privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

TCS டிசிஎஸ் : ஒரு இன்பக் கனவின் துன்பக் கதை !

-

35 வயதில் வாழ்க்கையை திரும்ப ஆரம்பிக்க முடியுமா?

14 வருடங்களாக தடுப்பலைகளில் எதிர் நீச்சல் போட்டு, அழுது, சிரித்து, சோர்ந்து போய், இரவு முழுதும் கண் விழித்து வேலை பார்த்தது எல்லாம் இப்போது அர்த்தமில்லாமல் ஆகியிருக்கிறது.

இனிமேல் புதிதாக தொடங்க வேண்டுமாம். இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடி, அங்கும் படிப்படியாக உள்ளே பொருந்தி போய், நமது திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்ய வேண்டுமாம். இது சாத்தியமா?

டி.சி.எஸ் ஆட்குறைப்பு
ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க

இப்படி ஒரு நாள் வரும்னு நினைச்சே பார்த்ததில்ல. ஒரு லெட்டரை கையில கொடுத்து, செட்டில்மென்டையும் கொடுத்து, ஆல் த பெஸ்ட் வேற இடத்தில வேலையப் பாருங்கன்னு அனுப்பிட்டாங்க. “இது மேனேஜ்மென்ட் முடிவு, நான் ஒண்ணும் செய்ய முடியாது. பாருங்க, நானே மன உளைச்சலில் இருக்கிறேன்” ன்னு எச்.ஆர் முறிச்சி சொல்றாரு. எத்தனையோ கடிதங்களில், நீங்க இல்லாம இதை நாம சாதிச்சிருக்க முடியாதுன்னு இவங்க சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைதானா!

யார்கிட்ட போய் சொல்றது, அடுத்து என்ன என்று தெரியவில்லை.

பக்கத்து இருக்கைகளில் இருக்கறவங்க மனசில, நமக்கும் இது போல நடந்திடுமோன்னு ஒரு பயம்; இது வரை நடக்கலைன்னு ஒரு நிம்மதி; நம்மைப் பார்த்து அழவா, சிரிக்கவான்னு ஒரு குழப்பம்; வாழ்த்து சொல்லி, ஒரு செண்ட் ஆஃப் கொடுத்து அனுப்பிடலாம்னு முயற்சிக்கிறாங்க. அவங்க மேல போட்டியோ, பொறாமையோ எனக்கு இல்லை.

எனக்கு ஏன் இப்படி நடந்தது? கல்லூரியில் ஆரம்பிச்சி இந்த இடத்தை வந்தடைய அப்பப்பா எவ்வளவு உழைப்பு, போட்டிகள். அத்தனையும் ஒரு நொடியில் நொறுங்கி விட்டது.

டி.சி.எஸ் – இந்தப் பெயரை நான் கேள்விப்பட்டது கல்லூரி முதலாம் ஆண்டில். எங்கள் மாவட்டத்திலேயே மிகவும் பிரபலமானது எங்கள் கல்லூரிதான். இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள். டி.சி.எஸ் என்றால் டாடா கன்சல்டன்சி சர்வீஸ் என்பதையும் அங்குதான் தெரிந்துகொண்டேன்.

டி.சி.எஸ் ராக்ஸ்
இங்கு படித்தால் அடுத்து நேரே டி.சி.எஸ்தான் என்று விளம்பரம் செய்திருந்தார்கள்.

பலரின் ரெக்கமன்டேசனுக்கு பிறகு பாங்க் மேனேஜர் கல்விக்கடனுக்கு ஒப்புதலளிக்க, கடனுடன் ஆரம்பித்த கல்லூரி வாழ்க்கை விரைவாக மூன்றாம் ஆண்டை அடைந்தது. அடுத்து காம்பஸ் இன்டர்வியு.

அந்த வயசுக்கே உண்டான சுய சந்தேகம், நாம உண்மையிலேயே வொர்த்துதானா, நம்மையும் ஒரு ஆளா மதிப்பாங்களான்னு கேள்விகள். அதை நிரூபிச்சிக்க ஆட்ட சவடால்கள், போட்டிகள், ஓட்டங்கள், வேகங்கள், தேர்வுகளில் மதிப்பெண் கூடுதல்/குறைவு என்று ஓடிக் கொண்டிருந்தாலும், ஒரு வேலை என்பதுதான் அல்டிமேட் அங்கீகாரம் என்று தோன்றியது.

டி.சி.எஸ் தான் எங்கள் கல்லூரியில் அதிக நபர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனம். அதில் அடித்து பிடித்து எப்படியாவது இடம்பிடித்து விடவேண்டும். மூன்றாம் ஆண்டு ஆரம்பித்ததில் இருந்தே சில ஆயிரங்கள் செலவு செய்து போட்டித் தேர்வுகளுக்கான பல புத்தகங்களை வாங்கி குவித்திருந்தேன்.

எங்களுக்கு முன்னர் டி.சி.எஸ்-ல் வேலைக்கு சேர்ந்து, இப்பொழுது வெளியேற்றப்படவிருக்கும் இருக்கும் சீனியர்கள் அவ்வப்போது கல்லூரிக்கு வருவார்கள்.

