Tuesday, August 9, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் தொழிலாளர்கள் ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

ராணிப்பேட்டை நரகத்தில் வட இந்தியத் தொழிலாளிகள்

-

இராணிப்பேட்டை சிப்காட் – வட இந்தியத் தொழிலாளர்களின் நிலை

30 அடி நீளம், 50 அடி அகலத்தில் ஒரு ஆஸ்பெஸ்டாஸ் கூரை போட்ட ஷெட். அங்குதான் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் ஓய்வு நேரமான 6 மணி நேரத்தை தூங்கி, பாட்டு கேட்டுக் கொண்டு, சாப்பிட்டுக் கொண்டு செலவழிக்க வேண்டும். தூங்கி எழுந்தால் சில அடிகள் தூரத்தில் பணியிடம். அதிகாலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை “ரெகுலர் ஷிப்ட்”, அதன் பிறகு இரவு 12 மணி வரை “ஓவர் டைம்” என்பது வாடிக்கையான வேலை.

“பதினெட்டு மணி நேரம் தொடர்ந்து  வேலை செய்யும் போது ஓய்வெடுத்தாலோ அல்லது வேலையை மெதுவாக செய்தாலோ அது சிசிடிவி கேமரா மூலம் பதிவாகிவிடும். வீட்டிலிருந்தே முதலாளியால் பார்க்க முடியும். ஒன்று மறுநாள் திட்டு வாங்க நேரிடும். இல்லையேல் ஓய்வெடுத்த நேரத்திற்கு சம்பளம் வெட்டப்படும். பெரும்பாலும் எல்லாத் தொழிற்சாலைகளின் நிலையும் இதுதான்.”

அழகூட்டப்பட்ட தோல்
எப்போதும் துணையாக தோல் நெடி

தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் பக்கத்து ஷெட்டில் இயங்கும் தோல் பதனிடும் உருளைகளின் சத்தம் இடைவிடாத துணையாக காதில் ஒலித்துக் கொண்டே இருக்கும். சுவாசிப்பதற்கு ஆலைக்குள் பதனிடப்படும் ஆயிரக்கணக்கான தோல்களின் நாற்றத்தோடு நூற்றுக்கணக்கான இரசாயனங்களின் நெடி கலந்த காற்று 24 மணி நேரமும் துணையாக இருக்கும்.

உடன் தங்கியிருக்கும் 18 தொழிலாளர்களோடு சேர்ந்து வேலை ஆரம்பிப்பதற்கு முன்பு அல்லது வேலைக்கு நடுவில் ஷெட்டுக்குள்ளேயே சமைத்துக் கொள்ள வேண்டும், சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். ஷெட்டுக்கு எதிர் முனையில் இருக்கும் கழிப்பறையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தோல் உருளைகள்
தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் காதை நிறைக்கும் உருளைகளின் இயக்கம்

குளிப்பதற்கும், துவைப்பதற்கும் மஞ்சள் கலந்த தண்ணீர் தாராளமாக பயன்படுத்திக் கொள்ளலாம். அதையே கொஞ்சம் வடிகட்டி குடிக்கலாம்.

வாடிக்கையாளர் தேவை குறைவாக இருந்தால் ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்துக்கு மேல் உருளைகளின் இயக்கம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.  அன்று மாலைதான் வார விடுமுறை. துணி துவைக்க, கடைக்குப் போய் சமையலுக்கான பொருட்கள் வாங்கி வர, இதற்குப் பிறகு நேரம் இருந்தால் பொழுதுபோக்க வெளியில் போய் வரலாம்.

இந்த ‘பூலோக சொர்க்கத்திலிருந்து’ சொந்த ஊருக்கு தொலைபேசிக் கொள்ளலாம். சில ஆயிரம் மாதச் சம்பளத்தில் ஊருக்கு அனுப்பியது போக மிச்சம் பிடித்து ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை ஊருக்குப் போய் வரலாம்.

ranipet-leather-waste-disaster-08ஜனவரி 30, 2015 அன்று வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை சிப்காட் வளாகத்தில் தனியாரால் பராமரிக்கப்படும் தோல் இரசாயனக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் இரசாயன சகதி சேகரிப்புத் தொட்டி உடைந்து 10 வட இந்தியத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட நிகழ்விற்குப் பிறகு தொழிலாளர்கள் சிலரை சந்தித்து பேசிய போது கிடைத்த அவர்களது வாழ்க்கை சித்திரம்தான் மேலே சொன்னது.

கொல்கத்தாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது 17-வது வயதில் ரூ 4,200 மாத ஊதியத்தில் ஒரு தோல் தொழிற்சாலையில் பணிக்கு சேர்ந்திருக்கிறார். ஏழு ஆண்டுகள் உழைப்புக்குப் பிறகு அவரது ஊதியம் இன்று ரூ 5,700 ஆக உயர்ந்திருக்கிறது.

மாலை 6 மணி முதல் இரவு 12 வரை மிகை நேரப்பணியாக கருதப்படும். மிகை நேரப்பணி என்றால் இருமடங்கு ஊதியம் என்பது விதியாக இருந்தாலும் இங்கே ஒரு மடங்கு ஊதியம்தான் எல்லா ஆலைகளிலும் தரப்படுகிறது.

தோல் தொழிற்சாலை பணி
அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

இவருக்கும் இவரோடு பணிபுரியும்  17 வயது முதல் 24 வயது வரை உள்ள திருமணமாகாத 18 இளைஞர்களும் தொழிற்சாலை முதலாளி கருணையுடன் ஒதுக்கிக் கொடுத்த ஷெட்டில் வசித்துக் கொண்டு ஆலையில் வேலை செய்கிறார்கள்.

அபாயகரமான இரசாயனங்களை கையாள்வது, வேகமாக இயங்கும் சிக்கலான எந்திரங்களை இயக்குவது என்ற வேலை செய்யும் இவர்களுக்கு பாதுகாப்பு கையுறை மூக்குக் கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் எதுவும் தரப்படுவதில்லை.

குடும்பத்தோடு வசிப்பவர்கள் மட்டுமே சிப்காட் குடியிருப்புப் பகுதிகளில் வாடகைக்கு வீடு எடுத்து தங்குகின்றனர். அப்படி வசிப்பவர்களில் ஒருவர் மற்றொரு தொழிற்சாலையில் பணிபுரியும் வட இந்திய தொழிலாளி ஒருவர். தோல் தொழிற்சாலையில் 10 ஆண்டுகள் பணிக்குப் பிறகு அவரது இன்றைய மாத ஊதியம் ரூ 10,000 எனவும் கூறினார். இதில் வாடகைக்கு மட்டுமே ரூ 2,000 போய்விடுகிறது. மனைவி, இரண்டு குழந்தைகள் அவர்களுக்கான உணவு, பராமரிப்பு, மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி உள்ளிட்ட தேவைகள் அனைத்தையும் இந்தத் தொகைக்குள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்கள் ஊருக்குச் செல்வது அரிதாகவே சாத்தியமாகிறது. ஆண்டிற்கு ஒருமுறையோ அல்லது ஒன்றரை ஆண்டுக்கு ஒரு முறையோதான் செல்கின்றனர். அதற்கு மேல் சென்று வர பொருளாதாரம் அனுமதிக்காது, அப்படியே அனுமதித்தாலும் முதலாளிகள் லீவு தர மாட்டார்கள்.

ராணிப்பேட்டை வட இந்தியத் தொழிலாளர்கள்
சிப்காட் வளாகத்தில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்

சிப்காட் வளாகத்தில் பல்வேறு தொழிற்சாலைகளிலும் பணிபுரியும் சுமார் 5,000 வட இந்திய தொழிலாளர்களின் நிலை இதுதான்.

இந்தியாவில் உலகிலேயே அதிக எண்ணிக்கையில் 35.6 கோடி இளைஞர்கள் உ ள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை ஒன்று கூறுகிறது. பெரும்பாலான இளைஞர்களுக்கு அவர்களது கிராமங்களில் அழிக்கப்பட்டு வரும் விவசாய பொருளாதாரத்தில் அற்பக் கூலிக்கான வேலை மட்டுமே கிடைப்பதால் இவர்கள் பெருமளவில் தமிழகம் மற்றும் பிற தொழில் மையங்கள், பெருநகரங்களை நோக்கி படை எடுக்கின்றனர். பெரும்பாலும் தெரிந்தவர்கள் அல்லது உறவினர்கள் மூலமாக ஒருவரைத் தொடர்ந்து மற்றவர்களும் வருகின்றனர்.

“மேக் இன் இந்தியா” என்ற முழக்கத்தின் கீழ் அன்னிய நிறுவனங்களை முதலீடு செய்ய  அழைத்து வந்து இத்தகைய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கப் போகிறேன் என்பது மோடியிசத்தின் சவடால்களில் ஒன்று.

இந்த சவடால் மோடியால் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டதல்ல, 1990-களிலிருந்தே 25 ஆண்டுகளாக “அன்னிய நேரடி முதலீடு” என்ற பெயரில் அமல்படுத்தப்பட்டு வரப்படுவதுதான். கூடவே, ‘அன்னிய முதலீட்டை ஈர்க்க தொழிலாளர் நலச்சட்டங்களை கைவிட வேண்டும், தொழிற்சாலைகள் மீதான கண்காணிப்புகளை ஒழித்துக் கட்ட வேண்டும். சுற்றுச் சூழல் சட்டங்களை செல்லாமல் செய்து விட வேண்டும்’ என நாட்டை அன்னிய நிறுவனங்களுக்கு காலனியாக்கும் கொள்கை அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களில் அதை இன்னும் தீவிரமாக செய்து வருகிறது மோடி அரசு.

இந்த மறுகாலனியாக்கக் கொள்கைள் ஆலைத்துறையிலும், கட்டுமானத் துறையிலும், பிற சேவை நிறுவனங்களிலும் உருவாக்கியிருக்கும் வேலை வாய்ப்பின் குறுக்குவெட்டுதான் ராணிப்பேட்டையில் பணிபுரியும் வட இந்தியத் தொழிலாளர்களின் வாழ்க்கை.

north-indian-workersசிப்காட் பகுதி தொழிற்சாலைகளில் பணிபுரிவோரைப் பற்றிய பதிவேடு கிடையாது. அப்பகுதியில் வசிப்பதற்கான பதிவேடும் கிடையாது. எத்தனை வட இந்திய தொழிலாளர்கள் சிப்காட் பகுதியில் உள்ளனர் என்கிற கணக்கு அரசாங்கத்திற்கே தெரியாது. உழைப்பை மட்டுமே விற்கும் நாடோடிகளாக கொத்தடிமைகளாக மட்டுமே இவர்களது வாழ்க்கை தொடர்கிறது. இவர்கள் நவீன கால கொத்தடிமைகள்.

இவர்களுக்குள்ளே சங்கமோ அமைப்போ எதுவும் கிடையாது. இவர்கள் தனித்தனியாய் இருப்பதை சாதகமாக்கிக் கொண்டு இவர்களிடமிருந்து பணத்தையும் கைபேசிகளையும் உள்ளுர் போக்கிரிகள் சிலர் மிரட்டிப் பறிப்பது சமீப காலமாக அதிகரித்து வருவதால் இவர்கள் வெளியில் நடமாடுவதைக்கூட தவிர்த்து வருகிறார்களாம்.

இவர்களில் ஒருவர் காணாமல் போனாலோ அல்லது அடித்து கொல்லப்பட்டாலோ அல்லது பலர் கொத்துக் கொத்தாய் செத்துப் போனாலோ யாராலும் கண்டு பிடிக்கவோ அடையாளம் சொல்லவோ முடியாது. அரசாங்கம் இவர்களை நிச்சயம் கண்டு கொள்ளப் போவதில்லை. இவர்களாக அமைப்பாக ஒன்று சேர்ந்தாலொழிய இவர்களுக்கு விடிவேதுமில்லை.

ஆலைக்கு வெளியே மக்கள் குடியிருப்பு பகுதிகளில் தொழிலாளர்கள் தங்குவதற்கு வசிப்பிடங்களை முதலாளிகளே உடனடியாக ஏற்பாடு செய்து தரவேண்டும். தொழிலாளர்களை ஆலைக்குள்ளே தங்க வைக்கும் அனைத்து முதலாளிகளையும் கைது செய்யப்பட  வேண்டும்.

தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் காலில் போட்டு மிதித்துவிட்டு கொட்டமடிக்கும் முதலாளிகள், முதலாளிகளுக்கு துணைபோகும் தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட இந்த சமூக விரோத பயங்கரவாதக் கூட்டத்தை ஒழித்துக் கட்டாமல் தொழிலாளர்களுக்கு விடிவில்லை.

Ranipet-Murder-2தமது பணியிட மற்றும் வாழும் உரிமைகளுக்காக சங்கமாக திரண்டு ஆயிரக்கணக்கான அமெரிக்கத் தொழிலாளர்கள் 1886-ம் ஆண்டு சிகாகோ நகரில் நடத்திய வேலை நிறுத்தப் போராட்டத்தைப் போன்று தொழிலாளர் வர்க்கம் மீண்டும் எழவேண்டும். உழைக்கும் மக்களையும், இந்த உலகையும் முதலாளித்துவ பேரழிவிலிருந்து காப்பாற்ற வழி காட்ட வேண்டும்.

சிகாகோ எரிமலையாய் சீறட்டும் தொழிலாளி வர்க்கம்! பொங்கி எழும் நெருப்புச் சுனாமியில் அழியட்டும் முதலாளித்துவ பயங்கரவாதம்!

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
வேலூர்

(படங்கள் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை. விளக்கத்திற்காக மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளன)

 1. தொழிலாளர் தொடர்பான பல கட்டுரைகளில் 1990 ஆம் ஆண்டு கோடு கிழிக்கிறீர்கள். தொழிலாளர் நலம் என்ற வகையிலும், சராசரி மக்களின் வாழ்க்கை தரம் என்ற வகையிலும் 1980 களை 2000 களோடு ஒப்பிட்டு ஆராயும் நூல்கள்-கட்டுரைகள் கிடைக்கின்றானவா?

 2. மற்றொரு தொடர்புடைய கேள்வி. 1991 இல் நரசிம்ம ராவ் பிரதமனரான போது, நாடு திவால் நிலையில் இருந்ததாகவும், அவரும் மன்மோகன் சிங்கும் இணைந்து தாரளமயத்தின் மூலம் நாட்டை மீட்டதாகவும் ஒரு கருத்து கூறப்படுகிறது. நாடு திவால் நிலையில்தான் இருந்ததா? ஏன் அவ்வாறு ஆனது? தாராளமயம் நாட்டை மீட்டதா? அவர்கள் சும்மா இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவர்கள் செய்ததற்கு மாற்றாக வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியுமா? இது பற்றி தெரிந்து கொள்ள ஏதாவது நூல்-கட்டுரை பரிந்துரை செய்வீர்களா? நன்றி.

  • ஒரு நாட்டின் செல்வம் ஏற்று மதி செய்து, இறக்குமதிக்கு செலுத்தியது போக எவ்வளவு பொருள்(டாலர்/அந்நிய செலாவணி ) மிச்சம் வைத்து இருகிறார்கள் என்பதை பொருது தான் அளவீடு செய்யபடுகிறது .

   ஆனால் அதில் ஒரு திருத்தமாக ஏற்றுமதி செய்யாமலே , டாலர் வைத்து இருக்கும் முதலாளிகள் ஒரு நாட்டில் முதலீடு செய்தால் , அந்த நாட்டின் டாலர் கையிருப்ப்பு ஏற்றுமதி செய்யாமலே உயரும்.அந்த டாலர்கள் லோக்கல் கரன்சிகலாக மாறி , அந்த நாட்டின் பணபுழக்கம் அதிகரித்து இருப்பதையும் , தொழில் வளம் அதிகரிப்பதையும் குறிப்பால் உணர்த்துகிறது . ஆனாலும் நாடு வெளிநாட்டவர்கள் கருணைக்கு கட்டுப்பட்டு இருக்கவேண்டும் .

   இப்பொழுது நாட்டின் ஏற்றுமதியும் இல்லை , அந்நிய முதலீடும் இல்லை என்னும் போது மாதாந்திர தேவைக்கான அந்நிய செலாவணி அரசாங்கத்திடம் இல்லாமல் போய்விடும் .அப்போது அரசாங்கம் கடன் வாங்கி பெட்ரோல் போன்ற அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றலாம் . உலகின் எல்லா அரசாங்கங்களும் புதிய கடன் வாங்கி,பழைய கடனை அடைக்கும். புதிய கடனை பெற முடியவில்லை என்றால் பழைய கடனை அடைக்க முடியாது .அப்போது அந்த அரசாங்கம் திவாலாகிவிடும். ரஷ்யா அர்ஜென்டினா வெனிசுலா போன்ற நாடுகள் இப்படி திவாலாகி விட்டன .

   தொன்னூறுகளில் ஏற்றுமதி குறைந்து அந்நிய செலாவணி குறைந்துவிட்டது . திடீரென தொழில் உற்பத்தி வந்துவிடாது . தொழில் முறையில் போட்டி இல்லை என்றால் தரமான பொருள் உருவாகாது . தரமான பொருள் உற்பத்தி இல்லையென்றால் ஏற்றுமதி நடக்காது .

   தரமான பொருள் உற்பத்தியை இந்தியர்கள் பழக வேண்டும் என்றால் , வெளிநாட்டு உற்பத்தியுடன் போட்டி போடா வேண்டும் . சோசியலிச பாதுகாப்பு முறைகளில் ஊறி பொய் இருந்தன நமது தொழில்கள் . பஜாஜ் ,மாருதி , அம்பாசாடர், கோல்டு ஸ்பாட் , யார்க்கும் கடன் குடுக்காத ஸ்டேட் பாங்கு ,இந்தியன் வங்கி போன்றவை உங்கள் நினவுக்க வரலாம் .

