Monday, April 6, 2020
முகப்பு உலகம் அமெரிக்கா கோமாளித்தனம் + கொலைகாரத்துவம் = மோடித்துவம்

கோமாளித்தனம் + கொலைகாரத்துவம் = மோடித்துவம்

-

“ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கும் உலகத்தைப் பற்றி நாம் பேசுகிறோம்; ஆனால், நாம்தான் மேலும் ஐக்கியப்பட்டு விட்டோமே? G-7, G-5, G20 என்று வித விதமான G-க்களின் கீழ் இந்தியாவும் இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் நாம் ஏன் G-ALL என்பதன் கீழ் ஏன் நாம் ஒன்று சேரக் கூடாது”

மோடித்துவம்
மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன

இது மோடி சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. வளர்ந்த (Developed) நாடுகள், வளரும் நாடுகள் (Developing) என்றெல்லாம் இருப்பதற்கு பதில் ஒரேயடியாக எல்லா நாடுகளுக்குமான ஒரு தளம் வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் மோடி. தப்பில்லை. ஆனால், அது தான் ஐக்கிய நாடுகள் சபை என்கிற பேரில் ஏற்கனவே ஒரு கந்தாயம் இருக்கிறதே என்று மண்டையைச் சொரிந்திருக்கிறார்கள் பிற நாட்டுத் தலைவர்களும் பிரதிநிதிகளும்.

மோடியிடம் இருந்து சுற்றுச்சூழல் குறித்து வந்து விழும் சில தெறிப்புகளைக் கேட்டு பிற நாட்டுத் தலைவர்கள் தெறித்து ஓடிக் கொண்டிருப்பதாக சர்வதேச ஊடகங்கள் கமுக்கமாக சிரித்துக் கொண்டிருக்கின்றன. சில உதாரணங்களைப் பாருங்கள்:

”புவி வெப்பமயமாதல், அதனால் பருவநிலை மாற்றம்…. இப்படிச் சொல்வது சரிதானா? உண்மை என்னவென்றால், நம்ம கிராமத்தில் வயதானவர்கள் போகப் போக குளிர் அதிகம் என்கிறார்கள். உண்மையில், வயதாக ஆக அவர்களிடம்தான் குளிரைத் தாங்கிக் கொள்ளும் திறம் குறைந்திருக்கிறது. இது சூழல் மாற்றம் தானா, இல்லை நாம்தான் மாறியிருக்கிறோமா? என்கிற கேள்வியை நாம் கேட்டுக் கொள்ள வேண்டும்” – டோக்கியோவின் தூய இருதய பல்கலைக்கழகத்தில் கடந்த செப்டெம்பர் 2-ம் தேதி ஆற்றிய உரையில் இருந்து.

”பருவநிலை மாறவில்லை. நாம் தான் மாறிவிட்டோம். நதியை தாயாகவும், நிலாவை மாமாவாகவும், சூரியனை தாத்தாவாகவும் போற்றுவதை மறந்ததால்தான் பிரச்சனை” – செப்டெம்பர் 5-ம் தேதி குழந்தைகளோடு பேசும் போது தெறித்த தெறிப்பு இது.

மோடித்துவம்
“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி.

உலகெங்கும் வளர்ந்த நாடுகள் முதல் வளரும் நாடுகள் மற்றும் ஏழை நாடுகள் வரை சுற்றுச்சூழல் மாசடைந்து வருவது குறித்தும், அதையொட்டி உற்பத்தித் துறைத் தொழில்களில் மாற்றம் கொண்டு வருவது குறித்தும் மண்டையை உடைத்துக் கொண்டிருக்கும் போது நமது ‘தல’ உலகத்தின் உச்சி மண்டையில் கடப்பாறையை சொருகுகிறார். ஒருபடி மேலே போய் யோகாசனம் செய்தால் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து உலகை காப்பாற்றலாம் என்று சமீபத்தில் சொல்லி விஞ்ஞானிகளை “ஙே” என்று விழிக்க விட்டுள்ளார்.

