முகப்புஉலகம்அமெரிக்காபருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்

பருப்பு பாக்கெட்டும் கொரிய மேட்டுக்குடி திமிரும்

-

_Korean_Air_Cargo_ரேசன் அரிசியில் புழுவோ, வண்டோ, கல்லோ, மண்ணோ இருந்தாலும் காந்தியாய் சகித்துக் கொள்ளும் தேசமே! இந்தக் கதையை படி!

ஹுண்டாய் காரில் ஹார்லிக்ஸ் குடும்பத்தின் மகிழ்ச்சியோடு பயணிக்கும் நடுத்தர வர்க்கத்திற்கு கொரியா என்றதும் ஒரு நேசம் வரும்! இருங்காட்டு கோட்டை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் ஹுண்டாய் மற்றும் அதன் துணை நிறுவனங்களில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு என்ன வரும்? இந்தக் கதையை படித்தால் தெரியவரும்.

பச்சமுத்துவின் புது யுகத்தில் கொரிய தொடரை பார்த்து கண்ணீர் விடும் மக்களே, இதுவும் ஒரு கொரியக் கதைதான்!

கொரியன் ஏர் லைன்ஸ் கம்பெனி – தென் கொரியாவின் மிகப்பெரும் விமான நிறுவனம். சியோலில் தலைமை அலுவலகத்தை கொண்டிருக்கும் கொரியன் ஏர், 45 நாடுகளில் 130 நகரங்களை இணைக்கிறது. உலக அளவில் முதல் 20 பெரிய விமான நிறுவனங்களில் கொரியன் ஏரும் உண்டு. அதே போல இதன் சரக்கு போக்குவரத்து விமான சேவையும் முன்னணியில் வருகிறது.

1946-ம் ஆண்டு கொரிய தேசிய விமான நிறுவனமாக ஆரம்பிக்கப்பட்டு, 1969-ல் தனியார் மயமாகி கொரியன் ஏர் – ஆக இயங்கி வருகிறது. நிறுவனத்தின் பைலட்டுகள் உள்ளிட்ட ஊழியர்களில் பெரும்பாலோனோர் தலைநகரம் சியோலில் வாழ்கின்றனர்.இப்பேற்பட்ட பிரம்மாண்டமான விமான கம்பெனியை தலைமை தாங்கி நடத்துபவர், சோ யாங் ஹோ (Cho Yang-ho).

இதுதான்யா அந்த ஆஸ்திரேலியா நட்டு
இதுதான்யா அந்த ஆஸ்திரேலியா நட்டு

வாத்தியார் பையன் படிக்கமாட்டான் என்பது மேன்மக்களின் குடும்பத்தினருக்கு பொருந்தாது. ஆடம்பரத்தையும், அதற்கு காரணமான பொருளாதாரத்தையும், அதிகார ஒழுங்கோடு கற்றுணரும் வாரிசுகள் தந்தை வழியில் தலையெடுப்பார்கள்.

அதன்படி அன்னாரது 40 வயது மகள் சோ ஹைன் அஹ் (Cho Hyun-ah) கொரியன் ஏர் நிறுவனத்தின் துணைத்  தலைவராக பணியாற்றுகிறார். நிறுவனத்தில் பயணிக்கும் விமானங்களின் சேவைப் பணிகளை அம்மணி கவனித்துக் கொள்கிறார். உலகாளாவிய தொழிலில் இருப்பதால் ஹீதர் (Heather) எனும் ஆங்கிலப் பெயரில் அழைக்கப்படுவதை இவர் விரும்புகிறார். ராயல் தொழிலில் ராயல் பொறுப்பில் இருக்கும் போது பெயரும் ராயலாக இருக்க வேண்டுமல்லவா!

வெள்ளிக்கிழமை (5.12.2014) அன்று கொரியன் ஏரின் ஜெட் விமானம் நியூயார்க் நகரத்தில் இருந்து சியோலை நோக்கி கிளம்புகிறது. 250 பயணிகளும், 20 ஊழியர்களும் விமானத்தில் இருக்கின்றனர். அவர்களில் அம்மணி சோ-வும் உண்டு.

