Monday, August 15, 2022
முகப்பு கட்சிகள் பா.ஜ.க ரோட்டக் சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்

ரோட்டக் சகோதரிகளும் பாஜகவின் இரட்டை வேடமும்

-

ரோட்டக் சகோதரிகள் இப்போது சமூக வளைத்தளங்களில் பிரபலங்களாகி விட்டனர். சமூக வலைத்தள கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா வாய்ப்பைத் தவற விட அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதால், எதிர்வரும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ரோட்டக் சகோதரிகளை கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.

ரோட்டக் சகோதரிகள் யார், அவர்கள் நிகழ்த்திய சாதனை என்னவென்று அறியாதவர்களுக்காக –

ரோட்டக் சகோதரிகள்
கையில் கிடைத்த பெல்ட்டால் அம்மூன்று வாலிபர்களையும் விளாசித் தள்ளியிருக்கிறார்கள் சகோதரிகள்

ஆர்த்தி மற்றும் பூஜா குஹார் ஆகிய இருவரும் சகோதரிகள். ஹரியாணா மாநிலம் சோனேபட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அருகில் உள்ள ரோட்டக் நகரின் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கடந்த 28ம் தேதி இவர்கள் இருவரும் ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறையின் பேருந்து ஒன்றில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.

குஹார் சகோதரிகள் பயணம் செய்த அதே பேருந்தில் வந்த குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று வாலிபர்கள், இருக்கையில் அமர்ந்து வந்த சகோதரிகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். பெண்கள் என்றால் இருக்கையில் அமரக் கூடாது என்றும், எழுந்து நிற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு பதிலளிக்காத சகோதரிகளை இழிவாக பேசி, துண்டுச் சீட்டில் தங்கள் தொலைபேசி எண்களை எழுதி அவர்கள்மேல் வீசியுள்ளனர். இதை எதிர்த்து குரல் எழுபிய இப்பெண்களை நோக்கி ஆபாச சைகைகள் செய்துள்ளனர்.

இருக்கையில் இருந்து எழுந்து சென்று அதைத் தட்டிக் கேட்ட ஒரு சகோதரியை கழுத்தைப் பிடித்து கீழே தள்ள, பொங்கியெழுந்த சகோதரிகள், அம்மூன்று வாலிபர்களையும் எதிர்த்து போராடியுள்ளனர். மற்ற பயணிகள் கோழைகள் போல் வேடிக்கை பார்த்து நின்ற நிலையில், தங்கள் கையில் கிடைத்த பெல்ட்டால் அம்மூன்று வாலிபர்களையும் விளாசித் தள்ளியிருக்கிறார்கள் சகோதரிகள். பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் இந்த அடாவடித்தனங்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கின்றனர்.  உடன் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மட்டும் ஆதரவாக இடையே புகுந்துள்ளார். சகோதரிகள் அந்த வாலிபர்களுக்கு புரியும் மொழியில் பெல்டால் பேசியதை அந்த கர்ப்பிணிப் பெண் தனது செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளார்.

பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் போலீசுக்கு தொலைபேசுவதைத் தடுத்திருக்கின்றனர். பேருந்து சிறிது தூரம் சென்று நின்று விட சகோதரிகள் இருவரையும் தாக்கியவர்கள் அவர்களை பேருந்திலிருந்து வெளியே தள்ளியிருக்கின்றனர்.

தங்களை தாக்கியவர்களைப் பற்றி இரு சகோதரிகளும் போலீசில் புகார் செய்திருக்கின்றனர்.

சகோதரிகள் இளைஞர்களை தாக்கும் வீடியோ  சில மணி நேரங்களிலேயேசமூகவலைத்தளங்களில் ’வைரல்’ ஆகிவிட்டது. “#RohtakSisters”, “#BraveheartSisters” உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளால் பகிரப்பட்ட வீடியோ ஓரிரு நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டு வடமாநில சமூக வளைத்தள பயன்பாட்டாளர்களிடையே முக்கிய பேசு பொருளானது. இத்தனை பேரின் விவாதப் பொருளான பின் பாரதிய ஜனதாவின் கண்ணை உறுத்தாமல் இருந்தால் தான் அது அதிசயம்.

