Thursday, July 18, 2024
முகப்புஉலகம்அமெரிக்காஇன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் !

இன்ஃபோசிஸ் சிபுலாலுக்கு 700 வீடுகள் சொந்தம் !

-

ஏழை பணக்காரன் 3.டி துறையில் வேலை பார்க்கும் பெரும்பான்மையினர் ஒரு வீட்டை வாங்கி அதற்கு தவணை கட்டுவதற்குள் விழி பிதுங்கி போகிறார்கள். வீட்டு லோனை நினைத்து, மேலாளர் மனம் கோணாமல் ராப்பகலாக உழைத்து கொட்டுகிறார்கள். எப்படியாவது, கடனை கட்டி, வீடு சொந்தமாக்கி, ஓரளவு பணத்தை சேமித்து விட்டு ஓய்வு பெற முடியுமா என்பது நிறைவேறாத கனவாகவே இருக்கிறது.

கடந்த ஜூலை 31-ம் தேதி இன்ஃபோசிஸ் முதன்மை செயல் அதிகாரியாக ஓய்வு பெற்ற சிபுலாலின் கதையே வேறு. அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அவருக்கு சொந்தமாக 700 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளன. அவற்றை மைக்ரோசாப்ட், ஸ்டார்பக்ஸ், அமேசான் போன்ற பன்னாட்டு நிறுவன ஊழியர்களுக்கு வாடகைக்கு விட்டுள்ளார். ஒரே பையில் எல்லா முட்டைகளையும் போட வேண்டாம் என்று அடுத்து ஜெர்மனியின் பெர்லினிலும், ஃபிராங்க்ஃபர்ட்டிலும் வீடுகளை வாங்கியிருக்கிறது சிபுலாலின் சொத்துக்களை நிர்வகிக்கும் குடும்ப அலுவலகம்.

சிபுலால்
சிபுலால்: சியாட்டில், பிராங்க்பர்ட், பெர்லின்..அடுத்து எங்க வாங்கலாம், அண்டார்டிகாவிலா?

அது என்ன குடும்ப அலுவலகம் என்று கேட்கிறீர்களா? கடன் தவணை கட்டி, வரிச் சலுகை பெற இன்சூரன்ஸ் பாலிசி போட்டு, சேமிப்புத் திட்டத்தில் சேர்ந்து, வருடக் கடைசியில் வருமான வரி அறிக்கை தாக்கல் செய்ய ஒரு கணக்காளரை அணுகுவதுதான்  மாதச் சம்பளம் வாங்குவோரின் நடைமுறை.

ஆனால் ஒருவருக்கே பல நூறு வீடுகள், சில நூறு கோடிகள் சொத்திருந்தால் அவற்றை நிர்வாகம் செய்வது உடமையாளரால் மட்டும் சாத்தியமில்லை. சிபுலால் போன்ற பெரும் பணக்கார குடும்பங்களின் கணக்கு வழக்குகளை பார்த்து, முதலீடுகளை நிர்வாகம் செய்ய இருக்கும் தனிச்சிறப்பான நிறுவனங்களைத்தான் குடும்ப அலுவலகம் என்கிறார்கள். இந்தியாவில் சிபுலால் குடும்பத்தினரைப் போன்று 40-50 பணக்காரர்கள் குடும்ப அலுவலங்களை உருவாக்கியிருக்கின்றனர். அவை கையாளும் மொத்த சொத்து மதிப்பு ரூ 1 லட்சம் கோடியை தாண்டும் என்று மதிப்பிடுகிறது எகனாமிக் டைம்ஸ் பத்திரிகை.

சிபுலால் குடும்ப அலுவலக நிறுவனத்தின் நிர்வாகியாக பெங்களூரு ஐ.ஐ.எம்மிலும் பிட்ஸ் பிலானியிலும் படித்த செந்தில் குமார் பணிபுரிகிறார். குடும்ப நிர்வாகம் என்பதால் காமோ சோமோ வென்று நிர்வாகம் பார்க்கும் வேலை இல்லை இது. அதனால்தான் உயர்தர மேலாண்மை அறிவுப் புலிகள் இங்கே தேவைப்படுகின்றன.

