தனியாருக்குக் கொடுப்பதில் பிரசவ அவசரம்!
பிறக்குற கொழந்தையெல்லாம்
ஒண்ணு ஒண்ணா சாகுது – இந்த
பிள்ளைக்கறி திண்ணும் அரச
நெனச்சாலே வேகுது
பிரசவம் பாக்கவோ உருப்படியா டாக்டரில்ல
பெற்றோரே பிராணவாயு பொருத்துகிற அவல நெல
ஒத்த இன்குபேட்டர் மூணு கொழந்த அதுக்குள்ள – இத
இயற்கை மரணம் என்பவன அடிக்க வேணும் மொறத்துல
அவசர சிகிச்சையின்னா கொலையே நடுங்குது
அலட்சியமும் மெத்தனமும் ஆப்பரேசன் நடத்துது
பத்துமாதம் சுமந்த உசுரு கைவிலகிப் போகுது – இந்த
பாவத்துக்குத் தண்டனையா எவன் உசிர எடுப்பது
அரசு மருத்துவமனை துடைச்சிடுமா கண்ணீர-லஞ்சம்
அய்நூறு கொடுக்கலன்னா அழைக்குது பிணவறை
பிரசவ வார்டுதான் குழந்தைகளுக்கு கல்லறை – பணப்
பேய்களுக்கு எதுக்குடா விதவிதமா வெள்ள உடை
பெருச்சாளி திண்ணுருச்சி குழந்தைய சென்னையில
இழுத்துப் போயிருச்சி தெருநாயி திருச்சியில
பாம்பு பார்வையிடுது வார்டுகள தஞ்சையில
அம்மா பாதம் தவிர வேறொண்ணும் பன்னீருக்குத் தெரியவில்ல
பொறுப்பில்லாத அரசுதானா ஏழைக்கு போக்கிடம்
போகுதடா அரசு இப்போ தனியார் கைவசம்
இறப்புக்கும் இரங்காத அரசின் மெத்தனம்
இதச் சொல்லித் திருத்த முடியாது
அறுவை சிகிச்சை பண்ணணும்
அரசை அறுவை சிகிச்சை பண்ணணும்
பாடல் – இசை : மக்கள் கலை இலக்கியக் கழகம், மைய கலைக்குழு
மனதை உருக்கும் பாடல்.மலை மீது நின்று ஒலிக்கும் குரலாக இந்த ஒற்றைக் குரல் ஒலிக்கிறது.இந்த அவலங்களுக்கு நிச்சயம் ஓர்நாள் பதில் சொல்லியே தீர வேண்டியது இந்த அரசுதான். அப்போது இது எங்கும் ஓடி ஒளிய முடியாது.
நெஞ்சை அறுக்கும் வரிகள்… தனித்தன்மையான குரல்.. அருமையான இசை.
it’s true. every word express the value of life in different segments.done a good job, will support you in all your efforts which enlighten us.