Wednesday, July 24, 2024
முகப்புஉலகம்ஈழம்எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்...

எச்சரிக்கை ! இலக்கிய அமித்ஷாக்கள்…

-

“ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்.

ஆரியப் பார்ப்பன தமிழ் அழிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக உயர்தனிச் செம்மொழியை ஒரு வாளாக உயர்த்திப்பிடித்த கால்டுவெல்லுக்கோ, இல்லை பார்ப்பனிய திரிபுக்கு எதிராக தமிழ்ச்சமர் புரிந்த பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவணர் போன்றவர்களையெல்லாம் புதிய தலைமுறைகளுக்கு போற்றிச் சொல்லவோ, விழா எடுக்கவோ விரும்பாத வைரமுத்து, தமிழுக்காக உயிரையே கொடுத்த தாளமுத்து, நடராசனுக்காகவெல்லாம் ஒரு போஸ்டர் கூட அடிக்காத ‘வெற்றித் தமிழர் பேரவை’ இப்போது தமிழுக்காக ஒரு குரலை கொடுத்ததற்காக காவி தருண் விஜய்க்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது என்றால், வைரமுத்துவுக்கு “வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுது” என்பது நமக்கு புரிகிறது.

தருண் விஜய் - வைரமுத்து
“ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, கலக்கட்டுமே!” என்று சீனுக்கு பாட்டு எழுதிய வைரமுத்து, இப்போது ஆரிய உதட்டில் தான் கரைவது மட்டுமல்லாமல், தமிழர்களையும் கரைக்க தருண் விஜய் என்ற ஒரு பா.ஜ.க. ‘சீனை’ தூக்கிக்கொண்டு அலைய ஆரம்பித்திருக்கிறார்

ஈழத்தமிழர் படுகொலை, மீனவர் படுகொலை, ஆரம்ப வகுப்பிலேயே தமிழ்வழிக் கல்வி அழிப்பு, இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு… என நீளும் அநீதிகளின் போது எங்கேயும் தலையைக் காட்டாத இந்த வெத்துத் தமிழ்ப் பேரவைக்கு பா.ஜ.க. தருண் விஜய் போலவே திடீர் தமிழ்க் காதல் வந்தது திகைக்க வைக்கிறது. கொஞ்சம் காசு சேர்த்து விட்டால் தனக்குத்தானே கால் அமுக்கு பேரவை, கை அமுக்கு பேரவை என்று அல்லக்கைகளை வைத்து ஆர்ப்பாட்டம் காட்டிக் கொள்ள தமிழகத்தில் பஞ்சமா என்ன?

தமிழை தாய் மொழியாக கொள்ளாத ஒருவர், தமிழுக்குக் குரல் கொடுப்பதும், “தமிழை நீதிமன்றங்களில் வழக்காடு மொழியாக்க குரல் கொடுப்பது, திருவள்ளுவர் பிறந்த நாளை இந்திய மொழிகளின் திரு நாளாக கொண்டாட வேண்டும், இந்தியாவின் இரண்டாவது மொழியாக தமிழை கொண்டு வர வேண்டும். (முதல் இடம் சமஸ்கிருதத்திற்கு அல்லது எல்லோரும் வைரமுத்து அளவுக்கு வாட்டப்படும் வரை சமஸ்கிருதமயமாக்கப்பட்ட இந்திக்கு போல) பாரதியார் வாழ்ந்த காசி இல்லத்தை நினைவுச்சின்னமாக்க வேண்டும்” என்றெல்லாம் பா.ஜ.க. தருண் விஜய் போராடுவதால் பாராட்டு விழா நடத்துவதாக வைரமுத்து அளக்கிறார்.

அட, ஈர வெங்காயமே! ஆக தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் இனி தமிழை வாழவைக்க முடியாது என்று தன்னை வைத்து ஒரு முடிவுக்கே வந்துவிட்டது கவிப்பேரரசு!

கால்டுவெல் கூட தமிழைத் தாய்மொழியாக கொள்ளாத அயர்லாந்துக்காரர்தான், ஆரியப் பார்ப்பன எதிர்ப்பு மரபில் தமிழின் தனித்துவத்தை அவர் ஆதாரங்களுடன் நிறுவியதும், பல அயல்நாட்டு அறிஞர்கள் தமிழின் செம் மொழித்தன்மைக்கு குரல் கொடுத்ததும் வரலாறு.

ஜி.யு.போப் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்ததும் தனது கல்லறையில் “இங்கு ஒரு தமிழ் மாணவன் உறங்குகிறான்” என எழுதச் சொன்னதும், பெஸ்கி பாதிரியார் என்ற வீரமாமுனிவர் இலக்கணம், அகராதி வரைந்து இனிய தமிழுக்கு ஏற்றம் தந்ததும், வைரமுத்துவுக்கு வசதியாய் காவி மசக்கையால் மறந்துபோனதா?!

சமஸ்கிருதத்தில் பதவி ஏற்கும் தருண் விஜய்

ஆரிய சமஸ்கிருதத்தையும், அதன் நாறிய இனவெறி சரக்குகளையும் தள்ளிவிட்டு, அன்னைத் தமிழுக்கு முன்னுரிமை கொடுத்து வேலை செய்தவர்களையெல்லாம் விட்டுவிட்டு, “மீண்டும் சமஸ்கிருதத்தை அரியணைக்கு ஏற்ற வேண்டும்” என்று பகிரங்கமாக பேட்டியளிக்கும் ஆர்.எஸ்.எஸ் பார்ப்பன குள்ளநரி தருண் விஜய்க்கு பாராட்டாம்!

அப்படி என்ன போராடிவிட்டார், அந்த தமிழ்த் தருமி! சிதம்பர நடராசர் கோயிலில் தமிழ்பாட தீட்சிதர்களுடன் உழைக்கும் மக்களும், கம்யூனிஸ்டுகளும் சண்டைக்கு நின்று சாதித்த போது வைரமுத்து என்ன வளிமண்டலத்திலா இருந்தார்!

வாயைத் திறந்து தமிழுக்கு ஆதரவாக ஒரு வார்த்தைகூட காணோம். மண்டபத்தில் ஆர்.எஸ்.எஸ். ‘எழுதிக் கொடுத்ததை மயக்குறு வண்ணம் பேசுவதாலேயே தமிழுக்கு போராளி என்றால், இத்தனை இன அழிப்பையும் செய்துகொண்டே, தமிழ் பெயர்களை சிங்கள மயமாக்கிக்கொண்டே, இலங்கையில் தமிழ் இலக்கியத்தை பேச – கூட்டம் நடத்த குரல் கொடுத்த ராஜபக்சே கூட ஒரு போராளிதான், பாவம் பாராட்டுவிழா நடத்த வைரமுத்துவுக்குத்தான் வசதியாக நேரம் வாய்க்கவில்லை போலும்!

தமிழை வழக்காடு மொழியாக ஆக்குவது இருக்கட்டும் முதலில் தமிழகத்தில் தமிழ்தான் வழிபாட்டு மொழி என்று அறிக்கை விடவும் அதை தருண் விஜய்யின் தமிழக பா.ஜ.க. கூட்டாளிகள் வழிமொழியவும் யோக்கியதை உண்டா?

தருண் விஜய் - மோடியுடன்
தமிழ்த்தாயை இந்தியத் தாயாக்க, சமஸ்கிருதத் தாயாக்க, ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், கமண்டலத்தில் அடைக்கத்தான் இத்தனை அகத்திய வேலையும்.

தமிழுக்காகத்தான் இத்தனையும் என்று நம்மிடம் போக்கு காட்டும் வைரமுத்துவிற்கே உரைக்கும் படி தருண் விஜய் தனது நோக்கத்தை தெரிவிக்கிறார் இப்படி “தமிழ்த் தாய்க்கான பணியை இந்தியத் தாய்க்கான பணியாகப் பார்க்கிறேன்.” அப்படிப்போடு! தமிழ்த்தாயை இந்தியத் தாயாக்க, சமஸ்கிருதத் தாயாக்க, ஆரியப் பார்ப்பன ஆர்.எஸ்.எஸ், கமண்டலத்தில் அடைக்கத்தான் இத்தனை அகத்திய வேலையும்.

