Monday, March 17, 2025
முகப்புகட்சிகள்இதர கட்சிகள்ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு - சிக்கியது மோடி அரசு

ஃபேஸ்புக்கில் இந்தித் திணிப்பு – சிக்கியது மோடி அரசு

-

மோடி அரசு பதவி ஏற்ற அடுத்த நாள், அனைத்து அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும், பொதுத் துறை நிறுவனங்களுக்கும், வங்கிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் டுவிட்டர், பேஸ்புக், கூகிள், யூடியூப், வலைப்பதிவுகள் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகார பூர்வ கணக்குகளில் இந்திக்கு முன்னுரிமை கொடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. அகண்ட பாரதத்தை அமைப்பதற்கு முன், சிக்கிய இந்தியாவில் இந்தியைத் திணிக்கும் இந்துமதவெறியர்களின் இயல்பான முயற்சிக்கு நாடு முழுவதும், குறிப்பாக தமிழகத்தில் கடும் கண்டனம் எழுந்தது.

இதையடுத்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், “நாட்டின் அனைத்து மொழிகளையும் பரப்புவதற்கு அமைச்சகம் கடமைப்பட்டுள்ளது” என்று டுவீட் செய்தார். உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ, அனைத்து துறைகளிலும், பொது வாழ்க்கையிலும் ஹிந்தியை முன்னிறுத்துவதில் அரசு உறுதியாக உள்ளது என்றாலும் அது மற்ற மொழிகளை பின்தள்ளுவதாக அமையாது என்று உறுதியளித்தார். வஞ்சப் புகழ்ச்சி போல இது சமத்துவத்தின் பெயரில் நடைபெறும் நாடகம் என்பதை எத்தனை பேர் அறிவர்?

இந்த சுற்றறிக்கை தொடர்பாக உள்துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில் “அலுவல் மொழிக்கான துறை 1963 அலுவல் மொழி சட்டத்தின்படியும் 1976 அலுவல் மொழிகள் விதிமுறைகளின் படியும் அவ்வப்போது அலுவல் மொழிக் கொள்கையை அமல்படுத்த சுற்றறிக்கைகள் அனுப்பி வருகிறது. அதன்படி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய சுற்றறிக்கையின் தொடர்ச்சியாக, மார்ச் மாதம் 10-ம் தேதி அனைத்து அமைச்சகங்கள், துறைகள், துணை அலுவலகங்கள், அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் ஹிந்தி அல்லது ஹிந்தி-ஆங்கிலத்தை சமூக வலைத்தளங்களில் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதன்படி உள்துறை அமைச்சகம் மே 27 தேதியிட்ட சுற்றறிக்கையை அனுப்பியிருந்தது.” என்று விளக்கம் சொல்லியிருந்தது.

இந்த சுற்றறிக்கை இந்தி பேசும் மாநிலங்களுக்கு மட்டும்தான் பொருந்தும், இந்தி பேசாத மாநிலங்களுக்கு பொருந்தாது என்றும் கூறினார்கள்.

நேஷனல் புக் டிரஸ்ட்
இந்தி மயமாகும் நேஷனல் புக் டிரஸ்ட் பேஸபுக் பக்கம்

உண்மையில் நடைமுறை மாறியிருக்கிறதா என்பதை ஆய்வு செய்ய இந்தி பேசும், மற்றும் இந்தி பேசாதா மாநிலங்கள் அனைத்துக்கும் பொதுவான மத்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் (மனித வளத் துறை) கீழ் இயங்கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் பேஸ்புக் கணக்கை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டோம். இந்த நிறுவனம்தான் இந்தி, ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட இதர தேசிய மொழிகளில் பல்வேறு நூல்களை வெளியிடும் மிகப்பெரும் மத்திய அரசு நிறுவனம்.

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து இன்று வரையிலான 100 நிலைத்தகவல்களை எடுத்து அவை எந்த மொழியில் இடப்பட்டுள்ளன என்று ஆய்வு செய்தோம்.

