Thursday, May 30, 2024
முகப்புஅரசியல்ஊடகம்'தி இந்துவுக்கு' கண்டனம், கருவாடுக்கு வந்தனம் - சீறும் பேஸ்புக்

‘தி இந்துவுக்கு’ கண்டனம், கருவாடுக்கு வந்தனம் – சீறும் பேஸ்புக்

-

கோயம்பேடு சந்தையில், கடைகளில் கருவாடு விற்பதை நிறுத்திய மவுண்ட்ரோடு மகாவிஷ்ணு ‘தி இந்து’வை கண்டித்து சமூகவலைத்தளங்களில் நண்பர்கள் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு.

அதிஷா

கருவாட்டு நாற்றம்

karuvadu-9கோயம்பேடு காய்கனி சந்தையில் விதவிதமான கருவாடுகள் மிக அதிக அளவில் விற்கப்படுவதாகவும் இதனால் சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு மிகவும் அஷௌகர்யம் உண்டாவதாகவும் சில நாட்களுக்கு முன்பு ஒரு தின பத்திரிகை குமட்டிக்கொண்டே செய்தி வெளியிட்டது.

1996-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஷட்டப்படி காய்கறிச் சந்தையில் காய்கறி மட்டும்தான் விற்கப்படவேண்டும் என்பதை மீறி இப்படி ஷைவ உணவு ஷாப்பிடுபவர்களுக்கு ஷங்கடம் வரும்படி கருவாடு விற்பது முறையா என்று அந்த செய்தி நீண்டிருந்தது. இதையடுத்து நேற்று மாநகராட்சியினர் கோயம்பேடு மார்க்கெட்டில் புகுந்து பல லட்சரூபாய்.. மன்னிக்கவும் ரூபாய் இருபதாயிரம் மதிப்புள்ள பல ஆயிரம் டன் கருவாடுகளை பறிமுதல் செய்துள்ளனர். இதையடுத்து ஷைவ உணவு ஷாப்பிடுபவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த இருபத்தெட்டு ஆண்டுகளாக நானும் என்னுடைய குடும்பத்தினரும் கருவாட்டினை விரும்பி உண்டு வருகிறோம். எனக்கெல்லாம் கருவாடு என்பது என்னோடே வளர்ந்த ஒரு தம்பி மாதிரி. தினமும் என்னோடு இருந்திருக்கிறான். ஒரு சட்டி பழைய சோற்றை கூட ஒரு துண்டு கருவாடிருந்தால் உற்சாகமாக சாப்பிட்டுவிட முடியும். காலை ப்ரேக்ஃபாஸ்ட் அப்படித்தான் நமக்கெல்லாம் இருந்திருக்கிறது. கறிசோறு தராத ருசியை கருவாட்டுக் குழம்பு தந்துவிடும்.

karuvadu-1கோவையில் உக்கடம் பகுதியில் கருவாடுக்கென்றே பிரத்யேகமான சந்தை உண்டு. அங்கு போனால் உலகின் எவ்வகை கருவாடும் சல்லிசு ரேட்டில் கிடைக்கும். அம்மாவுக்கு நங்கு கருவாடு, எனக்கு நெத்திலி, தங்கைக்கு துண்டு கருவாடு , வவ்வா, கொடுவா அவா இவா என கருவாடுகளில் நிறைய வெரைட்டி உண்டு.

சென்னைக்கு புலம்பெயர்ந்துவிட்ட பின் இந்த கருவாடு சந்தையை ரொம்பவே இழந்திருந்தோம். அண்ணாச்சி கடையில் கூட பாக்கெட் கருவாடு கிடைக்கும். தக்னியூண்டு துண்டு, வெரி சுமால் கருவாடு இரண்டு பீஸ் ஐந்து ரூபாய் என்று  விற்றார்கள். அதை வாங்கி குழம்பு வைக்கவும் முடியாது. சுட்டு திங்கவும் முடியாது. நல்ல ஃப்ரஷ்ஷான நெத்திலி கருவாடு கிடைக்காது. நங்கு கருவாடு கிடைக்காது. அம்மாவுக்கு தினமும் சாப்பாட்டோடு ஒரு சின்ன துண்டு கருவாடு இல்லையென்றால் ஒருவாய் கூட உருப்படியாக இறங்காது. அம்மாவின் வருத்தம் அதிகமான ஒருநாளில் பக்கத்துவிட்டு ஆன்ட்டி ஒருவரது தகவலின்பேரில் கி.பி.2007 தொடங்கி கோயம்பேடு சந்தையில் கருவாடு வாங்கத் தொடங்கினோம்.

கோயம்பேடு காய்கனி சந்தையில் இருக்கிற நூற்றுக்கணக்கான கடைகளில் வெறும் பத்து பதினைஞ்சு கடைகளில்தான் கருவாடு விற்கப்படும். மிக குறைந்த அளவிலேயே விற்கப்படும். அதுவும் மளிகை கடைகாரர்களுக்கு விற்க பாக்கெட்டில் அடைத்துவைத்த கருவாடுகளே கிடைக்கும். ஊரில் விற்பதுபோல நன்றாக குவித்து வைத்து பரப்பியெல்லாம் மணக்க மணக்க விற்கமாட்டார்கள். கருவாடுக்கென்று இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையையும் உறிஞ்சிவிட்டுத்தான் இங்கே விற்கிறார்கள். கருவாட்டின் மணம் பார்க்காமல் எப்படி வாங்குவது. இருந்தாலும் கோயம்பேடுதான் கடைசி வாய்ப்பு என்பதால் அங்குதான் மொத்தமாக வாங்கி ஸ்டாக் வைத்துக் கொள்வது நம்முடைய வழக்கம்.

karuvadu-4இந்த கருவாட்டுக் கடைகளில் வாசனை சுத்தமாக இருக்காது. இதனால் யாருக்கும் எந்த பிரச்சனையுமே இருந்து நான் கண்டதில்லை. அதே பகுதியில் அழுகின காய்கனிகளின் நாற்றம்தான் குடலை கிழித்துக்கொண்டு குமட்டும்! அந்த உச்சபட்ச துர்நாற்றத்தை பொருத்துக் கொள்கிற ஒருவரால் உலகின் எந்த நாற்றத்தையும் புன்னகையோடு ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் என்னமோ இந்த நாலுபாக்கெட் கருவாட்டினால்தான் நாட்டுக்கு தீங்கு விளைந்துவிட்டது போல… அதைதான் இப்போது துப்பறிந்து கண்டறிந்து செய்தி வெளியிட்டு ஷூத்தப்படுத்தியிருக்கிறார்கள். கருவாட்டை விற்று விதிமுறைகளை மீறிவிட்டார்களாம்?

என்னிடம் இப்போது தொக்கி நிற்கிற முதற்கேள்வி ‘இனி நானும் என் தாயும் கருவாட்டுக்கு என்ன செய்வோம்? எங்க போவோம்…?’ என்பதுதான். நாளை முதல் மீண்டும் அந்த அண்ணாச்சி கருவாடு விற்றால் (அவரும் கோயம்பேட்டில் கொள்முதல் பண்றவர்தான்) ஒரு துண்டோ இரண்டு துண்டோ வாங்கி நக்கிக்கொள்ள வேண்டியதுதான்.

