Tuesday, July 7, 2020
முகப்பு உலகம் அமெரிக்கா நியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?

நியூயார்க் டைம்ஸ் கேலிச்சித்திரத்தில் என்னடா தவறு ?

-

new york times buildingசெவ்வாய் கிரகத்திற்கு இந்தியா அனுப்பிய செயற்கை கோள் மங்கள்யான் குறித்து நினைவிருக்கலாம். இல்லை நினைவில் இருந்தே ஆக வேண்டும் என இந்திய ஊடகங்கள், இந்துமதவெறியர்கள் இதை மாபெரும் தேசிய சாதனையாக கருத்துப் பரப்பலில் திணித்திருந்தார்கள்.

மங்கள்யான் குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை ஒரு கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது. அந்த சித்திரத்தில் எலைட் ஸ்பேஸ் கிளப் (பணக்கார நாடுகளுக்கான விண்வெளி கழகம்) என்ற பெயரிட்ட அறையில் இரண்டு நவநாகரீக வெள்ளையின கனவான்கள் செய்தித்தாள் படிக்கிறார்கள். அந்த நாளிதழில் செவ்வாய்க்கு அனுப்பும் இந்திய திட்டம் எனும் தலைப்புச் செய்தி இருக்கிறது. அறையின் வெளியே ஒரு இந்திய விவசாயி மாட்டை கையில் பிடித்தபடி கதவை தட்டுகிறார். இதுதான் கேலிச்சித்திரம் கூறும் பொருள்.

செப்டம்பர் 28-ம் தேதி இதழில் இது வெளியானது. சிங்கப்பூரை சேர்ந்த ஹெங் கிம் சாங் என்ற ஓவியர் வரைந்த இந்த கேலிச்சித்திரத்திற்கு இனிமேல் விண்வெளி பயணங்கள் பணக்கார நாடுகளுக்கு மட்டுமல்ல ஏழை நாடுகளுக்கும் சாத்தியம் என்பதை சுட்டிக்காட்டுவதாகவே நியூயார்க் டைம்ஸ் கூறுகிறது. உண்மையும் அதுதான். அதாவது கொஞ்சமாவது  கார்ட்டூன்களை ரசிக்கும் அறிவு இருக்கும் எவரும் இந்த உண்மையை புரிந்து கொள்ளலாம்.

ny-times-cartoonஆனால் அமெரிக்காவிற்கு சென்று வாக்கப்பட்ட பல அம்பிகளுக்கு இந்த பொருள் புரியவில்லை. புரியவில்லை என்பதை விட பழைய பணக்காரர்கள் முன்னால் ஒரு புதுப் பணக்காரனுக்கு ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அல்லது தனது நாட்டில் உள்ள ஏழைகள் மீதான வன்மம் இரண்டும் சேர்ந்து இந்த கேலிச்சித்திரத்தை எதிர்க்க வைத்திருக்கிறது.

அதை சாமர்த்தியமாக கேலிச்சித்திரத்தில் நிறவெறி இருப்பதாகவும், அதன் மூலம் நாடுகளுக்கிடையில் பிளவு ஏற்படுத்த முயல்வதாகவும் கூறி இந்திய அம்பிகள் மற்றும் அம்பிகளாக மாறும் பயணத்தில் உள்ள தம்பிகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக அப்பத்திரிகையின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு நிலைச்செய்தியின் மறுமொழிகளுக்கான இடத்தில் கூட்டமாக படையெடுத்து எதிர்ப்பை காட்டியுள்ளனர். அதிலும் மலையாள மொழியில் ஏகப்பட்ட கண்டனங்கள் குவிந்தன.

ஆக அம்பிகளாகும் இலட்சியப் பயணத்தில் மலையாள ஃபாரின் சேட்டன்கள் முன்னணி வகிக்கின்றனர். தமிழோடு நெருக்கமான பிணைப்பில் உள்ள மலையாளம், சம்ஸ்கிருதமயமாகி தனித்துவத்தை இழந்தது போல மலையாள தேசமும், இந்துத்துவம் முன்வைக்கும் போலி தேசியப் பெருமிதத்தின் பரவசத்தில் உண்மைகளை பார்க்க மறுக்கிறது.

நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்
ஆண்ட்ரூ ரோசன்தால் – நியூயார்க் டைம்ஸ் ஆசிரியர்

எது எப்படியோ அம்பிகளின் படையெடுப்பிற்கு பின்னர் நியூயார்க் பத்திரிகையின் தலையங்கப் பக்கத்திற்கான ஆசிரியர் ஆண்ட்ரூ ரோசன்தால் தனது முகநூல் பக்கத்தில் இதற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார். பல வாசகர்களிடமிருந்து கண்டனங்கள் வரவே இந்த மன்னிப்பை கேட்பதவாகவும், ஓவியர் ஹெங் சர்வதேச விவகாரங்களை, வாசகர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில் வரைவதில் வல்லவர் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இருப்பினும் அம்பிகளுக்கு இது புரியாது என்பதால் அவர் தெரிவு செய்த ஓவியத்தால் புண்பட்ட வாசகர்களிடம் பத்திரிகை மன்னிப்பு கோருவதாகவும் தெரிவித்திருக்கிறார். மற்றபடி ஓவியம் இந்தியா, அதன் மக்கள், அரசு ஆகியவற்றை தவறாக சித்தரிக்கவில்லை என்றும் விளக்கமளித்துள்ளார். அதாவது ஓவியம் தவறாக யாரையும் புண்படுத்தவில்லை என்றாலும் புண்படுத்தியதாக உணரும் முட்டாள்களிடம் மன்னிப்பு கேட்பதால் இந்த மன்னிப்பு உண்மையில் மன்னிப்பு அல்ல எனவும் கூறலாம்.

கேலிச்சித்திரத்தில் வட இந்திய விவசாயி போல உடையணிந்து தலைப்பாகை அணிந்திருக்கிறார் அந்த விவசாயி. சமீபத்திய இந்திய வளர்ச்சி பற்றி அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை என்று ட்விட்டரில் சிலர் கூறியிருக்கின்றனர். அதுவும் மோடி அமெரிக்காவில் இருக்கையில் இந்தப் படம் வெளியானது அவமானம் என்கிறார்கள் சிலர். இந்தியாவில் ஒரு விவசாயி இப்படித்தான் இருப்பார், இதுவே இந்தியாவின் தேசிய அடையாளம் என்பதையே இந்த அம்பிகள் ஏற்கவில்லை. ஏற்காததோடு அந்த உண்மையை அருவெறுப்பாகவும், இழிவாகவும் வன்மத்துடனும் பார்க்கிறார்கள்.

இந்தியா கிராமப்புறங்கள் நிறைந்த நாடு, விவசாயத்தை முதன்மையாக கொண்ட நாடு என்று ஒன்றாம் வகுப்பு முதல், முனைவர் ஆய்வு வரை உருப்போட்ட ஜென்மங்களுக்கு அதை ஒரு ஓவியத்தில் இந்தியாவின் வகை மாதிரியாக பார்க்கும் போது கோபம் வந்தால் என்ன பொருள்? இந்திய விவசாயிகளை இவர்கள் எவ்வளவு இழிவாகவும், மட்டமாகவும் பார்க்கிறார்கள் என்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. ஒருவேளை காந்தி படத்தை போடுவதாக இருந்தால் கூட கோட்டு சூட்டு போட்டுத்தான் வெளியிடவேண்டும் என்று இவர்கள் கேட்டாலும் கேட்க கூடும்.

காந்திய பக்தர்களே அப்படித்தான் கோட்டு சூட்டு போட்டு கல்யாணம் செய்யும் போது கோட்டு சூட்டு ஊரில் பிழைக்க போன அம்பிகள் வேட்டி, சட்டை, தலைப்பாகையை மட்டமாக பார்க்கத்தான் செய்வார்கள். இதில் சேப்பாக்கம் கிரிக்கெட் கிளப்பில் வேட்டி அணிந்த நீதிபதியை விட மறுத்த மேட்டுக்குடி வன்மமும் பொருத்தமாக இணைந்திருக்கிறது.

சிங்கப்பூரைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஹெங் கிம் சாங்
சிங்கப்பூரைச் சேர்ந்த கேலிச்சித்திர ஓவியர் ஹெங் கிம் சாங்

இந்தியா என்றால் அங்கே இருக்கும் ஏழைகள், தொழிலாளிகள், விவசாயிகள், தாழ்த்தப்பட்ட மக்கள் போன்றோர்தான் உண்மையான பிரதிநிதிகள் என்பதை மறுத்து ஷாப்பிங் மால்கள், மல்டி பிளக்ஸ் திரையரங்குகள், நவநாகரீக உடைகள், உணவகங்கள், நட்சத்திர விடுதிகள் இதர ஆடம்பரங்களத்தான் இவர்கள் ரோல் மாடல் காட்சிகளாக பார்க்கிறார்கள்.

மெரினா கடற்கரைக்கு காலை நடை வரும் கார் மனிதர்களுக்கு நொச்சிக் குப்பம் மீனவர்கள் அழுக்குருண்டைகளாக தெரிவது போல அமெரிக்க அம்பிகளுக்கும் தோன்றுவதில் ஆச்சரியமில்லை. பார்ப்பனியம் போற்றும் இந்திய ஞான மரபின் உள்ளொளிகளை விதந்தோதும் எழுத்தாளர் ஜெயமோகனும் கூட கேரள மீனவர்களை இத்தகைய குப்பை கூட மனிதர்களாகத்தான் அறம் பாடியிருக்கிறார். எழுத்தாளருக்கே இப்படி என்றால் அவர் வரிகளை படிக்கும் அமெரிக்க அம்பிகளுக்கு இந்திய ஏழைகள் மீது எவ்வளவு எகத்தாளம் இருக்கும்?

படத்தில் உள்ள நவநாகரீக வெள்ளையர்கள் மாடு மேய்க்கும் நாடெல்லாம் விண்வெளி ஆய்வுக்குள் வந்து விட்டால் என்ன செய்வது என்று இனவெறியை வெளிப்படுத்துகிறார்கள் என சிலர் விளக்கமளிக்க கூடும். அப்படிப் பார்த்தாலும் அது மேற்குலகின் மேல் உள்ள விமரிசனமாகத்தான் ஓவியர் வரைந்திருக்கிறாரே அன்றி அதில் இந்தியாவை இழிவு படுத்துவது எது? இப்படி பார்த்தால் சார்லி சாப்ளின் படங்களில் வரும் காட்சிகளில் ஏழைகள், வேலையற்ற இளஞர்கள், உதிரிகள் இழிவு படுத்தப்படுவதாக ஒருவர் கூறலாமே? உண்மையில் சாப்ளின் இத்தகைய எளிய மனிதர்களை அலைக்கழிக்கும் மேட்டுக்குடியினரைத்தானே கேலி செய்கிறார்?

இது புரியாதவனெல்லாம் அமெரிக்கா போய் என்ன கிழிக்கிறான் என்றே தெரியவில்லை.

முகநூலில் மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது. அச்சிடும் இதழிலும் மன்னிப்பு வெளியாக வேண்டும் என்கிறார் ஒரு முகநூல் அம்பி. நாசாவில் பணியாற்றுபவர்களே பலரும் இந்திய விஞ்ஞானிகள் தான் என்று அந்த பத்திரிகைக்கு தெரியுமா என்று கேள்வி எழுப்புகிறார் இன்னொருவர். பத்திரிகையின் இணைய பக்கத்தில் இருந்து அந்த கேலிச்சித்திரத்தை நீக்கும்படி பல முகநூல் பயன்பாட்டாளர்கள் இன்னமும் கோரி வருகின்றனர். நாங்கள் இன்னமும் மாடு மேய்த்துக் கொண்டிருக்கவில்லை என்று சிலர் எழுதியிருக்கின்றனர். சிலர் மாட்டுடன் செவ்வாய் பயணத்துக்கு தயாராக இருப்பதாக மாட்டுடன் தங்களது புகைப்படத்தைப் போட்டுள்ளனர். சரண்யா ஹரிதாஸ் என்ற பிளாக்கர் ‘எந்த ஐஎஸ்ஆர்ஓ விஞ்ஞானியும் இந்த விவசாயி போல டர்பன் உடை அணியவில்லை’ என்று காட்டாமாக வேறு சொல்லியிருக்கிறார்.

இதெல்லாம் சேம் சைடு கோல் என்று கூட இந்த என்ஆர்ஐ மோகத்திலுள்ள அம்பிகளுக்கு புரியவில்லை.

அமெரிக்கா நம்மை இழிவுபடுத்துகிறது என்றால் அந்த கோபம் போபால் விபத்தில் வந்திருக்க வேண்டும். அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திடும் போது எதிர்த்திருக்க வேண்டும். ஈராக்கையும், ஆப்கானையும் குதறியிருக்கும் போது பேசியிருக்க வேண்டும். அப்போதெல்லாம் மேல் கீழ் வாய்களை மூடிக் கொண்டு இப்போது ஒரு விவசாயியின் உடையை பார்த்து வன்மத்துடன் கத்தினால் இவர்களை என்னவென்று அழைப்பது?

இந்த கார்ட்டூனில் இனவெறி இருப்பதாக பம்மாத்து காட்டுபவர்களுக்கு  இந்தியாதான் தீண்டாமையின் தலைநகரம் என்ற உண்மை தெரியுமா? அது கயர்லாஞ்சியாக, திண்ணியமாக, கொடியன்குளமாக, பரமக்குடியாக அவ்வப்போது வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாமல் இனவெறி இருப்பதாக சொல்லி ஒரு அமெரிக்க பத்திரிக்கையை மன்னிப்பு கேட்க சொல்கிறார்கள் என்றால், அதுதான் காலந்தோறும் பார்ப்பனியம்!

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. கார்ட்டூன்ல எந்த தப்பும் இல்ல. இங்க இருக்கிறவங்களோட தாழ்வு மனப்பான்மையின் வெளிப்பாடு தான் இது (லீனா கவிதைக்கு(?) நீங்க குதிச்ச மாதிரி… 😉

 2. நியூயார்க் டைம்ஸ்
  கேலிச்சித்திரத்தில்
  என்னடா தவறு ////

  ஒரு தவறும் இல்லேடா.

 3. அமெரிக்காக்காரன், அம்பி இருவரையும் குறை கூறியே பதிவிடுவோம். இவர்களில் ஒருவரையாவது தாழ்த்திப் பேச வேண்டும் என்றால் அம்பியைக் கேலி செய்வோம்.

 4. அமெரிக்காக்காரன் நம்மாளுவள படுக்கையறை வரை வந்து நோட்டமிட்டாலும் அதுக்கு தத்துவவிசாரமெல்லாம் குடுப்பாணுவ இந்த அம்பிகள். ஒரு கோக்கு குடிப்பதற்காக தாமிரபரணி ஆற்றையே காலி பண்ணுனாலும் கண்டுக்கமாட்டாணுவ. ஆனா ஒரு உண்மைய சொன்னதுக்கு ரொம்ப தான் சீனு போடுரானுவ. என்னக் கேட்டா அந்த கார்டூணுல உள்ள விவசாயிக்கு கோவணத்த மட்டும் போட்டு இருக்கணும். எங்க தாத்தா இன்னும் ஊருல கோவணத்த கட்டிக்கிட்டு தான் விவசாயம் பண்றாரு. மாடு மேய்க்கிராறு. இந்தியாவுல உள்ள விவசாயிக்க எல்லாம் கொட்டு சூட்டு போட்டா விவசாயம் பண்றாங்க?
  விவசாயிகளுக்கு மானியத்த அமெரிக்காக்காரன் வெட்ட சொன்ன அத பல்ல இளிச்சிக்கிட்டு வளர்சிங்குறான், கரென்ட இலவசமா குடுக்க கூடாதுனா அதையும் வளர்சிங்குறான். மலைய குடையுறான், காட்ட அளிக்கறான் அதுக்கெல்லாம் கோபப்பதாத அம்பிகளும் அவர்களோட தும்பிகளும் தம்மாதுண்டு சட்டிளைடுக்கு வரிஞ்சுகட்டிட்டு வரான்ன…என்னமோ போங்க.

  ஆனா, இந்த படத்த மட்டும் கொண்டு பொய் எங்க தாத்தாகிட்ட காமிச்சென்னு வைங்க அவரு ரொம்ப மகிழ்ச்சியடைவார். ஹ்ம்ம்

 5. நீயே ஏழை உனக்கு எதுக்கு இந்த விண்வெளி ஆராய்ச்சி?

  நீயே ஏழை உன் மகனுக்கு எதுக்கு படிப்பு ?

  நீயே ஏழை உனக்கு எதுக்கு செருப்பு ?

  என்கின்ற சாதி வெறியாகதான் எனக்கு தெரிந்தது

  • இராமன்,

   தாங்கள் அவ்வாறு கருதுவதில் பிரச்சினை ஒன்றும் இல்லை. இது அவரவர் கருத்து சுதந்திரம் என்று கூட ஒருவர் வாதிட கூடும். அதுவல்ல பிரச்சினை. நாட்டின் ஆக முக்கியமான பிரச்சினைகள் எதிலும் இப்படி கூப்பாடு போடாத இந்த படித்த மேதாவிகள் இதுக்கு ஏன் இப்படி வரிஞ்சி கட்டிக்கிட்டு வராங்க என்பது தான் கட்டுரை எழுப்பும் கேள்வி. நாம் தலைகுனிவு அடையும் ஏராளமான கொடுமைகள் அனுதினமும் அரங்கேறும் இந்த பாரதத் திருநாட்டில் அதைக் கண்டு சிறிதும் பொங்காத இந்த அறிவுசீவிகள் இப்போது எதற்கு பொங்குகிறார்கள்.

   ஒரு கோக்கு புட்டிக்காக தாமிரபரணி ஆறு காணாமல் போன போதும் பிளாச்சிமாடா வற்றிப் போனபோதும் துடிக்காத இதயங்கள் தற்போது துடிப்பது ஏன்? ஏன்? அவ்வளவு தான் . மற்றபடி அந்த கார்டூனை எப்படி வேண்டுமென்றாலும் உருவகப்படுத்த தங்களுக்கு கருத்துரிமை உள்ளது என்பதை நான் மதிக்கிறேன்.

   நன்றி.

   • பிரச்சினைகள் அநீதிகள் உலகம் முழுவதும் உள்ளது .

    எத்தகைய தருணத்தில் , என்ன மனவோட்டத்தில் நையாண்டி செய்யப்பட்டுள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் . இந்தியாவில் கற்பழிப்புகளை சுட்டி காட்டியபோது , அப்படி செய்யாதே என்று எதிர்ப்பு தெரிவித்தார்களா ?

    ஒருவன் கடும் உழைப்பை சிந்தி சாதிக்கும் போது அதை பாராட்டலாம் ஆனால் நையாண்டி செய்யகூடாது .

    அடுத்து கருணாநிதியின் குற்றங்களை பேசினால் உடனே அவர் ஜெ ஜெ ஆதரவாளர் என்று முத்திரை குத்த தேவை இல்லை. அதே போலதான் இந்தியாவில் நடக்கும் ஊழல்களையும் எதிர்கிறார்கள் . ஏன் என்னை போல வீதிக்கு வரவில்லை என்று நீங்கள் கேட்க கூடும் . அது அவர் அவர் பிழைப்பு வாதத்தை பொருத்தது .

    உங்கள் வாழ்க்கை துணையிடம் குறை இருக்கலாம் அதை பக்கத்துக்கு வீட்டுக்காரன் திட்டுவது வேறு , நீங்கள் திட்டுவது வேறு .

    • இராமன்,

     அதே பக்கத்து ஊட்டுக்காரன் இங்கே வந்து நமது பாரத மாதாவை கதற கதறக் கற்பளிச்சுட்டு போறான். அப்போ பல்ல இளிச்சிகிட்டு இருந்த இந்த அறிவுசீவிகள் இப்போ ஏன் கதறுகிறார்கள்? நீங்க சொல்ற லாஜிக் கொஞ்சம் கூட ஒத்து வரல.

     ஒரு கோக்குப் புட்டிக்காக அந்த பக்கத்து ஊட்டுகாரன் தாமிரபரணி.பிளாச்சிமாடா,தண்டகாரண்யா…. இன்னும்பிற பாரத மாதாவின் அங்கங்களை சிதைத்து பலாத்காரம் செய்யும் போது அதே கொக்கு புட்டியை ருசித்து அதை ரசித்தக் கூட்டம் இப்போது என்ன மயித்துக்கு சீனப் பொடுரானுவ.

     கடன வாங்குன விவசாயி அத கட்ட முடியாம தற்கொலை பண்ணும் போது, இங்க ஒலக கோப்பை நடத்தறானுங்க . நல்ல பயிற்சி எடுக்குலன்னு பொறம்போக்கு பத்திரிக்கைகாராணுவ, செய்தி தொலைக்கட்சிகாராணுவ முக்கராணுவ முனவரானுவ. ஆனா பாருங்க டொண்டுல்கரு ஒடெம்பெல்லாம் பச்சைக் குத்துன மாதிரி அதே பக்கத்து ஊட்டுகராணுவ விளம்பரங்கள். நம்ம விவசாயி சாகுறான் அதுக்கு காரணமான அந்த பன்னாட்டுக் கம்பனிகாரன் விளம்பரத்த இவன்ந்தான்குறான்.

     மறுபடியும் முயற்சி பண்ணவும்.
     நன்றி.

     • எலேய் சிவப்பு ,

      என்னாலே தரங்கெட்ட தான எழுதரீரு ! புரியலன்னா கேளும்வே !

