privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மக்களிடம் அடிபணிந்த அதிகார வர்க்கம் - பென்னாகரம் சாதனை

மக்களிடம் அடிபணிந்த அதிகார வர்க்கம் – பென்னாகரம் சாதனை

-

க்களின் பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவே உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் வட்டாட்சியர் அலுவலகத்திலும், பி.டி.ஒ வட்டார வளர்ச்சி அலுவலங்களிலும் நடைபெறும் லஞ்ச ஊழலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறது பென்னாகரம் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் விடுதலை முன்னணி.

கடந்த 28-03-2014 அன்று நடந்த மக்கள் பேரவை கூட்டத்தின் தீர்மானங்களை சுவரொட்டியாக ஒட்டியது வி.வி.மு.

மக்கள் பேரவை கூட்டத்தின் தீர்மானங்கள்

1) லஞ்ச ஊழல் குறித்து மக்களிடம் கருத்து கேட்ட வி.வி.மு தோழர்கள் 7 பேர் மீது பொய் வழக்கு போட்ட போலீசை வன்மையாக கண்டிக்கின்றோம்.
2) வட்டாட்சியர் மற்றும் (பி.டி.ஒ) வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் அதிகாரிகள் லஞ்ச ஊழலில் ஈடுபடுவதை உடனே நிறுத்திக் கொள்ளவேண்டும்.
3) லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை அரசு அலுவலகங்களில் நுழைய தடைவிதிப்போம்.
4) லஞ்ச ஊழல்களை தடுத்து நிறுத்துவது பற்றி கிராமங்களில் தொடர்ச்சியாக மக்கள் பேரவை கூட்டங்கள் நடத்துவோம்.
5) லஞ்ச ஊழலில் ஈடுபட்டு, கண்டுபிடிக்கப்பட்ட அதிகாரிகளின் சொத்துகளை பொதுச் சொத்தாக்க நிர்ப்பந்திப்போம்.
6) லஞ்சம் கேட்டு அலைக்கழிக்கும் அதிகாரிகள் குறித்து எங்களிடம் தெரிவித்தால் அந்த அதிகாரிகளை கண்டித்து உரிய முறையில் கோரிக்கையை நிறைவேற்றுவோம்.

தாசில்தாரை கண்டித்து ஒட்டிய சுவரொட்டி
தாசில்தாரை கண்டித்து ஒட்டிய சுவரொட்டி

இந்தத் தீர்மான சுவரொட்டியை பார்த்தவுடனே, பென்னாகரம் தாசில்தார் தனக்குக் கீழ் வேலைசெய்யும் அதிகாரிகளை ஏவி சுவரொட்டியை கிழிக்கும்படி உத்தரவு போட்டுள்ளார்.  கீழ்நிலையில் இருக்கும் ஊழியர்கள் தயக்கம் காட்டியுள்ளனர். தாசில்தார், “சொன்னால் செய்ய மாட்டீங்களா” என்று கடிந்துகொண்ட பிறகு கிராம தலையாரியை (உத்தாரி) அனுப்பி பென்னாகரம் நகரத்தில் உள்ள சுவரொட்டிகளை எல்லாம் கிழித்துக் கொண்டு வந்தனர். இதனை எதிர்பார்த்த தோழர்கள் சுவரொட்டியை கிழிக்கும் போதே கையும்களவுமாக பிடித்தனர்.

போஸ்டரை கிழித்த தலையாரி முனியப்பன்
போஸ்டரை கிழித்த தலையாரி முனியப்பன்

பதறிப் போன தலையாரி, “நான் முடியாது என்றுதான் சொன்னேன். ஆனா, தாசில்தார் என்னை மிரட்டி, கிராமத்தில் இருந்தவனை அழைத்து, போய் கிழித்துவிட்டு வா என்று அனுப்பினார். இனி இதுபோல் செய்ய மாட்டேன்” என்று பயந்து, மன்னிப்பு கேட்டுவிட்டு சென்றுவிட்டார்.

கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்
கிழிக்கப்பட்ட சுவரொட்டிகள்

இதனையெடுத்து, பென்னாகரம் தாசில்தார் கனகராஜ் தொலைபேசியில் வி.வி.மு செயலாளர் கோபிநாத் எண்ணுக்கு தொடர்பு கொண்டார். “நான் என்ன செய்தேன். என்மீது போஸ்டர் போட்டு இருக்கீங்க. எனக்கு வருத்தமாக இருக்கிறது” என்றார்.

