தெருவில் சினிமா போஸ்டரை மேய்ந்து கொண்டும், எப்போதடா பிரியாணியாகும் பாக்கியம் தனக்கு வாய்க்கும் என்று வயதான காலத்தில் ஏக்கத்தோடு சாவை எதிர்பார்த்தும், திரிந்து கொண்டிருக்கும் கோமாதாவை வம்படியாக பிடித்து சித்திரவதை செய்கிறது சங்கப்பரிவார கும்பல்.
மாடு புனிதம், மாடு பேண்ட சாணி புனிதம், மாடு மோண்ட மூத்திரம் புனிதம் என்று ”இந்து புனிதங்களுக்கு” விதவிதமான விளக்கங்களை காவி கும்பல் வழங்கி வந்த நிலையில் தற்போது புதிய விளக்கங்களை முன்வைக்கத் துவங்கியுள்ளனர். அதாவது மாடு மட்டுமல்ல, மாட்டை ஒத்த எருமை, ஆடு, ஒட்டகம் ஆகிய பிராணிகளும் புனிதம் என்கிறார்கள்.
2014-ம் ஆண்டு விஜயதசமியன்று உரையாற்றிய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்யப்படுவது உடனடியாக தடை செய்யப்பட வேண்டும், மாடுகள் ’கடத்தப்படுவது’ உடனடியாக தடை செய்யப்பட வேண்டுமென்றும் கூறியிருந்தார். மோகன் பாகவத்தின் உரைக்கு பொழிப்புரை எழுத வந்த பிரதமரின் ஆலோசகரும் ஆர்.எஸ்.எஸ் பத்திரிகையான ஆர்கனைசரின் முன்னால் ஆசிரியருமான சேஷாத்ரி சாரி, பசு மட்டுமின்றி ஒட்டு மொத்த கோ வம்சத்தையும் இறைச்சிக்காக கொல்வது தடை செய்யப்பட வேண்டும் என்று பாகவத் அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே கடந்த மாதம் 14-ம் தேதி ஜெய்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மேனகா காந்தி, இறைச்சி வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் பணமெல்லாம் தீவிரவாத செயல்களுக்கு திருப்பி விடப்பட்டு இந்தியர்கள் கொல்லப்படுவதில் முடிகிறது என்று தெரிவித்துள்ளார். ஆனால், உண்மை என்னவோ மேனகா காந்தி சொல்வதில் இருந்து நேர்மாறானதாக இருக்கிறது. இந்தியாவிலிருந்து இறைச்சி ஏற்றுமதி செய்வதில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் முதல் மூன்று நிறுவனங்களும் ‘இந்துக்களுக்கே’ சொந்தமானதாக இருக்கிறது. இல்லை இந்தியாவில் உள்ள பயங்கரவாதங்களுக்கு இந்த ‘இந்துக்களே’ காரணமென்று ஆகிறது.
ஆர்.எஸ்.எஸ் கும்பலின் புரவலர்கள் பனியாக்கள் என்பதால் மேனகா காந்தியின் கூற்று உணமையாக இருப்பதற்கான சாத்தியங்களையும் நாம் மறுத்து விட முடியாது என்பது வேறு விசயம்.
பார்ப்பனிய கலாச்சாரத்தையே பொதுவான ‘இந்துக்கள்’ கலாச்சாரமாக சித்தரிப்பது, அதனடிப்படையில் சமூகத்தை மதவாத அடிப்படையில் குறுக்கு நெடுக்காக பிளப்பது என்கிற தமது செயல் தந்திரத்தை காவி கும்பலின் உயர்மட்டம் தெளிவாக முன்னெடுக்கத் துவங்கியுள்ளது. கூடவே அதை அமல்படுத்தும் வண்ணம் வன்முறை வெறியாட்டத்தையும் துவங்கியுள்ளது.
