Tuesday, June 6, 2023
முகப்புமறுகாலனியாக்கம்கல்விபுதிய மாணவர்களை வரவேற்கும் பு.மா.இ.மு

புதிய மாணவர்களை வரவேற்கும் பு.மா.இ.மு

-

18-06-2015 கல்லூரி துவக்க நாளில் புதிதாக கல்லூரிக்கு படிக்க வரும் மாணவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

சென்னை பச்சையப்பா கல்லூரி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாணவக் காற்றே உன்னை வரவேற்கிறோம்

கல்லூரி படிப்போடு சேர்ந்து
புதிய வரலாறு படைத்திட!

எதிர்காலத்தை தெரிந்திடு
எதிர்வரும் தடைகளை தகர்த்திடு!

சமூகக் கொடுமைகளை சகித்திடாதே…
அவற்றைத் துடைத்தெறிய
சூறாவளியாய் சுழன்றிடு!

நாட்டுப்பற்றை
நாடவிடாமல் செய்யும்
சமூகச் சீரழிவுகளை புதைத்திட…
புதிய சமூகத்தை படைத்திட…

மகிழ்ச்சியுடன் வரவேற்கும்
புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரி

ல்லூரி எனும் வசந்த காலத்தில் நுழையும் முதலாமாண்டு மாணவர்களையும் மற்றும் புதிய கல்வியாண்டில் அடியெடுத்து வைக்கும் அனைத்து மாணவர்கள் மற்றும் பேராசியர்களை வாழ்த்தி வரவேற்கும் வகையில் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டது. மேலும், “நாட்டுப்பற்றும், ஜனநாயக உணர்வும் கொண்ட மாணவர்களே! இளைஞர்களே! இன்றே உறுப்பினராவீர்!” என்ற பிரசுரமும் கொடுக்கப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மாணவர்கள் பு.மா.இ.மு சார்பாக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு தட்டிகளையும், சுவரொட்டிகளையும் ஆர்வமுடன் படித்து சென்றனர். வரவேற்பு நிகழ்ச்சி மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் உற்சாகமூட்டுவதாக அமைந்தது. பேராசியர்கள் பலரும் பிரசுரத்தை வாங்கிக் கொண்டு நன்றி கூறினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

எதிர்வினைகள்

பேராசிரியர் ஒருவர் மாணவர்களிடம், “வெளிய நோட்டீஸ் வாங்குனிங்களா? அவங்க சொல்றது எல்லாம் உண்மை. அவங்கள மாதிரி நிறைய நீங்களும் கத்துக்கணும்” என வகுப்பறையில் கூறியுள்ளார்.

பு.மா.இ.மு கல்லூரி மாணவர்களுக்கு வரவேற்பு
இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த பெற்றோர் நம்மிடம் வந்து ஆர்வமாக பேசினர்.

இஸ்லாம் சமூகத்தை சேர்ந்த பெற்றோர் நம்மிடம் வந்து ஆர்வமாக பேசினர். பிரசுரத்தை படித்து முடித்தபின், “நீங்கள் செய்வதில் நூறு சதவீதம் ஒத்துப்போகிறேன்” என்றார், அந்தத் தந்தை. “சமூகத்தில் வாசிப்பு பழக்கம் தேவை, சார்லி சாப்ளின் தன்னுடைய படத்திற்கு அட்வான்ஸ் வாங்கினால் அதில் 100 டாலர் புத்தகம் வாங்கச் செலவிடுவார். அப்படி படித்தால் தான் சமூக மாற்றம் உருவாகும்” என்றார்.

அருகில் இருந்த துணைவியார், “சமூக மாற்றம் தேவை. அதிலும் மூட பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் நிறைந்த நம் நாட்டில் சமூக மாற்றம் கண்டிப்பாக தேவை” என்றார். “இன்று ஒரு நாள் மட்டுமில்லாமல் மாதாமாதம் கூட்டம் நடத்த வேண்டும். அப்படி செய்தால் தான் நல்ல முத்துக்கள் உங்கள் அமைப்பிற்கு கிடைப்பார்கள்” என்றார்.

மேலும், பெண் தோழர் ஒருவர் பிரசுரம் கொடுத்து பேசிக்கொண்டிருந்ததை பலரும் வியப்பாக பார்த்தனர்.

“என் பையன காலேஜ்’ல விடலாம்ன்னு வந்தேன். மாணவர்கள் காலேஜ்க்கு வற்ரது படிக்கிறதுக்கு மட்டுமில்ல சமூகத்த மாத்திறதுக்கும் தான்னு புரியுற மாதிரி செய்றீங்க, எம் பையனையும் உங்கள மாதிரி கொண்டு வாங்க” என்றார் ஒரு தந்தை.

மாணவர்களை, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியில் உறுப்பினராக வலியுறுத்தி பு.மா.இ.மு.வின் கொள்கை முழக்கங்களுடன் திருச்சி மாநகர பகுதிகளில் பரவலாக சுவர் விளம்பரம் செய்யப்பட்டது. அதில் “பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி உள்ளிட்ட மதவெறி அமைப்புகளை தடைசெய்” என்ற முழக்கமும் எழுதப்பட்டிருந்தது. விளம்பரம் எழுதப்பட்டு ஏறக்குறைய 25 நாட்களுக்குப் பின் இந்து முன்னணி வானரங்கள் ஜெயாவின் எடுபிடி போலீசிடம் நடவடிக்கை எடுக்க கட்டளையிட, OPPD Act’ல் (அனுமதியில்லாத சுவரில் அத்துமீறி எழுதுவது) வழக்கு பதிவு செய்ததுடன், தானே களம் கண்டு சுவரில் எழுதப்பட்ட மேற்படி முழக்கத்தை அழித்து தன் விசுவாசத்தை நிரூபித்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

ஆளஅருகதையற்று தோற்றுப்போன இந்த அரசமைப்பும், மோடியின் வெறித்தனமான மறுகாலனியாக்க, பார்ப்பன பாசிச தாக்குதலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் உழைக்கும் மக்களை புரட்சிகர அமைப்புகளை நோக்கி வேகமாக கொண்டு வரும் என்பதை இங்கே கண்கூடாக பார்த்தோம்.

தகவல்

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
திருச்சி

சென்னை ராணிமேரி கல்லூரி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க