Monday, November 30, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை

வெள்ளாற்றை பாதுகாக்க திரள்கிறது மக்கள் படை

-

டலூர் மாவட்டம், சேத்தியாதோப்பில் 5-2-15 அன்று மாலை 6-00 மணிக்கு, முடிகண்ட நல்லூர் மணல் குவாரியை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி “வெள்ளாற்றை சிதைக்கும் மணல் கொள்ளையர்களுக்கு தண்டனை என்ன?” என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

காவாலகுடி, சாந்தி நகர் மற்றும் கூடலையாத்தூர், கானூர், பெரிய நற்குணம், குமாரகுடி, வீரமுடையாநத்தம், முகந்தரியான் குப்பம், அகர ஆலம்பாடி, பேரூர், பு.ஆதனூர், அள்ளுர், மழவராய நல்லூர், சேத்தியாதோப்பு, மருங்கூர், பவழங்குடி, சி.கீரனூர், கார்மாங்குடி, நேமம், ஆத்தூர், கருவேப்பிலங்குறிச்சி, சன்னாசிநல்லூர் ஆகிய ஊர்களிலிருந்து மக்கள் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

வெள்ளாற்றுப்பாகாப்பு இயக்கம், மனித உரிமை பாதுகாப்பு மையம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் பொதுக்கூட்டமும், மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புரட்சிகரக் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

stage-1

கூட்ட ஏற்பாடுகளை காவாலகுடி மற்றும் சாந்தி நகர் மக்கள் கிராமத்தில் வசூல் செய்து நடத்தினர். பல கிராமங்களில் தோழர்கள் கலைக்குழுவுடன் மக்களுடன் தங்கி, அவர்கள் கொடுத்த உணவை அருந்தி பொதுக்கூட்டத்திற்கு வாருங்கள் என புதிய ஜனநாயகம் இதழ், வெள்ளாற்று போராட்ட குறுந்தகடு ஆகியவைகளை விற்பனை செய்தும், பிரசுரம் கொடுத்தும், பாடல்கள் மூலமாகவும் அணிதிரட்டினர். “நெல், கரும்பு அறுவடை நேரமாக இருக்கிறது. கிராமமே பரபரப்பாக இருப்பதால் பொதுக்கூட்டத்திற்கு பெரும் திரளாக கலந்து கொள்ள முடியவில்லை” என்ற வருத்தம் மக்களுக்கு இருந்தது.

“எதையும் எதிர்பாராமல் தோழர்களும் வழக்கறிஞர்களும் நம்மிடையே நமது வெள்ளாற்றை காக்க மணல் கொள்ளைக்கு எதிராக வந்து அழைக்கிறார்களே: என்பதை ஆச்சர்யத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்றனர். அனைத்துக் கட்சி தொண்டர்களும் கிராம மக்களாக தாமும் பாதிக்கப்படும் மக்களாக உணர்ந்து நம்மிடம் பேசினர்.

சேத்தியாதோப்பு காவல் துறை தெருமுனை பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்ததால் மெகா போன் பிரச்சாரம் செய்தோம். பொதுக்கூட்டத்திற்கும் முதல் நாள்தான் அனுமதி வழங்கியது. “கலைக்குழு பாட அனுமதி கிடையாது” என நிபந்தனையும் விதித்தது. “புதிய டி.எஸ்.பி. குத்தாலலிங்கம் ரொம்ப கண்டிப்பானவர்” என காவல்துறையினர் சொல்லி நழுவிக் கொண்டனர்.

கூட்டம் நடைபெறும் போது “டி.எஸ்.பி. முடிக்கச் சொன்னார்” என புது துணை ஆய்வாளர் சொன்னார். நமது வழக்கறிஞர்கள் “முடியாது என போய் சொல்லுங்கள்” என பதில் அளித்தனர். கீழ்நிலை காவல் துறையினர் செய்வது அறியாது அவர்களும் கூட்டத்தை கேட்டனர்.

பொதுக்கூட்டத்தில் வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த பலர் பேசினர். மக்களின் முழுமையான பங்களிப்பாக அனைத்து விதத்திலும் இருந்தது.

சிறுதொன்ட நாயனார் தே. பவழங்குடி

சிறுதொண்ட நாயனார்
சிறுதொண்ட நாயனார்

1947-க்கு முன் நாம் வெள்ளையர்களோடு போராடினோம். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட காந்தி படத்தை ரூபாய் நோட்டில் போட்டுள்ளோம். அந்த பணத்திற்காக பல்வேறு இயற்கையை கொள்ளையடிக்கிறார்கள்.

இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டம் இருப்பீர்கள். இதில் எத்தனை பேர் ஆற்றை சென்று பார்த்திருப்பீர்கள். ஆறு என்றால் கடவுள் மாதிரி, சோறு போடும் தாய். இந்த மணலை சேமிக்க எத்தனை தலைமுறைகளாகும்.

தனித்தனியாக போராடினால் ஒன்றும் செய்ய முடியாது. கார்மாங்குடி குவாரியை மூட நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு 400-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் வந்திருந்தார்கள். அவர்களால் மக்களுக்கு எந்த இடையூறும் செய்ய முடியவில்லை. காரணம் மக்கள் ஒற்றுமையாக இருந்தார்கள். அது போல் இங்கு நாம் ஒற்றுமையாக செயல்பட்டால் எல்லாவற்றையும் சாதிக்க முடியும். மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த முடியும்.