   தொன்னூறுகளில் அவசரகால கைமாத்தாக கடன் வாங்க முடியாத நிலையில் தங்கத்தை அடமானம் வைத்து அரசாங்கம் நடத்தப்பட்டது . இத்தகையா இக்கட்டான சூழலில் நரசிம்மராவ் மன்மோகன் கூட்டணி , இந்த சோசியலிச பாதுகாப்பு கட்டமைப்பை தகர்த்தன.
   டாலர் ரூபாய் பணமதிப்பை குறைத்தனர் .இதனால் வெளிநாட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்வதை ஊக்குவித்தனர்.

   இதனால் அதிக ஏற்றுமதி செய்யாமலே டாலர் வரத்து அதிகரித்தது. உள்ளூர் தொழில்களும் வெளிநாட்டவர்களுக்கு இணையாக தொழில் செய்யும் திறனை பெற்றார்கள் (பஜாஜ் ) , முடியாதவர்கள் (அம்பாசடர் ) அழிந்து போனார்கள் .
   தனியார் வங்கிகள் கடன் கொடுத்து , மக்கள் இருசக்கர வாகனங்கள் வாங்கி வசதியை பெருக்கி கொண்டார்கள் . ஆனால் இப்போதும் நமது தொழில்கள் ஏற்றுமதி செய்யும் திறனை பெருக்கவில்லை என்றால் , நாம் அந்நியர்களை நம்பியே இருக்கே வேண்டி இருக்கும் .

   அவர்கள் அப்படி செய்யவில்லை என்றால் என்ன ஆகி இருக்கும் ?
   இந்தியா அடமானமாக வாய்த்த தங்கம் மீட்கபடாமல் போய் இருக்கும் . இந்தியா திவாலாகி இரும்மும் . பணமதிப்பு குறைந்து , பண வீக்கம் அதிகரித்து ஒரு லட்சம் ருபாய் , கோடி ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் வந்து இருக்கும் .

   அண்ணாச்சி கடையில் கலர் குடித்து விட்டு , ஓசியில் தினத்தந்தி படித்து விட்டு நாமும் சாதி மூலமாக வேலை தேடிக்கொண்டு இருந்து இருப்போம் . இணையம் பணக்காரர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும் . வினவு ? கேள்விகுறி

   //அவர்கள் செய்ததற்கு மாற்றாக வேறு நடவடிக்கைகள் எடுத்திருக்க முடியுமா? //
   க்யூபா போன்ற சிறிய நாடுகள் ரஷ்யாவிடம் கடன் வாங்கி கம்பி நீட்டும் . நாம் அப்படி பண்ண முடியாது

   • நாடு சுதந்திரம் அடைந்தவுடன் வெளிநாட்டு தொழில்களை விட்டு இருந்து இருந்தால் நாம் தொழில் பழகுவதற்கு கூட அவகாசம் இல்லாமல் பொய் இருந்து இருக்கும் . முழுக்க முழுக்க வெளிநாட்டு தொழில் நுட்பத்தையே நம்பி இருந்து இருக்க வேண்டி இருக்கும் .

    ஆக நேருவின் சொசியலிம் அந்த காலகட்டத்திற்கு சரியானது. அதே போல ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு தாராளமயம் அந்த காலகட்டத்திற்கு சரியானது

 3. நன்றி ராமன்.

  நரசிம்ம ராவ், மன்மோகன் சிங் செயல்படுத்திய திட்டத்தின் பக்க விளைவுகள் என்ன?

  அந்த இரு கேள்விகள் தொடர்பாகவும் முழுமையான பார்வையோடு பேசும் கட்டுரைகள், நூல்கள் ஏதாவது பரிந்துரைக்க முடியுமா? மேலும், இவை வலது/இடது பிரசார பாணியில் இல்லாமல், அகாடெமிக் மனப்பாங்கோடு எழுதப்பட்டு இருந்தால் அதிக தெளிவு கிடைக்கும் என தோன்றுகிறது.

 4. விஷயம் புரியாமல் பேசுகிறேன் என்று தோன்றுகிறது. எனினும், இதை பல காலமாக செய்து வருவதால், தற்போதும் செய்கிறேன்!

  கீழே உள்ள தளத்தில் இந்தியாவின் balance of trade வரலாற்று புள்ளிவிவரங்கள் (historical data) கிடைக்கிறது. அதில் உள்ள மெனுவில் 1989 – 2015 என போட்டுப் பாருங்கள். 1990 இல் இருந்ததை விட 2004 க்கு பிறகு நிலைமை மிக மோசமானதாக ஆகிவிட்டதாக தோன்றுகிறது.

  http://www.tradingeconomics.com/india/balance-of-trade

  • ஸ்டாடிஸ்டிக்ஸ் பயன்படுத்தும் போது மிகவும் கவனமாக கையாளவேண்டும் .

   நூற்று பாத்து ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து , நூறு ரூபாய்க்கு வாங்கினால் டிரடு சர்ப்லஸ் தான்
   கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து கோடியே பத்து லட்சிதிற்கு வாங்கினால் டிரடு டெபிசிட் தான் .ஆனால் வாழ்க்கை தரம் வித்தியாசப்படும் .

   அதாவது கடனே வாங்காமல் தங்கத்தில் கடுக்கன் போட்டபடி குடிசையில் இருப்பதுவும் , வங்கியில் கடன் வாங்கி மாடி வீடு கட்டி இருப்பதுவும் போல, முன்னவரை பணக்காரர் என்றும் பின்னவரை ஏழை என்றும் அளவிட முடியாது

   நீங்கள் கொஞ்சம் வரைபடத்தை மாற்றி பாருங்கள்

   1970 – 1990 ( இது மில்லியனில் காட்டும் )
   1990 – 2015 (இது பில்லியனில் காட்டும் )

   நாம் அதிகம் பொருள் ஈட்டினாலும் , ஆயில் மற்றும் தங்கத்தின் விலை அதிகரித்து கொண்டே போவதால் ட்ரேடு டெபிசிட் அதிகமாக ஏற்படுகிறது . இது இரண்டின் விளையும் நம் அரசாங்கத்தின் கையில் இல்லை. நம் கடன் பொருள் ஈட்டுவதே!

   அடுத்து வாழ்க்கை தரம் மேம்பட்டதால் மக்கள் இவற்றை வாங்கி குவிகிறார்கள். ஆனாலும் நான் ஏற்கனவே கூறியபடி அந்நிய முதலீடு என்பதை தாண்டி சுயமாக பொருள் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து பழக வேண்டும் . அதுவே நீண்ட கால நோக்கில் உதவும்.

  • நீங்கள் சொல்வது சரிதான். வெறும் கடன் எவ்வளவு என்று பார்க்க முடியாது. இது மிகவும் சிக்கலானதாக உள்ளது.

   balance of trade to GDP ratio சரியாக இருக்குமோ? இவ்விரண்டும் தனித்தனியாக கிடைக்கின்றன. சேர்த்துப் போடலாம். ஆனால், அந்தந்த காலத்திய டாலர் மதிப்பு, விலை நிலவரம் (prices), மக்கள் தொகை எல்லாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

   வாங்கிய கடனில் வீடு கட்டினால் கையில் சொத்து (asset) சேரும். மாறாக, கடன் வாங்கி லாஸ் வேகாஸ் சென்று பணத்தை செலவழித்து விட்டால் கடன் மட்டும் இருக்கும். இந்தியாவின் balance of trade நெகடிவ் இல் இருப்பது சொத்து செர்த்ததாலா, அல்லது ஊதாரித்தனமாக செலவு செய்ததாலா? இதை எப்படி அளவிடுவது. ஒரு நாட்டின் gross assets என்பதற்கு ஏதாவது குறியீடு உள்ளதா?

   மேலும், கடன் வாங்கி வீடு கட்டினால், அதை அடைக்கும் சக்தி இருக்க வேண்டும். ஊதியத்தில் இருந்து EMI கட்ட முடியவேண்டும். இப்படி செய்யும் போது கடன் குறைந்து கொண்டே வரும். ஆனால், அந்த தளத்தின்படி பார்த்தால் கடன் மட்டும் வாங்கிக் கொண்டு இருப்பதாக தோன்றுகிறதே. அதாவது, ஒரு பத்து வருட balance of trade மொத்தமாக கூட்டி பார்த்தால் 0 அல்லது positive ஆக இருப்பது நல்லது என சொல்லலாமா?

   • வெங்கடேசன்,

    90கள் வரை அண்ணிய செலாவணி பற்றாமல், வருடந்தோரும் அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. இன்று அப்படி இல்லை. நிகர அன்னிய செலாவணி சுமார் 330 பில்லியன்கள். அய்.எம்.எஃப்க்கு நாம் ‘கடன்’ தருகிறோம். 40 வருடங்களில் சாத்தியாமாக சாதனை இது. மேலும் சராசரி பணவீக்கம் இன்று குறைந்துவிட்டது, 70கள், 80கள், 90களோடு ஒப்பிடும் போது. நேற்று வெளியான அய்.நா அறிக்கையில் இந்தியாவில் நடந்த அபாரமான வறுமை குறைப்பு பற்றி பேசுகிறது : http://www.thehindu.com/news/national/8-gdp-growth-helped-reduce-poverty-un-report/article6862101.ece

    இவை எல்லாத்தையும் மொத்தமாக பார்க்கும் போது மன்மோகன் சிங், நரசிம்ம ராவின் செயல்பாடுகள் எத்தனை பெரிய நன்மையை செய்திருக்கின்றன என்று புரியும்.

    • United Nations Economic and Social Commission for Asia and the Pacific (ESCAP) has said the 8 per cent GDP growth in India from 2004 to 2011 led to a sharp decline in poverty from 41.6 per cent to 32.7 per cent and achieved the first Millennium Development Goals (MDGs) set for 2015 of reducing poverty by half.

     In a report — India and the MDGs — UN ESCAP said other MDGs achieved include gender parity in primary school enrolment, maternal mortality reduction by three-fourths and control of spread of HIV/AIDS, malaria and tuberculosis. India also achieved MDGs related to increased forest cover, halved the proportion of population without access to drinking water.

     The MDGs that India has missed are universal primary school enrolment and completion and universal youth literacy by 2015, empowering women through wage employment and political participation, reducing child and infant mortality and improving access to adequate sanitation to open defecation, the report says.

     “Over 270 million people in India in 2012 still remained trapped in extreme poverty making the post-2015 goal of eliminating extreme poverty by 2030 challenging, but feasible.”

     UN under-secretary general and executive secretary of the UN Economic and Social Commission for Asia Shamshad Akhtar said at the release of the report: “Over the years, the MDGs have pushed governments around the world to mainstream poverty reduction, gender parity, education and health and such basic needs as water and sanitation in their development agenda.”

     8% GDP growth helped reduce poverty: UN report

     • அதியமானிடம் ஒரு வினோதமான லாஜிக் இருக்கிறது.

      அதாவது, 1990-களுக்கு முன்னால் நம்ம நாட்டோட ஆட்சியாளர்கள் மக்களுக்கு பொறுப்பில்லாமல் உள்நாட்டு கம்பெனிங்க சம்பாதிக்கும்படி ஆட்சி நடத்தினாங்க (crony capitalism, planning, licence/quota raj). அப்போ அமெரிக்கா, ஐரோப்பா கம்பெனிகளை உள்ளே விடல.

      அதனால் திவால் ஆன இந்திய அரசுக்கு ஐ.எம்.எஃப் (அதாவது, அமெரிக்க ஐரோப்பிய வங்கிகளின் கூட்டமைப்பு) கடன் கொடுத்தது. கொடுக்கும் போது என்ன நிபந்தனை? ‘இனிமேல் எங்கிட்ட கடன் கேட்டு வரும்படி இருக்கக் கூடாது.எங்க நாட்டு வங்கிகள், நிதி நிறுவனங்கள் நேரடியா உங்க நாட்டில முதலீடு செய்யும்படி பொருளாதாரத்த சீரமைக்கணும்’ என்பது.

      அதாவது, பொறுப்பில்லாத அப்பன்கிட்ட பணத்தை கொடுத்து வீட்டை எங்க ஆளுங்களுக்கு திறந்து விடுன்னு சொல்கிறது. அப்படி திறந்து விட்டவங்கதான் மன்மோகன் சிங்கும், நரசிம்மராவும்.

      அவனவன் தன்னோட பணத்த போட்டு, நிலக்கரி என்ன, 2ஜி என்ன, பங்குச் சந்தை என்ன என்று அள்ளிக் கொண்டு போகிறான். அதுக்கு வசதியா நாம என்ன பொருளாதாரக் கொள்கை பின்பற்றணும்னு நிபந்தனை போட்டு செய்ய வைக்கிறான் (உங்க வீட்டை எனக்கு அடகு வைச்சிருக்க, உன் கிணற்றிலிருந்து தண்ணீ குடிக்க பைப் போட்டு கட்டணம் வசூலிக்க எங்க நாட்டு தனியார் நிறுவனத்துக்கு உரிமை வேண்டும், உங்க நாட்டு மக்களுக்கு கல்வி வழங்கணும்னா அவங்க காசு கட்டித்தான் படிக்கணும் இப்படின்னு பல நிபந்தனைகள்).

      இப்போ அப்பன் பை நிறைய சில்லற குலுங்குது. ஆனா, அந்த சில்லறையை கொடுத்தவனுங்கள்ள ஒருத்தன் கதவை பெயர்த்துகிட்டு போறான், கிணற்றை ஒருத்தன் இறைச்சு நிலத்தடி நீரை இல்லாம பண்றான், ஒருத்தன் நிலத்தைத் தோண்டி உள்ளே இருக்கிறத எல்லாம் எடுத்துட்டு போகணும்கிறான்.

      இதுதான் வளர்ச்சின்னு சாதிக்கிறாரு நம்ம பொருளாதாரப் புலி அதியமான்.

      • @kumaran

       கழுத்து வரை கடன் இருந்த இந்தியாவிற்கு மாற்றுவழி என்ன இருந்தது , என்று கூற முடியுமா ?

       //அவனவன் தன்னோட பணத்த போட்டு, நிலக்கரி என்ன, 2ஜி என்ன, பங்குச் சந்தை என்ன என்று அள்ளிக் கொண்டு போகிறான்.
       //

       அதே வளங்கள் சோசியலிசத்தில் இருந்த போது எதுவும் பண்ணாமல் இருந்து விட்டு புலம்பல் எதற்கு ?

       2G வளம் என்பதே முதலாளித்துவ தொழில்நுட்பங்கள் உருவாக்கியதே!

       //
       அதுக்கு வசதியா நாம என்ன பொருளாதாரக் கொள்கை பின்பற்றணும்னு நிபந்தனை போட்டு செய்ய வைக்கிறான் (உங்க வீட்டை எனக்கு அடகு வைச்சிருக்க, உன் கிணற்றிலிருந்து தண்ணீ குடிக்க பைப் போட்டு கட்டணம் வசூலிக்க எங்க நாட்டு தனியார் நிறுவனத்துக்கு உரிமை வேண்டும்,
       //

       அப்போ சோசியலிசத்தில் பணம் சம்பாதித்து மக்களை நல்ல வைத்து இருந்தா , எதுக்கு கடன் கேட்டு இன்னொருத்தன் கிட்ட போகணும் ? உதவி வேணும்னா பண்ணிதான் ஆகணும் .ரஷ்யா மட்டும் சும்மா குடுதுருவானா ? அவனோட பழைய கப்பலை நல்ல காசுக்கு வாங்க வேண்டும் என்றுதானே! உலகம் முழுவதும் புத்தர்களால் நடத்தபடுவது அல்ல

       //உங்க நாட்டு மக்களுக்கு கல்வி வழங்கணும்னா அவங்க காசு கட்டித்தான் படிக்கணும் இப்படின்னு பல நிபந்தனைகள்).
       //

       இது அப்பட்டமான பொய் . தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு வேண்டும் என்று பெற்றோர்களாக தனியார் நிறுவனத்தை நாடுகிறார்கள் . 1990 முன்பும் மக்களிடம் இதே ஆசை இருந்தது ஆனால் காசு இல்லை . இன்றைக்கு ஆசை காசு இருஅண்டும் இருக்கிறது

       //இப்போ அப்பன் பை நிறைய சில்லற குலுங்குது. ஆனா, அந்த சில்லறையை கொடுத்தவனுங்கள்ள ஒருத்தன் கதவை பெயர்த்துகிட்டு போறான், கிணற்றை ஒருத்தன் இறைச்சு நிலத்தடி நீரை இல்லாம பண்றான், ஒருத்தன் நிலத்தைத் தோண்டி உள்ளே இருக்கிறத எல்லாம் எடுத்துட்டு போகணும்கிறான்.
       //

       கிணறு தோண்ட தெரியாது ,தண்ணி இறைக்க தெரியாது , நிலத்தை தோண்டி வளம் எடுக்க தெரியாது . நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று இருக்கும் குடும்பத்தாரை வைத்து கொண்டு குடும்பத்தலைவன் எடுத்த முடிவு

       • ராமன்,
        //கழுத்து வரை கடன் இருந்த இந்தியாவிற்கு மாற்றுவழி என்ன இருந்தது, என்று கூற முடியுமா?//

        கடனை அடைக்க மேலும் கடன் வாங்க வேண்டும் அல்லது நாட்டை அடகு வைக்க வேண்டும் என்பதற்கு மாற்று நிச்சயமாக இருக்கிறது. அதைப் பற்றி தெரிந்து கொள்வதற்கான திறந்த மனமும் (out of box thinking) பொறுமையும் உங்களுக்கு இருந்தால் அதைப் பற்றி அறிந்து கொள்ளும் விருப்பம் இருந்தால் சொல்லுங்கள். விவாதிக்கலாம். ஒரு வரியிலோ, பின்னூட்ட விவாதத்திலோ அதை பேசி விட முடியாது.

        //அதே வளங்கள் சோசியலிசத்தில் இருந்த போது எதுவும் பண்ணாமல் இருந்து விட்டு புலம்பல் எதற்கு ?//
        1990-க்கு முன்பும் சரி, பின்பும் சரி வளங்களை பெரும்பான்மை நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்தவில்லை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 1990-களுக்குப் பிறகு வெளிநாட்டு கொள்ளை அதிகமாகியிருக்கிறது.

