“மே நாள் என்பது கொண்டாட்ட நாளல்ல; மாறாக தொழிலாளி வர்க்கம் தன் அரசியல் அதிகாரத்தை நிறுவ வேண்டிய நாள்” என்று அறிவித்து பூந்தமல்லியில் புதிய ஜனநாயக் தொழிலாளி முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்புகள் மே நாள் பேரணி ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

சென்னையின் நுழைவாயில் பூந்தமல்லி என்பது அந்தக் காலம். இன்று சென்னையைச் சுற்றி இருக்கும் பன்னாட்டு பகாசுரக் கம்பெனிகளால் உறிஞ்சி எடுக்கப்பட்டு சக்கைகளான தொழிலாளிகளான கொத்தடிமைகளின் கூடாரம். ஆம், எவ்வித உரிமையுமின்றி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பூந்தமல்லியில் அடைந்து கிடக்கிறார்கள்.
தங்களை தொழிலாளியாகக் கூட உணர முடியாத அளவுக்கு எந்திரமாக, நிலையற்றவர்களாக மாற்றப்பட்டு இருக்கிறார்கள். 1000 பேர் வேலை செய்யக்கூடிய ஒரு நிறுவனத்தில் 33 பேர்தான் நிரந்தரத் தொழிலாளர்கள். நிரந்தரம் செய்து விட்டால் அவர்கள் “மேனேஜ்மெண்ட் ஸ்டாஃப்”. எப்படியிருந்தாலும் சட்டப்படி சங்கம் வைக்க முடியாது.

கான்ட்ராக்ட் தொழிலாளர்களின் பணி எப்போது நிரந்தரம் ஆகும் என்பது யாருக்குமே தெரியாது. யாரும் ஒரு கம்பெனியில் நிரந்தரமாக வேலை செய்வதில்லை. எப்போது வேண்டுமானாலும் பணி நீக்கம் செய்யப்படலாம். எதுவும் நிரந்தரமில்லை, உயிர் உட்பட.
ஒரு தொழிலாளியின் அனுபவத்தைக் கேளுங்கள். தொழிலாளி வர்க்கத்தின் இன்றைய நிலைமை எளிதாகப் புரியும்.
“வெல்டிங் அடிக்கும் போது நெருப்பு பொறி பறந்து வரும். அது சட்டைக்குள் போய்
அப்படியே ஜட்டிக்குள் போகும். அப்போது அதை தடுக்கவும் முடியாது. குறித்த நேரத்துக்குள் இத்தனை பீஸ் வெல்டிங் செய்யணுமே. மாசத்துக்கு ரெண்டு ஜட்டி , பனியன் வாங்கணும். என்னதான் கேட்டாலும், ‘பாதுகாப்பு கவசம் கொடுக்க முடியாது வேண்டுமென்றால் மாசம் ஒரு டீ சர்ட் எடுத்து தரேன்’னு நிர்வாகம் சொல்லுது. எங்களை வாட்டி வதைக்குறதை நினைக்கும் போது அந்த முதலாளி மண்டையிலதான் வெல்டிங் வைக்கணும்னு தோணும்”
இப்படி லே ஆஃப், அடக்குமுறை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளான தொழிலாளி வர்க்கத்தை திரட்டி அதன் வலிமையை வைத்து பிச்சை எடுப்பதைத்தான் மற்ற சங்கங்கள் செய்து வருகின்றன.

“ஹூண்டாயை நான் கொண்டு வந்தேன், நோக்கியாவுக்கு நான் ரூட் போட்டேன்” என்று மார்தட்டும் ஜெயாவும் கருணாநிதியும் மே நாளுக்கு வாழ்த்து சொல்லியே தொழிலாளி வர்க்க்த்தை அடிமைப்படுத்திக்கொண்டு இருக்க, போலிகளோ தொழிலாளர்களை ஆளும் வர்க்கத்திடம் அடகு வைத்து மே நாளை சடங்காக மாற்றி இருக்க, வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாய் குமுறிக்கிடக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமை தாங்கி, பாட்டாளி வர்க்க மார்க்சிய லெனினிய அரசியலே, அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான ஆயுதம் என்பதை தொழிலாளிக்கு மட்டுமல்ல, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் உணர்த்தி
நிலைகுலைந்து, இற்றுப்போய் எதிர் நிலை சக்தியாக மாறிவிட்ட, அரசுக்கு இதோ வீறு கொண்டு எழுகிறது பாட்டாளி வர்க்கம் என்பதை அறிவிக்கும் விதமாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பில் பூந்தமல்லியில் மாபெரும் பேரணியும் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றன.