இந்தி மொழி பயன்பாடு துலக்கமாக அதிகரித்த ஜூலை இறுதி வரையிலான கால கட்டத்துக்கு முன்னும் பின்னும் என இந்த நிலைத்தகவல்களை பிரித்துக் கொண்டால்,

ஜனவரி 27 முதல் ஜூலை 24 வரை (சுமார் 6 மாதங்களில்)

ஆங்கிலம்

53

72%

இந்தி

15

20%

மற்றவை

6

8%

மொத்தம்

74

ஜூலை 24 முதல் இன்று வரை (சுமார் 1 மாதம்) பேஸ்புக் நிலைத்தகவல்களின் நிலவரம்

ஹிந்தி

20

77%

ஆங்கிலம்

5

19%

மற்றவை

1

4%

மொத்தம்

26

அதாவது, மோடி நிர்வாகம் தனது முடிவுகளை செயல்படுத்த ஆரம்பித்த கால கட்டத்திலிருந்து பார்க்கும் போது அது வரை ஆங்கிலம் முதன்மையான மொழியாக (70%) இருந்த நிலை மாறி இந்தி முதன்மையான மொழியாக மாற்றப்பட்டு (77%), ஆங்கிலம் இரண்டாம் நிலைக்கு (19%) தள்ளப்பட்டுள்ளது.

நேஷனல் புக் டிரஸ்ட் இந்தித் திணிப்புஜூலை மாதத்துக்கு முன்பு இந்தி நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் இந்தியிலும், மற்ற நிலைத்தகவல்கள் ஆங்கிலத்திலும் இருந்தன. கடந்த ஒரு மாதத்தில் பொதுவான நிலைத்தகவல்கள் இந்தியிலும், ஆங்கில நூல்கள் பற்றிய நிலைத்தகவல்கள் மட்டும் ஆங்கிலத்திலும் என்று மாறியிருக்கிறது.

மோடி அரசு பதவி ஏற்ற நாளிலிருந்தே பார்த்தாலும், இந்தி, ஆங்கிலத்துக்கு நிகராக பாதிக்குப் பாதி இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த கால கட்டம் முழுவதிலும் தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளுக்கு நேஷனல் புக் டிரஸ்டின் சமூக வலைத்தள தகவல் பரிமாற்றத்தில் இடமே இல்லை.

இந்த 100 நிலைத்தகவல்களில் பல ஆங்கில, இந்தி நூல்கள் பற்றிய செய்திகள் உள்ளன. ஒரு உருது மொழி புத்தகம் பற்றிய நிலைத்தகவல் உள்ளது. மற்ற எந்த இந்திய மொழி பற்றியும் எந்தத் தகவலும் இல்லை.

சரி, 2012-13 ஆண்டு மத்திய அரசிடமிருந்து (நாடு முழுவதும் வாழும் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்ட வரிப்பணத்திலிருந்து) சுமார் ரூ 44 கோடி நிதி உதவி பெற்ற இந்நிறுவனம்  வெளியிடும் புத்தகங்கள் பற்றிய விபரங்களை ஆய்வு செய்தோம்.

2012-13ம் ஆண்டு வெளியிடப்பட்ட மொத்தம் 1,553 புத்தகங்களில் 25% மக்கள் பேசும் இந்தி (511), மராத்தி (460) மொழிகளுக்கு 63% இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. (இந்தி மொழி பேசுபவர்களில் ராஜஸ்தானி, போஜ்பூரி, அவதி, சத்திஸ்கரி மொழி பேசுபவர்களை சேர்க்காமல்).

மூன்றாவது இடத்தில் ஆங்கிலம் (244) சுமார் 16% பங்கை பெற்றிருக்கிறது.

ஆங்கிலம் - இந்தி
ஆங்கில தகவலுக்கு இந்தியில் பதில்.

26 கோடி மக்கள் (17% மக்கள் தொகை) பேசும் வங்க மொழி (83), பஞ்சாபி (56), அசாமிய மொழி (48), உருது (45), குஜராத்தி (34) ஆகிய மொழிகளிலான புத்தகங்கள் சுமார் 17% இடத்தை மட்டும் பிடித்திருக்கின்றன.