உடனடியாக அம்மூன்று வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இராணுவத்தில் பணிக்குச் சேர்வதற்கான உடற் தகுதித் தேர்வில் வென்றவர்கள் என்றும், எழுத்துத் தேர்வுக்கான காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்கள் என்றும் செய்திகள் வெளியாகின. சம்பவம் குறித்து பேட்டியளித்த மத்திய இராணுவ அமைச்சர், இது போன்ற பொறுக்கிகளுக்கு இராணுவத்தில் இடமில்லை என்றும், ஒழுக்கம் போன்ற விஷயங்களில் இராணுவம் கறாராக நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையே ஹரியாணா முதல்வர் மனோகர் லால், வரும் குடியரசு தினத்தன்று சகோதரிகள் இருவரும் அவர்களின் வீரச் செயலுக்காக கவுரவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். மேலும், மாநில அரசு சார்பாக அப்பெண்களுக்கு ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்திருப்பது அரிதினும் அரிதான ஒரு சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து கொன்றொழிக்கும் ஆணாதிக்க சமூகமான வடமாநிலங்களில் முதன்மையானது ஹரியானா. பெண்களை சுயேச்சையான மனித உயிர்களாக அல்லாமல், ஒரு உடைமையாகப் நடத்தும் பழக்கம்தான் பார்ப்பனிய கலாச்சாரத்தின் அடிப்படை. இதுவே இந்திய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளின் ஆணிவேர்.

ரோட்டக் சகோதரிகள்
ரோட்டக் சகோதரிகள்

இன்றைக்கும் பெண் சிசுக் கொலைகளால் ஆண் பெண் மக்கள் தொகை விகிதாச்சாரம் குலைந்து, திருமணத்திற்கு ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து காசு கொடுத்து ஏழைப் பெண்களை ஓட்டி வரும் பார்ப்பனிய ஆண் திமிரும் அதை அங்கீகரிக்கும் ஜாட் கட்டைப் பஞ்சாயத்தும் தான் ஹரியானாவின் முதன்மையான அடையாளம். சாதி மாறிக் காதலித்த ’குற்றத்திற்காக’ கொளுத்தி சாம்பலாக்கப் பட்ட பெண்களின் எண்ணிக்கையோ எண்ணி மாளாது.

இது போன்ற ஒரு படுபிற்போக்கான மாநிலத்தில் பொதுவிடத்தில் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் சண்டை போடுவது உண்மையில் வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, எல்லோரும் பின்பற்றத்தக்க முன்மாதிரியும் ஆகும். அந்த வகையில் ரோட்டக் சகோதரிகளின் வீரத்தை நாம் போற்றுவதும், பார்ப்பனிய ஆணாதிக்கத் திமிருக்கு எதிரான இதை தூக்கிப் பிடிப்படும் அவசியம்.

ஆனால், சம்பவம் மக்களின் கவனத்திற்கு வந்த பின் பாரதிய ஜனதா ஆடும் அழுகுணி ஆட்டங்கள் தான் சகிக்க முடியாததாக உள்ளது. ரோட்டக் சகோதரிகளை பாராட்டும் அதே பாரதிய ஜனதாவில் தான் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு ஆளான நிகால் சந்த் மேஹ்வால் அமைச்சராக இருக்கிறார். பாரதிய ஜனதா ஆளும் ஹரியானா மாநில போலீசாரால் “தலைமறைவாக” உள்ளவராகத் தேடப்படும் அதே மேஹ்வால் மத்திய பாரதிய ஜனதா அரசியல் அமைச்சராக இருக்கிறார்.

பாலியல் வக்கிரங்களும் பாரதிய ஜனதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை நாம் விரிவாக விளக்கத் தேவையில்லை. சஞ்சய் ஜோஷி சிடி, கர்நாடக மற்றும் குஜராத் சட்டசபைகளில் நீலப் படம் பார்த்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கள்ளச்சாமியார்களோடான நெருக்கம் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. காமசாஸ்திரம், கொக்கோக சாஸ்திரம் படைத்த ஞான மரபின் புத்திரர்களின் சாதனையை விவரிக்கவும் வேண்டுமா என்ன.