“தம்பி எப்படியாவது கேம்பஸ்ல செலக்டாயிருங்கடா. அவ்வளவு தான், லைஃப் செட்டிலாகிரும். நம்ம சீனியர் கலை தெரியும்ல. இப்ப யு.எஸ் போயிட்டாரு. “

“அப்டிடியூட்க்கு இப்பவே பிரிப்பேர் பண்ண ஆரம்பிச்சிருங்க. ஆர்.எஸ்.அகர்வால்னு ஒரு புக். அதை வாங்கிக்கோ. அதிலருந்துதான் கேப்பான்”

“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

எங்களின் ‘வளர்ச்சி’க்கு அவர்களால் முடிந்த அளவு வழிகாட்டினார்கள்.

டி.சி.எஸ் சென்னை
“பர்ஸ்ட் த்ரீ மன்த்ஸ் திருவனந்தபுரத்தில ட்ரெயினிங் போடுவாங்கடா. அப்புறம் சென்னை இல்ல பெங்களூர்ல போடுவாங்க. எப்படியும் சென்னைக்கு வந்திரலாம்”.

அப்பாவுக்கோ வேற கவலை – “எல கடைல வச்சி அந்த மேனஜரை பாத்தேன். மூணாவது வருசத்துல ஏதோ இன்டர்வியூ நடக்குமாம்ல. நடந்துச்சானு கேட்டான்?”. இப்படித்தான் அப்பாவை ஏற்றிவிடுவார் அந்த பேங்க் மேனேஜர். மூன்றாண்டுகளில் பேங்க் லோனும் என்னுடன் சேர்ந்து வளர்ந்திருந்தது.

“நம்ம தென்காசி சித்தப்பா பையன் இப்படித்தான் …காம்ப்ஸ்.. அமெரிக்கா. எப்பிடியாவது பல்லக் கடிச்சிட்டு ஒரு ரெண்டு வருஷம் நல்லா பிரிப்பேர் பண்ணிட்டா லைஃப்ல செட்டில் ஆகிறலாம்“ என பல சக்சஸ் ஸ்டோரிகளை எடுத்துவிடுவார்கள் சொந்தக்கார ஷிவ்-கேராக்கள். “உங்க பையன் கையில தான் எல்லாம் இருக்கு” என்று தான் அநேகமாக முடிப்பார்கள். அந்த சமய்ங்களில் எல்லாம், பொருள் தெரியாத பார்வையில் என்னை பார்ப்பார் அப்பா.

காம்பஸ் இன்டர்வியூவில் வேலை கிடைத்தால் தான் வாழ்க்கை. அதை இழந்தால் அவ்வளவுதான் என்ற நிலைமை. வேலை இல்லை என்பதோடு எதற்கும் லாயக்கில்லாதவன் என்ற முத்திரையும் ஊரார், உறவினர்கள் மத்தியில் குத்தப்படும். கல்விக்கடன் வேறு. வெளிய போய் ஃபார்ம் நிரப்பி அனுப்பி, தெருத்தெருவா சுத்தி கம்பெனி கம்பெனியா ஏறி இறங்கணுமான்னு ஒரு பதட்டம்.

கல்விக் கடனை அடைக்க வேண்டும், வீட்டை இடிச்சிட்டு பெரிய வீடா கட்டணும்; அக்கா திருமணம்; ஊர் உறவு மத்தியில எப்படியும் ஒரு ஆளா ஆகவேண்டும்; இதை விட எனக்கு பெரிய ஆசைகள் அப்போது இருக்கவில்லை. இதை நிறைவேற்ற இருக்கும் ஒரே வழி இந்த கேம்பஸ் இன்டர்வியூ; அதுதரப்போகும் ஐ.டி துறை வாழ்க்கை.

அதைப்பெற கடினமாக உழைத்தேன். “டி.சி.எஸ் இன்டர்வியூ கொஸ்டீன்ஸ்” என்று கூகுளில் தேடினால் எத்தனை பக்கம் கிடைக்கும்.அதில் என்னென்ன்ன கேள்விகள் இருக்கும் என்பது வரை எனக்கு அப்போது அத்துப்படியாகியிருந்தது.

எனது முன்னேற்றத்துதாக உழைப்பதாக நினைத்துக்கொண்டு என்னை அறியாமலேயே டி.சி.எஸ்சின் தேவைக்கு உகந்த புராடக்ட்டாக (Product – செய்பொருள்) நான் மாறிக்கொண்டிருந்தேன். அதற்குத்தான் அத்தனை செலவு, அத்தனை முயற்சி.

”யூ ஆர் எ புராடக்ட். யூ ஹவ் டூ செல் யுவர்செல்ஃ” என்று பின்னாட்களில் இதே நிறுவனத்தில் எனக்கு வகுப்பெடுத்தார்கள். ஆனால் அவர்கள் சொன்னது “யூஸ்&த்ரோ புராடக்ட்” (பயன்படுத்தி விட்டு எறியும் பொருள்) என்பதை அவர்கள் மறைத்து விட்டார்கள். எனக்கும் அப்போது தெரிந்திருக்கவில்லை.

இங்கிலீஷ் மீடியம்
இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது.