“பெண்கள் ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்களாக இருப்பதற்கு காரணம் ஒல்லியாகத் தெரிய வேண்டும் என்கிற அவர்களது அழகுணர்ச்சி தான்” என்று சொல்லி ஊட்டச்சத்து நிபுணர்களை பீதியாக்கிய வரலாறு கொண்டவர் மோடி. பூடானுக்குச் சென்றவர் அங்கே ஆற்றிய உரையில் அந்த நாட்டை நேபாள் என்று மூன்று முறை குறிப்பிட்டு புவியியல் விஞ்ஞானிகளை திகிலில் உறைய வைத்தார்.

கடந்தாண்டு அக்டோபரில் பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய மோடி, தக்‌ஷசீலம் பீகாரில் இருந்ததாகவும், போரஸ் கங்கைக் கரையில் நடந்த போரில் தோல்வியுற்றதாகவும், மௌரிய வம்சத்தைச் சேர்ந்த சந்திரகுப்தரை குப்த வம்சத்தைச் சேர்ந்தவராகவும் பேசி ஒரே நேரத்தில் வரலாற்று அறிஞர்களையும் சமூக ஆய்வாளர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினார்.

புஷ்-இசம்
“கவலைப்படாதே அமெரிக்கா….” “மனிதர்களும் மீன்களும் அமைதியாக சேர்ந்து வாழ முடியும்னு எனக்குத் தெரியும்”

இவற்றை வெறுமனே விவரப் பிழைகள் அல்லது மறதி என்று கடந்து செல்ல முடியாது. ஜார்ஜ் புஷ்ஷை நாம் அறிந்திருப்போம். உலக வரலாறே கண்டிராத மாபெரும் கோமாளி! அவரது கோமாளித்தனங்கள் புஷ்ஷிசம் என்ற பெயரில் இணையத்தில் மிகப் பிரபலம். ஆனால், கோமாளி புஷ்ஷின் தனிப்பட்ட செயல்பாடுகள் நகைப்புக்குரியதாக இருந்த அதே சமயத்தில் அமெரிக்க அதிபர் எனும் வகையில் அவர் முன்னெடுத்த அரசியல் செயல்பாடுகள் ஒரே நேரத்தில் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மக்களை சொல்லொணாத் துயருக்கு உள்ளாக்கின.

அன்று புஷ் துவங்கி வைத்த நிகழ்வுகளின் தொடர்ச்சி தான் இன்றும் உலகெங்கும் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகமேலாதிக்க திட்டத்தின் மிகக் கேந்திரமான செயல்பாடுகளைத் துவக்கி வைத்த பாசிஸ்ட் என்கிற கோணத்தில் அல்லாமல், உள்நாட்டு அமெரிக்கர்கள் அவரது கோமாளித்தனங்களை கேலி செய்வதில் திளைத்துக் கிடந்தனர். அவரது புவியியல் முட்டாள்தனம், பொருளாதார கோட்பாடுகள் குறித்த அறியாமை பற்றி அமெரிக்க முதலாளித்துவ ஊடகங்கள் கேலி கிண்டல்களை அவ்வப்போது வெளியிட, சாமானிய அமெரிக்கர்கள் இணையத்தில் அவற்றை மேலும் மெருகேற்றி பலவாறான நகைச்சுவைத் துணுக்குகளை உற்பத்தி செய்து திருப்திப்பட்டுக் கொண்டனர்.

மோடித்துவம்
மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை.

தற்போது மோடியின் தேர்தல் கால உத்திரவாதங்களும், அவர் மேல் மக்கள் கொண்டிருந்த மூட நம்பிக்கைகளும் தகர்ந்து வரும் நேரம். மெல்ல முதலாளித்துவ ஊடகங்கள் அவரது உளறல்கள் மெல்லிய நகைச்சுவையாக முன்வைத்து கிச்சுகிச்சு மூட்டத் துவங்கியுள்ளன. இணையவாசிகள் மோடித்துவா என்ற பெயரில் கிண்டலடித்து சுயமகிழ்ச்சியில் திளைக்கத் துவங்கியுள்ளனர்.