பூவிருந்தவல்லிக்கு செல்லும் வழியில் மே நாளை சினிமா பாட்டு போட்டு, போர்டுக்கு பூசை போட்டு சி.ஐ.டி.யு கொண்டாடிக் கொண்டிருந்தது. இன்னொரு இடத்தில் அ.தி.மு.க எம்.எல்.ஏ போர்டு திறந்து மிட்டாய் கொடுத்துக் கொண்டிருந்தார்.
தூரத்தில் பட்டொளி வீசிப் பறந்து கொண்டிருந்தது செங்கொடி, 150 ஆண்டுகளுக்கு முன்னால் குமுறிக்கிடந்த தொழிலாளி வர்க்கத்துக்கு நம்பிக்கை ஒளி வீசிய அதே கொடி பூவிருந்தவல்லியில் பறை சாற்றிய செய்தி “மே1 கொண்டாட்ட நாள் அல்ல; போராட்ட நாள்“.
வாழ்க்கையில் துளியும் பாதுகாப்பே இல்லாத தொழிலாளிக்கு செங்கொடிதான் பாதுகாப்பு என்பதை உணர்த்தும் விதமாக காலை 9 மணி முதலே சாரை சாரையாக 30-க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த தொழிலாளர்கள் செங்கொடியின் பின்னே அணிவகுத்து நின்றனர்.

அவர்கள் மட்டுமல்ல, செங்கொடி ஏந்திய தொழிலாளி வர்க்கமே உழைக்கும் மக்களின் விடுதலையை சாதிக்கும் என்பதை அறிவிக்கும் விதமாக மாணவர்களும் மாணவிகளும் பெண்களுமாக பதாகைகளும் செங்கொடிகளுமாக களத்தில் நின்றார்கள்.
பதாகைகளும், செங்கொடிகளும்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
30-க்கு 4 அடி அளவில் “ஆளும் அருகதையற்ற அரசுக் கட்டமைப்பை வீழ்த்துவோம்! மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்” என்ற பதாகை ஆளும் வர்க்கத்தின் மீதான போருக்கான கட்டியம் கூறும் விதமாக இருந்தது.

சரியாக 10 மணிக்கு, பெண்கள் குழந்தைகள் முன்னே நிற்க, மாணவர்கள், நம்பிக்கையின் ஊற்றுக்களாக, திரும்பிய பக்கமெல்லாம் இளந்தொழிலாளர்கள் விண்ணதிர முழங்கினார்கள் தங்கள் முழக்கங்களை,
வாழிய வாழிய வாழியவே
மே நாள் வாழியவே
வீரவணக்கம் ! வீரவணக்கம் !
வர்க்கப் போரில் உயிர் நீத்த
பாட்டாளி வர்க்கப் போராளிகளே
மேதினத் தியாகிகளே
உங்களுக்கு எங்கள் வீரவணக்கம்!
பெண்களின், குழந்தைகளின் படை தொழிலாளி வர்க்கத்தின் அணியாக
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
வீரவணக்கம் ! வீரவணக்கம் !
அப்பு, பாலன், சீராளன்,
பச்சையப்பன் பாதையிலே
இன்னுயிர் ஈந்த தியாகிகளே
நக்சல்பாரி தோழர்களே
உங்களுக்கு எங்கள் வீரவணக்கம் !
தகர்த்தெறிவோம் ! தகர்த்தெறிவோம் !
ஆளும் தகுதியை இழந்துவிட்ட
எதிர்நிலை சக்தியாய் மாறிவிட்ட
அரசமைப்பை தகர்த்தெறிவோம்!
