பாராளுமன்ற தேர்தலை ஒட்டி நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம்.
உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய பெற்றோர்களிடமோ கேட்டால் வண்டிவண்டியாக சொல்வார்கள். ஆனால் கூச்சமே இல்லாமல் ஒரு கல்விக் கொள்ளையனை போற்றி புகழ்கிறார் சீமான்.
ஒரு வேளை பச்சமுத்து புலி ஆதரவளாரக இருப்பாரோ என்று நீங்கள் எண்ணினால் இந்த வீடியோவை பார்ப்பது அவசியம்.
புலிகளையும் பிரபாகரனையும் வண்டி வண்டியாக கழுவி கழுவி ஊற்றுகிறார் பச்சமுத்து. ‘என் அண்ணன் பிரபாகரன்’ என்றும் ‘இடப்புறத்தில் விழுந்த உணவைக் கூட சாப்பிடாத மானப் புலி பரம்பரை நாங்கள்’ என்றும் பேசித்திரியும சீமான் இதைக் கேட்டபிறகு என்ன செய்திருக்கவேண்டும். நரம்புகள் புடைக்க, ரத்தம் சூடேறி வாங்கடா தம்பிகளா என்று கூறி புதிய தலைமுறையையும், எஸ்.ஆர்.எமையும் முற்றுகையிட்டு மன்னிப்பு கேள் என்று போராடியிருக்க வேண்டும்.
சீமான் கேட்காமல் இருந்திருக்க மாட்டார். “ஏன்யா, என் தலைவனைப் பழித்துப் பேசினாயாமே” என்று கோபப்பட்டு சீறியிருப்பார். பிறகு, பாரிவேந்தர் பேசிய பஞ்சாயத்து டீல் சீமானுக்குப் பிடிச்சுப் போயிருக்க கூடும். யார் கண்டது?
ஏன் பாரிவேந்தரை எதிர்க்கவில்லை என்று நாம் கேட்டால், “நான் ஈழம் சென்றபோது…” என்று ஆரம்பித்து, “அங்கு மறைவிடத்தில் அண்ணன் எனக்கு பயிற்சியளித்தபோது…” என்று நீட்டி “தம்பி நன்றாக கேட்டுக்கொள், பச்சமுத்து நம்ம அண்ணன் அவரை கண்ணீர் வராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தலைவர் சொன்னார் என்று எதையாவது அடித்து விடுவார்.
பிரபாகரனை பற்றி அவர் கூறி வரும் கதைகளை நம்பும் ஆக்சன் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை இதுபோன்ற கதைகளுக்கு பஞ்சமிருக்காது. பிராபகரனை தான் சந்தித்த போது நடந்தாக கூறும் கதைகளை தம்பிமார்கள்
யாராவது தொகுத்து புத்தகமாக போட்டால் காந்தி தொகுதிகளைவிட அதிகமான தொகுப்புகளை பெறமுடியும் என்பது மட்டும் நிச்சயம்.
“வணக்கத்திற்குரிய ஐயா பெருந்தமிழர் பாரிவேந்தர்” என்ற அடைமொழியுடன் கூழைக் கும்பிடு போட்டு மண்டியிடுகிறார் இந்த மண்டியிடாத மானத்துக்கு சொந்தக்காரர். சுற்றுலா வந்த புத்த பிக்குகளை தாக்கிய ‘வீரம்’ பச்சமுத்துவின் முன்னால் இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது ஏன் என்று எந்த தம்பியும் சீமானிடம் கேள்வி எழுப்பவில்லை.
பாரிவேந்தர் கல்வியை விற்பனை சரக்காக்கும் ஒரு கல்வி கொள்ளையன். தமிழ் மாணவர்களை சுரண்டுபவர். நரவேட்டை மோடியை ஆதரித்தவர். இத்தனைக்கும் மேலாக சீமான் தன் தலைவராக கூறும் “பிரபாகரன் தான் ஈழ இன அழிப்புக்கு முக்கிய காரணம். பிரபாகரன்தான் ஈழத்தை பற்றி பேசுகிறார். மக்கள் பேசவில்லை. மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்” என்று பேசியிருப்பவர். ‘இத்தகையவரின் கூட்டத்திற்கு செல்கிறோமே, நாலு பேரு காறி துப்புவானே’ என்ற அச்சம் கூட இல்லாமல் போகிறார் என்றால், வலுவான காரணம் எதுவும் இல்லாமல் அண்ணன் இதைச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.
“இலங்கையுடன்யாரும் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது” என்று மற்றவர்களுக்கு செய்த நாட்டாமையை, இவர்கள் யாரும் பெருந்தமிழர் பெருமகனாருக்கு செய்யவில்லை. தமிழகத்திலிருந்து சினிமா துணை நடிகர்கள் யாரும் இலங்கைக்கு செல்கிறார்களா என்று விமான நிலையங்களில் ஸ்லீப்பர் செல் போட்டு இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த காலத்தில் “எஸ்.ஆர்.எம் லங்கா” என்று இலங்கை அரசுடன் இணைந்து பல்கலைக்கழகம் அமைத்துக் கொண்டிருந்தார் பச்சமுத்து.
வழக்கமாக ஓலைப்பாயில் நாய் மூத்திரம் போனதை போல சத்தம் நிக்காமல் பேசும் திறமை வாய்ந்த வீரர்கள் யாரும் அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
சீமானை மட்டும் நாம் குறை சொல்லமுடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து இன்று வரை பச்சமுத்துவுடன் கூட்டணியில் இருக்கிறார் தன்மான சிங்கம் வை.கோ. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கத்தில் நடந்தது எல்லாம் நினைவில் வைத்திருக்கும் வை.கோவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் மீது பாரிவேந்தர் காறிதுப்பியது மறந்து விட்டது.
சீமான் அப்படிப்பட்ட ஞாபக மறதிக்காரர் அல்ல. “பெருமதிப்புக்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்கள் நம்முடைய நட்பு சக்தி, அன்னார் அவர்களை எதிர்த்து களமாட போவதில்லை” என்று கட்சி செயற்குழுவில் அறிவித்தார். சீமானைப்போல அதிகமான நட்புசக்திகளை கொண்டவர்களை இந்த பூலோகத்தில் எவரும் பார்க்க முடியாது.
காடுவெட்டி குரு இவருக்கு நட்புசக்தி, பா.ம.க தூண்டி விட்ட சாதி வெறியால் கொல்லப்பட்ட இளவரசனின் நத்தம் காலனி மக்களும் நட்புசக்தி, பெருமகனார் பால்தாக்கரே நட்புசக்தி, யாசின்மாலிக்கும் நட்புசக்தி, குஜராத்தின் கடனை அடைத்து மிச்ச பணத்தை உலக வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் மோடி நட்புசக்தி, இலை மலர்ந்தால் ஈழத்தை மலரவைக்கும் அம்மாவும் நட்புசக்தி, இடிந்தகரை மக்களும் நண்பர்கள், வைகுண்டராஜனும் நண்பன், கத்தி லைக்காவும் நண்பன், ‘நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பனே’ என்ற சசிகுமார் தத்துவப்படி ராஜப்க்சேவும் நண்பன்.
அப்போ யாருதான்யா எதிரி என்று கேட்கிறீர்களா?
தம்பிமார்கள் முகநூல் வாயிலாகவே யூரின் டெஸ்ட் செய்து யார் யார் மலையாளி, தெலுங்கன் என்று கண்டுபிடித்து முத்திரை குத்தி வைத்திருக்கிறார்கள். ஆகவே, நமக்கு எதிரிகளே இல்லையே என்று தமிழினம் கவலை கொள்ளத் தேவையில்லை.
இதுநாள் வரை பச்சமுத்துக்கு தமிழினவாதிகள் ஆதரவளித்து வந்தது புதிய தலைமுறையில் முகம் காட்டத்தான் என்று பாமரத்தனமாக எண்ணியிருந்தோம். ஆனால், மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனக்கும் பச்சமுத்துவுக்குமான டீல் என்ன என்பதை இலைமறைகாயாக வெளியிட்டார். அதாகப்பட்டது எம்பெருமான் பச்சமுத்து தன் கல்லூரி நிகழ்ச்சிக்கு சீமானை அழைத்திருக்கிறார். இருவரும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிக்கும் போது, யாருக்கும் கேட்காமல் சீமானின் காதருகே வந்திருக்கிறார் பச்சமுத்து.
வந்து, “நீங்கள் (ஏழை) மாணவர்களை அனுப்பி வையுங்கள் நான் படிக்க வைக்கிறேன்” என்றாராம். அன்றிலிருந்து இவரும் அனுப்பி வைக்க வைக்க அவரும் படிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எத்தனை சீட், என்ன என்று எந்த விவரமும் கூறவில்லை. பெருந்தமிழர் என்பதால் பெரிய எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று ஊகிக்கலாம்.
இதே போலத்தான் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் இல்ல திருமண விழாவிற்கு சென்று சிறப்பித்து வந்தார். ராஜபக்சேவின் நண்பர்களான லைக்கா குழுமம் தயாரித்திருக்கும் கத்தி படத்தையும் ஆதரிக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் “எதிர்க்க முடியாது, என்னான்ற? படத்தை தடுத்துப்பார் என்று நான் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்துவிடமுடியும் உங்களால்?“ என்று கத்தி பட முதலாளிகளின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் போல சீறுகிறார் சீமான்.
அடுத்து இவர் முன்வைக்கும் வாதம் தான் நகைச்சுவையின் உச்சம். இந்தக் காட்சியில்தான் உண்மையிலேயே ஹீரோ என்ட்ரி ஆகிறார். “நானும் விஜயும் சண்டை போட வேண்டும். இது தான் இவர்களின் நோக்கம். ஈழ ஆதரவாளர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகம். படத்தை நிறுத்தணும் என்று சொன்னால் அவன் ரசிகர்கள் எதிரிகளாகி விடுவார்கள். தேவையற்ற சிக்கல் ஏற்படும்” என்கிறார். இந்த டீலுக்கான பின்புலம் மற்றுமொரு தருணத்தில் வெளியாகலாம்.
அடுத்ததாக அவர் கூறுவது “கருத்தைத்தான் பார்க்கணும், யார் எடுத்தார்கள் என்று பார்க்கக்கூடாது” இதுதான் முக்கியமான லா பாயின்ட். பணப்பற்றாளரும், சாதிப் பற்றாளரும், ஆர்.எஸ்.எஸ் பற்றாளரும், சமஸ்கிருதப் பற்றாளரும், தமிழ்ப்பற்றாளருமான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருதளித்து கொண்டாடியவர் நெடுமாறன். அப்புறம் விளார் நடராசன் (சசிகலா) சேர்த்து வைத்திருந்த தமிழ் மக்களின் பணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டியவர். இதையெல்லாம் ஏனென்று கேட்காத தமிழ் கூறும் நல்லுலகம் தன்னை மட்டும் வறுப்பது ஏன் என்பது சீமானின் ஆதங்கம்.
சீமானை முகநூல் மூத்திரச்சந்துகளில் பலரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தடி சாக்கில், வை.கோவின் தம்பிகளும் முக்காடு போட்டுக் கொண்டு சேர்ந்து அடிக்கிறார்கள். இந்த அநீதியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?
கத்தி விவகாரத்தில் அண்ணன் நெடுமாறனைக் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்ததாக பண்பலை வானொலிப் பேட்டியில் ஒரு “பிட்”டைப் போட்டிருக்கிறார் சீமான். அன்று இதே போன்ற ஒரு சூழ்நிலையில் சிவகாசி ஜெயலட்சுமி பொங்கி எழுந்ததன் விளைவாகத்தானே “ஏட்டு முதல் எஸ்.பி வரை” என்ற இலக்கியம் வெளியானது!
ஆகவே, இது தனக்கு மட்டுமே நேர்ந்த அவலம் என்று சீமான் வருந்தத் தேவையில்லை. ‘பெருந்தமிழர்’ தமிழுக்காக விருது வழங்கும் விழாவில் வைகோ கலந்து கொள்ளப் போகிறார். பல அறிஞர்களுக்கு விருது கொடுக்கப்போகிறார் பாரி வேந்தர். நாளைக்கு இதெல்லாம் வரலாற்று பாடத்துல வரும். மாணவர்கள் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க.
பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக, கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.
அறத்துக்கு அத்தாரிட்டியான ஜெயமோகனே வேந்தர் ஈந்த காரின் மீது படர்ந்திருக்கும் போது, சீமானை மட்டும் தாக்குகிறார்களே!
கவுண்டமணி சொன்னதுபோல, சத்திய சோதனை தான்!
– ரவி
நாசகார நக்சல் தர்பாரில்
கிளாப் அடிக்கும் கோமான்கள் சீமானை பழிப்பது வேடிக்கை..
ஆகா..அற்புதம்…
பாரிவேந்தர்.ரசியா,சீனா,ஜப்பான்& ஐரோப்பிய நாடுகளுக்கு
தலைவர் ஆவதை எந்த மட சாம்பிராணியும் தடுத்து
நிறுத்த முடியாது!
வினவு முக்கியமான ஒரு ஆதாரத்தை விட்டுவிட்டது…லைகா லிபரா போன்ற பெரும் முதலாளிகள் தொழில் போட்டியில் இன விடுதலையை பற்றியெல்லாம் பேசக்கூடாது -சீமான்
சீமான் பு( ளி ) ஆதரவாளர் என்பதில் சந்தேகம் இல்லை.______
இன்றுமுதல் சீமான் புளிக்கொழம்பு சாப்பிட்ட புனித தமிழனாக காணப்படுகிறார்
//பாரிவேந்தர் கல்வியை விற்பனை சரக்காக்கும் ஒரு கல்வி கொள்ளையன். தமிழ் மாணவர்களை சுரண்டுபவர். நரவேட்டை மோடியை ஆதரித்தவர். இத்தனைக்கும் மேலாக சீமான் தன் தலைவராக கூறும் “பிரபாகரன் தான் ஈழ இன அழிப்புக்கு முக்கிய காரணம். பிரபாகரன்தான் ஈழத்தை பற்றி பேசுகிறார். மக்கள் பேசவில்லை. மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்” என்று பேசியிருப்பவர். ‘இத்தகையவரின் கூட்டத்திற்கு செல்கிறோமே, நாலு பேரு காறி துப்புவானே’ என்ற அச்சம் கூட இல்லாமல் போகிறார் என்றால், வலுவான காரணம் எதுவும் இல்லாமல் அண்ணன் இதைச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.
//நச்
இந்தக்கருத்து சுதந்திரம் இதெல்லாம் காணோமே…
இன்று சீமானின் ரசிகக்குஞ்சுகள் அடிக்கும் கூத்து இன்னும் காமெடி. பாலச்சந்திரன் எல்டிடீஇ ட்ரஸ்ல இருக்குற சீனை இவர் சொல்லிதான் டைரகடர் மாத்தினாராம். படத்துல இது கற்பனை காட்சி அப்படின்னு ஸ்லைட் போடச்சொல்லியிருக்கோம் அப்படின்னு இவ்வளவுநாளும் சொன்னாங்க. இன்னைக்கு 65 அமைப்பு ஒன்னு சேந்ததும், அவர் அந்த சீனையே தூக்குரேன் அப்படின்னு சொன்னவுடனே, இம்சை அரசன் படத்தில் வர்ர மாதிரி வெற்றி, வெற்றி அப்படின்னு ரசிகக்குஞ்சுகள் அடிக்கும் கூத்தை பார்த்து, கருணாநிதியே உபிஸ் எல்லோரையும் எப்படி சப்பக்கட்டு கட்டுரதுன்னு கத்துக்குங்க அப்படின்னு சொல்லுவாரு போல.
நல்ல பதிவு. பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும் என்பார்கள் ஆனால் தமிழ்நாட்டுத் தமிழர்களிடம் இது கொஞ்சம் அதிகம். தமிழ்நாட்டில் தமிழ், தமிழுணர்வு, இனவுணர்வு, மொழியுணர்வு எல்லாமே பணம் பண்ணுவதற்கான கருவிகள். தமிழ்நாட்டில் தமிழரல்லாதவர்களின் ஆதிக்கம் ஆட்சி, பொருளாதாரம், அன்றாட வாழ்க்கை எல்லாவற்றிலும் காணப்படுவதால், உண்மையிலேயே தமிழுணர்வால் உந்தப்பட்டு அரசியலுக்கு வருகிறவர்கள் கூட, கடைசியில் தமிழரல்லாதவர்களுடன் அரசியல், பொருளாதாரம் என்பவற்றில் போட்டி போட வேண்டிய நிலை ஏற்படுகிறது. அதனால் மொழியுணர்வு, இனவுணர்வு எல்லாவற்றையும் ஒருபுறம் ஒதுக்கி வைத்து விட்டு தமிழரல்லாதவர்கள் போலவே அவர்களும் மாறி விடுகிறார்கள். அப்படி மாறவேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்படுகிறது. ஓரளவுக்குப் பெயர் கிடைத்தவுடன், தொடர்ந்து தமிழுக்கு, இனத்துக்கு எல்லாம் உண்மையாக நடந்தால், அவர்களை இந்தியாவுக்கு எதிரியாகக் காட்டி அவர்களின் அரசியல் எதிர்காலத்தைப் பாழடிக்கவென்றே பலர் கண்ணுக்குள் எண்ணெய் விட்டுக் கொண்டு காத்திருக்கிறார்கள். அதனால் தமிழ்நாட்டில் தமிழுணர்வு, இனவுணர்வு எல்லாம் பிரபலமடைய மட்டும் தான், அதற்குப் பின்னர் எல்லோரும் பணம் சம்பாதிக்கும் வேலையில் இறங்கி விடுகிறார்கள்.
சீமான் எதையும் பெரிதாகச் சாதித்து விடுவாரென்றோ அல்லது சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவாரென்றோ, தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலை தெரிந்த எந்த ஈழத்தமிழனும் நினைத்தில்லை. தமிழ்நாட்டு அரசியல்வாதிகளினதும், பெரும்பாலான, அதிலும் தமிழரல்லாத தமிழ்நாட்டுக் கூத்தாடிகளினதும் ஈழத்தமிழர் ஆதரவு சுயநலமும் வியாபர நோக்கமும் கொண்டது என்பது ஈழத்தமிழர்களுக்குத் தெரியும். ஆனால் சீமானின் விடயத்தில் அவரது இனவுணர்வும், தமிழுணர்வும் உண்மையானதென ஈழத்தமிழர்கள் நம்பினோம். அந்த நம்பிக்கை கூட எங்களின் கண்முனாலேயே சிதைந்து போய்விடுமோ என்பதை நினைக்கத் தான் கவலையாக இருக்கிறது.
//சீமான் எதையும் பெரிதாகச் சாதித்து விடுவாரென்றோ அல்லது சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவாரென்றோ, தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலை தெரிந்த எந்த ஈழத்தமிழனும் நினைத்தில்லை.//
Vs
//ஆனால் சீமானின் விடயத்தில் அவரது இனவுணர்வும், தமிழுணர்வும் உண்மையானதென ஈழத்தமிழர்கள் நம்பினோம். அந்த நம்பிக்கை கூட எங்களின் கண்முனாலேயே சிதைந்து போய்விடுமோ என்பதை நினைக்கத் தான் கவலையாக இருக்கிறது.//
அப்ப இன்னுமா அந்த கந்தாயம் சிதையாம இருக்கு? இல்ல, சிதைஞ்சி சிதையாம இருக்கா? இல்ல சிதையாம சிதைஞ்சி கெடக்கா?? எனக்குப் புரியலையே
ஆனாகூட்டி.. வியாசன் அண்ணாச்சி ரொம்ப கருத்தா பேசறாப்ல.
இதே மாதிரி தான் எல்லா இடத்திலயும் பேசிகிட்டு இருக்காரோ…. கவனிக்காம போயிட்டனே 🙁
அண்ணன் மன்னாருக்கு என்னுடைய கருத்தில் எந்தப் பகுதி புரியவில்லை என்று கூறினால் விளக்குவது இலகுவாக இருக்கும்.
-“சீமான் எதையும் பெரிதாகச் சாதித்து விடுவாரென்றோ அல்லது சீமான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவாரென்றோ, தமிழ்நாட்டில் தமிழர்களின் நிலை தெரிந்த எந்த ஈழத்தமிழனும் நினைத்தில்லை.”-
இதில் நான் கூறுவது என்னவென்றால் தமிழ்நாட்டில் சீமான் எப்படிக் கத்தினாலும் தமிழ்தேசியம் எடுபடாது, ஏனென்றால் உண்மையான தமிழர்களிடம் தமிழ்தேசியம் பற்றிய விழிப்புணர்வு கிடையாது. தமிழரல்லாத திராவிடர்களின் ஆதிக்கம் அங்கு அதிகம், பெரியாரிஸ்டுக்களும், திராவிடர்களும் சேர்ந்து தமிழ்தேசியத்தை நசுக்கி விடுவார்கள். தமிழ்நாட்டுத் தமிழர்கள் சுயவெறுப்பு மிக்கவர்கள், அவர்கள் உண்மையான தமிழர்களின் தலைமையை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். சினிமா நடிகர், நடிகைகளை மட்டுமல்ல, தலைவர்களைக் கூட தமிழரல்லாதவர்களிடம் தேடுவது தான் தமிழ்நாட்டுத் தமிழர்களின் வழக்கம். அவர்களின் சாதிப்பிரிவுகள் இன்னொரு உண்மையான தமிழனைத் தலைவனாக ஏற்றுக் கொள்ள இடம் கொடுக்காது. அதனால் சீமானால் ஒன்றையும் சாதிக்க முடியாது அத்துடன் அவரால் முதலமைச்சராகவும் முடியாது.
-“ஆனால் சீமானின் விடயத்தில் அவரது இனவுணர்வும், தமிழுணர்வும் உண்மையானதென ஈழத்தமிழர்கள் நம்பினோம்.”-
இதில் நான் கூறுவது என்னவென்றால் தனிமனிதராகிய சீமானின் இனவுணர்வையும், தமிழுணர்வையும் பற்றியது. கத்தி, புலிப்பார்வை போன்ற படங்களின் விடயத்தில் அவரது நிலைப்பாடு, அவருக்குத் தமிழுணர்வும் இனவுணர்வும் இல்லை என்பதற்கான அடையாளமென்று நான் இன்னும் முற்றாக நம்பவில்லை. இந்தப் பிரச்சனையை வைத்து அவரின் வளர்ச்சியில் பொறாமை கொண்ட பலர் அப்படி ஒரு பிரச்சாரத்தை மேற்கொள்ள முனைந்தாலும், என்னைப் போன்ற ஈழத் தமிழர்கள் பொறுத்திருந்து பார்ப்போம்.
இனிமேலாவது அண்ணன் மன்னாருக்கு என்னுடைய கருத்து என்னவென்று விளங்கியிருக்குமென நம்புகிறேன். 🙂
அண்ணன் வியாசரின் கருத்து தெளிவாக புரிகிறது. அம்பூட்டு தெளிவு.
சுயவெறுப்பு மிகாத, உண்மையான ஒரே தமிழனின் தலைமையை மட்டும் ஏற்றுக் கொண்ட, சினிமாவே பார்க்காத, சினிமா நடிகர், நடிகைகளோடு அன்னம் தண்ணி புழங்காத, அவர்களைக் கூப்பிட்டு ஸ்டார் நைட் நடத்தாத, திருட்டுவிசிடி இணையம் நடத்தாத, தமிழ்படங்களே பார்க்காத, தமிழரல்லாதவர்களிடம் ரொரோண்டோவிலும், அவுஸ்திரேலியாவிலும், யுரோபாவிலும் டூ விட்டிருக்கும், சாதிகள் என்றால் என்னவென்றே தெரியாத சுத்த சுயம்பிரகாசத் தமிழர்களான ஈழத் தமிழர்களில்(*) முக்கியமானவரும் முதன்மையானவருமான…. ஸ்ஸ்ஸ்ஸப்பா… திருவாளர் வியாசர் சொன்னால் தெளிவு ஏற்படாமல் போகுமா?
நல்ல தெளிவு சாமி
(*) — (பரிணாம வளர்ச்சியில் குரங்கு தோன்றுவதற்கு முன்பே, அட அம்புட்டு ஏன் பூமியே தோன்றுவதற்கு முன்பே தோன்றிய இனம்)
கூத்தாடுவதும்____ நெளிப்பதும் ஆத்தாதவன் செயலே.. 🙂
உனக்கு தமிழ் தேசியம் குறித்தும் தெரியல, பெரியாரிசம் குறித்தும் தெரியல. ஆனா எல்லாம் தெரிஞ்ச மாதிரி காட்டிகிறது. ஈழ தமிழனுங்களுக்கு, புலி -பிரபாகரன்- பிறகு சினிமா – சைவ சாதி வெறி இது தவிர, வேற எந்த உலக அறிவும் கிடையாது.
யோவ் வினவு, கருணாநிதி பாப்பான்கள கூட்டி வச்சி கொண்டாடுற மாதிரி, சாதி வெறி பொறம்போக்கு கருத்துக்களை எல்லாம் போடறீங்க, நாம எழுதுனா நீக்கிவிடுவது.
அஸ்வின் ______ ஒருமையில் உளறுவதை மட்டும் அப்படியே வெளியிடும் வினவு மற்றவர்களை ஒருமையில் பேசுவதைத் தவிர்க்குமாறு முன்பு அறிவுரை கூறினார்கள். 🙂
அவரது பேட்டியிலேயே தெளிவாக சொல்லியிருக்கிறாரே. நான் ஏன் போராடவில்லைன்னு கேட்குற கூவைங்க ஏன் அவங்க போராடவேண்டியதுதானேன்னு கேட்டிருக்கிறாரே. நான் கேட்குறேன்.. ஆ ஊன்னா மைக்க தூக்கிட்டு அவர்ட்ட போறீங்களே. நடுரோட்டுல நின்னு பஸ்ஸ மறிச்சு இதே டிவிக்காரங்க கத்தி படத்து பிலிமை அழிக்கற வரைக்கும் இங்கே போக்குவரத்து நடக்காதுன்னு சொல்ல வேண்டியதுதானே? டிவிக்காரகளும் தமிழன்தானே? இதே ரெட் பிக்ஸ் சேனல் அவங்க சேனல்லயே கண்டனம் தெரிவிச்சாங்களா?
ராஜபக்சே சொந்தக்காரன் கத்தி தமிழ்படம் எடுத்தானாம். அதை இங்கே வெளியிட்டு அது நல்லா ஓடு லாபம் பார்த்துருவான்னு அதை தடுக்கனும்னு நினைக்கிறீங்க. சரி. இது தமிழனை நேரடியா பாதிக்காத ஒரு நிகழ்வு. தினந்தினம் தமிழ் மீனவன் ராஜபக்சேவோட ராணுவக் கூலிகளால குண்டடி பட்டு சாகுறானே.. ஜெயில்ல போயி பரிதவிக்கிறானே. எவனாச்சும் மொத்தமா ஆள் சேர்த்து கடல்ல இறங்கி அங்க போய் அவன்ட மல்லுக்கு நின்னீங்களா? கத்தி படத்த நிப்பாட்டுனா சரியாப் போச்சா? தமிழக மக்களே இந்த மேட்டருக்கு காறித்துப்புறாங்க தெரியுமா? லட்சம் பேரு செத்தப்பவே தமிழக மக்கள் அமைதியாத்தான இருந்தீங்க. இன்னிக்கு வந்துட்டு உஸ்ஸு உஸுன்னா என்ன செய்யறது. போயி தண்ணியக் குடிங்க.
லைக்கா கம்பெணிக்காரன் ராஜபக்சே நாய்க்கு சொறிஞ்சு விடுறவன்னே வச்சுக்குவோம். அவன் இங்க படம் எடுத்ததால தமிழனோட தன்மானம் தீய்ஞ்சு போச்சுனே வச்சுக்குவம். இந்தப் பிரச்சனைய மொதல்ல எழுப்பினது யாரு? டிவி சேனல் காரங்களா? இல்லை புரட்சிக்காரங்களா? இல்ல வேற யாரு? எல்லாரும் டிவி சேனல்ல குழுமி தமிழக மக்களுக்கு இந்த தகவலை தெரியப்படுத்தினீங்களா? அத்தனை புரொகிராமையும் நிப்பாட்டுறா.. தமிழக மக்களுக்கு அற உணர்ச்சி பொங்கி வழியறவரைக்கும் அவனுக்கு இதைப் பத்தி புட்டு புட்டு வைப்பேன்னு யாராச்சும் சொன்னீங்களா? உனக்கு நியூஸ்ல ஹாட்டா ஓட்டறதுக்கு ஒரு மேட்டர் வேணும் அவ்ளோதான்.
சீமானே கேட்குறாரு. ஏர்டெல் காரன் இலங்கைக்கு பண உதவி செஞ்சான்னு. தமிழர்களை அழிக்கறதுக்கு. அதுக்கு இவங்க போராட்டம் பண்ணிருக்காங்க. சரி. இன்னிக்கும் அவன் தமிழ்நாட்டுலதான் இருக்கான். ச்ச்சூப்பாரு சிங்காரு நடத்திட்டுத்தான் இருக்கான். அவன என்ன செய்ய முடிஞ்சது உங்களால. உங்கள் தமிழ்நாட்டு ஜனங்க அவன் நெட்வொர்க்க தான் அதிகமா யூஸ் பண்றான். தெரியுமா உங்களுக்கு? உங்க ஜனங்க விரும்பாத ஒன்றை அவங்கமேல் நீங்க திணிக்கறதுக்குப் பேர்தான் ஜனநாயகமா? இந்த ஒரு கேள்விக்கு மட்டும் நீங்க பதில் சொன்னாக்கூட போதும். உங்க ஜனங்க விரும்பாத ஒன்றை அவங்கமேல் நீங்க திணிக்கறதுக்குப் பேர்தான் ஜனநாயகமா?
ஆமா, புத்த பிக்குகளை அடிக்குறத தமிழ்நாட்டு ஜனங்க வேண்டி விரும்பி சீமான்கிட்ட கேட்டுகிட்டதால தான் அவரு கம்பிய புடிச்சு தொங்கிகிட்டே இந்த கதறு கதறுதாரு.. இதக்கூட தெரிஞ்சுக்காம இருக்கீங்களே..
இது சாதாரண சப்பைகட்டு இல்லை ராசா.. இது சப்பி போட்ட மாங்கா கொட்டை 🙂
உண்மைதான் பாஸு. மறுக்கல. என்னைப் பொறுத்தவரைக்கும் அது தவறுதான். சீமானுமே அந்தப் பேட்டில அதான் சொல்லிருக்காரு. எதுக்கெடுத்தாலும் நீ போராடலையா போராட்டம் பண்ணலையான்னு என்கிட்டயே வந்து நிக்கிறீங்க. அதை அதைப் பார்த்து முடிவெடுத்துதான் செய்யணும். முன்ன மாதிரி படார் படானு செய்ய முடியாது.
பிக்குகளை அடிச்சது தவறுதான். எங்களை இப்போ சரிப்படுத்திக்கிட்டோம். ராஜபக்சே இப்பக்கூட வந்துட்டுதான் போனான். நாங்க எதுவுமே செய்யலியே. மக்கள் விரும்புறததான் நாங்க செய்வோம்.
//ராஜபக்சே இப்பக்கூட வந்துட்டுதான் போனான். நாங்க எதுவுமே செய்யலியே. மக்கள் விரும்புறததான் நாங்க செய்வோம்.//
கெரகம்! ஆக்கங்கெட்ட கூவ கூட இப்படி பேச மாட்டான். நீரு நெசமாலுமே சீமானுக்கு தம்பிதானா, ஏன்யா இப்படி கூட இருந்தே கால வாருதீரு?
ராஜபக்சே வர்ரதை எதிர்த்து போராடுவதும், புத்த பிக்குகளை அடிக்குறதும் ஒன்னா?
நீங்க சொல்றத பாத்தா ராஜபக்சே வர்ரதை மக்கள் விரும்புறாங்க போலிருக்கே? அதையும் மக்கள் வந்து உங்க அண்ணன் சீமானோட காதுல சொல்லிட்டு போனாங்களா?