        //2G வளம் என்பதே முதலாளித்துவ தொழில்நுட்பங்கள் உருவாக்கியதே!//
        தவறான கருத்து. அறிவியல்/தொழில்நுட்பம் முதலாளித்துவத்தோடு பிணைந்தது இல்லை. முதல் போட்டு தொழில் செய்பவருக்கு தொழில் நுட்ப முன்னேற்றத்தில் அக்கறை இருக்க வேண்டியதில்லை. அவருக்கு தேவை போட்ட முதலுக்கு லாபம் (தொழில் நுட்ப வளர்ச்சி ஒரு incidental விளைவுதான்)

        //அப்போ சோசியலிசத்தில் பணம் சம்பாதித்து மக்களை நல்ல வைத்து இருந்தா , எதுக்கு கடன் கேட்டு இன்னொருத்தன் கிட்ட போகணும் ? உதவி வேணும்னா பண்ணிதான் ஆகணும் .ரஷ்யா மட்டும் சும்மா குடுதுருவானா ? அவனோட பழைய கப்பலை நல்ல காசுக்கு வாங்க வேண்டும் என்றுதானே! உலகம் முழுவதும் புத்தர்களால் நடத்தபடுவது அல்ல//

        உண்மைதான், வெளிநாட்டுக் காரன் கால்ல விழுந்தா, நம்ம தலையை அடகு கேட்கத்தான் செய்வான். மாற்று வழியைத்தான் பார்க்கணும்

        //இது அப்பட்டமான பொய் . தங்கள் குழந்தைகளுக்கு நல்ல வாய்ப்பு வேண்டும் என்று பெற்றோர்களாக தனியார் நிறுவனத்தை நாடுகிறார்கள் . 1990 முன்பும் மக்களிடம் இதே ஆசை இருந்தது ஆனால் காசு இல்லை . இன்றைக்கு ஆசை காசு இருஅண்டும் இருக்கிறது//

        1980-க்கு முன்பு தனியார் பள்ளிகள் விரல் விட்டும் எண்ணிக்கையில் மட்டும்தான், அரசு/அரசு உதவி பெறும் பள்ளிகள்தான் பெரும்பான்மை. 1980-களில் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னணியை பாருங்கள். பள்ளிகள் வந்த பிறகுதான் ஆசை, காசு எல்லாம் வருகிறது.

        //கிணறு தோண்ட தெரியாது ,தண்ணி இறைக்க தெரியாது , நிலத்தை தோண்டி வளம் எடுக்க தெரியாது . நான் எதுவும் பண்ண மாட்டேன் என்று இருக்கும் குடும்பத்தாரை வைத்து கொண்டு குடும்பத்தலைவன் எடுத்த முடிவு//

        குடும்பத்தார் பிரச்சனையா, குடும்பத் தலைவன் பிரச்சனையான்னு பேசலாம் 🙂

      • ///இதுதான் வளர்ச்சின்னு சாதிக்கிறாரு நம்ம பொருளாதாரப் புலி அதியமான்.//

       புனைபெயர்களில் மறைந்து கொண்டு இப்படி தனி மனித தாக்குதல் நடத்துவக்தெ ______ வாடிக்கை !! சரி, வளர்ச்சி வேண்டாம், 70கள் மாதிரி பட்டினி கிடக்கலாம். இப்ப யாருக்கு என்ன !!

       அய்.நா அறிக்கை மிக தெளிவாக விளக்கியும் அதை ‘ஏற்க்க’ மனமில்லாமல் denial modeஇல்
       தம்மை தாமே ஏமாற்றி கொண்டு திரிபவர்களிடம் ‘உரையாடுவதே’ வேஸ்ட் என்று புரிந்து பல காலம் ஆகிவிட்டது. இங்கு வெங்கடேசனுக்கு ஒரு விளக்கம் அளித்தேன். அவ்வளவு தான். உங்களுடன் ‘உரையாட’ எனக்கு திறமை பத்தாது காம்ரேட் !!

       • அதியமான் சார்!

        உங்கள் புள்ளிவிபரங்களையும், உங்கள் பதிவுகளுக்கான சுட்டிகளையும் படித்து படித்து மனப்பாடம் செய்த பிறகும் கன்வின்ஸ் ஆக முடியாததால் கடுப்பில் நான் சிந்திய ஒரு வார்த்தையை மன்னித்து விடுங்கள். மற்றபடி, உரையாடுவதற்கான உங்கள் திறமையில் யாருக்கும் சந்தேகம் இல்லை.

     • இந்த புள்ளிவிவரங்கள் பாராட்டும்படி உள்ளன. நன்றி, அதியமான்.

      இதற்கு ஏதேனும் மறுப்பு உள்ளதா?

    • இதில் நான் மாறுபடுகிறேன் அதியமான் அவர்களே . அந்நிய செலாவணி நமது பொருள் ஈட்டலில் மட்டும் வந்தது அல்ல . அந்நிய முதலாளிகள் நம்மிடம் கொடுத்து வைத்துள்ள பணமும் அடங்கும் அல்லவா !

     அதாவது நாம் ஈட்டியது நூறு பவுன் தங்கம் என்று கொள்வோம், நமது தோட்டத்தை பக்கத்துக்கு வீட்டுகருடைய ஐம்பது பவுன் தங்கம் வாங்கிகொண்டு மாற்றிகொல்கிறோம் . எப்போது வேண்டுமானாலும் அவர் நிலத்தை ஒப்படைத்து விட்டு தங்கத்தை பெற்று கொள்ளலாம் எனு ஒப்பந்தம் போட்டு கொள்கிறோம் .

     இப்போது நம்மிடம் எவ்வளவு தங்கம் உள்ளது ? 150 பவுன். ஆனால் நம்முடையது எவ்வளவு ? 100 பவுன்

     இந்த 330 பில்லியன் டாலரில் இது எவ்வளவு என்கின்ற புள்ளிவிவரம் எனக்கு தெரியவில்லை .

     சென்ற ஆண்டு நடப்பு கணக்கு பற்றாக்குறை வந்து , ரூபாயின் மதிப்பு 70 ஐ தொட்டது நினைவுக்கு வருகிறது .

     [நடப்பு கணக்கு ( கைமாத்து – அடுத்த மாதம் திறப்பி தருகிறேன் )
     கடன் – நீண்டகால கடன் , எமி கட்ட முடிந்தால் போடும்
     ]

     • கடந்த பத்தாண்டுகளில் வர்த்தகப் பற்றாக்குறை நெகடிவ் இல் தான் உள்ளது. எனவே, இந்த 300 பில்லியன் டாலரில் ஏற்றுமதி மூலம் ஒன்றும் வந்திருக்காது. ஒன்று ஷேர் மார்கெட்டில் வெளிநாட்டினர் போட்ட பணம். அல்லது, வெளிநாடு வாழ் இந்தியர் அனுப்பிய பணம். புரிதல் சரிதானா?

      இப்படி டாலருக்காக அடமானம் வைக்கிறார்களே. எதிர்காலத்தில் ஒவ்வொரு ஊராக விற்கவேண்டி வருமோ? இன்று கூடுவாஞ்சேரி, நாளை காட்டாங்குளத்தூர் என்ற வகையில்.

    • அதியமான்,
     // 90கள் வரை அந்நிய செலாவணி பற்றாமல், வருடந்தோரும் அய்.எம்.எஃப் இடம் கடன் வாங்கி சமாளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கு. //

     இப்போதும் நிறைய கடன் வாங்குவதாகவே தெரிகிறது.

     http://www.tradingeconomics.com/india/external-debt

     இப்போது அந்நிய செலாவணி அதிகம் இருக்க காரணம் ஏற்றுமதி பெருகியதால் அல்லவே. ராமன் சொன்னது போல அடமானம் வைத்து கைமாத்தாக பெறப்பட்டுள்ளதாக அல்லவா தெரிகிறது?

     • இப்ப வாங்கும் கடன் அய்.எம்.எஃப் இடம் அல்ல. அது தான் முக்கிய விசியம். இந்த வகை கடன்களை வாங்காமலும் சமாளிக்க முடியும். கம்மி வட்டிக்கு கிடைப்பதால் வாங்குகிறார்கள். திருப்பி அளிப்பதில் சிக்கல், திவால், அல்லது அன்னிய செலவாணி பற்றாகுறை எதுவுமில்லை.
      அய்.எம்.எஃப்க்கும் இவைகளுக்கு வித்தியாசம் என்ன என்பதை தேடி படிக்கவும். இதை பற்றி எனது பழைய பதிவு உங்களுகு பயனளிக்கலாம் :

      http://nellikkani.blogspot.in/2008/05/1991.html
      1991இல் இந்தியா திவாலாகியிருந்தால் ?

      ///இப்போது அந்நிய செலாவணி அதிகம் இருக்க காரணம் ஏற்றுமதி பெருகியதால் அல்லவே. ராமன் சொன்னது போல அடமானம் வைத்து கைமாத்தாக பெறப்பட்டுள்ளதாக அல்லவா தெரிகிறது?// இல்லை. ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் அன்னிய நேரடி முதலீடு (both FII and FDI) ;ராமன் doesn’t know what he is talking about.

      • திருத்தம் –

       //இல்லை. ஏற்றுமதி அதிகரிப்பு மற்றும் அன்னிய நேரடி முதலீடு (both FII and FDI) ;ராமன் doesn’t know what he is talking about.//

       FII என்பது ஏற்றுமதி அதிகரிப்பு இல்லை – Foreign Institutional Investment அதாவது பங்குச் சந்தையில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு. FDI – Foreign Direct Investoment அதாவது அன்னிய நேரடி முதலீடு

       1990-களுக்குப் பிறகு இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகம் 2000-களின் தொடக்கத்தில் ஒரு ஆண்டைத் தவிர எப்போதுமே நெகட்டிவில்தான் இருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் 2009-க்குப் பிறகு நெகட்டிவ்தான். (தரவுகள் http://www.tradingeconomics.com தளத்திலேயே உள்ளன).

       பற்றாக்குறையை சரிக்கட்டுவது வெளிநாட்டுக் கடன் அல்லது வெளிநாட்டு முதலீடுதான். இரண்டுமே வட்டி, லாபம், அசல் என்று திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியவை. அத்தோடு கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைக்கும் அடிபணிய வைப்பவை.

       • ///பற்றாக்குறையை சரிக்கட்டுவது வெளிநாட்டுக் கடன் அல்லது வெளிநாட்டு முதலீடுதான். இரண்டுமே வட்டி, லாபம், அசல் என்று திருப்பிக் கொடுக்கப்பட வேண்டியவை. அத்தோடு கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைக்கும் அடிபணிய வைப்பவை.///

        அன்னிய நேரடி முதலீடு மற்றும் FII உடனடியாக ‘திருப்பி’ கொடுக்க தேவை வராது. ஆதாவது ஒரே கணத்தில். தினமும் புதிய வரவும், வெளியேறுதலும் நடந்து கொண்டே இருக்கும். அன்னிய கடன் என்பது இப்ப development projects, aid என்ற வகையில் மிக குறைந்த வட்டியில் project specific ஆக தான் வருகிறது.

        இவைகளை திருப்பி கொடுக்க அன்னிய செலவாணி இருப்பு ரிசர்வ் வங்கியிடம் போதுமான அளவு இருக்க வேண்டும். கடந்த 60 ஆண்டுகளிலேயே இப்ப தான் 330 பில்லியன் டாலர்
        அளவுக்கு அன்னிய செலவாணி குவிந்து கிடக்கிறது. இது ஓவரா போகிறது என்பதால் தான்
        இப்ப வெளிநாட்டில் முதலீடு செய்யவும் தனி நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

        வெங்கடேசன் : Balance of payments தான் மிக முக்கிய அம்சம். அதில் உருவாகும் சிக்கல் மற்றும் திவால் நிலமையை தான் புரிந்து கொள்ள வேண்டும். 1991இல் இந்தியாவில் அப்படி பெரும் அபாயம் உருவாகி, பிறகு மீண்டு வந்தோம். மற்றபடி trade deficit, foreign currency loans எல்லாம் மிக சாதாரணமான விசியம். அதில் இப்படி சிக்கல் வராமல் சமாளிக்க BoP level அய் கண்காணித்தாலே போதும். மேலும் பல வளர்ந்த நாடுகளில் trade deficit, foreign commercial borrowings, carry trade மிக சகஜம். பல பத்தாண்டுகளாக நடக்கிறது. சரி, BoP crisis பற்றி அறிய : http://en.wikipedia.org/wiki/1991_Indian_economic_crisis

        இதை எப்படி சமாளித்தோம் என்பதை பற்றி எனது பிளாக் பதிவில் மேலே சுருக்கமாக விவரித்திருக்கிறேன். ஆனால் அதற்க்குள் சென்று அலசி, ஆராய்ந்து, உள்வாங்கி பிறகு மறுக்க குமரேசன் போன்ற தோழர்களால முடியாது என்பதையும் அறிவேன். 1991 சிக்கல் ஏன் உருவானது, அன்று இவர்கள் கையில் அதிகாரம் இருந்திருந்தால் எப்படி அதை தீர்த்திருப்பார்கள் என்ற எளிய கேள்விக்கு இன்று வரை பதில் சொல்லி முடிந்ததில்லை. சரி,
        தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது..

        • இவரை போயி முதலாளித்துவ அறிவாளியினு வினவு கூறுவதை நினைத்தால் சிரிப்பு தான் வருது ! நடப்பு கணக்கு பற்றாகுறையை[CAD] , அந்நிய நிறுவன முதலிடுகள் [FII ] மூலமாக சரிகட்ட முடியும் என்று கூறும் அதியமானு மகா பெரிய முதலைளித்துவ அறிவிலி . நடப்பு கணக்கு பற்றாகுறை என்பது ஏற்றுமதி .இறக்குமதிக்குமான அமெரிக்க டாலர் மதிப்பிலான வேறுபாடு. இந்தியாவை பொறுத்தவை ஏற்றுமதியை விட இறக்குமதி எப்போதும் ,எந்த financial year லும் ,அதிகமாகவே இருக்கும் . எனவே நடப்பு கணக்கும் பற்றாகுறையாக தான் எப்போதும் இருக்கும்.[வாசகர்கள் ஏற்றுமதி .இறக்குமதி இரண்டும் அமெரிக்க டாலர் அடிப்டையில் நடப்பதை கருத்தில் கொள்ளவேண்டும். ] . இதனை கட்டுபடுத்துவதும் RBI தான் .

         அந்நிய நிறுவன முதலிடுகள்{FII ] என்பது அந்நிய நிறுவனங்கள் இந்திய பங்கு சந்தை மற்றும பிற [debt ] மூலம் முதலீடு செய்யபடுவது. அவர்கள் முதலீடு செய்யும் போது அமெரிக்க டாலர் இந்தியாவின் உள் வருவதும் , முதலீடை எடுத்து செல்லும் போது அமெரிக்க டாலர் இந்தியாவிற்கு வெளியே செல்வதும் தான் நடைபெறும். உள் வரும் அல்லது வெளிசெல்லும் அமெரிக்க டாலரை கட்டுபடுத்துவது RBI. இந்த அமெரிக்க டாலரை தான் அந்நிய செலாவானி கையிருப்பு என்று கூறுவார்கள்[FER]. FII அதிக முதலீட்டு செய்யும் போது அந்நிய செலாவானி கையிருப்பு உயர்வதும் ,FII முதலீடை வெளியே எடுத்து செல்லும் போதுஅந்நிய செலாவானி கையிருப்பு குறைவதும் தான் நடைபெறும்.

         இந்திய ஏற்றுமதி ,இறக்குமதிக்கான கணக்குகள்[பரிமாற்றங்கள்] ,மற்றும் FII முதலீடு ,முதலிடு திருப்பி எடுப்பு ஆகிய அனைத்துமே RBI யால் கட்டுபடுத்த பட்டு அவை கணக்கு வடிவ பரிமாற்றங்கள் தான். CAW மற்றும் FII இரண்டுமே RBI யின் அந்நிய செலாவானி கையிருப்பு[FER] ஐ பாதிக்க தான் செய்யும்.

         தொடரும் …..

        • இந்தியா பெற்றோலிய பொருட்கள் மற்றும் தங்கத்தை அதிக அளவிற்கு இறக்குமதி செய்வதால் மேலும் ஏற்றுமதி அந்த அளவிற்கு இல்லாததால் நமது நடப்பு கணக்கு பற்றாகுறையாகத்தான் இருக்கும். அதற்கு ஏற்படும் பற்றாகுறையை FII முதலிடுகள் மூலம் RBI நிவர்த்தி செய்யும். FII முதலிடுகள் என்பது என்ன ? நாம் நமது இந்திய பொருளாதார கட்டுமானங்களை [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவன ] அடமானம் வைத்து பெறும் அந்நிய முதலிடுகள் [அமெரிக்க டாலர் வடிவில் ].FII கள் மாபெரும் சூதாடிகள். அவர்கள் இந்தியவின் மீது செலுத்தும் சூதாடதுக்கான தொகை போன்றவை அவர்களின் முதலிடுகள். FII முதலிடுகள் எப்போது உள்வரும் ,எப்போது வெளிசெல்லும் என்று பாப்போம்

         தொடரும் …..

