Monday, March 17, 2025
முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 04/09/2014

ஒரு வரிச் செய்திகள் – 04/09/2014

-

செப் செய்திகள்செய்தி: அமெரிக்க பத்திரிகையாளரும், இசுரேல் குடியுரிமை பெற்றவருமான ஸ்டீவன் சாட்லாஃப், ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளால் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்.

நீதி: சர்வதேச பத்திரிகையாளர்கள், மக்கள், இசுலாமியர்கள் அனைவரிடமும் வெறுப்பை சம்பாதித்து விட்டு, தங்களை அழிக்குமாறு ஐஎஸ்ஐஎஸ்-அமெரிக்காவிற்கு கோரிக்கை விடுவிக்கிறது! வளர்த்த கடாவை போட்டுத்தள்ள அமெரிக்கா காத்திருக்கிறது

____________________

செய்தி: “அவர் சோசலிஸ்ட் தலைவராக காட்டிக் கொண்டாலும் ஏழைகளை வெறுக்க கூடியவர்” என்று பிரெஞ்சு அதிபர் ஹொலாண்டேயின் முன்னாள் தோழி வெலெரி கூறியுள்ளார்.

நீதி: ஏழைகளை வெறுக்க கூடிய இந்திய அரசின் அரசியலைமைப்பு சட்டத்தில் சோசலிசம் இருக்கும் போது பன்னாட்டு நிறுவனங்களின் தூதர் ஹொலாண்டே மட்டும் சோசலிசம் பேசக்கூடாதா?

_____________________

செய்தி: இந்தியாவில் புனிதப் போரை துரிதப்படுத்த, அல்கைதா ஒரு புதிய கிளையை உருவாக்கியிருப்பதாக அமெரிக்க ஊடக மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

நீதி: பிறகென்ன, சங்க பரிவாரங்கள் ஆட்டம் போடுவதற்கும், சதித் திட்டங்களை பகிரங்கமாக அமல்படுத்துவதற்கும் மோடி அவற்றை முன்னெடுப்பதற்கும் இந்த செய்தியே போதுமே?

______________________

செய்தி: இதுவரை 1900 உயிர்களை பலி வாங்கியிருக்கும் எபோலாவை கட்டுப்படுத்த, சுமார் 36,000 கோடி ரூபாயை, பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு வழங்க தேவையிருப்பதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீதி: 2016-ம் ஆண்டில் கட்டி முடிக்கப்படும் அமெரிக்காவின் ஜெரால்டு ஆர் போஃர்டு எனும் விமானந்தாங்கி கப்பலின் திட்ட மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் பத்து இலட்சம் கோடி ரூபாய்!

_______________________

செய்தி: ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம், கேரள மாநில கவர்னராக மோடி அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒரு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, கவர்னராக நியமிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

நீதி: இராணுவத் தளபதிகள், ஐஏஎஸ் – ஐபிஎஸ் அதிகாரிகள் வரிசையில் நீதிபதிகளையும் சேர்த்திருக்கும் பாஜவிற்கு இனி இந்து ராஷ்டிரம் என்பது சட்ட விரோதமானது அல்ல. மோடியின் தளபதி அமித் ஷாவை ஒரு போலி மோதல் வழக்கில் விடுதலை செய்திருப்பதற்கு கிடைத்திருக்கும் எலும்புத் துண்டு கேரள கவர்னர் பதவி. ஆனால் சதாசிவம் தமிழர் என்பதால் வைகோ, ராம்தாஸ், நெடுமாறன்களிடமிருந்து வெண்பா வாழ்த்து வெள்ளமென பாயும்.

______________________

செய்தி: ஸ்பெக்ட்ரம், நிலக்கரி ஒதுக்கீடு வழக்குகளை விசாரிக்கும் சிபிஐ இயக்குநர் ரன்ஜித் சின்ஹா, இரண்டு மூத்த ரிலையன்ஸ் அதிகாரிகளை தனது வீட்டில் சந்தித்திருப்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார். “நான் என்ன பயங்கரவாதிகளையா சந்தித்தேன்” என்றும் நியாயப்படுத்துகிறார்.

நீதி: இந்திய அரசின் பட்ஜெட்டிலிருந்து, சிபிஜயின் குற்றப்பத்திரிகை வரை அம்பானியின் அலுவலக ஒப்புதல் பெற்றே வெளிவரும் என்பதற்கு மற்றுமொரு நிரூபணம். ஆன்டிலியாவின் பாதுகாப்பிற்காக குரைக்கும் மாளிகை நாய்களில் சிபிஐ ஒரு ஸ்பெசல் நாய் என்றாலும் நாய் நாய்தானே?

_____________________

செய்தி: பாதுகாப்பு மற்றும் தொலைநோக்கு ஒத்துழைப்பை புதிய நிலையில் உயர்த்துவது என மோடி மற்றும் ஜப்பான் பிரத்தமர் ஷின்சோ அபெ பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 2,10,000 கோடி ரூபாய் முதலீட்டை இந்தியாவில் போடுவதற்கு ஜப்பான் முடிவு செய்திருக்கிறது.

