவும் இருந்தது.

கடையை நெருங்கும் போதே முஸ்லீம்கள், தீவிரவாதம், ஜிகாதி, பயங்கரவாதம், இந்துக்கள் பாவம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஒருசேர ஒலித்துக்கொண்டிருந்தன. ‘வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்’ என்ற பெயரிலான  கடைக்கு உள்ளே நுழைந்தால் விஞ்ஞானத்திற்கும் ஸ்டாலுக்கும் சம்பந்தமே இல்லை. வீச்சரிவாள், சைக்கிள் செயின், கத்தி கபடா என்று ஏதாவது ஒரு பெயர் வைக்க வேண்டிய ஸ்டாலுக்கு விஞ்ஞானத்தை இணைத்து பெயர் வைத்திருக்கிறார்கள்.

எந்தப் பள்ளியிலிருந்து அழைத்து வரப்பட்ட மாணவிகளோ தெரியவில்லை அனைவரையும் அந்த ஸ்டாலுக்குள் உட்காரவைத்து தொலைக்காட்சியில் எதையோ போட்டுக் காட்டிக் கொண்டிருந்தனர். பிள்ளைகள் அனைத்தும் அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்தன.

அந்த ஸ்டாலை சுற்றிலும் இந்து மதவெறியை கக்கும் நச்சுப்பிரச்சார சுவரொட்டிகளை எக்கச்சக்கமாக ஒட்டி வைத்திருந்தனர், சிறுபான்மையினரை குறிப்பாக இசுலாமியர்களை இழிவுபடுத்தும் வாசகங்களையும், அவர்கள் மீது வன்மத்தை ஏற்படுத்தும் செய்திகளையும், பொய் பிரச்சாரங்களையும் எழுதி வைத்திருந்தனர். உள்ளே வருபவர்களை எல்லாம் ஒரு கூட்டமாக சேர்த்துக்கொண்டு சுவற்றில் எழுதிவைத்திருந்த விவரங்களை எல்லாம் வெறித்தனத்துடன் ஒருவர் விளக்கி கொண்டிருந்தார்.

“சிறுபான்மையினருக்கு தான் இந்த நாட்டில் எல்லா உரிமைகளும் இருக்கு, இந்துக்களுக்கு என்ன இருக்கு சார்? இந்து தலைவர்களுக்கே கூட இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை, கொலை செய்யப்படுகிறார்கள்” என்று கூறி “பாருங்க எவ்வளவு தேச பக்கதர்கள் கொல்லப்பட்டிருக்காங்க” என்று மனைவியால் கழுத்தறுபட்டு கொல்லப்பட்டவர்கள், கள்ளக்காதல், கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் பிரச்சினைகளுக்காக கொல்லப்பட்டவர்கள் என்று கொல்லப்பட்ட தேஷபக்தர்களின் நீண்டதொரு பட்டியலை காண்பித்து அனைவரையும் கண்ணீர் விடச் சொன்னார்.

“ஹிந்துக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகமே இல்லை. விஸ்வரூபம் என்கிற ஒரு படப்பிரச்சினையை வைத்துக்கொண்டு அவர்கள் எவ்வளவு பெரிய பிரச்சினை செய்தார்கள், அமெரிக்க தூதரகத்தையே முற்றுகையிட்டார்கள். இதையெல்லாம் நாம் அனுமதிக்கக்கூடாது.”

“ஆனா, இந்த அ.தி.மு.க, தி.மு.க எல்லாம் இவங்க கூட கூட்டணி வைக்க போட்டி போடுறாங்க, என்ன அநியாயம் பார்த்தீங்களா சார்.”

“அப்புறம் இதப் பாருங்க  சார், திப்பு சுல்தானுக்கும், ஹைதர் அலிக்கும் மணி மண்டபம் அமைக்கப் போறாங்களாம், அதுவும் நம்ம வரிப்பணத்தில சார். இவங்கெல்லாம் யார் சார், நம்ம இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினவங்க. அவங்களுக்கு மணி மண்டபம் அமைக்க விடக்கூடாது சார்” என்றார்.

அவர் பேசி முடித்ததும் “நீங்க சொன்னதுல ரெண்டு சந்தேகம். கூட்டணி வைப்பது பத்தி சொன்னீங்க, இந்துக்களோட கட்சி பா.ஜ.க தாழ்த்தப்பட்ட மக்களோட வீடுகளை உடைச்ச பா.ம.கவோடும் இன்னும் சாதிக் கட்சிகளான கொங்கு ஈஸ்வரன் கட்சி, பச்சமுத்து கட்சி இவங்களோட எல்லாம் கூட்டணி வைக்கிறதைப் பத்தி என்ன சொல்றீங்க” என்றும் “திப்பு சுல்தானைப் பத்தி சொன்னீங்க. அவரு ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டு உயிரையே கொடுத்த மன்னராச்சே, அவரப் பத்தி இப்படி பேசலாமா” என்றும் கேட்டோம்.