      கோகா கோலா உன்னோட அனுமதி இல்லாமலா எடுத்தான் ? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு அனுமதி கொடுத்து உள்ளது . மக்களும் விரும்பி சாபிடுகிறார்கள் . அது அவர்கள் விருப்பம் . மாடு உனக்கு உணவு என்றால் கோக கோல இன்னொருவனுக்கு பானம் .

      எது சரி தவறு என்று வரையறை செய்ய முடியாது .

      உன்னுடைய வெற்ற்றியை நையாண்டி செய்வதையும் , இதையும் போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்

      • //எது சரி தவறு என்று வரையறை செய்ய முடியாது

       அதான் அவனே அதுக்கு ஒரு விளக்கம் குடுக்குறான் அப்போ ஏத்துக்க வேண்டியது தானே. அவனோட பார்வையில் சரிங்கறான். நீங்க அப்புறம் என்னத்துக்கு சாமியாடுறீங்க. இதுல வேற சரி தவறுன்னு வேற பாட்டு பாடுறீங்க :).. நான் யாரையும் குறிப்பாக ஒருமையில் அழைக்கவில்லை. தாங்களாகவே அவர்களின் ஒருவராக நினைத்து நான் தங்களை திட்டுவதாக கருதி என்னை ஒருமையில் அழைக்கிறீர்கள். ஹ்ம்ம் கோபம் வருவது இயல்பு தானே.

       • // ஒருமையில் அழைக்கிறீர்கள்//

        Apologies gentleman.

        What I meant to say is “In your family if your father allowed your neighbor to come and drink water , you have to scold your father not your neighbor. However if your wife had learned to drive a car and your neighbor makes fun of it,then you have to scold neighbor. But You want to scold the father”

      • இராமன்,

       மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்பு தான் ஊழல் செய்கிறது . மக்களும் அதே அமைப்பைத் திரும்ப திரும்பத் தேர்ந்தெடுக்கிறார்கள். விருப்பப்படு தான் ஓட்டும் போடுறாங்க. தேர்தல் சமயத்தில் ஓட்டுக்கு 100 பணமும் தராங்க. மக்களும் விருப்பப்பட்டு தான் வாங்கறாங்க. அப்ப இது சரின்னும் உங்க கணக்கு படி சொல்லலாமா?

       தாமிரபரணி ஆத்த கம்பெனிக்கு எழுதி குடுக்கவா மக்கள் ஓட்டுப் போடுறாங்க? இப்படி பேச உங்களுக்கே கேவலமா இல்ல. எது சரி எது தவறு என்பதை வரையறை செய்ய முடியாது என்பது களவானித்தனம். கோக்குக்காக தாமிரபரணி ஆத்த அட்டைய போட்டது சரியா தவறா? அதுக் கூட தெரியாம கருத்து சொல்ல வந்துட்டீங்கள்ளே? 🙂
       நன்றி.

       • //எது சரி தவறு என்று வரையறை செய்ய முடியாது//

        I meant to say about food habits. Drinking coke or eating beef is peoples choice. You dont need to blame coke drinkers…

        I am not justifying atrocities of crony capitalism and banana republic tango.
        You misunderstood me because that point was in separate line and went out of my intended context

        • நீங்க கோக்க குடிங்க அல்லது பெப்புசிய குடிங்க யாரு வேண்டான்ன. கோக் செய்வதன் மூலக்கூறு அடிப்படையைப் பற்றி மயிர்கூச்செறியும் விவாதங்களை கூட செய்வார்கள் இந்த அறிவுசீவிகள் ஆனால் அது தம்மோட ஆற்றை ஆட்டயப் போட்டு உருவானது என்று ஒரு போதும் அறியமாட்டார்கள் அல்லது அவர்கள் அறிய அவர்கள் உச்சி மோரும் இந்த அமைப்பு அதற்க்கு இடம் தராது. கோக்க குடிப்பதோ மாட்டுக்கறி தின்பதோ அவரவர் விருப்பம் என்று தாங்கள் கூறுவதில் இருந்து அதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

         மாட்டுக்கறி தின்றால் பாவம், மாட்டுத் தோலை உரித்தால் உடனே மரண தண்டனை என்று உணவுத் தீண்டாமை இருக்கும் ஒரு நாட்டில் உங்களால் எப்படி இப்படி பேச முடிகிறது. மாட்டுக் கறி தின்பது சாய்ஸ் ஆனால் அதை சாப்பிடுவது பாவம். கோக் குடிப்பது சாய்ஸ் ஆனால் அது எப்படி நமது வளங்களை கொள்ளையிட்டு தயாராகிறது என்பது தேவையில்லை. எது எப்படியோ தாங்கள் முன்மொழியும் அந்த சாய்ஸ் என்பது ஒரு கானல் நீர். பெரும்பாலான மக்களுக்கு கிடைக்காத இந்த சாய்ஸ் வாய்க்கபெற்ற இந்த அறிவுசீவிகள் இந்த நாட்டை ஆளும் போது, பொதுக் கருத்தை உருவாக்கும் போது அதை மறுப்பது எமது கடமை.

         இது இன்னொரு வடிவத்தில் கூட வெளிவரும். ஒரு முதலாளி தொழிலாளியை சுரண்டுவதைப் பற்றிப் பேசினால் அப்படி சுரண்டப்பட்ட ஒரு தொழிலாளி வேறொரு வேலைப் பார்க்க உரிமை உண்டு என்று தான் பேசுவீர்களோ ஒழிய அந்த சுரண்டலை பேசமாட்டீர்கள்.

         ஒரு முதலாளித்துவ பத்திரிக்கை கேவலம் ஒரு விவசாயியை முன்னிறுத்துவதா என்ற ஒரு அடிப்படையில் இருந்து தான் பார்கிறீர்களோ ஒழிய ஏன் ஒரு விவசாயத்தை முதுகெலும்பாக கொண்ட நாட்டைப் பற்றிய ஒரு சித்திரமேயது என்று கிஞ்சித்தும் நினைக்க மாட்டீர்கள். அப்படி ஒருவேளை அந்த பத்திரிக்கை தாங்கள் சொல்வது போல கேலி செய்திருந்தாலும் அது அந்த பெரும்பாலான மக்களை தலைகுனியத் செய்து விடாது. இந்த கேடுகெட்ட போலி ஜனநாயகம் செய்யாத கொடுமைகளை விடவா அந்த கார்ட்டூன் அவமானம். எம்மைப் பொறுத்த வரை வேலையில்லை, சோறில்லை, குடிப்பதற்கு தண்ணியில்லை என்பது தான் அவமானம் இது ஒரு போதுமல்ல மாறாக இரண்டையும் ஒரே தராசில் இட்டுப் பார்ப்பது கேவலத்தினும் கேவலமானது.

 6. அந்தக் கார்ட்டூன் ஏழ்மையை எள்ளி நகையாடுவது போலவும், ஏழைகள் அறிவியலில் பங்கெடுக்கக்கூடாது என்று அவர்கள் சொல்வதுபோலவும் நான் புரிந்துகொண்டு, கீழ்க்கண்டவாறு என் முகநூலில் பதிந்திருந்தேன் : மாடு மேய்க்கிறவனுக்கு எதுக்கு கோக்கா-கோலா… பெப்சி?
  மோடிக்கு சுரணை இருந்தால், இந்தியாவின் மீது அக்கரை இருந்தால், குறைந்தபட்டமாக இந்த அமெரிக்க மூத்திரப் புட்டிகளைத் தடை செய்யட்டுமே?!
  (மங்கள்யானையும், மோடியையும், இந்தியர்களையும் இழிவுபடுத்தி நியூ யார்க் டைம்ஸ் கார்ட்டூன்…)

  • உங்களது கருத்து பொதுவான தளத்தில் சரியானதே .மேலெழுந்த வாரியாக அல்லாமல் உங்கள் முழக்கம் எல்லோரையும் சிந்திக்க வைக்க கூடியதே. அதே சமயத்தில் இந்த கார்டூனுக்கான பதிலடியாக இந்த சமயத்தில் இந்த கருத்தை முன்னிறுத்துவது சரியல்ல என்பது வினவின் இப்பதிவின் வழியாக தெளிவாகிறது .நீங்களும் இதையே இங்கு சொல்ல வருகிறீர்கள் என நினைக்கிறேன்.இந்த பதிவு நுட்பமானது.பொதுவாக அறிவாளிகள் என அறியப்படும் வெள்ளை காலர் பேர்வழிகள் கம்யுனிஸ்டுகளை மந்தைகளாக நினைப்பதும் தமக்குள் ஏகடியம் பேசுவதுமுண்டு.அது எத்தகைய அறியாமை என்பது வினவின் இந்த பதிவின் வழி அவர்கள் உணரட்டும்.

 7. இந்தியாவின் ஒட்டுண்ணிகள் (parasites of India) என்றால் மலையாளத்தான்கள் தான். இந்தியா என்ற கட்டமைப்பில் அதிக பலன் பெறுபவர்கள் இவர்கள் தான் எனவே இணையத்தில் எந்த பகுதியிலும் இந்தியா குறித்து விவாதம் மற்றும் கமெண்ட் பகுதிகளில் இவர்கள் இந்தியச் சார்பாக கூவுவதை பார்க்கலாம். இந்தியா என்ற கட்டமைப்பில் இருந்து வெளியே வந்தால் தனித்து இயங்க வக்கற்ற மாநிலம் கேரளா. இதை ஒவ்வொரு மலையாளத்தான்களும் நன்கு உணர்த்துளனர். எனவே இந்தியா என்ற அமைப்பு இல்லையேனில் இவர்கள் வாழ்க்கை சிங்கி அடிக்கும். சில யூடுப் விடியோகளின் கமெண்ட் பகுதிகளில் வடஇந்திய மற்றும் தெனிந்தியா குறித்த கருத்துகளில் சேட்டன்களின் சேட்டை தாங்க முடியாத அளவுக்கு இருக்கும். அது போன்ற விவாதங்களில் இவர்கள் தமிழர்களை தூற்ற தவறுவதேயில்லை. “I” பட ட்ரைலர், இந்தியா VS பாகிஸ்தான் குறித்த விடியோக்கள் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் தமிழர் விரோத கருத்து பரப்புகின்றனர். சமீபத்தில் பார்த்த விடியோ கமெண்ட்டில் தென்அமெரிக்க நாடு ஒன்றின் ராணுவ கிளிபிங்கை LTTE என்று ஒரு கஞ்சியான் எழுதறான்..இத்தனைக்கும் விடியோவில் ராணுவத்தினர் பேசும் மொழி தெளிவாக கேட்கிறது ஆனாலும் ஒருத்தன் எழுதறான் LTTE தீவிரவாதிகள் என்று. மலையாளத்தான்களுக்கு ஏன் இவ்வளவு தமிழர் விரோதம். வெளியுறவுத் துறை மூலம் ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு இந்தியா துணை போக செய்ததும் இவர்கள் தான்.

 8. //நீயே ஏழை உனக்கு எதுக்கு இந்த விண்வெளி ஆராய்ச்சி?
  நீயே ஏழை உன் மகனுக்கு எதுக்கு படிப்பு ?
  நீயே ஏழை உனக்கு எதுக்கு செருப்பு ?
  என்கின்ற சாதி வெறியாகதான் எனக்கு தெரிந்தது//

  அய்யா ராமர்!
  உங்களை போன்ற மேட்டுகுடி அறிவு ஜீவிகளுக்கு அப்படித்தான் அய்யா தெரியும்!
  பரம்பரையாக, அரச போகத்திலும், இன்று அரசாங்க உத்தியோகத்திலும், சொகுசான அய் டீ துறையில் அதிக ச்சம்பளம் வாங்குபவர்களுக்கும், இது இழிவாகத்தான் தெரியும்!

  கிராமங்களில் சொற்ப சம்பள்ம் பெற விவசாய வேலையும் இல்லை, விவசாயத்துக்கு தண்ணிர் இல்லை, கரண்ட் இல்லை, கல்வி பெற வழியில்லை, இருக்கும் கல்வி சாலையை கவனிப்பார் இல்லை, ஏன் கழிப்பரை கூட இல்லை!

  இன்னும் பல கிராமங்களில் மருத்துவ வசதி இல்லை, பிரசவ ஆஸ்பத்திரிக்கு பல காதம் தூக்கி செல்ல வேண்டியுள்ளது!

  பெண்கள் பள்ளியில் கூட கழிப்பறை வசதியில்லை! இந்த லக்சணத்தில் மங்கள்யான் வாணவேடிக்கை தேவையா? அது முழுவதும் இந்திய தயாரிப்புதானா? இறக்குமதி செய்யப்பட்ட கருவிகளின் மதிப்பு என்ன? கான்ட்ராச்டர்கள் யார் யார்? கைமாறிய பணம் எவ்வள்வு? அய் எஸ் ஆர் ஓ – தனி அலைவரிசை முழுவதும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்கப்பட்ட வழக்கு என்ன ஆனது?

  இந்தியாவில்,அடிப்படை கட்டுமான பணிகளே இன்னும் முழுமை அடையவில்லை! ஏற்கேனவே போட்ட ரோடுக்கே உலகவங்கிக்கு வட்டிகட்டி மாளவில்லை, சுங்கவரி என்ற பெயரில் கொள்ளையே நடக்கிறது, இழுத்துபறித்துகொண்டிருக்கும் ஆத்தாளை கவனியாமல், கும்பகோண கோதானம் இப்போது அவசியம் தானா? மக்கள் வரிப்பணத்தை இப்படி வீணடிக்கலாமா? ஏழைகளுக்கான இலவசங்களை குறைக்க சொல்லும் அறிவு கொழுந்துகளிந்த வாணவேடிக்கை களை அனுமதிக்கலாமா?

  • ஏழை பங்காளன் அஜாத சத்ரு அவர்களே !

   உங்கள் நான்கு பிள்ளைகளுக்கு பணம் கொடுகிரீர்கள் . மூன்று பேர் ஊதாரிகள் பணத்தை வீணாக்கி விடுகிறார்கள். ஒருவன் மட்டும் புதிதாக் தொழில் பழகுகிறான் . மேலும் பணம் கொடுத்தால் தொழிலை இன்னும் சிறப்பாக கற்று நாளை ஊதியம் கொண்டு வருவேன் என்கிறான் .

   நீ ஒரு மண்ணும் பழக வேணாம் , மூணு தம்பிங்க பசியாக கிடக்குறாங்க வீட்டுல சும்மா கிட என்று சொல்வீர்களா?

   மற்ற எல்லாவற்றிற்கும் பட்ஜெட் போட்டு பணம் ஒதுக்கி அப்புறம் தான் விண்வெளி ஆராய்ச்சிக்கும் கொடுதிர்காங்க .

   மற்ற அமைப்புகள் அந்த பணத்தை சிறப்பாக , ஊழல் இல்லாமல் திட்டமாக மக்களிடம் கொண்டு சேர்க்காததற்கு இசுரோ எப்படி காரணம் .

   சும்மா நல்லவன்னு பேரெடுக்க கோசம் போட கூடாது. நல்லவன்னு பேர் எடுக்க உங்களை மாதிரி ஆளுங்க பண்ற அலப்பரை தாங்கலைடா சாமி

   //ஏழைகளுக்கான இலவசங்களை குறைக்க சொல்லும் அறிவு கொழுந்துகளிந்த வாணவேடிக்கை களை அனுமதிக்கலாமா//

   இலவசதினால் பலன் இல்லை . விண்வெளி ஆராய்ச்சியினால் உண்டு .
   கடின ஆராய்ச்சியையும் உழைப்பையும் வானவேடிக்கை என்று சொல்ல்கிறாய் என்றால் உனக்கு இருக்கிற கேபாகுட்டி அவ்வளவுதான் .

   • அய்யா ராமர்!
    உங்கள் பதில் உங்களுக்கேநியாயமாய் இருக்கிறதா?
    ஏழைகள் எல்லாம் ஊதாரிகளா? ஏமாளிகளா?

    //ஒருவன் மட்டும் புதிதாக் தொழில் பழகுகிறான் . //

    மூன்று பிள்ளைகளும் பட்டினி கிடக்க மூத்தவன் ‘தொழில் பழக’ வீட்டை விற்கலாமா?

    //மற்ற எல்லாவற்றிற்கும் பட்ஜெட் போட்டு பணம் ஒதுக்கி அப்புறம் தான் விண்வெளி ஆராய்ச்சிக்கும் கொடுதிர்காங்க //

    பட்ஜெட்டில் பங்கீடு எப்படி அய்யா செய்தார்கள்? எந்த முன்னுரிமையில் செய்தார்கள்?

    //மற்ற அமைப்புகள் அந்த பணத்தை சிறப்பாக , ஊழல் இல்லாமல் திட்டமாக மக்களிடம் கொண்டு சேர்க்காததற்கு இசுரோ எப்படி காரணம் //

    மற்ற அமைப்புகளில் எல்லாம் ஊழல், இசுரோவில் மெகா ஊழல்! இசுரொ அலைக்கற்றை விவகாரம் நீங்கள் அறிவீர்களா?

    //இலவசதினால் பலன் இல்லை . விண்வெளி ஆராய்ச்சியினால் உண்டு //

    ஆமாம்! இலவசம் ஏழைகளின் ஓட்டை பொறுக்க போடபடும் பிச்சை! உங்கள் ஆராய்ச்சி வல்லரசுகளுக்கு, பினாமி அடிமை ஆராய்ச்சி என்ற பெயரில் கட்டும் கப்பம்!
    இந்திய ரகசியங்கள் எல்லாம் அமெரிக்காவில் கிடைக்கும்! ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் உயிரை கொடுக்க இந்திய கூலிப்படை கேட் கிறது அமெரிக்கா! அமெரிக்க பட்ஜெட்டில் ட் குண்டு விழுந்தால், இந்திய பட்ஜெட்டில் ஆராய்ச்சி, அன்னிய முதலீடு !

    இந்தியா இன்று ஏவுகணை விட்டால்,நாளை பாகிஸ்தான் அதே ரக ஏவுகணையை விடமுடிகிறது! பஙகாளிச்சண்டையில் குளிர்காய்வது யார்? சமூதாய மேம்பாட்டுக்கு பயனின்றி, ஆயுத போட்டிக்கு யாருடைய உழைப்பு வீணாகிறது?

    பங்காளிகளின் கம்பசேர்வை போட்டியில் கூத்தாடிக்குதானே லாபம்? சொத்தை இழப்பது சண்டையிடும் சகோதரர் இருவரும் தானே!

    //சும்மா நல்லவன்னு பேரெடுக்க கோசம் போட கூடாது. //

    ஆமாம், நல்லவன்னு பேரெடுத்து, எலெக்சனில் நின்னு, பிரதமர் ஆகி ‘பாயோ பெகனோ’ என்று நடிக்க ஆசை! உங்களை மாதிரி ஆளுங்க பண்ற அலப்பரை தாங்கலைடா சாமி!!!!!!!!

    • நான் கூறியதை எதையும் புரிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை , அதற்கான முய்ர்ச்சிம் எடுக்கவில்லை. விதாண்டாவாதமாக உளறுகிறீர்கள்

     புலம்பல் தவிர பதில் கூறுமளவுக்கு தரம் இல்லை

     • Raman,
      I empathize you…
      It’s a drawback of democracy; it doesn’t work when the majority can’t differentiate good from rest. It adds frustration when the majority suffers through lack of education, awareness, inferiority complex.

      Most of the articles & opinions of Vinavu are full of cheap/crap comments; they are usually about Anti-Brahmin or Anti-BJP/RSS or Anti-businessmen or Anti-Progress ideas.

      They don’t have any clue to think and suggest anything result oriented that can work.
      Looks like they hate all successful people; if they find someone good/successful they start throwing mud. But we need learn something from USA. When Americans find others successful, they tend to analyze the missing pieces and learn (like Russian space programs).

      If they find someone belong to right wing and has ideas for progress, it’s a crime.

      According to Vinavu, all Hindus need to be hated. But just like false secularist politicians, Christians & Muslims are noble people.

      Vinavu expects all of us to follow Dictatorial Communist principles; they want all the citizens to be drawn into misery and make all poor. They will quote the ideas of Carl Marx which haven’t worked (and will not work)anywhere in the world. The so called Communist nations (China & Russia) have left that principles and marching towards Authoritarian Capitalism.

      For Vinavu – It’s OK when ISIS commits atrocities; but it’s a sin when US bombs terrorist hide-outs.

      • Raman is an extra ordinarily intelligent economist.Umashankar is aspiring to become one.He says,”If they find someone belong to right wing and has ideas for progress,it”s a crime”.He did not tell that the right wing person has ideas for progress “of whom”He cites China and Russia.But it seems he is unaware of Venezeula and Cuba.

       • I am glad to read Sooriyan quoting countries Venezuela and Cuba. But he didn’t cite any positive feature. He probably didn’t find any.
        Let me try to add some juice….

        About Cuba:
        This country was fortunate to be closer (geographically) to the most powerful nation (USA). USSR provided generous subsidies and Cuba was living on them till the collapse of their provider. Then they had all sorts of problems to deal with. But they are trying to recover by opening up and leaning towards market oriented economy. Their trouble would have continued if they stuck with their original Socialist ideology. But I agree that their health care system is very good. If India has something to learn from Cuba, it would be about health care system.

        About Venezuela:
        This is an oil rich country; they are in trouble because of their stupid economic strategies. Who will believe a nation with tremendous oil revenues struggling with huge inflation and other economic challenges. Well, this can happen to any country if they burn their resources with wasteful state funding / subsidies.

