தமிழ்நாடு சட்டசபையில் “ ஆமாம் நான் பாப்பாத்தி”யென்று பகிரங்கமாக பெருமையுடன் அறிவித்தவர் ஜெயலலிதா. சொத்துக் குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியென்று பெங்களூருவில் உள்ள பாரப்பன அக்கிரஹாரா என்று அழைக்கப்படும் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. தீர்ப்பின் போது அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்ற நிலையில் தனது பாதுகாப்பு பிரச்சினைகளை முன்வைத்து ஜெயா தரப்பில் சுட்டிக்காட்டியதன் பேரில் தான் பார்ப்பன அக்கிரஹாரத்தில் அமைந்துள்ள கருநாடக சிறை வளாகத்திற்குள் சிறப்பு நீதிமன்றம் இடம் மாற்றப்பட்டது. தமிழினவாதிகளால் “ஈழத்தாய்” என்று போற்றப்பட்ட ஜெயலலிதா தனது உயிருக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
எனினும் பாப்பாத்தியின் பெருமையையும், பாதுகாப்பையும் பார்ப்பன அக்ரஹாரம் ‘பாதுகாக்க’வே செய்திருக்கிறது.
மூன்று நீதிமன்றங்களையும், 14 நீதிபதிகளையும், எண்ணற்ற அரசு வழக்கறிஞர்களையும், கணக்கற்ற வாய்தாக்களையும் தாண்டி வானத்து நட்சத்திரங்களையும் விஞ்சும் கோப்புகளையும், ஏழு கடல்களை நிறைக்கும் மசியையும் விழுங்கி சட்டத்தின் சகல சந்து பொந்துகளிலும் புகுந்து புறப்பட்ட பின் – உலகம் உருண்டை என்கிற உண்மையை ‘புதிதாக’ உரைத்துள்ளது நீதிமன்றம்.

ஆனால், இந்த உண்மையை 7-9-1995 அன்றே ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பேர் முன்னிலையில் முன்னறிவித்தார் ஜெயலலிதா. அந்த தேதியில் தான் அவரது வளர்ப்புக் கோயில் மாடான சுதாகரனின் திருமணம் நடந்தேறியது. ஜெயாவின் அந்த முதலாம் ஆட்சியே தமிழக அரசியலில் திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் பொற்காலத்தை துவங்கி வைத்தது. ஜெயா சசி கும்பல் முழு தமிழகத்தை மொட்டை அடித்து பழனி படிக்கட்டு ஆண்டிகளோடு உட்காரவைத்ததும், அதற்கு துணையாக பெரும் ரவுடிகளைக் கொண்ட தளபதிகளின் கூட்டம் நின்றதும் வரலாறு.
”நான் அடித்தது இத்தனை தான், உன்னால் ஆனதைப் பார்த்துக் கொள்” என்று இந்தியாவின் பெருமை மிகு போலி ஜனநாயகத்தின் மூஞ்சியில் ஜெயா கும்பல் பீச்சாங்கையை வைத்து ஏறக்குறைய 19 ஆண்டுகள் கடந்து விட்டது.
ஜெயா ஆட்சி தூக்கியெறியப்பட்ட பிறகு சுப்ரமணி சாமியால் தொடரப்பட்ட வழக்கை பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்திரவிட்ட பின் அவ்வழக்கின் மீதான விசாரணை தி.மு.க அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு பதினெட்டு ஆண்டுகள் கழித்து இன்று தீர்ப்பை வழங்கியுள்ளது நீதிமன்றம்.
இந்த இடைப்பட்ட காலத்தில் மேலும் இரண்டு முறை ஆட்சியில் அமர்ந்து விட்ட ஜெயா கும்பலின் சொத்துக்கள் மிடாஸ் முதலாக தமிழகமெங்கும் பரவியிருக்கும் சாம்ராஜ்யத்தில் பல ஆயிரம் கோடிகளாக வளர்ந்திருக்கின்றன. இப்போது, முதல் ஆட்சியில் ரூ 66 கோடி சொத்து சேர்த்தார்கள் என்று தீர்ப்பு சொல்லியிருக்கிறது நீதித்துறை. இதுதான் சட்டம் ஆற்றிய கடமையின் லட்சணம்.
இன்றைக்கு நீதிமன்றத்தால் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பின் படி 1991-96 காலகட்டத்தில் ஜெயா அடித்த கொள்ளைகளுக்கான குற்றவாளி என்றால், இந்தக் குற்றவாளி இடைப்பட்ட காலத்தில் சுமார் எட்டாண்டுகள் அதிகாரத்தில் அமர வாய்ப்பளிக்கும் விதமாக வழக்கை நத்தையின் வேகத்தில் நகர அனுமதித்த நீதிமன்றத்தை யார் தண்டிக்கப் போகிறார்கள்?
ஜெயாவுக்கு ரூ 100 கோடியும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ரூ 10 கோடியும் அபராதம் விதித்திருக்கிற நீதித்துறை இந்த கும்பலின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தொடர்ந்து வைத்திருக்க ஆசி அளித்திருக்கிறது.
தற்போது வெளியாகியிருக்கும் மொக்கைத் தீர்ப்பும் அத்தனை சுலபத்தில் கிடைத்து விடவில்லை. 2001-ல் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஜெயா வழக்கை நீர்த்துப் போகச் செய்ய ஏற்கனவே கொசுவலை போல் கணக்கில்லாத பொத்தல்களோடு கிழிந்து கந்தலாகித் தொங்கிக் கொண்டிருந்த சட்டத்தில் புதிய ஓட்டைகளைக் கண்டுபிடித்து இந்தியாவின் அரசியல் சட்டத்தை அன்றாடம் கேலி செய்து வாய்தா ராணியென்ற சாதனை படைத்தார்.
வாய்தா ராணியின் அஸ்திரங்களை வெல்லும் அரசியல் உறுதியோ இல்லை தார்மீக நெறியோ திமுகவிடம் இல்லை. அரசியல் ரீதியில் காலாவதியாகிப் போய் நின்ற தி.மு.கவிடம் ஜெயாவை எதிர்ப்பதற்கு இறுதியாக எஞ்சிய ஒரே ஆயுதம் இந்த வழக்கு ஒன்று தான் என்பதைத் தாண்டி திமுக பலவீனமான நிலையிலேயே இந்த வழக்கை எதிர்கொண்டது.

கருணாநிதி தலைமையிலான திமுக கட்சி, ஆளும் தரகு முதலாளிகளின் கிளப்பில் சேர்ந்து விட்டாலும் முதலாளித்துவ ஊடகங்களுக்கு அது பெரிய விசயமில்லை. ஏனெனில் திமுக உருவாகி வந்த திராவிட பாரம்பரியத்தின் மீதான பார்ப்பனிய வன்மத்தை அவர்கள் இன்றைக்கும் மறக்கவில்லை. நேரெதிராக ஜெயா கும்பல் இத்தனை பகிரங்கமாக ஊழல் செய்து பேயாட்சி செய்தாலும் அவரை ஒரு குற்றவாளியென்றோ, தண்டிக்கப்பட வேண்டுமென்றோ ஊடகங்களும், பார்ப்பனிய அறிவு ஜீவிகளும் கோரியதே இல்லை. கூடவே மறுகாலனியாக்கம் கோரும் பாசிச மற்றும் பாப்புலிச ஆட்சிக்கு பொருத்தமான நபராக ஜெயாவை ஆளும் வர்க்கங்கள் கருதின. மோடியும் கூட இப்படித்தான் அரியணை ஏற்றப்பட்டார்.
அதனால்தான் இந்த நெடிய 18 ஆண்டுகளில் மத்தியில் காங்கிரசு அல்லது பாரதிய ஜனதா யார் ஆண்டாலும் ஜெயா கும்பலின் செல்வாக்கு குறைந்து விடவில்லை. இந்த பின்புலத்தில்தான் அரசியல் சட்ட புத்தகத்தை ஒவ்வொரு காகிதமாக கிழித்து கழிவறையில் தொங்க விட்டு அழகு பார்த்தார் ‘அம்மா’.
தனது ரத கஜ துரக பதாதிகள் துணையோடு ஜெயா கடந்த பதினெட்டாண்டுகளாக உலகம் ஒரு சதுரம் என்பதை நிரூபிக்க முயன்று வந்தார். என்றாலும், மறுக்கவே முடியாத உண்மையான ’உலகம் உருண்டை’ தான் என்பதை நீதிமன்றம் வேறு வழியின்றி இந்த தீர்ப்பின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது.