அம்மணிக்கு உணவு வழங்கிய ஒரு ஊழியர் மேகடாமியா எனும் பருப்பு வகையை பாக்கெட்டோடு தட்டில் வைக்கிறார். ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் இந்த இனிப்பு பருப்பு என்ன எப்படி என்றெல்லாம் நமக்குத் தெரியாது. ஏதோ பாதாம், முந்திரி போல வைத்துக் கொள்ளுங்கள்.

பாக்கெட்டுக்காக பொங்கியெழுந்த அம்மணி சோ
பாக்கெட்டுக்காக பொங்கியெழுந்த அம்மணி சோ

அந்த விமான கம்பெனி ரூல்ஸ்படி இந்த பருப்பு வகைகளை (nuts) பாக்கெட்டிலிருந்து பிரித்து தட்டில் கொட்ட வேண்டுமாம். பாக்கெட்டில் இருந்தாலும் நட்டுதான், கொட்டினாலும் நட்டுதானே எல்லாவற்றுக்கும் மேலாக கழியும் போது அது ஷிட்டுதானே, இதிலென்ன பிரச்சினை என்று நாம் யோசிக்கலாம்.

ஆனால் ராயல் அம்மணிகள் நம்மைப் போல காட்டுமிராண்டிகள் இல்லை. ஏன் உறை போட்டு நட்டு வைத்தாய் என்று வைத்தவரை கேள்வி கேட்டு திட்டி திக்குமுக்காட வைத்தார். பிறகு அந்த ஊழியர் தடுமாறவே உடன் உணவு பறிமாறும் ஊழியர்களின் தலைவரை பிடித்து கேள்வி கேட்டார்.

பிறகு விமானத்தின் தலைமை பைலட்டிடம் சொல்லி கிளம்பிக் கொண்டிருந்த விமானத்தை நிறுத்த சொன்னார். அதன்படி ராயல் அம்மணியின் உத்தரவுப்படி விமானம் திரும்பி தலைமை சேவை ஊழியரை தரையிறக்கிவிட்டு பின் பறந்தது. இதனால் சியோலுக்கு 11 நிமிடங்கள் தாமதமாம்.

என்னடா இது, நமது பேருந்துகளும், ரயில்களும் மணிக்கணக்கில் தாமதாகும் போது கடல் கடந்து நாடு கடந்து போவதற்கு 11 நிமிட தாமதமெல்லாம் ஒரு பிரச்சினையா என்று நீங்கள் யோசிக்கலாம்.

நீங்களெல்லாம் மாதக்கணக்கில் தாமதமாக போனாலும் இந்த உலகம் நின்று விடாது. ஆனால் கணநேர தாமதத்தில் கூட முதலாளித்துவத்தின் மேன் மக்கள், சில பல மில்லியன் டாலர்களை இழக்கலாம். ஆகையால் இது தங்க தாமதம்.

இதுவரை உலகம் கண்ட விமான சரித்திரத்திலேயே இத்தகைய திரும்புதல் நடக்கவில்லையாம். அதாவது தொழில்நுட்பக் கோளாறு, பயணிகளின் படுமோசமான உடல்நிலை இன்னபிற அவசர காரணங்களுக்காக மட்டுமே விமான தலைமை பைலட் இப்படி விமானங்களை தரையிறக்குவார். அதில் நட்டுக்களை பாக்கெட்டோடு போட்டார் என்ற ‘குற்றத்திற்காக’ விமானம் திரும்பியது இதுவே முதல் முறை.

உணவு பரிமாறும் ஊழியர் தவறிழைத்தார் என்பதை நம்மூர் பார்க் ஷெர்ட்டனில் ஒதுங்கி காபியோ, பீரோ குடிக்கும் கனவான்களெல்லாம் கண்டிப்பாக ஏற்பார்கள். ஆதலால் அமெரிக்க, கொரிய கனவான்களுக்கும் அது பிரச்சினையே இல்லை.