        • Umashankar,Thanks for telling about the health care system of Cuba.Venezuela”s Hugo Chaves brought their oil industry out of the clutch of foreign powers and he was overthrown by the world powers. He came back to power in spite of his health problems.With oil revenue,Chaves brought healthcare facilities to his common people with the help of Cuba.Whose strategy you call stupid,Chaves”s or his political enemies instigated by western countries?

  • பின்னே, பரிகாரம், தோஷ நிவர்த்தி எல்லாம் எதுக்கு இருக்கு..?!

   இந்த இந்திய விவசாயப் பயலுகளுக்கு எல்லாம் செவ்வாய் ஆராய்சி ஒரு கேடா அப்படின்னு படம் போட்ட சிங்கப்பூர் சீனக் கோமான் ஹெங் கிம் சாங்கோட வயித்தெரிச்சலுக்கு திருஷ்டி கழிக்க ஒரு சாந்தி ஹோமம் பண்ணிடலாம்ண்ணா..

   இஸ்ரோ சேர்மன் ஒரு சேட்டன், அவருக்கு மின்னாடி இருந்தவரும் ஒரு சேட்டன்.. சேட்டன்களோட சாதனைய சேட்டன்கள் பாராட்டுனா அது அம்பிகளுக்கு ஆதரவுங்கறாளே.. இந்த சனிப்பார்வைக்கு ஒரு சனிப்பரிகார பூசையும், நம்ப தமிழங்களும் சேட்டனுங்க மாதிரி உணர்வோட இருக்கணும்னா உப்புக் கருவாடு, ச்சே, உப்பு பொரி வெல்லம் தொடர்ந்து ஒரு மாசத்துக்கு தானமும் பண்ணனும்..

   இராக்குலயும், ஆப்கானிஸ்தானிலயும் குண்டு போட்டப்ப எனக்கென்னன்னு மேல்கீழ்வாய்களை மூடிக்கிட்டிருந்த பாவத்துக்கு ஒரு சத்ருசம்ஹார யாகம் பண்ணிப்பிடலாம்.. அப்பறம் பாருங்கோ, கொசாவால குண்டு போட்டாக்கூட நம்மள மாதிரியே அம்பிகளுக்கும் அது ரெண்டும் ஆட்டொமாடிக்கா தொறந்துக்கும்..

  • பின்னே, பரிகாரம், தோஷநிவர்த்தி எல்லாம் எதுக்கு இருக்குங்கறேள்..

   அமெரிக்க பத்திரிக்கைக்காரனும், சிங்கப்பூர் சீனக்காரன் ஹெங் கிம் சாங்கும் வயத்தெரிச்சல்ல இந்திய விவசாயப்பயலுகளுக்கெல்லாம் செவ்வாய் ஆராய்சி ஒரு கேடான்னு படம் போடறான்னா அதுக்கு திருஷ்டி கழிக்க ஒரு சாந்தி ஹோமம் பண்ணிடலாம்ண்ணா..

   இஸ்ரோ சேர்மன் ஒரு சேட்டன்.. அதுக்கு மின்னாடி இருந்தவரும் ஒரு சேட்டன்.. சேட்டன்களோட சாதனைய சேட்டன்கள் பாராட்டினா அதையும் அம்பிகளுக்கு ஆதரவுங்கறாளே.. இந்த சனிப்பார்வைக்கு கட்டாயம் சனிப்பரிகாரம் பண்ணனுமோல்லியோ.. கூடவே சேட்டன்களுக்கு இருக்கற உணர்வு நம்ம தமிழங்களுக்கும் வரணும்னா ஒரு மண்டலத்துக்கு உப்பு கருவாடு.. ச்சே.. உப்பு பொரி வெல்லம் தானமும் பண்ணனும்..

   இராக்குலெயும், ஆப்கானிஸ்தானத்திலெயும் குண்டு போடறச்சே நம்ப அமெரிக்க அம்பிகள்லாம் மேல்கீழ்வாயை மூடிண்டிருந்தாளாமே.. தொறந்தா அந்த அபிஷ்டு ஜூனியர் புஷ்ஷூ அங்கெயும் குண்டு வெச்சுருவானோன்னு பயமாயிருந்திருக்கும்.. ஒரு சத்ருசம்ஹார யாகம் பண்ணிப் பாருங்கோ, அப்பறம், கொசாவாலே குண்டு போட்டாக்கூட நம்மள மாதிரி அந்த அம்பிகளுக்கும் ரெண்டும் ஆட்டோமாடிக்கா தொறந்துகுக்காதோன்னோ.. என்ன ஷொல்றேள்..

   அப்பறம், அமெரிக்க அம்பிகளுக்கு ஆப்போசிட்டா அமெரிக்காக்காரனுக்கும், சிங்கப்பூர் சீனாக்காரனுக்கும் வக்காலத்து வாங்கற அளவுக்கு இவாளுக்கு யாரோ சூனியம் வெச்சுருக்கா போலருக்கே.. பெரியாருக்கு பாதபூஜை பண்றதவிட கோவத்துல இருக்கிற மார்க்ஸுக்கு ஒரு சாந்தி ஹோமம் பண்றது ரொம்ப விசேஷம்னு இவாளாண்டே எடுத்து ஷொல்லுங்கோ ஆண்டே..

   • இன்று எத்தனை ரவுண்டு ? உடம்புக்கு ஆகாது அம்பி! அப்புறம் அஜாசத்துரு தான் என்னை குழப்பி விடார் என்பீர்கள்! வேண்டாம் இந்த நடு நிசி சத்ரூ சங்கார ஜபம்!

 9. வினவு வேணும்னே இப்படி பேசுதான்னு தெரியல. இருந்தாலும் பரவால்லை. stereotyping நா என்னன்னு தெரியுமா? சொந்தமா சம்பாதித்தை இஸ்ரோ செலவு பண்ணுது. அது கூடாது. இங்க கட்டமைப்பு இல்ல, சம்பதிச்ச காச குடுன்னு சொல்றது அடிச்சு புடுங்கற மாதிரி தான். ஏன் நாம விவசாய தேசமா இருந்தா விண்வெளி ஆராய்ச்சி பண்ண கூடாதா? ஒரிசா புயல்ல இருந்து கப்பதுனபோ இஸ்ரோ வேணும். அதே அவன் என்னால முடியும், நாங்க இன்னும் பாம்பு வித்தை காட்டுற ஆளுங்க இல்ல. நாங்களும் எல்லாம் செய்ய முடியும்ன்னு சொன்னா, reaction என்ன தெரியுமா?

  உங்களுக்கு மக்கள் வறுமை கோட்டுக்கு அடில இருகாங்க. உனக்கு எதுக்கு விண்வெளி ஆராய்ச்சி? அப்படின்னு கேக்குறான் மீடியா? அந்த நியூஸ் எல்லாம் வினவு கண்ல படாது. அதையும் பாத்துட்டு, ஒரு newspaper இப்படி கார்ட்டூன் போட்டா, நாங்க விவசாய தேசம் மட்டும் இல்லை, நாங்கள் பன்முக தேசம். எங்களுக்கு விவசாயம் பாக்கவும் தெரியும், விண்வெளி பயணமும் தெரியும்நு சொல்றதுல என்ன தப்பு?

  இதே மாதிரி ஒரு கேலி சித்திரம். ஸ்டாலின் அல்லது mao மாதிரி தான் எல்லா கம்யூனிஸ்ட். அதான் உங்க அடையாளம் நு சொன்னா ஒத்துக்க முடியுமா? இல்ல nazi தான் ஜெர்மனி அடையாளம் நு சொன்னா ஒத்துக்க முடியுமா? நாம் விவசாய தேசம் தான். இல்லைன்னு சொல்லல. ஆனா அதான் நம் அடையாளமா? அவளோ தானா நாம?

  இதுக்கு மட்டும் கூப்பாடு போடுறாங்கன்னு சொல்றீங்க. கரெக்டான பாயிண்ட். ஆனா அது அம்பிங்க மட்டும் தான்னு சொல்றது, (வார்த்தைக்கு மன்னிக்க வேண்டும்,வேற எந்த மாதிரியும் தோனல) வடிகட்டின மங்கா மடையன் சொல்லும் சொல். ஏன் அம்பிங்க மட்டும் தான் சொல்ல்றன்களா அத? ஒரு christian அல்லது USஇல் இருக்கும் வஞ்சிக்க பட்ட திண்ணியம் வாசியாக இருந்தால்? இல்ல இலங்கை தமிழனா இருந்தா? எல்லாருமே அம்பி தானா?

  நீங்க சொல்ல வந்தது நல்ல பாயிண்ட். போபால் விபத்து, ஈராக் படையெடுப்பு இதுக்கு எல்லாம் விமர்சிக்காம இதுக்கு மட்டும் கோவம் வரது தப்புன்னு சொல்றீங்க. ஆனா இதுல ஏன் அம்பிய இழுக்கணும்? சத்தம் போடுறவன் எவனும் உடையை மைய படுத்தி சத்தம் போடல. ஏன்டா இந்தியான்னு சொன்னாலே உங்களுக்கு இது தான் தோணுதா நு கேக்கறான்? ஏன் அப்படி தோணனும்? அதுக்கு ஒத்து போற மாதிரி நீங்க படம் போடறது தப்புன்னு சொல்றான். maybe சரியான வார்த்தைகள் use பண்ணாம சொல்றான். அதுல ஏன் குத்தம் கண்டுபிடிக்க இவ்ளோ சந்தோஷம்? நீங்க கோவபட்ற எல்லா விசயத்துக்கும் கோவபட்ரவதான் சிறந்த இந்தியனா? ஏன், ITல இருந்து சம்பாதிச்சு மக்களுக்கு உதவி பண்ணுறவன் எல்லாம் என்ன? ITல இருந்துட்டு தாமிரபரணிku போராட்றவன் இல்லையா? கண்ண கழுவிட்டு நல்ல கண்ணோட உலகத்த பாருங்க. குத்தம் கண்டுபிடிக்க அலஞ்சா அது மட்டும் தான் தெரியும்.

 10. மங்கள்யானுக்கு செலவிட்ட பணத்தில்,
  1) கங்கை – காவிரி இணைப்பு திட்டத்தை நிறை வேற்றலாம்.
  2)ஆயிரகணக்கான ஏக்கர் நிலங்கள் ஆந்திராவிலும் தமிழ்னாட்டிலும் பாசன வசதி பெறும்.
  3)ஆயிரகணக்கான கிராம,நகரஙகளின் குடி தண்ணீர் பிரச்சனை தீரும்.
  4)ஆயிரகணக்கான கிராம,நகரஙகளின் கல்வி கூட தரம் உயடர்த்தலாம்.
  5)ஆயிரகணக்கான கிராம,நகரஙகளின் அடிப்படை சுகாதார வசதி மேம்படுத்தலாம்!
  6)போக்குவரத்து சாலை மேம்பாடு, தொழிற்கூடமமைக்கலாம். வெளினாட்டு மூலதநத்திற்கு பிச்சை எடுக்கவேண்டாமே!

  ஆளுங்கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப ‘ஒதுக்குவதுதானே’ புதிய பொருளாதார பட்ஜெட்!
  அரசு வெளினாட்டு பட்டு கம்பளம் விரித்து காத்திருக்க, உள்னாட்டு முதலாளி வெளினாட்டில் பணத்தை பதுக்க, முதலீடு செய்ய ஓடுகிறார்! அவரின் கார் கம்பனிக்கு, 2000 ஏக்கர் இலவசநிலம்! ஏழைகளிடமிருந்து பிடிங்கிய நிலத்திற்கு இழப்பீடு என்ன?, அதனால் அரசுக்கு வருமானம் என்ன?

  ஏழ்மையை ஒழிப்போம் என்றார்கள், இந்திரா காலத்தில்! இப்பொ ஏழையையே ஒழித்துகட்டிவிடுவீர்கள், விரைவில்! ஆட்சிகள் மாறினாலும் கொள்ளையடிப்பது தொடர்கிறது!

  • ஏங்க உங்களுக்கு எங்க இருந்து இந்த statistics எல்லாம் கெடைக்குது? நீங்க நெனச்சா எல்லாம் அப்படி தானா? mangalyan செலவு 450 கோடி. நதி நீர் இணைப்பு திட்ட மதிப்பு எவளோ தெரியுமா? காவிரி-வைகை-குண்டார் இணைப்பு செலவு மட்டும் 2673 கோடி. முழு செலவு மதிப்பும் இங்க இருக்கு, போய் படிங்க: http://en.wikipedia.org/wiki/Indian_Rivers_Inter-link#Costs.

   budget போட்டு இஸ்ரோக்கு குடுத்த காச அவன் செலவு பண்றான். அத பாத்து அடுத்த தலைமுறை சாதிக்கணும்னு வளரும். உதரணத்துக்கு இங்கு செல்லவும்: http://www.quora.com/Is-the-cost-of-Mangalyaan-Indias-Mars-Mission-of-Rs-450-crore-or-71-million-justified

   இஸ்ரோக்கு குடுத்த budgetல அவன் திட்டம் போட்டு, ஒரு நாளைக்கு 18-20 மணி நேரம் வேலை பாத்து, வேற எந்த தேசமுமே செய்யாதத செஞ்ச குத்தம் கண்டு பிடிக்க மட்டும் தெரியும். இஸ்ரோக்கு budgetல நிதி ஒதிக்கீடு பண்றதுக்கும், அரசியல்வாதி கொள்ளை அடிக்கறதும் என்ன சம்பந்தம்? அலை கற்றை ஊழல் நடந்துனால இஸ்ரோ எது செஞ்சாலும் தப்பா? என்னமோ ஊழல் பண்ணி ராக்கெட் அனுப்ச்ச மாதிரி பேசாதீங்க. அங்க உழைக்கிற மக்களை நீங்க அசிங்க படுத்துறீங்க. பாக்டரி இல்ல வயல்ல வேலை செஞ்சா மட்டும் தான் அது உழைப்பு இல்ல. எங்க உழைச்சாலும் அது உழைப்பு தான். கூலி மாறலாம், ஆனா அந்த உழைப்பு பொய் இல்ல.

   கடைசியா சொல்றேன். இங்க அத வெச்சு இது பண்ணலாம், அது பண்ணலாம்னு சொல்லாதீங்க. இதுவும் business தான். நீ ராக்கெட் அனுப்ப US இல்ல Russiava நம்ப வேண்டியது இல்ல. என்கிட்ட வா. அதே qualityku சீப்பா பண்ணி தரேன்னு காட்டுறான்.

   நீங்க சொன்னா மாதிரி இஸ்ரோவ மூடிட்டு, அந்த காச வேற கட்டமைப்பு மேம்படுத்த செலவு பண்ணலாம். அப்படியே புயல் வந்தா 10,000 பேர பலி கொடுத்துட்டு, வானத்த பாத்தே விவசாயம் பண்ணலாம். அமோகமா வெளஞ்சு அத வித்து காசாக்கி, ஏழ்மைய ஒழுசிட்டு வேற விஷயத்துக்கு போலாம். எல்லா பிரச்சினயும் ஒழிச்ச பிறகுதான் நாம விண்வெளி, ராணுவம் எல்லாத்துக்கும் செலவு பண்ணனும். அது வரைக்கும் எவன் பம்பாய்ல குண்டு வெச்சா நமக்கு என்ன, இல்ல வருஷா வருஷம் புயல்ல மக்கள் ஆயிரகனக்குல செத்தா நமக்கு என்ன? எல்லா கட்டமைப்பு கட்டிட்டு, எல்லா நதியையும் இணைசுட்டு, வருமைய ஒழிச்ச அப்புறம் தான் வேற விஷயத்துக்கு போனும். ரெண்டும் ஒன்னா எல்லாம் செய்ய கூடாது. அது தேச துரோகம். வெளிநாட்டு சதி. நமக்கு ஏழ்மைய ஒழிக்கணும். நமக்கு எதுக்கு விண்வெளி ஆராய்ச்சி, ராணுவ ஆராய்ச்சி எல்லாம்? கரெக்ட் தானே நண்பா?

   • அய்யா சந்துரு!நீங்கள் விடும் ரீல் இச்ரோ ராக்கெட்டைவிட சீறிப்பாய்கிறதே!
    //அப்படியே புயல் வந்தா 10,000 பேர பலி கொடுத்துட்டு, வானத்த பாத்தே விவசாயம் பண்ணலாம்//

    அப்போ இந்திய விவசாயி அண்ணாந்து வானததை பார்ப்பது உண்மைதான்! ஆனால் இஸ்ரொ ராக்கெட்டை அல்ல, விவசாயநிலங்கள் பவானம்பார்த்த பூமியாகிவிட்டநிலையில், மழை என்று வருமோ என்ற கையறு நிலையில்தான்!

    மேலும் சுனாமி வந்தபோது இஸ்ரொ வாயே திறக்கவில்லை! கலபாக்கம் கடலில் நீரில் பத்தடி மூழ்கியது கூட யாருக்கும் தெரியவில்லை, தப்பித்த மக்கள் வந்து கூறும்வரை!

    அவர்களின் இன்சட் வகை செயற்கை கோள்கள், துருவனிலை செய்ற்கை கோள்கள் செய்தி மற்றும் வானிலை ஆராய்ச்சிக்கு பயன்தருபவை!

    ஆனால், சந்திராயனம், மங்கள்யான் போன்றவை நிச்சயம் வீண் செலவே! கிடைத்த அன்னிய செலாவணியை வாண்வேடிக்கையில் கரையவிட்டு, பின்னர் அன்னியநாட்டு முதலாளிகளிடம் நமது ஏழை தொழிலாளரை அடிமையாக்க வேண்டியதில்லை!

    எங்க உழைச்சாலும் அது உழைப்பு தான். ஆனால் நெல் கம்பூட்டரில் விளையாது அய்யா!

    • //மேலும் சுனாமி வந்தபோது இஸ்ரொ வாயே திறக்கவில்லை/

     இஸ்ரோ என்ன மேஜிக் ஆ பண்ணுது . எந்த ஆரய்ச்சியும் பண்ணாமல் எல்லாம் கண்டு புடுச்சி இவருக்கு படைக்கனுமா ! காசு குடுத்துட்டா அறிவியல் வந்துருமா ?

     அறிவியல்னா என்னன்னு தெரியாம உலர்ரத நிறுத்துங்க .. உங்களுக்கு என்ன வேணுமோ அதை கேட்டு வாங்குங்க , அடுத்தவனுக்கு குடுக்காத என்று கேட்ட எண்ணத்தோட அலையாதீங்க

    • வாங்க மக்கா. எது அய்யா நான் விடும் ரீல்? நான் சொன்னதுக்கு லிங்க் குடுத்துருக்கேன். பொய் சொல்றேன்னு சொன்னா ஆதாரத்தை காமிங்க. சும்மா ரீல் விட்ரான்னு சொல்லாதீங்க.

     //மேலும் சுனாமி வந்தபோது இஸ்ரொ வாயே திறக்கவில்லை! கலபாக்கம் கடலில் நீரில் பத்தடி மூழ்கியது கூட யாருக்கும் தெரியவில்லை, தப்பித்த மக்கள் வந்து கூறும்வரை!

     அவர்களின் இன்சட் வகை செயற்கை கோள்கள், துருவனிலை செய்ற்கை கோள்கள் செய்தி மற்றும் வானிலை ஆராய்ச்சிக்கு பயன்தருபவை!//

     ஏங்க நீங்க எழுதுனத நீங்க படிச்சி பாப்பீங்களா? சுனாமிக்கும் வானிலை ஆராய்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? நில நடுக்கம், புவியல் ஆராய்ச்சி. அதுக்கு completeah வேற தேவைகள். மொட்ட தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடதீங்க.

     அப்போ செஞ்சதே செஞ்சிகிட்டு இருந்தா ok வா? கலப்பைய வெச்சு உழுதோம். அப்புறம் tractor வந்தது. tractor உருவாக்கற முயற்சில எவளோ தோல்வி இருந்தது? அப்போ இது எதுக்கு, அதான் கலப்பை இருக்கே? இது பணம் வேஸ்ட், நிறுத்துங்க அப்படின்னு சொன்னீங்களா? தோல்வி இல்லாம வெற்றி இல்ல. இருக்கற தொழில்நுட்பத்தோட limitah எப்படி தெரிஞ்சுபீங்க? இப்போ PSLV வெச்சு செவ்வாய் வரைக்கும் போலாம்னு தெரிஞ்ச அப்புறம், எதுல அடுத்த கவனத்த செலுத்தனும்னு தெரியும். இஸ்ரோ ஒண்ணும் குடுத்த காச இந்த மாதிரி வேலைக்கு செலவு பண்ணலையே! நமக்கு, தேசத்துக்கு என்ன வேணுமோ அத செஞ்சு, budgetல காச மிச்சம் பண்ணி அவன் செய்யறான். உங்களுக்கு ஏன் காண்டு? INSATக்கு குடுத்த பணத்த அவன் mangalyan அனுப்ப use பண்ணிருந்தா நீங்க சொல்றதுல நான் 100% ஒதுக்குவேன். ஆனா அவன் அப்படி பண்ணல.