தனி தாசில்தார் அதியாமன் அவர்களிடம் மனு
தனி தாசில்தார் அதியாமன் அவர்களிடம் மனு

“இல்ல சார், எங்களுக்குத் தான் வருத்தமாக இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை எல்லாம் அடிப்படை ஜனநாயக உரிமை என்று சொல்லுகிறது சட்டம். ஆனால், நீங்களே தீர்மானங்கள் சுவரொட்டியை கிழிப்பது குறித்து உங்கள் மீது வருத்தமாக இருக்கிறது” என்றார் தோழர்.

“மேலிடத்தில் இருந்து பிரசர், அதுனாலதான் கிழிச்சோம்” என்றார் தாசில்தார்.

“இது இந்திய சட்டசாசனத்திற்கு எதிரானது. நீங்க இப்படி செய்யலாமா?” என்று நமது தோழர் கேட்க.

“இப்ப வந்து வட்டாட்சியர் ஆபிசை பாருங்க. லஞ்சம் எல்லாம் எதுவும் நடக்கறது இல்ல. நீங்க போராட்டம் செய்த பிறகு புரோக்கர்கள் யாரும் இல்லை” என்றார்.

“புரோக்கர் இல்லாமல், லஞ்சம் வாங்காமல் மக்கள் பிரச்சனை தீர்த்து கொடுத்தால் வரவேற்கிறோம் சார்” என்று தோழர் கூறினார்.

இதனையெடுத்து, பாதித்த மக்களுக்கு வி.வி.மு சார்பாக பிரச்சனையை தீர்த்துக் கொடுப்பது என்ற மக்கள் பேரவை தீர்மானத்தின்படி லஞ்சம் கொடுக்க முடியாமல் முதியோர் உதவித் தொகை நிறுத்தப்பட்ட 12 பேரை அழைத்துக்கொண்டு பென்னாகரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தனிதாசில்தார் அதியமான் அவர்களிடத்தில் மனு கொடுத்தோம். மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்.

நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய தனி தாசில்தார்
நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய தனி தாசில்தார்

அடுத்து ஆர்.ஐ-ஐ சந்தித்தோம். “இந்த மனுமீது உங்கள் முன்னிலையிலேயே விசாரணை நடத்துகிறேன்” என்று கூறி உடனே அதற்கான ஏற்பாடுகளை செய்தார். மனுவின் மீது விசாரனை நடத்தப்பட்டது.

“இவர்கள் கடந்த பல ஆண்டுகளாக முதியோர் உதவித்தொகை பெற்று வந்தனர். திடீரென நிறுத்துவது சில குளறுபடியால் நடந்துவிட்டது. இவர்களுக்கு மறு ஆணை வழங்க ஏற்பாடு செய்வதாக” விசாரனையின் அடிப்படையில் ஆர்.ஐ உறுதியளித்தார்.

இது எமது போராட்டத்திற்கு கிடைத்த தற்காலிக வெற்றி. இது ஏதோ இந்த வட்டாரத்தில் இருக்கிற பிரச்சனை மட்டுமல்ல. நாடுமுழுவதும் இதே நிலைதான்.

“கல்வித்துறையில் நடக்கிறது. வட்டாட்சியர் அலுவலகத்தைவிட பல லட்சம் லஞ்சம் பணிமாற்றத்திற்காக வாங்கப்படுகிறது. நான் ஆதாரம் தருகிறேன்” என்று நம்மிடம் தொடர்பு கொண்டார் ஒருவர். மின்சார வாரியத்திலும் லஞ்சம் கேட்பதாக மற்றொருவர் நம்மிடம் புகார் தெரிவித்தார்.

ஆனால், இப்படி அனைத்துத் துறைகளிலும், அனைத்து மட்டங்களிலும் புரையோடி கிடக்கும் லஞ்ச ஊழலை ஒழிக்க இத்தகைய தீர்வுகள் தற்காலிகமானவையே.  இப்போது நிலவும் போலி ஜனநாயக  ஆட்சி அதிகார கட்டமைப்பில் லஞ்ச ஊழல் பிரச்சனையை தீர்க்க முடியாது.  புழுத்துநாறிக் கொண்டிருக்கும் இந்தக் கட்டமைப்பை தகர்க்காமல் லஞ்ச ஊழலை முடிவுக்கு கொண்டுவர முடியாது. நம்மை ஆளத்தகுதி இழந்த இந்தக் கட்டமைப்பை தகர்ப்பதற்கான சமரை தொடருவோம்.

தகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
பென்னாகரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க