பல பிற்போக்குத்தனங்களை மக்கள் விரும்பித்தான் செஞ்சுகிட்டு இருக்காங்க, அதனால அதை எதிர்க்க மாட்டீங்களா?
ஆதிக்க சாதி வெறியர்கள் விரும்பித்தான் சாதி ஒடுக்குமுறையை தொடுக்கிறார்கள், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். அதனால இதையெல்லாம் எதிர்க்க மாட்டீங்களா?
ஆமா, யார் யாரெல்லாம் உங்க மக்கள் லிஸ்டுல வருவாங்க, யாரெல்லாம் வரமாட்டாங்க?
[…] நன்றி வினவு […]
அண்ணர் சீமாரின் தம்ப்ரீ கருத்தா பேசுவது எப்படி என்று வியாசரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் கருத்தாக பொத்திக் கொண்டிருப்பது எப்படி என்று பழ நெடுமரத்திடமிருந்தோ வைக்கோவிடமிருந்தோ கற்றுக் கொள்ள வேண்டும்.
இப்படி உங்கள் ஸ்டெம்பை நீங்களே உங்க பேட்டால டிச்சு பண்ணி அவுட் ஆக கூடாது. அப்படி ஆன பின்னாடி, 360 டிகிரி கோணத்திலிருந்தும் பந்து வீசி அவுட் ஆக்கிட்டானுவோன்னு வெட்டி சீன் போடக் கூடாது.
#தம்ப்ரீ.. ரீலு அந்து போச்சிப்பா
இதுதான் நீரு கருத்தா பேசுற லட்சணமா. நான் ஒன்னு சொன்னா அதுக்கு பதில் சொல்லத் தெரியணும். இப்படி கிரிக்கெட்டு கிலாஸ் எடுக்ககூடாது.
தமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் தேனும், பாலும் பாய்ந்து ஓடும்!!!
http://ndpfront.tamilcircle.net/index.php/162-news/2014/august/2575-2014-08-19-12-00-15
தேசபக்தி என்பது அயோக்கியர்களினது கடைசிப் புகலிடம் என்று சாமுவேல் ஜோன்சன் ஆயிரத்து எழுநூறுகளில் சொன்னார். சீமான் போன்ற தேசவெறி, இனவெறி யோக்கியர்கள் அதை இன்று வரை நிரூபித்து காட்டுகிறார்கள்.
கிட்லர், முசோலினி, சேர்ச்சில், மார்க்கிரட் தட்ச்சர், ஜோர்ஜ் புஷ், ரொனி பிளேயர், மகிந்த ராஜபக்சா, நரேந்திர மோடி என்று அத்தனை உலகமகா அயோக்கியர்களும் தேசபக்தி வேசம் கட்டிய அயோக்கியர்கள் தான். தமது சொந்தநாட்டு மக்களையே கொல்வதற்கும், நாட்டின் வளங்களை கொள்ளை அடிப்பதற்கும் கொஞ்சம் கூட தயங்காதவர்கள் இவர்கள். இந்த அயோக்கியர்கள் மற்ற நாடுகளின் ஆட்சியாளர்களுடனும், முதலாளிகளுடனும் கூடிக்குலாவுவார்கள். ஆனால் நாடு, இனம், மொழி, மதம், சாதி என்று வீரவசனம் பேசி ஏழைமக்களை பிரித்து ஒருவரோடு ஒருவரை மோத வைப்பார்கள்.
சீமான் போன்றவர்கள் பேசும் தமிழின வெறி அரசியல் எவ்வளவு பொய்யானது, ஆபத்தானது என்று எடுத்துக் காட்டுவதற்கு வேறெங்கும் போகத் தேவையில்லை. இலங்கைத் தமிழ்மக்களின் அவலம் நிறைந்த வாழ்க்கை வாழும் சாட்சியமாக இருக்கிறது. கரிய இரவுகள் நீண்டு கொண்டே போகின்றன. பாதி இரவில் எழுந்து மண்ணில் புதைந்து போன மனிதர்களை தேடுகிறார்கள். வானம் கிழிந்து பெய்த குண்டுமழையின் எதிரொலிகள் இன்னும் கேட்டுக் கொண்டு தான் இருக்கின்றன. ஒரு சிறுபான்மை இனம் தன்னுடைய பலம் பொருந்திய எதிரிக்கு எதிராக போராடும் போது தன்னைப் போலவே ஒடுக்கப்படுகின்ற எல்லா மக்களையும் இணைத்து கொண்டு போராடாமல் விட்டால் தனிமைப்பட்டு தோல்வி அடைவார்கள் என்பதற்கு சாட்சியமாக இலங்கைத் தமிழ்மக்களின் கண்ணீரும், செந்நீரும் கரையாமல் இருக்கின்றன. நான் தமிழன், நீ சிங்களவன், முஸ்லீம் என்று பிரிந்தது சிங்கள பெருந்தேசியவாதிகளின் கொலைக்களங்களிற்கு தமிழ்மக்களை இழுத்துச் சென்று பலியிட வைத்தது என்பதற்கு வன்னி மண்ணில் மடிந்த மக்களின் புதைகுழிகள் சாட்சியமாக இருக்கின்றன.
வாழ்க!!, ஒழிக!! தமிழனை தமிழன் ஆண்டால் கூவத்தில் பாலும், தேனும் பாய்ந்து ஓடும் போன்ற வெற்றுவேட்டுக்கள் தான் இவர்களது மூலதனம். இதை வைத்துக் கொண்டு அப்பாவி இளைஞர்களினதும், மாணவர்களினதும் மனதில் நஞ்சை விதைக்கிறார்கள். இவர்களது வெறிப்பேச்சால் தூண்டப்பட்டவர்கள் தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்த சிங்களக் குடும்பத்தினரை தாக்கினார்கள். தமிழக கோயில்களை பார்க்க வந்த புத்தபிக்குவை தாக்கினார்கள். தமிழ்நாட்டு கடல் தொழிலாளரை இலங்கை சிங்கள பெருந்தேசிய அரசின் கடற்படை தாக்குவது குறித்து அண்ணன் விட்ட அறிவுபூர்வமான அறிக்கை கூறுகிறது “இலங்கை கடல்படை தமிழக கடல்தொழிலாளர்களை தாக்கினால் நாங்கள் (நாம் தமிழர் கட்சி) தமிழ்நாட்டில் படிக்கும் சிங்கள மாணவர்களை தாக்குவோம்”.
“ஆகா” என்ன ஒரு அறிவு, என்ன ஒரு வீரம். தனது குடிமக்களான தமிழ்நாட்டு கடல்தொழிலாளரை பாதுகாக்க தவறிய இந்திய அரசை அவர் தாக்க மாட்டார். “இலை மலர்ந்தால் ஈழம் மலரும்” என்று அவர் ஒரு பஞ்ச் டயலாக் ஊழல்நாயகி ஜெயலலிதாவை வைத்து எழுதியிருந்தார். அப்படி ஈழத்தையே மலர வைக்கக் கூடிய வல்லமை கொண்ட அம்மா தனது மாநிலத்து ஏழைத்தொழிலாளிகள் கொல்லப்படுவது குறித்து எதுவுமே செய்யாமல் இருக்கிறார் என்பதை எதிர்த்து செந்தமிழன் போராட மாட்டார். அம்மாவை எதிர்த்து போராடுவது என்ன ஒரு கேள்வி கூட கேட்கமாட்டார். ஆனால் படிக்க வந்த சிங்கள மாணவர்களை தாக்கி இலங்கை அரசை பயப்படுத்தி கடல்தொழிலாளர்களின் பிரச்சனைகளை தீர்த்து விடுவார் “வீழ்ந்து விடாத வீரன்” சீமான்.
படிக்க வந்த சிங்கள மாணவர்கள் எதிரிகள். ஆனால் “புலிப்பார்வை” படம் எடுத்த பச்சைமுத்து பங்காளி. யார் இந்த பச்சைமுத்து?. பல லட்சம் கட்டணம் வசூலித்து கல்விக்கொள்ளை அடிக்கும் ஸ்.ற்.M பல்கலைக்கழக உரிமையாளர். “புதிய தலைமுறை” தொலைக்காட்சி உரிமையாளர். இந்திய ஜனநாயக கட்சி என்ற கட்சியின் தலைவர். இந்தக் கட்சி இந்துவெறி பாரதிய ஜனதா கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறது. தமிழ்நாட்டிலே கல்விக்கொள்ளை அடிக்கும் இந்த ஸ்.ற்.M நிறுவனம், இப்போது இலங்கையில் ஸ்.ற்.M ளாண்Kஆ என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. ஸ்.ற்.M பல்கலைக்கழக துணைவேந்தர் பொன்னவைக்கோ இலங்கை சென்று மகிந்தாவின் மந்திரி ரிசான் பதியுதீன் தலைமையில் தங்களது கிளை நிறுவனத்தை தொடங்கி வைத்திருக்கிறார்.
இலங்கையிலே இலவசக்கல்வி என்பது அடிப்படை உரிமை. அதை தனியார்மயமாக்கி கொள்ளையடிக்க இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சா போடும் திட்டங்களின் பங்குதாரர் பச்சைமுத்துவுடன் சேர்ந்து ஒரேமேடையில் ஏற மண்டியிடாத மானக்காரன் சீமானிற்கு எப்படி மனச்சாட்சி இடம் கொடுத்தது?. பாலச்சந்திரனிற்கு இராணுவச்சீருடை அணிவித்து பரபரப்பூட்டி படம் எடுத்து பணம் சம்பாதிக்க நினைப்பவர்களிற்கு பரிந்து பேச எப்படி முடிகிறது?. மாணவர்களை “நாம்தமிழர்” அமைப்பினர் தாக்கவில்லை என்று அறிக்கை விடுகிறார்கள். அதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். தமிழ்மக்களிற்காகவே அவதாரம் எடுத்தவர், தமிழ்மாணவர்கள் தன் கண்முன்னாலேயே பச்சைமுத்துவின் காடையர்களினால் தாக்கப்படும் போது கைகட்டி மெளனமாக இருந்தது ஏதற்காக?
பன்னிரண்டு வயது பச்சைக்குழந்தை பாலச்சந்திரனின் கொலையை சுப்பிரமணியசுவாமி என்னும் பார்ப்பனப்பன்றி தனது ஊத்தைவாயால், பார்ப்பனத்திமிரில் இந்திய மேலாதிக்க வெறியில், ஏகாதிபத்திய விசுவாசத்தில், சிங்கள பேரினவாத கொலைகாரர்களை காப்பாற்றுவதற்காக நியாயப்படுத்தியது. பாலச்சந்திரனை இந்த பார்ப்பன பரதேசி தீவிரவாதி என்றது. பக்கத்தில் மரணம் காத்திருக்க எந்த ஒரு குழந்தையையும் போல அந்த நேரத்திலும் கையில் இருந்த தின்பண்டத்தை வாயில் வைத்து மெல்லும் அந்த குழந்தையை, குண்டுவிழிகளால் மிரண்டு போய் விழிக்கும் சின்னவனை தீவிரவாதி என்று இந்த இரத்தம் குடிக்கும் காட்டேரி சொன்னது. சுப்பிரமணிய சுவாமிக்கும் பாலச்சந்திரனிற்கு இராணுவச்சீருடை அணிவித்து படம் எடுக்கும் பச்சைமுத்துவிற்கும் என்ன வித்தியாசம் என்று ஒரு காரணத்தையாவது இவரால் சொல்ல முடியுமா?.
இனவாதிகள் என்றைக்கும் அதிகாரத்துடனும், முதலாளிகளுடனும் சேர்ந்தே நிற்பார்கள். ஜெயலலிதா, பச்சைமுத்து, அரசியல்மாமா நடராசன், கனிமக் கொள்ளையன் வைகுந்தராசன், லைக்கா, லிபரா போன்ற கொள்ளைத்தமிழர்கள் தான் இவர்களைப் போன்ற இனவாதிகளின் நண்பர்களாக இருக்க முடியும். அப்படித்தான் இருக்கிறார்கள். அவர்கள் தமது இலாபத்திற்காக நரேந்திரமோடி, ராஜபக்சா என்று கூட்டுச் சேரும் போது இவர்களும் அதை ஆதரித்து தானே தீர வேண்டும்.
அதோ வருகுது தமிழீழம், அடுத்த பொங்கலிற்கு தமிழீழம் நாம் பெற்றுத் தருவோம் என்று மக்களை போராட்டத்திலிருந்து அன்னியமாக்கினார்கள். மக்களை நம்பாமல் ஆயுதத்தை நம்பினார்கள். வல்லரசுகள் உதவி செய்யும் என்று சொன்னார்கள். இடிபாடுகளிற்குள் முடங்கிப் போனது எம்வாழ்க்கை. இனவாதத்தால் தோல்வி கண்ட எமது போராட்டத்திலிருந்து எதுவித படிப்பினைகளையும் பெற்றுக்கொள்ளாமல் இவர் போன்றவர்கள் அடுத்த அத்தியாயத்தை தொடருகிறார்கள். அடுத்த தமிழ்நாட்டு சட்டசபைத்தேர்தலின் போது ஒரு தமிழன் தமிழ்நாட்டை ஆண்டால் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விடுமாம். அந்த தமிழன் சீமான் தான் என்று தனியே எடுத்து சொல்லத் தேவையில்லை. தமிழ்நாட்டு முதலமைச்சர்களால் தெருவிலேயே பிறந்து வாழும் தமிழர்களிற்கே எதுவிதமான தீர்வையும் கொடுக்க முடியாது என்பது தான் கண் முன்னே உள்ள உண்மை. இந்திய வல்லரசை எதிர்த்து போராட வேண்டுமாயின் ஏழை உழைக்கும் மக்களின் இயக்கம் ஒன்றினாலேயே அது சாத்தியப்படும். பச்சைமுத்துக்களின் பங்காளிகளால் அது ஒரு நாளும் முடியாது.
பிரபாகரன் குடித்த தமிழ் மக்களின் இரத்தவாடை, எவ்வளவு கழுவி, கழுவி ஊத்தினாலும் அவ்வளவு எளிதில் போகாது. செத்தும் கெடுத்தான் பிரபாகரன் என்பதை நிரூபிக்காமல் விடமாட்டார்கள் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு உளறுவாய் மற்றும் ஊத்தவாய் நாய்கள்.
ஏண்________! ஈழ ஆதரவு என்பதும் புலி ஆதரவு என்பதும் ஒன்றல்ல டாக்.ஈழ மக்களின் ரத்தத்தில் பூணூல்களின் பங்களிப்பு எவ்வளவு?.
ஈழத்து எழுத்தாளர் திரு தமிழ்க்கவி அம்மா அவர்களுடன் மின்னஞ்சலில் ஒரு நேர்காணல்.
குறிப்பு :திரு தமிழ்க்கவி அம்மா அவர்கள் வன்னி நிலத்து மக்களுடன் ஒன்றாய் வாழ்ந்து அவர்களின் பேரழிவை [2007–09] தன் ஊழிக்காலம் புதினம் மூலம் ஆவனப்படுத்தியவர்.
[1]பெண்ணியம் சார் கேள்வி இது. உலக குழந்தைகளை எல்லாம் வயிற்றில் சுமக்கும் பெண்கள் , இனபோர்,வர்க்க போர் என்று அக் குழந்தைகளை கொள்கைகளுக்காக பலி கொடுக்கும் போது அதற்கு எதிராக பெண்கள் குரல் கொடுக்க வேண்டுமா/வேண்டாமா ?
கொள்கை இல்லாத மனிதன் விலங்குதானே.தனது கொள்கைக்கு உயிர் எடுப்பதும் உயிர் விடுவதும்தானே உலகம் முழுதும் நடந்து வருகிறது.
https://www.facebook.com/thamayanthy.ks
//பிரபாகரன் குடித்த தமிழ் மக்களின் இரத்தவாடை, எவ்வளவு கழுவி, கழுவி ஊத்தினாலும் அவ்வளவு எளிதில் போகாது. செத்தும் கெடுத்தான் பிரபாகரன் என்பதை நிரூபிக்காமல் விடமாட்டார்கள் தமிழ்நாட்டில் உள்ள ஈழ ஆதரவு உளறுவாய் மற்றும் ஊத்தவாய் நாய்கள்.//
அண்ணாச்சி!
கவுண்டமணி பாஷையில் உங்களை சொல்வதாக இருந்தால்….
நல்லவர்..வல்லவர்..பென்ட் எடுக்க தெரிந்தவர்.
எதற்கும் முதலிலை “டுப்பை” மாத்துங்கா!.
காலவரைக்கும் எத்தனை வேஷம் தான் போடுவீங்க!.
Mr mao , உங்கள் கருத்துகள் :
ஆந்திரகாரனனையும் கன்னடகாரனையும் கேரளகாரனையும் பகைத்து கொண்டு தமிழன் வாழ்ந்து விட முடியுமா? சிங்களபகுதிகளில் சிலமாற்றங்கள் தென்பட்டாலும் தமிழ்பகுதிகயில் (வடபகுதி) அதே பல்லவிதான். இலங்கையில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகளை (பலசிரமங்களுக்குமத்தியிலும்) அமெரிக்கா ஐரோப்பா ஆபிரிக்கா இந்தியா என ஓடித்திரிகிறார்கள். மேலும் பார்ப்பனியத்தை உயர்திப்பிடித்தல், சம்ஸ்கிருதத்துக்கு ஆராதனை,அரை குறை தமிழில் எழுதுவது, போலித்தனமாக மார்ச்சியம் பேசுவது………..
இவை அனைத்தும் உங்களை யார் என்று வினவு தளத்தை படிப்போர்க்கு காட்டுகின்றது. நன்றி
யக்கா டயானா உங்க வீட்டுக்காரர் நல்லா இருக்காரா முதல்ல அவர கவனிங்க அப்புறமா அரசியல் பேசலாம் அக்கா …………
திரு ப்.ஜொசெப்க்,
ஒரு நாளில் இருக்கும் 24 மணி நேரத்தில் 6 மணிநேரம் உறங்க 4 மணி நேரம் வீட்டு வேலைகளை முடிக்க என்று செலவானாலும் மீதி 14 மணி நேரம் UGC-NET தேர்வுக்கும் அரசியலும் படிக்க ,சிந்திக்க ,விவாதிக்க என்று எனக்கு கிடைக்கும் போது அதில் 1 மணி நேரத்தை வினவில் வாசிக்க,விவாதிக்க என்று செலவு செய்வது ஒன்றும் தவறு இல்லை அல்லவா ? வேலையில்லா பட்டதாரினியாகிய நான் கூடிய விரைவில் நான் வேலையில் சேர்ந்தாலும் அதற்கு 10 மணி நேரம் செலவு ஆனாலும் மீதி 4 மணி நேரமுள்ளதை …! கூடிய விரைவில் வேலை பெற்ற உடன் முற்போக்கு சக்திகளுடனிணைந்து மக்கள் பணியாற்றுவது என்பதே என் விருப்பம்.
Correction: திரு p.joseph,
யக்கா டயானா நான் உங்க புருசன் எப்பிடி இருக்காருனாதான் கேட்டேன் அதுக்கு இவ்வளவு பெரிய விளக்கமா அய்யோ அய்யோ புருசன் சம்பாதிக்கும் போது உங்களுக்கும் ஏன் வேலைக்கு போகனும்னு ஆசை புள்ளைகள பாத்து கவனிச்சு படிக்க வச்சு பெரிய ஆள் ஆக்குங்க …..
Mr. P.Joseph Thanks for your free Advice.
வீட்டுக்கு குலவிளக்கு! நாட்டுக்கு எதிர்கால ஒளிவிளக்கு!!
வினவுக்கு…..?
சரவணன் அண்ணாவை கண்டால் கேட்டதாக சொல்லவும் அக்கா.
Mr Mao, திரு Univerbuddy யின் பின்னுட்டம் கூறும் வருத்தமான செய்தி என்னவென்றால் திரு சரவணன் அவர்கள் அமரர் ஆகிவிட்டார். ஆகவே உங்கள் அண்ணன் சரவணனை நான் காணவும் முடியாது ,எனவே அவரிடம் நான் நலம் விசாரிக்கவும் முடியாது!
//திரு சரவணன் அவர்கள் அமரர் ஆகிவிட்டார்.//
இது எல்லாம் பகிடி அல்ல. உண்மையிலேயே நீங்கள் தான் சரவணனாக இருந்தாலும் கூட, அப்படிச் சொல்லக் கூடாதாம். வார்த்தைகளுக்கு சக்தியுண்டு. அதிலும் தமிழ்வார்த்தைகள் தெய்வத்தன்மை வாய்ந்தவை. தேவையில்லாமல், மற்றவர்களை திட்டுவதோ அல்லது ஜோக்குக்காகக் கூட இறந்து விட்டார் என்பதோ கூடாதாம். எங்களின் அம்மம்மா சின்ன வயதில கூறிய அறிவுரை, இவ்வளவு காலத்துக்குப் பின்பு இப்ப தான் உதவுது. 🙂
Mr Mao தங்களுக்கு உள்ள உலக அறிவுக்கு இப்படி குலவிளக்கு! ஒளிவிளக்கு! என்று எல்லாம் அ இ அ தி மு க அடிமைகள் மாதிரி பேசலாமா ? நாம் விவாதித்த விடயங்களை விட்டு விலகி ஓடாமல் அவற்றை தொடர்ந்து விவாதித்து தங்களின் அறிவாற்றலால் என்னை வெல்லலாமே !
என்னக்கா! நான் செய்ய?.
தெரிந்த மாக்ஸியத்தை கதைத்தால் நீங்கள் மனோதத்துவம் கதைக்கிறீர்கள்.
கணிதம் ஒரு சூத்திரம் என்று நான் சொன்னால் அதற்கு முன்னால் வறட்டு என்று சொல்லை சேர்த்து கணிதத்தை வறட்டுசூத்திரம என்று மாவோ சொல்லுகிறார் என எல்லோரையும் முட்டாள் ஆக்கிறீர்கள்.
உங்களை நீங்களே கம்யூனிஸ்ட் என்று சொல்லிக் கொண்டு செந்தமிழ்சீமானைவிட கூடுதலான நடிப்பு திறனை காட்டுகிறீர்கள்.
இப்படி தூரயிருந்து குலவிளக்கு மாயவிளக்கு அலாவூதீன் விளக்கு என்று சொல்விட்டு தப்பி ஓடுவதைவிட எனக்கு வேறு வழியில்லை. இருந்தாலும்…..
கட்டப்பொம்மன் திரைப்படம் பார்த்துதான் பலபேருக்கு தமிழ்யுணர்வு வந்தது. இதே போல ஒரு உணர்வை ஈழத்தில் உள்நாட்டுயுத்தம் தொடங்குவதற்கு முன் காசிஆனந்தன் என்பவர் ஏற்படுத்தியிருந்தார். அவருக்கு பட்டப்பெயரே “உணர்ச்சிக் கவிஞர்காசி ஆனந்தன்”.
அதில் இருவரிகள் மட்டும் என் ஞாபகத்தில்.
“உயிர் தமிழுக்கு உடல் மண்ணுக்கு”
” தாயை பழித்தவனையும் தமிழைப் பழித்தவனையும் விடேன்”
எப்படியிருக்கு? முப்பதுவருட யுத்தம் லட்கணக்கான உயிர்களையும் இன்னல்களையும் காவு கொடுத்து முடிவடைந்து விட்டது.
ஆனால் காசி என்ற ஆசாமி இன்றும் தமிழ்நாட்டில் இருந்து சோறு தின்றுகொண்டிருக்கிறார்.
இதுதான் நாம் நடிகன் கவிஞன் இடமிருந்து கற்றுக்கொண்ட பாடம்.
எல்லாம் மொழிகளுக்கும் ஒருமொழி அந்தஸ்து இருக்கிறது.
தகுதியிறபோது வாழும் தகுதியில்லாத போது அழிந்த போகும்.
என்மொழி இம்புட்டு பெரிசு என நாடவைத்து அளந்து காட்டி மற்றையை மொழிகளை உங்களையும் அறியாமல் இழிவு படுத்தாதீர்கள்.
இதுவும் பாட்டாளிகளின் வர்க்கயுணர்வை மழுங்கடிக்கிற ஒரு யுக்தியே!.
Joseph,
//முதல்ல அவர கவனிங்க அப்புறமா அரசியல் பேசலாம்//
இந்த பின்னூட்டத்தைக் கண்டிக்கிறேன். இது ஆணாதிக்க ஆணவம்.
திரு Univerbuddy ,
“இன்ஜினியரிங் கல்லூரி தலித் மாணவிகள் – புள்ளிவிவர மயக்கம்” https://www.vinavu.com/2014/08/11/big-jump-in-dalit-girls-entering-tn-engineering-colleges/ என்ற பழைய விவாதத்தில் ஓடிப்போன மனிதர்களை எல்லாம் தயவு செய்து முழுவதும் பேசவிடுங்க…. முழுவது பேசி முடித்த உடன் அவர்கள் தவறுகளை எல்லாம் ஒவொன்றாக சுட்டி காட்டுவோம். அவசர படாதிங்க sir .
டயானா அக்கா நீங்க சொர்னா அக்காவா மாறிடாதிங்க என்னய மன்னிச்சிடுங்க அக்கா எனக்கு எதுவும் தெரியாது நான் அப்பாவி எனக்கு எதுவும் தெரியாது உங்க தம்பி திப்பு எப்பிடி இருக்கார நான் கேட்டதாக சொல்லுங்கள்
நடத்துங்க M.Tech or M .E பொறியாளர் திரு ஜோசப் உங்க கச்சேரியே !
“சொர்னா அக்கா” என்று இந்த லூஸ் டாக் விட்டு எல்லாம் என்னை வினவு விவாதத்தில் இருந்து துரத்த முடியாது திரு ஜோசப். முதலில் “அக்கா…. புருசனை பாத்துக்க” என்று சொல்லி துரத்த பாத்திங்க;அப்புரம் சொர்னா அக்கா என்று கூறி துரத்த பார்கின்றிர்கள்! இது எல்லாம் நம்மிடம் செல்லுபடியாகாதுங்க.இனிமே முடிந்தா விவாதத்தை “நல்ல கருத்துடன்” தொடருங்க இல்லை இப்படியே கிண்டல் செய்வதாக; மொக்கை போடுவேன் என்று கூறினிர்கள் என்றால் …… அதற்கான என் பதிலையும் பார்க்காமலா போயிடபோறிங்க!
நடத்துங்க M.Tech or M .E பொறியாளர் திரு ஜோசப் உங்க கச்சேரியே !
சிங்களமக்களுக்கு மேல் எவ்வளவு வசை பாடமுடிமோ அதேபோல தமிழ்மக்களுக்கு மேல் எவ்வளவு வசை பாடமுடியுமோ அந்த அளவுக்கு தான் இலங்கையின் அரசியல் ஐம்பது வருடங்களுக்கு மேலாக இருந்தது.இருக்கிறது.
இந்த வசைமழையில் வெற்றி பெற்றவர்களே பாராளமன்ற ஆசனத்தை பெற்றார்கள். அனாதை அரசியலை எதிர் கொண்ட மக்கள் சந்தித்தது வெறும் இனக்கலவரங்களை தான்.
சிங்களபகுதிகளில் சிலமாற்றங்கள் தென்பட்டாலும் தமிழ்பகுதிகயில் (வடபகுதி) அதே பல்லவிதான். இலங்கையில் தீர்க்கவேண்டிய பிரச்சனைகளை (பலசிரமங்களுக்குமத்தியிலும்)
அமெரிக்கா ஐரோப்பா ஆபிரிக்கா இந்தியா என ஓடித்திரிகிறார்கள்.
இதுவே இவர்களின் போலித்தனமான நகைப்புக்கிடமான அரசியலுக்கு அடையாளம்.
பிரபாகரன் தமிழ்மக்களை மட்டும் வதைசெய்யவில்லை.எல்லை ஓரம் சிங்களகிராமத்திற்குள் புகுந்து குழந்தைகள் முதியவர்களான ஏழைவிவசாயிகளை வெட்டியும் சுட்டும் கொன்றான். இவர்களே சீமான் சொல்லுகிற வீரப்புலிகள்-அண்ணன் பிரபாகரன்.
திரு கோபாலகரி நீங்கள் சொல்லுகிற மாதிரி தமிழ்நாட்டில் ஈழத்துப்புலிகள் இல்லை.ஈழத்து அகதிகள் தான் இருக்கிறார்கள். அவர்கள் பலவருடங்களாக வாழ்வுக்காக ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.சமீபத்திலும் ஈழத்துமாணவி தகுதியிருந்தும் மருத்துவபடிப்புக்கு அனுமதிக்க படவில்லை என அறிந்திருப்பீர்கள்..இப்படித்தான் போய் கொண்டிருக்கிறது ஈழத்தவரின் வாழ்க்கை இந்தியாவில்.
ஆனால் அன்றும் இன்றும் தமிழ்நாட்டில் ஈழத்துஅரசியல் வியாபாரம் ஆகிக்கொண்டிருக்கிறது.சிங்கள உல்லாசபயணிகளை மதகுமாரை ஒரு தரமான சிங்களப்படத்தைக் கூட வெளிவர முடியாதவாறு அடிக்கிறார்கள் அட்டகாஷம் செய்கிறார்கள் அவமதிக்கிறார்கள்.
இதற்கும் ஒரு காரணம் இருக்கிறது.கனடா ஐரோப்பாவில் உள்ள மாஜிபுலிகளின் பணம் இந்த கூத்தாடிகளுக்கு வந்து சேருவது தான்.
மாஜிபுலிகளுக்கு இலங்கையில் பிரச்சனை உருவாக வேண்டும்.தமிழ்நாட்டு கூத்தாடிகளுக்கு காசும்! காசாச்சு!! அரசியலும் அரசியல் ஆச்சு.இதைத் தான்நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கும் ஒரு சிங்களவர்களின் ‘சொம்புதூக்கி’ நைசாக வேலையைக் கொண்டு போகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. செத்துப்போன பிரபாகரனை மட்டும் நினைத்து ஒப்பாரி வைக்கும் இவர் இலங்கை ராணுவம் செய்த/செய்கிற அட்டூழியங்களையும், கொலைகளையும் பற்றி பேச மறுக்கிறார் அல்லது ஒரு போதும் பேசியதை நான் காணவில்லை, அது தான் ஒரே மர்மமாக இருக்கிறது. யாழ்ப்பாணத்திலும், வன்னியிலும் தமிழ்ப்பெண்கள் மட்டுமல்ல, தமிழ்க் குழந்தைகள் கூட இலங்கை ராணுவத்தின் பாலியல் வெறிக்கு இரையாகிக் கொண்டிருக்கும் போது, ஏழை பாழைத்தமிழர்களிடம் இருந்த சின்னஞ்சிறு துண்டு நிலங்களையும் இலங்கை ராணுவம் பிடித்து வைத்துக் கொண்டு, சுற்றுலா விடுதிகள் நடத்துகின்றனர்.
ஆனால் இந்த முற்போக்கு, ‘கம்யூனிஸ்ட்’ வர்க்கப் போராளி அவற்றை எல்லாம் ஒருபோதும் பேசாமல், செத்துச் சிவலோகம் போய்விட்ட புலிகளையும், சாகிறதுக்கு முன்னால், வயசு போன காலத்திலாவது ஊருக்குப் போய், மட்டக்களப்பு வயல் வெளியில காலாற நடந்து எப்படா தேங்காய்ப்பூ புட்டும், பொரிச்ச இறாலும் தின்னுவேன் என்ற தனது ஏக்கத்தை மறைத்துக் கொண்டு, தமிழ்நாட்டான்களின், நாயும் தின்னாத புளிச்சமாவை விட்டால், வேற வழியில்லாமல் கிடக்கிற காசி ஆனந்தனையும் பார்த்து கரித்துக் கொட்டுவதைப் பார்க்க சிரிப்பை அடக்க முடியவில்லை. அதுக்கிடையில மாவோ, லெனின், சேகுவேரா என்ற மாதிரியான பெயர்கள் வேறு. இவரைப் போன்றவர்களுக்கெல்லாம் கம்யூனிசம், வர்க்கம் எல்லாம் இவர்களின் சிங்கள ஆதரவு, ஈழத்தமிழர் எதிர்ப்பு பிரச்சாரத்துக்கு கவசம் மாதிரி. இவர்கள் மற்றவர்களைப் பேய்க்காட்டுவதாக நினைத்துக் கொண்டு தங்களைத் தாமே ஏமாற்றிக் கொள்கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது. 🙂
திரு சக்திவேல் உங்கள் எழுத்துக்கள் சக்திவாய்தவை என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை.