     //எங்க உழைச்சாலும் அது உழைப்பு தான். ஆனால் நெல் கம்பூட்டரில் விளையாது அய்யா!//
     அப்போ வேற எதுவுமே தேவை இல்லையா அய்யா? கலை, இலக்கியம், ராணுவம், மருத்துவம், இதுனால கூட தான் நெல் வெளையாது. எல்லாத்தயும் தடை பண்ணிரலாமா? நாளைக்கே நமக்கு இந்த வெளைச்சல் பத்தல, வேற புது வித சாகுபடி வழிமுறை வேணும், இல்ல புது நெல் ரகம் வேணும்னா எதை வெச்சு மக்கா ஆராய்ச்சி பண்ணுவீங்க? நெல் தான் வாழ்க்கைக்கு அடிப்படை. மறுக்கவில்லை. ஆனா அது மட்டும் தான் நமக்கு வேணும்னு இல்ல. விவசாயிக்கு மரியாதை வேணும். அவன் உழைப்புக்கு சரியான பலன் வேண்டும். எல்லா தொழிலார்களும் மதிக்க பட வேண்டும். அதுக்காக govt வேலைல இருக்கறவன், ITla வேலை பாக்குறவன் எல்லாம் தேச துரோகி இல்ல. அவனுக்கு தெரிஞ்ச வேலைய, அவன் பாக்கறான். எங்க வேலை கெடைக்குதோ அங்க போறான். விவசாயி அந்த நிலைமைக்கு வரணும். அவனும் வருசத்துக்கு லட்ச கணக்குல சம்பாதிக்கணும். அதுக்கு வழி பாக்கணும். அத விட்டுட்டு கம்புடேர்ல நெல் வெளையாது, நீ வெளிநாட்டு கம்பனிக்கு அடிமை வேலை பாக்கற, போடா தேச துரோகின்னு எல்லாம் சொல்லறது, அரசியல்வாதி போடும் ரெட்டை வேசத்தை விட கேவலமானது.

     • அவங்களுக்கு எல்லாம் தெரியும் ஆனாலும் பசி பசி ஏழை ஏழை அப்படின்னு கோசம் போட்டா ஊருக்குள்ள ஒரு மரியாதை கிட்டும் .

      ஜெயாவிக்காக போராட்டம் பண்றவங்களுக்கு ஜே பணினந்து தப்புன்னு தெரியும் ஆனாலும் புரியாத மாதிரியே பேசுவாங்க . அவங்களுக்கு அங்கே அவங்க பொழைப்புக்கு முக்கியத்துவன் கொடுப்பாங்க

      அதே மாதிரி அஜாதசத்திரு போன்றவர்கள் இது எல்லாம் புரியாத மாதிரி தான் பேசுவாங்க . அவங்களுக்கு ஏழைபங்காளன் பட்டம் தேவைபடுகிறது . சமுதாயத்தில் ஒரு அங்கீகாரம் தேவைபடுகிறது .ஊரில் எல்லோரும் இடது கையில் கடிகாரம் கட்டினால் வலது கையில் கட்டுவார்கள் .

      • இந்த கருத்துல எனக்கு உடன்பாடு இல்லை ராமன். அவர்களுக்கு priority வேறாக இருக்கலாம். ஆனா அவங்க பக்கம் உண்மை இல்லாம இல்ல. சக மனுஷன் கஷ்ட படறான், வந்து அவனுக்கு செய்யபட்டும் அநீதிக்கு எதிரா குரல்குடுனு சொல்றாங்க. தப்பே இல்ல. நானும் என்னால முடிஞ்சத செஞ்சிடுதான் இருக்கேன்.

       விவசாயம் மட்டும் பண்ற பாமர மக்கள் பாயிண்ட் of view la, செவ்வாய் ராக்கெட் வெட்டி செலவு தானே. அவனுக்கு அது ஏன் நம்ம தேசத்துக்கும், அவனுக்கும் முக்கியம்னு சொல்ல வேண்டியது, புரியும்படியா விளக்கவேண்டியது நம்ம கடமை.

       ஆனா இது எல்லாம் தெரிஞ்சும், வேணும்னு அஜதச்சத்ரு சொல்ராரானு நமக்கு தெரியாது. ஏன் நாமாக assume பண்ணிக்கணும்? அவர் point of viewla இருக்கற தப்ப நாம சுட்டிகாட்டுவோம். அதுக்கு மரியாதை குடுத்து மதிக்கறதும், இல்ல தூக்கி போடறதும் அவர் விருப்பம். நம்மால் முடிஞ்சத நடுநிலைமை தவறாம நாம செய்வோம். name calling, அவர் அறிவை பற்றி பேசுதல் எல்லாம் வேண்டாமே.

       • ஐயா சந்துரு, விவசாயிகளுக்கு புரிய வைக்கிறது முதல்ல இருக்கட்டும். இஸ்ரோவின் பங்களிப்புகள் எப்படி இந்தியாவிற்கு பலனளித்தது என்று நீங்களே ஒன்றும் புரிந்துகொண்டதாக தெரியவில்லை.

        ராக்கெட் அனுப்புன செலவு வெறும் நானூறு கோடி தான் சொல்றீங்க. ஆனா இதே இஸ்ரோ 4ஜி அலைக்கற்றை ஊழலில் பல்லாயிரக்கணக்கான கோடியை தனியார் கொள்ளையடிக்க கைக்கூலி வேலைபார்த்தது. தேவாஸ் மல்டிமீடியாவே இஸ்ரோ தலைவரின் பினாமியாகத்தானே வருகிறது. 50000 கோடி இருந்தா அறிவியல் தாகம் இன்னும் அதிகமாதானே இருக்கும்?

        இஸ்ரோவின் அலைக்கற்றைகளை கொள்ளையடிக்க கொடுத்துவிட்டு ராக்கெட் விடுவதால் பொருளாதாரம் உயர்கிறது என்றுசொல்வது நடுத்தரவர்க்கத்திற்கே உண்டான மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.

        —–

        அறிவியல் அறிவியல் என்று குதிக்காதீங்க. இந்திய அறிவுத்துறையின் சுரண்டல் உங்களுக்குத்தான் தெரியவில்லை. சுயசார்பிலும் கடின உழைப்பிலும் நமது மாணவர்களாலும் மக்களாலும் சிறப்பாக பங்களிக்க முடியும். இஸ்ரோ நாட்டுக்கு சேவை செய்தது என்றால் எத்துணை செயற்கைகோள்கள் இந்தியாவின் வளத்தை ஆராய்வதற்காக விடப்பட்டன என்று சொல்ல முடியுமா? அந்நிய நாடுகளுக்கு இந்தியா ஒரு மலிவு விலை ஏவுதளமாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். இந்திய விவசாயமாக இருக்கட்டும், விண்வெளித்துறையாக இருக்கட்டும், சுயசார்பும் இறையாண்மையும் ஏற்கனவே காயடிக்கப்பட்டுவிட்டன. இதில் பொறுக்கித் தின்பவர்களுக்கு தேசியக்கொடி போர்த்துவது கடைந்தெடுத்த கயமைத்தனம்.

        • பூமிக்கு என்று ஒரு ஆயுள் உண்டு. வருங்காலத்தில் பூமி அழியக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இதனால் மாற்று வழிகளை, மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களை பற்றிய ஆராய்ச்சி தேவை தான்.

         அறிவியல் ஆராய்ச்சிகளை வீண்வேலை என்று நிராகரித்தால் பின் நாம் இன்னமும் காட்டில் மிருகங்களை வேட்டையாடிகொண்டு இருக்க வேண்டியது தான்.
         பின் நமக்கும் காட்டு விலங்குகளுக்கும் வித்தியாசம் இருக்காது.

         தெரியாத விடயங்களை தெரிந்து கொல்வதற்கு முயல்வது தவறல்ல.

         இல்லையென்றால் சந்திர/சூரிய கிரகணங்களை ஒரு பாம்பு வந்து அவற்றை விழுங்குவதாக நம் முன்னோர்கள் கூறி வந்த கதையை நம்பிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.

        • //இஸ்ரோ நாட்டுக்கு சேவை செய்தது என்றால் எத்துணை செயற்கைகோள்கள் இந்தியாவின் வளத்தை ஆராய்வதற்காக விடப்பட்டன என்று சொல்ல முடியுமா? //

         நீங்க பாக்கற புயல் எச்சரிக்கை, பேசற செல்போன் முதற்கொண்டு தேச பாதுகாப்பு வரைக்கும் ISRO பங்களிப்பு இருக்கு. முழுசா படிக்க இங்க போங்க: http://www.isro.org/satellites/allsatellites.aspx

         //இஸ்ரோவின் அலைக்கற்றைகளை கொள்ளையடிக்க கொடுத்துவிட்டு ராக்கெட் விடுவதால் பொருளாதாரம் உயர்கிறது என்றுசொல்வது நடுத்தரவர்க்கத்திற்கே உண்டான மேட்டிமைத்தனமின்றி வேறல்ல.//

         அலை கற்றை ஊழல் சரின்னு யாருமே சொல்லலியே! ஊழல் பண்ண ஆளுங்க மேல நடவடிக்கை எடுங்க. அவங்கள என்ன பண்ணாலும் சரி தான். அதுக்காக இஸ்ரோ வேற எது பண்ணாலும் தப்பா? _____________

         • இங்கதான் சார், நீங்க விசயத்த பார்க்க மறுக்குறீங்க. புயல் எச்சரிக்கை, இந்திய வளங்கள் ஆராய்தல் போன்ற பணிகளில் இஸ்ரோவால் மிகச்சிறப்பாக பங்களிக்க முடியும். அது ஏன் நடக்கவில்லை என்பதுதான் கேள்வி. இதில் ஒரு முனைப்பு வேண்டும். திட்டங்கள் இதற்கு மடைமாற்றப்பட வேண்டும். விவசாயத்தோடு இந்திய அறிவியல் இணைய வேண்டும். ஆனால் இங்கு வளர்ச்சி என்ற பெயரில் நீங்கள் பார்ப்பதெல்லாம் நகச்சுத்தி அன்றி வேறல்ல.

          தொலைத் தொடர்பு பற்றி பேசுகிறீர்கள். சரிதான். இஸ்ரோ விட்ட செயற்கைகோள்களால் குளிர்காய்வது நாமல்ல. தொலைபேசி கட்டணங்கள் மிகவும் சொற்பமானவை. ஆனால் அரசு வளங்களை பயன்படுத்துகிற தனியர் கம்பெனிகள் இஸ்ரோவின் சேவை முழுவதும் ஆக்ரமித்திருக்கிறார்கள். இது உண்மை எனில் இஸ்ரோ யாருக்கானது? நாட்டுக்கு என்று கதைவிடாதீர்கள்.

          உங்கள் கருத்து அதிமுக காரர்களின் அடிமைத்தனம் போன்று இருக்கிறது. அவர்கள் தான் அம்மா கொள்ளையடித்தாலும், லேப்டாப், உணவகம் என்று நல்லது செய்திருக்கிறார் என்று சொல்வார்கள். இது உங்களுக்கு சரியாக படுகிறதா?

          கடைசியில் நான் வைத்த வாதங்களை மறைக்கிறீர்கள். இந்திய விண்வெளித்துறையாக இருந்தாலும் விவசாயமாக இருந்தாலும் அதில் சுயசார்பு, இறையாண்மை, இந்தியாவிற்கான வளர்ச்சி இருக்கிறதா? இதை தெளிவுப்படுத்துங்கள்.

          • //இந்திய வளங்கள் ஆராய்தல் போன்ற பணிகளில் இஸ்ரோவால் மிகச்சிறப்பாக பங்களிக்க முடியும். அது ஏன் நடக்கவில்லை என்பதுதான் கேள்வி//

           //ஆனால் அரசு வளங்களை பயன்படுத்துகிற தனியர் கம்பெனிகள் இஸ்ரோவின் சேவை முழுவதும் ஆக்ரமித்திருக்கிறார்கள்.//

           இந்த கருத்துக்களை விளக்கினால் சற்று தேவலை. இஸ்ரோ தன் கடமையை செய்யாமல் நீங்கள் கூறும் அந்த இயற்கை வளங்களை எப்படி சார் கண்டுபிட்தார்கள்? இயற்கை வளத்தை கண்டுபிடிப்பதும், புயல் எச்சர்ரிக்கை, வானிலை ஆராய்ச்சி, ரிமோட் சென்சிங் போன்றவை மூலமாக மக்களுக்கு தேவையான சேவைகளை இஸ்ரோ செய்து கொண்டு தான் இருக்கிறது. மக்களுக்கு பயன்பட வேண்டிய இயற்கை வளங்களை அரசாங்கம் தனியாருக்கு விற்றால் அதில் இஸ்ரோவின் குற்றம் என்ன?

           இங்கு நிலத்தடி நீர் நன்றாக இருக்கிறது என்று மட்டுமே இஸ்ரோவால் சுட்டி காட்ட முடியும். அதை coca colaக்கு குடுப்பதும், விவசாயிகளின் பாசனத்துக்கு பயன்படுத்துவதும் இஸ்ரோவின் கையில் இல்லை. நீங்கள் இரண்டு வெவ்வேறு பிரச்சனைகளை ஒன்றாக அனுகுகுரீர்கள் என்பதே என் வாதம்.

           //இந்திய விண்வெளித்துறையாக இருந்தாலும் விவசாயமாக இருந்தாலும் அதில் சுயசார்பு, இறையாண்மை, இந்தியாவிற்கான வளர்ச்சி இருக்கிறதா? இதை தெளிவுப்படுத்துங்கள்//

           ஒரு சில துறைகள் வளர்ச்சி பெறுகின்றன, ஆம். அனால் அது அடிப்படை மக்கள் வரை செல்வதில்லை என்பதை நான் ஒப்பு கொள்கிறேன். இயற்கை வளங்களை கண்டு பிடிப்பது அதை பயன் படுத்த தான். அனால் அதை மக்களுக்கு பயன் படுத்துவதும், அதை கொள்ளை அடிப்பதும் கண்டு பிடித்தவன் கையில் இல்லையே! கண்டு பிடித்தவன் அவன் கடமையை செவ்வனே செய்கிறான். அதை மக்களுக்கு பயன்படுத்த வேண்டியவன் அதை கொள்ளை அடித்தால், நீ கண்டுபிடித்ததால் தான் இப்படி நடந்தது என்று நீங்கள் எப்படி குறை கூற முடியும்? அதுவே என் வாதம்.

     • அய்யா சந்துரு! நீங்கள் விடும் ரீல் சூப்பெர் ரீல்தான் ! சந்தேகமேயில்லை! ஜால்ராவுக்கு ஒரு ராமன் கிடைத்து விட்டாரா! கேட் கவே வேண்டாம்! உங்கள் இரண்டாவது சுட்டியில் இணைத்துள்ள 5-ம் வகுப்பு மாணவரின் புரிதல் தானே உங்களைபோன்ற மேட்டு குடியினருக்கும் இருக்கிறது?
      குடும்பம் பட்டினையாய் இருந்தாலும், குழந்தை பட்டாசுக்கு அழுவது வாடிக்கைதானே! ஆனால் பொறுப்புள்ள குடும்ப தலைவன் நிலை என்ன?

      உங்கள் இரண்டு சுட்டியையும் நீங்களே பாருங்கள்! கங்கை – காவிரி இணைப்பு திட்டத்தை பல கூறு களாக பிரித்து தனிதனியே மதிப்பீடு தரப்பட்டிருக்கவில்லையா? அவற்றை தனிதனியே நிறைவேற்ற முடியாதா? காலந்தாழ்த்தைனால் இன்னும் திட்டசெலவு அதிகரிக்கத்தானே செய்யும்?
      இந்துத்வா சக்திகளின், தமிழர் விரோத கொள்கையால் செது சமுத்திர திட்டமும், இதுவரை செலவழித்த தொகையும் கடலில் கரைத்தாயிற்று!

      //இஸ்ரோ ஒண்ணும் குடுத்த காச இந்த மாதிரி வேலைக்கு செலவு பண்ணலையே! நமக்கு, தேசத்துக்கு என்ன வேணுமோ அத செஞ்சு, புட்கெட்ல காச மிச்சம் பண்ணி அவன் செய்யறான். உங்களுக்கு ஏன் காண்டு? ஈண்ஸாTக்கு குடுத்த பணத்த அவன் மன்கல்யன் அனுப்ப உசெ பண்ணிருந்தா நீங்க சொல்றதுல நான் 100% ஒதுக்குவேன். ஆனா அவன் அப்படி பண்ணல.//

      அய்யா ! இந்த அளவுக்கு நீங்கள் அப்பாவியா அல்லது இதை படிக்கும் வாசகர்கள் காதில் பூ வத்தவர்கள் எனெ எண்ணி விட்டீரா? அதற்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கியதே தவறான முன்னுரிமை என்பதுதானே அன் வாதம்? பட்ஜெட்டில் மிச்சப்படுத்துவது கட்டாயம், பட்ஜெட் கண்ட்ரொல், தணிக்கை என்று பல கட்டுப்பாடுகள் அம்பிகளுக்கெல்லாம் தெரிந்திருக்குமே! மிச்ச பணம் அவாளுடையது ஆகாது என்பதும் தெரிந்திருக்க வேண்டுமே!

      தமிழ்னாட்டில் அம்மா ‘ஒதுக்கிய’ தொகை எதுவும் அந்தநோக்கத்துக்காக முழுமையாக பயன்படுத்தப்படவில்லை! அதனால் அது அம்மா பணம் ஆகிவிடுமா? ஏன் பயன்படுத்தபடவில்லை என்பதற்கும் காரணம் கேட்பார்களே சி ஏ ஜி!

      //கலை, இலக்கியம், ராணுவம், மருத்துவம், இதுனால கூட தான் நெல் வெளையாது. எல்லாத்தயும் தடை பண்ணிரலாமா? நாளைக்கே நமக்கு இந்த வெளைச்சல் பத்தல, வேற புது வித சாகுபடி வழிமுறை வேணும், இல்ல புது நெல் ரகம் வேணும்னா எதை வெச்சு மக்கா ஆராய்ச்சி பண்ணுவீங்க?//
      நாட்டில் வேலையில்லாத்திண்டாட்டம், அரசு முத்லீடு இல்லாமல் முடங்கும் பாசன , மின் உற்பத்தி திட்டங்கள், போக்குவரத்து வசதிகள்(சாமானியருக்கும்), எதிர்கால சந்ததியினரின்நலனுக்காக தரமான கல்வி வசதி, சுகாதார வசதிக்கே அரசு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என் கிறென்! பிறகு தான் ஆஸ்தான கலை, இலக்கியம்! உழைக்கும் மக்களின் வாழ்விலேயெ கலந்த கலை இலக்கியம் வேறு! அது பல்லக்கும் பரிவட்டமும் கேட் காது! முன்னாள் ஆடலரசிகளுக்கு எம் பி பதவி கொடுப்பதால் கலை வளராது, கலையின் பெயரில் ஆள்பிடிப்பு தான்நடக்கும்!

      ராணுவம், மருத்துவத்தை இதில் ஏன் சேர்க்கிரீர்கள்? பாவம் உங்களுக்காக அல்லும் பகலும் பாடுபட்டு எல்லையை காக்கும் ராணுவத்தையும், உயிர்காக்கும் மருத்துவ துறையினரையும் (சிலர் கொள்ளையடித்தாலும்) நாம் போற்ற வேண்டும்!

      //நெல் தான் வாழ்க்கைக்கு அடிப்படை. மறுக்கவில்லை. ஆனா அது மட்டும் தான் நமக்கு வேணும்னு இல்ல. விவசாயிக்கு மரியாதை வேணும். அவன் உழைப்புக்கு சரியான பலன் வேண்டும். எல்லா தொழிலார்களும் மதிக்க பட வேண்டும்.//

      ஒத்த கருத்துகளுக்கு மிகநன்றி!

      //ஈTல வேலை பாக்குறவன் எல்லாம் தேச துரோகி இல்ல. அவனுக்கு தெரிஞ்ச வேலைய, அவன் பாக்கறான். எங்க வேலை கெடைக்குதோ அங்க போறான். விவசாயி அந்த நிலைமைக்கு வரணும்.// என்னுடைய வாதம் அதிக சம்பளமும், அம்பிகளின் முன்னுரிமையையும் பற்றியதே! படித்த இளைஞர்கள் நல்ல சம்பளம், ஒயிட் காலர் ஸ்டேடஸ் தேடியே செல்வர்!

      இந்துத்வா மனுதர்ம கொள்கையோ பார்பன இளைஞர்கள் விவசாயம் செய்ய முன்வருதே கூடாது என் பகர்கிறது!(அய்யர் சோ சாராய வியாபாரம் செய்கிறாராமே!அது பரவாயில்லை போலும்!). அரசு விவசாயத்தையும், கிராமப்புற வேலை வாய்ப்பையும் அல்ட்சியம் செய்கிறது! அப்புறம் சோறு அமெரிக்காவிலிருந்துதான் வரவேண்டும்!

      //விவசாயி அந்த நிலைமைக்கு வரணும். அவனும் வருசத்துக்கு லட்ச கணக்குல சம்பாதிக்கணும். அதுக்கு வழி பாக்கணும்.//

      அதைத்தான் அய்யாநானும் சொல்ல்கிறேன்! அதற்கு முன்னுரிமை கொடுத்து பட்ஜெட் போடுங்கள் அறிவாளிகளே!

      • எது ரீல்னு ஆதாரத்தோட காட்டு! இல்ல திரும்பவும் ரீல்னு சொல்லாதீங்க.

       //உங்கள் இரண்டு சுட்டியையும் நீங்களே பாருங்கள்! கங்கை – காவிரி இணைப்பு திட்டத்தை பல கூறு களாக பிரித்து தனிதனியே மதிப்பீடு தரப்பட்டிருக்கவில்லையா? அவற்றை தனிதனியே நிறைவேற்ற முடியாதா?//

       தாராளமா பண்ணலாம். அப்படி பன்னாததுகும் இஸ்ரோக்கும் என்ன சம்பந்தம்? அரசியல்வாதி அரசியல் பண்ணுறதுக்கு எல்லாம் இஸ்ரோ விஞ்ஞானி பொறுப்பு இல்ல.