ஏழை பணக்காரன்“ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வதுதான் உடனடி வருமானம் தருவதோடு, எதிர்காலத்தில் முதலீட்டின் மதிப்பை பெருக்குவதற்கும் உத்தரவாதமானது” என்கிறார் செந்தில் குமார். இன்ஃபோசிஸ் நிறுவனத்தையே தலைமை வகித்து நடத்திய சிபுலால் கூட, ‘நாலு வீட்டை வாங்கிப் போட்டால் பணத்துக்கு உத்தரவாதம்’ என்ற முறையில்தான் தனது பணத்தை முதலீடு செய்திருக்கிறார். என்ன, சில லட்சம் கடன் வாங்கும் நடுத்தர வர்க்கம் உள்ளூரில் வீடு வாங்கினால் பல கோடி குவித்திருக்கும் இவர் சியாட்டில், பெர்லின் என்று சர்வதேச அளவில் ரியல் எஸ்டேட் துறையில் தனது பணத்தை இறக்கியிருக்கிறார். இன்றைய சந்தை மதிப்பில் இவருக்கு சொந்தமான வீடுகளின் மொத்த மதிப்பு $10 கோடி (ரூ 600 கோடி)-க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

சிபுலால் அளித்த பேட்டி ஒன்றில், அவருக்கு சொந்தமான 700 வீடுகள் பற்றி கேட்டதற்கு, “என்னுடைய பணத்தை நிர்வகிக்கும் நிறுவனம் உறுதியான அடித்தளத்தோடு, போதுமான லாபம் வருவதை உறுதிப்படுத்துகின்றனர். அந்த வகையில், ரியல் எஸ்டேட் முதலீடு ஒரு முக்கியமான வகை என்று சொன்னார்கள்” என்று பதிலளித்திருக்கிறார்.

சுருதி சிபுலால்
சுருதி சிபுலால்: அப்பா ஐ.டி துறை தொழிலதிபர், மகள் சுற்றுலாத் தொழில் தொழிலதிபர்…

மற்றபடி தனது சொத்தை தொழிற்துறையிலோ, இல்லை தனது துறையிலோ முதலீடாக்கி நிறைய பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கலாமே என்று முதலாளித்துவ கனவின் ஆரம்பத்தில் இருக்கும் கோயிந்துகள் நினைக்கலாம். முதலாளித்துவமே வேலை வாய்ப்பு கொடுப்பதில் இல்லை, வேலை செய்வோரின் உழைப்பைச் சுரண்டுவதில்தான் இருக்கிறது என்பதால் சிபுலால் ‘சாமர்த்திய’மாகத்தான் சொத்து பெருக்குகிறார்.

இந்திய அரசிடம் வரிச் சலுகை பெற்று, மாநில அரசுகளிடம் மலிவு விலையில் நிலம் பெற்று, படித்த இந்திய இளைஞர்களை அமெரிக்காவுக்கு வேலை செய்ய வைத்து குவித்த பணத்தை சிபுலால், அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ரியல் எஸ்டேட் சூதாட்டம் நடத்துகிறார். ஐ.டி துறை ஊழியர்களோ இந்த சூதாட்டத்தில் தம்மையும் சேர்த்து விளையாடுவது தெரியாமல் வாழ்க்கையால் விரட்டப்படுகிறார்கள். இணையத்தில் கே.ஆர்.அதியமான் முதல் பிரதமர் அலுவலகத்தில் மோடி வரை செய்யும் வளர்ச்சி குறித்த பஜனையின் ஒரு முகம் இது.

சிபுலால் 1981-ம் ஆண்டு இன்ஃபோசிஸ் நிறுவனத்தை ஆரம்பித்த 7 பேர் கொண்ட குழுவினரில் ஒருவர். அவர், அவரது மனைவி குமாரி, மகள் சுருதி, மகன் சிரேயஸ் ஆகியோர் அடங்கிய குடும்பத்துக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2.2% பங்குகள் சொந்தமாக உள்ளன. இன்ஃபோசிஸ்சின் மொத்த சந்தை மதிப்பு $3000 கோடி (சுமார் ரூ 1.8 லட்சம்) என்பதை வைத்துப் பார்க்கும் போது சிபுலால் குடும்பத்துக்கு சொந்தமான அதன் 2.2% பங்குகளின் மதிப்பு ரூ 3,900 கோடி.

ஏழை பணக்காரன் 2கொலம்பியா பிசினஸ் கல்லூரியில் மேலாண்மை பட்டம் படித்து மெரில் லிஞ்சில் வேலை அனுபவம் உடைய சிபுலாலின் மகள் சுருதி இந்தியாவில் ரியல் எஸ்ட்டேட் முதலீடுகள் மூலம் பணத்தை பெருக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். பெங்களூருவின் யூபி சிட்டியில் கேப்பர்பெரி, ஃபாவா உணவகங்கள் உள்ளிட்டு பல மேட்டுக்குடி உணவகங்களை நடத்தி வருகிறார். மாதச் கடைசியில் கையேந்தி பவன்களை நம்பி வாழும் நடுத்தர வர்க்க ஐ.டி ஊழியர்களின் கனவுகளை முதலீடாக்கி சுருதி, சுருதி சுத்தமாக ரோட்டரி கிளப் கனவான்களுக்கான உணவகத்தை இலாபகரமாக நடத்தி வருகிறார்.

