Friday, July 10, 2020
முகப்பு கலை கவிதை மலை முழுங்கி கொள்ளையர்க்கு எங்கே என்கவுண்டர் ?

மலை முழுங்கி கொள்ளையர்க்கு எங்கே என்கவுண்டர் ?

-

கொலைகார அரசு, பிணம் தின்னும் வளர்ச்சி!

ன்னும்
சில தூரம் நடந்திருந்தால்
அறுந்து போகக் காத்திருக்கும்
செருப்புகள்…

ஆந்திரா என்கவுண்டர் படுகொலைகள்
இன்னும் சில காலம் வாழ்ந்திருந்தால் வர்க்கம் உயிர் வாழும் உடல்கள்…

இன்னும்
சில தொலைவு கடந்திருந்தால்
மண்ணோடு கசங்கிடும்
பைகள்…

இன்னும்
சில பொழுது அணிந்திருந்தால்
வியர்வைக் கந்தலாகும்
உடைகள்…

இன்னும்
சில நேரம் பார்த்திருந்தால்
மீள வழி தேடும்
விழிகள்…

இன்னும்
சில காலம் வாழ்ந்திருந்தால்
வர்க்கம் உயிர் வாழும்
உடல்கள்…

கச்சிதமாக வாழ்வோர்
மனம் அறியுமோ
தொழிலாளர் படும்
துயர்கள்…

செம்மரக் கட்டைகள்
செத்தவர்களை விட செம்மரக் கட்டைகளுக்கு மதிப்பு அதிகம்தான்!

செல்வம்
மெச்சிடும் உலகில்,
செத்தவர்களை விட
செம்மரக் கட்டைகளுக்கு
மதிப்பு அதிகம்தான்!

கட்டைகளின்
தரம் அறிந்தவர்கள்
பிணங்களின் தரத்தை
கேள்விக் குள்ளாக்குகிறார்கள்.

கேட்க
நாதியற்றவர்களுக்கு
நீதி மட்டும்
கிடைக்குமா என்ன?

அரைக்கிலோ வெங்காயம்
எடை போடப்படு போதே
தராசு குறிமுள் நுனியில்
நீதி வழுவாமல்
நிறை கட்டி நிற்கும்
கனவான்கள்,

கூலித் தொழிலாளிகளின்
மனிதக் கறியை
பார்த்த மாத்திரத்திலேயே
நியாயம் பேசுகிறார்கள்;
” அவன்தான்
வந்தா சுடுவோம்னானே
இவன் ஏன்
அங்க போனான்?”

என்கவுண்டர் படுகொலை
விவசாயமில்லை… வேலை வாய்ப்பில்லை… வேறு வழியில்லை.. வேலை விபரம் உண்மையில்லை..

விவசாயமில்லை…
வேலை வாய்ப்பில்லை…
வேறு வழியில்லை..
வேலை விபரம் உண்மையில்லை..
என,
ஏதிலிகள் சூழலை
இயன்றவரை
பிணங்களின் ரணங்கள்
பேசினாலும்,

இவையெல்லாம்
ஏன் இல்லை
என்பது வரைக்கும்
சிந்திக்க மறுப்பவர்கள்…

திரும்பத் திரும்ப
சலிப்பில்லாமல்
நாட்டை ஆள்வதற்கு
திருடர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள்…
கூலித்தொழிலாளிகள் மட்டும்
கொல்லப்படுவது
தவிர்க்க முடியாதது என
ஏ.கே.47 இதயத்தை
இப்படித் திறக்கிறார்கள்,
“திருட்டு வேலைக்குப் போனா
விடுவானா?”

போலி மோதல் கொலை
கூலித்தொழிலாளிகள் மட்டும் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது என ஏ.கே.47 இதயத்தை இப்படித் திறக்கிறார்கள், “திருட்டு வேலைக்குப் போனா விடுவானா?”

ஊர் அறிந்த திருடர்கள்
ஜெயா- சசி கும்பலை
நீதியின் ஆரத்தி
நெற்றித் திலகமிட்டல்லவா
விட்டிருக்கிறது!

ஆளுக்கேற்ற மாதிரி
அளவு மாறினால்
அதற்குப் பெயர்
அறச்சால்பல்ல
‘அல்சேசன்’ வால்!

காரணங்களை
கண்டு கொள்ளாமல்
விளைவுகளை மட்டும்
விமர்சிப்பவனின் அறிவு
கொலைக் கருவியை விட
கொடியதல்லவா!

இது மட்டுமா?
ஏதுமற்றவர்களின்
பிணங்களைப் பார்த்தாலே
ஆளும் வர்க்கத்தின் தயாரிப்பில்
சிலர் மூளை
அழுகி நாறுகிறது;
” இவன் ஏன் குடிக்கப் போறான்?
இவன் ஏன்
சாதி மாறிப் போய்
கல்யாணம் பண்ணான்?
இவள் ஏன்
தனியா போனா?”