மோடியோ, ஜார்ஜ் புஷ்ஷோ கோமாளிகளாக இருப்பதில் வியப்பில்லை. பாசிஸ்டுகள் எப்போதும் உள்ளுக்குள் கோழைகளாகவும் கோமாளிகளாகவுமே இருப்பார்கள் – விதிவிலக்கின்றி. எனினும் அவர்களது முட்டாள்தனங்களை பகடி செய்யும் அதே நேரம் அவர்களிடமிருந்து வெளிப்படும் கேனத்தனமான கருத்துக்களின் அடிப்படை எங்கே இருக்கிறது என்பதையும், அதன் பொருளாதாய விளைவுகள் (Material effect) என்னவென்பதையும் புரிந்து கொள்ளவது அவசியம்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் இழிவைக் குறித்து தனது ’கர்மயோகம்’ என்ற நூலில் இவ்வாறாகச் சொல்கிறார் மோடி –

moditva-8”நான் அவர்கள் தங்களது வருமானத்திற்காக இந்த வேலையைச் செய்கிறார்கள் என்பதை நம்பவில்லை. அப்படியிருந்தால் இது போன்ற வேலையை தலைமுறை தலைமுறையாக அவர்கள் செய்யமாட்டார்கள். ஏதோவொரு சந்தர்பத்தில் யாரோ ஒருவருக்கு அது (மலமள்ளுவது) ஒட்டுமொத்த சமூகத்தின் மகிழ்ச்சிக்காகவும் கடவுளுக்காகவும் தாங்கள் செய்ய வேண்டிய கடமை என்கிற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். இது கடவுளால் தமக்கு அளிக்கப்பட்ட வேலை என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மலமள்ளும் வேலை என்பது உள்ளார்ந்த ஆன்மீக அனுபவம் என்பதை உணர்ந்தே அவர்கள் நூற்றாண்டுகளாக செய்து வருகிறார்கள். இது தலைமுறை தலைமுறையாக இவ்வாறே தொடர்ந்திருக்க வேண்டும்…”

இது வெறும் கோமாளித்தனமல்ல. சமூகத்தின் கீழ் அடுக்கில் அழுத்தப்பட்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இழிந்த காரியங்கள் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட தலித் சமூகத்தின் மேல் பார்ப்பனிய இந்துப் பொதுபுத்தியில் உறைந்து போயிருக்கும் வன்மத்திலிருந்தே இப்படி ஒரு கருத்து உதிக்க முடியும். ஆர்.எஸ்.எஸ் கோரும் இந்து ஒற்றுமை என்பதன் திருத்தமான விளக்கம் இது – அந்தந்த வர்ணத்தவர்கள் தங்களுக்கு ‘விதிக்கப்பட்ட’ கடமைகளை ஆற்றுவதன் மூலம் வீடுபேறை அடைய முடியும் என்பதுதான் பார்ப்பன இந்துமதம் போதிக்கிறது. இந்த தத்துவத்தின் நடைமுறை அர்த்தம் பார்ப்பான் மணியாட்டுவதும் தலித்துகள் பீயள்ளுவதும் தான்.

காலமாற்றத்திற்கு உட்பட்டு பார்ப்பனியம் தனது படிநிலைச் சாதி ஒடுக்குமுறையை முன்பைப் போல் அதே விகாரமான வடிவத்தில் முன் தள்ளுவதில்லை. சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும் சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும் போட்டு சூத்திரனைக் கீழே உட்காரச் சொல்லாமல் சொல்லி “நாசூக்காக” நடந்து கொள்ளும் சங்கர மடத்தைப் போல பார்ப்பனிய மேலாதிக்கம் நாசூக்கான முறையில் தான் தற்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது.

சு.சாமி - ஜெயேந்திரன்
சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும்

பொன்னார் - ஜெயேந்திரன்
சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும்

சங்கராச்சாரியே மௌனக் குசு விடும் காலத்தில் இத்தனைப் பட்டவர்த்தனமான வார்த்தைகளில் நாறடிக்கும் மோடியின் வார்த்தைகளை வெறும் கிறுக்குத்தனமான  உளரல்கள் என்று நாம் நகைக்க முடியுமா?

மோடித்துவம்
பாசிஸ்டுகள் கோமாளிகள் மட்டுமல்ல, கொலைகாரர்களும் கூடத்தான்.

