Thursday, June 30, 2022
முகப்பு கட்சிகள் அ.தி.மு.க தினமலரில் பாசிச ஜெயாவை பிய்த்து உதறும் வாசகர்கள் !

தினமலரில் பாசிச ஜெயாவை பிய்த்து உதறும் வாசகர்கள் !

-

ஜெயாவின் முதல் ஆட்சியில் துவங்கி இன்று வரை போயஸ் தோட்டத்தின் கோயாபல்ஸ்சாக ‘தொண்டு’ செய்து வருகிறது தினமலர். தற்போது மோடிக்கும் அதை அளித்து வருகிறது. மக்களின் நாடித்துடிப்பிற்கு எதிராக பொய்யுரைக்கும் தினமலரின் கைங்கைரியத்தில் அதன் வாசகர்கள் பலர் ராமசுப்பையர் உருவாக்க நினைத்த ராமராஜ்ஜியத்திற்கு எதிரான அறிவையும், உத்வேகத்தையும் பெற்றுவிட்டனர். தினமலரின் எதிர்மறை எழுத்து வாசகர்களிடம் நேர்மறை விளைவைத்தான் தோற்றுவித்திருக்கிறது. அந்த விதத்தில் தினமலர் தோற்று விட்டது.

இங்கே ஜெயா கைது குறித்து தினமலர் இணைய தளத்தின் செய்திகளில் மறுமொழியிட்ட வாசகர்களின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம். பாசிச ஜெயாவிற்கு எதிராக தமிழ் மக்கள் புத்தாக்கத்துடன் பேசும் இந்த கருத்துக்கள் ஒரு விதத்தில் கவிதையாகவும் இருக்கின்றன.

–    வினவு

________________

Tamilan – Chennai, இந்தியா

தமிழக மக்களின் போராட்டத்தைப் பார்த்து கர்நாடக நீதிமன்றம் மிரண்டுபோய் தீர்ப்பு வழங்கியதாக குண்டு கல்யாணம் பெரிய சவுண்ட் விட்டார்…பெண்கள் குத்தாட்டம் போட்டனர்… கடேசியில் எல்லாம் புஸ்ஸாகி விட்டது… அதிக ஆட்டம் அந்த ஆண்டவனுக்கே தாங்கமுடியலை.. அதான் ஜாமீன் கிடைக்கவில்லை…

__________________

S.KUMAR – chennai, இந்தியா

மகிழ்ச்சிக்கு எவ்வளவு ரேட் ? சோகத்துக்கு எவ்வளவு ரேட் ?

___________________

SENTHIL KUMAR – MADURAI, இந்தியா

இப்புடி அழுவுராகலே இவுகல்லாம் ஆருன்னு கேட்டோம். விசாரிச்சதுல தெரிஞ்ச்சு செத்தவீட்ல கூலிக்கு அழுவுரவகலாம்.

Debate 1____________________

Tiruvannamalai KULASEKARAN – AUSTRALIA

சுதர்சன ஓமம் நடத்தி்யதன் பலன் சூப்பர்

_____________________

selvarasu – k.kurichi

தி்ன்ன லட்டு எல்லாம் கக்கியாச்சா ?…..குத்தாட்டம் போட்டவளுங்க கொழுப்பு அடங்கிச்சா ?……அடங்காத அனகொண்டாவாச்சே !ஆடி அடங்கறது கொஞ்சம் சிரமம்தான் …….அட முட்டாள் அடிமைப்பட்டாளங்களா, போய் நாண்டுகிட்டு சாகவேண்டியதுதானே!

__________________

T.R.Radhakrishnan – Nagpur, இந்தியா

சிலர் சிரிப்பார், சிலர் அழுவார்,,,,நாங்க சிரித்துக் கொண்டே அழுகிறோம், அழுது கொண்டே சிரிக்கிறோம்……கொடுத்த காசுக்கு மேலே நவ ரசமும் காட்டுவோம்ல…..நாங்க வருங்கால கட்சி நிர்வாகிகள், மந்திரிகள்…..

____________________

Venkatesan Kuppusamy – Chennai,இந்தியா

சூட்டிங்கா… நான்கூட ஸ்டில்லோன்னு நினச்சேன்… சொல்லவே இல்லை……

_____________________

SURESH SUBBU – Delhi, இந்தியா

அஞ்சே நிமிஷத்துல ….. என் தாயெனும் கோவில காக்க மறந்துட்ட பாவியடி கிளியே ன்னு ஒப்பாரி வக்கிர அளவுக்கு கொண்டு வந்துட்டீங்களே….