         • பங்கு சந்தையில் தானே FII இன்வெஸ்ட் செய்கின்றார்கள் அது எப்படி நாம் அடமானம் வைப்பதாக இருக்கும் என்று அதி… குதிக்க தேவை இல்லை. பங்குகள் அனைத்துமே இந்தியாவின் தேசிய ,முதலாளித்துவ நிறுவனங்கள் தங்கள் மூலதனத்தை விற்று பெரும் பணம் தான். இந்திய பங்குகளை வாங்கிய FII என்று வேண்டுமானாலும் அவற்றை இந்திய பங்கு சந்தையில் விற்று பணத்தை அமெரிக்க டாலர் வடிவில் எடுத்து செல்லும்

         • தமிளு,

          CAD பற்றி இருக்கட்டும். BoP crisis 1991 பற்றியும், 50கள் முதல் 90கள் வரை அது போன்ற பற்றாகுறைகளை சமாளிக்க அய்.எம்.எஃப் இடம் கையேந்திய வரலாறு ஏன் இன்று மாறிவிட்டது, அதே அய்.எம்.எஃப் க்கு இன்று டாலர்களை டெபாஸிட்டாக அளிக்கிறோம் என்பதை பற்றியும், அன்றைய கையேந்தி நிலை (உம்மை போன்ற அறிவீலி நிபுனர்களின் ஆதிக்கத்தால்) பரவாயில்லையா அல்லது இன்றைய நிலை பரவாயில்லையா என்பதை பற்றியும் எடுத்து விடேன் பாக்கலாம் !! 🙂 🙂

          CAD சென்ற ஆண்டு கூட அதிகரித்து பயங்காட்டியது. ஆனால் யாரும் பெருசா அலட்டிக்கல. 70கள், 80களை போல் திவால் நிலைக்கு அருகே இந்தியா தள்ளபடாது என்ற உண்மையை உணர்ந்து யாரும் இந்த புதிய தாராளவாத கொள்கைகளை மாற்ற சொல்லவில்லை. அய்.எம்.எஃப் தானே மகா வில்லன் ? அவன் தானே structural adjustment programs, austerity measure, reduce social welfare spending என்றெல்லாம் மிரட்டும் ‘கயவன்’ ? அவனிடம் இருந்து இந்தியா எப்படி விடுபட்டு இன்று அவனுக்கே கடன் கொடுக்கும் வலிமையை பெற்றது என்ற கதை பேசலாமே ? 🙂
          இல்லா முடியாத உன்னால ? 🙂

          சாவேஸ் என்ற சோசியலிச தலைவர் வெனிசுலால கொண்டு வந்த சோசியலிச பாணி
          கட்டுபாடுகளால இன்று வெனிசுலா அன்னிய செலாவணி பற்றாமல், மருந்து வாங்க காசிலாமல்ல, திவால் நிலைக்கு தள்ளபட்டு, மக்கள் படாத பாட படும் கதை பற்றியும்
          ஒப்பிடலாமே. இத்தனைக்கும் எண்ணை வளம் மிக மிக மிக அதிகம் கொண்ட நாடு அது.
          பொருளாதார அடிப்படை பற்றி உமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில்
          கீழ்தரமான சொல்லாடல்களில் எம்மை விளித்து, பேசினால் பயந்துவிடுவேனா என்ன ?

          • பொம்மையை போட்டே பயம் கட்டுராருயா இந்த அதியமானு !அறிவிலி என்பது சரியாக பொருந்துமையா இந்த மானுக்கு ! FII , FDI மூலம் வரும் அமெரிக்க டாலரை கொண்டுபோயி மறுபடியும் I MF ல் டெபொசிட் செய்வது தான இவருக்கு பொருமை போலகிது !இந்தியாவை அதன் பொருளாதார கட்டுமானங்களான [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவனம் ] அடமானம் வைத்து டாலர் பெற்று அதனை மீண்டும் டெபொசிட் செய்ய இந்திய அரசு என்ன செட்டு நடத்தும் அடகு கதையா ?

           அதி புத்திசாலி இந்த அதியமானு ! அந்நிய செலவாணி கையிருப்புக்காக யாரிடம் கடன் வாங்கினாலும் ஒன்னுதான் ! அன்னிக்கி I M F இன்னிக்கி FII மற்றும் FDI . இவிங்க இருவருக்கும் உள்ள வேறுபாட்டை வேண்டுமானால் விவாதிக்கலாமே தவிர I M F ல் கடன் வாங்க வில்லை FII மற்றும் FDI காலில் தான் விழுந்து கிடக்கின்றேன் என்று அதி அதிரடியா வேக்காமே இல்லாம பெனாதுராறு

           CAD சென்ற ஆண்டு என்ன .., எந்த ஆண்டுமே பயம் காட்ட தானே செய்யும் ! FII எப்ப வேண்டும் என்றாலும் முதலிட்டை எடுத்துக்கொண்டு வெளியேறி செல்லும் போது அது அன்னிய செலவானி கையிருப்பை தானே பாதிக்கும் . US $ 450.963 பில்லியன் அளவிற்கான அந்நிய முதலிடுகள் வெளியே செல்லும் போது அதனை ஈடுகட்ட நம்ம்மிடம் US $330 பில்லியன்அந்நிய செலவாணி கையிருப்பு தானே உள்ளது. அப்ப என்ன செய்விங்க மொதலாளி அதியமானு ?

           மொட்டையா சாவேஸ் என்ற சோசியலிச தலைவர் வெனிசுலால என்று பேசுவதால எந்த புண்ணியமும் இல்ல அதியமானு ! அவரு எந்த விதமான பொருளாதார கொள்ளையை கடைபிடித்தாறு !அவருடைய நாட்டின் மத்திய வங்கியின் கொள்கை என்ன என்று பேசுங்க தரகு முத்லாலாளி அதியமானு !

          • கடன் கேட்டால் I M F ரூல்ஸ் போடுறான் என்பதற்கு தானே fii கிட்ட கையேந்தி நிக்கிறிங்க தரகு முதலாளி அதியமானு ?! imf fii fdi ஆகிய வற்றை விட்டு விட்டு தேசிய பொருளாதாரத்தை வளர்க்க இது என்ன செய்து இருக்கு இந்த அரசுகள் ?இன்றுவரைக்கும் இந்தியாவில் கம்யுனிஸ்டு காரங்களா ஆட்சி செய்து இந்திய பொருளாதரத்தை சீர்குலைத்தார்கள் ? சுய சார்பு உடைய ,தேசிய முதலாளித்துவ பொருளாதாரத்தை நடைமுறை செய்ய ஏதாவது முயற்சி செய்தார்களா ஆட்சியில் இருந்தவங்க?நேரு ஓரளவிற்கு முயன்ராறு . அது கூட அரசு முதலாளித்துவத்தை முன் எடுத்தறு.nlc ,bhel கூட அத்தகைய முயற்சி தான். இப்ப என்ன செய்யிறாங்க ஆட்சியில் உள்ள புரோக்கருங்க ? அரசு நிறுவங்களை கூட வித்து தரகு வேலை தானே செய்யிறாங்க ?
           //அய்.எம்.எஃப் தானே மகா வில்லன் ? அவன் தானே structural adjustment programs, austerity measure, reduce social welfare spending என்றெல்லாம் மிரட்டும் ‘கயவன்’ ? அவனிடம் இருந்து இந்தியா எப்படி விடுபட்டு இன்று அவனுக்கே கடன் கொடுக்கும் வலிமையை பெற்றது என்ற கதை பேசலாமே ? 🙂
           இல்லா முடியாத உன்னால ? :)//

          • மறுபடியும் BoP crisis வராது என்று அதியமானு கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்ண தயாரா ? fii மற்றும் fdi முதலீட்டை வெளியே கொண்டு சென்றால் அந்நிய செலவாணி கையிருப்பு பாதாளத்துக்கு தானே செல்லும் ? அப்ப அந்நிய செலவாணி கையிருப்பை அதிக படுத்த தங்கத்தை டன் கணக்கில் எடுத்துக்கொண்டு அடமானம் வைக்க imf க்கு தானே ஓடுவிங்க தரகு முதலாளி அதியமானு ? அம்மா செண்டிமென்டு ,அப்பா செண்டிமென்டு படம் எல்லாம் பார்த்த தமிழ் மக்களுக்கு imf செண்டிமென்டு படம் காட்டுறாரு தரகு முத்லாலாளி அதியமானு !

          • அறிவீலி என்ற உடன் ஒருமையில் பேசுறிங்களே மானு ! முட்டாள் என்று மாற்றி வேண்டுமானால் படிக்கலாமே ! “உம்மை போன்ற அறிவீலி நிபுனர்களின் ஆதிக்கத்தால்” என்று கூறினிர்கள் அல்லவா ? அந்த அறிவீலி நிபுனர்கள் யார் யார் என்று பார்கலாமா ?

           இந்திரா காந்தி பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

           ராஜீவ் காந்தி பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

           சிங் பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

           சேகர் பிரதமாராக இருந்த போது finance minister யாரு கண்ணு ?

           இவிங்க எல்லாம் கம்யுனிஸ்டா தரகு முத்லாலாளி அதியமானு !

           //அதே அய்.எம்.எஃப் க்கு இன்று டாலர்களை டெபாஸிட்டாக அளிக்கிறோம் என்பதை பற்றியும், அன்றைய கையேந்தி நிலை (உம்மை போன்ற அறிவீலி நிபுனர்களின் ஆதிக்கத்தால்) பரவாயில்லையா அல்லது இன்றைய நிலை பரவாயில்லையா என்பதை பற்றியும் எடுத்து விடேன் பாக்கலாம்//

          • அதியமான் ,

           என்னுடைய அறிவை வெளிக்காட்ட எழுதியது அல்ல இந்த பின்னுட்டங்கள். தச்சு வேலை செய்யும் 10 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு ம க இ க தோழர் எனக்கு அளித்த அரசியல் ,பொருளாதார அறிவு அளித்த செயலின் வெளிப்பாடு தான் என் கருத்துக்கள். இன்று மக்களுக்கு எதிரான உங்கள் பொருளாதார கொள்கைகளை அம்பல படுத்த பயன் படுகிறது .

           ம க இ க தோழருக்கு நன்றி
           //பொருளாதார அடிப்படை பற்றி உமக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும் என்ற ஆணவத்தில் கீழ்தரமான சொல்லாடல்களில் எம்மை விளித்து, பேசினால் பயந்துவிடுவேனா என்ன ?//

        • 330 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய செலவாணி குவிந்து கிடக்கிறது என்று முட்டாள் தனமாக பெருமை ப்ட்டுக்கொள்கின்ராறு அதி அதியமானு ! எவனாவது 330 பில்லியன் டாலர் FII மற்றும் FDI மூலம் வந்த டாலரை நினைத்து சந்தோசம் அடையமுடியுமா ? அம்புட்டும் நான் முன்பே கூறியது படி நமது இந்திய பொருளாதார கட்டுமானங்களை [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவன ] அடமானம் வைத்து பெறும் அந்நிய முதலிடுகள் [அமெரிக்க டாலர் வடிவில் ] மூலமாக நமக்கு கிடைத்த கடன் தொகை தான்.கடனுக்கான அடமானம் இந்திய பொருளாதார கட்டுமானங்களான [தேசியஉடமை மற்றும் முதலாளித்துவ நிறுவனம் ] . க்டன்வாங்கி 330 பில்லியன் டாலர் அன்னிய செலவாணி[FE ] கையிருப்பு இருக்கு என்று பீத்திகொள்வது எல்லாம் ஒரு பிழைப்பா அதியமானு ?

         //அன்னிய நேரடி முதலீடு மற்றும் FII உடனடியாக ‘திருப்பி’ கொடுக்க தேவை வராது. ஆதாவது ஒரே கணத்தில். தினமும் புதிய வரவும், வெளியேறுதலும் நடந்து கொண்டே இருக்கும். //

         • //330 பில்லியன் டாலர் அளவுக்கு அன்னிய செலவாணி குவிந்து கிடக்கிறது//

          அதுக்கு கூட வழி இல்லாம பிச்சை எடுத்துட்டு இருந்தது மறந்து போச்சு ? ரேசன் கடையில் க்யூவில் மறுபடியும் உங்களை நிக்க விட்ட சரியா போகும்.

          • இராமன் ,இந்தியாவையே வித்துபுட்டு கூட us $ 1000 டிர்லியன் கையிருப்பு இருகிறது என்று பெருமை படும் ஆளுங்க தானே , 330 பில்லியன் டாலர் fii ,மற்றும் fdi கிட்ட கையேந்தி பெற்ற கடன் பணத்தை பற்றி பெருமையாக பேசுவாங்க ! அதாங்க உங்களையும் ,அதியமானையும் தான் கூறுகிறேன்.

         • //மொட்டையா சாவேஸ் என்ற சோசியலிச தலைவர் வெனிசுலால என்று பேசுவதால எந்த புண்ணியமும் இல்ல அதியமானு ! அவரு எந்த விதமான பொருளாதார கொள்ளையை கடைபிடித்தாறு !அவருடைய நாட்டின் மத்திய வங்கியின் கொள்கை என்ன என்று பேசுங்க தரகு முத்லாலாளி அதியமானு !//

          இது போன்ற ‘தரகு முதலாளி’ சொல்லாடல்கள் தான் மிக எரிச்சல் ஊட்டுகின்றன. தரகு முதலாளி என்று யாரும் இல்லை அப்பனே. உமக்கு தான் சொந்த புத்தி அறவே இல்லாமல் உம் தோழர்கள் நூறு வருடங்களாக சொல்லும் அதே சொல்லாடலை கிளிப்பிள்ளை போல் சொல்லி திரிகிறாய்.

          வெனிசுலா இன்று திவால் நிலையில் இருக்கும். ஆனால் பக்கத்து நாடான் சிலே மிக பாதுகாப்பாக, சவுகரியமாக இருக்கு. இத்தனைக்கும் உலகின் மிக அதிக எண்ணை வளம் கொண்ட நாடு வெனிசுலா. சாவேஸ் காட்டிய ‘சோசியலிச’ வழியில் சென்ற வெனிசுலா :

          http://www.breitbart.com/national-security/2015/01/30/venezuela-heads-for-a-breaking-point/
          The shortages in Venezuela have become so severe that even long-time Chavistas–supporters of the socialist government of the now deceased Hugo Chavez–are reaching a breaking point.

          • விவாதம் என்று வந்தால் முழுமையாக விவாதிக்கணும் அதியமானு !வெனிசுலா திவால் ஆகிறது என்றால் அவர்கள் பொருளாதார கொள்கை என்ன ? அது சரியா தவறா என்று விவாதிக்கணும் . அதை விட்டு விட்டு அவிங்க நல்லா இருக்காங்க ஆனா இவிங்க தான் இப்படி நாசமா போயிட்டாங்க என்று பெனாத்த கூடாது .

           தரகு, புரோக்கர் என்ற சொல்லாடல் முதலாளித்துவதை ஆதரிக்கும் உங்களுக்கு ஏன் எரிச்சல் ஊட்ட வேண்டும் ? அதன் பொருள் உங்களுக்கு தெரியும் அல்லவா ?பெண்களை வைத்து மாமா வேலை செய்பவனுக்கும் , நாட்டின் ஒட்டுமொத்த வளங்களையும் வைத்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு மாமா வேலை செய்து பிழைப்பவனுக்கும் அது தானே பேரு ! தரகு வேலையை எதனை வைத்து செய்தாலும் தரகனுக்கும் ஒரு ஷேர் கிடைக்கும் இல்லையா அதியமானு ? அப்புறம் எதுக்கு தரகு முதலாளி என்ற சொல்லாக்கத்தில் தேவையிலாத கூச்சம் உங்களுக்கு ?

          • ///வெனிசுலா திவால் ஆகிறது என்றால் அவர்கள் பொருளாதார கொள்கை என்ன ? அது சரியா தவறா என்று விவாதிக்கணும்//

           ஆம். அதை பற்றி விரிவாக ஒரு பதிவு எழுதுகிறேன். மற்றபடி உம்மை போன்றவர்களுடன் ‘விவாதிக்க’ எல்லாம் முடியாது !! வெனிசுலாவின் anti-capitalistic polices under Chauves அந்நாட்டை எப்படி திவாலாக்கியது, மாற்றாக அண்டை நாடான சிலே எப்படி வளமாக, வலுவாக வளர்ந்து வருவதை ஒப்பிட்டு.

        • இதுவரை …….

         Total அந்நிய நேரடி முதலீடு [ FDI ] =US$ 350. 963 பில்லியன்

         Total அந்நிய நிறுவன முதலீடு = US $ 150 பில்லியன்

         அந்நிய முதலீடு மொத்தம் =US $ 450.963 பில்லியன்

         total கையிருப்பு அந்நிய செலவாணி = US $330 பில்லியன்

         அந்நிய முதலிடுகள் என்று வேண்டுமானாலும் வெளியே செல்லகூடியவை. US $ 450.963 பில்லியன் அளவிற்கான அந்நிய முதலிடுகள் வெளியே செல்லும் போது [எப்படி பட்ட நிலையில் வெளியே செல்லும் என்று பின்பு விளக்குகிறேன் ] அதனை ஈடுகட்ட நம்ம்மிடம் US $330 பில்லியன்அந்நிய செலவாணி கையிருப்பு தானே உள்ளது. அதனை மொத்தமாக கொடுத்துவிட்டால் டாலருக்கான் தேவை உயர்ந்து டாலருக்கு இனையான இந்திய பண மதிப்பு குறைந்து நாம் அதிக இந்திய பணம் கொடுத்து தானே டாலரை வாங்கி இறக்குமதி செய்யவேண்டும் . FDI ,FII முதலிடுகள் பற்றி பீத்திகொள்ளும் தரகு முதலாளித்துவ அடிவருடி அதியமானுக்கு இந்தியாவின சுயமான பொருளாதாரத்தின் மீது, எதேனும் பற்று இருக்கின்றதா ?

         • ///இந்தியாவின சுயமான பொருளாதாரத்தின் மீது, எதேனும் பற்று இருக்கின்றதா ?//

          இதை லெனினி முதல் ப்ரெஸ்னேவ் வரை இருந்த ரஸ்ஸிய தலைவர்களிடம் கேட்டிற்க்க வேண்டும். அன்றும், லெனின் காலத்தில், ஸ்டாலின் காலத்தில் இறக்குமதி செய்ய டாலர் / பவுண்ட் தேவைபட்டதால், பல ‘சமரசங்கள்’ செய்தனர். மாவோ அதற்க்கு மேலே சென்று அமெரிக்கவுடன் ‘நட்பு’ பாராட்டினார்.