“இடம்பத்தையும், ஆரவாரத்தையும், பெரு மறைப்பையும்…, உண்டு பண்ணுகிற ஆரிய பாஷையில் எனக்கு ஆசை வொட்டாது, சாகாக் கல்வியை லேசில் அறிவிக்கும்… தென் மொழியிடத்தே மனம் பற்றச்செய்த…” என்று தமிழை வெறும் மொழியாக மட்டும் பார்க்காமல் அதை ஆரிய வர்ணாஸ்ரம சமஸ்கிருத எதிர்ப்பின் வரமாகப் பார்த்த வள்ளலார், பார்ப்பனியத்துடன் முரண்பட்டு ஏற்படுத்திய அமைப்புக்குப் பெயர் சமரச சன்மார்க்க சபை! வர்ணாஸ்ரம வெறிக்கு தமிழனை கிடாவாக வெட்டி, தமிழை பொங்கலாக வைக்கும் சுத்த சமரச சரணாகதிக்குப் பெயர் ‘வெற்றித் தமிழ் பேரவை!’ தமிழை வெறும் சொல்லிலிருந்து மட்டும் பார்த்தால் நாம் எப்படி ஏமாந்துவிடுவோம், என்பதற்கு இதுவும் ஒரு சான்றுதான்!

நாம் சொல்வது என்ன? கவிப்பேரரசு காதில் ரீங்காரமிடும் தமிழ் கொசு தருண் விஜயே கூறுகிறார். “அடுத்த ஆண்டு ஜனவரியில் பொங்கல் விழாவை தமிழக கிராமத்தில் கொண்டாட உள்ளேன்.” (தினமணி, 11.11.2014). போச்சுடா! இனி வை.கோ., ராமதாசு வகையறாக்களுக்கு தமிழின சவடால் அடிக்க ஒரு பருக்கையும் மிஞ்சாது போல!

வரலாற்றில் ஆரியப் பார்ப்பனியம், அருந்தமிழ் நூல்களை பகையாடி தீயில் எரித்தது, உறவாடி ஆடிப்பெருக்கு நீரிலும் அழித்தது. எஞ்சியிருக்கும் தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத மறுப்பு போன்ற அடிப்படைகளையும் அழித்தொழிக்க இப்போது ஆர்.எஸ்.எஸ், பார்ப்பனக் கும்பல் தமது வரலாற்றுப் பகையான தமிழை அழித்தொழிக்க, தமிழுக்கு குரல் கொடுப்பதாய் வேலைகாட்டி, தமிழ், தமிழின உணர்வை உட்கவர்ந்து ஒழிக்கும் திட்டத்தோடு உறவாடிக் கெடுக்க முனைந்துள்ளது.

ஒரு ‘நல்லி’ எலும்பு கிடைத்தால் கூட வாய்ப்பை பயன்படுத்த நாயாய் அலையும் பா.ஜ.க காவிப்படை, தமிழகத்தின் ‘தலைசிறந்த எழுத்தாளர்’ நல்லி குப்புசாமி செட்டியின் எட்டு நூல் வெளியீட்டு விழாவையும் விட்டு வைக்காமல், உள்ளே நுழைந்து பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பாராட்டியுள்ளது. செட்டிக்கும் பா.ஜ.க. பட்டாய் விளையும் என்ற கணக்கில் மகிழ்ச்சி! செட்டிக்கு ஒரு சால்வை செலவு, தருண் விஜய்க்கு ஒரு ‘தமிழ் கிளிப்பிங்ஸ்’ வரவு! ரஜினி வீட்டில் ‘டீ’, கமலுக்கு ‘குப்பை’, வைரமுத்துவுக்கு ‘தமிழ்’ என்று எது கிடைத்தாலும், அதில் செல்வாக்கை தமிழகத்தில் ஏற்படுத்த படாதபாடு படுகிறது பா.ஜ.க.

தருண் விஜய் - வைரமுத்து
கார்ப்பரேட்டை திணித்து, கசம்பிடித்த ஆரியத்தை திணிக்கும் கும்பலின் ஒரு விஷஜந்து, திருக்குறளைப் பற்றி பேசுவதற்கு பெரிய ஆதரவாம்!

தமிழகத்தில் ஆடு, மாடுகளே அம்மா… அம்மே! என அழகு தமிழில் பேச கற்றுக் கொண்ட பிறகும், இன்னும் “அவா… பார்தம்…” என்று தம் கட்டும் சு.சாமி, இல.கணேசன் வாய்களை வைத்துக்கொண்டு இவர்கள் தமிழுக்கு குரல் கொடுக்கப் போகிறார்களாம்.

“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று சாதி வெறியை ஏற்காத திருக்குறளையும், “சதுர்வர்ணம் நமா சிருஷ்டம்” என்று சாதிவெறியை கக்கும் பகவத்கீதையும் சமமாக மதிப்பார்களாம்! இதுதான் பாரதப் பண்பாடாம்! இந்தக் கயமையை ஏற்க முடியுமா? தீண்டாமையையும் ஏற்போம்! திருக்குறளையும் ஏற்போம் என்பது எவ்வளவு அயோக்கியத்தனம்.

இதை அம்பலப்படுத்தி போராடத் துப்பின்றி, வடக்க உள்ளவனையே மடக்கிட்டோம் பாத்தியா என்ற மப்பு வேறு! உ.பி.யிலும், அரியானாவிலும், குஜராத்திலும் தாழ்த்தப்பட்டவர்களையும், இசுலாமியர்களையும் போட்டுத் தள்ளி விட்டு தமிழ் வாழ்க! என்று குரல் கொடுத்துவிட்டால் மட்டும் பாராட்டலாம் என்பதை விட பச்சை அயோக்கியத்தனம் வேறு இருக்க முடியுமா?

கம்பி வளைத்து, கரணை பிடித்து, சாரம்கட்டி வண்ணம் பூசும் வட மாநில தொழிலாளிகளின் வாழ்க்கைப் போராட்டத்திலிருந்து வரும் தமிழை, தெருக்குரலை ஆதரிக்கத் துப்பில்லை! கார்ப்பரேட்டை திணித்து, கசம்பிடித்த ஆரியத்தை திணிக்கும் கும்பலின் ஒரு விஷஜந்து, திருக்குறளைப் பற்றி பேசுவதற்கு பெரிய ஆதரவாம்!

வைரமுத்து மட்டுமல்ல பார்ப்பன மேலாதிக்கத்தை ஏற்க மறுக்கும் மனங்களை தமிழாலேயே என்கவுண்டர் செய்ய ஏராளமான இலக்கிய அமித்ஷாக்கள் களத்தில் நிற்கிறார்கள்! ஜோ.டி.குரூஸ், ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன், பத்ரி இப்படி பலவிதமான ஷாக்கள் இலக்கியம், ஊடகம், நாடகம், சினிமா, தமிழ் என விதவிதமாக போட்டுத்தள்ள புறப்பட்டுவிட்டார்கள்! எச்சரிக்கை தமிழகமே, நம் எதிரில் தமிழ் படமெடுத்தாடும் காவிப் பாம்புகள்!

– துரை.சண்முகம்

 1. அருமையான கட்டுரை. உடனடி எதிர்வினைக்குப் பாராட்டுகள். மூர்க்கத்தனமாக ஏதோ ஒரு கொம்பைப் பிடித்து, இந்த மண்ணில் தன் நச்சுவிதையை ஊன்றிவிட வேண்டும் எனத் திரியும் இந்துத்துவப் பார்ப்பனிய பயங்கரவாதக் கூட்ட்த்தை, கூச்சமே இல்லாமல் நக்கிப்பிழைக்கும் நயவஞ்சகர்களைத் தொடர்ந்து தோலுரிக்க வேண்டும். ………..

  தகவலுக்கு மட்டும்: சு.சாமியைப் போல அன்றி, இல.கணேசன் இயல்பாகப் பிற மொழி கலக்காமல் தமிழ்ப் பேசுவதை வழக்கமாகக் கொண்டவர். புலவர்களைப் போல, மதவாதப் பிரச்சாரகர்களைப் போல சமக்கிருத வாசகங்களை மேற்கோள் காட்டிப் பேசுவார். இடையிடையே பேசுவதில்லை.