ஒருவேளை இனி ஷூத்த பத்தமாக கோயம்பேடு சந்தையில் காய்கறி வாங்கி சாப்பிடப்போகிற ஷைவ பட்சிணிகள் ஒன்று சேர்ந்து முகப்பேர் பக்கம் என்னை போன்ற ஏழை கருவாட்டு ப்ரியர்களுக்காக ப்ரத்யேக சந்தை கட்டிக்கொடுப்பார்களா என்பதை தெரிந்துகொள்ளவும் ஆர்வமாக இருக்கிறது.

கருத்துக்கள்:

விநாயக முருகன் எனக்கு ஒரு சந்தேகம்.. அவங்க வளர்க்குற நாய்க்குக் கூட தயிர்சாதம்தான் ஊட்டி விடுவாங்களா?

அதிஷா அதிஷா – விநாயக முருகன் நிஜமாகவே தயிர்சாதம் மட்டுமே சாப்பிட்டு வளர்ந்த நாய்களை நான் அச்சத்தோடு சந்தித்திருக்கிறேன்.

karuvadu-7கவிதா சொர்ணவல்லி  ஏது விட்டா….இனி நம்ம கழுத்துல எல்லாம் “கறி கருவாடு சாப்பிட மாட்டேன்”னு எழுதி டேக் கட்டிக்கிட்டு தான் அலையணும் போல !

Nagarajan Nathamuni சமஸ் மீனவர் படும்பாடு பத்தி உருக்கமா எழுதி ஒரு வாரம் முடியல அதுக்குள்ளே….. ஆப்பு

Sunil Kumar எல்லாம் அவாளோட சிறுவாட்டுத்தனம் தான் வோய் ..

Puthiya Parithi ஏன்டா அங்க கருவாடு விக்க விடமாட்டுறிங்கன்னு கேக்காம,, அங்க கிடைக்கும் இங்க கிடைக்கும் என்று நம்மை நாமே சமாதானப்படுத்திக் கொள்ளும் வரை லட்ச அதிஷாக்கள் அம்மாவுடன் இந்த பெருநகரத்தில் கருவாடு தேடி அலையவேண்டியதுதான்..

கவிதா சொர்ணவல்லி Puthiya Parithi & கோயம்பேடு என்ன அவா வசிக்கிற இடமா என்ன ???? இவா தொல்லை எல்லாம் இடங்களுக்கும் தொடருதே. கருவாடு நாறும். குளிக்க தண்ணி இல்லாதவங்க நாருவாங்க. SLUM நாறும். எல்லாத்துக்கும் மாற்று இடம் பாத்து, திருவண்ணாமலை பக்கம் கொண்டு விட்டுருவாங்க. சென்னைனு சொல்லி. இதுக்குதான் அதிகாரத்தை கை நம்ம கைல வச்சுக்கணும். படிக்கணும்னு. பெரியவங்க எல்லாம் சொல்லிருக்காங்க.

karuvadu-2Puthiya Parithi இந்த உலகமே அவாவுக்காக படைக்கப்பட்டது அவாவுக்கு வேலை செய்ய படைக்கப்பட்ட அற்ப மானிடப் பதர்கள்தானே நாமெல்லாம்…

கவிதா சொர்ணவல்லி நம்மள மாதிரி தெருவுல இறங்கி கூச்சல் போடுரவளா அவா எல்லாம். உக்காருற இடத்துல இருந்தே அதிகாரத்தை அசைக்கிறவா தான ???? விடுங்க பாஸ். எல்லாரும் வெஜ் ஆகி, அவா வீட்டுக்கு சாப்பிட போயிடலாம் ! உக்கார வச்சு அவாளோட FAMOUS அக்கார வடிசல் சமைச்சு போடுராளா பாக்கலாம் !

Jeyamahesan Chandrakanthan அரிசி பருப்பு எண்ணெய் போன்ற பொருட்களும் விற்க கூடாது என செய்தியில் உள்ளதே.

அதிஷா அதிஷா Jeyamahesan Chandrakanthan இருக்கு ஆனா பறிமுதல் செஞ்சது வெறும் கருவாடுதான்றதுதான் காமெடியே

karuvadu-8வினோத் குமார் சேகர் மேற்கு வங்கத்துல மீன் எல்லாம் சைவத்துல தான் வருது… அவா எல்லாம் மீன் சாப்டுவா….குஜராத்ல முட்டை கூட கிடைக்காது….என்ன பண்றது…இங்க நம்ம விரும்பினத கூட நம்மால சாப்ட முடியல…ஹோட்டல் போனா அடுத்தவன் தட்ட பாத்து ஆர்டர் பண்ற ஆளுங்க தான் அதிகம்….ஆதம்பாக்கதுல வீடு சும்மா இருந்தாலும் இருக்கும்.. மத்தவாளுக்கு வாடகைக்கு தர மாட்டேன்றா…இப்டி போனா திருவண்ணாமலை இல்ல….இமய மலைக்கே கூட அனுபிடுவாங்க….

Mahendhiran Kilumathur இந்த கருவாட்டு சிக்கல் இவாள்களால் மட்டும் இல்லை, வீகன், கீகன் என்று தங்களை தாங்களே அழைத்துக்கொண்டு, நாங்க பால் கூட குடிக்க மாட்டோம் எனச் சொல்லும் நவீன அவாள்களும் கூட இப்படி ஒரு சில ஹோட்டல்களில் ரசம், குழம்பு என்று கலந்து கட்டி அடிக்கும் போது பக்கத்தில் யாராவது அப்பாவி ஒரு சிக்கன் தந்தூரியை சுவைத்துக் கொண்டிருந்தால் அழுகிய முட்டையை முகர்ந்தது போல் முகத்தை வைத்துக் கொண்டு கூட வந்திருக்கும் பாகன்களோடும் மோகன்களோடும் கண்ணைக் கண்ணை காட்டிக் கொண்டு பேசும் பக்கிகள் வாயில் அப்படியே ஒரு முழு துண்டு கோழியை தினிக்கும் ஆத்திரம் வரும். கோழியின் விலை கருதி அதைச் செய்வதில்லை. கருவாடென்றால் கேட்கவா வேண்டும். இவர்கள் ஏன் அவாள்களுக்கென்று ஒரு தனிச் சந்தையை உண்டாக்கிக் கொள்ளக் கூடாது?, அவாள்களே விவசாயம் செய்து அவாள்களே விற்று வாங்கி உண்டு கிடக்கலாமே? # மை ஃபூட்

masi-sambalகவிதா சொர்ணவல்லி ஷைவம் ஷாபிடும் மக்கள் எல்லாம், ஏன் கறி சாப்பிடும் மக்கள் உண்டாக்கும் காய்கறிகளை புறக்கணித்து, தங்களுக்கென்று ஒரு சொந்த மார்கெட்டை உண்டாக்கி காய் கனி வாசனைகளில் மிதக்கக் கூடாது?

கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ் செய்தி என்னவோ கருவாடு என்பதை விட காலகாலமாக நாம் உண்ணும் ஒரு பொருள் அதை பெரும்பான்மையான நுகர்வோர் வந்து பெற்றுச் செல்லும் சந்தையில் விற்க மறுக்கப்பட்டதே… இந்த நிலைத்தகவல் சகோதரர் அதிஷா அவர்களின் பிற நிலைத்தகவல் போல மேம்போக்காக நக்கலுக்கான கமெண்டுகளை பெரும் தகவல் அல்ல. அவர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் இங்கு பதிந்துள்ளார் அதை உள்வாங்கி பின்னூட்டம் வந்த மாதிரி தெரியவில்லை. அவரது எண்ணத்தை எழுத்தாகியுள்ளார். அவரைக் காட்டிலும் அப்பொருள் அதிகம் தேவைப்படுவோரால் இவ்வளவு சரியான வீரியமான நிலைத்தகவலை வெளியிட இயலாது. மாநகராட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள ஒரு சந்தை தனது மக்களுக்கு ஒரு அத்தியாவசிய உணவுப் பொருளை தர மறுக்கிறது என்பது மிக கேவலமான ஒரு சுதந்திர நாட்டின் மட்ட ரக மறைமுக தாக்குதல் அரசியல். இது துவக்கமாயின் இதுபோல அராஜக அத்துமீறல் வட மாநிலங்களுக்கு வேண்டுமாயின் சரிவரலாம். இங்கே மிகவும் கடுமையான விளைவை இந்த தடுப்புக்கு காரணமான அரசியல் கட்சிகள் சந்திக்கும். தமிழகம் அதன் இயல்பு நிலையில் தான் இனியும் இருக்கும். மாற்றம் கொண்டுவர எண்ணுபவர்கள் எப்பவுமே மாயமாகி விடுகின்றனர்.

karuvadu-3வினோத் குமார் சேகர் அறந்தாங்கி பகுதியில் கல்யாணத்துல கறி சோறு போடதும் ஆடி மாசம் அம்மனுக்கு கூழோட கருவாடு படைக்கறதும் என்னவாம். சேகர் மக்களின் தேவைக்கேற்ப அடகுகடையில் ரீசார்ஜ், பெட்ரோல் பங்கில் சூப்பர் மார்க்கெட், மெடிக்கல் ஷாப்ல பேஸ்ட் பிரஷ் சோப் போன்ற புரவிஷன் கிடைக்கதான செய்யுது

Mahendhiran Kilumathur கடற்கரை எப்போதும் மீனவனுக்குத்தான் சொந்தமாய் இருந்தது நம்மைப் போல பொது மக்கள் போய்தான் தாங்கொனாக் குப்பைகளையும், பிளாஸ்டிக்குகளையும் வேடிக்கை பார்க்கிறோம் பேர்வழி என்று கருவாடு காயவைக்கக் கூட மீனவனுக்கு லாயக்கில்லாத இடமாய் மாற்றி வைத்திருக்கிறோம், முதலில் மீனவர்களால் கடற்கரை காப்பாற்றப் பட்டு வந்தது. இன்று ரிசார்ட்டுகளாலும், கடல் பார்க்கும் வசதிகளோடும் வீடுகளையும் கட்டிடங்களை எழுப்பி கடற்கரையினை மாசு படுத்திக் கொண்டிருப்பது நாம் தான். கடற்கரை என்பதை மீனவனுக்குச் சொந்தம் இல்லை எனபது போல ஆக்கி இன்று வாழ்வாதாரம் இல்லாத ஒரு சமூகத்தை உண்டாக்கி வைத்திருப்பதும் நாம்தான். நீங்கள் சொல்வது போல கபாலீஸ்வரர்களுக்கும் பெருமாள் கோவில்களுக்கும் வேண்டுமானால் கருவாடு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் எங்களைப் போல கருவாட்டின் வாசனை பிடிக்கும் சாமிகளுக்கெல்லாம் கருவாடு படைத்துக் கொண்டும் சமைத்துக் கொண்டும்தான் இருக்கிறோம். யாரையும் யாரும் வற்புறுத்தி வாங்கவோ, சமைத்து சாப்பிடவோ சொல்லவில்லை. ஆனால் இப்போது கருவாட்டுக்கு கண்டனம் தெரிவிக்காவிட்டால் நாளையே முனியாண்டி விலாசில் மாட்டுக் கறியும், ஆட்டுக் கறியும் கிடைக்காமல் போகலாம், சைவ உணவுக் காரனை அசைவம் சாப்பிட்டே ஆகவேண்டும் என்பதற்கும், அசைவம் சாப்பிடும் ஒருவனை அசைவம் சாப்பிடாதே என்பத்ற்கும் ஒரு வித்யாசமும் இல்லை. கடற்கரை மாசுபாடுகள் எல்லாம் பற்றிப் பேசும் நீங்கள் கடற்கரையை சுத்தம் செய்தால் மீனவன் எங்கே போவான் என்பது பற்றியோ மீனவத் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சமூகம் என்ன ஆகும் என்பது பற்றியோ கருவாடு விற்கும் வாங்கும் சமூகம் என்ன ஆகும் என்பது பற்றியோ கவலை கொள்ளாதது வருத்தமளிக்கிறது

karuvadu-6எம்.ஏ. காதர் கருவாட்டோடு உங்களுக்கு உள்ள உறவு ! அப்பப்பா அருமை. நீங்க கருவாட்டு “மனம்” என்றே தலைப்பிட்டு இருக்கலாம். நாமதான் 6 மாதம் வீட்டு தேவைக்கான கருவாட்டை மாலத்தீவில் இருந்து கொண்டு போய்விடுகிறோமே! என்று சும்மா இருக்க முடியலே. கோயம்பேடு சந்தையில் தொடங்கிய கருவாட்டு கடைகளின் அடைப்பு தமிழகம் முழுவதும் தொடர வாய்ப்புள்ளது. அப்படி தொடர்ந்தால்,எங்க ஊர் ‘செங்கோட்டை” சந்தையில் உள்ள இரண்டு கடைகளையும் அடைத்தால், என் சொந்தங்கள் இதை வைத்து நீ தரும் கருவாடு இனி பத்தாது அதிகம் கொண்டு வா என்று மிரட்டுவார்களோ என்று பயமாக இருக்கிறது. எனவே இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

Ilangovan Balakrishnan அசைவக்காரர்கள் சைவக்காரர்களை கீழ்த்தரமாய் நடத்துவதோ, ஏளனப்படுத்துவதோ, ஒதுக்கி வைப்பதோ, விரட்டி விடுவதோ இல்லை. ஆனால் சைவக்காரர்கள் அசைவக்காரர்களை அப்படி செய்யும் குரூர புத்தியுடன் இருக்கிறார்கள். விலங்கு, தாவரம் இரண்டுக்கும் உயிரும் உண்டு, உணர்ச்சியும் உண்டு. விலங்குகளைக் கொல்வது மட்டும் உயிர்க்கொலை என்றும், தாவரத்தைக் கொல்வது உயிர்க்கொலை ஆகாது என்ற வாதம் மூன்று நூற்றாண்டுக்கு முந்தைய முட்டாள்த்தனம்.

karuvadu-5அசைவ உணவு சாப்பிடும் ஐரோப்பிய- அமெரிக்கர்கள் அறிவுத்துறையில் வியத்தகு சாதனைகள் சாதிக்கிறார்கள். அசைவ உணவு சாப்பிடும் ஆப்பிரிக்க- சீன, ஜப்பானியர் உடல் உழைப்பிலும் உடல் உறுதியிலும் உலகளாவிய சாதனையை படைக்கின்றனர். அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியும், வாழ் நாளும் இந்திய சைவக்காரர்களை விட கூடுதலாக இருக்கின்றது.

