Sunday, July 21, 2024
முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்உசிலம்பட்டி குடிநீர் ஊழல் - நகராட்சிக்கு எதிராக வி.வி.மு போர்

உசிலம்பட்டி குடிநீர் ஊழல் – நகராட்சிக்கு எதிராக வி.வி.மு போர்

-

லஞ்ச ஊழலில் நாறிக்கிடக்குது உசிலை நகராட்சி! துணை நிற்குது போலீசு!

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
‘தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ முடியாது. சட்டப்படி இணைப்பு பெறுவது குதிரை கொம்பாச்சே’

“குடிநீர் இணைப்புக்கு உசிலை நகர்மன்ற தலைவி பஞ்சம்மாளுக்கும் ஆணையர் மருதுவுக்கும் லஞ்சமாக ரூபாய் 30,000/- கொடுக்காமல், அ.தி.மு.க கவுன்சிலரே ஆனாலும் இணைப்பு கிடைக்காது” என்று புதுச்சட்டம் வகுத்து செயல்பட்டு வருகிறது உசிலை நகராட்சி.”புதிய குடிநீர் இணைப்புக் கட்டணம் ரூபாய் 3,500/- என்றும், பணம் செலுத்திய 7 அல்லது 10 நாட்களுக்குள் இணைப்பு வழங்க வேண்டும்” என்றும் அரசு சட்டம் உள்ளது.

புதிய குடிநீர் இணைப்பு மனு கொடுப்போரிடம் நகராட்சி அதிகாரிகள் ரூ 2,000/- பெற்றுக் கொண்டு, “சீனியாரிட்டிபடி இணைப்பு கொடுப்போம். அப்பொழுது கட்டணம் செலுத்தி இணைப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்று பதில் கூறுகிறார்கள்.

இந்நிலையில் சில வார்டு கவுன்சிலர்கள் (ரூபாய் 10,000/-) பத்தாயிரம் கொடுப்பவர்களுக்கு பிட்டர் சுகுணா மூலம் இணைப்பு வழங்குகிறார்கள். ‘தண்ணீர் இல்லாமல் உயிர்வாழ முடியாது. சட்டப்படி இணைப்பு பெறுவது குதிரை கொம்பாச்சே’ என்று ரூபாய் 10,000/- கொடுத்து குடிநீர் இணைப்பு பெற்றுக் கொண்டார்கள் மக்கள்.

பொறுக்கித் தின்றே வயிறு வளர்க்கும் பஞ்சம்மாளும், ஆணையர் மருதுவும், “இது சட்டப்படி (ரூ 30,000 லஞ்சம் கொடுக்காமல்) வழங்கப்படாத இணைப்பு” என்ற அதிகாரிகளை வைத்து இணைப்பைத் துண்டித்து விட்டார்கள்.

இதைக் கண்டித்து 7-வது வார்டு விரிவாக்க பகுதி மக்களும், விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்களும் நகராட்சியை முற்றுகையிட்டனர். அதன்பின், 100-க்கும் மேற்பட்டோரிடம் ரூ 3,500/- பெற்றுக் கொண்டு இணைப்பு கொடுப்பதாக நகராட்சி நிர்வாகம் ஒத்துக் கொண்டது. மூன்று மாதங்கள் முடிந்த நிலையில் இன்னும் இணைப்பு வழங்கவில்லை.

குடிநீர் இணைப்புக்கு பணம் செலுத்தியவர்களிடம் பிட்டர் சுகுணா, “ரூ 20,000/- லஞ்சம் கொடுக்காமல் இணைப்பு கிடைக்காது” என்று மிரட்டுவதாக ஒரு புகார் மனுவும், 7-வது வார்டு விரிவாக்கப் பகுதியில் (பொது) தெருக்குழாய் அமைத்து தரக்கோரி மனுவும் கொடுத்துள்ளார் தோழர் ரவி.

மேலும், “சீனியாரிட்டி லிஸ்ட் கொடுங்கள்” என்று ஆணையாளர் மருதுவிடம் கேட்டதற்கு, “தர முடியாது, தெரிந்ததைப் பாரு” என்று ஒரு காட்டுமிராண்டி போல நடந்து கொண்டு, “என்னை பணிசெய்ய விடாமல் தடுக்கிறார், ரவி” என்று காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார் ஆணையாளர்.