வெங்கடேசன், விவசாயிகள் சங்கம்,கூடலையாத்தூர்

வெங்கடேசன், விவசாயிகள் சங்கம்,கூடலையாத்தூர்
வெங்கடேசன், விவசாயிகள் சங்கம்,கூடலையாத்தூர்

2013 முதல் மணல் குவாரியை மூடக்கோரி பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்தும் பயனில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகளையும் சந்தித்து நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைகிறது என்று கூறி மணல் கொள்ளையை தடுக்கச் சொல்லி கேட்டோம். எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராடுவதை தவிர வேறு வழியில்லை.

குஞ்சித பாதம், போரூர்

குஞ்சித பாதம், போரூர்
குஞ்சித பாதம், போரூர்

மாவட்ட ஆட்சியர் குறை தீர்ப்பு கூட்டத்தில் பல முறை சொல்லியும் மணல் கொள்ளையை தடுக்க முடியவில்லை. கார்மாங்குடியில் ஆற்றில் புல் முளைத்து குடிக்க தண்ணீர் இல்லாமல் காசு கொடுத்து வாங்கும் நிலை வந்து விட்டது. விவசாயத்தை சாகடிக்கிறார்கள். 150 – 200 அடிக்கும் கீழ் நீர்மட்டம் சென்றுவிட்டது. ஆட்சியாளர்கள் நல்லது செய்யவில்லையென்றாலும் மக்களுக்கு தீமை செய்யாமல் இருந்தால் அதுவே மக்களுக்கு நன்மை தரும். மணல் கொள்ளை நீடித்தால் இந்த பகுதி பாலைவனமாக மாறிவிடும்.

முருகானந்தம் பு.மா..மு

முருகானந்தம் பு.மா.இ.மு
முருகானந்தம் பு.மா.இ.மு

பு.மா.இ.மு அமைப்பின் சார்பில் கல்வி உரிமைக்காகவும் குறிப்பாக அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறோம். எங்கள் உயிரைக் கொடுத்தாவது இந்த மணல் கொள்ளையை தடுத்து நிறுத்துவோம்.

மணல் அள்ளக் கூடாது என்றால் வீடு எப்படி கட்டுவது என்று கேட்கிறார்கள். தலைமுறை தலைமுறையாக வீடு கட்டுகிறோம். ஆற்றில் மணல் கொள்ளை வந்த பிறகுதான் பிரச்சனைகளை மக்கள் சந்திக்கிறார்கள்.

எதிர்த்து கேள்வி கேட்டால் மணல் மாஃபியாக்கள் ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள். கார்மாங்குடியில் 3 அடிதான் மணல் அள்ள வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் 35 அடி வரை மணல் சூறையாடிருக்கிறார்கள். மணல் கொள்ளையை தடுக்க வேண்டுமானால் ஆற்றிலிருக்கும் லாரி JCP முதல் அதை ஆதரிக்கும் ரவுடிகள் வரை அனைவரையும் அடித்து விரட்டினால் தான் நாம் உயிர் வாழ முடியும்.

செல்வக்குமார், ..பா.மை.

செல்வக்குமார், ம.உ.பா.மை.
செல்வக்குமார், ம.உ.பா.மை.

இந்த பொதுக் கூட்டம் நாம் தேர்தலை சந்திக்கவோ, அல்லது வேறு ஆதாயத்துக்காவோ நடத்தவில்லை. இயற்கையை அழிக்க நினைக்கும் மணல் கொள்ளையர்களை விரட்டவே நாம் இந்த கூட்டத்தை நடத்தி வருகிறோம்.

இந்த அரசாங்கம் மக்களுக்கான அரசாங்கமாக இருந்தால் உடனடியாக மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். மணல் எடுத்தால் நீர்மட்டம் குறையும், விவசாயமும் பாதிக்கும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு தெரியாதா. ஆனாலும் அரசாங்கம் மணல் கொள்ளையை தடுக்க நினைப்பவர்களை காவல்துறையை வைத்து பொய் வழக்கு போட்டு மிரட்டுகிறது.

இயற்கையை அழித்து மக்களி்ன் வாழ்வாதாரத்தை அழிப்பது எந்த வகையில் சரியாகும். சாதி பிரச்சனையை உருவாக்கி மக்களை பிரிக்கிறார்கள். காவல் துறையும் அரசு அதிகாரிகளுக்கும் தனியார் முதலாளிகளுக்கு சாதகமாகவே நடந்து கொள்கிறார்கள். சாதிகளை கடந்து பெரியார் வழியில் ஒன்று பட்டு மணல் கொள்ளையர்களை விரட்டுவோம்.