அதே நேரம் இந்த தீர்ப்பு உலகம் சதுரமாகவும் இருப்பதற்குரிய நியாயத்தை முற்றிலும் மறுத்து விடவில்லை. ஜெயா, சசி கும்பலின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய முடியாது என்பதோடு, ஓபி வகைப்பட்ட பொம்மைகளை முதல்வர் பதவியில் அமர்த்தி போயஸ் தோட்டத்து ரிமோட்டே கட்டுப்படுத்தும் என்ற யதார்த்தத்தை இந்த தீர்ப்பு தடுக்கப் போவதில்லை.

எனினும் ஜெயா கும்பல் இறுதி நேரத்தில் மோடி ஆட்சியின் சகல ஆசிகளுடன் இந்த வழக்கிலிருந்து வெளியே வர முயற்சி செய்தது. அந்த நம்பிக்கையில்தான் அதிமுக கும்பல் சிவகாசி வெடிகளோடு பெங்களூருவுக்கு படையெடுத்தது. ஆனால் சட்டப்படியே என்ன போங்காட்டம் ஆடினாலும் ஜெயா கும்பலை முற்றிலும் விடுவித்து விட முடியாது என்ற நிலையும் உருவாகி இருந்தது. மேலும் ஊழல் வழக்குகளில் இத்தகைய ஓரிரண்டு நம்பிக்கையை காட்டினால்தான் ஆளும் வர்க்கம் ஊழலுக்கு எதிரான மக்களின் நம்பிக்கையை தக்க வைக்கவும் முடியும்.
என்றாலும் ஜெயாவுக்கு ஆதரவாக ஒரு மாபெரும் சென்டிமெண்ட் அலையை ஏற்படுத்த அதே ஆளும் வர்க்கமும், ஊடகங்களும் முயலாமல் இல்லை. அம்மாவை கடைசி வரை காப்பாற்ற முயன்ற பாஜக கும்பல் இந்த வழக்கின் பெருமை திமுகவிற்கு செல்வதை கடுப்புடன் பார்க்கிறது.
ஜெயாவின் மேல் சொத்துக் குவிப்பு வழக்கை முதலில் தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி, டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் கருத்து சொல்லும் போது தீர்ப்பு இப்படித்தான் இருக்குமென்று முன்பே தெரியுமென தனக்குத்தானே பாராட்டிக் கொள்கிறார். மாமா சாமி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வரும் போது அம்மா கட்சி மகளிர் அணி அளித்த வரலாற்று சிறப்புமிக்க வரவேற்பை தமிழகம் மட்டுமல்ல சாமியும் மறந்திருக்க மாட்டார். ஆனாலும் ஒரு தெருவோர விபச்சார தரகனுக்கு ரோசம், மானம், வெட்கம், சுயமரியாதை என்று ஏதாவது இருக்குமா என்ன?
பார்ப்பனிய பங்காளிகளான சாமி மற்றும் மாமிக்கு ஏற்பட்டிருந்த முரண்பாடு தற்காலிகமானதே. அதனால்தான் சாமியும் இந்த 18 ஆண்டுகளில் தான் போட்ட வழக்கின் மீது அம்மா கும்பல் வாய்தாக்களின் பேரில் சிறுநீர் கழித்த போதும் அதை பன்னீர் என்று உச்சிமோந்து அதிமுகவின் கூட்டணியிலேயே ஓட்டுக் கேட்டார். இந்த தரங்கெட்ட தரகன் இன்று எச்சிலொழுக நான்தான் கிழிச்சேன் என்று ஊளையிட்டாலும் அப்படி ஒரு பெருமையை பாஜகவோ இல்லை மோடியோ விரும்பவில்லை.

கடைசி வரை போயஸ் தோட்டத்தின் வாசலில் ராப்பிச்சைக்காரனைப் போல் நின்ற பொன்னாரை அம்மா பீச்சாங்காலால் எத்தி விட்ட பின் வேறு வழியின்றித் தான் காவி கோஷ்டியினர் பூணூலை உருவிக் கொண்டு பெருமாள் கோயில் உண்ட கட்டியாவது கிடைக்காதா என்று கேப்டனிடம் ராப்பிச்சை கேட்டார்கள். ‘உத்தமர்’ வாஜ்பாயின் தலைமையில் பாரதிய ஜனதாவின் தேசியத் தலைவர்கள் அனைவரும் சென்னை வரும்போதெல்லாம் போயஸ் தோட்டத்து அம்மனிடம் ஆசி வாங்கிச் சென்றதையும் வரலாறு பதிந்து வைத்திருக்கிறது.
அம்மாவை பகைத்துக் கொண்டால் திருநெல்வேலி ஊரே காணாமல் போய்விடும் என்பது சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் காவிகள் கற்றுக் கொண்ட பாடம்.
காவி கும்பலே வெட்கப்படுமளவுக்கு ‘பாட்டாளிகளின்’ கட்சியான தாபா கட்சியும், காரத் கட்சியும் போயஸ் தோட்டத்திற்கு 5 வருடத்திற்கு ஒரு முறை விரதம் இருந்து பாதயாத்திரை போய் கால், அரை சீட்டு பஞ்சாமிருதம் வாங்கியதும் கூட வரலாற்றின் பக்கங்களில் சிரிப்பதற்காக விட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த பிச்சை பஞ்சாமிர்தமும் கடைசி தேர்தலில் கிடைக்கவில்லை எனும் போது ஆதித்யா சேனலில் வடிவேலுவின் டிஆர்பி ரேட்டிங்கை தாபாவின் டிஆர்பி ரேட்டிங் தகர்த்தெறிந்தது.
தாபா கட்சியின் தேசிய செயலரான டி.ராஜா, பெங்களூரு தீர்ப்பை ஒட்டி தந்தி டி.வி நிருபரிடம் திருவாய் மலர்ந்ததை பார்த்தால் புத்தரே கொடு வாளினை எடுத்துக் கொண்டு தாபா கட்சி ஆபிசுக்கு சென்று விடுவார்.
அதாவது பதினெட்டாண்டு காலம் வழக்கு நடந்தது, வேறு வேறு மாநிலங்களுக்குப் போனது, வேறு வேறு நீதி மன்றங்களுக்கு மாறியது, மேல் முறையீடுகள் நடந்தது என்றெல்லாம் பீடிகை போட்ட டி.ராஜா, தற்போது சட்டம் தனது கடமையைச் செய்துள்ளது என்று யாருக்கும் தெரியாத உண்மையை போட்டு உடைத்தார். டி.ராஜாவிடம் தொடர்ந்து பேசிய தந்தி நிருபர், தீர்ப்பின் விளைவாக ஏற்படவுள்ள அரசியல் அணிசேர்க்கையின் மாற்றங்கள், எதிர்கால கூட்டணிக் கணக்கு வழக்குகள் குறித்த கேள்விக்கு சட்டென உள்ளே புகுந்த டி.ராஜா “ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டவர் முதல்வர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பது தனது கருத்தல்ல என்றும், அது சட்டத்தின் கருத்து” என்றாரே பார்க்கலாம்.

“அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுண்டா” என்ற கோலிவுட்டின் கோமாளி ஸ்டார் ரஜினிகாந்தின் தத்துவத்தின் படி டி ராஜாவின் வார்த்தையை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது அம்மாவை தண்டிக்க வேண்டுமென்று தாபா கட்சி கோரவில்லை, கோரியதில்லை, கோரப்போவதில்லை. அடுத்த தேர்தலில் பஞ்சாமிர்தம் கிடைக்காது என்றாலும் அதன் மணம் வீசும் காலி டப்பாவாவது கிடைக்க வேண்டுமென்ற ஆதங்கமே டி ராஜாவின் வாயில் அத்தனை எச்சரிக்கையுடன் வெளிப்படுகிறது.
