மத்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் ஆக மாற்றுதல், பல்கலைக்கழகங்களில் இந்தித் திணிப்பு… என்று மோடி அரசின் இந்துத்துவ வெறி நடவடிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமலாகிக் கொண்டிருக்கும் சூழலில், உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் என்ற பாரதிய ஜனதாக் கட்சி எம்.பி, தமிழின் மேன்மை பற்றி பொளந்து கட்டி வருகிறார்.
![தருண் விஜய் தருண் விஜய்](https://www.vinavu.com/wp-content/uploads/2014/10/tarun-vijay.jpg)
“வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக்கி, தமிழ் படிக்க முன்வரும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்க வேண்டும். அரசு அலுவலகங்களில் பணிபுரிகிறவர்களும் தமிழ் மொழியைக் கற்க ஊக்கப்படுத்த வேண்டும். நாட்டின் இரண்டாவது தேசிய மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும்!” இவையெல்லாம் சென்ற ஆண்டு (மன்மோகன் ஆட்சியில்) மாநிலங்களவையில் தருண் விஜய் பேசியவை.
உடனே அவரைப் பாராட்டி ஆனந்த விகடனில் (2, அக். 2013) ஒரு பேட்டி வெளியானது. “இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற மாநிலம்- என்று மட்டும்தான் தமிழ்நாட்டைப் பற்றி வட இந்தியப் பள்ளிகளில் கற்றுக்கொடுக்கிறார்கள். இந்த வெறுப்பின் காரணமாகவோ என்னவோ… தமிழ்நாட்டின் சரித்திரப் பெருமைகளைப் பற்றியும், இலக்கிய வளங்களைப் பற்றியும் வடக்கில் இருக்கும் நாங்கள் தெரிந்துகொள்ளாமல் அறியாமை இருட்டிலேயே இருந்துவிட்டோம்!” என்று அதில் உருக்கமாகப் பேசுகிறார் தருண் விஜய்.
ஆனால், மேற்படி யோக்கியர் தற்போதைய மோடி அரசின் இந்தி, சமஸ்கிருத திணிப்பு நடவடிக்கைகள் குறித்து ஒரு வார்த்தை பேசவில்லை. இருந்தபோதிலும், “தமிழுக்குக் கொடி பிடித்த பஞ்சாபி” என்ற தலைப்பில் ஜு.வி.-யில் மறுபடியும் ஒரு பேட்டி; “நானும் தமிழைக் காதலிக்கிறேன்” என்று தமிழ் இந்து நாளேட்டில் இன்னொரு பேட்டி.
“திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடவேண்டும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பற்றி வட இந்திய மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். சென்னை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். ஒரு வட இந்திய மொழி மேலாதிக்கம் செய்து அரசு இயந்திரத்தை கட்டுப்படுத்தக் கூடாது” என்று இந்தப் பேட்டிகளில் சரம் சரமாக அடித்து விடுகிறார் தருண் விஜய். “இதையெல்லாம் மோடியிடமும் ராஜ்நாத் சிங்கிடமும் சொன்னீர்களா?” என்று யாரும் கேட்கவில்லை.
இப்பேட்டிகள் வெளியானதைத் தொடர்ந்து தருண் விஜய்க்கு கருணாநிதி, வைகோ, ராமதாசு போன்றோரின் பாராட்டுகள்! மறுபடியும் ஊடக விளம்பரம். மேற்படி தமிழர் தலைவர்களும் இந்தக் கேள்விகளை எழுப்பவில்லை என்பதுதான் தமிழகத்தின் தனிச்சிறப்பு! இன அழிப்பை நடத்தி வரும் ராஜபக்சே, அதிகாரப் பரவல், முன்னேற்றம் பற்றி அளந்து விடுவதைப் போன்றதுதான் தருண் விஜய்யின் பேச்சு.
இந்தி படிக்கும் அரசு ஊழியர்களுக்குப் பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை தருகிறது மோடி அரசு. தமிழ் படிக்கும் வட இந்திய மாணவர்களுக்கு ஊக்கத்தொகை தரவேண்டும் என்று தமிழ்நாட்டுப் பத்திரிகைகளுக்குத் தைரியமாகப் பேட்டி கொடுக்கிறார் அவருடைய கட்சி எம்.பி. தமிழக அரசியல்வாதிகளின் பிழைப்புவாதத்தின் மீது அவ்வளவு நம்பிக்கை !
