சாதி சமய சடங்கு பார்த்து, அந்தஸ்து பார்த்து, பெற்றோரின் முடிவுக்குத் தலையாட்டி, ஒருவர் புரியாத மொழியில் மந்திரங்களை உச்சரிக்க, ஏதோ ஒரு குறித்த நேரத்தில் தாலியைக் கட்டிவிடுவதும், சீதனத்தை கணக்கோடு வாங்குவதும் கணக்கு வைத்து திருப்பிக்கொடுப்பதும், அரைவயிறு, கால்வயிறு சாப்பிட்டு அல்லது பட்டினி கிடந்து, உழைத்து சிறுகச் சிறுக சேமித்த பணத்தைக் கொண்டு அர்த்தமற்ற போலி சுய கவுரங்களை காப்பாற்றிக்கொள்வது என்ற பேரில் சடங்குகளை விடாமல் பற்றிக்கொண்டிருப்பது இவைகளைத்தான் பொதுவாக இனைறைய திருமணங்களில் நாம் காண்கிறோம். இதுவே மகிழ்ச்சியாக சித்தரிக்கப்படுகிறது.
இதற்கு மாறாக, மகிழ்ச்சி என்பது ஆடம்பரமற்ற எளிய வாழ்க்கையிலிருந்து தொடங்குகின்றது. எந்தளவிற்கு எளிமையாக வாழ்க்கையை மாற்றுகின்றோமோ, அந்தளவிற்கு அங்கு மகிழ்ச்சி இயல்பாகத் தொடங்குகின்றது. தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று சுயநலமாக இல்லாமல் சமூகத்தின் இன்ப துன்பங்களுடன் இணையும் போது மட்டுமே மகிழ்ச்சி என்பது பொது வாழ்வாகி விடுகின்றது…..
அப்படிப்பட்ட மகிழ்ச்சியை வரித்துக்கொண்டு ஆடம்பரமில்லாமல் சடங்குகளை மறுத்து எளிய முறையில் கடந்த 13.07.2014 ஞாயிற்றுக் கிழமை மதியம் 2 மணியளவில் ஓசூர் ஆந்திரசமிதி எனும் மண்டபத்தில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் மற்றும் தோழர் வெண்ணிலா ஆகிய இவ்விருவருக்கும் புரட்சிகர மணவிழா நடைபெற்றது.
இப்புரட்சிகர திருமணத்தை இவ்வமைப்பின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமையேற்று நடத்தி வைத்தார். முன்னதாக தோழர் வேல்முருகன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டத்தலைவர் தோழர் பரசுராமன், பென்னாகரத்தை சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர் தோழர் அருண், பெங்களூர் எழுத்தாளர் தோழர் கலைச்செல்வி, கொத்தகொண்டப்பள்ளி கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு. முனிராஜ், தோழர். இ.கோ.வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
வாழ்த்துரைகளின் இடையில் நக்சல்பாரி, ஓவியா ஆகிய இரு சிறுவர்கள் தங்கள் மழலைக் குரலில் புரட்சிகர பாடல்களை பாடினர். இதன் தொடர்சியாக பு.ஜ.தொ.மு வின் மாநிலப் பொருளாளர் தோழர். பா. விஜயகுமார் நிகழ்ச்சியின் நோக்கத்தை, அதன் பல்வேறு அம்சங்களைத் தொகுத்து சிறப்புரையாற்றினார்.
மணமக்களின் உறவினர்கள், தோழர்கள், பொதுமக்கள் என திரண்டிருந்த மக்கள்திரளினர் முன்னிலையில் மணமக்கள் மாலைமாற்றி உறுதிமொழியேற்றனர். கூடியிருந்த மக்கள் கைத்தட்டி புரட்சிகர மணமக்கள் வாழ்க என வாழ்த்து முழக்கங்கள் முழங்கி மணமக்களை வாழ்த்தினர்.
இந்நிகழ்வின் இறுதியாக, பார்ப்பன சடங்குகள் பண்பாட்டை தோலுரித்தும், புரட்சிகர புதிய பண்பாட்டை உயர்த்திப்பிடித்தும் ம.க.இ.க மையக்கலைக்குழுவினரின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெற்றது. திரளான மக்கள் இறுதிவரை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
புதிய ஜனநாயகம்,செய்தியாளர்,
ஓசூர்.