இந்தாண்டு ஈத் பண்டிகையின் போது குஜராத்தின் அகமதாபாத் நகரெங்கும் சிறிதும் பெரிதுமான கலவரங்கள் நடந்துள்ளன. குஜராத்தின் பல இடங்களில் இசுலாமியர்கள் குர்பானிக்காக கொண்டு சென்ற ஆடுகளை போலீசின் துணையோடு பஜ்ரங் தள் குண்டர் படைதடுத்து நிறுத்தியுள்ளது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், கோலிகள் மற்றும் சித்திகள் உள்ளிட்டு சுமார் 60 சதவீதம் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்கள் நிறைந்த குஜராத்தின் பாலிடானா பகுதியை முற்றிலுமான சைவ உணவுப் பிரதேசமாக அறிவித்து அசைவ உணவுகளைத் தடை செய்துள்ளனர்.
சுமார் 1.5 லட்சம் மக்கள் தொகை கொண்ட தில்லி புறநகர் பகுதியான பாவனாவில் 70 சதவீதமானோர் இசுலாமியர்கள் ஆவர். சுமார் 200 குண்டர்களோடு அப்பகுதியில் ஊடுருவிய இந்துத்துவ குண்டர்கள் அங்கே மூன்று பசுக்களை கடத்தி ஒளித்து வைக்கப்பட்டிருப்பதால், அதை மீட்கப் போவதாகவும் போலீசின் உதவியோடு வெறியாட்டம் போட்டுள்ளனர். கடைசியில் அவர்களால் ஒரே ஒரு பசுவைத்தான் கண்டு பிடிக்க முடிந்துள்ளது, அதுவும் அந்தப் பகுதியைச் சேர்ந்த இந்து பால்காரர் ஒருவருக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. ராஜஸ்தானில் ஒட்டகங்கள் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக வசுந்தரா ராஜேவால் அறிவிக்கப்பட்டுள்ளது.
சைவ உணவுப் பழக்கமே மேலானது என்றும் அதுவே ’இந்து’ அடையாளம் என்பதாகவும் நிலைநாட்டத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். என்றாலும், இதைக் கீழ்மட்டத்திலிருந்து மக்களின் ஆதரவோடு நிலைநாட்டுவதிலும் சிக்கல் உள்ளது. தம்மை ’இந்துக்கள்’ என்று அடையாளப்படுத்திக் கொள்வோரில் பார்ப்பனர்கள் மற்றும் பட்டேல்கள், ஜெயின்கள் உள்ளிட்ட ஒருசில ஆதிக்க சாதியினர் தவிர பெரும்பான்மையானோர் அசைவ உணவுப் பழக்கம் கொண்டவர்களாகவே உள்ளனர்.
பெங்காலி பார்ப்பனர்களோ சூத்திரர்களே மூக்கில் விரல் வைக்கும் வண்ணம் மீன் உணவுப் பிரியர்களாக இருக்கிறார்கள். வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் வட மாநிலங்களின் ”சத்திரிய” சாதியினரிடையே தங்கள் இஷ்ட தெய்வங்களுக்கு எருதையும் எருமையையும் பலி கொடுக்கும் வழக்கம் உள்ளது. இது தவிர தெற்கே தமது வளர்ச்சிக்கான இலக்காக ஆர்.எஸ்.எஸ் இனங்கண்டுள்ள கேரளத்தில் நம்பூதிரி தவிர்த்த அனைத்து ‘இந்துக்களும்’ மாட்டிறைச்சி உண்ணும் பழக்கம் கொண்டவர்களே. தமிழகத்திலும் இதுவே நிலைமை.
ஆக, கீழ்மட்டத்தில் சைவ உணவுக்கு ஆதரவான அணிதிரட்டலோ கலவரங்களோ முழுமையான அளவில் சாத்தியமில்லை என்பதை உணர்ந்துள்ள ஆர்.எஸ்.எஸ், மேலிருந்து சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் மூலமும் கலாச்சார ரீதியில் அசைவத்தை இழிந்த உணவாக நிலைநாட்டுவதன் மூலமும் தனது நோக்கங்களை நிலைநாட்டிக் கொள்ளத் துடிக்கிறது. அதிலும் குறிப்பாக இந்துமதவெறியின் கோட்டையான இந்தி பேசும் மாநிலங்களில் அதை அமல்படுத்த துவங்கியிருக்கிறது. இது குறித்து ‘கருவாடு’ ஆவணப்படத்தில் விரிவாக பேசுகிறது.