உண்மை நிலை என்ன? வட இந்தியப் பல்கலைக்கழகங்கள் பெரும்பாலானவற்றில் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்த தமிழ்த்துறைகளே இழுத்து மூடப்படும் நிலையில் உள்ளன. ஆக்ரா, மீரட், கான்பூர், அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இத்துறைகள் மூடப்பட்டுவிட்டன. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1945-ல் தொடங்கப்பட்ட தமிழ்த் துறையில், இரு பேராசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்குக் காரணம் தமிழ்மொழியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அருண் பாரதி. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நிதி அளித்த போதிலும், காசியின் சம்பூர்ணானந்தா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் காசி வித்யா பீடத்தில் தமிழுக்காக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கவுகாத்தி, அலிகார், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இதுதான் தமிழ்த்துறையின் நிலை.
இவையெல்லாம் தருண் விஜய்க்கு தெரியாத உண்மைகள் அல்ல. இந்து – இந்தி – இந்தியா என்ற கருத்தாக்கத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் தேசிய உணர்ச்சிதான் தமிழுக்கு எதிராக நிலவும் இந்த விசேட காழ்ப்புணர்வுக்கு காரணம். இந்த உணர்வு பொதுவாக பெரும்பாலான வட இந்தியக் கட்சியினர் மத்தியிலும் நிலவுகிறது என்ற போதிலும், சமஸ்கிருத-இந்தி ஆதிக்க வெறி என்ற பார்ப்பன பாசிச அரசியல், ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கே உரியது.
ஆர்.எஸ்.எஸ்.-ன் பத்திரிகையான “பாஞ்சஜன்ய”வின் ஆசிரியராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர்தான் தருண் விஜய். இவர் ஆர்.எஸ்.எஸ்.-ன் சிந்தனைக் குழாமான சியாமாபிரசாத் முகர்ஜி ஆய்வு மையத்தின் இயக்குநர். தொகாடியாவின் வெறிப்பேச்சையே நாசூக்கான நாகரிகமான மொழியில் பேசத் தெரிந்த வித்தகர். இந்து தேசிய அரசியலைத் தீவிரமாகக் கொண்டு செல்லும் நோக்கத்துக்காகவே ஆர்.எஸ்.எஸ். தலைமையால் பாரதிய ஜனதாவின் மாநிலங்களவை உறுப்பினராகவும் ஆக்கப்பட்டிருப்பவர்.
இங்ஙனம் பார்ப்பனப் பாசிசக் கும்பலின் மூளையாக முன்நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு நபர் தமிழுக்கு ஆதரவாக வலிந்து பேசுவதற்கு காரணம் என்ன? தமிழின் தனித்துவத்தையும் தமிழகத்தின் வரலாற்றையும் பற்றி இதற்கு முன் எதுவுமே தெரியாதது போலவும், இப்போதுதான் தெரிந்து கொண்டது போலவும் அவர் நடத்தும் இந்த நயவஞ்சக நாடகத்தை ஊடகங்களும் கடைவிரிக்கக் காரணம் என்ன? மோடி அரசின் சமஸ்கிருத / இந்தி திணிப்பு தோற்றுவிக்கும் எதிர்ப்புணர்வை மழுங்கச் செய்வதும், தமிழையும் தமிழ் மரபையும் பார்ப்பனியத்தின் நோக்கத்திற்கேற்ப திசைதிருப்பி நிறுவனமயமாக்கிக் கொள்வதும்தான் இதன் நோக்கம்.
சமஸ்கிருதத்திலிருந்து வேறுபட்ட, சுயேச்சையான, தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற, மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் வாழ்கின்ற திராவிட மொழி என்ற பெருமையைப் பெற்றது தமிழ். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனக் கும்பலால் கிட்டத்தட்ட கொன்று புதைக்கப்பட்டிருந்த தமிழை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல். ஆரிய – சமஸ்கிருதச் சதியை அம்பலமாக்கியது மட்டுமின்றி, தமிழின் சுயேச்சையான திராவிட மரபை எடுத்துக் காட்டிய காரணத்தினாலேயே, கால்டுவெல்லைக் கயவன் என்று தூற்றுபவர்கள் இந்துத்துவவாதிகள்.
