Sunday, June 26, 2022
முகப்பு கலை கவிதை கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு...

கையில் வீணை வாயில் கீதை நெஞ்சில் அணுகுண்டு…

-

cartoon_abdul_kalamஅழுது முடித்த கண்களுக்கு..!

றப்பின் துயரம்
புரிந்து கொள்ளக் கூடியதுதான்,
ஆனால்
சாவின் விளம்பரம்
சகிக்க முடியவில்லை.

கண்களை பிழிந்தெடுத்தன
காட்சி ஊடகங்கள்
காதுகளில்
சோகத்தை காய்ச்சி ஊற்றின
பண்பலைகள்

சீரியலுக்காக
செதுக்கப்பட்ட காட்சிகளாய்
ஒரு மரணத்தை மாற்றமுடியும்
என்று
சாதித்துக் காட்டினார்கள்
ஊடக முதலாளிகள்.

அறிவியல் எம்.ஜி. ஆரின்
இருப்பை மட்டுமல்ல
இறப்பை வழங்கும் நிகழ்ச்சியின்
இலாபமும்
உடைய வர்க்கத்துக்கே உரித்தானது.

கேள்விக்கிடமின்றி
எல்லோரும் இடறப்படும்போது
மொத்த சிந்தனையும்
கலாம் போதையால்
நிரப்பப்படும் போது
மத்த போதை எதற்கு?
மதுக்கடைகளை ஒரு நாள்
துணிந்து மூடியது அரசு.
சோகத்தின் இலக்கை
அடுத்த நாள் எட்டலாம்,
குடிப்பவன் உடம்பு ( பாடி )
(முன்னாள் ) குடியரசு தலைவருக்காக
ஒரு நாள் தாங்காதா என்ன?
சாதாரண இழப்பா இது!

அம்பானிக்கும், அதானிக்கும்
அம்பானியால் சிறுவணிகம் இழந்த
இராமேசுவரம் மளிகைக் கடைக்காரருக்கும்
அதானியால் நிலத்தை இழந்த
குஜராத் விவசாயிக்கும்,

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

அமித்ஷாவுக்கும், மோடிக்கும்
ஆர்.எஸ். எஸ். கொலைவெறி மோகன்பகவத்துக்கும்
திரிசூலத்தால் குதறப்பட்ட
அப்பாவி முஸ்லீம்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

மலைக்கள்வர்களுக்கும்
மணல் கொள்ளையர்க்கும்
ஏரிகளை விழுங்கிய
ரியல் எஸ்டேட் மாபியாக்களுக்கும்
இவர்களால் வாழ்வாதாரம் இழந்து
மண்ணை விட்டு விரட்டப்படும் மக்களுக்கும்

AKALAMஎல்லோருக்கும் நல்லவர்
இறந்து விட்டார்
!

கண்ட கனவில்
கல்லா பிதுங்கும்
கல்விக் கொள்ளையர்க்கும்
கல்விக் கண்ணை
காசுக்கு விற்றுவிட்டு
கனவும் கானும் மாணவர்களுக்கும்

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

பெருந்தகையின் கனவை உள்வாங்கி
பெருந்தொகையில் முன்னேறிய
ஜெயலலிதாவும், தளபதியும்
ஜி.கே. வாசனும், விஜயகாந்தும்
அன்புமனியும், எடியூரப்பாவும்
ஏக்கத்தில் துவள

எல்லோருக்கும் நல்லவர்
இறந்துவிட்டார்
!

மதங்களைக் கடந்த மாமனிதர்
கையில் வீணை
வாயில் கீதை
நெஞ்சில் அணுகுண்டு…
என
பக்காவான
பார்ப்பன வல்லரசு கனவு நாயகனாகி
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தியே
பாராட்டுமளவுக்கு
அப்துல்கலாம் மெய்யாலுமே
மதங்களைக் கடந்த மாமனிதர்தான்!

செத்தவரெல்லாம்
உத்தமரென்றால் – அவர்
செய்தது என்ன
கேட்கலாம் தானே?

அப்துல்கலாமின் பங்களிப்பு
நாட்டைக் காப்பற்ற
அணுகுண்டு சோதனை
அடுத்தடுத்து ஏவுகணை! – என
அடுத்தவனை மிரட்டும் அறிவியலில்
அடைந்தது என்ன நாடு?

மீனவரைக் காப்பாற்ற
ஒரு ‘மிசைல்’ உண்டா?
மாணவரின் கழுத்தறுக்கும்
‘அட்மிசன்’ கொள்ளையைய் தகர்க்க
ஒரு அணுகுண்டு உண்டா?
பழங்குடிகளின் காடுகளைப் பிடுங்கும்
வேதாந்தாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக
ஒரு ஏவுகனை உண்டா?
‘அப்ரைசல்’ எறிகனைக்கு எதிராக
கனவு கானும்
ஐ.டி. ஊழியர்களை காப்பாற்ற
கலாமிடம் ஒரு கருவி உண்டா?

நிலங்களையும், வயல்களையும்
பிடுங்கும்
கார்ப்பரேட் எதிரிகளைத் தாக்க
ஏதேனும் உண்டா கலாமின் கண்டுபிடிப்புகளில்!
இயற்கை வளங்களை கண்டறியும்
செயற்கை கோள்களை தயாரித்து
சுரண்டும் முதலாளிக்கு வழங்கும்
நாட்டை அழிக்கும் வேலைக்கு எதிராக
நடையைக் கட்டியதுண்டா கலாமின் எளிமை!

பச்சை பிள்ளைகளிடம் போய்
மதிப்பீடுகள் பேசிய மாமனிதர்
பாராளுமன்ற உறுப்பினர்களை
கூட்டிவைத்து
‘லஞ்சம் வாங்க மாட்டோம்’ என்று
உறுதிமொழி ஏற்க வைத்ததுண்டா?

விண்ணுக்கு ஏவுகணை வீசிய
வெற்றி வீரர்
கண்ணுக்கு எதிரே இருக்கும்
ஜெயலலிதாவிடம்
கள்ளுண்ணாமை பற்றி பேசி
டாஸ்மாக்கை வீசச் சொன்ன
பேச்சு உண்டா!

தனியார் பள்ளி
மாணவர்களிடம்
உழைப்பு, நேர்மை என
வகுப்பெடுத்த அணுவாளர்
தாளாளரிடம் போய்
கட்டணக் கொள்ளைக்கு எதிராக
கொதித்தெழுந்த காலம் உண்டா!
ஏழ்மையில் பிறந்து
தமிழ்வழி பயின்று
அரசுப்பள்ளியில் படித்துவந்த
அப்துல் கலாம்,
எங்கெனும்
தாய்மொழியில் அரசுப்பள்ளி திறக்கச்சொல்லி
தப்பித்தவறி பேசியதுண்டா?

ஏழையாய் பிறந்தார்
தமிழராய் இறந்தார்
என்பதற்காய் மட்டும்
ஆளும் வர்க்க சேவை நாயகனை
ஏழை வர்க்கத்தினர் முன்னுதாரணமாக
ஏற்க முடியாது,
அவர் என்னவாய் இருந்தார்
யாருக்காய் உழைத்தார்!
என்பதிலிருந்தே அறிதல் வேண்டும்!
இருபத்தியோரு உழைப்பாளிகள்
ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்தபோது
ஓடி வராத கூட்டமெல்லாம்
கலாம் உடலை தேடி வந்த
வர்க்கத்திலிருந்தே
இவர் யாருக்காக வாழ்ந்தார்! புரியவேண்டும்!

உப்புக்காற்றில் பிறந்தவர்
கார்ப்பரேட் கப்புக் காற்றில் கரைந்தார்…
மீன்தோல் தழுவிய நாவினார்
பார்ப்பன பூணுலின்
மான்தோலாக மாறினார்…
ஈழப்படுகொலை, குஜராத் படுகொலை,தலித்துகள் படுகொலை,
எதர்க்கும் வாய் திறவாமல் நாறினார்
ஒடுக்கும் ஆளும் வர்க்க வீணைநரம்பின் சுரமாய் ஏறினார்!

பளிச்சென தெரியும்AbdulKalam
முதலாளி வர்க்க எதிரிகளை விடவும்,
ஆபத்தானவர்கள்
அவர்களை மூடி மறைக்கும்
அப்துல் கலாம்கள்!

புரிந்து கொள் உழைக்கும் வர்க்கமே!
எதர்க்காக உழைக்க வேண்டும்
என்பது மட்டுமல்ல
எதற்க்காக அழ வேண்டும்
என்பதும் நமக்கு தெரிந்திருக்க வேண்டும்

கண்ணீர்
அன்பின் ஈரமாக
சுரக்க வேண்டுமே ஒழிய,
அறியாமையின்
கோரமாக வழியக் கூடாது!

துரை.சண்முகம்

 1. எல்லாவற்றையும் பரிகசித்து விமர்சனம் எழுதியே பழக்கப்பட்டவர் எழுதிய விமர்சனம் என்பதா? அல்லது அறியாமை என்னும் இருளால் சூழப்பட்ட ஒருவர் எழுதிய விமர்சனம் என்பதா? எப்படி வேண்டுமானாலும் கூறலாம். அய்யா கட்டுரையாளரே அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி அவ்வளவுதான். அவர் தனது தள்ளாத வயது வரை தான் பிறந்த நாட்டுக்கு எவ்வளவு சேவை செய்ய இயலுமோ அதைச் செய்துவிட்டு, வயதான பிறகு தானுண்டு தன்னுடைய ஆராய்ச்சி உண்டு என இருந்தவரைப் பிடித்து ஜனாதிபதியாக ஆகுங்கள் என வாஜ்பாய் அழைத்த காரணத்தால் ஜனாதிபதி ஆனவர். பிரதிபா பட்டேல், பிரணாப் ஆய்யோருடன் அப்துல் கலாமை ஒப்பிடுங்கள். மரண தண்டனையின் மீதான கருணை மனுக்கள் எதிலும் கையொப்பமிட மறுத்த தீரர். பார்லிமெண்ட் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை திருப்பி அனுப்பிய வீரர். ராக்கெட் டெக்னாலஜியில் அவரது தலைமையில் இந்தியா பெரும் முன்னேற்றம் கண்டது. அதன் காரணமாக நாம் அனுப்பிய செயற்கைக் கோளால் பெரும் புயற் காற்று எந்தத் திசையில் எந்த இடத்தைத் தாக்கும் என துல்லியமாகத் தெரிந்த காரணத்தால் பல்லாயிரம் மக்கள் உயிரிழக்காமல் காப்பாற்றப்பட்டனர். இந்தக் கட்டுரை எழுதியவர் இறக்கும் போது ஏன் எந்தக் கண்டுபிடிப்பும் கண்டுபிடித்து மனித குலத்துக்கு எந்த சேவையும் ஆற்றவில்லை என இகழ்ந்து கூறுதல் எவ்வளவு அறிவீனமோ அது போலத்தான ஒரு விஞ்ஞானியைப் பார்த்து அவர் ஏன் சமூகப் போராளியாகப் போராடவில்லை எனக் கேட்பது. அப்துல் கலாமின் விஞ்ஞானம் எதிர் எதிர் சிந்தணை கொண்ட யாவருக்கும் பயன் தந்த காரணத்தால்தான் அவர் எல்லோருக்கும் நல்லவர். உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன் என வித்தியாசம் விஞ்ஞானிகளுக்குக் கிடையாது அவர்களின் கண்டுபிடிப்புகளின் விளைவுகள் எல்லோருக்கும் பயன்படும். எனவே எல்லோரும் அவரைப் புகழ்கின்றார்கள்.