ஆக, யாரேனும் அசைவம் வேண்டாம் என்றால் அது அவன்/அவள் தலை எழுத்து. அதற்காக அடுத்தவர்களை டார்ச்சர் பண்ணுவது குசும்பு.

ஹோமோசெபியன்ஸ் எனப்படும் மனித குலம் இயல்பாக மாமிச பட்சிணியே. இந்த மண்ணின் முதுகுடி யாவரும் இரண்டரை லட்சம் ஆண்டுகளாய் மாமிசம் சாப்பிட்டு வளர்ந்தவர்களே. இன்று சைவம் உபதேசிக்கும் பார்ப்பனர்கள் கூட, வேதகாலத்தில் அவிர்பாகமாய் மாட்டிறைச்சி சாப்பிட்டு வந்த குறிப்புகளும் வேதங்களில் இருக்கிறது. சமண- பௌத்த சமயத்தினரின் புகழைக் கண்டு பொறுக்காமல் வைதீக சமயத்தினர் அவர்களிடமிருந்து காப்பி அடித்துக் கொண்ட தப்பான காரியம்தான் இந்த சைவப்பழக்கம்.

அந்த முட்டாள்த்தனத்தை உயர்வான சங்கதியாகவும் இயல்பான உணவுப்பழக்கத்தைக் கொண்ட அசைவர்களை தாழ்வானவார்களாகவும் கருதுவதும் வக்கிரப்பார்வை. ருசி, மணம் என்பவை பயிற்சியின் விளைவாய் வருபவை.மேட்டிமைத்தனத்துடன், சகஜீவன்களை வெறுக்கும் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே கருவாடு ” வீச்சம்” என்ற கருத்துருவாக்கமும், வன்மப்பயிற்சியும்.

சக மனிதர்களை, ருசியை, மணத்தை வெறுப்பின் அடிப்படையில் அணுகப் பயிற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தனது கெட்ட புத்திக்காக தாம்தான் அந்த இடத்தை விட்டு ஓடிப் போகவேண்டுமே ஒழிய எந்தப் பாவமும் அறியாத அந்த எளியவர்களை விரட்டி விட அந்த வன்மக் காரர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.

பேஸ்புக்கில் நிக்கோலஸ் கோபர்நிக்கஸ் August 19

காய்கறி விக்குற கோயம்பேடு மார்கெட்டுல கருவாடு விக்க கூடாதாம்…. கழுதைக்கு தெரியுமா கருவாட்டு வாசனை…

கருத்துக்கள்

Anthony Fernando அவனுங்க அலுவலகத்தில் மாமிச உணவுகளை சாப்பிட அனுமதி கிடையாது என்று சொன்ன போதே நம்மாளுங்க உள்ளே புகுந்து பாடம் கற்ப்பித்து இருந்தால் இன்றைக்கு நாம நம்ம வீட்டில என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிட கூடாது என்று சண்டித்தனம் பண்ணுகிற அளவிற்கு அவனுங்க வந்திருக்க மாட்டார்கள் …
இனியாவது நம்மவர்கள் விழித்து கொண்டால் நல்லது

M Mohamed Rafiq என்ன மாதிரி ஆளுங்க இவனுங்க..கருவாடு வாசத்த முன்ன பின்ன அனுபவிச்சிருந்தா தெரிஞ்சிருக்கும்…

பேஸ்புக்கில் பரிமள ராசன்

நாற்றம் புடிச்ச மாட்டோட ‘கக்கா’,மூத்திரம் இதையெல்லாம் கரைச்சு ‘பஞ்சகவ்யம்’னு குடிக்கிறியே?
அதவிட கருவாடு என்ன நாறுதாடா உங்களுக்கு?
கருவாடு மணக்கும்டா !
ஒரு தடவ கருவாட்ட தின்னுபாரு அப்புறம் கருவாட்ட உடமாட்ட !
நினைச்சாலே நாக்குல எச்ச ஊரும் அற்புதமான சுவைகொண்ட உணவு கருவாடு.
கோயம்பேடு காய்கறி மார்கெட்டில் கருவாடு விற்கக்கூடாது என எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் !
i support ‘KARUVADU’

கருத்து

Abu Aafreen I support karuvaadu, karuvaadu thingaadhavan kazudhaiyaadhaan iruppaan

பேஸ்புக்கில் திருமுருகன் காந்தி

கோயம்பேட்டில கருவாடு வித்தா உங்களுக்கு என்னடா?…

மீனவன இலங்கைக்காரன் கொன்னா, அதுக்கு “மீனவன் எல்லைதாண்டுறான்”னு கட்டுரை போட்டு நியாயப்படுத்துறான். ஏழைகளும்-உழைப்பாளிகளும் எளிய சத்துமிகுந்த உணவு வித்தா அதுக்கு கட்டம் கட்டி கட்டுரை போடுறான்.

தி இந்து அலுவலகத்துக்கு பக்கத்துல கையேந்தி பவன் நடத்துன தோழரோட கடைய அடிச்சு , பிரிச்சு உடைக்க வைச்சான். செய்து வைத்த மதிய உணவினை ரோட்டுல போட்டானுக இந்த பத்திரிக்கை அலுவலர்கள் .

தீண்டாமையை தொடர்ந்து தூக்கிப் பிடிக்கிற ‘தி இந்து’வுக்கு 2009 இனப்படுகொலை முடிந்த பொழுதே இழுத்து மூடவைத்திருக்க வேண்டும். ஒன்றரை லட்சம் தமிழர்களைகொலை செஞ்சதை நியாயப்படுத்துன பத்திரிக்கை தமிழர்களால் புறக்கணிக்கப்படாமல் இருப்பது அவமானகரமானது.

கோயம்பேட்டில் கருவாடு மட்டுமல்ல, ஆடு-கோழி-மாட்டுக்கறியும் , பன்றிக் கறியும் விற்பதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும். சிக்கன் கறி திருவிழா என்று ’தி இந்து’ இதழில் விளம்பரம் போட்டு காசு பார்ப்பதற்கு எந்த சனதானமும் இவனுகள தடுக்கவில்லை…உழைப்பாளிகள், ஏழைகளின் வணிகத்தில் கைவைப்பதே இவனுகளுக்கு தொழில். தி இந்துவை இழுத்து மூடுவோம்.

கருத்துக்கள்

Abdul Khader சென்னையில கஞ்சா விற்றால் கண்டுகொள்ள மாட்டான் ….கருவாடு விற்றால் தடையா ? அரசும் அரசு நிர்வாகமும் அதுக்கு சொம்பு தூக்கும் முற்போக்கு பாப்பானின் பத்திரிகையும் …..நல்லா இருக்கு ….

Vanna Serr ஹிந்து ராம் எதை எதையெல்லாம் சிங்கள அரசுக்கு வித்தும், கொடுத்தும் வயிறுகழுவும் பொழுது, அப்பாவிகள் வயிற்றுப்பிழைப்புக்கு கருவாடு விற்றால் என்னவாம்??!!