பாசிஸ்டுகள் கோமாளிகள் மட்டுமல்ல, கொலைகாரர்களும் கூடத்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களது கோமாளித்தனத்தின் சமூகபாத்திரமல்ல; கொலைகாரத்தனத்தின் சமூகபாத்திரமே நமது அக்கறைக்கும் கவலைக்கும் உரியது. தற்போது மோடியைச் சுற்றிப் பின்னப்பட்ட மாயைகள் ஒவ்வொன்றாக அகலத் துவங்கியுள்ளன. இந்தத் தருணத்தில் அவரைச் சுற்றி அவ்வாறான மாயைகளைப் பின்ன கைக்கருவிகளாகச் செயல்பட்ட முதலாளித்துவ ஊடகங்கள் மெல்ல மெல்ல, மோடியின் உண்மையான முகத்தை நகைப்புக்குரிய ஒன்றாக சித்தரிக்க முயன்று வருகின்றன.

நாம் விழிப்போடிருந்து அந்த முகத்தின் உண்மையான பண்பான கொலைகாரத்துவத்தை இனங்கண்டு கொள்வதோடு அம்பலப்படுத்தவும், எதிர்த்து முறியடிக்கவும் முன்வர வேண்டும்.

–    தமிழரசன்.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. //காலமாற்றத்திற்கு உட்பட்டு பார்ப்பனியம் தனது படிநிலைச் சாதி ஒடுக்குமுறையை முன்பைப் போல் அதே விகாரமான வடிவத்தில் முன் தள்ளுவதில்லை. சுப்பிரமணிய சுவாமி வரும் போது இரண்டு நாற்காலிகளையும் சூத்திர பொன்னார் வரும் போது ஒரே நாற்காலியையும் போட்டு சூத்திரனைக் கீழே உட்காரச் சொல்லாமல் சொல்லி “நாசூக்காக” நடந்து கொள்ளும் சங்கர மடத்தைப் போல பார்ப்பனிய மேலாதிக்கம் நாசூக்கான முறையில் தான் தற்போது தன்னை வெளிக்காட்டிக் கொள்கிறது.//

  நம்ம ஆளு மத்திய முந்திரியா இருக்காரு என்று பித்திக்கொள்ளும் நாடார் மக்களுக்கு மட்டும் , இந்த செய்தி செவிட்டில் அறைவது போல அல்லவா இருக்க வேண்டும் ???? !

 2. தன்மானத்தை இழந்துதான் கடவுள் தூ..ர்க… காணவேண்டுமா? சாதரண சூத்திரனுக்கு அங்கு என்ன நிலை?

 3. ’சூத்திரர்’ பொன்னார் மட்டுமல்ல, சங்கராச்சாரியாரை விட வயதில் மிகவும் மூத்த வேத விற்பன்னர்களான ‘பிராமணர்களும்’ தரையில்தான் உட்காருகிறார்கள்.. ‘ஜகத்குரு’ என்பதால் இருக்கலாம்.. பொன்னார் இருக்கட்டும், செக்யூலர் புலி திக் விஜய சிங்கரே துவாரகா சங்கராச்சாரியார் சொரூபானந்தா முன்னால் தரையில் உட்கார்ந்து ஆசி பெறும் திருக்காட்சிகளை கண்டதில்லையா..?!

  http://indorecity.co/sankaracharya-denies-diggi-of-marriage-blessings-to-anchor-amrita/

  http://indiatoday.intoday.in/gallery/digvijay-singh-shivraj-singh-chouhan-seek-divine-blessings/2/5052.html

  சுப்ரமணிய சுவாமி விசயமே வேறு.. உட்கார நாற்காலி இல்லை என்றால் தரையில் உட்காரமாட்டார்.. தன்னுடைய மூட்டுவலி காரணமாக தரையில் உட்காரப்படாது, நாற்காலியிலோ, வாழை இலையிலோதான் உட்கார வேண்டும் என்று அமெரிக்க டாக்டர்கள் தன்னிடம் சொல்லியிருப்பதாக ஒரு பிட்டைப் போட்டிருப்பார்.. உடனே மிரண்டு போய் எதற்கு வீண் வம்பு என்று நாற்காலியை கொண்டுவந்து போட்டிருப்பார்கள்.. சு.சாமியின் மகத்துவம் அறியாமல் பார்ப்பனர் சூத்திரர் என்று பேதம் பேசப்படாது..