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
தீர்வு இல்லை… தீர்வு இல்லை…
உழைக்கும் மக்கள் அனைவருக்கும்
போலிஜன நாயக அரசமைப்பில்
தீர்வு இல்லை…தீர்வு இல்லை…
கட்டியமைப்போம் ! கட்டியமைப்போம்
மக்கள் அதிகாரக் கமிட்டிகளை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம் !
காங்கிரசு – பி.ஜே.பி
தி.மு.க – அ.தி.மு.க
மாத்தி மாத்தி ஓட்டு போட்டும்
மக்கள் துயரம் தீரவில்லை
எதனாலே எதனாலே
தானே வகுத்த சட்டத்தை
தானே செய்ய முடியாமல்
நெருக்கடியில் நிக்குது
அரசு எந்திரம் அதனாலே !
பாட்டாளி வர்க்கத்தின் கலைப்படை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
அணிதிரள்வோம் ! அணிதிரள்வோம் !
நக்சல்பாரி பாதையில் அணிதிரள்வோம் !
புதிய ஜன நாயகப் புரட்சிக்கு
அணிதிரள்வோம் ! அணிதிரள்வோம் !
“1886-ல் இந்த மேநாளில்தான், தொழிலாளி வர்க்கம் தனதுகோரிக்கைகளான 8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர உறக்கம் போராடி பெற்ற நாள்.
129 ஆண்டுகள் ஆகிவிட்டன, ஆனாலும் இன்றும் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை அதேதான். அந்தளவிற்கு முதலாளித்துவ சுரண்டல் நீடித்துக் கொண்டு இருக்கிறது. தொழிலாளிகளின் வாழ்க்கை ஒரு சதவீதம் கூட முன்னேறவில்லை. மோடி-பி.ஜே.பி கும்பல் பதவியேற்றவுடன் தொழிலாளர் நலச்சட்டங்களைத் திருத்துவது என கட்டற்ற அடக்குமுறையை ஏவிவருகிறது. அதிகாரவர்க்கம், நீதிமன்றம், போலீசு, இராணுவம் என்ற இந்த அரசுக் கட்டமைப்பு முழுவதும் நம்மை ஆளும் தகுதியை இழந்துவிட்டது. இந்த அரசுக் கட்டமைப்பை வீழ்த்தி மக்கள் அதிகாரத்தை நிறுவ வேண்டிய வரலாற்றுக்கடமை தொழிலாளி வர்க்கத்தின் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால், தொழிலாளி வர்க்கமோ பிரிந்து கிடக்கிறது. இந்த அரசியல் கடமையை நிறைவேற்ற தொழிலாளிகள் அனைவரும் ஒரு வர்க்கமாய் அணிதிரள வேண்டும்” என்று தொழிலாளர் வர்க்கத்தை அறைகூவி பேரணியைத் தொடங்கிவைத்தார், பேரணியின் தலைவர் பு.ஜ.தொ.மு திருவள்ளூர் மாவட்டசெயலாளர் தோழர் செல்வக்குமார்.
புறப்பட்டது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படை
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
செங்கொடிகள் பட்டொளி வீசிப்பறக்க, செம்பதாகைகள் உயர, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக் குழுத்தோழர்கள் கள நடனமாட, போர்ப்பறை முழங்க , தொடங்கியது பேரணி. பெண்கள், குழந்தைகள், ம.க.இ.க, பு.மா.இ.மு, பெ.வி.மு தோழர்கள் வரிசையாய் அணிவகுத்து முழங்கினார்கள். கொத்தடிமைகளாய் குமுறிக்கிடக்கும் தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டும் விதமாக, சிறப்பு நிகழ்ச்சியில் எந்தப் படம் எந்த டிவியில் போடுவார்கள் என்று அடிமைகளாக இருந்த தொழிலாளர்களின், மக்களின் உணர்வைத் தட்டியெழுப்பின முழக்கங்கள். சிறையில் இருந்த விடுவிக்கப்பட்ட பறவைகளாக அவர்கள் பேரணியின் இருபுறமும் அணிவகுத்து நின்றார்கள்.