“திப்புசுல்தான் இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினவன் சார்” என்று ஆரம்பித்தவர், “அந்த புத்தகம் எழுதினவரே இதோ வந்துட்டார் அவர்கிட்டயே கேளுங்க” என்று இன்னொருவரை கை காட்டி விட்டு எஸ்கேப் ஆனார்.

புத்தக ஆசிரியர் (பால கௌதமன் என்று பெயராம்) நெற்றியில் குங்குமப் பொட்டுடன் அக்மார்க் அம்பியாக காட்சியளித்தார்.

“நீங்க எழுதின இந்த புத்தகத்தை காசு கொடுத்து வாங்கினேன். அதில ஒரு சந்தேகம். திப்புசுல்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடிய சுதந்திரப் போராட்ட வீரர்தானே. அவரைப் பத்தி ஏன் இப்படி எழுதியிருக்கீங்க”

“என்ன சார் நீங்க! ஆங்கிலேயரை எதிர்த்து அவன் எதுக்கு போராடினான்ன்னு பாருங்க. அவனோட தன்னோட முஸ்லீம் ஆதிக்கத்தை காப்பாத்தத்தான் போராடினான்”.

“இருந்தாலும், ஆங்கிலேயரை எதிர்த்து நம்ம மண்ணை காக்க போராடியது முக்கியமில்லையா”

பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் ஏதோ கேட்க முயற்சிக்க, “நீங்க போன வருசமே வந்து என்னோட ஆர்க்யூ பண்ணிட்டு போனீங்கள்ள. உங்க கிட்ட பேச எதுவுமில்ல சார்” என்று முகத்தை திருப்பிக் கொண்டார்.

தொடர்ந்து, “திப்பு சுல்தான் ஆங்கிலேயரோடு எத்தனை ஒப்பந்தம் போட்டுக் கொண்டான் தெரியுமா” என்றார்.

“கேள்விப்பட்டிருக்கேன், ஒரு ஒப்பந்தத்தில, தன்னோட இரண்டு மகன்களையும் பணயக் கைதிகளா அனுப்பி வைச்சிருக்காரு. வேறு எந்த மன்னனாவது நாட்டுக்காக தன்னோட குழந்தைகளை பணயம் வைச்சிருக்காங்களா. அந்தக் காலத்துல திருவிதாங்கூர், கொச்சி ராஜாக்கள் எல்லாம் இந்துவா இருந்து கிட்டே ஆங்கிலேயன் கிட்ட சரணடைஞ்சு அடிமையா நடந்துகிட்டாங்களே, அதோட ஒப்பிட்டுப் பாருங்க”

“நீங்க இதையெல்லாம் இவ்வளவு எளிமையா பார்க்கக் கூடாது. ஆங்கிலேயரை எதிர்த்து போராடினவங்க எல்லாத்தையும் தேச பக்தர்கள்னு சொல்ல முடியுமா? அல்லது ஆங்கிலேயரை எதிர்க்காதவங்க எல்லாத்தையும் தேசத் துரோகிங்கள்னும் சொல்ல முடியுமா? திப்பு சுல்தான் தன்னோட ஆதிக்கத்தை தக்க வச்சுக்க ஆங்கிலேயரை எதிர்த்ததை தேசபக்தின்னு சொல்ல முடியாது சார்” என்றார்.

“இந்து ராஜான்னு சொல்லிக்கிற திருவிதாங்கூர், கொச்சி மன்னர்கள் ஆங்கிலேயர்களுக்கு அடிமையா இருந்து சுகமா வாழ்ந்த துரோகத்தை விட தன்னோட நாட்டை அன்னியனிடமிருந்து பாதுகாக்க போர்க்களத்துல போரிட்டு உயிர் தியாகம் செய்த திப்பு மேலானவர்தானே சார்.”