  • அம்பி ,சும்மா நச்சுனு இருக்குங்க உங்க காமடி டிராக் பின்னுட்டம்.

   சு.சாமி தன்னைய பார்பான் என்று பறைசாற்றுவது உமக்கு தெரியுமா? …யாதா ?

   சொரணை கேட்டு காஞ்சிக்கு கும்மிடு போடும் ராதாகிரிஸ்ன பொனானர் நாடாருக்கு ஒரைக்குமா , ஓரக்காதா என்று கேள்வி கேட்டா கூட இல்ல இல்ல அவாள் உலக மகா பிறாடு [ஜகத் கிரிமினல்] அவாள் காலில் விழுவதும் ,காலை கழுவுவதும் ,காலடியில் விழுந்து கிடப்பதும் தப்பு இல்லை! பொன்னர் நாடாரு என்று அறிவுரை கூறுவது தகுமா ?

   நேற்று பூரிக்கு சிக்கன் மசாலா செஞ்சிசாபிட்டீங்க!

   இன்று கஞ்சியில் மட்டன் வறுவல் ஸ்பெஷல் ஆ !?

   அம்பி சும்மா நச்சுனு இருக்குங்க உங்க காமடி கலக்கல் டிராக் பின்னுட்டம்.

   • // சொரணை கேட்டு காஞ்சிக்கு கும்மிடு போடும் ராதாகிரிஸ்ன பொனானர் நாடாருக்கு ஒரைக்குமா , ஓரக்காதா என்று கேள்வி கேட்டா கூட இல்ல இல்ல அவாள் உலக மகா பிறாடு [ஜகத் கிரிமினல்] அவாள் காலில் விழுவதும் ,காலை கழுவுவதும் ,காலடியில் விழுந்து கிடப்பதும் தப்பு இல்லை! பொன்னர் நாடாரு என்று அறிவுரை கூறுவது தகுமா ? //

    ’ஜெகத்குரு’ என்று ஏற்றுக் கொண்டவர்கள் எல்லோரும் சாதி,வயது வித்தியாசமில்லாமல் தரையில்தான் உட்காருகிறார்கள் என்றுதான் கூறியிருக்கிறேன்.. பதிவில் கூறியது போல் அல்லாமல், சிஷ்ய கோடிகள் உட்காருவதில் நாற்காலி-தரை என்ற வர்ணப் பாகுபாடு இல்லை என்றுதான் கூறியிருக்கிறேன்.. மற்றபடி ஏன் குருவாக ஏற்றுக் கொண்டார்கள் என்பதை அவர்களிடம்தான் நீங்கள் கேட்டுத் தெரிந்து கொள்ளவேண்டும்..

    // நேற்று பூரிக்கு சிக்கன் மசாலா செஞ்சிசாபிட்டீங்க!

    இன்று கஞ்சியில் மட்டன் வறுவல் ஸ்பெஷல் ஆ !? //

    சிவசிவா..

    // அம்பி சும்மா நச்சுனு இருக்குங்க உங்க காமடி கலக்கல் டிராக் பின்னுட்டம். //

    ஹிஹீ.. என்ன இருந்தாலும் உங்க அளவுக்கு முடியுமா அண்ணாத்தே..?! சும்மா தினுசு தினுசா வந்து கலக்குறீங்க போங்க.. ஆனா இங்க கலக்குறதா என்னய பாராட்டிட்டு இன்னோரு இடத்துல ஒரு அம்பி அங்க பூரிக்கும், காஞ்சிக்கும் காக்கா பிடிக்குதுன்னு வேற தினுசா பேசுறது நல்லாவா இருக்கு.. உணர்ச்சி வசப்பட்டுட்டா உங்களுக்கு கண்ணுமண்ணு தெரியமாட்டேங்குது.. தெனமும் ஒரு அரை மணிநேரம் தரையில உக்காந்து சிவபெருமான குருவா நெனச்சு தியானம் பண்ணுங்க..

