Thursday, January 16, 2025
முகப்புவாழ்க்கைஅனுபவம்இவர்களுக்கு இல்லை தீபாவளி - படங்கள்

இவர்களுக்கு இல்லை தீபாவளி – படங்கள்

-

 

ஆட்டோ தொழிலாளி 1
டி. கஜேந்திரன் (வயது 54) – ஆட்டோ ஓட்டுநர் – பெரம்பூர்:
“எனக்கு ரெண்டு பொண்ணுங்க சார். யாருக்கும் டிரஸ் எடுக்கல. ஐநூறு ரூபாக்கு கூட ஓட மாட்டேங்குது. வண்டிக்கு வாடக கொடுப்பேனா, வீட்டுக்கு வாடக கொடுப்பேனா. இதுல எங்க போறது தீபாவளிக்கு?
பெட்ரோல் பங்க் ஊழியர்
தமிழ்மணி, பெட்ரோல் பங்க் ஊழியர்: “4 பேர் கொண்ட்டாட்டம் போடனும்னா, குறைஞ்சது 400 பேர் உழைக்கனும்! ‘லைப் இஸ் பியூட்டிப்ஃபுல் பட், கன்ட்டீஷன் அப்ளை சார்!’”
அரசு போக்குவரத்து ஊழியர்கள்
வந்தவாசி அரசுப் பேருந்து ஓட்டுநர் அதியமான் மற்றும் நடத்துநர் முருகன்: “தீபாவளிய உங்க கூட கொண்டாடிக்கிட்டிருக்ம்ல.. தெரியல. தொழில்தான் சார் நமக்கு முக்கியம். வருசத்துக்கு ஒரு வாட்டி வர மாட்டியானு என்னோட அப்பா அம்மா கேட்கிறாங்க. ரெண்டு நாள் கூட லீவ் இல்லாமா ஓட்டுறேன். கண்ணப் பாருங்க தண்ணியடிச்சவன் கண்ணு மாரி இருக்கும். (கண்கள் நன்றாக சிவந்து தூக்க கலக்கத்துடன் இருக்கிறது).
டீ மாஸ்டர்
கேரளாவைச் சேர்ந்த டீ மாஸ்டர் சந்திரன், வயது 50, கோயம்பேடு அருகில்: “கேரளாவில் தீபாவளி கிடையாது. தீபாவளியே மார்வாடிங்க கொண்டாட்டம் தான். அதப் பாத்து இங்கே ஈ அடிக்கிறாங்க.”
ஏடி.எம் பாதுகாவலர்
குமாரசாமி, வயது 70, பரோடா வங்கி பாதுகாவலர், சகோதரி வீட்டில் வசிக்கிறார். 12 மணி நேர ஷிப்ட்டிற்கு ஐந்தாயிரம் சம்பளம்:
“வருமானம் ஜாஸ்தியா இருந்தா தீபாவளி. கம்மியா இருந்தா கெடையாது”
பூக்காரம்மா
பேருந்துக்கு காத்திருக்கும் பூ கட்டி விற்கும் பெண்கள், மொழுகம்மாள் (50 வயது), லட்சுமி (62 வயது):
இன்னாது தீபாவளியா,அதான் பாக்குறீயே ? இதக் கட்டி வித்தா தான் பொழப்பு, இதுல எங்கேர்ந்து தீபாவளி! அஞ்சு பசங்க இருக்காங்க. கலியாணம் கட்டிகிணு தொரத்தி வுட்டுட்டாங்க.
முடித்திருத்தும் தொழிலாளி
விஜயகுமார்,வயது 34, சலூன் கடை தொழிலாளி, சொந்த ஊர் காரைக்குடி,திருமணமானவர்: “12 மணிக்கு ஓனர் வந்த பிறகு ஒரு இரண்டாயிரம் போனசு கிடைக்கும். அதுக்கு பிறகுதான் தீபாவளி. ஊரில் இருந்து கொண்டாடலங்கிற ஏக்கம் இல்லாமலா இருக்கும்? என்ன செய்றது?”
பழவண்டி வியாபாரி
ஆர்.வி.பெருமாள், வயது 40, தள்ளுவண்டி பழ விற்பனை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்: “பழைய சரக்கு இது. நேற்று காய் இன்று பழமாகி விட்டது. தீர்ந்தவுடன் தீபாவளி கொண்டாட வீட்டுக்கு போவேன்.
இளநீர் வியாபாரி
ராஜேஸ்வரி, வயது 45, சொந்த ஊர் கடலூர், சாலையோர இளநீர் வியாபாரி: “நைட்டுக்கு உலை வைக்க வேணாமா? காலைல சாப்பாடு பண்ணி வச்சுட்டு வந்துட்டேன். நைட்டுக்கு இத வித்தாதான் சாப்பாடு.
