Sunday, April 2, 2023
முகப்புஉலகம்ஐரோப்பாகிரீஸ் : மக்கள் வெற்றி - ஏகாதிபத்தியங்கள் தோல்வி !

கிரீஸ் : மக்கள் வெற்றி – ஏகாதிபத்தியங்கள் தோல்வி !

-

கிரேக்கம்: ஐரோப்பிய முதலைகளே, சர்வதேச கந்துவட்டிக்காரர்களே வெளியேறுங்கள்!

கிரீஸ் நாட்டின் நெருக்கடி என்று ஊடகங்கள் தெரிந்தே தவறாகச் சொல்கின்றன. உண்மையில் ஏகாதிபத்தியங்களின் பிரதிநிதிகளான சர்வதேச நிதியம் (IMF), ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஏவிவிட்ட அடக்குமுறை இது. உலக வங்கியும் சர்வதேச நிதியமும் ஏழை நாடுகளை மீட்பதாக சொல்லி நிபந்தனைகள் பேரில் கடன் கொடுத்து ஒட்டச் சுரண்டி திவாலாக்கியதன் சமீபத்திய சான்று கிரீஸ்.

இவர்களிடம் வாங்கிய கடனில் சுமார் 10,000 கோடி ரூபாயை ஜூன் 30-க்குள் கட்ட கிரீஸால் முடியவில்லை. எனவே கூடுதலான நிபந்தனைகளை விதிக்கிறார்கள். அது ஊதியம், இதர உரிமைகளை ரத்து செய்வதாக அமையும். ஏற்கனவே கிரேக்க மக்களின் நலத்திட்டங்கள் பல ரத்து செய்யப் பட்டிருக்கின்றன. இவ்வளவிற்கும் சர்வதேச நிதியம் மட்டும் கிரீஸிலிருந்து வட்டியாக மட்டும் ஏராளமான பணத்தை அள்ளிச் சென்றிருக்கிறது.

இந்நிலையில் இந்த அநீதியான, கொடூரமான நிபந்தனைகளை ஏற்பதா, மறுப்பதா என்று நாளை 05-07-2015 கிரீஸில் வாக்கெடுப்பு நடக்கிறது. ஏற்கமாட்டோம் என்று மக்கள் வாக்களித்தால் அது ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது, யூரோவை பயன்படுத்த முடியாது என்று போகும், ஆதலால் ஒழுங்கு மரியாதையாக ஏற்போம், வாக்களிப்போமென முதலாளித்துவ ஆதரவு சக்திகள் மிரட்டுகின்றன.

ஒருவேளை ஏற்க மாட்டோம் என முடிவு வந்தால் அது உலகளாவிய கந்து வட்டிக்காரர்களை எதிர்த்த மாபெரும் கலகத்தின் துவக்கமாக இருக்கும்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியோறுவோம், NO வாக்களிப்போம் என மக்கள் ஏதென்ஸ் நகரில் போராடும் படங்கள்…..

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]
_____________________________

கிரீஸ் வாக்கெடுப்பு: மக்கள் வெற்றி – முதலாளிகள் தோல்வி!

ஐ.எம்.எஃப் மற்றும் ஐரோப்பிய கந்து வட்டிக்காரர்களின் நிர்ப்பந்தத்தை தூக்கி எறிந்திருக்கிறார்கள், கிரீஸ் மக்கள். கிரீஸுக்கு ஏகாதிபத்தியங்கள் உருவாக்கிய பொருளாதார நெருக்கடி எனும் அடக்குமுறையின் விளைவாக கடந்த சில ஆண்டுகளாக தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இது குறித்த சுருக்கமான அறிமுகத்தை முந்தைய பதிவில் காண்க.

நேற்று 05-07-2015 ஞாயிற்றுக் கிழமை நடந்த வாக்கெடுப்பின் முடிவு வெளிவந்து விட்டது. இதன்படி 61.31% மக்கள் சர்வதேச நிதியம், ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து வாக்களித்திருக்கிறார்கள். இந்த சிக்கன நடவடிக்கையை ஏற்பவர்கள் “ஆம்” என்றும், ஏற்காதவர்கள் “இல்லை” என்றும் வாக்களிக்க வேண்டும். அதன்படி ஏகாதிபத்தியங்களுக்கு ஆதரவு “இல்லை” என்று கிரீஸ் மக்கள் உறுதியாக வாக்களித்திருக்கிறார்கள்.