       //அதற்கு பட்ஜெட்டில் பணம் ஒதுக்கியதே தவறான முன்னுரிமை என்பதுதானே அன் வாதம்? //
       இஸ்ரோக்கு பணம் ஒதுகினதே தவறா? இல்ல mangalyanku ஒதுகினதா? நிதி ஒதுக்கும் போது R&D, அதாவது research அண்ட் development, அப்படின்னு ஒண்ணுக்கும் நிதி ஒதுக்குவாங்க. எதுக்கு தெரியுங்களா? இப்போ செஞ்சிகிட்டு இருக்கற வழியவிட, சீப்பா, இன்னும் அதிக quality ஓட செய்ய வழி தேடறதுக்கு. அந்த காசு 2012-13 ல, 125 கோடி. அதே budgetla GISAT-11 க்கு ஒதுக்கப்பட்ட budget 250 கோடி. SARAL, 73.75 கோடி. மொத்த budget இங்க இருக்கு, போய் படிங்க: http://www.isro.org/pdf/Outcome-Budget-2012-13.pdf. இப்போ mangalyan மூலமா அடுத்த பத்து வருசத்துல நாம அனுப்பற செயற்கைகோள் எல்லாத்துலயும் பத்து கோடி சேமிக்க முடியும்னா என்ன சொல்வீங்க (இது உதரணத்துக்கு சொல்லப்பட்ட பாயிண்ட். என்ன என்ன பயன்கள் என்பது இன்னும் official ஆக சமர்பிக்கப்படவில்லை)

       //தமிழ்னாட்டில் அம்மா ‘ஒதுக்கிய’ தொகை எதுவும் அந்தநோக்கத்துக்காக முழுமையாக பயன்படுத்தப்படவில்லை! அதனால் அது அம்மா பணம் ஆகிவிடுமா? //

       ஏங்க அரசியல்வாதி கொள்ளை அடிப்பதும், இஸ்ரோக்கு நிதி ஒதுக்குவதும் எப்படி ஒண்ணாகும்? கேடு கெட்ட அரசியல்வாதி மக்கள் நல திட்டத்துல கொள்ளை அடிக்கறான். இஸ்ரோ காச பிடுங்கி மக்கள்கிட்ட குடுன்னு budget போட்டா அதுலயும் அடிப்பான். கண்ணும் போச்சு, கையும் போச்சு. அவனை அடிச்சு வீட்டுக்கு துரத்திட்டு, budget போடற பணம் மக்களுக்கு முழுசா போய் சேரணும்னு சொல்ல துப்பு இல்ல. அவன் இது வரைக்கும் அடிச்ச காச கொண்டு வந்து மக்களுக்கு குடுன்னு சொல்ல தோணல!இஸ்ரோக்கு காசு ஒதுக்காத, மக்கள் பட்டினியா கெடக்கும் போது ராக்கெட் எதுக்குனு கேக்க மட்டும் தோணும்! பட்டினியா பாட்டாளி இருக்க அரசியல்வாதி, ஊழல் காரணம். இஸ்ரோ விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவது இல்ல.

       கடைசியா ஒண்ணு கேக்கறேன். அப்படியே இஸ்ரோ budget ah புடிங்கி, மக்களுக்கு, மக்கள் தேவைகளுக்கு, முன்னிரிமை கொடுத்து, budget போட்டுட்டா? அடிக்காம எல்லா பணமும் மக்களுக்கு வந்துடுமா? commonwealth போட்டில கூட தான் ஊழல் நடந்தது. அப்போ விளையாட்டு துறைய மூடிட்டு, அந்த காசையும் budget la மக்கள் திட்டத்துக்கு சேதுடலமா? பிரச்சனை இஸ்ரோ விண்வெளிக்கு ராக்கெட் அனுப்புவதோ, இல்ல ஆராய்ச்சிக்கு பணம் ஒதுக்குவதோ இல்ல. அரசியல்வாதி கொள்ளை அடிப்பது. அத காலி பண்ணாலே, எல்லாம் நல்ல படியா நடக்கும். நதி நீரையும் இணைக்கலாம், ராக்கெட்um உடலாம். அத விட்டுட்டு பசி ஓட இருக்கும் போது எதுக்கு ராக்கெட்னு கூப்பாடு போடறது, நாங்க இப்படி இருக்கும் போது நீ எப்படி இந்த மாதிரி பண்ணலாம்னு இஸ்ரோவ கேக்கறது, எல்லாம் கேனத்தனம். அது அடிப்படை infection ah அழிக்காம சும்மா symptomsku வைத்தியம் பாத்தா மாதிரி தான். ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை.

       • //தாராளமா பண்ணலாம். அப்படி பன்னாததுகும் இஸ்ரோக்கும் என்ன சம்பந்தம்? அரசியல்வாதி அரசியல் பண்ணுறதுக்கு எல்லாம் இஸ்ரோ விஞ்ஞானி பொறுப்பு இல்ல.//

        இதில் ஏனய்ய இஸ்ரொ விஞ்ஞானிகளை இழுக்கிறீர்!நான் சொல்வது அரசியல்வாதிகளையே!

        //இப்போ மன்கல்யன் மூலமா அடுத்த பத்து வருசத்துல நாம அனுப்பற செயற்கைகோள் எல்லாத்துலயும் பத்து கோடி சேமிக்க முடியும்னா என்ன சொல்வீங்க (இது உதரணத்துக்கு சொல்லப்பட்ட பாயிண்ட். என்ன என்ன பயன்கள் என்பது இன்னும் ஒffஇசிஅல் ஆக சமர்பிக்கப்படவில்லை)//

        பட்டுகோட்டைக்கு வழி கேட்டால், கொட்ட பாக்கு எட்டணா என் கிறீர்! என்ன பயன் என்று அப்புறம் சொல்லுங்கள்!நாங்கள் வயிற்றில் ஈரதுணியுடன் காத்திருக்கிறோம்!

        //கடைசியா ஒண்ணு கேக்கறேன். அப்படியே இஸ்ரோ புட்கெட் அக் புடிங்கி, மக்களுக்கு, மக்கள் தேவைகளுக்கு, முன்னிரிமை கொடுத்து, புட்கெட் போட்டுட்டா? அடிக்காம எல்லா பணமும் மக்களுக்கு வந்துடுமா? சொம்மொன்நெஅல்த் போட்டில கூட தான் ஊழல் நடந்தது. அப்போ விளையாட்டு துறைய மூடிட்டு, அந்த காசையும் புட்கெட் ல மக்கள் திட்டத்துக்கு சேதுடலமா? //

        அடிக்காம எல்லா பணமும் மக்களுக்கு வந்துடுமா? இஸ்ரொவிலும் அடித்து கொண்டிருக்க்வில்லையா?

        //அரசியல்வாதி கொள்ளை அடிப்பது. அத காலி பண்ணாலே, எல்லாம் நல்ல படியா நடக்கும். நதி நீரையும் இணைக்கலாம்…//

        கலாம்….கலாம்…அப்புறம் ராக்கெடும் உடலாம்.

        //அது அடிப்படை இன்fஎச்டிஒன் அக் அழிக்காம சும்மா ச்ய்ம்ப்டொம்ச்கு வைத்தியம் பாத்தா மாதிரி தான். ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை.//

        மிக்கநன்றி அய்யா!

       • //ஏங்க அரசியல்வாதி கொள்ளை அடிப்பதும், இஸ்ரோக்கு நிதி ஒதுக்குவதும் எப்படி ஒண்ணாகும்? கேடு கெட்ட அரசியல்வாதி மக்கள் நல திட்டத்துல கொள்ளை அடிக்கறான். இஸ்ரோ காச பிடுங்கி மக்கள்கிட்ட குடுன்னு புட்கெட் போட்டா அதுலயும் அடிப்பான். கண்ணும் போச்சு, கையும் போச்சு//

        அந்த கேடு கெட்ட அரசியல்வாதி இச்ரொ காசில் கொள்ளையடிப்பது இல்லையா? இச்ரொ வின் முன்னாள் தலைவருக்கும், இப்போதைய தலைவருக்கும் து பற்றி மோதல் ஏற்பட்டு விசாரணையும் நடந்ததே! பொது துறை பனிறுவனங்கள் அனைத்திலும்நடக்கும் ஆர் அன்ட் டி பற்றி, ஒரு விசாரணை கமிஷனே போடலாம்! இவர்கள் இன்டிஜனைஸ் பண்ணிய டெக்னாலஜி என்னென்ன என்று கேள்வி கேட்டால், நாடு வெளங்கிடும்!

        //நாங்க இப்படி இருக்கும் போது நீ எப்படி இந்த மாதிரி பண்ணலாம்னு இஸ்ரோவ கேக்கறது, எல்லாம் கேனத்தனம். அது அடிப்படை இன்fஎச்டிஒன் அக் அழிக்காம சும்மா ச்ய்ம்ப்டொம்ச்கு வைத்தியம் பாத்தா மாதிரி தான். ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை.//

        நீங்க நடத்துஙக அய்யா! ஒண்ணுக்கும் பிரயோஜனம் இல்லை !!!!!!!!!!!!!!

        • என்ன தான் உங்களுக்கு பிரச்சனை? நீங்க வயுத்துல ஈரத்துணி கட்டிக்கிட்டு இருக்கறதுக்கும், இஸ்ரோகும் என்ன சம்பந்தம்? இத தெளிவா சொல்லுங்க? இஸ்ரோ உங்ககிட்ட வந்து காச புடிங்கிட்டு போச்சா? அலை கற்றை ஊழல்னு தேஞ்ச ரெகார்ட் பாடாதீங்க.

         உங்களுக்கு என்ன தான் வேணும் சார்? இப்போ இஸ்ரோ என்ன பண்ணனும்னு சொல்றீங்க? அரசியல்வாதி இஸ்ரோ காசுலயும் அடிக்கறான். அலை கற்றை ஊழல்ல இஸ்ரோ முன்னாள் தலைவர் சம்பந்த பட்டார். அதுக்காக இஸ்ரோவ என்ன பண்ணனும்னு சொல்ல வரீங்க? இழுத்து மூடிடனுமா? இப்போ விவசாயி கஷ்டபட்ரதுனால இஸ்ரோ வேண்டாமா? சொல்லுங்க சார்.

         • அறிவு ஜீவி சந்துரு அவர்களே! எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை! சந்திரயாண், மங்கள்யான் திட்டங்கள், தனது உள்கட்டுமான பணிகளுக்கு அன்னிய செலாவணிக்கு பிச்சையெந்தி இருக்கும் நாடு, பருவமழையின்றி, தண்ணீரின்றி விவசாயம் அழிந்து வரும் வேளையில் செயல்படுத்தும் திட்டமல்ல! எந்த மக்கள் நல அரசும் அதை செய்யாது!

          மற்றபடி அய் எஸ் ஆர் ஓ பற்றி நன்றாக அறிவேன்! இணைந்து பணியாற்றியுள்ள காரணத்தால்!

          சீனியாரிட்டி அடிப்படையில் அல்லாது, தகுதி, திறமை காரணம் சொல்லபட்டு, மற்றொரு மூத்த அதிகாரியை ஓவர்லுக் செய்து, தலைமை பதவியை அடைந்தவர், ஒரு தனியார் நிறுவனத்துக்கு அலைகற்றை முழுவதும் இலவசமாக, ரகசியமாக வழங்கியது, அவருக்கு பின் வந்த விஞ்ஞானியாலேயெ கூறப்பட்டது! அஜாதசத்ருவால் அல்ல! மற்ற நெர்மையான விஞ்ஞானிகள் மீதும் அல்ல! இதிலும் அரசியல் உண்டு என்பது இந்த பாமரனின் கருத்து!

          இந்திராவின் மறைவிற்குபின், இந்தியாவின் மூலதனம் அமெரிக்காவில் குடியேறியுள்ளது !
          பங்கு சந்தையில் கொள்ளயடிக்க மட்டுமே முதலீடு வருகிறது! நமது பாரம்பரிய விவசாய்ம் அழிந்து வருவதையும், விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும் பற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு என்ன கவலை!

          எதற்கெல்லாம் முன்னுரிமை தரப்படல் வேண்டுமோ அவையெல்லாம் புறக்கணிக்கபடுகிண்றன என்பதே என் வாதம்!

          சந்திரயான், மங்கள்யான், அணுசக்தி இவை நமக்கு தீபாவளி பட்டாசுகளே! அடுத்து அடொமிக் எனெர்ஜி அம்பிகள் வரிந்து கட்டிகொண்டு வருவார்கள்! நமது அணு சக்தி கொள்கை அணு ஆயுத உற்பத்திநோக்கத்தில் செய்யபடுபவையே! கூடங்குளத்தை பேரபாயத்தில் ஆழ்த்தி தமிழ்னாட்டுக்கு கிடைப்பதோ 560 மெகா வாட்டுகளே! அதுவும் பன்னாட்டு முதலாளிகலின் நுகர்வுக்கே! சூரிய சக்தியும், காற்று சக்தியும், கடலலை சக்தியும் வற்றாமல், யாருக்கும் ஆபத்தில்லாமல் கிடைக்கும்போது அதற்கு முன்னுரிமை தரலாம்!

          இந்தியா பாகிஸ்தான் போரை திணித்தால், அமெரிக்க-இஸ்ரேல் முதலாளிக்கு லாபம்! ஆப்கானிஸ்தான் போரினால் நமக்கு நஷ்டம்- இயற்கை எரிவாயு ஒப்பந்தம் நின்றுபோனது-அமெரிக்கா விற்கு லாபம் என்ரொன் பயனடைந்தது-உற்பத்தி செய்யாத மின்சாரத்திற்கு மக்கள் வரிப்பணம் தானம்!

          இப்படி பல நினைவுகள்!

          • அய்யா என் வாதம் முற்றிலும் வேறானது. இஸ்ரோவின் கடமை என்ன? விண்வெளி ஆராய்ச்சி. விண்வெளி சம்பந்தமான அனைத்து விசயங்களிலும் தன்னிறைவு அடைதல். அதன் மூலம் தேசத்துக்கு தேவையான பணிகளை செய்தல் (தொலைதூர கல்வி, புயல் எச்சரிக்கை, தொலைதொடர்பு போன்ற அனைத்தும் இதில் அடக்கம்).

           சந்திரயான், மங்கல்யான் போன்ற வற்றினால் இஸ்ரோவுக்கு, அதன் கடமைக்கு துளியும் பயன் இல்லை என்று தாங்கள் திட்ட வட்டமாக, ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? விவசாயிகளுக்கு, பாமர்களுக்கு உடனடியான பயன் இல்லை என்று வேண்டுமானால் நிரூபிக்க முடியும். இதன் மூலமாக நாளை ஒரு தலைவன் உருவானால்? இதை இந்தியாவால் செய்ய முடியும் போது, ஏன் இன்னும் வறுமையை அழிக்க முடியவில்லை? அதை நான் செய்கிறேன் என்று அவன் வருவதற்கு, இது அஸ்திவாரமாக அமைந்தால்? இல்லை ஆப்கானிஸ்தான் நம்மிடம் வந்து எனக்கும் செயற்கைகோள் அனுப்ப முடியுமா? என்னால் முடியாது. நான் அமெரிக்காவை அண்ட விரும்பவில்லை. பதிலுக்கு நீ எரி பொருள் குழாய் போட்டுக்கோ என்று சொன்னால்? அப்போது இஸ்ரோ தன் கடமையை செய்யவில்லை என்று வாடிட முடியுமா?

           என் கருத்து மிக எளியது. இஸ்ரோ தன் கடமையில் இருந்து தவறவில்லை. இன்சாட், சாரல் என்று அது தேசத்துக்கு செய்ய வேண்டிய வேலையை செய்து கொண்டு, மங்கல்யான் செய்கிறது. இதில் எந்த தவறும் இல்லை. இதற்கு இஸ்ரோவை குறை கூறுவது முட்டாள்தனம். மங்கல்ய்யனுக்கு செலவிட்ட பணத்தை வேறு மக்கள் நல திட்டத்திற்கு பயன் படுத்தி இருக்க முடியுமா? நிச்சியமாக!!! அவ்வாறு செய்யாதது இஸ்ரோவின் குற்றம் அல்ல. மக்கள் நலனை முன்நிறுத்தி budget போடாதது, அரசாங்கத்தின் தவறு. அதற்க்கு இஸ்ரோவை விமர்சிக்க கூடாது. அதன் கடமையை இஸ்ரோ செவ்வனே நிறைவேற்றி வருகிறது. அதை மக்களுக்கு எடுத்து செல்லாதது அரசியல் அமைப்பின் தவறு. இரண்டையும் ஒன்றாக அணுக கூடாது. அவ்வளவு தான்.

         • விவசாயிகள் வயித்துல ஈரத்துணி கட்டிக்கொண்டு இருப்பதற்கும் இஸ்ரோவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்கள். இந்த வாதத்தைப் பரிசிலீயுங்கள்.

          விவசாயத்திலேயே அறிவியல் என்ற பெயரில் நடக்கும் கூத்துக்களை கவனியுங்கள். இந்தியா வாழைப்பழ விளைச்சலில் தன்னிறைவு கொண்ட நாடு. ஆனால் மைக்ரோசாப்ட் இந்திய வாழைப்பழ சந்தையில், தான் உருவாக்கிய மரபணுமாற்ற வாழைப்பழ பயிர்களை விற்பனை செய்ய களம் இறங்கியிருக்கிறது. இதற்கு அவசியம் என்ன? இந்தியா வாழைப்பழ மரபணுமாற்ற பயிரை வாங்க வேண்டியதன் நிர்பந்தம் என்ன? இதே நிலைமைதான் கத்தரிக்காயிலும். நுற்றுக்கும் மேற்பட்ட கத்தரி வகைகள் இருக்கிற பொழுது பிடி கத்தரிக்காய் எதற்காக? அல்லது யாருக்காக? அறிவியல் என்பதை வரையறுங்கள்? அது யாருக்கானது என்று சொல்லுங்கள்?

          இஸ்ரோவிலும் நாட்டுநலன் சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களின் திட்டங்கள் என்றைக்காவது செவிமடுக்கப்பட்டிருக்கிறதா என்று கேட்டுப்பாருங்கள். அல்லது ஒரு அறிவியல் கழகம் யாருக்காக செயல்படுகிறது என்று நீங்கள் நேரில் பார்க்க வேண்டுமானால் ஐஐடிக்காவது வாருங்கள். இங்கு செயல்படுகிற ஆராய்ச்சி பூங்காவால் ஐஐடியில் படிக்கிற மாணவர்களுக்கோ பேராசிரியர்களுக்கோ எந்தப் பலனும் கிடையாது. ஐஐடியில் உள்ள பல ஆய்வகங்களே உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி இருக்கிற பொழுது ஆராய்ச்சி பூங்கா யாருக்கானது என்று விளக்க முன்வர வேண்டும். இதே நிலைமை தான் இஸ்ரோவிலும். இஸ்ரோ செயல்படுத்துகிற பலதிட்டங்கள் நாட்டுக்கானவை அல்ல. குறிப்பாக தொலைத் தொடர்பு துறை. மேலும் ஏற்கனவே குறிப்பிட்டது படி, இஸ்ரோ உலகநாடுகளுக்கு மலிவான ஏவுதளமாக இருக்கிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு விளைநிலங்கள் தாரைவார்க்கப்பட்டதைப்போலவே தான்.

          விவசாயம் சாகடிக்கப்பட்டது என்பது ஒருபுறம் இருக்கட்டும். இந்திய அறிவியலுமே அப்படித்தான் இருக்கிறது. இந்தியாவில் பேண்ட பீ பத்து நிமிசத்தில் காய்ந்து விடும். ஆனால் நம்மால் இந்த சூரிய ஒளியைப்பயன்படுத்த முடியவில்லை. சூரிய ஒளிதகடுகளை நாம் அமெரிக்காவிடம் இருந்து வம்படியாக இறக்குமதி செய்யவேண்டும். இங்கு கேள்வி கேளுங்களேன் அறிவியலின் யோக்கியதையை!

          இதெல்லாம் நம்ம நாட்டுக்காரனுக்கு அக்கறை இருக்காது. ஏனெனில் அவனைப்பொறுத்தவரை வானவியல் அறிவியல் என்பது எலைட் அறிவியல். இன்னும் சொல்லப்போனால் ஆர்யபட்டா பிரம்மகுப்தான்னு கதைவிடுவாய்ங்க. நூற்றாண்டுகளாக சில கும்பலுக்கு வானவியல் என்பது கலாச்சாரம். ஆனால் அன்றிலிருந்து வறுமை என்பது வறுமை தான். அறிவியல் நம் நாட்டின் சூழ்நிலையை எவ்விதத்திலும் மாற்றவில்லை. ஆனால் சப்தரிசி மண்டலத்திலிருந்து மங்கள்யானுக்கு வந்திருக்கிறோம். இதுதான் தாம்பா இந்தியா!!!!

          • அய்யா நீங்கள் கூறுவது அனைத்தும் சரியான பாயிண்ட் தான். ஆனால் ஒரு இடத்தில மட்டும் நான் மாறுபடுகிறேன். பீடீ கத்திரிக்காயும், மைக்ரோசாப்ட் வாழைபழமும் நமக்கு கட்டாயம் தேவை இல்லை. நம்மால் சூரிய ஒளி தகடுகள் குறைவான செலவில் தயாரிக்க முடியவில்லை. நான் மறுக்கவில்லை. இதற்க்கு கட்டாயம் நாம் முயற்சி செய்ய வேண்டும். நிறைய வேலை இருக்கிறது.