-வீட்டுகாரர் சரியா இருந்தா நான் ஏங்க இந்த தொழிலுக்கு வரப் போறேன். எங்க அப்பாவும் தண்ணியா அடிச்சுதான் செத்துப் போனாரு. இவரும் தண்ணி அடிச்சு எங்கயாவது விழுந்து கெடப்பாரு. மூணும் பொண்ணுங்க. மூவாயிரம் டிரசுக்கு ஆச்சு. ஆயிரம் ரூபா கடனா வாங்கிதான் வாங்கிக் கொடுத்தேன். எனக்கு இருக்கது போதும். ஆனாலும் எனக்கு ஏதும் கெடையாதானு அவரு கேக்காரு. சரின்னு இன்னொரு ஆயிரம் கடனா வாங்கி லுங்கி எடுத்தாந்து கொடுத்து சாமி கும்பிட்டு தொழிலுக்கு வந்துட்டேன். இந்தப் பிறவிய எனக்கு ஏந்தான் ஆண்டவன் கொடுத்தான்னு இருக்கு (கண்ணீர் விட்டு அழுகிறார்).
இருச்சக்கரவாகன மெக்கானிக்
ராஜேந்திரன், வயது 45, பைக் மெக்கானிக்: “பசங்களுக்கு உடம்புக்கு சரியில்ல. இப்போதான் ஆசுபத்திரில இருந்து வீட்டுக்கு இட்டாந்தேன். அங்கே அவங்க மொகத்த பார்த்து பார்த்து கஷ்டமாயிருக்குமேனு, வெறுத்துப் போய்தான் கடைக்கு வந்தேன். ஆனா பசங்களுக்கு டிரெசெல்லாம் எடுத்துக் கொடுத்திட்டுதான் வந்தேன்.”
காய்கறி கடை
தனசேகரன், சிறிய காய்கறிக் கடை, தூத்துக்குடியை சேர்ந்தவர்: “தொழில்தான் எங்களுக்கு தெய்வம். அதற்கு பிறகுதான் தீபாவளி எல்லாம்.”
காய்கறி தரைக்கடை
ஜெயலட்சுமி, வயது 38, தள்ளுவண்டியில் தக்காளி, வாழையிலை வியாபாரம்: “பொழப்பு இதுதான். தீபாவளின்னு போனா எப்படி பொழைக்கறது. இன்னைக்கு ஒரு நாள வச்சுத்தான் எங்க பொழப்பே.
-(புதுத்துணி ஏன் உடுத்தவில்லை எனக் கேட்டதற்கு) ரெண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்திருக்கேன். அவங்களுக்கு பாக்குறதா? எனக்கு பாக்குறதா?”
தையல் தொழிலாளி
எத்திராஜ், தையல் தொழிலாளி: “தீபாவளின்னா என்னா? …..ஆம்பளைன்னா தண்ணி…அடிக்கிறது..! …பொம்பளைன்னா…டிவி பாக்கிறது..இங்க, நான்..விதிய நெனச்சி…வேலை செய்யிறேன்..!
பந்தல் மற்றும் வீடுகட்டும் கருவிகள் வாடகை கடை
ஆர். கோவிந்தராஜன், பர்னிச்சர் & டூல்ஸ் வாடகைக்கு விடும் கடைக்காரர்: “மூணு மணி நேரந்தான் சார் தீபாவளி. வீட்டோட சேந்தாப்ல கடைங்கிறதால தொறந்து வச்சுட்டேன். நான் பில்டிங் டூல்ஸ் கொடுத்தா ஒர்க்கர் எடுத்துட்டு போனா இன்னிக்கு கொஞ்சம் பணம் கெடைக்கும். அதான் திறந்திருக்கேன்.
துப்புரவு தொழிலாளி
கே. வெரிக்கோலப்பா, ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர், குப்பை சேகரிப்பவர்: “தீபாவளிக்கு லீவு போட்டா சேர்ர குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது?”
குப்பை பொறுக்கும் தொழிலாளி
குப்பை பொறுக்கும் தொழிலாளி: “தீபாவளியா..? தெருவும் சருகுமா இருக்குறவனுக்கு குடும்பமும் கெடையாது, கொண்டாட்டமும் கெடையாது!
சாலையோரம் வசிக்கும் தொழிலாளி குடும்பம்
பாஸ்கர் மாரி தம்பதியினர், சாலையோரத்தில் வசிப்பவர்கள்: “
இன்னைக்கு சாப்பாடு பண்ணலை. யாருக்கும் துணி இல்லை. ஒரு வருமானமும் இல்லை. எடுப்பு சாப்பாடுதான்.”