இருந்தாலும் சிலநிலமைகளை சீர்தூக்கி பார்க்க வேண்டிய தேவை நமக்குள்ளது.
நான் இலங்கையன். ராஜயபக்சாவை அதிஉச்சியில் ஏற்றி வைத்தவர்கள் புலம்பெயர்ந்த தமிழ்மக்களில் தோன்றிய கழிசடை கூட்டமான புலிககளே!
புலிகள் செய்த அடாவடித்தனத்திலும் பார்த்து மகிந்த ராஜபக்சா செய்த வேலை முதாலிளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதற்கு உதவிக்கொண்டிருக்கிறது.
ஆந்திரகாரனனையும் கன்னடகாரனையும் கேரளகாரனையும் பகைத்து கொண்டு தமிழன் வாழ்ந்து விட முடியுமா?
இங்குதான் தத்துவார்த்தனகுரிய போராட்டம் ஆரம்பம் ஆரம்பிக்கிறது.
Mr Mao,
என்ன ஒரு ___________ கேள்வி இது???????????
தமிழர்களே இப்போது கழிசடை சினிமா, கவர்ச்சி அரசியல் என்று மதிமயங்கி இருக்கும் போது அவர்களை நோக்கி ஏறியபடும் இக் கேள்வி சிறிதும் பொருத்தம் இல்லாமலும், உள் நோக்கத்துடனும் உள்ளது.தன் சுயத்தை பற்றி சிறிதும் சிந்திக்காத நம் தமிழ் சமுகம், ஏதோ மற்ற மொழி பேசும் மக்களுடன் மல்லுக்கு நிற்பதை போன்ற தோற்றத்தை எழுப்பும் mr mao வின் இக் கேள்வி எதை நோக்கி நம் தமிழ் சமுகம் செலுத்தும் என்றால் குறைந்தபட்ச உரிமைகளான முல்லை பெரியாறு, காவேரி நதிநீர் ஆகிய விடயங்களிலும் விட்டு கொடுத்து தமிழர் உரிமையற்று, உணர்வற்று இருக்க வேண்டும் என்றல்லவா இருக்கச்செய்யும்?
______
அண்ணன் சீமான் என்னடாவென்றால் நடிகர் விஜய் ஒரு ‘தமிழ்ப்பிள்ளை’ என்று அடிக்கடி சொல்கிறார். ஆனால் ஒரு சிலர் விஜய்யின் அம்மா ஒரு மலையாளி என்கிறார்கள் (அவரது தந்தையார் கூட தெலுங்கு கலப்புள்ளவராம்). ஒரு மலையாளிப்பெண்ணின் வயிற்றில் பிறந்த ஓருவர் எப்படித் தமிழனாக முடியும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை, யாராவது புரிந்தவர்கள் விளக்குங்களேன். 🙂
இந்த விவாதம் சரியில்லை வியாசன் அவர்களே. பிறப்பின் வழி தமிழர் என்பதை விட உணர்வின் படி தமிழர் என்று தான் நாம் பார்க்க வேண்டும். தமிழ் தந்தை, தமிழ் தாய் மூலம் பிறந்ததால் மட்டும் போதாது. உண்மையான தமிழ் உணர்வு இருக்க வேண்டும்.
சீமானின் போக்கில் நீங்களும் போக வேண்டாம்.
உணர்வால் தமிழராவோம்.
@கற்றது கையளவு,
உங்களின் கருத்துக்கு நன்றி. என்னைப்பொறுத்த வரையில் உணர்வின் படி தமிழர் என்பது வெறும் பம்மாத்து. அதை நம்பியதால் தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் தமது சொந்த மண்ணிலேயே ஆட்சியும், அதிகாரமும் இல்லாமல் இருக்கிறார்கள். அந்த இழிச்ச வாய்த்தனத்தை மறைக்க அவர்கள் கண்டுபிடித்த அடைமொழி தான் “வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு”.
உண்மையில் தமிழ் என்ற அடையாளத்தை தவிர வேறு மொழி, இன அடையாளங்கள் உள்ளவர்கள் தமிழ்நாட்டுக்கோ, தமிழுக்கோ அல்லது தமிழர்களுக்கோ முழுமையாக விசுவாசமுள்ளவர்களாக நடக்க முடியாது என்பதை நாங்கள் அனுபவத்தில் காணலாம். அப்படியான ‘Divided Loyalty’ உள்ளவர்களை தமிழ்நாடு போன்ற, பல பிரச்சனைகளையும், எதிரிகளையும் கொண்ட தனது மொழி, கலாச்ச்சார, வரலாற்று அடையாளங்களைக் காப்பாற்ற முடியாத, தமக்கென சொந்தமாக நாடற்ற சிறுபான்மை இனத்தின் அரசியல் தலைவர்களாகத் தேர்ந்தெடுப்பது அந்த சிறுபான்மை இனத்தின் அழிவுக்குத் தான் மேலும் வழிவகுக்கும்.
சில உதாரணங்களைப் பார்ப்போம்.
1. பாகிஸ்தானின் ஜின்னா போன்று தமிழ்நாட்டுத் தமிழ்த் தலைவர்களும் உறுதியுடனும், உண்மையான விசுவாசத்துடனும் தனிநாடு கேட்டுப் போராடியிருந்தால் இன்றைக்கு தமிழ்நாடு குறைந்த பட்சம் மலேசியாவின் வாழ்க்கைத்தரம் கொண்ட ஒரு நாடாக இருந்திருக்கும். இலங்கையிலும் தமிழர்களுக்குப் பிரச்சனை ஏற்பட்டிருக்காது.
2. ஆனால் அந்தக் காலகட்டத்தில் தமிழ்நாட்டில் உண்மையான பிறப்பினால் தமிழர்களான தமிழ்த் தலைவர்கள் இருக்கவில்லை, அதனால் அவர்கள் தனிநாட்டுக்குப் பதிலாக திராவிட நாடு கேட்டார்கள். அதற்கு ஏனைய திராவிடர்களிடம் ஆதரவில்லை. உண்மையான, பிறப்பினால் தமிழர்கள் அல்லாத அவர்கள் தமிழர்களுக்கு தனிநாடு கேட்பது கேலிக்குரியதொன்று என்பது அவர்களின் மனச்சாட்சியையே உறுத்தியிருக்க வேண்டும்.அவர்களுக்கே தெரியும். அதனால் அவர்களும் தமிழ்நாட்டில் அரசியலில் ஈடுபடுவதற்காக இந்த “உணர்வினால் தமிழர்” என்ற பம்மாத்தை அறிமுகப்படுத்தி தமது நலன்களைக் காத்துக் கொண்டார்கள்.
3. விஜயநகர ஆட்சியில் தான் தமிழரல்லாதார்களிடம் தமிழ்நாட்டு நிலங்கள் சென்றன என்றாலும், தமிழல்லாதர் தமிழ்நாட்டின் பொருளாதரத்தில் ஆதிக்கம் செலுத்தும், அந்த நிலைமை அப்படியே நீடித்ததற்குக் காரணம், பிறப்பினால் தமிழரல்லாத தலைவர்கள் அல்லது திராவிட/பார்ப்பனக் கலப்பினத் தலைவர்கள் பிடியில் தமிழ்நாட்டில் அரசியல் தொடர்ந்ததால் தான். உண்மையில் தமிழர்கலானவர்களின் நலன்களை, அவர்களின் பொருளாதாரத்தை உயர்த்தும் செயல்திட்டங்களில் நடைமுறைப்படுத்துவதற்குப் பதிலாக, அவர்களை அடிமட்டத்திலேயே தொடர்ந்து வைத்திருக்கக் கூடியவாறு இலவசத் திட்டங்கள் என்னும் பிச்சை வாங்கும் வழக்கத்தி அறிமுகப்படுத்தினர்.
4. பெரியார் உண்மையில் பிறப்பினால் தமிழராக இருந்திருந்தால், அவர் தமிழ்நாட்டைத் தனிநாடாகப் பிரித்து, அதன் எல்லைகளை உறுதிப்படுத்திய பின்பு, அதாவது வேலியை அமைத்த பின்பு வீட்டைக் கட்டத் (சாதி போன்ற உட்பிரச்ச்னைகளைத் தீர்க்கத்)தொடங்கியிருப்பார். ஆனால் அவர் பிறப்பினால் தமிழரல்லாத படியால், தமிநாட்டில் வாழும் தன்னைப்போன்ற தமிழரல்லாத திராவிடர்களின் நலன்களையும், அவர்களின் ஆதிக்கத்தையும் உறுதிப்படுத்த வேண்டிய தேவையும், கட்டாயமும் அவருக்கிருந்தது.
5. பிறப்பினால் தமிழரல்லாத எம்.ஜ.ஆரைத் தமிழராக ஏற்று அவரிடம் ஆட்சியைக் கொடுத்ததால் முல்லைப்பெரியாறு விடயத்தில் அவர் தனது தாய்மண்ணாகிய கேரளாவுக்குச் சார்பாக அல்லது விட்டுக் கொடுத்து நடந்து கொண்டார் என்றும் சிலர் ஆதாரத்துடன் கூறுகின்றனர்.
6. உண்மையில் விஜயின் தாயார் மலையாளியா இல்லையா என்பது எனக்குத் தெரியாது, இணையத்தளங்களில்ஒரு பின்னூட்டத்தில் பார்த்தது தான். ஆனால் உதாரணமாக, விஜய் முதலமைச்சரானால், தமிழ்நாட்டுக்கும் – கேரளாவுக்கும் ஏதாவது முரண்பாடு ஏற்படும் போது அவர் அவரது தாயின், தாயின் மண்ணின், தாயின் மக்களின், அவரது தாய்வழி உறவினர்களின் நலன்களைக் கவனத்தில் கொள்ளாது, தமிழ்நாட்டுக்கு முழு விசுவாசமாக நடந்து கொள்வாரா? அப்படி 100 % உண்மையாக நடந்து கொள்வது முடியாத காரியம் என்பது தான் எனது கருத்தாகும்.
7. அதேவேளையில் சீமானோ?? அல்லது திருமாவளவனோ அல்லது பிறப்பினால் தமிழர்களாகிய யாரவது அந்த வேளையில் முதலமைச்சராக இருந்தால், எந்தவித தயக்கமுமின்றி தமிழ்நாட்டின் நலன்களை மட்டும் கவனத்தில் கொள்வார்கள். இதனால் தான் சிங்களவர்களிடம் இந்த ‘உணர்வினால் சிங்களவர்’ என்ற பம்மாத்துக்கே இடம் கிடையாது.
8. பிறப்பினால் தமிழரல்லாத நடிகர்கள் யாராவது தமிழ்நாட்டில் தொழிற்சாலைகளில், அல்லது வேறு திட்டங்களில் முதலீடு செய்து தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புக் கொடுத்திருக்கிறார்களா. ஒரு பிரபல நடிகர், அதாவது “உணர்வினால் தமிழர்”, தனது சொந்த மாநிலத்தில் பெருமளவில் முதலீடுகளைச் செய்திருக்கிறாராம்.
9. என்னைப் பொறுத்தவரையில் தமிழ் பேசுகிறவர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல. அவர்கள் தமிழ்பேசும் மக்கள் அவ்வளவு தான். உதாரணமாக, புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களினதும், மலேசியா, பிஜி போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் இரண்டாவது தலைமுறையினர் எல்லாம் மலே மற்றும் ஐரோப்பாவின் பல்வேறு மொழிகளைப் பேசுகின்றனர் ஆனால் அவர்கள் எல்லாம் உணர்வினால் ஆங்கிலேயர், ஜேர்மானியர், டேனிஸ்,டச்சு அல்லது பிரஞ்ச்சுக்காரர்கள் அல்ல. அவர்கள் பிறப்பினால் தமிழர்கள், அவர்களின் முன்னோர்கள் தமிழர்கள், ஆகையால் அவர்கள் தமிழைப் பேசாது விட்டாலும் கூட அவர்கள் தமிழர்கள் தான்.
10. ஏனென்றால் அவர்களுக்கு தமிழன் என்றதை விட வேறு, மொழி, இன அடையாளம் கிடையாது அத்துடன் அப்படியான உணர்வு பூர்வமான, தமிழரல்லாத முன்னோர்களின் வழிவந்த விசுவாசமும், பாரம்பரியமும் கிடையாது ஏனெனில் அவர்கள் தமிழை வெளியே பேசாது விட்டாலும் கூட அவர்களின் முன்னோர்கள் தமிழர்கள், அந்த வழியில் தமிழர் என்பதை அதை விட வேறு அடையாளம் அவர்களுக்குக் கிடையாது.
வியாசன் அவர்களே,
தமிழ் பெற்றோருக்கு பிறந்து இன்று வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு தங்கள் பிள்ளைகளிடம் தப்பி தவறி கூட தமிழ் பேசாமல் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுபவர்களை விட,
வேற்றுமாநில மூதாதையர்கள் மூலம் இங்கே தமிழகத்திற்கு வந்து சேர்ந்து தெளிவான தமிழில் பேசி, எழுதி, தமிழுணர்வு மிகுந்து காணப்படுபவர்கள் மேல்.
வெளியே ஏன் தேட வேண்டும், இதோ நானிருக்கிறேன்.
நான் பிறப்பால் தெலுங்கன் என்று சொல்லலாம். ஏன் என்றால் எங்கள் வீட்டில் தெலுங்கு மொழி பேசுவார்கள். சிங்காரச்சென்னையில் பிறந்தவன். நான் ஆராய்ந்த வரை ஆறு தலைமுறையாக சென்னையிலேயே இருக்கும் குடும்பம். நதிமூலம் தெரியவில்லை. எங்கிருந்து எப்போது சென்னை வந்தார்கள் என்று தெரியாது. ஆனால் சிறுவயது முதல் அண்ணா, பெரியார் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு இன்று முழுத்தமிழனாக இருக்கிறேன். நான் மட்டுமல்ல, என் தந்தையும் தமிழார்வம் மிக்கவர் தான். எங்கள் தமிழுணர்வு நீர்த்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா? அயல்நாடுகளில் என்னை யார் என்று கேட்டால் பெருமையாக நான் தமிழன் என்று தான் சொல்வேன்.
முக்கியமாக தமிழில் சிந்திக்கின்றேன்.
இப்போது சொல்லுங்கள், நான் தமிழன் இல்லையா?
நதிமூலம் பார்க்க ஆரம்பித்தால் உங்கள் பரம்பரையில் தமிழரல்லாத ஒரு கலப்பு இல்லவே இல்லை என்று உங்களால் தீர்க்கமாக சொல்ல இயலுமா? உங்கள் பரம்பரையில் எத்தனை வருட வரலாற்றை உங்களால் நிரூபிக்க முடியும் வியாசரே? 50, 1௦௦ வருடங்கள், அதற்கு முன், 20௦௦ வருடங்களுக்கு முன்? 50௦௦ வருடங்களுக்கு முன்? 10,௦௦௦ வருடங்களுக்கு முன்?
இன்னும் சொல்லப்போனால் தென்னிந்தியா மொழிகள் அனைத்திற்கும் முன்னோடி தமிழ் மொழி தான். அதனால் என் பரம்பரை வரலாற்றை ஒரு ஆயிரம் அல்லது இரண்டாயிரம் வருடத்திற்கு பின்னோக்கி பார்த்தால் நானும் தமிழ் பரம்பரையை சார்ந்தவனாக இருப்பேன் என்று ஆணித்தரமாக நம்புகிறேன்.
ஆதலால் மொழியறிவால், உணர்வால், நினைப்பால், பண்பாட்டினால், இயல்பால் தமிழராக ஒருவர் திகழ்ந்தால் அவரை தமிழராக ஒத்துக்கொள்ளலாம் என்பதே என் கருத்து. அதை விடுத்து பிறப்பால் மட்டும் தமிழரை தேடினால் பின் நீங்கள் இன உணர்வாளர் என்ற நிலையை விட்டு இன வெறியாளர் என்ற நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.
வியாசன் அவர்களே,
இங்கே இந்த விஜய் என்பவருடைய தாய் தந்தையார் எவர் என்பதில் நமக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால், அவர் எந்நிலையிலும், தமிழ் உணர்வாளர் அல்லர்.பார்பனர்கள் பிறப்பை வைத்து சாதிப் பேசுகிறார்கள். தாங்கள் தமிழை அதாவது தமிழ் பிறப்பை வைத்து இனத்தைப் பற்றி வரையறை செய்கிறீர்கள்.இரண்டுமே வேரறுக்கப்பட வேண்டியது.
ஏனெனில், இனக்கலப்பு அடையாதவர்கள் என்று இன்று நாம் யாரையுமே வரையறை செய்ய இயலாது.குறிப்பாக பெரும்பாலானத் தமிழர்கள்.இன்னும் புராதன சமூக நிலையில் வாழும், பழங்குடி,காட்டுவாசி மக்கள் வேண்டுமானால் சற்று விதிவிலக்கானவர்கள்.
இந்தச் சூழ்நிலையில், தூய்மையான இனம் என்று நாம் பேசிக் கொண்டிருந்தால் அறிவியல் நம்மைப் பார்த்து சிரிக்கும். நமக்கு இப்போது வேண்டியது தமிழ் உணர்வு தானேயொழிய இனப்பாகுபாடு அல்ல. பாசிச மோடி ஹிந்தியை,செத்த மொழியை,வரலாற்றுத் புரட்டை திணித்து வரும் இவ்வேளையில், அதை முறியடிக்க தமிழ் உணர்வுள்ள யார் வேண்டுமானாலும் களம் புகலாம். அவர்களின் தாய் தந்தையர் யார் வேண்டுமானாலும் இருக்கலாம் ஆனால், அவர் தமிழரே.
நன்றி.
திரு வியாசன், அவர்[நடிகர் விஜய்] தமிழ் மகனா இல்லையா என்று தெரியாவிட்டாலும், யாழ்பானத்துக்கு மருமகன் என்பது தெரியும்.
//அவர்[நடிகர் விஜய்] தமிழ் மகனா இல்லையா என்று தெரியாவிட்டாலும், யாழ்பானத்துக்கு மருமகன் என்பது தெரியும்.//
அண்ணன் சரவணன்,
யாழ்ப்பாணத் தமிழர்கள் தாய்வழிச்சமூக வழக்கங்களைக் கொண்டவர்கள். அதாவது பெண்ணுக்குத் தான் முதலிடம். உதாரணமாக யாழ்ப்பாணத் தமிழர்களின் வழக்கப்படி பெற்றோரின் பரம்பரை வீடு மூத்தமகளுக்குத் தான் சீதனமாகக் கொடுக்கப்படும். ஆனால் சீதனமாகக் கொடுக்கப்படும் பணமும், வீடும் மகளின் பெயரில்தான் இருக்குமே தவிர மருமகனின் பெயரில் அல்ல. சீதனத்தைக் கூட மருமகனை நம்பிக் கொடுக்காத யாழ்ப்பாணத் தமிழர்கள் எப்படி தமது நாட்டை மருமகனை ஆள விடுவார்கள். அதனால் யாழ்ப்பாணத்துக்கு மருமகன் என்ற அடிப்படையில் நடிகர் விஜய் யாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கிராமசபையின் உறுப்பினராகக் கூட வரமுடியாது, அப்படியிருக்க, அவர் எப்படி தமிழ்நாட்டின் முதலமைச்சாராக ஆசைப்படலாம்?
திரு வியாசன்,
பொண்களுக்கு முதன்மை கொடுக்கும் யாழ் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
ஒண்ணுக்கு ஆராய்ச்சி எடுக்க சீமானுக்கு ஆள் பத்தலையாம் ,அங்க போ…
இது உண்மையா பொய்யா http://yaalppaanam.wordpress.com/2012/04/15/வெள்ளாளர்-உயர்-சாதியினரா/
தமிழ்நாட்டில் நிறைய காமெடி பீஸுகள் உள்ளன… வை.கோ, டி.ராஜேந்திரன், வினவு ஆதரிக்கும் பு.ஜா. பசங்க, சீமான் போன்றவை சில உதாரணங்கள்…. இதுங்க எல்லாம் சாகும் வரை சவடால் விட்டே சாவுங்க… அவ்வளவு தான்… இராமசாமி நாயக்கர் கதை தெரியுமல்லவா???? பங்காரு அடிகளார் முதல், பச்சைமுத்து வரை சொத்து சேர்த்தான்னு, அது அவன் திறமை….அவன் திருடுரான்னா கேஸ் போடு, தண்டனை வாங்கி குடு… குறைந்தபட்சம் எதாவது ஆதாரம் உள்ளதா எவர் மீதாவது?? அவன் கல்லூரியில் சேரும் மக்களை குறை சொல்….நெருப்பெடுத்தா கொதிப்படங்கும்…குறை சொல்ல கட்டுரை தேவையில்லை….சும்மா ஏதாவது எழவாட்டம் கிறுக்காமல், உருப்படியா ஏதாவது எழுதி தொலை…
இந்தியன் ஏன் உங்கள நீஙகளே இப்பிடி திட்டிக்கிறீங்க….
ஆமாம்… இந்தியன் சொல்றமாதிரி அவருக்குபுடிச்ச கருத்தான கசமுசாக் கதைகளை வினவு எழுதனும். ஆமாம் சொல்லிபுட்டேன்.
பச்சோந்திகள் மணித அவதாரம் எடுத்தால் அது சீமன்,வைகோ மாதிரியிருக்கும்.
சிமன் இனி வேந்தன் டிவி,புதியதலைமுறை,புதுயுகம் போன்ற தொலைகாட்சிகளில் அவதரிப்பார் சிமனுக்கு இனி மோடியும் தமிழ் பற்றாலாராக தேரிவார் .
ராமசந்திரன்
உண்மை தோழர்
திரு. கற்றதுகையளவு,
உங்களின் கருத்துப்படி தமிழன் என்றால் யார், தமிழுணர்வு என்றால் என்ன என்பதை நீங்கள் விளக்கினால், அந்த தமிழுணர்வு உங்களை எப்படித் தமிழனாக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும்.
1. தமிழுணர்வு என்பது தமிழில் பற்றுக் கொண்டிருப்பதும், தமிழின் வளத்தை, அதன் நயத்தை, அதன் இலக்கிய, இலக்கணங்களைப் பார்த்து வியப்பதும், இரசிப்பதும், தமிழ்மொழியின் மீது மதிப்பு வைத்திருப்பதுமென்றால் பல நாடுகளில் வாழும் தமிழரல்லாத தமிழ் மொழி வல்லுனர்களை எல்லாம் நாங்கள் தமிழர்கள் என ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தம்மைத் தமிழர்களாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுவதோ அல்லது தம்மைத் தமிழர்களாக அடையாளப்படுத்துவதோ இல்லை.
2. தமிழுணர்வென்பது தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டிருப்பது என்றால், உலகம் முழுவதும் பல தமிழரல்லாதவர்கள் தமிழர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ளனர். ஈழத்தமிழர் போராட்டங்களில் தம்மையும் ஈடுபடுத்திக் கொண்டு, தமிழர்களின் நலன்களின் அக்கறை கொண்டுள்ள மேலைநாட்டவர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். உதாரணமாக, அண்மையில் ஒரு பதிவர் முள்ளிவாய்க்காலுக்காக யூதர்கள் அழவில்லை என ஒரு பதிவைப் போட்டிருந்தார். ஆனால் உண்மையில் பல அமெரிக்க யூதர்கள் ஈழத்தமிழர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவித்தது மட்டுமன்றி, எமது போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் தம்மை இணைத்துக் கொண்டனர் என்பது தான் உண்மை. அதற்குப் பெயர் தமிழுணர்வென்று நான் நினைக்கவில்லை.
3. தமிழ்நாட்டில் அல்லது சென்னையில் பிறந்தவர்கள் என்பதால் அவர்களுக்குத் தமிழுணர்வுண்டு என்றால், சென்னையில் பிறந்தவர்கள் எல்லோரும் தமிழர்களாகி விடுவார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் தமிழர்களின் தொகை வெறும் 6% வீதமாக இருக்காது. இன்றைக்கு இந்தியாவின் பிரதமராக தமிழர் ஒருவர் இருக்க வேண்டும்.
4. அண்ணா, பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்கள் என்றால், என்னைப் போன்ற கோடிக்கணக்கான தமிழர்கள் எல்லாம் தமிழர்கள் அல்ல என்றாகி விடும்.
பெரியாரிஸ்டுகளும், திராவிடியனிஸ்ற்றாக்களும் மட்டும் தான் தமிழனாக இருக்க முடியும்.
5. பல வெளிநாடுகளில் பிறந்துவாழும் தமிழர்கள் பலர் ஆங்கிலத்தில் சிந்திக்கிறார்கள். ஏனென்றால் அதில் தான் அவர்களுக்குப் புலமை அதிகம். அதனால் அவர்கள் தம்மை ஆங்கிலேயர்கள் என்று நினைத்ததுக் கொள்வதில்லை. அவர்கள் எல்லோரும் ஆங்கிலேயர்கள் என ஆங்கிலேயர்களிடம் கூறினால், கீழ்ப்பாக்கத்திலிருந்து சொல்லாமல், கொள்ளாமல் ஓடிவந்து விட்டாரோ என்பது போல் மேலும் கீழும் பார்ப்பார்கள் என்பது தான் உண்மை. அதனால் தமிழில் சிந்திப்பதால் தமிழன் என்பதும் எடுபடாது.
6. தெளிவான தமிழில் பேசுவதால் தமிழர்கள் என்றால், தமிழ்நாட்டில் வாழும் பல பஞ்சாபிகளும், ராஜஸ்தானிகளும் கூட தான் தெளிவான தமிழ் பேசுகிறார்கள். இன்றைக்கு ஒவ்வொரு நாளும் வடமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டுக்கு வேலை தேடி வரும் பீகாரிகள் அவர்களின் வாரிசுகள் எல்லாம் கூடத் தான் ஒரு சில வருடங்களில் தெளிவான தமிழ் பேசுவார்கள் அவர்கள் எல்லாம் தமிழர்களா?
7. இப்படி எல்லோரையும் தமிழன் என்று ஏற்றுக் கொண்டால் தமிழர் என்பது ஒரு கலப்பினமாக, அதாவது ஒரு bastardized race என்ற மாதிரியாகி விடும்.
//இப்போது சொல்லுங்கள், நான் தமிழன் இல்லையா?///
ஆறு தலைமுறையாக சென்னையில், தமிழ்நாட்டின் தலைநகரில் வாழும் ஒரு குடும்பம், இன்னும் தமது முன்னோர்களின் தாய்மொழியாகிய தெலுங்கை இழக்காமல், அதைக் கட்டிக்காப்பது மட்டுமல்ல, இன்றும் அதை வீட்டில் பேசிக் கொண்டு, வீட்டில் தெலுங்கர்களாக வாழ்ந்து கொண்டு, வெளியில் தமிழ் பேசுகிறார்கள் என்பதற்காக அவர்களை தமிழர்கள் என்று நான் ஒப்புக் கொண்டால் அது தமிழன்னைக்கே இழுக்காகும்.
தமிழைப் பேசவே தெரியாத, மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளை வீட்டிலும், வெளியிலும் பேசும் மொழியாகக் கொண்ட தமிழர்களையே, மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கர்கள் என்று அந்தந்த மாநிலங்களில் ஏற்றுக் கொள்வதில்லை. அங்கெல்லாம் அவர்களின் முன்னோர்கள் தமிழர்கள் என்ற அடிப்படையில் அவர்களைத் தமிழர்களாகத் தான் நடத்துகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தான் தமிழ்நாட்டின் நலன்களை, அரசியலை, அதிகாரத்தைப், பொருளாதாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக, வீட்டில் தமது முன்னோர்களின் மொழிகளைப் பேசிக்கொண்டே, நானும் தமிழன் தான் என்கிறார்கள். இளிச்ச வாய்த் தமிழர்களும், நீயும் தமிழன், நானும் தமிழன் உன்னுடைய மாநிலங்களில் ஒரு தமிழன் வெறும் சட்டசபை பஞ்சாயத்து தலைவராகக் கூட வரமுடியாது போனாலும் கூட பரவாயில்லை, ஆனால் நீ தமிழை பேசுகிறாய், அதனால் என்னையும், தமிழ்நாட்டையும் சேர்ந்து ஆண்டு கொள் என்கிறான்.
யார் தமிழன் என்பதற்கு எனது கருத்து என்னவென்றால் யார் ஒருவர் தமிழை வீட்டிலும், வெளியிலும் பேசுவதுடன், அவருக்கு தமிழ்/தமிழன் என்ற இன, மொழி அடையாளத்தை விட வேறெந்த இன, மொழி அடையாளமும் இல்லாதிருந்தால் அவர் தமிழன். அல்லது தமிழைப் பேசாது விட்டாலும் கூட அவர்களின் முன்னோர்கள் தமிழர்களாக இருந்து, அவர் இன்றும் தன்னை தமிழனாக அடையாளப்படுத்தினால் அவரும், அவரது வாரிசுகளும் தமிழர்களே.
என்னைப்பொறுத்தவரையில் உங்களின் பெற்றோர்கள்/குடும்பத்தினர் தமிழர்கள் அல்ல, ஏனென்றால் அவர்கள் இன்றும் தமது தாய்மொழியாகிய தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆனால் உங்களின் முதல் மொழி தமிழாக இருந்தால், நீங்கள் உங்களைத் தமிழனாக மட்டும் அடையாளப்படுத்துகிறீர்களேயானால் (அதாவது சனத்தொகைக் கணக்கெடுப்பிலும் நீங்கள் உங்களைத் தமிழனாக அடையாளப்படுத்தினால்) நீங்கள் உங்களின் தெலுங்கு முன்னோர்களின் மொழி, பாரம்பரியம், பண்பாடு என்பவற்றைக் கடைப்பிடிக்காமல், அவற்றைப் பற்றி பெருமைப்படாமல் உங்களைத் தமிழனாக மட்டும் உணர்வு பூர்வமாகக் கருதுகிற ஒருவரானால், நீங்கள் ஒரு தமிழன் தான் என ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கமேதுமில்லை.
என்னுடைய கருத்து என்னவென்றால், இரண்டு, மொழி, பாரம்பரிய அடையாளங்கள் உள்ளவர்களால் தமிழுக்கும், தமிழர்களுக்கு மட்டும் விசுவாசமுள்ளவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தமிழர்களுமல்ல என்பது தான்.
//உங்கள் பரம்பரையில் எத்தனை வருட வரலாற்றை உங்களால் நிரூபிக்க முடியும் வியாசரே? ///
அப்படியெல்லாம் பின்னோக்கிப் போய் நான் எதற்காக நிரூபிக்க வேண்டும். எனக்கு தமிழன் என்பதை விட எந்த இன, மொழி அடையாளமும் கிடையாது, உங்களைப் போலல்லாமல், என்னுடைய தாய்தந்தையினர், உறவினர்கள் எல்லோருமே தமிழைத் தான் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். அதனால் என்னுடைய மூதாதையர்கள் வேறு மொழியினராக இருந்திருக்கலாமோ என்று சந்தேகிக்க வேண்டிய தேவையோ அல்லது கட்டாயமோ எனக்குக் கிடையாது.