தொலைக்காட்சி விவாதங்களில் – தங்கள் சொந்த குடும்ப தொலைக்காட்சிகளில் நடக்கும் பாதுகாப்பான விவாதங்களில் கூட – கருத்து சொல்லும் தி.மு.கவினரோ தங்களது அரசியல் ஆதாயத்துக்காகக் கூட இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் துப்பற்றவர்களாக நிற்கிறார்கள். அவ்வாறு பயன்படுத்திக் கொள்வதை அவர்கள் தலையின் மேல் தொங்கிக் கொண்டிருக்கும் 2ஜி வழக்கே தட்டி வைப்பது ஒரு புறமிருக்கட்டும். கடந்த பாராளுமன்ற தேர்தலில் திமுகவை குப்பறத் தள்ளி வெற்றிபெற்றிருக்கும் ஜெயாவை எதிர்த்து நிற்கும் தார்மீக நெறியோ, அரசியல் கடப்பாடோ, மக்கள் நலனோ கருணாநிதி கட்சிக்கு இல்லை. அதனால்தான் தாக்குதல் நிலையில் இந்த தீர்ப்பை கொண்டாட முடியாததோடு, தற்காப்பு நிலையில் கூட அவர்களால் பேசவோ, நடமாடவோ முடியவில்லை.
ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட ஜெயா கும்பலின் சார்பில் அதிமுக ரவுடிகள் தமிழகம் முழுவதும் திமுக அலுவலகங்களை தாக்கி, கருணாநிதி கொடும்பாவிகளை எரிக்கிறார்கள். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளி வழக்கு போட்டவனை நீதிமன்றத்திலேயே போட்டு கதற கதற அடிப்பதை எங்கேயாவது பார்க்க முடியுமா?
தி.மு.க சார்பு ஊடகங்களான சன் மற்றும் கலைஞர் தொலைகாட்சியினர் நெருப்புக் கோழி பூமிக்குள் தலையைப் புதைத்துக் கொள்வதைப் போல சொத்துக் குவிப்பு வழக்கின் அலுப்பூட்டும் வரலாற்று விவரங்களில் தங்களது மூளைகளைப் புதைத்துக் கொண்டிருக்கின்றனர். பாதுகாப்பான புதைப்புதான்.
திமுகவின் செய்தி ஊடகங்களுக்கு எதிர்வரிசையில் நடுநிலை வரிசையாக ஃபிலிம் காட்டும் ஊடகங்களின் யோக்கியதை என்ன?

அம்மாவின் பிய்ந்த செருப்புகளாக அணிவகுக்கும் புதிய தலைமுறை தந்தி தொலைக்காட்சியினரோ தமிழின் ‘ங’ எழுத்தே நாணிக் கோணும் அளவுக்கு வளைந்து நெளிகிறார்கள். பாரிவேந்தர் மற்றும் சிவந்தி வகையறா மறத்தமிழன்களின் மானங்கெட்டத்தனத்தை விரிவாக எழுத விரல் கூசுவதால் ஒரு சில தெறிப்புகளை மட்டும் பார்க்கலாம்.
ஜெயலலிதா மீதான் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதாக ஆங்கில சேனல்களில் செய்தி வெளியாகிக்கொண்டிருக்கும் போது தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ, அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தான் அவ்வாறு தெரிவிக்கின்றன என்று ஆரம்பித்து பின்னர் ”குற்றம் நிரூபிக்கப்பட்டடதாக நீதிமன்ற வளாகத்தில் பேசிக்கொள்கிறார்கள்” என நகர்ந்து இனி சொல்லியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் வந்த பின் “குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதாக பிடிஐ செய்தி தெரிவிக்கிறது” என்று நெளிந்தார்.
இந்த பதிவு எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் போது அதிமுக காலிகள் தமிழகம் முழுவதும் வன்முறையை கட்டவிழ்த்துள்ளனர். பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன. கடைகளை அடைக்கச்சொல்லி வன்முறைசெய்கிறார்கள் அதிமுக குண்டர்கள். தந்தி டிவியின் ரங்கராஜ் பாண்டேவோ தமிழகமெங்கும் ”அதிமுகவினர் போராட்டம்”,” “மக்கள் தங்களாகவே நடமாட்டத்தைக் குறைத்துக் கொண்டனர்”, என்று கூறி வன்முறை கும்பலை நியாயப்படுத்துகிறார். புதிய தலைமுறையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் அய்யநாதன் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் அதிமுகவினரின் போர்வையில் காலித்தனம் செய்யும் சமூகவிரோதிகளாகவும் இருக்ககூடும் என்று ஈழத்தாயின் தவப்புதல்வர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்.
18 நெடிய ஆண்டுகளில் நைந்து போன சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது என்பதையெல்லாம் இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. அதனால்தான் ஜெயா கும்பல் தமிழகம் முழுவதும் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டங்களை இதே சட்டமும், சட்ட ஒழுங்கும் அமைதியாக வேடிக்கை பார்க்கிறது.
சட்டப்படி பாசிச ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது என்றும், இந்த கும்பலின் சொத்துக்களை மக்கள் பறிமுதல் செய்து தண்டிக்க வேண்டுமென்றும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 96-ம் ஆண்டில் போராட்டம் நடத்தின. தமிழகமெங்கும் அதிமுக ரவுடிகளோடு எமது தோழர்கள் மோதினார்கள். பெருநகரங்களெங்கும் அதிமுகவின் பொறுக்கி தளபதிகளின் பெயரை பொதுச் சுவர்களில் எழுதி மக்களை தட்டி எழுப்ப முயன்றோம். இதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசி கும்பலுக்கு சொந்தமான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்று பல தோழர்கள் தடியடி பட்டு சிறை வைக்கப்பட்டனர்.
இந்த வகைப்பட்ட போராட்டங்களின் தேவை இன்றைக்கும் இருக்கிறது என்பதை இந்த தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது.
நன்றி! காலம் நேரம் பார்க்காமல் சிறப்பு கட்டுரை வெளியிட்டதற்கு…..
மிக நீண்டதாக கட்டுரை இருக்கிறது. இன்னும் சற்று குறைத்து கருப்பொருளை விட்டு விலகாமல் செய்தீர்களானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.
//புதிய தலைமுறையில் பேசிய நாம் தமிழர் கட்சியின் அய்யநாதன் வன்முறையில் ஈடுபடுகிறவர்கள் அதிமுகவினரின் போர்வையில் காலித்தனம் செய்யும் சமூகவிரோதிகளாகவும் இருக்ககூடும் என்று ஈழத்தாயின் தவப்புதல்வர்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கிறார்.//இ ப்பிடி சொல்ல அய்யனாதன் என்பவர் அறியா குழந்தையா, சில இடங்களில் போலிஸே போக்குவரத்தை நிறுத்தி ஜெயா அரசுக்கு தன் விசுவாத்தை காட்டியது அதிமுக பொருக்கிகள் கிடைக்கும் காசுக்காக கூச்சலிடுகிறது போலிஸும் கண்டுக்காம விடுது ஜெயா சசி கும்பலுக்கு 120 கோடி அபராதம் எல்லாம் சும்மா ஜுஜுபி 25 நாள் போதும் அந்த பணத்த கொள்ளை அடிக்க……..
இந்தத் தீர்ப்பை எப்படிப் புரிந்து கொள்வது என்று குழம்பியவர்களுக்கு, தெளிவு ஏற்படுத்தும்வண்ணம் எழுதப்பட்ட அருமையான கட்டுரை.
//சட்டப்படி பாசிச ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது என்றும், இந்த கும்பலின் சொத்துக்களை மக்கள் பறிமுதல் செய்து தண்டிக்க வேண்டுமென்றும் மகஇக மற்றும் அதன் தோழமை அமைப்புகள் 96-ம் ஆண்டில் போராட்டம் நடத்தின. தமிழகமெங்கும் அதிமுக ரவுடிகளோடு எமது தோழர்கள் மோதினார்கள். பெருநகரங்களெங்கும் அதிமுகவின் பொறுக்கி தளபதிகளின் பெயரை பொதுச் சுவர்களில் எழுதி மக்களை தட்டி எழுப்ப முயன்றோம். இதன் முத்தாய்ப்பாக ஜெயா-சசி கும்பலுக்கு சொந்தமான தஞ்சை வினோதகன் மருத்துவமனையை கைப்பற்றும் போராட்டம் நடைபெற்று பல தோழர்கள் தடியடி பட்டு சிறை வைக்கப்பட்டனர்.//
வினவு தோழர்களே,
96-ல் பாசிச ஜெயாவிற்கெதிரான ம.க.இ.க. தோழர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களைப் பற்றிய பதிவுகளையோ, பு.ஜ, பு.க கட்டுரைகளையோ வாய்ப்பிருந்தால் வெளியிடவும்.