____________________

Panchu Mani – chennai, இந்தியா

இவ்ளோ லட்ச கணக்கிலே பெண்கள் சாபம் கொடுக்கிறாங்களே. அம்மாவை உள்ள வச்சவங்க சந்ததிங்க எல்லாம் இந்த சாபத்திலேந்து பிழைக்கும் ன்னு நினைக்கறீங்க.

____________________

SURESH SUBBU – Delhi, இந்தியா

சாபம் குடுக்குறதுக்கு முன்னாடி குத்தாட்டம் போட்டாங்களே… அடிச்சாம் பாருயா அப்பாயின்மென்ட் ஆடர….. சூப்பர் டர்னிங் பாய்ன்ட்…. இதுக்கு தான் ஓவரா ஆட்டம் போட கூடாதுன்னு சொல்றது பஞ்சு மணி……. கூன்பாண்டிகள் இனி என்ன என்ன கூத்தெல்லாம் செய்யப்போரனுகளோ காமெடி ட்ரெக்லையே போனா பரவாயில்ல இனி சுப்ரீம் கோர்ட்டுல அப்பீல் பண்ணி விசாரணை வரைக்கும் செம ஜோக்க இருக்கும்

___________________

மதுரை விருமாண்டி – சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ

உங்கம்மா சாராயத்தை ஊத்தி கெடுத்த கோடிக்கணக்கான குடும்பங்களில் உள்ள பெண்களின் கண்ணீர் தான்.. உப்பும் தான்.. இது டிரெய்லர் தாண்டி.. மெயின் பிக்சர் இன்னும் இருக்கு…..மலையளவு உப்புத் தின்னா, கடலளவு தண்ணி குடிக்கணும்…..

________________

நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா

மூக்கறுத்து கரும்புள்ளி செம்புள்ளி குத்தி ஊர்வலமா வந்த மாதிரி ஆயிப்போச்சி அடிமைகள் நிலைமை .அடிமைப் பட்டாளத்தில் மூளை உள்ளவன் எவனும் இல்லை. மூளையோடு யோசிச்சு எவனாவது ஏதாவது சொன்னாத் தான் மம்மிக்கு பிடிக்காதே….

______________________

Reality – Sohar, ஓமன்

ஜாமீன் கொடுக்காதது எவ்வளவு நல்லது உள்ளே இருப்பவர்களுக்கு ? வெளிய வந்து எப்படி இன்னும் சொத்து சேர்க்கலாம்னு யோசிக்க டைம் கிடைச்சிருக்கு. இப்பவே வந்தாங்கன்னா அதுக்கு டைம் இருக்காதே..

____________________

Tiruvannamalai KULASEKARAN – AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )

அட குருமட்டை குண்டாந்தடியன்களா……. நடப்பது அதி்முக ஆட்சிதான் என்பதை மறந்துட்டீங்களா? மூடர்கூடமே, தன்வீட்டுக்கு எவனாவது கொள்ளி வைப்பானா ……..அடடடா இந்த மர மண்டைங்களுக்கும் குத்தாட்டம் போடற ……பு ……..பு ……புண்ணாக்குகளுக்கும் புரியவே மாட்டேங்குதே…….. ?……..தூத்தேறி!