ஆனால் 11 நிமிடத் தாமதம்? இது மற்ற கனவான்களுக்கும் சீமாட்டிகளுக்கும் பிரச்சினையல்லவா? உடன் கொரியா துவங்கி, கனடா வரை இந்த ‘நட்டு ரிடர்ன்’ குறித்து ஊடகங்கள் பேசத் துவங்கின. ஏதோ ஒரு வகையில் விமரிசனங்கள் வர ஆரம்பித்த பிறகு கொரியன் ஏர் பதில் சொல்லியது.

அம்மணியின் அப்பா யாங் ஹோ
அம்மணியின் அப்பா யாங் ஹோ

பிரான்சிலிருந்து திரும்பிய கம்பெனி தலைவர் அதாவது அம்மணியின் அப்பா உடன் தலைமை நிர்வாகிகளை கூட்டி நட்டு பிரச்சினையை விவாதித்திருக்கிறார். ஊடகங்களின் அழுத்தம் காரணமாக மனமிரங்கிய அம்மணி தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா கடிதம் கொடுத்ததை அப்பா ஏற்றிருக்கிறாராம். ஆனால் அம்மணி தனது உதவி தலைவர் பதவியை விடவில்லை. சேவைத்துறை பொறுப்பு எனும் பதவியை மட்டும் விட்டிருக்கிறார். இனி அவர் வேலையில்லாமல் ஹாயாக சம்பளத்தை மட்டும் பெறலாம். என்ன ஒரு தியாகம்!

பருப்பு பறிமாறலைத் தாண்டி விமானம் தாமதம், சக பயணிகள் எரிச்சல் எனும் அம்சம் மேலோங்கிய நிலையில் “நடந்த நிகழ்விற்கு முழு பொறுப்பேற்று பதவியிலிருந்து விலகுகிறேன்” என்று அம்மணி கூறியிருக்கிறார்.

அதே நேரம் நியூயார்க் விமான நிலையத்தில் சேவை பணியாளர் பொறுப்பிலிருப்பவரை இறக்கி விட்டது தலைமை பைலட்டுதான், அம்மணி அல்ல என்று கம்பெனி சமாளித்திருக்கிறது.  மேலும் பருப்பு பறிமாறியவர் முறையான வழிகாட்டுதல்களை அறிந்திருக்கவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்க வேண்டியிருந்ததாம். இல்லையேல் பாக்கெட் பருப்பை சாப்பிட்டு மாரடைப்பு வந்திருக்குமோ என்னமோ!

மன்னிப்பு கேட்பதாக இருந்தால் நேரடியாக கேளுங்கள், பொறுப்பை மாற்றிவிடாதீர்கள் என்று இதை கொரியன் ஏர் பைலட் சங்கமே கண்டித்திருக்கிறது.

இறக்கி விடப்பட்ட அந்த மூத்த ஊழியர் மூன்று மாதங்களுக்கு எந்த கொரியன் ஏர் விமானத்திலும் ஏறக் கூடாதாம். அதன்படி அவர் கம்பெனியை விட்டு அவராகவே விலகிவிட வேண்டும்.

ஏழைகள் புளுத்துப் போன ரேசன் அரிசியை சாப்பிடுவதோ, அரசு மருத்துவமனையில் அறுத்துப் போட்டுவிட்டு நூல் இல்லை என்பதோ எங்கேயும் பிரச்சினை இல்லை. ஆனால் நட்சத்திர விடுதிகளிலோ இல்லை போயிங் விமானத்திலோ பருப்பு பாக்கெட்டை உடைக்கவில்லை என்றால் கூட ஊழியர்களை நையப் புடைக்கிறார்கள்.

போராடும் மக்களை சுட்டுக் கொல்லும் உலகநாடுகளின் போலீசு வரை, ஊழியர்களை வதைக்கும் கார்ப்பரேட் நிர்வாகிகள் வரை பூமியில் இதுதான் மேன்மக்களை ஆட்சிசெலுத்தும் அதிகாரப் பண்பு.

எந்தா வேண்டே என்று கேரள சர்வர் கேட்டதை வைத்து அறம் பாடினார் எழுத்தாளர் ஜெயமோகன். ஜெயா கார் பவனி காரணமாக டிராபிக்கில் மாட்டியதால் அரசியல் பேசியவர் ரஜினி. இவர்களைப் போன்றவர்கள் கொரிய அம்மணியின் அறச்சீற்றத்தை புரிந்து கொள்வார்கள்.

