இயக்குனர் ஷங்கர் தஞ்சை மாவட்டத்தின் வயற்சூழலில் வளர்ந்திருக்கா விட்டாலும், கலைச்சூழலில் வளர்ந்தவர். தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக இருந்த தஞ்சை, ஷங்கர் பிறந்து வளர்ந்த நேரமோ தெரியவில்லை, தமிழ்நாட்டின் பாலைவனமாக மாற ஆரம்பித்திருந்தது. தஞ்சை நாட்டுப்புறக் கலைகளும், இயக்குனர் ஷங்கர் வந்து ஆளான சினிமா துறையால் இதே காலத்தில் சீரழிக்கப்பட்டது . மக்களின் மண்சார்ந்த உணர்ச்சிகளையும், உணர்வுகளையும் பேசிய நாட்டுப்புறக் கலைகள் சினிமா ராகத்திலும், மோகத்திலும் அடையாளங்களை இழந்தன.
தமிழ் சினிமா மிகவும் மரியாதை செலுத்துகிற கர்நாடக இசை கூட என்.ஆர்.ஐ அம்பிகளாலும், எம்.என்.சி ஸ்பான்சர்களாலும், கையில் பெப்சி, வாயில் பர்கர், விராட் கோலி படம் போட்ட டி ஷர்ட் சகிதம், கலைஞர்கள் எந்தரோ மகானுபாவலு பாடுவதாக மாறி விட்டது. சென்னை சபாக்களில் நடக்கும் டிசம்பர் கச்சேரிகளில் கூட இடைவேளை கேண்டினின் கிச்சடி, பங்குச் சந்தை பரிவர்த்தனைகளே பேசு பொருளாக இருந்தன. யாரும் ராகங்களின் ஆலாபனை குறித்தோ, கலாச்சாரத்தில் அவுரோகணம் குறித்தோ கதைப்பதில்லை.
தமிழகத்திலேயே கோயில்கள் அதிகம் உள்ள ஊர் கும்பகோணம்தான். கும்பகோணத்துக்கு அதிகாலையில் போனால் ராமா, சோமா, காமா என்று பல வகை கடவுள் நாமங்கள் பாடப்படுவது கேட்கக் கிடைக்கும். கும்பகோணத்தில் கோயில்கள் மட்டுமில்லை, தெருநாய்களும் அதிகம். கோயிலில் வீசப்படும் பிரசாதங்களை தின்னும் டாபர்மேன் முதல் ராஜபாளையம் ஹன்டர் வரை எல்லா வகை நாய்களும் அலைந்து கொண்டிருக்கின்றன. இதனாலேயே நாய்க்கடி பட்டு மக்கள் மருத்துவமனைக்கு போவதும், மருந்து தட்டுப்பாடாக இருப்பதும் கும்பகோணத்தின் சிறப்பு. இதன்றி மகாமகம் வந்து ‘அம்மா’ வந்து குளித்தால் மரணமடையும் பக்தர்களின் கதை தனி.
இப்படிப்பட்ட கும்பகோணத்தில் படித்த ஷங்கரின் உலகம், ஃபேன்டசி எல்லாம் எப்படி இருக்கும் என்று வாசகர்களே யோசித்து படம் எடுக்கலாம்.
அருணாச்சலம் படத்தில் ரஜினிக்கு 3,000 கோடி ரூபாய் சொத்து கிடைக்க 30 கோடி ரூபாய் ஒரு மாதத்துக்குள் செலவிட வேண்டும் என்றால், ஹோட்டலில் ரூம் எடுக்கிறார், சினிமா எடுக்கிறார், தேர்தலில் நிற்கிறார். இதற்கு மேல் தமிழ் சினிமா டைரக்டருக்கு யோசிக்கத் தெரியவில்லை. தனியார்மய சொர்க்கத்தில் ஹார்ட் அட்டாக் என்று அப்பலோவுக்கு போயிருந்தால் ஆம்புலன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர், அமெரிக்கா என்று அனுப்பி செலவு செய்திருக்கலாம். இல்லை பத்து பேருக்கு பச்சமுத்து கல்லூரியில் டாக்டர் சீட்டு வாங்கித் தந்தால் கூட அம்சமாக செலவழித்திருக்கலாம்.
தமிழ்நாட்டில் வட்டிக்கடை வைத்திருக்கும் செட்டியாரின் தொலைதூரத்து விஷனே இந்த மாசம் 10 தாலி வரும், 20 அண்டா வரும், 30 குண்டா வரும் என்பதைத் தாண்டி போகாது. இதைத் தாண்டி மெரில் லிஞ்ச், லேமன் பிரதர்ஸ் போல ஆண்டுக்கு நமக்கு இத்தனை கோடி டாலர் வரும் என்றெல்லாம் செட்டியார்கள் யோசிக்க மாட்டார்கள். இதில் ப.சிதம்பரம் செட்டியாரை சேர்க்க கூடாது. அவரெல்லாம் இன்டர்னேஷனல் பிசினெஸ் மென். அவரையெல்லாம் காரைக்குடி அரண்மனை வீடுகளில் மட்டும் கட்டிவிட முடியாது.
சவுகார்பேட்டையைச் சேர்ந்த ராஜஸ்தான் சேட்டு நகரத்தில் எந்த பகுதியில் வட்டிக்கடை வைத்திருந்தாலும், 10 திருட்டு வாட்ச் வரும், 10 திருட்டு லேப்டாப் வரும், வளையல், தொங்கட்டான், மூக்குத்தி எத்தனை வரும் என்றுதான் பட்ஜெட் போடுவார்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் வேலை செய்யும் பார்ப்பன, முதலியார், கவுண்டர் அதிகாரிகள் இந்த மாசம் எத்தனை காண்டிராக்ட் கமிஷன், மணல் லாரி கும்பலிடமிருந்து 1 லட்சம் தேறுமா என்று கணக்கு போடுவார்கள். மிகப்பெரும் தரகு முதலாளிகளின் தொழில்களில் இருப்போர் மட்டும்தான் கோடி, மில்லியன், பில்லியனில் கணக்கு போடுவார்கள். பெரும்பான்மை தமிழக சமுதாயத்தில் இது சாத்தியமில்லை.
ஒட்டு மொத்த தமிழகத்தின் பட்ஜெட்டே இப்படி இடுக்குகளில் சிக்கிக் கொண்டிருக்கும் போது தமிழ் சினிமாவில் மட்டும் ஷங்கரின் பெரிய பட்ஜெட் கிரியேட்டிவிட்டி, எப்படி இருக்கும்?
கும்பகோணத்தில் மோட்டுவளையை பார்த்து ராமா ராமா என்று கத்திய தியாகையரையும், அதைக் கேட்டு பதறி ஓடிய காக்கையையும் பார்த்து வளர்ந்த கலைகளின் ஊரில் ஷங்கர் எனும் கலைஞரின் சிந்தனை வரம்பு எவ்வளவு தள்ளுபடி கொடுத்தாலும் பிரம்மாண்டமாக வர வாய்ப்பே இல்லை.
இதற்குத்தான் எஞ்சினியரிங் படித்த, நானோ டெக்னாலஜி தெரிஞ்ச, மரைன் எஞ்சினியரிங் படித்த ஆட்களை தேடி உதவியாளராக சேர்த்துக் கொள்கிறார். கூடவே இவர்களுக்கு நான்கைந்து மொழி, ஐந்தாறு டெக்னாலஜி எல்லாம் தெரிந்திருக்க வேண்டும்.
அவர்களிடம் ஏதாவது ஹாலிவுட் படத்தை பார்த்து, எப்படி குரங்கு நாய்க்குட்டியா மாறுது, முதலை தண்ணிக்குள் சண்டை போடுது என்று கேட்கிறார். “அண்ணே இது கிராபிக்ஸ், கேமரூன், ஜார்ஜ் லூகாஸ் நம்ம ஸ்டூடியோவிலேயே பண்ணிரலாம்ணே. அதுக்கு மேட்சிங் ஒர்க் எல்லாம் பண்ணலாம்” என்கிறார்கள். இத்தனை கோடி செலவாகும் என்று பட்ஜெட் போடுகிறார்கள்.
