Thursday, January 16, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா கைது : அடிமைகள் ஆட்டம் - கார்ட்டூன்கள்

அம்மா கைது : அடிமைகள் ஆட்டம் – கார்ட்டூன்கள்

-

3

21

45

6

படங்கள் : ஓவியர் முகிலன்

  1. சொத்துக் குவிப்பு குற்றவாளி அதிமுக தலைவர் ஜெயா முகநூல் செய்திகள் சில…

    இரா.இளஞ்செழியன் ஆதித்தமிழர்பேரவை நெல்லை மாவட்டம்
    தமிழின உறவுகளே:- பரமக்குடி காவல்நிலையத்தில் கடந்த கால ஜெயலலிதா ஆட்சியில் காவல்துறை மிருகங்களால் கருப்பி என்ற பெண் கொடூரமான முறையில் பாலியல் வண்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்டு கொல்லப்பட்டாள்.பல்வேறு இயக்கங்களின் போராட்டங்களுக்கு சட்ட மன்றத்தில் அதற்கு பதிலளித்த ஜெயலலிதா ,கருப்பி என்ற அப்பாவி பெண் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்த ஒரு காரணத்திற்காக,மனித நேயமற்ற முறையில் தன்னைப் போல் பெண் என்று கூட பார்க்காமல் கருப்பியை நடத்தை கெட்டவள் என்று கூறினார். ஆனால் இன்று தமிழக மக்களின் வரிப்பணத்தை கூட்டாக சேர்ந்து கொள்ளையடித்து சொத்து சேர்த்த வழக்கில் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டப்பட்டு குற்றாவளியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.தற்போது புரிந்திருக்கும் அம்மையாருக்கும்,தமிழக மக்களுக்கும் நடத்தை கெட்டவள் யாரென்று ?

    லாவண்யா ராமன்
    ஜெயலலிதாவை ஆதரிக்கும் அந்த ஃபாசிச சிந்தனை சொல்லும்
    நியாயம் என்ன..?
    மற்றவர்களுக்கு சில “நன்மைகள்“ செய்தால் போதும்..,
    அந்த “நன்மைகளை“ஊதிப்பெருக்கி விளம்பரம் செய்து
    “தன்னை“ சிறந்தவன் ,அற்புதமானவன் என நியாயப்படுத்தி
    நிலைத்துக்கொள்ளச்செய்யலாம் “என அந்த ஃபாசிச உளவியல்
    சிந்தனை கூறுகிறது..
    அப்படி யான ஜெயா வின் “நன்மைகள்“என்ன..?
    1..மாணவர்களுக்கு மடிக்கணினி கொடுத்தது..
    2.இலவச ஆடு,மாடுகள் கொடுத்தது..
    3.இலவச ஃபேன்,மிக்ஸி,கிரைண்டர் கொடுத்தது..
    4..முதியோர் உதவித்தொகைகள் ஆயிரம் ரூபாயாக
    உயர்த்தியது..
    5.திருமண உதவித்தொகை 50,000/ரூபாயாக உயர்த்தியது..
    6.கர்ப்பிணி உதவித்தொகை 12,000/ருபாயாக உயர்த்தியது..
    7.மாணவர்களுக்கு இலவச சைக்கிள் ,கல்வி உதவித்தொகைகள் சீருடைகள் ,சத்துணவுகள் வழங்கியது..
    8. அம்மா உணவகம்,அம்மா குடிநீர்,அம்மா மருந்தகம்
    என “அம்மா விளம்பரங்கள்“செய்ய்யும் வணிகங்கள்
    துவக்கியது..
    9.அம்மா திட்ட முகாம்கள் நடத்தியது..
    10.பசுமை வீடுகள் உள்பட பல திட்டங்கள் துவக்கியது..“
    “இப்படியான“நியாயங்களை“ கற்பித்துக் கொள்வதன் மூலம்
    அந்த ஃபாசிச சிந்தனை ,ஒரு பரவசக் கிளர்ச்சியை
    ஏற்படுத்தி சர்வாதிகாரப் போக்கிற்கு தலைவணங்கச் செய்கிறது..
    “நானே எல்லாம்“.,“நானே தீயதும், நானே நல்லதும்“
    நானே அனைத்துமாகி உன்னைக் காப்பேன்..என்னை
    அடிபணிந்து வணங்குவது உனது கடமை“என்ற பகவத் கீதையின் கிருஷ்ணன் கூறும் “பரம்பொருள்“ சர்வாதிகாரத்
    தன்மை போல ,குரானில்,பைபிளில் சொல்லப்படும்
    “ஒரே“ஆதிக்கத்தன்மைக் கொண்ட இறைத் தன்மையைப்
    போல ,ஒரு எதிர்க் கேள்வி யற்ற சர்வாதிகார மனஓட்டத்தை
    ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உருவாக்குகிறது..
    அதனாலேதான், நிதியமைச்சராக ஓ.பன்னீர்செல்வம்
    இருந்தாலும், டெல்லி செல்லும் எம்பி யாக இருந்தாலும்,
    ஜெயாவின் காலில் விழவைக்கிறது..ஜெயா பறந்து வரும்
    ஹெலிகாப்டரையும் கும்பிட வைக்கிறது..
    ஜெயா வந்து இறங்கும் கார் டயரைக்கூட வணங்க வைக்கிறது..

    இந்த சர்வாதிகாரத்தன்மை கொண்ட சிந்தனைப் போக்கு
    சாதித்தது என்ன..?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க