“கேரள ராஜாக்கள், எதுக்காக ஆங்கிலேயருக்கு அடிமையா இருந்தாங்கன்னு பார்க்கணும். இந்து மதத்தையும் இந்து மதத்தோட சொத்துக்களையும் பாதுகாக்கத்தான் ஆங்கிலேயரோட ஒப்பந்தம் போட்டுக் கிட்டாங்க” என்று தேசபக்திக்கு புதிய வரையறை சொன்னவர், தொடர்ந்து “திப்பு சுல்தானை பாருங்க, ஃபிரெஞ்சு காரங்கள கூடச் சேர்த்துக் கிட்டான், இந்தியா மேல படை எடுத்து வரும்படி ஃபிரெஞ்சு காரங்களுக்கு லெட்டர் போட்டிருக்கான்”

“ஆங்கிலேயர்களை விரட்டியடிப்பதற்கு ஃபிரெஞ்சு தளபதிகளை சம்பளம் கொடுத்து தளபதிகளா வேலைக்கு வச்சுகிட்டாரு. ஆனா, இந்து ராஜாக்கள் எல்லாம் நம்மை நாட்டை அடிமைப்படுத்தின ஆங்கிலேயனுக்கு கால்ல விழுந்து கிடந்தாங்களே. அப்போ யாருக்கு மணிமண்டபம் வைக்கணும்?” என்று கேட்டோம்.

“அதெல்லாம் இருக்கட்டும். துலுக்கனுக்கு நம்ம நாட்டுல என்ன சார் வேல. ஹைதர் அலி யாரு, பஞ்சாபிலேருந்து வந்து மைசூர் மகாராஜாவை தூக்கி எறிஞ்சுகிட்டு ஆட்சியை புடிச்சவன். அவனை நாம எதுக்கு சார் மதிக்கணும்?” என்று பேச்சை மாற்றினார்.

“பஞ்சாபும் இந்தியாலதான இருக்கு, அப்போ ஹைதர் அலிக்கு சொந்த ஊரான பஞ்சாப் பாரதத்தில் இல்லையா? ”

இதில் அதிர்ச்சியானவர், “யாரு சொன்னாங்க, பஞ்சாபுக்கு அவன் எங்கேருந்து வந்தான், மத்திய ஆசியாவில இருந்து வந்தான். இவனுங்க எல்லாம் வந்துதான் நம்ம நாடு சீரழிஞ்சு போச்சு. நம்ம நாட்டோட பெருமைய மீட்டெடுக்கணும்”

“ஆனால, நம்ம அரசே அன்னிய முதலீடுதான் நம்ம நாட்டை வளர்க்க ஒரே வழின்னு சொல்லி வெளிநாட்டு கம்பெனிகள உள்ள விடுது. அது சரியா!”

“இப்போ நம்ம பலவீனமா இருக்கோம் சார். வெளிநாட்டில இருந்துதான் எல்லாம் வர வேண்டியிருக்கு. நம்ம நாடு எப்படி இருந்த நாடு தெரியுமா. இந்த நாட்டுல என்ன இல்லை சார். 1800-ம் ஆண்டுல உலக ஜி.டி.பில 40% நம்ம நாட்டுலதான் உற்பத்தி ஆகிட்டு இருந்துச்சு. அன்னியர்கள் வந்துதான் எல்லாம் சீரழிச்சிட்டாங்க”

“அப்படியா சொல்றீங்க. அப்படீன்னா முகலாயர் ஆட்சி முடியிற கால கட்டத்துல  அவ்வளவு சிறப்பா இருந்ததுன்னா அப்போது நம்ம நாட்டில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருந்திருக்குன்னு சொல்லுங்க”

1000 ஆண்டு அன்னியர் ஆக்கிரமிப்பு என்று புரட்டல் சொல்லும் சங்க வரலாற்றுப் பாரம்பரியத்தை விட்டுக் கொடுத்து விட்டோமோ என்று ஒரு கணம் திகைத்துப் போனவர், “அவன் நம்ம பொருளாதாரத்து மேல கை வைக்கல சார், அது நல்லா நடந்தாத்தான் வரி வசூலிக்க முடியும். ஆனா இந்துக்களை எல்லாம் மதம் மாத்தினான், அதை நெனைச்சு பாருங்க.” என்றார்.

“சரி, இன்னொரு சந்தேகம். இவ்வளவு கஷ்டப்பட்டு போராடி வெள்ளைக்காரன வெரட்டியடிச்சோம். ஆனால,  இன்னைக்கு ஐ.டி கம்பெனில வேலை பார்க்கிற நாங்கெல்லாம், வெள்ளைக்காரனுக்குத்தான் சலாம் போடுறோம். அவன் ஆட்டுவிக்கிற மாதிரிதான் ஆடுறோம். இந்த அடிமைத்தனத்துக்கு என்ன செய்றது?”