பூந்தமல்லி கல்லறைப் பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய பேரணி குடியிருப்புகள் வழியாக சென்றது. மே தின சிறப்பு நிகழ்ச்சியைப் பார்க்க தொலைக்காட்சியின் முன் உட்கார்ந்திருந்த மக்கள், தம் வீட்டு வாயில்களிலும், மாடிகளிலும் நின்று பேரணியைக் கண்டனர். தோழர்களுக்கு தண்ணீர் கொடுத்து மண்டையைப் பிளந்த உச்சி வெயிலை தணித்து தங்களின் அன்பை வெளிப்படுத்தினார்கள்.
தொழிலாளர்களின் குடியிருப்புக்களின் வழியே சாரை சாரையாக ஊர்ந்து சென்றது பேரணி, அது சென்ற இடமெல்லாம் இந்த ஆளும் அருகதையற்ற அரசமைப்பை தூக்கியெறி ! மக்கள் அதிகாரத்தை கட்டியமை! என்பதை பறை சாற்றியது. ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கை ஒளிக்கீற்றாக மிளிர்ந்தது.
குடியிருப்புகளின் வழியே சாரை, சாரையாக
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
இதுவரை தண்ணியடித்துவிட்டு, கூலிக்கு ஆள் பிடித்து பேரணி நடத்தியவர்களையே பார்த்து சலித்துப் போன மக்கள் முறையாக, உணர்வுப் பூர்வமான இந்தப் பேரணிக்கு வழிவிட்டு நின்றார்கள் துண்டறிக்கைகளை முன்வந்து வாங்கினார்கள். சரியாக 12 மணிக்கு அத்தனைபேரும் ஆர்ப்பாட்ட மேடைக்கருகில் அணிவகுத்து நின்றனர்.
“ஆளும்அருகதையற்றஅரசுக்கட்டமைப்
முதலாளித்துவத்தின் பார்வையை பறிக்கும் அனல் காற்றாக்கினார்
பார்வையற்றத் தோழர் மனோகர்.
“தொழிலாளி வர்க்கத்தின் மீது துப்பாக்கிச் சூடு! அரசு-முதலாளி வர்க்கத்தோடு புயலாய் மோது”என்ற பாடல் எப்படிப்பட்ட போராட்டத்தை நாம் நடத்த வேண்டும் என்று கட்டியம் கூறியது.
“மே நாளிலே சூளுரைப்போமே ! போராடி உரிமைகளை மீட்டெடுப்போமே ” என்ற பாடல் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம் , பாலை என ஐவகை நிலங்களையும் ஒரே நிலமாய் வீரத்தின் விளை நிலமாக, அரசுக் கட்டமைப்பின் புதை நிலமாக மாற்றக் கோரியது.

தோழர் சிவா தனது தலைமை உரையில், “அரசு துறைகள் ஒவ்வொன்றும் மக்கள்- தொழிலாளர் பிரச்சனைகளை தீர்க்க வக்கற்றுப்போய் மக்களுக்கு எதிராக இருப்பதை” அம்பலப்படுத்தி பேசினார்.
தகிக்கும் வெயிலில், தொழிலாளிகள் எரிமலையாய் வெடிக்க வேண்டிய அவசியத்தைக் கூறி தனது உரையைத் தொடங்க்கினார், பு.ஜ.தொ.மு மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார். “இந்த அரசு மக்களுக்கு எதிராக மாறி இருக்கிறது. அதற்கு ஒரு உதாரணம் தொழிலாளர் நலத்துறை.
ஒரு தொழிலாளி, “வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்” என்று முறையிட்டால், “எவ்வளவு பணம் வேண்டும்” என்று கேட்கும் திருப்பெரும்புதூர் தொழிலாளர் உதவி ஆணையர் தர்மசீலன் யோக்கியதையை சுட்டிக்காட்டினார்.
