Friday, March 24, 2023
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !

பரப்பன அக்ரஹாரமும் பன்றிகளின் ஏக்கமும் !

-

 

கார்ட்டூன் - நன்றி: The Hindu
கார்ட்டூன் – நன்றி: The Hindu

ன்றிகள் ஒருபோதும் வானத்தைப் பார்ப்பதில்லை, பார்த்தும் ஆகப்போவது ஒன்றுமில்லை.

ஜெயா பரப்பன அக்ரஹாராவில் செட்டில் ஆகி திரும்பிய இந்த சிறிய இடைவெளி தமிழக அரசியல் வட்டாரங்களில் பல கலவையான விளைவுகளை உண்டாக்கியிருக்கிறது. அடிமட்ட அதிமுக தொண்டர்கள் திடீர் அதிருஷ்ட்டத்தை சந்தித்ததில் திகைத்துப் போயிருக்கிறார்கள். மனிதசங்கிலி, பால்குடம், உண்ணாவிரதம், மொட்டைபோடுவது என ரகவாரியான வேலைகள் கவர்ச்சிகரமான சம்பளத்துடன் அவர்களுக்கு கிடைத்தது.

அதிமுக நிர்வாகிகள் நிலை சற்று மோசம்தான், மம்மி ஜெயா டிவி மட்டுமே பார்ப்பவர் என்பதால் தினமும் ஒரே மாதிரி போராட்டத்தை அவர் டிவியில் பார்த்துக்கொண்டிருந்தால் போரடிக்கும். ஆகவே புதிய போராட்ட யோசனைகளை அவர்கள் செயல்படுத்தினார்கள், அதற்கு ஆள்பிடிப்பது செலவு செய்வது என கடுமையான கழகப் பணிகள் அவர்களுக்கு இருந்தன. ஜெயா டிவியின் வீடியோ பதிவுகள் மட்டுமே அதிமுகவில் ப்ராக்ரஸ் கார்டு என்பதால் அதற்கும் அவர்கள் ஏற்பாடு செய்தாக வேண்டிய வேலை வேறு

செ.கு.தமிழரசன், சரத்குமார் உள்ளிட்ட பெரும்பாலான போயஸ்கார்டன் வாயிற்காவலர்கள் போதுமான அளவுக்கு தங்கள் இருப்பை பதிவு செய்துவிட்டார்கள். சில நாட்களாக தற்செயல் விடுப்பில் இருந்த சீமான் நெடுமாறன் ஆகிய தமிழ்தேஷ் தலைவர்களும் ஜெயாவின் மனம் கோணாதவாறு அறிக்கை விட்டாயிற்று. ஜெயா கும்பலின் சாராயக் கம்பெனிகளை நிர்வகித்த சோ ராமசாமிகூட சுப்ரீம் கோர்ட்டில் தங்கள் தரப்பு எப்படி ஜெயிக்கும் என்பதை மேலோட்டமாக துக்ளக்கில் எழுதிவிட்டார். இப்படி அதிமுகவின் அடிமைகளும் நட்பு சக்திகளும் தங்களது கடமையை ஆற்றிய பிறகும் முக்கியமான சில குழுக்கள் என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறன, அதில் ஒன்றுதான் பாஜக.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஏவப்பட்ட மங்கல்யான் விண்கலத்தையே மோடியின் சாதனை என தம்பட்டம் அடிக்கும் பாஜக இந்த தீர்ப்பைப் பற்றி மட்டும் பேச மறுக்கிறது. டைம்ஸ் நவ் அர்ணாப் கோஸ்வாமி பிராமண தலைவர்களுக்கு எதிராக கேள்வி கேட்பதென்பது வாழ்நாள் அதிசயம். அப்படிப்பட்ட அர்ணாபே இந்த தீர்ப்பு குறித்த பாஜகவின் கருத்து என்ன என்று அதன் செய்தித் தொடர்பாளரிடம் பத்து நிமிடம் விடாமல் கேள்வி கேட்கிறார். ஆனாலும் கடைசிவரை அவரால் பாஜகவின் கருத்தைப் பெற முடியவில்லை.

தீர்ப்பு வெளியான முதல் வாரத்தில் தமிழக பாஜக தலைவர்கள் இது பாஜக தமிழகத்தில் வலுவாக காலூன்றுவதற்கான நேரம் என சொல்லிக்கொண்டிருந்தார்கள். இப்போது அவர்களும் மவுனம் காக்கிறார்கள். கல்யாண வீட்டில் வெற்றிலைக்கு சுண்ணாம்பு வாங்கிக்கொடுத்தாலே இது நான் நடத்தி வைக்கும் கல்யாணம் என பெருமையடிக்கும் இயல்பு கொண்ட பாஜக தலைவர்களுக்கு என்னாயிற்று என யோசிக்கையில்தான் ஒரு உண்மை உரைக்கிறது, அதாவது மேக்கப் புருஷ் மற்றும் பேன்சி டிரஸ் பீஎம் மோடி அவர்கள் இன்னமும் இது குறித்து ஒரு கருத்தும் சொல்லவில்லை.