Fisher Folk மீன் வெட்டிபோட்டு (நாம காட்டுற மீன கண் முன்னாடியே வெட்டுவானுங்க), நண்டு, இறால், கருவாடு பாக்கெட் போட்டு விக்கிற H Mart-ல தான் (அமெரிக்காவில்) ஐயர் எல்லாரும் பழம், காய்கறி எல்லாம் வாங்கிறான். இத்தனைக்கும் H Mart ஒரே கடை. கோயம்பேடு மார்கெட்ல தனித் தனி கடை.

அப்புறம் ஏன் பார்ப்பானுக்கு இவ்வளவு நடிப்பு!. இந்திய ஐயர் வேற! அமெரிக்க ஐயர் வேறயா!. PS: H mart-famous south korean large one hall super market chain in US with variety of fruits, vegetables, and fish, crap etc. Vegetables, fruits மலிவாகவும், தரமாகவும் கிடைக்கும் என்பதால் அவ்வளவு பார்பனர்களையும் அங்கு பார்க்கலாம். ஹிந்து பத்திரிகைக்கு ஏழைகளின் வணிகத்தில் கைவைப்பதே தொழில்

Thambi Prabha கருவாடு விக்கிற பகுதியில இந்து பத்தரிக்கை விற்கலாம்! ஆனால் மார்கெட்டில் மட்டும் கருவாடு விற்க கூடாதா? இந்து பத்திரிக்கை கருவாடு மடிச்சு கொடுக்கத்தான் பயன்படுது!

Thiru Rajan கழுதைகளுக்கு தெரியுமா கருவாட்டு வாசனை…முழுக்க ப்ரஷர் வந்தவனுங்க…பார்ப்பான் கட்டம் கட்டி போட்டுட்டான்னா உடனே சட்டம் பாய்ஞ்சிடுது…ஏழைதமிழனுக்கு பிரச்சினைன்னா மட்டும் ஒடுக்குது..

Subash Chandra Bose தனக்கு ஒவ்வாதவற்றை தடை செய்வது பார்ப்பனிய சிந்தனை. அதைத்தான் பார்ப்பான் இந்து ராம் செய்துள்ளான். கடவுள் மறுப்பு என்பது விஞ்ஞானம். அதை மக்கள் தளத்திற்கு கொண்டு சென்றது பெரியார் அவ்வளவுதான்.

பேஸ்புக்கில் Pichaikaaran Sgl

எங்க ஏரியாவில் கருவாட்டுக்கடை பக்கத்தில் காய்கறி கடைகள் உள்ளன.. காய்கறி வாசம் எனக்கு பிடிக்கவில்லை.. அவற்றை அகற்ற மாண்புமிகு அம்மா அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டு கொள்கிறேன்.

பேஸ்புக்கில் Aazhi Aazhi Aazhi வினவு கட்டுரையை பகிர்ந்திருந்தார்

கருத்துக்கள்

Nambi Arulnambi அந்த ………………………மனது உள்ளே முழுவதும் துர்நாற்றம் வீசும். அதை முதலில் அவா கழுவட்டும். அவா க்கு என்ன தெரியும் அருமையான நெத்திலி கருவாடு வறுவல் சுவை பற்றி.  என் தமிழன் ரசம் வைத்து , நெத்திலி பொடி வறுவலுடன் பழைய அமுது உண்டு விட்டு ஒரு நாள் முழுவதும் நான் உற்சாகமாக வேலை பார்ப்பேன் …….அவாக்கு வேணும்னா காய்கறி, அரிசி, பருப்பு, மிளகாய், மல்லி எல்லாம் அவா அடுப்படில நட்டு வளர்த்து அதுலயே சமைச்சிக்க சொல்லுங்க ……………கடுப்புகள கிளப்பிட்டு. உள்ள விட்டதே தப்பு இதுல நம்ம மீதே வழக்கா ????

கருவாடு karuvadu_en
 1. nattukkuu romba mukiyamana seithiya paaru. Vela vetti illana ippadithan avalukkum, ungalukkum ezthutha thonum. Avalukku venummna thaniyaa kaikari market vachukku sollu.

  • அன்புள்ள உடன்பிறப்பே ,
   போன மாதம் ஸ்ரீரஙகம் தோசை கல்லில் தோசை வார்த்தேன். வாணலியில் கை பட்டு கை புண்ணாயிற்று.(அது பழைய வாணலி).நேற்று ஒரு புது வாணலியில் (ANODIZED TAVAA) மீண்டும் தோசை வார்த்தேன். அதன் கைப்பிடியை துணியின் உதவியின்றி கையாள முடிந்தது.அதாவது தவாவின் சூட்டில் உள்ள சூடு என்ற குணத்தை என் கை அறியாமல் தடுத்தது எது என்று ஆய்ந்தேன்.

   ப்ரக்ருதியானது மூன்று விதமான பொருட்களால் ஆனது என்று விஷ்ணுபுரணத்தில் படித்ததாக வேதத்தில் ஞாபகம். அறிவினை கொடுப்பது A) ஸாத்விகம். எடை குறைந்தது.ஞானத்தை அளிப்பது. எலெக்ட்ரான் நிறை குறைந்தது. நமது ஐந்து புலங்களும் எலெக்ட்ரான் ஐ வைத்தே இயங்குகின்றன.(லெப்டான் குடும்பம்)

   B) எடை மிகுந்தது தாமஸம்.அறிவினை கெடுப்பது.சோம்பல்,தூக்கம்,மறதி மற்றும் மயக்கம் கொடுப்பது. ப்ரோட்டான் மற்றும் ந்யூட்ரான் (க்வார்க் குடும்பம்) நிறை மிகுந்தவை.( எலெக்ட்ரான் ஐ விட 1836 மடங்கு அதிகம் ).
   ஒரு ஹீலியம் அணுவிலிருந்து ஒரு க்வார்க் குறைந்தால் அது ஹீலியம் கிடையாது. ஹைட்ரோஜன் ஐஸோடோப் தான். ஆனால் 2,3 எலெக்ட்ரான் குறைந்தாலும் அது ஹீலியம் ION. எனவே நமக்கு அஹம்காரத்தினை கொடுப்பது க்வார்க்.

   C) ராஜஸம் – வினையாற்றி. ஆற்றல் ,விசை,திறன் முதலியன.க்லுவான், போட்டான்,க்ராவிடான்,போஸான் முதலியன.

   எனவே சாராயம் தாமஸம்(போலீஸ் மாமாவிடம் தண்டம் அழுங்கள்.). புலால் உணவு ராஜஸம் அல்லது தாமஸம்.உங்களை யார் கருவாடு, புலால் சாப்பிட வேண்டாம் என்று தடுத்தது. அறிவு வேண்டும்,கல்வி வேண்டும், சோம்பலின்றி வாழ்வில் உயர வேண்டுமெனில் புலால் தவிறுங்கள்.

   புலால் உண்ணாதே என வள்ளுவரும் சொல்கிறார்.பல்வேறு கீழ்கணக்கு நூல்களும் சொல்கின்றன.

   அன்புடன் கணேஷ்

   • ganesh,

    எந்த ஆய்விலிருந்து

    சாராயம் = தாமஸம், புலால் உணவு = ராஜஸம் அல்லது தாமஸம், சைவ உணவு = ஸாத்விகம் என்ற முடிவுக்கு வந்தீர்கள்? சைவ உணவில் லெப்டான்கள் அதிகமாக இருக்கிறதென்றும், அசைவ உணவில் வினையூக்கி போசான்கள் அதிகமாக இருக்கிறதென்றும், சாராயம் போன்றவற்றில் க்வார்க்குகள் அதிகமாக இருக்கிறதென்றும் ஏதாவது ஆய்வுமுடிவுகள் கூறுகின்றனவா?