________________________

அ தி மு க வழக்குறைஞர்கள், இப்படி அறை வேக்காடு போல் பேசுவது சமூகத்திற்கு கேடு. நீதிபதியின் தீர்ப்பு ஆதார பூர்வமாக வெளியிடப்படாமல் எப்படி ஜாமீன் கிடைத்துவிடும் என்று கூறமுடியும். வழக்குறைஞர்கள் 16 வருடங்களில் 160 வாய்தாக்களுக்கு பிறகு செய்த வாதங்களாகிய, பினாமி பெயரில் லாபம் சேர்க்கவில்லை, நகையை உருக்கி நகை செய்தார் என்பதெல்லாம் நகைச்சுவையாகவே உள்ளது. இதை விட பெரிய நகைச்சுவை அரசு வழக்குறைஞரின் பிற்பகுதி “ஆட்சேபனையின்மை ஒப்புதல்”. எத்தனை கோடி பேரம் பேசப்பட்டதோ “அம்மா” வுக்குத்தான் வெளிச்சம். தொண்டர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. நீங்கள்தான் எல்லாவற்றையும் செய்து கெட்ட விஷயங்களை மட்டும் அனுபவிப்பவர்கள். அ தி மு க முக்கிய புள்ளிகள் போராட்டத்திற்காக பணம் செலவு செய்தாகிவிட்டது அதை எப்படி வசூல் செய்வது என்ற கவலையில் அழுது கொண்டிருக்கின்றார்கள். சிலர் வீட்டில் உள்ள தங்கத்தை “வைத்து” விளையாடிவிட்டனர். “அம்மா” நாளை வந்தவுடன் சரி செய்து விடுவார் என்று ஊமை கண்ட கனவாகிவிட்டது. மாரடித்து அழுதால் ரூ2000/- + சேலை, ஜெயா டி வி க்காக கூட்டத்தில் அழுது பேசினால் ரூ1000/- என்று பலான செய்திகள் கதில் விழுகின்றன. டாஸ் மாக் மற்றும் பிரியானி கடைகள் விற்பனையை ஆய்வு செய்தால் நிலவரம் விளங்கும்.

______________________

Debate 2M Narasimman Munusamy – Coimbatore,இந்தியா

2ஜி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் திரு எ ராஜா அடைக்கப்பட்ட போது செல்வி ஜெயலலிதா அவர்கள் சொன்னது என்னவென்றால் ராஜாவை விடக்கூடாது என்றார். அதே ஊழல் வழக்கில் சிக்கி உள்ள செல்வி ஜெயலலிதாவிற்கு மட்டும் ஏன் இந்த அவசரம். சட்டம் தனது கடமையை செய்யும். சட்டத்திற்கு முன்பு எல்லோரும் சமம்.

____________________

Tamizhmagan – Singapore, சிங்கப்பூர்

மற்ற குற்றவாளிகள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. சசிகலா மம்மிஜியின் உடன்பிறவா சகோதரி.. சுதாகரன் மம்மிஜியின் வயிற்றில் பிறக்காத ‘ரத்து’ ( மொதல்ல தத்து அப்பால ரத்து ) பிள்ளை.. இளவரசி மம்மிஜியின் உறன்பிறவா ஆசை அண்ணி.. மொத்தத்துல இவர்கள் மம்மிஜியின் பினாமிகள் அல்ல.. மம்மிஜியின் தலைமையிலான ‘மன்னார்குடி மாபியாவின் தன்னிகரில்லா தளபதிகள்.

____________________

வயதில் மூத்தவர் ஜாமீனில் வெளியே வந்தால்.. வயது குறைந்து இளமை பூத்து குலுங்குமா…இல்லை நோய்கள் தான் காணாமல் போய்விடுமா…வெளிய வந்தாலும் குற்றவாளி கைதி… உள்ள இருந்தாலும் குற்றவாளி கைதி… எருமை போடுகிற சாணியில் முன்னால வந்த சாணி என்ன பின்னால வந்த சாணி என்ன…. எல்லாமே ஒன்னு தான்னு ஜாமீன் குடுக்காம இருந்து இருக்கலாம்… ஆனால் ஜாமீன் கேக்குறதுக்கு வக்கீல் லாலு வீட்டு மாட்டு கொட்டகை வரை போய் இருக்கவேண்டாம்……

______________________

டேய் அப்ரசன்டேடிவ்களா.. …இது தீபாவளி நேரம்…. கைதிக்கு இது தலை தீபாவளி… மாமியார் ஊட்டுக்கு சசி கூட போய் இருக்காங்க….பரப்பன அக்ரஹாரத்து வாசல்ல பட்டரைய போட்டு முறுக்கு அதிரசம் எல்லாம் சுட்டு கொண்டு போய் குடுங்க…. சசிக்கு பல்வலி இருக்குறதுனால குலாப் ஜாமுன், ரசகுல்லா மாதிரி உறிஞ்சு சாப்பிடுர அயிட்டம் செஞ்சு குடுங்க… என்ன புரிஞ்சுதா…