பாஜக ஒரு வைரசைப் போன்றது; அதனால் இன்னொரு உயிரைப் பற்றிக்கொண்டு மட்டுமே வளர இயலும். சிறையில் இருந்து விடுதலையாவதற்காக வெள்ளையனின் காலைப் பிடித்த வீரசாவர்கர் காலம் தொட்டே அது இசுலாமியர்கள் மீதான துவேஷம் எனும் ஒற்றைக் கருத்தாக்கத்தை கொண்டு வளர்ந்தது. ஆனால் தமிழகத்தில் அதிகாரத்தைக் கைப்பற்ற இசுலாமிய வெறுப்பு மட்டும் போதாது. தமிழக மக்களில் பெரும்பான்மையானவர்கள் மாட்டு மூத்திரத்தை மாட்டு மூத்திரமாக மட்டுமே கருதும் இயல்புகொண்டவர்கள் என்பதால் இங்கே சில கூடுதல் முயற்சிகள் தேவைப்படுகின்றன.

அதற்காகத்தான் நடிகர் ரஜினியை இழுக்க முயற்சி செய்கிறார்கள். பாஜக சகவாசத்தால் விஜயகாந்துக்கு ஆன கதியை நினைத்தோ என்னவோ கன்னட பாபா இழுத்தடிக்கிறார். பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்வதைத் தவிர வேறு பெரிய கஷ்டங்கள் இருக்காது எனும் உத்திரவாதம் இருந்திருந்தால் அவர் அரசியலுக்கு வர என்றைக்கோ ஆண்டவனின் கட்டளை கிட்டியிருக்கும் (இப்படி மனதுக்குள் கேட்கும் குரலுக்கு காத்திருப்பது சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே சரி. சாதாரண மக்கள் இந்த பிரச்சனையை உடனே கவனிக்க வேண்டும். மனத்துக்குள் ஒலிக்கும் ஒரு குரல் உங்களை வழிநடத்துவதென்பது ஸ்கீசோஃப்ரேனியா எனும் கடுமையான மனச்சிதைவு நோய்க்கான மிக முக்கியமான அறிகுறி.)

ஊழல் எதிர்ப்பு இயக்கங்களின் ஒட்டுமொத்த பலனையும் பாஜக பக்கம் கொண்டுபோக கடும் முயற்சி செய்த ஊடகங்கள் துணையோடு  ஜெயாவுக்கான தண்டனையையும் பாஜகவின் சாதனையாக காட்டிவிடும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது (ஊழலை ஒரு சதவிகிதம்கூட சகித்துக்கொள்ள முடியாது என்பது கார்பரேட் காதலரின் வீரமுழக்கங்களில் ஒன்று). மேலும் இந்த வழக்கின் காரணகர்த்தாக்களில் ஒருவரான சுப்ரமணியசாமி எனும் ஹைகிளாஸ் தரகன் இப்போது பாஜகவில் இருக்கிறார். ஜெயா கைதின் பலனை அறுவடை செய்ய வாய்ப்பிருக்கும் திமுக பெரும் மௌனத்தில் இருக்கிறது. ஆகவே இந்த சூழலை பயன்படுத்திக்கொள்ள எல்லா வாய்ப்பும் இருப்பதாக பாஜக உள்ளூர் த(வ)ளைகள் ஆரம்பத்தில் கருதின.

தங்கத்திலேயே கக்கூஸ் கட்டினாலும் ஆண்டவன் அருளின்றி ஆய் போக முடியுமா சொல்லுங்கள்? அப்படியான ஒரு அனுகிரஹம் பாஜகவின் மூலமாகிய மோடியிடமிருந்து கிடைக்கவில்லை (மூலம் என்றால் அந்த ”மூலமல்ல” ). குஜராத்தின் சந்தானபராதியோ இந்த வழக்கை கண்டுகொள்ளாமல் ரஜினிக்கு அழைப்பு விடுப்பதன் வாயிலாக லிங்கா பட பிரமோஷனுக்கு வேலை பார்த்துக்கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் எந்த நகர்வும் மத்திய பாஜகவில் இல்லை. இந்த தருணத்தை விட்டுவிட்டால் இனி இன்னொரு வாய்ப்புக்கு வழியில்லை, சுச்சா பாரத் உச்சா பாரத் மாதிரி ஏதாவது அறிவித்தாலும் அது தமிழகத்தில் எடுபடாது. இருக்கிற சுள்ளான் ரவுடிகளை வைத்து பிள்ளையார் ஊர்வலம் நடத்தவே நாக்கு தள்ளுகிறது,

இந்த அழகில் கம்யூனிசமும் பெரியார் கருத்துக்களும் இன்னமும் செல்வாக்கோடு இருக்கும் தமிழகத்தில் எங்கிருந்து கலவரம் நடத்தி என்றைக்கு ஆட்சியைப் பிடிப்பது? இந்த வயிற்றெரிச்சல்தான் பாஜக தமிழ்நாட்டு தலைவர்களின் முகபாவங்களில் வெளிப்படுகிறது. வழக்கின் அனுகூலத்தையும் விடவும் மனமில்லாமல், ஒரு பிராமண தலைவரை விமர்சிக்கவும் முடியாமல் அல்லல்படும் அவர்களது முகம் பரிதாபகரமானதாக இருக்கிறது.

