Tuesday, February 25, 2020
முகப்பு இதர கேலிச் சித்திரங்கள் தமி்ழ் சினிமாவா ? தேவர் சினிமாவா ? - கேலிச்சித்திரம்

தமி்ழ் சினிமாவா ? தேவர் சினிமாவா ? – கேலிச்சித்திரம்

-

tamil-movie-cartoon-2படம் : ஓவியர் முகிலன்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. என்னடா இது வினவுக்கிட்ட இருந்து இன்னும் வரலையேன்னு ரொம்ப நாளா எதிர்பார்த்துக்கிட்டு இருந்தேன். ஏற்கனவே, இயக்குனர் முத்தையாவின் முதல்படமான குட்டிப்புலி படத்துக்கே திரைவிமர்சனம் எழுதுன வினவு, முத்தையாவோட ரெண்டாவது படமான இந்த கொம்பனுக்கும் ஏதாவது திரைவிமர்சனம் வருமேன்னு நினைச்சேன். கொஞ்சம் லேட்டாதான் வந்திருக்கு. திரையையே விமர்சனம் பண்ணின போக்கு, நல்லாதான் இருக்கு. இதுபோல தேவர் சாதியினரை அடிக்கடி கொம்பு சீவிக்கொண்டே இருக்க வாழ்த்துகிறேன். 🙂

  – இரா.ச.இமலாதித்தன், நாகப்பட்டினம்.

 2. ஆனால் கேலிச்சித்திரம்தான் பொருத்தமில்லாமல் இருக்கிறது. ஓவியர் இன்னும் பயிற்சி எடுத்துக் கொள்வது நலம்.

  வினவுவின் சாதி வெறிக்கு வாழ்த்துக்கள்.

  • சகோ பெருமாள் கேலிச்சித்திரம் எந்த வகையில் பொருத்தமில்லாதது என்பதை உங்களின் பார்வையில் விளக்குங்கள் கொம்பன் படம் பாத்தீகளா நல்லா இருக்குதா அதுல என்ன விதமான சாதீ ரீதியான பிரச்சனை இருக்குது சொல்லுங்க நான் இன்னும் படம் பார்க்கவில்லை பார்க்கவும் போரது இல்லை அதனால கேக்குறேன் … வினவு தளத்தார் கொம்பன் படம் பாத்துட்டு விமர்சனம் எழுதுங்க அதை படிச்சிட்டு அந்த படத்த பார்க்கலாம் …

 3. There is a lot to debate on the subject “Do films have potential to trigger communal violence”. The answer is both yes and no. As far as komban is concerned, only in few scenes the director muthiah has succeeded in documenting his views. I don’t know how many of you can peruse the content. Let us look at the following exaples. A scene where the villain says ” kadichutu vara sonna kavvitu varavan thanda Marapaya(maravan)” to his group man, because he fails to kill karthi. The panchayat where karthi conducts selection of aapanadu leader based on money deposited to panchayat. Director maturely avoided the term Aapanadu panchayat, because it may trigger objection. It had been in practice before a decade where panchayat leader is selected among maravars rather through democratic election, it also infers that no one except that caste person can be elected/selected as leaders in that locality. Otherwise komban doesnt have any image to lead caste promotion like its other counterpart movies. But an image of Karthi holding a boomerang is a great achievement for the director and especially for the people who want to have celebrity image in their caste related advertisements.

 4. தென் தமிழ் நாட்டு பயணத்தின் போது கொம்பன் படத்தை கடந்த ஞாயிறு அன்று விருதுபட்டியில்[நகரில்] உள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு அருகாமையில் இருந்த திரையரங்கில் இரு முறை பார்த்தேன். அன்று 5 காட்சிகள், எனவே இரவு 7.30 மற்றும் 10.30மணி காட்சிகளை கண்டேன். 7 ஆண்டுகளுக்கு பின்பு நான் சிறையரங்கம் சென்று கண்ட திரைபடம் அது.வினவு எழுப்பும் கேள்வியான தமி்ழ் சினிமாவா ? தேவர் சினிமாவா ? என்ற கேள்வியை மனதுக்குள் நிறுத்திக்கொண்டு தான் படம் பார்த்தேன்.