  • தெரீந்தே செய்பவர்கலை என்னசெய்ய தொலையிரங விடுங்க தமிழுக்கு அழிவில்லை பிலைப்புநடத்த பித்தலட்டம் செய்ரனுக

 2. //ஆரியப் பார்ப்பன தமிழ் அழிப்புக்கும், ஆதிக்கத்திற்கும் எதிராக உயர்தனிச் செம்மொழியை ஒரு வாளாக உயர்த்திப்பிடித்த கால்டுவெல்லுக்கோ, இல்லை பார்ப்பனிய திரிபுக்கு எதிராக தமிழ்ச்சமர் புரிந்த பரிதிமாற் கலைஞர், தேவநேயப் பாவணர் போன்றவர்களையெல்லாம் புதிய தலைமுறைகளுக்கு போற்றிச் சொல்லவோ, விழா எடுக்கவோ விரும்பாத வைரமுத்து, தமிழுக்காக உயிரையே கொடுத்த தாளமுத்து, நடராசனுக்காகவெல்லாம் ஒரு போஸ்டர் கூட அடிக்காத ‘வெற்றித் தமிழர் பேரவை’ இப்போது தமிழுக்காக ஒரு குரலை கொடுத்ததற்காக காவி தருண் விஜய்க்கு ஒரு பாராட்டு விழா எடுக்கிறது என்றால், வைரமுத்துவுக்கு “வயிற்றுக்கும் தொண்டைக்கும் ஒரு உருண்டை உருளுது” என்பது நமக்கு புரிகிறது.//

  இதைபார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை … மதம்மாற்ற பிரச்சாரம் லோக்கல் மக்களிகளுக்கு புரிய தமிழ் படிச்சி பிறகு வரும் மிசநரிகளுக்கு உதவ ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் தமிழை வாளாக உயர்த்தி பிடித்தானாம் … ஆனால் எங்கெங்கோ காணாமல் போக இருந்த பழம் தமிழ் இலக்கிய சுவடிகளை வீடு வீடாக ஏறி அவைகளை சேகரித்து பதிப்பித்து இன்று அவை பாடமாக இருக்க காரணமான தமிழ் தாத்தா உ வே சாமிநாத ஐய்யர் உங்களுக்கு பார்ப்பனர் … அப்புறப்படுத்த வேண்டியவர் … ம்ம்ம்ம் வெக்கக் கேடு

  (கால்டுவெல் இருந்த காலத்திலேயே காமராஜரின் நாடார் இனத்தை தரக்குறைவாக விமர்சித்ததால் அன்றே எதிற்ப்பு பலப்பட்டது)

  ஒருத்தர் தமிழ் மொழிக்கு நல்லது செய்ய வந்திருக்கேன் என்று வருகிறார் … என்ன எண்ணமாகவும் இருக்கட்டும் … அவரது எண்ணத்தை பயன்படுத்தி தமிழுக்கு உதவ ஏதாவது செய்வதை விட்டு விட்டு … தானம் கிடைத்த மாட்டிற்க்கு பல்லை பிடித்து பாத்த கதையாக ஒரு கட்டுரை வேறு … இந்த 60 ஆண்டு களில் இருந்த கட்சிகள் தமிழுக்கு என்ன கிளித்துவிட்டன … (செம்மொழி என்று சொல்லாதீங்க … இப்போ மையாளமும் செம்மொழியாம்)

  கால்டுவெல் தமிழுக்கு தொண்டு செய்தானோ இல்லையோ அப்ரிகாவில் வெள்ளையன் பிரிவினை உருவாக்கி ரத்தஆறு ஓடவைத்ததை போல் இங்கும் ஆரிய திராவிட சூழ்ச்சி செய்து சொந்த சகோதரர்களுக்கு இடையில் குரோதத்தை வளர்த்து விட்டான் … அப்படிப்பட்ட ஒரு கயவனுக்கு ஒரு பாராட்டாம் …

  • கால்டுவெல் தமிழுக்கு தொண்டு செய்தானோ இல்லையோ அப்ரிகாவில் வெள்ளையன் பிரிவினை உருவாக்கி ரத்தஆறு ஓடவைத்ததை// அவாளா நீ

 3. தமிழ்நாட்டை விட்டு தமிழைத் துரத்துவதில் தமிழனுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறது என்று உண்மையிலேயே உங்களுக்கு தெரியாதா அல்லது நடிக்கிறீர்களா ?
  பின்னூட்டம் இடுபவரில் ஒருவர்க்கு மூன்று வரியில் முன்னூறு பிழைகள் அதில் மற்றொருவர் தன பெயரை ABCD என்று வைத்திருக்கிறார். ‘அ ஆ இ ஈ” என்றாவது எழுதவேண்டும் என்று சமயோசித புத்தி கூட இல்லை. இவர்கள் எல்லோரும் சேர்ந்து தமிழை கண்டிப்பாக காப்பாற்றுவார்கள் என்று எந்த தமிழனும் நம்பவில்லை. எல்லோரும் கான்வென்ட் ஸ்கூல் நடத்த போய்விட்டான். கன்யாகுமரியில் இருந்து சென்னை வரை கணக்கெடுங்கள் “வினவார்” அவர்களே . தமிழ் நாட்டில் நடத்தப்படும் பள்ளிகள் கல்லூரிகள் அனைத்துக்கும் உரிமையாளர்கள் யார் அதில் எத்தனை ஆரியர்கள் பார்ப்பனர்கள் கைபர் போலன் கணவாயில் இருந்து வந்து படிக்கிறார்கள் என்று.

  பரிதிமாற்கலைஞர் அவர்களின் பூர்வீகம், உவேசா அவர்களின் பூர்வீகம் ஆழ்வார்கள் நாயன்மார்களின் பங்களிப்பு இதில் எதிலும் “ஆரியம்” என்பது ஒரு காரியாவதாமாக சுயநல வாதமாக, விதண்டா வாதமாக, தண்ட வாதமாக, வைக்கப்படவில்லை. உங்களுக்கு சுய வினவு அவசியம். கண்ணாடி முன் நின்று வினவுங்கள் விடை கிடைக்கும். உங்கள் ஆரிய எதிர்ப்பு மற்றும் வெறுப்பு உண்மையற்ற வீரியம் குறைந்த நமத்துப்போன மத்தாப்பு என்பது உங்களுக்கும் தெரியும் உங்களுக்கு படி அளப்பவர்களுக்கு செஞ்சோற்று கடன் கழியுங்கள் அதனால் தமிழ் வளரப்போவதில்லை பொருள்முதல் வாத உலகத்தில் எது பயன்படாதோ அது செயல்படாது அது எடுபடாது (நீங்கள், நான், தமிழ், ஆங்கிலம் என்று அதில் எது வேண்டுமானாலும் அடங்கலாம்) இந்த உண்மைகள் தெரிந்தும் நீங்கள் ஆடும் நாடகம் தமிழை காப்பாற்ற இல்லை என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். சலுகை ராஜ்யத்தை ருசி கண்ட பூனைகளாக அதை விடாமல் பிடித்துக்கொள்ள நீங்கள் செய்யும் உத்திகள் இது என்று உலகம் அறியும்

  • உங்கள் அறிவுரைக்கு நன்றி. நான் 12 ஆம் வகுப்பு வரை தமிழில் படித்தவன் தான்.நேரமிண்மை காரணமாக abcd என்று எழுதுகிரேன்.

   • அன்பு நண்பர் ABCD அவர்களுக்கு இன்று தமிழ் இருக்கும் நிலைமை மிகவும் வருத்தம் அளிக்கிறது அந்த ஆதங்கம் தான். தவறாக நினைக்க வேண்டாம். உண்மையான காரணங்களை பின்தள்ளி விட்டு இன்னும் எத்தனை காலம் நடிக்கப் போகிறாம் என்று தெரியவில்லை ? மெல்ல தமிழ் இனிச்சாகும் என்று பாரதி சொன்னது நினைவுக்கு வருகிறது

  • ஆரியப்பார்ப்பன அட்டகாசம் கைபர் போலன் வழியாகவும் வரும், ‘சைபர்’ போலன் வழியாகவும் வரும் என்பதற்கு உங்களுடைய சமீபத்திய பின்னூட்டங்களே சான்றுகள். கிறிஸ்த்தவ மிசுநரிகள் மட்டுமல்ல, ஆரியப்பார்ப்பன ‘பசு’நரிகளும் வெளியிலிருந்து வந்தவைகள்தான். நீங்கள் ஏதோ மனிதனை வாழவைக்க வந்தது மாதிரியும் அவர்கள்தான் மதத்தைப் பரப்ப வந்தமாதிரியும் காது குத்தும் சடங்கிற்க்கு வரலாற்று, சமூகச்சான்றுகள் தகுந்த அடி கொடுத்து நாளாயிற்று!