_____________________

ரெண்டு பேரு வாதத்தை மட்டுமே கேட்டு, யாரு சிறப்பா வாதாடுறாங்களோ அவங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்றதுக்கு இது என்ன சாலமன் பாப்பைய்யா தலைமையில் நடக்குற பட்டிமன்றமாய்யா? நீதிபதிக்குன்னு எந்த சொந்த கருத்தோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீக கடமையோ இல்லையா? அரசு வக்கீல் ஆட்சேபிக்கலைன்னா, நீதிபதிகள் ஏன் எதுக்குன்னு யோசிக்க கூடாதா? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா? நீதிபதிகள் என்ன மம்மிஜி கட்சிகாரனுங்க மாதிரி கூமுட்டைகளா? வக்கீல்ன்ற பேருல ஒரு பொறம்போக்கு சொல்லுது ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தலைன்னு’ அப்ப என்ன ..றதுக்கு 35 வயசான ஒரு ‘பச்சை குழந்தையை’ மம்மிஜி தத்தெடுத்தாங்களாம்? இன்னொருத்தன் ‘அந்த திருமணத்திற்கு பல கோடி செலவழிக்க பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு’ வாதாடுறான். அவனை எதால அடிக்கிறது? ஒட்டுமொத்த நாடே பாத்து வாய் பொளந்து நின்னுச்சே.. எவன் அப்பன் வீட்டு காசுல இந்த ஆர்ப்பாட்டம் பண்றானுங்கன்னு கேட்டுச்சே.. கோடிக்கணக்கான பேரு இங்க பிச்சை எடுத்து இருக்குரானுங்க, அவனுங்க வயித்துல அடிச்சு ஆடம்பரம் பண்றீங்கலேடான்னு நாடே காரித்துப்புச்சே.. அது இந்த பொ.போ. வக்கீலுக்கு தெரியாதா? இதையெல்லாம் கேட்டுகிட்டு குற்றவாளிகள் நாலு பேரும் ‘உத்தம புத்திரர்கள்.. பத்தரை மாற்று தங்கங்கள்னு.. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்னு’ கூவறதுக்கு நீதிபதிகள் என்ன இவனுங்க கட்சிகாரனுங்களை மாதிரி மூளை மழுங்கடிக்க பட்ட ஆயுட்கால அடிமைகளா?

__________________________

Reality – Sohar,ஓமன்

எல்லா பயப்புள்ளைகளுக்கும் ஒரே நினைப்பு…எல்ல நீதிபதிகளும் நம்ம பல கட்சி மன்னன் உதவாக்கரை செம்பு நாட்டாமை சரத் குமாரு மாதிரி தீர்ப்பு வருமுனு……

__________________

SURESH SUBBU – Delhi,இந்தியா

அக்காவும் தங்கையும் பெங்களூரு சிறையில் …. காலில் விழுந்து கிடந்த அடிமைகூட்டம் புன்னகையுடன் சிம்மாசனத்தில் …. வக்கீல் வண்டுமுருகன் களோ ஜாமீனை லாலுவின் மாட்டு தொழுவத்தில் சென்று வாங்கும் அளவுக்கு மிக பெரிய சாணி உருண்டைகள்….. இதற்கு இவர்களுக்கு ஒருநாளைக்கு 25 லட்சம் தண்டம் வேறு அழ வேண்டும்…இனி இந்த வண்டுமுருகன்கள் டெல்லிக்கு ஓட வேண்டுமா… தீபாவளிக்கு உள்ளேவா வெளியேவா…ஆனால் அதற்குள் ….. பலகாரம் சுட்டு குடுக்க தொண்டர்கள் என்ற காட்டுமிராண்டிகள் சிறை வாசலில் கடை விரிப்பார்களே என் கண்ணாளா….. எண்ணெய் தேய்த்து விட சசி அருகே இருக்கையில் எண்ணெய் செக்கை பரப்பன அக்ரஹாரத்தில் போட்டு எண்ணெய் எடுப்பார்களே என் பிராண நாதா … தீபாவளி குளியலுக்கு மகாமக குளம் இல்லை … ஆனால் சசியுடன் ஜலக்கிரீடை உண்டு…..ஐயஹோ என்ன செய்வேன்… தாயே இது என்ன சோதனை…..

