Tuesday, September 22, 2020
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் மாட்டிறைச்சியை மறுத்தால் நீயும் பஞ்சாங்கமே - கேலிச்சித்திரம்

மாட்டிறைச்சியை மறுத்தால் நீயும் பஞ்சாங்கமே – கேலிச்சித்திரம்

-

ban-on-beef-in-maharashtra-cartoonபடம் : ஓவியர் முகிலன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. ஓவியர் முகிலன் அவர்களுக்கு,

  பூணூல் போடுபவர்கள் நார்மலாப் போடும் போது அதனை இடது தோளிலும் , தெவசம் பண்ணும் போது மட்டும் வலது தோளிலும் போடுவார்கள்!

  நன்றி!

  சினிமா விரும்பி

  • சினிமா விரும்பி அவர்களே
   தவறு நேராமல் பார்த்து கொள்கிறேன்
   நன்றி

   • தோழர் முகிலன்,

    இந்த சில்லறை விசயங்கள் அவர்களுக்கு வேண்டுமானால் முக்கியமாக இருக்கலாம். நமக்கல்ல. நீங்கள் செய்துள்ளது தவறல்ல. நமக்கு தெரிந்தாலும் இவற்றை ஏற்றுக்கொள்ளக்கூடாது. தொடர்ந்து இடக்கு மடக்காகவே வரையுங்கள். நன்றி.

 2. காமராஜரைக் கொலை செய்தாவது பசு மாடுகளைப் பாதுகாத்துவிட வேண்டும்

  19ஆம் நூற்றாண்டு இறுதியில், வட மாநிலங்களில் பெருவெள்ளம் ஏற்பட்டு மனிதர்கள், கால்நடைகள் என எல்லோரும் மாண்ட நேரத்தில், இந்துத்வவாதிகள் சிலர் ‘கோ ரக்ஷன் சமிதி’ என ஒன்றைத் தொடங்கினர். மனிதர்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, மாடுகளைக் காப்பாற்றக் கோரும் அந்த அமைப்பு குறித்து விவேகானந்தர் மிகக் கடுமையான சொற்களால் விமர்சனம் செய்தார்.

  காங்கிரஸ் கட்சிக்குள் பசு வதைத் தடைச் சட்டம் குறித்து இரண்டு வகையான கருத்துகள் காலம்தோறும் இருந்துகொண்டே இருந்தன. (காங்கிரஸ் கட்சியில் ஒரே ஒரு கருத்து இருந்தால்தான் அது வியப்புக்குரியது!). நேரு அச்சட்டத்தை எதிர்த்த போதும், அவர் பிரதமராக இருந்தபோதுதான்,

  உ.பி.யில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதலமைச்சராக இருந்த சம்பூர்ணானந் 1955இல் அச்சட்டத்தைக் கொண்டு வந்தார். அது மாநில அரசின் உரிமை என்பதால்தான் தலையிட விரும்பவில்லை என்று நேரு கூறிவிட்டார். பிறகு, பீகார், ம.பி., ராஜஸ்தான் காங்கிரஸ் அரசுகளும் அப்போதே அச்சட்டத்தைக் கொண்டுவந்தன. இந்திரா காந்தி அரசில் உள்துறை அமைச்சராக இருந்த நந்தா, இந்தியா முழுவதும் பசு வதைத் தடைச் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற ‘சாதுக்களின்’ கோரிக்கையை அரசு ஏற்க வேண்டும் என்றார். அதனைப் பிரதமர் இந்திரா காந்தியும், காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜரும் ஏற்கவில்லை.

  1966 நவம்பர் 2 அன்று தில்லியில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டத்தில் காமராஜர் அதனைக் கடுமையாக எதிர்த்தார். நாடு, மக்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டிய நேரம் இது, மாடுகளைப் பற்றி அல்ல என்றார். அவர் கூற்று இந்து மதத் தீவிரவாதிகளிடம் பெரும் கோபத்தை உண்டாக்கிற்று.

  அதனால்தான், நவம்பர் 7 ஆம் நாள் தில்லியில் நடைபெற்ற சாதுக்களின் ஊர்வலம், காமராஜர் தங்கியிருந்த வீட்டை நெருப்பு வைத்துக் கொளுத்தியது. நல்வாய்ப்பாக, காமராஜர் உயிர் பிழைத்தார். அவருடைய உதவியாளர்கள் நிரஞ்சன், அம்பி ஆகியோரும், பாதுகாவலர் பகதூர் சிங்கும் படுகாயமடைந்தனர்.

