Sunday, May 26, 2024
முகப்புசெய்திஅனைத்திலும் அந்நிய முதலீடு ! சுதந்திர தினம் ஒரு கேடு !

அனைத்திலும் அந்நிய முதலீடு ! சுதந்திர தினம் ஒரு கேடு !

-

ஆகஸ்ட் 15  சுதந்திர தினத்தை இணைந்து வழங்குவோர்…. அந்நிய முதலீடுகள்…!

ன்பார்ந்த உழைக்கும் மக்களே… மாணவர்களே…

 • நாட்டு வளம், காட்டு வளம், கடல் வளம், கனிம வளம் – அனைத்திலும் அந்நிய முதலீடு! இந்நிலையில் இவர்களுக்கு சுதந்திர தினம் ஒரு கேடு!

  போலி சுதந்திரம்
  காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி!
 • காலையில் பல் துலக்கும் பேஸ்டிலிருந்து, இரவு ஏற்றி வைக்கும் கொசுவத்தி வரை அனைத்திலும் பன்னாட்டு கம்பெனிகளின் பிடி! ஆனால் கம்பத்தில் பறக்க விடுவதற்கு மட்டும் தேசியகொடி! அது மட்டும் எதற்கு? பேசாமல் அமெரிக்க கொடியை ஏற்றி விடலாமே!
 • பன்னாட்டு கம்பெனிகளுக்கு தடையில்லாமல் தண்ணீர், மின்சாரம்… ஆனால் நமக்கில்லை!
 • காசில்லாதவனுக்கு கல்வியில்லை! படித்தவனுக்கு வேலையில்லை! இருப்பவனுக்கோ அது உத்திரவாதமில்லை! ஆக மொத்தம் வாழ்வதற்கே வழியில்லை! இதற்கு பெயர் சுதந்திரமா?
 • மோடி, லேடி முதல் அனைத்து ஓட்டுப் பொறுக்கிக் கட்சி கேடிகளும் செய்வதெல்லாம் ஃபிராடுதனம், பித்தலாட்டத்தனம்… ஆனால் பேசுவது மட்டும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்!
 • நாட்டையே பன்னாட்டு கம்பெனிகளுக்கு கூறுபோட்டு விற்பதற்கு பெயர் சுதந்திரமாம்!
 • பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு… மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை – பன்னாட்டு கம்பெனிகளுக்கு! – இதற்குப் பெயர் சமத்துவமாம்!
 • மதக்கலவரங்களையும, சாதிக்கலவரங்களையும் தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பதற்கு பெயர் சகோதரத்துவமாம்! போங்கடா… நீங்களும் உங்க சுதந்திரமும்…

ஆக மொத்தத்தில் இது போலி சுதந்திரம். இதற்கு ஏன் கொண்டாட்டம்? உண்மையான சுதந்திரத்திற்கு தேவை மீண்டுமொரு விடுதலைப் போராட்டம்!

சுதந்திர தினம்
கார்ட்டூன் – நன்றி: http://shekartoon.blogspot.in/

[நோட்டிசை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது சொடுக்கவும்]

இவண்

புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு
தொடர்புக்கு: 9566696659, 9944899190

 1. சுதந்திரதினத்தை முன்னிட்டு அம்மா சட்டம் அனைவருக்கும் இலவசம்…..

 2. //பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ரயில் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு… மக்களுக்கு! 5 இலட்சம் கோடி ரூபாய் வரிச்சலுகை – பன்னாட்டு கம்பெனிகளுக்கு! – இதற்குப் பெயர் சமத்துவமாம்!\\
  nowadays petrol rate is decreasing and is there any plan behind this?

 3. தற்போதைய உலக சந்தை நிலவரப்படி அந்நிய நாட்டு பொருள்களை முழுக்க நிராகரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. அதே சமயம் இரண்டு வழிகளில் நாம் முயலலாம்.

  1. இதே பொருட்களை உள்நாட்டில் நல்ல தரமுள்ள வகையில் உற்பத்தி செய்து மக்களின் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டும்.

  2. இப்படி உற்பத்தி செய்யப்பட்ட நல்ல தரமுள்ள பொருட்களை குறைந்த விலையில் அதே அந்நிய நாட்டவரிடம் அவரது நாடுகளில் நாம் விற்பனை செய்ய வேண்டும்.

