Friday, January 17, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கபால் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

பால் விலை உயர்வைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம்

-

மக்கள் கலை இலக்கியக் கழகம் | புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி | பெண்கள் விடுதலை முன்னணி
தமிழ்நாடு

நெ.41, பிள்ளையார் கோவில் தெரு, மதுரவாயல்,சென்னை – 95,
9445112675 | rsyfchennai@gmail.com

ஆவின் பால்விலை உயர்வு:
ஏழை, நடுத்தர மக்கள் மீது விழுந்தது இடி! ஆவினை ஒழிக்க அரசு செய்யும் சதி!

 கண்டன ஆர்ப்பாட்டம்

வள்ளுவர் கோட்டம் | 01.11.2014 | காலை 10.30 மணி

ழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும் வகையில் ஆவின் பால் விலையை 10 ரூபாய் உயர்த்தியுள்ளது அ.தி.மு.க அரசு. இந்த விலையேற்றம் விவசாயிகளுக்கு கொள்முதல் விலையில் 5 ரூபாய் உயர்த்தியதாலும், ஆவின் நிறுவனம் நட்டத்தில் இயங்குவதாலும் செய்யப்படுகிறது, எனவே இதனை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனச் சொல்லுகிறது இந்த அரசு.

ஏற்கனவே விவசாயிகளுக்கு வழங்கிய மானியங்களை இரத்து செய்தும், வழங்க வேண்டிய கொள்முதல் தொகையைத் தராமல் இழுத்தடித்தும், விவசாயிகளை தனியார் பால் நிறுவனங்களை நாட வைத்து அங்கு அந்நிறுவனங்கள் வைப்பது தான் விலை என்று ஒரு விஷச் சக்கரத்தில் சிக்கவைத்து வதைக்கிறது அரசு. ஆனால் விவசாயிகளுக்காகத் தான் விலை உயர்வு என்று நாடகமாடுகிறது இந்த அரசு.

ஆவின் நிறுவனத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பாலில் தண்ணீரையும் கொடிய இரசாயனங்களையும் கலப்படம் செய்து ஊழல் புரிந்த அ.தி.மு.க கிரிமினல் கும்பலைக் காப்பாற்றவும், தனியார் பால் நிறுவனங்களின் கொள்ளைக்காகவுமே இந்த விலைஉயர்வு.

இவற்றை அம்பலப்படுத்தும் வகையில்

ஆவின் பால் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறு!

ஆவின் நிறுவனத்தில் ஊழல் செய்து நட்டமடைய வைத்த அ.தி.மு.க முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் மாதவரம்.V. மூர்த்தி மற்றும் ஊழல் அதிகாரிகளின் சொத்துக்களைப் பறிமுதல் செய்!

என்ற முழக்கங்களின் அடிப்படையில் 01.11.2014 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதில் பெண்கள் விடுதலை முன்னணியின் சென்னை கிளை செயலர் தோழர். அமிர்தா தலமையேற்கிறார். புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். த. கணேசன் கண்டன உரையாற்றுகிறார். மாணவர்கள், தொழிலாளர்கள், பெண்கள், இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

அனைவரும் வருக!

aavin-price-hike-banner

இவண்

வ. கார்த்திகேயன்,
சென்னை மாநகரச் செயலாளர்,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.

பால் விலை உயர்வைக் கண்டித்து புமாஇமு பிரச்சாரம் – புகைப்படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

  1. உருளைக்கிழங்கு இறக்குமதி வளர்ச்சியா வீழ்ச்சியா ?
    -பதிவின் மறுமொழிகள் மூடப்பட்டுள்ளது. கவனிக்கவும்.

    • அந்தக் கட்டுரையின் உரையாடல் பெட்டி மூடப்பட்டிருந்தது – தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க