  காமராஜரைக் கொலை செய்தாவது, பசு மாடுகளைப் பாதுகாத்துவிட வேண்டும் என்று கருதிய ‘அஹிம்சாவாதிகளின்’ அரியதோர் கூடாரம்தான் ஆர்.எஸ்.எஸ்.

  மாடு புனிதமான விலங்காம். அதுவும் உண்மையில்லை. வேத காலத்தில் மாட்டுக் கறியை விரும்பி உண்டவர்கள் பார்ப்பனர்கள்தாம். நெய்யில் வறுத்து மாட்டுக்கறி உண்பது குறித்து வேத, உபநிடதங்களில் கூறப்பட்டுள்ளது.

  இராமாயணத்தில், ஆரண்ய காண்டத்தில், இராமனும், சீதையும் மாட்டுக்கறி உண்ணும் காட்சியை வால்மீகி காட்டுகின்றார். மகாபாரதத்தில் மாட்டுக்கறிக்குப் பஞ்சமே இல்லை.

  பார்ப்பனர்கள் வளர்த்த யாகங்களில் மாடு, குதிரை என எல்லா விலங்குகளையும் வெட்டிப் பலி போட்டுள்ளனர். அவற்றை அவர்கள் உண்டும் இருக்கின்றனர். அதனை சங்கராச்சாரியார் (ஓடிப்போகாத பெரியவாள்), தெய்வத்தின் குரல் (இரண்டாம் தொகுதி) என்னும் தன் நூலில் நியாயப் படுத்துகின்றார்.

  இதோ அவருடைய வரிகள்: “தர்மத்துக்காகச் செய்யவேண்டியது எப்படியிருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ரு வதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக் கொள்ளவில்லையா?…….அப்படி பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பே இல்லை.” “பிராமணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜ பேயத்துக்கும் 23 பசுக்களே கொல்லப்படுகின்றன. சக்கரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வ மேதத்துக்குக் கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.” ஆக, அவர்கள் கொன்றால் அது யாகம். நாம் கொன்றால், அது மிகப் பெரிய குற்றம். 10000 ரூ தண்டம், 5 ஆண்டுகள் சிறை. இன்னும் வாழ்கிறது மனுநீதி என்பதுதானே இதன் பொருள்!

  – சுபவீ

 3. மாட்டிறைச்சிக்கு தடை என்பது தவறாகும்! பசுதடை சட்டம்தான் கொண்டுவரப்பட்டுள்ளது. பசு அனைத்து மக்கள் அனைவருக்கும் தாய் போன்றது. நமக்கும் குழந்தைகளுக்கும் பால் கொடுக்கிறது. ஆகையால் இதனை கொல்லாமல் பேணி காக்கவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் இந்த சட்டம் பல மாநிலங்களில் கொண்டுவரப்பெற்று உள்ளது.
  ஆனால் ஒரு சந்தேகம் வருகிறது. வயதான பசுக்களை எப்படி பராமரிப்பது என்பதுதான். பால் கொடுத்துக்கொண்டு இருக்கும்போது அதனால் பயன் இருந்தது அதனால் அதனை பாதுகாப்பாக வளர்த்து வந்தோம். பால் வற்றியவுடன் இதற்கு எப்படி செலவு செய்வது. அது சாதாரண மக்களின் பொருளாதாரத்தை பாதிக்கும். வயதான பசுக்களை கொல்லாமல் மடத்தில் விட்டு பராமரிக்கலாம் என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஆகையால் பசுக்களை பெரும்பான்மையினரின் வழிபாட்டு ஸ்தலங்களுக்கு அருகிலோ அல்லது மற்றவர்களின் மனம் புண்படாதவகையில் இருக்குமாறு சட்டத்திருத்தம் கொண்டு வரலாம்!!

 4. ஆமாம் பசு தனது கன்றுக்கு கூட பாலைக் கொடுக்காமல் ,அதுவாகவே வந்து நட்ராயணனின் வாயில் தனது பாலை வார்க்கிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க