இவர்கள் எல்லாம் சேர்ந்து படம் எடுக்க, தமிழ்நாட்டு முதலாளிகள், பத்திரிகைகள், நட்சத்திரங்கள் எல்லாரும் சேர்ந்து கும்பகோணம் சுண்டல் பார்ட்டியின் அந்தப் படத்தை அமெரிக்காவின் ரூ 3 லட்சம் மதிப்பிலான ‘மெகா’ ஃப்ளூயர் பர்கர் எனும் தின்பண்டமாக (fluer burger) ஜாக்கி கொடுத்து உயர்த்தி காட்டுகிறார்கள்.
இன்ன பத்திரிகையிலிருந்து இன்ன பத்திரிகையாளரை கூப்பிடு, இத்தனை பேருக்கு கவர் போடு, பத்திரிகையில் மூணு காலம் விமர்சனம் போட முடியாதவன்னு தெரிஞ்சவனை உள்ள விடாதேன்னு பத்திரிகைகளை கவர் பண்ணுகிறார்கள். இதுதான் ஷங்கர் படத்தின் பிரம்மாண்டம் பற்றி பத்திரிகைகளில் வரும் ஆகோ, ஓகோ செய்திகள், விமர்சனங்களின் மூலம்.
தமிழ்நாட்டில் சங்கரராமனை கொலை செய்த ஜெயந்திரன் கைது செய்யப்பட்ட அன்றே, என்ன இருந்தாலும் அவாதான் எங்களுக்கு லோககுரு என்று பூணூல் தெரிய டிவியில்பேட்டி கொடுக்கும் எஸ்விசேகரின் அறம்தான் ஷங்கர் படங்கள் பேசும் அரசியலின் அடிப்படை. பிறகு கும்பகோணம் பார்ட்டி புரட்சி பற்றியா பேசும் ?
முதல் படம் ஜென்டில்மேனிலேயே நல்ல மார்க் வாங்கிய பார்ப்பன மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கவில்லை என்பதாலேயே பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து பணம் கட்டி அவரை தனியார் கல்லூரியில் படிக்க அனுப்புகிறார். ஐஐஎம் ஐஐடி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் தலித் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ள தூண்டப்படும் காலத்தில் ஒரு பார்ப்பன இளைஞருக்கு எம்பிபிஎஸ் சீட் இல்லை என்றதும், தனி ஒரு பார்ப்பானுக்கு உணவு இல்லை என்றால் உலகத்தையே அழித்து விடுவதாக அர்ஜுனை வைத்து கொலை செய்யச் சொன்னவர் இந்த இயக்குநர்.
1996-ல் ஜெயா-சசி கும்பல் ஊழலால் தமிழகத்தையே மொட்டையடித்து கொண்டிருக்கும் போது, ஊழல், ஆணவம், அராஜகம் கொடி கட்டி பறந்த காலத்தில் கும்பகோணம் கருப்பு பிராமணன் ஷங்கர் ஆர்.டி.ஓ ஆபிசில் துட்டு வாங்கும் புரோக்கரை வில்லனாக்கி படம் எடுக்கிறார். கிராஃபிக் வொர்க்குக்காக அமெரிக்காவுக்கு போனவர், ஊழல் என்பதை காட்ட ஆர்.டி.ஓ ஆஃபிசில் நிறுத்தி விட்டார், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போகவில்லை, போயஸ் கார்டனுக்கும் போகவில்லை.
முதல்வன் படம் எடுக்கும் போது, முதல்வராக இருந்த கருணாநிதியை கிண்டல் செய்து படம் எடுத்ததால் தென் மாவட்டம் முழுக்க மகன் அழகிரியே கேபிள் டிவியில் ஓட்டி ரிலீஸ் செய்து விட்டார். ஜெயலலிதாவுக்கு பம்மியிருந்த சங்கர் கருணாநிதி முன் வீரம் காட்டினார். பையனின் அடாவடியின் முன்பு சங்கர் அண்ணன் பயந்து விட்டார். அதைக் கண்டித்துக் கூட வெளிப்படையாக பேசவில்லை.
சென்ற ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி கொடூரமாக பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டது நாடு முழுவதும் கண்டனத்தை எதிர்கொண்டது. 2000-ம் ஆண்டுக்கு பிறகு இத்தகைய பாலியல் வன்முறை குற்றங்கள் பல மடங்கு அதிகரிக்க ஆரம்பித்தன. அந்த காலகட்டத்தில், இத்தகைய செயல்களுக்கு எதிராக ஆண்கள், இளைஞர் மத்தியில் குற்றவுணர்வையும் பரிசீலனையையும் ஏற்படுத்தாமல், பெண்கள் மீது ஆசிட் அடித்தால்தான் தப்பு, கூட்டத்தில் கையைப் போடுவது இயல்புதான் என்று படம் எடுத்தவர் ஷங்கர். அதுதான் ‘பாய்ஸ்’.
ஆனந்த விகடனில் சீ என்று விமர்சனம் எழுதினார்கள். விளையாட்டா சொன்னதை சீரியசா எடுத்திருக்கிறார்கள் என்று இத்தகைய எதிர்ப்புகளுக்கு பதில் கூறினார் ஷங்கர். இந்த படத்திற்கு முன்னாடி விளையாட்டாக பேசியதை சீரியசா எடுத்துக் கொண்டீர்கள், இப்போது கொஞ்சம் விளையாட்டாக பார்க்கலாமில்லையா என்பது அவரது உட்கிடை.
ஜீன்ஸ் படத்தில் உலக அதிசயம் எல்லாம் வருகிறது என்று சொன்னார்கள். ஆனால், உலக அதிசயத்தை பிரசாந்தை ஆடவிட்டு டூயட் பாடல் எடுக்கத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஐஸ்வர்யாதான் எட்டாவது அதிசயம் என்று ஏனைய அதிசயங்களை என்கவுண்டர் செய்தார்.
அன்னியன் படத்தில் ரயில்வே கேன்டீனில் தரக்குறைவான உணவு கொடுத்த காண்டிராக்டரை எண்ணெயில் வறுத்து கொல்கிறார். அன்னியன் படம் வெளியான 2005-ல் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு கையில் ஒட்டியிருக்கிற குருணை சாதத்தை நக்கி சாப்பிடுகிற அம்பிக்களுக்குக் கூட மாட்டுக்கறி சாப்பிட்டவரை போல நாமும் சமூக அநீதிகளுக்காக பயங்கரமாக போராடுகிறோம் என்ற ஃபீலிங்கை அந்த படம் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. அந்த காலகட்டத்தில்தான் மகாராஷ்டிராவின் கயர்லாஞ்சியில் போட்மாங்கே குடும்பம் கொடூரமாக பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டது. ஜெயலலிதா தாமிரபரணி ஆற்றை கோக் நிறுவனத்துக்கு தாரை வார்த்திருந்தார்.
பொருநை நீரை அமெரிக்க கோக்குக்கு தாரை வார்த்த ஜெயலலிதாவுக்கு தண்டனையாக சகாரா பாலைவன மணற்பரப்பில் உழுது பயிரிட்டு நெல் விளைவிக்க வேண்டும் என்று தண்டனை கொடுப்பதாக படம் எடுக்கவில்லை. கயர்லாஞ்சி இருக்கும் மகாராஷ்டிராவில் ஆதிக்க சாதியினரை திரட்டி, மதவெறி சாதிவெறி அரசியல் செய்யும் பால் தாக்கரேயின் ஆண் உறுப்பில் ஸ்ரீகிருஷ்ணா இனிப்பைத் தடவி பெருச்சாளியை கட்டி வைத்து அனகோண்டாவை விட்டு கடித்து கொல்வது போல படம் எடுத்திருந்தால் ஷங்கரை செல்லூலாயிட் போராளி என்றாவது ஒத்துக் கொண்டிருந்திருக்கலாம். சாலையில் துப்பியவனையெல்லாம் கொல்லும் வெறி ஏன் வருகிறது என்றால் ஒரு அக்மார்க் ஆதிக்கசாதி மேட்டுக்குடியினருக்கு இவைதான் பிரச்சினைகள். பெரும்பான்மை மக்களின் வாழ்க்கை முறை அதில் உள்ள அநாகரீகங்கள் என்று இவர்கள் கருதிக் கொள்பவைதான் பெரும் தலைவலிகள். ஷங்கர் அதில் முனைவர் பட்டம் செய்தவர்.