    உங்கள் புளுகுகளை அறிவியல் என்று நிறுபிக்க, துகள்களுடன் உங்கள் விருப்பத்திற்கேற்ப பண்புகளை ஒப்பீடு செய்து குவாண்டம் இயற்பியலை கலந்துகட்டி அடித்தால் நீங்கள் சொல்வதெல்லாம் உண்மையாகிவிடாது.

    நீங்கள் சொல்கிற குவாண்டம் இயற்பியலின் படியே கூட எலக்ட்ரான் இல்லாமல் – அதாவது ஸாத்விகம் இல்லாமல் – ஒவ்வொரு பொருளும் அதன் பண்பு நிலையில் மாறாமல் இருக்க முடியும். ஒரு ஹீலியம் அணுவிலிருந்து 2,3 எலெக்ட்ரான் குறைந்தாலும் அது ஹீலியம் அயனி தான்! ஆனால், ஒரு க்வார்க் குறைந்தால் கூட அது ஹீலியம் கிடையாது. ஹைட்ரோஜன் ஐசோடோப் ஆகிவிடும்.

    அதனால் ஒரு பொருள் அதன் நிலைத் தன்மையில் நிலைத்திருக்க தேவை ஸாத்விகமான எலக்ட்ரானா? தாமஸமான க்வார்க்கா? எது முக்கியமானது ?

    மேலும், ஒவ்வொரு பொருளும் அதன் சமநிலையிலிருந்து மாறாமல் இருக்க லெப்டான் (எலக்ட்ரான்), க்வார்க் (புரோட்டான், நியூட்ரான்) இவை இரண்டுமே சமநிலையில் இருக்க வேண்டும். இல்லையெனில் அப்பொருள் ஒன்று ஐசோடோப்பாகும் அல்லது அயனியாகிவிடும்.

    அதனால் தான் நாங்கள் சைவம், அசைவம் இரண்டையும் உட்கொள்கிறோம். ஆனால் நீங்களோ ஒன்றை மட்டும் உட்கொண்டு சமநிலை இழந்து தவிக்கிறீர்கள்.

    இப்போது புரிகிறதா, ஏன் சிலர் குவாண்டம் இயற்பியலை வேதத்தில் இருக்கிறதென்று தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று..

    • நண்பர் ஆணி அவர்களே,

     இந்த கணேஷ் என்ற பெயரில் பதிவிடுபவர் ஒன்று முழு கிறுக்கனாக இருக்க வேண்டும், இல்லை கஞ்சா அடித்தபடி பதிவிடுபவராக இருக்க வேண்டும், இல்லை நம்மை எல்லாம் கிறுக்கன் என்று எண்ணிக்கொண்டு தாம் மட்டும் புத்திசாலி என்று எண்ணிக்கொண்டு எல்லா அறிவியல் பகுதிகளிலிருந்தும் ஓரிரண்டு வார்த்தைகளை பிடித்துக்கொண்டு அதற்கு சமக்கிருத லிங்க் உண்டென்று வியாக்கியானம் செய்யும் ப்ராடாக இருக்க வேண்டும்.

     என்ன, நம்மையெல்லாம் முழு முட்டாள்கள் என்று எண்ணுகிறாரா இந்த கணேசு?
     அதிபுத்திசாலி என்று எண்ணிக்கொண்டு இங்கே நரகலை பதிவிடுகிறார் அவர். இதற்கெல்லாம் மெனக்கெட்டு பதிலிட வேண்டி தேவையில்லை என்பது எனது கருத்து. உருப்படியாக அவர் விவாதித்தால் நாமும் பங்கு கொள்ளலாம். சும்மா, தான் மட்டும் தான் அறிவாளி, மற்றவரெல்லாம் கேனைப்பயல்கள் என்று எண்ணிக்கொண்டு பதிவிடுபவரிடம் விவாதம் செய்வது வீண்வேலை.

     • அன்புள்ள உடன்பிறப்பே !
      கர்வம் இல்லாதாவனே நல்ல மாணவன். எனக்கு கர்வம் இல்லை. இருந்தால் ஏன் ஐயா பல நூல்கள் பயில்கின்றேன்.நான் சாகும் வரையில் கற்பேன்.( க்ஷணச கனஸ ச ஏவ வித்யாமர்தம் .).
      இனிய உளவாக இன்னாத கூறல்
      மூர்க: நிந்ததி. (மூர்க்கனே நிந்திப்பான்.).
      நாம் தமிழர்கள் .கன்னட மூர்க்கர்களல்லர்.
      அன்புடன்,
      கணேஷ்

      • அய்யா கணேஷ்,
       ஏனைய இன வெறியை கக்குகிறீர்கள். அப்போ கன்னடர்கள் எல்லாம் மூர்க்கர்களா?

   • அய்யா கணேஷ்,

    நீங்க அடித்துக் கட்டும் கதையெல்லாம் இருக்கட்டும். எலக்ட்ரோன் எடைக் குறைவாக இருப்பதற்கும், சாத்விக குணத்திற்கும் என்னங்க சம்மந்தம்? இப்படி பேசிக்கிட்டே இருக்க வேண்டியது தான். இப்படி வாயில வட சுட்டது மட்டுமில்லாமல் அடுத்தவன் சட்டியில வட சுட்டான்னா, நாங்க அப்பவே சட்டியில சுட்டுருக்கம்னு வேற பீலா வுடறது.

    சரி அப்படிஎன்றால் அணுவில் இருந்து ப்ரோட்டனையும்,நியூட்ரானையும் நீக்க முடியுமா? நீக்கி விட்டால் வெறும் சாத்விக குணம் மட்டுமே இருக்கும் அல்லவா?

    அப்புறம் பழைய சட்டியாக இருக்கட்டும், புது சட்டியாக கூட இருக்கட்டும், தோச ஒழுங்காச சுடத் தெரியலனா ரெண்டுலயும் சூடுபடதான் செய்யும்.

    அறிவியல் படி சாராயம் என்பது ஒரு வேதியல் கலவை அவ்வளவு தான். புலால் உணவு என்பதும் அப்படி தான். காய் கறி உணவு என்பதும் அப்படி தான். உங்கள் கூற்றுப் படி புலால் உணவிலும் சாத்விகம் இருக்குது. அதாம்பா எலக்ட்ரோன் இருக்குது. காய்கறியிலும் இருக்குது. அதனால நாம எதுலயும் வேறுபாடு காமிக்காம சாத்விக(எலக்ட்ரோன்), தாமஸ(ப்ரோடான்,நியூட்ரான் ),அஹம்காரத்தினை(க்வார்க்) ,ராஜஸம்(க்லுவான், போட்டான்,க்ராவிடான்,போஸான்) கலவையாக கொண்ட மாட்டுகறியை காலை உணவாகவும், மதிய உணவாக கருவாட்டைக் கடித்து ஒருக் குண்டா பழைய சாதத்தையும், இரவு உணவாக பன்றிக் கறி ஒரு தட்டும், சிக்கன் 65 ஒரு தட்டும் விட்டு விளாசலாம். நல்ல வசதியானவர்கள், சாயங்கால நேரத்தில் பாம்புக் கறி வறுவல், எலிக் கறி வறுவல், தேள் வறுவல் சாப்பிடலாம். உங்களுக்கு எச்சில் ஊறினால், தலையுள துண்டப் போட்டுண்டு பாய் கடைக்கு போனால் அருமையான பீப் வறுவல் கிடைக்கும். எல்லாமே சாத்விகம் , எல்லாமே தாமஸம் , எல்லாமே அஹம்காரம் , எல்லாமே ராஜஸம். எமக்கும் பரம்பொருள். யாவும் பரம்பொருள்.