ஒடியா (19), தெலுங்கு (16), மலையாளம் (10), தமிழ் (9), கன்னடம் (9), ஆகிய மொத்தம் 24 கோடி மக்கள் (20% மக்கள் தொகை) பேசும் பெரிய தேசிய மொழிகளுக்கு மொத்தம் 63 புத்தகங்கள் (4%) என ஏதோ போகிற போக்கில் பங்கு அளிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது, தென்னிந்திய மொழிகளை புறக்கணித்து இந்தி, மராத்தி மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்தி, ஆங்கில மொழி புத்தகங்களைத் தவிர பிற மொழி புத்தகங்கள் குறித்து நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனம் பேஸ்புக்கில் பேசவே இல்லை என்பது ஆய்வுக்கு எடுத்துக் கொண்ட 100 நிலைத்தகவல்களில் தெரிய வருகிறது.

அனைத்தையும் இந்தி மயமாக்குவதற்கான உதாரணமாக நிலைத்தகவல் ஒன்றை குறிப்பிடலாம். சென்ற மாதம், லூதியானாவிலிருந்து நேஷனல் புக் டிரஸ்ட்டின் நகரும் புத்தகக் கண்காட்சியை புகைப்படங்கள் எடுத்து, ஆங்கில தகவலுடன் அனுப்பி வைத்திருக்கிறார் ஜிதேந்தர் சிங் நேகி என்பவர். ஆனால், பேஸ்புக்கில் அதை பகிர்ந்து கொண்ட நேஷனல் புக் டிரஸ்ட் அதற்கான பதிலை இந்தியில் எழுதியிருக்கிறது.

இதிலிருந்து இந்து-இந்தி-இந்தியா என்ற கொள்கையை பின்பற்றும் மோடி அரசு பதவி ஏற்ற பிறகு தேசிய இனங்களின் சிறைக்கூடமாக கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்திய நாட்டில், பெரும்பான்மை மக்களின் தேசிய மொழிகள் ஏற்கனவே புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை தொடர்வதோடு, இந்தித் திணிப்பு இன்னும் தீவிரமாக்கப்படுகிறது என்று புரிந்து கொள்ளலாம்.

இந்த தமிழ் விரோத, ஜனநாயக விரோத இந்துமதவெறி அரசைத்தான் திராவிடத்தை தனது கட்சி பெயரில் தக்க வைத்திருக்கும் வைகோ என்ற சந்தர்ப்பவாதி ஆதரித்தார், ஆதரிக்கிறார். இந்த பாஜகவைத்தான் விகடன், தினமலர், குமுதம், தினமணி, தி இந்து உள்ளிட்ட ஊடகங்கள் தலையில் வைத்து கொண்டாடுகின்றன. இன்னொரு புறம் இதே ஊடகங்கள்தான் தமிழுக்காக கவலைப்படுவதாக வேறு நடிக்கின்றன.

பாஜக அரசு இந்தியை திணிக்கவில்லை என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்கள் சத்தியமடிக்காத குறையாக சாதித்தார்கள். ஆனால் உண்மை நிலை என்ன என்பது இந்த கட்டுரையை படிக்கும் எவரும் புரிந்து கொள்ள முடியும்.

“இந்து ராஷ்டிரம்” என்பதற்கான முன்னறிவிப்புதான் இந்த இந்தித் திணிப்பு. இதை தமிழக மக்கள், தமிழார்வலர்கள், ஜனநாயக அமைப்புகள் அனைவரும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

பாஜக மற்றும் அதற்கு பல்லக்கு தூக்கும் துரோகிகளை இனம் காண வேண்டும்.

இணைப்பில் உள்ள சுவரொட்டிகளை பரவலாக பகிருமாறும், நேஷனல் புக் ட்ரஸ்ட் ஃபேஸ் புக் பக்கத்திற்கு சென்று கருத்து பதிவு செய்யுமாறும் கோருகிறோம்.