மத்திய இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பொங்கியெழுந்திருப்பது போல் இராணுவத்தின் ஒழுக்க சீலங்கள் என்னவென்பது தமிழர்களுக்குத் தெரியும், தெரியாத தமிழர்கள் ஈழத் தமிழர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எண்பதுகளின் இறுதியில் ’அமைதிப் படை’ என்ற பேரில் ஈழம் சென்ற இந்திய இராணுவத்தின் மைணர்த் தனங்களைப் பற்றி ஈழத் தமிழர்கள் கண்ணீரால் எழுதி வைத்துள்ள இரத்த வரலாறு நம் கண் முன் உள்ளது.

ஓரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற வகையில் அந்நிய தேசத்தில் மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்திற்கு அல்லக்கை குண்டர்படை என்ற எதார்த்த நிலைமையின் காரணமாக இந்தியாவுக்குள்ளேயும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தின் பாலியல் அடாவடித்தனங்களைச் சொல்லி மாளாது. தங்ஜம் மனோரமாவின் கதையை இன்றைக்கும் மணிப்பூர் பெண்கள் மறக்கவில்லை. காஷ்மீரிகளின் சோகமோ எழுத்தில் விளக்கவியலாதவை.

பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரிகள் இவர்கள். ஊடக வெளிச்சமும், விளம்பரமும் கிடைக்கிறது என்பதைத் தாண்டி ரோட்டக் சகோதரிகளை இவர்கள் ஆதரிப்பதற்கு வேறு எந்த முகாந்திரமும் கிடையாது.

இந்துத்துவர்களின் வாயிலிருந்து வழியும் போற்றுதல்களின் யோக்கியதை என்ன?

பெண்ணைத் தாயாக, நதியாக, மலையாக, ஏன் கடவுளாகவே ஏற்றிப் போற்றும் அதே இந்து தத்துவ மரபு தான் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கணவனை இழந்த பெண்களை நெருப்பில் இட்டு வாட்டியது. இன்றும், சாதி மாறிக் காதலிக்கும் பெண்களைக் ’கவுரவமாக’ கொன்றொழிக்கும் சாதிவெறியின் அடிப்படையாக இருப்பதும் அதே தத்துவஞான மரபுதான்.

இந்த எதார்த்த உண்மைகளின் யோக்கியதையைப் புரிந்தவர்களுக்கு இந்துத்துவ புத்திரர்களின் போற்றுதலுடைய யோக்கியதையும் புரியும்.

ரோட்டக் சகோதரிகள் காவல் துறையிடம் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று தற்போது சாதிப் பஞ்சாயத்தார் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இந்த நிமிடம் வரை அடிபணியவில்லை. அவர்கள் பேருந்தில் உயர்த்திய சாட்டையின் நுனி நிமிர்ந்து நிற்பது பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை நம்பி அல்ல, மாறாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவில் தான் இருக்கிறது.

நாம் அந்த சுயமரியாதையின் வீரத்தை ஆதரிப்போம்; அப்பெண்கள் துவங்கி வைத்துள்ள போராட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.

– தமிழரசன்

மேலும் படிக்க

 1. Mr Tamilarasan,
  Haryana well progressive state.Specially to respect elders and woman.The Jats are not only respects women in public places they protect every girls and women like their sisters and mothers.Jats are not only brave soldiers and also well civilised society of people.For your kind information there is no BRAHMINS in Haryana,the Brahmins in haryana are migrants from UP,Rajasthan and Bihar and else where.
  The some incidents reported are Exceptions of normal life in Haryana .
  This incident also may bearrangements of HINDU MUJAHIDEENS(RSS/BJP handi work).Those Boys may be arranged for this with out their knowledge by the vested interest.Like tutoring some innocent first time muslim accused in jails for terror linked activities