          இந்த்துத்வ கும்பல்கள் இந்த விசியத்தில் முன்பு சுதேசி / விதேசி என்று கூச்சல் இட்டதிற்க்கும் உம்முடைய வெற்று பேச்சுகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை. அன்னிய முதலீடுகள் மற்றும் உள்ளநாட்டு தொழில்துறைகளில் ’சந்தையை’ ஓரளவு இயங்க அனுமத்தித்தால், தான் இன்று 70கள். 80கள் போல் திவால் நிலையை தவரித்து, பஞ்சபாட்டு பாடாமல், வறுமையை பெரிய அளவில் குறைத்து, விலைவாசி உயர்வு விகிதங்களை, வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, வளர்ந்து வருகிறோம்..

          • முதலாளித்துவம் என்று பேசுகிறாரே தவிர அதை பற்றி முழுமையான புரிதல் எல்லாம் அதியமானுக்கு கிடையாது என்பது தான் அவரின் இந்த பதில் மூல்ம் உண்மையாகின்றது. தேசிய முதலாளித்துவத்துக்கும்,தரகு முத்லாளித்துவத்துக்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாம கூவுறாரு அதியமானு ! இந்திய அனைத்து வளங்களும் இந்தியாவின் முன்னேற்றத்துக்கே என்ற கொள்கை முடிவுடன் நம் நாட்டில் முதலளித்துவத்தை வளர்ப்பது தேசிய முதலாளித்துவம். இந்தியாவின் அனைத்து வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இரையாக கொடுத்துவிட்டு அதன் மிச்சங்களை ,கழிவுகளை மட்டும் எடுத்துகொள்வது தரகு முதலாளித்துவம்.

           ஏன் நீயி மலத்தை உண்கின்றாய் என்று கேட்டால் அவனும் தான் என்று ரஷ்யா ,சீனாவை கைகாட்டி மழுபுராறு அதியமானு ! அது எப்படி லெனின் மாவோ எல்லாம் டாலர் ஹன்டர் ஆனார்கள என்று உம்முடைய போலியான குற்ற சாட்டை நீர் தான் வெளக்கனும் அதியமானு !

           //இந்த்துத்வ கும்பல்கள் இந்த விசியத்தில் முன்பு சுதேசி / விதேசி என்று கூச்சல் இட்டதிற்க்கும் உம்முடைய வெற்று பேச்சுகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை//

        • US $ 450.963 பில்லியன் அளவிற்கு மொத்தமாக FDI மற்றும் FII முதலீடுகள் வந்து இருக்கு . ஆனால் மொத்த அந்நிய செலவாணி கையிருப்பு US $330 பில்லியன் அளவுக்கு தான் RBI இடம் இருக்கு . எனவே US $ 450.963 – US $330 = US $ 120.963 பில்லியன் அளவுக்கு FDI மற்றும் FII முதலீடுகள் என்ற பெயரில் கடனாக பெற்று இந்த முதலாளித்துவ சார்பு இந்திய அரசும் , இந்திய முதலாளிகளும் கரைத்து இருகின்றனர் .

         • தமிளு,

          இந்திரா காந்தி காலத்தில், அதற்க்கு முன்பும், 1991 வரை, இந்திய அரசுகள் ‘சோசியலிச’ கருத்தியல்வாதிகளிடம் சிக்கி சீரழிந்தது. இந்த ‘சோசியலிசம்’ உங்க மார்க்சிய அடிப்படை சோசியலிசம் அல்ல, அல்ல !! இது ஜனனாயக சோசியலிசம் என்னும் குளறுபடி சோசியலிசம். அது உருவாக்கிய லைசென்ஸ் ராஜ் பற்றி பேசியாச்சு. எனவே பழைய நிதி அமைச்சர்கள் பட்டியல் இட்டு வீண்.

          அய்.எம்.எஃப் பற்றி ஒரு வார்த்தை கூட எதிர்வினை ஆற்றாமல் சும்மா டயாய்கிறீகளே தம்பி !! FII குவிந்து கிடக்கு தான். அது மெக்சிக்கோவில் 90களில் திடிரேன வெளியேறியது போல் இந்தியாவில் இருந்து வெளியே சென்று விடும் என்ற பயம் எல்லாம் யாருக்கும் இல்லை. இன்னும் சொல்லபோனால் அந்நிய நிதி முதலீடுகளை பற்றிய ‘பயம்’ தான் நமது அரசுகளை பற்றாகுறை, பணவீக்கம், வட்டி விகுதங்களை ’பொறுப்புடன்’ கையாள அழுத்தம் கொடுக்கிறது. இந்திரா காந்தி காலத்தில் இது போல் இல்லை. பொறுப்பில்லாமல் இஸ்டத்துக்கு பற்றாகுறை பட்ஜெட்டுகள் (அய்ந்தாண்டு திட்டங்களுக்காக), அதன் விளைவாக மிக கடுமையான விலைவாசி உயர்வுகள், போராட்டங்கள், etc. You guys want to get back to those good ole days when we had beg IMF for dollars ?

          • இந்திய பொருளாதாரம் எத்தகையது என்பது கூட தெரியாமல் விவாதத்துக்கு நீர் வருவது சரியா அதியமானு !அதுக்கு பேரு தான் கலப்பு பொருளாதாரம் [mixed economy ] என்பது. ஏதோ இதுவரை நடந்த எல்லா இந்திய அரசாங்கங்களும் சோசியலிச அரசு என்ற ரேஞ்சிக்கு கூவுறாரு அதியமானு !இன்னும் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சோசியலிசம் இருக்கு என்பதற்காக இன்றைய மோடியின் அரசையும் சோசியலிச அரசு என்று வியாக்கானம் செய்வாரு அதியமானு ! அதியமானு கொஞ்சம் பொறுமையாக இருங்க …,FII FDI முலதனம் எல்லாம் எப்ப வெளியே போகும் என்று விரிவா சொல்கிறேன் ! //இது ஜனனாயக சோசியலிசம் என்னும் குளறுபடி சோசியலிசம்//

         • ///DI மற்றும் FII முதலீடுகள் என்ற பெயரில் கடனாக பெற்று இந்த///

          அவை கடன் அல்ல. கடன் என்றால் வட்டியிடன் குறிபிட்ட காலத்தில் திருப்பி செலுத்த வேண்டிய கட்டாயம் உண்டு. சரி அப்ப என்ன செய்யலாம் என்கிறீக ? முன்பு போல் டாலர் பற்றாகுறைகளை சமாளிக்க அய்.எம்.எஃப் இடம் இருந்து நிஜமான கடன் வாங்கி திவாலாகலாமா ? அய்.எம்.எஃப் கடன் சுமைகள் பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் சமளிப்பது உம்முடைய அடிப்படை நேர்மையை கேள்விக்குறியாக்கிறது.

          மேலும் 1990கள் வரை நம்முடைய ரூபாயின் மதிப்பு அரசால கட்டுபடுத்தபட்டு, fixed rates in both current and capital a/cs which led to artificial over valuation of Rupee, harming exports and creating acute scarcity for forex and a HUGE black market. and a huge corrupt import licensing ministry with its brokers and crones. இதை பற்றி எல்லாம் உம்மிடம் பேச முடியாது. அதற்க்கு முன்முடிவுகளற்ற திறந்த மனம் கொண்ட, சபை நாகரீகம் கொண்டவர்களே தேவை.

          • // முன்முடிவுகளற்ற திறந்த மனம் கொண்ட, சபை நாகரீகம் கொண்டவர்களே தேவை.

           இதை நான் ஆமோதிக்கிறேன்.

          • நடப்பு கணக்கு பற்றாகுறையையால் ஏற்படும் BoP பிரச்சனையை சமாளிக்க FII மற்றும் FDI மூலமாக வரும் அமெரிக்க டாலர்களை கொண்டு நம்முடைய அந்நிய செலவாணி கையிருப்பை உயர்திக்கலாமே என்று பேசுறாரு அதியமானு ! மேலும் FII மற்றும் FDI மூலமாக வரும் அமெரிக்க டாலர்கள் கடன் அல்ல ஆனால் முதலீடு என்று பொய் பேசுகின்ராறு அதியமானு ! FII மற்றும் FDI மூலமாக வரும் பணம் [அமெரிக்க டாலர்கள்] RBI கட்டுபாட்டுடன் இந்திய பணமாக மாற்றபட்டு இந்திய பங்கு சந்தையில் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் வாங்குவதன் மூலம் வந்தடைகின்றன. US $100கோடி பங்கு சந்தைக்கு வருகின்றது என்றால் அது குறைந்தது 30% லாபத்துடன் மீண்டும் வெளியே எடுத்து செல்லபடும். [US $130] . ஆனால் RBI முதலில் பெற்ற US $100 க்கு இப்போது US $130 கோடி கொடுக்கபடவேண்டும் அல்லவா ?ஒரு வேலை அந்த US $100 ஐ imf ல் RBI டெபொசிட் செய்து இருந்தாலும் எவ்வளவு வட்டி RBI க்கு கிடைத்து இருக்கும் ? 10% வட்டி என்றாலும் US $110 கோடி தான் மீண்டும் கிடைக்கும். எனவே US $100 அந்நிய முதலிட்டுக்கு US $20 கோடி நட்டம் எனபது தவிர்க்க இயலாதது .

           எனவே என்னுடைய முந்தைய கேள்வி படி : US $ 450.963 – US $330 = US $ 120.963 பில்லியன் அளவுக்கு FDI மற்றும் FII முதலீடுகள் என்ற பெயரில் கடனாக பெற்று இந்த முதலாளித்துவ சார்பு இந்திய அரசும் , இந்திய முதலாளிகளும் கரைத்து இருகின்றனர் .

           Note :

           அந்நிய முதலீடு மொத்தம் =US $ 450.963 பில்லியன்

           total கையிருப்பு அந்நிய செலவாணி = US $330 பில்லியன்

           விரையம் ஆக்க பட்ட அந்நிய செலவாணி = US $ 120.963 பில்லியன்

           தொடரும் …..

          • அட்ராசக்கை அட்ராசக்கை …, அதியமானு football ground ல் FII ,FDI சார்பான பக்கதிலும் என்னை imf சார்பா மறுப்பக்கதிலும் நிறுத்தி வெளையாட பாக்குறாரு !என்னமோ நான் imf க்கு ஆதரவா பேசுவது போல நினைத்துக்கொண்டு கதைகின்ராறு ! 100 கோடி மக்கள் உள்ள நாட்டில் அந்நிய செலாவானி பற்றாக்குறை ஏற்படுத்து என்றால் தரகு முதலாளித்துவ ஆட்சியாளர்களும் ,தரகு முதலாளிகளும் தானே காரணம் ? எவன் கிட்ட கடன் வாங்கினாலும் அது கேவலம் தானே ?

 5. வெங்கடேசன்,

  நீங்கள் புரிந்து கொள்ள விளைந்தது 1990-ல் ஏன் கோடு கிழிக்கிறார்கள் என்பதை. அதற்கான பதில் ஏற்றுமதி, இறக்குமதி சமநிலையில் மட்டும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி.

  நீங்கள் கேட்டது போன்ற academic கட்டுரைகளுக்கு http://monthlyreview.org/ என்ற தளத்தில் india economic reforms என்று தேடிப் பாருங்கள்.

  ஒரு பின்னூட்ட விவாத அளவில் குறிப்புகள் சொல்ல வேண்டுமானால்

  1. உலக அளவில் 1990-91-ல்தான் சோவியத் யூனியன் வீழ்ச்சி, சோசலிச முகாம் இல்லாமல் போகிறது. வரலாற்றின் முடிவு (The End of History – Francis Fukuyama) என்றும் இனிமேல் முதலாளித்துவம்தான் வழிகாட்டப் போகிறது என்றும் முதலாளித்துவ அறிஞர்கள் அறிவிக்கின்றனர்.

  2. மேற்கத்திய உலகில் 1970-களில் டாலர்-தங்கம் பிணைப்பு கைவிடப்படுகிறது.அமெரிக்க டாலர் அடிப்படையிலான உலகப் பரிமாற்றம், அதைத் தாங்கிப் பிடிக்க ஐ.எம்.எஃப், உலக வங்கி திட்டங்கள் இந்தியா போன்ற நாடுகளின் மீது சுமத்தப்படுகின்றன.

  3. நியோ லிபரல் – நியோ கான் என்று அழைக்கப்படும் புதிய தாராளவாத கொள்கைகள்தான் ஒரே தீர்வு என்று உலகம் முழுவதும் முன் வைக்கப்படுகின்றது. 1980-களில் சத்துணவுத் திட்டத்துக்கு உலகவங்கிக் கடன், இந்தியாவுக்கு ஐ.எம்.எஃப் கட்டமைப்பு மறுசீரமைப்பு கடன், தமிழ்நாட்டில் மெட்ரிக் பள்ளிகள், தனியார் பொறியியல் கல்லூரிகள் புற்றீசல் போல தோன்ற ஆரம்பிப்பது இவற்றை இணைத்துப் பாருங்கள்.

  4. 1990-களின் தொடக்கத்தில் ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தை ஊழல், 1990-களின் இறுதியில் சுக்ராம் டெலிகாம் ஊழல், 2000-களின் தொடக்கத்தில் தெல்கி பத்திர ஊழல், 2000-களின் இரண்டாவது பாதியில் 2ஜி ஊழல், நிலக்கரி ஒதுக்கீடு ஊழல் என்று ஒவ்வொரு கட்டமாக கடந்து போவதை கவனத்தில் கொள்ளுங்கள்

  5. பில்லியனில் வளர்ந்திருக்கும் வர்த்தகப் பற்றாக்குறை, இந்தியாவின் கருப்புப் பணப் புழக்கம், பங்குச் சந்தையில் அன்னிய முதலீடு, அன்னிய நேரடி முதலீடு என்ற பெரும் பாய்ச்சலால் அலைக்கழிக்கப்படுகிறது என்றும் பாருங்கள்.

  ராமன் சொல்வது போன்ற “The End of History” என்ற கருதுகோளை ஏற்றுக் கொண்டு, முதலாளித்துவ முன்வைப்புகளின் அடிப்படையில் மட்டுமான விவாதம் இந்த பிரச்சனையை புரிந்து கொள்ள பெருமளவில் உதவாது.

  – குமார்

  • நன்றி குமார்.

   நீங்கள் சொன்னது போல, இந்த விரிவான விஷயத்தில் பின்னூட்ட உரையாடல்கள் எந்தளவு பயன் விளைக்கும் என தெரியவில்லை. அவரரர் வேறு வேலை பார்க்க கிளம்பும் முன், அறிந்தவரை லாபம் என்ற அடிப்படையில் தொடர்கிறேன்.

   நீங்கள் கோடு ஏன் 1990 இல் விழுந்தது என்பதற்கான சில காரணங்களை கூறினீர்கள். கோட்டுக்கு முன் x பின் இருந்த சில நிலைகளை ஒப்பிட்டீர்கள்.

   1990 முன் x பின் நிலை என்பது மிக விரிவானது. இதில் பொருளாதாரம், அரசியல், பண்பாடு என பலதும் அடங்கும். உதாரணமாக, 1990 முன் x பின் ஊழல் அளவு என்பது ஒரு ஆய்வாக அமையும். 1990 முன்-பின் கல்வி என்பது ஒரு ஆய்வு. 1990 முன் x பின் தொழிலாளர் நலம் என்பது ஒரு ஆய்வு. இவற்றிற்கு இடையே தொடர்பும் உண்டு என்பதையும் உணர்கிறேன்.

   பொருளாதாரம் எனப் பார்த்தால், இதை இரண்டாக பிரிக்கலாம்: முதலாவது, நாட்டின் ஒட்டுமொத்த பொருள்வளம் அளவு; இரண்டாவது, இந்த பொருள்வளம் மக்களிடையே எவ்வாறு distribute ஆகியுள்ளது என்பது.

   எனது புரிதலின் படி, ஒப்பீட்டளவில் 1990 முன்பு distribution சிறப்பாக இருந்தது என்பது வினவின் கருத்து. சரிதானா?

   இந்த distribution பற்றி இறங்கும் முன், நாட்டின் மொத்த பொருள்வளம் பற்றி எடுத்துக்கொள்வோம். நாட்டின் பொருள்வளம் எப்போது சிறப்பாக இருந்தது, 1990 முன்பா, பின்பா? இதற்கு பொருள்வளம் என்பதை வரையறுக்க வேண்டும். quantitative அளவீடுகள் தேவை. இதில் கிளைக்கேள்வியாக வர்த்தகப் பற்றாக்குறை, நாட்டின் கடன் போன்றவை வருகின்றன.

 6. வெங்கடேசன்,

  1. நாட்டின் ஒட்டுமொத்த பொருள்வளம்
  quantitative அளவீடுகளில் GDP (மொத்த உள்நாட்டு உற்பத்தி) ஒரு ஆண்டில் நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை அளவிடுகின்றது. அந்த அளவீட்டில் உள்ள குறைபாடுகள் பற்றிய புரிதலோடு GDP-ஐ ஒரு நாட்டின் பொருள்வளத்தின் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளலாம்.

  ஆனால், அதுவே நாட்டின் பொருள்வளம் ஆகாது. நாட்டின் பொருள்வளம் அந்நாட்டில் உள்ள
  அ. இயற்கை வளங்கள் (நிலம், காடு, கனிமவளங்கள், மலைகள், கடல் வளம்)
  ஆ. அந்த இயற்கை வளங்களை பயன்படுத்தும் திறன் (மக்கள் தொகை, வளர்க்கப்பட்டிருக்கும் தொழில்நுட்பம் முதலியன)
  என்று இரண்டு அடிப்படைகளை கொண்டுள்ளது.

  இந்த இரண்டின் விளைபொருளாக ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி உள்ளது.

  ஆனால், பிறநாட்டு வளங்களை தான் பயன்படுத்திக் கொள்ளும் திறனும் ஒரு நாட்டின் ஆண்டு வருமானத்தில் அளவிடப்படுகிறது. குறிப்பாக கடந்த 4 நூற்றாண்டுகளில் இது பெருமளவு அதிகரித்திருக்கிறது. 18-19-ம் நூற்றாண்டுகளில் காலனிய நாடு பிடிப்பு முதல் இன்றைய உலகமயமாக்கல் வரை இதனுடன் பொருத்திப் பார்க்கலாம். எனவே, ஒரு நாட்டின் பொருள் வளம் என்று எடுத்துக் கொண்டால் மேற்சொன்ன காரணிகளோடு வரலாற்று பின்னணி முக்கிய பாத்திரத்தை வகிக்கிறது.