“அவன்தான் உங்களுக்கு காசு தாறான் சார். அப்போ அவன் சொல்றபடிதான் கேக்கணும். இன்னைக்கு எவன்னாலும் மேடையில ஏறி பொருளாதாரம், வளர்ச்சின்னு அடிச்சி விட்றான். ஜி.டி.பின்னா என்னன்னு தெரியுமா இந்த தாயளிகளுக்கு. ஜி.டி.பி எப்படி கணக்கு போடுறாங்கன்னு தெரியுமா. பேச வந்துட்டானுங்க, நம்ம நாட்டுல துலுக்கனுங்களுக்கு என்ன சார் வேலை” என்று சரமாரியாக கெட்ட வார்த்தைகளை அவிழ்த்து விட ஆரம்பித்தார்.

பிறகு, “வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம்னு போட்டிருக்கீங்களே, அறிவியல் ஆராய்ச்சி என்னென்ன செய்றீங்கன்னு சொல்ல முடியுமா?” என்று கேட்டோம்.

“செய்றோமே, இங்க பாருங்க இந்த வீடியோவை, பஞ்சாங்கம்கறது எவ்வளவு அறிவியல் பூர்வமானது. நம்ம பண்டிகைகள், சடங்குகள் எல்லாம் எப்படி அறிவியல் பூர்வமா  கொண்டாடுறோம், இதை எல்லாம் விளக்கி வீடியோ தயாரிச்சிருக்கோம்”

பழம் பஞ்சாங்கத்துக்கு வந்த வாழ்வை வீடியோவாக்கி போட்டுக் காட்டித்தான் அந்த பள்ளிக் குழந்தைகளை டார்ச்சர் செய்து கொண்டிருந்தார்களா, என்று நினைத்துக் கொண்டே, “இதனால் என்ன பலன், இந்தியா சந்திராயன் ராக்கெட் விடுவதற்கு இந்த பஞ்சாங்கத்தைப் பார்த்து கணக்கு போட முடியுமா” என்று விளக்கம் கேட்க ஆரம்பிப்பதற்கு முன்பே வேறு யாரோ அவரை கூப்பிட, விட்டால் போதும் என்று எஸ்கேப் ஆகி விட்டார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க  அவற்றின் மீது சொடுக்கவும்]

–    வினவு செய்தியாளர்கள்.

  1. வினவு பாஸ் , இந்த மேட்டர கேள்வியுடன் விட்டுடிங்கலே! பஞ்சாங்க கோஷ்டியீடம் பதில் வாங்கி இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்!

    “இந்துக்களோட கட்சி பா.ஜ.க தாழ்த்தப்பட்ட மக்களோட வீடுகளை உடைச்ச பா.ம.கவோடும் இன்னும் சாதிக் கட்சிகளான கொங்கு ஈஸ்வரன் கட்சி, பச்சமுத்து கட்சி இவங்களோட எல்லாம் கூட்டணி வைக்கிறதைப் பத்தி என்ன சொல்றீங்க”

  2. கம்யுனிசம் போன்ற _____ தத்துவத்துக்கு பழைய பஞ்சாங்கம் எவ்வளவோ மேல். வினவு உளறலை யாரவது மிஞ்சி விட முடியுமா!

      • ஸரவனன்,நான் எதுக்கு என் பூணுல்லை மறைக்கனும்.நான் ஒன்னும் உங்கள மாதிரி இடத்துக்கு ஒரு கொள்கையும் துண்டும் வெச்சிகல. வினவு கம்யுனிசத்த பத்தி கமண்ட் பன்னா அத கட் பன்னி எடிட் பன்னிதான் அத வெளியிடுவாரா.

        • சீப்பு சட்டை,

          முதலில் என் பெயரை நீர் தமிழில் சரியாக எழுதிவிட்டு பின்பு பூணுல் பற்றி பேசவும். என் பெயரை “ஸரவனன்” நீர் எழுதிய முறையிலேயே பூணுல் பளபளக்குதே !

          எம் கொள்கை என்பது ஒட்டு மொத்த மக்களுக்குமான விடுதலை ஆகும். அது மார்சீயம்-லெனினியம் சார்ந்தது. மனிதர்களுக்கு சாத்தியப்படும் அனைத்து விடுதலைகளையும் ,சாத்தியமான நேரத்தில் பெற்று தர முயல்வது தான் மார்சீயம்-லெனினியம் சார்ந்து நான் கண்டு அறிந்த வழி

          • I feel sorry for people like you; you are walking behind a wrong ideology. Luckily the crowd has shrunk tremendously. It’s being leveraged only in PSU / Govt union offices.
            Communist economic principles have already been buried in countries like Russia and China; they have not worked anywhere and will NOT work in India. China liberalized its economy and have grown..
            This principle appears to be good; but not practical.