ராஜ வன்னியர், சி.கீரனூர்

ராஜ வன்னியர், சி.கீரனூர்
ராஜ வன்னியர், சி.கீரனூர்

வெள்ளாறில் சுமார் 10 ஆண்டுகளாக மணல் கொள்ளை நடந்து கொண்டிருக்கிறது. நியாயமாக நடப்பவர்களை காவல் துறை மிரட்டி அச்சுறுத்துகிறது. ஆறு பொது மக்கள் சொத்தா அல்லது மணல் மாபியாக்களின் சொத்தா, மீண்டும் மணல் எடுத்தால் மணல் எடுக்கும் எந்திரத்தையும் மணல் எடுப்பவர்களின் வாகனங்களையும் மக்கள் தீ வைத்து கொளுத்தி விடுவார்கள் என்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்.

அறிவரசன், கார்மாங்குடி

அறிவரசன், கார்மாங்குடி
அறிவரசன், கார்மாங்குடி

2014 முதல் மணல் கொள்ளைக்கெதிராக போராடினேன். முதலில் ஹீரோத்தனத்துக்கு ஆசைப்பட்டு செய்ய ஆரம்பித்தோம். ஆனால் அதில் இறங்கிய பிறகுதான் மணல் கொள்ளை என்பது எப்படி தேச விரோத செயல் என்று புரிய ஆரம்பித்தது.

ராஜு சார் தொடர்பு கிடைத்த பிறகு தான் எங்களுக்கு பாதுகாப்பு கிடைத்தது. இந்த போராட்டத்தில் வெற்றி கிடைத்தது.

இன்று நான் வரும்போது பார்த்தேன் பொதுக் கூட்டத்துக்கு வரும் கிராம மக்களை காவல்துறை தடுத்து நிறுத்தியிருக்கிறது. நியாயத்திற்கு போராடும் மக்களை தீவிரவாதி என்று முத்திரை குத்தி வருகிறார்கள். ஆனால் தீவிரவாதி என்று சொல்கிறவர்கள் அனைவரும் நல்லவர்களே,கெட்டவர்கள் இல்லை என்பதை காவல் துறை என்னை அச்சுறுத்தியதிலிருந்து புரிந்து கெண்டேன்.

சுப்பிரமணியன், நேமம்.

சுப்பிரமணியன், நேமம்.
சுப்பிரமணியன், நேமம்.

கார்மாங்குடி மணல் குவாரியை போராடிதான் நிறுத்தினோம், நமக்கு மனித உரிமை பாது காப்பு மையத்தினர் இருக்கிறார்கள். கலைக்குழு தோழர்கள் எங்கள் ஊருக்கு வந்து பாட்டு பாடி உணர்வுட்டியதால் அதிக மக்கள் ஆற்றில் திரண்டு போராடினார்கள். மணல் கொள்ளை எங்கு நடந்தாலும் நாம் அங்கு சென்று போராட வேண்டும். அத்தகைய போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.

கோபால கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தி நகர்.

கோபால கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தி நகர்.
கோபால கிருஷ்ணன், ஓய்வு பெற்ற ஆசிரியர், சாந்தி நகர்.

வெள்ளாற்றில் நடக்கும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும். நாங்கள் 3 மாதமாக போராடி வருகிறோம். அரசு அதிகாரிகள் அனைவருக்கும் 3 முறை மனு அளித்தோம். ஆற்றிற்கு சென்று போராடினோம்.

ஆற்றில் JCB வைத்து மணல் அள்ளக் கூடாது என்பது விதி ஆனால் ஆற்றில் இயந்திரம் மூலம் மணல் அள்ளுகிறார்கள். முன்னணியாளர்கள் 7 பேரை வரச்சொன்னார்கள். நாங்களும் மகிழ்ச்சியாக சென்றோம். DSP ”நாளை முதல் மணல் அள்ள போகிறோம், தடுத்தால் அனைவரையும் கைது செய்வோம்” என தெரிவித்தார். அதற்கு, “நாங்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போகிறோம்” என்று சொன்னோம்.

ஆற்றில் தண்ணீர் தேங்கி இருப்பதால் தற்போது மணல் அள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக இந்த பொதுக்கூட்டத்தை நாம் நடத்தி வருகிறோம்.

A.P.சிவக்குமார், மு ...தலைவர், காவாலகுடி

A.P.சிவக்குமார், மு .ஊ.ம.தலைவர், காவாலகுடி
A.P.சிவக்குமார், மு .ஊ.ம.தலைவர், காவாலகுடி

10 ஆண்டுகளுக்கு முன் வேளாண்மை பற்றி நம்மாழ்வார் சொல்லியதை நாம் காது கொடுத்து கேட்காமல் கேலி பேசினோம். இப்போது உணர்கிறோம். அது போல் இன்றும் வழக்கறிஞர் ராஜு சொன்னதை கேட்காமல் போனால் 10 ஆண்டுகள் கழித்து நாம் வருத்தப் பட நேரிடும். அதனால் இப்போதே விழிப்புடன் செயல்பட வேண்டும்.

ஆசை தம்பி, கூடலையாத்தூர்.
ஆசை தம்பி, கூடலையாத்தூர்.

எட்டிப் பார்த்தால் நாம் மயக்கமடைந்து விடும் அளவுக்கு ஆழமாக மணல் அள்ளுகிறார்கள். அரிசி வேண்டாம் என்று சொல்லுங்கள், நாங்கள் போராட்டத்தை விட்டு விடுகிறோம்.