இப்போது இந்த உலகம் இவர்களுக்குரியது. நமக்குரியதாக மாற்றுவது எப்போது?

–    வேல்ராசன்

  • இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் வெறும் லோகல் உணவகங்களில் கூட, வெயிட்டர் அல்லது மேசை துடைப்பவர் தண்ணீரை மேசை மீது வைத்தால் மட்டும் போதாது, அந்த உணவகம் எப்படி நிரம்பி வழிந்தாலும், அவரவரது குவளைகளில் தண்ணீரை நிரப்பாது விட்டால் முறைத்துப் பார்ப்பதை நான் அவதானித்திருக்கிறேன். (தண்ணீரை அவரே தேவையான அளவுக்கு ஊற்றிக் கொள்வதற்குப் பதிலாக, அந்த அப்பாவி மங்கோலியப் (நேபாளியோ அல்லது மணிப்பூரோ எனக்குத் தெரியாது) பையனை ஏன் இந்த முறை முறைக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டேன்.)

   அதை விட தமிழ்நாட்டின் சில பகுதிகளில், உணவு பரிமாறுபவர் (வெயிட்டர்) பரோட்டாவை தட்டில் வைத்தால் மட்டும் போதாது, அதை சிறிய துண்டுகளாகப் பிய்த்துப் போடாது விட்டாலும் கூட, வாடிக்கையாளர்கள் கோபித்துக் கொள்வார்களாம். அது போன்றது தான் இதுவும், அதாவது, Economy வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு Macadamia nuts ஐப் பாக்கெட்டில் அப்படியே வேண்டா வெறுப்பாக போட்டு விட்டுப் போவதும், முதலாம் வகுப்பில் அல்லது Business class இல் பயணம் செய்பவர்களுக்கு சிறிய மேசை விரிப்புடன், nuts ஐ அழகாகத் தட்டில் அடுக்கி பரிமாறுவதும் வழக்கம், அந்த விமானசேவையின் உரிமையாளரின் மகளும், துணைத்தலைவருமாகிய அம்மணி ஹெதர் சோ, அந்த நடைமுறையை மீறப்பட்டதைக் கடிந்து கொண்டது பெரிய விடயமல்ல. Economy class இல் பயணம் செய்பவர்களை விட ஆயிரக்கணககான டாலர்களை அதிகளவில் செலவு செய்து முதல் அல்லது business class இல் பயணம் செய்யும் மேட்டுக்குடிகள் அப்படியான சில ஆடம்பர சேவைகளை எதிர்பார்க்கிறார்கள். அதில் தான் விமான நிறுவனங்களும் அதிகளவு பணம் சம்பாதிக்கின்றன.

   நான் என்னுடைய சொந்தப் பணத்தைக் கொடுத்து business class விமான டிக்கட் வாங்கியதில்லை, அது பணத்தை வீணாக்கும் வேலை என்பது எனது கருத்தாகும். ஆனால் எனது வேலை நிமித்தம் அடிக்கடி பயணம் செய்திருக்கிறேன். Frankfurt– சென்னை செல்லும் Lufthansa வில் அல்லது நள்ளிரவுக்குப் பின்னர் சென்னையிலிருந்து Frankfurt செல்லும் விமானத்தில் business class இல் பயணம் செய்யும் தமிழர்கள், அந்த நேரத்திலும், விமானத்தின் ஆண்/பெண் பணியாளர்களிடம், தங்களின் வீட்டு வேலைக்காரர்கள் போலவே நினைத்து நடந்து கொள்வதை நானே நேரில் பார்த்து வெட்கப்பட்டிருக்கிறேன். மேட்டுக் குடிகள் அல்லாதவர்கள் கூட, விமானத்தில் Business Class க்குள் ஏறியதும், மேட்டுக்குடி என்ற நினைப்பு ஏற்படுகிறது போல் தெரிகிறது. ஆகவே ஹெதர் சோ நடந்து கொண்ட விதம் கண்டிக்க வேண்டியதொன்றாக எனக்குத் தெரியவில்லை,