          • சரவணன்,

            உம் பெயரை “ஸரவனன்” என்று எழுதியதால் என் பூணுல் எப்படி பளபளக்கும்(நான் இந்த தமிழ் மொழி பெயர்க்கும் கருவிக்கு புதிது). கம்யுனிஸ்ட் களின் சிந்தனை திறனை இது காட்டுகிறது. என் பூணுல் பளபளக்குது இருக்கட்டும் உலகம் முழுவதும் சிகப்பு சட்டையின் சாயம் வெளுத்து போய் கொண்டு இருக்கிறது அதை பற்றி கவலை படும்.
            “எம் கொள்கை என்பது ஒட்டு மொத்த மக்களுக்குமான விடுதலை ஆகும்” ஆகா இதை தான் சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் பார்தோமே.உங்களின் கொள்கையே விடுதலையை பறிப்பது தான்.நீங்கள் வன்முறை, புரட்சி செய்யலாம் ஆனால் உங்களை எதிர்த்து யாரும் புரட்சி செய்ய கூடாது, மீறினால் கொலை தான்.

            • சீப்பு சட்டை,

              நான் பூணுல் என்று கூறியமைக்காக “ஸரவனன்” என்று வட மொழீயீல் எழுதிபழி தீர்திர்கள் என்று நினைத்தேன். தமிழ் தட்டு அச்சுக்கு நீங்கள் புதியவர் என்பதை நான் இப்போது அறிந்து கொண்டதால் மன்னிப்பு கோருகின்றேன்.

              மேலும் நான்உங்கள் கருத்துகள் ….

              [A ]உலகம் முழுவதும் சிகப்பு சட்டையின் சாயம் வெளுத்து போய் கொண்டு இருக்கிறது
              [B]சீனாவின் தியான்மென் சதுக்கத்தில் பார்தோமே

              பற்றி ஏதாவது நீண்ட வீளக்கத்தை நான் கொடுத்தால் உடனே வினவு , இக் கட்டுரைக்கு சம்மந்தம் இல்லா பின்னுட்டம் என்று கூறி தடை செய்து வீடும். என்னுடைய நேரம், உழைப்பு மட்டும் வீண் ஆகும். எனவே உங்களுடன் இது[ சீனா ] தொடர்பான வேறு ஒரு கட்டுரை வரும் போது அதில் விவாதிக்கீன்றன். வினவு, அவர்கள் இணைய தளம் தொடர்பான நபர்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை வழங்கி, கட்டுரைக்கு சம்மந்தம் இல்லா பின்னுட்டத்தை கூட வெளியீடும். எமக்கு அந்த முன்னுரிமை வினவால் அளீக்கபடவில்லை .

              • சரவணன்,

                சமத்துவம் எல்லா இடதிலும் கிடைக்காது, இதற்க்கு வினவும் விதிவிலக்கல்ல. எழுதும் பின்னோட்டத்தில் பார்பணீயம் எனும் வார்த்தை இருந்தால், வசை பாடுதல் இருந்தால் முன்னுரிமை இருக்கும்.நீங்கள் சொல்ல விரும்புவதை நான் மேற் சொன்ன வகையில் எழுதினால் முன்னுரிமை அளிக்கப்பட்டு ஒரு வெட்டும் இல்லாமல் வெளியிடபடும்.

                இங்கு நாட்டின் விடுதலைக்காக போராடிய திப்பு சுல்தான் என்று எழுதினர். எந்த நாட்டிற்க்கு என்று வினவினால் புரிதலுக்கு எதுவாக இருக்கும். திருவாங்கூர் மன்னன் ஆங்கிலேயன் உதவி நாடினால் அவர் தேச த்ரோகி, அனால் திப்பு ப்ரென்ச் உதவி நாடி போரிட்டால் அவர் தேசப்பற்றுள்ள இஸ்லாமியர். ஆகா என்ன ஒரு கோட்பாடு. எல்லா அரசனும் தன்னுடைய ராஜ்ஜியத்தை காக்க நினைப்பான், அப்பொழுது அனைவருமே தேச பக்தர்களே.

                • ஐயா ஸ்வாமி சீப்பு சட்டை,

                  கும்பிடரேனுங்க !

                  வினவின் பின்னுட்ட பக்கச்சார்பு ஒரு பக்கம் இருக்கட்டும் ஸ்வாமி சீப்பு சட்டை, ஆனா பாருங்க …..