   உங்கள் வாதப்படியே, மதத்தைப் பரப்ப வந்தவனிடம் துபாஷிகளாகவும்ர ‘சர்’ பட்டங்களையும் வாங்கிக்கொண்டு சு.சாமி பாஷையில் ராஜரிஷியாக வலம்வந்த பார்ப்பன வம்சத்தையே ‘இந்து’ எதிரியாக அறிவிக்கத்தயாரா? ஏன் இன்றும் கிறிஸ்த்தவ அமெரிக்காவில் ‘மவுஸ்’ ஆட்டிக்கொண்டிருக்கும் அம்பிகளை எல்லாம் தேசபிரஷ்டம் செய்யத்தயாரா? கிறிஸ்த்தவ ஒபாமாவிடம் மோடிக்கு என்ன ஜோலி? என்று கேட்கவேண்டியதுதானே.

   உங்கள் வாதப்படியே, எங்கிருந்தோ! எதற்கோ! வந்த கால்டுவெல், தமிழை உயர்தனிச்செம்மொழி, சமஸ்கிருத சார்பின்றி தனித்து இயங்கக்கூடிய திராவிமொழிக்குடும்பத்தில் மூத்தமொழி என்ற ஆய்வுகளை நிலைநாட்டுவது உங்களுக்கு ஏன் வலிக்கிறது! சமஸ்கிருதத்தையும்,வேதத்தையும் உயர்த்திச்சொன்ன மாக்ஸ்முல்லர் உங்களுக்கு சகோதரச்சண்டையை மூட்டிவிடுவதாகத்தெரியவில்லை. கால்டுவெல் தமிழை உயர்த்திப்பிடித்தால் மட்டும் அவரை வெள்ளைக்கார பிரிவினைவாதி என்பீர். உங்கள் பார்ப்பனத்திமிர் எங்களை ‘சூத்திரர்’ எங்கள் ‘தாய்மொழியை’ நீசபாஷை’ என்று மனிதனாகவே மதிக்காத போது, இதில் சகோதரச்சண்டயை மூட்ட எங்கிருந்தே ஒரு கால்டுவெல்தான் வரவேண்டுமா என்ன? ஏற்க்கனவே இங்குநுழைந்த ஒரு குடுமி போததா? முதலில் உங்க அழுக்குப்புணூலை கழுவுங்க அப்பு! அப்புறம் சிலுவய அடிச்சுத்தொவைக்கலாம்!

   இந்தலச்சனத்தில் ஆப்பிரிக்காவில் குழுச்சண்டயாக்கி ரத்தவெறியாக்கும் வெள்ளைகாரன்தான் இங்கே ஆரிய, திராவிட சண்டையமூட்டுரதா போகிறபோக்கில் தன்னை மறந்து பிதற்றல்வேறு. ஆப்பிரிக்கா கிடக்கட்டும் இங்க அக்கிரகாரம், ஊர், சேரின்னு பிரிச்சவர்கள் வெள்ளைக்காரனா, இல்லை பார்ப்பனக் கொள்ளைக்காரனா? வந்தேறிகள் விசயத்தில் அவனும் அவாளும் ஒன்னுதான்! நால்வர்ணம், நாலாயிரம் சாதி என்று நெனச்சா பத்தவச்சு ரத்தக்காடாக்கும் சாதிவெறி பார்ப்பனியத்தை உள்ள வச்சிகிட்டே, வெளிலேந்து எதிரிவாரான்னு கை காட்டினா மட்டும் போதுமா? உங்கள் யோக்கியதை என்ன? மத்தவனாது பிற மதத்தைத்தான் ஒதுக்கிவைப்பான்! நீங்கள் சொந்த மதத்தவரயே இந்துவா இருந்தாலும் பறயன், பள்ளன், தீண்டாமை என்று கூறுபோடும் உங்களைவிட கொலைகாரன் உலகத்தில் உண்டா?

   பரிதிமாற்கலைஞர், உ.வே.சா. போன்றவர்களை பர்த்சர்ட்டிவிகேட்டை வைத்துக்கொண்டு ”பார்ப்பான்! என்ன இருந்தாலும் எங்க ஆளாக்கும்” என்று சாதிவெறிய கக்குவது நீங்கள்தான், அவர்களின் தமிழ் உழைப்பை உரிய அளவில் சாதி பார்க்காமல் ஏற்ப்பவர்கள்தான் நாங்கள்! இன்னும் சொல்லப்போனால், உ.வே.சா. காலத்திலேயே சிந்தாமணியை, மணிமேகலையை பதிப்பித்த வேலையில் புறச்சமயமாகிய சமணமத நூலை பதிப்பிக்கிறாயே என்று பல்லைக் கடித்தது பார்பன-வெள்ளாளக் கூட்டந்தான். ஏன் தமிழையே பிறமொழியாக கருதி,நம்ம சமஸ்கிருதத்தை விட்டுவிட்டு, ஏன் இதக்கட்டிக்கிட்டு அழுவுற! என்று சண்டித்தனம் அவாள்கள்தான், கணிதமேதை ராமானுஜம் என்று இன்று கூத்தாடும் பார்ப்பனக்கும்பல், அன்று கடல்கடந்து அவர் லண்டன் சென்றது சாஸ்திர விரோதம் என்று அவருக்கு ‘காரியம்’ செய்யமுடியாது என்று குசும்பு பிடித்ததும் கும்பகோணத்து பார்ப்பன கும்பல்தான்! இவ்வளவு உள்ளடி வேலைகளையும் நீங்கள் செய்துகொண்டு மொத்தப்பழியையும் பாதிரியார் மேல் மட்டும் போடுவது உங்கள் வரலாற்று ‘புகழுக்கு’ இழுக்காகிவிடும். வெளிநாட்டிலிருந்து ஒருவர் வந்து பல மொழிகளையும் ஆராய்ச்சிசொய்து தமிழ்மொழியின் சிறப்பை நிறுவினால் அது மதப்பிரச்சாரம் என்று புகையை கிளப்புகிறீர்கள். வெளிமாநிலதிலிருந்து ஒருவர் வந்து போகிறபோக்கில் சமஸ்கிருத்தை சப்புக்கொட்டிக்கொண்டே தமிழ் சிறப்பா இருக்கு என்று சொன்னால் மட்டும் உள்நோக்கம் இல்லையா? மதப்பிரச்சாரம் இல்லையா? பிச்சைஎடுப்பதற்காக வந்தவர்கள் தமிழுக்கு தானம் கொடுப்பதாக சொல்லுவது சகிக்கமுடியாத கொடுமை!
   துரை.சண்முகம்

   • துரை அண்ணே …

    நீங்க எனக்கு தான் பதில் சொல்றீங்கண்ணு நினைக்கிறேன்.

    ஆரியர்கள் என்ற ஒரு இனம் இல்லை ஜெனிடிக் ஸடடியே சொல்கிறது ஆனால் இந்தியாவில் 2 இனங்கள் இருந்தன இருக்கின்றன ANI மற்றும் ASI இரண்டும் வெளியிலிருந்து வந்தவை அல்ல. ஜாதிகள் என்பது செய்யும் தொழிலை வைத்து வருவது விஸ்வகர்மாக்கள், தேவர்கள், செட்டியார்கள், நாடார்கள், பிராமணர்கள் என ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வோரு தொழில் பணிக்கப்பட்டிருந்தது.

    //வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கு என
    அடிசிலும் பூவும் தொடுதற்கண்ணும்
    அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும்
    அந்தம் இல் சிறப்பின் பிறர் பிறர் திறத்தினும் //

    தொல்காப்பியத்திலெயே அந்தணர் பற்றி குறிப்பிடும் போது ஒரு வெள்ளைக்காரன் வார்தையை ஏற்க்க வேண்டியதில்லை(ஆரியதிராவிட புரட்டு).

    எல்லா வெள்ளைக்காரர்களும் ஒன்று தான் அவர்கள் நமக்கு நன்மை செய்திருந்தால் அந்த செயலுக்கு மட்டும் பாராட்டலாம் ஆனால் சொந்தநலத்திற்க்காக செய்த ஒரு கதைகட்டலுக்கு நம்பி மாக்ஸ்முல்லரானாலும் கால்டுவெல்லானாலும் எவரையும் ஏற்றுக்கொள்ள இயலாது.

