Sunday, January 19, 2025
முகப்புசெய்திவேலூரில் கால்டுவெல் 200-ம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கம்

வேலூரில் கால்டுவெல் 200-ம் ஆண்டு பிறந்த நாள் கருத்தரங்கம்

-

ராபர்ட் கால்டுவெல்லை நினைவு கூர்வோம் ! பார்ப்பன எதிர்ப்பு தமிழ்மரபை மீட்டெடுப்போம்!

  • திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற ஒப்பற்ற ஆய்வு நூலை இயற்றி தமிழ்மொழி வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவர்.

    ராபர்ட் கால்டுவெல்
    ராபர்ட் கால்டுவெல்
  • தமிழின் அழகால் ஈர்க்கப்பெற்று, அதனைப் பிழையறப் பலரிடம் பயின்று, அதுகாறும் அச்சேறாதழிந்து கொண்டிருந்த இலக்கியங்களைப் பயின்று அவற்றின் பெருமையை வெளிக் கொணர்ந்தார். அதன் பின்னர்தான் சி.வை. தாமோதரன் பிள்ளை, உ.வே.சா போன்றோர் அச்சில் பதிப்பித்தனர்.
  • இனம், சாதி, ஆன்மீகம், பண்பாடு குறித்த அவரது ஆய்வுகள் பார்ப்பன எதிர்ப்பியக்கம் உருவாகக் காரணமாயின.
  • சென்னையிலிருந்து மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, நீலகிரி, கோவை, மதுரை வழியே 600 மைல் நடந்தே கடந்து நெல்லை மாவட்டம் இடையன்குடியில் ஒரு குடிசையில் குடியேறினார். வழியெங்கும் பல இடர்ப்பாடுகள், தொல்லைகள், துன்பங்களைத் தாங்கி தமிழ் மக்களின் வாழ்க்கையை நுணுகி ஆய்ந்தார்.
  • கிருத்துவம் பரப்பவே வந்தாரெனினும் ஒடுக்கப்பட்ட மக்களின் கல்விக்கு, குறிப்பாகப் பெண் கல்விக்குப் பெருந்தொண்டாற்றினார்.

அறிஞர் கால்டுவெல் நினைவைப் போற்றுவோம்!

‘சமஸ்கிருதமே அனைத்து மொழிகளுக்கும் தாய் அதுவே உயர்ந்த மொழி – தெய்வ மொழி’ என்று நிலைநாட்டப்பட்ட கருத்தியலை தகர்த்து தமிழே தென்னக மொழிகளின் தாய், அழகும் வளமும் நிறைந்து தனித்தியங்கும் வல்லமை பெற்ற செம்மொழி  தமிழ் என்பதை நிலைநாட்டிய

அறிஞர் இராபர்ட் கால்டுவெல்

200-வது ஆண்டு பிறந்தநாள் விழா

கருத்தரங்கம்

நாள் : 16.08.2014 சனி
நேரம் : மாலை 6 மணி
இடம் : நகர அரங்கம், பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர்

தலைமை : தோழர் அகிலன், மக்கள் கலை இலக்கியக் கழகம்

மொழி ஆளுமை – கால்டுவெல்லின் பங்கு
தோழர் ஜோ. சம்பத்குமார்,
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் இலக்கியத் துறை
சென்னை பல்கலைக்கழகம்

“சமஸ்கிருதமும் மொழித் தீண்டாமையும்”
தோழர் சா. குப்பன்
மாவட்ட துணைச்செயலாளர்
மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி
வேலூர்.

“தமிழ் மறுஉயிர்ப்பில் கால்டுவெல்”
தோழர் காளியப்பன்
மாநில இணைச் செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்

அனைவரும் வருக

caldwell-Vellore-widget

இவண்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
வேலூர்
தொடர்புக்கு : 98944 21316

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க