________________

vasan pon – Chennai, இந்தியா

மிக சிறிய ஒரு வெள்ளைக்காரனின் படை எப்படி மிகப்பெரும் இந்திய மக்களை ஆட்சி செய்தது என்ற கேள்விக்கு பதில் இப்பொழுது ஜெயலலிதாவின் கைது மூலம் கிடைத்துள்ளது. அன்று வெள்ளை காரன் நம்மளை ஆட்சி செய்கிறான் என்ற உண்மையே நம் முன்னோர்களுக்கு தெரியாமல் இருந்தது. அதை அவர்களுக்கு விளக்கி புரியவைக்கவே பல ஆண்டுகாலம் ஆகிவிட்டது. இருந்தும் ஒரு சிலரே புரிந்து கொண்டு வெள்ளையனை எதிர்த்தார்கள். அவர்கள் போதிய ஆதரவின்றி வெள்ளை காரனால் கொல்லப்பட்டார்கள். இதே போல் தான் இன்றைய நெலைமை உள்ளது. இன்று நம்மை ஆட்சி செய்பவர்கள் பெரும் கொள்ளையர்கள் என்ற எண்ணமே நம் மக்களிடம் இல்லை. இவர்களால் தான் இந்திய மக்கள் ஊரு விட்டு ஊரு ஓடி பிழைப்பு நடத்துகிறார்கள், இவர்களால் தான் சாலைகள் சரி இல்லை , இவர்களால் தான் பல்கலை கழகங்கள் தரமிழந்து உள்ளன, இவர்களால் தான் பெரும்பாலான மக்கள் ஏழைகளாக உள்ளனர், இவர்களால் தான் நாம் இன்னும் அயல் நாட்டினை அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறோம், இவர்களால் தான் ஈழத்தில் நம் சகோதரர்கள் கொல்லப்பட்டார்கள் , இவர்களால் தான் பத்திரிகைகள் பொய் பேசுகின்றன, இவர்களால் தான் ஒழுக்கம் கெட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்கிற உண்மையே நம் மக்களுக்கு புரியவில்லை. நாட்டின் முன்னேற்றம் முக்கியம் என்ற எண்ணம் இல்லாமல் தமக்கு கிடைத்த (தம் பணத்தில் ) இலவசங்களை பெருமையாக சொல்லி கேவலமான அரசியல் வாதிகள் கைது செய்யப்படுவது எதிர்ப்பது நம் மக்களின் அறியாமையை காட்டுகிறது. கருணாநிதியின் சாதனை தான் ஜெயா. அவர் செய்த ஊழலின் காரணமாக ஆட்சியில் அமர்ந்தவர் தான் ஜெயா. ஜெயா வின் ஊழல் அட்டூழியம் அராஜகம் இவற்றின் காரணமாக வாய்ப்பு பெற்றவர் தான் கருணாநிதி. இவர்கள் இருவருமே தமிழர்களுக்கு தீங்கிளைதவர்கள். தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவர்களுக்காக பரிதாப படுவது வெட்கப்பட வேண்டிய செயல்.

_____________________

debate 3நான்தான் – பன்னிமடை கோவை, இந்தியா

இந்த ஜாமீன் வழக்கு ஒரு பதினெட்டு வருஷம் இழுக்கடிக்கப்பட்டா நல்லா இருக்கும். செரீனா கைது, சசிகலா கணவர் நடராசன் கைது, சுதாகரன் கைது, பாஸ்கரன் கைது, காடுவெட்டி குரு கைது, வீரபாண்டி ஆறுமுகம் கைது, ஆடிட்டர் கைது, வக்கீல் கைதுன்னு குண்டர் சட்டம் ன்னு சட்டத்தை கேவலமாக பயன்படுத்தியதுக்கு இப்போ அனுவவிக்குறார் 7402

___________________

ஊருல ஒரு நல்ல நீதிபதி இருந்தா உங்களுக்கெல்லாம் புடிக்காதே? எல்லோரும் நம்ம ரகுபதி மாதிரி கால்ல விழுந்து கும்பிட்டுட்டு தீர்ப்பு குடுத்தா, நீதி வென்றது, தர்மம் வென்றதுன்னு கூதாடுவிங்க….கர்மம்டா…..

___________________

diravida – chennai,இந்தியா

”சுதாகரன் பெரிய தொழில் அதிபர்.” – இதை கேட்டு ஜெயா கூட அவ்வளவு சோகத்திலேயும் வாய் விட்டு சிரித்து இருப்பார்.