திக்கு தெரியாமல் தடுமாறும் இன்னொரு குரூப், சாட்சாத் பிராமண அறிவுஜீவிகள்தான் (பிராமணன்னாலே அறிவுஜீவிதாண்டா பிரம்மஹத்தி). காங்கிரஸ் ஆட்சியில் கிருஸ்துவர்களும் அப்பிராமணர்களும் செய்த ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்தபடியால் இவர்கள் கொஞ்சம் ஓவராகவே தர்ம நியாயம் பேசிவிட்டார்கள்.

ஊழலுக்கு கடும் தண்டணை கொடுக்க வேண்டும், ஊழலை ஒழித்தால் இந்திய பொருளாதாரம் நட்டுக்கொள்ளும் என பல சின்னஞ்சிறு கதைகள் பேசி அண்ணா ஹசாரே போராட்டங்களில் வேலைமெனக்கெட்டு விளக்கு பிடித்து (மெழுகுவர்த்திங்க) ஊழல் எதிர்ப்பு போராளிகளாக ஃபார்ம் ஆகிவிட்ட சங்பரிவாரத்தின் வெள்ளைக் காலர் பிரிவு இந்த தீர்ப்பை எப்படி எதிர்கொள்வது என தெரியாமல் தவிக்கிறது. பார்ப்பனன் வீட்டு தக்காளிச் சட்னி சூத்திரனின் ரத்தத்தைவிட மதிப்பு வாய்ந்தது எனும் மனுதர்மாவின்படி கொஞ்சம் மனதைத் தேற்றிக்கொண்டுதான் அவர்களால் பேச முடிகிறது. ஆனாலும் தாங்கள் பேசும் வார்த்தைகள் இனி தண்டனை பெறப்போகும் சூத்திரர்களுக்கு சாதகமாகிவிடக்கூடாது எனும் ஜாக்கிரதை உணர்வும் அவர்கள் வசம் இருப்பதால் பெரும் சிரமத்துடனேயே அவர்கள் பேசுகிறார்கள்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு சட்டப்படி சலுகை வழங்குவதுகூட கல்வியின் தரத்தை பாதிக்கும் என நியாயம் பேசும் பானு கோம்ஸ் எனும் போராளி ஜெயாவின் குற்றத்தை மட்டும் பார்க்காதே அவர் செய்த நல்லவைகளையும் பார் என்கிறார். லாலுவுக்கு ஜாமீன் மறுக்கப்படது என்பதால் ஜெயாவுக்கும் மறுக்க வேண்டும் என கட்டாயமில்லை என்கிறார் பத்ரி சேஷாத்ரி. எந்த ஆதரங்களின் அடிப்படையில் ஜெயா தண்டிக்கப்பட்டாரோ அதே  அடிப்படையில் அவரை இன்னொரு கோர்ட் விடுவிக்கவும் முடியும் என்கிறார் சோ ராமசாமி.

ஆகப்பெரும்பாலான இந்த வகையறா ஆட்கள் இந்த தீர்ப்பு சரி என்றோ தவறென்றோ சொல்லாமல் இன்னும் அப்பீல் இருக்கிறது அங்கே நிரபராதி என நிரூபிக்க வாய்ப்பிருக்கிறது என்றுதான் சொல்கிறார்கள். ஃபேஸ்புக் மொழியில் சொன்னால் இது ஒரு குறியீடு.. சுப்ரீம் கோர்ட் எங்கள் ஏரியா என்று அதற்கு பொருள். பார்ப்பனரை மணந்து பார்ப்பனரகவே மாறிவிட்ட எம்.எஸ். சுப்புலட்சுமியைப்போல பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்றுக்கொண்டு பார்ப்பனராகவே மாறிவிட்ட கம்யூனிஸ்ட் ஆட்களும் இதையே சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கவனத்துக்காக ஒன்றைச் குறிப்பிட வேண்டிய அவசியம் வருகிறது “ சுப்புலட்சுமி மடிசார் கட்டுவதை காலமான காஞ்சி சங்கராச்சாரி ஏற்றுக்கொள்ளவில்லை” அவாஅவா, அவாஅவா ஆச்சாரப்படிதான் நடந்துகனும் என்பதே அவரது அருள்மொழி.

இந்த ரணகளத்திலும் பாஜக ஆதரவு குழுவின் ஒரு குறிப்பிடத்தக்க உறுப்பினர் தனித்து தெரிகிறார். இதழ் ஆசிரியர் திருமாவேலன் ஜூவியில் (19/10/14) எழுதியுள்ள சதிவலை எனும் கட்டுரையில் பல விடயங்களை பூடகமாக தெரிவிக்கிறார். அவர் சொன்ன வார்த்தைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. அர்த்தம் பொதிந்த, சொல்லாமல் சொன்ன சொற்கள் சிவந்த எழுத்துக்களில் உள்ளன.