இனி கிரீஸ் நாடு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறி, யூரோ நாணயத்தை பயன்படுத்த முடியாமலும் போகும் என்பதால் அமெரிக்கா தலைமையிலான வல்லரசு நாடுகள் பீதியில் உறைந்துள்ளன. கிரீஸ் முடிவுகள் வெளியான உடன் யூரோவின் மதிப்பு சரிந்துள்ளது. பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அதிபர்கள் இன்று உடன் கூடி இனி என்ன செய்யலாம் என்று ஆலோசிப்பார்களாம்.

இந்த முடிவு ஒரு துவக்கம். இதை ஏகாதிபத்தியங்கள் அப்படியே எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். பிடி இறுகும். கிரேக்கத்தின் அலெக்சிஸ் டிசிப்ரஸ் இனி பன்னாட்டு நிதி நிறுவனங்களோடு சமரசமாக பேசி கடன் பெறுவது, நெருக்கடியை தீர்ப்பது என்பதெல்லாம் கடினம். அதே நேரம் இந்த மக்கள் ஆதரவை வைத்துக் கொண்டு சுய பொருளாதாரத்தை ஊக்குவித்து, ஒரு போராட்டப் பாதையை துவக்கினால் அது இந்த எதிர்ப்பை களத்தில் சாதிப்பதற்கு உதவும். வாழ்த்துவோம், கிரேக்கத்தின் மக்களை!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

வினவு ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட குறுஞ்செய்திகள்
இணையுங்கள்

 1. பொருளாதாரமும், உலகமயத்தின் உண்மையான கட்டுப்பாடுகளும் சுத்தமாக தெரியாமல் எழுதப்பட்ட கட்டுரை… ஜரோப்ப யூனியனில் மற்ற 20 நாடுகளும் செழிப்புடன் இருப்பது எப்படி??? 1846′ ல் இருந்து க்ரேக்க பொருளாதாரம் சுமார் 12 தடவை திவாலானது “வினவிற்க்கு” தெரியுமா? அதில் 11 தடவை இவர்கள் ஜரோப்ப ஒன்றியத்தில் சேருவதற்க்கு முன்னாலே நடந்தது பற்றி ஏதாவது தெரியுமா? சும்மா நாலு பழைய பேப்பரை படித்து விட்டு ஏதாவது பிதற்ற கூடாது. முட்டாள்கள்.

  • இதெபொல இந்தியால வாக்கெடுப்பு நடத்தினா மக்கள் உலகமயமாக்கத்துகு எதிராக வாக்களிப்பார்கள். மக்களுக்கு தேவை உண்வு, உடை, இருபிடம். உன்னைமாதிரி ஆளுகள ஆடி காருகுள்ள அடச்சிவச்சு, டாலர தின்னகொடுக்கனும்.

 2. This story makes no sense…
  There is a saying in tamil which says if the cat closes it’s eyes, it thinks the whole world gets Dark.

  Ethukkeduthalum kosham podurathu, kodi pidikarathu, tholargale vetri. Vetri nu koochal podurathu kuraikavum

  • Vinavu dint publish the comments I made about socialism. I am not here to blame them,I know communism is against free speech.
   Dinamalar/Vinavu all have the services to promote what they believe in.

   I still thank Vinavu for publishing 99.99% of the time. 🙂

 3. அய்யா இண்டியன் தாங்கள் எத்தனை பே்பர்களை படிக்கிறீர்கள் என்று தெரிந்து கொள்ள ஆவல். நீங்க பெரிய்ய… அறிவாளியா இருக்கிறதாலே பொறாமையில் கேட்கவில்லை…

 4. கிரேக்க பொருளாதாரம் 12 முறை திவாலா ?. சரி அந்த 11 முறை சோசலிச அரசு இருந்ததா இந்தியண்ண்ண் அவர்களே ?