தருண் விஜய், சென்ற ஆண்டு மாநிலங்களவையில் தமிழ்த்துதி பாடிய அதே மாதத்தில், சமஸ்கிருதத்தை காங்கிரசு அரசு அழித்து வருவதாக குற்றம் சாட்டி பற்றி டைம்ஸ் ஆப் இந்தியாவில் அவர் எழுதிய கட்டுரையில் காணப்படும் வரிகள் இவை.
“சமஸ்கிருதத்தை நீக்கினால் இந்திய தேசிய உணர்வே அழிந்து விடும்… பிறப்பு முதல் இறப்பு வரை, குழந்தைக்குப் பெயர் வைப்பது, திருமணம் ஆகியவற்றில் தொடங்கி, மரணத்துக்குப் பின் சோர்க்கத்திற்கு நுழைவுச்சீட்டு பெறுவது வரையிலான அனைத்துக்கும் சமஸ்கிருதம் தேவை. சமஸ்கிருதம்தான் இந்தியா. இந்தியாவை ஒருங்கிணைக்கும் சக்தி அதுதான். உயர்பதவிகளையும், சமூக அந்தஸ்தையும் பெறுவதற்கு சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற நிலை முன்னொரு காலத்தில் நிலவியதே, அதனை மீண்டும் நாம் உருவாக்க வேண்டும்.” (டைம்ஸ் ஆப் இந்தியா, ஆக-23, 2013)
தருண் விஜய் கூறுகின்ற அந்த நிலைமைதான் பார்ப்பனக் கொடுங்கோன்மை. அதனை எதிர்த்துப் போராடியதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி பெற முடிந்தது. தங்களுடைய பழைய பொற்காலத்தை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து கொள்வதுதான் இந்துத்துவ சக்திகளின் நோக்கம்.
“வேத-உபநிடதம் மட்டுமின்றி திருக்குறளும் படிக்க வேண்டும்” என்று தருண் விஜய் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார். பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரித்து விழுங்க முயன்றதைப் போலவே, வள்ளுவரையும் ஒரு ரிஷி ஆக்கி, திருக்குறளை தர்ம சாத்திரப் பட்டியலில் சேர்த்து நிறுவனமயப் படுத்துவதுதான் இதன் நோக்கம். தன்னை எதிர்த்து நின்ற பழங்குடிகளையும், மொழிகளையும், இனங்களையும் நசுக்கி அழித்தது மட்டுமல்ல, அரவணைத்தும் அழித்திருக்கிறது பார்ப்பனியம் என்பதே வரலாறு. அத்தகைய அரவணைப்புதான் தருண் விஜயின் தற்போதைய தமிழ்க் காதல்.
தமிழகத்தை மட்டுமல்ல, பாரதிய ஜனதாக் கட்சி கால்பதிக்க முடியாத வட கிழக்கிந்திய மாநிலங்களையும் வழிக்கு கொண்டுவரும் பொறுப்பு தருண் விஜய்க்கு தரப்பட்டிருக்கிறது என்பது அவரது வலைத்தளத்தைப் பார்க்கும்போது தெரிகிறது.
– அஜித்.
____________________________________
புதிய ஜனநாயகம் – அக்டோபர் 2014
____________________________________
தன்னை எதிர்த்து நின்ற பழங்குடிகளையும், மொழிகளையும், இனங்களையும் நசுக்கி அழித்தது மட்டுமல்ல, அரவணைத்தும் அழித்திருக்கிறது பார்ப்பனியம்
The contribution of Brahmins to tamil literature for the past two thousand years cannot be matched by any other particular community (or) religion. But sadly the entire contributions have been easily forgotten and now accused intentionaly for false reasons.