——————————————
வாழ்த்துக்கள்
சாதி கடந்து மதம் கடந்து சடங்கு கடந்து மனிதம் வாழ செய்யும் திருமணம் இது. பலர் தொடரவேண்டும்.
புரட்சி என்கீறீர்கள், ஆனால் திருமணம் என்பது புரட்சியா? ஆணுக்கு பெண் அடிமையாக மாற்றுவதுதான் புரட்சியா? அப்படியே ஆணுக்கு பெண் அடிமையீல்லா திருமணம் என்றாலும் ஊர் முன்னிலையில் சமுகத்திற்க்கு கட்டுபட்டு திருமணம் செய்வதே சடங்கு இல்லையா? ஏன் யாருக்கும் சொல்லாமல் விரும்பும் இருவர் இணைந்து வாழ்வதுதானே புரட்சியாகும் ஆனால், இதில் வேறு விளம்பரம் வேறு.
புரட்சிகர திருமணம் என்பது சாதி, சடங்கு, சம்பிரதாயத்தை மறுத்து செய்வது மட்டுமல்ல, தமது இல்லற வாழ்க்கையை குடும்பத்திற்கே உரிய சுயநலமின்றி, சமூகத்திற்காக அமைத்துக் கொள்வதாக உறுதி எடுத்துக் கொள்வதே முக்கியம். நீங்கள் யாருக்கும் சொல்லாமல் இணைந்து வாழ்வதுதான் புரட்சி என்கிறீர்கள். எனில் ஹாலிவுட், பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் அப்படித்தான் வாழ்கிறார்கள். ஆனால் அவர்கள் வாழ்க்கை தனிப்பட்ட முறையில் சொத்துக்களை குவித்துக் கொண்டு ஆடம்பரமாக வாழும் கடைந்தெடுத்த சுயநலமே அன்றி வேறல்ல.பொது நலனுக்காக தன்னுடைய தனிப்பட்ட வாழ்வை மாற்றிக் கொள்வதற்கும், பொது நலனின்றி தனது தனிப்பட்ட வாழ்வை விரும்பியபடி அமைத்துக் கொள்வதும் அடிப்படையில் எதிரெதிர் துருவங்கள். லிவிங் டு கெதர்தான் புரட்சி என்று வியந்தோதுமளவு உங்களது சிந்தனை வறட்சியாக இருப்பதை அறிவீர்களா?
சாதி மறுத்து திருமணம் செய்வது புரட்சிதான் என்று நீங்கள் சொல்லுகிறீர்கள், சரி, ஆனால், சடங்கு சம்பிரதாயம் மறுத்து திருமணம் என்கீறீர்கள், ஆனால், அடிப்படையில் திருமணம் என்பதே ஒரு சடங்குதான் சம்பிரதாயம்தான். அப்படி செய்யும் சடங்கை, பொதுநலத்திற்க்காக தங்கள் வாழ்வை அர்பணித்தால் என்ன இருமணம் விருப்பபட்டால் தாங்களாக இணைந்து வாழவேண்டியதுதான். ஆனால், அப்படி இல்லாமல் சமுகத்தில் மத்தியில் நாங்கள் சேர்ந்துவாழ்கிறோம் என சமுகத்திற்க்கு தெரியபடுத்தி அதன் அங்கிகாரத்தை கோருவதே சடங்குதான் சம்பிரதாயம்தான். இதன் அடிப்படையில் உங்கள் புரட்சி திருமணமும்,நுகர்வு கலாச்சார லிவிங் டு கெதரும் ஒன்றுதான். வெறும் சாதியை மறுத்து திருமணம் செய்துவிட்டால் மட்டும் அது புரட்சிகர திருமணமாகது.