சுயநிதி கல்லூரி கொள்ளையர்கள் சாராய உடையார்கள், பச்சமுத்து, ஜேபிஆர் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலிருந்து வந்த என்.ஆர்.ஐ. ரஜினி தனியார் கல்லூரி ஆரம்பிப்பதாக எடுத்த படம்தான் சிவாஜி. ரஜினி வழுக்கை, வெள்ளை, டான்ஸ் என்றுதான் மயங்கினார்களே தவிர இந்த சுயநிதி கொள்ளையர்களைப் பற்றி யாரையும் அந்தப் படம் யோசிக்க வைக்கவில்லை.
மயிலாப்பூர் கச்சேரி ரோடு பார்ப்பனர்கள் எஸ்.வி.சேகர் கடி ஜோக்கை சொல்லி காலத்தை ஓட்ட முடியாது என்று தெரிந்ததும், அப்டேட்டாக ஏதாவது அமெரிக்க நகைச்சுவைகளை அவிழ்த்து விடுவது போல, தன்னுடைய பெரிய பட்ஜெட்டுக்கு ஏத்த ரேஞ்ச் வேண்டும் என்று எந்திரன் எடுக்கிறார். அதை எங்கிருந்து சுட்டார் என்று உங்களுக்கே தெரியும்.
இவ்வாறு, எந்திரனில் 100 கோடி ரூபாய்க்கு தனது சாம்ராஜ்யம் விரிந்த பிறகு, கும்பகோணம், மயிலாப்பூரில் அவரது கால் இருந்தாலும் கண்ணும் காதும் உலகம் முழுக்க பார்க்க ஆரம்பித்து அடுத்த படத்துக்கு 200 கோடியில் பட்ஜெட் போடுகிறார்கள். அதற்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கிறார். இன்னும் எத்தனை நாள் பான் பராக் துப்பியதற்கு தண்டனை என்று படம் எடுப்பது. தமிழ்நாட்டிலேயே வாழ்ந்தாலும் தஞ்சை விவசாயிகள் முதல், தாமிரபரணி தண்ணீர் விலை போவது, கல்வி தனியார் மயம் என்று பார்க்க பயப்படும் ஷங்கர் தனது தகுதி வாய்ந்த அசிஸ்டண்டுகளை ஏவி ஐடியாக்களை திரட்டுகிறார்.
1986-ம் ஆண்டு வெளியானது தி ஃபிளை என்ற ஹாலிவுட் திரைப்படம். பொருட்களை மின்காந்த அலைகளாக மாற்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு அனுப்புவதற்கான அறிவியல் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார், ஹீரோ. அந்த சோதனையில் தன்னையே உட்படுத்திக் கொண்ட போது, அனுப்பும் தளத்தில் ஒரு ஈயும் சேர்ந்து விட, ஹீரோ மனிதனும், ஈயும் சேர்ந்த கலப்பினமாக மாறி விடுகிறார். அதனால் அவரது உடம்பிலும், முகத்திலும் ஏற்படும் மாற்றங்கள், மீண்டும் மனிதனாக மாறுவதற்கான போராட்டங்கள், இடையில் காதலியுடனான பிரச்சனைகள் என்று படம் போகிறது.
இந்தப் படம் பற்றி ஷங்கர் கேள்விப்படுகிறார். மனிதன் ஈயாக மாறுகிறான், முகம் விசித்திரமாக, விகாரமாக மாறுகிறது. ஓடுகிறான், பாடுகிறான். இதை முழுமையாக காட்டாவிட்டாலும் படத்தின் பட்ஜெட், புதுமைக்காக மினிமமாக இதை பயன்படுத்தலாம், இந்த கான்செப்ட் நல்லா இருக்கே, என்று யோசித்திருக்கிறார். அதையே தமிழ் சினிமா ரேஞ்சுக்கு கதை கட்டியிருக்கிறார். எத்தனை நாள் அப்பள வியாபாரத்தையே காட்டுவது, இப்போது ஐடி காலத்தில் எது சீசன் என்று ஆள் வைத்து யோசித்திருப்பார். இப்படித்தான் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக மாறுகிறார். சங்கரும் 2014-க்கு அப்கிரேட் ஆகிறார்.
ஐ படத்தின் டீசர் பிரிவீயு பார்த்த பத்திரிகையாளர்கள் அது ஹாலிவுட்டின் ஹல்க் படம் போல இருப்பதாக சொன்னார்களாம். அது ஹல்க் படம் இல்லை என்று சங்கர் சிரித்துக் கொண்டே சொன்னாராம். இதுதான் தமிழ்நாட்டு மக்களுக்கு உலக நடப்புகளை கொண்டு வந்து சேர்க்கும் பத்திரிகையாளர்களின் லட்சணம். தமிழ் சினிமா தரும் கவர் மூலம் தமிழ்நாட்டை இவர்கள் தமது கவரேஜில் பத்திரமாக பார்த்துக் கொள்வார்கள் என்று நம்பலாம்.
ஷங்கர் இந்தப் படத்தின் கதையாக சொல்லியிருப்பது, ஆண் மாடலுக்கு வில்லன் மருந்து செலுத்தி விலங்கு மனிதனாக மாற்றுவது என்று போகிறது. அதில் கூட, குறைவு இருக்கலாம். அடிப்படையில் பல காட்சிகள் ஃபிளை படத்திலிருந்து வருகின்றன. டிரெய்லரை பாருங்கள்.
இணையத்தில் பார்க்க கிடைத்தவை படி இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஒரு விளம்பர மாடலாக போராடி வெற்றி பெறுகிறார். பொறுக்காத போட்டி விளம்பர வில்லன் நடிகர் வைரஸ் கிருமி மருந்தை விக்ரம் உடலில் செலுத்துகிறார். விக்ரம் உடல் மாறுகிறது. அதையே அதிகமாக காட்டினால் பெண்கள், குழந்தைகள் வரமாட்டார்கள், ஃபேமிலி சப்ஜெக்டாக மாற்ற முடியாது என்பதால் அசிங்கமான விக்ரமை வைத்து பல்வேறு ஆக்சன் காட்சிகள், கிராபிக்ஸ் பாடல்கள் என்று பேலன்ஸ் செய்து கொள்கிறார். இறுதியில் விக்ரம் தனது சிக்ஸ் பேக் உடலை திரும்பப் பெற்று வில்லனை வீழ்த்தி நாயகியை கைபிடிப்பார் என்பது இனி பிறக்கும் குழந்தை கூட அறியும் அற்ப விசயம்.
இதை ஒரு மாபெரும் படம் போலவும், புதுமை போலவும் பல்வேறு இணைய மொக்கைகள் போடும் கச்சேரிதான் இதில் உள்ள மகா மட்டமான விசயம்.
உழைப்பதற்கு ஏற்ற ஆரோக்கியத்தை கொண்டிருக்க வேண்டிய உடலை பார்ப்பதற்கு மட்டும் அழகான உடலாக மாற்றிய முதலாளித்துவ நுகர்வுக் கலாச்சாரத்தின் வக்கிரத்தை ஏற்றுக் கொள்ளும் உணர்ச்சிதான் ஐ-யின் மையம். மாறுபடும் மனிதர்களின் நிறம், தோற்றத்தை அவலட்சணமாக மாற்றியிருக்கும் முதலாளித்துவத்தின் அழகு சாதன முதலாளிகளை ஆராதிக்கும் படத்தின் கதையை கொண்டாடுவது என்ன விதத்தில் சரி?
