privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஇதரEnglishLog off your silence! Log into NDLF-IT Wing!!

Log off your silence! Log into NDLF-IT Wing!!

-

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், ஐ.பி.எம்., இன்டெல் போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான ஐ.டி.ஊழியர்களை வேலை நீக்கம் செய்து வருகின்றன. பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் வரை வேலை அனுபவம் கொண்ட ஊழியர்கள் குப்பைகளைப் போல தூக்கி எறியப்படுகின்றனர்; அவர்களது எதிர்காலம் அச்சத்தால் உறைந்துள்ளது. இந்த ஆட்குறைப்பு அல்லது கார்ப்பரேட்களின் வார்த்தையில் ‘மறு சமநிலைப்படுத்தல்’ சட்டவிரோதமானது; நெறியற்றது.

ndlf-it-wing-poster-taஇந்த சட்டவிரோத நடவடிக்கையை நியாயப்படுத்த, ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யும் முன்பு எந்த நியாயமுமின்றி அவர்கள் மீது ‘திறன் குறைந்த ஊழியர்’ என்ற முத்திரையை குத்துகின்றனர். பல நேரங்களில் பதவி விலகல் கடிதங்களை தருமாறு ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அனுபவம் மிக்க ஊழியர்களை நீக்கிவிட்டு அவர்களுக்குப் பதிலாக குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்களை நியமித்து, லாபத்தை அதிகரிப்பதே கார்ப்பரேட்டுகளின் ஒரே நோக்கம்.

இதன் விளைவாக ஐ.டி. துறை ஊழியர்களின் பணி வாழ்க்கை 30 வயதுகளிலேயே முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது. ஐ.டி.ஊழியர்களின் குடும்பங்களும் குழந்தைகளும் இந்த பெருமளவு ஆட்குறைப்பு உருவாக்கும் கோர விளைவுகளை எதிர்கொண்டாக வேண்டும்.

டிசிஎஸ்சுக்கும் மற்ற ஐ.டி. நிறுவனங்களுக்கும் தமது பேராசைக்கு சமூகம் கொடுக்கின்ற விலை பற்றி துளியும் அக்கறை இல்லை. ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் இல்லை என்பதை சாதகமாக்கிக் கொண்டு ஊழியர்களின் வாழ்வைப் பற்றி எந்த அக்கறையுமின்றி தமது திட்டங்களை அமல்படுத்துகின்றனர்.

நிர்வாகம் நிர்ப்பந்தம் கொடுத்தால் கூட விலகல் கடிதம் கொடுக்க வேண்டாம் என்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர் பிரிவு கேட்டுக் கொள்கிறது. ஐ.டி. துறையில் தொழிற்சங்கம் உருவாக்கும் முயற்சியில் அனைவரும் இணையும்படி கோருகிறோம். இத்தகைய பணிநீக்க நடவடிக்கைகளை எதிர்த்து நிற்க முடியும் என்று உறுதியளிக்கிறோம். எமது வழக்கறிஞர்கள் அணி இந்த வழக்குகளை எடுத்து நீதிமன்றங்களில் போராடும்.

பு.ஜ.தொ.முவின் ஐ.டி. ஊழியர் பிரிவு, தொழிற்சங்கம் உருவாக்கிட ஐ.டி. நிறுவன ஊழியர்களை அணிதிரட்டி வருகின்றது. டி சி எஸ் உட்பட பல்வேறு நிறுவன ஊழியர்கள் மத்தியில் இந்த முயற்சி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பிரசுரங்கள் ஐ.டி. காரிடாரில் விநியோகிக்கப்பட்டுள்ளன. பிரசுர வினியோகத்தின் போது ஐ.டி ஊழியர்கள் பெருமளவு ஆர்வம் காட்டியுள்ளார்கள்.

பு.ஜ.தொ.மு உறுப்பினர்களான நூற்றுக்கணக்கான ஆலைத் தொழிலாளர்கள் இப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்; தொழிலாளர் வர்க்கத்தில் நிலவுவதாக சொல்லப்படும்  ‘நீல சட்டை – வெள்ளைச் சட்டை பிரிவு’ தகர்த்தெறிந்துள்ளனர்.

வெகு விரைவில் தொழிற்சங்கம் உருவாவதை சென்னை ஐ.டி. காரிடார் கண்ணுறப் போகிறது. கார்ப்பரேட் காட்டு தர்பாரின் சட்டங்களை எதிர்த்து போராடும் ஐ.டி. ஊழியர்களின் போர்க்குணமிக்க முழக்கங்கள் கார்ப்பரேட்டுகளின் காதுகளை எட்டப் போகின்றன.

Log off your silence! Log into NDLF-IT Wing!!

IT companies like Tata Consultancy Services, IBM, Intel etc are laying off thousands of their employees. Those who have put up 10 to 15 years of service, are thrown out unceremoniously, and their future looks bleak. This down sizing or re balancing as they call it, is illegal and unethical.

ndlf-it-wing-poster-enTo justify this illegal act, they unjustly stamp their employees as under performers before terminating their services. In many other cases employees are putting down their papers under duress. Their sole motive is profit maximization by employing less paid employees in place of experienced professionals. This effectively means that working lives of I.T professionals come to an end in their 30s.

Their families and children would have to face the disastrous consequences of this massive layoff. TCS and other I.T companies do not care about the social cost of their greed. They are taking advantage of the absence of employees union in this sector to push through their designs, without any regard to lives of their employees.

We, NDLF, call upon IT employees not to put in their papers even when threatened by management. We call upon all of them to join us in our effort to organize a trade union in this sector. We assure them that we can resist this layoff. We have a team of lawyers who could fight their cases in the courts.

The IT employees wing of our union, is organizing employees of IT companies to form unions. The response we got from employees of various I.T companies including TCS, is very positive. More than 10,000 leaflets have been distributed in the I.T corridor, and the interest shown by employees is very encouraging.

Hundreds of industrial workers, who are members of our union are involved in this campaign, bringing down the so called blue collar-white collar divide amongst the working class. The I.T Corridor in Chennai will soon witness the emergence of trade union, and corporates would soon hear the militant voices of I.T workers, who will challenge rules of the corporate jungle raj.

Log off your silence! Log into NDLF-IT Wing!!

கற்பகவிநாயகம்
அமைப்பாளர்,
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி, ஐடி பிரிவு