Thursday, September 28, 2023
முகப்புஇதரEnglishஅதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு

அதிமுக வன்முறை, தமிழக அரசு மீது வழக்கு

-

மனித உரிமைப் பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
50/103, ஆர்மேனியன் தெரு, பாரிஸ், சென்னை – 01.

சு. ஜிம்ராஜ் மில்ட்டன்
செயலாளர், சென்னைக் கிளை.
தொலைபேசி – 98428 12062

பத்திரிகை செய்தி,

தமிழகத்தில் இயல்பு நிலை திரும்ப வைக்கக் கோரி பொதுநல வழக்கு தாக்கல்:

கடந்த 27.09.2014 அன்று, முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பு வெளியானவுடன் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சிக்காரர்கள் தமிழகத்தையே ஸ்தம்பிக்க வைக்கும் அளவில் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இன்றுகூட இயல்பு நிலை திரும்பவில்லை. தமிழக போலீசோ இக்கலவரத்தை கட்டுப்படுத்துவற்கு பதிலாக வேடிக்கை பார்த்தனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக கடைகளை அடைப்பதையும், பொதுமக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதிலும் குறியாக இருந்தனர்.

பொதுமக்களின் பாதுகாப்பான நடமாட்டத்திற்கும் மற்றும் வியாபாரிகளின் கடைகள் மற்றும் அலுவலகங்களை திறப்பதற்கும் பாதுகாப்பு அளித்து இயல்பு நிலைக்கு திரும்ப மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், காவல்துறை தலைமை இயக்குனர் சட்ட ஒழுங்கு பிரச்சனை குறித்த அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், பொது அமைதிக்கு தேவையான காவல்படைகளை பணியில் அமர்த்த வேண்டுமெனவும் இப் பொதுநல வழக்கில் கோரப்பட்டது.

இவ்வழக்கு அவசரமான தேவை என்பதால் விடுமுறை நாளான இன்று (ஞாயிறு கிழமை செப்டம்பர் 28, 2014) மதியம் 1.30-க்கு நீதிபதி ச.வைத்தியநாதன் மற்றும் நீதிபதி கே.மாகாதேவன் அடங்கிய சிறப்பு அமர்வால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பாக வாதிட்ட வழக்கறிஞர் G புருசோத்தமன் அரசியலமைப்பில் ஒரு வெற்றிடமும், அறிவிக்கப்படாத பந்த் போன்ற நிலைமையும் இருப்பதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அரசாங்கம் செயலற்ற நிலையில், சட்ட ஒழுங்கை நிலைநாட்ட நீதிமன்றம் தலையிட வேண்டுமெனவும் வாதிட்டார்.

அரசு தலைமை வழக்குரைஞர்,  கட்சியின் தலைமையில் உள்ளவர்கள் கைதாகும்போது இதுபோல உணர்ச்சி மயமான போராட்டத்தை தமிழகம் ஏற்கனவே சந்தித்துள்ளது என்றாலும் தற்போது அமைதி நிலை திரும்பியுள்ளது என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சட்ட ஒழுங்கு நிலைமை குறித்த அறிக்கையை காவல்துறை தலைமை இயக்குனர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும், வழக்கை 06.10.2014 அன்று பட்டியலிடவும் உத்தரவிட்டனர்.

இப்படிக்கு,
சு.ஜிம்ராஜ் மில்ட்டன்

தமிழகமெங்கும் அ.தி.மு.க ரவுடிகள் நடத்திய வன்முறை வெறியாட்டம், பேருந்து எரிப்பு உள்ளிட்ட நாசவேலைகள் குறித்த பத்திரிகை செய்திகள் (தொகுப்பு : மனித உரிமை பாதுகாப்பு மையம், சென்னை)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திருச்சியில் அதிமுக கும்பலின் கலவரத்துக்கு குடை பிடித்த காவல்துறை குறித்து மக்கள் கலை இலக்கியக் கழகம் திருச்சி அனுப்பிய செய்தி

கலவரங்களை அந்தந்த பகுதி செயலாளர்கள் அவர் அவர் பகுதியில் முன்னின்று நடத்தினர்.

அ.தி.மு.க முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரான், மறைந்த அ.தி.மு.க சட்ட மன்ற உறுப்பினர் மரியம் பிச்சையின் மகன். மரியம் பிச்சையின் மறைவிற்கு பிறகு திருச்சி மாநகர மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் பாலியல் புகார்களில் சிக்கி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இவர் 300-க்கும் மேற்பட்ட அதிமுக ரவுடிகளை அழைத்துக்கொண்டு பாலக்கரை, மலைக்கோட்டை, சத்திரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் கலவரம் செய்தார். அனைத்து கடைகளையும் மூடச்சொல்லி மிரட்டிக் கொண்டும், கண்ணில் தென்படும் பொருட்களை அடித்து நொறுக்கிக் கொண்டே சென்றனர். சில இடங்களில்  மட்டும் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர், தடியடி நடத்தி களைத்தனர்.

