மக்கள் கலை இலக்கியக் கழகம் 2003-ம் ஆண்டு பிப்ரவரி 22,23 தேதிகளில் தஞ்சாவூரில் நடத்தி பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளிலிருந்து…
மொகலாய ஆட்சிக்குட்படாத பகுதிகளில்தான் அதிகமான மதமாற்றம் நடந்துள்ளது
இர்பான் அலி எஞ்சினியர்
“இசுலாமிய மக்களும் இசுலாமிய பயங்கரவாதமும்” எனும் தலைப்பில், மும்பய் நகரில் செயல்பட்டு வரும் “சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையம்” என்ற அமைப்பின் உறுப்பினரும் வழக்குரைஞருமான திரு. இர்ஃபான் அலி எஞ்சீனீயர் உரையாற்றினார். “பயங்கரவாதம், தீவிரவாதம் என்பதெல்லாம் மக்கள் சார்ந்தவையாக இருப்பதில்லை; அரசுதான் பயங்கரவாதியாக இருக்கிறது” எனக் குறிப்பிட்டுத் தனது உரையைத் தொடங்கினார்.

“முசுலீம்கள் முரட்டுத்தனமான மத நம்பிக்கை கொண்டவர்கள்; மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள்; இறுக்கமான மதச் சமூகம் முசுலீம் சமூகம். முசுலீம்களின் நாட்டுப்பற்று சந்தேகத்திற்குரியது; முசுலீம் மதமும், கிறித்தவ மதமும் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்ததால், அவர்கள் இந்தியாவிற்கு விசுவாசமானவர்களாக இருப்பதில்லை.”
-இந்தப் பொய்களை ஆர்.எஸ்.எஸ். 365 நாட்களும் இடைவிடாது பிரச்சாரம் செய்து வருகிறது. பெருவாரியான மக்களும் கூட இந்தப் பொய்களை உண்மையென்று நம்பத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், உண்மை மாறானது என்பதற்கு அநேக உதாரணங்களைத் தர முடியும்.
எனது தந்தை – திரு. அஸ்கர் அலி எஞ்சினீயர் கேரள முசுலீம்களின் வாழ்க்கையை ஆய்வு செய்தபொழுது, கேரளாவைச் சேர்ந்த ஒரு முசுலீம் பெண்ணை மொழிபெயர்ப்பாளரின் உதவியோடு பேட்டி காணச் சென்றார். அப்பொழுது அந்தப் பெண் மொழி பெயர்ப்பாளரிடம், “மலையாளம் தெரியாத இவர் எப்படி முசுலீமாக இருக்க முடியும்!” எனக் கேட்டார். அப்பெண்ணைப் பொறுத்தவரை மலையாள மொழியையும், முசுலீம்களையும் பிரித்துப் பார்க்க முடியாது.
நான் சார்ந்திருக்கும் சமூகம் மற்றும் மதச் சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் கூட்டத்தில், “வழிபாட்டு முறையைத் தவிர, வேறெந்த விதத்தில் ஒரு மனிதனின் மதத்தைக் கண்டுபிடிக்க முடியும்” என்ற கேள்வியைக் கேட்டபொழுது, பலரும் பெயரை வைத்துக் கண்டுபிடிக்கலாம் என்றார்கள்.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த, புகழ்பெற்ற முசுலீம் மார்க்க அறிஞரின் பெயர் லெட்சுமணன். லெபனான் நாட்டில் வாழும் கிறித்தவர்களின் பெயர்களைக் கேட்டால் அவர்களை முசுலீம் என்று நீங்கள் கருதக்கூடம். அப்துல்லா போன்ற பெயர்கள் முசுலீம் மதப் பெயர்கள் அல்ல. அவைகள் அரேபிய மொழிப்பெயர்கள்.
“அடுத்ததாக, தாடி வைத்திருந்தால், அவன் முசுலீம் என்றார்கள். ஆர்.எஸ்.எஸ். காரர்களால் தேசிய விரனாகக் கொண்டாடப்படும் சிவாஜிகூட தாடி வைத்திருந்தார். அதனால் அவர் முசுலீமாகி விடுவாரா?”