தமாரா கூர்க் என்ற 170 ஏக்கர் காபி, மிளகு, ஏலக்காய் தோட்டங்களில் விரிந்திருக்கும் ஆடம்பர தங்குமிடம் அவரது செல்ல திட்டம். தமாரா நிறுவனம் திருவனந்தபுரத்தில் தமாரா 100 அறைகளைக் கொண்ட விடுதியை கட்டி வருகிறது. கொடைக்கானலில் ஆடம்பர சுற்றுலா தங்குமிடம் உருவாக்கும் திட்டம் ஒன்று ஒப்புதல்களுக்கு காத்திருக்கிறது. இவையெல்லாம் மேட்டுக்குடி சீமான் – சீமாட்டிகளை வசதியுடன் தாலாட்டி வாழவைக்கும் புண்ணிய தலங்கள். எனவே தட்சணையும் அதிகம்.

தாமரா, கூர்க் இல்லம்
கர்நாடகா கூர்க் பகுதியில் மேட்டுக்குடி கனவான்களுக்காக சுருதி சிபுலால் கட்டியிருக்கும் கானக மாளிகை!

இத்தகைய பெரும் அளவிலான முதலீடுகளுக்கு ஒரு அடிக்குறிப்பாக ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்குவதற்காக இரண்டு அறக்கட்டளைகளை நடத்தி வருகிறது சிபுலால் குடும்பம். சிபுலாலின் அப்பா, அம்மா பெயரிலான சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை, 2004-ம் பதிவு செய்யப்பட்ட அத்வைத் அறக்கட்டளை மூலம் வசதி குறைந்த ஏழைக் குழந்தைகளின் பள்ளிப் படிப்புக்கும் மேல் படிப்புக்கும் நிதி உதவி வழங்கி வருகிறது சிபுலால் குடும்பம். இந்த பிச்சை உதவிக்கும், அந்த பெருந்தொழிலுக்கும் உள்ள முதலீடு மலைக்கும் மடுவுக்குமானது என்பதை சொல்லி விளக்க வேண்டியதில்லை. இருப்பினும் மடுவின் ஒளியில் மலைகள் மறைந்து கொள்கின்றன.

தனிநபரிடம் குவியும் இத்தகைய செல்வம், அம்பானியின் ஆன்டிலியா மாளிகையாகவோ, சிபுலாலின் 700 அபார்ட்மென்டுகளாகவோ, ஆடம்பர சொகுசு கார்களாகவோ உருவம் எடுப்பதோடு, அவர்களது செல்வத்துக்கு அடிப்படையான உழைப்பை வழங்கும் கோடிக்கணக்கான மக்கள் மீதான சுரண்டலை அவை மேலும் மேலும் அதிகப்படுத்தவே செய்கின்றன. 21-ம் நூற்றாண்டின் முதலாளித்துவ வளர்ச்சி என்பது இத்தகைய திமிங்கலங்களை மட்டும்தான் உருவாக்குகின்றன.

ஆனால் இந்த திமங்கலைத்தான் “உழைத்து முன்னேறிய உத்தமர்கள்” என்று ஊடகங்கள் வாழ்த்து மழை பொழிகின்றன.

–    அப்துல்  

மேலும் படிக்க:

 1. I don’t know why vinavu wants to publish such stupid articles on their site. Sibulal has worked his way through and has become rich by his effors. He has been running a successful company, accumulated wealth and spending according to his wishes. WHAT IS WRONG IN THAT ?
  He is not plundering any wealth from the poor people of this country and investing in the foreigh countires. Everybody who works for him is paid and they can always leave the company if they want to do so.

  What does the autor of this article want ? Everybody to remain poor in this country and fight with each other ? A country will only improve when people like SIBULAL start and run a business in this country and provid employment to other people in the country who are not smart enough to work their way up like SIBULAL.

  Earning money is NOT a SIN. This has to be understood by the person who has written this article.

  I request VIANVU to publish my comments.