வரதட்சணை, மொய், தாலி, சீர், ஆடம்பரம், பட்டாடை, தங்கநகைகள், புரோகிதர்,போன்றவை பார்ப்பனியம் உருவாக்கிய சடங்கு சம்பிரதாயம். இதுவும் திருமணம் என்று சமூகத்திற்கு அறிவிப்பதும் சடங்கு என்றால் நீங்கள் இந்தியாவைப் பற்றி அறியாதவராக இருக்க வேண்டும். திருமணம், திருமணத்தை பதிவு செய்தல், சமூகத்திற்கு அறிவித்தல், திருமணம் – விவாகரத்து ஆகியன குறித்த சட்டங்கள் அனைத்தும் ஆணாதிக்கம் கோலேச்சும் இந்த சமூகத்திலிருந்து பெண்களை சட்டபூர்வமாக பாதுகாக்கவென்றே உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் சொல்லும் அறிவிக்காமல் சேர்ந்து வாழ்தல் என்பது ஆணைப்பொறுத்த வரை பிரச்சினை இல்லை. பெண்களுக்கோ அது ஏராளகமான பிரச்சினைகளை கொண்டு வருகிறது. அதிலிருந்து குறைந்தபட்சமாக பாதுகாத்துக் கொள்ளவே இந்த சமூக அறிவித்த்ல் மற்றும் சட்டங்கள். இது தாங்கள் அறியவில்லை என்றால் ஆணாதிக்கம் கோலேச்சாத ஏதோ ஒரு வேற்று கிரக நாட்டில் வாழும் மனிதராக இருத்தல் வேண்டும். எமது திருமணங்கள் இவை அனைத்தையும் குறித்து மக்களிடையே பிரச்சாரம் செய்யும் வ்ண்ணம் அறிவிக்கப்படுகிறது. இறுதியாக நீங்கள் ஏதோ சொல்ல வருகிறீர்கள் என்பதற்கு மேல் எது உங்களது விமரிசனம் தெரியவில்லை. எது விமரிசனம் என்று தீர்மானம் செய்யாமலே விமரிசனம் செய்யும் பட்சத்தில் நீங்கள் ஏதோ ஒரு மதத்தை கண்மூடித்தனமாக பின்பற்றுகிறீர்கள் என்று பொருள். சரியா?
நீங்கள் சொன்ன கருத்து எல்லாம் புரட்சியாளர்கள் என்று யார் எல்லாம் தங்களை சொல்லிகொள்ளவில்லையோ அவர்களுக்கு நூறு சதவிதம் பொருந்தும், உங்கள் கருத்துபடி, பெண்களை பாதுகாப்பிற்காகதான் என்றால், தாங்களும் பெண்களை கைவீட்டுவிடுபவர்களாகத்தான் இருக்கிறீர்கள் என்றுதான் பொருள் வருகிறது. மேலும், புரட்சி திருமணம் என்று சொல்கீறீர்கள், திருமணத்திற்க்குபின், பெண் முழுமையாக உணவு, உடை, இருப்பிடம் என தன்னை மட்டுமே சார்ந்து இருப்பாரா அல்லது வழக்கம்போல் இராமணின் இருப்பிடம்தான் சீதையின் இருப்பிடம் என் கணவன் வீட்டிற்க்கு போவார்களா அல்லது கணவனை தன் வீட்டிற்க்கு அழைத்துவந்து விடுவார்களா? சாமி மட்டும்தான் கும்பிடவில்லை மற்றபடி கம்யூனசமும் மதமாகத்தான் இருக்கிறது. சாதரண மனிதன் கண்மூடிதமாக மதத்தை பின்பற்றுவது கூட மாற்றிவிடலாம், ஆனால், சாக்கடையயும், தூய்மையான தண்ணீரையும் மற்றும் உப்பு தண்ணீரையும் அறிவியல் ரீதியாக ஆய்ந்தரியாமல் கண்மூடிதனமாக தண்ணீர் என்பதும் சாராயம் என்பதும் ஒன்றுதான் என நம்பும் கம்யூனிஸ்டை விட, ஏதோ தாகத்திற்க்கு தண்ணீர் இருந்தால் போதும் என நினைக்கும் சாமானியன் பரவாயில்லைதான்.
உங்கள் பதிலில் இருந்து கம்யூனிசம் மோசம் என்பதைத்தாண்டி ஒன்றும் புரியவில்லை, என்னதான் சொல்ல வருகிறீர்கள்? கொஞ்சம் நிதானமாக யோசித்து எழுதுங்களேன்!
மகா தங்கா,
உங்கள் புரிதல் படி புரட்சிகரத் திருமணம் என்பது என்ன?
எங்களது புரிதல் படி, புரட்சிகரத திருமணம் என்பது, நிகழும் ஆணாதிக்க மற்றும் பெண்ணை ஒரு போகப் பொருளாக கருதும் சமூக விழுமியங்களில் இருந்தும் முற்றிலும் மாறாக, இந்த சமூகத்திற்காக வாழ்வதன் மூலம், சமூகத்திற்காக போராடுவதன் மூலமும், தமது இருத்தலை இந்த சமூகத்திற்கு ஒப்படைப்பது ஆகும்.