    • அம்பி அண்ணாச்சி[காஞ்சி-காகம்], தினமும் சிவகார்திகேயன் என்ற பெயரை 100 முறையாவது உச்சரித்து, அவனுக்கு [ஒரு வயது சிவனுக்கு ] தேவையான பணிவிடைகளை முழுமையாக செய்து கொண்டு தான் உள்ளேன். புரியவில்லை என்றால் கண்ணப்ப நாயனார் கதை படிக்கவும ஐயா !

     அது சரி அம்பி அண்ணாச்சி, சிவ பெருமான் ஜகத் கிரிமினல் கனவில் வந்து ராதாகிருஷ்வுக்கு தரையும் ,சு.சா வுக்கு நாற்காலியும் போட சொன்னாரா ? உம் இடம் கனவில் வந்து காஞ்சி ஜகத் கிரிமினளுக்கும் ,பூரி சாதிவெறி சிக்கன் ம்சாலாவிற்கும் அட்வகேட் பண்ண சென்னாரா ? கேட்டகவே உமது சீந்தனை சிதறல் நரசமா இல்லையா ?

    • அம்பி அண்ணாச்சி[காஞ்சி-காகம்],

     சிவ பெருமான் ஜகத் கிரிமினல் கனவில் வந்து ராதாகிருஷ்வுக்கு தரையும் ,சு.சா வுக்கு நாற்காலியும் போட சொன்னாரா ? உம் இடம் கனவில் வந்து காஞ்சி ஜகத் கிரிமினளுக்கும் ,பூரி சாதிவெறி சிக்கன் ம்சாலாவிற்கும் அட்வகேட் பண்ண சென்னாரா ? அதுக்கும் ,இதுக்கும் பேரு சாதிவெறி இல்லாம வேறு என்ன ? கேட்டகவே உமது சீந்தனை சிதறல் நரசமா இல்லையா ??

     தினமும் சிவகார்திகேயன் என்ற பெயரை 100 முறையாவது உச்சரித்து, அவனுக்கு [ஒரு வயது சிவனுக்கு ] தேவையான பணிவிடைகளை முழுமையாக செய்து கொண்டு தான் உள்ளேன். புரியவில்லை என்றால் கண்ணப்ப நாயனார் கதை படிக்கவும ஐயா !

     • // சிவ பெருமான் ஜகத் கிரிமினல் கனவில் வந்து ராதாகிருஷ்வுக்கு தரையும் ,சு.சா வுக்கு நாற்காலியும் போட சொன்னாரா ? //

      தெரியாது.. சிவபெருமான் ஏன் கனவில் வரவேண்டும்.. வாழை இலை நினைவில் வந்தால் போதாதா..?!

      // உம் இடம் கனவில் வந்து காஞ்சி ஜகத் கிரிமினளுக்கும் ,பூரி சாதிவெறி சிக்கன் ம்சாலாவிற்கும் அட்வகேட் பண்ண சென்னாரா ? //

      என் கனவில் சிவபெருமான் வருவதில்லை..

      // அதுக்கும் ,இதுக்கும் பேரு சாதிவெறி இல்லாம வேறு என்ன ? கேட்டகவே உமது சீந்தனை சிதறல் நரசமா இல்லையா ?? //

      ஒரு நாடாரை தரையில் உட்கார வைத்ததுதான் உங்களுக்கு பிரச்சனையா..? ஒரு பார்ப்பனரோ, சைவப்பிள்ளையோ தரையில் உட்கார்ந்தால் பிரச்சினையில்லையா..? உங்கள் கரிசனம் ஏன் உட்காருகிறார்கள் என்பதா அல்லது யார் உட்காருகிறார்கள் என்பதா..? சங்கராச்சாரியாரை விட வயதிலும் வேதஞானத்திலும் மூத்த பார்ப்பனர்களும் தரையில் உட்காருகிறார்கள் என்று கூறியது அது எந்த ஒரு குருவுக்கும் (அதாவது அவரது குருஸ்தானத்துக்கு) இந்திய மரபில் கொடுக்கும் வழக்கமான மரியாதை என்று சுட்டிக்காட்டத்தான்.. இந்த மரபு வர்ணாசிரம மரபு என்பதைவிட இந்திய மரபு என்று கூறலாம்.. பொதுவாக உலகெங்கிலும் கூட குருவாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களுக்கு இது போன்ற மரியாதை இருந்திருக்கிறது, இன்னும் கூட இருக்கிறது.. பள்ளி, கல்லூரிகளில் குருமார்களின் முகத்திலேயே புகைவிட்டு உரிமையை நிலைநாட்டும் இந்தக் காலத்தில் மேற்படி மரியாதை தேவையா என்ற கேள்வி எழுவதும் தவிர்க்க முடியாததுதான்..