           அனால் அதே சமயம், ஒரு துறை வேகமாக வளர்ந்தால் அதை தட்டி குடுக்க வேண்டும், தலையில் குட்டி நீ மட்டும் எப்படி எங்களை விட வேகமா போலாம்? ஒழுங்கா எங்க வேகத்துக்கு வா என்று சொல்வது மடத்தனம். இஸ்ரோவால் செவ்வாய்க்கு செல்ல முடியும் என்று செய்து காட்டி இருக்கிறது. சபாஷ். இந்த வேகம், இந்த வளர்ச்சி மற்ற துறைகளில் வேண்டும் என்று சொல்வது நமக்கு சரி. அதை விட்டு இப்போ செவ்வாய் எதுக்கு, ஒழுங்கா நமக்கு வேண்டியதை மட்டும் செய் என்று சொல்வது நம் வளர்ச்சிக்கு நாமே தடை செய்வது. இதே intelக்கு போட்டியா ஒரு இந்திய கம்பெனி processor தயார் பண்ணாலோ, இல்ல நம்ம ஊர் காளிமார்க் USல வித்தாலோ அதுவும் வளர்ச்சி தான். நம்ம ஊர் விவசாயி இந்த பிரச்சனை இல்லாம வாழ்றதும், நம்ம தேயிலை தோட்ட தொழிலாளிகள் அந்த தோட்டத்துக்கு முதலாளி அகறதும் வளர்ச்சி தான்.

           வளர்ச்சி என்பது துறையை பொருத்து மாறும். ஒரே அளவுகோலை எல்லாத்துக்கும் உபயோகிப்பது தவறு. நாம வாழைபழ உற்பத்தியில் தன்னிறைவு கொண்ட நாடு. ஆனா இன்னும் பல விவசாய துறைகளில் பின்தங்கி இருக்கோம். இன்னும் கலப்பை வெச்சு, தனியா நிலம் உழுது தான் விவசாயம் பண்றோம். கூட்டுறவு விவசாயம் நல்லதுன்னு தெரியும். அமுல் சிறந்த எடுத்துகாட்டு. ஆனா பல இடங்களில் அது நடப்பது இல்லை. விவசாயிகளுக்கு இதை கொண்டு சேர்ப்பதும் வளர்ச்சி தான். பல இடங்களில் நாம் பின் தங்கி இருக்கோம். அதுனால நம்மால் ஒலகத்தோட போட்டி போட முடியற இடங்களை விட்டு விடனும் என்று சொல்வது தவறு. எல்லா எடத்துலயும் நாம் உலகத்தில் சிறந்தது என்று வரணும். வர்றவன திட்ட கூடாது. அதை எல்லா எடத்துக்கும் எடுத்துட்டு போகணும்.

         • முக்கியமான கேள்விய விட்டுப்புட்டேன். மேற்படி என் வாதத்தின் படி இஸ்ரோவின் மங்கள்யானும் மைக்ரோசாப்டின் மஞ்ச வாழைப்பழமும் இந்தியாவிற்கான அறிவியல் பங்களிப்பு என்று எடுத்துக்கொள்ளலாமா? அப்படி எடுத்துக்கொண்டால் பயனாளிகள் யார் என்பதை விளக்குவீர்களா?

          • அறிவியலோடு பயன்பாடு என்ன என்று இயற்பியல் படித்த ஒருவர் கேட்கிற்றார் என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை

           நீங்க இயற்பியல் எதுக்கு படுசீங்க , அதனால் யாருக்கு என்ன பயன் . விவசாய கல்லூரியில் சேர்ந்து இருந்தால் மனித குலம் பயன் அடைந்து இருக்கும் .

           நீங்க E = mc 2 மாதிரி பேரண்டத்தை கணக்கிடும் ஒரே சமன்பாட்டை கண்டுபிடுச்சு யாருக்கு என்ன ஆகா போகுது .

           கிரேக்கர்கள் முட்டாள் தனமாக கூம்பு ஒன்றை விதம் விதமாக வெட்டி ஒவ்வொரு வடிவத்தையும் ஆராய்ந்து கொண்டு இருந்தார்கள் . அதனுடைய பயன்பாடு ஆயிரம் வருடங்களுக்கு பிறகு கெப்லர் என்பவருக்கு பயன்பட்டது .

           மதம் மட்டும் தான் மனிதனை சிந்திக்க விடுவதில்லை என்று நினைத்து இருந்தேன் . கம்யூனிசமும் குதிரையின் கண்ணுக்கு போடும் கடிவாளம் போன்றது போல , ஒரே நீர்கொட்டில் பார்க்க வைக்கிறது என்பதை தெளிவாக புரிந்து கொண்டேன்

           வருத்ததுடன் ….

         • சீனாவோட முதல் ராஜா புத்தகத்துநாளையும் , படுச்சவங்கனாளையும் ஒரு பிரயோசனமும் இல்லை அப்படின்னு உயிரோட எரிசுட்டான் .

          அரிசி விளையரதுக்கு ஆள் வேணும் , சண்டை போடறதுக்கு ஆள் வேண்டும் இந்த புத்தகம் படிக்கிறதுனால என்ன பிரயோசனம் . அதை படுச்சுட்டு நாம் அப்படி பண்ணலை இப்படி பண்ணலைன்னு குறை சொல்றாங்க அதனால … சமாதி கட்டிவிட்டான்

          அஜாதசத்ருவோட லாஜிக் ஆப்டிதான் இருக்கு . டைம் மெசின் இருந்தா அங்க அனுப்பலாம் .

          நீங்க என்ன சொல்ல வரீங்க என்கின்ற கோணத்திலேயே அவங்க படிக்க மாட்டாங்க, உங்களுக்கு எப்படி பதில் தரலாம்னு மட்டும்தான் யோசிப்பாங்க .

          அடுத்து தப்பா ஒரு கருது சொல்லிட்டா அதை ஒதுக்க மாட்டாங்க , அவங்க ஈகோ போய்விடும் .
          முயலுக்கு மூனுகால்தான், முடுன்ச்சா நாளுகால்னு புரிய வையுன்ங்க , நானும் ஒரு ஓரத்துல நின்னு பார்கிறேன்

         • நடுவில் கொஞ்சம் பதிகள் காணோம்! வினவின் திருப்பணி போலும்! தற்போது டைம்ஸ் ஆf இந்தியா செய்தி ஒன்றை சுட்டுகிறேன்!

          Even As Kailash Satyarthi’s Shared Nobel for Peace Brings Cheer, The Grim Reality Is That All Children Still Aren’t In School. Binoy Valsan & Christin Mathew Philip Find Children At Work On The Streets Of Chennai
          1.5 lakh child labourers in Tamil Naduhttp://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=NUMBER-DROPPING-CHILDHOOD-LOST-FOR-A-LIVING-1110201400202

       • ஐயா கற்றது கைமண்ணளவு !

        // இல்லையென்றால் சந்திர/சூரிய கிரகணங்களை ஒரு பாம்பு வந்து அவற்றை விழுங்குவதாக நம் முன்னோர்கள் கூறி வந்த கதையை நம்பிக்கொண்டு இருக்க வேண்டியது தான்.//

        இப்போது மட்டும் என்ன வாழுதாம்? தெரியாத சந்திர கிரகணத்திற்கு எத்தணை பூஜைகள், புனஸ்காரங்கள்?

        //பூமிக்கு என்று ஒரு ஆயுள் உண்டு. வருங்காலத்தில் பூமி அழியக்கூடிய வாய்ப்பும் உள்ளது. இதனால் மாற்று வழிகளை, மனிதர்கள் வாழத்தகுந்த கிரகங்களை பற்றிய ஆராய்ச்சி தேவை தான்.//

        அப்போ அம்பிகள் அடுத்த கிரகத்தில் பிளாட் போடபோகிறார்களோ!நன்று!னன்று!!

        //அறிவியல் ஆராய்ச்சிகளை வீண்வேலை என்று நிராகரித்தால் பின் நாம் இன்னமும் காட்டில் மிருகங்களை வேட்டையாடிகொண்டு இருக்க வேண்டியது தான்.
        பின் நமக்கும் காட்டு விலங்குகளுக்கும் வித்தியாசம் இருக்காது.//

        இப்போதே கிட்டதட்ட அந்தநிலைக்கு வந்துவிடவில்லையா! என்ன காடும் இல்லை, விலங்கும் இல்லையா, அதனாற்றான் மனிதர்களை வேட்டையாடுகிறோம்!!! இப்படி ஊழலும், மெகா ஊழலும் என்று போகிற போக்கை பார்த்தா ‘நமக்கும் காட்டு விலங்குகளுக்கும் வித்தியாசமே இல்லைதான்!

 11. இந்திய துணைக்கண்டத்தில் ஆயுத போட்டியை ஏற்படுத்தி,நம்மை எf16 வாங்க வைக்கவே. பாகிஸ்தானுக்கு அவற்றை இலவசமாக கொடுத்தது அமெரிக்கா!

  அவர்களின் அனியாய விலைக்கு ஒப்புகொள்ளாமல், அவற்றை எதிர்கொள்ள விலை குறைந்த மிரேஜ், ஜாகுவார் விமான படைகளை உருவாக்கி அப்போது சமாளித்தோமல்லவா!

  ஆனால், ராஜிவ் காந்திக்கு லஞச தூண்டில் போட்டு போபார்ஸ் பீரங்கி வாங்கியதில் நம்ம ஊர் தளபதி ஒருவரும் உடந்தை அல்லவா? சந்தி சிரித்த ஊழல் வழக்குக்கு பின்னரும் ஊழல் குறைந்ததா?

  வாஜ்பாய் காலத்திலும் கார்கில் சவபெட்டி ஊழல் முதற்கொண்டு, சாம்பிளுக்கு சில:
  பிஜெபி ஊழல்கள் சில துளிகள்….
  சவப்பெட்டி – US$ 337,500
  பெட்ரோல் பம்பு ஒதுக்கீடு (தன் சொந்த கட்சிக்காரர்களு க்கே)
  அனந்த் குமாரின் HUDCO ஊழல் Rs.14,500 கோடி
  VSNL விற்பணை – Rs.10000 கோடி
  சட்டீஸ்கர் நிலக்கரி ஊழல் Rs.1500 கோடி
  மபி நிலக்கரி ஊழல் Rs.30000 கோடி
  மகாஜன் மெகா 2G ஊழல் Rs.160000 கோடி
  இன்னும் ஏராளம் ஏராளம்……

  Read more: http://viduthalai.in/headline/88691-2014-10-04-10-11-01.html#comment-4905#ixzz3FWf33pxi

  • இஸ்ரோவின் வாணவேடிக்கை சும்மா வரவில்லை! எத்தனை ஏவுகணைகள் கடலில் விழுந்தன?
   கடைசியில், அப்துல் கலாம் உபயம், நம் பாதுகாப்பு துறைக்கு தேவையான கிரியோஜனிச் தொழில்நுட்பம் வரை பெற்றுவிட்டோம்!

   ஆபத்தான அணுசக்தி துறையிலும் இறங்கிவிட்டோம்! ஆனால் மதவாத ஆதிக்க வெறி பிடித்த சக்திகள், இவற்றைகொண்டு இன்னும் மக்களை அச்சுறுத்தி அடக்கியாளவே இவை பயன்படும்! இவை ஒன்றும் இலவசமாக கிடைத்த தொழில்னுட்பல் அல்லவே!

   பட்ஜெட் பற்றாகுறை காரணங்காட்டி ஒவ்வொரு அரசும், தங்கள் பங்குக்கு பொதுதுறையை ஏப்பம் விட்டனவே!

   தனியார், சிறுபானமை முதலீட்டுடன், பொதுதுறை நிறுவனங்களின் டைரெச்டர்கள் ஆகி, அவற்றை சுரண்டி சுரைகாய்கூடு ஆக்கிவிட்டனரே! இன்னும் பல சொல்லலாம்! வாணவெடிகள் சோறு போடாது! உழைப்புக்கு மதிப்பு கொடுக்காமல், சமூதாயம் முன்னேற முடியாது!

   அறிவு ஜீவிகள் அமெரிக்க சென்று அங்கு அடிமையாய் இருப்பார்கள், ஆனால் இங்கு ஒரு ஊழலற்ற, வேற்றுமையற்ற சமூதாயத்திற்கு உழைக்கமாட்டார்கள்! இந்துத்வா இவர்களையல்லவா நம்பியிருக்கிறது!

   டாடாகளும், அம்பானி, மிட்டல் வகையறா வெளினாட்டுக்கு, அவாளின் சட்டபடியும், சட்டபடி அல்லாமலும் கடத்திகொண்டு போன மூலதனம் (கொள்ளை?) எவ்வளவோ?

   பி ஜே பி க்கு 1600கோடியும், காங்கிரசுக்கு 800 கோடியும் ‘நன் கொடை’ கொடுத்தால், இவர்கள் ஆட்சிக்கு வந்ததும் விசுவாச கொடையாக கொடுப்பது எவ்வளவு? இவர்களின் பட்ஜெட் எப்படியிருக்கும்?

 12. அயல்நாட்டில் வசிக்கும் படித்த பிரிவினரை சுட்டுவதாக அம்பி எனும் பதம் பயன்படுத்தப்படுவது சரியல்ல என்றே நானும் கருதுகிறேன்.உயர் படிப்பு படித்து அயல்நாடு போவதோ, மேட்டிமைத் தனம் என்பதோ ஒரு காலத்தில் பார்ப்பனருக்கே உரித்தானதாக இருந்திருக்கலாம். ஆனால் இன்றைக்கு அது சந்துரு சுட்டுவது போல “ஒரு christian அல்லது USல இருக்கும் வஞ்சிக்க பட்ட திண்ணியம் வாசியாக இருந்தால்? இல்ல இலங்கை தமிழனா இருந்தா? எல்லாருமே அம்பி தானா?” சரியான கேள்விதான். வினவு அம்பி என்கிற வரையருப்பிற்கான தன்னுடைய காரணங்களை சொல்ல வேண்டும். அங்கு கருத்துரைத்தவர்களின் சிந்தனை சாதிய மரபில் வந்ததா அல்லது வர்க்க சார்பு இருக்கிறதா? இரண்டுமேயா?

  • என்னை பொருத்தவரை, நான் அம்பிகள் என குறிப்பிடுவது கிராமப்புற வாழ்வை அறியாத, நகர நுகர்வோர் கலாச்சாரத்தில் மூழ்கிய மக்களையே, இயற்கையாக பெரும்பான்மையாக பார்பனர்களும், அடுத்து மற்ற சாதியினரிடமிருந்து உருவான சுயுடோ பார்பனர்களும் தான்!அம்பி என்று ஒருமையில் சுட்டினால், அது யாரை என்றுநீங்கள் அறிவீர்கள்! அவரும் காரணப்பெயராகவே அதை கொண்டிருக்கிரார்!

   //அங்கு கருத்துரைத்தவர்களின் சிந்தனை சாதிய மரபில் வந்ததா அல்லது வர்க்க சார்பு இருக்கிறதா? இரண்டுமேயா?//

   இரண்டிமேயாம்! வினவு தனது கருத்தையும் விளம்பலாம்!

 13. NYT என்பது தயவு தாட்சணயமின்றி, தீர்மானமானதொரு முதலாளித்துவப் பத்த்ரிக்கைதானே? எருமை மாடு என்பது இங்கே’இளக்காரத்துக்காகக்’ குறிக்கப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை. இதில் வினவின் பார்வை தவறு என்றுதான் கொள்ளத் தோன்றுகிறது.

  கோவணம் கட்டிய ஒருவன் பிஸ்ஸா கார்னர் கதவைத் தட்டுவதுபோலவே இந்தக் கார்டூனின் அர்த்தத்தை நான் புரிந்துகொள்கிறேன்.

  • உங்களது பார்வைப்படியே வருவோம் புதிய பாமரன். கார்ட்டூன் வரைந்தவருக்கு இந்தியனை இழிவாகக் காட்ட விவசாயியை தேர்ந்தெடுக்கிறார் என்றால் நாமும் ஏன் விவசாயியை இழிவாகக் கருதுகிறோம்?

   ஒரு வேளை இதற்கு எதிர்வினை புரிகிறவர்கள் எங்களுக்கு வாழ்வு அளிக்கும் விவசாயிகளை மேட்டுக்குடியிடம் இரந்து நிற்பதைப் போன்று போட்டிருக்கிறாயே? ஏன்? என்று அவர்கள் முகத்திரைய கிழிக்கவில்லை. மாறாக கார்ட்டூனுக்கு பதில் சொன்ன பலபேர் நாங்கள் இப்பொழுது விவசாயம் செய்வதில்லை என்று பதில் அளித்திருக்கிறார்கள். சோத்துக்கு என்ன ஹார்டிஸ்க்கையா கடிச்சு திங்கறாய்ங்க? கருத்து சொல்லும் கனவான்களுக்கு கவலையெல்லாம் எப்படி ஒரு எலைட் குரூப்புக்கு இணையாக விவசாயியை நிறுத்த முடியும் என்பதுதான். இதன் அரசியலை நாம் வேறு எப்படி புரிந்து கொள்ள முடியும்?

   கார்ட்டூன் என்று மட்டும் இல்லை சொந்த வாழ்விலும் நடுத்தரவர்க்க மேட்டிமைத்தனம் இதைவிட கொடூரமாக இருக்கிறது. எடுத்துக்காட்டாக கொலைகார மோடியின் ஸ்வச்ச பாரத் திட்டம். இந்தியாவை தூய்மைப்படுத்துதலை வால்மீகி சாதியினர் வாழும் பகுதியிலிருந்து தொடங்கியிருக்கிறார் மோடி. அசுத்தம் என்றால் அது சேரிதான் என்பது பார்ப்பனியத்தின் பாலபாடம். ஆனால் தொழிற்சாலைகழிவுகளால் ஆறு நஞ்சாயிருக்கிறது. பார்ப்பனியத்தால் கங்கை புளுத்து நாறுகிறது. ஆனால் எந்த மக்கள் நகரத்தையே சுத்தப்படுத்துகிறார்களோ அவர்கள் வாழும் பகுதிதான் இந்திய நடுத்தரவர்க்கத்திற்கு அசுத்தம். அதில் சச்சின், சூர்யா, கமல் என்று கைக்கூலிகள் பட்டாளம் வேறு. இதன் பார்வைதானே அப்படியே கார்ட்டூனிலும் பிரதிபலிக்கிறது?

   • //. கார்ட்டூன் வரைந்தவருக்கு இந்தியனை இழிவாகக் காட்ட விவசாயியை தேர்ந்தெடுக்கிறார் என்றால் நாமும் ஏன் விவசாயியை இழிவாகக் கருதுகிறோம்? //

    விவசாயம் என்பதாக காட்டுகிறார்கள் . விவசாயம் அதுவும் மாடு பிடித்துகொண்டு காட்டுகிறார்கள் . அதாவது பத்தாயிரம் வருடங்களாக விவசாய் அப்படிதான் மாடு பிடித்து கொண்டு இருக்கிறான் . அமெரிக்காவிலும் அப்படிதான் இருக்கிறான் . அமெரிக்காவில் மாடுகள் தாமாக மேய்ந்து தனை சுத்தபடுத்தி கொண்டு தாமாக பால் தருகின்றனவா ?

    ஆனால் இந்தியா என்றால் மட்டும் அப்படி காட்டுவதன் மூலம் “நாகரிக விஞ்ஞான வளர்ச்சி அடையாத நாட்டை சேர்ந்தவர்கள் ” என்கின்ற கருத்தாக்கத்தை உருவாகுகிறார்கள் . இதற்கு பெயர் “stereotyping ” எனபது .

    இடம் பொருள் காலம் ஆகியவை சார்ந்து என்ன நோக்கத்தில் சொல்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளவேண்டும். பட்டை சோறு கதையில் ராஜா பட்டை சோறு கொடுத்தான். சோறு நல்லது தானே உயர்ந்த பண்புதானே என்று விவாதம் புரியாமல் உள்நோக்கம் என்ன என்று சிந்திக்க வேண்டும்.

    வெளிநாட்டவர்களோடு பழகி இருந்தீர்கள் என்றால் இது போன்ற நுட்பமான நையாண்டிதனத்தை உணர்ந்து இருப்பீர்கள் .

    ஏழை பணக்காரன் என்கின்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே அனைத்தையும் அலசுகிறீர்கள் . மன்னிக்கவும் இந்த இடத்திற்கு அது சுத்தமாக பொருந்தவில்லை

    • உங்கள் வாதம் அநியாயமாக இருக்கிறது இராமன்.

     ஒரு உதாரணம் தருகிறேன். பரிசீலியுங்கள். என்னுடைய குவாண்டம் இயற்பியல் பேராசிரியர் சூரிய கிரகணம் பார்த்துவிட்டு குளிக்கப் போகிறேன் என்று சொல்லிவிட்டு போனார். இது விஞ்ஞானமா? நாகரிகமா? இல்லை நீங்கள் சொல்கிற ஸ்டீரியோடைப்பா?

     விஞ்ஞானமே வளராத ஒரு நாட்டிலே விவசாயியைவைத்து வெளிநாட்டுக்காரன் இழிவுபடுத்துகிறான் என்றால் உங்கள் தார்மீக அறச்சீற்றம் எதன் மீது இருந்திருக்க வேண்டும்? ஒரு படித்த பார்ப்பான் இப்படி வெட்கமில்லாமல் கிரகணத்தைப்பார்த்து குளிக்கப் போகிறார்; மற்றொரு கூட்டம் மழைவரவில்லை என்று குளத்தில் இறங்கி குண்டியை நனைக்கிறது என்றால் அதுதானே நாகரிகமற்ற விஞ்ஞானமற்ற செயல்?