ஆசிட் வீச்சிலும், ஆக்கிரமிப்புப் போர்களிலும் அங்கங்களை இழக்கும் மனிதர்களை இப்படம் எப்படி பார்க்கிறது? யானைக்கால் வியாதி கொண்டோர், இதர நோய்களால்’விகாரத்’ தோற்றம் கொண்டோரெல்லாம் ஏழைகளின் பகுதியில் இயல்பாகத்தான் வாழ்கிறார்கள். ஆனால் மயிலாப்பூர் பகுதிகளில் அந்த உணர்வு எப்படி இருக்கும்? விடை வேண்டுவோர் ஐ படம் பார்க்கலாம். ஷங்கரின் கலை உலகு பற்றி அறிந்தவர்கள் காறித்துப்பலாம்.
I don’t agree with you at all. My thought is he used ayengar and iyer characters because they dont mind all these social inequality. You want cinema to talk about all social distresses. But its a form of art and business. yeah his movies had leading hero as iyers in gentleman and anniyan so what? you are abusing him just because he is a brahmin or what. None can stand today without an ounce of skill. Every story comes in some preconsumed format. Its about how one could take that story in a way astonishes everybody. Yes, Brahmins have some dark history to their name. But degrading every one of them is wrong. They are moving ahead even without the reservations, we people still complain about them. We have more entries than them Lets come up in life as well.
You have wrote why should a brahmin consider if someone spits in road, every indian should avoid spitting in public places. If anything a brahmin says is wrong, then you are the guilty one. Since they have made us in a lesser liveable environment, so you would like to give them the same.
I have admired your social responsibility in various posts. but this one …
Nothing to tell
My thought is he used ayengar and iyer characters because they dont mind all these social inequality. // If they dont mind why would they do this? 2006-ம் ஆண்டு ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ சட்டம் கொண்டுவரப்பட்டது. சென்னை, திருவண்ணாமலை, திருச்சி, பழநி, மதுரை, திருச்செந்தூர் ஆகிய ஊர்களில் தமிழக அரசு அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளைத் தொடங்கியது.
இதை எதிர்த்து, மதுரையைச் சேர்ந்த ‘ஆதி சிவாச்சாரியார்கள் நலச் சங்கம்’ சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. ‘பிராமண சாதியில் பிறந்த சிவாச்சாரியார்கள் மற்றும் பட்டாச்சாரியார்கள் தவிர, வேறு யாருக்கும் சாமி சிலையைத் தொட்டு பூஜை செய்யும் தகுதி கிடையாது. பூஜை முறைகளையும் மந்திரங்களையும் கற்றிருந்தாலும்கூட, பிராமணர் அல்லாதவர்களால் அர்ச்சகர் ஆக முடியாது. அவர்கள் சாமி சிலையைத் தொட்டால் கோயில் தீட்டாகிவிடும். அந்தச் சிலையில் இருந்து கடவுள் வெளியேறிவிடுவார். இதன் காரணமாக, கோயிலுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதிக் கப்படுவார்கள்’ என்பது அவர்கள் அளித்த மனுவின் சாராம்சம். இதைத் தொடர்ந்து சுப்ரீம் கோர்ட், தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்திருக்கும் நிலையில்… படிப்பு முடித்த 206 மாணவர்களும் திக்கற்று நிற்கின்றனர். அரசும், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மேற்கொண்டு நடத்தாமல் மூடிவிட்டது.
sir, First of all you know what is happening in your community and with you communiuty, I hope you are genuine. He clearly states that iyer or iyengars only fight if someone spits in road not for other cruel social problems.
என்ன பன்னலும்நொட்டை சொல்லிகிட்டெ இரு
என்டா வெண்ண நீ என்ன பெரிய ___________. படம் ரிலீஸ் ஆகரதுக்கு முன்னாடியே எல்லான் தெரிஞ்ச மாதிரி பேசர.நீ ஆயிரம் படம் எடுத்து பத்து ஆஸ்கர் வாங்கன மாதிரி ஸீண் பொடாதடா ______, __________ மவனே
சங்கர் ரசிகர் நல்ல நல்ல கெட்டவார்த்தைகள் எல்லாம் பேசியிருக்கிறார் வினவு அதை எடிட்
செய்திருக்கிறது. ஏன் பாஸ் இந்த கெட்டவார்த்தைகளை எல்லாம் சங்கர் படத்தை பார்த்து கத்துக்கிட்டீங்களா அல்லது உங்க சொந்த சரக்கா?
உங்களுக்கு ஷங்கர் பிடிக்காது ன்னு நினைக்கறேன்….அவரைத்தாக்கித்தான் எழுதறத தான் இத நீங்க எழுதரக்கு முன்னாடி மைண்ட் ல மார்க் பண்ணி வச்சிட்டு எழுதிருக்கீங்க போல… ஒரு படைப்போட இன்ஸ்பிரேஷன் இல்லாம அதிகபட்சமாக எந்த படைப்பும் வருவதில்லை..
உங்களையே எடுத்துக்கங்க “உங்கள் நண்பர் சொன்ன ஒரு காமெடி டயலாக்கை அவர் இல்லாத வேறு இடத்தில் அந்த டயலாக்கை சொல்லி மற்றவர்களை சிரிக்க வைக்க முயன்றதில்லையா ? ” நீங்கள் ஒரு நகைச்சுவை உணர்வு உடையவரா இருந்தால் அது கண்டிப்பாக இருக்கும்…வெளிநாட்டு மக்கள் பார்த்து ரசித்தத நம்ம நாட்டு மக்களும் பார்த்து ரசிக்கணும்ங்கறது, இதயெல்லாம் பத்தி நம் மக்களும் தெரிஞ்சுக்கணும் ங்கறது கூட அவரோட நோக்கமா இருக்கலாம் ….
100000000000000000000000000 %
Disgusting caste politics. Half baked lunatic should have written this
ஷஙரின் அன்னியன் படம் ஒரு ப்ரிடிஷ் படததை தழுவி எடுக்க்பட்டது.
The Abominable Dr. Phibes
http://www.imdb.com/title/tt0066740/
unnal oru padam edukka mudiyuma? kurai solladhe.
// அன்னியன் படம் வெளியான 2005-ல் தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு கையில் ஒட்டியிருக்கிற குருணை சாதத்தை நக்கி சாப்பிடுகிற அம்பிக்களுக்குக் கூட மாட்டுக்கறி சாப்பிட்டவரை போல நாமும் சமூக அநீதிகளுக்காக பயங்கரமாக போராடுகிறோம் என்ற ஃபீலிங்கை அந்த படம் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. //
நீங்களுந்தான் மாட்டுக்கறி சாப்பிட்டு சமூக அநீதிகளுக்காக பயங்கரமாக போராடும் பாய்ங்கள சேத்துக்கிட்டு புரட்சிய பண்ணி முடிச்சுராலாம்ன்னு ரொம்ப சிரமப்படுறீங்க.. ஆனா பாய்ங்க உங்க பக்கமே வரமாட்டேங்குராங்களே.. மாட்டுக்கறி சாப்பிடறதால ரொம்ப உசாரா இருக்காங்களோ என்னமோ.. விடாதீங்க.. முயற்சி திருவினையாக்கும்.. இன்றில்லாவிட்டால் நாளை, நாளை இல்லாவிட்டால் அடுத்த நூற்றாண்டு..
//சுயநிதி கல்லூரி கொள்ளையர்கள் சாராய உடையார்கள், பச்சமுத்து, ஜேபிஆர் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவிலிருந்து வந்த என்.ஆர்.ஐ. ரஜினி தனியார் கல்லூரி ஆரம்பிப்பதாக எடுத்த படம்தான் சிவாஜி. ரஜினி வழுக்கை, வெள்ளை, டான்ஸ் என்றுதான் மயங்கினார்களே தவிர இந்த சுயநிதி கொள்ளையர்களைப் பற்றி யாரையும் அந்தப் படம் யோசிக்க வைக்கவில்லை.//
ரஜினிக்கு பதில் நீங்க நடிச்சிருந்தா யோசிக்க வைக்கலாம்.. ஆனா படத்தைப் பார்க்க ஒருத்தனும் வரமாட்டானே.. பிறகு எங்கெ யோசிக்க..
