Tuesday, November 29, 2022
முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்மே நாள் சூளுரை : ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்

மே நாள் சூளுரை : ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்

-

ன்பார்ந்த உழைக்கும் மக்களே,

இந்த ஆண்டு மேதினம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் கடமையை உழைக்கும் வர்க்கத்தின் முன் வைக்கிறது. ஆளும் வர்க்கத்தின் அதிகாரத்துக்கு சவால்விட்டு, தனது சொந்த அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கான போராட்டங்களைத் தொடுக்குமாறு கோருகிறது.

ndlf-may-day-notice-sliderஆம், நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன. அவை மேலும் முன்னோக்கி நகர முடியாமல், ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகி, சிக்கலில் மாட்டிக் கொண்டுவிட்டன. ஒட்டுமொத்தக் கட்டமைப்பும் நாட்டுக்கும் மக்களுக்கும் வேண்டாத சுமையாகப் போய்விட்டன. அவற்றை இனியும் நாம் ஏன் தூக்கிச் சுமக்க வேண்டும்? இதுதான் இப்போது நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் கேள்வியாகும்.

மத்தியில் பிரதமர், மாநிலத்தில் முதலமைச்சர் மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், மாநிலத் தலைமை போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் ஆகிய உயர்பதவி வகிப்பவர்களே கிரிமினல் குற்றவாளிகளாக உள்ளனர். இருந்த போதிலும், இவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக, அவர்கள் மீண்டும் மீண்டும் ஆட்சியாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் அல்லது நியமிக்கப்படுகிறார்கள். இரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்ட இந்தக் கிரிமினல் குற்றவாளிகளிடமே இரகசிய ஆவணங்களையும், அதிகாரத்தையும் கொடுத்து நாட்டை ஆளும் நிலை நிலவுகிறது.

நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டுமானங்கள் அனைத்தும் தீராத, மீள முடியாத, நிரந்தரமான, மிகமிக அசாதரணமான நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளன. அதன் கட்டுமான உறுப்புகள் அனைத்தும் அவற்றுக்குரியவையாக வரையறுக்கப்பட்ட பணிகளை ஆற்றாது, திவாலாகி, தோற்றுப்போய், எதிர்நிலை சக்திகளாக (Bankrupted, Failed, Collapsed, and Opposite force) மாறி விட்டன.

உளவுத்துறை, போலீசு, நீதிமன்றங்கள் ஆகிய குற்றத்தடுப்பு அரசு அதிகார அமைப்புகளை இந்தக் கிரிமினல் குற்றவாளிகளே தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார்கள். நாட்டின் குடிமக்கள் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிட்டு ஒடுக்குவதாக, எங்கும் நீக்கமற நிறைந்து, வரைமுறையற்ற அதிகாரமும் ஆதிக்கமும் செலுத்துவதாக அரசு நிர்வாக அமைப்புகள், குறிப்பாக அவற்றின் அடக்குமுறை நிறுவனங்கள் உள்ளன. இராணுவம், துணை இராணுவம், போலீசு, உளவு அமைப்புகள், அதிகார அமைப்புகள் கிரிமினல் குற்றமிழைத்தால், அவர்களைத் தண்டிப்பதற்கு உச்சநீதிமன்றமே அஞ்சுகிறது. நீதிபதிகளோ பாலியல், கிரிமினல் குற்றவாளிகளாக, ஊழல் கிரிமினல் கும்பல்களின் எடுபிடிகளாக, நீதியே விற்பனைச் சரக்காக என்று நிர்வாணமாகி நிற்கிறது நீதித்துறை.

எங்கும் எதிலும் சட்டவிதிகள், நீதியின்படியான அரசு நிர்வாகம் கிடையாது. சட்டவிதிகளும், நீதியும் மக்களுக்கு எதிரானவையாக உள்ளன. அரசு நிர்வாகம் முழுவதிலும் இலஞ்ச ஊழல், அதிகார முறைகேடுகள் நிரம்பி வழிகின்றன. அரசியல் அமைப்பு முழுவதும் கிரிமினல்மயமானதாகி விட்டது. கிரிமினல் குற்றக் கும்பல்கள், ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், போலீசு மற்றும் அதிகார வர்க்கத்தினர் அடங்கிய முக்கூட்டு, சிவில் சமூகத்தின் மீது ஏறி மிதித்து, முற்று முழுதான ஆதிக்கம் செலுத்துகின்றது.

அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன.