     நாம் கார்ட்டூனை விஞ்ஞானம், நாகரிகம் என்பதன் அடிப்படையில் விமர்சிக்க வேண்டுமென்றால் இதுதானே அடிப்படையாக இருக்கவேண்டும்?

     இதில் விவசாயியை மாட்டோடு சுட்டிக்காட்டினால் நீங்கள் சொல்கிற “நாகரிக விஞ்ஞான வளர்ச்சி அடையாத நாட்டை சேர்ந்தவர்கள்” என்ற கருத்துருவாக்கம் எப்படி சரியாக இருக்க முடியும்?

     நிதர்சனம் என்னவென்றால் நாகரிகம், கலாச்சாரம் என்ற பெயரில் இந்தியக்காரன் பலகழிசடைத்தனம் செய்வதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாது. ஆனால் மாட்டைப் பிடித்துக்கொண்டுவருகிற ஒரு விவசாயி உங்களுக்கு விஞ்ஞானத்திற்கும் நாகரிகத்திற்கும் அளவுகோலாக இருக்கிறார் என்றால் இதில் ஸ்டீரியோடைப் யார் பக்கம் இருக்கிறது?

     • உங்களுக்கு context புரிய வைக்க முடியவில்லை . அதை புரிந்து கொள்ளும் அளவுக்கான சூழ்நிலையை நீங்கள் இன்னும் சந்திக்கவில்லை

      கடைசியாக ஒரு தடவை சொல்கிறேன் . தவறு செய்து விட்ட மனைவியை நீங்கள் கண்டிப்பது வேறு , பக்கத்துக்கு வீட்டுக்காரன் கண்டிப்பது வேறு . தவறு செஇதுவிட்டவல் தானே யார் கண்டித்தால் என்ன ? என்ர்கின்ர ரீதியில் சிந்திப்பதை முட்டாள்தனம் என்று தான் கூற முடியும்

      • இராமன்,

       தாங்கள் முன் வைக்கும் கணவன்-மனைவி குடும்பப் பிரச்சினைக்கும் இந்திய செயற்கைக்கோள்-அமெரிக்க கார்டூனுக்கும் என்ன சம்மந்தம். சம்மந்தமே இல்லாமல் தாங்கள் உளறிவிட்டு எங்களுக்குப் புரிய வைக்க முடியவில்லை என்று ஒப்பாரி வைக்கிறீர்களே இது நியாயமா?

       • மனைவி தவறிழைத்ததை ஒப்புக்கொள்கிறார்…..ஆனால் அடுத்த வீட்டுக்காரன் என்ன கேட்பது…..கண்வனாகிய மக்களே கேடகட்டும் என் கிறார்! அப்படித்தானே ராமன்?

  • கார்ட்டூன் என்பதை கருத்துபடம் என்று எடுத்துக்கொள்ளாமல், ‘கேலிசித்திரம்’ என்ற, தாழ்வு மனப்பாண்மையால் வந்த புரிதலே, இந்த விவாதத்துக்கே காரணம்!

   ஆர் கே லக்ஸ்மணன் ‘ச்ரீமான் பொதுஜனம்’ என்று ஒரு சித்திரத்தை பயன்படுத்துவார், அப்பாவி ஏமாளியாக, கையில் ஒரு குடையுடன், என்னமோ நடக்குது ஒண்ணூமே புரியலே போன்ற பார்வையுடன்!

   அது போலவே இந்த விடயத்தை நாம் எடுத்துக்கொள்ள வேண்டும்! அமெரிக்காவை பொறுத்தவரை, அவர்களின் நுகர்வோர் பாதுகாப்பே இது போன்ற முதலாளித்துவ பத்திரிகைகள் கையில்தானுள்ளது!

   இங்கோ நிலமை வேறு! கருத்து சுதந்திரம் இன்னும் மலரவில்லை! காலனிய அடக்குமுறையிலிருந்து நேராக, இந்துத்வா தேசியவாத அடக்குமுறைக்கு அடிமைப்பட்டு வருகிறோம்!

   மக்களின் வாங்கும் சக்தி குறைவதாலும், அரசியல் உரிமை பற்றிய அறியாமையாலும், சிலர் அடாவடியே அரசியல் என்று இலக்கணம் படைத்துவிட்டதாலும், மாற்று சிந்தனை என்பதே தேசத்துரோகமாய், தீண்டதகாததாய் ஆகிவிட்டது!

   அரசு விளம்பரத்தைநம்பியே பத்திரிகைகள்நடத்த முடிகிறது! பாலியலே மக்களை கவர்கிறது! புதிய கலாச்சாரம், புதிய ஜனனாயகம் போன்றவை அஞ்சி ஒதுக்கப்பட்டு, ஆளும் வர்க்கத்திற்கேற்ற ஜால்ரா ஊடகஙகளே மக்களை ஆக்கிரமிக்கின்றன!

   சூட்டும் கோட்டும் போட்ட கனவானாக, அமெரிக்க, பிரிதானிய மக்களையே குறிப்பர், கார்ட்டூனிஸ்டுகள்! இந்தியர்களை நமது பாரம்பரிய விவசாய உடையில் குறிப்பது எந்த விதத்திலும் தாழ்வாகாது,நமது மனதில் அப்படியோரு தாழ்வு மனனிலை இருந்தாலொழிய!

   இந்திய மேட்டுகுடியினர் ஒருசிலர் சூட்டும், கோட்டும் போட்டாலும் , நமது கிராமப்புர விவசாயி கோவணத்திலேயே சுதந்திரமாக இல்லையா?

 14. இந்துவில் சாய்நாத் எழுதிய கட்டுரைகளின் மொழியாக்கத்தை வினவில் படித்து நாம் புரிந்துகொண்டிருக்கிறோம். இதே சாய்நாத் அதே கட்டுரையை நமது எம்ஜியாரில் எழுதி வினவு அதை மொழிபெயர்த்திருந்தாலும் அதே பொருள்தான் வரும். கட்டுரை என்பது வேறு. கார்ட்டூன் என்பது வேறு.

  இதே கார்ட்டூன் தினமலரில் வந்திருந்தால் அதற்கு ஒரு அர்த்தம் உண்டு. சாம்னாவில் வந்திருந்தால் அது வேறு அர்த்தம். முரசொலியில் வந்தால்? கருணாநிதி – அலைக்கற்றை ஊழலை முன்வைத்து பந்தாடப்பட்டிருப்பார். ஒரு சிங்களப் பத்திரிக்கையில் வந்திருந்தால்? ‘நாம் டம்ளர்ஸ்’ தமிழகம் முழுவதும் 40க்கு 40 பேனர் வைத்து விளாசித் தள்ளியிருப்பான்.

  நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை இந்தக் கார்டூனுக்குப் பதிலாக, கட்டுரையாக வெளியிட்டிருந்தால் ‘மன்னியுங்கள்’ என்று ஒரு வார்த்தையில் தப்பித்திருக்க முடியாது. கட்டுரையின் தவறுக்கு பெரிய விளக்கங்கள் தேவை. ஆனால் கார்ட்டூனுக்கு ஒரு மன்னிப்புப்போதும். மேலும் அவன் ‘வினவின் கருத்துப்படிதான்’ கார்ட்டூனை வெளியிட்டிருந்தால் அவன் ஏன் மன்னிப்புக்கோர வேண்டும்?

  ஏனென்றால் ‘எலைட்’ எனும் அந்த உறுத்தலான வார்த்தைதான். (நம்ம ஊரு எலைட்-பாரை வைத்து இதற்கு நான் அர்த்தம் கண்டுகொண்டேன்).

  வினவு எழுதியிருக்கும் இந்தக் கட்டுரையில் எங்கெல்லாம் ‘நியூ யார்க் டைம்ஸ்’ எனும் வார்த்தை வருகிறதோ அதையெல்லாம் ‘டெலிட்’ செய்துவிட்டுப் படித்தால்தான் பொருத்தமானதாக இருக்கும்.

  இந்தக் ‘கத்தி’ சமையல்காரரின் கையில் இருக்கிறதா அல்லது கொலைகாரன் கையில் இருக்கிறதா என்று வினவு விளக்கினாலொழிய மேற்கொண்டு விவாதிப்பது அர்த்தமற்றதாகிவிடும்!

  • // ஏனென்றால் ‘எலைட்’ எனும் அந்த உறுத்தலான வார்த்தைதான். //

   இந்திய தோட்டக்காரப் பயபுள்ளைக்கி எதுக்கு கோவணத்துக்கு மேல ஜீன்ஸ் என்கிறார்கள் அமெரிக்க முதலாளித்துவ கனவான்கள்.. எசமான்கள் சொல்றதுல என்னடா தப்பு, இவனுக்கு ஜட்டிக்கே வழியில்லை, ஜீன்ஸ் கேக்குதா.. (இது பதிவுக்கு ஆதரவாக இதுவரை இங்கே கூறப்பட்ட பதில்கள்)

   // இந்தக் ‘கத்தி’ சமையல்காரரின் கையில் இருக்கிறதா அல்லது கொலைகாரன் கையில் இருக்கிறதா என்று வினவு விளக்கினாலொழிய மேற்கொண்டு விவாதிப்பது அர்த்தமற்றதாகிவிடும்! //

   கத்தி யார் கையில் இருந்தால் என்ன.. அறுக்கப்போவது கோழியைத்தானே.. கோழிக் கொழம்பு வேணுமா வேணாமா..?!

   அமெரிக்க அம்பியும், ஏகாதிபத்திய எலைட்டும் ஊடிக் கொண்டால் எ.எ.உடன் சேர்ந்து கொண்டு அ.அ.வை அடி.. (இது பெரியாரிய-மாவோயியக் கொளுகையின் தத்துவார்த்த விளக்கம்)

 15. //ஆனால் இந்தியா என்றால் மட்டும் அப்படி காட்டுவதன் மூலம் “நாகரிக விஞ்ஞான வளர்ச்சி அடையாத நாட்டை சேர்ந்தவர்கள் ” என்கின்ற கருத்தாக்கத்தை உருவாகுகிறார்கள் . இதற்கு பெயர் “ச்டெரெஒட்ய்பிங் ” எனபது .//

  அவர்கள் உருவாக்குவது இருக்கட்டும்! நாலு மெட்ரொக்களை விட்டால்,நம் இளைஞர்கள் அமெரிக்கா, ஆஸ்திரிலேயாவுக்கு தானே ஓடுகிறார்கள்!

  //அதாவது பத்தாயிரம் வருடங்களாக விவசாய் அப்படிதான் மாடு பிடித்து கொண்டு இருக்கிறான் . அமெரிக்காவிலும் அப்படிதான் இருக்கிறான்//

  அமெரிக்க விவசாயமும், விவசாயியும் அங்கே எப்படி பாதுகாக்கப்படுகிறார்கள்? நாம் ஏன் விவசாயியை இழிவாகக் கருதுகிறோம்? விவசாயம் மனுவாதிகளால் ஏன் புறக்கணிக்கப்படுகிறது?

  //வெளிநாட்டவர்களோடு பழகி இருந்தீர்கள் என்றால் இது போன்ற நுட்பமான நையாண்டிதனத்தை உணர்ந்து இருப்பீர்கள் //

  அம்பிகளோடு பழகியே உணர்ந்து விட்டோம்! வெளினாட்டவர்களோடு வேறா?

  //ஏழை பணக்காரன் என்கின்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே அனைத்தையும் அலசுகிறீர்கள்…//

  ஏழ்மை அகலும் வரை அது தொடரத்தானே செய்யும் அய்யா! மனிதாபிமானம் மிக்கவர் வேலை அதுதானே அய்யா!

  மன்னிக்கவும்! உங்கள் வாதம் சுத்தமாக பொருந்தவில்லை!

 16. //இந்தக் ‘கத்தி’ சமையல்காரரின் கையில் இருக்கிறதா அல்லது கொலைகாரன் கையில் இருக்கிறதா என்று வினவு விளக்கினாலொழிய மேற்கொண்டு விவாதிப்பது அர்த்தமற்றதாகிவிடும்!//

  இன்னுமா புரியவில்லை? கத்தி கொலைகாரன் கையில்தான் உள்ளது! மேல்னாட்டு எலைட்டுகள் வாணம் விடுவது அவர்களின் சமூக கடமைகள் போக ‘விஞ்சியுள்ள ‘ உபரி கொள்ளை பணத்தில்!

  இந்தியா வளரும் நாடுகளின் ஆயுதப் போட்டியும், அணுசக்தி ஒப்பந்தங்களும், இஸ்ரோவின் (புவி ஆய்வு செற்கை கோள் த்விர்த்து) சமீபத்திய ஆய்வுகளும் வல்லரசுகளுக்கான பினாமி பட்ஜெட்டுகளே ! நாசா பட்ஜெட்டில் விழுந்த துண்டு, இந்திய பட்ஜெட்டில் பிரதிபலிக்கிறது! ஆதார் போல, இலவச சில்லறைக்காக பையோமெட்ரிக் சேமிப்பு திட்டம் போல பல பினாமி செலவினங்கள் முன்னுரிமை பெருகின்றன!

  இந்திய பணம் என்பது, இந்திய உழைப்பாளிகளின் பணமே! இந்திய முதலாளிகளின் லாபம், இவ்வளவு லஞ்ச லாவணியங்களுக்கு பின்னரும் ஈட்டியது அவர்களின் சொந்த பணமாக , வெளினாட்டுக்கு வெளியேற அனுமதிப்பது, பின்னர் வெளினாட்டு மூலதநத்துக்காக,நமது ஒரே சொசலிச கோவணமான தொழிலாளர் நல சட்டங்களை முடக்குவது என இந்த புதிய பொருளாதார கொள்ளை எங்கு போய் முடியும்?

 17. // ‘விஞ்சியுள்ள ‘ உபரி கொள்ளை பணத்தில்!//

  இந்த உபரி கொள்ளை பணம் நம் போன்ற மூன்றாவது நாடுகளில் பெட்ரொல், தங்கம், அன்னிய செலாவணி செலவுகள் (செயற்கையான நுகர்பொருள் செலவுகள்) மூலம் கொள்ளையடித்ததே! அமெரிக்க டாலர் மதிப்பு குறைந்ததால், அமெரிக்க அண்ணன் அடைந்த பாதிப்பை விட, இந்த தறுதலை தம்பிகளின் தலையில் இறக்கப்பட்ட சுமையே அதிகம்! இன்னிலையில், கோதானம் செய்தது மன்னிக்க முடியாத குற்றம்! இவ்வாண்டு அய் டீ கம்பனிகளின் லாபம் பன்மடங்கு என்றால், அவாளின் வாடிக்கையாளர்கள், முக்கியமாக பொது துறை நிறுவணங்கள், ஏமாந்தது என்றுதான் பொருள்!
  விவசாயிக்கு லாபமில்லை, தொழிலாளிக்கு லாப மில்லை, பொது மக்களின் வாழ்க்கை தரம் உயரவில்லை,நடுத்தர குடும்பங்களில் முன்பு ஒருவர் சம்பாதித்து குடும்பமாகநுகர்ந்தது போக, தற்போது இருவர் சம்பாதிக்க வேண்டியநிலை! குழந்தைகள் கல்வியோ கொள்ளையர் கையில்!
  ஏழை பணக்காரன் என்கின்ற ஒரு கருத்தை மையமாக வைத்தே அனைத்தையும் அலசுகிறேன், ஆனால் எனக்காக அல்ல!

 18. கும்பி கூழுக்கு அழுவுறப்போ கொண்டைக்கு பூ கேட்டுச்சாம்.மங்கள்யான்,சந்திராயன் எல்லாம் உட்டு அறிவியல்ல .வளர்றாங்களாம்.வளருங்கய்யா யாரு வேணான்னு சொன்னா.பெத்த புள்ளைய பட்டினி போட்டுட்டு சம்பாரிச்ச காசை குடித்தே காலியாக்கும் பொறுப்பில்லாத மூடனைப்போல சந்திரனில் தண்ணீர் இருக்கான்னு கண்டுபிடிக்க கோடிக்கணக்கில் செலவழிக்கும் அறிவாளிகள் முதல்ல எல்லார் வீட்டுலயும் குழாயில தண்ணீர் வர வைச்சுட்டு செவ்வாயில லட்சக்கணக்கான கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் ஆறாக ஓடியதான்னு ஆராய்ச்சி பண்ணா அது யோக்கியமா இருக்கும்.

  • தண்ணி பிரச்சினைய யார் தீர்கனும்னு கூட தெரியாம கூவுது தம்பி .அறிவியல் இல்லாம போனதால தான் பீரங்கி , துப்பாக்கி மற்றும் மின் தறி போன்றவற்றிற்கு நாட்டை இழந்தோம் .

   • ஆன்மீகம் என்ற பெயரில் மதவாத கருத்துக்களை புகுத்தி புத்தியை மழுஙகடிதது ஒரு பிழைப்புவாத கூட்டம்! அதனால் அறிவியல் சிந்தனை இழந்தோம்!

    • நாம் தாத்ஹாங்களுக்கு அறிவியல் சுத்தமா தெரியாது .
     அந்த பார்பான் தான் வட்டத்துக்குக் பரப்பளவு கண்டு பிடிக்கிற வித்தையும் , சூரிய கிரகணத்தை கணிக்கிற வித்தையும் அவனோட சாமியை நம்பிக்கையை வச்சு சொல்லி கொடுத்தான் .

     நமக்கு அறிவு இருந்து இருந்தா , அது மாதிரி கண்டு பிடிச்சு இது வெறும் உதார்டா அப்படின்னு சொலி இருக்கணும்.

     //புத்தியை மழுஙகடிதது/
     அதுக்கு முன்னாடி இங்க என்ன இருந்தச்சு ? புலவர்கள் கள்ளை குடுச்சுட்டு பாட்டு பாடிகிட்டு இருந்ததை தவிர ?

     • //அந்த பார்பான் தான் வட்டத்துக்குக் பரப்பளவு கண்டு பிடிக்கிற வித்தையும் , சூரிய கிரகணத்தை கணிக்கிற வித்தையும் அவனோட சாமியை நம்பிக்கையை வச்சு சொல்லி கொடுத்தான் .//

      இதென்ன புது கலாட்டா! வட்டத்தின் பரப்பளவை பார்ப்பான் தான் கண்டுபிடிச்சானா? பார்ப்பன் சூத்திரனுக்கு சொல்லி கொடுத்தானா?

      //அதுக்கு முன்னாடி இங்க என்ன இருந்தச்சு ? புலவர்கள் கள்ளை குடுச்சுட்டு பாட்டு பாடிகிட்டு இருந்ததை தவிர ?//

      அய்யோ பாவம்! யார் பெத்த புள்ளையோ!

   • மிகப்பெரிய அறிவியல் மேதையும் மாபெரும் பொருளாதார வல்லுநருமான ராமனுக்கு சாதாரண பேச்சு வழக்கு புரியாமல் போய் விட்டதே.

    அய்யா;இங்கு தண்ணீர் ஒரு குறியீடாக பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்தியாவில் ஐம்பது விழுக்காடு சிற்றூர்கள் எந்த ஒரு குடிநீர் ஆதாரமும் இல்லாத நிலையில் உள்ளன.

    பார்க்க;http://www.rediff.com/business/slide-show/slide-show-1-india-may-become-a-water-scarce-country-by-2020/20140319.htm

    பெருவாரியான சொந்த நாட்டு மக்கள் குடிநீருக்கு அலைமோதி திரியும்போது,போதிய நிதி ஒதுக்கி அவர்களுக்கு குடிநீர் வழங்காமல் கோடிகளை கொட்டி சந்திரனிலும் செவ்வாயிலும் தண்ணீரை தேடுவதை விட வக்கிரம் இந்த உலகில் வேறு ஒன்று இருக்க முடியுமா.

    இது போன்ற எரியும் பிரச்னைகள் ஆயிரமாயிரம் இங்கு உண்டு.கூரை,கரும்பலகை,கழிப்பறை இல்லாத பள்ளிகள்,ஓராசிரியர் பள்ளிகள்,வறுமை,வேலையின்மை,விவசாயத்திற்கு பாசன வசதியின்மை,போதிய மருத்துவ வசதியின்மை,போதிய மருத்துவர்களை உருவாக்க மருத்துவ கல்லூரிகள் துவங்காமை,ஊட்டச்சத்து குறைபாட்டால் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் இறந்து போவது,விவசாயத்திற்கு அளித்து வரும் உதவி [மானியம்] களை வெட்டிக் குறைப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம்.இதற்கெல்லாம் நிதி ஒதுக்க முடியவில்லை இந்த அரசாங்கத்தால். ஆனால் என்றோ வரப்போகும் பலன்களுக்காக [பூமியில் குடியிருக்க முடியாமல் போனால் செவ்வாயில் குடியேறுவார்களாம்]மங்கல்யானுக்கு கொட்டி அழ காசிருக்கிறது.வரிக்கு மேல் வரி போட்டு மக்களை கசக்கி பிழிந்து நிதி திரட்டுவது இந்த வக்கிர கூத்தை நடத்துவதற்குத்தானா.

    தமிழ்ல ஒரு நல்ல பழமொழி உண்டு.

    நாளை கிடைக்கும் பலாக்காயை விட இன்று கிடைக்கும் கலாக்காய் மேல்.

    ஓ,ராமனுக்கு இங்கிலிபிசுதான் புடிக்கும் இல்ல.மறந்துட்டேன்.அதுலயும் ஒரு புர்ர்ர்ராவெர்ப் ஐ எடுத்து வுட்றலாம்.

