privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கதம்பிதுரை துணை சபாநாயகர் - பேரம் என்ன ?

தம்பிதுரை துணை சபாநாயகர் – பேரம் என்ன ?

-

ரூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினரும், அதிமுகவின் பாராளுமன்றத் தலைவருமான தம்பிதுரை, நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதால் சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் பெரு மகிழ்ச்சியடைக் கூடும். ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியின் அதிபர் ஒருவர் முக்கியமான பதவியை பெற்றிருப்பது அவர்களது தொழிலை மேம்பட நடத்துவதற்கு உதவியாக இருக்கும்.

தம்பிதுரை
தம்பிதுரை, நாடாளுமன்றத்தின் துணை சபாநாயகராக தெரிவு செய்யப்படுவதால் சுயநிதிக் கல்லூரி முதலாளிகள் பெரு மகிழ்ச்சியடைக் கூடும்

கரூர் தொகுதி வேட்பு மனுவில் தோராயமாக ரூ 15 கோடி சொத்துக்களை குறிப்பிட்டிருக்கும் தம்பிதுரையின் உண்மையான சொத்துக்கள், நாடெங்கும் உள்ள தொழில்கள், கல்லூரிகள் குறித்த விவரம் அவ்வளவு எளிதில் அறியக்கூடிய ஒன்றல்ல. அதிமுகவின் புதுதில்லி முகமாக அம்மாவால் நீண்ட காலத்திற்கு அனுமதிக்கப்பட்ட தம்பிதுரை, இதற்கு முன்னர் 1985-89 ஆண்டுகளிலிலும் துணை சபாநாயகராக இருந்திருக்கிறார்.

எதிர்க்கட்சிகளுக்கே துணை சபாநாயகர் பதவி அளிக்கப்படுவது மரபு என்றாலும் இப்போது யாரும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியாக அங்கீகரிக்கப்படவில்லை. பத்து சதவீத இடங்களை கொண்டிருந்தால் மட்டுமே எதிர்க்கட்சி எனும் விதிப்படி காங்கிரசு கட்சிக்கு பத்து எம்பிக்கள் குறைவாக 44 பேர்களே உள்ளனர். அதனால் முயன்று பார்த்து பிறகு அக்கட்சி ஓய்ந்துவிட்டது.

எனில் காங்கிரசை விட ஏழு எம்பிக்கள் குறைவாக உள்ள மூன்றாவது பெரிய கட்சியான அதிமுகவிற்கு இந்த வாய்ப்பு எப்படி வரமுடியும் என்றால் அதுதான் பாராளுமன்ற புனித மரபுகள், விதிகளின் இலட்சணம். நாடாளுமன்ற மேலவையில் பாஜக வசம் 46 எம்பிக்களே உள்ள நிலையில் அதிமுகவின் பத்து எம்பிக்கள் சேர்ந்தால் கொஞ்சம் தெம்பாக இருக்கலாம். காப்பீடு துறையில் அன்னிய முதலீடு, நீதிபதிகள் நியமன விவகாரம் போன்றவற்றில் அங்கே பாஜகவால் வெற்றி பெற முடியவில்லை. இனி அதிமுக மூலம் அதை செய்யும் தகுதியை உயர்த்திக் கொள்ளலாம்.

மோடி, ஜெயா
தேர்தலுக்கு முன்பே மோடியும் சரி, ஜெயாவும் சரி இயல்பான இந்துத்துவ கூட்டணிக்குரிய நேசத்தையே கொண்டிருந்தனர் (கோப்புப் படம்)

அதே போல ஜெயாவும் ஆரம்பத்திலிருந்தே மோடி அரசை வாய்ப்புள்ள நேரங்களில் மனதார பாராட்டியே வருகிறார். ரயில்வே மற்றும் பொது பட்ஜெட்டை அவர் வரவேற்று பாராட்டியது அப்படித்தான். இதே பட்ஜெட்டை ப.சிதம்பரம் போட்ட போது கரித்துக் கொட்டிய ஜெயா இப்போது இனிக்க பாராட்டுவதை அனைவரும் அறிவர். அல்லாமல் தேர்தலுக்கு முன்பே மோடியும் சரி, ஜெயாவும் சரி இயல்பான இந்துத்துவ கூட்டணிக்குரிய நேசத்தையே கொண்டிருந்தனர். தேர்தலுக்கு பின்பு தேவை ஏற்பட்டால் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது நிலையாக இருந்தது. இறுதி நேர தேர்தல் கூட்டங்களில் ஒருவரை ஒருவர் செல்லமாக விமரிசனம் செய்து போங்காட்டம் ஆடியதும் அதன் பொருட்டே.

மேலாக உச்சநீதிமன்ற நீதிபதிகளையே தனது விருப்பப் படி நியமிக்கும் மோடியின் அதிகார பலம், பெங்களூரு வழக்குளிலும் கண்டிப்பாக செல்வாக்கு செலுத்த முடியும் என்பது ஜெயாவுக்கும் தெரியும். ஒருக்கால் வழக்கு இறுதி கட்டத்தில் இருப்பதால் வேறு வழியின்றி தண்டனை ஏதும் குறைவாக கிடைத்தாலும் உச்சநீதிமன்றத்தில் அதை மாற்றுவதற்கு மோடி நிச்சயம் தேவைப்படுவார்.

அதே போல மோடியின் மக்கள் விரோத கொள்கைகள், திட்டங்கள், பயங்கரவாதத்தின் பெயரிலான அடக்குமுறைகள் அனைத்தும் ஜெயாவால் கூட்டணி விருப்பத்தோடு கூடுதல் அக்கறையுடன் இங்கே அமல்படுத்தப்படும். தமிழக கிசு கிசு அரசியல் ஊடகங்களோ இனி புதுதில்லியில் தம்பிதுரைக்கு பதில் யார் தலைவர் என்பதில் கவனம் செலுத்தி காலத்தை ஓட்டுவார்கள். சுயநிதிக் கல்லூரிகளோ இனி கூடுதல் திட்டத்துடன் கொள்ளையடிப்பதை பகிரங்கமாகவே செய்யக்கூடும். ஆர்.எஸ்.எஸ் கூட்டமோ இந்த கூட்டணியை வைத்து பார்ப்பனிய திட்டங்களை நிறைவேற்ற முயலும்.

அதிமுகவின் ஜெயலலிதாதான் தமிழகம் கண்ட முதல்வர்களிலேயே ஒரே இந்து முதல்வர் என்று இந்துமுன்னணி ராமகோபாலன் அன்றே சொன்னது சும்மா அல்ல!