 2. “பெண்ணைத் தாயாக, நதியாக, மலையாக, ஏன் கடவுளாகவே ஏற்றிப் போற்றும்” At least in Hinduism you can these kind of things. Some cruel things happen here and there and nobody can deny that. But, it is not as in other Peace countries like UAE, PAK etc.,

  • பெண்களுக்கு அரபுநாடுகளில் எவ்வாறு மரியாதை இருக்கிறது என்று அங்கு தனது குடும்பத்துடன் இருக்கும் சகோதரர்களை கேட்டு பாருங்கள் “சரவ்”; இங்கு இருப்பது போல பெண்களிடம் பொறுக்கிதனம் செய்துவிட்டு தப்பிக்க முடியாது. அவர்கள்நல்லவர்கள் என்பது இல்லை, சட்டம் கடுமையாக இருப்பதால் பெண்களுக்கு எதிரான குட்றங்கள் குறைவு. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத இடங்களில் இந்தியா முதலில் இருக்கும், அரபுநாடுகள் கடைசியில் இருக்கும்.

   • “சட்டம் கடுமையாக இருப்பதால் பெண்களுக்கு எதிரான குட்றங்கள் குறைவு. ” Even the laws can not touch the owner of the house maids Mohamed. We all knew well about how the house maids are treated there? I am not talking about only work pressure, about something else. Yes, anyone can defend them but can not hide the truth. If laws are strict, by this time, lot of people would have lost their heads for ill treating foreign ladies..

 3. ரோஹ்தக்கில் நடந்தது இளைஞர்/ஆண் ஆதிக்க மனப்பான்மையின் செயல். இது போன்று வக்கிர செயல்கள் இந்தியாவில் அங்கொன்றும் இங்கொன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது: பா .ஜ. கா/ ஆர் எஸ் எஸ் இல்லாத இடங்களிலும். பெண்கள் தம் தைரியத்தைக் காட்டி பெல்டினால் கசையடி கொடுத்தனர். இதில் பார்ப்பனீயம் எங்கு வந்தது? ஒரு வேளை முஹர்ரம் கலகங்களில் சுன்னி/ ஷியா சண்டைக்குக் கூட பார்ப்பனீயத்தைக் குறை சொல்வீர்கள் போலும்!

 4. http://www.ndtv.com
  Rohtak Sisters’ Award on Hold as Versions of Events Collide
  All India | Reported by Anand Kumar Patel, Edited by Mala Das | Updated: December 04, 2014 15:01 IST

  CHANDIGARH: They began the week as national heroines, showered with praise for fighting men on a bus who had allegedly harassed them. But today, a cash reward promised to Pooja and Arti Kumar, age 19 and 22, has been put on hold by the Haryana government.

  What began as a narrative of feisty bravery shows signs of rupture.

  The video that went viral on Sunday, showing the sisters belting a trio of men on a bus in Rohtak in Haryana, was shot by a pregnant woman, the sisters said. The fact that other passengers watched passively magnified the courage of the sisters.

  But attempts to find the pregnant woman who allegedly filmed the encounter on a cellphone have yielded no results.

  Then two days later, another video surfaced of the young women beating up a man in a public park. They said it was filmed by a witness
  RELATED
  Had Warned the 3 Men to Not Harass Rohtak Sisters, Bus Conductor Tells NDTV
  For Rohtak Sisters, Questions About Stage-Managed Fights
  Been Harassed by 2,000 Boys, Say Rohtak Sisters After New Video Emerges
  while they punished the man for lewd comments. In this case, too, the witness has not been found.

  There’s also no explanation for how someone is always available to film the sisters in action. When asked, Pooja said, “I am 19 years old. At least 2,000 boys have harassed me. More videos will surface.”

  In the case of the incident on the bus, the families of the three men who were arrested for allegedly harassing the women say they are innocent. An elderly woman who was on the bus has said in an affidavit to the police that the men did not misbehave.

  But the bus conductor says he warned the men to leave Arti and Pooja alone.