ரெட்டி சகோதரர்கள்
மலைகளையே வெட்டும் ரெட்டி சகோதரர்களுக்கும், கிரானைட், தாதுமணல் கொள்ளையர்க்கும் ‘என் கவுண்டர்’ எங்கே?

இன்னும் பல கேள்விகள்
வாழ்பவர்களிடம் இருக்கிறது,
பதில் சொல்லத்தான்
பாதிக்கப்பட்டவர்கள்
உயிருடன் இல்லை!

உயிர் வாழ்வதே
கேள்விக்குறியானவர்களுக்கு
விடை சொல்லவும்
வாய்ப்பில்லை.

வாழ்க்கையைப் பார்த்து
வாய் திறக்காதவர்கள்
சாவைப் பார்த்தாவது
விவாதிக்கட்டும்- என்று
விடை பெற்றுக்கொண்டார்கள்!

மரம் வெட்டப்போன
தொழிலாளிகளுக்கு
மரண தண்டனை
என்றால்,

மலைகளையே வெட்டும்
ரெட்டி சகோதரர்களுக்கும்,
கிரானைட், தாதுமணல்
கொள்ளையர்க்கும்
‘என் கவுண்டர்’ எங்கே?

ஆற்றுமணல் கடத்தல்
ஆற்றையே சுரண்டி நீர்க்குரல்வளை நெறித்து மணல் கடத்தும் மாஃபியாக்களை சுட்டுக்கரியாக்க துப்பாக்கி எங்கே?

வேற்று ஊருக்கு
கூலிவேலைக்கு போகிறவர்களை
வழிமறித்து கடத்தி
வெட்டிப்பொசுக்கலாம் எனில்,

ஆற்றையே சுரண்டி
நீர்க்குரல்வளை நெறித்து
மணல் கடத்தும்
மாஃபியாக்களை
சுட்டுக்கரியாக்க
துப்பாக்கி எங்கே?

ஓ! இப்படியெல்லாம்
கேட்டால்
அது தீவிரவாதம்…
சட்டம்
‘அனைத்தையும் பார்த்துக் கொல்லும்’,

வர்க்கம் பார்த்துதான்
துப்பாக்கியும் சுடும்
நியாயமும் வரும்…
நீங்கள்
உங்களுடையதா என
பிணங்களை மட்டும் பாருங்கள்!

கட்டிட இடிபாடு
கட்டிட இடிபாடுகளுக்குள் முகமற்றுப்போன தொழிலாளிகளின் படுகொலையை விதி! என்று தீர்ப்பெழுத ரியல்எஸ்டேட்டு முதலாளிகளால் முடிகிறது!

ஜனநாயகம்
எதையும் மறைக்கவில்லை,
முறிக்கப்பட்ட கை…
உரிக்கப்பட்ட தோல்..
கருக்கப்பட்ட முகம்.
இனி தப்பே
செய்ய முடியாத அளவுக்கு
நிறுத்தப்பட்ட இதயம்..
எல்லாமே,
சட்டத்தைக் காப்பாற்றத்தான்!

ஏன் ?
எதற்கு?
யாருக்காக?
கேள்விகளால்
சட்டத்தை அறுத்துப்பார்ப்பது
தேசவிரோதம்,
வேண்டுமானால்
சடலங்களை அறுத்துப்பாருங்கள்
சட்டத்தின் தீவிரமும்
தேசபக்தியும் தெரியும்!

கிரானைட் கொள்ளை
வளர்ச்சித் திட்டங்களால் நிலவளம் பறித்து மலை வளம் சுரண்டி மக்களின் வயிறு வரைக்கும் பள்ளம் தோண்டியவர்கள்…

வளர்ச்சித் திட்டங்களால்
நிலவளம் பறித்து
மலை வளம் சுரண்டி
மக்களின்
வயிறு வரைக்கும்
பள்ளம் தோண்டியவர்கள்…
அதிகாரவர்க்கத்தின்
அசல் திருடர்கள்
கூச்சமின்றி கூறுகிறார்கள்
உழைக்க மட்டுமே
தெரிந்தவர்களைப் பார்த்து
” அவர்கள் சட்ட விரோதமானவர்கள்”!

மக்களின்
வாழ்வாதாரங்களை
கொள்ளையடித்து
வாழ்விடப் பரப்பை விட்டு
மக்களையே
கடத்தியவர்கள்
தொழிலாளர்
பிணங்களின் மீதும்
பழியைப் போடுகிறார்கள்
‘அவர்கள் கடத்தல்காரர்கள்’

உழைப்பவர்க்கு
ஒன்று எனில்
கேட்க யார் இருக்கிறார்கள்
என்ற இறுமாப்பில்
எல்லாம் நடக்கிறது….