  2. “distribution பற்றி இறங்கும் முன், நாட்டின் மொத்த பொருள்வளம் பற்றி எடுத்துக்கொள்வோம்” என்று சொல்கிறீர்கள். பொருளாதார நடைமுறையில், distribution அல்லது வினியோகம், பொருள் உற்பத்தி எப்படி நடக்கிறது என்பதோடு மிக நெருக்கமாக பிணைந்திருக்கிறது.

  உற்பத்தியான பொருட்களின் வினியோகம்

 7. நத்தைகளின் சர்க்குலேடரி சிஸ்டம் பற்றி ஆராயும் அறிவியல் ஆய்வாளனுக்கு விருப்பு-வெறுப்பு, சார்புகள், முன்முடிவுகள் ஏதும் இருப்பதில்லை. ஆராயும் பொருள் இவ்வாறுதான் இருக்க வேண்டும் என்ற அங்கலாய்ப்பு இல்லை. எது உண்மை என்பது மட்டுமே முக்கியமாக படுகிறது.

  கணிதத்தில் இது இன்னும் தீவிரமாக உள்ளது. குறிப்பிட்ட சூத்திரத்தை உண்மையென நிரூபித்து தான் பெருமை அடைய வேண்டும் என்பது போன்ற மனித இயல்பான ஆசாபாசங்கள் இருந்த போதும், உண்மை என சர்வ நிச்சயாமாய் தான் நிரூபிக்காத ஒன்றை, நிரூபித்து விட்டதாய் கட்டுரைகள் எழுதப்படுவதில்லை. ஆறு மாதம் கடினமாக உழைத்து உண்மை என ஒன்றை நிரூபித்து விட்டதாய் தான் கருதுவது பற்றி கட்டுரை எழுத தொடங்கி, நடுவில் நிரூபணத்தில் தவறு கண்டவுடன், எல்லாவற்றையும் தூக்கி குப்பையில் எரிந்து விட்டு, குவார்ட்டர் அடித்து விட்டு குப்புற தூங்கி விடுவர். சத்தியம் மட்டுமே முக்கியம். அசத்தியத்திற்கு இடம் இல்லை.

  மாறாக, அரசியல், சமூகவியல், பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகள் இவ்வளவு கறாராக இருப்பதாக தெரியவில்லை. சொல்ல வேண்டும் என்று தோன்றியது. யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.

  • //அரசியல், சமூகவியல், பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகள் இவ்வளவு கறாராக இருப்பதாக தெரியவில்லை.//
   நத்தைகளின் சர்க்குலேடரி சிஸ்டம் பற்றிய ஆய்வின் முடிவு அதை ஆய்வு செய்யும் அறிவியலாளருக்கு வர வேண்டிய அடுத்த மாத சம்பளத்தையோ, அல்லது அவரது ஆய்வு நிலையத்துக்கு நிதி கொடுத்த நிறுவனத்தின் லாபத்தையோ பாதிக்கப் போவதில்லை.

   அரசியல், சமூகவியல், பொருளாதாரம் தொடர்பான ஆய்வுகளின் outcome-ல் சமூகத்தின் மேல்மட்ட 1%-னருக்கு பெருமளவு அக்கறை இருக்கிறது. தங்களுக்கு சாதகமான நிகழும் சமூக ஒழுங்குமுறையை பாதுகாக்க வேண்டும் என்ற கவலை இருக்கிறது.

   பெரும்பான்மை மக்களுக்கு எதிரானதாக தாங்கள் கருதும் இந்த ஒழுங்குமுறையை எதிர்ப்பவர்களுக்கும் 99% பேருக்கு சாதகமாக அதை மாற்றி அமைக்க வேண்டும் என்ற அக்கறை இருக்கிறது.

   அதனால், நீங்கள் எதிர்பார்க்கும் தூய ‘சத்தியம்’ எங்கும் கிடைக்கப் போவதில்லை.

  • நத்தைகள் பற்றிய ஆய்வு முடிவுகள் எப்படி அமைந்தாலும் நேரடி பாதிப்பு எதுவும் இல்லை. மாறாக, சமூக-பொருளாதார ஆய்வுகள் தொழிலில் லாபம், மக்கள் நலம் என வாழ்வோடு நேரடி தொடர்பு கொண்டுவை. அவ்வகையில், முன்னதை விட பின்னதில் சத்தியம் இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது அல்லவா?

   மக்கள் நலம் 1990 முன்பு-பின்பு என ஒப்பிடும் போது எப்போது சிறப்பாக இருந்தது என்பது சமநிலை மனதோடு நேரடி கள நிலவரம் மூலம் கண்டறியப் பட வேண்டியதல்லவா? இவ்விஷயத்தில் பதில் எவ்வகையாக அமைந்தால் தமது கொள்கைகளுக்கு வலுவூட்டும் என முன்முடிவு செய்து கொண்டு அணுகுவது சரி அல்லவே? அப்படிச் செய்தால் மக்கள் நலம் என்பதை விட, தமது கொள்கையின் பெருமையே முக்கியம் என்றாகி விடாதா? நத்தைகளுக்கு கிடைக்கும் சத்தியம், மக்களுக்கு கிடையாது என்பது சரி அல்லவே?

   • வெங்கடேசன்,

    //பதில் எவ்வகையாக அமைந்தால் தமது கொள்கைகளுக்கு வலுவூட்டும் என முன்முடிவு செய்து கொண்டு அணுகுவது சரி அல்லவே?//

    இந்தக் குற்றச்சாட்டை நீங்கள் வைக்க வேண்டிய திசை வேறு. அரசியல் பொருளாதாரத்தை விஞ்ஞான பூர்வமாக அணுகிய செவ்வியல் பொருளாதார அறிஞர்களான ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ ஆகியோரின் பணியில் விடை காணப்படாத கேள்விகளுக்கு, ‘பதில் எவ்வகையாக அமைந்தால் தமது கொள்கைகளுக்கு வலுவூட்டும் என முன்முடிவு செய்து கொண்டு’, அணுகும் கொச்சைப் பொருளாதாரவியல்தான் (vulgar economics) இப்போது கோலோச்சுகிறது.

    நான் என்னுடைய முந்தைய பதிலில் சொன்ன “அதனால், நீங்கள் எதிர்பார்க்கும் தூய ‘சத்தியம்’ எங்கும் கிடைக்கப் போவதில்லை” என்பதற்கு ஒரு திருத்தம். நீங்கள் எதிர்பார்க்கும் அறிவியல் பூர்வமான, சுதந்திரமான, சமூக பொருளாதார ஆய்வுமுறையின் பதில்கள் தமது நலன்களுக்கு எதிராக இருப்பதை உணர்ந்த அதன் வலுவான எதிரிகள் அதை மூர்க்கமாக எதிர்த்து, அவதூறு செய்திருக்கிறார்கள், செய்து வருகிறார்கள்.

    அறிவியல் பூர்வமான சுதந்திரமான சமூக பொருளாதார ஆய்வு முறை எதிர் கொள்ளும் எதிரிகள் பற்றிய ஒரு மேற்கோளை பாருங்கள்

    “In the domain of Political Economy, free scientific enquiry meets not merely the same enemies as in all other domains. The peculiar nature of material it deals with, summons as foes into the field of battle the most violent, mean and malignant passions of the human breast, the Furies of private interest.

    The English Established Church e.g., will more readily pardon an attack on 38 of its 39 articles than on 1/39 of its income. Now-a-days atheism itself is culpa levis, as compared with criticism of existing property relations.”

    • 1990 முன்-பின் இரண்டனுள் ஒப்பீட்டளவில் எது சிறப்பு என்பது கேள்வி. 1990 க்கு முன்பு சிறப்பாக இருந்தது என வினவு கருதுகிறது என்பது என் புரிதல்.

     இதற்கான பதில் கருப்பு-வெள்ளையாக இருக்காது என நான் நினைக்கிறேன். சில விஷயங்களில் ஒன்றும், மற்றவற்றில் பிறிதொன்றும் சிறப்பாக இருக்கும். இது பற்றிய விவரங்கள் எல்லாம் அடுக்கி வைத்த பின், மொத்தத்தில் எது சிறப்பு என கூற முடியும்.

     இந்தக் கேள்வியை பற்றி கொள்கை ரீதியாக தர்க்கம் செய்வது ஒரு புறம். மறுபுறம், கொள்கைகளை நகர்த்தி வைத்து விட்டு, நத்தை ஆய்வாளனுக்குரியாய சமநிலைப்பட்ட மனதுடன், கள நிலவரம் என்ன என்பதை நேரடியாக கண்டறிவது முக்கியம். இவ்வாறு முழுப்பார்வையுடன் செய்யப்பட்ட ஆய்வுகள் ஏதும் உள்ளனவா என்பது கேள்வி. அதில் இருந்தே இந்த உரையாடல் தொடங்கியது.

     • வெங்கடேசன்,

      //கொள்கைகளை நகர்த்தி வைத்து விட்டு, நத்தை ஆய்வாளனுக்குரியாய சமநிலைப்பட்ட மனதுடன், கள நிலவரம் என்ன என்பதை நேரடியாக கண்டறிவது முக்கியம். இவ்வாறு முழுப்பார்வையுடன் செய்யப்பட்ட ஆய்வுகள் ஏதும் உள்ளனவா என்பது கேள்வி.//

      இயற்பியலில் ஆய்வு செய்பவர் இளநிலை அறிவியல், முதுநிலை அறிவியல் படித்து விட்டு அந்த அடித்தளத்திலிருந்துதான், தனக்கு முன்பு அந்தத் துறையில் ஆய்வு செய்தவர்களின் தோள்களில் ஏறி நின்றுதான் அடுத்த கட்ட ஆய்வை செய்ய முனைவார். கள நிலவரத்தையும், அது குறித்து திரட்டப்பட்ட தரவுகளையும் மட்டும் வைத்துக் கொண்டு ஆய்வு செய்தால் அபத்தமான முடிவுகளையே வந்தடைவார்.

      நீங்கள் மொட்டையாக 1990-களுக்கு முன்பும் பின்பும் என்று ஒப்பிடுவதற்கு தரவுகளை தேடுவது எப்படி பலனளிக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.உண்மையிலேயே இந்தத் துறையில் கேள்விகளுக்கு விடை தேட விரும்பினால் பொருளாதார ஆய்வின் வரலாற்றையும், நமது நாட்டின் பொருளாதார வரலாற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பியுங்கள்.

      1. பொருளாதார ஆய்வின் வரலாறு – ஷூம்பீட்டர் – http://digamo.free.fr/schumphea.pdf (முதலாளித்துவ கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டது)
      2. அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – அ. அனிக்கின் – இணையத்தில் இல்லை. பழைய புத்தகக் கடைகளில் கிடைக்கலாம் (மார்க்சிய பொருளாதார கண்ணோட்டத்தில் எழுதப்பட்டது)
      3. இது போக இந்திய பொருளாதார வரலாறு பற்றிய புத்தகங்கள் – http://www.lse.ac.uk/economichistory/seminars/modernandcomparative/papers2011-12/the-history-of-indian-economic-history.docx என்ற கட்டுரையில் அவற்றுக்கான ஒரு அறிமுகம் தரப்பட்டுள்ளது.

     • உங்கள் பரிந்துரைகளுக்கு நன்றி குமரன்.

      நேரடியாக இந்த ஆய்வுக்குள் குதிப்பது எனது நோக்கமல்ல. அதற்கான அடிப்படை தகுதிகள் எனக்கு இல்லை. இத்தனை பெரிய ஆய்வு செய்வதற்கு நேரமும் கிடையாது.

      ஏற்கனவே 1990 முன்பு-பின்பு பற்றிய ஆய்வுகள் இருந்தால் படிக்க முயற்சி செய்யலாம். அவ்வளவுதான். இத்தகைய ஆய்வில் களநிலவரங்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்று கருதுகிறேன். இந்தக் கட்டுரை கூட நேரடியாக ராணிப்பேட்டை சென்று பார்த்து எழுதப்பட்டதுதானே.

      வினவு 1990க்கு முன்பு நிலைமை ஒப்பீட்டளவில் மேம்பட்டதாய் இருந்தது என எந்த ஆய்வின் அடிப்படையில் கூறுகிறது? அதற்கு சுட்டி தாருங்கள்.

      • //இந்தக் கட்டுரை கூட நேரடியாக ராணிப்பேட்டை சென்று பார்த்து எழுதப்பட்டதுதானே.//

       நத்தைகளின் இரத்த ஓட்டம் பற்றிய படிப்பை, நத்தைகளை அவதானித்து மட்டும் ஒருவர் எழுதி விட முடியுமா? அடிப்படை அறிவியலில் கூட கோட்பாடுகள், அவை கொடுக்கும் கண்ணோட்டம் என்ற ஒளியில்தான் கிடைக்கும் தரவுகளை புரிந்து கொள்ள முடியும்.

       இயற்பியலையே எடுத்துக் கொண்டால், புவி மையக் கோட்பாடு, சூரிய மையக் கோட்பாடு, பேரண்ட கோட்பாடு என்ற கோட்பாடுகளின் ஒளியில்தான் களநிலவரங்கள் (அல்லது தரவுகள்) புரிந்து கொள்ளப்பட முடியும். செவ்வியல் நியூட்டனின் இயற்பியலின் அடிப்படையில் விளக்கப்பட்ட தரவுகள், ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டின் அடிப்படையில் பார்க்கப்படும் போது புதிய முடிவுகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் செல்கிறது.

       அது போல, வெறும் தரவுகள், கள நிலவரங்கள் எந்த வகையில் ஒரு விஷயத்தைப் பற்றிய முடிவுக்கு வர பயன்படும்? அவை நிச்சயம் தேவை, ஆனால் அவற்றை புரிந்து கொள்வது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில்தான் இருக்க முடியும்.

       எனவே, 1990 முன்பு-பின்பு பற்றிய ஆய்வுகள் கிடைத்தால் படித்து புரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் கருதுவது சரியில்லை. அதற்கு கூடுதல் முயற்சியும், உழைப்பும் தேவை. ஆனால், அதே சமயம் இந்த பிரச்சனைகள் குறித்து புரிந்து கொள்ள முயற்சிப்பது அனைவரின் கடமை என்றும் கருதுகிறேன்.

      • கோட்பாடுகள் நிச்சயம் தேவை. ஆனால், அவற்றை களநிலவரத்தை கொண்டுதான் உரசிப்பார்க்க முடியும். அவ்வகையில், களநிலவர ஆய்வும் முக்கியம்.

       யுரேனஸ் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு, அதன் சுழற்சியில் தென்பட்ட முரண்பாடுகளை (anomalies) அடிப்படையாக வைத்து வேறொரு பெரிய கோள் இருக்க வேண்டும் என கணித்தார்கள். ஆனால், அக்கணிப்பு மட்டும் போதுமானது இல்லை. அது நிஜமாகவே தொலைநோக்கி மூலம் கண்டறிந்ததால் மட்டுமே அதன் இருப்பு உறுதியானது. ஐன்ஸ்டீனின் ரிலேடிவிட்டி கோட்பாட்டை ஏற்கும் முன் களஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்ட தரவுகள் தேவைப்பட்டன. 1919 இல் எட்டிங்டன் மேற்கொண்ட பரிசோதனை போல.

       1990 முன்பு-பின்பு ஆய்வு வெறும் களநிலவர தகவல்களால் மட்டும் நிரப்பபட்டால் அது பயன்படாது. மறுபுறம், வெறும் கோட்பாட்டு ரீதியாக பேசுவதும் சரியல்ல. இரண்டும் இணைவதே சிறந்தது.கோட்பாட்டு ரீதியில் ஏதும் அறியாத நான் இவ்வகை ஆய்வை புரிந்து கொள்வது இயலாது என நீங்கள் சொல்வது சரியாக இருக்க கூடும். அது புறம் இருக்க, இப்படிப்பட்ட ஆய்வுகள் உள்ளனவா என்று கேட்பதில் என்ன தவறு? இருந்தால் புரட்டிப் பார்க்கலாம். கேள்வி எனது பின்புலம், தகுதி பற்றியதல்ல.

       • வெங்கடேசன்,

        //ஆய்வு வெறும் களநிலவர தகவல்களால் மட்டும் நிரப்பபட்டால் அது பயன்படாது. மறுபுறம், வெறும் கோட்பாட்டு ரீதியாக பேசுவதும் சரியல்ல. இரண்டும் இணைவதே சிறந்தது.//

        நெத்தியடி!

        களநிலவரத் தகவல்களை புறக்கணித்து வறட்டு கோட்பாட்டை பிடித்து தொங்குபவர்களைப் பற்றிய ஒரு விமர்சனத்தைப் பாருங்கள்.

        “நமது வறட்டு தத்துவவாதிகள் முழுச்சோம்பேறிகள். அவர்கள் பருண்மையான விஷயங்களைப் பற்றி பருண்மையாக ஆராய எந்த முயற்சியையும் எடுப்பதில்லை. பொது கோட்பாடுகள் சூனியத்திலிருந்து தோன்றியதாக நினைக்கிறார்கள். அத்தகைய பொது கோட்பாடுகளை அவர்கள் புலனீடற்ற அருவமான ஆழங்காண முடியாத வறட்டு சூத்திரங்களாக ஆக்கி விடுகிறார்கள். அவர்கள் உண்மையை அறிய மனிதன் மேற்கொள்கிற இயல்பான ஒழுங்குமுறையை முற்றாக மறுக்கின்றனர்.இவ்வொழுங்கு முறையை தலைகீழாக்குகின்றனர்.

        அறிதலில் உள்ள இரண்டு போக்குகளான, அதாவது தனிப்பட்டதிலிருந்து பொதுவானதற்கும் பொதுவானதிலிருந்து தனிப்பட்டதற்கும் உள்ள, ஒன்றுக்கொன்றான தொடர்பைப் பற்றியும் அவர்கள் புரிந்து கொள்வதில்லை.