முதலில் பசுவை தெய்வம் என்பது, பின்னர் பசுவதையை தடுக்க கோருவது, அடுத்த கட்டமாக பசு மாமிசம் உண்பது இசுலாமியர்கள் மட்டும் தானென்பதை நிலைநாட்டுவது, அடுத்த கட்டமாக எல்லா மாமிச உணவையும் மாட்டிறைச்சியோடு தொடர்புபடுத்துவது என்கிற பாதையை தெரிவு செய்துள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு புறம் இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 12 சதவீத பங்கு வகிக்கும் இறைச்சி ஏற்றுமதியின் மொத்த மதிப்பு சுமார் 500 கோடி டாலராகும் (சுமார் ரூ 30,000 கோடி). இதில் சுமார் 440 கோடி டாலர் (சுமார் ரூ 26,400 கோடி) எருமை மாட்டிறைச்சி ஏற்றுமதியின் மூலமே கிடைக்கிறது. மாட்டிறைச்சி மற்றும் எருமை மாட்டிறைச்சி ஆகியவற்றின் உள்நாட்டு நுகர்வும் அதிகமாகவே இருக்கிறது.
பெரும்பான்மையான ஏழை மக்களின் புரதம் மற்றும் ஊட்டச்சத்து தேவையை மாட்டிறைச்சியே பூர்த்தி செய்து வருகிறது. முன்பு பாரதிய ஜனதா பசுவதைத் தடைச்சட்டத்தை தனிநபர் மசோதாவாக கொண்டு வர முயன்ற போது அதை எதிர்த்துப் பேசிய பி.ஏ சங்மா, ஒரு வேளை பசுவதை தடை சட்டப்பூர்வமானதாக ஆகும் பட்சத்தில் வடகிழக்கு மாநில மக்கள் பெரியஅளவில் பாதிக்கப்படுவார்கள் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இசுலாமியர்களின் வேலையே மாட்டைக் கொன்று தின்பது தான் என்கிற ரீதியில் இந்துத்துவ கும்பல் அடித்து விடுவது முதலில் அடிப்படையற்றதாகும். மாட்டிறைச்சி என்பது மலிவாக (கிலோ 140 ரூ) கிடைக்கக் கூடிய அசைவ உணவாக இருப்பதால், சமூகத்தின் கீழ் அடுக்கில் உள்ள தலித்துகள், பழங்குடியினரின் மற்றும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் இதர பிரிவு உழைக்கும் மக்களின் உணவாகவே எதார்த்தத்தில் உள்ளது. வசதியான இசுலாமியர்கள் மாட்டிறைச்சியை விட மென்மையான ஆட்டிறைச்சியையே விரும்புவர். தவிர வடகிழக்கு மாநில மக்களிடையேயும் மாட்டிறைச்சி உண்பது கலாச்சார ரீதியில் சகஜமானதாக உள்ளது.
ஊட்டச்சத்து குறைபாடுள்ளவர்கள் நிறைந்த நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை எட்டிப் பிடித்துள்ள இந்தியாவை சைவ நாடாக மாற்றுவதன் மூலம் பெரும்பான்மை மக்களை கொன்று போடத் துடிக்கிறது இந்துத்துவ கும்பல். இது ஆர்.எஸ்.எஸ் – இசுலாமியர்கள் பிரச்சினையல்ல; பெரும்பான்மை உழைக்கும் மக்களை கேவலப்படுத்தும் நேரடியான உணவுத் தீண்டாமை. பெரும்பான்மை மக்களின் உணவுப் பழக்கத்தை கொச்சைப் படுத்துவதன் பின்னிருக்கும் பார்ப்பனியத் திமிரை நாம் இனங்கண்டு கொள்வதோடு நேரிட்டு மோதி ஒழித்துக் கட்ட வேண்டியது அவசியம்.