அரசாணையை மதிக்காமல், லஞ்சம் கொடுப்போருக்கு மட்டும்தான் இணைப்பு கொடுக்கமுடியும் என்று அடாவடி செய்யும் ஆணையாளர் மீது வழக்கு பதிவு செய்யும்படி காவல் நிலையத்தில் புகார் செய்தார் ரவி.

“நரிக்கு நாட்டாமை கொடுத்தா கிடைக்கு நான்கு ஆடு கேட்கும்” என்பது போல டி.எஸ்.பி சரவணகுமார் தோழர் ரவி மீது மட்டும் வழக்கு பதிவு செய்தார்.

ஆணையாளர் மருதுவை கைது செய்யக் கோரி காவல்நிலையத்தை முற்றுகையிட்ட வி.வி.மு தோழர்கள் 7 பேர் மீது கொலை செய்ய முயற்சித்ததாக கைது செய்து பொய் வழக்கும் போட்டுள்ளனர்.

சமீபகாலமாகவே சில நேர்மையான அதிகாரிகள் தமது மேல் அதிகாரிகள், அமைச்சர்கள் பெருமக்களின் மிரட்டலுக்கு பயந்து, “தம் பணியை செய்ய முடியவில்லையே! தன்மானத்தை கேலிக்கூத்தாக்குகிறார்கள்” என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்வதை பார்க்கிறோம்.

பஞ்சம்மாளின் பகற்கொள்ளை ஆட்சிக்கு புரோக்கர் வேலை பார்ப்பதுதான் ஆணையாளர் மருது, சுகுணா, கதிரேசன், பிச்சைமணி ஆகியோரின் களப்பணி என்று 24 வார்டு கவுன்சிலர்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகள் நகராட்சிக்கு போய் வந்த மக்களுக்கும் தெரியும், பொய் வழக்கு போட்ட போலீசுக்கும் தெரியும்.

மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, சட்டத்தையும் அரசாணையையும் மலம் துடைக்கும் காகிதமாக பஞ்சம்மாளும், ஆணையர் மருதுவும், டி.எஸ்.பி சரவகுமாரும் துடைத்தெறியும் போது பொதுமக்களாகிய நாம் மட்டும் ஏன் சட்டத்தை மதிக்க வேண்டும்.

பஞ்சத்தில் பட்டினியில் இருந்த பஞ்சம்மாளே, பங்களா, கார் வாங்கும் போது பெரியம்மா ஜெயலலிதா பல கோடி சொத்து சேர்த்து வைத்திருப்பதில் என்ன தப்பு என்று அ.தி.மு.க தொண்டன் மட்டுமல்ல உயர்நீதிமன்ற நீதிபதியே கூறிவிட்டார்.

இந்த மக்கள் விரோத கொள்ளைக் கூட்டணி நம்மை ஆள இனியும் அனுமதிப்பது சரியா?

பொதுமக்களே!

 • இப்படி அரசியல்வாதிகளும், ஆளும் அதிகார வர்க்கமும், போலீசும், நீதிபதிகளும் மதிக்காத
 • சட்டத்தை நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும்!
 • இதற்குத் தீர்வு இந்த அரசு கட்டமைவுக்கு வெளியே உள்ளது!
 • ஆளத்தகுதி இழந்து தன் வேலையைச் செய்ய மறுத்து மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறியுள்ள நகராட்சி நிர்வாகத்தை தூக்கி எறிவோம்!
 • அடிப்படை உரிமையை நிலைநாட்ட ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணைவோம்

தமிழக அரசே!

 • லஞ்ச ஊழலில் கொழுத்துப் போய் ஆட்டம் போடும் பஞ்சம்மாளையும், மருதுவையும் கைது செய்!
 • ஊழலுக்குத் துணைநின்று தோழர்களை தாக்கிய டி.எஸ்.பி சரவணகுமார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்!

உசிலை நகராட்சியே!

 • 7-வது வார்டு விரிவாக்கப் பகுதியில் தெருக்களில் பொதுக்குழாய் அமைத்திடு!
 • சீனியாரிட்டி லிஸ்டை வெளிப்படையாக தகவல் பலகையில் வைத்திடு!
 • அரசு நிர்ணயித்த கட்டணத்தை செலுத்திய பொது மக்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கிடு!
 • 9-வது வார்டில் கட்டியுள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு உடனே கொண்டுவா!