அடுத்த பிரச்சனை ஆங்கிலம். அப்பா, இங்கிலீஷ் மீடியம்னு பணத்த கொட்டி படிக்க வெச்சாலும் இங்கீலிஸ்ல பேசணும்னு வாயத் தொறந்தா காத்துதான் வந்து கொண்டிருந்தது. அதை சரிசெய்ய சில “ஷிவ்-கேரா”க்களின் ஆலோசனைப்படி தினமும் காலை மாலை மூன்று டோஸ் இந்து பேப்பரை எனக்குள் திணித்துக்கொண்டிருந்தேன். கூடுதலாக “மை நேம் இஸ்….” செல்ஃப் இன்ட்ரோவை மனப்பாடம் செய்துவிட்டிருந்தேன்.

கேம்பஸ் இண்டர்வியூக்கான அந்த நாளும் வந்தது. இரண்டாம் ஆண்டில் படித்த எலெக்ட்ரானிக்ஸ் பாடத்திலிருந்து ஒரு அடிப்படைக் கேள்வி. தேர்வு எழுதியதோடு அதை மறந்து விட்டிருந்தேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியாகியிருந்த புதிய தொழில்நுட்பம் பற்றிய ஒரு கேள்வி என அடுக்கடுக்கான பல கேள்விகள்.

சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. இண்டர்வியூ நடந்த ஏ.சி அறைக்குள்ளும் அவ்வளவு வேர்த்திருக்கிறது, டி.சி.எஸ் வேலை இல்லை என்று ஆகி விட்டது! சர்வாங்கமும் தளர்ந்து சோர்வாக வெளியில் வந்தேன். யாரிடமும் பேசவே பிடிக்கவில்லை. நேராக வீட்டுக்கு வந்து சேர்ந்தேன். “சில சமயம் ஸ்ட்ரெஸ் இண்டர்வியூன்னு வைப்பாங்க, அதுமாதிரி கேட்டிருப்பாங்க. பரவாயில்ல விடு, வேற கம்பெனில கிடைச்சிரும்”னு நண்பர்கள் ஆறுதல் சொன்னாங்க.

இரண்டு நாட்களில் முடிவை அறிவித்திருந்தார்கள். 50 பேர் பட்டியலில் என் பெயருமிருந்தது. அதல பாதாளத்திலிருந்து சிகரத்தில் ஏறி விட்டது போல இருந்தது. ஜிவ்வென்று பறந்தது மனம். கனவில் நடப்பது போல அந்த மாலை கழிந்தது. வீட்டுக்கு வந்து நல்ல சேதியைச் சொல்லி விட்டு செட்டில் ஆனேன். டாடாவின் கரங்களுக்குள் விழுந்து விட்டேன். இனிமேல் நமக்கு விடிவுகாலம்தான் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே வந்திருக்கிறேன். மீண்டும் வேலை தேட வேண்டும். மீண்டும் இன்டர்வியூ; வங்கிக்கடன்; கல்விக்கு பதிலாக வீடு, கார் கடன். ஆனால் இப்பொழுது 21 வயது இளைஞன் அல்ல நான். என் இளமையை நிறுவனத்தின் வளர்ச்சிக்காகவே செலவிட்டு தளர்ந்திருக்கிறேன்.

இருண்ட வாழ்க்கை
ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

இனி கல்லூரி நாட்களைப்போல என்னால் மாற முடியாது. அப்படி என்னை தயார்படுத்திக் கொண்டாலும் என் முன் உள்ள வாய்ப்புகள் மிகக்குறைவு.

பணிநீக்கம் செய்யப்பட்ட எங்களுக்கு வேறு நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்பில்லை. ஓரிருவருக்கு கிடைத்தாலும் அதற்கு போட்டி அதிகமாக இருக்கும். வேறு நிறுவனங்களிலும் வேலைநீக்க நடைமுறையை தொடர்ந்தால் எம்மை போன்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இன்னும் போட்டி அதிகரிக்கும். என்ன செய்வது என்று குழப்பமாக இருக்கிறது.

பள்ளிமுடிந்து வரும் குழந்தையிடம் என்ன சொல்வது? நாளை அலுவலகத்திற்கு செல்லவில்லையா என்று கேட்டால் என்ன பதில் சொல்வது? ஏதாவது சொல்லி சமாளிக்கலாம். நாளை மறுநாள்? அதற்கு அடுத்த நாள்?. வாழ்க்கையே இருண்டது போல் இருக்கிறது.

பேரண்ட் டீச்சர் மீட்டிங்-ன் போது நமக்கு மரியாதை கொடுப்பார்களா? ஃபாதர் நேம் என்ன என்ற கேள்விக்கு அடுத்த வழமையான கேள்வியான “வாட் இஸ் யூவர் ஃபாதர்?” என்று கேட்டால் மற்ற குழந்தைகளின் முன்னால் என் குழந்தை கஷ்டப்பட்டுவிடுவானோ என்று எனக்கு கவலையாக இருக்கிறது. முன்னர் எனக்கும் இது நேர்ந்திருக்கிறது. நிறுவனத்திற்கு வந்த புதிதில். அப்பா தள்ளுவண்டி கடை வைத்திருக்கிறார் என்று சொல்ல கூச்சப்பட்டு “பிசினஸ்” செய்கிறார் என்று பொதுவாக சொல்லியிருக்கிறேன்.
இதென்ன அபத்தம்? வேலையே இல்லை என்றான பிறகு தற்போதைய பள்ளியில் படிக்கவைக்க முடியுமா? அவர்கள் கேட்கும் பணத்தை கொடுக்கமுடியுமா? என்பதுதானே கவலைப்பட வேண்டிய விசயம்.