இப்படிப்பட்டத் தோழர்களை நீங்கள் பார்த்ததுண்டா அவர்கள் நமக்காக வந்த போராடுகிறார்கள். வீடு வீடாக வந்து பிரச்சாரம் செய்து நமக்கு நல்லது சொல்கிறார்கள். எனக்கு 13 வயது வரை ஆர்டீசியன் ஊற்றிலிருந்து தண்ணீர் வரும். கையால் அள்ளி குடித்திருக்கிறேன். ஆனால் இன்று 350 அடி போனால் தான் தண்ணீர் வருகிறது. பக்கத்தில் NLC யால் நீர் மட்டம் குறைகிறது. காவல் துறையில் உள்ள நண்பர்களும் எங்களுடன் சேர்ந்து போராட முன் வர வேண்டும்.

பன்னீர் செல்வம், கார்மாங்குடி.

பன்னீர் செல்வம், கார்மாங்குடி.
பன்னீர் செல்வம், கார்மாங்குடி.

எங்கள் ஊர் செழிப்பான கிராமம், எங்கள் ஆற்றில் மணல் அள்ளிய பிறகு ஊர் பல முறை பிரச்சனைகளை சந்தித்துள்ளோம்.

எங்கள் ஊர் பஞ்சாயத்து தலைவர் விவசாய சங்க தலைவராகவும் உள்ளார். 118 பேரிடம் கையொப்பம் வாங்கி ஊராட்சி மன்ற தலைவர் மணல் குவாரி செயல் பட அனுமதித்தார். முன்பெல்லாம் போலீசை கண்டால் பயம் வரும். 60 அடியிலிருந்து 130-க்கும் கீழ் நீர் மட்டம் இறங்கி விட்டது. நீர் பழுப்பு நிறமாக மாறிவிட்டது. நாங்கள் போராடுவது எங்களுக்காக மட்டுமல்ல, காவல் துறை, அரசு அதிகாரிகளுக்கும் சேர்த்து தான் போராடுகிறோம்.

திருப்பால், மழவராய நல்லூர்.

திருப்பால், மழவராய நல்லூர்.
திருப்பால், மழவராய நல்லூர்.

சேத்தியா தோப்பு பகுதிக்கு ஒரு பாரம்பரியம் உள்ளது. இது போல் கட்டுப்பாடான அரசியல் கூட்டம் இது வரை நடந்ததில்லை.காவல் துறை வழக்குகளுக்கு அஞ்சாத பாரம்பரியம் மிக்க ஊர். நம்ம ஊருக்கு வந்து வீடு வீடாக நோட்டீசு கொடுத்து தோழர்கள் அழைத்த்து மிக நெகிழ்வான ஒன்று. நாம் போராடாமல், தியாகம் செய்யாமல் வெள்ளாற்றை பாதுகாக்க முடியாது.

K.P.C. ரவிந்திரன், காவால குடி.
K.P.C. ரவிந்திரன், காவால குடி.

“இன்னும் 2 மாதம் மணல் அள்ளி விட்டுதான் நாங்கள் செல்வோம்” என்று சொல்கிறார்கள். “இங்கிருந்து சென்றுவிட்டால் தமிழ் நாட்டில் நாங்கள் எங்கும் மணல் எடுக்க முடியாது. அது எங்கள் மானப்பிரச்சினை. அதனால் மணல் எடுத்து விட்டுதான் செல்வோம்” என்று சொல்கிறார். இதற்கு அதிகாரிகள் துணை போகிறார்கள், மக்கள் அனைவரும் போராடாமல் நமது விவசாயத்தை பாதுகாக்க முடியாது.

M G P பஞ்சமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மருங்கூர்.

M G P பஞ்சமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மருங்கூர்.
M G P பஞ்சமூர்த்தி, ஒருங்கிணைப்பாளர்,வெள்ளாற்று பாதுகாப்பு இயக்கம், மருங்கூர்.

கார்மாங்குடி குவாரி மணல் கொள்ளையை நிறுத்த முடியாது என்று சொன்னார்கள், நிறுத்தி காட்டினோம்.

நாம் போராடும் போது மற்ற அரசியல் கட்சிகள் ஏன் நம்முடன் இணைந்து போராட வரவில்லை அனைவரும் அயோக்கியர்கள்.

மணல் கொள்ளையர்கள் 1 கோடி தருகிறோம் என்றார்கள், மிரட்டுகிறார்கள்.  யாரோ திருட்டுப்பய போன்ல பேசுறான்.எத பத்தியும் கவல படக்கூடாது. JCB ஆற்றில் இறங்கினால் நாமும் ஆற்றில் இறங்கி போராட வேண்டும்.