    தொல்காப்பியத்தில் பனம்பரனாரின் சிறப்பு பாயிரம் நால்வேதங்களும் கற்ற அதங்கோட்டு ஆசானின் மாணவன் தொல்காப்பியர் அவர் ஐந்திரம் (பாணினிக்கு மிக முந்தய நூல்) என்ற சமஸ்கிருத இலக்கணநூலை நன்கு கற்று தேர்ந்தவர் என்று வருகிறதே. இது எல்லாம் கண்களுக்கு தெரியாது ஆனால் ஒரு வெள்ளைக்காரன் கொடுத்த கண்ணாடியை போட்டுக்கொண்டு எல்லாம் ஆரிய திராவிட என்று பேசியே நாட்கள் கரைக்கிறீர்.

    வெள்ளைக்காரன் வருவதற்க்கு முன்னால் ஒரு ஜாதிக்கலவரம் காட்டுங்கள் பார்க்கலாம். வெள்ளைகாரன் போன நாட்டிலெல்லாம் ஏதாவது ஒரு சண்டை இன்றும் நடந்து கொண்டிருக்கிறதே அது ஏன்.

    பிராமணர்களை பற்றி சொல்லுறீங்களே . தர்மபுரியிலும் தென்மாவட்டங்களிலும் பிராமணர்களா கலவரம் செய்தார்கள்.

    இவ்வளவு பேசியதால் நான் பிராமணர் என்று நீங்கள் தப்பாக முடிவெடுத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.

    • \\ஆரியர்கள் என்ற ஒரு இனம் இல்லை ஜெனிடிக் ஸடடியே சொல்கிறது\\

     மரபியல் ஆய்வில் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவது எலும்புகளின் பரிமாணம், முடியின் நிறம், தோலின் நிறம் மற்றும் கண்ணின் கருவிழி நிறம். இது ஆரியனைப் பற்றி என்ன சொல்லும்? பார்ப்பனியம் செல்லும் இடங்களில் எல்லாம் கலாச்சாரங்களை உள்வாங்குவதில்லை. மாறாக உட்செரிக்கிறது. அதனால் தான் வடஇந்திய சிவப்பு பார்ப்பான் தென்னிந்திய கருப்புப்பார்ப்பானை இன்றும் ஒரு பொருட்டாக கருதுவதில்லை. நிறம் வேறமாதிரி இருக்கே!; ஆனால் இரண்டு பேரும் பார்ப்பான்; இது எப்படிச் சாத்தியம். இரண்டுபேரும் தாங்களே உயர்வானவர்கள் என்று கருதக்காரணம் என்ன?

     ஆரியன் என்பதை அடுத்தவர்கள் வரையறுக்கவில்லை. ஆரியன் என்பதை ஆரியக்கூட்டம் தான் வரையறுத்தது. தேவிபிரசாத் சட்டோபாத்யாயவின் Introduction to Indian History என்ற நூலின் 106 பக்கம் முதல் பாராவை தமிழனுக்கு டெடிகேட் செய்கிறேன்.

     “THE people who first used the vedas as their sacred text, who first spoke the Sanskrit language and worshipped a particular group of deities led by Indra, called themselves arya. The term persists throughout later Sanskrit and its derivative languages, ultimately to become just a respectful salutation. Irr between, arya passed through the meanings “ noble,” “well-born,” “ free.”

     அப்படியானால் வேதம் ஓதியவர்கள் சமஸ்கிருதம் பேசியவர்கள் தங்களை ஏன் ஆரியர்கள் என்றழைத்துக்கொண்டனர்?

     வெளியிலிருந்து வந்த ஆரியக்கூட்டமும் தங்களை ஆரியர்கள் என்றழைப்பதில் தவறவில்லை. அதற்கான ஆதாரம் அதே புத்தகத்திலிருந்து;

     “Nevertheless, it was found that, in antiquity, certain tribes outside India did claim to be Aryans. The addition of Hittite to the known Aryan languages gave some further information about the Aryans in history. Comparison of several languages yielded certain characteristic names of gods and men which then allowed recognition of Aryan cults and princes. Not all the people speaking Aryan languages show this common feature, but there is enough in common between vedic and Iranian Aryans to allow their being classed together while kinship terminology shows deeper community or origin, in some measure, with the Romans, Greeks, Slavs, Teutons. With the first appearance of these people in history were directly associated considerable political upheavals in Mesopotamia, Egypt, India, and even the far less-developed Danube valley and Scandinavia (Battle-axe folk). For example : the Old Testament place-name Goshen has not a Hebrew but Aryan etymology, from go = cattle; it marks the invasion of Canaan by strange pastoral raiders of a new type.”

     ஆரியர்கள் சிந்து சமவெளி நாகரிகத்தை அழித்து, எப்படி அதன் கலாச்சாரத்தை செரித்தார்கள் என்பதற்கான ஆதாரம்;

     “The Aryans[1] who destroyed the Indus cities made their first appearance about the beginning of the second millennium B. c. Many separate groups of Aryans were fully established in the Fertile Crescent at the eastern end of the Mediterranean by the middle of the 2nd millennium, as heirs to the Sumerian and Semitic civilizations. The Hyksos who broke into Egypt from Asia Minor during the 13th dynasty and remained in control till about 1580 bear a name translated as ‘ Shephered Kings’, which could describe the Aryan conquerors in India quite well. The name Shashank, so common for Pharaohs of the 22nd and 23rd dynasties of Egypt (from 945 B.C. down) has a definitely Aryan (Sanskrit Sasanka) sound. The ancestors of this dynasty were immigrants allied with tribes of known Aryan character : Tyrrhenians, Sardinians, &c. However, the Aryans do not form a single “ culture “ in the archaeologist’s sense of the word, so that a totally new procedure from that of the preceding chapter is necessary to deal with them. There is no characteristically Aryan pottery, tool, weapon, as such. The Aryans regularly adopted whatever suited them, from the people with whom they came into contact. They were not genetically or physically homogeneous. Adoption was frequent, as to some extent intermarriage with other people who had been Aryanized, whether by conquest or some other type of contact. In spite of many learned articles, there is no proven Aryan skull form ; nasal-index measurements are not applicable to grave remains.”

     எச்சில் தட்டில் இருப்பதையும் புடுங்கித் திங்கவும் தயங்கவில்லை ஆரியம் என்பது மேலிருந்த செய்தியில் இருந்து தெரிகிறது. இப்பொழுது தெரிகிறதா ஆரியர்களை மரபணு ஆய்வால் அறியமுடியாது என்று! வரலாற்றின் இழிபுகழ் ஆரியர்கள் யாரென்பதை சரியாகச் சொல்லும். ஆகையால் மெடிசன் என்று புதுபம்மாத்து காட்டவேண்டாம் தமிழன் அவர்களே!

     • திருத்தம். An introduction to the study of Indian history புத்தகத்தின் ஆசிரியர் டி.டி. கோசாம்பி ஆவார். தேவிபிரசாத் சட்டோபாத்யயா என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளேன். கவனத்தில் கொள்ளவும். ஆர்வம் உள்ளோர் இணையத்தில் இப்புத்தகத்தை தரவிறக்கி வாசிக்கலாம்.

     • // nasal-index measurements are not applicable to grave remains.”

      எச்சில் தட்டில் இருப்பதையும் புடுங்கித் திங்கவும் தயங்கவில்லை ஆரியம் என்பது மேலிருந்த செய்தியில் இருந்து தெரிகிறது. //

      remains என்ற ஆங்கில வார்த்தையைப் பார்த்தவுடன் உமக்கு எச்சில் தட்டு நினைவுக்கு வந்துவிட்டது.. பல இடங்களிலும் இந்த வசவை எடுத்துவிட்டிருக்கிறீர்.. எவனோ ஒரு பார்ப்பான் நீர் தட்டிக்கொண்டு வந்த எச்சில் தட்டை அவன் பிடுங்கித் தின்னுருக்கான், அந்த இழப்பை இன்னும் உம்மால் மறக்க இயலவில்லை போலிருக்கிறது..

     • @தென்றல்

      Sasanka to Shashank has a very thin line relation. With these kind of arguments one can prove,1 day of Bramma is 365 days on earth was known to early indians and hence they know theoriy of relativity..

      //There is no characteristically Aryan pottery, tool, weapon, as such//
      Then how will you group a set of people ?

      yesterday Someboday found word Kumari, a drowned place mentioned in Silapathikaaram , and they claimed origin of Tamils from Lemuria continent.

