privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திநாகர்கோவில் புத்தகக் கண்காட்சியில் சிவசேனா அடாவடி

நாகர்கோவில் புத்தகக் கண்காட்சியில் சிவசேனா அடாவடி

-

மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்ட கிளை,
எண் 169, தாம்சன் தெரு, அரண்மனை சாலை,
நாகர்கோவில் – 629001
_____________________________________________________________________________

பத்திரிகை செய்தி

கருத்துரிமைக்கு எதிராக செயல்படும் சிவசேனா

நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து 10 நாட்கள் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு எழுத்தாளர்கள், பதிப்பகங்களின் புத்தகங்கள் 150-க்கும் மேற்பட்ட கடைகளில் விற்பனைக்கு உள்ளன.

slb-schoolபுத்தகக் கண்காட்சியில் கீழைக் காற்று பதிப்பகம் மற்றும் திராவிடர் கழகம் நடத்தும் கடைகளில் “இந்து என்று சொல்லாதே, ராமன் பின்னே செல்லாதே“, “ராமன் தேசிய நாயகனா? வில்லனா?“, “அர்த்தமற்ற இந்துமதம்”, “கீதையின் மறுபக்கம்” என்ற புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.

சிவசேனாவைச் சேர்ந்த சிவாஜி என்ற நபர் இந்தக் கடைகளுக்குச் சென்று ‘இம்மாதிரியான புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது’ என்று கூறியதோடு, திராவிடர் கழகம் நடத்தும் கடையின் முன்பு அமர்ந்து மேற்கூறிய ‘புத்தகங்களை விற்பனை செய்யக் கூடாது, உடனே அவற்றை அகற்ற வேண்டும்’ என்று கூறி தகராறு செய்துள்ளார்.

சிவசேனாவைச் சேர்ந்த இந்த நபரின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டம் கூறும் கருத்துரிமைக்கு விரோதமானதாகும்.

மேலும் மேற்குறிப்பிட்ட நூல்கள், ராமாயணம், மற்றம் பகவத் கீதை சாதி பாகுபாட்டையும், சாதித் தீண்டாமையையும், எப்படி பாதுகாக்கின்றன என்று விளக்குகின்றன. ஜனநாயக நாட்டில் யார் ஒருவருக்கும் எந்த ஒரு மதம் தொடர்பாகவோ எந்த ஒரு குறிப்பிட்ட விசயம் தொடர்பாகவோ தனது கருத்தை எழுத்து மூலமாகவோ, வாய்மொழியாகவோ தெரிவிக்க அரசியல் அமைப்பு சட்டப்படி உரிமையுள்ளது.

மாற்றுக் கருத்து உள்ளவர்கள் சட்டப்படியாகத்தான் இதை அணுக வேண்டும். மாறாக, இது போன்று நடந்து கொள்வது சட்டவிரோதமானதாகும்.

மேலும், அரசு நடத்தும் ஒரு கண்காட்சியிலேயே இதுபோன்று சட்டவிரோதமாக நடந்து கொண்ட சிவசேனாவைச் சேர்ந்த சிவாஜி என்பவர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும். மேலும், இது போல வேறு யாரும் நடந்து கொள்ளாதவாறு, காவல்துறை தகுந்த பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.

இல்லையேல் இது போன்ற நபர்கள் தங்களுக்கு உடன்பாடு இல்லாத எந்த ஒரு புத்தகத்தையும் விற்பனை செய்யக் கூடாது என்று தகராறு செய்வர். இது எழுத்தாளர், பதிப்பாளர்கள் கருத்துரிமை மட்டுமல்ல, பொதுமக்கள் தாங்கள் எதையும் தெரிவு செய்து அறிந்து கொள்வதற்கு உள்ள உரிமையையும் தடை செய்வதாக அமைந்துள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள புத்தகங்கள் பல ஆயிரக் கணக்கில் விற்பனை செய்யப்பட்டு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

சுயவிளம்பரம் தேடும் விதமாகவும், புத்தகக் கண்காட்சியை சீர்குலைக்கும் விதமாகவும் நடந்து கொண்ட சிவசேனாவைச் சேர்ந்த சிவாஜியின் செயல்பாட்டை ஜனநாயகத்திலும், கருத்துரிமையிலும் நம்பிக்கை உள்ள அரசியல் கட்சிகளும், சமூக இயக்கங்களும் கண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறோம்.

நன்றி

நாகர்கோவில்,
20-08-2014

இவண்

க. சிவராஜபூபதி,
வழக்கறிஞர்,
மாவட்ட செயலாளர்,
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
கன்னியாகுமரி மாவட்டம்.
தொடர்பு : 9486643116

சிவசேனாவுக்கு கண்டனம்

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]