இளங்கோவன்,ஓய்வு பெற்ற ஆசிரியர், கருவேப்பிலங்குறிச்சி

இளங்கோவன்,ஓய்வு பெற்ற ஆசிரியர், கருவேப்பிலங்குறிச்சி
இளங்கோவன்,ஓய்வு பெற்ற ஆசிரியர், கருவேப்பிலங்குறிச்சி

எத்தனையோ கோடி ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஆற்றை இப்போது அழித்து வருகிறார்கள். ஆறு என்பது மனித குலத்திற்கு கிடைத்த கொடை. அந்த ஆற்றை இப்போது சீரழித்து வருகிறார்கள். 200 கி.மீட்டருக்கும் மேலாக இந்த வெள்ளாறு பயனளிக்கிறது. இந்த பகுதியை செழிப்பாக்கியிருக்கிறது. நாகரீகம் தோன்றியது ஆற்றங்கரையில்தான் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

இப்போது இந்த ஆற்றுக்கு சோதனை ஏற்பட்டிருக்கிறது. ஆற்றின் இரு கரையோர கிராம மக்களும் பயனடைகிறார்கள், ஆற்று உரிமையர்கள் நாம் தான். ஆற்று மணல் கொள்ளையை தடுப்பது நமது கடமை, அது நமது உரிமை. ம.உ.பா.மையம் இல்லாமல் நாம் வெற்றி பெற முடியாது, அவர்கள் ஒருங்கிணைப்பால் நாம் வெற்றி பெற முடியும்.

வழக்கறிஞர் செந்தில் குமார், மா..செ., ..பா.மையம், கடலூர்

வழக்கறிஞர் செந்தில் குமார், மா.இ.செ., ம.உ.பா.மையம், கடலூர்
வழக்கறிஞர் செந்தில் குமார், மா.இ.செ., ம.உ.பா.மையம், கடலூர்

கார்மாங்குடியிலிருந்து காவாலக்குடி வரை மணல் குவாரியை மூட அரசு உத்தரவிட வேண்டும். மக்கள் யாராவது போராட முன் வருவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள்.

நாட்டை தனியாருக்கு விற்பவன் அரசியல் வாதி. தடுக்க நினைப்பவன் தீவிர வாதி. அநீதியை எதிர்த்து போராடினால் தீவிரவாதி என்கிறார்கள். ஜின்டால் கம்பெனிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கவுத்தி வேடியப்பன் மலையை விற்று விட்டார்கள்.

நெய் வாசல் மணல் குவாரியை மூட சொல்லி போராடிய மக்கள் மீது காவல் துறை தடியடி நடத்தி அச்சுறுத்த நினைக்கிறது. தமிழ்நாட்டில் எங்கு மணல் குவாரியை திறந்தாலும் மக்கள் போராட முன் வர வேண்டும். போராட்டமே தீர்வு.

செங்குட்டுவன், ஒருங்கிணைப்பாளர், வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம், காவாலக்குடி

செங்குட்டுவன், ஒருங்கிணைப்பாளர், வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம், காவாலக்குடி
செங்குட்டுவன், ஒருங்கிணைப்பாளர், வெள்ளாற்றுப்பாதுகாப்பு இயக்கம், காவாலக்குடி

முடிகண்ட நல்லுார் மணல் குவாரியை மூடி விட்டால் போராட்டம் தேவையில்லை. கடந்த 10 மாதங்களில் அளவுக்கு அதிகமாக மணலை அள்ளி விட்டனர். ஹிட்டாட்சி வைத்து மணல் எடுக்கிறார்கள். எந்திரம் பயன்படுத்த அனுமதி கிடையாது. ஆனால் எந்த விதிமுறைகளையும் அதிகாரிகள் பின்பற்றாமல், போராடும் எங்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். எத்தனை வழக்குகள் வேண்டுமானாலும் போடுங்கள், நாங்கள் தொடர்ந்து போராடுவோம். நாங்க திருடினோமா? கொள்ளையடித்தோமா? எதற்காக நாங்கள் அஞ்சவேண்டும்?.

தோழர் அம்பேத்கர், விவசாயிகள் விடுதலை முன்னணி

தோழர் அம்பேத்கர், விவசாயிகள் விடுதலை முன்னணி
தோழர் அம்பேத்கர், விவசாயிகள் விடுதலை முன்னணி

காவல் துறை நீண்ட நேரம் நம்மை படம் எடுக்கிறார். இந்த பொறுப்புணர்வை ஆற்றில் மணல் கொள்ளை நடப்பதை படம் எடுத்தால் நல்லாயிருக்கும்.

மணல் கொள்ளையர்கள் ஆற்றை சிதைக்கிறார்கள். நாள் ஒன்றுக்கு 2000, 3000 லோடு வெளி மாநிலங்களுக்கு மணல் கடத்தப்படுகிறது. ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எங்கும் எந்திரம் வைத்து மணல் அள்ள தடை உள்ளது.

பொன் விளையும் பூமி பொட்டல் காடாக காராணம் அரசு அதிகாரிகள். VAO முதல் கலெக்டர் வரை அனைவரும் மணல் கொள்ளைக்கு உடந்தையாக உள்ளார்கள். 15 ஹிடாச்சிகளை பயன்படுத்தி பென்னையாற்றில் மணல் அள்ள அனுமதித்த கலெக்டரை குண்டர் சட்டத்தில் கைது செய் என விழுப்புரம் மாவட்டம் முழுவதும் போஸ்டர் ஒட்டினோம். என் மீது வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். நாங்கள் பின் வாங்க மாட்டோம்.