லஞ்ச ஊழலில் ஊறிக் கிடக்கும் உசிலை நகராட்சியையும், போலீசையும் கண்டித்து  உசிலம்பட்டியில் 21-05-2015 வியாழன் காலை 11 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில்

 • பச்சத்தண்ணிய பாட்டில்ல அடைச்சு 10 ரூபாய்க்கு விக்கிறா பெரியம்மா ஜெயல்லிதா
  குடிநீர் இணைப்புக்கு ரூபா 30,000 என்று ஏலம் விடுறா சின்னம்மா பஞ்சம்மா
 • கலெக்சன் பண்ணுறான் கமிசனரு
  காவல் காக்குறான் டிஎஸ்பி

என்ற முழக்கங்களுடன் ஆர்ப்பாட்டம் ஆரம்பித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உசிலை வி.வி.மு துணைச்செயலாளர் தோழர் சந்திரபோஸ் தலைமை தாங்கினார். உசிலை நகராட்சியில் புதிய குடிநீர் இணைப்புக்கு ரூ 3,500 க்கு பதில் ரூ 30,000 லஞ்சம் வாங்கி இணைப்பு கொடுப்பதையும், இதற்கு ஆணையர் புரோக்கராக இருப்பதையும், பஞ்சம்மாள் கட்டுக்கடங்காமல் ஆட்டம் போடுவதையும் அம்பலப்படுத்தினார்.

“தெனாலிராமன் கதையில் மன்னருக்கு காலில் அடி பட்டுவிட தெனாலி, ‘மன்னா எல்லாம் நல்லதுக்குத்தான்’ என்க,

மன்ன்னோ, ‘என் காலில் அடிபட்டால் எப்படி நல்லதுக்குதான் எனச் சொல்கிறாய். தெனாலியை சிறையில் அடையுங்கள்’ என்க,

தெனாலியோ, ‘இதுவும் நல்லதுக்குதான்’ என்க,

மன்னன் ‘சரியான கிறுக்குப்பயலாய் இருப்பான் போல’ என எண்ணிக்கொண்டு வேட்டைக்குச் செல்கிறான்.

காட்டில் மனித மாமிசம் தின்னும் ஆதிவாசிகள் மன்னனை சிறை பிடித்து பலியிடப்போகும் போது அவர்கள் வழக்கப்படி காயம் உள்ள மனிதனை பலியிடக் கூடாது என மன்னனை விரட்டி விடுகின்றனர்.

மன்னன், ‘ஆஹா தெனாலி சொன்னது சரிதான்’ என தெனாலியை சிறையில் இருந்து விடுவிக்கிறான்.

தெனாலியைப்பார்த்து, ‘எனக்கு காயம் பட்டது நல்லதுக்கு, உன்னை சிறையில் அடைத்தது எப்படி நல்லதுக்கு?’ என வினவினான்.

தெனாலியோ, ‘மன்னா என்னை நீங்கள் சிறையில் தள்ளாவிட்டால் நான் உங்களோடு வேட்டைக்கு வந்த்திருப்பேன். என் உடலில் காயம் இல்லாததால் ஆதிவாசிகள் என்னை பலியிட்டு இருப்பார்கள். எனவே சிறையில் தள்ளியதும் நல்லதுக்குத்தான்’ என்பார்.

அதுபோல, பெரியம்மா ஜெயல்லிதா விடுதலையும் நல்லதுக்குத்தான், சின்னம்மா பஞ்சம்மா ஊழலும் நல்லதுக்கு தான், ஆணையாளர் மருதுவும் டிஎஸ்பி சரவணக்குமாரும் சேர்ந்து தோழர்களை சிறைக்குஅனுப்பியதும் நல்லதுக்குத்தான்.

இவையனைத்தும் மக்கள் இந்த நகராட்சி மீது, காவல்துறை, நீதித்துறை மீது வைத்திருக்கும் நம்பிக்கையை எல்லாம் உடைப்பதற்கும், இந்த அரசமைப்பு சீரழிந்துவிட்ட்து இதை தகர்த்து மக்கள் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என உணர்த்தவும் பயன்பட்டு உள்ளது” என முடித்தார்.

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“பெரியம்மா ஜெயல்லிதா விடுதலையும் நல்லதுக்குத்தான், சின்னம்மா பஞ்சம்மா ஊழலும் நல்லதுக்கு தான், ஆணையாளர் மருதுவும் டிஎஸ்பி சரவணக்குமாரும் சேர்ந்து தோழர்களை சிறைக்குஅனுப்பியதும் நல்லதுக்குத்தான்.”