உதாரணமாக, தமிழ்நாட்டை பல நூற்றாண்டுகளாக தலை முறை தலைமுறையாக ஆண்டு தமிழர்களோடு தமிழர்களாகக் கலந்து விட்ட பல்லவர்கள் தமிழர்களல்ல, என்று கூட சில வரலாற்றாசிரியர்கள் வாதாடுகின்றனர். அவர்களைத தமிழர்களென ஏற்றுக் கொள்ள பல காரணங்கள் இருந்தும் கூட, அவர்கள் வெளியிலிருந்து வந்திருக்கலாம் என்றார் சந்தேகத்தில் அவர்கள் தமிழர்கள் அல்ல என்று வரலாற்றாசிரியர்கள் வாதாடும் போது, ஆறு தலைமுறையாகத் தமிழ்நாட்டில் வாழ்ந்தும் தமது மொழியையும் கலாச்சாத்தையும் இழக்காதிருப்பவர்கள் கூட தமிழர்களே என்ற வாதத்தைப் பார்க்கும் போது கேட்கிறவன் கேணையானாக இருந்தால் ‘எருமை மாடும் ஏரோப்பிளேன் ஓடுமாம்’ என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது. 🙂
ஐயா வியாசன் அவர்களே,
தமிழை தாய்மொழியாக கருதுபவன் நான். சிந்திக்கும்போதும் தமிழிலேயே சிந்திப்பவன். நீங்கள் என்னை எப்படி வேண்டுமானாலும் கருதிக்கொள்ளுங்கள், அதில் எனக்கு அக்கறை இல்லை.
எனக்கு தெரியும் என் தமிழ் உணர்வு எப்படிப்பட்டதென்று.
தமிழ் தேசியம் பேசிக்கொண்டே ஜெயலலிதாவின் பாதம் பணியும் சீமான் தான் உங்கள் கண்ணுக்கு உண்மையான தமிழனாக படுகிறார் என்றால் அதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை.
உங்கள் பார்வையில் சேரர்கள் தமிழரில்லை, பல்லவர்கள் தமிழரில்லை, இப்படியே விலக்கிக்கொண்டே செல்லுங்கள். பின்னோக்கி பயணித்து பாருங்கள். உண்மையில் இவர்கள் அனைவரும் ஆதியில் தமிழர்கள் தான் என்பதை உணருங்கள். தமிழ் என்பது தங்களது அளவில் ஒரு மொழி என்ற அளவில் மட்டும் சுருக்கிக்கொள்கிறீர்கள். அதையும் தாண்டி ஒரு இனம் என்ற அளவில் நீங்கள் காணத்தவறுகிறீர்கள். தென்னிந்திய மொழி பேசும் அனைவரின் ஆதி மொழி தமிழ் தான் என்று உங்களுக்கு இன்னும் தெரியவில்லையா என்ன?
5000 வருடங்களுக்கு முன் சென்று பாருங்கள். தங்களின் வேர், எனது வேர், அனைத்தும் ஒரே ஆணிவேரில் இருந்து தான் வந்திருக்கிறது. நீங்கள் நம் இனத்தவரை பிளவு படுத்தி பார்க்க விரும்புகிறீர்கள். நான் நமது ஆதி இனத்தவர்கள் அனைவரும் சேர வேண்டும் என்று விரும்புகிறேன். பிளவுபடுத்துவது நன்மையா, சேர்ந்து வாழ்வது நன்மையா? தாங்களே சொல்லுங்கள்.
வியாசரே, வினவு மூலம் நீங்கள் எனது நண்பராகிவிட்டீர்கள், அதனால் தங்களை நான் ஒன்றும் சொல்லவில்லை. என் தமிழுணர்வை அவமதிக்கும் செயலை யாராவது மூன்றாம் மனிதர் என் எதிரில் சொல்லி இருப்பாரானால் அங்கேயே ஓங்கி அறைந்திருப்பேன். என் தமிழ் உணர்வு, தமிழ் ஆர்வம் எப்படிப்பட்டதென்று தங்களுக்கு தெரியாது, மேலும் நண்பராக இருக்கிறீர்கள், தங்களின் மேல் எனக்கு மதிப்பு கூடியதற்கு முக்கிய காரணம் தங்களின் தமிழ் உணர்வு தான். பல கருத்துக்களில் தங்களின் பக்கம் நான் ஆதரவாக பதிவிட்டுருக்கிறேன். ஆதலால் தங்களை எதிர்த்து பதிவிட மனம் வரவில்லை.
வாழ்த்துக்கள்.
திரு வியாசன்,
யார் தமிழர் என்ற ஆய்வு செய்வது உங்கள் உரிமை என்றாலும் , பயன்படுத்த பட வேண்டிய வார்த்தைகள் தெளிவானதாக, படிப்பவர்களை துன்பம் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். பெண்களை இழிவு செய்யும் வார்த்தையாகிய “bastardized” என்பதை முறையாக தெலுங்கு மக்களுடன் திருமண உறவுக்கு பெண் எடுத்து ,பெண் கொடுத்து வாழும் தமிழ்ர்களை பார்த்து நீங்கள் கூறும் போது அங்கு கலப்பு திருமணத்துக்கு எதிரான சாதியம் தான் தலை தூக்குகின்றது. வரலாற்றில் சுந்தர சோழர் அவர்களின் அம்மா அவர்கள் தெலுங்கு பெண் தான். இதன் பொருட்டு சோழ பரம்பரையை,ராஜராஜனை,ராஜேந்திரனை “bastardized race” என்று கூற முடியுமா உங்களால் ?
திரு கற்றது கையளவு,
தங்கள் தமிழ் உணர்வுக்கு மிக்க நன்றி. தமிழர் என்ற இன வேலிக்குள் வாழும் மக்கள் உண்மையில் சாதியடிப்படையில் தானே வாழுகின்றேம்? ஒரு வேளை நீங்கள் தெலுங்கு நாயிடு,ரெட்டி போன்ற சாதியை சேர்ந்தார் என்றால் தமிழ் நாட்டின் பிற சாதியுடன் திருமண உறவுக்கு முயன்றது உண்டா ? குறிப்பாக அருந்ததியர் என்று அழைக்கபடும் ஒடுக்கபட்ட தெலுங்கு மக்களுடனாவது திருமண உறவுக்கு முயன்றது உண்டா ?தமிழ் நாட்டில் சாதியை ஒழிக்காத வரை ,சாதிய கலப்பு திருமணங்கள் பெரும்பான்மை ஆகாத வரை தமிழ் நாடு சாதி அடிப்படையில் தான் பிரிந்து நின்று தமிழ் தேசியத்தை புறகணிக்கும். வெளியில் தமிழ் மொழி பேசும், வீட்டில் தெலுங்கு மொழி பேசும் திரு வைகோ தன் குழந்தைகளுக்கு பெண் கொடுத்து ,பெண் எடுத்தது என்ன ஒடுக்கபட்டவர்கள் வீட்டிலா ? இல்லையே ! Genetically தமிழ் நாட்டின் ஆதி குடிகளுடன் கலப்பு உறாத வரை, தெலுங்கு பேசும் தமிழர்கள் என்ன தான் மேடையில் வீரமாக தமிழ் பேசினாலும் வீட்டில் தெலுங்கர்களாக இருக்கும் வரை, அவர்களை திரு வியாசன் போன்றவர்கள் பாகுபாடு உடன் தான் பார்ப்பார்கள். அதில் ஏதும் தவறு இல்லை.
Thiru Viyasan://bastardized race//
Thiru கற்றது கையளவு//என் தமிழுணர்வை அவமதிக்கும் செயலை யாராவது மூன்றாம் மனிதர் என் எதிரில் சொல்லி இருப்பாரானால் அங்கேயே ஓங்கி அறைந்திருப்பேன்.//
டயானா அவர்களே,
சாதி என்ற ஒன்றை முற்றிலும் மறுப்பவன் நான்.
திருமணமானவன். இனி என் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் யாராக இருந்தாலும் அவர்களுக்கு மணமுடிக்க தயாராகவே உள்ளேன். இதில் நானும் என் மனைவியும் சேர்ந்தே இந்த முடிவெடுத்தோம். சாதி, மதம், இனம் என்ற கோட்டுக்குள் அடக்காமல் அவரவருக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை உள்ளது.
டயானா மூலதனம் படித்துக் கொண்டிருக்கா..அதன் பிறகு வினவில் ஒரு கட்டுரையும் வரைவாகோ! அதுவரை அமைதிகாக்கவும் க.கை.
அவசரப்ப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள்.
//டயானா மூலதனம் படித்துக் கொண்டிருக்கா..//திரு mao என்ற___________ வீண் பதிவு இது. பெண்பால் படர்க்கைக்கு அவள் எனில், ஆண் பால் படர்க்கைக்கு “அவன்” தானே திரு mao ? அவன் ,இவன் ,உவன் என்று உம்மை அழைக்க வெகு நேரம் ஆகாது திரு mao.
திரு கற்றது கையளவு, சாதி என்ற ஒன்றை முற்றிலும் நீங்கள் மறுப்பதற்கு மிக்க நன்றி.
பிள்ளைகளுக்கு என் வாழ்த்துக்கள்.
யாதும்……என்ற கொள்கை படி வாழுகின்றிர்கள்.நன்று
இதனை நாம் உணர திரு mao அவர்கள் கூறுவது படி “மூலதனம்” எல்லாம் படித்து முடித்து இருக்க தேவை இல்லை. நம் தமிழ் கவி கணியன் பூங்குன்றனார் அவர்களில் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” கவிதையை படித்து உணர்ந்தாலே போதும் அல்லவா ?
//சாதி, மதம், இனம் என்ற கோட்டுக்குள் அடக்காமல் அவரவருக்கு விருப்பப்பட்ட வாழ்க்கையை தேர்ந்தெடுக்க அவரவருக்கு உரிமை உள்ளது.//
மே 17 இயக்கத்திலிருந்து உமர் விலகல்!
புலிப்பார்வை திரைப்படத்தின் ஊடாக இன்னொரு வரலாற்றுப் பிழை இன்று முழுமையாக வெளிப்பட்டிருக்கின்றது. பச்சமுத்துவின் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில், வைகோ பங்கேற்று பச்சமுத்துவிற்கு நற்பெயரைப் பெற்றுக் கொடுக்கும் ஒரு முயற்சியினை மேற்கொண்டிருக்கின்றார். மேம்போக்காக பார்க்கும்பொழுது இது ஒரு சாதாரண நிகழ்வாகத்தான் தெரியும். ஆனால், மக்களின் உளவியலில் வரலாற்றுத் திரிபுகளைத் திணிக்கும் நகர்வின் ஒரு அங்கம்தான் இதுவும்.
முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் இறுதி நாட்கள் குறித்தும், பாலச்சந்திரன் குறித்தும் வரலாற்றுத் திரிபுகளை முன்வைக்கும் புலிப்பார்வை திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை எதிர்நோக்கியுள்ள இந்தச் சூழலில், படத்தின் தயாரிப்பாளர் மிகுந்த தமிழுணர்வாளர், தமிழறிஞர்களுக்கெல்லாம் விருது வழங்கும் நல்லவர் தெரியுமா என்று அவருக்கு ஆதரவாக கொடி பிடிப்பதற்குத்தான் வைகோவின் பங்கேற்பு பயன்படும். அதிலும், உலக வரலாறுகள் எல்லாம் தெரிந்த வைகோவிற்கு, பச்சமுத்துவின் புலிப்பார்வை வரலாறு தெரியாமல் போனதன் பின்னணி ஒரு மர்மம்தான்.
பல நேரங்களில் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிடுவதற்கு முன்னரே, தனது அறிக்கையினை வெளியிட்ட வைகோ, புலிப்பார்வை படம் குறித்து இதுவரையிலும் தனது கருத்தைத் தெரிவிக்காதது மட்டுமல்ல, மாணவர்கள் தாக்கப்பட்டபோதும் கூட காத்த கள்ள மௌனம் என்பது பச்சமுத்துவின் புலிப்பார்வைக்கு ஆதரவான மௌனம்தான் என்பது எளிதில் புலப்படுகின்றது. தனது இருக்கைக்கு அருகில் ஸ்டெர்லிங் ஆலையின் உரிமையாளருக்கு இடம் ஒதுக்கப்பட்டிருப்பது அறிந்தவுடன், விமானத்திலேயே எதிர்ப்பு தெரிவித்து இடம் மாற்றிக்கொண்ட வைகோ, இன்று இவ்வளவு மோசமான நோக்கத்தோடு படமெடுக்க இறங்கியிருக்கும் பச்சமுத்துவோடு மேடையை பகிர்ந்துகொண்டதை பச்சை சந்தர்ப்பவாதம் என்று புரிந்து கொள்ளாமல் என்னவென்று புரிந்து கொள்வது?
இந்தப் படத்தை ஆதரிப்பதென்பது ஒரு வரலாற்றுப் பிழை. அந்தப் பிழையை மேற்கொண்ட சீமானையும், வைகோவையும் சுட்டிக்காட்டாமல் இருக்க என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. ஆனால், நான் எனது கருத்தைப் பதியும்போது ஏற்படும் இன்னொரு சிக்கலையும் இங்கு பேசியாக வேண்டும்.
கடந்த வாரம் நான் சீமான் குறித்து எனது கருத்தைப் பதிந்தவுடன், அது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக பார்க்கப்படுவதாக பலரும் கருதினர். அப்பொழுது அந்தப் பதிவை நீக்க/மாற்றக் கோரியது மே பதினேழு இயக்கம். ஆனால், அந்தப் பதிவை நான் மாற்றவோ நீக்கவோ இல்லை. தோழமை இயக்கங்களின் செயல்பாடுகளை பொதுவெளியில் விமர்சிக்க வேண்டாம் என்பது மே பதினேழு இயக்கத்தின் கருத்தாக இருக்கின்றது. தற்பொழுது இந்தப் பதிவுக்கும் அது போன்ற ஒரு கருத்தோடு இதனை மாற்றவோ நீக்கவோ கோரிக்கை வரலாம். ஆனால், தோழமை இயக்கங்கள் என்பதற்காக அவர்கள் மேற்கொள்ளும் வரலாற்றுப் பிழைகளை விமர்சிக்காமல் இருக்க என்னால் முடியாது. இதன் அடிப்படையில், இதற்கு மேலும் மே பதினேழு இயக்கத்தில் நான் தொடர்ந்து இயங்குவது என்பது இயலாத ஒன்று.
இதன் அடிப்படையில், நான் மே பதினேழு இயக்கத்தில் இருந்து, அதன் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுகின்றேன். மே பதினேழு இயக்கத்துடனான எனது பயணம் இத்துடன் முடிவுறுகின்றது.
உமர்
(இவரது ஃபேஸ்புக் கணக்கில் வெளிவந்திருக்கிறது)
திரு. கற்றது கையளவு,
எனது கருத்து எந்தவகையிலாவது உங்களின் மனதைப் புண்படுத்தியிருந்தால் வருந்துகிறேன். அதுவல்ல எனது நோக்கம். உங்களின் தமிழுணர்வு, தமிழறிவு, தமிழர்களின் நலன்களில் நீங்கள் காட்டும் அக்கறை எதையும் நான் மறுக்க இல்லை. நாங்கள் இப்பொழுது யார் தமிழர் என்பதற்கான சொற்பொருள் விளக்கத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இங்கு நட்பு, தமிழுணர்வு, பார்ப்பனீய எதிர்ப்பு எதற்கும் தொடர்பு கிடையாது. நாங்கள் யார், யார் தமிழர் என்பதற்கு தமிழர்கள் முதலில் தெளிவான விளக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழுணர்வுள்ள, தமிழ்பேசும் எல்லோருமே தமிழர்கள் அல்ல என்பதை முன்பே நான் விளக்கியுள்ளேன். நீங்கள் தமிழைத் தாய்மொழியாகக் கருதினாலும், உங்களின் தாய்மொழி தமிழ் அல்ல என்பது உங்களுக்கே தெரியும். எனக்குத் தெரிந்த தெலுங்கே பேசாத தமிழ் மட்டும் வீட்டிலும் வெளியிலும் பேசும் தெலுங்கர்கள் சென்னையில் உள்ளார்கள். அவர்கள் தமது பூர்வீகம் கும்பகோணம் பக்கம் என்பார்கள் ஆனால் அவர்கள் கூட இனம் என வரும்போது, தெலுங்கர் என்று தான் கூறுகிறார்கள். உங்களின் குடும்பத்தவர் ஆறு தலைமுறைகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், இன்னும் உங்களின் தெலுங்கு மொழியையும் அடையாளத்தையும் இழக்கவில்லை.
ஆதியில் தமிழர்கள் அதனாலே எல்லோரும் தமிழர்கள் என்பது தமிழரல்லாத திராவிடர்கள் தமிழ்நாட்டில் நாட்டாமை காட்டவும், தமிழ்நாட்டையும், தமிழர்களின் நலன்களில், உரிமைகளில் பங்குபோட்டுக் கொள்ளவும் வேண்டுமானால் அவர்களுக்கு உதவலாம், ___________ உதாரணமாக, ஆதியில் எல்லோரும் தமிழர்களே என்று நினைத்து கன்னடர்கள் எல்லோரும் தமிழர்களுக்குத் தண்ணீர் கொடுப்பதில்லை. மலையாளிகள் தமிழ் கற்பிப்பதில்லை. கன்னடர்களிடம் அவர்கள் ஆதியில் தமிழர்கள் என்று கூறிப்பாருங்கள், உங்களுக்கு ஓங்கி அறைவார்கள். ஆனால் இளிச்சவாய்த் தமிழ்நாட்டுத் தமிழன் மட்டும் தான் இந்தப் பம்மாத்தை எல்லாம் ஏற்றுக் கொண்டு ரஜனிகாந்த் தமிழன், குஸ்பு ஒரு தமிழச்சி இன்னும் கொஞ்ச நாளில் சென்னையில் கூலி வேலை செய்யும் பீஹாரிகள் எல்லோருமே தமிழர்கள் என்பார்கள்.
இதற்குக் காரணம் தமிழரல்லாத பெரியாரும், பெரியாரியமும் தான். பெரியார் தனது சுயநலத்தின் காரணமாக தமிழர்களைத் திராவிடர்களாக்கினார், அவரும் திராவிடர்களும் ஒன்று சேர்ந்து எமது தமிழ்முன்னோர்கள், வடவர்களின் மீது படையெடுத்து, அவரகளின் தலையில் கல்சுமக்கச் செய்து கண்ணகிக்குச் சிலையெடுத்துக் கட்டிக்காத்த தமிழன் என்ற பெருமையான அடையாளத்தைச் சிதைத்து விட்டார்கள் என்பது தான் எனது கருத்தாகும்.
_______அதனால் அவர்களும் இன்று தமிழர்கள் அல்ல. தமிழ், தமிழன் என்பதை தனியான, முதலடையாளமாகக் கொள்ளாத வேறு இன, மொழி அடையாளங்களைக் கொண்ட எவருமே, அவர்கள் ஆதியில் தமிழர்களாக இருந்தாலும் கூட தமிழர்கள் அல்ல. அதனால், இருக்கிற தமிழினத்தையாவது அதன் அடையாளத்தை இழக்காமல், வேறு இன, மொழி அடையாளமுள்ளவர்களைக் கலந்து ஒரு கலப்பினமாக்காமல், அதன் தொன்மையை, அதன் தூய்மையைக் காக்க வேண்டியது தமிழர்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நா டாக்கிய
இதுநீ கருதினை யாயின் ஏற்பவர்
முதுநீ ருலகில் முழுவது மில்லை
இமய மால்வரைக்கு எங்கோன் செல்வது
கடவு ளெழுதவோர் கற்கே யாதலின்
வடதிசை மருங்கின் மன்னர்க் கெல்லாம்
தென்றமிழ் நன்னாட்டுச் செழுவிற் கயற்புலி
மண்டலை யேற்ற வரைக வீங்கென”
(சிலப்பதிகாரம்)
(இமிழ் கடல் வேலியைத் தமிழ்நாடு ஆக்கிய இது நீ கருதினை ஆயின் – முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ் நாடாக்க விரும்பி இமயத்தே கற் கால் கொள்ளுதலாகிய இதனை நீ எண்ணின், ஏற்பவர் முது நீர் உலகின் முழுவதும் இல்லை – நின்னுடன் எதிர்ப்போர் கடல் சூழ்ந்த உலகத்து ஒருவரும் இல்லை என்று கூறி, இமய மால் வரைக்கு எங்கோன் செல்வது கடவுள் எழுத ஓர் கற்கே ஆதலின் – எமது மன்னன் பெரிய இமயமலையிடத்துச் சேறல் கற் புடைத் தெய்வம் செய்ய ஓர் கல் பெறுதல் வேண்டியே யாக லான், வடதிசை மருங்கின் மன்னர்க்கு எல்லாம் – அது குறித்து வடநாட்டு அரசர் யாவர்க்கும், தென் தமிழ் நல் நாட்டுச் செழு வில் கயல் புலி மண்தலை ஏற்ற வரைக ஈங்கு என – தென்றிசைக் கண்ணதாகிய வளமிக்க தமிழ் நாட்டு வில்லுங் கெண்டையும் புலியுமென்னும் இவற்றின் இலச்சினையைத் தம்மிடத்துக் கொண்ட ஓலைகளை வரைந்தனுப்புக இப்பொழுதே எனக் கூற;)
இன்றைக்கு நாம் வழங்கும் தமிழ் நாடு, தமிழகம் என்ற சொற்கள் திராவிட முன்னேற்றக்கழகத்தினர் பதவி ஏற்ற பிறகு உருவாக்கப்பட்ட சொற்கள் என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் அது தவறானது.
வியாசன் முன்வைக்கிற “யார் தமிழன்?” என்ற மறுமொழி அப்பட்டமான இனவெறியாகும். இவர் முன்வைக்கிற வாதங்களை நிராகரிப்பதோடு, வன்மையான கண்டனங்களை பதிவு செய்கிறேன்.
இந்தி திணிப்பிற்கு எதிராகவும் சமஸ்கிருத பார்ப்பனிய பாசிசத்திற்கு எதிராகவும் தமிழகத்தில் புரட்சிகர அமைப்புகள் வீச்சாக போராட்டங்களை நடத்துகிற பொழுது, மோடி தமிழர்களுக்கு என்ன தீங்கு செய்தார்? என்று வினா எழுப்பியவர் வியாசன். பின்வாயிலில் ஆர் எஸ் எஸ்ஸை ஆரத்தழுவிவிட்டு முன்வாயிலில் பார்ப்பனிய எதிர்ப்பு கோசம் போடுவதற்கு என்ன பெயர்? சோறுபோட்டு கழுத்தறுக்கிற கைக்கூலி வேலைதானே இது? பிறகு வியாசன் எவ்விதம் தமிழர்களின் நலன்களைப் பிரதிபலிக்கிறார்? “யார் தமிழர்?” என்று இவர் எப்படி வரையறுக்க முடியும்?
இரண்டாவதாக
“பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்” என்கிறது குறள்.
தான் காண்பது விடம் என்று தெரிந்தும் நட்பு கருதி அருந்துவர் என்று விழுமியங்களை முன்வைக்கிறது குறள். அதே போன்று நஞ்சுண்டமைந்தவர் வியாசன்!!!. எப்பொழுதுமே வியாசன் தமிழ்நாட்டிற்கு (இந்தியாவிற்கு) வரும்பொழுது மினரல்வாட்டரைத் தவிர வேறு எந்த தண்ணீரையும் அருந்தமாட்டாராம். கடன் அட்டையும் உபயோகிக்கமாட்டார் என்பது கூடுதல் தகவல். ஆனால் ஒரு சமயம் ஆதிதிராவிட மாணவர்களின் விடுதிக்கு சென்றபொழுது மாணவர்கள் விடுதித்தண்ணீரை கொடுத்து உபசரித்தபொழுது அசுத்தம் என்று தெரிந்தும் விருந்தோம்பலை ஏற்றிருக்கிறார் தகைமையாளர் வியாசன். அதாவது பெயக்கண்டும் நஞ்சுண்டமைந்திருக்கிறார். ஆனால் மினரல்வாட்டர் மட்டுமே குடித்துப்பழகிய வியாசன் விடுதித்தண்ணீரைக் குடித்த மறுநாள் மருத்துவரிடம் சென்றாராம். இதில் வாதத்திற்கு தேவையான இரண்டு விசயங்கள் அடங்கியிருக்கின்றன. அவையாவன.
1. மறுகாலனியாக்கக் கொள்கைகள் இந்தியாவை சூறையாடிய பொழுது தமிழ்நாடும் தப்பவில்லை. மறுகாலனியாக்கம் செய்த முதல் வேலை தண்ணீரை தனியார்மயமாக்கியது ஆகும். உழைக்கிற வர்க்கம் உயிரைக்கொடுத்து போராடியது; போராடிக்கொண்டிருக்கிறது. கோகோ-கோலா, பெப்சி, அக்குவாபீனா, பிசிலரி என்று தண்ணீர் விற்கப்படுகிறது. ஆனால் அன்றும் இன்றும் என்றும் தமிழ் தேசியர்கள் கள்ளமவுனம் சாதிக்கின்றனர். விருந்தோம்பலை விழுமியமாக காட்டுகிற வியாசர்கள் பிசிலரிபாட்டிகளில் தண்ணீரை விற்பதை மறுக்கவில்லை. மாறாக கலாச்சாரமாக ஏற்றிருக்கிறார்கள். வியந்தும் போற்றுகிறார்கள்! ஆனால் தமிழ் இலக்கணமறியா உழைக்கிற வர்க்கத்திற்கு ‘தாயைப்பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்று பழமொழி தெரியும் என்பதால் தான் கோகோ-கோலாவிற்கு எதிரான போராட்டத்தில் இடுப்பு எலும்பு முறிந்தும் முதுகெலும்புடன் இருந்தனர். விருந்தோம்பலில் மணக்கிற வியாசர் தண்ணீரை விற்பதைப் பற்றி வாய்திறக்கவில்லை. தமிழ் தேசியம் இவ்விதம் தான் அரங்கில் அம்பலப்பட்டுப் போனது. தமிழர்களே (தரகு முதலாளிகள், மேட்டுக்குடிகள், சாதிவெறியர்கள்) பெரும்பான்மை தமிழர்களுக்கு (உழைக்கும் மக்களுக்கு) எதிராக இருக்கின்றனர். தரகு வேலை பார்க்கின்றனர். இவர்கள் தான் ‘யார் தமிழர்?’ என்று வரையறுத்து பாசிசத்தை இப்பொழுது கட்டவிழ்க்கின்றனர்.
2. ஏழைகளிடம் கைகுலுக்கிவிட்டு சோப்புபோட்டு கழுவியவர் தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராகவே வரமுடியும் என்பது வரலாறு. முதலாளிகள் தனக்கு சேவகம் செய்பவர்களை மலையாளி தமிழன் என்றெல்லாம் பிரித்துப் பார்ப்பதில்லை. கைகுலுக்கத் தெரிந்தவன் சோப்புப்போட்டுக் கழுவுகிறவன், மரம் நட்டு புகைப்படம் எடுக்கிறவன்; மினரல் வாட்டர் குடித்தவன்; விடுதித்தண்ணீர் குடித்துவிட்டு ஊசிபோடுகிறவன்; அந்த கஷ்டத்தை நாலு பேரிடம் பகிர்ந்துகொள்கிறவன் என்று ஆளும் வர்க்கத்திற்கு கைக்கூலிகள் தேவைப்படுகின்றனர். அவர்கள் பல்வேறு பல்லக்குகளில் இதயக்கனி, சுற்றுச் சூழல் ஆர்வலர் (அப்துல் கலாம்; விவேக்), தமிழ் தேசியவாதி (வியாசன்) என்று வலம்வருகின்றனர். ஆள்தான் மாறுகின்றனரே தவிர, ஒருவரை ஒருவர் இட்டு நிரப்புகின்றனர். இவர்களின் நோக்கம் மக்கள் திரள் போராட்டங்களை காயடிப்பது. மேலும் நேரம் கிடைக்கிறபொழுது டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கிற கோயபல்சுகளாக இருக்கின்றனர்.
இப்பேற்பட்ட தகைமையாளர் தான் தமிழ் தேசியத்தையும் தமிழரையும் வரையறுக்கிறார் என்கிற பொழுது கண்கள் பனிக்கின்றன!!! ஆளை அடையாளங்கண்டுகொண்ட பிறகு மறுப்புரை எழுதுவது சுளுவானது. இதன் பின்னணியில் வியாசன் முன்வைக்கிற வாதங்களை அடுத்த பின்னூட்டத்தில் பரிசீலிப்போம்.
குறிப்பு: தெலுங்கானா நிலமீட்புப்போராட்டத்திலே தொட்டி கொமரய்யா ஆண்டைகளை எதிர்த்து போராடி உழைக்கும் வர்க்கத்திற்கு ஊன்றுகோலாய் இருந்தார். இவ்வீரத்தியாகம் தெலுங்கு தேசியர்களின் கன்னட தேசியர்களின் தமிழ் தேசியர்களின் ஆளும்வர்க்கத்திற்கு சேவை செய்யும் முகத்திரையைக் கிழிக்க போதுமானது என்பதை கற்றது கையளவு அவர்கள் பரிசீலிக்க வேண்டும். மேலும் உழைக்கும் வர்க்கத்தின் போராட்டங்களோடு தன்னை இணைத்துக்கொள்ள வேண்டும். இனவெறியை ஒழிப்பதற்கு வர்க்கமாய் அணிதிரள்வதைத் தவிர வேறு வழியில்லை.
//யார் தமிழர்?” என்று இவர் எப்படி வரையறுக்க முடியும்?//
தோழர் தென்றலின் நீண்ட பிதற்றலுக்கு என்னுடைய சுருக்கமான பதிலையளிப்பதாகத் தீர்மானித்துள்ளேன். ஏனென்றால் தென்றலுக்கு நீண்ட பதிலை எழுதினாலும் அவருக்குப் புரியவைப்பது கடினம் என்பதை அனுபவத்தில் அறிந்தவன் நான். 🙂
யார் தமிழன் என்பதை வரையறுக்க எந்தக் கொம்பனிடமும் நான் அனுமதி பெறத் தேவையில்லை. ஏனென்றால் நான் ஒரு தமிழன், என்னுடைய அடையாளம் தமிழ், நான் ஆந்திராவுக்குப் போனாலென்ன ஆபிரிக்காவுக்குப் போனாலென்ன என்னுடைய இன, மொழி அடையாளம் ‘தமிழன்’ என்பது மட்டும் தான். ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் அல்லது தமது சொந்த மாநிலங்களுக்கும் அல்லது சொந்த நாடுகளுக்குப் போகும் தமிழனல்லாத வேறு, இன, மொழி அடையாளமுள்ளவர்கள், தமிழைப் பேசினாலும், அவர்கள் தமிழர்களல்ல, தமிழ் பேசுகிறவர்கள் மட்டும் தான். தோழர் தென்றல் எப்படித் தான் என்னை வசைபாடினாலும் இந்த உண்மையில் மாற்றமேற்படாது. தமிழன் என்ற முறையில் எமது முன்னோர்கள் கட்டிக்காத்த தமிழ்ப் பாரம்பரியத்துக்கும், தமிழன் என்ற அடையாளத்துக்கும் வந்தான் வரத்தான் எல்லாம் சொந்தம் கொண்டாடுவதை மறுக்கும் உரிமை எனக்குண்டு.
அய்யா வியாசன்,
தங்களது தமிழ்ப்பற்றை, தமிழார்வத்தை கண்டே உங்கள் மீது அன்பு கொண்டவன் நான்.
ஆனால் தாங்கள் இத்தகைய இனவெறியாளராக இருப்பீர்கள் என்று நான் நினைக்கவில்லை.
நீங்கள் மீண்டும் மீண்டும் எம்மை போன்றவர்களை அவமதிக்கிறீர்கள்.
தமிழ் பெற்றோர்களுக்கு பிறந்து இப்போது தமிழை மறந்து அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் வாழ்ந்துக்கொண்டு தங்களது பிள்ளைகளிடம் ஆங்கிலத்தில் மட்டுமே பேசுபவர்கள் தங்களது வியாக்கியானத்தின்படி சுத்த தமிழர். தெலுங்கு முன்னோர்கள் கொண்டும் உணர்வால், மொழியால், சிந்தையால் தமிழராக விளங்கும் எங்களை நீங்கள் மிகவும் கேவலமான வார்த்தைகளால் தைக்கிரீர்கள்.