//மயிலாப்பூர் கச்சேரி ரோடு பார்ப்பனர்கள் எஸ்.வி.சேகர் கடி ஜோக்கை சொல்லி காலத்தை ஓட்ட முடியாது என்று தெரிந்ததும், அப்டேட்டாக ஏதாவது அமெரிக்க நகைச்சுவைகளை அவிழ்த்து விடுவது போல, தன்னுடைய பெரிய பட்ஜெட்டுக்கு ஏத்த ரேஞ்ச் வேண்டும் என்று எந்திரன் எடுக்கிறார்.//
எந்திரன் படம் தொழில் நுட்பத்தில் ஹாலிவுட் படங்களுக்கு இணையானது.. உங்கள் கவனம் மயிலாப்பூர் கச்சேரி ரோட்டிலேயே மையம் கொண்டிருப்பதால் தமிழரான சங்கரின் திறமையை பாராட்ட மனம் வரவில்லை..
என்னது ஹாலிவுட் தரமா? எந்த ஜென்மத்திலும் சங்கரால் ஹாலிவுட் படத்தை கூட அப்படியே காப்பி அடிக்க முடியாது அம்பி. சங்கர் என்கிற கருப்பு பார்ப்பான் பார்ப்பனர்களின் காலை நக்கிக்கொண்டிருப்பதால் தான் நீங்கள் எல்லாம் இப்படி ஓடோடி வந்து ஆதரிக்கிறீர்கள். பார்ப்பன பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சினைக்காவது நீங்கள் இப்படி பதறியடித்துக்கொண்டு பின்னூட்டமிட ஓடி வந்திருக்கிறீர்களா அம்பி ? இப்படி ஒரு சாதி வெறியா?
முதல்ல உங்க ________ அ கழுவுங்க….. அப்புறம் அடுத்தவங்கள சொல்லுங்க…
// என்னது ஹாலிவுட் தரமா? எந்த ஜென்மத்திலும் சங்கரால் ஹாலிவுட் படத்தை கூட அப்படியே காப்பி அடிக்க முடியாது அம்பி. //
கோனன் தி கிங் என்று ’கோனன்’ படங்கள் வரிசையில் ஒரு புது ஹாலிவுட் படத்தை எடுக்க சங்கருக்கு அர்னால்ட் ஸ்வார்ட்ஸ்நெக்கர் வேண்டுகோள் விடுத்திருப்பதாக தெரிகிறது.. இயக்குனர் சங்கர் அதை ஏற்பாரா மாட்டாரா தெரியாது..
// சங்கர் என்கிற கருப்பு பார்ப்பான் பார்ப்பனர்களின் காலை நக்கிக்கொண்டிருப்பதால் தான் நீங்கள் எல்லாம் இப்படி ஓடோடி வந்து ஆதரிக்கிறீர்கள். //
ஏதோ ஓரிரு படங்களில் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக காட்சிகள் இருந்ததற்காக ’காலை நக்கிகொண்டிருப்பதால்’ என்று இழிவுபடுத்துகிறீர்கள்.. தினமும் முஸ்லீம்களுக்கு ஆதரவாக வினவில் கட்டுரைகள் எழுதிக்கொண்டிருப்பதை என்ன சொல்வீர்கள்..?!
ஆர்னால்ட் நடித்தாலும் அது ஹாலிவுட்டின் குப்பை படங்களின் வரிசையில் கூட நிற்க முடியாது என்பதை உறுதியாக கூறுகிறேன் இதற்கு காரணம் கும்பகோணத்தில் இருக்கிறது.
ஏதோ ஓரிரு படங்களில் அல்ல அனைத்து படங்களிலும் இந்த சூத்திரக் கழுதை அதை தான் செய்திருக்கிறது ஒவ்வொன்றாக அனைத்தையும் பட்டியல் போட்டு பாருங்கள்.
ஒருவேளை இந்து மதவெறி பயங்கரவாதிகளால் அச்சுறுத்தப்படுபவர்கள் பார்ப்பனர்களாக இருந்திருந்தால் வினவு பார்ப்பனர்களை ஆதரித்திருக்கும். ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களை ஆதரிப்பதை எதிர்த்து முட்டாள்கள் மட்டுமே கேள்வி எழுப்புவார்கள், உங்களுடைய கேள்வி அப்படித்தான் இருக்கிறது.
// ஏதோ ஓரிரு படங்களில் அல்ல அனைத்து படங்களிலும் இந்த சூத்திரக் கழுதை அதை தான் செய்திருக்கிறது ஒவ்வொன்றாக அனைத்தையும் பட்டியல் போட்டு பாருங்கள்.//
மாற்று கருத்து கொண்ட மனிதர்களை மதிக்க விருப்பமில்லாவிட்டாலும், கழுதையை வர்ணாசிரம வளையத்துக்குள் கொண்டுவராமல் விட்டுவைக்கலாமே..
// ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களை ஆதரிப்பதை எதிர்த்து முட்டாள்கள் மட்டுமே கேள்வி எழுப்புவார்கள் //
ஹிட்லரின் ஆட்சியில் யூதர்களைப் போல் இந்தியாவில் முஸ்லீம்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் நம்பச் சொல்வதை எல்லோரும் ஏற்றுக் கொள்ளவேண்டுமா..?!
//முதல் படம் ஜென்டில்மேனிலேயே நல்ல மார்க் வாங்கிய பார்ப்பன மாணவருக்கு எம்பிபிஎஸ் சீட்டு கிடைக்கவில்லை என்பதாலேயே பணக்காரர்களிடம் கொள்ளை அடித்து பணம் கட்டி அவரை தனியார் கல்லூரியில் படிக்க அனுப்புகிறார். //
படத்தில், அந்த பார்ப்பன மாணவன் செத்துப் போயிட்டானே.. பிறகு எப்படி படிக்க வைத்தார்..?! கொள்ளையடித்த பணத்தில் தானே தனி கல்லூரி கட்டி நல்ல மார்க் வாங்கிய ஏழை மாணவர்களை சாதி மதம் பாராமல் படிக்க வைக்கிறார் என்றுதான் கதை..
//1996-ல் ஜெயா-சசி கும்பல் ஊழலால் தமிழகத்தையே மொட்டையடித்து கொண்டிருக்கும் போது, ஊழல், ஆணவம், அராஜகம் கொடி கட்டி பறந்த காலத்தில் கும்பகோணம் கருப்பு பிராமணன் ஷங்கர் ஆர்.டி.ஓ ஆபிசில் துட்டு வாங்கும் புரோக்கரை வில்லனாக்கி படம் எடுக்கிறார். கிராஃபிக் வொர்க்குக்காக அமெரிக்காவுக்கு போனவர், ஊழல் என்பதை காட்ட ஆர்.டி.ஓ ஆஃபிசில் நிறுத்தி விட்டார், செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு போகவில்லை, போயஸ் கார்டனுக்கும் போகவில்லை.//
அதுக்குத்தான் நீங்க இருக்கீங்களே..
ஆர்.டி.ஓ ஆபிசில் துட்டு வாங்கி தரையில் ஓட்டை இருந்த பேருந்துக்கெல்லாம் ஃபிட்னெஸ் சர்டிபிகெட் கொடுத்து, சுருதி போன்ற குழந்தைகள் அதில் விழுந்து சாகும் போது நீங்களும் ஒரு கட்டுரைய எழுதி புரட்சிதான் ஒரே தீர்வுன்னு முடிப்பீங்க.. அதுவரைக்கும் எத்தனை பேர் சாவறதாம்..?
\\படத்தில், அந்த பார்ப்பன மாணவன் செத்துப் போயிட்டானே.. பிறகு எப்படி படிக்க வைத்தார்..?! கொள்ளையடித்த பணத்தில் தானே தனி கல்லூரி கட்டி நல்ல மார்க் வாங்கிய ஏழை மாணவர்களை சாதி மதம் பாராமல் படிக்க வைக்கிறார் என்றுதான் கதை..//
இன்னொரு பொருளையும் அதில் ஊடு பொருளாக வைத்தார்.பார்ப்பன மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் எடுத்தாலும் மருத்துவம் போன்ற உயர்கல்வி கற்க முடியாமல் போகிறதாம்.அதற்கு இட ஒதுக்கீடுதான் காரணம் என்று சொல்லாமல் சொன்னார்.