ராணிப்பேட்டை ரசாயனக் கழிவு
ஆலை சுற்றுச்சூழல் விதிகளுக்கு புறம்பாக தெரிந்தே லாபத்திற்காக ரசாயனக் கழிவை தேக்கி

வரைமுறைகளுக்கான
எல்லா விதிகளையும்
திட்டமிட்டே மீறிவிட்டு
ஒரே நிமிடத்தில்
உருக்குலைந்த
மவுலிவாக்கம் கட்டிட இடிபாடுகளுக்குள்
முகமற்றுப்போன தொழிலாளிகளின்
படுகொலையை
விதி! என்று தீர்ப்பெழுத
ரியல்எஸ்டேட்டு முதலாளிகளால் முடிகிறது!

ஆலை சுற்றுச்சூழல் விதிகளுக்கு
புறம்பாக
தெரிந்தே லாபத்திற்காக
ரசாயனக் கழிவை தேக்கி
ஒரே இரவில்
தொழிலாளிகளை
அமிலத்தாக்குதலில்
அடையாளம் தெரியாமல் கரைத்துவிட்டு
‘விபத்து’ என படுகொலையை
மூடி மறைக்க
தோல் தொழிற்சாலை முதலாளிகளால் முடிகிறது!

முறையான பணித்திட்டமின்றி
எழுப்பப்படும்
வானளாவிய
‘மெட்ரோ’ அழகுக்காக
நொறுக்கப்பட்ட தொழிலாளர் உடல்களை
சத்தமின்றி பையில் தினித்து
இவ்வளவுதான் என கையில் திணிக்க
கார்ப்பரேட் கிரிமினல்களால்
முடிகிறது!

எந்தப் பணிபாதுகாப்பும் தராமல்
ஒரே நாளில்
ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின்
வாழ்க்கையை படுகொலை செய்ய
பன்னாட்டு கம்பெனிகளால் முடிகிறது!

சட்டம்- போலீசு- நீதி
அரசு அனைத்து கட்டமைப்பும்
அவர்களுக்காகவே இருக்கிறது.

செம்மரக் கடத்தல் கொலைகள்
உடல்களை மண்ணில் புதைப்போம் வர்க்கத்தை நெஞ்சில் விதைப்போம்…

கொலை காரர்களையும்
கொள்ளைக்காரர்களையுமே
ஆளும் வர்க்கமாய் கொண்டிருக்கும்
இந்தக் கட்டமைப்பை
வெட்டி எறியாமல்,
உழைக்கும் வர்க்கம்
உயிர் காக்கவும் முடியாது
என்பதை
உணர்த்தும் படுகொலை இது!

உடல்களை
மண்ணில் புதைப்போம்
வர்க்கத்தை
நெஞ்சில் விதைப்போம்…
வளரும் செம்மரம்
மண்ணில்
மனதில்!

– துரை.சண்முகம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. பாதிக்கப் பட்ட குடும்பஙகளுக்கு இழப்பீடு மதல் பணியாகஇருக்க வேண்டும். கூலித் தெிழிலாளிகளை அமர்த்திய முதலாளிகளை இனங்காண வேண்டும். இதற்கு இவர்களைக் கூட்டிச் சென்ற உள்ளூர்த் தரகர் உதவலாம். மரத் திருட்டு முதலாளிகளின் உதவியாக உள்ள அரசியல்வாதி அதிகாரி ஆகியோரை சட்டத்துக் உட்படுத்த வேண்டும்.
    உணர்ச்சிவசப் பட்டு ஊர்வலம் மறியல் போன்றவை பரச்னையைத் திசை திருப்பி விடும். அரசியல்வாதிகள் ஆதாயம் பெறுவர். காசு கொடுத்து ஏழைகளிடம் ஓட்டு வாங்கி, அவர்களைக் கொண்டே கொள்ளையடிக்கும் அரசியல் சாரந்த கூட்டம். மக்களிடம் இதற்கான பரப்புரை செய்தல் வேண்டும். உணர்ச்சி வயப்பட்டால் பிரச்னையை திசை திருப்பி விடுவர்.
    இது தெலுங்கருக்கும் தமிழருக்குமான பிரச்னை அல்ல. திருடனுக்கும் ஏமாளி அப்பாவிகளுக்கும் இடையேயான விளையாட்டு. திருடனே ஜெயிப்பதும் அப்பாவி மரிப்பதும் நம் மக்களின் அறியாமை என்று புரிதல் வேண்டும்

  2. இழப்பால்தான், நியாயங்களை தூங்க விடாமல் பாதுகாக்க முடியும்.
    உணர்வில்லாத மனிதர்களின் காதுகளுக்கு இக் கவிதை வரிகளை கொண்டு செல்ல வேண்டியது வினவின் வாசகர்கள் ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க