எத்தனையோ விவாதங்களில் தமிழ்ப்பற்றினால் உங்களுடன் கை கோர்த்து விவாதித்துள்ளேன்.
இனியும் உங்களுக்கு கை கொடுக்கும் நண்பர்களை அவமதிக்க முயலாதீர்கள்.
பின் உங்களுடன் இணைவதற்கு கைகளே இல்லாமல் போகும்.
மரம் தனது கிளைகளை வெட்டிக்கொண்டே சென்றால் பின் எப்படி வளரும்?
தங்களது கருத்தின் படி சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் வெளியினத்தாரோடு தொடர்பு வைத்திருந்ததால் தமிழரல்லாதவர்கலாவார்களோ?
மீண்டும் சொல்கிறேன், ஆதி காலத்தில் நோக்கி பின்னே பயணித்து பார்த்தால் நாம் அனைவரும் ஒரு இனத்திலிருந்து தான் பிறந்தோம் என்பது தெளிவாக தெரியும்.
வியாசன் ஒரு 350 வருசதுக்கு முன்னாடி நீங்க தமிழன்னு எப்ப்டி நம்புறது. யாரு உங்கலுக்கு சர்டிபிடிகெய்ட் குடுத்தன்ங்க . யாழ்பானம் வெள்ளாளர் எல்லாம் தமிழன்ற குருட்டு நம்பிக்கய தவிர வேர என்ன இருக்கு .
இந்தக் கேள்விக்கு முன்பே நான் பதிலளித்து விட்டேன்.
//உங்கள் பரம்பரையில் எத்தனை வருட வரலாற்றை உங்களால் நிரூபிக்க முடியும் வியாசரே? ///
அப்படியெல்லாம் பின்னோக்கிப் போய் நான் எதற்காக நிரூபிக்க வேண்டும். எனக்கு தமிழன் என்பதை விட எந்த இன, மொழி அடையாளமும் கிடையாது, உங்களைப் போலல்லாமல், என்னுடைய தாய்தந்தையினர், உறவினர்கள் எல்லோருமே தமிழைத் தான் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். அதனால் என்னுடைய மூதாதையர்கள் வேறு மொழியினராக இருந்திருக்கலாமோ என்று சந்தேகிக்க வேண்டிய தேவையோ அல்லது கட்டாயமோ எனக்குக் கிடையாது.
//உங்களைப் போலல்லாமல், என்னுடைய தாய்தந்தையினர், உறவினர்கள் எல்லோருமே தமிழைத் தான் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர்// என்னொட முப்பாடனுக்கும் தமிழ் தவிர எதும் தெரியாது.ஆனா என்னொட 373 தலைமுற முந்தின முத்தம்மாளூம் சுத்த தமிழச்சனு சாதிக்குற. முட்டாள் இல்ல. 2000 வருசதுக்கும் மேல இனக்கலப்பு நடந்துட்து இருக்கு.
திரு வியாசன், சேடன் பகத் என்ற பஞ்சாபிகாரர் எழுதிய 2 States-The Story of My Marriage என்ற சுயசரிதை-நாவலை படிக்க நேர்ந்தது.IIM-A மேலாண்மை கல்வி நிறுவனத்தில் படிக்கும் ஒரு தமிழ் பெண் , அதே IIM-A வில் படிக்கும் ஒரு பஞ்சாபிகாரரை நேசித்து திருமணம் செய்து கொள்வதை பற்றிய எளிய ஆங்கில நடையில் எழுதப்பட்ட நாவல் அது. வட இந்தியர்களுக்கு ,தமிழர்கள் மீதான வெறுப்பை பல இடங்களில் சேடன் பகத் அழகாக வெளிகாட்டுவார்.நாயகனின் அம்மா அவர்கள் ஸ்ரீதேவி,ஹேமமாலினி ஆகியோர் பஞ்சாபிகாரர்களை வளைத்து போட்டு கொண்டனர் என்று எல்லாம் கூறுவார். தமிழ் பெண்ணை நேசிக்கும் நாயகனை பார்த்து அவன் அம்மா “Tamilians will trap you” என்று எல்லாம் கூறுவார்.ஆனாலும் இருவரும் இன வேறுபாடுகளை கடக்க பேராடி வெற்றி பெற்று திருமணம் செய்து கொள்வார்கள். இது போன்ற பல உண்மை கதைகளை இனம்,மதம்,மொழி,நாடு,சாதி கடந்து வெற்றி பெறுவதை நாம் பார்கின்றேம் அல்லவா ? Chetan Bhagat,Anusha Bhagat போன்றவர்களின் குழந்தைகளை தமிழர் என்பதா ? பஞ்சாபியர் என்பதா ?
*திருமதி. டயானா,
மன்னிக்கவும் Chetan Bhagat,Anusha Bhagat யாரென்று எனக்குத் தெரியாது. ஸ்ரீதேவி ஒரு தமிழச்சி அல்ல, தெலுங்குப் பெண். அவரது குழந்தைகள் பஞ்சாபியரா அல்லது தெலுங்கரா என்பதை யாரும் தெலுங்கர்களிடம் தான் கேட்கவேண்டும். ஹேமமாலினி தமிழ்பிராமணர், அவர்களில் பலர் தமிழை வெறுக்கும் சமக்கிருத வெறியர்களாக இருந்தாலும் கூட, பெரும்பாலானோரின் இன மொழி அடையாளம் தமிழ் மட்டும் தான். அவர்கள் வீட்டிலும் வெளியிலும் தமிழைப் பேசுவது மட்டுமன்றி, உலகில் எங்கிருந்தாலும் தம்மைத் தமிழர்கள் எனத் தான் அடையாளப்படுத்துகிறார்கள். ஹேமமாலினியின் வாரிசுகள் கலப்பினக் குழந்தைகள். அவர்களின் இன-மொழி அடையாளத்தைப் பற்றிய குழப்பம் அவர்களுக்கு ஏற்படுவது இயற்கையே. உலகில் எல்லாக் கலப்பினக் குழந்தைகளுமே இந்தக் குழப்பத்தை எதிர்நோக்கிறார்கள். அதனால் தான் தமிழர்கள் தமிழர்களையே திருமணம் செய்ய வேண்டுமென்ற கருத்துடன் நான் உடன்படுகிறேன்.
திரு வியாசன், யார் தமிழர் என்ற ஆய்வை நீங்கள் தொடங்கும் போதே திரு தென்றல் அவர்களிடன் இருந்து உங்களுக்கு வரும் எதிர்ப்பை [“யார் தமிழன்?” என்ற மறுமொழி அப்பட்டமான இனவெறி] நான் ஏற்கவில்லை. திறந்த மனதுடனும், கண்ணியம் மீறாத வார்த்தைகளுடனும் இவ் விவாதம் மேலும் செல்வது தான் அதிக விவரங்களை வெளி கொண்டுவரும். விவாதம் கிழகண்ட கேள்விகளின் அடிப்படையில் முன் செல்லுமாயின் அது வினவு வாசகர்களுக்கும், அனைவருக்கு பயன் தரும் என்று நம்புகின்றேன்.
@@@இன கலப்பு அடையும் குழந்தைகள் எதிர்கொள்ளும் கலாசார,பண்பாட்டு பிரச்சனைகளை இன்றைய நவின யுகத்தில் எதிர்கொள்ளவே முடியாதா ?வெளிநாட்டு வாழ் புதிய தலைமுறை தமிழர்கள்[ஒருவேளை இனகலப்பு அடைந்து இருந்தால்] இதனை எப்படி எதிர்கொள்கின்றனர்?
@@@இனகலப்பு திருமணங்கள் ஒரு இனத்தை கலப்பு இனமாகி அதன் பண்பாட்டை அழிக்கும் எனில் , ஒரு இனத்துக்குள் நிகழும் சாதி கலப்பு திருமணங்கள் சாதியத்தை அழித்து ஒரு இனத்தை மிக்க வலிமையாகி அதன் பண்பாட்டை காக்குமா ? நேரடியான கேள்வி : தமிழ் இனத்துக்குள் ஒரு வேலை 90% சாதிகலப்பு திருமணங்கள் நடைபெற்றால் அத்தகைய சாதி கலப்பு நல்லது தானே ? அது தமிழ் இனத்தை வலிமையானதாக மாற்றுமா ?
வியாசன்,
தமிழ் பேசும் மற்றும் தத்தமது மதத்தின் வழக்கத்தை பின்பற்றும் கிருத்துவர்,இசுலாமியர் தமிழரா?
தெலுகு மொழியை தோண்டிச் சென்றால் தமிழ் மொழி தான் வரும் என்று நண்பர் கற்றது கையளவு சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் தமிழ் தான் தனது தாய்மொழி என்றுரைக்கிறார். தமிழருடைய கலாச்சாரத்தை தான் தானும் பின்பற்றுவதாக கூறுகிறார் (தமிழருடைய பொதுவான கலாச்சாரம் என்பதை தாங்கள் தான் கூற வேண்டும் ) அது மட்டுமல்லாமல் மறுமொழியும் அழகாக தமிழில் தான் இடுகிறார். இங்கே நண்பர் கற்றது கையளவு நல்லத் தமிழில் அழகாக பின்னூட்டம் இடுகிறார். தமிழைத் தாய்மொழி என்கிறார். தமிழ் தான் அவரது பயன்பாட்டு மொழியாக உள்ளது. இவரைத் தமிழரென்று தங்கள் உள்ளம் ஏற்கவில்லை. ஆனால் சமத்கிருதம் வெறி பிடித்துத தமிழை அதனுடன் கலந்து அடித்து விடும் அவாள்கள் மற்றும் அவர்களின் பாதந்தாங்கிகளை தமிழர்கள் என்கிறீர். காரணம் அவர்கள் எங்கு சென்றாலும் தம்மை தமிழர் என்று பகற்கிறார்கலாம். என்னக் கொடுமை சரவணன்.
பெரும்பான்மையான தமிழ் மக்களுடைய நிறம்,உயரம் உள்ளிட்ட உடலியப் பண்புகள் ஏன் இவ்வளவு வேறுபாடாக உள்ளது. ஏன் தனித்துவமாக இல்லை. தமிழருக்கென்று தனித்துவமான உடலியல் பண்புகள் ஏன் இல்லை. அதாவது வெள்ளையின மக்களுக்கென்று தனித்துவமான உடலியல் பண்புகள் உண்டு. ஆப்ரிக்கா கறுப்பின மக்களுக்கென்று தனித்துவமான உடலியல் பண்புகள் உண்டு. அதே போல, ஆப்ரிக்கா-அமெரிக்க கலப்பின மக்களுக்கென தனித்த உடற் பண்புகள் உண்டு ஆனால் அவர்கள் கலப்பினம் தான். தமிழனின் இந்த உடற் பண்புகளின் மாற்றத்திற்கு காரணம் இணக்கலப்பே.
தமிழன் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் இந்த கலாசாரம் தான் பேண வேண்டும் என்பதை யாரவது வரையறுத்து இருக்கிறார்களா?
நன்றி.
இன்னும் நான் பதிலே வைக்கவில்லை. அதற்குள் சுருக்கமான பார்வையை முன்வைத்திருக்கிறீர்கள்! தாங்கள் வைத்த சுருக்கமான பதிலை வாசித்தேன். ஆனால் இது பயங்கர குழப்பமாக இருக்கிறது.
தங்கள் பார்வைக்கு;
“ஆந்திராவுக்கும், கேரளாவுக்கும் அல்லது தமது சொந்த மாநிலங்களுக்கும் அல்லது சொந்த நாடுகளுக்குப் போகும் தமிழனல்லாத வேறு, இன, மொழி அடையாளமுள்ளவர்கள், தமிழைப் பேசினாலும், அவர்கள் தமிழர்களல்ல, தமிழ் பேசுகிறவர்கள் மட்டும் தான்.”
தமிழைப் பேசினாலும் அவர்கள் தமிழர்களல்ல, தமிழ் பேசுகிறவர்கள் மட்டும் தான் என்றால் என்ன அர்த்தம்?
யார் தமிழன் என்பதை வரையறுக்க எந்தக் கொம்பனிடமும் நான் அனுமதி பெறத் தேவையில்லை. ஏனென்றால் நான் ஒரு தமிழன், என்னுடைய அடையாளம் தமிழ், நான் ஆந்திராவுக்குப் போனாலென்ன ஆபிரிக்காவுக்குப் போனாலென்ன என்னுடைய இன, மொழி அடையாளம் ‘தமிழன்’ என்பது மட்டும் தான்.
தமிழ்நாட்டில் வாழும் போது அவர்களும் தமிழர்களே என்றும், திராவிடர்கள் எல்லாம் ஆதியில் தமிழர்களே அதனால் நாங்களும் தமிழர்கள் என்றும், நாங்கள் பெரியாரிஸ்டுகள் அதனால் நாங்கள் தமிழர்கள் என்றும், அல்லது எங்களுக்கும் தமிழுணர்வுண்டு, ஆகவே நாங்கள் தமிழர்கள் என்றும், பத்து தலைமுறையாக தமிழ்நாட்டில் வாழ்கிறோம் ஆனால் இன்னும் வீட்டில் எமது முன்னோர்களின் மொழியைப் பேசுகிறோம், ஆனாலும் நாங்களும் தமிழர்கள் என்றும் வாதாடுகிறவர்கள் எல்லோருமே அவரவரது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பிப் போய் வாழ நேர்ந்தால், அங்கெல்லாம் தமிழர்களாக இருக்க மாட்டார்கள், அவர்களின் இன-மொழி அடையாளம் தமிழர்களாக இருக்காது, தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள் எனத் தமது முன்னோர்களின் இன/மொழி அடையாளத்தை இயல்பாகவே பெற்று விடுவார்கள், ஆனால் என்னைப்போன்ற தமிழர்களுக்கு, யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தாலென்ன, ஜமைக்காவில் வாழ்ந்தாலென்ன, தமிழன் என்ற இன-மொழி அடையாளத்தை விட வேறெந்த இன-மொழி அடையாளமும் கிடையாது.
ஆகவே தமிழனல்லாத வேறு, இன, மொழி அடையாளங்களையுமுடையவர்கள், தமிழைப் பேசினாலும், அவர்கள் தமிழர்களல்ல, தமிழ் பேசுகிறவர்கள் மட்டும் தான். தோழர் தென்றல் எப்படித் தான் என்னை வசைபாடினாலும் இந்த உண்மையில் மாற்றமேற்படாது. தமிழன் என்ற முறையில் எமது முன்னோர்கள் கட்டிக்காத்த தமிழ்ப் பாரம்பரியத்துக்கும், தமிழன் என்ற அடையாளத்துக்கும் வந்தான் வரத்தான் எல்லாம் சொந்தம் கொண்டாடுவதை மறுக்கும் உரிமை எனக்குண்டு.
இனிமேலாவது புரியுமென நம்புகிறேன். 🙂
திரு வியாசன், திரு தென்றல்,
தமிழ் நாட்டுக்கு இட பெயர்வு செய்து, தொழில் செய்து, வாழும் பெரும்பாலான வெளிமாநிலத்தவர்கள் [சேட்டுகள்,குஜராதிகள்] அவர்கள் வாழும் தமிழ் நாட்டு பகுதிகளில் உள்ள தாலுக்கா ஆபிசுகளில் “@@@@முயன்று@@@” ரேசன் கார்டுகள், ஓட்டர்ஸ் ID ஆகியவற்றை பெறுகின்றனர். ஆனாலும் அவர்கள் சொந்த மாநிலட்டிலும் ” ரேசன் கார்டுகள், ஓட்டர்ஸ் ID ஆகியவற்றை பெற்று உள்ளனர். கடந்த தேர்தலில் தமிழ் நாட்டில் வாக்கு அளித்துவிட்டு மீண்டும் UP மாநிலத்தில் வாக்கு அளித்த ஒரு வட இந்திய குடும்பம் துணி வியாபாரம் செய்து கொண்டு எங்கள் தெருவில் வாழுகின்றது. இவர்களை எல்லாம் எப்படி முறைபடுத்துவது???? என்பது தமிழர் நலன் சார்ந்த மிக முக்கியமான கேள்வி!
டயானா,
உங்களுக்கு எடுத்துக்கட்டுவதர்க்கு சேட்டுகள்,குஜராதிகள் தான் கிடைத்தார்கள் ஆனால் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளால் தனது சொந்த பந்தத்தை இழந்து, வீடிழந்து இங்கே வந்து வாழும் வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகள் உங்கள் கண்களுக்குப் புலப்படவில்லையா?
இந்தியாவில் பிறந்ததால் இந்திய குடியுரிமையும், அமெரிக்க, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில், அந்த முதலாளிகளுக்கு நீண்ட நாட்கள் சேவை செய்து குடியுரிமைப் பெற்றும், அவ்வப்போது இங்கே வந்து டாட்டா பாய் பாய் சொல்கிறார்களே அந்த மனிதர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர்கள்? தமிழினத்தையா? அணைத்தையும் இழந்து அகதிகள் போல இங்கு வந்து, இந்த தமிழ்நாட்டு மக்களுக்காக உழைக்கிறார்களே காலங்காலமாக, அவர்கள் தமது சொந்த கலாசாரப் பண்பாட்டு விழுமியங்களைக் கூட மறந்து விட்டு இங்குள்ள காலச்சாரத்தையும், பண்டிகைகளையும் பின்பற்றி வாழ்கிறார்களே அவர்கள் எந்த இனம்? பல நூறாண்டுகள் இங்கே கழித்து விட்ட நிலையில், அவர்கள் தமது தடங்களைத் தொலைத்து விட்ட நிலையில் மீண்டும் தமது பழைய கலாச்சாரத்தைத் தொடரத் தான் முடியுமா?
முதலாளித்துவ சுரண்டல் முறையினால் தமது மொழி, கலாச்சாரம், பண்பாடுகள் சிதைந்து வருவது கண் முன்னால் நடக்கையில் அதை மீட்டெடுக்க வழி வகையின்றி தான்தோன்றி தனமாக நுகர்வு கலாச்சாரத்திலும் , முதலாளிகளுக்கு சேவை செய்வதிலும் கழிக்கும் இனமானப் பச்சைத் தமிழர்கள் தான் தமிழினம் என்றால் அந்த இனத்தில் நான் இல்லை. இன்னொரு பக்கம் அறிவியலின் சாட்டையடி பட்டு இனம் மொழிப் பெருமைப் பேசித் திரிபவர்கள் இன்னும் சுரணை வரபடவில்லைஎனில் என் செய்வது? மனித இனம் ஆப்ரிக்கா கண்டத்தில் இருந்து தான் உலகம் முழுதும் பரவி இருக்க வேண்டும் என்பது தான் பொதுவாக அனைவரும் ஏற்றுக் கொண்ட உண்மை. படிம ஆய்வுச் சோதனைகளும் அதைத் தான் மெய்பிக்கின்றன. டி.என்.ஏ பரிசோதனைகளும் அதை தான் கூறுகின்றன.
இங்கே இதே தாங்கள் கூறும் இனத்தில் பிறந்து இந்து மத பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மையால் கிருத்துவராகவும், இசுலாமியராகவும் இதர சிரும்பான்மையினராகவும் மாறிய மக்கள் தமிழரா இல்லையா? இந்து/சைவம் மதம் தான் தமிழருடைய கலாச்சாரம் என்றால் இவர்கள் மதத்தால் வேறு கலாச்சாரமே பின்பற்றுகிறார்கள். நாங்கள் அத்தகைய மதங்களை ஒழிக்கவே முயல்கிறோம் எனில் தாங்கள் முன்மொழியும் அந்த தமிழர் பண்பாடுகள்,கலாச்சாரங்கள் எவை?
அறிவியலின் அடிப்படையில் நமணைவரும் ஒரு கலப்பினம் தான். நமது உடலில் இருக்கும் டி.என்.ஏ அதற்க்கு சான்று பகர்கிறது.கற்றது கையளவு , வியாசன், டயனா ,சரவணன் மற்றும் வினவுத் தோழர்கள் அனைவரும் கலப்பினமே உடலால். ஒவ்வொருவருக்கும் ஒரு பண்பாடு, எங்களுக்கு பாட்டாளிவர்க்க பண்பாடு, உங்களுக்கு ஒருப் பண்பாடு என நமக்குள்ளே எத்துனை வேறுபாடுகள். இதில் ஏனய்யா கற்றது கையளவை வருத்துகிறீர்கள். அவர் தமிழ் தான் தன தாய்மொழி என்கிறார், தன ஒருத தமிழர் என்று உளமார கூறுகிறார். வேறு என்ன வேண்டும் உங்களுக்கு. அவர் தமிழர் தான் என்பதை மனநிறைவுடன் நான் ஏற்றுக் கொள்கிறேன்.
நன்றி
நண்பர் சிவப்பு அவர்களே,
மிக்க நன்றி. உணர்வால், சிந்தையால், பேசும் மொழியால் தமிழனாக வாழும் என்னை தமிழன் என்று ஏற்றுக்கொண்டதற்கு மிக்க நன்றி.
நண்பர் வியாசன் மற்றும் டயானா அவர்களுக்கு சில கேள்விகள்:
1. ஒருவர் தமிழர் என்று எப்படி சொல்வீர்கள். ஒருவரது வம்சம் எத்தனை ஆண்டுகள், எத்தனை தலைமுறைகள் தமிழகத்தில் இருந்தால் அவர்களை தமிழர் என்று ஒத்துக்கொள்வீர்கள்?
2. தென்னிந்தியா மொழிகள் அனைத்திற்கும் மூலம் தமிழ் தான் என்பது தங்கள் அறியாததா?
3. சேர சோழ பாண்டியர் என பெருமையாக கூறுகிறோம். அதில் சேரர்கள் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தங்களுக்கு தெரியாததா?
4. சேர சோழ பாண்டியர்கள் வெளி மன்னர் குலங்களில் திருமண உறவு வைத்ததே இல்லை என்று சாதிக்க போகிறீர்களா? திருமண உறவு உண்டெனில், தாங்கள் மன்னரினம் என்று பறை சாற்றும் பலர் கலப்பினத்தவர் என்று கூற விழைகிரீர்களா?
5. தமிழ்நாட்டில் தமிழ் பேசும் பெற்றோருக்கு பிறந்து பின் தமிழை நீசபாஷை என்று நா கூசாமல் சொல்பவர்களை பச்சை தமிழறேன்பீரா?
6. தமிழகத்தில் பிறந்து பின் வெளிநாட்டில் வசதியான வாழ்ந்து கொண்டு தங்களது குழந்தைகளிடம் தமிழில் பேசாமல் முழுக்க முழுக்க ஆங்கிலத்தில் பேசுபவர்களை மறத்தமிழர் என்பீரோ?
7. இத்தனை ஆண்டுகள் தமிழகத்தில் பல நூற்றாண்டுகளாக வாழ்ந்தும் இன்னமும் அவா, இவா, என்று பார்ப்பன மொழி பேசுபவர்களை எந்த வகையில் சேர்ப்பீர்கள்?
8. தாங்கள் தமிழர் என்று பெருமையாக சொல்கிறீர்கள். அதற்கு என்ன ஆதாரம் என்று நினைக்கிறீர்கள். எத்தனை வருடம் பின்னோக்கி பார்க்க முடியும். நதிமூலம், ரிஷிமூலம் என்று ஆராய்ந்தீர்கள் என்றால் முடிவில் கிடைக்கும் பதில் தான் என்ன?
திரு கற்றது கையளவு,
நான் திரு வியாசனை நோக்கி எழுப்பிய கேள்வியை பலவாறாக எண் இட்டு அடுக்கி என்னிடமே கேட்பது தான் உங்கள் விவாத அழகா ? இது தான் உங்கள் அறிவு நாணயமா? நான் திரு வியாசனிடம் கேட்ட கேள்வி : யார் தமிழர் என்ற ஆய்வு செய்வது உங்கள் உரிமை என்றாலும் , பயன்படுத்த பட வேண்டிய வார்த்தைகள் தெளிவானதாக, படிப்பவர்களை துன்பம் ஏற்படுத்தாததாக இருக்க வேண்டும். பெண்களை இழிவு செய்யும் வார்த்தையாகிய “bastardized” என்பதை முறையாக தெலுங்கு மக்களுடன் திருமண உறவுக்கு பெண் எடுத்து ,பெண் கொடுத்து வாழும் தமிழ்ர்களை பார்த்து நீங்கள் கூறும் போது அங்கு கலப்பு திருமணத்துக்கு எதிரான சாதியம் தான் தலை தூக்குகின்றது. வரலாற்றில் சுந்தர சோழர் அவர்களின் அம்மா அவர்கள் தெலுங்கு பெண் தான். இதன் பொருட்டு சோழ பரம்பரையை, ராஜராஜனை, ராஜேந்திரனை “bastardized race” என்று கூற முடியுமா உங்களால் ?
தமிழ் இனம் பற்றிய இவ் விவாதத்தில் உள் நோக்கத்துடன் சிலர் தமிழ் இனத்துக்கு எதிராக பேசும் போது அதே கோஷ்டியில் திரு கற்றது கையளவு அவர்களும் சேர வேண்டிய அவசியம் ஏன் வந்தது? உங்கள் 10 கேள்க்களுக்கான பதில்களை அடுத்த பதிவில் அளிக்கின்றேன்
வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகளையும், [சேட்டுகள்,குஜராதிகள்] இவர்களையும் ஏன் ஒப்புமை செய்கின்றிர்கள் ? தமிழ் நாட்டில் வந்து இருந்து உழைத்து ,தமிழர் புறகணித்த ரேசன் அரிசியை உண்டு , 6 மாதம் ஒருமுறை தன் சொந்த ஊர் சென்று வரும் வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகலும், தமிழ் நாட்டை அட்டை பூச்சி போன்று உரிஞ்சி வாழும் சேட்டுகலும் ,குஜராதிகளும் ஒன்றா ? வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகள் எல்லாம் சேட்டுகள்,குஜராதிகள் போன்று ரேசன் கார்டுகள், ஓட்டர்ஸ் ID களை எல்லாம் தமிழ் நாட்டில் பெறுவது இல்லை திரு சிகப்பு .
என்னுடைய இந்த கருத்துகள் வந்து இருந்தால் நீங்கள் எனக்கு இவ்வளவு நீண்ட பதில் எழுதி இருக்க மாட்டிர்கள் திரு சிகப்பு :
சம்மு-கசுமீர் மாநிலத்துக்கு உள்ள சிறப்பு உரிமை சட்டம் Article 370 படி அம் மாநிலத்தவருக்கு[இனத்துக்கு] பல சிறப்பு உரிமைகள் உள்ளன அல்லவா ? அது போல இந்தியாவில் உள்ள ஒவொரு மாநிலமும் [இனமும்] சிறப்பு உரிமைகளை Article 370 படி பெறுமாயின் அது ஒவொரு இனத்தின் வாழ்வாதரத்தையும், பொருளாதார, மொழி ,பண்பாட்டு உரிமைகளையும் பாதுகாத்து அவ்வினங்களை வளர்ச்சி அடைய செய்யும் அல்லவா ? மோடி அவர்கள் கோருவது என்ன என்றால் சம்மு-கசுமீர் மக்களின் Article 370 யை நீக்க வேண்டும் என்பது. இந்துத்துவ மோடியும் ,பிஜேபி யும்,அவர்களின் தாய் ஆகிய RSS வும் கனவு காணும் “ஹிந்து ஹிந்தி பாசிச ஹிந்தியா ” என்ற இலச்சியத்தை அவர்கள் அடையாமல் தடுக்க வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள ஒவொரு இனமும் Article 370 படி மிக்க உரிமைபெற்று அதன் மூலம் வலிமை பெற்று தேவை பட்டால் தனித்து இயங்கும் நிலையை அடைய வேண்டும் அல்லவா ? எனவே ஒவொரு மாநிலமும் Article 370 படி சிறப்பு உரிமைகள் பெற போராட வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.
அப்படி சிறப்பு உரிமைகள் பெரும் ஒவொரு இன மக்களும் தன் மாநில நலனுக்கு உழைப்பதுடன் , தோழர் திரு காரல் மார்க்ஸ் அவர்களின் சமுக இயக்கவியல் படி புதிய சனநாயகம், சோசியலிசம், கம்யூனிசம் என்று வருங்கால வரலாறு போக்கில் முன்னேறும் அல்லவா ?
நன்றி
திரு சிகப்பு,
பொருளாதார அகதிகளாக தமிழக்கம் வந்து உழைத்து வாழும் வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகள் போன்றவர்கள் அல்ல இந்த சேட்டுகள்,குஜராதிகள். சேட்டுகள்,குஜராதிகள் போன்றவர்கள் செய்யும் பொருளாதார சுரண்டல்களை நான் கூற முயலும் போதே எனக்கு வாய் பூட்டு போட முயல்வது எப்படி சரியாகும் திரு சிகப்பு ?
மார்க்கண்டேய கட்ஜூ கூட இதனை தான் வேறு விதமாக கூறுகின்றார்.திராவிடர்களும் இந்தியாவிற்கு வந்தேரிகள் தான் என்று. தமிழ் ஹிந்துவில் அவர் பேட்டியை சமிபத்தில் படித்தேன்
நன்றி திரு சிகப்பு.இக் கருத்து உரைக்க வேண்டியவர்களுக்கு நன்கு உரைக்கட்டும்
இனம், மொழி ,மத சிறுபான்மை மக்களுக்கு , தமிழகம் அவர்களுக்கு உரிய கல்வி,பண்பாட்டு, மொழி,மத உரிமைகளை வேறு எந்த மாநிலத்தை விடவும் சிறப்பாகவே கொடுத்து கொண்டு தான் உள்ளது.அது தொடரவேண்டும் என்பது தான் என் எண்ணம்
திரு கற்றதுகையளவு அவர்களிடம் நான் நடத்திய விவாதம் அருமையாக முடிவுற்றதை பார்க்க வில்லையா நீங்கள்? மீண்டும் வேண்டுமானாலும் படிக்கவும் feedbacks 19.1.1 ,19.1.1.1.2.
திரு தென்றல்,தமிழைப் பேசினாலும் அவர்கள் தமிழர்களல்ல, தமிழ் பேசுகிறவர்கள் மட்டும் தான் என்றால் என்ன அர்த்தம் என்றால் “தமிழ் நாட்டில் வாழும் மொழி சிறுபான்மை மக்கள்” [Linguistic Minorities Living in Tamil Nadu] என்று அர்த்தம்.
திரு தென்றல் ,திருச்சி ,வேலூர் போன்ற இடங்களில் நடைபெற்ற “கால்டுவெல் 200-ம் ஆண்டு கருத்தரங்கம்” நிகழ்வின் மேடையில் உள்ள Packed Bottle Water புகை படங்கள் வினவு தளத்தில் உள்ளன். பார்க்கவும்.
//விருந்தோம்பலை விழுமியமாக காட்டுகிற வியாசர்கள் பிசிலரிபாட்டிகளில் தண்ணீரை விற்பதை மறுக்கவில்லை. மாறாக கலாச்சாரமாக ஏற்றிருக்கிறார்கள். வியந்தும் போற்றுகிறார்கள்! ஆனால் தமிழ் இலக்கணமறியா உழைக்கிற வர்க்கத்திற்கு ‘தாயைப்பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே’ என்று பழமொழி தெரியும் என்பதால் தான் கோகோ-கோலாவிற்கு எதிரான போராட்டத்தில் இடுப்பு எலும்பு முறிந்தும் முதுகெலும்புடன் இருந்தனர். விருந்தோம்பலில் மணக்கிற வியாசர் தண்ணீரை விற்பதைப் பற்றி வாய்திறக்கவில்லை. தமிழ் தேசியம் இவ்விதம் தான் அரங்கில் அம்பலப்பட்டுப் போனது//
நீங்கள் சுட்டிக்காட்டுகிற தண்ணீர் போத்தல், புகைப்படங்களில் மட்டுமல்ல; ஒவ்வொரு வீடுகளிலும் உள்ளன. ஆனால் இதை கலாச்சாரம் என்று மேட்டுக்குடியினர் தவிர யாரும் பீற்றித் திரிவதில்லை. தண்ணீர் பானையை மக்கள் கும்பிட்ட காலம் போய் இன்றைக்கு தண்ணீர் கேனை தலைகீழாய் கவிழ்த்தி அருந்துகிறது தமிழகம். உங்கள் வீட்டில் தண்ணீர்கேனை கழுவேற்றி வைத்திருப்பீர்களேயானால் தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிற விழுமியங்கள் என்ன?