திருமணத்திற்குப் பின், இருவரும், தான் சார்ந்த இந்த சமூகத்தை சார்ந்து தான் இருப்பார்கள். கம்யுனிசம் என்பது சமூக பொருளாதார அறிவியல் ஆகும். மணமக்கள் இருவரும் இந்த சமூக இயக்கத்தையும், அதன் இயக்கவியல் விதிகளையும் புரிந்து கொண்டு, இந்த சமூக அமைப்பை மாற்ற அவர்களது பங்களிப்பை செலுத்துவர்.
சாராயத்தையும், தண்ணீரையும் பிரித்து புரிந்துக் கொள்ள கம்யுனிசம் தேவையில்லை. அதன் அறிவியல் அடிப்படையைப புரிந்து கொண்டால் போதுமானது. தாகத்திற்கு தண்ணீர் என்பது போய் இன்று காசுக்கு தண்ணீர் என்று வந்திருக்கிறது. இதன் மூலகாரணத்தை புரிந்துக் கொள்ளாமல் நீங்கள் பிதற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.
நன்றி.
உனக்கு என்ன வேணும். சாதி மாறி திருமணம் செய்யக் கூடாதா. அதுதான சொல்ல வர. சும்மா சுத்தி வளச்சி பேசாத.
ஒருமையில் பேசுவதை தவிருங்கள், கருத்து வேறுபாட்டை தெரிவிப்பதற்கு இது முறையல்ல!
யப்பா புதுசா கண்டுபிடிச்சிட்டாருயா.. புதிய தத்துவம் பத்தாயிரத்து நானுத்தி நாப்பதி நாலு
மணமக்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்!
வழமையான திருமணங்களில் மணமக்களுக்கு பெரிய வேலை இருக்காது! எல்லா ரத்த சொந்தங்களும் கல்யாண பேரத்தை, வேலைகளை ரத்த சொந்தங்களே செய்து முடித்துவிடுவார்கள். மணமக்கள் மணிக்கணக்கில் செல்லில் பேசுவது தான் பிரதான வேலையாக இருக்கும்! 🙂
ஆனால், புரட்சிகர மணம் முடிக்கும் மணமக்களுக்கோ ஏகப்பட்ட வேலைகள். சாதி, சடங்கு, வரதட்சணை, மொய் என பல விசயங்களை மறுப்பதால், ரத்த சொந்தங்களுக்கு பெரிய வேலை இல்லை. இவர்கள் கல்யாணம் இப்படி முடித்தால், நம்ம பிள்ளைகளும் நாளை காதல், திருமணம் வந்து நிற்பார்கள் என இடைஞ்சல்கள், மன நெருக்கடிகளை தான் மணமக்களின் பெற்றோர்களுக்கு தருவார்கள். இந்த சிரமங்களை எல்லாவற்றையும் மணமக்கள் தோழர்களின் உதவியோடு எதிர்கொண்டு மணம் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்!
“எனக்கென்னவோ கல்யாணம் பண்ணிப்பார்! வீட்டை கட்டிப் பார்!” என்ற பழமொழியில் கல்யாணம் என்பதற்கு புரட்சிகர திருமணம் என்று சொல்வது ஆகப் பொருத்தமாக இருக்கும்! இரண்டு புரட்சிகர திருமணங்களில் பக்கத்தில் நின்று வேடிக்கைப் பார்த்ததில் தான் எத்தனை அனுபவங்கள்! வேடிக்கைப் பார்த்தவனுக்கே எவ்வளவு டயர்டா இருந்தது என எனக்கு தான் தெரியும்! 🙂
இந்த திருமணம் பேச்சு வார்த்தைகளில், சொந்தங்கள் கொடுக்க கூடிய அத்தனை சிரமங்களையும், சோதனைகளையும் உறுதியுடன் எதிர்கொண்டு விட்டால், புர. மணமக்களை புரிந்துகொள்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு சடங்கு, சம்பிராதயம் என தொந்தரவு செய்வதில்லை. தோழர்கள் கொஞ்சம் இரக்கப்பட்டு கொஞ்சம் விட்டுக்கொடுத்தார்கள் என்றால் சொந்தங்கள் உள்ளே புகுந்து விளையாடும் விளையாட்டு இருக்கிறதே! சொல்லி மாளாது! 🙂
தோழர்களின் இல்லறம் சிறக்க வாழ்த்துக்கள்
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்…
எல்லாம் சரிதான். எல்லாவற்றிலும் புரட்சியை விரும்பும் தாங்கள்
பெண்களை மட்டும் ஆணுக்கு கீழேதான் இருக்க வேண்டும் என எண்ணுவது ஏன்?