  • Wealth accumelation does not lead to any positive things.A legislator has worn 2 kg gold shirt for his birthday recently.The wealthy people would indulge in vulgar display only.In Chennai roads Innovas and Endeavours grab space from scooters and mopeds.

 2. There should be some limit to owning wealth.Sibulal could be admired if only he has reinvested his wealth into some more industries which may provide employment to many.Why Kumar is` supporting one who owns 700 apartments?What is the logic of Ambani to construct 27 storied house for his family?Kumar should answer.

 3. இன்றைய செய்தி

  இந்தியாவின் மொத்த சொத்தில் 47 சதவீதத்தை 5 பேர் வைத்திருக்கிறார்கள். மிச்சமுள்ள 53 சதவீதத்தைதான் 120 கோடி மக்கள் வைத்திருக்கிறார்கள்.

  ஏழை- சொத்தே இல்லாமல் இருப்பவன் எத்தனை கோடி இருக்கலாம்

  119 கோடி

  சரியா தவறா நீங்கள் சொல்லுங்கள்

 4. சமீபத்தில் முகநூலில் படித்த பதிவினை தற்போது தங்களுக்கு தருகிறேன்.
  ஒரு புதிய பரிமாணத்தில் யோசித்திருக்கிறார் அசோக் குமார் என்ற நண்பர்.
  இதோ படியுங்கள்:

  ——————————————————————
  இரவு 12 மணி
  இப்படி ஒரு விபரீதம் நடக்கப்போகிறது என்ற எந்த பயமும் இல்லாமல் நாடே நிம்மதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறது, ஒவ்வொருவருக்கும் காலையில் கண்விழிக்கும் போது தான் அந்த விபரீதத்தின் விளைவு தெரியும், அது வேறொன்றும் இல்லை
  மக்களுக்கு பணத்தின் மீதான மோகம் அதிகரித்துவிட்டதால் மக்களை அந்த பைத்தியத்தில் இருந்து விடுவிக்கும் நோக்கத்திற்காக
  இத்தனை வருடங்கள்
  நாம் சேர்த்து வைத்த பணமெல்லாம் இன்று நள்ளிரவு முதல் வெறும் காகிதங்களாகவே கருதப்படும், அவற்றிற்கு எந்த ஒரு மதிப்பும் கிடையாது,
  என்று மத்திய அரசு அறிவித்துவிட்டது,
  தங்கம் மட்டும் எப்போதும் போல் ஒரு விலைமதிப்புமிக்க உலோகமாக கருதப்படும்!
  இந்த அறிவிப்பு தெரியாமல் எல்லா மக்களும் கொறட்டை விட்டு தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்!
  வழக்கம் போல் நம் தாய்குலங்கள் எல்லாம் தலையை சொறிந்தபடி காலை ஐந்து மணிக்கு காபிபோட பால்பாக்கெட்டை தேடி வாசலுக்கு வர காம்பௌன்ட் கேட்டில் வெறும் பை மட்டும்தான் தொங்குகிறது பாலை காணோம், பால்காரனுக்கு போனை போட, இனிமே பணம் சம்பாதித்து என்ன பண்ணபோறோம் அதான் பால் போடல,
  போய் நியூஸ் பாருங்க என்றதும் tv யை on பண்ண பொதிகை மட்டும் தான் வேலை செய்கிறது,
  Private channels எல்லாம் மூடப்பட்டு விட்டன பேப்பர்காரனும் வரவில்லை,
  இந்த தகவல் பரபரப்பாக நாடு முழுவதும் பரவியது
  உறவினர்களுக்கு தகவல் சொல்ல போனை எடுக்க எந்த போனும் வேலை செய்யவில்லை
  bsnl ம் std booth களும் மட்டும் தான் வேலை செய்கின்றன,
  இனிமேல் பணத்திற்கு மதிப்பு இல்லையென்றால்
  எதைக்கொடுத்து அரிசி பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவது,?!
  மக்கள் எல்லோரும்
  super market, மளிகை கடைக்காரனை போய் பார்க்க எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிகிட்டோம், என்று உணவுப்பொருட்களை
  பதுக்கிக்கொண்டார்கள்,
  வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட நாடுமுழுவதும் உணவுப்பொருட்களை
  தேடி ஓட ஆரம்பித்தார்கள்
  IT company கள், தொழிற்சாலைகள்,
  சினிமா தியேட்டர்கள், போக்குவரத்து நிறுவனங்கள்,
  எல்லாம் மூடப்பட்டுவிட்டன
  கொஞ்சம் ரயில்களும், அரசு பஸ்களும் மட்டும் இயங்குகின்றன, அரசு ஊழியர்கள் எல்லோருக்கும் மாதம் 25 கிலோ அரிசியும், 10 கிலோ கோதுமையும் சம்பளமாக வழங்கப்பட்டது
  பெட்ரோல் பங்க்குகளில் ஒரு கிராம் தங்கத்திற்கு
  10 லிட்டர் பெட்ரோல் தரப்பட்டது,
  எல்லோரும் சைக்கிள் பயன்படுத்த ஆரம்பித்தார்கள்
  ரயில் மற்றும் பஸ்ஸில் பயணம் செய்வோரிடமும்
  மின்சாரம் மற்றும் டெலிபோன் பயன்படுத்துவோரிடமும்
  மாதக்கட்டணமாக தங்கம் பெறப்பட்டது,
  நகரம் முழுவதும் ரிக்சா, குதிரை வண்டி, மாட்டுவண்டி போன்றவை புழக்கத்திற்கு வந்தது,
  நாடே போர்க்களம்போல் அல்லோலப் பட்டுக்கொண்டு இருக்க விவசாயிகள் மட்டும் எந்தவித பதட்டமோ சலனமோ இன்றி எப்போதும் போல் கோழி கூவியதும் கலப்பையுடன் உழவுக்கு சென்றுகொண்டு இருந்தார்கள்!
  வாரச்சந்தைகளில் விவசாயிகளிடம்
  அரிசி பருப்பு வாங்க
  நகைக்கடை அதிபர்களும் பெரிய செல்வந்தர்களும் அடகுக்கடை சேட்டுகளும் தங்கத்தோடு வரிசையில் நின்றார்கள்,
  உணவுப்பொருட்களுக்காக பங்களா கார் போன்றவை எல்லாம் விவசாயிகளிடம் விற்கப்பட்டது,
  வேலைதேடி எல்லோரும் கிராமங்களுக்கு செல்ல மூன்றுவேளை உணவுடன் மாதந்தோறும் குடும்பத்திற்கு தேவையான உணவுப்பொருட்கள் சம்பளமாக வழங்கப்பட்டது
  ஒட்டுமொத்த தனியார் கல்விநிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு அரசு பள்ளிகளும் கல்லூரிகளும் மட்டுமே இயங்கின,
  Bank கள் எல்லாம் ஆடுமாடுகள் கட்ட பயன்படுத்தப்பட்டன, வெளிநாடுகளில் இருந்து பெட்ரோல் வாங்க மட்டுமே தங்கம் பயன்படுத்தப்பட்டது அரசுக்கு தங்கம் பற்றாக்குறையாகும் போதெல்லாம் விவசாயிகளிடம் கடனாக பெற்றார்கள், விவசாய குடும்பத்தை சேர்ந்த பெண்கள் எல்லாம் கிலோ கணக்கில் நகை அணிய ஆரம்பித்தார்கள், கார், பங்களா, சுற்றுலா, என ஆடம்பர வாழ்க்கை வாழ ஆரம்பித்தார்கள், நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும்
  அரை ஏக்கர் விவசாய நிலம் வாங்குவதே வாழ்நாள் லட்சியமாக மாறிப்போனது
  வாகனங்களால் ஏற்படுத்தப்பட்டு
  காற்றை அசுத்தப்படுத்திய புகைமண்டலம் நாளாக நாளாக குறைய
  உலக வெப்பமயமாதல் குறைந்து
  பருவமழை தவறாமல் பெய்யத்துவங்கியது
  வறண்டபூமியெல்லாம் தவறாது மழை பெய்ததினால் விவசாய நிலங்களாக மாறின,
  ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான உணவுப்பொருட்கள் போதுமான அளவு கிடைத்ததால் மீதி இருந்த உணவுப்பொருட்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு போதுமான மருத்துவ வசதிகள் ஏற்படுத்தப்பட்டன!
  பணத்தின் மீதான மோகம் காணாமல் போனதாலும்,
  tv, mobile, internet, போன்றவைகளை இழந்ததாலும்
  உறவுகளின் வலிமை புரியத்தொடங்கியது
  அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, என ஒவ்வொருவரின் முக்கியத்துவமும் தெரிய ஆரம்பித்தது,
  பக்கத்து வீட்டின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்க தொடங்கியது,
  பணம் எனும் மாயவலையில் சிக்கியிருந்த நாமெல்லாம் இயந்திரங்கள் இல்லை,
  மனிதர்கள் எனும் உணர்வுகள் நிறைந்த உன்னதப்பிறவிகள் என்பது புரிய ஆரம்பித்தது,
  எல்லாம் இருந்தும்
  எந்தவித பொழுதுபோக்கும் இல்லாமல் இருந்த
  மக்களை மகிழ்விப்பதற்காக
  ரஜினி, கமல்,
  அஜித், விஜய் எல்லாம் கிராமங்கள் தோறும் நாடகம் நடத்தி அரிசி பருப்பு வாங்கிச்சென்றார்கள் திருவிழா காலங்களில் த்ரிஷா நயன்தாராவின் கரகாட்டத்திற்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது
  ஆனாலும் அவர்களால் நமிதாவிடமும் அனுஷ்காவிடமும் போட்டிபோட முடியவில்லை
  என்பது வருந்தத்தக்க செய்தி!
  காரணம் தேடி விசாரித்ததில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது
  அவற்றை வெளியிட எப்போதும் போல் சென்ஸார் போர்டு அனுமதி மறுத்துவிட்டது!
  அதனால்,
  தயவு செய்து கரகாட்டத்தையும்
  குறட்டையையும் நிறுத்திவிட்டு
  கொஞ்சம் கண்விழித்து பாருங்கள் இது கனவுதான்!
  ஆனால் எல்லா கனவுகளும் சந்தோஷத்தை மட்டுமே தருவதில்லை
  சில கனவுகள்
  நம் தூக்கத்தையே கலைக்கும் சக்திகொண்டவை
  இந்த கனவும் அப்படித்தான
  கல்லுக்குள் ஒளிந்திருக்கும் கடவுள் போல்தான்
  காசும் காகிதத்திற்குள் ஒளிந்திருக்கிறது,
  கடவுளை கல்லென்று வாதிக்கும் மேதாவிகள் கூட, காசை காகிதம் என்று ஒப்புக்கொள்ளவதில்லை காரணம் பணம் என்பது எந்த மனதையும் மண்ணாக்கும் மாயப்பேய்!
  பணம் நம்மிடம் அடிமைப்பட்டு இருக்கவேண்டுமே ஒழிய
  பணத்திற்கு நாம் அடிமையாகக்கூடாது
  ———————————————————————