 படங்கள், நேர்முகம் – வினவு செய்தியாளர்கள்

  1. நீண்ட காலம் கழித்து வினவில் மறு மொழி இடுகிறேன். நானும் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், கிறிஸ்துமஸ் எதுவும் சிறு வயதிலிருந்தே கொண்டாடுவதில்லை. பண்டிகை என்ற பெயரில் சீருக்கும் பேருக்கும் எல்லோரும் கடன் படுவதைப் பார்த்தால் எனக்குக் கோபம் வருகிறது. பெரிய கடைகள் வைத்து இருப்பவர்கள் தன் தொழில் வளரப் பரப்பி விட்ட இந்த பண்டிகைகள் வருடம் முழுக்க உழைக்கும் உழைப்பை உரிஞ்சி எடுப்பது வருந்தத் தக்கது. இந்நிலையில், இந்தக் குறிப்பிட்ட பதிவு மனதை நெகிழ வைக்கிறது. உழைத்து சம்பாதித்து தன் மானத்துடன் வாழும் இவர்களைப் பார்க்கும் போது இன்னும் உத்வேகமும் மன எழுச்சியும் வருகிறது. இவர்களுக்கு தீபாவளி இல்லையே என்று வருந்தாமல் இவர்களைப் பார்த்து நான் இன்னும் உழைக்கவே, மேலும் பண்படவே விரும்புகிறேன்.

  2. இந்த படங்களை பாக்கும் போது கண்ணீர் தான் வருகிறது. ஒரே கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும் கம்மனாட்டிகளை பாக்கும் போது மனம் நெருப்பாய் சிவக்கிறது. தீபாவளி அன்றும் மெட்ரோ இரயில் பாலம் கட்டும் வட இந்தியதொழிலாளர்களை பார்க்கிறேன். தேநீர் கடை, காய்கறி கடை, மளிகை கடை , பேருந்து ஓட்டுனர்கள் இன்னும் பிற உழைக்கும் மக்கள் அனைவர்க்கும் உழைத்தால் தான் சோறு. வாரம் இரண்டு நாள் விடுப்பு, அந்த விடுமுறை இந்த விடுமுறை என்று நோகாமல் மூளை உழைப்பில்(?) ஈடுபடும் அந்த புனித ஆத்மாக்களுக்கு புரியுமா இது. தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம் என்று தெரியாமலே, ஒரு நாள் குடி கூத்துக்காக பட்டாசுகளைக் ஆயிரக்கணக்கில் கொளுத்தி காசைக் கரியக்குவதோடு மட்டுமல்லாமல் சுற்றுசூழலை மாசுபடுத்துகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த அயோக்கியர்கள் பீச்ச தூயமைபடுத்துறேன் பேர்வளின்னு அத கிளீன் பண்றேன் இத கிளீன் பண்றேன்னு வெளக்கமாற தூக்கிட்டு கெளம்பரானுவ இந்த கம்மனாட்டிகள்.

    • I am working in a BPO and I don’t have any Diwali leave (No Indian holiday for that matter). Working in Night shifts for last four years. Salary 14800/- per month (4 members in family, unmarried). Rent: 4500/-

      I don’t have any anger against the people who are celebrating Diwali. Aduthavanin Santhoshathai paarthu vayar eriya vendumaanaal atharku Diwali mattum alla, Pirarin Kalyaanam, Kuzhanthai pirappu, Christmas ena ella vattrirkum koba pada mudiyum.!

      • நண்பரே ,

        உங்களை இங்கே திருவிழாக்களை கொண்டாட வேண்டாம் என்று யாரும் தடுக்கவில்லையே நாம் திருவிழாக்களை கொண்டாட எவ்வளவு பேர் அதை தியாகம் செய்ய வேண்டி இருக்கிறது என்பதை சற்று எண்ணிப் பார்த்தால் போதுமானது. இன்னொரு தேவையான விடயம் இங்கே பகிர விரும்புகிறேன். இங்கே திருவிழாக்கள் ஏன் கொண்டாடுகிறோம் என்பது மட்டுமல்ல எப்படி 8 மணி நேரம் வேலை, வாரம் இரண்டு நாள் விடுமுறை , உடல் நிலை சரியில்லை என்றால் விடுப்பு …எப்படி வந்தது இது என்று கூட தெரிவதில்லை. வேண்டுமென்றால் உங்களோடு வேலைப் பார்க்கும் நண்பர்களிடம் விசாரித்து பாருங்கள்.

        நன்றி.