  தற்போது அமெரிக்க மக்கள் சீன பொருட்களை அதிகம் பயன்படுத்துகிறார்கள். ஏன்?
  ஒரே தரமுள்ள பொருள் குறைந்த விலையில் கிடைத்தால் அதை எத்தனை நாளைக்கு அவர்கள் நிராகரிக்க முடியும். சீனாவின் தரத்தை விட நல்ல தரத்தை நம்மால் நிச்சயம் கொடுக்க இயலும்.
  என்ன, நம்மவர்கள் packaging and finishing இல் கோட்டை விட்டு விடுகிறார்கள்.

  முயன்றால் முடியாதது இல்லை. அமெரிக்க பொருளாதாரத்தை நாமும் கைப்பற்ற இயலும். அவர்கள் வழியை பின்பற்றி அவர்களது முறையை அவர்களுக்கே நாம் கொடுக்க வேண்டும்.

  உற்பத்தி திறன், வேகம், தரம் இவற்றில் சிறந்த பொருட்களை நாம் உருவாக்க வேண்டும்.
  அவர்களை அவர்கள் வழியிலேயே வீழ்த்த முடியும்.

  ஆக்கபூர்வமாக யோசிப்போம்.

  • நாட்டின் மீது அக்கறை உள்ள தொழில்நுட்பம் அறிந்த தோழர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவரவர் ஊர்களில் மக்களிடம் மூலதனம் பெற்று சிறு தொழிற்சாலைகளை உருவாக்கலாம். கம்மியுனிசத்தின் சாராம்சத்தை பறைசாற்றும் வகையில் அந்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைவரும் அந்த தொழிற்சாலையின் இலாப நட்டத்தில் பங்கு கொள்ளும் முதலாளிகளாக விளங்கலாம்.

   முதல் முயற்சி, செய்து தான் பார்க்கலாமே.
   முயற்சி திருவினை ஆக்கும்.

   தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன்
   மெய்வருத்த கூலி தரும்.

   சிறிது காலத்திற்கு வினவின் தளத்தில் மதம், சாதி சம்பந்தமான எந்த பதிவினையும் வெளியிடாதிருந்தால் நமது நண்பர்களின் கவனம் வெட்டி சண்டையின் பாதையில் செல்லாமல் ஆக்கபூர்வமான பாதையில் செல்லும். அவன் சரியில்லை, இவன் சரியில்லை என்று “சோ” பாணியில் குற்றம் குறை கண்டுபிடித்துக்கொண்டிருந்தால் மக்கள் உங்களை திரும்பி பார்ப்பார்கள், ஆனால் அவர்கள் உங்களை முழு மனதுடன் ஆதரிக்க மாட்டார்கள். அவர்கள் பிரச்சினைக்கு உங்களிடம் உண்மையான முழுமையான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை வந்தால் தானாக அவர்கள் உங்களை ஆதரிப்பார்கள். ஏணியின் முதல் படி, எதிர்மறை அரசியலை சற்று காலம் தள்ளி வைத்து, ஆக்கபூர்வமாக மக்கள் நலன் பேணும் பணிகளை செய்து காட்டலாம்.

   மக்கள் தானாக உங்களை ஆதரிப்பார்கள்.

   • இதைத்தான் நானும் கூறுகிறேன்…
    விரைவில் ஒரு உள்ளக கருத்தரங்குக்கு ஏற்பாடு செய்யுங்கள்
    பகாசுர கம்பனியை எதிர்த்து எவ்வாறு என்னால் பற்பசை தயாரிக்க /விற்பனை செய்ய சாத்தியமாயிற்று …..
    நாம் வளர நிறைய வழிகள் உண்டு…..குறிப்பாக குளிர் பானம் தயாரித்தால் பெப்சி/கோக் இவைகளை ஓட ஓட விரட்டலாம் பல 1000 பேருக்கு வேலை கிடைக்கும்!

  • அருமையான யோசனை
   வினவில் இப்படி ஒரு விவரமான பதிப்பை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது

   நாம் கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர்கள் தகவல் தொழில் நுட்பத்தில் சம்பாதிக்கிறோம். உலகமயம் இல்லை என்றால் இந்த வருமானம் இல்லை.