மோடி இந்தித் திணிப்பு மோடி இந்தித் திணிப்பு

மேலும் படிக்க

  1. ‘வருக,என்றழைத்து வாழ வைத்தவன் தன்னுடைய நாட்டை, புகுந்தவனிடம் பறிகொடுப்பதென்பது உலகில் ஒன்றும் புதிதல்ல,அது மகாபாரதக் காலத்திலேயே தொடங்கி விட்டது. இந்தி, உருது, எனப்படும் மொழி எப்போது தோன்றியது? அந்நிய படையெடுப்பில் போர்க்காலக் கற்பழிப்பு என்று ஒன்று நிகழும், அப்போது புதிய இனம், புதிய மொழிகளென்று பல தோன்றும், அப்படித் தோன்றியதுதான், உருதும் இந்தியும்.பிராமணர்கள் ஏன் இந்தியை நிலைநாட்ட விரும்புகின்றனர், 45% விழுக்காடு சமஸ்கிருதம், 20% அரபும் 20% தமிழும் 15% பாளியும் ப்ராகிருதமும் கலந்ததுதான் இந்தி மொழி, சற்றேறக் குறைய அரபு மொழி, பாரசீக மொழி, அப்போது வடக்கில் வழக்கில் பேசப்பட்ட
    சில மொழிகளின் சேர்க்கைதான் உருது.

    இனக் கலப்பின் காலவரிசை வரலாறு, 3800 ஆண்டுகளுக்கு முன் ஆரியர் மூலம் இனக் கலப்பு, 3400 ஆண்டுகளுக்கு முன் அலெக்ஸாண்டர் மூலம் இனக் கலப்பு, 1200 ஆண்டுகளுக்கு முன் மொகலாயர் மூலம் இனக்கலப்பு இத்தனை இனக்கலப்பு நடந்திருந்தால் ஏன் பலஇனம் பலமொழி தோன்றியிருக்காது?

  2. விரியன் பாம்பின் பல்லில் விஷம் தான் இருக்கும். இப்படி ஒரு கட்டுரை எழுதுவதாலோ அல்லது இந்தி திணிப்பை எதிர்க்கிறோம் பேர்வழிகள் என்னும் பெயரில் தமிழ்நாட்டுக்குள் ஆர்ப்பாட்டமும் போராட்டமும் நடத்துவதாலோ ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. ஏனெனில் தமிழ்நாடு இந்தியாவில் இருக்கும் முப்பது மாநிலங்களில் ஒரு மாநிலம் அவ்வளவு தான். ஆகையால் இந்த இந்தி திணிப்புக்கெதிரான போராட்டத்தை மற்ற இந்தி பேசாத மாநிலங்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும். அப்போது தான் ஏதாவது பிராயச்சித்தம் ஏற்படும். அதற்கு தகுந்தவாறு தமிழகத்தில் இருக்கும் நல்ல மனம் படைத்தோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் இருக்கும் அனைத்து இந்தி பலகைகளையும் தார் பூசி அழித்து எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இந்தி பேசாத மக்களின் எதிர்காலம் மிக அபாயகரமான நிலைமைக்கு போய்க்கொண்டிருக்கிறது.ஆங்கிலம் தெரிந்திருந்தால் கூட பிழைக்க முடியாது போல!

    இந்தியா என்னும் அமைப்பை உருவாக்கியது பிரிட்டிஷ்காரர்கள் தான். ஆகையால் இந்தி பேசாத மக்களின் நலனை காப்பதில் பிரிட்டிஷ் அரசுக்கு தார்மீக கடமை இருக்கிறது. ஆங்கிலத்தை அகற்றி இந்தியை திணிக்கும் செயலை தடுக்க பிரிட்டன் அரசு தலையிட வேன்டும் என கோரி பிரிட்டன் மற்றும் அமெரிக்க தூதரகம் முன்னர் உண்ணாவிரதம் இருக்கலாம். மனு கொடுக்கலாம்.