மானமும் சொரணையும் உள்ளவர்கள் செய்யக்கூடிய காரியமும் அதுதான்.
– தமிழரசன்
Ennamo ivan pakathil irundhu keta madhiri Summa Kilapi vida vendiyathu thane
Vennaivetti Venki read this:
http://mcomments.outlookindia.com/story.aspx?sid=4&aid=292209
Once again its proved that the Sangh Parivar is India’s Taliban. They are crushing the food choice of people. Majority of Kerala, Goa, Kashmir, TamilNadu, Entire North East, Dalits and Muslims in all over India have a traditional Beef eating culture. Banning beef is a cultural terrorism.
Eating Non-Vegetarian food is our birth right, Modi or anybody has no right to dictate on what we eat.
எப்படியா இப்படி புதுசு புதுசா அதுவும் முட்டாதனமா சிந்திக்கிறே.
நல்லக் கட்டுரை. மதயானை வரதுக்கு முன்னாடி மணியோசை வர மாதிரி கூட இதைப் புரிஞ்சுக்குலாம். எனது அலுவலக இசுலாமிய நண்பர் ஒருவர் (லச்சங்களில் சம்பளம்) ஒருமுறை நான் பீப் பிரியாணி செய்து கொண்டு வாருங்கள் என்று எதார்த்தமாக கேட்டபொழுது , நான் மாட்டுக்கறி சாப்பிட மாட்டேன் என்றும் ஒன்லி சிக்கன் மட்டன் மற்றும் பிஷ் மட்டும் தான் சாப்பிடுவோம் என்று கூறினார். எனக்கு சற்று ஏமாற்றமாய் தான் போயிற்று. ஹிந்துத்வா வியாதிகள் சொல்வது போல இங்கே இசுலாமியர்கள் மட்டுமா மாட்டுக்கறி சாப்பிடுகிறார்கள் இங்கிருக்கும் இசுலாமிய மக்களை விட அதிக தொகையில் இந்து மக்கள் சாப்பிடுகிறார்கள். கொஞ்ச பேரு அதிகாரத்துல இருந்துகிட்டு என்னமா செட்ட பண்றானுங்க.
Why no mention of Pork?
பாலா,
ஹிந்துத்வா வியாதிகள் , இசுலாமியர்கள் பன்றிக்கறி சாப்பிடுவதில்லை என்பதைப் பற்றி எதுவும் சொல்லாமல் கமுக்கமாக இருக்கிறார்கள் மாறாக மாட்டுக்கறி சாப்பிடுவதாக தான் கொலைவெறி கூப்பாடு போடுகிறார்கள். பத்து அவதாரத்தில் ஒன்றான பன்னியை அவர்கள் தின்னாமல் இருப்பதை ஹிந்துத்வாவியாதிகள் கவனிப்பாராக . நீங்களும் தான்.
அய்யா சிவப்பு பாலா சரியான கேள்வியைத்தான் கேட்கிறார் அவதாரம் பத்தியெல்லாம் பேசி என்ன பயன் இந்துக்களுக்கு பசு புனிதமாக தெரிகிறது அதனால் அதை உண்ண மறுக்கிறார்கள் இசுலாமிய்ர்களுக்கு பன்றி அருவருப்பாக தெரிகிறது அதனால் அதை உண்ண மறுக்கிறார்கள் இதுல ஒரு மதத்துகார்னுக்கு மட்டும் சப்போர்ட் பன்னிட்டு இன்னொருத்தருக்கு விதி விலக்கு அளித்தால் அது நடு நிலமையா எனக்கு தெரியல…
/இந்துக்களுக்கு பசு புனிதமாக தெரிகிறது அதனால் அதை உண்ண மறுக்கிறார்கள்/
இந்துக்கள் பசு மாமிசம் உண்ண மறுப்பவர்கள் என்று கூறுவதன் மூலம் தலித்கள் இந்துக்கள் அல்ல என்று ஒத்துக்கொண்டமைக்கு நன்றி. இன்னும் மானங்கெட்டு தங்களையும் இந்துக்களாக கருதும் தலித்துத்துகள் இதை புரிந்துகொள்ள வேண்டும். நம் பாரம்பரிய உணவுக்கு இந்து மதத்தில் இடம் இல்லை என்பதை. பார்பான பண்பாடு தான் இந்துப்பண்பாடு என்பதை.