 5. குப்புற விழுந்து முதலாளித்துவம் நாசம் ஆகி, கிரேக்க மக்கள் ஆணியே புடுங்க வேண்டாம் போதுமடா சாமின்னு சொல்லிட்ட பின்னும், ராமன் தம்பி அதெல்லாம் ரத்தம் இல்லை. தக்காளி சட்னிதான்னு ராமன் சொல்லுறார்.நல்லா வருவார்பா இவர் !!! //Debt based Capitalism can continue as long as people believe in their currency.//

 6. “It was German and French banks who profitably and recklessly lent to Greece,just as US banks disastrously showered subprime mortgages on low-paid Americans.It was Germany who benefited from being able to export its consumer goods to peripheral European countries such as Greece”
  “Precious little of the bailouts went to Greece;instead they went to the European banks that had recklessly lent in the first place.While Germany”s postwar economic renaissance owed everything to debt relief-including from war-devastated countries such as Greece-Athens was denied the write-offs it desperately needed”.
  “As French economist Thomas Piketty points out,”Germany is the single best example of a country that,throughout its history,has never repaid its external debt”,and Berlin is “profiting from Greece” because of its high-interest loans.The weak euro makes German goods so internationally competitive,and has been a linchpin of the country”s recent economic success.”
  “The EU is in a genuine bind.If Greece is ejected from the eurozone,the currency is no longer an indivisible union and a precedent will be set for the ejection of its members.If the ECB abandons Greece,the eurozone”s reputation will not recover.This is why Greece has bargaining power in its quest for debt relief and for abandonment of austerity that has already ravaged the country.The EU still wishes to make an example of the country;by forcing Syriza to implement policies that will destroy the government by making”the economy scream”(to quote Henry Kissinger)until it is ejected from office,or even a disastrous default and removal from the eurozone.It may still succeed.And that is why Greece desperately needs support”-Oven Jones in The Hindu dated 8th July,2015.

  • ஆமா ஆமா! ஊதாரிதனமா கடன் கொடுத்தவன் தான் தப்பு . பின்னே கடன் வாங்கி செலவு பண்ணினவனை நாம் தப்பு சொலல்லாமா ?

   நம்ம ஊர் அண்ணாச்சி கடையில் வாடிக்கையளருக்கு கடன் கொடுப்பார்கள் . கடன் வாங்கிய பணத்தில் அந்த கடையில் தான் பொருள் வாங்கப்படும் . இப்பொழுது வாடிக்கையாளர் எனக்கு அதிகமா கடன் கொடுத்து எமாதிடீங்க என்கிறார் . அதுமட்டுமா கடன் கொடுத்த பணம் எதுவும் என் கைக்கு வரவில்லை , அண்ணாச்சி கல்லாவுக்கே போயிருச்சு அப்படின்னு வேற சொல்றாரு .

   அண்ணாச்சி கணக்குல அவர் மூலம் வர வேண்டிய தொகை என்று ஒரு அமவுண்டை சொத்தாக பாவிக்கிறார் . வாடிக்கையாளர் திவாலாகிவிட்டால் அவருடைய சொத்து மதிப்பு குறைந்து உறவினர்கள் மதிக்காத நிலை ஏற்படலாம் . குடுகுரத குடுப்பா என்று அவரும் கெஞ்சி கொண்டு இருக்கிறார் . இல்லை என்றால் வாடிக்கையாளருக்கு உதை விழுந்து இறக்கும் .

   ஏகாதிபத்தியம் ஒழிக ! என்று சரியாக தவறை கண்டுபிடித்து விடுவோம் .

   • Raman,like Germany tries to establish that the general public of Greece are spendthrifts and therefore richly deserve the strong austerity measures stipulated by IMF,EU and ECU.Let him read another article published by Vinavu today(10-7-2015).Greece is being arm twisted to accept conditions stipulated by these three organizations.At the same time,Greece was told not to go back in buying arms from USA.His view is similar to the view held by Indian corporates against the subsidies to poor at around 200000 crore(after the recent budget cuts this figure will be still less) as against subsidies and tax concessions to the tune of 500000 crore per annum to Indian corporates.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க