    திருவாரூரில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் கல்வி சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறதோ இல்லையோ இந்தியை திணிக்கும் வேலை மட்டும் ஜரூராக நடந்து வருகிறது. இப்பல்கலைக்கழக இணைய தளத்தின் ஆங்கில பதிப்பில் கூட இந்தி திணிப்பு காணப்படுகிறது. பேராசிரியர்களின் கல்வி தகுதி மற்றும் இன்ன பிற நடவடிக்கைகள் யாவும் ஆங்கிலத்தில் இருப்பதை விட இந்தியில் தான் பிரதானமாக உள்ளன. இந்த இணைய தளத்தின் இந்தி பதிப்பிலோ அனைத்தும் இந்தி தான். சொல்லி வைத்தது மாதிரி மருந்துக்கும் தமிழ் கிடையாது!. பல்கலைக்கழக இலச்சினையிலும் இந்தி மட்டுமே! தமிழே கிடையாது!. இணைய தளத்திலேயே இந்த லட்சணம் என்றால் பல்கலைக்கழகத்தின் உள்ளே என்ன லட்சணமோ! இது தான் தமிழ் நாட்டுக்கான மத்திய பல்கலைக்கழகமாம்! அதுவும் தமிழுக்காக தண்டவாளத்தில் தலை வைத்ததாக பீற்றிக்கொள்ளும் கல்லக்குடி கொண்டானின் சொந்த தொகுதியிலேயே இந்த நிலை!. தமிழக அரசியல் கட்சியினர் என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை.

    அரசியல் சட்டத்தின்படி இந்தியாவின் மத்திய அரசு சர்வ வல்லமையும் கொண்டது. பெரும்பாலான அதிகாரங்கள் இதனிடம் தான் குவிந்துள்ளன. இந்தியாவின் மாநில அரசுகளோ இன்றளவிலும் கவுரவம் மிக்க முன்சிபாலிட்டிகளாகத்தான் (Esteemed Municipalities) விளங்கி வருகின்றன. மாநில அரசுகளுக்கு அதிகாரங்கள் மிகக்குறைவு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஹிந்தி பேசாத மக்களின் வளர்ச்சி, வாழ்வு மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஆங்கிலம் தான் அரணாக இருக்க முடியும். தமிழ் போன்ற மாநில ஆட்சி மொழிகள் அல்ல. வலிமை மிக்க மத்திய அரசின் தேசிய ஆட்சி மொழியாக ஹிந்தி விளங்குவதோடு அதன் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் பல ஆயிரம் கோடி ரூபாய் நிதி நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒதுக்கப்படுகிறது. தமிழ், கன்னடம் ஆகிய மொழிகளுக்கு குறைந்த அதிகாரங்களை கொண்ட மாநில அரசுகளால் எவ்வளவு நிதியை ஒதுக்க முடியும்? அப்படியே ஒதுக்கினாலும் என்ன பயன் விளைந்து விடும்?

  3. 2000 அப்பவிகளை மதவெறி பிடித்து கென்ற தகுதியின்றி இளபெண்னை வேவு பார்த்த காம தகுதி, மனைவியை மறைத்த காவி தகுதி, தமிழ் மொழியை அழிக்க இந்தியை தினிக்கும் மொழிவெறி தகுதி உள்ளவன் பிரதமர் அவதெல்லம் நம் நாட்டில்தன் மட்டும்தன்

  4. இந்தி எதிர்ப்பில் வயிற்றை கழுவிய ஒரு தள்ளுவண்டியிடம், ஒருநிருபர் கேட்டார்.அனுபவமிக்க தலைவர்கள் இருக்கும்போது, மாறன் பேராண்டியை, ஏன் டில்லியில் மந்திரியாக்கினீர்கள்? அவனுக்குத்தான் நல்லா இந்தி பேசவரும்.பசையுள்ள இலாக்காக்களை வாங்க முடியும்.2G-3G கொள்ளைஅடித்தும், இந்தி ஜீக்களை சரி கட்டமுடியும் என்றார். இனி இந்தி எதிர்ப்பு என்று பேசினாலே செருப்படிதான் விழும் தமிழ்நாட்டில்.