    ஸ்வாக .

    நன்றி.

    • அன்புள்ள உடன்பிறப்பே !

     இவ்வுலகினில் எல்லாப் பொருளிலும் 3 குணங்கள் கலந்துதான் இருக்கும். ஆனால் நாம் சாப்பிடும் உணவினை பொருத்து நம் செயல்கள் மற்றும் குணங்கள் இருக்கும். ஸாத்விகம் அதிகமாக உள்ள உணவினை சாப்பிடுமாறு 18 கீழ் கணக்கு நூல்கள் உணர்த்துகின்றன. உங்கள் வசதிக்கு எல்லாம் திருக்குறளை வளைக்க வேண்டாம்.

     1) எது வேண்டுமாமானாலும் சாப்பிடலாம் என்றால் ,போலீஸ் மாமா ஏன் சாராயம் குடித்து விட்டு வண்டி ஒட்டக்கூடாது என அறிவியல் பூர்வமாக சட்டம் பேசுகிறார்?(இது எல்லா நாடுகளுக்கும் பொருந்தும்.)
     அப்படியானால் சாராயம் நமது அறிவினை கெடுக்கிறது அன்றோ?
     2) ஒலிம்பிக்ஸ் பொன்ற விளையாட்டுக்களில் ஏன் யூரின் சோதனை நடத்த வேண்டும்? ஊக்க மாத்திரைகள் விளையாட்டில் ஜெயிக்க உதவுகிறதன்றோ?
     3) வாயிலே எதை வேன்டுமானாலும் சாப்பிடலாம் ஆனால் வெளியே பேசுவது சரியாக இருக்கட்டும் என்றால் ந்யூட்டன் 3 ஆவது விதி தவறுகிரதன்றோ?
     4) கார உணவு மிக அதிகம் சேர்த்துக் கொண்டால் எப்படி வெகுளாமல் இருக்க முடியும்?
     5) 5) மூளையின் எந்த நரம்பையும் இன்று தூண்டும் அளவுக்கு அறிவியல் வளர்ச்சி கண்டுள்ளது. ரௌத்ரம் ,ஸாந்தம் ,மயக்கம் என்ற எந்த நிலையினையும் தூண்டி விட முடியும்.( ஹார்மோன் கள் அல்லது கருவிகள் மூலம்.) ENDOCRINOLOGY ,MCR ANALYSIS
     உணவே மருந்து,அதிகம் மிஞ்ஜினால் அமுதமும் விஷம் என்றனர்.
     இதைதான் நம் முன்னோர் ஆஹார நியமம் என்று எழுதி வைத்தனர்.

     Regards,
     Ganesh

    • கணேஷ்,

     //சாத்விக(எலக்ட்ரோன்), தாமஸ(ப்ரோடான்,நியூட்ரான்), அஹம்காரத்தினை (க்வார்க்) , ராஜஸம்(க்லுவான், போட்டான், க்ராவிடான், போஸான்)//
     இதற்க்கு ஏதாவது அறிவியல் அடிப்படை இருக்கிறதா?

   • ஏம்பா கணேஷ், அடிச்சு விடறதுக்கு அளவே இல்லையா! ஏதோ புஷ்பக விமானம்தான் ஆகாய விமானம்னு சொன்னா பரவாயில்லை. எலக்ட்ரான் சத்வம், ப்ரோட்டான் தாமசம்னு பீதிய கிளப்பினா எப்படி!

    எப்பவும் அளவா அடிச்சு உடணும். அப்பத்தான் இவரு சொல்றதுலயும் ஏதாவது மேட்டர் இருக்குமோன்னு சந்தேகம் கிளப்ப முடியும். அளவுக்கு அதிகமா அடிச்சு உட்டா, இது காலி டப்பா அப்படின்னு சொல்லிட்டு எல்லாரும் திண்ணையை காலி பண்ணிட்டு போயிடுவாங்க.

 2. கருவாடு சாப்பிடாதவனுக்கு அது அருவருப்பாத்தான் இருக்கும், ஆனா நமக்கு அது சொர்க்கம்

  என்ன அலுவலகத்தில் சைவம் மற்றும் அசைவத்திற்க்குத் தனித்தனி இடம் வைக்கலாம்…

 3. லாபாய்ண்ட்ஸ் பேஸும் அம்பிகள்,முதலில் ஷைவம் அஷைவத்திற்கு வித்யாஷம் ஷொல்லட்டும்.

  பார்பனிய அல்லகைகள் , பார்பனர்களை விட ஆபத்தானவர்கள். சில நூற்றாண்டுகளுக்கு முன், தமிழ் முதலான திராவிட மொழிகள் சமத்கிருததில் இருந்து வந்தன என்று கூப்பாடு போட்டனர். அனால் அறிவியல் அதை பொய்பித்தது. உயிர்வதை என்பதையும் விளங்குகளுக்கேப் பொருத்திப் பார்த்தனர். அனால் உயிரியல் அதை மறுபடியும் பொய்பித்தது.

  உடலுழைப்பில் ஈடுபடும் பெரும்பான்மையான மக்கள் இறைச்சி உணவு உட்கொள்ளுபவர்களே. அவர்களின் உழைப்பில் உண்டு கழித்து வாழும் ஜீவன்கள், கடைசியில் அவர்களையே பதம் பார்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு வெக்கம் மானம் ரோசம் இருந்தால், முதலில் அவர்களுக்கு தேவையான உணவை அவர்களே உற்பத்தி செய்து திங்கட்டும்.

  இறைச்சி சாப்பிடும் மக்கள் அதை சாப்பிடாதவரை வேற்றுக் கோளில் இருந்து வந்தவரைப் போல பார்ப்பதில்லை. ஒன்றுமட்டும் உறுதியாகிறது. உடலுழைப்பில் ஈடுபடும் மக்கள் உண்மையிலே அப்பாவிகள். அதனால் தான் இன்னமும் சில ஜென்மங்கள் இப்படியெல்லாம் அவர்களை ஏமாற்றி பிழைக்க முடிகிறது.

 4. உடல் உழைப்பில் ஈடுபடும் மக்கள் அதிகமாக கறி உண்பது இல்லை.

  அவர்கள் அதிகமாக உண்பது சைவ உணவு தான்.

  சுவைக்காக உண்பது தான் கறி,அதிகமாக கரி உண்பது க்ஷ்ர்த்திய குலம் என்று தம்மை கூறும் மக்கள் தான்,இந்தியா முழுவதும் இதே கதை தான்.

  மிகவும் அதிகமாக கறி உண்பது முஸ்லிம்களும் கிரித்தவர்களும் தான்.