  • அதிக வல்லமையுள்ள ஜனாதிபதி பதவிக்கு `கொண்டுவரப்பட்ட’ விஞ்ஞானி கலாம் அவர்கள் தனது பதவிகாலத்தில் குறைந்த பட்ச அதிகாரத்தை காட்டியிருந்தால் கூட சில நன்னமைகள் கிடைத்திருக்கலாம்.தான் பிறந்த ஊரின் மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் தொடர்ந்து படுகொலை செய்வதை தடுத்திருக்கலாம். குஜராத்தில் இஸ்லாமிய இனப்படு கொலையை தடுத்திருக்கலாம்… கல்விக்கட்டண கொள்ளையை கண்டித்திருக்கலாம்… தாதுமணல் கொள்ளைக்கு கண்டனம் தெரிவித்திருக்கலாம்…

   இன்னும் எத்தனை எத்தனையோ செய்திருக்கலாம்…எந்த நன்னைமையும் செய்யாமல் இத்தனை விளம்பரம் எதற்கு? போகட்டும் கலாமைத்தவிர வேறு விஞ்ஞானிகளே இல்லையை? இந்தியத்திருநாட்டில்.

   ஆளும் வர்க்கத்துக்கு அடிபணியாமல் எத்தனை எத்தனை விஞ்ஞானிகள் உலகம்முழுவதும் கொல்லபட்டருக்கிறர்கள்.வரலாரை ஊன்றிபடியுங்கள் அன்பர்களே. நாம் சுனாமி எனும் பேரழிவை அனுபவிக்கும்போது இந்த விஞ்ஞானி ஜனாதிபதி மாளிகையில் என்ன செய்தார் தெரியுமா? அறிவுசார் கண்டுபிடிப்புக்காண இந்திய சட்டத்தை பன்னாட்டுநிறுவனங்களுக்கு சாதமான திருத்திற்கு ஒப்புதல் வழங்கும் ஆணையில் கையொழித்திட்டார்….இன்னும் எத்தனை எத்தனை துரோகங்கள் விளைந்துகிடக்கிறது.ஆளும் வர்க்கத்தின் மென்மையான முகமூடிதான் கலாம் அவர்கள்.

   அமெரிக்கா அணுகுண்டு ஆய்வு செய்யும்போது அதற்க்கு எதிராக ஆல்பிரட் ஐன்ஸ்ட்டின் உட்ப்பட நூற்றுக்கும் மேற்ப்பட்ட விஞ்ஞானிகள் தங்களது சமூக அக்கறையை பதிவு செய்தனர்.

   விஞ்ஞானியாக மட்டுமிருந்துதிருந்தால் நமக்கு கவலையில்லை ஆனால் இவர்மட்டும்தான் விஞ்ஞானி என்று விளம்பரதாரர் நிகழ்ச்சியாவதால்தான் விமர்சிக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் கவிஞரின் “பரிகாசிப்பு” தொடர வாழ்த்துக்கள். இரணியன்

 2. தண்ணீர் குடம் வீடு வரை தூக்க
  வர வில்லை கலாம்

  பைக் பஞ்சர் ஆனபோது
  பஞ்சர் போட வராதவர் கலாம்

  ஏழை பாட்டிக்கு வைத்தியம்
  பார்க்காதவர் கலாம்

  சுண்டல் விற்கும் சிறுவர்களின்
  வாழ்கையை சீரமைக்காத கலாம்

  டி விற்ற கணேசன் மாண்டபின்
  தவித்தவர்களுக்கு டி போட்டு தராதவர் கலாம்

  ஏழைகளின் உடையாம் வேட்டி
  போடாதவர் கலாம்

  எதுகை மோனையாக கவிதை
  எழுதாதவர் கலாம்

  உலகின் அணைத்து பிரச்சினைகளையும்
  தீர்காதவர் தான் இந்த கலாம்

  • அன்று மக்கள் முதல்வரை
   விடுவிக்க
   குமாரசாமிக்குள்ளும்
   ஒரு இராமன் இருந்தார்!

   இன்று மக்கள் சனாதிபதியை
   விடுவிக்க
   இராமனுக்குள்ளும்
   ஒரு குமாரசாமி இருக்கிறார்!

   தண்ணீர் குடம்
   பைக் பஞ்சர்
   ஏழைபாட்டி
   சுண்டல் விற்கும் சிறுவன்
   டீ விற்கும் கணேசன்
   வேட்டி போடாத கலாம்
   என்று பாவடை சிங்காம்
   பவனி சிங்கும்
   தோற்றுப் போக வாதாடி
   பிராதுகளை நீற்றுப்போகச்
   செய்கிறாராம் இராமன்!

   Face Valueவை
   இழந்துவிட்டு
   Facebookகிள்
   நம்மவர்கள் இப்படி கூவுகிறார்களே!

   டாடி எனக்கு
   இன்னொரு டவுட்டு!

   கயர்லாஞ்சியில்
   சுரேகாவின் முலை அறுத்து
   பிறப்புறுப்பில் கல் திணித்த
   சாதிய வன்மத்தை
   கலாம் கண்டித்தாரா?
   என்று
   ஒரு வேளை கேட்டால்

   இதே இராமன்,
   கலாம், சுரேகாவிற்கு
   ஜாக்கெட்டா வாங்கித் தரமுடியும்
   என்று வாதிடுவாரோ?

   • முட்டாள்தனமான வாதம் தென்றல்.

    உலகில் நடக்கும் அத்தனை அநியாயங்களுக்கும் அப்துல் கலாம் அவர்கள் பதில் அளிக்க வேண்டும், போராட வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களானால் பின் அந்த குற்றச்சாட்டு உங்களுக்கும் எனக்கும் அனைவருக்கும் பொருந்தும் இல்லையா. அனைத்து பிரச்சினைகளுக்கும் நாம் தெருவில் இறங்கி போராடுகிறோமா. நீங்களே கூட இசுலாமியர்களுக்கு ஒரு பிரச்சினை என்றால் மட்டும் கிளர்ந்தேழுகிறீர்கள் ஆனால் அதே ஒரு பார்ப்பனர் கொல்லப்படும் போது சாகட்டும் என்ற ரீதியில் பதிவிடுகிறீர்கள்.

    மீனுக்கு நீந்த தெரியும், பறவைக்கு வானில் பறக்க தெரியும். பறவை ஏன் நீரில் நீந்தவில்லை, மீன் ஏன் வானில் பறக்கவில்லை என்று வியாக்கியானம் செய்து கொண்டிருப்பீர்களா. மீண்டும் சொல்கிறேன். அப்துல் கலாம் ஒரு விஞ்ஞானி, அரசியல்வாதி அல்ல, சமூக போராளி அல்ல, அவரை ஊரில் உள்ள எல்லா பிரச்சினைக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்று ஒற்றை காலில் தாங்கள் நிற்பது சரியல்ல.

    நீங்கள் ஒரு சமூக போராளி என்று வைத்து கொள்ளலாம். உங்களிடம் ஒருவர் நீங்கள் அறிவியலில் என்ன சாதித்தீர்கள் என்று வாதாடினால் நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்?

    உங்களால் என்ன முடியுமோ, அதை நீங்கள் செய்கிறீர்கள். அவ்வளவு தான்.

    சுரேகா அவர்களுக்காக உருப்படியாக நீங்கள் செய்தது என்ன,
    இலங்கை தமிழர்கள் நல்வாழ்வுக்காக நீங்கள் செய்தது என்ன,
    குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன,
    டெல்லி, பஞ்சாப் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்காக நீங்கள் செய்தது என்ன,

    சும்மா, நான் போராடினேன், கொடி பிடித்தேன் என்று சொல்லாதீர்கள். இதனால் அந்த குடும்பங்களுக்கு உருப்படியான ஒரு நன்மையையும் நிகழவில்லை. குறை சொல்வது மிக மிக எளிது. இது போன்று குறை சொல்வதை விட்டு விட்டு தங்களது மக்கள் பணியை தொடருங்கள்.

    நீங்கள் என்னை கேட்டீர்கள் என்றால் நான் ஒத்துக்கொள்வேன், மக்களுக்கு பயன்படும் வகையாக நான் பெரிதாக ஒன்றும் செய்யவில்லை தான். ஏதோ என்னால் ஆன வரை சில சிறிய சேவைகள், உதவிகள் செய்து கொண்டு போகிறேன். பெரிய அளவில் மக்களுக்கு என்னால் இதுவரை உதவ முடியவில்லை. நானாவது எனது இயலாமையை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் தாங்கள்???

    உலகில் உள்ள அனைவரையும் குறை சொல்லும் நீங்கள் உருப்படியாக மக்களுக்கு என்ன செய்தீர்கள்?

    • திருவாளர் கற்றது கையளவு,

     கேவலம் உங்கள் பகுதியில் இருக்கும் நூலகம் இயங்குகிறதா என்று பார்ப்பதற்கு போராடக் கூப்பிட்ட பொழுதே திருப்பிக்கொண்டு ஓடியவர் தாங்கள். போராட்டத்தின் பலன் என்னவென்ற தெரியாத கருவறுக்கும் கைக்கூலியாக இருந்துவிட்டு, இங்கு போராடி கொடிபிடிப்பதால் குடும்பங்களுக்கு ஒரு நன்மையும் விளைவதில்லை என்று புளுகுவது ஏன்?

     உங்களைப்போன்ற மோசடிக்காரர்கள் தான் போராடிய சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறி உயிர்விட்ட பொழுது வன்முறையாளன் என்று மோசடி செய்தது.