  அதில் கார்த்தி ஆடுவெட்டி அதன் தொலை வியாபாரம் செய்யும் ஒரு சிறு வியாபாரி . கார்தியின் மாமனார் ராஜ்கிரண் அவர்கள் மாட்டு வண்டியில் மூட்டை தூக்கும் சுய தொழில் செய்பவர். மேலும் தமிழ் மக்களில் நாட்டார்[நாடார் அல்ல]கருப்பான சாமிக்கு பக்தியில் பிரதிநிதியாக வேட்டைக்கு செல்லும் சாமி அவர். அந்த படத்தில் நடைபெறும் திருமணம் கூட ஐயர் இல்லாமல் தான் நடைபெற்றது. அறிமுக காட்சியிலேயே ஒரு அம்மா பள்ளிக்கு போக அடம்பிடிக்கும் தன் சிறு மகனிடம் மள்ளுகட்டிகொண்டு இருப்பார். அந்த கிராமத்தின் வீச்சருவ வெட்டி பயல்களை காட்டி படிக்கலைனா இதுங்களை போலத்தான் நீயும் வெட்டியாக போயிடுவே என்று அர்சனை செய்வார். மேலும் எதிர் நாயகனாக[வில்லன்] காட்டபடும் நடிகரின் முக தோற்றம் எங்கோ பார்த்தது போன்றும் உள்ளது அல்லவா ? ஆமாம் அவர்கள் கடவுளாக தொழும் “தெய்வ திருமகனின் ” தோற்றமாக தான் எனக்கு படுகின்றது [வாசகர்கள் விக்ரமின் தொய்வ திருமகள் என்று பெயர் மாற்றப்பட்ட படத்தின் சாதியவாதிகள் எழுப்பிய சர்சையை நினைவு கூறுவது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் ].

  படத்தில் ஏதும் குறையே இல்லையா என்ற கேள்வியும் எழத்தான் செய்கின்றது. ஆமாம் பஞ்சாயத்து தேர்தல் ஏலம் மூலம் விற்க படும் காட்சியில் நாயகனும் கலந்து கொள்வார். ஏலத்தை நடத்தியும் முடிப்பார். இந்த ஏல நிகழ்வு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் உண்மைதான் எனினும் அந்த காட்சியில் திரைபட இயக்குனரின் விமர்சனம் ஏதும் இருக்காதது பெரிய குறை என்று கூறுவதை விட சாதியவாதிகளுடன் திரைகதை செய்துகொண்ட சமரசம் என்று நேரடியாகவே கூறலாம். மற்றபடி படத்தில் காட்டபடும் பண்பாட்டு நிகழ்வுகளை பொருத்தவரையில் அவைகள் தமிழகத்தின் குமுடிபூன்டியில் இருந்து கன்னியாகுமரி வரையிலான தமிழ் மக்களின் உட்கூறுகளாக தான் உள்ளது. படத்தின் மைய கருத்து மாமனார்-மருமகன் இடையிலான மோதல் என்பதால் இந்த படத்தை சாதிய விடயங்களை தள்ளிவைத்து விட்டு பார்ப்பதில் எனக்கு ஏதும் சிரமம் ஏற்படவில்லை. தேவர் மகன் பச்சையாக காட்டும் தேவரின புகழ்ச்சி பாடல்கள் போன்றோ[ இசை அமைத்தவரை என்ன செய்யலாம் ?],விருமாண்டி படம் காட்டும் நுட்பமான தலித் மக்களின் மீதான தாக்குதல்களை போன்றோ இந்த படம் இல்லாததே எனக்கு சிறு துளி மகிழ்ச்சியை அளிக்கிறது.இயக்குனர் ரஞ்சித் அவர்களின் படமான வடசென்னை தலித் மக்களின் வாழ்வியலை ஆழமாக காட்டியது போன்று இல்லாமல் ,இந்த படத்தின் இயக்குனர் சுப்பையா அவர் சார்ந்த தேவர் சாதிய மக்களை பற்றிய வாழ்வியலை மேலோட்டமாக காட்டியுள்ளார் என்பது மட்டும் உண்மை.

  தென்மாவட்ட பயணங்கள் தக்க கட்டுரைகளின் பின்னுட்டங்களில் தொடரும் ……

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க