தனியார் மயக்கொள்கை வந்த துவக்கத்தில் விவசாயிகள் விடுதலை முன்னணி இறால் பண்ணைகளுக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது.பின்னாளில் மக்களே இறால் குட்டைகளை அழித்தார்கள். கல்வி முதல் நிதி, போக்குவரத்து வரை அனைத்து துறைகளிலும் அரசாங்கம் செயலிழந்துவிட்டது. மாற்றத்தை உருவாக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து போராட வேண்டும்.

வழக்கறிஞர் புஷ்பதேவன், மா.செயலர், ..பா.மையம்.

வழக்கறிஞர் புஷ்பதேவன், மா.செயலர், ம.உ.பா.மையம்.
வழக்கறிஞர் புஷ்பதேவன், மா.செயலர், ம.உ.பா.மையம்.

“இதே சேத்தியாதோப்பில் சில வருடங்களுக்கு முன்பு தில்லை நடராசர் ஆலயத்தின் தெற்கு வாயில் தீண்டாமைச்சுவரை அகற்ற கோரி பொதுக் கூட்டம் நடத்தினோம்” என்பதை நினைவு கூர்ந்து, “காவல் துறை அதிகாரிகள் மக்களை மிரட்டு வதை கைவிட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காண வேண்டும். போராடும் மக்கள் எங்களை அழைக்கிறார்கள்” என்பதை வலியுறுத்தி பேசி இப்பொதுக்கூட்டத்தின் வாயிலாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வாசித்தார்.

 1. கடலூர் மாவட்டம், வெள்ளாற்றில் நெய்வாசல், கார்மாங்குடி, முடிகண்ட நல்லூர் மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட பல மடங்கு மணல் அள்ளப்பட்டுள்ளது. மணல் கொள்ளைக்கு துணைபோன பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக்கொள்கிறோம்.
 2. மேற்படி குவாரிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து மணல் அள்ளப்பட்டு வருவதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவிசாய பம்ப்செட்டுகளும், குடிநீர் பம்ப்செட்டுகளும் நீர் இறைக்க முடியாமல் பழுதடைந்துள்ளது. புதிதாக போர் போட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே பழுதடைந்த போர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் மணல் குவாரிகளை நிரந்தரமாக மூட உத்திரவிட வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
 3. சட்டவிரோத மணல் கொள்ளையை தடுப்பதற்காக அரசாணை எண் 135-ன் படி அமைக்கப்பட்ட மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான பல துறை அதிகாரிகளை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு, கடலூர் மாவட்டத்தில் சட்டவிரோத மணல் கொள்ளையை தடுக்க தவறியதற்கு இக்கூட்டத்தின் வாயிலாக கண்டனத்தை பதிவு செய்கிறோம். உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நிலத்தடி நீரை காக்க அனைத்து விதிமுறைகளும் பின்பற்றபடுவதை உத்திரவாதப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
 4. கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம் நெய்வாசல் மணல் குவாரியில், அளவுக்கு அதிகமாகவும், 6 ஜே.சி.பி.எந்திரங்களை வைத்து மணல் அள்ளப்படுகிறது. இது சட்ட விரோதம். இத்தகையச் செயலுக்கு வருவாய்த்துறை, காவல்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். மணல் குவாரியை மூடக்கோரி போராடிய சன்னியாசி நல்லூர், மற்றும் பல கிராம மக்கள் மீது காவல்துறை தடியடி நடத்தியதை இக்கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. போராடும் மக்களின் கோரிக்கைகளை அதிகாரிகள் ஜனநாயக முறையில் நேர்மையாக பேசி தீர்க்காமல் அவர்களை எதிரி போல் கருதி காவல் துறையை வைத்து அச்சுறுத்துவது நிரந்தர தீர்வாக அமையாது என்பதை தமிழக அரசுக்கு இக்கூட்டம் சுட்டிகாட்ட விரும்புகிறது.
 5. ஆயிரக்கணக்கான மணல் லாரிகளால் குண்டு குழியுமாக படு மோசமாக சேதமடைந்த அனைத்து சாலைகளையும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என தமிழக அரசை இக்கூட்டம் வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
 6. தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக ஒருங்கிணைந்து போராடினால் தான் மணல் கொள்ளையை நிரந்தரமாக தடுக்க முடியும். எனவே பல இடங்களில் போராடும் மக்களை சந்தித்து அவர்களை கூட்டமைப்பாக இணைக்க வேண்டும். இத்தகைய முயற்சிக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பும்,ஆதரவும் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
 7. தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக பாதிக்கப்படும் விவசாயிகளோடு நீர் ஆதாரம் காக்க அனைத்து மக்களும் இணைந்து போராட வேண்டும் என கேட்டுக் கொள்வதுடன், மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டம் நாட்டு விடுதலைக்கான போராட்டம் என்பதை மனதில் நிறுத்தி எத்தகைய தியாகத்திற்கும் அஞ்சாமல் அனைவரும் பங்கேற்க வேண்டும் என இக்கூட்டத்தின் வாயிலாக கேட்டுக் கொள்கிறோம்.