நன்றி.
சரியான கட்டுரை. ஒரு சந்தேகம், ஒரு பார்ப்பன பாசிஸ்ட் ஜெயாவை, அவர்களுக்கென்றே சேவை செய்யும் நீதிமன்றம் எப்படி தண்டிக்க முடிந்தது.
குஜராத் படுகொலையைத் தண்டிக்காத நீதிமன்றமும், இந்த விசயத்தில் இப்படி நடந்துகொண்டதை எப்படி புரிந்து கொள்வது?
அருமையான கேள்வி,
1958ல் டிடி கிருஷ்னமாச்சாரி செய்த ஊழல், சஞஜய் காந்தியின் கிஸ்ஸா-குர்ஸி-கா கேஸ், ரஜிவின் போப்ர்ஸ், ஹ்கேல் பகத், டைட்லர் சீக்கியர்களை படு கொலை செய்தது, நரசிம்மராவின் ஹர்ஷத் மேதா கேஸ், மோதிஜியின் உலக ப்ரபல கோத்ரா படு கொலை, ஜெயேந்த்ர ஸரஸ்வதியின் சங்கர் ராமனின் கொலை மற்றும் பல ஊழல்களும், படு கொலைகளும் ஒன்னுமே செய்யாத நீதித்துரை ஏன் கீழ் சாதிக்கும், பெண்களுக்கு மட்டும் ஜெயில் தண்டனை கொடுக்கிரது என்பதே சரியான கேள்வி.
சிந்தனையை துண்டும் கேள்வி…
ஒருவேளை இவற்றிற்காக இருக்கலாம், சங்கராச்சாரியை கைது செய்தது, வாஜ்பாயி அரசை கவிழ்த்தது, பாப்பத்தியாக இருந்தாலும் தமிழகத்தில் பாஜகவை நிர்மூலமாக்கியது, நீதிபதிகளையே கேவலப்படுத்தியது என பட்டியல் நீளமாக இருக்கிறது.
கூடுதலாக இன்னொரு காரணமும் இருக்கலாம்.ஜெயா வேறு வழிகளை முயற்சி செய்யாமல் தடுக்க ரவி சங்கர் பிரசாத்தை அனுப்பி நம்பிக்கை ஊட்டிய பா,ஜ,க,கடைசியில் அவரை கை விட்டு இருக்கிறது.நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து அரியானாவில் மராட்டியத்தில் தனது பழைய பங்காளிகளை கழட்டி விட்டு தனது தனி செல்வாக்கின் கீழ் அம்மாநிலங்களை கொண்டு வர முயல்வது போல் தமிழகத்திலும் முயற்சிக்கிறது பா.,ஜ,க,
தமிழக மக்கள் தி,மு,க ,அ.தி,மு,க என்று மாற்றி மாற்றி வாக்களித்து பழகி விட்டார்கள்.பா,ஜ,க, தனது முயற்சியில் வெற்றி பெற இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றை அரசியல் அரங்கிலிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும். ஒப்பீட்டளவில் தி,மு,க,வின் வாக்கு வங்கியை கைப்பற்றுவதை விட அ.தி,மு,க வின் வாக்கு வங்கியை கைப்பற்றுவது பா.,ஜ,க, வுக்கு எளிது.அதற்கான நல்வாய்ப்பாக வந்ததுதான் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு.
பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்
சரியான சந்தேகம் பாஸ்!
chance less article….excellent really excellent …yaar sir eluthanathu ..intha vaaru vaarainga…
/ஜெயாவுக்கு ரூ 100 கோடியும், சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு ரூ 10 கோடியும் அபராதம் விதித்திருக்கிற நீதித்துறை இந்த கும்பலின் பல்லாயிரம் கோடி ரூபாய் சொத்துக்களை தொடர்ந்து வைத்திருக்க ஆசி அளித்திருக்கிறது./
பறிமுதல் செய்யப்படுவதாக தீர்ப்பு விவரம் உள்ளது! சரி பார்க்கவும்! அடுத்து வருமானவரி வழக்கிலும் இந்த தீர்ப்பின் தாக்கம் எதிர் பார்க்கலாம்! பாரத திருநாட்டில் ஒரு நீதிபதியாவது பணபலம், அதிகார பலம் இவற்றுக்கு அஞ்சாமல் இருக்கிறாரே! அதை பாராட்டி இருக்கலாம்! அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வந்த, மக்க்ளுக்குநீதிமன்றங்களின் மேல்நம்பிக்கை உண்டாக்கும், வரலாறு படைத்த தீர்ப்பை பாராட்டியிருக்கலாம்!
உண்மைதான் .மைக்கேல் டி குன் கா பணத்திற்கும் மசியவில்லை, மிரட்டலுக்கும் பயப்படவில்லை.விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய மிக சிறுபான்மையாக இருக்கும் நேர்மையான நீதிபதிகளில் ஒருவராகத் தெரிகிறார்.உயர்நீதி ,உச்சநீதி மன்றங்களில் இவரைப் போன்றவர்கள் இருக்கவேண்டும்.
//ஊழல் வழக்குகளில் இத்தகைய ஓரிரண்டு நம்பிக்கையை காட்டினால்தான் ஆளும் வர்க்கம் ஊழலுக்கு எதிரான மக்களின் நம்பிக்கையை தக்க வைக்கவும் முடியும்.//
இனிமேல் நம்பிக்கை வைக்க என்ன இருக்கிறது? அம்மா உயர்நீதி மன்றத்திலோ, உச்சநீதி மன்றத்திலோ தடையாணை பெற்றுவிடக்கூடும்! ஆனால் அந்த பிழைக்கத் தெரியாத நீதிபதியைத்தான் அய்யொ பாவம் என் கிறார்கள்! அதிமுக வினர் தங்கள் வன்முறையின் மூலமே தீர்ப்புக்கு நல்ல பப்ளிசிடி கொடுத்தார்கள்!
தக்க தருணத்தில் தந்த தகவலுக்கு நன்றி. புதிய தலைமுறை தொலைகாட்சியில் நேற்று முழு நாள் நடைபெற்ற விவாதத்திலும் இன்று காலை ஒலிபரப்பிய புதுப்புது அர்த்தங்கள் நிகழ்சிசியிலும் – அய்யநாதனும் ஹெச் ராஜாவும் தொலைக்காட்சியில் நடிக்க வந்துள்ள கதாப்பாத்திரங்கள் போன்றே தமது நடிப்பபை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ஒரு கல்யாண கதகேளு ….. எனும் மகஇக பாடல் இணைத்தால் இன்னும் பொருத்தமாக இருக்கும் .
அருமையான அலசல். பதிவு அருமை !
இந்த தீர்ப்பு வரவேற்க வேண்டிய ஒன்று என்பட்தில் சந்தேகம் இல்லை ஆனால் ஒரு குற்றவாளி இந்த 18 ஆண்களில் சுதந்திரமாக செயல்படவும் தமிழக முதல்வராகவும் இருக்க முடிந்தது ஆனால் குற்றம் செய்யாத (குற்றம்நிருபிக்ககபடவில்லை என்று விடுதலை செய்யப்பட்ட) அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் ஜெயிலில் அடைத்து சித்திரவதை செய்து அவர்களின் இளமைக்காலம் முழுவதையும் அழித்த கயவர்களை என்ன செய்வது?
இது தான் (இந்)தீய அரசியல்…
மிகச் சிறப்பான பார்வை. அரசியலை எப்படி அணுக வேண்டும் என்ற தெளிவான விளக்கம். மிக நன்று. கோபம் பல இடங்களில் தெரித்தாலும் நியாயமானதாகவே படுகிறது. கட்டுரையின் சாரம் நம் சனநாயகத்தின் கேவலத்தை பறைசாற்றுவதாக உள்ளது. காத்திரமான கட்டுரை.
very good article.
தீர்ப்பை வரவேறேக என்ன உள்ளது உழைகை்கும் மக்களின் வாழ்வை கேளே்வி குறியாக்கியவர் வெறெும் இலஞ்ச வழக்குகாக விசாருனை செயெது மாபெரெும் வரலாற்றையைா படைதை்தார்கள் அம்மையைாரால் வாழ்விழந்த பல லட்சம் மக்கள் உண்ண உணவினறி அம்மாா உணவகத்தில் திரண்ட கூட்டத்தை பார்தாலே தெரெியும் சாதனை இதற்கி எந்த நீதி மன்றம் தீர்ப்பு வழங்கு்ம்?