     ஆனால் இதே கலாம் கைக்கூலியாக இருந்துவிட்டு மக்களுக்கிழைத்த துரோகத்தை பட்டியலிட்டால் ஆளும் வர்க்கத்தின் ஏவல் விலங்காக கேவலமாக கதறிக்கொண்டிருக்கிறீர்கள்!

     உங்களது மோசடி எந்தளவுக்கு என்பதை பட்டியலிடுகிறேன். துணிவிருந்தால் பதில் சொல்லுங்கள்.
     அப்துல் கலாம் அறிவாளி, சமூகப்போராளியல்ல என்பது இருக்கட்டும்.

     கீழ்க்கண்ட துரோகங்களுக்கு என்ன பதில்?

     1. விவசாயி விதை நெல்வைத்திருப்பது கஞ்சா வைத்திருப்பதற்கு ஈடான குற்றம் என்றது மான்செண்டோவை ஆதரிக்கும் சட்டம் சொல்லியது. இந்த சட்டத்தில் கையெழுத்திட்டவர் யார்? விவசாயி செத்தா உம்மா மாதிரியான ஆள்களுக்கு என்ன தெரியும் அருமை? உமது நிலைப்பாடு கேவலமாக இல்லை? தெரிந்தே ஒரு துரோகத்தை எப்படி ஐயா உம்மால் மறைக்க முடிகிறது? போறவன் வர்றவனெல்லாம் மக்கள் சனாதிபதின்னு சொல்றாய்ங்க, நெஞ்சில் நேர்மையிருந்தால் இந்த கேள்விக்கு பதில் சொல்லுய்யா? அப்துல் கலாம் இதுல கையெழுத்துப்போடாமல் இருக்க நான் செய்து இருக்க முடியும்? இந்த அரசை வீழ்த்துவதைத் தவிர! ஒரு விவசாயியை என்ன செய்ய சொல்றீரு?

     2. தமிழக மீனவர்களை நாயைப்போல் சிங்களக் காடையர்கள் சுட்டுத்தள்ளுகிற பொழுது பாரம்பரியமாக மீன் பிடிக்கும் எல்லையை காவு கொடுக்கும் பன்னாட்டு கடல் எல்லைச் சட்டத்தில் கைச்சாத்திட்டவர் யார்? நீர் பாட்டுக்கும் லும்பனாக உக்ரைன், சீனாவென்று சுற்றிவிட்டு திரிவீர்! ஆனால் மீனவனின் வாழ்வாதரத்தை அழிக்கிற ஒரு செயலைச் செய்தவரை என்ன செய்ய சொல்கிறீர்? பதில் சொல்வீரா?

     3. மணிப்பூரிகளின் தாய் மார்கள் இந்திய ராணுவத்தால் சிறப்பு ஆயுதப்படை சட்டத்தால் வண்புணர்விற்கு உள்ளாக்கப்பட்ட பொழுது, இராணுவத்தின் தலைவரான கலாம் என்ன செய்தார்? என் தாயும் உன் தாயும் அம்மணமாக நின்றிருந்தால் கலாமைப் புகழ்வீரா?

     மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு. அது உங்களைப்போன்ற நடுத்தரவர்க்க கோமான்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.

     இதையெல்லாம் தாண்டி ஏதோ கலாம் மன எழுச்சியை உருவாக்கினார் என்று சொல்கிறீரே! மேற்கண்ட மூன்று விசயத்தில் நியாய உணர்ச்சியே இல்லாதவருக்கு மனம் என்ற ஒன்று இருக்கிறதா? மன எழுச்சி மானக்கேடில்லையா?

     • தென்றல்,

      எப்போது என்னை நூலகம் திறக்க போராட அழைத்தீர்கள்?
      எந்த தேதியில் அழைத்தீர்கள்?

      சசிபெருமாள் அவர்களை வன்முறையாளர் என்று நான் கூறுவதாக மோசடியாக நீங்கள் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்? முதலில் அபாண்டமாக பழி கூறுவதை தவிர்க்க பாருங்கள். உங்கள் அனுபவத்திற்கு அது அழகல்ல. குடிக்கும் பழக்கம் இல்லாத நான் சசிபெருமாள் அவர்களுக்கு எதிராக ஏன் கருத்து பதிவிட போகிறேன்?

      விவசாயிகள் விதை நெல்லை வைத்திருப்பது கஞ்சா வைத்திருப்பதற்கு ஈடான குற்றம் என்று யார் சொன்னதாக கூறுகிறீர்கள்? ஏன் இந்த HYPERBOLE? மான்செண்டோவின் பி.டி. பருத்திகள் அப்துல் கலாம் காலத்தில் அல்ல, அதற்கு முன்பிருந்தே இந்தியாவில் பயிரடப்பட்டு வந்துள்ளது. முதலில் 1998 இல் பிடி பருத்தி இந்தியாவில் பயிரடப்பட்டது. அந்த பருத்தி வகைகளின் இலைகளை உண்ணும் பூச்சிகள் இறந்து போகும் வகையில் அதன் மரபணுவில் மாற்றம் செய்யப்பட்டு விற்கப்பட்டது. பிடி பருத்தியை பரவலாக அறிமுகப்படுத்த அரசு முன்வந்தது மார்ச் 2௦௦2. அப்போது அப்துல் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இல்லை. அவர் பதவியேற்றது ஜூலை 2௦௦2 ஆம் ஆண்டு. அதற்கு முன்பே இந்திய அரசின் இயற்கை வள அமைச்சகமும் மரபணு கமிட்டியும் பிடி பருத்திக்கு பச்சை கொடி காட்டி விட்டனர். இன்று வரை பிடி பருத்திக்கு ஆதரவு ஒரு பக்கமும், எதிர்ப்பு இன்னொரு பக்கமும் இருக்க தான் செய்கிறது. இதில் கலாம் அவர்களை ஏன் குற்றம் சாட்டுகிறீர்கள்? அவர் ஜனாதிபதியாக பதவியேற்பதற்கு முன்பிருந்தே பயிரிடப்பட்ட போது பரவாயில்லை. கலாம் ஜனாதிபதியாக பதவியேற்ற சமயம் பயிரடப்பட்டால் தவறு என்று ஏன் அவரை தனித்து குற்றம் சாட்டுகிறீர்கள்? பிடி பருத்தியினால் ஆபத்தில்லை என்று ஆய்வு செய்து அறிவித்த குழுவில் அப்துல் கலாம் இல்லை என்பதையும் உங்களுக்கு தெளிவுபடுத்தி விடுகிறேன்.

      இலங்கை கடல் எல்லை விடயத்தில் கச்சத்தீவு பகுதி பல ஆண்டுகளாக இந்தியா, இலங்கை, இரு நாடுகளுக்கும் அங்கு உரிமை இருப்பதாக கருதப்பட்டது. ஏன் என்றால் சுதந்திரத்திற்கு முன்பு பிரிட்டிஷ் அரசு அதை இரு நாடுகளுக்கும் பொதுவாகவே வைத்திருந்தது. 1974ஆம் ஆண்டு மற்றும் 1976 ஆண்டுகளில் இந்தியா, இலங்கை இரு நாடுகளும் கச்சத்தீவு பகுதியை இலங்கைக்கு சொந்தமானதாக ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் அங்கு இருக்கும் சர்ச்சுக்கு போவதற்கும் மீன்களை பிடிப்பதற்கும் இந்திய மீனவர்களுக்கு அனுமதி இருந்தது. இன்று வரை கச்சத்தீவு குறித்த சர்ச்சை ஓயவில்லை. இலங்கை அரசு முடிவில் இந்திய மீனவர்கள் யாழ்ப்பான கோடு வரை இந்திய மீனவர்கள் மீன் பிடித்து கொள்ளலாம் என்று அறிவித்தது. இதில் கலாம் எங்கு வந்தார்? இலங்கை கடற்படையின் அட்டூழியங்கள் இன்று நேற்றல்ல, பல ஆண்டுகளாகவே இருந்தது. இலங்கையில் அப்போது விடுதலை புலிகள் இருந்த காலத்தில் யாழ் பகுதியில் பெரிதாக கோலோச்சவில்லை. ஆனால் தற்போதைய நிலவரத்தில் அவர்கள் கை அங்கு மேலோங்கி உள்ளது. இலங்கை கடற்படை அப்பாவி தமிழக மீனவர்களை சுடுவதற்கு கலாம் காரணம் என்று தாங்கள் சொல்வது தவறு. இன்று இலங்கை இராணுவம் இந்திய மீனவர்களை சுட்டால் அதற்கு இந்திய ஜனாதிபதியான பிரணாப் முகர்ஜி தான் காரணம் என்று சொல்வீர்களா? என் கருத்தினில் தவறிருந்தால் கூறுங்கள். இலங்கை கடற்படையினர் கலாம் ஜனாதிபதியாக ஆன பின்னர் தான் நம் மீனவர்களை சுட்டார்களா? அதற்கு முன்னும் பின்னும் சுடவே இல்லையா? ஏன் கலாம் அவர்களை இந்த விடயத்தில் தனிமை படுத்தி குற்றம் சாட்டுகிறீர்கள்?

      மணிப்பூரில் இந்திய இராணுவம் மாலோம் பகுதியில் AFSPA சட்டத்தை தவறாக பயன்படுத்தி 1௦ அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை எதிர்த்து இரோம் சர்மிளா அவர்கள் 2௦௦௦ ஆண்டில் இருந்து உண்ணாவிரதம் இருக்கிறார். அப்போது அப்துல் கலாம் ஜனாதிபதியாக இல்லை. வெறும் விஞ்ஞானியாகவே இருந்தார். AFSPA சட்டம் முதலில் 1958 ஆம் வருடத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 1990 ஆம் ஆண்டில் AFSPA சட்டம் ஜம்மு காஷ்மீரில் கொண்டு வரப்பட்டது. இதில் அப்துல் கலாம் எங்கே வந்தார்? நாகாலாத்துக்கு தனிநாடு கேட்டு போராடிய NNCக்கு எதிராக கொண்டுவரப்பட்டது தான் இந்த சட்டம். 2012 ஆண்டில் திருபுராவில் இந்த சட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இன்று வரை AFSPA சட்டம் நாலாலாந்தில் உள்ளது. இந்த சட்டத்தில் தீவிரவாதிகளையும் ஒடுக்குவதற்காக கொண்டுவரப்பட்டபோது அதனை பயன்படுத்தி அப்பாவி பெண்களை வன்புணர்வு செய்த இராணுவத்தினரின் மேல் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் இருவேறு கருத்துகள் இல்லை. இன்று வரை நாகாலாந்தில் அரசுக்கு இணையான ஒரு நிழல் அரசாங்கம் தீவிரவாதிகளால் நடத்தப்பட்டு வருகிறது. அங்கு செல்லும் வண்டிகள், வியாபாரம் செய்யும் நபர்கள், கொள்முதல் செய்பவர்கள், உற்பத்தி செய்பவர்கள் என்று பல்வேறு வகைகளில் அறிவிக்கப்படாத வரியாக தீவிரவாதிகள் இன்றும் வசூலிக்கிறார்கள். அரசு வேலை செய்பவர்கள் 27 சதவீதம் அளவுக்கு தீவிரவாதிகளுக்கு வரி தரவேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அங்கு உள்ளது. இந்த நிலையில் தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு அந்த சட்டம் தேவை என்று இந்திய அரசு கருதுகிறது. இந்தியாவின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் ஜனாதிபதி பதவியில் இருப்பவர் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அப்படி எளிதாக செயல்பட முடியாது தென்றல். விளைவுகளை ஆராய்ந்து தான் முடிவு எடுக்க முடியும்.