நான் தவறு செய்துவிட்டேன். வேலை நீக்கம் செய்யும்போதே நிறுவனத்துடன் எதிர்த்து போராடியிருக்க வேண்டும். போராடினால் வேலை கிடைத்திருக்குமா? தெரியவில்லை. ஆனால் இப்பொழுது போல வேலைக்கான வாய்ப்பு முழுமையாக அடைக்கப்பட்டிருக்காது என்பது நிச்சயம். இப்போதைய மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொடரும்……

(ஐ.டி துறை நண்பர்களின் உண்மைக்கதைகள் இங்கே இடம்பெறுகின்றன)

– ரவி.

தொழிற்சங்கம்
மன உழைச்சலுக்கு பதிலாக போராட்ட உணர்வு இருந்திருக்கும். என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொண்டிருப்பேன்.

தொழிற்சங்கமாய் திரள்வோம்!
லே ஆஃப் எனும் கார்ப்பரேட் ஒடுக்குமுறையை முறியடிப்போம்!

பேஸ்புக் : https://www.facebook.com/VinavuCombatsLayoff
தொலைபேசி : 9003198576
மின்னஞ்சல் : combatlayoff@gmail.com

– வினவு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, சென்னை

  1. இந்த கட்டுரையை படிக்கும் போது என்னுடைய பழையநினைவுகள் திரும்புகிறது அந்த கொத்தடிமை வாழ்க்கை முறை.பிபிஒ கால்சென்டர் சாப்ட்வேர் கம்பனிகளில் வேலையை பெருமையாக நினைக்கும் இளய தலைமுறைகளே சென்னையில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இதேநிலைதான்.
    அமெரிக்காவுக்கு வேலை செய்யதான் உங்களை பியி பிடெக் பிஎஸ்சி என்ற பெயரில் அரசாங்கமே பயிற்றுவிக்கிறது.

    கரும்பு ஆலையில் எப்படி கரும்பில் உள்ள சாற்றை மட்டும் எடுத்து கொண்டு சக்கையை வெளியேற்றுகிறதோ அதே போல்தான் வெறும் சக்கையைபோல வீசி எறிவார்கள்
    யாரிடம் சொல்ல எதை பற்றி சொல்ல அடுத்தவேலை கிடைகும் என்ற நம்பிக்கையில் தேடுவோம் அதே வேலையை….

    ஒரு நாடு உற்பத்தி சார்ந்த விவசாயம் போன்ற துறைகளில் வளர்ச்சி அடைந்தால்தான் முன்னேற்ற பாதையில் செல்ல முடியும். சீனாவில் உற்ப்பத்தி துறையில் தனது நாட்டு தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டு பின்பு உலகமேங்கும் ஏற்றுமதி செய்கிறது, ஆனால் இந்தியாவில் அதற்க்கு தலைகீழாக நடக்கிறது இருக்கிற இயற்கை வளங்களையெல்லம் வரைமுறையின்றி சூறையாடிக்கொள்ள அமெரிக்க கம்பனிகளுக்காக ஏலம் விடப்படுகிறது.

    இந்தியாவில் சேவைத்துறையை பொருத்த வரையில் புராஜக்ட் டைம் வரைதான் இவர்களுக்கு வேலை இந்த புராஜக்ட் ஒர்கை தருவது அமெரிக்க போன்ற பன்னாட்டு நிறுவனங்கள்
    அந்த புராஜக்ட் ஒர்கை செய்து தருவது இந்தியா போன்ற முதலாளித்துவ நாடுகளில்
    இதில் யார் அதிக பயன் பெறுவார்கள் என்று உங்களுக்கே தெரியும்…
    ஆகவே ஏட்டு கல்வி படித்தது போதும் தோழனே நாட்டுக்கல்வி படிக்கவா ..!
    ஒன்றாக கைகோற்று வாருங்களொரு புதிய ஜனநாயகத்தை படைப்போம்…

  2. படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் கார்பரேட் உலகத்தில் மூழ்கி போய் விடுகிறார்கள்.
    கூட இருப்பவர்களுக்கும் மேற்கொண்டு எதுவும் தெரிவது இல்லை . வீடு வாங்கினாயா ? கார் அப்கிரேடு செஞ்சியா ? கிரிகெட் பார்த்தியா ? வீக் எண்டு என்ன ப்ளான் என்று வாழ்க்கை போய்விடுகிறது

    நசீம் நிகோலஸ் தலேப் , அவருடைய பிளாக் சுவான் புத்தகத்தில் டர்கி என்னும் பறவை கதை கூறுவார். டர்கி களுக்கு போசாக்கான உணவு அளிக்கப்படும் , மருத்துவர் குறையில்லாமல் கவனிப்பார் ,சுத்தம் சுகாதாரம் பேணப்படும் . அப்போது டர்கி , “அடடா மனிதர்கள் மிகவும் நல்லவர்கள் , நம்மை நன்றாக கவனித்து கொள்கிறார்கள் ” என்று நினது கொள்ளுமாம்.பக்கத்துக்கு தர்கியிடம் கேட்டால் அதுவும் “ஆமாம் நான் பார்த்த வரையில் மனிதர்கள் நல்லவர்கள் தான் ” என்று கூறுமாம் .இரண்டிற்கும் தெரியாது நாளை தேங்க்ஸ் கிவிங் டே ( டர்கி உணவு நாள் ) எனபது!