      Today somboday found Harappa, and immediatly origin of tamils place is associated with Indus valley.

      Tomorrow somoboday will find three dots in England , our people will prove that is indeed a tamil letter and show the words Ko and Kow are proof

      These kind of speculative writings without proving anything but feeding the hatred of common mind will be of no use.

      Most of them are thories. Sumerians had writing system , Egyptions had a writing system around 3300 bc. If they had entered by killing Indus valley around 1600 BC to India, we would have had writing system.

      If Tamils moved from Indus valley, we should have carried the Indus symbols and must be using improved system. we should be able to decipher Indus scripts. Professor Iravatham cliams but it was not universally accepted. Even then why 3000 year old tamil books never mentioned Satlej/Ganga/Narmathaa river in their writing as they had to move from Indus to Kumari.

      It is an unsolved puzzle. Take the theories as a grain of salt not as absolute truths.

      • I have one more question, if Aryans are known as cunning people and amending the loser community to their caste hierarchy why did they choose to kill all of the Indus valley people, instead of amending them to their caste pyramid?

    • \\ தொல்காப்பியத்திலெயே அந்தணர் பற்றி குறிப்பிடும் போது ஒரு வெள்ளைக்காரன் வார்தையை ஏற்க்க வேண்டியதில்லை(ஆரியதிராவிட புரட்டு).\\

     இப்படிச் சொல்கிற கூட்டங்களுக்காகத்தான் “வடசொற் கிளவி வட எழுத்து ஒரீஇ” என்று தொல்காப்பிய நூற்பா கூறியது. தொல்காப்பியத்திலேயே அந்தணர் வந்துவிட்டது என்று சொல்கிற அற்ப பதர்கள் ஏன் இப்பாடலைக்கண்டும் காணாது போல் இருக்கின்றனர் தமிழன் அவர்களே!

     “பார்ப்பன மகனே!
     எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்
     பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்
     மருந்தும் உண்டோ? (குறுந்தொகை 156)”

     ஆரிய திராவிட புரட்டு என்று சொல்பவர்கள் சிறிதும் கூச்ச நாச்சமின்றி இதுபோன்ற இலக்கியங்களையும் கடந்துதான் வருகின்றனர் என்பதை இந்துத்துவ காலிகளுக்கு அறிவுறுத்துமாறு தமிழன் அவர்களைக்கோருகிறேன்.

    • \\ஆனால் சொந்தநலத்திற்க்காக செய்த ஒரு கதைகட்டலுக்கு நம்பி மாக்ஸ்முல்லரானாலும் கால்டுவெல்லானாலும் எவரையும் ஏற்றுக்கொள்ள இயலாது.\\

     யாரால் இப்படிச் சொல்ல இயலும் என்பதை தமிழன் கவனிக்க வேண்டும். திண்ணை தூங்கிகளின் கலாச்சரத்தை மேக்ஸ் முல்லர் ஆளப்பிறந்த இனம் என்று அவிழ்த்துவிட்ட பொய் நாசிசத்தைத் தோற்றுவித்தது. இந்தியாவில் ஞான கங்கை எழுதிய ஆர் எஸ் எஸ் கூட்டத்தைத் தோற்றுவித்தது. இரண்டு மனித சமுதாயத்திற்கு ஆகக் கேடானவை.

     மாறாக கால்டுவெல் தமிழ் தனித்தியங்கும் உயர்தனிச் செம்மொழி என்று நிருபித்த காரணத்தால் தான் சரஸ்வதி நமஸ்காரம் செய்கிற அடிமைத்தனத்திற்கு பதிலாக நீராடுங் கடலுடுத்த என்று பாடி தன்மானத்தைப் பெற்றுக்கொள்கிறோம். இன்றுவரைப் பார்ப்பனக் கூட்டங்களுக்கு இது பொச்சரிப்பான விசயமாகும்! மேலும் பறையர்கள் ஆதிதிராவிட தமிழர்கள் என்று நிறுவி சைவர்களின் சாதிவெறியை அம்பலப்படுத்தவும் தயங்கவில்லை கால்டுவெல்லின் ஆய்வு.

     • // மாறாக கால்டுவெல் தமிழ் தனித்தியங்கும் உயர்தனிச் செம்மொழி என்று நிருபித்த காரணத்தால் தான் //

      தமிழை காட்டுமிராண்டி பாசை என்றாரா உங்கள் தலைவர்.. பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் பொச்சரிப்பா..?!

      // நீராடுங் கடலுடுத்த என்று பாடி தன்மானத்தைப் பெற்றுக்கொள்கிறோம். //

      மனோன்மணியம் சுந்தரனார் இதைப் படித்தால் தன்மானம் மிகுந்து கடலில் குதித்து நீராடப் போய்விடுவார்..

    • \\தொல்காப்பியத்தில் பனம்பரனாரின் சிறப்பு பாயிரம் நால்வேதங்களும் கற்ற அதங்கோட்டு ஆசானின் மாணவன் தொல்காப்பியர் அவர் ஐந்திரம் (பாணினிக்கு மிக முந்தய நூல்) என்ற சமஸ்கிருத இலக்கணநூலை நன்கு கற்று தேர்ந்தவர் என்று வருகிறதே. இது எல்லாம் கண்களுக்கு தெரியாது\\

     முதலில் உங்கள் கண்ணுக்கு பிராகருதம் எது சமஸ்கிருதம் எது என்று பிரித்துப்பார்த்து பழகிக் கொள்ளுங்கள். பார்ப்பனக்கூட்டம் பசு ரோஸ்ட் செய்து தின்று செரித்த கூட்டம். பல்வேறு இலக்கண நூல்கள், நிகண்டுகள், சூரசேனி எனும் சமணர்களின் பிராகிருத மொழியால் எழுதப்பட்டவை. வரலாற்றை ஒழுங்காக வாசியுமய்யா. இதில் ஐந்திரம் எந்த வகை எந்தளவிற்கு சிறப்பானது என்று எடுத்து வையும். சமஸ்கிருதத்தின் யோக்கியதையைப் பார்த்துவிடுவோம்.

    • \\வெள்ளைக்காரன் வருவதற்க்கு முன்னால் ஒரு ஜாதிக்கலவரம் காட்டுங்கள் பார்க்கலாம்.\\

     நந்தனை எரித்தது
     வள்ளலாரை எரித்தது; மாபலியை நசுக்கியது; தமிழர் பெருமான் இராவணனைக் கொன்றது. அடுக்கலாம்; பக்கம் கொள்ளாது.

     \\வெள்ளைகாரன் போன நாட்டிலெல்லாம் ஏதாவது ஒரு சண்டை இன்றும் நடந்து கொண்டிருக்கிறதே அது ஏன்.\\

     தண்ணீர் குடிக்கப்போன தலித் சிறுவனின் மண்டை பார்ப்பனியத்தால் உடைக்கப்படுகிறதென்றால் நம் நாட்டில் காலந்தோறும் பார்ப்பனியம்; மற்றும் மறுகாலனியாதிக்கம். பிற நாடுகளில் மறுகாலனியாதிக்கம் மற்றும் வஹாபியம்; கிறித்துவ நாடுகளில் மறுகாலனியாதிக்கம் மற்றும் நாசிசம் பாசிசத்தை ஆதரிக்கும் கிறித்தவம். எங்குமே மதம் ஒடுக்கும் கருவி. இதில் பார்ப்பனியம் நக்கிப்பிழைக்கும் ஒட்டுண்ணி!

     • // தமிழர் பெருமான் இராவணனைக் கொன்றது //

      சந்தடி சாக்கில், அடுத்தவன் மனைவியை லவட்டியவனை பெருமானாக்குவதற்கு உம்மைப் போன்ற யோக்கிய சிகாமணிக்கு ’கூச்ச நாச்சம்’ இல்லாமலிருக்கலாம்.. தமிழர் பெருமான் என்று அறிவித்து தமிழர்கள் மீது ஏன் கழிந்து வைக்கிறீர்..?! ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறீரா..?!