  The families of the arrested suspects met the Chief Minister of Haryana, ML Khattar, today; he assured them of an impartial inquiry and has decided that the women’s reward of Rs. 31,000 each, promised by him on Monday, will be held till the police inquiry is completed.
  Story First Published: December 04, 2014 14:20 IST

 5. ஹரியானா: பேருந்தில் கேலி செய்த ஆண்களை இரட்டை சகோதரிகள் தாக்கிய வழக்கு அப்படியே யூ-டர்ன் போட்டு வேறு திசையில் செல்கிறது.

  அந்தப் பெண்களுக்கு எதிராக சக பெண் பயணிகள் சாட்சியம்.
  அறிவிக்கப்பட்ட விருதை நிறுத்தி வச்சிட்டாங்க.

 6. எனகென்னமோ இதில் உண்மை இருப்பது போல் தெரியவில்லை… விளம்பரதிர்க்ககவே இந்த பெண்கள் இப்படி செய்திருப்பார்களோ என்றே எண்ணத் தோன்றுகிறது. இந்து செய்தித்தாளில் வந்துள்ள செய்திகளின்ப் படி இந்த பெண்கள் இருவரும் முன்பு இதே காரணத்திற்காக பூங்கா ஒன்றில் இளைஞர் ஒருவரை விளாசிய வீடியோவும் வெளியாகியுள்ளது. இந்த இரண்டு சம்பவங்கள் நடை பெற்ற பொழுதும் ஏன் இவர்கள் காவல் துறையிடம் இது பற்றி புகார் செய்யவில்லை என்பது மட்டும் மர்மமாகவே இருக்கிறது. உண்மையில் அந்த பேருந்தில் என்ன நடந்து என்பது தெரியாமல் வினவு தப்புத் தாளம் போடுகிறது.

  மேலும், அந்த 3 இளைஞர்களும் பேருந்தில் அந்த பெண்களிடம் எந்த சில்மிஷத்திலும் ஈடுப்படவில்லை என்று அந்த இளைஞர்களின் கிராமத்தினர் அனைவரும் அவர்களை காப்பாற்ற முடிவு எடுத்துள்ளனர். இந்த இளைஞர்கள் தவறாக இந்த புகாரில் சிக்கவைக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் அவர்களின் கிராமத்து மக்கள்.

  விடயம் இது தான், உடல்நலம் குன்றிய பெண் ஒருவருக்கு இந்த இளைஞர்கள் டிக்கெட் எடுத்ததாகவும், அவருக்கென்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் சகோதரிகள் அமர்ந்ததாகவும் சகோதரிகளை இருக்கையை விட்டு எழுந்திருக்குமாறு கூறிய போது தகராறு எழுந்ததாகவும் இவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை எழுப்பியுள்ளனர்.

  ஆக உண்மையில் பொறுக்கிகள் அந்த அப்பாவி 3 இளைஞர்களா அல்லது பெண் என்கிற நளினமில்லாமல் பொது இடத்தில் கையோங்கிய இந்த பெண்கள் பொறுக்கிகளா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் உண்மை எதுவென்று தெரியாமல் வினவு தேவை இல்லாமல் இவர்களை வைத்து பார்பன அரிப்பை தீர்த்து கொள்ள வேண்டாம் என்பது என் அபிப்ராயம்.

  மேலதிக தகவல்களுக்கு:http://tamil.thehindu.com/india/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6655481.ece?homepage=true

 7. அடாவடியாக அந்த பெண்கள் நடந்து கொண்டதாக பயணிகள் அதுவும் பெண் பயணிகள் சாட்சி கூறுவதாக பத்திரிக்கையில் செய்திகள் வந்துள்ளன உண்மைகளை பொருத்திருந்து தெரிந்து கொள்ளாமல் வினவு அவசரப்பட்டு கட்டுரை வெளியிட்டு விட்டதா…எதுக்கெடுத்தாலும் பார்பனீயம் என்ற சொல்லாடலை தாவிர்ப்பது நல்லது …