        மொத்தத்தில் அவர்களுக்கு அறிவு பற்றிய மார்க்சியக் கோட்பாடு பற்றி எதுவும் தெரியாது”

        நடைமுறை, கோட்பாடு பற்றிய இந்த மார்க்சிய அணுமுறையைத்தான் கம்யூனிஸ்டுகள் ஒவ்வொரு விஷயத்திலும் பயன்படுத்துகிறார்கள்.

        “மனித அறிவின் இயக்கத்திலுள்ள ஒழுங்கு முறையை வரிசைப்படுத்தினால் அது எப்போதுமே குறிப்பிட்டவை, தனிப்பட்டவை பற்றிய அறிவாகத் தொடங்குகிறது. பின்னர், படிப்படியாக பொதுவானவை பற்றிய அறிவாக வளர்கிறது. பல்வேறு பொருட்களின் தனி இயல்புடைய ஒவ்வொரு உட்சாரத்தையும் புரிந்து கொண்ட பிறகே, மனிதனால் அப்பொருட்களைப் பொதுமைப்படுத்தவும், அவற்றின் பொதுவான உட்சாரத்தை (கோட்பாடு) அறியவும் இயலும்.

        பொதுவான இந்த உட்சாரத்தை அறிந்து கொண்ட பிறகு அவன் இவ்வறிவை (கோட்பாட்டை) தனது வழிகாட்டியாகப் பயன்படுத்தி இதற்கு முன் ஆராயப்படாத அல்லது முற்றாக ஆராயப்படாத பல்வேறு பொருட்களை ஆராய்ந்தறிய முயல்கிறான். அப்பொருட்கள் ஓவ்வொன்றிலும் உள்ள குறிப்பிட்ட தனி இயல்பை கண்டுபிடிக்க முற்படுகிறான்.

        இவ்வாறுதான் மனிதன் பொருட்களின் பொது உட்சாரம் பற்றிய அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். அதோடு, அதை நிறைவுபடுத்தி, செழுமைப்படுத்தி வளர்ச்சியடையச் செய்ய முடியும். அத்தகைய அறிவு உலர்ந்து உதிராமலும் கெட்டி தட்டிப் போகாமலும் பாதுகாக்க முடியும்”

        மேற்கோள்கள் ஆகஸ்ட் 1937-ல் மா சே துங் எழுதிய “முரண்பாடு பற்றி” என்ற கட்டுரையிலிருந்து.

 8. //ந்த பொருள்வளம் மக்களிடையே எவ்வாறு distribute ஆகியுள்ளது என்பது.//

  பர் காபிடா ஓரளவுக்கு உதவும் . அம்பானி , அதானி , அரசியல்வாதி போன்ற முதலைகளுக்கு முன்னூறு டாலரை கொடுத்துவிட்டால் ,மிச்சம் இருப்பதை ஆவரேஜ் இன்கம் என்று எடுத்து கொள்ளலாம்

  http://www.tradingeconomics.com/india/gdp-per-capita

  1960-1990
  1990-2015

  என்று பிரித்து பாருங்கள் . இது பணவீக்கத்தை கருத்தில் கொண்டு சமன் செய்யப்பட்ட ஒப்பீடு .

  median income is the right tool.

  • per-capita-gdp சராசரி பற்றி மட்டுமே கூறுகிறது. நீங்கள் சொன்ன median பரவாயில்லை. Gini index போன்றவற்றை பயன்படுத்தலாம். அல்லது ஒரு probability distribution ஆனது uniform distribution இல் இருந்து எவ்வளவு தூரம் விலகி இருக்கிறது என்பதை அளக்கும் statistical distance metrics எதையாவது பயன்படுத்தலாம்.

 9. 1990 க்கு முன்பு இந்தியாவில் சோசலிசம் இருந்ததாக கருதிக்க்கொண்டு விவதிப்பது சரியா?

  • 1990 க்கு முன் சோஷலிசம் இருந்தது என்பதல்ல இங்கு உரையாடல் பொருள். 1990 பின்பை விட, முன்பு சிறப்பாக இருந்ததா என்பதே கேள்வி.

 10. வினவு தோழர்களுக்கு,

  பட்ஜேட் வருகிறது. வழக்கம் போல் கார்ப்பரேட்டுகளுக்கு வரி சலுகையாக 6 லச்சம் கோடி தாரைவார்ப்பு, etc என்று ஒற்றை வரியில் பேசுவது உங்களின் வழமை. இந்த 6 லச்சம்
  கோடி வரி சலுகை பற்றி ஒரு புதிய அலசல் :

  கார்பரேட்டுகளுக்கு வரி சலுகை
  http://nellikkani.blogspot.in/2015/01/blog-post.html

  முழுவதமாக உள்வாங்கி விட்டு பிறகு ’முழங்கவும்’ !!
  Advance notice அளிக்கிறேன்.

  • உங்க ஆளுங்களோட ஸ்விஸ்பேங்க் விவரங்களை பத்திரிகைகள் வெளியிட்டு இருக்கிறார்களாமே. அத பத்தி வினவு முழங்குவதற்கு முன் வீக்கிபீடியா லிங்குகளோடு சீக்கிரம் ‘முக்கி’விடுங்கள்.

   • மனோஜ் என்ற பெயரில் ஒழிந்து கொண்டு பேசுபவருக்கு,

    ///உங்க ஆளுங்களோட ஸ்விஸ்பேங்க்/// இல்லை. அவங்க ’எங்களோட’ ஆளுங்க இல்லை.
    இந்த மாதிரி வெத்து பேச்சுகளை அன்னானி பெயரில் ____________பேசுவதை சகிக்கமுடியாமல்
    தான் என்னை போன்ற பலரும் வினவு தளத்தில் பின்னூட்டமே இட தயங்குகிறார்கள்.

    விக்கிபீடியா என்றால் கேவலமா என்ன ? அதை பல முறை வினவு கட்டுரையாளர்கள் எடுத்து காட்டியிருக்கிறார்கள். அப்ப எல்லாம் இந்த மாதிரி இழிவான எதிர்வினைகளே இல்லை ? இரட்டை வேடம்.

    சரி, மேலே நான் எளிய தமிழில் எளிதிய குறிப்பிற்க்கு ஆதரமாக மூன்று ஆங்கில பதிவுகளை அளித்த்திருந்தேன். விசியங்களுக்கு உள்ளே (உள்ளே) சென்று தர்க்கபூர்வமாக, தரவுகளுடன் விவாதிக்க துப்பில்லாத _____________ பேச முடியாது.

    @மணி : எனது பதிவில் உள்ள ஆங்கில பதிவுகளின் தலைப்பிலேயே நீங்க கேட்கும் லிங்குகள்
    உள்ளன. படித்து பார்க்கவும்

    • நான் உங்களது கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை என்ற பதிவைப் பற்றி கேட்கிறேன். அதில் இரண்டு பொருளாதார நிபுணர்களது ஆய்வறிக்கை பற்றி சொல்லி இருக்கின்றீர்கள். குறைந்தபட்சம் பெயராவது தரும்படி கேட்டுக்க்கொள்கிறேன்

     • mani : அந்த ஆங்கில பதிவு எதையும் படிக்க முயலவில்லை என்று தெரிகிறது. முதல் பதிவில் இருந்து : Rajiv Kumar and SK Ghosh of Ficci recently calculated that of the supposed “revenue foregone,” Rs 198,291 crore comprises tax breaks duty for mass consumption goods like medicine, toothpowder, candles and kerosene. These are aimed directly at the aam admi. Revenue forgone also includes massive tax breaks for crude and petroleum products (an estimated Rs 58,190 crore in 2012-13). So, in a sense, Arnab’s wish has come true: the middle class is getting a big oil tax break!

      Kumar and Ghosh calculate that another Rs 174,418 crore of “revenue foregone” comprises import duty concessions for inputs into export production. Exempting such inputs is standard global practice. It would be stupid to tax and maim exports.

      • When the crude oil price got reduced from a level of $117 a barrel to $49 a barrel,how much reduction is passed on to one two wheeler user?How much and how many times the tax has been increased?Adhiyaman avargale!NANGAL YELLAAM KAADHIL POO SUTRIYAVARGAL ILLAI AIYAA!UM KADHAYAI KEDKA?

     • மணி : (’நான் மணி’ மணி தான் நீங்க ? )

      அந்த இரு நிபுணர்கள் எழுதிய கட்டுரை இது :

      http://articles.economictimes.indiatimes.com/2012-06-07/news/32101179_1_excise-duty-concessions-tariff-rates#.VL8r6IdjS7U.gmail

      Area and sector-specific tax sops spur investment, so counting these as revenue forgone is wrong
      ET Bureau Jun 7, 2012, 03.53AM IST

      Rajiv Kumar & Soumya Kanti Ghosh

      The recent increase in petrol prices has expectedly created a raging storm. Hence, our focus in this piece is to debunk the long-standing myth of revenue forgone in successive Union Budgets.

      Alternatively, it has now become fashionable to argue that the central government regularly forgoes huge amount of revenues (read: to the industry) and, hence, there is no harm in continuing with demerit subsidies. Unfortunately, the argument has been made by Prof Amartya Sen, who was clearly misled by some of his associations.
      We believe such an argument is factually incorrect and it is better to set the record straight again in public domain.

      First, the accompanying graphic shows the arithmetic of revenue forgone beginning 2006-07. The supporters of subsidies have argued that the revenue forgone is 5.3 lakh crore in 2011-12, and is exactly equivalent to the size of the country’s fiscal deficit at 5.9% of GDP in the financial year.

      However, four things are important here. First, the size of revenue forgone in terms of customs and excise-duty concessions amounting to 4.36 lakh crore, or 4.9% of GDP. This is equivalent to counting the reduction in peak tariffs since 1991 as revenue forgone. The obvious fallacy in doing so is that we completely ignore growth that is engendered by these measures.

      As far as excise duty is concerned, the central government has been granted powers under Section 5A(1) of the Central Excise Act, 1944, to issue exemption notifications in public interest to prescribe duty rates lower than the tariff rates prescribed in the schedules.

      The lower tariff rates are specifically applicable to mass-consumption goods such as medicines, toothpowder, candles, postcards, sewing needles, kerosene stoves, etc, to benefit the masses.

      The customs duty concessions are for importable goods consumed for exports as defined under Section 25(1) of the Customs Act. It is important to note in this context that import duties on components used for export are universally exempt all over the world as it is an established convention that taxes are not supposed to be exported.
      Moreover, is it anybody’s case that these import duty concessions to be removed because, by doing so, we may lose a significant part of our total export revenue. (Of this, gems and jewellery alone contribute close to 15% of exports.)

      Second are the area-based initiatives – amounting to 12,880 crore, or 0.1% of GDP – given in hilly areas, north-east and states enjoying special status, such as Jammu & Kashmir. There is nothing wrong in area-based initiatives but, more importantly, these cannot then be counted as part of revenue forgone.

      Third are the so-called personal income-tax concessions for the salaried class: amounting to 42,330 crore, or 0.47% of GDP. These are concessions to the middle class and do not concern the corporate sector.

      • அதாவது பல் பொடி, துணி தைக்கும் ஊசி, மண்ணென்னெய் அடுப்பு போன்ற பொருட்களுக்கு 4.36 லட்சம் கோடி ரூபாய் இறக்குமதி வரி தள்ளுபடி.
       இதை நாங்கள் நம்பவேண்டும்??
       ஏன் தங்களின் கட்டுஉறையில் இவ்வளவு தெளிவு அற்ற தகவல்களை தந்து உள்ளார்கள். இதில் நோபல் பரிசு வாங்கிய ஒருவரை குறை கூறுகிறார்கள்.
       //However, four things are important here. First, the size of revenue forgone in terms of customs and excise-duty concessions amounting to 4.36 lakh crore, or 4.9% of GDP. This is equivalent to counting the reduction in peak tariffs since 1991 as revenue forgone. The obvious fallacy in doing so is that we completely ignore growth that is engendered by these measures.

       As far as excise duty is concerned, the central government has been granted powers under Section 5A(1) of the Central Excise Act, 1944, to issue exemption notifications in public interest to prescribe duty rates lower than the tariff rates prescribed in the schedules.

       The lower tariff rates are specifically applicable to mass-consumption goods such as medicines, toothpowder, candles, postcards, sewing needles, kerosene stoves, etc, to benefit the masses.//

      • Let us consider the growth that is engendered by these measures.Give the growth statistics.How much price got reduced for medicines,tooth powder,candles,postcards?,sewing needles,kerosene stoves etc due to reduced tariff?How many industries are running in hilly areas,north-east and J&K?You have given statistics for tariff reduction provided by Govt.Now,give the data regarding end-result.

      • I have read your much repeated blog.The govt would have calculated the tax concessions allowed to industrialists on the current tariff and not on the tariff fixed before 1991.Your blog confuses the reader with repeated jargons.We are in 2015.Much water has flown under the bridge after 1991.Tell clearly how much reductions have been given under each category from the present scheduled rate.Do not repeat your story (before 1991)Also provide percentage of growth achieved visa-vis the concessions.Do not mix concessions given to middle class.If tax concessions are good for industrial growth,why Gurumoorthi criticized before elections?Gurumoorthi is not a communist.

       • so what do you suggest Sooriyan ? get back to the very high tax regimes of the 70s ? shall we raise all tax rates to pre-1991 rates ? Pls be specific and concrete in your
        suggestions about what must be cancelled or raised. Shall we cancel all tax concessions to backward and hilly areas ? etc.

        • Since the industrialists have not achieved the projected growth and objectives,all concessions to them have to be cancelled.Instead,SME sector should be encouraged.Tax subsidy at 15% for 3 years given to industries with an investment of 25 crores and above should be given to SME sector.SME sector contribution by way of employment generation and exports is much more than big industries.

    • கோவப்படாதீங்கஜி.ஸ்விஸ் பேங்குல பணம் போடுறது ஒரு குத்தமா? அதுகாக எங்க ஆளுங்க இல்லைனு பின்வாங்குனா எப்படி?நல்லா தேடிப்பாருங்கஜி எதுனா FICCI, CII நிபுணர் பெருமக்கள் இத பத்தியும் ஆய்வறிக்கை எழுதியிருப்பாங்க.

     கார்ப்பரேட்டுகளுக்கு வரிச்சலுகை கொடுப்பதை இழப்புனு சொல்லமுடியாதுனு, வேலைவாய்ப்பு அது இதுனு இப்போ சொல்றீங்க. இத எங்க தன்மான சிங்கம் ஆ.ராசா அன்னிக்கே சொல்லிட்டாரு. 2G ஊழல் அல்ல. மக்களுக்கு வழங்கிய சலுகை.நீன்க ரொம்ப லேட்டுஜி.

     • ///அதுகாக எங்க ஆளுங்க இல்லைனு பின்வாங்குனா எப்படி?// அவர்கள் அனைவரும் ‘போலி’ முதலாளித்துவர்கள் / போலி முதலாளிகள் தான். தா.பாண்டியனும் கம்யூனிஸ்ட், நீங்களும் கம்யூனிஸ்ட் என்றால் ஒத்துக்குவீங்களா என்ன ? இல்லை தானே. அதே லாஜிக் தான் இங்கே.
      _____________அதே போல் தான் க்ரோனி கேபிடலிஸ்டுகள், ஃபாசிச பாணி முதலாளிகள், மாஃபியா வகை முதலாளிகளை ’நாங்கள்’ ஏற்பதில்லை. உங்களுக்கு வந்தா ரத்தம், எங்களுக்கு வந்தா தக்காளி ஜூஸ் ? 🙂

      ///உங்க ஆளுங்க வட மாநில தொழிலாளர்களை இப்படி கொடுமை படுத்தி கொலை செய்யுறாங்களே // அவர்கள் ’எங்க’ ஆட்கள் அல்ல. மேலும் வட இந்தியாவில் இன்னும் மாஃபியா ராஜ்ஜியம் (லைன்சென்ஸ் ராஜ்ஜியத்தின் நீண்ட கால விளைவு) மிக அதிகம் என்பதால், பீகார், மே.வங்கம் போன்ற பகுதிகளில் தமிழகம் போல் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. தமிழ்க ஜனத்தொகை சுமார் 7 கோடிகளை தொட்டும், தமிழ்நாட்டு தொழிலாளர்கள் அதிகம் பேர் இத்தகையா கொடுமையான வேலைகளுக்கு செல்ல விரும்பாமல், இதைவிட நல்ல வேலைகளுக்கு இங்கேயே செல்ல எப்படி முடிகிறது ? 1980 வாக்கில் இதே தமிழகத்தில் தொழிலாளர்களின் நிலை / வாழ்க்கை தரம் எப்படி இருந்தது ?
      இதை பற்றி எல்லாம் விரிவாக பேசியாச்சு. உங்களை போன்றவர்களிடம் மீண்டும் மீண்டும் ‘விளக்க’ எனக்கு சக்தியில்லை.

      • முதலில் உங்கள் பார்வையில் யார் யார் எல்லாம் போலிகள்,புனிதர்கள் என்பதை கூறினால் எனக்கு புரிந்துகொள்ள வசதியாக இருக்கும். நீங்கள் வரிச்சலுகைக்க்கா வாதாடும் முதலாளிகளில் யார் யார் எல்லாம் புனிதர்கள்.மற்ற ‘போலிமுதலாளிகளுக்கு’ கொடுத்த வரிச்சலுகைகளை என்ன செய்யலாம்.