அரியானா மாநிலத்தில் உள்ள மேவார் பகுதியில் வாழும் மியோ முசுலீம்கள், மகாபாரத, இராமாயணக் கதைகளைக் கூறுவதில் நிபுணத்துவம் பெற்றவர்கள். மியோ முசுலீம்கள், இந்து முறைப்படி நெருப்பை ஏழுமுறை வலம் வந்தும், இசுலாமிய முறைப்படியும் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
இசுலாமிய நெறிமுறைகளைக் கட்டுப்பாட்டோடு கடைப்பிடிக்க வேண்டும் எனப் போதிக்கும் தப்லீக் இயக்கம், மியோ முசுலீம்களை, ‘உண்மையான’ முசுலீம்களாக மாற்ற முயன்றபொழுது, ‘மியோ முசுலீம் மியோவாகவே வாழ்வான்’ எனக் கூறித் திரும்பி அனுப்பிவிட்டனர்.
1980-களில் விசுவ இந்து பரிசத், மியோ முசுலீம்களை இந்துவாக்க முயன்று தோற்றுப் போனது.
குஜராத்தைச் சேர்ந்த பரிணாம் பந்தி முசுலீம்கள் இசுலாமிய -இந்து பாரம்பரியப்படி வாழ்ந்து வருகின்றனர். அந்த முசுலீம் குடும்பங்களில் அண்ணன் குடுமி வைத்திருந்தால், தம்பி தாடி வைத்திருப்பான். இறந்து போனவர்களைப் புதைக்கவும் செய்வார்கள்; எரிக்கவும் செய்வார்கள். அவர்களின் மதக் கோட்பாடு, கீதை, குரான் இரண்டும் கலந்தது. அவர்களின் மதப் புனித நூலை பரிணாம் பந்தி முசுலீம்களைத் தவிர, பிற முசுலீம்கள் கூடத் தொடமுடியாது.
மொகலாய மன்னர்கள் வாள் முனையில் கட்டாயமாக மதம் மாற்றினார்கள் என்பது ஆர்.எஸ்.எஸ்.-இன் குற்றச்சாட்டு. ஆனால் உண்மை என்னவென்றால், மொகலாய ஆட்சிக்கு உட்பட்ட தில்லி, ஆக்ரா பகுதிகளை விட அந்த ஆட்சிக்கு உட்படாத எல்லைப் பகுதிகளில் வங்காளம், பஞ்சாப், எல்லைப்புற மாகாணம் ஆகிய இடங்களில்தான் பெருவாரியான மதமாற்றம் நிகழ்ந்துள்ளது.
சூஃபி ஞானிகள் மனிதத்துவத்தையும், அன்பே கடவுள் என்றும், எல்லோரும் கடவுளை வழிபடலாம் என்றும் போதித்ததுதான் சூத்திர சாதி மக்களை இசுலாத்தை நோக்கி ஈர்த்தது. மத மாற்றம் மேல்சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் 1981-இல் நடந்த மீனாட்சிபுர மதமாற்றம்.
கலாச்சார மாற்றம் இரண்டு அரசியல் காரணங்களுக்காக நடக்கிறது. முசுலீம் மதத்திலுள்ள மேல் சாதியினருக்கு ஷெரீப் முசுலீம்கள் என்று பெயர். ஓரளவு வசதி வாய்ப்பு வரப் பெற்ற கீழ்ச் சாதியைச் சேர்ந்த நடுத்தர வர்க்க முசுலீம்கள், ஷெரீப் முசுலீம்கள் போல மாற விரும்புகின்றனர். உடனே, தங்கள் வீட்டுப் பெண்கள் பர்தா அணிய வேண்டும் எனக் கட்டாயப் படுத்துகின்றனர். இரண்டாவதாக, இந்து மதவெறியர்களின் தாக்குதல், சில முசுலீம்களை மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் பக்கம் தள்ளிவிடுகிறது.