      ஆக நீங்கள் கூறிய பிரச்சினைகள் கலாம் ஜனாதிபதியாவதற்கு முன்பிருந்தும் இருந்து வருகிறது. கலாம் அவர்கள் ஜனாதிபதி பதவியில் இருந்து இறங்கிய பின்பும் இருந்து தொடர்கிறது. இப்போது கலாம் அவர்கள் இறந்த பின்னும் தொடர்கிரது. இதில் கலாம் அவர்களை மட்டும் நீங்கள் குற்றவாளியாக காட்ட முனைவது சரியல்ல என்பது என் கருத்து. எல்லா பிரச்சினைகளுக்கும் அப்துல் கலாம் அவர்களே காரணம் என்று நீங்கள் அவதூறு பரப்பியதால் இத்தனை நீண்ட விளக்கம் அளிக்க வேண்டியதாக போய் விட்டது.

      தனிப்பட்ட முறையில் என் கருத்து தீவிரவாதம் என்பது ஆயுதம் மூலம் அழிக்கப்படக்கூடியது அல்ல. மக்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு, கல்வி, பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுத்து, ஊழலற்ற ஆட்சி அமைத்தால் தானாக அவர்கள் நேர்வழிக்கு வந்து விடுவார்கள்.

      • திருவாளர் கற்றது கையளவு,

       கடைசில் கலாமின் ரசிககுஞ்சுமணிகள் இந்தளவு அறியாப்பிள்ளைகள் மட்டுமல்ல அயோக்கியர்கள் என்பதையும் உங்களது விளக்கம் தருகிறது. நான் சுட்டிக்காட்டிய துரோகங்களுக்கு இவைகள் பதில் அல்ல.

       உங்களைப்போன்ற ஆட்களுக்கெல்லாம் நிலைமையே தெரியவில்லையென்றால் கலாம் கனவு காணச் சொன்னது எந்தளவுக்கு போயிருக்கிறது பார்த்தீர்களா?

       முதலில் உங்களது பித்தலாட்டம் பார்வைக்கு:

       “எப்போது என்னை நூலகம் திறக்க போராட அழைத்தீர்கள்?
       எந்த தேதியில் அழைத்தீர்கள்?”

       மே பதினாறு 2015, பிற்பகல் 12.51 மணிக்கு நூலகம் திறக்க போராட அழைத்தேன். அதுகுறித்த சுட்டி இதோ,
       https://www.vinavu.com/2015/04/22/cyproplaxaxin/#comment-416000

       \\சசிபெருமாள் அவர்களை வன்முறையாளர் என்று நான் கூறுவதாக மோசடியாக நீங்கள் ஏன் அவதூறு பரப்புகிறீர்கள்?\\

       பதிலை மீண்டும் படித்தால் உங்களுக்கு காணக்கிடைப்பது இதுவன்றி வேறல்ல; “உங்களைப்போன்ற மோசடிக்காரர்கள் தான் போராடிய சசிபெருமாள் செல்போன் டவரில் ஏறி உயிர்விட்ட பொழுது வன்முறையாளன் என்று மோசடி செய்தது.”

       இது ஏன் என்பதையும் தாங்களும் மோசடியாளர் தான் என்பதை இங்கு வலியுறுத்திக்கூறுகிறேன்.

       அந்தவகையில் இது அவதூறு அல்ல. ஏனெனில் சனநாயகத்தில் நம்பிக்கைவத்து டவர் ஏறி இந்த அரசை அம்பலப்படுத்தி சனநாயகத்தையும் அம்பலப்படுத்துகிற சசி பெருமாள் வகை. இரண்டாவது வாய்ச்சவடால் அடித்த கலாம் வகை. இந்தக் கூட்டம் மக்கள் போராட்டங்களை எந்தளவுக்கு கொச்சைப்படுத்துகிறது என்பதற்கு தங்கள் வாயிலிருந்தே வந்த வாசகத்தை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.

       “சும்மா, நான் போராடினேன், கொடி பிடித்தேன் என்று சொல்லாதீர்கள். இதனால் அந்த குடும்பங்களுக்கு உருப்படியான ஒரு நன்மையையும் நிகழவில்லை.”

       இப்பொழுது சொல்லுங்கள்; சசிபெருமாளை வன்முறையாளன் என்று சொல்லுகிற கூட்டம் தான் தாங்கள் என்பதை மேற்கொண்ட வாசகம் ஆணித்தரமாக நிரூபிக்கிறதா?

      • மூன்று துரோகங்களுக்கு மூன்று எடுத்துக்காட்டுகள்;

       1. விவசாயிகள் விதை நெல் வைத்திருப்பது கஞ்சாவிற்கு இணையான குற்றம் என்பது மிகைப்படுத்தல் அல்ல. விதைச் சட்டம் 2004 கூறுகிறது. இது பாராளுமன்ற நிலைக்குழுவில் வசம் இருந்து இப்பொழுது மீண்டும் கொண்டுவரப்படுகிறது. ஆனால் இங்கு அதுவல்ல விசயம். பிடிபருத்திக்கு முதன் முதலில் லைசென்சு வழங்கியது 2002வாக்கில்.

       குடியரசுத்தலைவராக பதவியேற்ற அப்துல் கலாம் தனது முதல் தலைமை உரையில் மான்செண்டோவின் முகவராக அறிக்கை வெளியிட்டவர்.

       பிறகு பிடிபருத்தியால் பல தற்கொலைகள் நடந்த பொழுது, மான்செண்டோ தனது தரப்பை நியாயமாக்க பயன்ப்படுத்திய முகவர் வேறு யாருமல்ல; அப்துல் கலாம் தான்.

       விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்பதற்கு அப்துல் கலாமை மேற்கோள் காட்டி மான்செண்டோ வெளியிட்ட அறிக்கை இங்கு இருக்கிறது. யோக்கியம் இருந்தால் பதில் சொல்லலாம்.

       Monsanto response to article linking farmers’ suicides in India to its genetically modified seeds

       http://business-humanrights.org/en/india-activist-vandana-shiva-links-monsantos-genetically-modified-seeds-to-farmers-suicides

       ஆதாரம் இரண்டு:

       விதர்பாவில் விவசாயிகள் தற்கொலையை முன்னிட்டு கலாம் மேற்பார்வையிட்ட பொழுது, அவர் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

       Vidarbha farmers’ widows meet President, urge for blanket ban on BT cottonseeds sale
       By Pervez Bari, TwoCircles.net June 16th 2007 http://www.indianmuslims.info/news/2007/jun/16/vidarbha_farmers_widows_meet_president_urge_blanket_ban_bt_cottonseeds_sale.html

       ஆதாரம் மூன்று:

       பிடிபருத்திக்கு தடைவிதிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட குறிக்கோளை எங்குமே கவனத்திற்கு கொண்டுவராத அப்துல் கலாம், பத்திரிக்கையாளர் நிகழ்வின் போது விதர்பா தற்கொலைகளுக்கு நீர் மேலாண்மைதான் காரணம் என்று சொல்லிவிட்டு பிடிபருத்தி பற்றி வாயே திறக்கவில்லை.

       http://www.abdulkalam.nic.in/abdulkalam/sllatest1.jsp?id=1067

       “Dear Journalist friends, quite often I have seen the media reports on the typical problems of farmers, particularly agricultural farmers in certain regions of the nation including Vidarbha. Based on my visit to Vidarbha last month, I would like to share certain experiences with you, so that you can focus on the problems faced by the farmers indicating possible solutions as a news item. I personally believe while we flash the problem, there has to be a team in the media group of a particular newspaper to understand the problem after spot study and either frame an editorial or an extended news item, highlighting the possible long term and short term solutions. Hence, I am spending a few minutes on two important societal aspects which I came across last month, so that the journalists assembled here can assimilate and respond.
       I have been in discussion with farmers, agricultural scientists, administrators, journalists and public concerned with the national development, particularly the present situation of agriculture. During my visit to the drought affected area of Vidarbha district, Maharashtra on 15th June 2007, I met the farmers at Yavatmal. They reiterated the situation that the cotton farmers have not been able to realize reasonable revenue from their farming operations. The output has been low and in some cases there has been total loss due to frequent droughts. In some cases, the farmers have been supplied with Bt cotton seeds expecting better yield. However, the better yield from Bt cotton can come only when there is no shortage of water. After discussions with the farmers and specialists, I found that there is a need to take an overall view of the cotton farming operation in the region. This should include provision of quality input, training the farmers on improved methods of farming or cultivation, marketing of the produce and action to be taken when there is failure of rain. For preventing severe drought, there is a need to create large number of water bodies to harvest rain water which will be useful during the period of drought. In addition, there is a need for local textile industry to work with the farmer and provide them marketing support for their produce without going through the process of middlemen. Also, the banking system should reach every village in the Vidarbha district so that the farmers are not exploited by the money lenders. In this connection, I would like to recall the e-Choupal system established by ITC Ltd. in various areas where farmers have been able to enhance their productivity and realize better value for their products. In this regard, I would also like to mention that there is a model available in Gheri Buttar, Punjab where a collaborative work among farmers, industry, research institution and academic institution has resulted in doubling the seed cotton productivity. I am of the view that relief and programme packages have to be combined with a plan of implementation and targets, and an organizational structure and accountability for implementation. The journalists, particularly the editorial team of the journal working in the Vidarbha area may like to study the problem in detail and suggest methodologies to help the State Government for finding lasting solution to the satisfaction of the farmers. Now, I would like to talk on another important area namely dealing with various forms of medical emergencies which requires media attention.”

