Sunday, September 15, 2024
முகப்புசெய்திசட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல

சட்டீஸ்கர் : சரணடைந்தவரெல்லாம் நக்சலைட்டு அல்ல

-

‘மாவோயிஸ்ட்கள் சரண்’ என்ற தலைப்பின் கீழ் சீரான இடைவெளியில் வருகின்ற பத்திரிகைச் செய்திகளை பார்க்கிறோம். இந்த செய்திகளின் நம்பகத்தன்மையை அறிந்து கொள்ள மனமின்றி ஊடகங்கள் இவற்றுக்கு தகுதியற்ற முக்கியத்துவத்தை அளிக்கின்றன. மாவோயிஸ்ட்கள் சரண் என்பது போலீஸும், அரசும் இணைந்து நடத்தி வருகின்ற நாடகம் என்ற தகவலை நம்ப முடிகிறதா?

‘மாவோயிஸ்ட் ஒருவர் கூட்டாளிகளுடன் சரணடைந்தார்’ என்று 2014-ம் வருடம் ஜூன் மாதத்தில் ஒருவரை ஊடகங்களுக்கு அறிமுகப்படுத்தியது போலீஸ். சட்டிஸ்கரின் கொன்டகன் மாவட்டத்தின் கொன்டெனர் கிராமத்தை சேர்ந்த அவர் பெயர் சிட்டு சோரி. எப்போதோ சில உதவிகளை மாவோயிஸ்ட்களுக்கு செய்திருக்கிறார் சிட்டு சோரி. தமக்காக தன் கண்கள் எதிரே துன்பப்பட்ட மாவோயிஸ்ட்களுக்கு ஒரு நல்ல சமாரியன் ஆற்றுகின்ற பணியை தான் அவர் செய்துள்ளார்.

‘மாவோயிஸ்ட்கள் மூவர்’ ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி  சரணடைந்தார்கள். சுக்மா மாவட்டத்தின் அதுல்புரா கிராமத்தை சேர்ந்தவர்களான பர்சே தேவா, மட்கம் தேவா மற்றும் போடியம் தேவா ஆகியோர்கள் மீது சிறு வழக்குகள் இருந்தன. மாவோயிஸ்ட்கள் என்ற பெயரில் அவர்கள் சரணடைந்தால், அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும் என்று ஆலோசனை வழங்கி ‘மாவோயிஸ்ட் சரண்டைவை’ சாதித்துள்ளது போலீஸ்.

சரணடைந்த நக்சலைட்டுகள்
சுக்மா மாவட்டத்தின் சாம்செட்டி கிராமத்தில் ‘சரணடைந்த நக்சலைட்’டின் அம்மாவும் சகோதரியும். அந்த செய்தி அவர்களுக்கு புதிதாக இருந்தது. (படம் : நன்றி http://indianexpress.com/ )

மாவோயிஸ்ட்களுக்கு உணவு வழங்கி வந்த நாராயண்பூரின் சிங்க்னர் கிராமத்தை சேர்ந்த தயாராம் நாக் செப்டம்பர் 14-ம் தேதி போலீஸ் விருப்பப்படி ஒரு ‘குடிமகனாக’ மாற முதலில் ‘மாவோயிஸ்டாக’ மாறினார். கட்சியில் சிலகாலமே பணியாற்றி விட்டு வெளியேறிய முன்னாள் மாவோயிஸ்ட் சைத்ரம் சலாமை மறுபடியும் மாவோயிஸ்டாக நடிக்க வைத்து சரணடைய செய்துள்ளனர். கைம்மாறாக பெரும் தொகை அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

போலீஸ் வைத்திருக்கும் ஆவணங்களின் படி இவை எதுவுமே மாவோயிஸ்ட்கள் சரண் என்று மார்தட்டுவதற்கு தகுதி பெறாத சம்பவங்கள். ஜூன் 1-ம் தேதியிலிருந்து நவம்பர் மாதம் முடிய பஸ்தரில் 377 மாவோயிஸ்ட்கள் சரணடைந்ததாக செய்திகள் வெளியாயின. போலீஸ் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டதிலும், சரணடைந்த ‘மாவோயிஸ்ட்’களின் கூற்றுகள் படியும் 270 சரணடைதல்கள் போலியானவை; நாடகங்கள் என்று கண்டறியப்பட்டுள்ளன.