இவங்களுக்கு … உ.வே.சாமிநாத ஐயரை பாராட்டினால் இவங்களுக்கு வெளிநாட்டு பணம் வராதே …
Contributions are true not only in the past, but even now. But reasons are not false, they are also true (Sadly)
“ஆக்ரா, மீரட், கான்பூர், அலகாபாத், பாட்டியாலா, சண்டிகர் உள்ளிட்ட பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் இத்துறைகள் மூடப்பட்டுவிட்டன. காசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் 1945-ல் தொடங்கப்பட்ட தமிழ்த் துறையில், இரு பேராசிரியர்கள் பணியிடங்களும் காலியாக உள்ளன. இதற்குக் காரணம் தமிழ்மொழியின் மீது இருக்கும் காழ்ப்புணர்ச்சி என்கிறார் அப்பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் அருண் பாரதி. தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை நிதி அளித்த போதிலும், காசியின் சம்பூர்ணானந்தா சமஸ்கிருதப் பல்கலைக்கழகம் மற்றும் காசி வித்யா பீடத்தில் தமிழுக்காக பேராசிரியர்கள் அமர்த்தப்படவில்லை. கவுகாத்தி, அலிகார், கொல்கத்தா, லக்னோ உள்ளிட்ட எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் இதுதான் தமிழ்த்துறையின் நிலை” இதுதான் வட இந்திய பழ்கலைக்கழகங்களில் இருக்கும் தமிழ்த்துறையின் நிலை. ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மை. அரசாஙத்தை மட்டும் குறை கூறி பயன் இல்லை.ஒரு துறையில் (பல்கலைக கழகத்திலோ அல்லது கல்லூரியிலோ)பணிபுரியும் பணியாளர்கள் அந்த துறைக்கு என்ன செய்தார்கள்? ஒன்றும் இல்லை. பணம் மட்டுமே குறிக்கோள். உதாரணத்திற்கு பேராசிரியர்களை எடுத்துக் கொள்வோம். ஒரு பேராசிரியருக்கு தான் ஒய்வு பெறப் போவது தெரியாதா? கண்டிப்பாகத் தெரியும். சரி ஒய்வு பெறப்போகும் பேராசிரியருக்கு தான் இந்த பணியிலிருந்து ஒய்வு பெற்றால் இப்பணிக்கு வேறு ஒருவரை நியமிக்க மாட்டார்கள் என்பது தெரியாதா? இதுவும் தெரியும். வட இந்தியாவில் தமிழை மதிக்க மாட்டார்கள் என்பது தெரியும். இறுதியாக ஒரு செய்திக்கு வருவோம். ஒரு பேராசிரியர் பணியிலிருந்து ஒய்வு பெறப் போகும் முன்பு அப்பணிக்கு ஒரு ஆசிரியரை தேர்ந்தெடுப்பதற்கு பல்கலைக் கழ்கத்தில் கோரிக்கை வைக்க அப்பேராசிரியருக்கு உரிமை உண்டு. அதாவது தெரியுமா? தெரியும். ஆனால் அவர்கள் செய்யத் தயார் இல்லை. ஏன்? பொறாமை. தன்னை விட ஒருவன் நன்றாக இருந்துவிடக் கூடாதே. அனைவரும் தான் நலமாக இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். தான் படித்த தமிழ் மொழிக்கோ அல்லது தான் பணி புரிந்த (வட இந்திய பல்கலைக்கழக தமிழ்) துறைகோ ஏதாவது செய்ய வேணடும் என்ற எண்ணம் வந்ததா? இல்லை இல்லவே இல்லை. வட இந்தியாவில் தமிழுக்காக எதையும் செய்யாதவர்கள் வட இந்திய பல்கலைக் கழகங்களில் தமிழ் துறை இழுத்து மூடப்பட்டுவிட்டது, அழிந்து விட்டது என்று கூறுபவர்கள் வட இந்தியாவில் தமிழ்ப் பேராசிரியராக பணி புரிந்த்பொழுது செய்த்து என்ன? இந்த கேள்விகளுக்கு பதில் கூறிவிட்டு வட இந்தியாவில் தமிழை அழித்தது அரசியல்வாதிகள் என ஒத்துக்கொள்கிறேன். குறிப்பு இக்கேள்வி வட இந்தியாவில் பணி புரிந்து ஒய்வு பெற்ற தமிழ் பேராசிரியர்களுக்கு
Gurunathan,
I would like to learn more; do you have any proof / material to support your acquisition?
I always like to read the argument made with substance.
// இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனக் கும்பலால் கிட்டத்தட்ட கொன்று புதைக்கப்பட்டிருந்த தமிழை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல். //
பார்ப்பனக் கும்பலிடமிருந்து தமிழின் உயிரைக் காப்பாற்றி வாழ வைத்த வெண்தாடி வேந்தர் என்ற பட்டத்தோடு தாடி வைத்த மார்க்ஸ், பெரியாரோடு கால்டுவெல் பாதிரியாரும் ஒரு புரட்சிகர தெய்வமாகிவிடுவாரோ என்று சந்தேகித்தது சரியாய் போய்விட்டது.. கால்டுவெல் தமிழின் சிறப்பை, தனித்துவத்தை ஒப்பிலக்கணத்தால் நிறுவினார் என்பதில் சந்தேகமில்லை.. ஆனால் தமிழுக்கு உயிர்கொடுத்து வாழ்வளித்தவர் என்று ஒரு ’அஜித்’ கூறுவதையெல்லாம் ஏற்கமுடியாது..! தமிழ் சாகாவரம் பெற்றது..!
நீங்க கூடத்தான் தமிழின் அத்தாரிட்டி கால்டுவெல் என்ற பாதிரி என்று நிரூபிக்க போராடிக்கொண்டிருக்கிறீர்.
(தருண்) “விஜய்”னாலே அப்படிதான் போல இருக்கு (இரட்டை வேசம் போடுவது)..
ஆனா அத கட்டுரையா விளாசி இருக்கிறது “அஜித்”
// இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனக் கும்பலால் கிட்டத்தட்ட கொன்று புதைக்கப்பட்டிருந்த தமிழை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல். //
“இலக்கிய அழகில் இயற்கையின் அரசியல்” என்றொரு கட்டுரையை வினவு வெளியிட்டு இருக்கிறது. அதில் ஐவகை நிலங்கள், பரிப்பாடல், ஐங்குறுநூறு, நற்றினை என்று சங்க இலக்கியங்கள் அனைத்தையும் உச்சி முகர்ந்திருக்கிறார்கள் தோழர்கள். முதலாளித்துவத்தின் கொடூரங்களுக்கு எதிரான தங்களின் கட்டுரையை கூறுவதற்கு சங்க இலக்கியங்களை துணைக்கு அழைத்திருக்கிறார்கள். போகட்டும், அதனால் தவறொன்றும் இல்லை. ஆனால் இவர்கள் மேற்கோள் காட்டி இருக்கும் மேற்படி பரிப்பாடல் ஆகட்டும் அல்லது ஐங்குறுநூறு ஆகட்டும் இந்தத் தமிழ் கருவூலங்களை எல்லாம் சமுகத்தின் கைகளில் கொண்டு சேர்த்தவர்கள் யார் என்று சிறிதாவது யோசித்து இருந்தால் மேற்படி கருத்தை கூறி இருப்பார்களா என்பது சந்தேகமே?
இன்று இவர்கள் மேற்கோள் காட்டும் பரிப்பாடல், அகநானூறு புறநானூறு ஆகட்டும். அல்லது தமிழ் தேசிய வாதிகள் கற்புக்கு இலக்கணமாக விதந்தோதும் “சிலப்பதிகாரம்” ஆகட்டும். இவைகள் இன்று மக்களின், தமிழ் சமுகத்தின் கைகளில் கிடைததற்க்கு காரணமே ஊ.வே சாமிநாத அய்யர் என்னும்”தமிழ் தாத்தாவால்” தான் என்பது மட்டும் சமயத்தில் இவர்களின் மண்டையில் உறைக்காமல் போய்விடும். காரணம் அவரின் பெயரில் ஒளிந்திருக்கும் சாதி. தன் வாழ்நாள் எல்லாம் புலவர்களின் வீடு வீடாகச் சென்று கஷ்டப்பட்டு ஓலை சுவடிகளை சேகரம் செய்து, சிரமபட்டு அதை படித்து பிழை திருத்தி அச்சில் ஏற்றிய பெருமை அவரை மட்டுமே சாரும். அவர் இல்லையென்றால் இன்று தமிழ் மொழிக்கு 2500 ஆண்டு இலக்கிய பழமை கிடைத்திருக்குமா என்பது ஐயமே.