       பிடி பருத்திக்கு ஒரு தேர்ந்த அரசு அதிகாரி போன்று சொம்படிக்கு வாசகங்கள் அவை. இதைப் படித்து விட்டு, அதே அப்துல் கலாம் சந்தித்த அதே நிகழ்வை முன்னிட்டு பி. சாய்நாத் எழுதிய கட்டுரை இங்கு,

       In Yavatmal, life goes on
       https://ruralindiaonline.org/articles/in-yavatmal-life-goes-on/

       சில துளிகள் “As Mr. Tiwari’s letter to President Kalam also says: “We strongly feel that it all is not well in Vidharbha and therefore, it’s not the right time for any cultural or dancing session inauguration …We would be highly obliged if you could spare a few minutes to meet the unfortunate widows.”

       நம் கேள்வி: கலாம் ரசிகக்குஞ்சுகுளுவான்கள் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்? “என்ன மயித்துக்குடா மக்கள் சனாதிபன்னு சொல்றீங்க?” என்று யாராவது கேட்டால் கற்றது கையளவு தற்குறி இராமனும் என்ன பதில் சொல்வார்கள்.

       திருவாளர் கற்றது கையளவு அவர்களே, ஒரு மான்செண்டோவிற்கே மூச்சு முட்டுதே, உணவுப் பாதுகாப்பு சட்டம் 2005இல் கையெழுத்தானது, இதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்,

       குறிப்பு: இங்கு ஒரு போட்டி நிகழ்வதாக எமக்குப் படுகிறது. அது துரோகத்தில் விஞ்சி நிற்பது கலாமா, கலாம் ரசிகர்களா?

       • திருவாளர் கற்றது கையளவு,

        இரண்டாவது துரோகத்தில் இங்கு கச்சத்தீவை பற்றி பேசவில்லை. நீர் வேறு பாயிண்டு எடுத்துக்கொடுக்காதீர். அப்துல் கலாம் காலத்தில் தான் மெர்சண்ட் சிப் சட்டம் மற்றும் உள்நாட்டு படகுகள் சட்டம் திருத்தி அமலுக்கு வந்தது. இதன்படி மீனவரின் வாழ்வாதரங்களைப் பறிப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்?

        உள்நாட்டிற்குள்ளேயே மீனவர்கள் தங்களது மீன்பிடி எல்லைகளை இழந்துவிட்டு நிற்கிறார்கள்! ஏதாவது மீனவரிடத்தில் போய் பேசிபாருங்கள். பன்னாட்டு மீன் பிடிக்கம்பெனிகளால் தங்கள் வாழ்வை இழந்திவிட்டு நிற்பது தெரியும்.

        கலாமை உருவாக்கியது மீனவ சமுதாயம் தானே! இது அவருக்குத் தெரியாதா? ரிசார்ட்டுக்கு நோ, ஆனால் குப்பங்கள் காலியாகிடவேண்டுமென்று சொல்கிறார்களே! இது எதன் அடிப்படையில்? மேதகு இராமன் மற்றும் உங்களைப்போன்ற கனவான்களும் சுத்த வெஜிடேரியன் கலாம் போன்ற மவுண்ட் ரோடு மகாவிஷ்ணுக்களுக்கும் காற்றுவாங்க கருவாடு நாறுகிறதோ?!

      • மூன்றாவது துரோகத்தில் மணிப்பூர் உருவான நேரத்தில் இருந்தே அம்மக்கள் இராணுவ ஏதேச்சதிகாரத்திற்கு எதிராக போராடித்தான் வருகிறார்கள். மற்ற சனாதிபதிகள் எல்லாம் அயோக்கியர்கள் என்று தாங்கள் ஒப்புக்கொண்ட பிறகு கலாமிற்கு மட்டும் சலுகை ஏன்?

       ஏன் சலுகை என்றால் அங்கு எனது அம்மாவும் உங்களது அம்மாவும் இராமனின் அம்மாவும் அம்மணமாக நிற்கவில்லை என்பதன்றி வேறன்ன இருக்கிறது? உங்களுக்கு வாழ்க்கை லும்பனாக ஓடுகிறது. ஆகையால் சகபாடிகளின் கோரிக்கைகளை புறக்கணித்துவிட்டு நாட்டு பாதுகாப்பு என்று சொல்லி இராணுவத்தின் வெறிநாய்த்தனத்தை நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறீர்கள்!

       ————————————————

       அப்துல் கலாமிடம் இந்தக்கேள்வியை வலுவாக வைப்பதற்கு இன்னொரு காரணுமும் உண்டு;
       ரசியாவில் இருந்துகொண்டே, பீகாரில் இராணுவ ஆட்சியை ஒரு பேக்ஸ் கையெழுத்து மூலம் அமல்படுத்தத் தெரிகிற கலாமிற்கு, இம்மக்களுக்கு ஆதரவாக ஓர் அறிக்கைகூடவா விடமுடியாது?

       மனுசன் இருந்தா கொஞ்சமாவது நெஞ்சல ஈரம் இருக்கணும் சார். இதே ஜெகஜீவன் அறிக்கை மணிப்பூரில் சிறப்பு ஆயுத இராணுவ சட்டம் சனநாயகம் மற்றும் சட்டத்திற்கு புறம்பானது என்று சமர்பிக்கவில்லை.

       வெளிய சொன்ன வெட்கக்கேடு! காறித்துப்புனா அது எச்சிக்குத்தான் அசிங்கம்!

   • சந்தடி சாக்கில் ஊழல் செயலலிதாவும் , அப்துல் கலாமும் ஒன்று எனபது போல ஒரே தராசில் வைத்து அளக்கிறீர்கள் . உங்கள் நியாய தராசின் யோக்கியதை அதிலே அம்பலப்பட்டு நிற்கிறது

    • அட இராமா, சந்தடி சாக்கில் மான்சோண்டா சட்டத்தில் கையெழுத்திட்டு விவசாயிகளைக் கொன்றவரை, பன்னாட்டு கடல் எல்லை சட்டத்தில் கையெழுத்திட்டு தன்னை உருவாக்கிய மீனவ சமுதாயத்தைக் கொன்றவரை சுண்டல் விற்கும் பையன், தண்ணீர் தூக்கவில்லை என்று ஒப்பிட்டு அளந்தீரே!

     ஒரு வேளை உமது நியாய தராசின் யோக்கியதை உமது சாடிச குணம்தானோ? என்ன செய்றது? உங்களமாதிரி ஆளுகளுக்கெல்லாம் மூனு வேளை சோறு கிடைச்சிறது! கோகோ கோலா பெப்சின்னு வாழ்க்கை போகுது,

     தண்ணிக்கும், நிலத்துக்கும் போராடற மக்கள் எல்லாம் உங்களுக்கு கிள்ளு கீரையாதான் தெரியும்.

     கலாம நினைச்சு கணவு காங்கிறதுக்கு, சேலம் சிவராஜ் வைத்தியர்கிட்ட பெசல் செட்டு SSS பத்தாயிரத்துக்கு கிடைக்குதாம். வாங்கி முழுங்குகப்பு, அதுவிட்டுபுட்டு பவானி சிங் வேலை உமக்கு எதுக்குப்பா?

     கடைசியில இந்த நடுத்தர வர்க்கத்தோட மனநிலை நாப்பீய விட கேவலமாக நாறுதுடே!!!

     • சூரியன்,

      அந்த 3 கேள்விகள் தென்றல் என்னையும் கேட்டார்.
      எனது பதில்கள். 2.1.1.1.1 இல் உள்ளது.

 3. அப்துல் கலாம் மீதான அல்டாப் மாயைகளை உடைக்கும் மிக அற்ப்புதமான கவிதை. ஒரு உண்மையான விஞ்ஞானியாக விளங்குபவர் தான் சார்ந்த அறிவியல் துறையில் மட்டுமல்லாமல், தான் சார்ந்த சமுகத்தையும் பகுத்து ஆராய்ச்சி செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும். அப்படி அவர் உண்மையிலேயே ஆராய்ச்சி செய்திருந்தால் இந்நேரம் கடுகளவும் பயன் இல்லாத வெற்று மித வாத பேச்சுக்களை தூக்கி எறிந்து விட்டு, இந்த சமுகம் பற்றியும் சமுகத்தில் நிலவும் பல்வேறு சீர்க்கேடுகள் பற்றியும் அதற்க்கு காரணமாக இருக்கும் உண்மையான காரணிகளையும் எப்பொழுதோ மக்களிடம் கொண்டு சேர்த்திருக்க வேண்டும். தன்னுடைய உப்புக்கும் பயனில்லாத மித வாத பேச்சுக்களாலும், அறிவுரைகளாலும் ஒரு தலைமுறையை மொன்னையாக்கிய “அட்டு” பெருமை மட்டுமே இவரை சாரும்.

  • ரெபேக்கா மேரி அவர்களே,

   அந்த காரியத்தை நீங்கள் இத்தனை காலம் ஏன் செய்யவில்லை.

   நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள் என்று எனக்கு தெரியாது. அப்துல் கலாம் ஒரு அறிவியல் விஞ்ஞானி. அவராக ஜனாதிபதியாக போய் நிற்கவில்லை. அவர் உண்டு, அவர் வேலை உண்டு என்று இருந்தவர். பொதுவாகவே விஞ்ஞானிகள் சமூகத்துடன் ஒன்றிணைந்து போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை. இவ்வளவு பேசும் நீங்கள் இந்த நாட்டுக்கு செய்த நன்மைகள் என்ன என்று பட்டியலிட முடியுமா? அடுத்தவரை குறை சொல்லும் முன் நாம் என்ன செய்தோம் என்று சற்று நினைத்து பாருங்கள் ரெபெக்கா மேரி.

   • ஐயா கற்றது கையளவு அவர்களே…

    அப்துல் கலாம் போன்றவர்கள் போராட வரவில்லை என்றாலும் பரவாயில்லை. ஆனால், இல்லாத ஊருக்கு வழி சொல்லும் மடமையை செய்யாமல் இருந்தாலே போதும். அன்றாட வாழ்க்கை நெருக்கடியை நினைத்து தூக்கத்தையே தொலைத்து கொண்டிருக்கும் பெரும்பான்மை மக்களை கொண்ட சமுகத்தில், “கனவு காணு”, “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்பன போன்ற மக்கள் அறிவை பஞ்சராக்கும் பஞ்ச் வசனங்களை கூறாமல் இருந்தாலே போதும்,அவர்களுக்கான முன்னேற்றத்தை அவர்களே தேடிக் கொள்வார்கள். மக்களை அறியாமையில் ஆழ்த்தி ஆளும் வர்க்கத்தை கட்டிக் காக்கும் சுய முன்னேற்ற குப்பை தத்துவங்களுக்கு இந்நாட்டில் பஞ்சமில்லை. திருக்குறள் காலம் தொடங்கி இன்று இருக்கும் “மொக்கச்சாமி” இறையன்பு வரை ஏக பட்ட வசனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இதில் புதிதாக இவர் வேறு இந்தியா 2020, அக்னி சிறகுகள் என்று. இந்த சுய முன்னேற்ற கருவேல மரங்களை அப்புற படுத்தினாலே போதும் சமுகம் தானாக முன்னேற்றம் கண்டு செழுமை அடைந்து விடும்.