  3. வெளிநாடுகளில் வேலையை விட்டு அனுப்பும் போது , பணியாற்றிய ஒவ்வொரு வருடத்திற்கும் ஒரு மாதம் என்கின்ற ரீதியில் பத்து வருட பணியாற்றியவர்களுக்கு ஒரு வருட சம்பளம் தரப்படும் .

    அதே போல அடுத்த வேலை கிடிக்கும் வரை அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் . அதிகம் சம்பாதிக்கும் போது வரி வாங்கும் அரசாங்கம் , இந்த உதவியை செய்யத்தான் வேண்டும்

  4. எல்லா IT பசங்களும் லீவ் முடிஞ்சுதான் கருத்து சொல்லுவாங்க போல இருக்கே. TCS பசங்க பாவம்

  5. தற்போது வேலை முடிக்கப் பட்டவர்களுக்கு மீண்டும் ஒரு நல்ல வேலை கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.
    இந்தப் பதிவு அதற்காக அல்ல.
    பன்னாட்டு நிறுவங்கள் வேலை உறுதி அளிப்பதில்லை. அங்கே வேலைக்குச் சேரும்போதே அது தெரிந்த விஷயம்தான். நாம்தான் முன்னேற்பாடாக இருக்க வேண்டும். எனக்கு இது எத்தனையோ முறைகள் நிகழ்ந்திருக்கிறது. பெரிய பாதிப்பு ஏற்பட்டதில்லை. செலவுகளை பெரிதும் சுருக்கியே செய்வேன். ‘கையில் காசு; வாயில் தோசை’ என்னும் கோட்பாடு, இன்று வரை. வீடு கட்ட மட்டும்தான் கடன்.
    33 வயது இளைஜர் எதிர்காலமே இல்லை என்று கூறுவதைக் கேட்கச் சங்கடமாக உள்ளது. எனக்கு கடைசியாக வேலை இழப்பு ஏற்படும்போது எனக்கு வயது 50. ‘இந்த வேலையை இனிச் செய்வதில்லை’ என்று சூளுரைத்துவிட்டு மீண்டும் படிக்கச் சென்றேன். மூன்று வருடம் வேறு துறையில் இளங்கலை பட்டம் பெற்று இப்போது வேளையில் இருக்கிறேன். ( படிக்கும்போது பகுதி நேர வேலை பார்த்து நன்றாகவே சம்பாதித்தேன்).
    நம் எதிர் காலம் நம் கையில்தான். ( ஒரு முறை வருமானம் காப்பீடு செய்து கொண்டு வேலை செய்தேன்; வேலையும் போனது, காப்பீட்டு பணமும் கிடைத்தது).

    • உங்கள போல இவ்வளவு புத்திசாலித்தனம் நிச்சயமா இப்போ யாருக்கும் இல்லைங்கறது உண்மைதான். ஆனா இன்னொரு உண்மையும் இருக்கு, இப்போ எந்தக் கம்பெனிக் காரனும் 30,32 வயசு ஆளுங்கள வேலைக்கு எடுத்து, 3 வேளை சாப்பாடு, வீட்டு வாடகை கட்டற அளவுக்கும் கூட சம்பளம் தரதில்ல. கார்ப்பரேட் சாமியார்கள், மூளை வெளியே தெரிவதைப் போல பேசித்திரிந்தவர்கள் சொன்ன பொற்காலம் காலாவதியாகிவிட்டது. மிச்சம் மீதியும் கைக்குழந்தையின் கழிவுபோல வழித்து வீசப்பட்டு வருகிறது. பூனைகள் கண்களைத் திறந்திருக்கும் போதே, காலம் இருண்டு வருகிறது. இனியும் கண்ணை மூடிக்கொண்டு கனவு காணுவதில் அர்த்தம் இருக்க முடியுமா?

    • நல்ல கருத்து.

      > 35 வயதில் வாழ்க்கையை திரும்ப ஆரம்பிக்க முடியுமா?

      ஏன் முடியாது?

      > இன்னொரு நிறுவனத்தில் வேலை தேடி, அங்கும் படிப்படியாக உள்ளே பொருந்தி போய், நமது திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்க்கையை மறு கட்டமைப்பு செய்ய வேண்டுமாம். இது சாத்தியமா?

      சொந்த தொழில் செய்யக்கூடாதா?

  6. டாடாவின் அத்துணை பொருட்களின் பட்டியலை தயார் செய்யுங்கள் நண்பர்களே! டாடா உப்பில் ஆரம்பித்து டாடா தங்கம் வரை, எல்லாவற்றையும் புறக்கணிக்க சொல்லி பரப்புரை செய்யவேண்டும்.அது முகப்பக்கமாகவோ,ட்வீட்டாகவோ,தனிப்பட்ட மெயிலாகவோ, குறுந்தகவலாகவோ,வாட்ஸ் அப் செய்தியாகவோ,சிறு வெளியீடாகவோ இருக்கட்டும்.நமது எல்லா நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் டாடாவின் மற்ற எல்லா பொருட்களையும் புறக்கணிப்பதற்கான நியாயத்தை விளக்கும் வாசகங்களை எளிமையான முறையில் உருவாக்குங்கள்,பரப்புங்கள்.வினவே அத்தகைய முயற்சிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தலாம்.