1996 செப்டம்பரில் சசிகலாவை கட்சியை விட்டு விலக்கிய ஜெயா பத்தே மாதங்களில் அவரை மீண்டும் சேர்த்துக்கொண்டார். 2011 டிசம்பரில் சசியை கட்சியைவிட்டு நீக்கினார், நான்கே மாதங்களில் மீண்டும் கட்சியில் சேர்த்தார் – ஒரு முடிவை எடுத்தால் அதில் உறுதியாக இருக்கத்தெரியாதவர் ஜெயா.

இப்படி ஒரு தீர்ப்பு வரும் என்று ஜெயலலிதா எதிர்பார்க்கவில்லை, ஏனென்றால் அவருக்கு அப்படி ஒரு சூழ்நிலையும் ஏற்படலாம் என்பதை அவரது வக்கீல் டீம் சொல்லவில்லை ஜெயாவுக்கு அவரது வழக்கின் தன்மையைக்கூட அவரது வக்கீல்களே சொல்லியாகவேண்டும். அப்படியானால் அவ்வழக்கு பற்றிய ஊடகங்களின் தகவல்களைக்கூட அவர் படிப்பதில்லை. ஆகவே அவர் செய்திகளையே படிக்காதவர். அதற்காக அடுத்தவர்களையே சார்ந்திருப்பவர்.

தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் சசிகலாவைப் பார்த்து ஜெயா முறைத்துள்ளார். எல்லா வக்கீல்களும் உங்கள் ஆலோசனைப்படி நியமிக்கப்பட்டவர்கள்தானே என்று ஜெயலலிதா சொன்னதாகவும் தகவல் போயஸ் கார்டனின் முடிவுகள் யாவும் சசியின் ஆலோசனைப்படியே நடக்கின்றன. ஆக கடந்த 24 வருடங்களாகவே ஜெயா சுயமாக முடிவெடுப்பதில்லை. சசிகலா எனும் அதிகார மையத்தால் அவர் எத்தனை முறை பாதிக்கப்பட்டாலும் அதிலிருந்து பாடம் கற்பதுமில்லை.  

இப்போது ராம் ஜெத்மாலானியையும், ஹரீஷ் சால்வேயையும் கொண்டுவருபவர்கள் அப்போதே ஏன் பெரிய வழக்கறிஞர்களை நீதிமன்றத்துக்கு அழைத்துவரவில்லை?தனக்காக வாதாடும் வக்கீலைக்கூட தெரிவு செய்யும் திறனற்றவர் ஜெயலலிதா.

தேவையில்லாமல் 24க்கும் மேற்பட்ட மனுக்களை  தாக்கல் செய்து ஜாமீன் மனுவை சிக்கல் ஆக்கினார்கள். நீதிபதி குன்ஹாவை விமர்சித்து ஒர் மனுவை தாக்கல் செய்தார்கள். இத்தகைய அபத்தங்கள் ஜெயாவின் ஜாமீன் மனுவுக்கு சிக்கல்மேல் சிக்கலை உருவாக்கிவிட்டது இந்தியாவுக்கே வழிகாட்ட வல்லவர் என புகழப்படும் ஜெயா தன் வக்கீல்களைக்கூட வழிநடத்தத் தெரியாதவர். எந்த ஒரு செயலில் ஈடுபடும்போதும் அதனால் உருவாகும் எதிர்மறை விளைவுகளை கணிக்கத்தெரியாதவர். ஆகவே அவர் சமயோசிதமாக செயல்படத் தெரியாதவர், சுருக்கமாக சொல்வதானால் நிர்வாகத்திறனற்றவர்.

மேலோட்டமாக பார்க்கையில் சசிகலா குடும்பம் ஜெயாவை சிக்க வைக்க முயன்றதாக தோற்றமளிக்கும் இக்கட்டுரை ஜெயா மீதான தீவிரமான விமர்சனத்தை முன்வைக்கிறது!!!! மோடி, அமித்ஷா போன்ற வானரப்படை தளபதிகளே ஜெயாவை விமர்சிக்க பயந்து பம்முகையில் அவர்களுக்கு சேவை செய்த அணிலுக்கு இவ்வளவு துணிச்சல் வந்திருக்கிறது. கடந்த இருபதாண்டுகளில் இத்தனை உள்ளர்த்தங்களோடு எழுத்தப்பட்ட வீரம் செறிந்த கட்டுரை திருமா அவர்களுடையதாகத்தான் இருக்கும். ஆகவே பாஜகவினர் அடக்கிவாசிப்பதைப் பார்த்து அவர்களை கோழை என்றோ அல்லது பாஜக ஆதரவு அறிவுஜீவிகளின் ஊழல் எதிர்ப்பு பல்டியைப் பார்த்து அவர்களை பச்சோந்தி என்றோ கருதி காவி ஆதரவாளர்கள் கவலைப்படவேண்டாம். இருக்கிற இடத்தில் இருந்தபடியே எதிர்கட்சியை விமர்சிக்கும் ஆட்களும் பாஜக கூடாரத்தில் உண்டு.