வழக்கறிஞர்.சி. ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்.

com-rajuமுடிகண்ட நல்லுார் குவாரியில் அனைத்தும் சட்டப்படிதான் நடக்கிறது என சேத்தியாதோப்பு DSP சொல்கிறார். பொதுப்பணித்துறை அதிகாரி வெற்றிச்செல்வன் புகாரின் பேரில் போராடும் முன்னணியாளர்கள் 31 பேர் மற்றும் அடையாளம் தெரிந்த 100 ஆண்கள் 70 பெண்கள் ஆகியோருடன் சேர்த்து என்னையும் இணைத்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தாக வழக்கு பதிவு செய்துள்ளார்கள். நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை.

மாநில சுற்று சூழல் ஆணைய உத்திரவுப் படி உங்களுக்கான எல்லையை மீறி பல மடங்கு தூரம் மணல் அள்ளி வருகிறீர்கள். ஜி.பி.எஸ் அளவு படி 11 25’51 N to 11 26’01 வரைதான் அள்ள வேண்டும். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை அள்ளுகிறார்கள். மாட்டு வண்டியை மடக்கும் காவல்துறை மணல் லாரியை விடுகிறார்கள். இந்த குவாரியில் மட்டும் ஒரு நாளைக்கு 500 லோடு செல்கிறது. 37,593 யூனிட் தான் அள்ள வேண்டும். 1,25,000 யூனி்ட்டுக்கு மேல் அள்ளியுள்ளார்கள். எந்த முதலீடும் இல்லாமல் ஆற்றில் மணலை அள்ளி கோடி கோடியாக கொள்ளையடிக்கிறார்கள். காவல் காக்க வேண்டிய காவல் துறை சாதி மோதலை துாண்டி விடுகிறது. இவர்தான் ராஜு வக்கீல் என்று அடையாளம் காட்டுகிறார்கள்.

ஆற்றில் நீர் இல்லை என்றால் ஆறு செத்துவிடும். விவசாயம் நாசமாக போயிடும்.

அரசு அதிகாரிகளின் பணி என்ன?

 • மணல் அள்ளும் இடத்தை சிமெண்ட் கட்டை கட்டி சிகப்பு துணியால் அடையாளப்படுத்த வேண்டும்.
 • கரையிலிருந்து 50 மீட்டர் துாரம் மணல் அள்ள தடை உள்ளது. கரையையும் சேர்த்து அள்ளுகிறார்கள். கரை பலமாக இருந்தால் தான் மக்கள் பாதுகாப்பாக வாழ முடியும்.
 • JCP பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. ஆனால் JCP வைத்து மணல் அள்ள மாவட்ட கலெக்டர் அனுமதி அளித்துள்ளார்.
 • 10 ஆண்டுகளாக மணல் கொள்ளை நடக்கிறது. ஆனால் எடுக்க கூடிய மணலுக்கு கணக்கு இ்ல்லை.
 • தாசில்தார் முதல் RDO வரை மணல் கொள்ளையைபறக்கும் படை போல் கண்காணிக்க வேண்டும் என அரசாணை உள்ளது.

com-raju-2

 • புகார் பதிவேடு ஆற்றங்கரையில் இருக்க வேண்டும். மாதம் இரு முறை கண்காணித்து அறிக்கை தர வேண்டும்.அதை மாவட்ட ஆட்சியர்,மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழு பரீசிலித்து ஆற்று மணல் கொள்ளை போக வில்லை என்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும். இது அரசு பணி இல்லையா?

இதை நீங்கள் செய்ய தவறி மணல் கொள்ளையர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள். இதில் குற்றவாளி தமிழ்நாடு பொதுப்பணித்துறை அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் தான்.

200 கிலோ மீட்டர் துாரத்துக்கு மேல் பயணிக்கிறது வெள்ளாறு. வழி நெடிகிலும் பல ஏரிகளுக்கும், குளங்களுக்கும், கால்வாய்களுக்கும் வெள்ளாற்று நீர் பாசன வசதி தருகிறது. அதிகாரிகளாக இந்த ஆற்றை நீங்கள் பாதுகாப்பீர்கள் என்று நம்பினோம். ஆனால் மணல் கொள்ளைக்காக ஆற்றையும் மக்களையும் அழிக்க நினைக்கிறீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதை செய்யத் தவறியதால் நாங்கள் செய்கிறோம். முடிந்தால் மக்களுக்கு நல்லது செய்யுங்கள், முடியவில்லை என்றால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு செல்லுங்கள்.

கார்மாங்குடியில் 8,247 லோடு இதுவரை அள்ளப்பட்டுள்ளது. இன்னும் 25,499 லோடு மணல் எடுக்க வேண்டியுள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகிறார்கள். ஆனால் 48,500 லோடுகள் அள்ளியதற்கான ஆதாரம் இருக்கிறது. பணம் எங்கே போனது?

மணல் கொள்ளையை தடுக்காமல் கோர்டுக்கு போக சொல்கிறார்கள். 9 மாதம் மணல் அள்ளிவிட்டு 10 வது மாதம் கலக்டர் எந்திரம் வைத்து மணல் அள்ளுங்கள் என உத்திரவு போடுகிறார்.

திட்டக்குடி சன்னியாசி நல்லுாரில் 2 க்குமேல் 6 ஹிட்டாச்சி வரை வைத்து மணல் எடுப்பதை தடுக்க போன மக்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. அரியலூர் தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் உட்பட நூற்றுக்கணக்கானவர் மீது வழக்கு போட்டுள்ளது.