  7. புறக்கணிப்பது என்பது ஒரு வழி.
    அதற்கு மாற்றாக இன்னொரு பொருளை மக்களுக்கு வழங்குவது மற்றொரு ஆக்கபூர்வமான வழி.
    கூட்டுறவு முறையில், அல்லது சிறு தொழில், குடிசை தொழில் முறையில் தரமான பொருள்களை மலிவான விலையில் மக்களுக்கு வழங்கினால் மக்களுக்கும் ஒரு மாற்று கிடைக்கும்.

    பெரிய முதலாளிகளை உருவாக்குவதற்கு பதில் ஒவ்வொரு மக்களும் சிறிய வகையில் மலிவான, அதே சமயம் தரமான பொருட்களை உருவாக்கும் தொழில் திறனை நாம் மக்களிடம் வளர்க்க வேண்டும்.

    இதே போன்று பெப்சி, கோக் போன்ற உடல்நலனை கெடுக்கும் பொருட்களுக்கு மாற்றாக தரமான, உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் மாற்று திரவங்களை உருவாக்க வேண்டும். அதற்கு பொதுமக்கள் ஆதரவு கிடைக்க வேண்டும்.

    மேக் in இந்தியா என்பது வெறும் சொற்றொடராக இல்லாமல் உண்மையிலேயே எளிய மக்கள் உருவாக்கும் பொருட்களுக்கு மக்கள் பேராதரவு கொடுக்க வேண்டும்.

  8. எல்லா முதலாளிகளும் ஒரு தொழில் துவங்கும் பொழுதே, எப்படியாவது சங்கம் கட்டுவதை அனுமதிக்க கூடாது என்று தான் கவனமாக தன் அடியை எடுத்து வைக்கிறார்கள். அவர்கள் போட்டுக்கொடுத்த பாதையிலே ஐ.டி. தொழிலாளர்களும் பயணிக்கிறார்கள். இறுதியில் சக்கையாக்கி துப்பும் பொழுது, மனம் வருந்துகிறோம். ஒன்றிணைந்து போராடும் பொழுது தான், இதற்கு தீர்வு. இதற்கு குறுக்குவழிகள் எதுவுமில்லை.

  9. திருச்செங்கோடுகாரர்களால் சர்சைக்கு உரியதாக்கபட்ட மாதொருபாகன் நாவல் ரத்தன் டாடாவின் அரக்கட்டளையிடம் இருந்து நல்கை [நன்கொடை ] பெற்று 2010ஆம் ஆண்டு கள ஆய்வு செய்ய பட்டு பெருமாள் முருகன் அவர்களால் எழுதப்பட்டு ,காலச்சுவடு பதிப்பகத்தால் பதிக்கப்பட்டது !

  10. Executives யூனியன் அமைக்க முடியாது; அமைத்தால் செல்லாது என்கிறார்களே , உண்மையா?

    நன்றி!

    சினிமா விரும்பி

  11. டாடாவின் உற்பத்தி பொருட்கள் மட்டும்மல்ல ரிலையன்ஸ்,பிர்லா போன்ற முதலாளிகள்தான் நம் நாட்டின் தலை எழுத்தை மாற்றி அமைகிறார்கள் அப்படி பிரமர் ஆனவ்ர் தான் மோடி..!

    முதலாளிகளுக்கு அடியாள் வேலைக்கு பெயர்தான் முதல்வர், பிரதமர், ஜனாதிபதி, ஏழைகளின் ரத்ததை ஸ்டரா போட்டு உரிஞ்சுகிறார்கள் முதலாளிகள்..!

    சீனாவில் ஷாங்காய் நகரில் சுமார் 35 பேர்(பெண்கள்,மாணவர்கள்) கூட்ட நெரிசலில் சிக்கி
    இறந்துள்ளார்கள். காரணம் யாரோ ஒருவர் மாடியிலிருந்து அமெரிக்க டாலர்களை வீசி எரிந்துள்ளார்கள் அதை பொறுக்க மாடிபடியில் ஏறும்போது கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் மாணவர்கள் உட்பட சுமார் 35 பேர் பலியாகியுள்ளார்கள்.

    இலவசத்திற்க்காக தன்மானத்தையும் சுயமரியாதயும் இழந்துகொண்டுருக்கிறார்கள் மக்கள், மக்களின் வாழ்வியல் தேவைகளை பூற்த்தி செய்ய முடியாத அவல நிலைக்கு தள்ளப்பட்டுருக்கிறார்கள், அவர்களின் தேவைகளையும் உரிமைகளையும் அரசாங்கமே பிடுங்கிவிட்டு ஓட்டுக்காக மட்டும் அவர்களை பழக்க படுத்தி வத்திருக்கிறார்கள் என்றால் இந்த முதலாளித்துவ அரசாங்கம் எவ்வளவு மோசமானது என்று உணர முடிகிறது…

  12. What did Unions Achieve? Please think it over.

    When Unions cannot help achieve the 8000 worksers ( they are poor workers unless these TCS guys who i am sure would have made much much much much much much much much much much much much much much much muhc more than those workers. Those workers were only 28-29 years.

    What did unions do to them .. All the 8000 were part of union. Apparently another company in that area is also saying “bebebe” “bebebebebe” to workers. Sure, unions will make hulla gulla and finally sacrifice all employees.