நீதி: பதிலாக இந்தியாவில் இருந்து எத்தனை இலட்சம் கோடி ரூபாயை கொண்டு செல்ல ஜப்பான் முடிவு செய்திருக்கிறது? தரகர் மோடி அறிவிப்பாரா?

_______________

செய்தி: வர்த்தக தலைநகரான மும்பை வந்திருக்கும் ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், முதல் நாளில் முதலாளிகளையும், பெரும் நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளையும் சந்திக்கிறார்.

நீதி: ஆஸ்திரேலியாவிலிருந்து வருடத்திற்கு 85,000 கோடி ரூபாய் இறக்குமதி செய்தும், வருடத்திற்கு 40,000 மாணவர்களை அங்கே ஏற்றுமதி செய்தும் இலாபம் கொடுக்கிறது இந்தியா. எனில் பிரதமர் அபோட் முதலாளிகளை பார்க்காமல் தாராவி தொழிலாளிகளையா பார்ப்பார்?

________________

செய்தி: 2008 – 26/11 தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக மும்பை தாஜ் மகால் பேலசில், ஆஸ்திரேலிய பிரதமர் அபோட், அஞ்சலி செலுத்துகிறார்.

நீதி: பிழைப்பு தேடி வரும் தெற்காசிய, தென்கிழக்காசிய நாடுகளின் மக்களை நடுக்கடலில் தடுத்து ஜலசமாதி செய்யும் ஆஸ்திரேலியா அரசுக்கு, உயிரின் மதிப்பு எப்படி தெரியும்?

_________________

செய்தி: மேற்கு வங்கத்தின் ஜவுளித் துறை அமைச்சர் சியாம் பிரசாத் முகர்ஜி, அரசிடம் வாங்கிய மற்றும் வாங்காத நிலத்தை வைத்து கட்டிய தனது சிமெண்ட் தொழிற்சாலையை சாரதா குழுமத்திற்கு விற்று விட்டார் என அமலாக்கத்துறை கண்டுபிடித்திருக்கிறது.

நீதி: பொறம்போக்கு நிலங்களை வளைப்பதுதானே பொறுப்பான அமைச்சர்களின் அழகு!

____________________

செய்தி: “ஆசிரியர்களின் பணி என்பது வெறும் கல்வித் துறை சார்ந்து மட்டுமல்ல, அது “ஜீவன் தரம்” எனப்படும் ஒரு வாழ்க்கை முறை. தங்களைச் சுற்றி உலகில் நடக்கும் மாற்றங்களை அவர்கள் புரிந்து கொண்டு, புதிய தலைமுறையை தயார் செய்ய வேண்டும்” என்று ஆசிரியர்களின் தினத்தை முன்னிட்டு மோடி பேசியிருக்கிறார்.

நீதி: வேத காலத்திலேயே ஃபேஸ்புக் இருந்ததாக புரிந்து கொள்வது – வாழ்க்கை முறை. அந்த வாழ்க்கை முறையே அரசின் வழிகாட்டும் நெறி – சுற்றி நடப்பதை கவனிப்பது. அதன்படி குஜராத் 2002 கலவரத்தில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாக கற்றுக் கொடுப்பது – புதிய தலைமுறையை தயார் செய்வது!

_____________________

செய்தி: உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் தலைவரும், பாஜகவின் மூத்த பிரமுகருமான கல்யாண் சிங், ராஜஸ்தான் கவர்னராக பதவியேற்றுக் கொண்டார்.

நீதி: கல்யாண் சிங் முதலமைச்சராக இருக்கும் போது உபியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கவர்னராக இருக்கும் போது ராஜஸ்தானில் இடிக்கக் காத்திருக்கும் மசூதி எது?

______________________

செய்தி: தமிழக மீனவர்கள் பணக்காரர்களாக இருப்பதாலும், இலங்கை கடல் வளத்தை அழிப்பதாலும் அவர்களிடமிருந்து பறிமுதல் செய்த படகுகளை விடுவிக்க வேண்டாம் என்று இலங்கை அரசிடம் பாஜக தலைவர் சுப்ரமணிய சாமி கேட்டுக் கொண்டார். இதை கண்டித்து தமிழகம் முழுவதும் சாமியை கண்டித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன.

நீதி: தமிழக மீனவர்கள் குறித்தும், ஈழத் தமிழர் பிரச்சினை குறித்தும் சு.சுவாமியின் கருத்தே பாஜகவின் கருத்து என்பதால் ஆர்ப்பாட்டங்கள் கமலாலயத்தை முற்றுகையிட்டும், தாமரையின் உள்ளூர் கிளைகளை குறிவைத்தல்லவா நடக்க வேண்டும்?