   எல்லோரும் உணரவேண்டியது: உலகமமாக்கலை தடுக்க முடியாது
   இதை நாம் எதிர் கொள்ள வேண்டும்.

   உலகமயம் – நாம் பயப்படவேண்டிய விஷயம் இல்லை
   ஒரு உதாரணம்: அந்நிய எலேக்ட்ரோனிக் பொருட்கள் சந்தைக்கு வந்த பின் தரம் உயர்ந்து உள்ளது. அதற்க்கு முன் டயனோரா, solidaire போன்ற தரமற்ற பொருட்கள் தான் நமக்கு கிடைத்தது

   நாம் செய்ய வேண்டியது:
   நாமும் போட்டி களத்தில் இறங்க வேண்டும்
   நல்ல தரமுள்ள பொருட்களை சரியான விலையில் விறபனைக்கு கொண்டு வர வேண்டும்
   உதாரணம்: நம்மால் உடனடியாக சில துறைகளில் (நெசவு மருந்து ஏற்றுமதி) செய்ய முடியும்

   • நான் வேலைக்கு சேர்ந்த முதல் சில வருடங்கள் மருத்துவ மின்னணு உபகரணங்களை சரி செய்யும் பொறியாளனாக இருந்தேன். அப்போது ஒரு உயர் ரக இஸ்ரேலிய உபகரணத்தின் மிகச்சிறிய மோட்டாரை ஆராய்ந்த போது அதற்குள்ளே இருக்கும் சிறிய மோட்டாரின் மேல் “Made in Coimbatore, India” என்று இருந்தது. அதிர்ச்சியாகவும், அதே சமயம் பெருமையாகவும் இருந்தது.

    நம்மிடம் திறமை இருக்கிறது. அதனை பயன்படுத்திவதில் தான் சூட்சுமம் உள்ளது.

 4. மேற்கூறிய ஆக்கபூர்வமான முயற்சியில் முக்கியமானது, இதனை முயற்சிக்கும் தோழர்கள்:

  1. நேர்மையாக இருக்க வேண்டும். ஏன் என்றால் மக்களின் பொதுப்பணம் இதில் பங்கு பெரும். உங்களுக்குள் ஒரு கறுப்பாடு இருந்தால் பின் ஒன்றும் செய்ய இயலாது. பெருகிய மக்கள் ஆதரவு சட்டென்று மறைந்து விடும்.

  2. மக்கள் ஆதரவு கிட்டும் என்று தெரிந்த பிறகு தங்களது முயற்சிக்கு அரசியல் தலைகள் ஆதரவு என்ற பெயரில் வந்து கூடி குலவ பார்ப்பார்கள். எச்சரிக்கையாக இருந்து அவர்களையும் அவர்களது அல்லக்கைகளையும் அண்டவிடாது இருக்க வேண்டும்.

  3. பொருட்களின் தரத்தில், அளவில், சிறிதும் குறை இருக்க கூடாது.

  4. திறமையான நிர்வாகம் இருக்க வேண்டும். அநியாய இலாபம் பார்க்க வேண்டிய தேவை இல்லை. ஆனால் நிச்சயம் குறைந்த பட்ச இலாபம் இருக்க வேண்டும். அப்போது தான் தொடர்ந்து தொழிலை நடத்த இயலும். தொழிற்சாலையின் வருமானம் அதன் உற்பத்தி செலவு, தொழிலாளிகளின் சம்பளம் அனைத்தும் போக கண்டிப்பாக மீதம் இருக்க வேண்டும். அப்போது தான் இந்த முயற்சியை மென்மேலும் பன்மடங்கு பெருக்க இயலும்.

  5. நல்ல முறையில் நிர்வாகம் நடந்து இலாபம் சம்பாதித்தால் பின் ரிலையன்ஸ், டாட்டா, மற்றும் பன்னாட்டு கம்பெனிகள் இந்த நிர்வாகத்தை விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். அதற்கு கண்டிப்பாக ஆணித்தரமாக மறுத்து விட வேண்டும்.

  முயற்சி திருவினை ஆக்கும். முயற்சித்து தான் பார்ப்போமே.

 5. ஊர்கூடித் தேர் இழுப்போம்…
  பலன் எல்லோருக்கும்!
  நான் உதவிக் கரம் நீட்டுகிறேன்…..

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க