    அது என்ன, இங்கு அப்துல் காலாமிற்கு எதிராக மறுமொழி போட்டவர்கள் அனைவரிடமும் “நீ எதை செய்தாய், நீ எதை கிழித்தாய்” என்று பொறிந்து தள்ளி இருக்கிறீர்கள். காசு இருந்தால் தான் கல்வி முதல் சுடுகாடு வரை அனைத்தும் தரமாக கிடைக்கும் என்கிற நிலையில் இருக்கும் ஒரு சமுகத்தில் இவ்வளவு தூரம் நாங்கள் வாழ்வதே ஒரு பெரிய சாதனை இல்லையா. இவருடைய பயனற்ற மித வாத அறிவுரைகளை பற்றி விமர்சனம் செய்ய நாங்கள் ஒன்றும் பெரிய சமுக சேவகராக தான் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நான் இந்த சமுகத்திற்கு பெரிதாக ஒன்றும் செய்திடவில்லை தான், எனக்கு வயது 24 ஆகிறது இன்னும் சில மாதங்களில் கால் நூற்றாண்டை தொட்டு விடும். சென்னையில் உள்ள பிரபலமான கிறித்துவ கல்லூரி ஒன்றில் கணிதம் தொடர்பான முதுகலை படிப்பை வரும் 2016ஆம் ஆண்டோடு நிறைவு செய்ய போகிறேன். நான் செய்யும் சமுக தொண்டுகளை எல்லாம் என்னால் இங்கு பட்டியலிட முடியாது. அது எனக்கு தேவையுமல்ல. ஆனால் எந்தவொரு புது விஞ்ஞான கோட்பாட்டையோ அல்லது சமுகத்திற்கு பயன்படும் வகையில் புதுமையான கண்டுபிடிப்பையோ நிகழ்த்தாமல் நிச்சயம் எதிர்க்காலத்தில் “விஞ்ஞானி” என்கிற அடைமொழியோடு உலவ மாட்டேன் என்பதை மட்டும் உறுதி அளிக்கிறேன்..

    • ரெபேக்கா அவர்களே,

     புரிந்தும் புரியாதது போல நடிக்கும் உங்களை என்ன சொல்ல….

     // “கனவு காணு”, “நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்” என்பன போன்ற மக்கள் அறிவை பஞ்சராக்கும் பஞ்ச் வசனங்களை கூறாமல் இருந்தாலே போதும்//

     மேற்கண்ட கலாமின் கருத்தில் மக்களை எழுச்சியடைய, முன்னேற வைக்கும் வசனமாக தான் என் கண்ணுக்கு தெரிகிறது. நீங்கள் வேறு ஒரு நிற கண்ணாடியை அணிந்து பார்க்கிறீர்கள். கண்ணாடியை கழட்டி விட்டு படியுங்கள். இதில் என்ன அறிவை பஞ்சராக்கும் வசனம் உள்ளது?

     நாட்டில் அவனவன் ஒரு போதைக்கு அடிமையாக இருக்குறான். அவரது கனவு பற்றிய கருத்து உங்களுக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும். ஏன் நம் கம்மியுனிச நண்பர்கள் புரட்சி வரும் என்று கனவு காணவில்லையா. அந்த கனவு நனவாக போராடவில்லையா. தூக்கம் வரவிடாமல் செய்யக்கூடிய கனவு காண வேண்டும் என்றார். புரட்சி வருவதற்காக அத்தனை தீவிரமாக நம் தோழர்கள் போராடி இருந்தால் ஓரளவு மக்களிடம் உங்கள் கருத்துக்கள் போய் சேர்ந்திருக்கும். ஆனால் அந்தோ பரிதாபம், நம் கம்மியுனிச நண்பர்கள் அவர்களது உழைப்பு அனைத்தையும் அடுத்தவரை இழிவுபடுத்துவதிலும், அவதூறு பரப்புவதிலுமே காலம் கடத்தியதால் அவர்களது கனவு நிறைவேறாமல் இருக்கிறது.

     எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு.

     அப்துல் கலாம் சொன்னாலும் சரி, அப்துல் காதர் சொன்னாலும் சரி, தென்றல் சொன்னாலும் சரி, கற்றது கையளவு சொன்னாலும் சரி, ஜோசப் சொன்னாலும் சரி, திப்பு சொன்னாலும் சரி, தமிழ் சொன்னாலும் சரி, மெய்ப்பொருள் அறிந்து பின் தாங்கள் கருத்திடுங்கள். மற்றவர்கள் சொன்னார்கள் என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு நாமும் மேலும் சில அவதூறுகளை பரப்புவோம் என்று பறக்காதீர்கள்.

     புரிந்தால் சரி.

     • ரெபெக்கா அவர்களே,

      தங்களது வயது 24 என்பது உண்மையான பதில் என்ற பட்சத்தில் அப்துல் கலாம் அவர்களை பற்றிய தங்களது கருத்துக்கள் முதிர்ச்சியின்மையின் விளைவு என்று கருத வேண்டியுள்ளது.

      இந்த வயதில் உங்களுக்கு அனுபவசாலிகள் எல்லோரும் பெரிசுகள், அட்வைஸ் சொல்ல வந்து விட்டார்கள், அட்டு மனிதர்கள் என்றே தோன்றும். திருவள்ளுவரும் உங்கள் விமர்சனத்தில் இருந்து தப்பவில்லை. 🙂

      வாழ்க்கை நமக்கு பல சமயங்களில் பல பாடங்களை தரும்.
      அப்போது சில சமயம் நமக்கு தோன்றும்… அட, இந்த விடயத்தை அப்போதே நம்ம தாடிக்கார தாத்தா திருவள்ளுவர் அழகாக, எளிமையாக சொல்லி விட்டாரே என்று தோன்றும்.

      அனுபவங்கள் நமக்கு பாடங்களை கற்றுக்கொடுக்கும். காத்திருங்கள்.

      • திரு. கற்றது கையளவு..

       //மேற்கண்ட கலாமின் கருத்தில் மக்களை எழுச்சியடைய, முன்னேற வைக்கும் வசனமாக தான் என் கண்ணுக்கு தெரிகிறது.//

       அப்படியா… இந்தியாவின் எந்த பகுதி மக்கள் அதனால் எழுச்சி அடைந்து விட்டார்கள் என்பதை நாங்கள் தெரிந்துக் கொள்ளலாமா. இதுப் போன்ற தக்கையான பொன் மொழிகளை யார் வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் வழி. மைக்கை பிடித்து எழுச்சியுரை ஆற்றுவதை யார் வேண்டுமானாலும் செய்யலாம். நீயா நானா கோபி நாத போன்ற கோமாளிகள் கூட இதனை செவ்வனே செய்து விட்டார்கள். ஆனால் பலன். இந்தியா முன்னேற வேண்டுமானால் 2020 குள் இந்நாட்டின் கல்வி நிலை 100% என்கிற இலக்கை அடைய வேண்டும் என்பதை சொல்ல ஒரு விஞ்ஞானி தேவை இல்லை. பவர் ஸ்டாரே போதும் இதற்கு.

       சரி 100 விழுக்காடு கல்வி என்கிற நிலையை அடைந்தால் இந்தியா முன்னேறிய நாடக மாறி அமெரிக்கா, லண்டன், ஸ்விஸ், ஜப்பான் மற்றுமுள்ள நாடுகள் பிறகு ப்ளுடோ, நெப்டியூன், யுரேனஸ் போன்ற கிரகங்களில் வாழும் உயிர்களுக்கு கூட சாவல் விடும் அளவிற்கு பெரிய வல்லரசு ஆகி விடும் என்றே வைத்துக் கொள்வோம். அந்த 100 விழுக்காடு கல்வி தேர்ச்சி என்கிற இலக்கை அடைய உருப்படியாக என்ன வழியை கூறி இருக்கிறார். லட்ச லட்சமாக காசு கொடுத்தால் தான் தரமான கல்வியை பெற முடியும் என்கிற நிலையில் நம் நாடு இருக்கிறது. இதனை முறியடிக்காமல் அனைவருக்கும் கல்வி என்பது எப்படி சாத்தியம் ஆகும். கல்விக் கொள்ளையை முறியடிக்க என்ன வழி முறையை கூறி இருக்கிறார் இந்த கோமாளி. இப்படித் தான் தன்னுடைய இந்தியா 2020 என்னும் நூலில் மருத்துவம் பொது சுகாதாரம், சுற்றுப்புற சுழல் போன்ற அனைத்திலும் வழியை கூறாமல் இலக்கை மட்டும் கூறி சென்றிருக்கிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்ய அந்த புத்தகத்தை கடைசியில் நான் குப்பையில் தான் தூக்கி எறிந்தேன். சேவை துறைகள் அனைத்தையும் லாபத்திற்காக மூலதனத்தின் கால்களில் அடகு வைத்து விட்டு, அனைத்திலும் நிறைவான வல்லரசு என்கிற மோசடியான கனவை கூறுவது யாரை ஏமாற்ற?

       சமுகத்தின் நிலை இப்படி இருக்கும் பொழுது அப்துல் கலாம் போன்ற கோமாளிகளின் தத்துவங்களை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய… அவைகளால் என்போன்ற பெரும்பான்மை மக்களுக்கு என்ன பயன். சமுகம் இப்படித் தான் இருக்கும் அதை ஒன்றும் செய்ய முடியாது, உன் நிலையை(பொருளாதார) நீ உயர்த்திக் கொள் என்பவை தான் என்போன்ற மக்களுக்கு இவர்கள் தரும் வெட்டி தர்ம உபதேசங்கள். இதுப் போன்ற பல உபதேசங்கள் பைபிளில் நிறைய கொட்டிக் கிடைக்கின்றன. அவை அப்துல் கலாம் கூறுவதை விட இன்னும் மனதிற்கு ஆறுதல் தரும் வகையில் ஆன்மீக போதையுடன் கலந்து வரும். ஆனால் அதனால் என் பசி தீர்ந்து விடுமா, என்னை பிடித்த நோய் ஓடிப்போய் விடுமா. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது நின்று விடுமா.எங்களுக்கு தேவை உபதேசங்கள் அல்ல உரிமைகள் தான். அதை போராடி தான் வென்றெடுக்க முடியும். அதை நிச்சயம் அப்துல் கலாமோ அல்லது நான் அன்றாடும் வழிப்படும் ஆண்டவரோ எனக்கு பெற்று தர மாட்டார்கள்.

       தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள் நமக்கு தேவை மகாத்மாக்களின் உபதேசங்களோ அல்லது கலாம்களின் உதய மூர்த்திகளின், இறையன்புகளின் சமுகத்தை கண்டுக் கொள்ளாத சுய முன்னேற்ற சுயநலன்களோ அல்ல. இப்போதைய சமுகத்தின் உடனடி தேவையெல்லாம் லெனின் போன்ற ஒருவர் தான். சமுக மாற்றம் ஒன்றினால் மட்டுமே நம் இலக்குகளை தன்னிறைவோடு அடைய இயலும்.

       • இப்போது புரிகிறது ரெபெக்கா,

        உபதேசங்கள், அறிவுரைகள் உங்களுக்கு பிடிக்கவில்லை. பெற்றோரின், பெரியவர்களின் அறிவுரைகளையும் இப்படி தான் எடுத்தேறிவீர்களோ தெரியவில்லை.

        சாலையில் போகும்போது ஒரு பெரியவர் பார்த்து போப்பா, அங்கே போகிற வழியில் பள்ளம் இருக்கு என்று சொன்னால், நீ போ பெரிசு, எல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்லிக்கொண்டே அந்த பள்ளத்தில் விழும் இளைஞனின் மனநிலையில் உள்ளீர்கள்.

        காதை இறுக மூடிக்கொண்டால் எதுவும் கேட்காது. பின் எதற்கு அந்த காது.

        கலாம் பணக்கார தனியார் கல்லூரிகளுக்கு மட்டும் சென்று சென்று மாணவர்களை சந்தித்து அந்த தனியார் கல்லூரிக்கு அதிக பிசினெஸ் ஈட்ட மறைமுகமாக உதவுகிறார் என்ற தவறான ஒரு கருத்து இங்கு பதிவிடும் பல நண்பர்களுக்கு உள்ளது. அந்த கருத்து எதை வைத்து உருவாக்கப்பட்டது, யார் அதனை முதலில் பரப்பினார்களோ தெரியவில்லை.

        கலாம் அவரை அழைக்கும் பெரும்பாலான கல்லூரிகளுக்கு, பல்கலைகழகங்களுக்கு சென்று மாணவர்களை சந்தித்து பேசித்தான் வருகிறார். அந்த கல்லூரிகளில் தனியாரும் உண்டு, அரசு கல்லூரிகளும் உண்டு.

        கலாம் அடிக்கடி சென்று வரும் அண்ணா பல்கலைகழகம், பனாரஸ் இந்து பல்கலை கழகம், ஐ.ஐ.எம். ஷில்லாங், ஐ.ஐ.எம்.அகமதாபாத், ஐ.ஐ.எம்.இந்தோர், ஐ.ஐ.எஸ்.டி திருவனந்தபுரம் இங்கெல்லாம் அவர் சிறப்பு பேராசிரியராக இருக்கிறார். இவை எல்லாம் தனியாருக்கு சொந்தமானதல்ல. எந்த கல்லூரி அழைத்தாலும் அவருக்கு நேரம் கிடைக்கும் பட்சத்தில் அவர் போய் தான் வருகிறார். இதற்கு கோபிநாத் போல கட்டணம் வசூலிப்பவர் அவரல்ல, இறையன்பு போல மதமாற்றம் செய்பவர் அவரல்ல.

        கலாம் அறிவாளி, அறிவியலாளர், விஞ்ஞானி என்பதால் மட்டும் அவரிடம் அனைவரும் அன்பு காட்டவில்லை.

        எளிமையான, நல்ல மனிதர், கோடிக்கோடியாக சொத்துக்கள் இல்லை அவரிடம். ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்லும்போது லாரி லாரியாக பொருட்களை ஏற்றி செல்லும் ஜனாதிபதிகள் இருக்கும்போது இவர் இரெண்டே பெட்டிகளுடன் நடையை கட்டியவர். இறந்தபோதும் மாணவர்களுடன் உரையாடியபடியே இறந்தார். தனக்காக ஒரு காவலர் வண்டியில் பயணம் முழுக்க நிற்கிறார் என்பதையே தாங்க முடியாத நல்ல குணம் கொண்டவர். அவரது இறப்பையே இப்படி கிண்டலடிக்கும் நபர்கள் பின் இந்த உலகில் எவரையும் விட்டு வைக்கப்போவதில்லை. நடத்துங்கள்.

        அவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற ஒற்றை நோக்குடன் செயல்படுபவர்களை ஒன்றும் சொல்வதற்கு இல்லை. ஒருவர் இறக்கும் போது, அப்பா, ஒழிந்தானடா என்று எத்தனை பேர் சொல்கிறார்கள், எத்தனை பேர் கண்ணீர் வடிக்கிறார்கள் இதனை கொண்டு அவரது வாழ்க்கை எப்படிப்பட்டது என்று கணக்கிடலாம். ஒரு நாடே கண்ணீர் வடிக்கும் போது நிச்சயம் கலாம் அனைவரது மனத்திலும் ஒரு தாக்கத்தை உண்டாக்கி உள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.

        இந்த சில்வண்டுகள் அவரை பற்றி இழிவாக பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.

        • சரியான திசையில் ,மிக சரியான சிந்தனை போக்கில் பயணிக்கும் ஒரு கல்லூரி மாணவியை நோக்கி கற்றது அவர்களால் பாடப்படும் வசை பாடல்கள் தான் இவை. கற்றது அவர்களின் பின்னுட்டத்தில் அந்த மாணவி இங்கு எடுத்து வைத்து உள்ள கருத்துகள் பற்றிய பதில்கள் சிறிதும் இல்லை ஆனால் அவரை பற்றிய அவதூறுகளும், கலாமை பற்றிய அரைந்த மாவையே மீண்டும் அரைக்கும் புகழ் பாடல்களும் மட்டுமே மிஞ்சுகின்றன. கலாம் அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்ற கருத்தே கற்றது அவ்ர்களின் கருத்துகளில் மிஞ்சி நிற்கிறான.

         //இந்த சில்வண்டுகள் அவரை பற்றி இழிவாக பேசுவதை பெரிதாக எடுத்து கொள்ள தேவையில்லை.//

    • //காசு இருந்தால் தான் கல்வி முதல் சுடுகாடு வரை அனைத்தும் தரமாக கிடைக்கும் என்கிற நிலையில் இருக்கும் ஒரு சமுகத்தில் இவ்வளவு தூரம் நாங்கள் வாழ்வதே ஒரு பெரிய சாதனை இல்லையா. //

     அடுத்தவர்களின் உழைப்பை இலவசமாக எதிர்பார்கிறீர்கள் ?

     //ணிதம் தொடர்பான முதுகலை//

     நல்லது . வங்கியில் பணியாற்றி ரிடையர் ஆனவருக்கே புரிவதில்லை , நீங்கள் உலகம் புரியாமல் உங்கள் கருத்தை கூறலாம்

     சாரிடி தொடர்பாக கணிதத்தில் 200/200 மதிப்பெண் பெற்ற மாணவனுடன் உரையாடினேன் . sinX என்றால் என்ன யதற்காக கண்டுபிடிக்கப்பட்டது , எப்படி உதவுகிறது என்று தெரியவில்லை . முதுகலையில் படிக்கும் உங்களுக்கு தெரியுமா? முதுகளியிலாவது புரியும்படி சொல்லி தருகிறார்களா?

     • திரு.ராமன்…………..

      //அடுத்தவர்களின் உழைப்பை இலவசமாக எதிர்பார்கிறீர்கள் ?//

      அமெரிக்காவிற்கும் இங்கு இருக்கும் தரகு கோஷ்டிகளுக்கும் சொம்படிப்பதை தவிர உருப்படியாக வேறொன்றும் தெரியாது என்பதை தங்களின் மேற்சொன்ன பொன்னான்ன வாக்கியத்தின் மூலம் சுய அம்பலபடுத்தியமைக்கு நன்றி. என்னுடைய அடிப்படை தேவைகளை, எனக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை கேட்டால் அடுத்தவரின் உழைப்பை இலவசமாக எதிர்ப்பார்பதாக அர்த்தமா!!!!!!!!!!.

      இதற்க்கு முன்பு கூட சாவேஸ் பற்றிய கட்டுரையில் எழுப்பிய கேள்விக்கே நீங்கள் இன்னும் விடை அளிக்க வில்லை. ஒருவேளை எனக்கு புற்றுநோய் போன்ற கொடும்நோய் ஏற்ப்பட்டால் நான் உயிர் வாழ வேண்டுமானால் பணம் இருப்பவர்களை மட்டுமே வாழ வைக்கும் அபோல்லோ போன்ற மருத்துவ கொள்ளையர்களை தான் நான் நாட வேண்டும். அதற்க்கு 1 கோடி முதல் 2 கோடி வரை நான் செலவு செய்ய வேண்டும் அப்படி என்னிடம் பணம் இல்லாத பட்சத்தில் நான் சாவதை தவிர வேறு வழி இல்லை இந்நிலையில் நான் என்ன செய்ய வேண்டும் என்று எழுப்பிய கேள்விக்கு இன்று வரை உங்களிடம் இருந்து ஒரு உருப்படியான, நாணயமான, மனிதாபிமானமுள்ள எந்த பதிலும் இல்லை. இந்த லட்சணத்தில் sinx பற்றி கேள்வி வேறு. ஜ்யாமெட்ரிக் ப்ராக்ரஷனில் பரிணாமம் அடைந்து வரும் சமுகத்தின் சீர்கேடுகளை எப்படி களையலாம் என்பதற்கு தங்களிடமோ கலாமிடமோ ஒரு மண்ணும் தீர்வு இல்லை. இதில் அடுத்தவரை நய்யாண்டி செய்வதில் ஒன்றும் குறையில்லை. முதலில் மனிதாபிமானம் என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொண்டு வாருங்கள். உங்கள் ஒவ்வொரு பதிவிலும் மனிதாபிமானத்தின் மீதான வறட்சி அதிகமாக தொனிக்கிறது. ஆகவே முதலில் மனித நேயம் என்றால் என்ன என்பதை கற்றுக் கொண்டு வாருங்கள் பிறகு sinx , cosx என்று அனைத்தையும் பற்றி தெரிந்துக் கொள்ளலாம். பிணத்திற்கு பட்டு குஞ்சம் ஒன்று தான் கேடு.