இன்றைக்கு மக்கள் நிர்பந்தத்தால் 40க்கும் 50க்கும் தண்ணீரை காசு கொடுத்து வாங்குகிறார்கள் என்ற நிலைக்கு யார் காரணம்? உண்மையை மறைக்க இயலாது டயானா!
வர்க்கமாக ஒன்றுசேர்ந்து போராடுகிற பொழுதெல்லாம் அதைத் தகர்க்கும் பொருட்டு ஆளும்வர்க்கம் பயன்படுத்துகிற/பயன்படுத்திய பினாமி இயக்கங்கள் தான் தமிழ்தேசிய, தலித் தேசிய இயக்கங்கள். சான்றாக ‘அமெரிக்கா நாயே வெளியேறு’ என்று கோகோ-கோலாவிற்கு எதிராக புரட்சிகர இயக்கங்கள் போராடிய பொழுது சைக்கிள் ஓட்டினார்கள் தேசியம் பேசியவர்கள். மிகவும் கீழறுப்புவேலையாக கோகோ-கோலா ஆலை வருவதைத் தடுக்கிறவர்கள் தலித் மக்களின் வேலைவாய்ப்பிற்கு எதிராக இருக்கிறார்கள் என்று முதலாளிகளுக்கு ஆதரவாக பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துவிட்டவர்கள் தலித்விடுதலை பேசிய தலித்தேசியவாதிகள். ஆனால் ஒருபுறம் பார்ப்பனியம் இன்றும் தலித்துகளை தண்ணீரை நெருங்கவிடவில்லை. தனியார்மயமோ பொருளாதார சுருக்குக் கயிற்றை தலித்துகளின் மீது இறக்கி தண்ணீரைக் கிடைக்காதபடி செய்திருக்கிறது.
மறுபுறம் தமிழ்தேசியம் முல்லைப்பெரியார் போராட்டத்தில் கிழிந்துதொங்கியது. மக்களே போஸ்டர் ஒட்டி “தோணி ஏறி ஈழம் போகத் தெரிந்த வைகோவே, பேருந்து ஏறி தேனிவரத் தெரியாதா?” என்று நாறடித்தனர்.
மேலே உள்ளதை சுருக்கி கோட்பாடாக முன்வைத்தால் நமக்கு கிடைப்பது இதுதான் “தனியார்மய மறுகாலனியாதிக்க கொள்கைகளை வீழ்த்தி, மக்கள்திரள் விடுதலை அடைவதை தடுக்கும் அப்பட்டமான முரணியக்கமாக தமிழ்தேசியமும் விளங்குகிறது” என்பதுதான்.
எனவே புகைப்படத்தில் நீங்கள் பார்த்த தண்ணீர் போத்தல், மறுகாலனியாதிக்கம் மற்றும் அவற்றிற்கு சேவகம் புரியும் தமிழ்தேசியம், தலித்தேசியம், மதம் ஆகியவற்றின் விளைபொருள்தான். எனவே கவலைப்படாதீர்கள். இந்நிலைமைகள் மக்கள் திரள் தலைமையில் முறியடிக்கப்படும். ஆனால் நீங்கள் உண்மையில் கவலைதானே கொள்கிறீர்கள்?!!!
திரு தென்றல் ,
குடிநீர் அருந்துவதில் திரு வியாசனுக்கு ஒரு சட்டம் , ம க இ க நிகழ்ச்சிகளுக்கு வேறு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது அல்லவா ? வியாசன் packed water bottles அய் பயன் படுத்துவது தவறு நீங்கள் கூறினிர்கள் என்றால் ம க இ க நிகழ்ச்சிகளுக்கு packed water bottles அய் பயன் படுத்துவதும் தவறு தான் என்ற எளிய தர்க்கம் [logic]கூட உங்களுக்கு தெரியாமல் இருக்காது அல்லவா ? குடிநீர் விடயத்தில் வியாசனுக்கு எதிராக தட்டு அச்சு செய்யும் விரல்கள் ம க இ க என்று வரும் போது….?
//நீங்கள் சுட்டிக்காட்டுகிற தண்ணீர் போத்தல், புகைப்படங்களில் மட்டுமல்ல; ஒவ்வொரு வீடுகளிலும் உள்ளன. ஆனால் இதை கலாச்சாரம் என்று மேட்டுக்குடியினர் தவிர யாரும் பீற்றித் திரிவதில்லை. //
வீட்டில் உள்ள ஆழ்துளை[போர்] மூலம் பெறும் நீரை மேலுள்ள தொட்டியில் சேமிக்காமல் நேரடியாக குடங்களில் சேமித்து உணவு தயாரிப்புக்கு நேரடியாகவும் , குடிநீருக்கு சுட வைத்தும் பயன்படுத்துகின்றேம். இதனால் வாரம் 3 கேன் வாங்காமையால் ஒருகேன் விலை Rs 25 என்றாலும் 3 * 4 * 25 = Rs 300 மாதம் எங்கள் வீட்டில் சேமிக்கபடுகின்றது.ஆண்டுக்கு 300 *12 = Rs 3600 எங்கள் வீட்டில் சேமிக்கபடுகின்றது.நாங்கள் மட்டும் அல்ல , நாங்கள் வாழும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிள்ப[ஈரோடு,கோவை,நாமக்கல்] உள்ள கிராம பகுதிகளில் இப்படி தான் போர் நீரை பெற்று பயன் படுத்துகின்றேம். அல்லது பஞ்சாயத்து மூலம் பெறப்படும் மேல்நிலை நீர் தொட்டிகளில் சேமித்து வைக்கபட்டு பகிரப்படும் நீர் கூட இப்படி தான் கிராம மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க படுகின்றது.
//உங்கள் வீட்டில் தண்ணீர்கேனை கழுவேற்றி வைத்திருப்பீர்களேயானால் தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிற விழுமியங்கள் என்ன? //
டயானா,
//வியாசனுக்கு ஒரு சட்டம் , ம க இ க நிகழ்ச்சிகளுக்கு வேறு ஒரு சட்டம்//
தோழர்கள் முடிந்த வரை ‘பாட்டில்’ வாங்குவதை தவிர்க்கிறார்கள். ஆனால் வியாசன் போன்றோர் அப்படி அல்ல. இதில் தான் வேறுபாடு இருக்கிறது. நீங்கள் சுட்டிக்காட்டியதை வைத்து தோழர்கள் இனி வரும் காலங்களில் ‘பாட்டில்’ பயன்பாட்டை மேலும் தவிர்ப்பதற்கு வழி காண்பார்கள் என்பது உறுதி. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
மிக்க நன்றி Tiru Univerbuddy.
//நீங்கள் சுட்டிக்காட்டியதை வைத்து தோழர்கள் இனி வரும் காலங்களில் ‘பாட்டில்’ பயன்பாட்டை மேலும் தவிர்ப்பதற்கு வழி காண்பார்கள் என்பது உறுதி. சுட்டிக்காட்டியதற்கு நன்றி.//
\\\\பஞ்சாயத்து மூலம் பெறப்படும் மேல்நிலை நீர் தொட்டிகளில் சேமித்து வைக்கபட்டு பகிரப்படும் நீர் கூட இப்படி தான் கிராம மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க படுகின்றது.\\
மேல்நிலை நீர் தொட்டிகள் உலகவங்கித் திட்டத்தின் ஒருபகுதிதான். நியாயமாக இது தனிநபர் உபயோகிக்க வேண்டிய நீரின் அளவை குறைத்தது. ஊரில் உள்ள கண்மாய்கள், நீர்தேக்கங்கள் அழிக்கப்பட்டு ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றப்பட்டன; பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்பட்டன. மேல்நிலை நீர் தொட்டிகள் தண்ணீரை தேக்குவதற்காக மட்டும் கொண்டுவரப்பட்டதல்ல. தண்ணீரை நுகர்வுப்பொருளாக மாற்றுவதன் முதல் படிதான் இவைகள். இதற்கு பிந்தைய காலத்தில் தான் குடிதண்ணீர் வரி வீரியமாக வசூலிக்கப்பட்டது. அதாவது நம்முடைய தண்ணீருக்கு நாமே பணம் வழங்கினோம். உள்கட்டமைப்பே இல்லாத கிராமங்கள் வரிவசூலிக்கப்பட வேண்டும் என்பதற்காகவே தேர்வு நிலை பேரூராட்சிகளாக அறிவிக்கப்பட்டன. நீர்நிலைகள் உள்ளாட்சியின் அதிகாரத்திலிருந்து மாற்றப்பட்டு பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்க்கும் பொருட்டு அதிகார மையத்திற்கு மடைமாற்றம் செய்யப்பட்டன. இவையனைத்தும் நடைபெற்ற காலத்தில் தேசியம் பேசியவர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர்? முறுக்கு கடித்துக்கொண்டே நாவல்கள் படிக்கிறவர்களும் யார் தமிழன் என்று பாசிசத்தைக் கட்டவிழ்ப்பவர்களும் வரலாறு தெரியாததுபோல் நடிப்பார்கள் இல்லையா?
கிராம பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர் தொட்டிகள் வேண்டாம் என்கின்றாரா திரு தென்றல் ? அவர் வேண்டுமானால் நீரை காசு கொடுத்து வாங்கி பயன் படுத்தும் வளமான பொருளாதார நிலையில் இருக்கலாம். ஆனால் கிராம மக்கள் அல்ல. மேலும் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்க கிராம பகுதி மக்கள் பயன் படுத்திய சுகாதார பாதுகாப்பு அற்ற நீர் ஆதாரங்கலான குளம் ,குட்டை ,ஏரி ஆகியவற்றை இன்றும் அம் மக்கள் பயன் படுத்த வேண்டும் என்று கூறுவது எப்படி உள்ளது தெரியுமா? …………
தமிழகத்தில் போடப்பட்டு உள்ள நவின ரோடு முதல் மெட்ரோ train வரை பயன் படுத்தும் திரு தென்றலுக்கு மேல் நிலை தொட்டி மூலம் நாங்கள் பெரும் நீர் கூட தவறாக தெரிவதில் உள்ள உள்ளடி அரசியல் என்ன என்பதை இனி தான் நாம் யோசிக்க வேண்டும்.
\\ கிராம பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர் தொட்டிகள் வேண்டாம் என்கின்றாரா திரு தென்றல் ?\\
உங்களுக்கு உண்டான புரிதல் என்பது ஒருபக்கம் இருக்கட்டும். உங்களுக்கு உவப்பானவர்களிடம் விளக்கம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். ஆனால் நியாயத்தின் அடிப்படையில் இந்தக்கேள்வியை வைப்பதற்கு உங்களுக்கு சிறிதளவு அருகதையாகவது இருக்கிறதா? கேவலம் புளுத்துப்போன அரிசிவாங்க பயன்படும் ரேசன் கார்டை வட இந்தியர்கள் வைத்திருக்கிறார்கள் என்று இனவெறியைக் கக்கிவிட்டு “மேல்நிலைத் தொட்டி வேண்டாம் என்கின்றாரா?” என்று கேட்கிறீர்களே? இதற்கு பெயர் அறியாமையா? அற்பத்தனமா?
தண்ணீரை நம்மிடமிருந்து பிரித்துவிட்டு, நாமே இப்பொழுது பணம் கட்டுகிறோம் என்பதை ஒருவர் தெரிந்துகொண்டால் மேல்நிலை தொட்டிகளை மக்களுக்கு சொந்தமாக்குவது அறிவுடமையா? இல்லை சுகாதாரம், சேவை என்ற பெயரில் வரிகட்டியே சாவது அறிவுடைமையா? தேசியம் பேசுகிறவர்கள் எதை விரும்புகிறார்கள்?
இந்த இலட்சணத்தில் என்னுடைய பொருளாதாரத்தை கணக்குபோடுகிறீர்கள். ஒரு நாள் ஒன்றுக்கு தண்ணீர் வரி 10பைசா என்று கூட வைத்துகொள்ளுங்கள். ஒட்டுமொத்த தமிழகமும் தண்ணீருக்காக மட்டும் அழுகிற தண்டத்தொகை எவ்வளவு என்று கணக்குப்போட்டுப் பாருங்கள். கிராம மக்கள் ஏழைகள் என்று நீலிக்கண்ணீர் வடிக்கிற தாங்கள் உங்களது கள்ள மவுனத்தின் மூலமாக மக்களிடம் காசுவசூலித்து முதலாளிக்கு சமர்பிக்கின்ற சேவகர்களாக இருக்கின்றீர்கள் என்பது புரியும்.
மேலும் ஒரு லிட்டர் கோகோ-கோலாவின் உற்பத்திச் செலவு 60பைசா மட்டுமே.
ஏழைகளான கிராம மக்களுக்கு மேல்நிலைத்தொட்டி. பன்னாட்டு கம்பெனிகளுக்கு பல கோடி வரிச்சலுகை என்றால் யாரை ஏமாற்ற தமிழ் தேசியம் பேசுகிறீர்கள்? ஆத்துத் தண்ணீரை போர் போட்டு கம்பெனிக்காரன் அள்ளிக்கொண்டு போவானாம். நாம் மட்டும் தொட்டித்தண்ணீரை நக்கவேண்டும் என்றால் நீங்கள் பேசுகிற தமிழ் தேசியம் யாருக்கானது?
\\மேலும் 70 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்க கிராம பகுதி மக்கள் பயன் படுத்திய சுகாதார பாதுகாப்பு அற்ற நீர் ஆதாரங்கலான குளம் ,குட்டை ,ஏரி ஆகியவற்றை இன்றும் அம் மக்கள் பயன் படுத்த வேண்டும் என்று கூறுவது எப்படி உள்ளது தெரியுமா? …………\\
தமிழ் தேசியர்கள் இவ்விதம் ஹெல்த் இன்ஸ்பெக்டர்களாக அவதாரம் எடுப்பார்கள் என்பது அறிந்த ஒன்றுதான். ஆனால் இன்றைய நிலைமையில் எந்த குளம், குட்டையில் நீர் இருக்கிறது என்று சொல்வீர்களா? தமிழ்நாட்டின் வளத்தைத் தெரிய வேண்டுமானால் மேற்கொண்டு வாசியுங்கள். தாங்கல் என்றால் ஏரி. நீரைத் தாங்குகின்ற நிலத்திற்கு தாங்கல் என்று பெயர்.
சென்னையில் மட்டும் எத்தனைத் தாங்கல்கள் இருந்திருக்கின்றன? அய்யப்பன்தாங்கல், பழவந்தாங்கல், ஈக்காட்டுத்தாங்கல். ஆனால் இந்தத்தாங்கல்களில் எல்லாம் இன்றைக்கு கேன்கள் தான் இருக்கின்றன. தமிழர்களின் பண்பாட்டை, வாழ்க்கையை மறுகாலனியாக்கத்திற்கு காவுகொடுத்துவிட்டதன் அயோக்கித்தனம் இது. சான்றாக சென்னையில் உள்ள ஒரு கார் தொழிற்சாலையில் ஒரு காரை உற்பத்தி செய்ய பலஇலட்சம் லிட்டர் தண்ணிரைச் செலவழிக்கவேண்டிவரும். Energy Auditingல் தண்ணீரின் பயன்பாடு காரணமாகவே மேற்குலக நாடுகளில் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படுவதில்லை.
ஆனால் தமிழகத்தில் நிலை என்ன? தாங்கல் இவ்விதம் தான் தகரமானது. நிலைமைகள் தமிழர்களுக்கு இவ்வளவு மோசமாக இருக்க உள்ளடி அரசியல் என்னவென்று கேட்கிறீர்களே? உள்ளடி அரசியல் என்பது தமிழ் தேசியம் தான் என்பது தெரியாதா?
எங்கோ செட்டிலாகிப்போன சென்றேறிகள் குறுகிய இனவாதத்தில் தமிழனை வரையறுப்பதும் இதுபோன்ற ஆதார பிரச்சனைகளை கடுகளவும் கண்டுகொள்ளாது பன்னாட்டு முதலாளிகளுக்கு வெண்சாமரம் வீசிவிட்டு, தெலுங்குமக்களையும் ரேசன் கார்டையும், ஓட்டர் ஐடியையும், சேத்தன் பகத்தின் நாவலையும் விவாதிப்பது கடைந்தெடுத்த தமிழர் விரோதப்போக்குதானே? இப்பொழுதுதாவது புரிகிறதா? யார் தமிழன் என்பது உள்ளடி வேலை என்பதும் தமிழ் தேசியம் என்பது மக்கள் விரோதப்போக்கு என்பதும் விளங்கும் இல்லையா?
திரு தென்றல் ,
என்ன ஆயிற்று உங்களுக்கு ?திரு வியாசன் ,திரு சிகப்பு தயவு செய்து இந்த பஞ்சாயத்துக்கு வரவும். நான் வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகளை பற்றி ஆதரவாக கூறியதை அப்பட்டமாக ஏன் தலைக்கீழாக மாற்றி கூருகின்றிர்கள் திரு தென்றல் . வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகளை பற்றி நான் கூறியது என்ன ?
தென்றல் அவர்களுக்கு தமிழ் நாட்டில் உழைத்து வாழும் வட/வடகிழக்கு இந்தியத் தொழிலாளிகளும் ,தமிழ் மக்களை சுரண்டி வாழும் சேட்டுகள்,குஜராதிகள்[தரகு முதலாளி] ஆகியோரும் ஒன்று போலும் ? தென்றல் அவர்களின் கம்யுனிச முகமூடி அவர் பதில்களில் கிழிந்து தொங்கி அவரின் உண்மை தரகு முதலாளித்துவ உண்மை முகம் தான் தெரிகின்றது. ஐயோ பாவம் தென்றல் !
திரு தென்றல் ,
எந்த முன்னேற்றம் அடைந்த சமுகமும், அதன் சுகாதார நலனுக்கு பாதுகாப்பான குடிநீரை தான் குடிக்க வேண்டும் என்பது நியதி. ஆமாம் நீங்கள் தற்போது உள்ள அமைப்பான மேல்நிலை நீர் தொட்டிகள் மூலம் நீரை பங்கிட்டு பயன் படுத்துவது தவறு என்று நினைக்கும் போது , அதற்கு மாற்று ஏற்பாடு என்ன என்று கூறவும்.
ஒரு தேசிய இனம் எது ? அதற்கான வரையறை என்ன ? அதன் மொழி, மத சிறுபான்மையினர் யார் ? மொழி, மத சிறுபான்மையினர் மக்களுக்கு என்ன என்ன உரிமைகள் அரசியல் அமைப்பு சட்டத்தில் உள்ளன என்று எல்லாம் விவாதம் நேர் வழியில் செல்லும் தருனத்தில் அதற்கு எதிராக தலிபான் வேடம் ஏன் தென்றல் மேடம் போடுகின்றிர்கள் ?
திரு தென்றல் ,
இரு வேறு தேசிய இனங்களை சேர்ந்த ஆணும் ,பெண்ணும் நேசித்து திருமணம் செய்து கொள்வதில் உள்ள இடர்பாடுகளை அறிய திரு சேத்தன் பகத் அவர்களின் சுய சரிதை புதினம் 2 States-The Story of My Marriage பயன் படுகின்றது என்னும் போது ,அதை படிப்பதில் என்ன தவறு இருக்க முடியும் ? அவர் தன் புதினத்தை மிக எளிய நடையில் எழுதி இருந்தாலும் சமுகத்தின் மீது வைக்கும் விமர்சனங்கள் மிக சரியானவை தான்.
அவர் தமிழ் நாட்டை சேர்ந்த தன் காதலியின் உயர் நடுத்தர பிராமண சமுகம் எப்படி எல்லாம் சமுக தளத்தில் இரட்டை வேடம் போடுகின்றது என்பதை கிண்டல் அடிக்கும் தொனியில் எழுதியுள்ளார். மேலும் பஞ்சாபி மக்களின் திருமணம் மூலம் பணம் சேர்க்கும் வியாபாரத்தை அவருக்கு அவர் அம்மா பெண் பார்க்கும் படலம் மூலம் காட்சி படுத்துகின்றார். மேலும் corporate நிறுவனங்கள்[ citi bank] எப்படி எல்லாம் மக்களை ஏமாற்றுகின்றது என்பதை கூறுகிறார்.
இதை எல்லாம் இந்த புதினம் மூலம் படித்து அறிவது தவறு எனில் .., சரி அது உங்களை பொருத்த வரையில் தவறாகவே இருக்கட்டும். ஒரு புத்தகத்தை[2 States-The Story of My Marriage] படிக்காதே/விமர்சிக்காதே என்று நீங்கள் கூறுவது கூட தாலிபானிசம் தான் என்பதை தாங்கள் அறியாதது ஆச்சிரியமாக இருக்கிறது.
http://www.pkp.in/gh/pictures/India%20Pictures/Old%20Madras%20Chennai/Chennai%20City%20Map-1909.jpg
மேலே உள்ள லிங்க் ஐ தட்டி பாருங்கள். பழைய சென்னையில் சிறிதும் பெரிதுமாக எத்தனை எத்தனை ஏரிகள்.
எப்படி இருந்த சென்னை இப்போது எப்படி ஆகி விட்டது. வருத்தமாக உள்ளது.
தற்போது எஞ்சி இருக்கும் சில ஏரிகளிலும் ரியல் எஸ்டேட் முதலைகள் ஆக்கிரமித்து விடுகின்றனர்.
வருங்காலத்தில் நாம் அனைவரும் கடல் நீரை குடிநீராக்கும் வளைகுடா நாடுகளை போல தான் ஆக வேண்டும் போலிருக்கிறது.
காலம் காலமாக கடல் உப்பை உணவிலிட்டு உண்ட நம்மை செயற்கையாக அயோடின் கலந்த டாடா உப்பு தான் உண்ண வேண்டுமென்று சட்டம் போட்டார்கள்.
முன்பு சென்னை மாநகராட்சி தண்ணீர் குடித்து வந்த மக்களை விட இப்போது மினரல் தண்ணீர் குடிக்கும் மக்களுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்துள்ளது உண்மை.
சுத்தம் சுகாதாரம் முக்கியம் தான். ஆனால் பன்னாட்டு கம்பெனிகள் நம்மை பயமுறுத்தி பயமுறுத்தியே அவர்கள் சந்தையை பெருக்குகிறார்கள்.
நான் இதற்கு முன் மருத்துவ இயந்திர கம்பெனிகளில் வேலை செய்திருக்கிறேன்.
மக்களை பயமுறுத்தியே மிக மிக அதிக விலையுள்ள இயந்திரங்களை பன்னாட்டு கம்பெனிகள் விற்பதை கண்கூடாக கண்டிருக்கிறேன்.
ஒன்றுமில்லாத ஒரு தொழில்நுட்பத்திற்கு ஐந்து இலட்சம், எட்டு இலட்சம், பன்னிரண்டு இலட்சம் என்று விலை நிர்ணயித்தார்கள். இப்போது அதே பொருட்களை சீனாவில் இருந்து இருபதாயிரம், நாற்பதாயிரத்துக்கு இறக்குமதி செய்கிறார்கள்.
வெள்ளைக்காரனது தந்திரம் இது தான். ஏமாந்தவன் கிடைத்தால் ஒன்றுமில்லாத ஒரு தொழில்நுட்பத்திற்கு கொள்ளை இலாபம் ஈட்டுவது. கேட்டால் அதில் சிறந்த மென்பொருள் இருக்கிறது என்று ஒரு வியாக்கியானம் கொடுப்பார்கள்.
உண்மையில் தொழில்நுட்ப வளர்ச்சியில் நாம் இன்னும் நிறைய வளர வேண்டும்.
தைவான், கொரியா போன்ற சிறிய நாடுகள் இப்போது உலகம் முழுக்க மின்னணு, இயந்திரவியல் பொருட்களில் சிறந்து விளங்குவதை போல நாம் எப்போது வளருவோமோ? தெரியவில்லை.
\\குடிநீர் அருந்துவதில் திரு வியாசனுக்கு ஒரு சட்டம் , ம க இ க நிகழ்ச்சிகளுக்கு வேறு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது அல்லவா ? வியாசன் packed water bottles அய் பயன் படுத்துவது தவறு நீங்கள் கூறினிர்கள் என்றால் ம க இ க நிகழ்ச்சிகளுக்கு packed water bottles அய் பயன் படுத்துவதும் தவறு தான் என்ற எளிய தர்க்கம் [logic]கூட உங்களுக்கு தெரியாமல் இருக்காது அல்லவா ? \\
குறிப்பு: கீழ்க்கண்ட பதில் என் தரப்பு தனிப்பட்ட பார்வை என்பதைப் புரிந்து கொள்ளவும்.
உங்களுடைய கேள்வியில் தர்க்கம் எல்லாம் தெரியவில்லை. வெறும் சந்தர்ப்பவாதம் தான் தெரிகிறது. ஏனெனில் தண்ணீரை நுகர்வுப்பொருளாக மாற்றியிருக்கிறது மறுகாலனியாதிக்கம். அதை எதிர்க்கிற போராட்டங்கள் நடந்த பொழுது தமிழ் தேசியர்களின் நிலை என்னவாக இருந்தது? “நீரின்றி அமையா உலகு” என்று இலக்கியம் பாராட்டியும் “செம்புலப்பெயல் நீர்போல” என்று வியந்தும் இருந்த தமிழ்ச் சமூகம் இன்றைக்கு தண்ணீருக்காக கேன்வாட்டரில் அல்லாடுவதற்கு யார் காரணம்? இப்பொழுது நான் மட்டும் அயோக்கியன் அல்ல; போராடுகிற அமைப்புகளும் தான் அயோக்கியன் என்று சொல்வதன் மூலமாக பிழைப்புவாதிகளின் அம்மணத்தை மறைக்க இயலுமா?
யார் தமிழன் என்று இப்பொழுது வரையறுக்கிற தாலிபான்களுக்கு தண்ணீர் போத்தல் மேட்டுக்குடி கலாச்சாரம். ஏனெனில் மருத்துவரிடம் சென்று ஊசிபோடுகிற அளவிற்கு இங்கு யாரும் இதைக்கலாச்சாரமாக பீற்றித்திரியவில்லை. மாறாக, போராடுகிற அமைப்புகளுக்கும் பெரும்பாலான மக்களுக்கும், தண்ணீர் ஒரு பண்டம் என்பது முறியடிக்கப்படவேண்டிய அவலமாகும். கருத்தரங்க மேசைக்கு மட்டுமல்ல; ஒவ்வொரு வீட்டிற்குள்ளூம் கேன்கள் வந்ததற்கு காரணம் போராட்டங்களைக் கலைத்தவர்களே! கள்ள மெளனிகளே! யார் தமிழன் என்று பாசிசத்தை கட்டவிழ்த்து விடுபவர்களே! இதைவிடுத்து போராடுகிறவர்களை கைநீட்ட வேண்டுமானால் தண்ணீர்-தனியார்மயம் குறித்து தமிழ்தேசியர்களின் நிலைப்பாடு என்னவென்று தெரிவிக்கவேண்டும்? போராட வேண்டும். போராடுவது ஒன்றுதானே குற்றத்தை நிருபீக்கும் ஒரே வழி! திண்ணம் இருந்தால் செய்யுங்கள். தனியாக முடியாது என்றால் போராடுகிற வர்களோடு கலந்துகொள்ளுங்கள்.
தண்ணிரை விற்பனை செய்யும் விடயத்துக்கு எதிராக போராடும் அமைப்பு என்பது கொள்கை அளவிலும் , நடைமுறையிலும் தண்ணிரை வாங்கவோ ,பயன் படுத்தவோ கூடாது என்ற எளிய தர்க்கம் கூட திரு தென்றலுக்கு தெரியாமைக்காக வருந்துவதை தவிர வேறு ஏதும் செய்ய இயலாத நிலையில் உள்ளேன்.
யார் தமிழர் என்ற விவாதத்தின் ஆரம்பத்திலேயே அதனை தடை செய்ய முனையும் திரு தென்றல் தான் எமக்கு தமிழ் நாட்டு தாலிபானாக தெரிகின்றார்.தண்ணீர் விற்பனைக்கு நேரடியாகவோ /மறைமுகமாகவோ உதவி செய்வது அது யார் என்றாலும் ; நான் என்றாலும் ,திரு தென்றல் என்றாலும் சந்தர்ப்பவாதி தான்
திரு தென்றல் ,நான் பார்த்த பன்னாட்டு நிறுவன தயாரிப்பான ‘தண்ணீர் போத்தல்'[packed water bottle] முற்போக்கு அமைப்பான ம க இ க வின் நிகழ்ச்சியில் மேடையில் இருந்தது. தமிழ்தேசியம், தலித்தேசியம், மதம் ஆகியவற்றின் விளைபொருள் தான் பன்னாட்டு நிறுவன தயாரிப்பான ‘தண்ணீர் போத்தல்'[packed water bottle] என்றால் அவற்றின் உபயோகிப்பாளர் [ consumer ] என்பவர்கள் கம்யூனிஸ்ட்களா ?
//எனவே புகைப்படத்தில் நீங்கள் பார்த்த தண்ணீர் போத்தல், மறுகாலனியாதிக்கம் மற்றும் அவற்றிற்கு சேவகம் புரியும் தமிழ்தேசியம், தலித்தேசியம், மதம் ஆகியவற்றின் விளைபொருள்தான். எனவே கவலைப்படாதீர்கள். இந்நிலைமைகள் மக்கள் திரள் தலைமையில் முறியடிக்கப்படும்.//
ISO ,ISI சான்றிதழ் பெற்ற தேச பக்தர், திரு தென்றல் மட்டும் தான் என்று இருக்க தேவை இல்லை அல்லவா! ?
//ஆனால் நீங்கள் உண்மையில் கவலைதானே கொள்கிறீர்கள்?!!!//
டயானா,
தென்றல் அவர்களின் /நீங்கள் உண்மையில் கவலைதானே கொள்கிறீர்கள்?/ என்ற கேள்விக்கு ஆம் இல்லை என்ற பதில்கள் போதியதாக இருந்திருக்கும். /சான்றிதழ் பெற்ற தேச பக்தர்/ போன்ற பதில்கள் நம்மிடையே கசப்புணர்வையே பரப்பும்.
புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
\\ நான் பார்த்த பன்னாட்டு நிறுவன தயாரிப்பான ‘தண்ணீர் போத்தல்’[packed water bottle] முற்போக்கு அமைப்பான ம க இ க வின் நிகழ்ச்சியில் மேடையில் இருந்தது. தமிழ்தேசியம், தலித்தேசியம், மதம் ஆகியவற்றின் விளைபொருள் தான் பன்னாட்டு நிறுவன தயாரிப்பான ‘தண்ணீர் போத்தல்’[packed water bottle] என்றால் அவற்றின் உபயோகிப்பாளர் [ consumer ] என்பவர்கள் கம்யூனிஸ்ட்களா ?\\
பன்னாட்டு நிறுவன தயாரிப்பு என்பது அவதூறு. எந்த பன்னாட்டு நிறுவனம் என்று சொல்லமுடியுமா? மாறாக தண்ணீர்-தனியார்மயம் அனைவரும் வீடுகளிலும் உண்டு. 15லிட்டர் தண்ணீர் போத்தலையும் தனியார்மயத்தில் தான் சேர்த்திருக்கிறேன். அதன் அடிப்படையில் தான் உங்களது அவதூறுகள் அனைத்திற்கும் பதில் எழுதிக்கொண்டிருக்கிறேன். அந்தவகையில் மக்கள் திரள் உட்பட அனைவரும் வாடிக்கையாளர்கள் என்பதுதான் யதார்த்தம். மறுகாலனியாதிக்கத்தோடு தமிழ் தேசியம் தலித்தேசியம் மதம் போன்றவற்றின் விளைபொருள் தான் தண்ணீர்போத்தல் என்பதை ஏற்கிறீர்களா?