   • என்ன வியாசன் நல்லாத்தான் பேசிக்கிட்டு இருந்தீங்க கடைசில மேட்டுகுடித்திமிர கண்டிக்கவேனாமுனு சொல்லிட்டிங்களே என்னதான் மேட்டுக்குடியா இருந்தாலும் நாகரீகம் இல்லாத நடக்கலாமா பிலிஸிங் பெர்சனாலிட்டிய வளர்த்துக்கனுமுனு சொல்லுறது எல்லாம் அடிமைகளுக்கு மட்டும்தானா ,பாக்கெட்டோட தட்டுல வச்சா என்ன பிலிஸ் ஒபென் அப்பிடினு சொன்ன ஒப்பன் பன்னி தரப்போறார் ,இதுக்கு பிளைட்ட திருப்பி அவரை இறக்கி விட்டு வேலைய விட்டு தூக்கி இவ்வளவு ஆர்ப்பாட்டம் பன்ன்றத கண்டிக்க வேணாம் இது சகஜம்தான்னு கடந்து போறது நல்லதா அந்த பணியாளரின் மனநிலையில் இருந்து சிந்தித்து பார்க்க மாட்டீரா,உங்களின் மனசாட்சி குருடாகி விட்டதா ,பனியாளர் என்றால் சம்பளத்துக்கு வேலை செய்யுறவர் அவரை அடிமை அல்ல ,அதுவும் ஒரு மாசம் வேலைய வாங்கிட்டுதான சம்பளம் குடுக்குறாக இதுல அவரை அடிமையா நினைக்கும் திர்த்தனத்த கன்டிக்க கூடாதாம்
    என்னய்யா நியாயம்

    • //பாக்கெட்டோட தட்டுல வச்சா என்ன பிலிஸ் ஒபென் அப்பிடினு சொன்ன ஒப்பன் பன்னி தரப்போறார் ,இதுக்கு பிளைட்ட திருப்பி அவரை இறக்கி விட்டு வேலைய விட்டு தூக்கி இவ்வளவு ஆர்ப்பாட்டம் பன்ன்றத கண்டிக்க வேணாம்.///

     அவர் அப்படிச் செய்ததற்குக் காரணம் கொரியன் விமானசேவை அவர்களின் குடும்ப வியாபாரம். உங்களின் சொந்த நிறுவனத்தில் வேலை பார்க்குமொருவரின் வேலை உங்களுக்குத் திருப்தியளிக்கவில்லை, நீங்கள் விதித்த விதிகளை அல்லது வாடிக்கையாளர்களுடன் இப்படித்தான் நடத்த வேண்டுமென நீங்கள் கூறியதை மீறுவதாக இருந்தால், நீங்களும் அந்த ஊழியர் மீது கட்டாயம் நடவடிக்கை எடுத்திருப்பீர்கள். சில பெரிய நிறுவனங்களின் அதிபர்கள் இப்படி நடந்து கொள்வதற்குக் காரணம் தமது ஊழியர்களுக்கு மட்டுமன்றி, அவர்களின் போட்டி நிறுவனங்களுக்கும் அவர்கள் எந்தளவுக்கு சிறிய விடயங்களைக் கூட சீரியஸாக எடுத்துக் கவனித்துக் கொள்கிறார்கள் எனக் காட்டிக் கொள்ளவும், அதன் மூலம் உலகளவில் விளம்பரத்தைத் தேடிக் கொள்ளவும் தான்.

 1. உடன்பிறப்பே,

  பணம் , கல்வி மற்றும் உயர்குடிப் பிறப்பு இந்த மூன்றினையும் முக்குறும்பு என்பர் முன்னோர். இம்மூன்றினையும் அறுத்தவனே மனிதன். அன்றேல் அவன் ஒரு மிருகமே.

  அன்புடன்,
  சுரேஷ்

 2. Heiress Who Took Exception to Being Served Nuts on Plane
  World | Agence France- Presse | Updated: December 17, 2014 12:13 IST

  SEOUL: Korean prosecutors questioned Korean Air heiress and former senior executive Cho Hyun-Ah today over her fit of “nut rage” aboard a plane this month, which sparked a national uproar.