இறுதியாக சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தை அடித்து நொறுக்கச் சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கேயே மறியலில் ஈடுபட்டனர். பேருந்துகள் முழுவதுமாக ஓடாததாலும், கடைகள் எதுவும் இல்லாததாலும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

செய்தி:
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
திருச்சி பகுதி.

 

மனித உரிமை பாதுகாப்பு மையம் பத்திரிகை செய்தி ஆங்கிலத்தில்

HUMAN RIGHTS PROTECTION CENTRE-TN
50, Armenian Street, Parrys, Chennai – 01.

 S Jim Raj Milton Phone : 98428 12062
Secretary-Chennai wing

Press Release

PIL filed to restore Normalcy in Tamil Nadu

On 27.9.2014, the present Chief Minister of Tamil Nadu, J.Jayalalitha has been found guilty and awarded imprisonment for 4 years on a Charge under Prevention of Corruption Act for the Disproportionate Assets by the designated special Court at Bangalore.

Immediately after the pronouncement of the judgment, party men belonging to All India Anna Dravida Munnetra Kazhagam,(AIADMK), indulged in atrocities and massive violence erupted all over Tamilnadu yesterday. Even today normalcy is not restored. Tamil Nadu police was mere spectator of above said incident. It is like a lawless State.

Hence, to restore law and order, Public safety and tranquility Human Rights Protection Center moved a PIL to restore normalcy in the state and police protection to the peace full transportation and running shops and offices. It seeks court should direct the DGP to file a report regarding law and order situation and deploy adequate police protection to ensure public safety.

The matter was taken up as urgent hearing by by vacation Bench consist of Justice S Vaidhyanathan and Justice K Mahadevan today (Sunday September 28, 2014)

Reg.
S Jim Raj Milton

 

  1. செத்ததுக்கு வா என்றால், பங்காளி எட்டுக்கு வந்தானாம்!நீதி அரசர்கள் உடனடி கண்கானிப்புநடவடிக்கை எதுவும் எடுக்காமல், வழிகாட்டு அறிவுறுத்தல் கூட இல்லாமல், வெறும் அரசு அறிக்கை மட்டும் கேட்டு 08-10-2014க்கு ஒத்தி வைத்திருப்பது ஏமாற்றம் தான்! ஒட்டக்கூத்தன் பாட்டிற்கு ரெட்டை தாழ்ப்பாள் கதையாக, உயர்னீதிமன்றமும், ஆளுனரும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கண்காணிக்கும்போதே, சென்னை மானகர ஏவல்துறை, அராஜகம் செய்யும் அ தி மு க ரவுடி களை விடுத்து, பாதிக்கப்பட்ட திமுக தொண்டர்கள், கருனானிதி, ஸ்டாலின் மேலும் வழக்கு போட்டிருப்பதாக செய்தி! வன்முறையாளர்கள் யார்மீதும் வழக்கில்லை! ஓய்வு பெற்ற உயரதிகளை பதவிநீட்டிப்பு செய்வது இதற்குத்தானோ?

  2. பாசிச ஜெயா போகிற போக்கில் கொண்டுவந்த திருத்தங்களுடனான குண்டர் தடுப்புச்சட்டம் வன்முறையில் ஈடுபட்டுவரும் அ.தி.மு.க காலிகளை ஒடுக்கப் பயன்படவில்லை என்றால் வேறு எதற்கு பயன்படப்போகிறது? குண்டி துடைக்கவா?

  3. தமிழக அரசு மீது வழக்கு தொடுத்த தோழர்களுக்கு எனது வாழ்த்துக்கள் அனா திராவிடம் திராவிடம்னு பேசுர கருணாநிதியும் அவர் மகன் இசுடாலினும் எந்த ஆணியை புடுங்கி கொண்டிருந்தார்கள் அவர்கள் படங்களை செருப்பால் அடிக்கும் வரை என்பதுதான் புதிர் ஒரு வேளை நாளை நமது ஆட்சி வந்தால் எப்படி கொள்ளையை நிருபுவது சாரி அதாவது கொள்கையை நிறுபுவது என்று யோசித்து கொன்டிரிப்பார்களோ என்னவோ தெரியல ஆம் நடக்கட்டும்……….

  4. பேய் அரசாண்டால், பிணந்தின்னும் சாத்திரங்கள் என்பார்களே, அது இதற்குத்தான் பொருத்தம்! எலக்ஷ்னின்போது 144 போட்டவர்கள், இப்போது விஒலின் வாசிக்கிரார்கள்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க