    Unions helped/helps/will help only the Union Leaders and not the affected parties.

    Moderator : Hope this will be published without any bias as i am just tyring to tell another view of the Unionism and its helplessness

    • What did Unions Achieve?

      From 8 hrs work to all benifits which we are enjoing today are achivements of workers union only. Without union even there is no self respect for workres.

      IF we have union then there should be no unethical layoff like this.

      Why dont you ask coporate companies to dissolve their unions like NASSCOM,CII, FICCI?

      • 1. Unions in india can Never ever take credit for the 8hours of work. Unions work like Unions in abroad and they can claim all honours for this.
        2, In India, Union works for Union Leaders and their family.
        3. The ONLY place where UNIONISM worked in India is with the state government who for petty electoral benefit gives in to their demands and not because of anything else. ( A person like Jayalalitha can give a hard time to Unions….)

        Coming to the point

        1. What is unethichal in this Layoff? It is a Knowledge industry where if you cannot prove then quit. You should ask the question how did the other 3 Lac people in that company is surviving.
        2. How many people has kept their servant maid who has turned old and given her penison?. So even there you chukoff people once they cannot do their duty they are “laid off” right?
        Why did UNION didnt come to their rescue. Why in Tamilnadu there is no union for Unorganized workers. Answer is NO MONEY there. Unions will agitate against MNCs because MONEY, THUDDU, KASU, DUBBU, RUPEE, RUPYA, is there.

        “aatukuttikaka ONai azhutha Kathai” for some reasons this is coming to the mind.

        • First of all, you supports the layoff and against working class. Dont shed your corocodile tears towards working class.

          /2, In India, Union works for Union Leaders and their family. /

          So you don’t have any problem with the genuine unions like NDLF right?

          / 1. What is unethichal in this Layoff? It is a Knowledge industry where if you cannot prove then quit. You should ask the question how did the other 3 Lac people in that company is surviving./

          What you mean by proving? Yesterday TCS gave “A” band now to them now throwing them away.
          It’s not about skilled or unskilled it’s about profit greed of corporates.

          /How many people has kept their servant maid who has turned old and given her penison?. So even there you chukoff people once they cannot do their duty they are “laid off” right?/

          It also wrong. we need to fight for them also.

          • I am not shedding crocodile tears for anyone. Once you are in the world One has to defend himself/herself is my philosophy. May be my father taught me that and i kept it to myself. How much “corporate philosophy” he knew i dont know. But i am glad my father taught me that and made me self reliant. Nevertheless i am still waiting for answeres. ( may be to shed more crocodile tears????!!). What was UNION doing in Nokia? What Was UNION doing in Foxconn? No answers…..

            I just asked a question “once if it is an MNC all are ready to fight and if not an MNC just a mere statement “it is also wrong. We need to fight”. TCS came yesterday. Servant maid issue are there for years Where was Mr. Ramesh?. May be happily proving/arguing there are genuie organizations like NDLF??? May be happily proving UNIONISM is great!!!.
            There are many people to do this. Or as i said before it is because of “Money, Panam, Thuddu, Dubbu, Rupees, Rupiya”…

            Again, of the 3 Lacs why only 25000? Question that. Try to reason out.

            Nature taught me (or anyone)
            1. Kalai eduppathu iyarkai… Nel valara Kali eduthal avasiyam
            2. Survival of the fittest.

            It is fit for all… Be the fit among all. Equip yourself.. Unfortunate neither the parents, nor the teachers teach this.

            • So you don’t have any problem with nokia and it’s tax evasion. And it’s exploitation; But when employees fight for wages and jobsecurity then you have problen. Down with your corporate idealogy.

              /once if it is an MNC all are ready to fight and if not an MNC just a mere statement/

              Recently Tranport Corporation workers union protested for wage increase.May be i am uneducated but I am sure that TransportCorporation is not a MNC. May be you don’t have enough exposure in real world. People from all walks of life have unions. Right from loadman, sweepers to corporate MNC walas have their own unions.

              MNCs are not allowing to enjoy our fundamental right to organize or unionize.

              /1. Kalai eduppathu iyarkai… Nel valara Kali eduthal avasiyam
              2. Survival of the fittest./

              Who has authorize to decide which one is kalai and which one is nel.do corporates? but i don’t think so. What will happen if working class started kalai eduthal like naxalbari?.

              How do you call if workers stab a CEO? Is it a fault of workers or CEO doesnot have survival skills?

              • ரமேஷ்,

                தவறான சிந்தனை. தாங்கள் கொலை செய்வதை ஆதரிக்கிறீர்கள்.
                Cool down and Relax please,

              • What has tax evasion to do with Unions not fighting for Workers? Sorry you are confusing yourself gentleman. Is there a tax issue in Foxconn? Why did unions left that workers also in street?

                As for as your TNSTC — Thanks for bringing it up. I guess you didnt read my earler statement where i clearly very clearly mentioned “Unions can fight only against State goverments who give into their deeds only because of petty political reqasons ( A leader like Jayalalaitha can give Unions hard time”). This is what i wrote inn my first mail ( in another thread i guess related to TCS). I dont know about the real world exposure thats why i am not a Union leader. Else i would have become a Union leader, minted money, built kalyana mandapams, built Engg. college on my name and would have left the 8000 odd workers in street. Yes, i admit i dont know have such real world exposure.