  3. இந்த தீபாவளியில் பட்டாசு கடைகள் வெறிச்சொடி கிடந்தன! ஆனால் எல்லா அதிமுக பிரமுகர்கள் வீட்டிலும், அரசு அதிகாரிகள் வீட்டிலும் (ஓசி பட்டாசு?) , முக்கியமாக எல்லா பார்ப்பனர் வீட்டிலும் இடைவிடாத வெடி சத்தம்! பக்கத்து மானிலங்கள் சுற்றுப்புறத்தை மாசுபடுத்தும் பட்டசு வெடிப்பதை தடைசெய்து விட்டன! தமிழ்னாடோ ஊழல் குற்றவாளியின் த்ற்காலிக விடுதலையை கொண்டாடுகிறது!
    இந்த லட்சணத்தில் இந்த படித்த முட்டள்கள் என்விரொன்மென்ட் பற்றி பக்கம் பக்கமாக அளப்பது இருக்கிறதே……….வாய்சொல்லில் வீரரடி?

    இந்துத்வா கொண்டாட்டங்கள் எல்லாமே சமூதாய கேடுகளை உண்டாக்குவதற்குதானோ?

  4. தீபாவளி மட்டுமல்ல, எந்த பண்டிகையானாலும் அதனை அக்கம் பக்கத்தினர் முகம் சுழிக்கும் வகையில் ஆடம்பரமாக ஆர்பாட்டமாக கொண்டாடாமல் மற்றோரோடு இனைந்து பகிர்ந்து கொண்டாடினால் தவறில்லை.

    தீபாவளி என்பது தற்போதைய காலத்தில் நரகாசுரனுக்காகவோ கிருஷ்னனுக்காகவோ என்றில்லாமல் குழந்தைகளுக்கான ஒரு பட்டாசு திருவிழாவாகவும், பெரியோர்களுக்கு வீட்டில் தொலைக்காட்சியில் அடைபட்டு கிடக்கவும், மாலை ஏதாவது ஒரு புது திரைப்படத்திற்கு போய் வருவது என்றும் தான் இருக்கிறது.

    நாட்டின் பெரும்பாலான பண்டிகைகளை மக்கள் இப்படி தான் கழிக்கின்றனர்.

    நமக்கு பிடித்தால் கொண்டாடலாம், பிடிக்கவில்லை எனில் கொண்டாடாமல் இருக்கலாம்.
    அடுத்தவர் விரும்பி கொண்டாடுவதை நாம் தடுப்பது முறையல்ல.

    வேண்டுமானால் அதீத ஆடம்பரமாக கொண்டாடுவதையும், கடன் வாங்கி கொண்டாடுவதையும் தவறு என்று அவர்களுக்கு எடுத்துரைக்கலாம்.

    மற்றபடி தீபாவளியின் நரகாசுர கதையை யாரும் இப்போது உணர்வு பூர்வமாக நம்புவதில்லை. சும்மா, ஒரு விடுமுறை, அவ்வளவு தான். எல்லா மத பண்டிகைகளுக்கும் ஒரு புராண கதை இருக்கும். அதில் பல காரணங்கள் படு அபத்தமாகவும் இருக்க தான் செய்கிறது. தற்காலத்தில் மக்கள் அந்த காரணங்களுக்குள் ஆழ ஊடுருவி செல்லாமல், ஒரு விடுமுறை, ஒய்வு, குடும்பத்தோடு மகிழ்வான ஒரு நேரம் என்ற ரீதியில் தான் கொண்டாடுகின்றனர்.

    ஒரே ஒரு விண்ணப்பம். தீபாவளியோ, மற்ற எந்த ஒரு பண்டிகையோ, நாம் கொண்டாடுகையில் அதனால் ஏழை மக்களுக்கு நலம் பயக்கும் ஏதேனும் ஒரு காரியத்தையும் ஒவ்வொருவரும் செய்தால் அந்த பண்டிகையினால் அனைவருக்கும் நலம் பயக்கும்.

    நரகாசுரனை விடுங்கள். நம் அக்கம் பக்கம் வருமானத்தில் கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவியை (பணம் மட்டும் தான் என்றில்லை, உதவி என்பது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்), செய்யுங்கள்.

  5. Vinavu avarkale,

    Neengal intha padangalai mudalil kaatugayil oru Islamiya pen Brahmana veetil velai seithu inippukal petrukkondaal endru irunthathu. Atharku oru moondru per comment seithavudan antha comments matrum padathaiyum serthu thooki viteerkal.

    Karuppu communist Vinavu oru Visham kakkum paambu.

    • என்னது கெணத்த கானோமா? என்னது கூடவே கமெண்டையும் கானோமா?

      யோவ் வினவு விசம் கக்குவது இருக்கும் முதல்ல மப்புல இருந்து வெளியேவா.

      இது தான் நீர் போக வேண்டிய இடம்.https://www.vinavu.com/2014/10/24/can-a-muslim-take-deepavali-sweet/
      கோயம்புத்தூர் பஸ்ல ஏறிட்டு திருநெல்வேலிய கானோம்னா எப்படியா வரும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க