இந்த யோசேப்பு சரியான .. ஆளா இருப்பாரு போல. ஹிந்துக்களுக்கு பசுப் புனிதமோ அதன் சாணியும் மூத்திரமும் புனிதமோ அதைப் பத்தியா இந்த கட்டுரை பேசுது. இசுலாமியர்களுக்கு பண்ணி அருவருப்பா இருக்குன்னா அவன் சாப்புடாம இருக்கான் உங்களுக்கு என்ன நோவுது. உங்ககிட்ட வந்து பண்ணி கறி சப்பிடாதன்னு சொன்னானா. அது சரி எந்த இந்துங்கன்னா மாட்டுக்கறி சாப்பிட மறுக்குறாங்க. இந்தியாவில் 80 விழுக்காடுகள் இந்துக்கள் இருக்காங்க. அவிங்க அத்துனைப் பேரும் பசுவைப் புனிதமா நினைக்கிறாங்களா. மாட்டுகரிய சாப்பிடாம இருக்கங்களா.
மாட்டை ஒத்த எருமை. pl’s avoid this vulgar words. thank you
மாட்டை ஒத்த எருமை = மாட்டுக்கு நிகரான, சமமான, மாட்டைப் போன்ற எருமை என்றே பொருள்! நன்றி
thanks for reply. sorry for my comment.
முதலிலேயே,இவ்வாறே எழுதியிருந்தால் தேவையில்லாத விவாதங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம். கட்டுரை- சிந்தனையை அதிகப்படுத்துகிறது.
வினவு தமிழ் மொழியில் எல்லாருக்கும் உயிர் எழுத்துக்கள் “ஒ “விற்கும் “ஓ” விற்கும் உள்ள வேறு பாடு தெரியும் என்று நினைத்து இருக்கும். “ஒத்த” என்ற வார்த்தை திருக்குறளில் வினவு கூறும் பயன் பாட்டில் தான் கையாளப்பட்டு உள்ளது என்பதை காணக!
ஒப்புரவறிதல்
ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும். [214]
மு.வ உரை:
ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் உயிர்வாழ்கின்றவன் ஆவான், மற்றவன் செத்தவருள் சேர்த்துக் கருதப்படுவான்.
மனதொத்த [தம்பதி] = மனது + ஒத்த, சுத்த தமிழன் அனைவரும் தமிழ் அழகு அறிவர்,மற்றவர் ?
சுத்த தமிழன் அசுத்த தமிழன் என்று வேறு இருக்கின்றனரா ? 8 ஆம் வகுப்பு வரை பயின்ற அனைவருக்குமே ஒத்த என்ற சொல்லின் பயன்பாடு தெரிந்து இருக்குமே !
பூர்வீக வித்து, கலப்படமில்லாத அசல் வித்து அது.