                  “பஞ்சாங்கம் ஒரு அறிவியல் பார்வை”,”வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய்யத்தீன் முஸ்லீம்கள் மீதான வன்மம் “,இந்து தலைவர்கள் கொல்லபடுவது”,“ஹிந்துக்களுக்கு இந்த நாட்டில் ஜனநாயகமே இல்லை”

                  போன்ற பல, பலான விடயங்களை வினவு கிண்டல் அடிப்பதை பார்க்கும் போது ஒங்க ரத்தம் கொதிக்கலையா ஸ்வாமி ?அதை பத்தி நாமும் நாளு வார்த்தை பேசி வினவை கீழி கிழினு கிழீக்கலாம் வாங்க ஸ்வாமி!

                  அதை எல்லாம் விட்டு விட்டு சீனா,தியான்மென்,புரட்சி இந்த வெளி ஊர் கதை எல்லாம் நமக்கு எதற்கு ஸ்வாமி?சிகப்பு சட்டையின் சாயம் வெளுத்து போன பொறவு நமக்கு எதுக்கு அந்த சட்டைய பத்தி பேச்சு ஸ்வாமி?

                  எனக்கு ஒரு ஒரேஒரு சந்தேகம் மட்டும் தான் ஐயா சாமி “இப்ப”, எங்க சனங்களுக்கும் எப்ப சாமி பூணுல் கல்யாணம் பண்ணி பூணுல் போட்டு சமத்துவ அழகு பாக்க உடுவிங்க? ஒங்க கட்சி “கருனாநிதிய கூட எதுத்த வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய்யம்” என்னைய கோரிக்கைய ஆதரீக்குமா ஸ்வாமி ? நாளைக்கு வேர சந்தேகம் வந்தா அதை அப்புரமா கேட்டுகீறேன் ஸாமி! வணக்கமுங்க !

                  • யாராக இருந்தாலும் பூணூல் போட்டுக்கொள்ளவோ மந்திரம் ஓத(வேலையாக இல்லாமல்,தனது மன அமைதியாய் நோக்கி) வோ தடை இல்லை சரவணன்.

                    இன்று பல வேத பண்டிதார்கள் மிகவும் வறுமையில் உள்ளனர்.

                    • harikumar,Seppu sattai

                      எங்க சனங்களுக்கு பூணுல் கல்யாணம் பண்ணி பூணுல் போட்டு சமத்துவ அழகு பாக்க, திருவள்ளிகேணி பார்த்தசாரதீ கோவிலில் முறையாக வேதம் கற்றும் வேதம் ஓத அனுமதிக்க படாத எங்க சனங்களுக்கும் ஆசை இருக்கும் இல்லையா ? இதற்கு தடை செய்வது யாருங்க ஸ்வாமி ? எங்க சனங்களா இல்லை பார்பனியமா ? எப்ப ஸ்வாமி தீர்வு கெடைக்கும் ?ஹரிகுமார் ,நீங்க சொல்வது படி பூணுல் போட்டும் ,வேதம் கற்றும்[கற்றாயிற்று] வந்தா திருவள்ளிகேணி பார்த்தசாரதீ கோவிலில் வேதம் ஊத எங்க சனங்களை விடுவீங்கலா ?

                  • “சிகப்பு சட்டையின் சாயம் வெளுத்து போன பொறவு நமக்கு எதுக்கு அந்த சட்டைய பத்தி பேச்சு ஸ்வாமி?”

                    ஒத்துக்கொண்டால் சரி தான். அப்போ வினவு ம.க.இ.க இவர்களெள்ளாம் கடையை சாற்றிவிட்டு ஊருக்கு போக வேண்டியதுதானா. சரி அவர்கள் எப்படியாவது போகட்டும். உங்கள் கேழ்விக்கு வருகிறேன்.நீங்கள் அனைவரின் பூணுலை அருக்க வேண்டும் என ஆசை படுவீர் என்று பார்த்தால் அதை போட்டுக்கொல்ல ஆசை படுகரீர்.

                    “எங்க சனங்களுக்கும் எப்ப சாமி பூணுல் கல்யாணம் பண்ணி பூணுல் போட்டு சமத்துவ அழகு பாக்க உடுவிங்க?”
                    பூணுல் போட்டு கொண்டால் சமத்துவம் பிறக்குமா? பூணுல் போட்டு கொண்டவர் பெரியவர் மற்றவர்கள் சிறியவர் என்று யாரும் இப்பொழுது சொல்லவில்லையே. அப்படி சொல்பவர்கள் சந்தர்ப்ப வாதிகள்.

