privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திமேக்கேதாட்டு அணை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு

மேக்கேதாட்டு அணை எதிர்த்து டெல்டா மாவட்டங்களில் முழு அடைப்பு

-

உழுபவனுக்கே நிலம்! உழைப்பவருக்கே அதிகாரம்!!

விவசாயிகள் விடுதலை முன்னணி, தமிழ்நாடு
திருவாரூர் மாவட்டம்
தோழர் கு.ம. பொன்னுசாமி மாவட்ட அமைப்பாளர். தொலைபேசி 9442889041

வேண்டுகோள்

மேகதாட்டு ஆறு
மேகதாட்டு ஆறு

அன்பார்ந்த உழைக்கும் மக்களே…
விவசாயிகளே… வணிகர்களே… பொது மக்களே… வணக்கம்!

  • நாளை 22.11.2014 சனிக்கிழமை அனைத்து விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடத்த இருக்கும் முழு அடைப்பில் விவசாயிகள் விடுதலை முன்னணியும் முழுமையாகப் பங்கெடுத்துக் கொள்கிறது.

ஏன் இந்த முழு அடைப்பு?

  • காவிரி டெல்டா பகுதிகளின் 1 கோடி மக்களின் உயிருக்கும் உடைமைக்கும், வாழ்வாதாரமாகவும், தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் வாழும் 4 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் விளங்கும் காவிரி டெல்டாவைப் பாலைவனமாக ஆக்கிடும் திட்டமே கர்நாடக அரசின் மேகதாட்டு அணைக்கட்டுத் திட்டமாகும்.
  • டெல்டா விவசாயம்
    டெல்டா விவசாயம்

    கர்நாடகாவின் மேகதாட்டு வனப்பகுதியில் அர்காவதி ஆறும், சில துணை ஆறுகளும் காவிரியில் சங்கமிக்கும் இடத்தில் 2 புதிய அணைகளையும் 4 புதிய தடுப்பணைகளையும் கட்டுவதற்குத் திட்டமிட்டுச் செயலில் இறங்கியுள்ளது கர்நாடக அரசு.

  • 2007-ம் ஆண்டின் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பினை மதிக்காது அணைகள் கட்டக் களமிறங்கியுள்ள கர்நாடகத்தின் இந்தச் செயலை மத்திய அரசும் தடுத்து நிறுத்திட முயற்சிக்கவில்லை. கர்நாடக அரசின் இந்த அடாவடிப் போக்கினையும், மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் விவசாயிகள் விடுதலை முன்னனணி வன்மையாகக் கண்டிக்கிறது
  • மேகதாட்டுவில் கட்டப்பட இருக்கும் அணையில் 50 டி.எம்.சி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இதனால், தமிழகத்துக்கு வரும் காவிரி நீர் முழுமையாகத் தடுத்து நிறுத்தப்படும். காவிரி டெல்டா வெகுவிரைவில் பாலைவனமாக ஆகிவிடும்.
  • எனவே, கர்நாடக அரசின் இந்த அடாவடிப் போக்கினையும், மத்திய அரசின் மெத்தனப் போக்கினையும் கண்டிக்கும் விதத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், வணிகர்கள் அனைவரும் அரசியல் மாச்சரியங்களுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து, இந்த முழு அடைப்புப் போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டுகிறோம்.
நாள் : 21.11.2014
இடம் : திருவாரூர்
இப்படிக்கு
தோழர் கு.ம. பொன்னுசாமி
விவசாயிகள் விடுதலை முன்னணி.
  1. ஒருபுறம் மீதேன் திட்டம் துரத்த மறுபுறம் கருநாடக அரசின் இது போன்ற திட்டங்கள் தஞ்சை விவசாயிகளின் கருவையருக்கும் திட்டங்களாகும். வி.வி.மு அமைப்பிற்கு எனது முழுமையான ஆதரவையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  2. கார்ப்பரேட் கொள்ளைக்காக காவிரியின் குறுக்கே அணையைக் கட்டும் மறு காலனியாக்க கொள்கையை அமுல் படுத்தும் இந்த அரசமைப்பை தூக்கியெறிய விவசாயிகள் விடுதலை முன்னணியோடு இணைந்து போராடுவோம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க