மோகன் பகவத், மேனகா காந்தி ,மோடி இவங்க மட்டுமா இந்து, இறைச்சி சாப்புடுற இந்துக்கள் 90% மேல இருப்பாங்க அம்மா ஆடு கோழி பலியிட தடை சட்டம் கொண்டு வந்தது மாறி இதுவும் புஸிவானமாத்தான் போகும் .கடா வெட்டாம கருப்புசாமிக்கு படையளா சாவல் அறுக்காம முனியான்டி சாமிய திருப்தி படுத்த முடியுமா நோ நெவெர் அதுனால் பெரும்பான்மை இந்துக்களே இதை எதிர்ப்பார்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்ப்பட்ட சாதிகளை சார்ந்த பலர் இப்ப கல்யானம்,காதுகுது போன்ற விழாக்களுக்கே ஆடோ ,கோழியோ வச்சி கறி விருந்து வைக்கிறாங்க ஏன்னா 3 வகை கூட்டு அப்பளம் பாயசம் சாம்பார் ரசம் மோருனு ஏகப்பட்ட ஐயிட்டம் செய்யனும் சைவ சமையல்னா கறி விருந்து வச்சா செலவும் கம்மி நேரமும் கம்மி அதனால மோகன் பகவத்து மேனகா காந்தினு யாரு சொன்னாலும் ஏத்துக்க மாட்டாங்க செல்லாது செல்லாது எவடி அவ தீர்ப்ப மாத்தி சொல்லு…
“தெருவில் சினிமா போஸ்டரை மேய்ந்து கொண்டும், எப்போதடா பிரியாணியாகும் பாக்கியம் தனக்கு வாய்க்கும்” adadaaa enna oru tharamaana sinthanai
பாவம் தலித்மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை செம்மை படுத்த மாட்டு இரைச்சியை உண்ணலாம், அதே போல அனைத்து தரப்ப்ப்ப்ப்ப்பு மக்களும் பன்றி கரியயும் உண்டு மேலும் தலித்கலின் பொருளாதாரத்தை மேம்படுத்த வினவு அறிவுரை குருமா கிண்டுமா
மாட்டிரைச்சி தலித்களின் பாரம்பரிய உணவு. நாங்கள் பன்றிக்கறியையும் சாப்பிடுவோம். உனக்கு ஏன் அது வலிக்குது.
யப்பா தலித்துகளா நான் சொன்னது உங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக அனைவரும் நான் சொன்னது அனைவரும் பன்றி கறி உண்ண வினவு அறிவுரை கீண்டலாம் என்பது
உடலுழைப்பு செய்பவர்களுக்கும், வளரும் பருவத்தினருக்கும் புரதசத்து இன்றியமையாதது! அது பெரும்பாலும் இறைச்சி , பால், மீன் மூலம்தான் பெற முடிகிறது! பருப்பு வகை புரதம் விலை அதிகம்! மேலும் தினமும் குறைந்தது மூன்று அல்லதுநாலு வகை புரதம் உணவில செர்த்துகொள்ளவேன்டும்!
திண்ணை தூஙகிகளுக்கு புரதம் அதிகம் தேவைப்படாது! அவர்களுக்கு தயிர் சாதமே எதேஷ்டம்!
கொஞ்ச நாளா ஆளக் காணோமே.. தீபாவளி கொண்டாட்டம் அப்பறம் திண்டாட்டம் எல்லாம் முடிந்ததா..
// திண்ணை தூஙகிகளுக்கு புரதம் அதிகம் தேவைப்படாது! அவர்களுக்கு தயிர் சாதமே எதேஷ்டம்! //
ஓவரா கொண்டாடிட்டு ரொம்ப கஷ்டப்பட்டுருக்கீங்க போலருக்கே.. தயிர் சாதம், சாம்பார் சாதமே எதேஷ்டம்ன்னு இருந்திருக்கப்படாதா..?!
Mமாட்டை யார் சாப்பிட்ட யென்ன ஆட்டை யார் சாப்பிட்ட யென்ன பன்னிய யார் சாப்பிட்ட யென்ன ??????சப்பிடரவசப்பிடரவனொட மனசும் உடலும் ஒத்து பபோன அவனவன் சாப்பிடட்டும்??????இதுல சங்க் பரிவார் கும்பலுக்கு யென்ன வந்தது ?????இதுல மாட்டு ககரீ வெலை ஏரிப்பொனதுக்கு காகாரனமெ யெல்லா அய்யரும் மாட்டுக்கரி சப்பிடருது தாலதாதாலதான்??????ஒரு ஐஇயர் பையன் அவஙக கரி சமைஷ்ஷு தரலன்னு அடிஷான் செய்திகல் பார்த்திருக்கொம்….மொமொடல்ல அவஙல ணிருத்த்ச் சொல்