                    • vinavu readers are also watching you. so replay properly with this question:

                      எங்க சனங்களுக்கு பூணுல் கல்யாணம் பண்ணி பூணுல் போட்டு சமத்துவ அழகு பாக்க, திருவள்ளிகேணி பார்த்தசாரதீ கோவிலில் முறையாக வேதம் கற்றும் வேதம் ஓத அனுமதிக்க படாத எங்க சனங்களுக்கும் ஆசை இருக்கும் இல்லையா ? இதற்கு தடை செய்வது யாருங்க ஸ்வாமி ? எங்க சனங்களா இல்லை பார்பனியமா ?

                • செப்பு சட்டை அவர்களே,

                  உங்களுக்கு திப்பு சுல்தானுடைய வாழ்க்கை வரலாறு தெரியுமா அல்லது தெரியாதா? அது எப்படி தேசத்தை வெள்ளையர்களிடமிருந்து காப்பாற்ற தன் இன்னுயிரை நீத்த வீரரை உங்களால் குறை கூற முடிகிறது?

                  தயவு செய்து இங்கே பொய்யான புரளியை பரப்பாதீர்கள். உங்களை படைத்த இறைவனை அஞ்சுங்கள்.

                  • யப்பா தமிழனே,

                    நான் கேட்ட கேழ்வியை முழுசா படிச்சயா? “திருவாங்கூர் மன்னன் ஆங்கிலேயன் உதவி நாடினால் அவர் தேச த்ரோகி, அனால் திப்பு ப்ரென்ச் உதவி நாடி போரிட்டால் அவர் தேசப்பற்றுள்ள இஸ்லாமியர்” இந்த வினவின் கூற்றை நான் சாடினேன் இதில் என்ன குறை

                    • அஹா, உங்க திருவாங்கூர் மன்னன் யாரோடு போரிட ஆங்கிலேயரின் உதவியை நாடினார் என்று விளக்க முடியுமா?

                      திப்புவின் வீரமும் தேச பற்றும் ஒரு கற்பூர வாசனையை போன்றது. எல்லாராலும் அதை தெரிந்து கொள்ள முடியாது.

                      தெரியாம தான் கேட்கிறேன், இஸ்லாமியர்கள் என்றால் பொதுவாகவே உங்களை போன்றோருக்கு ஏன் இவ்வளவு கோவம் வருகிறது? முஸ்லிம்கள் நல்லவர்கள் என்று சொன்னால் உடனே வரிந்து கட்டிக்கொண்டு சண்டையிட வந்திடுறீன்களே? ஏன் அப்படி?

  3. வரலாற்றை புரட்டும் பார்ப்பனர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடிய திப்பு சுல்தான்,ஹைதர் அலி மற்றும் ஏராளமான தேசப்பற்றுள்ள இஸ்லாமியர்களின் பங்களிப்பாலும் மேலும் பார்ப்பனர்கள் அல்லாத எத்தனையோ பிற நல்ல மனிதர்களாலும் கிடைத்த இந்த சுதந்திரத்தை தாங்கள் பெற்றுகொடுததைபோல் வரலாற்றை புரட்டுவதை வினவு போன்ற போராளிகள் இருக்கும் வரை முடியாது என்பதை புரிந்துகொள்ளட்டும்.

  4. ஒரே ஒரு கேள்வி. ஆங்கிலேயரை எதிர்த்த திப்பு சுல்தான மத வெறியனா பாக்கக் கூடாதுன்னா வாஞ்சி நாதனும் பகத் சிங்கும் ஒரே மாதிரிதான்னு ஒத்துக்கறீங்களா? வாஞ்சி ஐயர்கூட ஆங்கிலேயருக்கு எதிரிதானே?

  5. போகிற போக்கில் சு.சாமியை
    இந்தியாவின் ஒளி விளக்கு என்று
    பூணுள்கல் விளக்கும்…
    நாம் என்ன செய்யலாம்?

    • வீளக்குமாறு தானம் செய்தால் நல்லது!
      எனது சொந்த செலவில் மேற்கண்ட “உத்சவம்” நிறைவேற
      1000 விளக்குமாறு அன்பளிப்பு எய்ய இருக்கிறேன்

  6. சாஸ்திரம், தர்மம், வேதம், தானம், என்ற பெயர்களில் இந்த கும்பல் நம்மை ஆண்ட மன்னர்களையே கையில் போட்டுக்கொண்டு நன்றாக ஓசி தீனி தின்று மகிழ்ந்தார்கள்.

    ஆள்பவர் ஒன்று இவர்களுடைய இனத்தவராக இருக்க வேண்டும், இல்லையேல் இவர்களது இனத்துக்கு முழு அர்ப்பணம் செய்யும் சேவகர்களாக இருக்க வேண்டும், இல்லையேல் இவர்களின் பொய்யுரைகளை உண்மையென நம்பி ஆட்சி புரியும் அப்பாவிகளாக, முட்டாள்களாக,இவர்களை எளிதில் நம்பும் ஏமாளியாக இருக்க வேண்டும்.