“நாட்டின் நாகரிக முதிர்ச்சிக்கேற்ப சொற்களும் ஏற்பட்டு மொழிக்கும் நாகரிக நலம் விளைத்தல் வேண்டும். அவ்வாறு சொற்கள் ஏற்படுமிடத்துப் பிற மொழி சொற்கள் அன்றித் தன் சொற்களே மிகுதல் வேண்டும். இவையும் உயர் தனித் தமிழ் மொழிக்குப் பொருந்துவனவாம். ஆகவே தமிழ் தூய்மொழியுமாம். எனவே தமிழ் செம்மொழி என்பது திண்ணம். ஆகவே தென்னாட்டின் கட் சிறத்தொளிராநின்ற அமிழ்தினுமினிய தமிழ் மொழி எவ்வாற்றான் ஆராய்ந்த வழியும் ‘உயர் தனி செமொழி’யே யாம் என்பது நிச்சயம். இவ்வளவுயர்வுஞ் சிறப்பும் வாய்ந்த அருமை தமிழ் மொழியை உண்ணாட்டு புன்மொழிகளோடொருகென்னுதல்(தெலுங்கு, மலையாளம், கன்னடம்,துளு,கோண்டு போன்றவைகள்)தவிர்த்து, வடநாட்டுயர் தனிச் செம்மொழி சமஸ்க்ருதம் எனக் கொண்டார் போலத் தென்னாட்டுயர் தனிச் செம்மொழி தமிழெனக்கொண்டு புகுதலே எற்புடைத்தாம்”. என்று சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு யாருக்கும் முன்பாய் தமிழை உயர் தனி செம்மொழி என்று அறிவித்தவர் பரிதி மார் கலைஞர் என்னும் பார்பனரே ஆவார். ஆகவே தமிழ் மொழியின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்றத்திலும் பிராமணர்களின் அளபறியே தொண்டினை தவிர்த்து விட்டு செல்லுதல் முடியாத காரியம்.
தமிழ் மொழி வரலாற்றில் அதன் பழமையை மீட்டு எடுத்ததில் கால்டுவெல் அவர்களுக்கு எப்பொழுதுமே ஒரு சிறப்பான பங்கு இருக்கிறது. அதை யாரும் அவ்வளவு எளிதில் தள்ளி விட முடியாது. குறிப்பாக ஆர்.எஸ்.எஸ் வா(வியா)திகள். அதே போன்றது தான் ஊ.வே.சா மற்றும் பரிதிமார் கலைஞர் போன்றவர்களின் தமிழ் தொண்டும்.
Rightly said. The contribution of Brahmins to tamil literature for the past two thousand years cannot be matched by any other particular community (or) religion. But sadly the entire contributions have been easily forgotten and now accused intentionaly for false reasons.
Other communities have got chance very lately and hence were less. With the very short period people like subburathinam, thiru.vi.ka, etc proved well….
cald wel is a cold well for hindus. he converted hindus enmas in kanyakumari, thirunelveli, ramanathapurm, mathurai districts. all harijans were converted by him to chritianity.by promising fake benifits. he came here to convert people for that he needed tamil. so he learned tamil. he behaved like a tamil patriot. dont try to fool us. mother tresa also was also did the same .. she converted hindus to chritianity. Can deny that with proof.that clad well & mother tresa did not do only conversion.
Correctly said. It’s a pity that Vinavu wants to quote Christian Misha Naris like Caldu wellu instead of quoting Thiruvalluvar, Ilangovadigal etc
// இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் பார்ப்பனக் கும்பலால் கிட்டத்தட்ட கொன்று புதைக்கப்பட்டிருந்த தமிழை மீண்டும் உயிர்ப்பித்து, அதன் பெருமையை உலகறியச் செய்தவர் கால்டுவெல். //
Adapaavigalaa kayil keyboard ullathu enbatharkaaka enna vendumaanaalum ezhuthuvatha? Kalki Krishnamurthiyin ‘Ponniyin Selvan’, ‘Parthiban Kanavu’ matrum Bharathiyin Kavithaikalukku mun Karunanidhi pondra ungalathu vagayaraakallin thamizh puthagangal thavidu podi aagaividum enbathe unmai!
தருண் விஜய் இரட்டை வேடம் போடுகிறார் என்றால் 40ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த தமிழினத் தலைவர் என்ன செய்தார்? என்று கேட்க யாரும் இல்லையாஃ
ரஷ்ய மொழியை ஆதரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அல்லது சீன மொழியை ஆதரித்திருக்கலாம். கம்யூனிஸம் என்ற பெருஞ்சித்தாந்தம் உலகிற்கு அளித்துள்ள உவப்பரிய நிலையை இந்திய மக்களுக்கு அளிக்க அது ஒன்றே வழி.