____________________

செய்தி: ஜப்பான் மற்றும் மேற்குலகிலிருந்து மக்கள், மின் தடையற்ற அதிக வசதிகள் நிறைந்த இந்தியாவிற்கு சுற்றுலா வருமாறு மோடி அழைத்திருக்கிறார். பீட்டில்ஸ் பாடகர்கள், மடோனா, ரிச்சர்டு கிரே போன்றோர் இந்தியாவில் பெற்ற ஆன்மீக அனுபவத்தை சுட்டிக்காட்டிய மோடி, மின்தடையற்ற சுற்றுலா வசதிகளையும் சேர்த்துப் பெறலாம் என்று அன்போடு அழைத்திருக்கிறார்.

நீதி: கோயம்புத்தூரில் நாளொன்றுக்கு பத்து மணி நேரம் மின்தடையோடு வாழ்ந்து கொண்டு, பாஜகவின் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வாக்களித்த தாமரை நெஞ்சங்களுக்கு இந்த செய்தி சமர்ப்பணம்!

________________

 

  1. ஜப்பான் இனிமேல் இந்திய பாரதமாதாவின்
    கோவில் காளைகளில் ஒன்று…
    இந்தியா சார்பாக ஐ.நா வில் ஊளையிட ஜப்பான் ரெடி

  2. செய்தி: இந்தியாவில் புனிதப் போரை துரிதப்படுத்த, அல்கைதா ஒரு புதிய கிளையை உருவாக்கியிருப்பதாக அமெரிக்க ஊடக மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    நீதி: பிறகென்ன, சங்க பரிவாரங்கள் ஆட்டம் போடுவதற்கும், சதித் திட்டங்களை பகிரங்கமாக அமல்படுத்துவதற்கும் மோடி அவற்றை முன்னெடுப்பதற்கும் இந்த செய்தியே போதுமே?

    ஏன்டா அம்பி அவனுங்களா நாங்க தான் குசு விட்டோம்னு சொல்ரானுங்க. ______________ நீங்க மோந்து பாக்குறிங்க. எல்லாம் கருவாடு தின்ன மயக்கத்தில இருக்கீங்க.

  3. //செய்தி: இந்தியாவில் புனிதப் போரை துரிதப்படுத்த, அல்கைதா ஒரு புதிய கிளையை உருவாக்கியிருப்பதாக அமெரிக்க ஊடக மற்றும் உளவுத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

    நீதி: பிறகென்ன, சங்க பரிவாரங்கள் ஆட்டம் போடுவதற்கும், சதித் திட்டங்களை பகிரங்கமாக அமல்படுத்துவதற்கும் மோடி அவற்றை முன்னெடுப்பதற்கும் இந்த செய்தியே போதுமே?//ஜவாஹிரி சொல்வதில் .கோபம் இல்லை ; இன்னும் எத்தனை வெடி குண்டோ, எவ்வளவு உயிர்கள், பொருள்கள், வீடுகள் அழியுமோ என்று வருத்தமோ வேதனையோ இல்லை; இதனால் சங்க் பரிவார் இதை எதிர் கொள்ள தயார் செய்வார்களே அதனால் அவர்கள் பலம் பெருகுமே என்று கவலைப் படுகிறீர். இந்தியர்கள் சாகலாம், சொத்துக்கள் அழியலாம்; சங்க் பரிவார் வளரக் கூடாது! என்னே தெளிவு!!!

    • நீங்க சொல்றத பார்த்தா போலீஸ் இராணுவம் எல்லாம் உள்நாட்டு அப்பாவி பொதுமக்களை தான் பாய்வாங்க, சங் பரிவார்கள் தான் இந்நாட்டை பாதுகாக்க உருவாக்கப்பட்ட படை என்பது மாதிரி இருக்குது.

      மக்களோட உயிரையும் பொருட்கள் சேதமாவதை தடுக்க நினைப்பவரே, முதலில் இங்க பிரிவினையும், கலவரங்களையும் திட்டமிட்ட நடத்தி சிறுபான்மையினர் மற்றும் பொது மக்கள் பொருட்களை சேதப்படுத்துவதை காலம்காலமாக செய்து வருவது சங் பரிவார் போன்ற இந்துத்துவ சக்திகளே இதை பத்தி உங்க கருத்து என்ன?

  4. //செய்தி: உத்திரப் பிரதேசத்தின் முன்னாள் தலைவரும், பாஜகவின் மூத்த பிரமுகருமான கல்யாண் சிங், ராஜஸ்தான் கவர்னராக பதவியேற்றுக் கொண்டார்.

    நீதி: கல்யாண் சிங் முதலமைச்சராக இருக்கும் போது உபியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. கவர்னராக இருக்கும் போது ராஜஸ்தானில் இடிக்கக் காத்திருக்கும் மசூதி எது?//
    கிழக்கு ராஜஸ்தானில் சில ஷியா மசூதிகள் உள்ளன; ISIL வந்து இடிக்கட்டும். சுன்னி மசூதிகளை இரான் அரசுப் படைகள் இடிக்கட்டும். இந்தியர்கள் ஏன் ரிஸ்க் எடுக்கவேண்டும்?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க