                What is JOB security gentleman? Who has job Security? As for as you, Workers in TCS/NOKIA are working class and hence considered for Job security and what about my question of Servant maids and their Job security ( a simple statement “Yes it is wrong blah blah blah”..( You have successfully not answered my question for the third time) go fight for them first and then you will find situations like TCS never arise

                You are fighting for TCS because Money is involved and Unions will fight because Dubbu is involved here.

                Dont try to argue about “Working class, Toils etc”. The real people you and i should be fighting ( if at all we decide) should be for someone else and defenitely not for TCS and TNSTC workers.

                Not surprised with your question on Workers Stabbing CEOs. after all thats the culture that has been promoted by Unions and you are vouching for that.
                One more reasons why Unions never succeeded in India.

                • So you wont apply survival of fittest concept when coporates are in receving end right. Ha ha ha.. Fine.

                  /go fight for them first and then you will find situations like TCS never arise/

                  You are against the very basic idea of union and you are supporting layoffs.First of all you dont have any moral right to speak for working class. Then what is your answer about sweeper union, loadman unions and their struggle. If you search in vinavu you can find lot of labour struggles.

                  /You are fighting for TCS because Money is involved and Unions will fight because Dubbu is involved here/
                  Whcih union you are talking about? What is the evicence? .Dont throw allegations like — pissing on wall. Tell concretly.

        • //1. What is unethichal in this Layoff? It is a Knowledge industry where if you cannot prove then quit. You should ask the question how did the other 3 Lac people in that company is surviving.//

          How money makes one become a Animal. This Animal should live in Forest. He has no humanity to show because he is inhumane.

          //“aatukuttikaka ONai azhutha Kathai” for some reasons this is coming to the mind.//

          Dear Attukutti,

          Onaikkaka aattukutti azhutha new story came in to my mind.

  13. First they laid-off ASC , and I did not speakout-
    Because I was not an ASC .

    Then they laid-off AST, and I did not speakout-
    Because I was not an AST.

    Then they came for me—and there was no one left to speak for me.

  14. /1. Kalai eduppathu iyarkai… Nel valara Kali eduthal avasiyam
    2. Survival of the fittest./

    These are all sweet sounding Management jargons!

    At present, the IT giants are not removing people based on performance. Instead, they are throwing out one full bulk based on some years of experience (after squeezing them thro’ a juicer like sugarcane) , so that they can fill the gap with freshers wih less salary & perks! If they are allowed to extend this theory, they’ll replace the entire present employees by college pass outs! This is against any corporate ethic!

    In any case, performance appraisals are always based on the law ” You show me the face and I will show you the rule!”

    As regards maid serevants, yes, their job insecurity is pathetic. Govt. only should give them some social security thro’ some Insurance policy for which premium will be paid by the Govt. Also, the Govt. can intervene thro’ Resident Welfare Associations that every sacked maid servant (after some minimum service period) should be given 3 months salary as compensation compulsorily by the lady who is sacking her just like that.

    Cinema Virumbi

  15. kavalai padaathey sagotharaa…. You will get the job soon…. Don’t discuss all those Union/waste stuff. layoffs!!! We are seeing only now in india. In fact, it seeded long back in india too. IBM guys know this. This is the start and it will continue.
    This is very common for Americans/people in US. They have been seeing for the past 20 years because of outsourcing. But one thing I have learnt from them clearly. Be sincere. Love your job. Never have emotional attachment with the company.

    And here is something that you can do irrespective of whether you are seeing recession or layoff or normal job condition.
    – Always update your knowledge every year and add something to your resume using which you can be sold better in Job Market. This has to be for yourself and not the accomplishments you have done in project deliverables.
    It could be certification like PMP, Sun, Microsoft, Cisco, etc. / learning /programming. Participate or be a trainer and conduct some technical sessions(that you learnt) to the team.
    – If you are not satisfied with the company (or) if you feel much relaxed with your company(within your mind), jump to next. Because you don’t know when this will come to management’s mind. But don’t be a frequent job hopper.
    – Have work-life balance. Don’t work for more than 8 or 9 hrs in a company. Utilize your leaves/vacations, etc. Enjoy festive occasions with family and relatives.
    – Don’t have much financial commitments. Always have a bank balance to handle atleast 6 months of maximum expenses(house rent or loan+grocery+misc+school fee). Because none of the recession/lay offs have gone for more than 6 months. One will get a job before that. Even I got this from one of american friends.

    Last but not least.. I am also trying to follow some of these…

  16. I guess you never understood the gist of my message. I never supported for any working class. I clearly mentioned that Once you are in this world you have to defend youserlf. I was quoting the servent maid incident to exposre the double face of people who say they care for TCS guys and not for others.

    Even otherwise to call a Spade a Spade why does one need Moral right. All that is needed is basic common sense.

    Also it is so surprising that “Survival of the fittest” is taken Only in the Physical context clearly ignoring (or not knowing at all???) in this context it is the “Mental/Intellect fitness”. ( No wonder TCS is able to find such a large number to layoff)

    So as another blogger Mr. Ganesh has said, either be fit and equip yourself or wait for an angel a.k.a Unions and their leaders to descend from heaven and help you.

Leave a Reply to ramesh பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க