வழித்தேங்காயை பிள்ளையாருக்கு உடைக்கலாமா? கூடாது என்றால் நேர்த்திக் கடனுக்கு வழியில்லை. உடைத்தால் பக்தி சந்தேகத்திற்குரியது. இதெல்லாம் தெருவோர பைரவர்களுக்கு கவலையில்லை. தேரில் உலாவரும் தேறிய வைரவர்களுக்குத்தான் பிரச்சினை! ஜெயா மீதான தண்டனையும் கூட ஆளும் வர்க்க அணிவரிசையில் இப்படி பல்வேறு தத்துவஞான குழப்பங்களை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வகையில் அம்மா இந்த தண்டனை மூலமாக நவரசங்களையும் கொண்ட மாபெரும் வேடிக்கையை மலிவான மற்றும் மகத்தான அடிமைகள் மூலம் நிகழ்த்தச் செய்திருக்கிறார். கண்ணிருப்போர் ரசிக்கலாம், சிவக்கலாம்!

–    வில்லவன்

 1. தோழர் வில்லவன், அது என்ன “பிராமண தலைவர்களுக்கு!? பிராமண தலைவரை! ?” பார்பனர்களுக்கு என்று எழுத என்ன தயக்கம் ? பிஜேபி தலைவர் தமிழ் இசையை சொர்ணாக்க என்று அழைக்க இருக்கும் தைரியம்,ஜெயா விடயத்தில் பாப்பான பெண் என்று அழைக்க என்ன தயக்கமோ வினவு தோழர் வில்லவனுக்கு ?

  //ஒரு பிராமண தலைவரை விமர்சிக்கவும் முடியாமல் அல்லல்படும் அவர்களது முகம் பரிதாபகரமானதாக இருக்கிறது.//

  //டைம்ஸ் நவ் அர்ணாப் கோஸ்வாமி பிராமண தலைவர்களுக்கு எதிராக கேள்வி கேட்பதென்பது வாழ்நாள் அதிசயம். அப்படிப்பட்ட அர்ணாபே இந்த தீர்ப்பு குறித்த பாஜகவின் கருத்து என்ன என்று அதன் செய்தித் தொடர்பாளரிடம் பத்து நிமிடம் விடாமல் கேள்வி கேட்கிறார்//

 2. சொத்து குவிப்பு வழக்கு குற்றவாளி ஜெயாவை அம்மா என்று விளிர்பது ஞாயமா தோழர் வில்லவன்?

  “அந்த வகையில் “ஜெயா” இந்த தண்டனை மூலமாக நவரசங்களையும் கொண்ட மாபெரும் வேடிக்கையை மலிவான மற்றும் மகத்தான அடிமைகள் மூலம் நிகழ்த்தச் செய்திருக்கிறார். கண்ணிருப்போர் ரசிக்கலாம், சிவக்கலாம்!”

  என்று எழுதலாமே !

  //அந்த வகையில் அம்மா இந்த தண்டனை மூலமாக நவரசங்களையும் கொண்ட மாபெரும் வேடிக்கையை மலிவான மற்றும் மகத்தான அடிமைகள் மூலம் நிகழ்த்தச் செய்திருக்கிறார். கண்ணிருப்போர் ரசிக்கலாம், சிவக்கலாம்!//

 3. இப்படி தோல உரிச்சு தொங்க விடறீங்களே! அருமை வில்லவன் அவர்களே! படிக்க தொடங்கிய உடனே தெரிந்துவிட்டது நீங்கள்தான் இதை எழுதியிருக்க வேண்டுமென்று.

 4. சம்பந்தமே இல்லாமல் எல்லா பதிவிலும் பார்ப்பனர்களை வினவு தாக்குவதைப் பார்த்தால் வினவுக்கு மனநோய் வந்த மாதிரி தெரிகிறது.

  • உங்களுக்கு தான் மனநோய் இருக்கும் போல. கட்டுரையைப் படிக்காமலேயே லேகியம் சாப்பிட்ட மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க.

   • //உங்களுக்கு தான் மனநோய் இருக்கும் போல. கட்டுரையைப் படிக்காமலேயே லேகியம் சாப்பிட்ட மாதிரி பேசிகிட்டு இருக்கீங்க///

    Not only this Vinavu, but some oor or most of its readers are also mentally retarded. If tomorrow, Raja got punished in 2G case then Vinavu will write ” parppana judge, parppana SC sathii!..

    he he he…stupid idiots.

    • வெத்தலைல மை வெச்சு பாத்த மாதிரியே பேசராப்புல.அவ்வளவு அறிவு.

     • வெத்தலை எல்லாம் வைத்து பார்க்கல சிவப்பு ! ஆனா அவரு[கருப்பு ] தன் அறிவு கண்ணில் பார்பனிய வெளக்கெண்ணையை ஊத்திக்கிட்டு பார்கின்றார் அல்லவா ?

 5. பார்ப்பனர்களும்/இந்துத்துவர்களும்ம குழப்பத்தில் ஆழ்ந்து இருப்பதை போல மேலாக தெரிந்தாலும் உள்ளார்ந்து அவர்களிடம் ஒரு தெளிவு இருப்பதாகவே தோன்றுகிறது. திமுகவா அதிமுகவா என்று வரும் போது அதிமுகவையும், அதிமுகவா பாஜகவா என்று வரும் போது பாஜகவையும் ஆதரிக்கத் தெரிந்தவர்களாகவே தோன்றுகிறார்கள்.

  ஜெயலலிதாவுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் சாதகத் தீர்ப்பு வர வாய்ப்பு இல்லை என்றாலும், உச்ச நீதிமன்றத்தில் – தற்போது ஜாமீன் கிடைத்தது போல – மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனம் ஆகிவிட்டது என்று சொல்ல முடியாது. இந்த உண்மையை பார்ப்பனர்கள் தெரிந்து வைத்திருப்பதால் தான் சேஃப் கேம் ஆடுவது போல இருக்கிறது.

  மேலும் கர்நாடக சிறப்பு நீதிமன்றத் தீர்ப்பை கவனித்தால் அது ஊழலுக்கு வழங்கிய தீர்ப்பு என்பதை விடவும், இந்திய நீதி அமைப்பை மட்டுமீறி நிந்தித்ததற்கு வழங்கப்பட்ட அடி என்றும் கருத வாய்ப்பு உள்ளது. (செயற்பாட்டு வினையிலிருந்து செய்வினைக்கு குற்றப்பத்திரிக்கையை மாற்றிக் கேட்டது, மொழி பெயர்ப்பு கேட்டது, பார்சல் சாப்பாடு போனில் ஆர்டர் செய்வது போல நீதிபதி கேள்விகளை வீட்டுக்கு வரவழைத்து பதில் போட்டது போன்ற இறுமாப்புக்கு கிடைத்த பலன்)

  தமிழகத்தின் சில ஆதிக்க சாதிகளை கவர்ந்து (கொங்கு வேளாளர்/இந்து நாடார்) முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் மோதலை உருவாக்கி ஒரு செல்வாக்கை பெற பாஜக முயல்கிறது. மேற்கு உ.பியில் ஜாட்களிடமும், இப்போது அரியானாவில் கடைபிடித்த உத்தியையும் பரீட்சித்து பார்க்க இந்துத்துவ ஓநாய் கூட்டம் முயல்கிறது.

  இது கைகூடுவதற்கு தமிழகத்தின் தனிச்சிறப்பான நிலைமைகள் எதிராக இருக்கின்றன. பாஜகவின் முரளிதர்ராவ் தமிழகத்தில் நாத்திக திராவிட சிந்தனைகள் குறைந்து வருவதாக நேற்றைய பேட்டியில் தெரிவித்தது, ஏதோ, நாத்திக சிந்தனை என்ற ஒன்றின் மீது அவர்களுக்கு இருந்த பயத்தின் வெளிப்பாடல்ல. திராவிட இயக்கத்தின் அரசியல் தாக்கத்தை கடவுள் மறுப்பாக மக்களிடம் சுருக்கி அடையாளப்படுத்தி தாங்கள் ஆன்மீகவாதிகள்; தேசியவாதிகள் எனவே நல்லவர்கள் என்று வேடம் போடும் உத்தி.

  நேற்று தந்தி டிவியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் பாஜகவின் கே.டி ராகவன் இதையே திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார். எங்கே பெரியாரின் நாத்திகம் தமிழகத்தில் இருக்கிறது என்று? அந்த கேள்வி கேட்பாரற்று தந்தி டி.வியின் ஸ்டுடியோவை சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தது. செ.கு தமிழரசன் கொள்கையை எல்லாம் அரசியலில் எதற்கு கலக்குகிறீர்கள் என்று கேட்டதோடு விளம்பர இடைவேளை விட்டார் ஹரிஹரன்.(பாண்டேவை விட ஹரிஹரனிடம் கொஞ்சம் ஜனநாயக உணர்வு இருப்பது போல தெரிகிறது.)

  மக்கள் நீர்த்து போன மொழியில் பேசுவதை வெறுக்கிறார்கள். கருணாநிதி செல்வாக்கு இழந்ததற்கு இது ஒரு முக்கியக் காரணம். இந்து பத்திரிக்கையில் கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவை ஒட்டி வந்த அலசலில் ஒன்றை குறிப்பிட்டார்கள். காவிரி பிரச்சினை, ஈழம், மூவர் விடுதலை போன்ற விவகாரங்களில் ஜெயலலிதா எதனையும் சாதித்து விடவில்லை தான். ஆனால், தனது கருத்துக்களை தடாலடியாக வைப்பதில் ஒரு ஈர்ப்பு உருவானதாக குறிப்பிட்டது. (பால் விலை உயர்த்திய பிறகு, பேருந்து கட்டணத்தை உயர்த்திய பிறகு தேர்தலை சந்திக்கிறேன். சங்கரன் கோவிலில் வந்து மோது என்ற ஜெயலலிதாவை எதிர்கொள்ள தமிழக எதிர்க்கட்சிகள் தயாரில்லை. )

  • எதிலும் ஒரு தெளிவு இருக்கணும் சுகதேவ் ! நாடாருங்க என்ன ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களா ? எப்ப ஆதிக்க சாதியானங்க? சொல்லி கொள்ளும் அளவுக்கு தென் தமிழ் நாட்டில் நிலம் அவர்களுக்கு கிடையாது. இருக்கும் வீட்டை வித்து சிறு ,பெரு நகரத்துக்கு வந்து தினமும் 16 மணி நேரம் மளிகை கடை ,பெட்டி கடை ,சிறு உணவகம் வைத்து வேலை செய்து பழைய துணியை உடுத்தி , ஒரு நாளைக்கு 2 வேலை சேறு வெடிச்சி அதையே 3 வேலை சாப்பிட்டு சொந்த காலில் நிற்கும் நம்ம அண்ணாச்சிகள் உமக்கு ஆதிக்க சாதியா ? நம்ம அண்ணாச்சிகள் உழைக்கும் வர்க்கம் அல்லவா ?