/…அப்பாவிகளை விசாரணை என்ற பெயரில் பல ஆண்டுகள் ஜெயிலில் அடைத்து சித்திரவதை செய்து அவர்களின் இளமைக்காலம் முழுவதையும் அழித்த கயவர்களை என்ன செய்வது?…/
நல்லம்மநாயுடு போன்ற நேர்மையான விசாரணை அதிகாரிகளும்,நீதிபதி குன் கா போன்ற,நேர்மையும் துணிச்சலும் பெற்றவர்கள் சிலரே! அம்மாவின் பணபலமும், அதிகாரபலமும் , அக்கிரகார பலமும் இவர்களிடம் எடுபடவில்லை! அரசு வக்கீல் எப்படி வழிக்கு வந்தார், எப்படி அதிக பட்ச தண்டனையை கோரினார் என்பது புதிர்! சுரங்க ஊழல் வழக்கிற்கு அடுத்து நீதித்துறைக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வு இது! தீர்ப்பிற்கு பிறகு தமிழ்னாட்டில், சட்டம் ஒழுங்கை நிலை நாட்ட தவறிய காவல்துறை ஆளும் கட்சி ரவுடிகளின் ஏவல் துறையானது அம்பலப்பட்டு போனது!
இது ஒரு மொக்கையான தீர்ப்புதான்.கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்து அரசுக்கணக்கில் சேர்க்க வேண்டும். குற்றவாளிகள் நால்வரைத் தவிர சசிகலா கணவன் நடராசன்,உள்ளிட்ட மன்னார்குடி மாபியா கும்பலில் உள்ள அனைவரையும் விசாரித்து கொள்ளை அடித்து குவித்து வைத்துள்ள சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும். ஜெயாவின் ஆலோசகரும்,டுபாக்கூர் கம்பெனிகளின் இயக்குனராக செயல்பட்ட துக்ளக் சோவையும் விசாரிக்க வேண்டும்.ஒரு குற்றவாளி ஆட்சியில் பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் மீளாய்வு செய்து தேவையற்றதை நீக்க வேண்டும்.டான்சி வழக்கில் மனசாட்சி படி பரிகாரம் தேடிக்கொள்ள சொன்ன பஞசகச்ச மன்றத்தில் மோடியின் துணையுடன் மீண்டுவருவார் என நம்பலாம்.
இந்த பதிவு தத்துவார்த்த நோக்கில் சரியான திசையில் அலசப்பட்டுள்ளது.ஆனால் யதார்த்தத்தை கருத்தில் கொண்டல்ல.நிலவுகின்ற சட்ட அமைப்பில் உள்ள குறைகளை சுட்டி இது முழுமையான தீர்ப்பல்ல என்பதை விளக்கி ஒரு முழுமையான மக்கள் ஆட்சியில் தவறு செய்தவர்கள் இவ்வாறெல்லாம் தண்டிக்கப் படவேண்டும் என்கிற அளவில் எழுதப்பட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.முதலில் நிலவுகின்ற சட்ட அமைப்பில்,அதனூடே நிலவும் ஊழல் முறைகேடுகளில் சிக்கித் திணறும் ஒரு நீதிமன்ற சூழலில்,சகல அதிகாரம் பெற்ற ஒரு நபருக்கு எதிராக இந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதியை ஒரு வரி பாராட்டலாம்.அதனால் வினவின் தரத்திற்கு குறைவு எதுவும் வந்து விடாது.நாம் விரும்பும் படியெல்லாம் “சட்டத்தின் உதவியுடன் ஜெயா கும்பலை தண்டிக்க முடியாது, சொத்துக்களை பறிமுதல் செய்ய முடியாது, அதிமுக எனும் பாசிச கட்சியை தடை செய்ய முடியாது” என்பதால் தான் வழக்கில் தொடர்புடைய குற்றவாளிக்கு மட்டும் எழுதப் பட்டுள்ள சட்டத்தின் படி தண்டனை அறிவித்துள்ளார் நீதிபதி. இது தான் நீங்கள் குறிப்பிடும் மொக்கை தீர்ப்பு அவருடைய யதார்த்தத்தில் சாத்தியம். நான் படித்து தெரிந்து கொண்டவரையிலும் அவர் சட்டத்தின் மொழியில் எழுதிய தீர்ப்புகளை மேல் நிலை நீதிமன்றங்களில் மாற்ற இயலாது என்பதே. அந்த வகையில் இந்த தீர்ப்பும் அப்பீலிலும் உடைக்க இயலாமல் இருக்கட்டும்.இன்னொரு முரணாக நான் கருதுவது இரண்டு சட்ட வெற்றிகளை இரு வேறு விதமாக பார்க்கிற பார்வை.தில்லைக் கோயிலை தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுக்கப் பட்ட வழக்கின் தீர்ப்பு வந்த போது ” தமிழுக்கென்று உயிரையும் கொடுப்போமென வெற்றுச் சவுடால் அடிக்கும் திராவிட, தமிழினவாதிகள் இத்தனை ஆண்டுகள் செய்ய முடியாத செயலை புரட்சிகரக் கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் செய்திருக்கிறோம். கம்பீரமாக இந்த வெற்றியை அனைவருக்கும் அறிவித்து கொண்டாடுமாறு தோழர்களையும்,பதிவர்களையும்,வாசகர்களையும் கேட்டுக் கொள்கிறோம்” என்றெல்லாம் பரவசத்துடன் எழுதியது போல எழுத முடியாதது ஏன்? முன்னது உங்களால் ஈட்டப் பட்ட வெற்றி. இது அப்படியல்ல என்பது தவிர என்ன வித்தியாசம்?முன்னதில் எப்படி ம உ பா மையம் மூன்றாவது தரப்பாக இருந்து அரசு தரப்பை வலுப்படுத்தி அந்த தீர்ப்பின் வெற்றியில் பெரும்பங்கு வகித்ததோ அதே விதமாக இந்த வழக்கிலும் தி மு க மூன்றாவது தரப்பாக இருந்து அரசு தரப்பை வலுப்படுத்தி இருக்கிறது. தி மு க தனது அரசியல் எதிரியை ஒழிக்க காட்டிய உறுதியை சமச்சீர் கல்வி,தில்லை கோவில் வழக்கு போன்ற மக்கள் பிரச்சினைகளில் காட்ட வில்லை என குறைபட்டுக் கொள்ளலாமே தவிர இந்த வழக்கில் அவர்கள் பங்கை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களின் தார்மீக தகுதி(அவ்வளவு நல்லவங்களா அவங்க?!) மற்றும் வாக்காளர்களின் மன ஓட்டமறிந்து இந்த வெற்றியை அவர்கள் வெளிப்படையாக கொண்டாட முடியவில்லை என்பதே சரி.
Well said Rajan !
2002 குஜராத் படுகொலையையும், இந்துத்துவப் பார்ப்பன பாசிசத்தையும் எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து தஞ்சையில் 2003 ஆம் நடத்திய “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்” டில் பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதாவை எதிர்த்து ம.க.இ.க மையக்கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்.
நிச்சயமாக இந்த தீர்ப்பின் அடிபடையில் ‘கருணாநிதி & மோடியின்’ கூடு சதி உள்ளது.
இனி கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரிய வரும்.
இந்தியாவில் உள்ள பத்திரிக்கைகள் எல்லாம் மோடி & கோ கையில் உள்ளதால், உண்மை உலகுக்கு தெரிய சற்று காலம் செல்லும்.
தீர்ப்பு சொல்லும் செய்தி: இதுவரை அரசியல் வாதிகள் யாரும் ஊழலே செய்யவில்லை என்பதே. சிவில் வழக்கில் இது கொஞசம் ஓவெர் அடாவடி. 176000 கோடி என்னவாயிற்று. நிலக்கரி ஊழல் என்னவானது. தவறு செய்வது மனித இயல்பு. திருந்திய நல்லவனையும் சட்டம் தண்டிக்கக் கூடும். கட்டுரை எழுதியவருக்கு என்ன கோபமோ? சிலநேரம் நம்முடைய இயலாமை மற்றவரை இகழத் தூண்டும். நாம் கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும் என்பது என் கருத்து.
