Monday, March 24, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விகாஞ்சிபுரம் கல்லூரி, திருவாரூர் பள்ளி - பு.மா.இ.மு போராட்டங்கள்

காஞ்சிபுரம் கல்லூரி, திருவாரூர் பள்ளி – பு.மா.இ.மு போராட்டங்கள்

-

ஊழல்மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை ஏற்று நடத்துவோம் ! காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

  • ஊழல் மயமான பச்சையப்பன் அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்து!
  • அல்லது மாணவர்கள் பேராசிரியர்களை நடத்தவிடு!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் பச்சையப்பன் அறக்கட்டளையின் கீழ் இயங்கிவரும் கல்லூரிகளில் மாணவர்களைத் திரட்டி புரட்சிகர மாணவர் –இளைஞர் முன்னணியின் சார்பில் தொடர்ச்சியான பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒருபகுதியாக 09.01.2015 அன்று காஞ்சிபுரம் பச்சையப்பன் ஆடவர்கல்லூரியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 250 மாணவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர்களும் அலுவலர்களும் ஆதரவளித்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அம்மையப்பன் பள்ளியில் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது

டிசம்பர் 17 அன்று திருவாரூர் அம்மையப்பன் பள்ளியைப் பற்றி செய்தி வெளியிட்டிருந்தோம். அதன் விளைவாக தற்போது அரசு உடனே தலையிட்டு அந்த பழுதடைந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கியது. அப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்களும், ஆசிரியர்களும் “தற்பொழுதுதான் நிம்மதி அளிப்பதாகவும், புரட்சிகர மாணவர் இளைஞர் அணிக்கு நன்றி என்றும் கூறினர்.

அது மட்டுமல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர், ஆசிரியர்கள், பொதுமக்கள் அனைவரும் “அரசை தன் கடமையை செய்ய வைக்கக் கூட தொடர்ச்சியான போராட்டத்தால்தான் முடியும் என்பதை அனுபவ பூர்வமாக உணர்வதாக கூறியுள்ளனர்.

அம்மையப்பன் பள்ளி கட்டிடம்
இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட பாழடைந்த கட்டிடம்

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருவாரூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க