Sunday, July 25, 2021
முகப்பு செய்தி புதுச்சேரி : முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!

புதுச்சேரி : முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!

-

புதுச்சேரி :
முதலாளிகளின் சொர்க்கபுரி – ஒப்பந்ததாரர்களின் சாம்ராஜ்ஜியம்!
அனுமதியோம்! முடிவுகட்டுவோம்!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

மோடி இந்த வாரம் தொழிலாளர் சட்டங்களைத் திருத்த தனது ஒப்புதலை வழங்கிவிட்டார். ஏற்கனவே செல்லுபடியாகாத நிலையில் இருந்த சட்டங்கள் அனைத்தும் 1990-களுக்குப் பிறகு தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்கக் கொள்கைகள் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பிறகு எடுபடாமல் போய் தற்போது காலாவதியாகிக் கொண்டிருக்கின்றன. தொழிலாளர்கள் உரிமைகள் ஏதுமற்ற நவீன கொத்தடிமைகளாக மாற்றப்பட்டு விட்டனர். தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைக் கூட மிகுந்த போராட்டத்திற்குப் பிறகே பெற முடிகிறது. பணிப்பாதுகாப்பற்ற சூழலில் தான் தொழிலாளர்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

ஏற்கனவே, இருந்த நிரந்தரத் தொழிலாளர் முறை படிப்படியாக ஒழிக்கப்பட்டு பேருக்கு அல்லது கணக்கு காட்டுவதற்காக சில பேரை நிரந்தரத் தொழிலாளர்களாக பணியமர்த்திக் கொண்டு பெரும்பான்மையாக ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணியமர்த்தி அவர்கள் நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். இது போன்ற சட்டவிரோத நடவடிக்கைகள் மேற்கூறிய சட்டத் திருத்தங்கள் மூலம் சட்டபூர்வமாக்கப் படவிருக்கிறது.

புதுச்சேரி திருபுவனை தொழிற்பேட்டையில் உள்ள பெரும்பான்மைத் தொழிற்சாலைகளில் இதே தான் நிலைமை. இங்கு நிரந்தரத் தொழிலாளியோ, ஒப்பந்தத் தொழிலாளியோ யார் உரிமை என வாய் திறந்தாலும் முதலில் வந்து தொழிலாளர்களுக்கு எதிராக நிற்பது ஒப்பந்ததாரர்கள் என்ற பெயரில் உள்ள முதலாளிகளின் அடியாள் படையே. இந்தத் தொழிற்பேட்டைப் பகுதிகளில் எங்கு சங்கம் அமைத்தாலும் சங்கக் கொடியைப் பிடுங்குவதும், தகவல் பலகையை உடைப்பதும் இந்த குண்டர் படையே. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தமது சம்பளப் பிரச்சினை, ESI, PF போன்றவை பற்றிக் கேட்டாலே அவர்களை மிரட்டுவதும், தட்டிக் கேட்டால் அறையில் பூட்டி வைத்து அடிப்பதும் இந்த ரவுடிப் படை தான். பிரச்சினைக்கு தக்கபடி முதலாளிகள் இவர்களுக்கு எலும்புத் துண்டை வீசத் தவறுவதில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த தொழிலாளர் விரோதிகள் எந்த ஓட்டுக் கட்சியில் இருந்தாலும், இந்த முதலாளித்துவச் சேவையில் ஒன்றுபட்டு நிற்கின்றனர். முதலாளிகளின் ஏவல் படையாக மாறிவிட்ட போலிசும் இவர்களின் இந்த ரவுடித்தனங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதால் தன்னைத் தட்டிக் கேட்க எவரும் இல்லை என்ற தைரியத்தில் இவர்கள் செய்யும் அட்டூழியங்களால் தொழிலாளர்கள் சொல்லொண்ணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

தொழிலாளர்களின் இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஒட்டு மொத்த தொழிலாளர்களும் அமைப்பாகத் திரள வேண்டும். எனவே, தொழிலாளர்களையும் பகுதி மக்களையும் அணிதிரட்டி அமைப்பாக்கும் நோக்கத்தோடு பகுதியில் தொடந்து பிரச்சாரம் செய்வது, அமைப்பாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

புதுச்சேரி புஜதொமு பேரணி, ஆர்ப்பாட்டம்

நிகழ்ச்சி நிரல்:

நாள்: 05-08-2014

பேரணி

நேரம் : மாலை 04.30 மணி
துவங்குமிடம் : ரைஸ்மில் பேருந்து நிறுத்தம், திருபுவனை, புதுச்சேரி

தலைமை
தோழர்.சுதாகர், கிளைத் தலைவர்,
பு.ஜ.தொ.மு. திருபுவனை கிளை,
புதுச்சேரி

ஆர்ப்பாட்டம்

நேரம்: மாலை 05.30 மணி
இடம்: திருபுவனை பேருந்து நிறுத்தம், திருபுவனை, புதுச்சேரி

தலைமை
தோழர்.மோகன்ராஜ், கிளைத் துணைத்தலைவர்,
பு.ஜ.தொ.மு. திருபுவனை கிளை,
புதுச்சேரி

ஆர்ப்பாட்ட உரை
தோழர்.தனக்கோடி, கிளைச் செயலாளர்
,
பு.ஜ.தொ.மு. மங்கலம் கிளை,
புதுச்சேரி
தோழர்.லோகநாதன், மாநில அலுவலகச் செயலாளர்,

பு.ஜ.தொ.மு. புதுச்சேரி

நன்றியுரை
தோழர்.மகேந்திரன், கிளைப் பொருளாளர்,
திருபுவனை கிளை,
புதுச்சேரி

தொழிலாளர் வர்க்கமே,
உரிமைகளை வென்றெடுக்க அணி திரண்டு வாரீர்!!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புதுச்சேரி

தொடர்புக்கு
தோழர். பழனிசாமி மாநிலத் தலைவர், பு.ஜ.தொ.மு. புதுச்சேரி.
95977 89801

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க