   தமிழ் இசை பிஜேபி தலைவர் ஆனதால வரும் மாயை தான் உங்கள் கருத்து ! நாடாருங்க எல்லா கட்சியிலும் இருக்காங்க சுகதேவ் ! ஜாட் சாதி வெறியர்களுடன் அவர்களை ஒபிடு செய்து உள்ளது ஞயமா ?விவசாய ஜாட் சாதி மக்கள் மாதிரி அவிங்க[அண்ணாச்சிகள்] சாதிவெறியை காட்டினா மளிகை கடை பிசினஸ் படுத்திடும் இல்லையா ? இது உங்களுக்கு நான் கொடுக்கும் விளக்கமும், அண்ணாச்சிகளுக்கு மதவாததில் சேராதீங்க என்று கூறும் எச்சரிக்கையும் ஆஅகும்.

   //தமிழகத்தின் சில ஆதிக்க சாதிகளை கவர்ந்து (கொங்கு வேளாளர்/இந்து நாடார்) முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களிடம் மோதலை உருவாக்கி ஒரு செல்வாக்கை பெற பாஜக முயல்கிறது. மேற்கு உ.பியில் ஜாட்களிடமும், இப்போது அரியானாவில் கடைபிடித்த உத்தியையும் பரீட்சித்து பார்க்க இந்துத்துவ ஓநாய் கூட்டம் முயல்கிறது.//

   • நண்பர் தமிழ்-தாகம்,

    சுகதேவ் கூறுவதில் உண்மையும் இருக்கிறது. நாடார்கள் உழைக்கும் வர்க்கம் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. ஆனால் உண்மை நிலைமையை நாம் பரிசிலிக்க வேண்டும்.

    நான் பணிபுரியும் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு செக்யூரிட்டி ஒருவரிடம் பேசினேன். அவர் சாதியில் நாடார் என்றும் அய்யாவழியை பின்பற்றுபவர் என்றும் கூறினார். ஏதோ ஒரு இந்துத்வா அமைப்பின் பெயரைச் சொல்லி (பெயர் ஞாபகம் இல்லை ) நாடார்களுக்கு நல்லது செய்வதாக கூறினார். திருவான்மியூரில் இந்து ஆன்மிக கண்காட்சியில் அய்யவழிக்கு கடை வைத்தவர்கள், அய்யா சனாதன தர்மத்தை ஏற்றுக் கொண்டார் என்று கூறியது மட்டுமல்லாமல் அவர்கள் வள்ளலாரை வழிபட மாட்டோம் என்றுக் கூறியதை பார்க்கும் போது இந்துத்வா சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற அனைத்து முயற்சிகளும் செய்கின்றன என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

    நன்றி.

 6. எப்படியோ பார்ப்பனர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்.அதற்கு அனைத்துப் பார்ப்பனரும் ஒத்துழைக்கிறார்கள்.இதுதான் மனு தர்மம்.

 7. மவுண்ட் ரோடு மகா விஷ்ணு (தமிழ் ஹிந்து) இன்று “பெரியாரின் வாரிசுதான் ஜெயலலிதா” என்று அருட்கொடை அருளியிருக்கிறது. இதில் தனிநபர் வழிபாட்டிற்கு தூபம் போட்டது பெரியாரின் சுயமரியாதை இயக்கம்தானாம்! அதாவது அதிமுக அடிமைகள் இவ்விதம் இருப்பதற்கு காரணம் பெரியார் ஆரம்பித்து வைத்த சுயமரியாதை பாரம்பரியம்தானாம். பெரியாரின் வழியிலேயே ஜெயாவும் தொண்டர்களை வழிநடத்துகிறாராம்!! பெரியாரும் ஜெயாவும் ஒன்று என்று கட்டுரையாளர் தமிழ்நாட்டு வாசகர்களுக்கு அறிமுகப்படுத்த விழைகிறார். அப்படி அறிமுகப்படுத்துவதற்கு அவர் அமர்க்களமாக ஆரம்பிக்கிற புள்ளி சர்வாதிகாரி ஸ்டாலின் மற்றும் மாவோ. இப்படி காம்பினேசோடு கலர்புல்லாக யாரால் கட்டுரை எழுத முடியும்?

  ஒருவாதத்திற்கு கட்டுரையாளரின் வாதப்படியே சென்றாலும் பெரியார் ஸ்டாலின் மாவோவையெல்லாம் சுட்டிக்காட்டுகிற கட்டுரையாளர் மோடியை மருந்துக்கும் தொடவில்லை. பாஜக அடிமைகள் அம்மா அடிமைகளைக்காட்டிலும் மானங்கெட்டவர்கள் என்பதை அக்கட்டுரையை வாசிக்கும் யாருக்கும் தெரியாதா என்ன? அப்படியானால் அக்கட்டுரையின் நோக்கம்தான் என்ன?