இதர 107 மாவோயிஸ்ட்கள் சரண் ஏற்பாடுகளும் போலியானவையாக இருக்க சாத்தியம் உள்ளது. இலங்கையில் சிறைபட்ட ஐந்து மீனவர்களை மீட்க ஆடிய நாடகத்தை விடவும் மோசமான ஆட்டத்தை சட்டிஸ்கரின் பழங்குடியின மக்களிடம் போட்டுள்ளனர் ராஜ்நாத்சிங்கும், ரமண்சிங்கும். ஃபோட்டோஷாப்பில் கற்பனையின் எல்லா சிகரங்களையும் தொட்ட மோடிக்கு மாவோயிஸ்ட்களை சரணடைய வைத்ததிலும் ஒரு சாதனையை ஏற்படுத்திக் கொடுக்கவும் நினைத்துள்ளனர்.

சுக்மா மாவட்டத்தில் டிசம்பர் 2-ம் தேதி மாவோயிஸ்ட்கள் தாக்குதலில் 14 மத்திய ரிசர்வ் படை போலீஸ் கொல்லப்பட்டதற்கு ஒரு வாரத்துக்கு முன்பாகத் தான் 63 மாவோயிஸ்ட்கள் சரணடைந்ததாக கதையளந்தது அரசு. 2012 ஜனவரியிலிருந்து 2014 மே மாதம் வரையிலும் – மத்தியில் மோடி பதவியேற்பதற்கு முன்பாக – 29 மாவோயிஸ்ட்களே பஸ்தரின் ஏழு மாவட்டங்களிலிருந்து மொத்தமாக சரணடைந்துள்ளனர் என்பது ஒப்புநோக்கத்தக்கது.

மாவோயிஸ்ட்கள் அல்லாதோரையும் மாவோயிஸ்ட்களாக கணக்கு காண்பித்து போலி சரணடைதலை ஊக்குவிக்கும் அரசின் நோக்கம் என்ன?

தமது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் நேர்மையின்மையா? இதற்கு மாவோயிஸ்ட்களின் செல்வாக்கு நிறைந்த பஸ்தரின் போலீஸ் ஐ.ஜி. கல்லுரி விடையளிக்கிறார். “இது மாவோயிஸ்ட்களை வெல்ல நாங்கள் கைக்கொள்ளும் புதிய தந்திரம்” என்கிறார். ”பழங்குடி மக்களிடம் அவர்கள் சரணடைந்தால் கிடைக்கும் நன்மைகளை சொல்லி ஈர்ப்பதன் மூலம், மாவோயிஸ்ட்களின் முதல் வரிசை காப்பரண்களை தகர்க்கிறோம்” என்று வெளிப்படையாகப் பேசுகிறார்.

கல்லுரியின் இந்த அறிவிப்பின் படி யார் வேண்டுமானாலும் தன்னை மாவோயிஸ்ட் என்று அறிவித்து விட்டு சரணடைந்து கொள்ளலாம். அவர்கள் பற்றிய செய்திகள் ஊடகங்களில் வெளிவரும். சரணடையும் ஒரு மாவோயிஸ்டுக்கு மத்திய அரசு ஒன்றரை லட்சம் ரூபாயும், மாநில அரசு ஒரு லட்சம் ரூபாயும் உடனடியாக அளிக்கின்றன. இது போக மாதம் நான்காயிரம் ரூபாய் உதவித்தொகை 36 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு தான் மாவோயிஸ்ட் போராளிகளை சபலப்படுத்தும் என்ற நினைப்பில் மனப்பால் குடித்தது போலீஸ்.