இந்த முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது; ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ச்சியும், முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
____________________________
புதிய கலாச்சாரம், மார்ச் 2003
____________________________
இந்த முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகள் எண்ணிக்கையில் மிகக் குறைவானவர்கள். ஆனால், இந்த எண்ணிக்கை வளர வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். விரும்புகிறது; ஏனென்றால், ஆர்.எஸ்.எஸ்.-இன் வளர்ச்சியும், முசுலீம் மதக் கடுங்கோட்பாட்டுவாதிகளின் வளர்ச்சியும் ஒன்றையொன்று சார்ந்துள்ளன.
super
முசுலீம்கள் மிகவும் சகிப்பு தன்மை உள்ளவர்கள் மாற்று மத்தவர்கள் எல்லாம் வெறியர்கள் என்று வினவும் நிறைய கட்டுரைகள் எழதி நிறுவ முயல்கிறது அனாலும் அவர்களின் சகிப்பு தன்மையை தங்களின் அலுவலக்த்துக்கே வந்து காட்டி விட்டனர் இவர்கள் சொல்லும் இந்து மற்றும் கிறிஸ்தவ மத லும்பன் கள் இன்னும் தூங்கி கொண்டே இருக்கிறார்களா இல்லவே இல்லை அதை யாரும் பெரிது படித்தி பார்ப்பது இல்லை மதங்களை விமர்சிப்பதும் மத சுரண்டல்களை எதிர்ப்பதும் கம்மூனிஸ்டுகளின் கொள்கை என்பதை நன்றாக தெரிந்து வைத்து இருக்கிறார்கள்……….
யோசப் அண்ணா!
கம்யூனிஸ்டுக்கள் மதத்தையோ கடவுள்வழிபாட்டையோ எதிர்ப்பதில்லை.கோவில்களுக்கு மசூதிகளுக்கு தேவாலயங்களுக்கோ வருமானம் இல்லாவிட்டால் கதவை அடித்துப்பூட்டு உள்ளதை விற்று காசாக்கி விடுவர்கள் என்பதை தெளிவாகவே! கம்யூனிஸ்டுகள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
மதத்தித்தையும் கடவுள்வழிபாட்டுக் கொள்கையையும் அரசியல் உடன் ஒன்றுபடுத்தி செயல் படுவதைத்தான் உக்கிரமாக எதிர்கிறார்கள்.மதம்- அரசியல் பிரிக்கப்பட வேண்டியது ஒன்று. இராமர் ஆட்சி: சிவன் ஆட்சி ஒன்று இந்தியாவில் இல்லை.
மதம் சுரண்டுவதில்லை. மதம் ஏமாற்றுவது மோசடி செய்வது மூளையை களுவுவது அவ்வளவுதான்.மூலதனம் மட்டுமே சுரண்டலை செய்கிறது.
இதை தவறாக புரிந்துகொள்ள மாட்டீர்கள் என நம்புகிறேன்.
you have 0% logic in your words. actually i like your thoughts in social aspects but when it comes to anti-hindu propaganda you arsenal get weak so you start bluffing..pity on you.
இன்றைய நாளில் மதம் என்பது ஆன்மா சம்பந்தப்பட்டது என்பதை விடுத்து அதற்க்கு சற்றும் சம்பந்தமிலா வழிகளில் தான் சென்றுகொண்டுள்ளது.
எல்லா மதத்தை சார்ந்த மக்களும் தங்களது வழிபாட்டு முறைகளில் தான் முழு கவனத்தையும் கொண்டுள்ளார்கள்.
ஆன்மிகம் என்பதற்கும் தற்போதைய சடங்குகள்மட்டுமே நிரம்பியிருக்கும் வழிபாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள் யாரும் மத சாயம் பூசிக்கொண்டு அலைவதில்லை.
மேலும் மதம் என்பது ஒரு மனிதனை மேமம்படுத்த வந்த வழிமுறை என்பதான அடையாளத்தை இழந்து அதிகாரத்தை புலப்படுத்தும் ஒரு அமைப்பாகவே மாறிவிட்டது.
இன்று வெளித்தெரியும் அனைத்து மதங்களுமே அதிகாரம் செலுத்துவோரின் கைகளில்தான் சிக்குண்டு கிடக்கின்றன.
இதை புரிந்துகொள்ளாமல் தத்தம் மதத்தை கண்முடித்தனமாக பின்பற்றுவோர் யாவரும் அவர்களுக்கு துணை போகின்றவர்களே.
ஒருவரின் உண்மையான மததன்மையை அவரின் பரந்த மனப்பான்மையை வைத்து அளவிடலாமே தவிர குறுகிய மூடிய மனப்பான்மையை வைத்து அல்ல.