      • \\ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறீரா..?!\\

       “ஈயுங்கள் என்பீரோ!
       மனிதரைப்போல் இருக்கின்றீர்
       மானமின்றி!”- பாவேந்தர் பாரதிதாசன்

       சீதையைத் தொட்டால் தான் தொட்டவனை நெருப்பு சுட்டரிக்குமே! ஆனால் எங்கள் தமிழ் தலைவர் இராவணன் சீதையோடு பூமாதேவியை சேர்த்துதானே பெயர்த்து எடுத்துக்கொண்டு போனார்! ஒன்றும் ஆகவில்லையே! கற்பில் சிறந்தவன் இராவணன் என்பது கைக்கூலிகளுக்கு தெரியாதா? ஆனால் யோக்கியவான் இராமனின் வண்டவாளத்தை அம்பேத்கர் காறித்துப்பவில்லையா?

       இராவணனைப் போற்றும் தமிழர்களின் பண்பாடு;

       “தென்றிசையைப் பார்க்கின்றேன்
       என் சொல்வேன் என்றன்
       சிந்தையெல்லாம் தோள்களெல்லாம்

       பூரிக்குதடடா!
       அன்றலர்ந்த லங்கையினை
       ஆண்ட மறத்தமிழன்
       ஐயிரண்டு திசைமுகத்தும்
       தன்புகழை வைத்தோன்
       குன்றெடுக்கும் பெருந்தோளான்
       கொடைகொடுக்கும் கையான்!
       குள்ள நரிச் செயல்செய்யும்
       கூட்டத்தின் கூற்றம்!
       எந்தமிழர் மூதாதை;
       என் தமிழர் பெருமான்
       இராவணன் காண்! அவன் நாமம்
       இவ்வுலகம் அறியும்”- பாவேந்தர் பாரதிதாசன்

       • அசைக்க முடியாத ஆதாரம்..!

        // கற்பில் சிறந்தவன் இராவணன் என்பது கைக்கூலிகளுக்கு தெரியாதா? //

        அடுத்தவன் மனைவியை தூக்கிக்கொண்டு ஓடுவது கற்புக்கரசர்கள் செய்யும் வேலையா..?!

        // ஐயிரண்டு திசைமுகத்தும்
        தன்புகழை வைத்தோன் //

        பத்து தலைக்கு கொடுக்கும் இந்த பகுத்தறிவு வெளக்கம் நல்லாயிருக்கே..!

        // கொடைகொடுக்கும் கையான்! //

        யாருக்கு என்ன கொடை கொடுத்தானோ..?! பெரியார் வயிறு எரிய எரிய அண்ணாதானே இவருக்கு கிழி கொடுத்தார்..

        // எந்தமிழர் மூதாதை; //

        தலைச் சங்கத்தின் தலைமைப் புலவரே சொல்லிவிட்டார்.. எவனும் கேள்வி கேக்கப்படாது..

        // என் தமிழர் பெருமான் //

        தன் ‘தமிழர் பெருமான்’ என்றுதானே கூறியிருக்கிறார்.. ஏன் எல்லாத் தமிழர்களுக்கும் பொதுவாக்கிவிட்டீர்..?! திருகு வேலையை நிறுத்தமாட்டீரோ..!

    • \\பிராமணர்களை பற்றி சொல்லுறீங்களே . தர்மபுரியிலும் தென்மாவட்டங்களிலும் பிராமணர்களா கலவரம் செய்தார்கள்.\\

     பிறப்பால் உயர்வு தாழ்வு கருதும் நைச்சியத்திற்கு பார்ப்பனியம் என்று பெயர். அதனால் தான் சாதிவெறியைக் கொண்ட பிறகூட்டங்களின் மதத்தை பார்ப்பனிய இந்துமதம் என்று வரையறுக்கிறோம். உங்களுக்கு புரியவில்லையென்றால் ஏன் ஆர் எஸ் எஸ்ஸும் பாட்டாளி மக்கள் கட்சியும் கூடிக்குலாவுகின்றன என்பதற்கு பதில் சொல்லவும். வன்னியகுல சத்ரியாஸ் என்பதை ஆதரித்த இந்துமகா (மானங்கெட்ட) சபையை தெரியுமா தமிழன்?

     \\இவ்வளவு பேசியதால் நான் பிராமணர் என்று நீங்கள் தப்பாக முடிவெடுத்தால் அதற்க்கு நான் பொறுப்பல்ல.\\

     தமிழன் என்ற பெயர் உங்களுக்குப் பொறுப்பல்ல.

     • தென்றல் …

      சுமார் 100 வருடங்களாக பெரியார் முதல்கொண்டு பலர் குட்டிகரணம் அடித்தும் … கீழ் நிலையில் உள்ள வேற்றுமைகளையே வீழ்த்த தெரியவில்லை(தென்தமிழக சாதி மோதல்கள், தர்மபுரி கலவரம்) … அப்பறம் பிராமணர் பேரில் பழியை போட்டு விட்டு பின்வாசல் வழியாக ஓடுவது … என்ன கொடுமை சரவணன் இது

      • 100 வருடங்களாக பெரியார் முதல் பலர் குட்டிக்கரணம் அடித்தும் வேற்றுமைகளை வீழ்த்த முடியவில்லை என்பது தங்களுக்கு வருத்தமா? மகிழ்ச்சியா? இதே காலகட்டத்தில் சாதியை ஒழிக்க தாங்கள் என்ன அய்யா செய்தீர்கள்? சாதிக்கொடுமைகளை கைகட்டி வேடிக்கை பார்க்கிற தாங்கள் அதைத் எதிர்த்துப்போராடுகிறவர்களால் தீர்க்க முடியவில்லை என்று சொல்வது பிள்ளையை கிள்ளியும் விட்டு தொட்டிலை ஆட்டுவதுபோல் இல்லையா? உங்களைப் போன்ற ஆட்கள் தானய்யா தர்மபுரி கலவரத்தில் கை நனைத்தவர்களாக இருக்கிறார்கள்.

       பிராமணர் பேரில் பழியைப் போட்டு பின்வாசல் வழியாக ஒடுவது போராடுகிறவர்களின் பழக்கம் அன்று. ஏனெனில் அக்கரகாரம் போன்று அடுத்ததெரு வரைக்கும் ஐந்தாறு வாசப்படி போராடுகிறவர்களுக்கு கிடையாது. பின்வாசல் தீண்டாமைக்காக உருவாக்கப்பட்ட ஒன்று. விஜயநகர காலத்தில் பின்வாசல் மற்றும் கிணறு வைத்துக்கொள்ளும் உரிமையும் பார்ப்பன உயர்சாதிகளுக்குத்தான் இருந்தது. வீட்டில் இருந்து வெளியேறுகிற பிராமணர் எப்பொழுதும் வீட்டை முன்வாசல் வழியாக கடக்கமாட்டார். பின்வாசல் கிணற்றில் தீட்டு கழித்துவிட்டுதான் வீட்டிற்கு நுழைவார். ஆக பின்வாசல் வழியாக ஒருவர் ஓடியிருந்தால் அது யார் என்று தங்களுக்கு புலப்படும் என்று கருதுகிறேன்.

    • \\ ஜாதிகள் என்பது செய்யும் தொழிலை வைத்து வருவது விஸ்வகர்மாக்கள், தேவர்கள், செட்டியார்கள், நாடார்கள், பிராமணர்கள் என ஒவ்வொரு இனத்துக்கும் ஒவ்வோரு தொழில் பணிக்கப்பட்டிருந்தது.\\

     சாதி என்பது தொழில்களைப் பிரிப்பதல்ல; தொழிலாளர்களைப் பிரிப்பது; Caste is not a division of labor; It is a division of laborer” – அம்பேத்கர்

     நால்வர்ணம் சரி என்று சொல்லும் நச்சுப்பாம்புகளையும் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு தொழில் பணிக்கப்பட்டிருந்தது என்று சொல்கிற பார்ப்பனிய அடிவருடிகளையும் அம்பேத்கர் இப்படித்தான் அம்பலப்படுத்தினார். கேங்மேன் தொழில் என்பது மத்திய அரசு வேலைதான்! எத்துணை பார்ப்பனர்கள் இந்த வேலையில் இருக்கின்றனர்? இடஒதுக்கீடு இருந்தும் இங்குமட்டும் ஏன் ஒரு நாதாரிகளையும் காணோம்?