  The 40-year-old daughter of the airline’s chief executive forced the chief cabin crew member off a New York-Seoul flight and compelled the taxiing plane to return to the gate after she took exception to being served macadamia nuts she had not asked for — and in a bag, not a bowl.

  “I’m sorry,” Cho said feebly as she was mobbed by journalists and photographers when she appeared at the Seoul Western Prosecutors’ Office, keeping her head low and her face covered with shoulder-length hair.

  A transportation ministry investigation found that Cho breached aviation safety laws when she screamed and hurled abuse at a flight attendant and the chief purser, Park Chang-Jin, during the “nut rage” incident on December 5.
  RELATED
  Man Opens Plane’s Emergency Exit Before Takeoff
  South Korea to Punish Korean Air Over ‘Nut Rage’
  Sales of Macadamias Soar in South Korea After Nut Rage

  Prosecutors will focus on whether she forced the purser off the flight, ordered the pilot to return the plane to the gate and whether she used violence against the two crew members, according to the Yonhap news agency.

  Park has claimed that Cho pushed him into the cockpit door and jabbed him with a service manual.

  She has denied reports she made him and the flight attendant kneel and beg her forgiveness, but another passenger in first class has confirmed she forced both to their knees.

  Cho — one of three children of Korean Air chief executive Cho Yang-Ho, who is also the patriarch of business conglomerate Hanjin Group — has publicly apologised and resigned from all her posts at the family-run group.

  Prosecutors will also investigate whether the airline’s executives coerced cabin crew to give false testimony to government inspectors to protect Cho.

  “There are concerns over evidence tampering, so we plan to stop this by filing for an arrest warrant,” a prosecutor was quoted as saying by Chosun Ilbo daily.

  The transportation ministry said Tuesday it would sanction Korean Air with a flight ban, most likely on the New York-Seoul route, that could last for up to a month or with fines of up to $2 million.

  It also asked prosecution authorities to open a criminal probe into the incident.

 3. நல்ல வேலையாக தென்கொரியா ஜனநாயக நாடு . அப்படியே கேமராவை திருப்பி பக்கத்துக்கு நாடு வடகொரியா பார்த்தால், கிம் ஜாங் உன் என்று யார்ம பெயர் வைக்க கூடாது என்று உத்தரவு போட்டு இருகிறார்கள்.

  கம்ம்யூனிச சர்வாதிகாரிகளிடம் மாட்டினால் அதோகதி தான்

 4. இந்த நிகழ்ச்சியைப் பற்றிய எனது அவதானிப்புகள்.

  விமானத்தில் கத்திரிக்கோல் போன்ற எந்த ஒரு கூர்மையான கருவிகளையும் எடுத்துச் செல்ல முடியாது.
  இது பணியாளர்களுக்கும் பொருந்தும்.
  ஏன் இந்த நிலை.என்பது நமக்குத் தெரியும்.
  அதனால் இந்த கொட்டையின் பாக்கெட்டை கையினாலேதான் கிழிக்க வேண்டும்.
  அதுவும் இந்த பாக்கெட் அதிக தடிமனான பிளாஸ்டிக்கினாலேயே தான் செய்யப்பட்டிருக்கும்.
  கிழிக்கும் போது அதிக பலம் கொண்டு செய்யவேண்டும்.
  அழகாக கிழிசல் ஏற்படாது, அதை இது போன்ற மக்கள் குறைபாடாகத்தான் பார்ப்பார்கள்.
  அப்போது ஏற்படும் சலசலப்பையும் இவர்களும் இவர்களைப் போன்று அருகில் இருப்பவர்களும் முகம் சுளிக்கலாம்.
  பறக்கும் விமானத்தில் இது எக்குத்தப்பாக நடந்து கொட்டைகள் தெறித்து விடவும் கூடும்.
  அவர்களின் கொட்டைகள் தெறிப்பது நிலையை மேலும் சிக்கலான தாக்கும்.
  😉

Leave a Reply to p.joseph பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க