    தப்பி தவறி ஏதாவது ஒரு ஆட்சி இவர்களின் அதிகாரத்திற்கு தடையாக இருந்ததென்றால் தந்திரமாக அவர்களை தவறிழைக்க வைத்து அதில் மாட்ட வைத்து பின் ஒட்டு மொத்த மக்களையும் அவர்களுக்கு எதிராக திரட்ட வல்லவர்கள். இவர்கள் ஆதரவில் ஆட்சியை பிடித்தவர்கள் அதே தவறை செய்தால் அதை தந்திரமாக மறைக்க கூடியவர்கள்.

    இவர்களிடம் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    • கற்றது கையாளவு அவர்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம். வரலாற்றில் இருந்து சில மேற்கோள் காட்ட வேண்டுகிறேன். இந்த விசயங்கள் எங்க இருந்து சொல்றீங்கநு தெரிஞ்சா கொஞ்சம் நாங்களும் படிக்க விருப்பம்.

      ஒரு சின்ன விசயம். சிலர் செய்த தவறுகளுக்கு ஒரு community மொத்தம் அசிங்க படுத்தவது சரி இல்லை. முஸ்லிம் தீவிரவாதி செய்யும் தவறால் அனைத்து முஸ்லிம்களும் கெட்டவங்க இல்லை.

      • சந்துரு அவர்களே,

        வினவில் பின்னூட்டமிடும் நண்பர் சரவணன் அவர்கள் இதற்கு பல வரலாற்று சான்றுகளை வினவில் பல முறை அளித்துள்ளார். அனைத்து சேர, சோழ பாண்டிய மன்னர்களும் இவர்களின் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் பொதுமக்களிடமிருந்து பிடுங்கிய வரிப்பணத்தை இந்த சிறு கூட்டத்துக்கு தானம் என்ற பெயரில் பசுக்கள், வீடுகள் அனைத்தையும் அள்ளி அள்ளி கொடுத்துள்ளனர். ராஜதுரோக குற்றம் இழைத்தால் கூட அது அந்தணராக இருந்தால் அவர்களை கொல்லாது நாடு கடத்த செய்யும் வகையில் வேத சாத்திர விதிகளை அரசர்களுக்கு விதித்துள்ளனர் இவர்கள். இருக்கவே இருக்கிறது பிரம்மஹச்தி தோஷம். அனைவருக்கும் ஒரு விதி என்றால் இவர்களுக்கு மட்டும் தனி விதி.

        • நான் வினவுக்கு புதிது. அதனால் எங்கு இருக்கிறது என்று தெரியாது. மன்னிக்கவும்.

          அந்தணர்களுக்கு வேத விதி படி மரண தண்டனை விதிக்க முடியாது என்பது உண்மை. ஒத்து கொள்கிறேன். அனால் மன்னர்கள் அவர்களுக்கு மட்டும் தானம் செய்யவில்லையே. தங்களை பாடிய புலவர்கள் முதல் வீரம் காட்டிய வீரர்கள் வரை தானம் அளித்து இருகிறார்கள். அடக்குமுறை சாதி வெறி மிகவும் கொடியது. ஒத்து கொள்கிறேன். ஆனால் அவர்களுக்கு மட்டும் தனி விதி என்பது சரி அல்ல. தவறு செய்தவன் மேல் சாதி என்றால் தண்டனை குறைவாகதான் இருந்து வந்துள்ளது. ஒரு community மட்டும் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது தவறு. தான் மேல் சாதி என்று வெறி ஆட்டம் அடிய அனைவரும் அதற்கு பொறுப்பு தான்.

          மேலும் ஒரு சின்ன info. அந்தணர்களுக்கு தானம் செய்ய சொன்னதன் காரணம், வேத விதி படி அவர்கள் செய்யும் தொழிலுக்கு பொருள் பெறவோ அல்லது எந்த சொத்தும் வைத்து கொள்ளவோ முடியாது. நடுவில் அது (இந்து மதத்தின் வேறு பல விசயங்கள் மாறியது போல) மாறியது வேறு விசயம்.

  7. even famous scientist in the world appreciated the sceintific points in vedas, eg.nikolas tesla. CERN has natraj statue.. .You people even if you try for 1000 years can never undermine the value of hinduism… It has withstood worst malicious campaign and stands still . so continue your blahh.. blah. blah…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க