எல்லாம் பணத்தால் முடித்து விடலாம் என்றால் அந்த பணம் திருப்பி பூமாராமாய் போலிசை அசைக்காதா? மேலும் இந்தியாவின் எல்லா வகை போலிசுகளும் கொடூர அடக்குமுறையில் மட்டுமல்ல, ஊழல் சுருட்டலிலும் பெயர் பெற்றவர்கள்தானே? அரசு அறிவித்த பணம் சரணடைந்தவர்களுக்கு சென்று சேர்வதில்லை எனவும், போலீஸ் அந்தப் பணத்தை கொள்ளையடிக்கிறது என்றும் மாவோயிஸ்ட்களின் தண்டகாரண்யா மண்டல செய்தி தொடர்பாளர் ஒரு அறிக்கையில் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஆக இந்த சரணடைவு நாடகம் போலீசு பெருச்சாளிகளுக்கு பெரும் பணத்தை சுருட்டும் வாய்ப்பை வழங்குகிறது. கூடவே தில்லியில் இருக்கும் எஜமானர்களுக்கு ஏதோ நக்சலைட்டுகளை ஒழித்துவிட்டோமென சீன் காட்டவும் பயன்படுகிறது.

கம்யூனிச போராளிகளை ஒழிக்க எத்தகைய கீழ்மையான முயற்சியிலும் இந்த அரசு வெட்கமின்றி இறங்கும் என்பதற்கு இந்த போலி சரணடைதல்கள் ஒரு உதாரணம். இது போலி ஜனநாயகம் என்பதை போலி மோதல் கொலைகள் மட்டும் நிரூபிக்கவில்லை; போலி சரணடைதல்களும் தான் உரைக்கின்றன.

– சம்புகன்

மேலும் படிக்க :

  1. நக்சல் _______ சரணடைய வைப்பது, இந்திய ராணுவத்துக்கு ஒன்றும் சவாலான விசயம் இல்லை… காட்டில் எவ்வளவோ மிருங்கள் உள்ளது போல, இந்த சோம்பேரி நக்சல்பாரி கூட்டமும் ஒன்று…இது ஒரு அழிந்து வரும் இனம்…. இந்திய ராணுவத்தின் விளையாட்டு பொம்மைதான் இந்த நக்சல் கும்பல்…. இவங்களுக்கு கொடி பிடிக்க வினவு மாதிரி சோத்துக்கு செத்தவன் இந்தியா முழுவது இருக்கானுங்க… இவனுங்களால ஒரு மசுரும் புடுங்க முடியாது — இந்தியன்.

    • இவ்வளவு வெவரமா பேசற நீங்க,மக்களுக்காக எதையாச்சும் புடுங்கலாமே?

  2. இவ்வளவு வெவரமா நீட்டி முழக்கற நீங்க, மக்களுக்காக எதையாச்சும் புடுங்கலாம்ல…

  3. //சோத்துக்கு செத்தவன் // this is the state of Most of Indian people now. Lord Labukku ‘Indian’ shows his high class arrogance.

  4. //இந்தியன்//

    கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசன…?

    சோத்துக்கு செத்தவன் இல்லை , சுயமரியாதை,தன்மானம்,நாட்டுப்பற்று, உள்ளவர்கள்…

    மக்களுக்காக, நாட்டுக்குகாக சமதர்ம சமூகத்தை உருவாக்க நாங்கள் செய்த தியாகம்…!

    உங்களை போன்ற எட்டப்பர்களுக்கு எங்க தெரியும்?

    ஆளும்வர்கத்திற்க்கு செம்பு தூக்குபவர்களுக்கு……………..

  5. யாரு சோம்பேறி இணையதளத்தில் வாய்ஜாலம் காட்டும் நீங்களா? தன் நாட்டை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற நினைக்கும் அவர்களா?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க