நாட்டின் பொருளாதாரமோ ஏகாதிபத்திய உலகப் பொருளாதாரத்தோடு பிணைக்கப்பட்டு, கடந்த பத்தாண்டுகளாக உற்பத்திப் பின்னடைவு, தேக்கவீக்கம், அந்நிய செலாவணிப் பற்றாக்குறை, இந்திய நாணய மதிப்பு வீழ்ச்சி என்று மீளமுடியாத கடும் நெருக்கடிக்குள் சிக்கி விட்டது. அனைவருக்கும் கல்வி, குழந்தை உழைப்பு ஒழிப்பு, அடிப்படைப் பொதுச் சுகாதாரம், மருத்துவம், அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், குடியிருப்பு ஆகியவை எல்லாம் கானல்நீராகவே உள்ளன. இவை இன்று கார்ப்பரேட் கொள்ளைக் கும்பல்களின் மற்றும் கிரிமினல் குற்றக் கும்பல்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்து விட்டன. கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்காக விவசாயிகள், மீனவர்கள், பழங்குடி மக்கள், நெசவாளிகள், கைவினைஞர்கள், சிறு வர்த்தகர்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. காடுகள், மலைகள், கடல், நிலம், நீர்நிலைகள், ஆகாயம் ஆகிய எல்லா வளங்களும் நாட்டின் பொருளுற்பத்திக்குப் பயன்படுவதைவிட, பன்னாட்டு உள்நாட்டு ஏகபோகங்களின் கொள்ளையின் பொருட்டு சூறையாடப்படுகின்றன. உழைக்கும் மக்களோ கார்ப்பரேட் நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றப்படுகிறார்கள்.

ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.

ஒடுக்கப்படும் சாதியினர், மதச்சிறுபான்மையினர், பெண்கள் மீதான பாலியல் வக்கிரங்கள், வன்கொடுமைப் படுகொலைகள் கொஞ்சமும் சகிக்க முடியாதவையாகி, கட்டுப்படுத்த முடியாதவையாகி, அநாகரிகத்தின் உச்சநிலையை எட்டிவிட்டன. நாட்டின் சமூக பண்பாட்டு விழுமியங்கள், அமைப்புக் கட்டுமானங்கள் முழுவதும் நொறுங்கி விழும் நெருக்கடியில் சிக்கிக் கொண்டுவிட்டன. சாதிவெறி, மதவெறி, பாலியல்வெறித் தாக்குதல்கள் காரணமாக மக்கள்தொகையில் முக்கால் பங்குக்கும் மேலானவர்கள் வாழத்தகுதியற்றதாக நாடு மாறிவிட்டது. ஒடுக்கப்படும் சாதியினர் மீது பேரதிர்ச்சி கொள்ளும் அளவிலான தாக்குதல்கள், மதச்சிறுபான்மையினர் மீது பார்ப்பனப் பாசிச பயங்கரவாதப் படுகொலைகள், பெண்கள் மீது அநாகரிகமான பாலியல் கொடூர வக்கிரங்கள் என்று நாடே தலைகுனியும் வன்கொடுமைச் சம்பவங்கள் மீண்டும் மீண்டும் அரங்கேறுகின்றன. சாதி, மதவெறி அமைப்புகள் பார்ப்பன பாசிசத்தின் தலைமையிலான இணை அதிகார மையங்களாக வளர்ந்து வருகின்றன.

ndlf-may-day-bannerஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு மேலும் விரிவாக ஆய்வு செய்தால், நாட்டின் ஒட்டுமொத்தச் சமூக, அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைப்பு முழுவதும் தீராத கடும் நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டுள்ளதை எவரும் எளிதில் காணமுடியும். ஆளும் வர்க்கங்களும், அரசும், ஆட்சியாளர்களும் இவை எவற்றையும் தீர்க்க முடியாமல் திணறுவதையும் சிக்கித் தவிப்பதையும் காண முடியும். அவர்களின் கையாலாகத்தனத்தையும் தோல்வியையுமே இவை காட்டுகின்றன.

இந்தக் கட்டமைப்பைத் தாங்கிப் பிடிக்கின்ற, மக்களிடம் நியாயப்படுத்தி அங்கீகாரம் பெற்றுத் தந்துவந்த சித்தாந்தங்களும், அரசியல் கொள்கைகளும், பண்பாட்டு நெறிமுறைகளும், நீதி நெறிமுறைகளும், அரசியல் சட்டங்களும், விதிமுறைகளும், ஒழுங்குமுறைகளும் கூட திவாலாகி, தோற்றுப்போய் விட்டன என்பதையும், சித்தாந்த, அரசியல், பண்பாட்டு ஆயுதங்கள் கருவிகள் எல்லாவற்றையும் பிரயோகித்துப் பார்த்தும் நெருக்கடியிலிருந்து மீளமுடியாமல் நாடு மென்மேலும் நெருக்கடி எனும் கருந்துளைக்குள் (blackhole) போயக் கொண்டிருக்கும் பரிதாப நிலையையுமே இவை வெளிச்சம் காட்டுகின்றன.

இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வுகாணும் ஆயுதங்கள், கருவிகள் எதுவுமின்றி நிற்கின்ற ஆளும் வர்க்கங்களும் அதன் பல்துறை வல்லுனர்களும், சித்தாந்தவாதிகளும் அரசியல்வாதிகளும் இனி ஆளத் தகுதியற்றவர்களாக, நிர்வாகம் நடத்த வக்கற்றவர்களாக, சித்தாந்த அரசியல் ஓட்டாண்டிகளாக ஆகிவிட்டனர் என்பதையும், ஆள்வதற்கு மக்களிடமிருந்து பெற்ற நியாயவுரிமைகளை அவர்கள் தக்கவைக்க முடியாமல் முற்றிலும் அம்பலமாகி நிற்கிறார்கள் என்பதையும்தான் இது தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறது.

இவை அனைத்தும் கூறுகின்ற செய்தி இதுதான். நமது நாட்டின் அரசியல், பொருளாதார, சமூகக் கட்டமைப்பு நெருக்கடிகள் முற்றி ஒரு உச்சநிலையை எட்டிவிட்டன. அரசும், ஆளும் வர்க்கங்களும் ஆளும் தகுதியை இழந்துவிட்டன. இனி தனித்தனிச் சிக்கல்களுக்கு தனித்தனி தீர்வுகளும் கோரிக்கைகளும், முழக்கங்களும் முன்வைத்து தனித்தனி இயக்கங்கள் நடத்தித் தீர்வுகாண முடியாது. இந்தக் கட்டுமானங்கள் எவையொன்றையும் சீர்திருத்தவும் முடியாது.

நமது பிரச்சனைகளுக்கான தீர்வுகள்
தற்போதைய அரசியல் கட்டமைப்புக்கு
வெளியேதான் உள்ளன!

அரசு மற்றும் ஆளும் வர்க்கங்களின்
அதிகாரத்தைத் தட்டிக் கேட்க
வேண்டும்!

அவர்களின் அதிகாரத்துக்கு
சவால்விட வேண்டும்!

தங்களுக்கான அதிகார அமைப்புகளை
மக்கள் தாமே கட்டி எழுப்ப வேண்டும்!

மே நாள் சூளுரை :

ஆளும் அருகதையற்ற
அரசுக் கட்டமைப்பை
வீழ்த்துவோம்!

மக்கள் அதிகாரத்தை
நிறுவுவோம்!

மேதின பேரணி – ஆர்ப்பாட்டம்

1. தருமபுரி 

[போஸ்டர்களை பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

பேரணி துவங்குமிடம் : வேல் பால் டிப்போ அருகில் நேரம் : மாலை 3 மணி
பேரணி தலைமை : தோழர்.பரசுராமன், மாநிலத் துணைத் தலைவர், பு.ஜ.தொ.மு

ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடம் : BSNL அலுவலகம் அருகில்.
ஆர்ப்பாட்டத் தலைமை : தோழர்.கோபிநாத், வட்டாரச் செயலாளர், வி.வி.மு., பென்னாகரம்.
சிறப்புரை:
தோழர்.முத்து, வி.வி.மு
.
தோழர்.ராஜா, மாவட்ட அமைப்பாளர், பு.மா.இ.மு., தருமபுரி.
நன்றியுரை: தோழர்.சிவா, வட்டாரக் குழு உறுப்பினர், வி.வி.மு., பென்னாகரம்.

சுவர் விளம்பரங்கள்

[நோட்டிசைப் பெரிதாகப் பார்க்க படங்களின் மீது அழுத்தவும்]

விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்

2. புதுச்சேரி

ndlf-may-day-posterதகவல்
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் – புதுச்சேரி

3. கோவில்பட்டி

may-day-2015-kovilpatti

தகவல்

மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி

4. சென்னை

மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம்

பேரணி துவங்குமிடம் : ஜேம்ஸ் கல்லறை – கல்லறைப் பேருந்து நிறுத்தம் அருகில், பூந்தமல்லி

ஆர்ப்பாட்டம் : அம்பேத்கர் சிலை – நீதிமன்றம் அருகில், பூந்தமல்லி

தலைமை : தோழர் சிவா, காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர், புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

சிறப்புரை : தோழர் விஜயகுமார், மாநிலப் பொருளாளர், புதிய ஜனநாயகத்  தொழிலாளர் முன்னணி, தமிழ்நாடு

நேரம் : காலை 10 மணி நாள் : 01-05-2015 வெள்ளிக்கிழமை

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
காஞ்சிபுரம் மாவட்டம்

  1. உலகெங்கும் உள்ள உழைக்கும் தொழிலாளர்களுக்கு மே ஒன்று, உழைப்பாளர் தின வாழ்த்துக்கள்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க