________________

tamilselvan – london, யுனைடெட் கிங்டம்

ஒரு டிராபிக் போலீஸ் ஒருவனை சாலையில் சோதனை செய்கிறார் ….லைசென்ஸ் வைச்சி இருக்கியா ? வீட்டில் இருக்கு சார் …..இன்சுரன்ஸ் எடுத்து இருக்கியா….6 மாசம் முன்னாடியே எடுத்துட்டேன் சார் ….ஊது பாப்போம்…குடிச்சி இருக்கியான்னு தெரியனும்…குடிக்குற பழக்கமே இல்லே சார்…ஆனா ஊத மாட்டேன் சார் ………….இது தான் ஜெயலலிதா கேஸ் ….நிரபராதி என்றால்…எதுக்கு பேசிட்டு….டாகுமென்ட்ஸ் கொடுத்து….ஊதி காமிச்சிட்டு போக வேண்டியது தானே…..சொன்னதையே 18 வருஷமா சொல்லி கிட்டு….சின்ன புள்ள தனமா இல்லே…

_____________________

tamilselvan – london,யுனைடெட் கிங்டம்

பொய் வழக்கு என்றால்…அதை எதிர்க்கும் வல்லமை உங்கள் அம்மாவுக்கு இல்லையா ? 18 வருடங்கள் பொய் வழக்கை பார்த்தா 160 வாய்தா வாங்கினார் ? பொய் வழக்கை சந்திக்கும் திராணி இல்லையா ? ஒரு முதல்வரால் ஒரு பொய் வழக்கை எதிர்க்க முடியவில்லை என்றால்….ஒரு சராசரி குடிமகன் நிலை ? 18 வருடம் இழுத்தடித்து விட்டு இப்போது வயது ஆகிவிட்டது ஜாமீன் வேண்டும் என்று மனு……ஆக இறுதி வரை பொய் வழக்கு என்று சொல்லி கொண்டே காலத்தை ஓட்ட வேண்டியது தான் …

____________________

லாலு அவர்கள் ..ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கு பற்றி கிண்டலாக வட நாட்டு செய்தி சானலுக்கு அளித்த பேட்டியில்….ஜெயலலிதா வைத்துள்ள ரூபாய் 42 லட்சம் மதிப்புள்ள 750 ஜோடி செருப்பின் மதிப்பு தான் என் சொத்தின் மதிப்பு என்று கூறினார்…அப்போது கடுங்கோபம் கொண்ட ஜெயலலிதா….. இன்று அதே லாலு வழக்கை மேற்கோள் காட்டி ஜாமீனுக்கு கையேந்தி நிற்கும் பரிதாப நிலையில்….

_____________________

Kasimani Baskaran – Singapore,சிங்கப்பூர்

வாழும் மனித தெய்வத்துக்கு இழைக்க பட்ட அநீதி காரணமாக நாளை திருப்பதி முதற்கொண்டு எல்லா தெய்வங்களின் கோவில்கள் கதவடைப்பு .. கிரணத்துக்கு மூடுவதற்க்கு இப்படி ஒரு காரணம் சொல்லி கூட பாமர மக்களை ஏமாத்துவாஙக…

___________________

Nava Mayam – New Delhi,இந்தியா

இவுங்க வழக்கையும் காப்பாத்திக்க தெரியலை , அப்பன் சுப்பனுக்கெல்லாம் கிடைக்கிற ஜாமீனும் வாங்க தெரியலை ….இவுங்கதான் காவிரிக்காகவும் , முல்லை பெரியாருக்கும் வாதிட்டு காவிரியையும் , முல்லை பெரியாரையும் மீட்டு தந்தாங்களாம் , இதையும் நம்ப ஒரு கூட்டம் இருக்கு…இந்த கேசை எப்படி அன்பழகன் திறம்பட நடத்தினாரோ அதேபோல தான் காவேரியிலும் , முல்லை பெரியாரிலும் நீதி மன்றங்களில் திமுக ஒரு அஸ்திவாரத்தை உருவாக்கி வைத்தது… காக்கை உட்கார பனம்பழம் விழுந்த கதையாயுடுச்சி..