பேனரிலோ அல்லது நோட்டீஸிலோ முதலில் மணமகனின் (ஆண்) பெயர்தான் உள்ளது. அதற்கு அப்புறம்தான் மணமகள் (பெண்) பெயர் உள்ளது.
இது கண்டிப்பாக கவனக்குறைவால் ஏற்பட்டதல்ல. ஆழ்மனதில் உள்ள எண்ணங்களே சந்தர்ப்பம் வாய்க்கும்போது இவ்வாறாக வெளிப்படுகிறது.
திரு. ராஜா,
//முதலில் மணமகனின் (ஆண்) பெயர்தான் உள்ளது. அதற்கு அப்புறம்தான் மணமகள் (பெண்) பெயர் உள்ளது//
ஆணாதிக்கம் யாருடைய பெயரை முதலில் போடுவது என்பதில் மட்டுமா உள்ளது ?
எங்கள் குடும்பங்களில் பெண் வீட்டாருடைய மேடை அலங்காரத்தில் பெண்ணின் பெயர் முதலிலும், ஆண் வீட்டாருடைய மேடை அலங்காரத்தில் ஆணின் பெயர் முதலிலும் இருக்கும்.
அதை விடுங்கள். இங்க ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்துருக்கு. உங்களுக்கு போஸ்டர் தான் இப்போ பிரச்சினையா போச்சு போலருக்கு. வளருங்கள் நண்பர்களே!
// அதை விடுங்கள். இங்க ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்துருக்கு. உங்களுக்கு போஸ்டர் தான் இப்போ பிரச்சினையா போச்சு போலருக்கு. வளருங்கள் நண்பர்களே! //
// அதை விடுங்கள். இங்க ஒரு மிகப்பெரிய விஷயம் நடந்துருக்கு. உங்களுக்கு போஸ்டர் தான் இப்போ பிரச்சினையா போச்சு போலருக்கு. வளருங்கள் நண்பர்களே! //
சிறிய விசயத்திலும் பெண்ணுக்கு விட்டுக்குடுக்காத நண்பர்கள் எப்படி மற்றவற்றில் விட்டுத் தரப்போகிறீர்கள்.?
நீங்கள் சம உரிமை பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது என்பது பல்வேறு சமயங்களில் நிருபிக்கப்பட்டுவருகிறது. வாழ்த்துக்கள்.
தோழர்களுக்கு வாழ்த்துக்கள்
தோழர்களுக்கும் சுமூகமான முறையில் திருமணம் நடக்க உதவிய பெற்றோர்களுக்கும் புரட்சிகர வாழ்த்துக்கள். காதல் திருமணங்கள் மண்மேடையுடன் முடிவடைகின்றன, புரட்சிகர திருமணங்களோ பரந்துபட்ட உழைக்கும் மக்களின் வர்க்க போராட்டங்களோடு தங்களை இணைத்து கொண்டு வாழ்வை ஆரம்பிக்கின்றன.
குறை ஏதும் சொல்ல இயலாத நிலையில், ரூம் போட்டு யோசித்து மணமகன் பெயர் ஏன் முதலில் உள்ளது என்றெல்லாம் கேள்விகள் வரும்பொழுது சிரிப்புதான் வருகிறது. தங்கள் வாழ்வில் கடைபிடிக்க முடியாத விசயங்களை, ஒரு போதும் செய்ய முடியாதவற்றை தோழர்கள் செய்யும் பொழுது ஏற்படும் தாங்க முடியாத காழ்ப்புணர்ச்சியோடு சிலர் இங்கு பின்னூட்டமிடுகின்றனர். சாதி, மதம், நிறம்,அழகு,பொருளாதாரம்,வரதட்சணை முதலியவை பார்த்து செய்யப்படும் திருமணங்கள் வியாபாரம் போன்றவை, இவை ஏதுமின்றி சமூக மாற்றத்திற்க்காக செய்யப்படும் திருமணங்களே புரட்சிகர திருமணங்கள்.
