privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்விழுப்புரம் குழந்தைகள் படுகொலை - ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் குழந்தைகள் படுகொலை – ஆர்ப்பாட்டம்

-

  • விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 10 பச்சிளம் குழந்தைகள் படுகொலை…
  • உயிரைக் காக்கும் பொறுப்புள்ள மருத்துவமனையே உயிரை எடுக்கிறது…
  • ஆள்வதற்கு பொறுப்பேற்ற அரசோ ஆளத் தகுதியிழந்து கிடக்கிறது….

டந்த 16,17 ஆகிய தேதிகளில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அடுத்தடுத்து  8 குழந்தைகள் மரணமடைந்தன.

உடனடியாக இதை அம்பலப்படுத்தி சுவரொட்டிகள் ஒட்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

vilupuram-infants-death-poster-1அடுத்த நாட்களில் மேலும் 2 இரண்டு குழந்தைகள் இறந்தனர் . இதனைக் கண்டித்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி  ஆகிய அமைப்புகள் இணைந்து இரண்டு நாள் பேருந்து பிரச்சாரம் செய்தனர். மருத்துவமனையை சுற்றியுள்ள சிந்தாமணி, முண்டியம்பாக்கம், பனையபுரம், விக்கிரவாண்டி ஆகிய பகுதிகளில் மக்களிடம் வீடு வீடாக சென்று பிரசுரம் கொடுத்து  பிரச்சாரம் செய்தனர். மருத்துவமனையின் சீர்கேடுகளை ஏராளமான மக்கள் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். அதன் தொடர்ச்சியாக 3௦௦ சுவரொட்டிகள் ஒட்டி  21/04/2015 செவ்வாய் அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட ஆட்சியரகம் முன்பு  கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

vilupuram-infants-death-poster-2ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி பேசிய விழுப்புரம் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி இணைச்செயலர் தோழர் ரஞ்சித் தன்னுடைய தலைமை உரையில் “குழந்தைகளின் படுகொலைக்கு காரணம் கேட்டால் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள்  மீதே பழியை போடுகின்றனர் மருத்துவமனை நிர்வாகமும் அதிகாரிகள் மற்றும் ஆய்வுக் குழு நிபுணர்களும். குழந்தைகள் கொல்லப்பட்டது குறித்து எந்தவித குற்றவுணர்வும் இல்லாமல், கொஞ்சமும் வெட்கப்படாமல் ரௌடிகளை போல் அதிகாரத்திமிருடன் நடந்து கொள்கிறார், மருத்துவமனை டீன். மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க துப்பில்லாமல், திட்டமிட்டு  தனியார்மயமாக்கப்பட்டதன் விளைவு தான் இப்படுகொலை” என்பதை அம்பலப்படுத்தி பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அடுத்ததாக கண்டன உரையாற்றிய விவசாயிகள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் அவர்கள் பேசும்போது “அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களே ஒரு கிரிமினல் கும்பலாகவும், தனியார் மருத்துவமனையின் புரோக்கர்களாகவும்  தான் செயல்படுகின்றனர். இது போக, தாங்களாகவே சொந்தமாக கிளினிக் வைத்துக் கொண்டு மக்களிடம் கொள்ளையடித்து வருகின்றனர். ஒரு நேர்மையான மருத்துவர் மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மையோடு நடந்து கொள்ள வேண்டும். ஆனால், இப்பொழுது டாக்டர்கள் அவ்வாறு இருப்பது இல்லை. நேர்மையான டாக்டர்கள் பலர் சீரழிந்து போய்விட்டனர்.

அதற்கு உதாரணம் தான் விழுப்புரத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க-வின் மாநிலங்களவை உறுப்பினர்  டாக்டர் லட்சுமணன். அவர் ஒரு சிறந்த முடநீக்கியல் மருத்துவர். தேவையற்ற பரிசோதனைகளை நோயாளிகளுக்கு பரிந்துரை செய்யமாட்டார். ஏழை மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்ப்பார். ஆனால் தற்போது அ.தி.மு.க. கட்சியில் சேர்ந்து சீரழிந்தது மட்டுமில்லாமல் 10 குழந்தைகள் மரணம் குறித்து ஒரு வார்த்தை கூட பேச முன்வரவில்லை; மருத்துவமனையை கூட இந்த நிமிடம் வரை எட்டிக்கூட பார்க்கவில்லை.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாறாக, உட்கட்சி பதவிகளுக்கு நடக்கும் தேர்தலில் வெகு தீவிரமாக தீயாய் வேலை செய்து வருகிறார். இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய தமிழக  முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், மற்றும் துறை சார்ந்த ஆதிகாரிகள் கூட்டமோ  கிரிமினல் குற்றவாளி ஜெயாவின் விடுதலையை வேண்டி யாகம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இனியும் இந்த ஓட்டுக்கட்சிகளை நம்பி பலன் இல்லை. அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் கூட்டு  சேர்ந்து கொண்டு மக்களுக்கு எதிராகவே செயல்படுகின்றனர். இந்த அரசு கட்டமைப்பை தகர்த்தெறிந்து விட்டு நமக்கான அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும். அதற்கு மக்கள் நக்சல்பாரிகள் தலைமையில் அணிதிரள வேண்டும்” என அறைகூவினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பெண்கள், குழந்தைகள் பலர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவர் “மருத்துவமனையில் நடக்கும் விஷயத்தை பற்றி சிறப்பாக போஸ்டர் போட்டுள்ளீர்கள். நீங்கள் சொல்வது போல் லஞ்சம், ஊழல் மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள். குறிப்பாக, பாண்டிச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையான பத்மாவதி மருத்துவமனை அரசு மருத்துவனையில் துப்புரவு பணியை மருத்துவமனைக்கு வெளியில்  மேற்கொள்ளும் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர்களை வைத்தே உள்ளே பல வேலைகளை செய்து கொண்டு இருக்கிறார்கள். தனியார் மயம் வெகுவேகமாக நடந்து கொண்டு இருக்கிறது. rmo மணிவண்ணன் ஏராளமான லஞ்சம் வாங்குகிறார்” என்று கூறினார்.

கல்வி, மருத்துவம் தனியாருக்கு!
சாராயக்கடையோ மக்களுக்கு !

எல்லாமே தனியாருன்னா
மயிற புடுங்கவா அரசாங்கம்!

ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
தனியார்மயத்தை ஒழித்து கட்டுவோம்!

உழைக்கும் மக்களே, பெரியோர்களே!
ஓட்டுப்போட்டு தேய்ந்தது போதும்
பட்டினி கிடந்தது மாய்ந்தது போதும்!

ஓட்டு கட்சிகளை தூக்கி எறிந்து
உழைக்கும் மக்கள் கமிட்டியாக
ஒன்றிணைவோம்! ஒன்றிணைவோம்!

நக்சல்பாரி பாதையிலே
நாட்டை காக்க போராடுவோம்!

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விழுப்புரம்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க