__________________

tamilan – Chennai,யூ.எஸ்.ஏ

பெங்களூருல பல்பு வாங்கினது பத்தாதா… டில்லிக்கு வேற போய் வாங்கனுமா … எதுக்கு இந்த அவசரம்… அங்கயும் வாங்குனா… அப்புறம் 4 வருஷம் கண்டிப்பா கம்பி எண்ணனும்… பதறுன காரியம் செதரிரும்… சொன்னா கேளுங்க…. நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறதுன்னு முறுக்கிக்கிட்டு நின்னீங்கன்னா…மொத்தமா நக்கிட்டு போயிரும்… இல்லை அங்கபோயும் பல்பு வாங்குவேன் என்ன பந்தயம் ன்னு கேட்டீங்கன்னா…. ஒன்னும் பண்ண முடியாது…best of luck……

____________________

பாதாளம் வரைக்கும் பாயும்ன்னு அசால்ட்டா இருந்துட்டோமேப்பா… பயபுள்ளைக பெஙகளுரு கோர்ட்டுகளை யெல்லாம் அதுக்கு கீழே கட்டி வச்சிருப்பானுக போலயிருக்கே…

_____________________

 1. தினமலர் ஜெயலலிதா கைதை எதிர்த்து எழுத அதன் வாசகர்கள் ஆதரித்து இருந்தால் மட்டுமே இந்த பதிவின் முன்குறிப்புக்கு அர்த்தம் உண்டு. தினமலர் ஜெயலலிதாவை கடந்த காலங்களில் கூட விமர்சித்ததுண்டு. அது பாச உரிமையுடன் கூடிய விமர்சனம். சில நேரங்களில் அது ஜெயலலிதாவுக்கு எரிச்சல் ஏற்படுத்தி வழக்குகளும் தினமலர் மீது ஜெயலலிதா போட்டதுண்டு. ஆனால், உள்ளார்ந்து தினமலர் எப்போதும் ஜெயலலிதாவை விட்டுக்கொடுக்காது. இந்த பிரச்சினையிலும் தினமலர் வாசகர்களின் கடிதங்கள் தினமலரின் அடிப்படை நோக்கத்துக்கு பங்கம் நேராமல் வெளியானவை என்று கருத வாய்ப்பு இருக்கிறது.

  ஜெயலலிதா கைதை பழம் நழுவி பாலில் விழுந்ததாக கருதும் இந்துத்துவர்களும் உண்டு. அரசியலில் அதிமுக தலைவியின் திடீர் இன்மையை சாதகமாகப் பார்க்கிறார்கள் இவர்கள். மேலே கருத்தை அளந்துள்ள வாசகர்கள் தினமலரின் இந்த நோக்கத்தை நிறைவேற்றுபவர்களா என்பதையும் கவனிக்க வேண்டும்.

 2. தினமலர் உள்ளிட்ட மற்ற தளங்களிலும் வேறு சிலரையும் பல காலமாக பிய்த்து உதறிக் கொண்டுதான் உள்ளார்கள். ஆனால், இவை தொகுக்கப்படும் பாக்கியம் அம்மாவுக்கு மட்டுமே கிடைத்துள்ளது!

 3. தினமலர் பஜக வுக்கு சொம்பு தூக்கி பல வருடம் ஆய்ச்சி, தவறே செய்தாலும் பஜகவை தினமலரும் அவர்கள் வாசகர்களும் விமர்ச்சிக்கா மாட்டர்கள்

 4. உண்மையே! அப்போதெல்லாம் மகிழ்ந்தேத்திய மகான் வெங்கடேசன் இப்போது வினவை காய்ச்சும் பாக்கியமும் கிடைத்துள்ளது! அம்பிகளுக்கு அம்மாவை விட்டால் வேறுநாதியில்லை, எவ்வள்வு அயொக்கியத்தனம் செய்தாலும்! இல்லையென்றால் அம்மா 20 வருடமாய் ஆட்சி (தர்பார்?) செய்ய முடியுமா? எல்லோருக்கும் தெரிந்த ரகசியம், நண்பருக்கு புரியாமலிருக்குமா?