உங்களுக்கு இதில் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இருக்கலாம். அரளிச்செடியின் காய் அரளிக்காயாகத்தான் என்பதில் என்ன ஆச்சரியம் இருக்கப்போகிறது.
முற்போக்கு கருத்துக்களுக்கு அகில உலக குத்தகைதாரர்களாக காட்டிக்கொள்ளும் கும்பல்களே… நீங்கள் நடத்திய ஒரு திருமணத்தில் ஏன் மணப்பெண்ணின் பெயரை முதலில் போடவில்லை என்று கேட்டது ஒரு குற்றமா? இதெல்லாம் ஒரு குற்றமா எனப் பொங்குகிறீர்களே? இது உங்களுக்கு குற்றமாக தெரியவில்லையா? மற்றவருக்க புத்தி புகட்ட நினைப்பவர்கள் எந்த செயலிலும் மிகக் கவனமாக இருக்கவேண்டும்.
உங்களை குறைசொல்லவில்லை. என்னதான் மனிதன் திருந்திய விலங்கினமாக வாழ்ந்தாலும் அவன் ஆழ் மனதில் விலங்கின் குணாதிசயங்கள் இருக்கத்தான் செய்யும். அதைப்போல ஆணுக்குப்பெண் சரி என்று பேசினாலும் ஆழ்மனதில் இன்னும் கொஞ்சம் அழுக்கு இருக்கத்தான் செய்கிறது. மற்றவர் சுட்டிக்காட்டும்போது துடைத்துக்கொள்வதில் என்ன தவறு உங்களுக்கு?
மறுமுறை இந்தத் தவறு நடக்காது எனச் சொல்ல எது உங்களை தடுக்கிறது?
// சீனிவாசரே //
எங்கள் பகுதியில் இதெல்லாம் ஒரு விசயமே அல்ல. பெண் வீட்டார் சார்பில் வைக்கப்படும் பேனரில் பெண் பெயர் முதலிலும் ஆண் வீட்டார் சார்பில் வைக்கப்படும் பேனரில் ஆண் பெயர் முதலிலும் இருக்கும்.
ஆனால் இங்கு திருமணத்தை முன்னின்று நடத்தியது, பேனர் அமைத்தது எல்லாம் பு.தொ.மு. அமைப்பினர். பெண்ணியம் பேசுபவர்கள். இவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக அல்லவா நடந்துகொள்ள வேண்டும்.?
// ரூம் போட்டு யோசித்து மணமகன் பெயர் ஏன் முதலில் உள்ளது என்றெல்லாம் கேள்விகள் வரும்பொழுது சிரிப்புதான் வருகிறது. தங்கள் வாழ்வில் கடைபிடிக்க முடியாத விசயங்களை, ஒரு போதும் செய்ய முடியாதவற்றை தோழர்கள் செய்யும் பொழுது ஏற்படும் தாங்க முடியாத காழ்ப்புணர்ச்சியோடு சிலர் இங்கு பின்னூட்டமிடுகின்றனர். //
எங்கள் ஊர் பெண்கள் தங்களை ஆணோடு எப்போதும் ஒப்பிட்டுப் பார்த்ததில்லை. திருமணம் முடிந்து கர்ப்பமான ஒன்பதாவது மாதத்திலும் விறகுக்குச் சென்று வயிறு வலி எடுத்து மலையிலேயே பிரசவம் பார்த்த பெண்கள் எவ்வளவோ பேர் உண்டு.
மூலத்திற்கு மருத்துவமனை செல்பவர்களை பார்த்து சிரிக்கும் பெண்கள் “ஏண்டி வேலையத்தவளே….. கையிலயே புடுங்கி எறிஞ்சுட்டு வேலையைப் பாப்பாளா…. இதுக்குப் போயி ஆசுபத்திரிக்கு செலவு பண்ணிக்கிருக்கவ.. போடி போடி பொளப்பத்தவளே…” என ஏகடியம் பேசுபவர் ஏராளம். இங்க ஆணுக்குப் பெண் சமமில்லை. பெண்தான் எல்லாம். குடும்பத்தை அச்சாணியாய் இயக்குபவள் பெண்தான். இவர்களக்கு ஆணாதிக்கமும் தெரியாது. பெண்ணடிமைத்தனமும் தெரியாது. வாய்ப்பிருந்தால் ஒரு முறை வந்து பாருங்களேன் எங்கள் உசிலம்பட்டி கிராமங்களுக்கு.
நன்றி.