தோழர் ரவி தனது உரையில்

“உசிலை காவல்துறையில் சட்டம் ஒழுங்கு, க்யூ ப்ராஞ்ச், க்ரைம், எஸ்.பி சி.ஐ.டி, எஸ்.பி போலீஸ் என பல பிரிவில் உள்ளவர்களும் மணல் கட்த்துபவர்கள், கஞ்சா விற்பவர்கள், பிக்பாக்கெட் திருடர்கள் போன்றவர்களிடம் லஞ்சம் பெற்றுக்கொண்டு மிகப்பெரிய வீடுகள் கட்டி, பலஏக்கரில் பெரும் பண்ணைத்தோட்டங்கள் அமைத்து விவசாயம் செய்து வருமானத்திற்கு அதிகமாய் சொத்து வைத்துள்ளீர்கள்.

நீங்கள் ஏதோ பெரிய யோக்யவான்களைப்போல எங்களை அச்சுறுத்துவதாக எண்ணிக் கொண்டு மிக அருகில் வந்து போட்டோ வீடியோ எடுத்தவாறு உள்ளீர்கள். நாங்களும் உங்களை போட்டோ வீடியோ எடுக்கின்றோம்.

தேவைப்படும் நேரத்தில் எஸ்.பி போலீஸ் பழனியப்பனை அம்பலப்படுத்தியதைப் போல அம்பலப்படுத்துவோம்” என எச்சரித்தார்.

மேலும், பொய் வழக்கு போட்ட ஆணையாளர் மருது மற்றும் டிஎஸ்பி சரவணக்குமாரையும் கண்டித்து உரையாற்றினார்.

தோழர் தென்னரசு தனது உரையில் உசிலை நகராட்சியில் பஞ்சம்மாளின் ஊழல் வரைமுறையின்றி செல்வதை கண்டித்தார். மேலும், “நகர காவல் நிலையத்தில் எஸ்.ஐ சரவணன் காவல் நிலையத்திற்கு மக்களின் வழக்கு சார்ந்து விசாரிக்கச்சென்றால் வக்கீலோடு மட்டும் வாருங்கள் என்கிறார்.

புரட்சிகர இயக்கங்களை சேர்ந்த எங்களுக்கு சட்ட்த்தைப் பற்றியும் தெரியும். வக்கீலைத்தவிர மற்றவர்களுக்கும் சட்ட்த்தைப் பற்றிக் கேட்க உரிமை உண்டு எனவும் தெரியும்” என விளக்கினார்.

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“பஞ்சம்மாளின் ஊழல் வரைமுறையின்றி செல்கிறது”

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தனது சிறப்புரையில்

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“போலீஸ் ஸ்டேசன் வரும் மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்யாமல், லஞ்சம் வாங்காமல், தரக்குறைவாய் பேசாமல் நடந்துகொள்ளும்படி தனக்குகீழ் இருக்கும் காவலர்களுக்கு உத்த்ரவிடுவாரா?”

“உசிலை நகர எஸ்.ஐ சரவணன் தோழர்களிடம் ஆர்ப்பாட்ட்த்தில் டி.எஸ்.பி.யை அவன் இவன் என்று பேசாதீர்கள். சட்டப்படி நடந்து கொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டாராம். சரிதான்…சபை நாகரீகம் அதுதான் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

இதே எஸ்.ஐ சரவணன் நகராட்சியில் ரூ 3,500 க்கு ரூ 30,000 கேட்கும் நகராட்சி ஆணையாளர் மற்றும் பஞ்சம்மாளிடம் போய் சட்டப்படி ரூ 3,500 க்கு இணைப்பு கொடுங்கள் என கேட்பாரா?

அரசு விதிப்படி இணைப்பு கேட்கும் மக்களை தரக்குறைவாய் பேசும் ஆணையர், பஞ்சம்மாளை மக்களிடம் மரியாதையாய் பேசுங்கள் எனச் சொல்வாரா?

நகராட்சியில் ஆணையாளருக்கும் தோழர் ரவிக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு இருவரும் புகார் மனு கொடுத்தால் ஆணையர் மனுவுக்கு மட்டும் முதல்தகவலறிக்கை போட்டு உள்ளாரே டிஎஸ்பி. ஆனால் ல்லிதாகுமாரி வழக்கின் படியும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படியும் இருவர் கொடுத்த புகார் மனுவையும் ஏற்று முதல்தகவலறிக்கை பதிவது தானே சரி. டி.எஸ்.பி.யிடம் சட்டப்படி நடந்து கொள்ளச் சொல்வாரா?