  உழைக்கும் மக்களால் கரியாய் செருமானம் செய்ய முடியும்,ஆனால் அது தான் சிறந்தது என்று அர்த்தம் அல்ல.

  புஞ்சாபில் கடும் குளிரிில் விவசாயம் செய்யும் மக்கள் அதிகம் உண்பது சைவ உணவு தான்,பாகிஸ்டானின் புஞ்சாபிலும் இதே கதை தான்,

  அதிகம் கறி உண்பது சண்டை போடும் மக்கள் தான்.

  • //அதிகம் கறி உண்பது சண்டை போடும் மக்கள் தான்.//
   காமெடி பண்ணாதீங்க ஹரி,
   ஹிட்லர், செங்கிஸ்கான். இவங்க எல்லாம் வெஜிடேரியன் தான்.
   இவங்க ரொம்ப அமைதியானவங்கன்னு சொல்ல வரீங்களா?

  • //அதிகம் கறி உண்பது சண்டை போடும் மக்கள் தான்.//

   ஹிட்லர், செங்கிஸ்கான். இவங்க எல்லாம் வெஜிடேரியன் தான்.
   Mother Teresa was a Non-vegetarian.

 5. எல்லாம் சரி,

  ஒரு கேள்வி, குறிப்பாக வியாசன் அய்யவிர்க்கு,

  சைவம் என்பதை chaivam என்று தானே உச்சரிக்க வேண்டும்,அதை என் saivam என்று உச்சரிக்கின்றனர்?

  இல்ல இதுவும் திரைப்படம் பார்த்து வந்ததா?

  இன்னும் சொல்ல போனால் ஷைவம் என்பது சரியான சொல் தான்.

  ச என்று எழுதி விட்டு ஸ என்று என் உச்சரிக்க வேண்டும்?

  • சைவம் என்பதும் தவறு…ஷைவம் என்பதும் தவறு…ஸைவம் என்பதே சரியான உச்சரிப்பாக வரும். அது சரி….இது ரொம்ப முக்கியம் பாருங்க!

  • அதானே ? கூடவே பன்னிக் கறியும் விற்றால் நல்லது. வெள்ளை பன்னி மிகவும் சுத்தமானது. காட்டுப் பன்னி வெள்ளை பன்னியைவிட ருசியானது மற்றும் குறைந்த கொழுப்பு கொண்டது. மற்ற வெள்ளை இறைச்சிகளைவிட சத்தானது இந்த பன்னி இறைச்சி. இந்தியாவில் இந்த பன்னி இறைச்சி கிடைப்பது மிகவும் அறிதாக இருக்கிறது. சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் எங்கும் கிடைக்கும். சீன முறையில் “பாக் குட் தே”, “வாந்தான் மீ” என்றாலும் இந்திய முறையில் பன்னி வறுவல், பிரட்டல் லென்றாலும் மிகவும் ருசியாக இருக்கும்.
   ஆக கருவாடு போராட்டக் காரர்கள் பன்னி கறிக்கும் சேர்ந்து போராடினால் என்னை போன்ற பன்னிக் கறி விரும்பிகளுக்கு பேருதவியாக இருக்கும்.

   • பண்ணிக் கறியும் பாம்பு கறியும் சாப்பிட்டவன் நான். எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை 🙂 கொடுங்க, சாப்பிடறேன்

 6. சமீபத்தில் ஹைதராபாத்தில் கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்த நடிகரான பிரகாஷ்ராஜ், தன்னுடைய ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். “சம்பவம் நடந்த போது அங்கிருந்த இளைஞர்கள், யாரையும் காப்பாற்ற முன்வராமல் செல்ஃபோனில் படம் பிடித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு மிகுந்த கோபம் வந்தது. மனிதாபிமானமே இல்லாமல் இளைஞர்கள் இப்படி மாறியிருப்பது வருத்தம் அளிக்கிறது.” சோஷியல் மீடியாவில் அப்டேட் பண்ணிப் பரபரப்பைக் கிளப்புவது முக்கியமா? காப்பாற்றுவது முக்கியமா? எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதுதான் இப்போது ஃபேஷன் ஆகியிருக்கிறது.
  இது ஒரு முக்கியமான விஷயம்
  நமது சமுதாயமே தவறான பாதையில் செல்கிறது

  எந்த ஒரு இரயில் விபத்திலும் முதலில் மக்கள் பிரயாணிகளிடமிருந்து நகைகளை திருடுகிறார்கள். திருட்டு முடிந்தபின் தான் மனிதாபினம்
  இது ஒரு மாபெரும் வெட்கக்கேடு
  இப்போது facebook / twitter பரபரப்பும் சேர்ந்து விட்டது. இந்த social media வசதிகளால் சமுதாயத்திற்கு என்ன நன்மை செய்யலாம் என்பதை விட்டுவிட்டார்கள்….

  இதை போன்ற விஷயங்களில் வினவு கவனம் செல்லுத்த வேண்டும்

 7. Whatever u say nothing will happen. THE HINDU newspaper has the reach. There is a saying in tamil “Kozhi Koovi Pozhuthu vidiyathu”. that is applicable for Vinavu.com

 8. என் காசுல நான் வாங்கி சப்பிட்ட இவாலுக்கு என்னவாம், பிடிகலனா மூடிட்டு போங்க….. மூக்கை…!

 9. எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியல. யாராவது விளக்கம் சொன்னா தேவலை. காய் கனி மார்க்கெட் nu பேர் இருக்கு. கருவாடு எப்பங்க காய் கனில சேந்துச்சு? உங்களுக்கு கருவாடு இல்லாம இருக்க முடியதுங்கரதுக்காக, காய் விக்கிற மார்க்கெட்ல எல்லாத்தையும் விக்கணும் நா நாயமே இல்ல.

  இங்க கருவாடு வித்தா அவாலுக்கு என்ன, வேணும்னா காய்கறி மார்க்கெட் தனியா வெச்சுக்க சொல்ற மக்களே, இதுதான் பா அந்த காய்கறி மார்க்கெட்!!!

  • //எனக்கு ஒரு விசயம் மட்டும் புரியல. யாராவது விளக்கம் சொன்னா தேவலை. காய் கனி மார்க்கெட் nu பேர் இருக்கு. கருவாடு எப்பங்க காய் கனில சேந்துச்சு? உங்களுக்கு கருவாடு இல்லாம இருக்க முடியதுங்கரதுக்காக, காய் விக்கிற மார்க்கெட்ல எல்லாத்தையும் விக்கணும் நா நாயமே இல்ல.

   இங்க கருவாடு வித்தா அவாலுக்கு என்ன, வேணும்னா காய்கறி மார்க்கெட் தனியா வெச்சுக்க சொல்ற மக்களே, இதுதான் பா அந்த காய்கறி மார்க்கெட்!!!

   // In India it is in Vegitable market Karuvadu is sold everywhere. Vegitable market is just a name but in usage it is everything that is sold for making food is in this market. Learn your GK first.

 10. மாடுகளை ஓசியில் லவட்டிக் கொண்டுபோய்
  யாகம் என்ற பெயரில் தீயிலிட்டு,பின் ஓசியில் வயிறு புடைக்க தின்று கொழுத்த பூணூல்கள் இன்று கருவாட்டை பற்றிப் பேசுவது அதிகமாக Wநாற்றம் வீசுகிறது

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க