ஓகோ பெண் சிசுக் கொலை பேமஸ் உசிலம்பட்டியா, ராசா, உங்க பரம்பரையில எம்புட்டு பொம்பள குழந்தைங்கள பொட்டுத் தள்ளினீங்க? டவுட்டுன்னா பாம்படம் போட்ட பாட்டிங்கிட்ட கதையை கேளுங்க சார்! உசிலம்பட்டி பிறன்மலை கள்ளர் கல்யாணம், சீர்வரிசை, வரதடச்னை, மொய் நோட்டு, மொய் கொடுக்கலேன்னா வீட்டு முன்னாடி ரவுடியா கத்துறது எல்லாம் தெரியாதாப்பா? தெரியலேன்னா உசிலம்ப்ட்டியில விவசாய விடுதலை முன்னணிகாரங்கிட்ட கேட்டு பாரும். அங்க தோழருங்க கல்யாணம் எப்படின்னு உங்க உசிலம்பட்டி ஜனங்க்கிட்டயே விசாரிச்சு தெரிஞ்சுக்கலாமே?
மல்லாக்க படுத்து துப்புறவன் மத்தவன எப்பிடி துப்பணும்னு கிளாஸ் எடுத்தானாம்!
அதற்கு இது பதில் இல்லையே வெற்றிவேல்?
உங்களுக்கு புரியுற மாதிரி நான் ஒரு கதை சொல்றேன்.
ஒரு விசேஷத்துக்கு போயிருந்தேன். பந்தி நடக்குற எடத்துக்குப்போனா…… வக்காலி பயங்கரமான கூட்டம். ஒருவழியா சிலபல குறுக்கு வழிகள கையாண்டு ஒரு எடத்தப்புடிச்சி உக்காந்துட்டேன்.
சரி்யான சாப்பாடு. புல் கட்டு கட்டிட்டு பாயசத்த ஒரு புடி புடிப்பம்னு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணேன். பாயாசம் வரவே இல்ல. என்னடா இது 1001ரூ மொய் எழுத போறமே.. பாயாசம் சாப்டாம போன நைட் ஒரக்கம் வராதேனு சமையல்காரன கூப்டு “ஏப்பா சமையல்காரரே… பாயாசம் எங்க?”னு கேட்டேன்.
அதுக்கு அவன் “உங்களுக்கு சுகர் இருக்கு. அதனால உங்களுக்கு பாயசம் குடுக்கக்கூடாது”னு சொன்னான்.
”டேய் வெட்டி வெங்காயம்… அந்த எளவு கருமத்த நாங்க பாத்துக்குறோம்.. நீ ஒழுங்கா பாயாசத்த போடு”னு நான் சொன்னேன்.
திரும்பவும் அவன் ”உங்க ராசிக்கு இன்னைக்கு திங்கட்கிழமை கெழக்க பாத்து உக்காந்து பாயாசம் சாப்டக்கூடாது” னு சொல்றான்.
ஒஞ்சாப்பாட்ட சாப்பிட்ட எல்லாத்துக்கும் இன்னைக்கு பேதி போகட்டும்னு அவன வாழ்த்திட்டு கைய கழுவ வந்துட்டேன்.
கடைசிலதான் விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்டேன் அவன்ட்ட பாயாசமே இல்லையாம்.
இல்லாத பாயசத்த இருக்குற மாதிரியே காமிச்ச, நான் கேட்ட கேள்விக்கு பதிலே சொல்லாத அனைவருக்கும் வணக்கங்கள். வந்தணங்கள்.
ராஜா தம்பி, அடி வாங்கியும் வலிக்காத மாதிரி உசிலம்பட்டி கத சொல்லி – அதுவும் மரண மொக்க கத – டபாய்க்கிறீங்க பாரு, அங்க நிக்கிறீங்க!
அவனாவது பாயசம் இல்லேன்னு ஏமாத்துனாம், ஆனா பாரு, பாயாசம் கேட்ட பயலுக்கு பாயசத்துக்கும், பாய்சனுக்கும் வித்தியாசமே தெரியாத லூசுப் பயலாம்!
மணமக்களுக்கு வாழ்த்துக்கள்!
ஆடை அலங்காரத்தில் மணப்பெண்ணும் புரட்சி ஏற்படுத்தியிருந்தால் சிறப்பாயிருந்திருக்கும்.
மலர் மாலையும் தவிர்த்திருக்கலாம்.