    A bird in the hand is worth two in the bush

    இது புரியாம ராமன் வெறுமனே குறியீடாக சொன்ன தண்ணீரை பிடித்துக்கொண்டு தொங்குவது சரியா.இதுல துப்பாக்கி, பீரங்கி,இல்லாமத்தான் நாடு அடிமையாச்சுன்னு கோவப்படுராறு.இன்னிக்கு துப்பாக்கி, பீரங்கி,சண்டைக்கப்பல்,சண்டை வானூர்தி எல்லாம் வச்சிருந்தும் காட் ஒப்பந்தத்துல கையெழுத்து போட வச்சு நாட்டை அடிமையாக்கிட்டானே.அதுக்கு என்ன சொல்லுவாரு.

    • ஒரு குடிகாரன் கையில் நூறு ரூபா இருந்துச்சா . குழத்தைக்கு பொஸ்தகம் வேணும்னு அம்மாகாரி அஞ்சு ரூபா வாங்கி கொடுத்தாளாம் . சாப்பாடு வாங்கி வாங்க அப்படின்னு புர்சன் கிட்ட சொன்னாளாம் .
     அவரு இருந்த காசை எல்லாம் குடுச்சுட்டு வீட்டுக்கு வந்தாராம் . இப்போ அவுங்க பொண்டாட்டி(திப்பு ) அடடா பொஸ்தகம் வாங்க கொடுத்த அஞ்சு ரூபா இருந்தா நல்லா சாப்புட்டு இருக்கலாமே இப்படி பணம் வீணா போச்சே அப்படின்னு கதறி அழுதாளாம்

     • ராமன்,உங்கள் துணைவியாருடன் ஏதும் சண்டையா.ஒரே பொண்டாட்டி எடுத்துக்காட்டா கதை சொல்றீங்களே.எதிர் வாதங்களை படிக்கும்போது வரும் உணர்வுகளை அப்படியே வீட்டில் வெளிப்படுத்தாதீர்கள்.சண்டைதான் வரும்.நாங்கதான் எதிர்க்கருத்து கொண்டிருப்பதால் உங்க கிட்ட வறுபடுகிறோம்.பாவம் அந்த சகோதரி என்ன செய்தார்.விட்றுங்க அவருடன் சண்டை போடாதீர்கள்.

      [சும்மா ஒரு நகைச்சுவைக்குத்தான் இது.கோவப்படாதீங்க.]

      குழந்தைக்கு வாங்கியது புத்தகம் அல்ல,பட்டாசு.

      அப்புறம் கொஞ்சம் நேரடியான வாதங்களை வைப்பது உத்தமம்.இப்படி எடுத்துக்காட்டு சொல்லி வாதிடுவது விவாதத்தில் வெல்ல வேண்டும் என்ற நோக்கிலான மலிவான உத்தி.

     • இவ்வளவு நேரம் வெண்ணை மாதிரி பேசிய இராமன், இப்ப வெளக்கெண்ணை மாதிரி வழுக்குராறு ! _____________

      திப்பு கேட்கும் கேள்வி :

      இது போன்ற எரியும் பிரச்னைகள் ஆயிரமாயிரம் இங்கு உண்டு.கூரை,கரும்பலகை,கழிப்பறை இல்லாத பள்ளிகள்,ஓராசிரியர் பள்ளிகள்,வறுமை,வேலையின்மை,விவசாயத்திற்கு பாசன வசதியின்மை,போதிய மருத்துவ வசதியின்மை,போதிய மருத்துவர்களை உருவாக்க மருத்துவ கல்லூரிகள் துவங்காமை,ஊட்டச்சத்து குறைபாட்டால் கர்ப்பிணி பெண்களும் குழந்தைகளும் இறந்து போவது,விவசாயத்திற்கு அளித்து வரும் உதவி [மானியம்] களை வெட்டிக் குறைப்பது என அடுக்கிக் கொண்டே போகலாம்.இதற்கெல்லாம் நிதி ஒதுக்க முடியவில்லை இந்த அரசாங்கத்தால். ஆனால் என்றோ வரப்போகும் பலன்களுக்காக [பூமியில் குடியிருக்க முடியாமல் போனால் செவ்வாயில் குடியேறுவார்களாம்]மங்கல்யானுக்கு கொட்டி அழ காசிருக்கிறது.வரிக்கு மேல் வரி போட்டு மக்களை கசக்கி பிழிந்து நிதி திரட்டுவது இந்த வக்கிர கூத்தை நடத்துவதற்குத்தானா.???????????????????

      துப்பு இருந்தா நேரடியா பதில் சொல்லுங்க இராமன்

   • இராமன் அண்ணாத்தே ,வெண்ணை மாதிரி பேசாதிங்க! இங்க மெட்ராஸ்சுக்கு வாங்க அப்ப தெரியும் உமக்கு! தண்ணி பஞ்சாயத்து பத்தி அப்ப பேசுவோம் !கங்கை-காவேரி இணைப்பு யாரு வேலை இராமன் அப்பி ? சென்னை மாநாகராட்சி வேலையா ? மோடி government வேலையா ? இது கூட தெரியாமா பெனாத்த கூடாது ! ________

 19. Mr இராமன் , இவர்[Thendral கேட்டுக்கும் கேள்வியின் நியாய அம்சங்களை பரிசிலனை செயாமால் ஏன்

  “அறிவியலோடு பயன்பாடு என்ன என்று இயற்பியல் படித்த ஒருவர் கேட்கிற்றார் என்றால் என்ன சொல்வது என்று தெரியவில்லை”

  என்று உளருகின்றிர்கள் ? அவர் எழுப்பும் கோள்வியின் பொருள் என்ன என்று கூடவா புரியவில்லை ? இந்திய அறிவியலின் பெரும் பயன் யாரை சென்று அடைகின்றது என்ற நியாயமான கேள்விக்கு, உங்களுக்கு சிறிதேனும் மனசாட்சி இருப்பின் பதில் அளியுங்கள்!

 20. நண்பர் ராமனும், சந்துருவும் இனிமேலும் பிடிவாதத்துடன் மூன்றுகால் முயலை பிடித்துக்கோண்டிருக்ககூடாது!

  இஸ்ரோவின் இன்சாட் ரக சாடிலிதள் வாணிலை ஆராய்ச்சிக்கும், அதன் மூலமாக விவசாயிக்கும் பயன்படுகிறது; பி எஸ் எல் வி ரகம் ஜி பி எஸ் செர்விசெஸ் மற்றும் ராணுவ செய்தி தொடர்புக்கு, அன்னியநாட்டின் தயவில்லாமல் செயல்பட பயன் தரும்! இவை திட்டமிட்டபடி இன்னும் முழுமையாக செயல்படுத்தபட வில்லை!

  அதற்குள் என்ன அவசரமோ, சந்திரயான், மங்கள்யான் என்று வேறு கிளைக்கு தாவிவிட்டது அய் எஸ் ஆர் வோ! அதன் டைரக்டர் கM அரசு அதிகாரிகளே! அது அரசுடனான எம் ஓ யு அடிப்படையிலேயே பட்ஜெட் செலவு கட்டுபடுத்தப்படுகிறது!

  இப்போது சொல்லுங்கள் நான் குறை கூறுவது கூறுகெட்ட மத்திய அரசின் திட்டமிடுதலையா? அல்லது சொன்ன வேலையை செவ்வனே செய்ய வல்ல நமது விஞ்ஞானிகளையா?

  உங்களுக்கு ஒன்று ந்ஜாபகபடுத்த விரும்புகிறேன்! மத்திய அரசின் பாபுக்கள்,நமது விஞானிகளைவிட, ராணுவ அதிகாரிகளைவிட அதிக சம்பளத்தை தாங்களேநிர்ணயித்து கொண்ட விபகாரம் சந்தி சிரிக்க வில்லையா?

  ஊழல் அரசியல்வாதிகளுக்கு இவர்கள் தயவு தேவைப்படுவதால் தானே, பதவி மூப்படைந்தவருக்கு பதவிநீட்டிப்பும், அவசரமாக ஒரு அவசர சட்டம் போட்டு, வழிகாட்டுநெறியை முடக்கி, ஒய்வு பெற்ற அதிகாரி தலமை செயலர் ஆக்க முடிகிறது?

  ஓய்வு பெற்ற நீதிபதிகளுக்கும், சியேஜிக்கும் லாபகரமான பதவி அளிக்கப்படும் என்றால், இவர்கள் அளித்த சேவை? எப்படியிருந்திருக்கும்?

  பொது துறை நிறுவணங்களின் டெக்னாலஜி டிரன்ஸ்fஎர் ஒப்பந்தங்கள், அவற்றின் ஆர் அன்ட் டி செலவுகள் பற்றி யாரேனும் ஆய்வு செய்திருக்கிறார்களா?

  • ஏங்க அப்போ சமீபமா அனுப்புன IRNSS, GSAT எல்லாம் என்னவாம்? இதுவரைக்கும் 23 புவி நிலை (geo stationary) செயற்கைக்கோள் இஸ்ரோ அனுப்பி இருக்கு. அது உங்க கண்ணுக்கு படாதே! நீங்களும் இஸ்ரோ விஞ்ஞானிகளை குறை கூறவில்லை, நானும் கூறவில்லை. இருவரும் ஒரே கருத்து உடயவர் தான். என்ன ஒரே இடத்தில் மட்டும் மாறுபடுகிறோம். நீங்கள் mangalyan, சந்திரயான் போன்றவை வீண் செலவு என்கிறீர்கள். நான் அவை நம் விஞ்ஞானிகளுக்கும், தேசத்துக்கும் நன்மையே என்கிறேன். அவளோ தான் வித்யாசம். இதற்குள் அரசியல் ஊழல், அரசாங்க குளறுபடி எல்லாம் கொண்டு வர வேண்டாம். நம் விஞ்ஞானி செய்த சாதனையை பாராட்ட வேண்டும்; உங்களுக்கு நம் அரசியல் வாதிகளின் மேல் என்ன கோபம் இருந்தாலும் விஞ்ஞானிகளின் பக்கம், அல்லது இஸ்ரோ எனும் organization பக்கம் அதை திருப்ப வேண்டாம். இதுவே என் கருத்து. அவர்கள் செய்வது வான வேடிக்கை என்பது உங்கள் கருத்தாக இருந்தாலும், அவர்கள் சட்ட விரோதமாக எதுவும் செய்யவில்லை. இதற்கு எப்படி அரசாங்கம் பணம் ஒதுக்கலாம் என்பதும் நீங்கள் அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய கேள்வி. இஸ்ரோவிடம் அல்ல. இது தான் என் கருத்து.

   • மனிதனின் தேடலை நிறுத்தக்கூடாது.

    நமக்கு அறியாத விடயங்களை அறிந்து கொள்ள முயற்சிப்பது தவறில்லை.

    அறிவியலை புறக்கணித்தால் நாம் அனைவரும் ஆதி மனிதர்களை போல் காட்டில் மந்தையாக விலங்குகளை வேட்டையாடி உணவு உட்கொள்ள வேண்டியது தான்.

    திரைகடலோடி திரவியம் தேடு.

    உலகம் முழுதும் பயணித்த பின் மனிதனின் அடுத்த இலக்கு விண்ணில் என்ன உள்ளது என்று இருப்பதில் தவறில்லையே. நம் முன்னோர்கள் கடல் தாண்டி சென்றதனால் தானே உலகின் பல மூலைகளில் தமிழர்கள் குடியேறினார்கள். அடுத்து மனித இனம் செவ்வாயில் குடியேறும் காலமும் வரும்.

    • //மனிதனின் தேடலை நிறுத்தக்கூடாது.//

     ரொம்ப சரி அய்யா! இதுவரை திண்ணையில் உட் கார்ந்து அடுத்தவன் உழைப்பில் அண்ணந்து பார்த்து தேடிக்கொண்டிருந்தோம்! காசு செலவில்லாமல்! இப்போது அன்னிய செலாவணி அல்லவா தேவைப்படுகிறது!

     //நமக்கு அறியாத விடயங்களை அறிந்து கொள்ள முயற்சிப்பது தவறில்லை.அறிவியலை புறக்கணித்தால் நாம் அனைவரும் ஆதி மனிதர்களை போல் காட்டில் மந்தையாக விலங்குகளை வேட்டையாடி உணவு உட்கொள்ள வேண்டியது தான்.//

     அதற்காகத் தான் ஆங்கில முறை பள்ளிகளை மூடி, இந்துத்வா கல்வி வருகிறதோ?

     //திரைகடலோடி திரவியம் தேடு.//

     நன்றாக சொன்னீர்கள் ! இந்தியாவில் படித்த இளைஞர்கள் வேலையின்றி திண்டாடுவதை கண்டு அவர்களுக்கு அறிவுறையா? அல்லது நமது பி எம் அன்னியநாட்டில் மடிப்பிச்சைக்கு சென்றதை கிண்டலடிக்கிறீர்களா?

     //உலகம் முழுதும் பயணித்த பின் மனிதனின் அடுத்த இலக்கு விண்ணில் என்ன உள்ளது என்று இருப்பதில் தவறில்லையே.//

     உலகம் முழுவதும் பயணித்த பின்னர்தானே! இங்கு பக்கத்து ஊருக்கு பஸ் விட சொல்லி போராட்டம் நடக்குது! அய்யா!

     // நம் முன்னோர்கள் கடல் தாண்டி சென்றதனால் தானே உலகின் பல மூலைகளில் தமிழர்கள் குடியேறினார்கள்.//

     ஆமாமய்யா! சமீபத்தில் கூட ஈழத்திலிருந்து நிறைய தமிழர்கள் சென்றார்களாமே!

     //அடுத்து மனித இனம் செவ்வாயில் குடியேறும் காலமும் வரும்.//

     உண்மைதான்! இவர்கள் ஆளுக்கு ஆள் அணுகுண்டு செய்து வைத்து கொண்டு, பம்முவதை பார்த்தால் அந்தக்காலமும் விரைவில் வரலாம்!நம்மை அதில் சேர்த்து கொள்வார்களா அய்யா, மங்களயானுக்கே திருப்பதியில் தீட்டு கழித்தவர்களாயிற்றே!

   • /சமீபமா அனுப்புன ஈற்ண்ஸ்ஸ், GஸாT எல்லாம் என்னவாம்? இதுவரைக்கும் 23 புவி நிலை (கெஒ ச்டடிஒனர்ய்) செயற்கைக்கோள் இஸ்ரோ அனுப்பி இருக்கு. அது உங்க கண்ணுக்கு படாதே!//

    அதுவும் பட்டது, அது அனுப்பாத இன்னும் பல திட்டங்களும் பட்டது!

    திட்டமிடப்பட்ட 50 செயற்கை கோள் ஏவுதலில்,நிறைவேறியது 50% தான்!
    முழுவதுமாக நிறைவேறினால் சில நட்புநாடுகளின் தொலைதொடர்பு தேவைகளையும், அவர்களின் சாட்டிலிட்டுகளை விண்ணுக்கு அனுப்பும் பணியும் நாம் வியாபார ரீதியில் செய்யமுடியும்!

    பணப்பற்றாக்குறையாலேயே திட்டங்கள் முடங்குகின்றன!

    திடீரென சந்திரய்யானும், மக்களயானும் முன்னுரிமை பெற்றது தான் ஆச்சரியம்!

    //நான் அவை நம் விஞ்ஞானிகளுக்கும், தேசத்துக்கும் நன்மையே என்கிறேன்.//

    இது உங்கள் கருத்து ! என்ன நன்மைகள் என்று இதுவரை நீங்கள் விளக்கவில்லை!

    நீங்கள் இந்தியாவில்தான் இருக்கிறீர்களா? சராசரி இந்தியனின் வாழ்க்கை போராட்டம் உங்கள் கண்ணில் படவில்லை போலும்!

    • ஏங்க எதுவுமே தோல்வியே அடைய கூடாதா? இல்ல எல்லாமே உடனே அனுப்பனுமா? இல்ல நாம சரிஇல்லாம தான் கொஞ்ச நாள் முன்னால 4 வெளிநாட்டு செயற்கைகோளை இஸ்ரோ வெற்றிகரமா எய்த்தா? உங்க satistics எல்லாம் எங்க இருந்து வருதுன்னு தெரிஞ்சா தேவல. ஏமாத்துகாரன் எல்லாருக்கும் ரொம்ப use ஆகும்.

     நான் என்ன பயன்னு விளக்கம் சொன்னாலும் நீங்க சராசரி விவசாயிக்கு என்ன பயன், எங்க நிலம் காயும்போது இது தேவையானு ஒரே ரெகார்ட் படுவீங்க. விடுங்க பாஸ். ஏதோ மத்தவங்க view ல இருந்து யோசிக்க இங்க யாராவது இருப்பாங்க அப்படின்னு நெனச்சி வந்தேன். உங்களுக்கு கும்புடு. கடிவாளம் கட்டின உங்க பார்வைக்கு கும்புடு. வினவு இருக்கற திசைக்கே கும்புடு. ஆள விடுங்க. என் பொழப்ப நான் பாக்குறேன்.

 21. இராமன் அவர்களுக்கு,

  வருத்தத்துடன் தாங்கள் எழுதிய பதிலை படித்தேன் இராமன். உண்மையில் உங்கள் பதில் வன்மத்துடன் இருக்கிறது. கேள்விக்கு பதில் சொல்லாமல் கம்யுனிஸ்டுகள் அறிவியலுக்கு எதிரானவர்கள் என்று வாந்தியை எடுத்து வைத்திருக்கிறீர்கள்.

  அறிவியல் யாருக்கு பயனுள்ளது என்ற கேள்வியை முதலாளித்துவத்தின் பார்வையிலிருந்தும் நாம் விளங்கிக்கொள்ளலாம். உற்பத்தி சாராத எந்த ஒரு படைப்பையும் முதலாளி மயிரளவும் மதிப்பதில்லை. நிதர்சனத்தில் மங்கள்யானும் சந்திராயனும் முதலாளிகளைப்பொறுத்தவரை வெட்டி செலவு என்பதை நீங்கள் பரிசீலிக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு கீழ்க்கண்ட ஆதாரங்கள் காணக்கிடக்கின்றன.

  1. அமெரிக்காவில் நாசா தொடர்பான நிதியை கார்ப்பரேட்டுகள் வெகுவாக வெட்டிச் சரித்திருக்கின்றனர்.

  2. விண்வெளித்துறை என்றில்லை பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி நிதியும் சுருக்கப்பட்டிருக்கின்றன.

  3. நிலவுக்கு விண்கலம் இனி அனுப்புவதில்லை என்று பெரியண்ணன் விழிபிதுங்கி பட்ஜெட் போடுகிறான்.

  ‘அமெரிக்க வழியில் இந்தியா’ என்று சொல்கிற நடுத்தரவர்க்கம் மங்கள்யானில் மாறுபட்டு நிற்கிறார்கள். இந்த முரண்பாட்டை எப்படி விளங்கிக்கொள்வதென்று தெரியவில்லை.

  இப்படிச் சொன்னவுடன் அமெரிக்கா நிறுத்திவிட்டால் இந்தியா பண்ணக்கூடாதா? என்று தேசிய முகமூடியை தாங்கள் அணியக் கூடும். தயவுசெய்து அப்படியொரு நிலையை எடுத்துவிடமாட்டீர்கள் என்றே கருதுகிறேன். ஏனெனில் அறிவியல் என்றுமட்டுமில்லை எந்தத் துறையிலும் இந்திய சுயசார்பு என்ற வாதத்தை தாங்கள் மருந்துக்கும் பயன்படுத்தியதில்லை. கார்ப்பரேட்டுகளின் வளர்ச்சிதான் வளர்ச்சி என்று கூவுகிற தாங்கள் இப்பொழுது தீடிரென்று தேசிய முகமூடி அணிந்துவிடமாட்டீர்கள் என்றே நம்புவோமாக.

  • இந்திய நிலைமைக்கு வருவோம். இந்தியாவில் அறிவியல் என்பது நீங்கள் நினைப்பதைப் போன்று படைப்பாற்றலுடன் மேதமையுடன் தொடர்புடையது அல்ல. பொருளியலில் இப்பொழுது வென்சர் கேப்பிடல் (துணிகர மூலதனம்) என்ற பதத்தை அறிவியலுக்குப் பயன்படுத்துகிறார்கள். குதிரையில் பந்தயம் கட்டுவது போய் ‘ஓடும் குதிரையில்’ பந்தயம் கட்டுவது தான் வென்சர் கேப்பிடல். இந்த வென்சர் கேப்பிடலின் கீழ் உயிர் தொழில் நுட்பம், பார்மா, மரபணுமாற்ற பயிர்கள், நானோ தொழில் நுட்பம் வருகிறது. எவ்வளவு நிதி போட்டால் எவ்வளவு எடுக்கமுடியும் என்பதுதான் முதலாளிகளின் அறிவியல் மீதான பார்வை. இதில் தாங்கள் சொல்கிற படைப்பாற்றல் கண்டுபிடிப்புகள் மருந்துக்கும் கிடையாது என்பதை ஏதாவதொரு காண்டக்ஸ்ட்டில் புரிந்து கொள்ள வேண்டியது உங்களது கடமையாகிறது.

   அப்படியானால் முதலாளிகளுக்கு சற்றும் உவப்பே இல்லாத மங்கள்யான் சந்திரயான் போன்ற திட்டங்களை நாம் பாராட்ட வேண்டுமே என்ற ஒரு கேள்வி வரும். ஆனால் நிதர்சனமோ வேறு. ஏழை-பணக்காரன் என்ற வர்க்கப்பார்வையை கூட விட்டுவிடுவோம். இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

   மனித சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் அறிவியலின் உடனடி உபவிளைவு. மங்கள்யான் திட்டத்தில