 5. இதுக்கு என்ன செய்யணும்னு சொல்ல வர்றீங்க !! ஒரு பெரிய புரட்சி நடத்து அவங்க சொத்தெல்லாம் புடுங்கி ஏழை மக்களுக்கு கொடுத்திடலாமா? பகல் கனவு தான் காணலாம் !! நம்மால ஒண்ணும் செய்ய முடியாது ! இருக்குறவ கொண்டையை அள்ளிமுடிஞ்சிக்கிறா ! இல்லாதவ தலையை தடவி விட வேண்டியது தான். அதாவது பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான். பல் இல்லாத நாமெல்லாம் விதியேன்னு பச்சை தண்ணியை குடிச்சிட்டு பதுவுசா படுத்துக்க வேண்டியது தான்.

 6. Please do not compare ambani with sibulal. Both cases are different because ambani has spent so much for himself but sibulal is having 700 different apartments and also the money he has earned is by legitimate means.

  How can somebody’s wealth be limited ? why should that be done so ? The biggest factor for anybody is have MOTIVATION to engage in a business entity. Microsoft/Apple would not have grown if you put a limit on the wealth that the key stakeholders can have.

  I am asking another question here – why can’t everybody become sibulal ? The simple reason is people like SIBULAL have gone ahead and taken risk in their lives, controlled all his emotions, gone through up/downs in business and has reached the top. Everybody is FREE to do so in their lives but how many people are willing to take that path ?. High risk is always associated with high rewards and that is the fact of life. It is up to SIBULAL to donate to charity, spend his money on others but nobody has got a right to limit anybody else’s wealth or dictate them how to spend it.

  MOTIVATION is the key factor for anyone to succeed in any field and there is nothing wrong in having WEALTH as the motivation. The only thing others can do is get inspiration from Sibulal’s life/achievements and follow their own dreams/passion to succeed in life.

 7. Vinavu.. instead of writing articles like this with vayitrerichal (jealousy) .. why cant you use your super brain to start a big company like Google (for your knowledge you can start company like Google.. i wont say Infosys), accumulate money and distribute the money that you accumulate with poor people?

 8. ஒருவரது தனி வளர்ச்சியைப் பற்றி எழுதுவரது சரியா? வினவின் இந்த கட்டுரை சரியானதல்ல..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க