  • அஜாதசத்ரு,
   இப்போதும் வினவை மகிழ்ந்தேத்திக் கொண்டுதான் இருக்கின்றேன்! ஒரு சில விஷயங்களில் மாறுபாடு எழத்தான் செய்கிறது. இந்து மதம் தொடர்பான வேறுபாடு எப்போதும் இருக்கிறது. மொத்தமாய் போகி நெருப்பில் போட்டு பொசுக்கவேண்டும் என்பது வினவின் கருத்து. அல்லன தள்ளி நல்லன ஓம்புதல் அடியேன் கருத்து. இப்போது இந்த அம்மா பிரச்சனை. ஜெ தண்டிக்கப் பட்டதில் எனக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால், ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளில், வினவு ஒன்றை மட்டும் மொத்தி எடுத்து விட்டு, மற்றதை லேசாக குட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. இது அம்மா ஜால்ராவாக தோன்றினாலும் பரவாயில்லை. அம்பி என அழைப்பினும் குற்றம் குற்றமே!

   அம்மா மூன்று முறை ஆட்சிக்கு வந்தது தமிழக மக்கள் ஓட்டு போட்டதினால். அதில் அடியேன் செயல் ஏதுமில்லை. எனது ஒற்றை ஓட்டுகூட வேறு மாநிலத்தில்!

   • //ஒரே குட்டையில் ஊறிய இரண்டு மட்டைகளில், வினவு ஒன்றை மட்டும் மொத்தி எடுத்து விட்டு, மற்றதை லேசாக குட்டுவதில் …….//

    அதெற்கென்ன செய்வது! எதிலும் ஒரு அளவோடு இருக்கணும்! ஆடிய ஆட்டமென்ன! 30 வயதில், ஒரு செல்வி திடீரென வலர்ப்பு மகனை ப் எற்றெடுத்து, அகில உலகும் வியக்க, ஆடம்பரம் செய்ததென்ன? இவருக்காகவே இந்தியா ஒரு அவசர சட்டம் கொண்டு வந்து, அன்பளிப்பு சட்டத்தை திருத்தியதென்ன? பிளசன்ட் ஸ்டே வழக்கு, ஜெயா புப்ளிகேசன் அரசுநிலம் வழக்கு , சிருதாவூர் வழக்கு என கொடிகட்டி பறந்து, உச்சனீதிமன்றமே வாய்பிளந்து மவுனித்த வரலாறு, அந்த பாகியம், வேறு யாருக்கும் கிடைக்க வில்லையே! இந்த குட்டு லேசானது என்பது தான் உங்கள் வருத்தமோ அய்யா!
    //அம்மா மூன்று முறை ஆட்சிக்கு வந்தது தமிழக மக்கள் ஓட்டு போட்டதினால். அதில் அடியேன் செயல் ஏதுமில்லை//
    எல்லாம் ப்ணம் செய்யும் செயல் என்றுதான் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்! இதுதான் பகவான் செயலோ?

 5. தினமலரோ,தினமலர் வாசகர்களோ,யாராக இருந்தாலும் ஜெ கைது தொடர்பான இவர்களுடைய கருத்துக்கள் அனைத்தும் ஜெவுக்குப் பின்னால் இருக்கும் அவர்கள் அனைவரும் அது எத்தனை கோடி ஜீரோக்களாக இருந்தாலும் ஜீரோக்கள்தான்.நம்பர் 1 ஆக இருந்த ஜெவும் இப்போது ஜீரோவாகிவிட்டர்.இவர்களின் எதிர்காலத்தை சூனியமாக்க வேண்டியது மேற்படி வாசகர்களை ஒத்த கோடிக்கணக்கான மக்களின் கடமை.ஜெவை மட்டுமல்ல இவர் போன்ற ஊழல்வாதிகள் அனைவரையும் தண்டிக்கும்வரை ஓயக்கூடாது.காரம் ஏறிய மூக்கில் விழுந்த தும்மல் போலாகிவிடக் கூடாது இந்த பரபரப்பு.இன்னும் ஒருசில இடங்கள் பாதாளத்துக்கும் கீழே இருக்கின்றன.அங்கே நீதி ஒளிந்து கிடக்கிறது.அதனை நீக்கமற நிறைந்திருக்கச் செய்ய வேண்டியது நாட்டுப் பற்றாளர்களின் கடமை.

 6. வெறி பிடித்த நாய்கலை பற்ரீ கவலை இல்லை,,,, மக்கள் இன்றும்,,, என்றும் அதிமுக தான்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க