      // தினமும் சிவகார்திகேயன் என்ற பெயரை 100 முறையாவது உச்சரித்து, அவனுக்கு [ஒரு வயது சிவனுக்கு ] தேவையான பணிவிடைகளை முழுமையாக செய்து கொண்டு தான் உள்ளேன். புரியவில்லை என்றால் கண்ணப்ப நாயனார் கதை படிக்கவும ஐயா ! //

      உங்கள் குழந்தைக்கு நீங்கள் முழுமையாக பணிவிடைகள் செய்வது குறித்து வாழ்த்துக்கள்.. மனிதகுலத்தின் மீது இன்னும் நம்பிக்கை இருப்பதால்தான் கடவுள் இன்னும் குழந்தைகளை பிறக்கவைக்கிறார் என்று ஒரு ரசிய மேதை கூறினார்.. அந்த வகையில் கடவுளின் பிரதிநிதிக்கு நீங்கள் இப்போது சேவை செய்ய நேர்வதற்கு மகிழ்சியடையுங்கள்.. அந்தக் குழந்தை வளர்ந்துவிட்டால் பிறகு அது சாதாரண மனித/புத்திர சேவையாகிவிடும்..

      இதைப் படித்துவிட்டு ஆவேசமாகி தவறுதலாக குழந்தையை போட்டு கிள்ளி வைத்து விடாமல் கவனத்துடன் இருக்கவும்.. முடிந்தால் தினமும் காலை,மதியம்,மாலை, இரவு என்று 4 முறை தியானம் செய்யவும்.. ஹிஹீ..

 4. அட அப்பி இது கூட தெரியவில்லையே உங்களுக்கு !

  சிவ பெருமான் கணவில் வந்தாலும்,வாழை எலை நினைவில் வந்தாலும் எப்படி வந்து ராதா அனாச்சிக்கு தரையும் ,சு சா பாப்பானுக்கும் கொடுக்க சொல்லி இருந்தால் ,சொன்ன அவன் [சிவன் ] மேலையும் மனித உரிமைக்கு எதிரா கருத்து சொன்னதா வழக்கு போடுப்பா அம்பி அண்ணாத்தே ! ஆனா சிவன் கனவில் வந்து அப்படி சொல்லி இருக்க வில்லை என்றால் ஜகத் கிரிமினல் மீது வழக்கு போடு அம்பி அண்ணாத்தே !

  நாடாருக்கு தானே தமிழக பிஜேபி தலைவர் பதவியும் ,மத்திய துணை முந்திரி பதவியும் கொடுத்து காக்கா பிடிக்குது காவி கூட்டம் ? அப்படி என்றால் தரையில் உட்காரும் நாடாருங்க என்ன சு.சா பாப்பானை வை விட தாழ்ந்தவங்கலா என்பது தான் என் கேள்வி ? 100 ஆண்டுக்கு முன் வரை பார்பன ஹிந்து சாதிய அடக்கு முறையில் அடிமை பட்டு கிடந்த நாடாரு ,சாணறு சமுகத்தை என்று அதே பார்பன கூட்டம் வேறு மாதிரி பார்பன அரசியல் அடிமையா மாத்த பாக்குது என்று பேசினா கூட அப்பி பாப்பானுக்கு கொடி பிடித்து அட்வகேட் பண்ணுவது ஏன் ?

  என்ன அம்பி அனுபவம் பேசுதா ?///ஆவேசமாகி தவறுதலாக குழந்தையை போட்டு கிள்ளி வைத்து விடாமல் கவனத்துடன் இருக்கவும்///

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க