2002 குஜராத் படுகொலையையும், இந்துத்துவப் பார்ப்பன பாசிசத்தையும் எதிர்த்து மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் புரட்சிகர அமைப்புகள் இணைந்து தஞ்சையில் 2003 ஆம் நடத்திய “பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்” டில் பார்ப்பன பாசிஸ்டு ஜெயலலிதாவை எதிர்த்து ம.க.இ.க மையக்கலைக்குழு தோழர்கள் பாடிய பாடல்
ஜெயலலிதா அடிப்படையில் ஒரு பெண். அதுவும் சினிமாவில் ”கவர்ச்சிக்கன்னி” யாக வலம் வந்த ஒரு பெண். அவரது தனிப்பட்ட வாழ்க்கை சோகங்களும் துரோகங்களும் நிறைந்த ஒன்று. தன் சொந்த வாழ்க்கையில் யார் யாரையோ நம்பி மோசம் போனவர். தனக்கென கணவன், குழந்தைகள், குடும்பம் என எதுவும் வாய்க்கப்பெறாத துரதிர்ஷடசாலி. ஆணாதிக்கம் மிகுந்த இந்திய சமூகத்தில் இம்மாதிரியான பெண்கள் (என்ன தான் பார்ப்பன சாதியை சேர்ந்தவராக இருந்தாலும்) பொதுவாழ்க்கையில் மேலே வருவது மிகவும் கடினம். பல வகையில் பலரிடம் அவமானப்பட்டும் சீரழிந்தும் தீர வேண்டும். தன் மீது எத்தனையோ பேர் புழுதி வாரி தூற்றியிருப்பதாகவும் தான் நெருப்பாற்றில் நீந்தி வந்ததாகவும் இவரே பலமுறை கூறியிருக்கிறார். இவற்றால் ஏற்படும் விரக்தியும் ஆத்திரமும் தான் பொது வாழ்க்கையில் ஜெயலலிதா நடத்தி வரும் தான் என்னும் அடாவடி ஆணவ அரசியல், ஊழல் மற்றும் அராஜகங்களுக்கு முக்கிய காரணம். உயர் மட்டங்களில் இருக்கும் அரசியல்வாதிகள், அதிகார வர்க்கத்தினர், ஊடகத்துறையினர் உட்பட பலரின் பகையையும் தன் குண இயல்பால் எளிதாக தேடிக்கொண்டவர் இவர். இருந்தாலும் தமிழகத்தில் வாழும் அனைத்து தரப்பு மக்களிடமும் பரவலாக ஜெயலலிதா மீது இப்போதும், இத்தனை நடந்த பின்னரும், பரிவு உண்டு. தாழ்த்தப்பட்ட மக்கள் கூட ஜெயலலிதாவை ”சீரழிந்த பொம்பளை” யாகத்தான் இப்போதும் கருதுகிறார்கள். அதனால் தான் ஓட்டு போட்டு தொலைப்போம் என இந்த அம்மையாருக்கு ஓட்டு போடுகிறார்கள். இந்த இரண்டரை ஆண்டுகளாக நடக்கும் இவர் ஆட்சியில் முன்பு போல் பெரிய அளவில் ஊழலும் அராஜகமும் நடந்ததாக தெரியவில்லை.
தீர்ப்பளித்த நீதிபதி ஜான் குன்கா நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர். நேர்மையாகவும் தைரியமாகவும் தீர்ப்பளித்திருக்கிறார். இது இந்திய அரசியல் மற்றும் நீதித்துறை சூழ்நிலையில் அரிதானது. ஆனால் ஜெயலலிதாவுக்கு இரண்டாண்டுகள் மட்டும் சிறை தண்டனை கொடுத்திருக்கலாம். எம்.எல்.ஏ பதவி கூட போகும் அளவுக்கு நான்காண்டுகள் கொடுத்திருக்க தேவையில்லை. முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு இரண்டு ஆண்டுகள் என்பதே பெரிய அடி தான். பெரிய அவமானமும் கூட. சசிக்கலாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வேண்டுமானால் அதிக ஆண்டுகள் தண்டனை வழங்கி இருக்கலாம். ஜெயலலிதாவுக்கே நான்கு ஆண்டுகள் என்றால் கருநாநிதி கும்பலுக்கு எத்தனை ஆண்டுகள் கொடுத்தால் தகும்?. அவர்களுடைய குடும்ப அராஜகமும் ஊழல்களும் இவர்களுடையதை விட பல மடங்கு அதிகம். சர்க்காரியா காலத்திலிருந்து நடந்து வருபவை. அதுவும் விஞ்ஞான முறைப்படி வேறு. அதற்கு நாற்பது ஆண்டுகள் தண்டனை கொடுத்தாலும் போதாது.
ஜெயலலிதாவுக்கு கிடைத்த சிறைவாசத்தின் பின்னணியில் காவிரி நதிநீர் சார்ந்த அரசியலும் இருப்பதாக கருதுவதற்கு இடமுண்டு. கர்நாடகத்தில் இப்போது தசரா விடுமுறை காலம். காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்சினையில் கர்நாடக அரசியல்வாதிகளை ஜெயலலிதா மாதிரி வெறுப்பேற்றிய தமிழக அரசியல்வாதி யாரும் இல்லை. மேலும் தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஒட்டு மொத்தமாக ஒழித்துக்கட்டி தேசியக்கட்சிகளை திணிக்க இந்திய அளவில் சதி நடப்பதாகவும் சொல்லப்படுகிறது.
////ஜெயலலிதாவுக்கே நான்கு ஆண்டுகள் என்றால் கருநாநிதி கும்பலுக்கு எத்தனை ஆண்டுகள் கொடுத்தால் தகும்///
இதையெல்லாம் வினவுவிடம் கேட்காதீர்கள். கருணாநிதிக்கு வினவு மிகவும் வேண்டியவர். அதனால்தான் கருணாநிதியின் குடும்பத்தைப்பற்றி எதுவும் எழுதுவதில்லை. எதனை லட்சம் கோடி சொத்துக்கள் கருணாநிதி மற்றும் இவரின் குடும்பத்திற்கு உள்ளது எனபதை உலக அளவில் பெரிய ஆடிட்டர் கூட கணக்கிடமுடியாது. யாராவது சோற்றுக்கு இல்லாத பார்பனன் கிடைத்துவிட்டால் விளாசி தள்ளுவார்கள்.
Kalaingar family members and relation and DMK members relations are staying in usa and other forein countries with all facilities. and sorry to say they are all with out any legal income. how is it? who sponsor them???
இது ஜெயாவின் சட்டவிரொதமாக குவிக்கப்பட்ட சொத்து பற்றிய வழக்கு-அதற்கான தீர்ப்பு பற்றிய கட்டுரை! இதில் கருணானிதியை ஏன் இழுக்க வேண்டும்? 2ஜி பற்றி ஏற்கனவே வினவு கவர் செய்திருக்கிறது! ஒரு குற்றவாளி தண்டிக்கப்பட்டிருக்கிறார், நாட்ராயனுக்கு வயிற்றெரிச்சல் வரக்காரணமென்ன?
கருணானிதியின் மீது எந்த வழக்கும்நிலுவையில் இல்லை.அவரின் கட்சிக் காரர்கள், அவரின் குடும்பத்தினரின் மீது வழக்குநீதி மன்றத்தில்நிலுவையில் உள்ளது.இன்னும் குற்றவாழியென்று அறிவிக்கப் படவில்லை.அப்படி அறிவிக்கும் போது அவர்கள் பற்றி எழுதலாம்.அவர்கள் சொத்து பற்றி எழுதலாம்.அதை விடுத்து கற்பனையாக அவர்களை விமரிசிப்பது,உங்களது வக்கிறமான உயர் சாதிய மன்ப் பான்மையே. ஜெயலலிதாவின் மீது வருமான வரித்துறை வழக்கும் உள்ளது.கருணானிதியின் வருமான வரித் துறை வழக்கும் இல்லை.கருணானிதிக்கு பரம் விரோதிகளான பார்ப்பனர்களின் ஆதிக்கம்நிரைந்த வருமான வரித் துறை அவரைச் சும்மா விட்டிருக்குமா? கருணானிதியின் உறவினரின் சொத்துப் பற்றி உஙளால் கற்பனையாகத்தான் பேச முடிகிறது.அதிகாரப் பூர்வமாக அறிவிப்பு வரும் வரை காத்திருக்கலாமே.ஆனால் ஜெயாவின் மீது குற்றமும் சுமத்தப் பட்டு, தீர்ப்பு வந்தநிலையிலும் அவரைஅப் புனிதவதியாக காட்டநினைப்பது,கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது போல், குற்றவாளிகளே, குற்றவாழிகளைக் காமுறுவர்.