போலீஸ் ஸ்டேசன் வரும் மக்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்யாமல், லஞ்சம் வாங்காமல், தரக்குறைவாய் பேசாமல் நடந்துகொள்ளும்படி தனக்குகீழ் இருக்கும் காவலர்களுக்கு உத்த்ரவிடுவாரா?

இந்த ஆர்ப்பாட்டமே போலீசையும் நகராட்சியையும் திட்டுவதற்குதான். அரசியல் சட்டப்படி இது எங்கள் உரிமை” என ஆரம்பித்து

“இந்த ஆர்ப்பட்ட்த்தில் முக்கியமாக மூவருக்கு பட்டம் வழ்ங்க வேண்டியுள்ளது.

 • தமிழ்நாட்டின் பெரிய களவாணி ஜெயல்லிதா என்றால் நகராட்சிகளில் பெரிய களவாணி பஞ்சம்மாள்,
 • நகராட்சி ஆணையாளர்களிலேயே மக்களிடம் பணம் பறித்துக் கொடுக்கும் சிறந்த அரசு புரோக்கர் ஆணையாளர் மருது,
 • காவல் துறைகளில் சிறந்த கட்டப்பஞ்சாயத்துத் தலைவர் டி.எஸ்.பி சரவணக்குமார்”

என்று பட்டங்கள் வழங்கினார்.

மேலும், “நகராட்சியில் சட்ட்த்துக்கு புறம்பாய் நடப்பவர்களை சட்டையைப் பிடித்து செருப்பால் அடியுங்கள். அதற்கு வரும் வழக்கை இலவசமாய் நாங்கள் நடத்துகிறோம்” என்றும் “காவல்துறையினர் எங்கள் தோழர்களுக்கு எதிராய் தனிப்பட்ட அக்கறை எடுத்து வேலை செய்தால் எஸ்.பி பிரேம்குமாரை சட்டையை கழ்ற்ற வைத்தது போல் உங்களையும் சட்டையை கழற்ற வைக்க வேண்டிய வேலையைச் செய்ய வேண்டிவரும்” என எச்சரித்தார்.

“இந்த அரசமைப்பே மக்களுக்கு எதிர்நிலை சக்தியாக மாறிவிட்ட்து. இதில் அவர்களே மதிக்காத சட்ட்த்தை நாம் மட்டும் ஏன் மதிக்க வேண்டும். இந்த அரசமைப்பை தகர்த்து புதிய மக்களுக்கான அரசமைப்பை நிறுவுவோம்” என கூறினார்.

தோழர் குருசாமி தனது உரையில்

உசிலை குடிநீர் இணைப்பு ஊழல் எதிர்ப்பு போராட்டம்
“உசிலம்பட்டி நகராட்சியும் காவல்துறையும் எப்படி எல்லாம் சீரழிந்து உள்ளது அதற்கு எதிராய் நாம் என்ன செய்ய வேண்டும்?”

உசிலம்பட்டி நகராட்சியும் காவல்துறையும் எப்படி எல்லாம் சீரழிந்து உள்ளது அதற்கு எதிராய் நாம் என்ன செய்ய வேண்டும் என விளக்கினார்.

காவலுக்கு நின்ற காவலர்கள் அவர்களை வசை பாடுவதை கேட்க சகியாமல் பாதி ஆர்ப்பாட்டத்தில் காணாமல் போயினர். உள்ளுர் க்யூ பிராஞ்ச் போலீஸ் சிங்கம் ம்ற்றும் கண்ணன் அருகில் வரவேயில்லை.

பேரையூர் க்யூ ப்ராஞ்ச் பாலமுருகனை ஆர்ப்பாட்ட்த்தின் அருகில் போட்டோ எடுக்க அனுப்பினர். அவரிடம் தோழர்கள் எஸ்.பி போலீஸ் பழனியப்பன் பிரசுரத்தைக் காட்டி, “இது போல் உங்களையும்..” என எட்டடி பின்னால் சென்றுவிட்டார்.

மக்கள் காவல்துறையை திட்டுவதை ஆச்சர்யமாகவும் மகிழ்ச்சியாகவும் பார்த்து கேட்டு ரசித்தனர்.

பு.ஜ.செய்தியாளர்கள்
உசிலம்பட்டி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க