1 lt , 2 lt ‘தண்ணீர் போத்தல்'[packed water bottle] மீது நான் கூறிய குற்றச்சாட்டு “பன்னாட்டு நிறுவன தயாரிப்பு என்பது” அவதூறு என்றால் இல்லை அது தேசிய முதலாளித்துவ தயாரிப்பு தான் ; மேலும் யார் யார் எல்லாம் தேசிய முதலாளிகள் இந்த 1 lt , 2 lt ‘தண்ணீர் போத்தல்’ packed water bottle தொழிலில் ஈடுபடுகின்றனர் என்று விளக்கி என்னை திரு தென்றல் அவர்கள் வினவில் அம்பலம் செய்யலாமே ! தண்ணிரை விற்க வழி அமைத்து தந்து உள்ள இந்த நாசகார அரசுக்கு எதிராக போராட மக்களுக்கு வழி காட்டும் மக்கள் திரள் அமைப்புகள் கூட விற்பனை தண்ணிருக்கு வாடிக்கையாளர்கள் என்று கூறுவது வேடிக்கையாக இல்லை ? ஏழை ,எளிய ,விவசாய ,தொழிலாளர் மக்களுக்கு தன்னை பிரதிநிதியாக முன் வைக்கும் எந்த அமைப்பும் அம் மக்களை போலவே எளிமையாகவும் வாழ பழக வேண்டுமே தவிர ,எதிரிகளின் நுகர்வு பண்பாட்டுக்கு துணை போக கூடாது. திரு சிகப்பு அவர்கள் கூறுவது போல ……..
“முதலாளித்துவ சுரண்டல் முறையினால் தமது மொழி, கலாச்சாரம், பண்பாடுகள் சிதைந்து வருவது கண் முன்னால் நடக்கையில் அதை மீட்டெடுக்க வழி வகையின்றி தான்தோன்றி தனமாக நுகர்வு கலாச்சாரத்திலும் , முதலாளிகளுக்கு சேவை செய்வதிலும் கழிக்கும் இனமானப் பச்சைத் தமிழர்கள் தான் தமிழினம் என்றால் அந்த இனத்தில் நான் இல்லை”
என்ற கருத்தை இனமானப் பச்சைத் தமிழர்கள் மட்டும் அல்ல ,இந்த முற்போக்கானவ்ர்களும் கருத்தில் கொள்ள வேண்டும். நன்றி
திரு தென்றல் ,உங்கள் கருத்துகளுக்கு நான் வைத்த இரு பதில்கள் வெளிவரவில்லை. எனவே பதில் கூற என்னால் இயலாமைக்காக என்னை மன்னிக்கவும்.
அது என்ன புதுமாதிரி டயானா அக்காவுக்கும் சரவணன் அண்ணருக்கும் வினவில் கருத்துக்கள் கத்தரிக்படுகிறது..இல்லை தடைப்படுகிறது..!?.
அடுத்த புதுக்கருத்தில் எடுத்து விடவேண்டியது தானே!.
டயானா,
எனது மறுமொழிகள் கூட சில சமயங்களில் மட்டறுக்கபட்டுள்ளன. ஏதாவதுத் தொழிநுட்பப பிரசினைகளாகக் கூட இருக்கலாம். மீண்டும் ஒருமுறை முயற்சி செய்துப் பார்க்கவும்.
நன்றி.
என் பின்னுட்டம் September 1, 2014 at 8:56 am 21.1.2.1.4 பார்க்கவும் திரு சிகப்பு.
[மீண்டும் என் பதில்களை வெளிக்கொண்டு வர முயற்சிக்கின்றேன்.]
திரு தென்றல் ,
1) குடிநீர் அருந்துவதில் திரு வியாசனுக்கு ஒரு சட்டம் , ம க இ க நிகழ்ச்சிகளுக்கு வேறு ஒரு சட்டம் என்று இருக்க முடியாது அல்லவா ? வியாசன் packed water bottles அய் பயன் படுத்துவது தவறு நீங்கள் கூறினிர்கள் என்றால் ம க இ க நிகழ்ச்சிகளுக்கு packed water bottles அய் பயன் படுத்துவதும் தவறு தான் என்ற எளிய தர்க்கம் [logic]கூட உங்களுக்கு தெரியாமல் இருக்காது அல்லவா ? குடிநீர் விடயத்தில் வியாசனுக்கு எதிராக தட்டு அச்சு செய்யும் விரல்கள் ம க இ க என்று வரும் போது….?
/நீங்கள் சுட்டிக்காட்டுகிற தண்ணீர் போத்தல், புகைப்படங்களில் மட்டுமல்ல; ஒவ்வொரு வீடுகளிலும் உள்ளன. ஆனால் இதை கலாச்சாரம் என்று மேட்டுக்குடியினர் தவிர யாரும் பீற்றித் திரிவதில்லை. //
2) வீட்டில் உள்ள ஆழ்துளை[போர்] மூலம் பெறும் நீரை மேலுள்ள தொட்டியில் சேமிக்காமல் நேரடியாக குடங்களில் சேமித்து உணவு தயாரிப்புக்கு நேரடியாகவும் , குடிநீருக்கு சுட வைத்தும் பயன்படுத்துகின்றேம். இதனால் வாரம் 3 கேன் வாங்காமையால் ஒருகேன் விலை Rs 25 என்றாலும் 3 * 4 * 25 = Rs 300 மாதம் எங்கள் வீட்டில் சேமிக்கபடுகின்றது.ஆண்டுக்கு 300 *12 = Rs 3600 எங்கள் வீட்டில் சேமிக்கபடுகின்றது.நாங்கள் மட்டும் அல்ல , நாங்கள் வாழும் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களிள்ப[ஈரோடு,கோவை,நாமக்கல்] உள்ள கிராம பகுதிகளில் இப்படி தான் போர் நீரை பெற்று பயன் படுத்துகின்றேம். அல்லது பஞ்சாயத்து மூலம் பெறப்படும் மேல்நிலை நீர் தொட்டிகளில் சேமித்து வைக்கபட்டு பகிரப்படும் நீர் கூட இப்படி தான் கிராம மக்களின் பயன்பாட்டுக்கு வழங்க படுகின்றது.
//உங்கள் வீட்டில் தண்ணீர்கேனை கழுவேற்றி வைத்திருப்பீர்களேயானால் தாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிற விழுமியங்கள் என்ன? //
3) நான் பார்த்த பன்னாட்டு நிறுவன தயாரிப்பான ‘தண்ணீர் போத்தல்’[packed water bottle] முற்போக்கு அமைப்பான ம க இ க வின் நிகழ்ச்சியில் மேடையில் இருந்தது. தமிழ்தேசியம், தலித்தேசியம், மதம் ஆகியவற்றின் விளைபொருள் தான் பன்னாட்டு நிறுவன தயாரிப்பான ‘தண்ணீர் போத்தல்’[packed water bottle] என்றால் அவற்றின் உபயோகிப்பாளர் [ consumer ] என்பவர்கள் கம்யூனிஸ்ட்களா ?
//எனவே புகைப்படத்தில் நீங்கள் பார்த்த தண்ணீர் போத்தல், மறுகாலனியாதிக்கம் மற்றும் அவற்றிற்கு சேவகம் புரியும் தமிழ்தேசியம், தலித்தேசியம், மதம் ஆகியவற்றின் விளைபொருள்தான். எனவே கவலைப்படாதீர்கள். இந்நிலைமைகள் மக்கள் திரள் தலைமையில் முறியடிக்கப்படும்.//
4) ISO ,ISI சான்றிதழ் பெற்ற தேச பக்தர், திரு தென்றல் மட்டும் தான் என்று இருக்க தேவை இல்லை அல்லவா! ?
//ஆனால் நீங்கள் உண்மையில் கவலைதானே கொள்கிறீர்கள்?!!!//
நன்றி
தமிழரின் தனித்துவத்தை விளக்கிடும் திரு. வியாசன் அவர்களின் மிகச் சிறந்த கருத்துக்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.
திரு. கற்றது கையளவு…
தாங்கள் கூறுவதிலேயே பல முரண்ப்பாடுகள் உள்ளதை கவனிக்கவும்..
முதலில் தாங்கள் கூறியது …
//நான் பிறப்பால் தெலுங்கன் என்று சொல்லலாம். ஏன் என்றால் எங்கள் வீட்டில் தெலுங்கு மொழி பேசுவார்கள்.//
பிறகு..
//நான் மட்டுமல்ல, என் தந்தையும் தமிழார்வம் மிக்கவர் தான். எங்கள் தமிழுணர்வு நீர்த்து விடும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?//
இதன் மூலம் தாங்கள் கூறவருவதென்ன. பொதுவாக ஐரோப்பிய நாடான பிரிட்டனில் தங்கி பணிப் புரியும் பிரான்சு நாட்டவர்களை, அவர்கள் என்ன தான் நுனி நாக்கு ஆங்கிலம் பேசினாலும் சரி, கவிதையே எழுதும் அளவிற்கு ஆங்கிலத்தில் திறம் படைத்தவராக இருந்தாலும் சரி, பிரித்தானியர்கள்(பிரிட்டன் ஆங்கிலேயர்கள்) அவர்களை என்றுமே தங்களில் ஒருவராக எண்ணியதில்லை. அவர்களை பற்றி விளிக்கும் பொழுது”He’s a French Guy” என்று தான் கூறுவார்கள். இத்தனைக்கும் பிரிட்டனும், பிரான்சும் அருகருகே இருக்கும் நாடுகள் தான். அத்தோடு இருவருக்கும் தோற்றத்தில் அப்படி ஒன்று பெரிய வித்யாசம் ஏதும் கிடையாது. இருப்பினும் மொழியின் அடிப்படையில் இருவரும் வெவ்வேறு இனமாக தான் கருதப்படுகிறார்கள். அதே போன்று தான் செருமன்,இத்தாலி,போலந்து போன்ற அனைத்து நாடுகளிலும்.
தமிழ்நாட்டில் பிறந்த தமிழர் ஒருவர் தமிழ் உணர்வோடு இருக்கிறார், நன்றாக தமிழில் பேசுகிறார், எழுதுகிறார் என்றால் அதில் பாராட்டுவதற்கு ஒன்றுமில்லை.அது அவரின் கடமை. ஆனால் ஒரு தெலுங்கரோ, மலையாளியோ, இந்தி, பஞ்சாபி மொழி பேசுபவரோ தமிழை நேசித்து இலக்கண சுத்தியாக பேசுகிறார்,எழுதுகின்றார். கலை, இலக்கியங்கள் பல உருவாக்குகின்றார் எனில் அது நிச்சயம் பாராட்டப் படவேண்டிய ஒன்று. அதற்காக அவரைப் பாராட்டலாம். தமிழ் அறிஞர் என விருது கொடுத்து கூட கௌரவிக்கலாமே ஒழிய அவர்களை தமிழராகவெல்லாம் கருத முடியாது.அவர்களை தமிழை நேசிக்கும் பிற மொழியினர்/இனத்தினர் என்று கூறலாம். நான் எதாவது தவறாக கூறி இருப்பதாக தாங்கள் நினைத்தால் மன்னிக்கவும். நன்றி.
,
என்னுடைய கருத்துக்கு, செல்வி. ரெபெக்கா மேரி, மேலும் அழகாக, தெளிவாக விளக்கம் கொடுத்திருக்கிறார். நன்றி.
ரெபேக்கா மேரி அவர்களே,
1. எத்தனை தலைமுறையாக ஒருவரது பரம்பரை தமிழகத்தில் இருந்தால் அவரை தமிழராக ஒத்துக்கொள்வீர்கள்?
2. சென்னையில் பெரும்பாலானவர்கள் தெலுங்கு மொழியை வீட்டில் உள்ள பெரியவர்களிடம் பேசுவார்கள், அதே சமயம் அவர்களின் பண்பாடு முழுக்க முழுக்க தமிழ் பண்பாடாகவே இருக்கும். இப்போதே அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு தெலுங்கு சுத்தமாக வராது. எனக்கும் தெலுங்கு எழுத படிக்க தெரியாது. பெரியவர்கள் ஏதோ பேசினாலும் நாங்கள் தெலுங்கு பேச முயன்றாலும் அதில் பெரும்பாலும் தமிழ் வார்த்தைகள் தான் இருக்கும். என்னை பொறுத்தவரை ஒருவருக்கு இருமொழி தெரிந்தால், அதில் எந்த மொழியில் சிந்திக்கிறாரோ, அதுவே அவரது தாய்மொழி எனக்கொள்ளலாம். சிந்தையால், உணர்வால், பண்பாட்டால் நான் தமிழன்.
3. சற்று பின்னோக்கி சென்று பாருங்கள், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற தென்னிந்திய மொழிகள் அனைத்திற்கும் தமிழே மூலம் என்று அறியலாம். சற்று ஆராய்ந்து தான் பாருங்களேன்.
4. ஏற்கனவே நாட்டில் சாதி, மத வெறியர்களால் வெட்டு குத்து நடக்கையில் மொழியால் மீண்டும் மக்களை பிளவு படுத்த வேண்டாம் என்பது எனது வேண்டுகோள். இப்படி நம் கிளைகளை நாம் வெட்டிக்கொண்டே சென்றால் முடிவில் தனிமரமாக தான் நாமிருக்க வேண்டும். அனைவரையும் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.
5.இப்படி வெட்டிக்கொண்டே போனால் பின் வரலாற்றை நன்கு ஆராய்ந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், சேர, சோழ, பாண்டிய, பல்லவர்கள் அனைவரும் தமிழரல்ல என்று தான் கூற வேண்டும். ஏதோ ஒரு வகையில் அனைத்து அரச குலங்களும் வெளி நாட்டு மன்னர் பரம்பரையோடு திருமண உறவு வைத்திருந்தார்கள். இப்போதைய கேரளா தான் அப்போதைய சேரநாடு. இதை மறுக்க முடியுமா என்ன?
6. இதே தமிழகத்தில் பிறந்து இன்று தமிழே பேசாமால், தமிழை நீசமொழி என்று தூற்றுபவர்களை என்ன சொல்வீர்கள்? தமிழரென்று சொல்வீர்களா?
7. வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு தமது குழந்தைகளுடன் ஆங்கிலத்தில் மட்டுமே அளவலாவிடும் தமிழர்களை என்னவென்று சொல்வீர்கள்? மரத்தமிழரென்று போற்றுவீர்களா?
திரு வியாசன் மற்றும் திரு சிகப்பு போன்றவர்களுக்கு, [உண்மையான தமிழ் உணர்வாளர்களுக்கு ,உண்மையான கம்யூனிஸ்டுகளுக்கு மட்டும்],
சம்மு-கசுமீர் மாநிலத்துக்கு உள்ள சிறப்பு உரிமை சட்டம் @@@@Article 370 படி அம் மாநிலத்தவருக்கு[இனத்துக்கு] பல சிறப்பு உரிமைகள் உள்ளன அல்லவா ? அது போல இந்தியாவில் உள்ள ஒவொரு மாநிலமும் [இனமும்] சிறப்பு உரிமைகளை @@@Article 370 படி பெறுமாயின் அது ஒவொரு இனத்தின் வாழ்வாதரத்தையும், பொருளாதார, மொழி ,பண்பாட்டு உரிமைகளையும் பாதுகாத்து அவ்வினங்களை வளர்ச்சி அடைய செய்யும் அல்லவா ? மோடி அவர்கள் கோருவது என்ன என்றால் சம்மு-கசுமீர் மக்களின் @@@Article 370 யை நீக்க வேண்டும். காரணம் ஹிந்து பாசிசத்தை வ்ளிமையாக்க வேண்டும் என்பது. இந்துத்துவ மோடியும் ,பிஜேபி யும்,அவர்களின் தாய் ஆகிய RSS வும் கனவு காணும் “ஹிந்து ஹிந்தி பாசிச ஹிந்தியா ” என்ற இலச்சியத்தை அவர்கள் அடையாமல் தடுக்க வேண்டும் என்றால், இந்தியாவில் உள்ள ஒவொரு இனமும் @@@Article 370 படி மிக்க உரிமைபெற்று அதன் மூலம் வலிமை பெற்று தேவை பட்டால் தனித்து இயங்கும் நிலையை அடைய வேண்டும் அல்லவா ? எனவே ஒவொரு மாநிலமும் @@@Article 370 படி சிறப்பு உரிமைகள் பெற போராட வேண்டும் என்பதே என்னுடைய ஆவல்.
அப்படி சிறப்பு உரிமைகள் பெரும் ஒவொரு இன மக்களும் தன் மாநில நலனுக்கு உழைப்பதுடன் , தோழர் திரு காரல் மார்க்ஸ் அவர்களின் சமுக இயக்கவியல் படி அவ்வினங்கள் புதிய சனநாயகம்–> சோசியலிசம்—> கம்யூனிசம் என்று வருங்கால வரலாறு போக்கில் முன்னேறும் அல்லவா ?
@@@Article 370 of the Indian constitution is a law that grants special autonomous status to Jammu and Kashmir. The article is drafted in Part XXI of the Constitution, which relates to Temporary, Transitional and Special Provisions.
For more Information about Article 370 please read:
Provisions of Article 370
a)According to this article, except for defense, foreign affairs, finance and communications, Parliament needs the state government’s concurrence for applying all other laws. Thus the state’s residents live under a separate set of laws, including those related to citizenship, ownership of property, and fundamental rights, as compared to other Indians.
b) As a result of this provision, Indian citizens from other states cannot purchase land or property in Jammu & Kashmir.
c)Under Article 370, the Center has no power to declare financial emergency under Article 360 in the state. It can declare emergency in the state only in case of war or external aggression. The Union government can therefore not declare emergency on grounds of internal disturbance or imminent danger unless it is made at the request or with the concurrence of the state government.
வியாசர், மற்றும் டயானா அவர்களே,
எனக்கு ஆந்திர மாநிலத்தில் ஒரு சொந்தம் கூட இல்லை.
எமது அனைத்து சொந்தங்களும் சென்னையில் தான் உள்ளனர்.
டயானா அவர்கள் ஆங்கிலம் பேசும் பிரெஞ்சு நபர்களை “French Guy” என்று அழைப்பார்கள் என்று கூறுகிறீர்கள். அதே நபர் பல தலைமுறைகளாக இங்கிலாந்திலேயே வாழ்ந்தால் அவரது வம்சாவழியினர் பிரெஞ்சு மொழியை முழுக்க மறந்து ஆங்கிலத்தில் மட்டுமே பேசினாலும் அவர்களை “French Guy” என்று தான் அழைப்பார்களா?
நான் என்னமோ நேற்று தான் ஆந்திராவில் இருந்து இறக்குமதியானவன் என்று நினைக்கிறீர்களா? நான் தான் ஏற்கனவே சொல்லி இருக்கிறேனே, எனக்கு தெரிந்தே ஆறு தலைமுறைகளாக சென்னையில் வசிக்கிறோம். அதற்கு முன் கூட யாரும் ஆந்திரத்தில் இருந்து வந்ததாக எனக்கு தெரியவில்லை. வீட்டில் பெரியோர்கள் பேசும் அரை குறை தெலுங்கை வைத்து தான் ஒருவேளை எங்களது முன்னோர் ஆந்திரத்தில் இருந்து வந்திருப்பார்களோ என்று எங்களுக்கு தோன்றும்.
இப்போது ஆஸ்திரேலியாவிலும் கனடாவிலும் ஐந்து வருடங்கள் தொடர்ந்து வாழ்ந்தால் எந்த நாட்டு குடிமகனாக மாறி அந்த நாட்டு கடவுசீட்டு பெறுகிறார்கள். ஒரு ஆறு தலைமுறைக்கு பின்னர் இவர்களில் எத்தனை பேர் தமிழ் உணர்வோடு இருப்பார்கள்? தமிழை மறந்தவர்களையும் தாங்கள் தமிழர் என்று போற்றுவீர்களோ?
திரு கற்றது கையளவு,
நீங்கள் கூறும் இக் கருத்து இவ் விவாதத்தில் எங்கேயோ எப்போதோ நானும் படித்து இருப்பதாக எனக்கு நினைவு. ஆனால் நான் கூறியதாத நினைவு இல்லை.கண்டிப்பாக நான் கூறவில்லை.நான் எழுப்பிய சாதிய கலப்பு பற்றிய கேள்விகளுக்கு அழகாக ” யாதும் ” என்ற அடிப்படையில் பதில் அளித்து இருந்திர்கள். அதற்கு நானும் நன்றி கூறி இருந்தேன்.
திரு வியாசன் அவர்களிடமும் அதே அடிப்படையில் தான் இப்போதும் கேள்வி எழுப்பி உள்ளேன். இன கலப்பு அடையும் குழந்தைகள் எதிர்கொள்ளும் கலாசார,பண்பாட்டு பிரச்சனைகளை இன்றைய நவின யுகத்தில் எதிர்கொள்ளவே முடியாதா ?வெளிநாட்டு வாழ் புதிய தலைமுறை தமிழர்கள்[ஒருவேளை இனகலப்பு அடைந்து இருந்தால்] இதனை எப்படி எதிர்கொள்கின்றனர்? இனகலப்பு திருமணங்கள் ஒரு இனத்தை கலப்பு இனமாகி அதன் பண்பாட்டை அழிக்கும் எனில் , ஒரு இனத்துக்குள் நிகழும் சாதி கலப்பு திருமணங்கள் சாதியத்தை அழித்து ஒரு இனத்தை மிக்க வலிமையாகி அதன் பண்பாட்டை காக்குமா ? நேரடியான கேள்வி : தமிழ் இனத்துக்குள் ஒரு வேலை 90% சாதிகலப்பு திருமணங்கள் நடைபெற்றால் அத்தகைய சாதி கலப்பு நல்லது தானே ? அது தமிழ் இனத்தை வலிமையானதாக மாற்றுமா ? இந்த கேள்விகள் திரு கற்றது கையளவு அவர்களுக்கும் பொருந்தும்.
தமிழ் இனம் என்பது பற்றியே விவாதம் நடத்த கூடாது என்ற அளவுக்கு எதிர்ப்புகள் இங்கு இப்போது வினவு விவாதத்தில் சூழ்நிலை தோன்றியுள்ளது.யார் தமிழர் என்ற கேள்வி எழும் போது ஒரே சாதிக்குள் பெண் கொடுத்து, பெண் எடுப்பவர் எல்லாம் தமிழர் தானா ? அல்லது தமிழ் இனத்துக்குள் அனைத்து சாதியிலும் பெண் கொடுத்து பெண் எடுப்பவர்கள் மட்டும் தான் தமிழரா ? எனற கேள்விகளும் எழுகின்றது. இப்படி எல்லாம் நான் கேள்வி எழுப்பும் போது தேவையில்லாமல் திரு கற்றது கையளவு அவர்களுக்கு எந்த மன வலியும் எழ அவசியம் இங்கு ஏன் வந்தது ?
//டயானா அவர்கள் ஆங்கிலம் பேசும் பிரெஞ்சு நபர்களை “French Guy” என்று அழைப்பார்கள் என்று கூறுகிறீர்கள். அதே நபர் பல தலைமுறைகளாக இங்கிலாந்திலேயே வாழ்ந்தால் அவரது வம்சாவழியினர் பிரெஞ்சு மொழியை முழுக்க மறந்து ஆங்கிலத்தில் மட்டுமே பேசினாலும் அவர்களை “French Guy” என்று தான் அழைப்பார்களா?//
என்னை மன்னிக்கவும் டயானா அவர்களே,
ரெபேக்கா மேரி அவர்கள் கூறிய “FRENCH Guy” விளக்கத்தை தாங்கள் கூறியதாக தவறாக எண்ணி விட்டேன். இப்போது மீண்டும் தேடுகையில் பின்னூட்டம் எண் 22இல் தெரிந்தது. மன்னிக்கவும்.
வியாசன் அவர்களே,
நான் தெளிவாக என் நிலையை, என் உணர்வை சொல்லி விட்டேன்.
படிவங்களை நிரப்பும்போதும் நான் தமிழன் என்று தான் நிரப்புகிறேன்.
ஏன் என்றால் எனக்கு தெலுங்கு மிக குறைவாக தான் தெரியும்.
வீட்டில் பெரியவர்கள் யாராவது தூய தெலுங்கில் பேசினால் எனக்கு புரியாது.
இனியும் எவரின் சான்றும் எனக்கு தேவையில்லை.
நான் தமிழன் என்று எனக்கு தெரியும். மற்றவரை பற்றி இனி கவலையில்லை.
கற்றது கையளவு,
உங்களின் இந்தக் கேள்விக்கு நான் எப்பவோ (#19இல்) பதிலளித்து விட்டேன்.
என்னைப்பொறுத்தவரையில் உங்களின் பெற்றோர்கள்/குடும்பத்தினர் தமிழர்கள் அல்ல, ஏனென்றால் அவர்கள் இன்றும் தமது தாய்மொழியாகிய தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டுள்ளனர். ஆனால் உங்களின் முதல் மொழி தமிழாக இருந்தால், நீங்கள் உங்களைத் தமிழனாக மட்டும் அடையாளப்படுத்துகிறீர்களேயானால் (அதாவது சனத்தொகைக் கணக்கெடுப்பிலும் நீங்கள் உங்களைத் தமிழனாக அடையாளப்படுத்தினால்) நீங்கள் உங்களின் தெலுங்கு முன்னோர்களின் மொழி, பாரம்பரியம், பண்பாடு என்பவற்றைக் கடைப்பிடிக்காமல், அவற்றைப் பற்றி பெருமைப்படாமல் உங்களைத் தமிழனாக மட்டும் உணர்வு பூர்வமாகக் கருதுகிற ஒருவரானால், நீங்கள் ஒரு தமிழன் தான் என ஒப்புக் கொள்வதில் எனக்கு தயக்கமேதுமில்லை.
என்னுடைய கருத்து என்னவென்றால், இரண்டு, மொழி, பாரம்பரிய அடையாளங்கள் உள்ளவர்களால் தமிழுக்கும், தமிழர்களுக்கு மட்டும் விசுவாசமுள்ளவர்களாக இருக்க முடியாது. அவர்கள் தமிழர்களுமல்ல என்பது தான்.
//அதே நபர் பல தலைமுறைகளாக இங்கிலாந்திலேயே வாழ்ந்தால் அவரது வம்சாவழியினர் பிரெஞ்சு மொழியை முழுக்க மறந்து ஆங்கிலத்தில் மட்டுமே பேசினாலும் அவர்களை “French Guy” என்று தான் அழைப்பார்களா?///
மேலைநாடுகளில் எத்தனை தலைமுறைகளானாலும் ஒருவரின் குடும்ப பெயரை(Surname) வைத்து அவர்களின் முன்னோர்களையும், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தார்கள் என்பதையும் கண்டுபிடித்து விடலாம். மேற்கு ஐரோப்பியநாடுகளிளிருந்து வந்த முன்னோர்களைக் கொண்டவர்கள், குறிப்பாக WASPS (White Anglo Saxon Protestants) கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் குடும்ப பெயர்களைக் கொண்டவர்களை தாழ்வாகப் பார்க்கும் தன்மை அமெரிக்காவிலும், கனடாவிலும் இப்பொழுதுமுண்டு. அதற்காகவே பல இரண்டாம், மூன்றாம் தலைமுறை கிழக்கு ஐரோப்பிய வம்சாவளியைச சேர்ந்த வெள்ளையர்கள் தமது குடும்ப பெயர்களை ஆங்கில குடும்ப பெயர்களாக மாற்றிக் கொண்டு, ஆங்கிலகுடும்பப் பெண்களை மணந்து கொண்டு, தமது முன்னோர்களை ஆங்கிலேயர்களாக காட்டிக் கொள்ள முனைவதுமுண்டு, ஆனால் அவர்களின் மூக்கும், முகவெட்டும் சிலவேளைகளில் அவர்களை அடையாளம் காட்டி விடுவதுமுண்டு.
//தமிழை மறந்தவர்களையும் தாங்கள் தமிழர் என்று போற்றுவீர்களோ?///
இப்பொழுது கூட ஈழத்தமிழர்களினதும், சிங்கப்பூர், மலேசியா, பிஜி, ரியூனியன், தென்னாபிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் வாழும் தமிழர்களின் இன்றைய தலைமுறையினர் பலர் ஆங்கிலம், பிரஞ்சு, ஜேர்மன், டச்சு, டேனிஷ், நோர்வேஜியன், மலே போன்ற பல மொழிகளை முதல் மொழியாகப் பேசுகிறார்கள். ஆனால் தமிழ் தெரியாது விட்டாலும் கூட அவர்கள் தமிழர்கள் தான் ஏனென்றால் அவர்களின் முன்னோர்கள் தமிழர்கள் அத்துடன் தமிழன் என்பதைத் தவிர வேறொரு இன அடையாளம் அவர்களுக்குக் கிடையாது. அவர்கள் என்ன மொழியைப் பேசினாலும் வீட்டிலும், வெளியிலும் அவர்களின் அடையாளம் தமிழர் என்பது மட்டும் தான்.
21.1.1.3.1.2
திருவாளர் சிவப்பு,
1. //தமிழ் பேசும் மற்றும் தத்தமது மதத்தின் வழக்கத்தை பின்பற்றும் கிருத்துவர்,இசுலாமியர் தமிழரா?//
தமிழன் என்ற அடையாளத்தை மதம் ஒருபோதும் தீர்மானித்ததில்லை. நானறிந்த வரையில் தமிழர்களின் வரலாற்றிலும் மதம் ஒருபோதும் யார் தமிழன் என்பதைத் தீர்மானித்தில்லை. அதனால் தான் தமிழில் எல்லா மதங்களின் பக்தி இலக்கியங்களுமுண்டு. ஆறுமுகநாவலரும், உமறுப்புலவரும், ஈழத்து தனிநாயகம் அடிகளாரும் தமிழர்கள், அவர்களின் மதத்துக்கும், தமிழன் என்ற அவர்களின் இன-மொழி அடையாளத்துக்கும் தொடர்பு கிடையாது.
இலங்கையில் வாழும் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்று நான் பலமுறை இங்கு கூறியிருக்கிறேன், அதற்குக் காரணம், தமிழைத் தாய்மொழியாகப் பேசினாலும் தாங்கள் தமிழர்கள் அல்ல என்று அவர்கள் தான் வாதாடுகிறார்களே தவிர நானல்ல. உணர்வினால் நான் ஒரு தமிழன் என்று உணர்ச்சி பூர்வமாக வாதாடும் சகோ. கற்றது கையளவு அவர்களையே, யார் தமிழன் என்ற என்னுடைய வரைவிலக்கணப்படி(for technical reasons) தமிழன் அல்ல என்று நான் வாதாடும் போது, நாங்கள் தமிழர்களே அல்ல என்று வாதாடும் இலங்கை முஸ்லீம்கள் எப்படித் தமிழர்கள் ஆவார்கள்?
2. நண்பர் ‘கற்றதுகையளவு’ உணர்வு பூர்வமான தமிழராக இருக்கலாமே தவிர ‘யார் தமிழன்’ என்ற என்னுடைய கருத்தின்படி அவர் தமிழரல்ல, ஏனென்றால் அவர் பிறப்பினால் தமிழரல்ல என்ற காரணத்தைக் கவனிக்காது விட்டாலும் கூட, ஆறு தலைமுறைகள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், அவர் தனது மொழியையும், கலாச்சாரத்தையும் இழக்கவில்லை. அவருக்கு தமிழன் என்ற வீட்டுக்கு வெளியே உள்ள அடையாளத்துடன், அவர் வீட்டுக்குள் நுழைந்ததும், தெலுங்கன் என்ற இன்னொரு இன-மொழி அடையாளமும் உண்டு. தமிழனல்லாத வேறு இனமொழி அடையாளமுள்ளவர்கள் தமிழரல்ல, அவர்கள் தமிழ்பேசும் மக்கள் என்பது தான் எனது கருத்தாகும்.