இந்தியாவில் அனைவருக்கும் கல்வியும் வேலையும் அளிக்கும் நிலை இல்லை.அதனால் இருக்கும் இடங்களை பல்வேறு சமூக பிரிவு மக்களுக்கிடையே பகிர்ந்து அளிப்பதற்குத்தான் இடஒதுக்கீடு அமுலில் உள்ளது.அதுதான் சமூகங்களுக்கு இடையே நீதியை நிலைநாட்டும் சமூக நீதி கொள்கை.மண்டல் ஆணைய பரிந்துரைகள் அமுலுக்கு வந்த பின்னர்தான் சமூக நீதி என்ற சொல்லே பெரும்பாலான மக்களுக்கு அறிமுகமானது.அது குறித்த விழிப்புணர்வும் தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மக்களிடையே பெருகி வந்தது.
மண்டல் ஆணைய பரிந்துரைகளை அமுல்படுத்திய ”மாபாதக ” செயலுக்காக வி.பி.சிங் ஆட்சியை கவிழ்த்த பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கு எதிராக பல்வேறு தளங்களிலும் கள்ளப்பரப்புரையை முடுக்கி விட்டிருந்தனர்.திரைப்பட ஊடகம் மூலமாக நடத்திய கள்ளப்பரப்புரைதான் ஜென்டில்மேன் திரைப்படம்.
” ” ” தமிழ்நாட்டில் சங்கரராமனை கொலை செய்த ஜெயந்திரன் கைது செய்யப்பட்ட அன்றே, என்ன இருந்தாலும் அவாதான் எங்களுக்கு லோககுரு என்று பூணூல் தெரிய டிவியில்பேட்டி கொடுக்கும் எஸ்விசேகரின் அறம்தான் ஷங்கர் படங்கள் பேசும் அரசியலின் அடிப்படை. பிறகு கும்பகோணம் பார்ட்டி புரட்சி பற்றியா பேசும் ? ” ” ” மனதில் உள்ளதை புட்டு புட்டு உடைக்கும் வினவுதளத்தின் பதிவுகள் தொடரட்டும் ”
வாழ்த்துக்கள் பணி தொடர
படத்தில் இருப்பதையும், அவர்கள் எடுத்பதையும் இவ்வளவு கருத்தாக ஆராய்ந்து, அதற்கு முனைவர் பட்டத்திற்கு அனுப்புவது போல ஒரு மிக பெரிய ஆராய்ச்சி கட்டுரை எழுதி, அதையும் சீரியஸாக வெளியிட்ட வினவின் அற்ப புத்தியும், மதிகெட்டதனமும் பார்த்தால்,நிஜத்தில் இவர்களின் புரட்சி படையின் போராட்டங்கள் எந்த லட்சனத்தில் இருக்கும் என்பதையும், இவர்களின் மற்ற “”படைப்புகள்””” எவ்வாறு எழுதப்பட்டது என்பதை இப்பொழுதாவது எல்லா இனா.. வானாக்கள் தெரிந்து கொண்டால் நல்லது…..
article is simply blabbering!one thing you want a medium to abuse brahmins and that’s your motto…nothing else…think different!
Dear Vinavu and Comrades,
//கையில் ஒட்டியிருக்கிற குருணை சாதத்தை நக்கி சாப்பிடுகிற//
//மாட்டுக்கறி சாப்பிட்டவரை போல//
இவைகள் எந்த விதத்திலும் கருத்தற்ற வார்த்தைகள். தோழர்கள் இவற்றைத் தவிர்ப்பதே நல்லது. இவை வீண் விவாதத்திற்கே இட்டுச் சென்று நம் நேரத்தை வீணடிக்கும்.
ஒரு சாதாரன திரைப்படம் வெளிவரும் முன்னே வினவு தளத்தில் அதைப் பற்றி விமர்சனம் வருவது கொஞ்சம் டூ மச். மேலும் டூ ஏர்லி.
கும்பகோணம் பார்ட்டிக்கு சரக்கு இல்லேன்னா.. வலது இடது மாதிரி… ஒரு ரேஞ்சுல பர்ச்சி பற்றியும் பேசமுங்க….. பார்த்துகிடடே இருங்களே…… அடுத்து அதுதான்..
சங்கர் தனது படங்களில் மனுநீதியையும் நிலை நாட்டுகிறார்.
அந்நியன் திரைப்படத்தின் இறுதியில் கதாநாயகன் மருத்துவம் பெற்று பன்னாளுமை நோயிலிருந்து [ முல்டிப்லெ பெர்சொனலிட்ய் டிசொர்டெர் ] விடுபட்டு கதாநாயகியை மணமுடித்து தொடர் வண்டியில் மனைவியோடு பயணம் செய்வான். வண்டிக்குள் மது அருந்தும் ஒருவரை இங்கு குடிக்காதீர்கள் என கேட்டுக்கொள்வான்.குடிகாரன் வேண்டுகோளை ஏற்க மறுத்து விடுவான்.மனைவியோடு அந்த இடத்தை விட்டு அகன்று விடும் கதாநாயகன் மனைவிக்கு தெரியாமல் அந்த குடிகாரனை ஓடும் வண்டியிலிருந்து தூக்கி எறிந்து கொன்று விடுவான்.அதாவது வெளியுலகத்துக்கு அந்நியன் ஆளுமையை தொலைத்து விட்ட கதாநாயகன் உள்ளுக்குள் அந்நியனாக இருந்து கொண்டு தவறிழைப்பவர்களை கொன்று தள்ளுகிறானாம்.ஆனால் அந்த கதாநாயகி சொத்து மதிப்பை குறைத்துக்காட்டி பத்திர பதிவு கட்டணத்தை மோசடி செய்தவள்.அதற்காக அவளை கொல்ல துரத்தியவன் அதை ஒதுக்கித்தள்ளி விட்டு அவளை மணமுடித்துக் கொள்கிறான்.
அதாவது
சூத்திரன் கொலை செய்தால் சிரச்சேதம்
பார்ப்பான் கொலை செய்தால் சிகைச்சேதம்.
காதல் காரணமாவோ அல்லது ஒரே ஒரு மனைவியாச்சேங்கற எண்ணம் காரணமாவோதான் அந்தம்மாவை உயிரோட விட்டு வெச்சுருக்கானோ என்னமோ.. தவிர சாதிதான் காரணம்னு நீங்களாவே சிரச்சேதம், சிகைச்சேதம் எல்லாம் பண்ணப்படாது.. நீங்க வேணா அந்தம்மாவுக்கு டைவர்ஸ் வாங்கி குடுங்க திப்பு.. அந்த அம்பி சாதி பாக்காம அவள தூக்குறானா என்னன்னு பாப்போம்..
காதல் காரணமாக விட்டு வைத்தான் என்று சொல்வதிலாவது கொஞ்சம் தர்க்க நியாயம் உள்ளது.அந்த நியாயத்த அப்புறமா பொளக்கலாம்.
ஒரே மனைவின்கிறது செல்லாது.கட்டண ஏய்ப்பு செய்த பின்னர்தான் அது தெரிந்தும் அம்பி திருமணம் செய்து கொள்கிறான்.
காதல்தான் காரணம் என்றால் எச்சில் துப்புவதற்கும் தொடர்வண்டியில் தண்ணியடிப்பதர்குமே கொலை வெறி கொள்ளும் அம்பிகள் கட்டண ஏய்ப்பு மோசடிக்காரியை கல்யாணம் கட்டலாமோ.கட்டண ஏய்ப்பு செய்வதற்கு முன்பிருந்தே கதாநாயகியை அம்பி காதலித்து வருகிறான்.அம்பியின் நீதிப்படி எச்சில் துப்புரவனுக்கே உயிர் வாழும் உரிமை இல்லங்குரப்போ மோசடிக்காரிக்கு அந்த உரிமை எப்படி வந்தது.மோசடி தெரிந்த அன்றே மோசடிக்காரியின் உயிர் வாழும் உரிமை அவள் மீதான காதல் இரண்டுமே ரத்தாகி இருக்க வேண்டுமே.இந்தியனில் தவறு செய்த சொந்த மகனையே கொல்வதாக காட்சியும் கதையும் வைத்த சங்கர் அவற்றை ரத்து செய்யலன்னா என்ன காரணம்.