இந்த தமிழ்த்தேசியர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. காவிரி பிரச்சினையில் அம்மா உறுதியுடன் போராடியதால் பழிவாங்கப்பட்டார் என்று கூசாமல் பொய் பேசித் திரிகிறார்கள். காவிரிக்கும், பெங்களூருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. காவிரி பிரச்சினை மைசூர், மாண்டியா பகுதி மக்களின் பிரச்சினை மட்டுமே.
ஜெயலலிதா முந்தைய காலம் போல இப்போது இல்லை என்பதும் தவறானது. முதல் ஐந்தாண்டு ஆட்சியிலிருந்து கடந்து போன இந்த பதினைந்து வருடங்களில் அவரிடம் தெரியும் முதிர்ச்சி தனது அடிப்படை குணத்தை மாற்றாமல் அதிகாரத்தில் நிலைத்திருப்பது குறித்த பக்குவ அறிவு தான். அவர் மாறவில்லை. முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்பு என்று அவ்வப்போது அவர் தனது குணத்தை காட்டிக் கொண்டு தான் இருக்கிறார்.
இந்துத்துவ சக்திகள் முதலில் திமுகவை வீழ்த்தி அந்த இடத்தை கைப்பற்ற துடித்துக் கொண்டிருந்தன. ஜெயலலிதா சிக்கியதை அடுத்து இப்போது புதிய கோணத்தில் சிந்திக்கின்றன. தமிழகத்தின் புதிய அரசியல் மாற்றம் பா.ஜ.கவுக்கு உதவும் என்று வெளிப்படையாகவே ஹெச். ராஜா ‘புதிய தலைமுறையில்’ தெரிவித்தது நினைவு கூரத்தக்கது.
கனிமொழி, அ. ராசா வழக்குக்கும் ஜெயலலிதா தண்டனை பெற்ற வழக்குக்கும் அடிப்படை வித்தியாசம் உண்டு. இந்திய ஆளும்வர்க்கத்தின் பெரும் கொள்ளைக்கு உதவும் வகையில் ஏற்கனவே இருந்த இந்திய ஆட்சி நிர்வாகத்தை குறிப்பிட்ட கார்ப்பரேட்களுக்கு சலுகை காட்டியதன் பலனை கொண்டது, முந்தையது. ஜெயலலிதா மீதான வழக்கு ஒரு கார்ப்பரேட் கொள்ளைக்காரியாக தானே வடிவமெடுத்து முழு பங்கையும் சுருட்டிக் கொண்டது.
ஜெயலலிதா பற்றிய சாதகமான பாத்திர ஆய்வை ஒவ்வொரு குற்றவாளிக்கும் வழங்க முடியும். அரசியலுக்கு அவர் வராமலிருந்தால் இந்த சாதகப் பார்வைக்கு பாத்திரமானவராக இருக்க முடியும். மக்களிடம் அவருக்கு மகத்தான அனுதாப அலை பொங்கியிருப்பதாக உடனடியாக சொல்ல முடியாது.
@S. Periyasamy, Every thief has a reason or sympathy. As you’ve said Jaya as female might have been ill-treated by the male dominant society. Some one will now say Karunanidhi as a poor youngster or an OBC was ill-treated by the Brahminic hegemony of his times, this led his family to financial mal practices like the 2G, WILL YOU ACCEPT IT ????
Periyasamy Sir, Please stop such stories and be atomic in your views on corruption. Tell everyone… Is Jays is corrupt ???
YES or NO
வழக்கு ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு தொடர்புடையது.காவிரிநதிநீர் தாவாவை இணைத்தது ஒரு உள ஊனமே.ஏதோ ஜெயாவின் செல்வாக்கை ஒடுக்கிவிட்டால் காவிரி தாவா அவர்கள் பக்கம் சாய்ந்துவிடும் என்று அவர்கள்நம்பினார்கள் என்றால், அது வடிகட்டின முட்டாள்தனம்.காரணம் காவிரி தீர்வுக்கு ஜெயலலிதா எந்த அடிப்படைச் செயலையும் செய்யவில்லை.இந்த தாவா கருணானிதியின் காலத்தில்(1971) ஆரம்பித்தது.அப்பொழுது பல்வேறு பேச்சுவார்த்தைகள்நடந்தும் பலனளிக்கவில்லை.தமிழகம் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.பிரதமர் இந்திரா அவர்கள், தானே முன்னின்று தாவவைத் தீர்த்து விடுகிறேன்” என்று கூறி,”வழக்கைத் திரும்பப் பெறக் கூறியதால், கருணானிதி திரும்பப் பெற்றார்.அதன் பின் இந்திராவுக்கும் கருணானிதிக்கும் 1975 இல் அவசர காலப் பிரகடனத்தில் பகைமை மூண்டதால்,கருணானிதிக்கும் இந்திராவிற்கும் உள்ள உறவு துண்டிக்கப் பட்டது.அதனால் காவிரிநீர் தாவவை, அது தமிழக மக்களின் பிரச்சனையென்று பார்க்காது இந்திர கிடப்பில் போட்டார்.அப்பொழுது கருணானிதியின் அரசியல்? எதிரியான எம்ஜியாரும் இந்திராவும் கை கோர்த்தனர்.இருவருக்கும் கருணானிதி ஒழிப்புதான் தலையானதாக இருந்ததே ஒழிய காவிரிநதிநீர் தாவா அல்ல.இப்படித்தான்நதிநீர் தாவாநீர்த்துப் போனது.அதன் பின் எம்ஜியாரும் எந்த முயற்சியும் செய்யவில்லை.தமிழக காங்கிரசார், எம்ஜியாருடன் தேன்நிலவு கொண்டாடிக் கொண்டிருந்தனர்.எம்ஜியாரின் காலத்தில் காவிரிநதிநீர் தாவாவிற்கு அவர் துரும்பைக் கோடக் கிள்ளிப் போடவில்லை.மனம்நொந்து போன காவிரி விவசாயிகள், உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அதையும் எம்ஜியார் இறக்கும் வரை சட்டை செய்யவில்லை. 1989 இல் ஆட்சிக்கு வந்த கருணானிதி தமிழக அரசையும் கட்சி சேர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதாடினார்.வி.பி. சிங் பிரதமராக இருக்கும் போது,கருணானிதி முதல்வராக இருக்கும் போது காவிரிநீர் தீர்ப்பாயம் 1990 இல் அமைக்கப் பட்டது.தீர்ப்பாயத்தின் தீர்ப்பை கர்னாடகா அமுல் படுத்தாதநிலையில், அதன் பின் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா,வாஜ்பாய் அவர்களுடன் கூட்டணி அமைத்து மைய்ய அரசிலும் பங்கு பெற்றார்.அந்த வாய்ப்பைப் பயன் படுத்தாது,வாஜ்பாய் அவர்களின் காலை வாரியும், அவர் ஆட்சிக் கலைப்புக்குக் காரணமுமாயினார்.அதைத் தொடர்ந்து தமிழகத்தில் தி.மு.க.-பி.ஜே.பி கோட்டணி அமைந்து, மத்தியில் பிஜேபி ஆட்சியில் திமுக பங்கு பெற்றது.அதன் பலனாக காவிரிநதிநீர் ஆணயம் 1999 இல் கருணானிதி முதல்வராகவும், வாஜ்பாய் பிரதமராகவும் இருக்கும் பொழுது அமைக்கப் பட்டது.2001 இல் ஜெயாவின் ஆட்சி.காவிரிநதிநீர் ஆணயத்தின் அண்கு முறையில் தேக்கநிலை.2006 இல் கருணானிதி திரும்பவும் முதல்வர்.2007 இல் கருணானிதி காவிரிநதிநீர் ஆணையத்தின்நிரந்தர ஆணையைப்ப் பெற்றுக் கொடுத்தார்.தமிழகத்துக்கு 57% என்ற ஆணை பெறப் பட்டது.அந்த ஒப்பந்தம் கருணானிதியின் துரோக ஒப்பந்தம் என்றும், காவிரிநதிநீர் ஆணயம் பல்லில்லா ஆணையம் என்றும், அது மதிக்கப் படக் கூடாது என்றும் ஜெயலலிதா கொந்தளித்தார்.அந்த தீர்ப்பு பல்வேறு கர்னாடக அரசு தொடுத்த வழக்காலும், சட்டச் சிக்கலாலும் மைய சட்ட இலாகாவால் அரசு இதளில் வெளியிடப் படவில்லை.இதனிடையில் 2011 இல் மறு படியும் ஜெயாவின் ஆட்சி.எந்தநிரந்தர ஆணையை ஜெயா துரோக ஒப்பந்தம் என்றும், எந்த ஆணையத்தை பல்லில்லா ஆணையம் என்று ஜெயா விமரிசித்தாரோ அந்த ஒப்பந்தத்தை அரசு இதழில் வெளியிட வேண்டும் என்றும் வரிந்து கட்டினார்.காரணம் அந்த ஆணயம் இவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்,சட்டச் சிக்கல்கள் முடிந்தநிலையில் வெளி வந்து விடும் என்றநிலையில்,தாந்தான் எல்லா தீர்வுக்கும் காரணம் என்று காட்டிக் கொள்வதற்காக அந்த துரோக ஒப்பந்தத்தை(அவரின் பார்வையில்) அரசு இதழில் வெளியிட உச்சநீதி மன்றத்தைநாடினார்.இப்படிப் பட்ட ஜெயாதான் காவிரி தந்த கலைச் செல்வியாக்கப் பட்டுள்ளார்.