       /பீகார், மே.வங்கம் போன்ற பகுதிகளில் தமிழகம் போல் தொழில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்புகள் பெருகவில்லை. தமிழ்நாட்டு தொழிலாளர்கள் அதிகம் பேர் இத்தகையா கொடுமையான வேலைகளுக்கு செல்ல விரும்பாமல், இதைவிட நல்ல வேலைகளுக்கு இங்கேயே செல்ல எப்படி முடிகிறது ? 1980 வாக்கில் இதே தமிழகத்தில் தொழிலாளர்களின் நிலை / வாழ்க்கை தரம் எப்படி இருந்தது ?/

       விடிய விடிய ராமாயணம் கேட்டு…. னு ஒரு கதை சொல்லுவாங்க.இந்த கட்டுரையே தொழில் வளர்ச்சி பெருகிய தமிழ்நாட்டில் தொழிலாளிகள் எப்படி வதைக்கப்படுகிறாகள் என்பதை தானே பேசுகிறது. அதுக்கு என்ன சொல்றீங்கனு கேட்டா பிகாரு வளரலை, னு சொல்றீங்க.

       1980 லயும் தொழிலாளிதான் செத்தான் இப்பவும் நாங்க தான் சாவுறோம்.ஏன் இன்னும் முன்னே போய் பாண்டியர் காலத்துல எப்படி இருந்ததுனு கேளுங்களேன். முதலாளி மக்களை கொல்றானேனு கேட்டா பண்ணையடிமை காலத்தவிட நால்லாதானே இருக்குனு சொல்வீங்க போல.

       • ///விடிய விடிய ராமாயணம் கேட்டு…. னு ஒரு கதை சொல்லுவாங்க.இந்த கட்டுரையே தொழில் வளர்ச்சி பெருகிய தமிழ்நாட்டில் தொழிலாளிகள் எப்படி வதைக்கப்படுகிறாகள் என்பதை தானே பேசுகிறது. அதுக்கு என்ன சொல்றீங்கனு கேட்டா பிகாரு வளரலை, னு சொல்றீங்க.///

        நான் பேச வேண்டிய டைலாக் இது. தொழிலாளர்கள் வதைக்கப்டுவது ஏதோ ஒரு பகுதியில் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் 70களில், 80களில் சராசரி வேலைவாய்ப்பு, சம்மள விகிதம், அன்றைய விலைவாசியில் அந்த சம்பளத்தை கொண்டு வாங்கும் சக்தி, பண வீக்க விகிதங்கள், பட்டினி கிடந்தவர்கள் விகிதம் என்று விலாவாசியா பேச முடியும். ஆனால் உம்மோடும் முடியாது. வெங்கடேசன் எழுப்பிய ஒரு கேள்விக்கு சுருக்கமாக பதில் சொல்ல இங்கு வந்தேன். பிறகு 6 லச்சம் கோடி கார்ப்பரேட் வரி ’சலுகைகள்’ பற்றிய எனது பதிவை இட்டு, அதையும் கணக்கில் கொண்டு, வரும் பட்ஜெட் மீது விமர்னசம் வைக்க கோரினேன். ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு….

        • /தொழிலாளர்கள் வதைக்கப்டுவது ஏதோ ஒரு பகுதியில் எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது./

         ஏன் முதலாளி மட்டும் இப்படி சாவுறதில்லை?. எங்க உயிருனா உமக்கு அவ்வளவு இளக்காரமா? உம் கார்ப்பரே முதலாளி ஒருத்தனை கொண்ணா நீங்க சும்மா இருப்பிங்களா. எத்தனை வடமாநில தொழிலாளர்கள் கொல்லப்படுறாங்கனு தெரியுமா. அவங்க எப்படி வேலைவங்கப்படுறாங்கனு உமக்கு தெரியுமா? FICCI காரனும், CII காரனும் எழுதுற கட்டுரைய படிச்சா மட்டும் போதாது. வெளிய என்ன நடக்குதுனும் பாக்கனும். 80களில் செத்தோம் அதுக்காக இப்பயும் சாகனுமா? நாங்க 80களுக்கு போக விரும்பல. இன்னிக்கு உம் முதலாளிகள் கிட்ட இருக்க்குற எங்களுக்கு அதிகாரம் வேணும்.

         உங்க பெப்சி கம்பெனியால பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தை பத்தி வினவுல எழுதியிருக்காங்க படிச்சிபாரும். அந்த பெப்சிய அடிச்சி விரட்டனும். நீர் வருவீரா?

         வரிச்சலுகை கொடுக்கவேண்டிய நல்ல முதலாளி யாரு, மத்தவங்களுக்கு கொடுக்குறத என்ன செய்யலானுனு சொல்லவே இல்லையே.

    • உங்க ஆளுங்க வட மாநில தொழிலாளர்களை இப்படி கொடுமை படுத்தி கொலை செய்யுறாங்களே இதுக்கும் லைசன்ஸ் ராஜ் தான் காரணமா?

  • அதியமான் சார்,

   இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

   //கடந்த மன்மோகன் சிங் ஆட்சியில் வங்கிக் கடன்களாகவும், வரிச் சலுகைகளாகவும் பொது முதலீடு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வாரி வழங்கப்பட்டது. அதனால் ஏற்பட்ட பலன் என்ன? கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடன்களால் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் பெருகி, அவை திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டன. கடந்த ஆட்சியில் ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளால் அரசின் பற்றாக்குறை அதிகரித்ததேயொழிய, நாட்டிற்கோ, மக்களுக்கோ அதனால் எந்தப் பலனும் கிட்டவில்லை. வரிச் சலுகைகளைப் பெற்ற நோக்கியா, வோடாஃபோன் உள்ளிட்ட பல நிறுவனங்கள் வரி மோசடியிலும் ஈடுபட்டுப் பொதுப்பணத்தைச் சுருட்டிக் கொண்டதைத்தான் கண்டோம்.//

   https://www.vinavu.com/2015/02/11/modi-brokers-day-robbery-by-corporates/

   • ஆம், வராகடன்கள் பொதுதுறை வங்கிகளில் தான் மிக அதிகம். தனியார் துறை வங்கிகளில் குறைவு. ஏன் ? தனியார் வங்கிகளை அரசுடைமையாக்கினா இப்படி க்ரோனி கேபிடலிசம் உருவாகி, பித்தலாட்டங்கள் தான் ஏற்படும்.

    • லேமன் பிரதர்ஸ் தனியார் துறைதானே, சார்? http://www.investopedia.com/articles/economics/09/lehman-brothers-collapse.asp

     அது போக அமெரிக்காவில் மஞ்ச கடிதாசி கொடுத்து பெயில் அவுட் பணம் வாங்கி உயிர் பிழைத்த கம்பெனிகள் எல்லாம் தனியார்தானே, சார்?

     ஏதோ பொதுத்துறை வங்கிகளில்தான் பிரச்சனைன்னு சொல்றீங்களே! தனியார் வங்கிகளில் க்ரோனி கேபிடலிசம் எப்படி உருவாகிறதுன்னு விளக்குங்க, சார்.

     • லேமன் பிரதர்ஸ் திவாலாகிவிட்டது . ஸ்டேட் பாங்க் ஒப் இந்தியா எப்போது திவாலாகும் ? அவர்கள் செய்யும் தவறுக்கு அரசாங்கம் எதற்கு தர வேண்டும் ?

      எ ஐஜி , ஜி எம் போன்ற கம்பெனிகள் வாங்கிய பணத்தை திறப்பி கொடுத்து விட்டன ..

      உனகள் வங்கி எப்போது திர்ப்ப்பி தரும் ?

      • ராமன்,

       அதியமான் சார் ‘வரா கடன்கள் பொதுத்துறை வங்கிகளில்தான் அதிகம்’ என்றதற்கு நான் இந்த கேள்வி கேட்டிருந்தேன். வங்கி பணத்தை அரசாங்கம் தருகிறது, தனியார் திருப்பிக் கொடுக்கிறது இவற்றின் விளைவுகள் பற்றி தனியாக பேசலாமே. ஒன்றை பேசும் போது இன்னொன்றை சொல்லி குழப்புவதை தவிர்க்கலாமே.

       நன்றி.

   • ///ஒவ்வொரு பட்ஜெட்டிலும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட ஐந்து இலட்சம் கோடி ரூபாய் பெறுமான வரிச் சலுகைகளால்//

    சூப்பர். இதே பல்லவியை தான் தொடர்ந்து பாடுவீர்கள் என்று அறிவேன். அதை பற்றி தான் கீழே வினவுக்கு நேரடியாக அறைகூவல் விடுத்து பின்னூட்டங்கள் இட்டிறுக்கிறேன். நடக்கட்டும் நாடகம் !! 🙂

 11. Dear Athiyaman,
  if demand and supply is the only controlling element in the capitalistic market, why US and other countries control the movement of human resource, why do they have various visa restrictions; why they are not allowing to move towards “same job, same salary anywhere in the world” under globalization.
  They want India kind of countries to open the door for insurance and other industries. However, they are not opening doors for Indians and others for working and earning in their countries. Why do they want to protect their citizens irrespective of cheaper and better manpower available in third world countries.
  you may argue that the man power available in the third world countries may be not on par with respect to quality, let market decide on that, why do the government controls that.
  Your argument is “after allowing FI’s India got improved”, the same yardstick is applicable for man power. India has lot of educated low cost man power. But, no G7 country shall relax their visa regulation to use this man power irrespective of their lack of such resources. However, they plan to improve their educational institutes to cater the demand. they are aware that that may take some time and thinking that that is the correct solution.
  Let us remap the solution for our problem. The problem in hand was Indian entrepreneurs, corporate, industrialists, bureaucrat and politicians are not up to the mark, then the real solution is improving their capabilities. How allowing foreign investment is going to solve the corrupt bureaucrat, corrupt politicians, and crony capitalists.

  • Dear Mahdav,

   demand and supply concept is not fully accepted or implemented in most ‘capitalistic’ nations. and US is not a perfect capitalistic nation (like USSR was not a perfect socialistic nation at any time, as argued by comrades). and yes, free flow of people, goods and capital is the basis of free trade, etc.

   But my post is about how BoP crisis evolved in 1991 and how we got out of it. Try to argue to that point. and more importantly what alternative did we had in 1991. and about how India turned from a perpetual borrower from IMF (for dollar loans to bridge BoP) to a lender to the same IMF since 1990s. No one seem to argue about this basic point. I am tired of answering all other ‘doubts’; PERIOD.

   • //(like USSR was not a perfect socialistic nation at any time, as argued by comrades)// Invention No 1009001. When and Where Comrades told like that. USSR and China are the examples of Successful Socialist models. But they were later spoiled as progress due many factors. But You have never given example of a Capitalist model. Whenever someone says a flaw you will simply say there is no Successful Capitalist model so far. And this is after the fact that Capitalism rules this world for the past 300 years. And Adiyaman wants us to believe his utopian dreams. Any takers of these ‘Liberal’ Religion?

 12. Dear Athiyam,
  As as you agreed, the true capitalism (free flow of capital, material and manpower) is utopian idea and never implemented anywhere. Everyone including so-called capitalistic countries try to control free flow. If that is the case why are you against red-tapism. Why do we need to control the flow of labor from Bangladesh, products from China and not the capital from US?
  In addition, you simply ignored my other point, which talks about the real solution. The problem is not about getting the money. On those days, we were getting money from IMF. However, the problem is how we were failed to use that money to real solutions of the problem.
  Either capitalism or socialism or TBDism, the problem is crony capitalism, corruption in bureaucracy and politics.
  What is the use of capital got through the new policy? The India like countries with huge population density, you cannot acquire land for any industry without disturbing the mass or the environment. Then how can we use that capital.
  // அரசு மான்ய தொகை, பணக்கார விவசாயிகளுக்கே பெரும்பாலும் சேர்கிரது. உண்மையான ஏழைகளுக்கு இவை கிடைக்கும்படி செய்ய, ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை சீர் படுத்த வேண்டும். அதுவே நமக்கு முதல் வேலையாகும். அதை செய்யாமல், வறுமைக்கு காரணமாக முதலாளித்துவ பொருளாராதார் கொள்கைகளை காரணமாக காட்டுதல் தவறு.//
  If that is the case, why are you telling socialism is cause of poverty?
  The ideal model applicable to India is produce world-class engineers, lawyers, doctors and then exports them to all the countries. With earned value, import all other things necessary to build and run those world-class institutions.
  If the real problem is “ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை”, then why are you not proposing a solution for that and why you are recommending capitalism as solution?
  In welfare states and esp in Nordic model, free education, universal healthcare, public pension plans, labor union, high public spending through public sector and higher tax burdens. How shall you justify this?

  • ///If the real problem is “ஊழல்மயமான நம் அரசு எந்திரத்தை”, then why are you not proposing a solution for that and why you are recommending capitalism as solution?///

   first of all you propose a correct solution before asking ‘clever’ questions. and ‘recommending capitalism’ is simply over simplification. Liberal democracy is the solution and free market capitalism is a part of that system.

  • ///In welfare states and esp in Nordic model, free education, universal healthcare, public pension plans, labor union, high public spending through public sector and higher tax burdens. How shall you justify this?// you answer this yourself.

   when will you understand that the problems, distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s and their LONG term effects. Whereas, those nations which followed a different path had a different outlook. and capitalism does not mean total lack of welfare mechanism, etc. Get that first. Nordic nations did not follow the stupid closed economic model that we did in the past. and S.Korea, Japan, Taiwan evolved into developed nations by following ‘capitalism’ while we ruined ourselves.

   and so what you suggest ? get back to our good old ‘anti-capitalistic’ polices of the 70s ?
   and do you have any idea why we went backrupt in 1991 due to BoP crisis ? this conversation arose due to that issue. and you dismiss FII as unimportant, etc. You are ignorant of the implications of the BoP crisis, yet keep lecturing like a expert. first answer my basic points about IMF, BoP. then we shall ‘discuss’ what is capitalism, etc.

   • //distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s// how can you make such a sweeping statement. Populastic schemes could be implemented to get vote. However, discounting particular tax and helping particular industry is because of greedy capitalists and corruption in executives.
    //capitalism does not mean total lack of welfare mechanism// why do a capitalist need to bother about welfare of common man. what are the differences between welfare schemes of 70s/80s and welfare schemes of capitalism.
    //and so what you suggest ?// I am not an expert to suggest a solution. however, however, after considering huge youth population and high population density, The ideal model applicable to India is produce world-class engineers, lawyers, doctors and then exports them to all the countries. With earned value, import all other things necessary to build and run those world-class institutions, which produces the professionals.
    It may not be an ideal sustainable solution and I open for corrections.

    • Madhav,

     ///distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s// how can you make such a sweeping statement. // it is not a sweeping statement.
     i have little patience to explain again and again to people like you. you find
     detailed posts about these matter in my english blog : http://athiyaman.blogspot.in/

     ///why do a capitalist need to bother about welfare of common man. what are the differences between welfare schemes of 70s/80s and welfare schemes of capitalism.///
     because a capitalist is not a inhuman monster but can be as humane as any communist.
     and you are still caught in the cliches.

     And you have still not answered the basic point about the NEED for FII / FDI instead of IMF loans that bankrupted us in the past. You need to read a lot more about basic economics before lecturing me. And don’t bother replying to my comments if you CANNOT address this basic issue which drew me into this damn Vinavu post. PERIOD.

    • Madhav,

     //distortions and corruption in India were caused by socialistic polices of the 60s and 70s// how can you make such a sweeping statement.//

     To prove that is is not a ’sweeping’ statement pls see my old post :

     Why Indians became cynical and corrupt ?
     http://athiyaman.blogspot.in/2006/02/why-indians-became-cynical_114041607453064093.html

     இதையே எளிய பதிவாக தமிழில் பார்க்க :

     நரகத்திற்கான பாதை நல்லெண்ணத்தினாலும் உண்டாகிறது
     http://nellikkani.blogspot.in/2007/07/blog-post_2745.html

     • Dear Athiyaman,

      Even noble laureate Amartya Sen, talks about human capability development. In addition, he is deadly against subsidies given to the corporates at the cost of cutting subsidies given for socialistic welfare program’s. It is bit lengthy, but worthy.
      Why do welfare schemes/socilistic policies are necessary. please read excerpts from Amartya Sen’s interview:

      Subsidies that don’t aid the poor must go, says Sen. “What I don’t like is that when people talk about fiscal responsibility, they do it while sitting in their AC rooms, powered by subsidized electricity, eating food cooked by subsidized gas and travelling in subsidized diesel cars and using labors educated in subsidized institutes.”

      Question: Back to this question about the relationship between GDP growth and capability growth. You know that there is a competing view to yours which says that successful economic development necessarily occurs in two stages – this is a “two-track” account according to which “Track 1” reforms are designed to increase GDP and pull up the poor; healthcare and educational reforms belong to “Track 2”. And that it’s only Track 1 which makes Track 2 possible. You reject that model don’t you?

      AS: Well, there’s no historical illustration of that. Japan isn’t. China isn’t. Korea isn’t. Hong Kong isn’t. Taiwan isn’t. Thailand isn’t. Europe isn’t. America isn’t. Brazil isn’t. So what are we drawing that model from? That’s not how things have happened in the world. They’ve all done it through increasing capability. I know of no example of unhealthy, uneducated labour producing memorable growth rates!

      India used to be 50 per cent richer than Bangladesh in per capita income terms but is now 100 per cent richer. Yet, in the same period … when, in the early 1990s, India was three years ahead of Bangladesh in life expectancy, it is now three or four years behind. In India it is 65 or 66, in Bangladesh it’s 69. Similarly, immunisation: India is 72 per cent, Bangladesh is more like 95 per cent. Similarly, the ratio of girls to boys in school. So in all these respects, we are looking at capability. We’re looking at the capability to lead a healthy life, an educated life, to lead a secure life (with immunization making people immune to some preventable illnesses), having the capability to read and write, for girls as well as boys.
      Expanding and safeguarding human capability is central to thinking about policy making. That understanding informs our work.
      The insight that many Indian policy analysts may have missed is that human capability is not only important in itself, but that human capability expansion is also a kind of classic Asian way of having sustained economic growth. It started in Japan, just after the Meiji restoration, where the Japanese said: “We Japanese are no different from the Europeans or the Americans; the only reason we’re behind is that they are educated and we are not.” They then had this dramatic expansion in universal education and then, later, widespread enhancement of healthcare. They found that a healthy, educated population served the purpose of economic growth very well. That lesson was later picked up in South Korea. Korea had quite a low educational base at the end of the Second World War. But following Japan, they went in t