“8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு என்பது தான் தொழிலாளி வர்க்கத்தின் கோரிக்கை. இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ன? பேண்ட் பாக்கெட்டில் பிஸ்கட் உடன் வந்தால் வேலையை விட்டு வருகிறோம் என்று அர்த்தம். பிஸ்கட் இல்லையென்றால் வேலைக்குப் போகிறோம் என்று அர்த்தம். ஏனெனில் தொழிலாளிகளின் தூக்கம், ஓய்வு என அனைத்தும் கம்பெனி பேருந்தில் தான். அப்புறம் எப்படி தன் வாழ்க்கையைப் பற்றி தொழிலாளி சிந்திக்க முடியும்?
மும்பை, புனே போன்று சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் ரவுடிகள்தான் கம்பெனியை நடத்துகிறார்கள். சங்கம் என்று வாயைத் திறந்தால் அடித்து உதைக்கிறார்கள். ரவுடிகளிடம் அடிவாங்குவதா தொழிலாளி வர்க்கம்? இதுதான் இன்றைய தொழிலாளி வர்க்கத்தின் நிலை.
திருப்பி அடிக்காமல் விடிவு இல்லை. இந்த அரசு தொழிலாளிகளுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்திற்கும் எதிராக மாறி இருக்கிறது. கர்நாடக நீதிமன்றத்தால் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட கிரிமினல் ஜெயலலிதா இரண்டு வாரத்திற்குள் பிணையில் வருகிறார். ஆனால், சங்கம் வைத்ததற்காக, மாருதி தொழிற்சாலை தொழிலாளர்கள் இரண்டு வருடங்களாக திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதனால்தான் சொல்கிறோம், இந்தஅரசுக் கட்டமைப்பு நம்மை ஆளத்தகுதியிழந்துவிட்டது, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது என்று. மாற்று அதிகாரம் நிறுவ வேண்டும் , தொழிலாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்று. இது மே தின ஆர்ப்பாட்டம் அல்ல. தொழிலாளி வர்க்கத்தின்அரசியல்போராட்டம்.
தன்னுடைய வர்க்க கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுவதல்ல தொழிலாளி வர்க்கம். தன்னைப் போல் ஒடுக்கப்படுகின்ற மக்களுக்காகப் போராடி தொழிலாளி வர்க்க அரசியல் அதிகாரத்தை நிறுவுவதுதான் தொழிலாளி வர்க்கத்தின் வரலாற்றுக்கடமை என்ற பாட்டாளிவர்க்க ஆசான்களின் கூற்றை மெய்யாக்க, அப்படிப்பட்ட அதிகாரத்திற்காக போ
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
1886-ல் தொடங்கிய பேரணிக்கும் இன்றைய மே தினத்திற்கும் வித்தியாசம் ஏதுமில்லை. அன்றைய நாளைப்போலவே, ஏன் அதை விட இன்னமும் மோசமாக உறிஞ்சப்படுகிறது தொழிலாளி வர்க்கம். அரசியல் அதிகாரத்தை கைப்பற்றாமல் தீர்வு இல்லை என்ற முழக்கம் முன்னெப்போதையும் விட ஆழமாய் தொழிலாளர்களின் சுவாசத்தில் நிரம்பிக் கிடக்கின்றது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அன்றைய மே நாள் தொழிலாளரின் போராட்டம் உலகத் தொழிலாளர்களுக்கு விடிவெள்ளியாகத் திகழ்ந்தது என்றால் புதிய ஜனநாயத் தொழிலாளர் முன்னணியின் இந்த ஆர்ப்பாட்டம், நிலவும் அரசுக் கட்டமைப்புக்கே கல்லறை கட்டி, மக்கள் அதிகாரத்தை நிறுவுவது புரட்சிகர அமைப்புக்களால் மட்டும் சாத்தியம் என்பதை மெய்ப்பிக்கும்.
மார்க்சியம்-கம்யூனிசம் எல்லாம் காலாவதியாகி விட்டது என்று கத்துகிறது முதலாளி வர்க்கம். ஆனால் நடைமுறையில், முதலாளித்துவத்திற்கு மாற்று சோசலிசம், கம்யூனிசம் தான் என்பதை நிரூபித்து வருகிறது அதன் முதலாளித்துவ சுரண்டல்.
ஆம், முதலாளித்துவம் கொல்லும்! கம்யூனிசமே வெல்லும்!
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
சென்னை