     • // கேங்மேன் தொழில் என்பது மத்திய அரசு வேலைதான்! எத்துணை பார்ப்பனர்கள் இந்த வேலையில் இருக்கின்றனர்? இடஒதுக்கீடு இருந்தும் இங்குமட்டும் ஏன் ஒரு நாதாரிகளையும் காணோம்? //

      உம்ம சாதிக்காரர் யாரோ ஒருத்தர் கேங்மேனாக இருக்கிறார் போல் தெரிகிறது.. அதான் கேங்மேன் வேலையை காட்டுகிறீர்.. அதே ரயில்வேயில் தலித் மக்கள் செய்யும் திடக்கழிவு அள்ளும் வேலையை உம்ம சாதிதாரிகள் யாராவது செய்கிறார்களா..?! செய்வதாயிருந்தால் அதையல்லவா கூறியிருப்பீர்..

      • அம்பி ,வெகு சுலபமாக வினவில் அம்பல பட்டு போகின்றிர்கள். உங்கள் தர்க்க படி பார்த்தால் நீர் என்ன தலித் மக்களின் உடன் பிறப்பா ? இது என் கேள்வியல்ல ! உமது முட்டாள் தனமான தர்க்கம் கேட்கும் கேள்வி இது ! அவர்[Thendral] எழுப்பும் கேள்வியானது சாதிய படிநிலையில் தன்னை உயத்தி கொண்டு நிற்கும் பார்பனர்களின் மீது கேட்கப்டுவது என்ற எளிய உண்மை உமக்கு விளங்கவில்லையா ? விவாதத்தில் இருந்து இப்படி பேசி நழுவுவதற்கு பதில் பேசாமல் அமைதி காக்கலாம் அம்பி. நன்றி !//உம்ம சாதிக்காரர் யாரோ ஒருத்தர் கேங்மேனாக இருக்கிறார் போல் தெரிகிறது.. அதான் கேங்மேன் வேலையை காட்டுகிறீர்.. அதே ரயில்வேயில் தலித் மக்கள் செய்யும் திடக்கழிவு அள்ளும் வேலையை உம்ம சாதிதாரிகள் யாராவது செய்கிறார்களா..?! செய்வதாயிருந்தால் அதையல்லவா கூறியிருப்பீர்..//

      • உம்ம சாதிக்காரர் யாரோ ஒருத்தர் கேங்மேனாக இருக்கிறார் போல் தெரிகிறது.. அதான் கேங்மேன் வேலையை காட்டுகிறீர்.. அதே ரயில்வேயில் தலித் மக்கள் செய்யும் திடக்கழிவு அள்ளும் வேலையை உம்ம சாதிதாரிகள் யாராவது செய்கிறார்களா..?! செய்வதாயிருந்தால் அதையல்லவா கூறியிருப்பீர்..

       அம்பிகிட்ட சாதி வெறின்ற அழுக்கு அளவுக்கு அதிகமாவே இருக்குனு உங்க பேச்சுல தெரியுதே இந்த சாதி வெறி மலத்த நீமதாவே அள்ளனும் அதுக்குனு தனி சாதி கிடையாது…

     • தென்றல் அவர்களுக்கு,

      //கேங்மேன் தொழில் என்பது மத்திய அரசு வேலைதான்! எத்துணை பார்ப்பனர்கள் இந்த வேலையில் இருக்கின்றனர்? இடஒதுக்கீடு இருந்தும் இங்குமட்டும் ஏன் ஒரு நாதாரிகளையும் காணோம்?//

      அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளுக்கு சென்று அங்கு செட்டில் ஆகவேண்டும் என்றால் அங்கேயிருக்கும் நமது தூதரகங்களின் கழிவறை சுத்தம் செய்பவர்களாகவும் பார்ப்பனர்கள் போகிறார்கள். தக்க இடங்களில் உள்ள தங்கள் நண்பர்களை வைத்து இதை சாதிக்கின்றனர்.

     • //நால்வர்ணம் சரி என்று சொல்லும் நச்சுப்பாம்புகளையும் ஒவ்வொரு இனத்துக்கும் ஒரு தொழில் பணிக்கப்பட்டிருந்தது என்று சொல்கிற பார்ப்பனிய அடிவருடிகளையும் அம்பேத்கர் இப்படித்தான் அம்பலப்படுத்தினார்.//

      இன்னிக்கு கூட … டாக்டர் குடும்பத்தில் பெரும்பாலும் எல்லாரும் டாக்டராக இருக்கிறார்கள், வக்கீல் குடும்பத்தில் பெரும்பாலும் வக்கீலாக இருக்கிறார்கள், டீச்சர் குடும்பத்தில் பெரும்பாலும் டீச்சராக இருக்கிறார்கள் … இதுபோலத்தான் சாதிகளும் உருவாகியிருக்கும் … உங்களைபோல் ஆட்கள் இருக்கும்போது ஒருவேளை இன்னும் கொஞ்ச வருசத்தில் டாக்டர் ஜாதி, வக்கீல் ஜாதி, டீச்சர் ஜாதி, அரசியல் ஜாதி எல்லாம் வந்தாலும் வரும் … அதுக்கு போராடவும் இப்பவே பெரியார்மாதிரி ஆள் ரெடிபண்ணிவைங்க … இதையே சொல்லி சொல்லி பிறகு கொள்ளைஅடிக்க உதவும் …

   • Sir when you answered my question who is owning all the ENGLISH MEDIUM CONVENT schools in TN from Kanyakumari to Chennai today you will know who is working VERY HARD for developing TAMIL. WHAT THESE DRAVIDIAN RULERS ARE DOING IN THE PAST FIFTY YEARS? Even tamil teachers are not sure of grammar and syntax of the language these days. This is the achievement of the rulers. If you want to be angry you should be angry now only against them. Please go and catch hold of them. FOR LEARNING A LANGUAGE YOU NEED TO LOVE THAT LANGUAGE HATING OTHER LANGUAGE IS OF NO USE. PLEASE INTROSPECT. THE PRESENT RULERS WANTED TO SEPARATE DIVINITY FROM THE LANGUAGE WHICH IS THE REASON WHY OUR LANGUAGE IS NOT MAKING THE PROGRESS WHICH IT SHOULD HAVE IN THE LAST FIFTY YEARS OF DRAVIDIAN PARTY RULES. Unable to be angry at them, please dont spew venom which is not valid today. It is looking like a blind man in a dark room searching for a black cat which is not there. Hating an imaginary target which is nonexistent in TN today will not help develop the language. It is up to the people concerned to introspect. Your intentions are not circling around developing language but circling around MODIs and AMIT Shahs who donot matter as for as education is concerned, which is a state subject. Then why you divert the issue from core of the problem and the real culprits who are refusing to develop TAMIL? Please go and try making all the 600 odd Engineering Colleges and thousands of ENGLISH MEDIUM CONVENT SCHOOLS in to TAMIL MEDIUM INSTITUTIONS and see what will happen. Only the so called TAMIL KAAVLARS are the patrons of these institutions. If you want to search some thing which is lost, please search where you lost it. THAT IS WHY I TOLD that it is materialistic dialectics which is deciding the relevance of our language today. No one is denying its past heritage or its spiritual and divine strengths it got from time immemorial. But be practical. “CALDWEL is more important and not U VE SA” type arguments are trivial. Mere owning a GREAT person or LANGUAGE cannot help develop the language. Rulers and the people have decide at large. I can only share your concern. But I strongly disagree with your biased view of who is spoiling or developing a language and abusive words/language used.

 4. எப்படியோ முதலீல் திராவிட உதடுகலும் ஆதிதிராவிட உதடுகலும் ஒன்ரு சேரட்டும vairamuthu ayya avarkale

  • இந்தக் கட்டுரையையும் மற்றும் எதிர்வினைகளையும் படித்து ரசித்தேன்.

   இங்கே ஒக்லஹோமாவில் தமிழன் ஒருவனே தமிழன் முதுகில் குத்தி அக்டோபர் மாதம் 18ஆம் நாள் நடந்த எங்கள் மாகாண தமிழ் கூட்டத்துக்கு யாரும் செல்லக் கூடாது என்று எல்லா தமிழ் குடும்பங்களிடமும் நிற்க வைத்து உறுதி வாங்கி செல்ல இருந்த தமிழ் குடும்பங்களை தடுத்து நிறுத்திய அராஜகத்தை என்னென்று சொல்ல!

   தனக்கு என்ன அனுகூலம் என்று கணக்கு பார்த்து தமிழ் தாயின் கன்னத்தில் அறையும் இம்மாதிரி தமிழ்க் கயவர்களை என்னென்று வைய!

   தொடரட்டும் உங்கள் தமிழ் தொண்டு.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க