 8. நண்பர் சண்முகம் இந்த சம்பவம் இந்துதுவ வாதிகளால் திட்டமிட்ட சதி என்றும் அதில் அப்பாவி இளைஞர்கள் தன்னை அறியாமலே பலி வாங்கபட்டதாகவும் உங்களின் பின்னூட்டத்தில் கூறி இருக்குறீர்கள் அதை மேலும் விளக்கினால் நல்லது நான் இப்பொழுதுதெல்லாம் வினவை ஒரு நடு நிலை வலைப்பூவாக எண்ணுவதற்க்கு முடியவில்லை அவர்களின் இசுலாமிய சார்பு மலைக்க வைக்கும் மோசடியாகவே கருதுகிறேன் வேறு வழியில்லாமல் இசுலாமியர்களின் அம்பலப்பட்டுப்போன குற்றங்கலையே அவர்கள் இசுலாமிற்க்கான எதிர் வினை என்பது போல கட்டுரை வெளியிடுகிறார்கள் இது இசுலாமிய அமைப்புகளே பட்டும் படாமல் இசுலாமியர்களின் குற்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவிப்பது போல உள்ளது அனால் இந்தியாவில் நடக்கும் எந்த குற்ற செயலை எடடுத்துக்கோண்டாலும் அதர்க்கு பார்ப்பனீய சாயம் பூசி இடந்த்கு மதம் தான் காரனம் என்று சொல்லுவது வினவின் நடுநிலமைக்கு அழகல்ல

 9. ரோட்டக் சகோதரிகள் விவகாரத்தை தொடர்ந்து வந்த செய்திகள் வேறு ஒரு பொருளை தருகின்றன. இந்த சகோதரிகள் இதற்கு முன்னரே இது போன்று வேறு சில இளைஞர்களை தாக்கி இருப்பதாகவும், ஹரியானா சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட இளைஞர்கள் அப்பாவிகள் எனவும் – இதனைத் தொடர்ந்து ரோட்டக் சகோதரிகளுக்கு மாநில அரசு வழங்க இருந்த பணப் பரிசையும், குடியரசு தின விருதினையும் நிறுத்தி வைத்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட செய்தி ஒருவேளை உண்மையாக இருப்பின், ‘பெண் என்றால் பேயும் இறங்கும்’ என்ற சொல்லுக்கு ஏற்ப ரோட்டக் சகோதரிகள் இது போன்று நடந்து கொண்டார்களோ என அச்சமும் ஏற்படுகிறது. முழுமையான விசாரணை தேவை.

  பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாகுவது, அவர்களை உடல் ரீதியாக கொச்சைப்படுத்துவது…. போன்ற இழி செயல்கள் பல காலமாக நம் நாட்டில் நடந்து வருகிறது. இதில் ப.ஜ.க., காங்கிரஸ், தி.மு.க., அ. தி.மு.க… என் கட்சி பேதம் கிடையாது.

 10. இது போன்ற பதிவுகளில் இந்து மூடதனகளுக்கு ஆதரவாக rebaecca mary மற்றும் p.joseph என்ற மோடி குரூப் தங்கள் ஆர் எஸ் எஸ் நச்சுகளை பதிவு செய்கின்றார்கள்.மோடி போலவே அவர் தொண்டர் படையும்…போட்டோ ஷாப் போன்று பெயர் மாற்றி வருகின்றார்கள்.rebacca mary & p.joseph உங்கள் சொந்த பெயரில் வந்து விவாதத்தில் கலந்து கொண்டால் என்ன….பயமா?

 11. ஏன் உளருகிறீர்கள், நான் எவ்வகையில் இந்து மூடத்தனத்துக்கு ஆதரவாக பேசினேன் நாங்கள் மோடியின் தொன்டர் படை என்று எவ்விதத்தில் அழைக்கிறீர்கள் எனது பெயர் ஜோசப் தான் எனது சொந்த பெயரில்தான் வருகிறேன் … எனக்கு பயமெல்லாம் இல்லை நீங்கள் யார் அமெச்சூர் இசுலாமியரா இல்லை கம்மூனிஸ்டா இல்லை கிறிஸ்துவரா ஏன் எங்கள் மீது இவ்வளவு கோவம் …

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க