    • ஏன்__ , உனக்கு மூளைன்னு ஒன்னு இருக்கா, கட்டுரையில் என்ன எழுதி இருக்கு ,அதுக்கு பதில் சொல்ல வக்கதவனே….ஆங்கிலத்துக்கு பதிலா இந்தியில் பதில் போட்டுருக்கான்…அதுகூட புரியலையா______.. எங்கிருந்து__ வரீங்க.

  5. இனி இந்தி எதிர்ப்பு என்று பேசினாலே செருப்படிதான் விழும் தமிழ்நாட்டில்

    ____ கொய்யா வா அடி பாக்கலாம் தமிழ்நாட்டில் தமிழ் , இனைப்பு மொழி அங்கிலம் மட்டும்தன்
    தமிழனுக்கு இந்தி தேவையில்லை______மகன்தான் இந்தியை அதரிப்பன்

  6. அட ______ இன்னமும் புத்தி வரலயா உங்களுக்கு, ஹிந்தி தெரியலனா தமிழ் நாட்டிலயே கெடந்து செரைக்க வேண்டியது தான்.. என்ன மயிருக்கு _____english மட்டும் இணைப்பு மொழி ஆ வேணும்

    • அய்யா ரமேஷ்,

      பொங்குவதை கொஞ்சம் நிறுத்தி விட்டு யதார்த்தமா யோசிச்சு பாருங்க. இந்தி படிச்சி என்ன வேலை செய்ய போறீங்க. இந்தியைத் தாய்மொழியாக கொண்ட வட இந்திய மக்கள் அங்கே வேலை கிடைக்காமல், பொருளாதாரம் நசிந்து இங்கே வந்து அடிக்கட்டுமான வேளைகளில் குறைந்தக் கூலிக்கு சுரண்டபடுகிரார்களே, இதுக்கென்ன சொல்ல போகின்றீர்கள்? இந்தி பேசும் மாநிலங்களில் நிலைமை இப்படி இருக்க புடிச்சா பெட்ரோமாக்ஸ் லைட்ட தான் பிடிப்பேன் என்று ஒத்த காலுல அடம் புடிக்கிறீங்களே.பாஸ் அதில இருந்த மாண்டில செந்தில் எப்பவோ ஓடைத்துவிட்டாருனங்கோவ்.

      அதனால இப்படி கூப்பாடு போடாமல், பொறுமையாக ஆற அமர்ந்து கொஞ்சம் யோசிச்சா எல்லாம் சரியாகிவிடும்.

      • சிவப்பு சரியாகச்சொன்னார்.
        அங்கே போய் நாள்கணக்கில் தங்க வேண்டிய நிர்பந்தம் இருப்பவன் கற்று கொள்ளட்டும். அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

        வடநாட்டுக்காரர்கள் தமிழகம் வந்தால் அவர்களுடன் பேச நாங்கள் ஏன் இந்தி கற்க வேண்டும்? வேண்டுமென்றால் அவர்கள் தமிழ் கற்கட்டுமே. இதே வடஇந்தியர்கள் அயல்நாடுகளுக்கு போகும்போது அந்த நாட்டினர் எல்லோரும் இவர்களுக்காக இந்தி கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்களா என்ன?

  7. வடமாநிலங்களுக்கு போக வேண்டிய அவசியம் இருப்பவன் இந்தி கற்றுக்கொள்ளட்டும்.
    அதை ஏன் எல்லோரும் படிக்க வேண்டும் என்று நிர்பந்தம் செய்கிறீர்கள்?

    இந்தி கற்காமலேயே உலகின் பல மூலைகளுக்கு சென்று வருகிறோம். இதனால் ஒன்றும் இழப்பு ஏற்படவில்லை.

    வடமாநிலத்தான் தமிழகம் வரும்போது தமிழ் கற்றுக்கொண்டா வருகிறான்?
    ரமேஷ், ஏன் இந்த விதண்டாவாதம்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க