காரணம் மனுநீதி.
// மோசடி தெரிந்த அன்றே மோசடிக்காரியின் உயிர் வாழும் உரிமை அவள் மீதான காதல் இரண்டுமே ரத்தாகி இருக்க வேண்டுமே. //
விவாகரத்து பண்ற மாதிரி காதல்ரத்து சாத்தியமான்னு தெரியலை.. அந்த அம்பியே மனசை சரியா கண்ட்ரோல் பண்ணமுடியாமதான் எம்.பி.டி ஆசாமியா மாறியிருக்கான்.. அவன்கிட்ட போய் காதலை ரத்து செய்து நீதியை ஏன் நீ நிலைநாட்டல்லேன்னு கேட்க அவன் என்ன அவதாரமா அல்லது இறைதூதரா.. அவதாரங்களும் இறைதூதர்களும் கூட காதல் உணர்வுல அவதிப்பட்டு அலைக்கழிஞ்சு போயிருக்காங்களே.. ஆமா, உங்களுக்கு லவ்வே வந்ததில்லையா திப்பு..?!!! கொடுத்துவெச்ச ஆளய்யா நீவிர்..
\\ஒரே ஒரு மனைவியாச்சேங்கற எண்ணம்//
இதுல இருக்குற குசும்புத்தனமும் புரியுது.பாய்ங்க நாலு பொண்டாட்டி கட்டுவாங்க என்ற RSS கள்ளப்பரப்புரயைத்தான் இந்த அம்பியும் அவுத்து வுடுறாரு .இதற்கு பல தடவை விளக்கம் சொல்லியாச்சு.ஆனாலும் இந்த கள்ளப்பரப்புரயை விடாமல் தொடரும் குசும்புத்தனத்தை என்னவென்று அழைப்பது.
வாணக்காரய்யா பதிவிலும் அதற்கு முன்னர்
கடிதம் மூலம் தலாக்! ஆணாதிக்கத்தின் வக்கிரம்!!
பதிவிலும் அளித்த விளக்கம்.
\\பல தார மணம் கட்டாயம் இல்லை.தேவைபடுவோர் செய்து கொள்ளலாம்.அவ்வளவுதான்.பலதார மணம் இசுலாமியர்களை பொறுத்தவரை ஏட்டளவில்தான் உள்ளது.உங்களுக்கு அறிமுகம் உள்ள முசுலிம்களில் எத்தனை பேர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்திருக்கிறார்கள் என எண்ணிப்பாருங்கள்.அநேகமாக ஒருவர் கூட இருக்க மாட்டார்கள்.//
திப்பு,
//உங்களுக்கு அறிமுகம் உள்ள முசுலிம்களில் எத்தனை பேர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்திருக்கிறார்கள்//
முகமதியர்கள் இந்தியாவில் மட்டுமில்லை. இதைப் படியுங்கள்.
http://pamelageller.com/2014/09/strolling-in-a-park-a-london-businessman-and-his-three-wives-just-one-of-up-to-20000-such-multi-wife-muslim-marriages-in-polygamy.html/
குடிகாரன் இன்னும் குடித்து கொண்டே இருப்பதை காட்டுவதன் மூலம் , அவன் திருந்தவில்லை என்பதை காட்டுகிறார் . அடுத்து அவர் செய்த தவறு ஒரு உயரை பறித்துவிட்டது .
அவரது மனைவியாக வந்தவள் ரெமோவை விடுத்தது அம்பியை ஏற்று கொள்கிறாள் என்பதை காட்டுவதன் மூலம் திருந்திவிட்டாள் என்று பொருள் வருகிறது.
குடிகாரன் திருந்த ஒரு வாய்ப்பு தரப்பட்டதா?….
மற்ற துறைகளைப் போலவே சினிமா துறையையும் பார்ப்பனீயம் கபளீகரம் செய்துவிட்டது.என்.எஸ்.கே, நடிகவேள் எம்.ஆர்.ராதா போன்ற ஒரிருவரைத் தவிர .கதைப்படி குண்டுவைப்பவன் பெயர் ஏதாவது ஒரு முஸ்லிம் பெயராகவே இருக்கும். ஷங்கரை விட பார்ப்பன கொடிய நோக்கத்தை கச்சிதமாக சினிமாவில் புகுத்தியவர் சாட்சாத் ஒரிஜினல் அக்கிராகார மணிரத்னம். பம்பாய் படத்தில் பால்தாக்கரேவை மகானைப் போல சித்தரிப்பார்.ரோஜா படத்தில் மக்கள் தான் வன்முறையாளர்கள் போலவும்,ராணுவம் மிகவும் சிரமப்பட்டு அமைதியை நிலைநாட்டி வருவது போல் கதைத்திருப்பார்.மணிரத்னத்தின் கருத்தை ஏற்க மறுத்தால் உங்கள் தேசபக்திக்கு அதோகதிதான்.சினிமாவில் பார்ப்பனர்கள் அனுமதித்திருக்கும் ஒரு விசயம் உண்டு.முன்பெல்லாம் ஒரு ரவுடியை காட்ட கைலியும்,கட்ட்ம் போட்ட பனியனுடன் நெத்தியில் கர்சிப் கட்டி காட்டுவார்கள்.இப்போது வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டையுடன் நெற்றியில் பெரிய குங்குமத்துடன் ,சந்தனப் பொட்டிட்டு ரவுடியை எளிதாக புரியும்படி காட்டுகின்றனர்.
கும்பகோணத்தில் பிறந்தால் பிரம்மாண்டம் பற்றி தெரியாது என்று ஊரை மையப்படுத்தி பேசும் உங்கள் அபத்தமான எழுத்தை மிக வன்மையாக கண்டிக்கிறேன். யார் எதை பற்றி படம் எடுக்கவேண்டும் என்று தீர்மானிக்க நீங்கள் யார்? ஒரு படத்தை விமர்சனம் செய்யும் பொழுது அதன் கருத்து, எடுக்கப்பட்ட விதம், நடிப்பு, இசை இன்னும் பிற தொழில்நுட்ப விஷயங்கள் போன்றவற்றை பற்றி குறை நிறைகளை எழுத வேண்டும். அதை விடுத்து ஏன் நீ அதை பற்றி எடுக்கவில்லை? இதை பற்றி எடுக்கவில்லை என்று எழுதுவது எப்படி நியாயம்? ஒரு வேளை நீங்கள் சொன்னமாதிரி எடுத்தால் அடுத்து அமெரிக்காவின் ஈராக் ஆக்கிரமப்பை பற்றி ஏன் எடுக்கவில்லை என்று கேட்டாலும் கேட்பீர்கள். கும்பகோணம் பற்றிய தங்களின் புரிதலுக்கும் அதன் விளைவாக நீங்கள் எழுதியுள்ள கருத்துகளுக்கும் மீண்டும் ஒரு முறை எனது வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறேன்.
வினவுக்கு ஒரு நல்ல விசயத்த பாக்கவே தெரியாதா? எது நடந்தாலும் உடனே அம்பிகள் தான் காரணம். போதும் பா. இப்படியே போனா கைப்புள்ள மரியாதை தான் கிடைக்கும். ஊழல் செஞ்ச அரசாங்க பணம் மக்களுக்கு பயன் படனும்நு gentleman சொன்னதோ, இல்ல எல்லாருக்கும் இலவச கல்விநு என்திரன் சொன்னதோ வினவு கண்ணனுக்கு என்னைக்குமே தெரியாது. புரட்சி வேணும் நா மக்கள் கிட்ட இருந்து ஆரம்பிக்கணும்நு அந்நியன் இல்ல இந்தியன் சொன்னாலும் நல்லா குத்தம் கண்டு பிடிக்க மட்டும் வினவு வரும்.