3. ஆந்திராவில் வாழும் அரவாடுகள் எல்லாம் தெலுங்கர்களே எனத் தெலுங்கு மக்கள் யாரும் வாதாடவும் மாட்டார்கள், அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளப் போவதுமில்லை. அது போல் தான் இதுவும்.
4. நீ யார் தமிழன் என்பதை வரையறுக்கலாம் என்று சிலர் கேள்வி கேட்க நினைக்கலாம். அந்தக் கேள்விக்கு நான் முன்பே பதிலளித்து விட்டேன்.
5. நான் தமிழ்ப்பிராமணர்கள் தமிழர்களே என்பதற்கும் காரணம் technical reasons தான். 🙂 அவர்களில் பலர் தமிழெதிரிகளாகவும், சமக்கிருதவெறியர்களாகவும் இருந்தாலும் கூட, அவர்களுக்கு தமிழன் என்பதைத் தவிர வேறு இன-மொழி அடையாளம் கிடையாது. அவர்களில் பெரும்பான்மையினர் எங்கு வாழ்ந்தாலும் தமது தாய்மொழி, தமிழ், நாங்கள் தமிழர்கள் என்று தான் தம்மை அடையாளப்படுத்துகிறார்கள். அவர்களின் வீட்டில் அவர்களுக்கென வேறு மொழி அடையாளம் கிடையாது. ஆனால் தமது இனம் ஆரியர் என அடையாளப்படுத்தும் பார்ப்பனர்கள் யாராவது இருந்தால், அவர்கள் தமிழர்கள் அல்ல.
6. சமக்கிருத வெறிபிடித்த பார்ப்பனர்கள் கூட எனது கருத்தின் படி தமிழர்களாவது கொடுமை தான். என்ன செய்வது, தமிழீழ விடுதலைப் போராட்டத்தைக் காட்டிக் கொடுத்தவர்கள் கூட, நாங்கள் விரும்பாது விட்டாலும் தமிழர்கள் தான்.
7. உடலியற்பண்புகளின் அடிப்படையில் தமிழன் என்பது தீர்மானிக்கப்படுவதில்லை. உங்களின் கருத்தின் படி பார்த்தால், ஆபிரகாமின் குழந்தைகளான அரபுக்களுக்கும், யூதர்களுக்கும் கூடத்தான் தனித்துவமான உடலியல் பண்புகள் எதுவுமில்லை, அரபுக்களும், யூதர்களும் ஒன்று தான் என்று யாருமே கூறுவதில்லை. அதே போல் தென்னிந்தியர்கள் எல்லோரிடமும் ஒரே மாதிரியான உடலியல்பண்புகள் காணப்படுகின்றன், அதாவது இனக்கலப்புண்டு, அதனால் கன்னடர்களும், தமிழர்களும் ஒரே மக்கள் தான், காவிரித் தண்ணீரைத் திறந்து விடு என்று நீங்கள் கர்நாடகாவில் பேசி விட்டு உடலில் ஒரு சேதமுமில்லாமல் திரும்பி வரமுடியுமென நான் நினைக்கவில்லை.
8. தமிழனல்லாத வேறு, இன, மொழி அடையாளங்களையுமுடையவர்கள், தமிழைப் பேசினாலும், அவர்கள் தமிழர்களல்ல, தமிழ் பேசுகிறவர்கள் மட்டும் தான். தமிழர்களுக்கென, மொழியும், கலாச்ச்சாமும் இருக்கும் போது தமிழல்லாத வேறு மொழி, இன அடையாளமும் கலாச்சாரமும் கொண்டவர்கள் எப்படித் தமிழர்கள் ஆவார்கள் என்பதை நீங்கள் தான் விளக்க வேண்டும். இதே வாதத்தை, இந்தியாவின் வேறு மாநிலங்களிலுள்ளவர்கள் ஏற்றுக் கொள்வார்களா? மராட்டிய மந்திகள் கூட தமிழ்நாட்டுக்கு வந்து “தமிழர்களாகி” தமிழ்நாட்டை ஆளவும் முடியும், ஆனால் அந்தளவுக்கு இழிச்ச்சவாய்த்தனமும், அப்பாவித்தனமும் கலந்த பெருந்தன்மை ஈழத்தமிழர்களிடம் கிடையாது, நான் முன்பு கூறியது போல், தமிழன் என்ற முறையில் எமது முன்னோர்கள் கட்டிக்காத்த தமிழ்ப் பாரம்பரியத்துக்கும், தமிழன் என்ற அடையாளத்துக்கும் வந்தான் வரத்தான் எல்லாம் சொந்தம் கொண்டாடுவதை மறுக்கும் உரிமை எனக்குண்டு.
வியாசன் அவர்களே,
ஒரு சிறிய சந்தேகம்.
//ஆனால் தமது இனம் ஆரியர் என அடையாளப்படுத்தும் பார்ப்பனர்கள் யாராவது இருந்தால், அவர்கள் தமிழர்கள் அல்ல.//
//இலங்கையில் வாழும் தமிழ்பேசும் முஸ்லீம்கள் தமிழர்கள் அல்ல என்று நான் பலமுறை இங்கு கூறியிருக்கிறேன், அதற்குக் காரணம், தமிழைத் தாய்மொழியாகப் பேசினாலும் தாங்கள் தமிழர்கள் அல்ல என்று அவர்கள் தான் வாதாடுகிறார்களே தவிர நானல்ல. //
தமிழராக பிறந்து தங்களை ஆரியர் என்று அடையாளப்படுத்தினால் அவர்கள் தமிழர்கள் அல்ல என்கிறீர்கள்.
இலங்கையில் உள்ள தமிழ் இசுலாமியர் தாங்கள் தமிழரல்ல என்று வாதாடுவதால் தாங்களும் அவர்கள் தமிழரல்ல என்று ஒத்துக்கொள்வதாக சொல்கிறீர்கள்.
இதே லாஜிக் படி பார்த்தால் நான் தெலுங்கன் அல்ல, தமிழன் தான் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு ஒருவன் வாதிட்டால் அவனை தமிழன் என்று ஒத்துக்கொள்ளலாமா?
வேற்று மொழி வம்சத்தில் பிறந்த ஒருவர் பல ஆண்டுகளாக, பல தலைமுறைகளாக தமிழகத்தில் வாழ்ந்து, தமிழகத்தின் பண்பாட்டை கடைப்பிடித்து, தமிழை பேசி, தமிழில் சிந்தித்து, தாம் தமிழர் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்பவர்களை தமிழரல்ல என்று சொல்கிறீர்கள்.
முரணாக இருக்கிறதே தங்களது வியாச விவாதம்?
மற்றொரு கேள்வி: வியாசன் என்ற பெயர் தமிழ் பெயரில்லை. அதனால் தங்களது வம்சாவழியினர் தமிழல்லாத ஒரு பெயரை ஒரு குழந்தைக்கு வைக்கிறார்கள் என்றால் அவர்கள் வம்சம் தூய தமிழர் என்று எப்படி எடுத்து கொள்ள முடியும். தாங்கள் தமிழ் பேசுகிறீர்கள். தமிழ் சாதியில் பிறந்தவர் என்று கூறுகிறீர்கள். எத்தனை வம்சங்கள் பின்னோக்கி சென்று தங்களது வாதத்தை நிரூபிக்க இயலும்? ஆயிரம், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர் உங்களது முன்னோர்கள் வெற்று மொழி பேசுபவர்களுடன் திருமண உறவு வைத்ததே இல்லை என்று நிச்சயமாக எப்படி உங்களால் நிரூபிக்க முடியும்? நதி மூலம், ரிஷி மூலம் பார்த்தால் மிஞ்சுவது ஒன்றும் இல்லை.
Technical ஆக நான் தமிழன் இல்லை என்று கூறும் நீங்கள் நூறு சதவீதம் தூய தமிழர் என்று எப்படி நம்புவது? என்னை தமிழன் இல்லை என்கிறீர்கள். எனக்கு இப்போதே தெலுங்கு முழுவதுமாக தெரியாது. அடுத்த தலைமுறைகளில் சுத்தம், தெலுங்கை முழுக்க மறந்து விடுவார்கள். அப்போதும் வியாச பகவான் அவர்களை தமிழரல்ல என்று சொல்வீர்களா? இன்னும் சில தலைமுறைகளுக்கு பின்னர் தமிழ் அடையாளம், தமிழ் மொழி பேசும் எமது சந்ததியினரை தமிழரல்ல என்று எப்படி நிரூபிக்க முடியும்?
திரு கற்றது கையளவு,திரு சிகப்பு,
“Telugu minority educational institutions in Tamil Nadu” என்று கூகுளிட்டு பாருங்கள்.அதில் பதில் வரும் 100 க்கும் மேலான கல்வி நிலையங்கள் எல்லாம் ஏன் “தெலுங்கு மொழி சிறுபான்மையினர்” என்ற வகைமையின் கீழ் தொடங்கபட்டு இருக்க வேண்டும்?. இந்திய அரசியல் அமைப்பு சட்டம் Article 29(1),Article 29(2),Article 30(1),Article30(2) அடிப்படையில் தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மொழி சிறுபான்மை மக்கள்[நாயுடு,ரெட்டி,வைசியர்…..etc] அவர்களுக்கு உரிய நியாயமான சலுகைகளை பெற்று அவர்கள் வாழும் போது அவர்களை தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மொழி சிறுபான்மை மக்கள் என்று தானே அழைக்கப்பட வேண்டும் ? இரட்டை இன அடையாளம் [தமிழர்,தெலுங்கர்] என்பது அவர்களுக்கு தேவை இல்லை அல்லவா ? அரசு எடுக்கும் பல வாறான சர்வேகளில்[உம்: மக்கள் தொகை கணக்கெடுப்பு] தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மொழி சிறுபான்மை மக்கள் தமது மொழி தமிழ் என்று அடையாள படுத்திகொள்வது இல்லை அல்லவா ? அவர்கள் மொழி தெலுங்கு என்று தானே அடையாள படுத்தி கொள்கின்றனர். நிலைமை இப்படி இருக்கும், போது யார் தமிழர் என்ற விவாதத்தில் தாங்கள் தங்களை பற்றி வைக்கும் தமிழர் என்ற பொய்யான அடையாளங்கள் தேவை தானா என்று எண்ணிபாருங்கள். சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு காணும் தமிழ் சமுகம் , தமிழ் நாட்டில் வாழும் தெலுங்கு மொழி சிறுபான்மை மக்களை [நாயுடு,ரெட்டி,வைசியர்…..etc] அவர்கள் சிறுபான்மை மக்கள் என்பற்காக எல்லாம் சமுக/பொருளாதார நிகழ்வுகளில் ஒதுக்கி வைப்பது இல்லை என்னும் நிலையில் அத் தமிழ் சமுகத்திடம் வேறு என்ன நியாயமான உரிமைகளை எதிரிபார்கின்றிர்கள் ?
திரு வியாசன் ஒ மன்னிக்கவும் திரு Rebecca Mary, 🙂
“””அவர்களை தமிழை நேசிக்கும் “தமிழ் நாட்டில் வாழும் பிற மொழி சிறுபான்மை மக்கள்”[Linguistic Minorities Living IN Tamil Nadu] என்று கூறலாம்.””” என்று கூறவேண்டும். [As per the Indian Constitution artical 29(1),29(2),30(1),30(2)]
டயனா அவர்களே,
எத்தனை தலைமுறைகளுக்கு அவ்வாறு அழைப்பீர்கள்?
ஒரு ஆயிரம் வருடங்களுக்கு பின்னும் அவர்கள் பிறமொழி சிறுபான்மை மக்கள் என்ற அடையாளத்தை கொண்டிருப்பார்கள் என்று சொல்வீர்களா? அந்த சமயம் தாங்கள் பிறமொழி சிறுபான்மையினர் என்பதே அம்மக்களுக்கு தெரியாது போகுமே?
திரு கற்றது கையளவு,
ஒவொரு சோசியலிச, சனநாயக பூர்வமான, நாகரிகமான நாடும் தன் நாட்டில் வாழும் பிறமொழி,மத சிறுபான்மை மக்கள் நலனுக்காகவும் ,உரிமைக்காகவும் சிறப்பான சட்டங்களை இயற்றி அவர்களை காக்கின்றது. இது தான் ஐ நா சபையின் தீர்மானமும் கூட. அதன் அடிப்படையில் தான் பிறமொழி,மத சிறுபான்மை மக்கள் தமிழ் நாட்டில் கல்வி கூடங்களையும் தோற்றுவித்தும் ,மத வழிபாட்டு உரிமைகளை பெறும் வாழுகின்றார்கள். ஒவொரு நாடும் தன் உள் 5 % மக்களையாவது பிறமொழி,மத சிறுபான்மையினத்தவரை கொண்டு இருந்தால் தான், அவர்களின் நலன்கள் அரசால் ,பெரும்பான்மை மக்களால் காக்க பட்டால் தான் அந்த நாடு நாகரிகமான,பண்பட்ட நாடு என்று பொருளாகும்.
இந்த அடிப்படையில் உங்கள் கேள்விக்கு பதில் அளிப்பது என்றால் ; பிற மதத்தவரை,மொழியினரை மதிக்கும் நாகரிகம் ,பண்பாடு உள்ள தமிழ் கூறும் சமுகத்தில் பிறந்தவள் நான் என்ற முறையில் கூறுகின்றேன் :
1. பிறமொழி,மத சிறுபான்மையினத்தவரின் கலை ,பண்பாட்டு ,மொழி ,மத நம்பிக்கைகள் சட்ட பூர்வமாக தமிழ் நாட்டில் தொடர்ந்து காக்கபட வேண்டும்.
2.பிறமொழி சிறுபான்மையினத்தவரின் நலனுக்காக தமிழ் நாடு அரசு எல்லை ஓர ஊர்களில் தற்போது நடத்தும் பிற மொழி வழி பள்ளி கூடங்கள் தொடரப்பட வேண்டும்.
3. இனறைய நிலையில் தன் மொழியை முதலில் இழக்கும் எந்த இனமும் அடுத்தது தான் வாழும் நிலத்தை இழக்கும் ,பின்பு அது நாடோடி கூட்டமாக தான் ஓடித்திரியும். அந்த நிலை எந்த மொழி மக்களுக்கும் ஏற்பட கூடாது என்பது தான் என் அவா. எனவே ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் உங்கள் மொழி ,இன அடையாளங்களை [இழக்காமல் வாழுவதும் அல்லது இழந்து வாழுவதும்] உங்கள் விருப்பம். எனக்கு ஒன்றும் இதில் கொள்கை அடிப்படையில் ஏதும் வேறுபாடு உங்களுடன் இல்லை.
நன்றி
Dear Diana,
I have to tell you this. You are filling the gap left by Saravanan aka Senthil kumaran (to some extent). I miss him so much. I hope you have read his comments.
Thiru Univerbuddy, I am here from the past 2 months. I know Mr.Saravanana in Vinavu through his comments but not Mr Senthil kumaran . I read Mr Saravanana’s comments. OK its good and I took some information from his comments regarding politics.
//திரு வியாசன் ஒ மன்னிக்கவும் திரு Rebecca Mary, :)//
என்ன சொல்ல வருகிறார் அண்ணன் சரவணன். நான் ஒருபோதும் அவரைப் போல் இரட்டை வேடம் போட்டதில்லை. 🙂
திரு வியாசன்,
🙂 🙂 🙂 🙂 🙂 உண்மையில் நான் திரு சரவணனாக இருந்து இருந்தால் ;நான் திரு சரவணன் தான் என்பதை நீங்கள் உண்மையில் நம்பியிருந்தால்; நான் உங்களிடம் இங்கு [கேட்கும் கேள்விகளுக்கும் /செய்யும் விவாதங்களுக்கும்] ருத்திர தாண்டவமே உங்க்ளிடமும் ,அவரிடமும் நடந்து இருக்க வேண்டுமே ? ஆனால் அப்படி எல்லாம் நடக்காததால் நீங்கள் அந்த வியாசன் இல்லை என்பதும் ,நான் சரவணன் இல்லை என்பதும் உறுதியாகி விட்டது அல்லவா ? நீங்கள் திரு சரவணன் அவர்களுடன் விவாதம் செய்த பழைய வியாசன் இல்லை தானே ? அவர் பெயரில் வாதம் செய்யும் வேறு ஒருவர் தானே ? ஆமாம் வினவு தளத்தில் ஒரு மனிதர் ஆள் மாறாட்டம் செய்கிறார் என்பதை எப்படி கண்டு பிடிப்பது திரு வியாசன் ?? 🙂 🙂 🙂 🙂 🙂 🙂 🙂
நீங்கள் டயானா என்ற பெயரில் இருப்பதால், பெயருக்கு ஒரு மரியாதை அவ்வளவு தான். 🙂
திரு வியாசன்,
கருத்துக்கள் என்று வரும்போது பாலின வேறுபாடுகளை எல்லாம் பார்க்காமல் ,அக் கருத்துக்கள் தவறு எனில் மோதலில் ஈடுபடுவது தானே சிறந்தது? நான் இங்கு வைத்த கருத்துக்களான :
1.இந்தியாவில் உள்ள ஒவொரு மாநிலமும் [இனமும்] சிறப்பு உரிமைகளை @@@Article 370 படி பெறுமாயின் அது ஒவொரு இனத்தின் வாழ்வாதரத்தையும், பொருளாதார, மொழி ,பண்பாட்டு உரிமைகளையும் பாதுகாத்து அவ்வினங்களை வளர்ச்சி அடைய செய்யும் அல்லவா ?
2.பிறமொழி,மத சிறுபான்மையினத்தவரின் கலை ,பண்பாட்டு ,மொழி ,மத நம்பிக்கைகள் சட்ட பூர்வமாக உலகம் எங்கும் உள்ள பண்பட்ட ,நாகரிக நாடுகளில் தொடர்ந்து காக்கபட வேண்டும்.
3.தமிழ் இனத்துக்குள் பெரும்பானமையான திருமணங்கள் சாதிய கலப்பு திருமணமாக இருக்க வேண்டும் என்பது ;அத்தகைய போக்கு தான் தமிழ் இனத்தை வலிமையாக்கும் என்பது
உங்களுக்கு மேல் உள்ள கருத்துகளில் எல்லாம் ஏதும் முரண்பாடு இல்லை என்பது உங்கள் மவுனத்தின் மூலம் அறிய முடிந்தாலும், இது பற்றி எல்லாம் நாம் கருத்துகளை பகிர்வது இந்த விவாதத்தில் முக்கியம் அல்லவா ? ஏன் கேட்கின்றேன் என்றால் “யார் தமிழர்” என்ற விவாதமே தலிபானிசம் என்று கூறி இவ் விவாதத்தை திசை திருப்ப முயலும் சில போலியானவர்களுக்கு நாம் மேலே உள்ள கருத்துகளை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்யும் போது, அது அந்த போலியானவர்களுக்கு சாட்டையடியாக இருக்கும் அல்லவா?
திரு தென்றல் ,
[தேசிய வாதிகளும் ,கம்யுனிடுகளும் கை கோர்க்க வேண்டிய நேரம் இது]
பஞ்சாசாயத்து மேல் நிலை தண்ணீர் தொட்டிகள் என்பது திரு காமராசர் ஆட்சியில் இருந்த போதே சிறிது சிறிதா தமிழ் நாட்டு கிராமங்களில் தொடங்க பட்டவை. கிராம மக்களின் நீர் ஆதார தேவைகளை பெருமளவுக்கு பூர்த்தி செய்பவை. 1990 களில் இருந்து மைய அரசு ” அரசு முதலாளித்துவ” கொள்கையில் இருந்து விலகி புதிய பொருளாதார கொள்கை மூலம் நாட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்ட பின் நம் நாட்டின் இயற்க்கை வளங்கள்[நீர் உட்பட] எல்லாம் கொள்ளை போகின்றது என்பது யாரும் மறுக்க முடியாதா உண்மை. மோடி எதிர்பு திருச்சி பொது கூட்டத்தில் கூட இதனை திரு மருதையன் அவர்கள் கிழ் கண்டவாறு அழகாக கூறினார்:
1990களில் நாட்டின் வளங்கள் எல்லாம் நரசிம்ம ராவ் அரசால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்ட தருணத்தில் அதனை எதிர்த்து போராட வேண்டிய தருனத்தில் இராமருக்காக பாபர் மசுதி இடிக்கப்ட்டது. முற்போக்கு சக்திகளின் வேலை திட்டம் எல்லாம் மத சார்பின்மைக்காக பேராட வேண்டி இருஇந்ததால் நரசிம்ம ராவ் அரசின் புதிய பொருளாதார கொள்கையின் அபாயங்கள் எதிர் கொள்ள படாமல் போயின.
இன்று நாட்டின் அபாயகரமான சக்திகள் மத வாதமும் , நவின காலனியமும் தானே தவிர தேசிய இனங்களின் விடுதலைக்கான குரல் அல்ல. தேசிய இனங்கள் இன்னும் மேலும் உரிமைகளை[சுயாட்சி,தன்னுரிமைகளை] பெற்றால் தான் “ஹிந்து ஹிந்தி பாசிச ஹிந்தியா ” என்ற மோடியின் இலச்சியத்தை முறியடிக்க முடியும்.
Correction : திரு மருதையன் அவர்கள் கிழ் கண்டவாறு அழகாக கூறினார்:
“””1990களில் நாட்டின் வளங்கள் எல்லாம் நரசிம்ம ராவ் அரசால் பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விட்ட தருணத்தில் அதனை எதிர்த்து போராட வேண்டிய தருனத்தில் இராமருக்காக பாபர் மசுதி இடிக்கப்ட்டது. முற்போக்கு சக்திகளின் வேலை திட்டம் எல்லாம் மத சார்பின்மைக்காக பேராட வேண்டி இருஇந்ததால் நரசிம்ம ராவ் அரசின் புதிய பொருளாதார கொள்கையின் அபாயங்கள் எதிர் கொள்ள படாமல் போயின.””””
இங்கு கட்டுரைக்கு தொடர்பில்லாத வகையில் விவாதங்கள் எங்கெங்கோ சென்றவண்ணம் இருக்கின்றன. இது வாசகர்களுக்கு பின்னூட்ட வாசிப்பில் தொய்வையே ஏற்படுத்தும். இவற்றையெல்லாம் படித்துவிட்டு கட்டுரை சொல்ல வந்த கருத்தை மறந்துவிடுவார்கள். ஆகவே……..
ஆகவே……திரு சரவெடி,
இக் கட்டுரைக்கு [பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்-seeman-pachamuthu-tamil-national-deal] தொடர்பான யார் தமிழர் என்ற விடயத்தை விவாதிப்பதில் தங்களுக்கு ஏதும் ஆட்சோபனை இருக்காது என்று நம்புகின்றேன். இக் கட்டுரையின் தலைப்பு தமிழில் பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான் என்று இருப்பதும் அதன் இணைய முழுமையான முகவரி [Uniform resource locator] யில் seeman-pachamuthu-tamil-national-deal என்று இருப்பதும் தங்களுக்கு தெரிகின்றதா இல்லையா ? ஆமாம் இக் கட்டுரைக்கு தொடர்பில்லாத விவாதங்கள் என்று எதை கருதுகின்றிர்கள் ?
செல்வி / திருமதி டயானா,
இங்கு தனிப்பட்ட சிலரை (சீமான், பச்சமுத்து மற்றும் சிலர்) அம்பலப்படுத்தி கட்டுரை வரையப்பட்டுள்ளது. அவற்றை ஒட்டி விவாதம் நடப்பின் சரியானதாக இருக்கலாம். தங்கள் விவாதங்களையும் அவற்றின் மூலத்தலைப்பையும் குறை சொல்லவில்லை. ஒருவேளை வினவு தனி ஃபோரம் ஒன்றை நடத்தினால் அங்கு நாமே புது திரி உருவாக்கி அங்கே விவாதிக்கலாம். அவ்வளவே!
மற்றபடி.. தங்களுக்கு புல்லட் பாயின்டோ அல்லது அடைப்புக்குறிக்குள் வரிசையாக நம்பர்களைப் போட்டோ விளக்குமளவிற்கு எனக்குப் பொறுமை இல்லை; அதற்கு நான் வொர்த்தும் இல்லை 🙂
மறைந்த செந்தில்குமரனின் ஆவி என்னை கடைத்தேற்றுவதாக! ஆமென்! 😉
திரு சரவெடி,
போலி தமிழ் தேசியவாதியாகிய சீமானின் உண்மையான சிரழீந்த முகத்தை வெளிக்காட்டும் இக்கட்டுரையில், உண்மையான தமிழ் பற்று உடையவர்களையும், அவர்கள் போகும் அரசியல் பாதை உண்மை கம்யூனிஸ்ட்டுகளுடன் கை கோர்க்க வேண்டும் என்பதையும் சுட்டிகாட்டும் என் நோக்கம் இக் கட்டுரையில் மைய நோக்கத்துக்கு எதிரானது அல்ல. மேலும் தமிழ் பற்று உடையவர்கள் கம்யூனிஸ்ட்டுகளுடன் இணைவது என்பது இன்றைய பார்பன பாசிச மோடியின் ஆட்சி கால கட்டத்தில் தவிர்க்க இயலாதது ஆகும் என்பதை தாங்கள் உணரவில்லையா ? மறைந்த செந்தில்குமரன் அவர்கள் உங்களுக்கும் நண்பரா ? திரு Univerbuddy கூட அவரின் மறைவிற்கு வருத்தப்பட்டார்.
டயானா,
உங்க கருத்துகளோடு ஒத்துப்போகிறேனோ இல்லையோ ஆனால் உங்கள் கருத்துகளுக்காக நீங்க போராடுகிற திறனை பெரிதும் மதிக்கிறேன். தொடருங்கள்.
நன்றி திரு சரவெடி
உயிரோடு இருக்கும் ஒருவரை மறைந்தவர் என்று கூறுவது சரியல்ல.
மறைந்த என்று சொல்வதை விட மறைந்திருக்கும் செந்தில்குமரன் என்று குறிப்பிடலாம்.
நானும் அவரும் பலமுறை படு ஆவேசமாக விவாதித்திருக்கிறோம்.
நல்ல மனிதர், கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார்.
தமிழரல்லாத ஒருவரும் நானும் தமிழன் தான், நானும் தமிழன் தான் என்று மாற்று இனத்தின் அடையாளம் தரிக்க விரும்புவது எந்த அளவிற்கு மொழிவெறி பாட திட்டங்களில் கலந்து ஊட்டப்பட்டு இருக்கிறது எனபது தெரிகிறது .
சாதி ,மத, மொழி போதைகளில் மக்கள் ஊறி திளைகிரார்கள் . மொழி போதை கொண்டவர்கள் சாதி போதை கொண்டவர்களை பார்த்து ஏளனம் செய்கிறார்கள் …
இதிலே ஒருவர் பிராமணன் யாரென்று மனு வரையருததை போல தமிழன் யாருன்னா… என்று வரையறை செய்கிறார்.
தமிழர் மீது , தமிழ் உணர்வாளர்கள் மீது நடத்தப்படும் அப்பட்டமான தாக்குதல் இது. தான் பிறந்த மண் மீது பாசமும் ,அதன் மொழி மீது பற்றும் உள்ள மொழி சிறுபான்மையினரான திரு கற்றது கையளவு அவர்களின் மீது நடத்தப்படும் கருத்தியல் வன்முறை இது. இங்கு யார் தமிழர் என்று பேசிக்கொண்டு இருக்கும் திரு வியாசன் மற்றும் நான் ஆகியவர்கள், திரு கற்றது கையளவு அவர்களின் தமிழ் மொழிப்ற்றை எல்லாம் ஒரு போதும் கேள்விக்கு இடமாக்கவில்லை. எம் நாடு தமிழ் நாடு என்னும் போது,அதில் யார் தமிழர் என்று வரையரை செய்யும் அதே வேளையில், அதில் திரு கற்றது கையளவு போன்ற மொழி சிறுபான்மையினருக்கு மற்ற உலக நாடுகள் பிற மொழி சிறுபான்மையினருக்கு அளிக்கும் சிறப்பான சலுகைகளை தான் வரையரை செய்து கொண்டு உள்ளோம். அது தான் நாகரிகம் உள்ள என் நாட்டவருக்கும் உரிய செயல். தமிழ் மொழியை அழிக்கவேண்டும் என்றே பிறந்து வந்து உள்ள ஒரு “நாசகார கும்பலின்” பிரதிநிதியாக செயல்படுபவருக்கு வேண்டுமானால் திரு கற்றது கையளவு,திரு வியாசன் ,மற்றும் என்னுடைய தாய் மொழிப்பற்று, “மொழி போதையாக” தெரிவதில் ஆச்சிரியம் ஏதும் இல்லை
.Mr கனேஷ் என்பவர் “செத்த மொழி சஸ்கிருத பிணத்தை” வைத்துக்கொண்டு நாறடிக்கும் துர்நாற்றத்துடன் இத்துனை நாட்கள் ஒப்பாரி வைத்து கொண்டு இருந்த போது எல்லாம் எம் தமிழ் மொழி பற்றை “மொழி போதை” என்று கூறுமிவர்[Raman] எங்கு சென்றார் ? உயர்தினைக்கு தான் “திரு” என்று மரியாதை கொடுத்து அழைப்பது எம் தமிழர் பண்பாடு. எனவே இங்கு, இதுக்கு, இப்போது “திரு” என்று எல்லாம் மரியாதை கொடுக்க இயலாது.
அன்புள்ள டயானா,
உங்கள் அடுத்தடுத்த பின்னூட்டங்கள் குறிப்பாக இந்த பின்னூட்டம், உங்கள் மேல் சரவணன் (எ) செந்தில் குமரனின் ஆவி ஏறி விட்டதை உறுதிப் படுத்துகிறது. (ஆனால் சரவணன் (எ) செந்தில் குமரன் அமரர் ஆகி விட்டதைத்தான் என் மணம் ஏற்க மறுக்கிறது.)
Thiru Univerbuddy,
வினவில் நான் செய்யும் முயற்சிகள் மிகவும் நேரடியானது. உண்மையான கம்யூனிஸ்ட்களையும் , உண்மையான தமிழ் தேசிய உணர்வாளர்களையும் இணைகோடுகளில் அழைத்து வந்து நிறுத்தி , இன்று இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் மீது மோடியின் அரசு செலுத்தும் கலாச்சார ,பண்பாட்டு,ஹிந்தி மொழி திணிப்புகளுக்கு எதிராக போராட கருத்தியல் தளத்தில் அவர்களை ஒற்றுமை படுத்துவது தான் என் நோக்கம். ஆனால் உங்கள் நண்பர் திரு சரவணனுக்கு இப்படி எல்லாம் ஏதும் நோக்கம் இருந்ததாக அவரின் பின்னுட்ட பதிவுகளை படிக்கும் போது எமக்கு தெரியவில்லை.மேலும் உங்கள் நண்பர் திரு சரவணன் கருத்தியல் தளத்தில் வினவில் ஆற்றிய பணி முற்போக்கானதாக இருப்பினும் “ஹிந்து ,ஹிந்தி ,பாசிச ஹிந்திய” என்ற RSSன் இலச்சிய கனவை நினைவாக முனையும் மோடியின் செயலுக்கு எதிராக அவருக்கு[திரு சரவணன்] என்று எந்த வேலை திட்டமும் இருந்ததாக எனக்கு தெரியவில்லை.
நன்றி.
Thiru Univerbuddy,
உங்கள் நண்பர் சரவணன் (எ) செந்தில் குமரன் அமரர் ஆகி விட்டதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் ,என் அஞ்சலியையும் வலி மிகு மனதுடன் தெரிவித்துகொள்கின்றேன். அவருடைய முற்போக்கான நோக்கங்கள் நிறைவேற நான் உறுதி எடுத்துக்கொண்டு பாடுபடுவோம். ;(