அருமையான கட்டுரை ,,,, வளரட்டும் உங்கள் அர்பணிப்பு பணி,,,
Please avoid casteist word Pappan-Papathi which resembles Germany s anti Semitic Racist propaganda.The early communists who sacrificed their middle caste comforts and languishing in colonial Indias jails were Comrades P.C Roy,PSR RAO,DANGE,RANA DEVE,Namboodri Pad, ….and the list is long.As other communities do not prefer to be called as ______(Muslims)Paraiyar,Maravan,Chanan. Pls avoid caste and ethnicity in your Essays. Also Iam not Pappan or Pro Pappan
இது முடியாதநிலை.அந்த பொதுவுடமை வாதிகள் ஏன் தங்களது பெயர்களோடு சாதிய அடயாளத்தை இணைத்துக் கொண்டனர்.அதை அவர்கள் துறந்திருக்கலாமே.அந்த பிராமண சாதிய அடயாளங்கள் தங்களை பெருமைப் படுத்துகின்றன என்பதால்தானே.மற்றவர்கள் சாதிய அடையாளங்கள் சிறுமைப் படுத்தப் படுவதால்தான்,அவர்கள் அதைத் துறக்கும்நிலைக்குத் தள்ளப் படுகிறார்கள்.இன்று ஜெயலலிதா தண்டனைக்கு உள்ளாகியிருக்கிறார்.ஆனால் அவர் உயர் சாதி பார்ப்பனராக இருப்பதால், அவரின் சாதி சார்ந்த ஊடகங்கள் அவரைப் புனிதப் படுத்த எல்லா வழியிலும் முயல்கின்றன.இன்று இந்திய குடியரசு அமைப்பில் உள்ள 4 தூண்களிலும்,பெரிய சாதிய லாபி பார்ப்பன லாபிதான்.இன்று பாப்பனர்கள் அல்லாதாரும் பார்ப்பனீய சிந்தனையோடு வாழ்வது அவர்களின் செய்கைக்கு வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.அதன் வெளிப்ப்பாடுதான் இன்று தமிழகத்தில் ஜெயாவிற்க்கு ஆதரவான போராட்டஙளும் பிரச்சாரஙளும்.
I wanted to know the real backround of this issue.Thanks for vinavu for giving such a correct information (Nadunilai)
இதில் நடக்கப்போகும் நாடகங்கள் இன்னும் இருக்கிறது.பொறுத்திருந்து பாருங்கள் மோடி வித்தையை!!
visvanath had exposed modi’s participation in this judgement.wait and see the supreme courts result begining from bail for miss Jaya madam. then who is behind???
1. ‘கருணாநிதி & மோடியின்’ கூடு சதி உள்ளது-கிருஷ்ணன் !
2. தீர்ப்பு சொல்லும் செய்தி: இதுவரை அரசியல் வாதிகள் யாரும் ஊழலே செய்யவில்லை என்பதே. சிவில் வழக்கில் இது கொஞசம் ஓவெர் அடாவடி. 176000 கோடி என்னவாயிற்றுஸ்-சிவா
இவர்களுக்கு என்ன ஆயிற்று? அம்மையாரின் சொத்துக்கள் (கண்டறியப்பட்டவை மட்டும்)நியாயமாக சம்பாதிக்கபட்டவை தான் என் கிறாரா? அல்லது கருணானிதியின் 1,76,000 கோடி (கற்பனைக்கு அவ்வளவுதான் எட்டியது?) ஊழல் விசாரித்து தண்டனை அளித்த பிறகுதான் பாப்பாத்தியம்மாளை தண்டிக்கவேண்டும் என் கிறாரா?
18 வருடங்களும், 90 நீதிஅரசர்களின் பொன்னான நேரமும் ஆயிரகண்க்கான வாய்தாக்களால் வீணடிக்கப்பட்டதும், தான் சொல்பவர்தான் விசாரிக்க வேண்டும், குற்றம் சுமத்தும் அரசு தரப்புக்கும் , தான் சொல்கிறவர்தான் வழக்குரைஞராக இருக்கவேண்டும் என்றெல்லாம் உச்சனீதிமன்றம் வரை சென்று திசைதிருப்புதல் செய்யப்பட்ட வழக்கில் இப்போதாவது தீர்ப்பு வழங்கப்பட்டதே! அதை வரவேற்க வேண்டாமா! 100 கோடி ரூபா அபராதம் அதிகம் என கூப்பாடு போடுகின்றனர்; கணக்கில் வராத 56.5 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டபின் எஞ்சியுள்ள 43.5 கோடிதான் உண்மையான அபராதம் ஆகும்!
லல்லு முதலியவர்கள் தண்டிக்கபடும்போது கெக்கலி செய்த அம்பிகள், அதே மெளறையில் அம்மையார் தண்டிக்கப்படும்போது ஒப்பாரி வைப்பது ஏன்?
சட்டத்தையும் மதிப்பதில்லை, தர்மத்தையும் கடைபிடிப்பதில்லை (அவா தர்மம் கொள்ளையடிப்பது தானோ?) வன்முறையையும் , அதிகார துஷ்பிரயோகத்தாலுமே பிழைக்க இன்னும் எத்தனை நாட் கள் தான் முடியும்? எத்தனை காலம்தான் ஏமாறுவார் இந்தநாட்டிலே?
கட்டுரை மீதான எனது மேலான கருத்து பின்பு. இப்போது ஜெ தரப்புக்கு ஆதரவாக நெறைய யோசிச்சு கண்டு பிடிச்ச ஒரு லா பாயிண்ட்.
இன்னாரிடமிருந்து லஞ்சம் வாங்கினார் என நிரூபிக்கப் படவில்லை. பொத்தாம் பொதுவாக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தார் என்பது தான் வழக்கு. பணம் என்பது பகுத்தறிவு ஒப்புக்கொள்ளும் வகைகளில் தான் கிடைக்க வேண்டும் என்பது அவசியமில்லை. வீட்டில் குபேர பூஜை செய்த போது தங்கக் காசு கொட்டியதாக வாதாடலாம். இதை நீதிமன்றம் ஏற்க மறுத்தால் மத நம்பிக்கை, ஆர்டிகிள் 25, மத சுதந்திரம் என்ற ரீதியில் வழக்கை நகர்த்தலாம். உச்சநீதிமன்ற முழு அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டும் எனலாம். பின்பு, ராமர் பாலம் போல, இதை மொத்தமாக ஒரு மத ரீதியான விஷயமாக மாற்றி விடலாம். மற்றதை ஆர் எஸ் எஸ் வகையாறாக்கள் பார்துக்க் கொள்வார்கள்.