மக்களை பாதுகாக்க வேண்டிய அரசும், காவல் துறையும், மாவட்ட நிர்வாகமும், மக்கள் மீது தடியடி நடத்தி மணல் கொள்ளையர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறது. அரசும் அதிகார வர்க்கமும் மக்களுக்கு எதிராக செயல்படுகிறது. ஆளுகின்ற தகுதியை இந்த அரசு இழந்து விட்டது. இந்த அரசு நமக்கு அன்னியமாக போய்விட்டது.

ஆங்கிலேயன் நமக்கு வெளிப்படையாக தெரிந்தான். அதிகார வர்க்கம், அரசியல் வாதிகள் நம்முடன் இருக்கிறார்கள். அதற்கு நாம் ஏன் அடிப்பணிய வேண்டும். தாது மணல் கொள்ளையில் ரூ 1,00,000 கோடிக்கு மேல் ஊழல் நடந்துள்ளது என்பதை நாங்கள் உண்மை அறியும் குழுவாக சென்று தகவல் வெளியிட்டோம். தூத்துக்குடியில் வைகுண்ட ராஜனை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய் என பொதுக் கூட்டம் நடத்தினோம். இன்றுதான் தி.மு.க. இதை பற்றி பேசுகிறது.

ஆற்றில் பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடக்கிறது. முப்போகம் விளைந்த நிலம் இப்போது இரு போகம் மட்டும் விளைகிறது. தண்ணீர் இருந்தால் மணல் எடுக்க முடியாது என்பதால் தண்ணீரை தடுத்து கடலுக்கு திருப்பிவிடுகிறார்கள். இதுதான் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வேலையா? விவசாயிகள் தண்ணீருக்கு ஏங்கும் வேலையில் தண்ணீரை கடலுக்கு அனுப்பும் பொதுபணித்துறை அதிகாரிகளே உங்களுக்கு வெட்கமாக இல்லையா?

நாங்கள் மக்கள் அனைவருக்காகவும் போராடுகிறோம். அவர்களை உங்களுக்கு எதிராக வாதிடும் வக்கீலாக மாற்றி இருக்கிறோம். மணல் கொள்ளையை நிரந்தமாக தடுக்கும் வரை தொடர்ந்து போராடுவோம்.

போலீசு மிரட்டும் – போராடுவோம்!
பொய் வழக்கு போடும் – போராடுவோம்!
கைது செய்யும் – போராடுவோம்!
சிறையில் தள்ளும் – போராடுவோம் !
தடியடி நடத்தும் – போராடுவோம்!
துப்பாக்கி சூடு நடத்தும் – போராடுவோம்!
துப்பாக்கி நம் கைக்கு வரும் போது போராட்டம் முடியும்!….

நன்றி வணக்கம்.

மக்கள் கலை இலக்கிய கலைக்குழு தோழர்கள் பேச்சின் இடையே அவ்வப்போது பாடல் பாடி மக்களை உணர்வுட்டி உற்சாக படுத்தினர். இறுதியாக நேரம் குறைவாக இருந்த்தால் தொகுப்பான கலை நிகழ்ச்சி நடத்தாமல் சில பாடல்களை மட்டும் பாடினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

நன்றியுரை கூறிய சேத்தியாதோப்பு ம.உ.பா.மை பாலு மகேந்திரன், “இப்போது யாருக்கம் நான் நன்றி சொல்ல மாட்டேன். மணல் குவாரியை நிரந்தரமாக மூடுவோம். பிறகு வீடு வீடாக நான் கண்டிப்பாக நன்றி சொல்கிறேன்” என முடித்தார்.

 சேத்தியாதோப்பு ம.உ.பா.மை பாலு மகேந்திரன்
சேத்தியாதோப்பு ம.உ.பா.மை பாலு மகேந்திரன்

சேத்தியா தோப்பில் இது போன்ற கூட்டத்தை எந்த அரசியல் கட்சியினரும் நடத்தியதில்லை. இவ்வளவு கட்டுக் கோப்பாக கடைசிவரை அனைத்து மக்களும் ஒரே இடத்தில் நின்று கூட்டத்தை கவனித்தது காவல் துறையின் கெடுபிடிகளை செல்லாக்காசாக்கியது.

தகவல்,
மனித உரிமை பாதுகாப்பு மையம்,
விருத்தாசலம்

 1. நாம் நாட்டில் உள்ள கனிமவளங்களை கொள்ளை அடிப்பதர்க்காக துணைப்போவது என்பது விபச்சர விடுதியில் விலக்கு பிடித்துக்கொண்டு இருப்பது போன்றது இப்படி ஒரு ஈனதானமான வேலயைதான் நம் நாட்டில் மேல குறிப்பிட்ட அதிகார வர்க்கத்தினர் செய்துக்கொண்டு இருக்கின்றனார்.

  மணல் கொள்ளைக்கு எதிராக போராடி வரும் உழைக்கும் மக்களுக்கும் மற்றும் தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்

 2. ஆற்றில் திரண்டுவரும் காட்டாற்று வெள்ளம் போல், மணல் கொள்ளையர்களை ஆற்றிலேயே புதைப்போம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க