இவ்ளோ பேசுதே வினவு, இந்த புரட்சி எல்லாத்துக்கும் தோழர்கள் சொன்னா மாதிரி communism நல்லதுன்னு பிரக்டிகல்லா காட்ட எதாவது முயற்சி? ஊஹும். கம்முனிச தத்துவத சொல்றதுக்கு கூட அன்பே சிவம்ல கமல் தேவ படுது. கம்முநிசம் ஒத்து வரும்நு மக்களுக்கு practicalah சொல்ல முடியல வினவால. புரட்சி பத்தி பேசுனா மட்டும் போதாது. செயல்ல செஞ்சு காட்டுனா தான் மக்கள் வருவாங்க.
அதே மாதிரி இந்தியால பொறந்தா Hollywood ku முயற்சி பண்ண கூடாதா? அப்போ ரஷ்யால பொறந்தா மட்டும் தான் communism பத்தி பேசணும்னு சொன்னா ஒதுபீங்களா? எங்க இருந்து inspiration வந்தா என்ன? நல்லதா இருந்தா ஆமோதிக்க வேண்டியதுதான்.
ஐயா பெருமாள் உங்களுக்கு இன்னுமா புரியவில்லை? கும்பகோணத்தில் பிறந்ததாலேயே ஒருவன் ஹாலிவுட் தரத்திற்கு படம் எடுக்க முடியாது என்று கூறினால் அது முட்டாள்த்தனம் ஆனால் இங்கே அப்படி யாரும் கூறவில்லை. அப்படி இருக்க முடியாது என்பற்கு மனோஜ் நைட் சியாமளனும், சேகர் கபூருமே நல்ல உதாரணங்கள். எனவே கும்பகோணம் அல்ல கும்பகோணத்தின் தேங்கிப் போன சிந்தனை தான் கும்பகோணத்தை விட்டு எட்டிப்பார்க்க முடியாததற்கு (அல்லது கும்பகோணத்தை விட்டு தாண்ட முடியாததற்கு) காரணம். எனவே சங்கரிடம் நீங்கள் ஒரு லட்சம் கோடி ரூபாய் கொடுத்தாலும் அவருடைய வரம்பு அவ்வளவு தான், இந்த கும்பகோணத்து குட்டை ஹாலிவுட் எ என்கிற ஆறாக முடியாது. மேலும் நீங்கள் ஃபிளை’ஐ’ யும் ‘ஐ’ யும் விட்டுவிட்டீர்கள் தலைவரே.
If you wear green glasses and see, then you’ll only see green around you. If you see everything with caste and politics and religion, everything will be wrong. Learn to see things the way they are. Shankar would’ve had the intention of bringing a good hollywood movie to the Kollywood industry. There is no wrong with the intention. Laern to appreciate the right things. Ethuku eduthalum athu thappu, ithu thappunu kutram solite irukurathunala than tamilan inum munneraama irukan. China konjam konjama Indiakulla varuthu. Srilanka and china relationship going on superb. koodiya seekiram rendum sernthu namakku aapu vaikum. ithu poga pakistan vera aatayila senthurukam. Ithana mukkiyamana vishayangal irukum bothu Shankar hollywood padatha copy adichutan, antha nadigai intha nadiganoda pona, avaluku ivanoda loveu. intha elavellam thevai thana???
கம்மென்ட் அடிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு..?நீ ஒரு அரைவெக்கடு…
……இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். சொல்லப் போவதில்லை. இப்படியாக பாலாவின் சைக்கிக் பார்முலாவில் மொண்னையாக எடுக்கப்பட்ட ஒரு படம்தான் பரதேசி. ஒவ்வொரு முறை டீ குடிக்கும்போதும் தோட்டத் தொழிலாளிகளின் ரத்தமும் வியர்வையும் நினைவுக்கு வருவதை சாதித்த ஒரே படம் சில வருடங்கள் முன்பு ம.க.இ.க எடுத்த ஆவணப்படம்தான். தொழிலாளர்களின் அடிமை நிலையைப்பற்றிய சோகத்தையும் அதையொட்டிய நம் கோபத்தையும் கமர்ஷியல் பார்முலாவுக்குள்ளேயே நின்று எடுத்த வசந்தபாலனின் அங்காடித்தெரு ஏற்படுத்தியதில் கால்வாசியைக் கூட பரதேசி எனக்கு ஏற்படுத்தவில்லை…..
from:
http://www.gnani.net/?p=1253
வினவுக்கும் விடுதலைக்கும் ஆறு வித்தியாசம் காண்பது கடினம் என்கின்ற நிலைமை.வருங்காலத்தில் மார்க்சிய முரசொலியாக வந்தால் ஆச்சர்யபடுவதற்கில்லை 🙂
Dear Vinavu,
Good article. But as Univerbuddy said Vinavu has to avoid some words and phrases.
As somebody commented, it is not too early to comment on this mere and sheer commercial movie. If it is too early to comment on a movie before its release, why the trailer and story are released?
It is not right on the part of some critics to comment on Vinavu that “whether Vinavu could take such a movie”? If one wants to comment on a movie, does that mean you have to be a Cinema Director? If Shankar is a Director, Vinavu, as an E-Magazine has all the rights to criticize. Likewise everybody has a right to react on Vinavu or its readers.
Sixpack – Has nobody seen six pack on the workers’ body long long years back itself (on the bellies of viz., “AFRICAN SLAVES” or “SUMAI THOOKKUM THOZILARGAL”, ever since the slavery or the profession is started? Why the hell people enjoy seeing 6 packs only on the commercialised bellies of Shah Rukh Khan, Aamir Khan or Vikram ?
It is good to accept mistakes on whoever part it is, and open up eyes to the truth.
A very crude and badly written one sided article. You dont judge a film before seeing it and if you dont like Movies then you should avoid it. If you want to change the way they make movie then criticize it after seeing the film like us. This stinks of castism. Sad.On One Side you are fighting against caste and the other you write articles based on a particular caste spitting venom. Real sad. Social justice is when you are rational, unbiased and not the other way around. Anyway its your webpage and your opinion and the best way is to stop reading this kind of articles.
வராத ஐ படத்தின் மீது ஜெம்ஸ்பாண்ட் துப்பறியும் முறையில் ,தடயங்களை ஹலிவூட்டில் தேடி அதன் கதை கரு காப்பி என்று நிருபித்த வினவு , சமுக அக்கறையுடன் மூத்தகுடி என்ற ஸ்கிரிப்ட்டை எழுதி பன்னாட்டு கம்பெனிகளை தோலுரித்த கோபியின் கதை முருகதாசால் திருடபட்டு கத்தியான கதையை பற்றி வினவில் லோக்கல் CBCID விசாரணை கூட இல்லையே ஏன் ? மேலும் மெட்ராஸ் படத்தை பற்றியும் அதில் காட்டபடும் தலித் அரசியல் பற்றியும் கூட ஒரு வார்த்தை விமர்சனம் வினவில் இல்லையே ஏன் ? அதில் காட்டபடும் தலித் அரசியலை சரி /அல்லது தவறு என்று விமர்சிக்க வினவை தடுப்பது எது ?
Taking movies in commercializing way is one directors own wish, Even Vinavu as a socialist or social activist Should not have rights comment or say some one take movies related to real social events as you taking care about. But I totally agree and I support vinavu for many articles and their works.
As you mentioned based on imitating similar movie scenes, And promoting the Capitalism advertising kind of movie. Which says about how the normal physical handicapped will viewed from the public point of view instead analyzing real cause of that. I agree.
I feel your distress on some one not taking into consider the actual event to movies. But this is it. This is the society thinking capability 🙁
சங்கர் இசை வெள்ளாளர் ஜாதிஐ சேர்ந்தவர். நீங்கள் குறிபிட்டது போல கருப்பு பிராமணர் அல்ல.
இதுமாதுரியான சின்ன தவறுகளால் ஒரு சமூகத்தையே குறை சொல்வது போல உள்ளது.