  தமிழ்நாட்டில் உள்ள கம்யுனிசம் மற்றும் பெரியாரின் சுயமரியாதைக் பராம்பரியத்தை அழிக்க தன்னாலான கைங்கர்யத்தை ஜெயாவின் பெயரிலே வழங்கியிருக்கிறது தமிழ் ஹிந்து. இதில் கட்டுரையிலேயே இடதுசாரிக்கட்சிகள் மானமுள்ளவர்களாக காட்டப்பட்டிருக்கின்றனர் என்றால் போலிக்கம்யுனிஸ்டுகள் பார்ப்பனியத்திற்கும் பாசிசத்திற்கும் எந்த அளவிற்கு கைக்கூலி வேலை பார்க்கிறவர்களாக இருக்க வேண்டும்?. மேலும் இதில் ஜெயா வெறும் தொட்டும் நக்கும் ஊறுகாயாக மட்டுமே பயன்பட்டிருக்கிறார் என்கிற பொழுது அம்பிகளின் நிகழ்ச்சி நிரல் அக்கட்டுரையை வாசிக்கும் எவருக்கும் எளிதில் விளங்கும். பொலிடிக்கிள் வேக்யுமிற்கு இந்துப்பாசிசமே மாற்று என்று சொல்லவருவதற்கு இவர்களுக்கு இப்படியொரு கட்டுரை தேவைப்படுகிறது. ஜெயாவும் தேவைப்படுகிறார்!! காம்பினேசன் பேஷா இருக்குடா அம்பி!

 8. Unless people are educated, give up their CASTE identity it is difficult to develop tamil culture. TAMIL people are still barbaric in some extent. It is not just the brahmins but all other caste who are suppressing others the who are below them should change.

 9. ////பெரியாரின் சுயமரியாதைக்//

  This Ramasamy’s work only eliminated the Brahmin dominance but the other upper caste are now torturing the lower caste. No one talkes about it.

 10. பார்பனீயத்தின் வெற்றியே, ஒவ்வொரு சாதியும் தாம் பிழைக்க பார்பனிய வழியே சரி என்று அவர்களின் சாம,பேத,தான தண்ட அரசியலுக்கு பணிந்து கிடப்பது தான்! ஒவ்வொரு சாதியும் பார்பனரால் பார்பனரால் இழிவுபடுத்தப்பட்டாலும், அதை அடுத்த சாதியினரை ஒப்பிட்டு தான் உயர்ந்தவ்ன் என்ற மாயையை கொண்டிருக்கின்றன! இது தான் பார்பன தந்திரம்! இன்று தமிழகத்தில் பார்பன, பனியா(குஜராத் சேட்) ஆதிக்கத்திலேயே எல்லா வியாபாரங்களும் நடக்கின்றன! இதில் மத்திய, மானில அரசுகளின் பங்கும் உள்ளது! நாடார்களும்,செட்டியார்களும் பார்பனிய அடிமைகளே! இல்லையென்றால் அவர்கள் ‘வியாபாரம்’ படுத்துவிடும்! தேவர்களும், வன்னியர்களும் என்றும் பார்பனிய அடிமைகளே! இல்லையென்றால் அவர்களின் சாதி பெருமை என்னாவது? சைவ பிள்ளைமார்கள், கொங்கு வேளாளர்கள் ஏற்கெனவே ஆன்மீக போதையில் இருப்பவர்கள்! அவர்களை பார்பனரிடமிருந்து பிரிக்கவே முடியாது! எஞ்சியிருக்கும் சாதி பித்து ஏறாத ஒரு சிலரே தமிழ், திருக்குறள், பெரியார் என பார்பன கல்வியை மீறி சிந்திக்கிறார்கள்! இன்று அரசியலில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் பார்பனியம் நம்மை வஞ்சித்து வருகிறது! அடிமைகள் பிழைத்து கொள்கிறார்கள், எதிர்த்தவர்நசுக்கப்படுகிறார்கள், அபலைகள் ஓட்டு போட்டு, ஓட்டு போட்டு அலுத்து போகிறார்கள்! ஆக யாருக்கும் தப்பி தவறிகூட தன்மானம் தலைதூக்கவில்லை! நாங்க தமிழண்டா!

 11. ஊழல் தெய்வத்திடமிருந்து எடுத்துக்காட்ட ஏதும் நல்ல குணாதியசங்கள் இல்லாததால் அவர் விரும்பி ஏற்று ரசித்து மகிழும் அடிமைகளின் கேனத்தனத்திற்கு பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையும்,ஊழல் கொள்ளைக்கு சசிகலாவையும் முன்நிறுத்துகின்றனர்.மொத்தத்தில் ஊரையே அடித்து உலையில் போட்டாலும் அவாள்கள் என்றும் மேன்மக்களே. சரி, ஒரு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடிக்கும் உத்தியை சேலம் ராஜகோபால் சொல்லி கொடுத்து இருப்பாரோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க