      பி.கு:- கட்டுரை அப்துல் கலாமை பற்றியது இதில் தேவை இல்லாத விவதாங்களை கொண்டு வந்த மடை மாற்றம் செய்யும் மலினமான வேலை வேண்டாம். அது அறிவு நாணயம் உள்ளவர்களுக்கு அழகல்ல..

      • //என்னுடைய அடிப்படை தேவைகளை, எனக்கு கிடைக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை கேட்டால் அடுத்தவரின் உழைப்பை இலவசமாக எதிர்ப்பார்பதாக அர்த்தமா!!!!!!!!!!.//

       உங்கள் அடிப்படை தேவைகளுக்கு உங்கள் உழைப்பில் தான் அடைய வேண்டும் .
       அடுத்தவர் உழைப்பில் அல்ல !

       //ஒருவேளை எனக்கு புற்றுநோய் போன்ற கொடும்நோய் ஏற்ப்பட்டால் நான் உயிர் வாழ வேண்டுமானால் பணம் இருப்பவர்களை மட்டுமே வாழ வைக்கும் அபோல்லோ போன்ற மருத்துவ கொள்ளையர்களை தான் நான் நாட வேண்டும். அதற்க்கு 1 கோடி முதல் 2 கோடி வரை நான் செலவு செய்ய வேண்டும் அப்படி என்னிடம் பணம் இல்லாத பட்சத்தில் நான் சாவதை தவிர வேறு வழி இல்லை //

       ஆப்பில் நிருவனரே புற்று நோயில் இறந்தார் .

       அடுத்து உங்கள் வசதிக்காக டாக்டர்கள் மூன்று வேலை இலவச சாப்பாடு சாப்பிட்டு விட்டு இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும்
       உங்கள் வசதிக்காக ஆராய்ச்சி நிறுவனங்கள் மூன்று வேலை இலவச சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஆராயிச்சி செய்ய வேண்டும்
       உங்கள் வசதிக்காக மருந்து நிறுவனங்கள் மூன்று வேலை இலவச சாப்பாடு சாப்பிட்டு விட்டு மருந்து செய்ய வேண்டும்

       நீங்கள் பூமியில் அவதரித்து விட்டதால் உங்களை காக்கும் பொறுப்பு சமூகத்திற்கு .அடடா …

       அப்புறம் BMW மாதிரி கார் கம்பெனிகள் தனியார் இருக்கலாமாம் . உங்க லச்சுரி நுகர்வுக்கு , என்கிநியர்கள் பாவம் பிழைத்து போகட்டும் என்று கருணை காட்டினீர்கள் . அடடா அடடா என்னே ஒரு கருணை , மனிதாபிமானம்

       எப்படி பாவம் புண்ணியம் என்று பேசி மதவாதி ஏமாற்று கிறானோ , மனிதாபிமானம் பேசி கம்மிகள் ஏமாற்றுவார்கள் .வெனிசூலாவில் இலவச மருத்துவம் எப்படி நடக்கிறது என்று ஒரு நடை பொய் பார்த்துவிட்டு வரவும் .

       sinX பற்றி உங்களுக்கு தெரியாது எனபது தெரிந்துவிட்டது . கலாம் அவர்களை விஞ்ஞானி அல்ல என்று கூறும் உமது திறமை என்ன என்பதை தெரிந்து கொள்ளவே அந்த கேள்வி . நீங்கள் கணிதம் இளங்கலை பட்டம் பேருக்கு பின்னல் போடவேண்டாம்

       • @ ராமன்….

        இது போன்ற ஒரு பதில் உங்களிடம் இருந்து எதிர்பார்த்த ஒன்றுதான். நீங்கள் இவ்வளவு குருரமான முட்டாளாக இருப்பீர்கள் என்று நான் எதிர்ப் பார்க்கவில்லை…சத்தியமாக உங்கள் பதிவை படிக்கும் பொழுது வரும் சிரிப்பை கட்டுப் படுத்த முடியவில்லை…

        //உங்கள் அடிப்படை தேவைகளுக்கு உங்கள் உழைப்பில் தான் அடைய வேண்டும் .
        அடுத்தவர் உழைப்பில் அல்ல !//

        அட அறிவிலியே… அடிப்படை தேவை என்ன என்பதுக் கூட தெரியாத நீங்கள் அப்துல் கலாம் போன்ற கோமாளிகளை வியந்து பேசுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அது சரி பாம்பின் கால் பாம்பறியும் என்பதுப் போல. ஒரு லும்பனுக்கு தானே இன்னொரு லும்பனை பற்றி தெரியும். அடிப்படை தேவை என்பது உணவு மருத்துவம் மட்டுமல்ல தரமான குடிநீரும் கூட. அந்தக் குடிநீரை கூட அரசு வழங்காது நீ தான் தண்ணீர் கொள்ளையரிடம் காசு கொடுத்து வாங்கி கொள்ள வேண்டும் என்றும் கூறும் உங்களின் கருத்தில் பொதிந்துள்ள பிழைப்பு வாத பொறிக்கித்தனம் தான் கேவலத்தின் உச்சம்.

        மார்க்சிய,லெனினியம் என்றால் என்ன வென்று ஒரு எழவும் தெரியாது, இதில் வெனிசுலாவை பார் , க்யுபாவின் லட்சணத்தை பார் என்று பேத்தல்களுக்கு ஒன்றும் குறைவில்லை. நான் ஏன் தொழில்நுட்ப துறையில் விஞ்ஞானத்தில் அரசு தலையீடு இருக்க கூடாது என்று கூறினேன் என்பது ஒரு சிறு குழந்தைக்கும் தெரியும். உங்களை போன்ற மண்டுகங்களுக்கு புரியவில்லை என்றால் அதில் ஆச்சர்ய படுவதர்ற்கு ஒன்றுமில்லை.

        சரி, எனக்கு கணிதத்தை பற்றி ஒன்று தெரியவில்லை என்றால்,அதனால் சமுகத்திற்கு ஒன்றும் நஷ்டமில்லை. திறமை இருந்தால் இந்த சமுகம் என்னை பயன்படுத்திக் கொள்ளும், இல்லை என்றால் அது என் கஷ்டம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இந்த சமுகத்தின் மீதான அக்கறை என்ன என்பதை கற்றது கையளவிடமோ, கணிதத்தின் மீதான என் திறமையை உங்களிடமோ நிருபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. இன்னும் சொல்ல போனால் பெயருக்கு பினால் வரிசையாக பட்டம் சூட்டிக் கொள்வதை நான் என்றுமே பெருமையாக நினைத்ததில்லை. பெயருக்கு பின்னால் உள்ள பட்டங்கள் தான் ஒரு மனிதன் இந்த உலகில் வாழ தகுதி உள்ளவனா என்பதை முடிவு செய்யும் என்பதில் எனக்கு எப்போதுமே உடன்பாடில்லை. என் பேருக்கு பின்னால் நான் பட்டம் போட்டு கொள்ளலாமா வேண்டாமா என்பதை பிறகு பார்க்கலாம். ஒரு சிறு வேண்டுகோள், தயவு செய்து உங்களை ஒரு மனிதர் என்று கூறிக் கொள்ளாதீர்கள். அது மிக அவமானமான ஒன்று , அதற்காக உங்களை நாய்,புனை,குரங்கு போன்றவற்றுடனும் உங்களை ஒப்பிட்டுக் கொள்ளாதீர்கள், அது அந்த பிராணிகளுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் ஒன்றும். அவைகள் எல்லாம் இரக்கமுள்ள திம்மிகள்.

     • The man who has retired from the bank have served in the rural/semi-urban/urban/metropolitan branches in TN and Mumbai.All along his long service of 37 years,moved closely with all types of customers,mostly from poor background,farmers,landless labourers,artisans,vegetable vendors,fruit vendors,Tiny sector and SSI sector people and provided them utmost financial assistance.Even after retirement,in the current assignment in a Finance company also, financing lower middle class people daily.Hence,well aware of the problems faced by these people and what could be the solutions to their problems.Naturally,he has empathy with these people.He will never behave like a sadist and just call all Tamilians as good for cooking idlies only.He is proud of Tamil literature and culture.He will not say that Tamil poetry should be removed from school syllabus.Some people think that they are economic experts and ALL IN ALL ALAGURAJAS.But when their faulty thinking is exposed,they call others as less knowledgeable persons.

  • நீங்கள் வணங்கும் இறைவன் ரோமானியர்களுக்கு எதிராக கண்டன அறிக்கை விட்டாரா ? எதிர்த்து போராடினாரா ? செயின்ட் பால் என்று நினைக்கிறன் , அவர்தான் இயேசுவின் இறப்பை ரோமானியர்களுக்கு எதிராக பயன்படுத்தலாம் என்று திட்டம் வகுத்து , ஏன் இறந்தார் என்பதற்கு ,உங்கள் பாவங்களுக்காக என்று ஒரு பதிலை கண்டு பிடித்து ,ரோம ராஜ்ஜியம் முழுதும் பயணம் செய்து ,ரோமர்களின் எதிர்ப்பை ஒன்று திரட்டினார் .அவர் இயசுவை பார்த்தது கூட இல்லை .

   • செயிண்ட் பால் எல்லாம் போகுறது இருக்கட்டும் இராமன். இதே திணமணி வைத்தி அப்துல் கலாம் பிணத்தைவைத்து, சுத்த சைவம் சாப்பிடுறவன் எல்லாம் சூப்பரா வருவான்னு சைவ அரசியல் பேசுனாரே எங்கடே போயிருந்தீக!

    அந்த பிணஅரசியல் கண்டிக்க துப்பில்ல! இங்க வந்து செயிண் பால்லுன்னு கதை அளக்கீரு! சேம் சேம் பப்பி சேம்!!

    • நான் வன்மையாக கண்டிக்கிறேன் .
     உணவு பழக்கத்தை வைத்து நல்லவனா கெட்டவனா என்று எழுதிய தினமணி வைத்தியை ,
     பார்பனனா என்று ஜாதி பார்த்து அவன் செயலை எடை போட்ட வினவை கண்டிக்கிறேன் .

 4. he should have hold Quran instead of GITA….Vinavu would have spared him….poor Kalam sir… he don’t know(want) this kind of cheap acting to get advertisement by speaking about minority….

 5. கலாமின் “உயர்ந்த மனிதர்” பிம்பத்தை அவர் கட்டியமைத்துக் கொண்டாரா அல்லது அவரது பேச்சும் செயலும் கல்வித்தந்தைகள் முதல் வாஜ்பாய் மற்றும் ஆர் எஸ் எஸ் கும்பல் வரையிலான அனைவரின் நோக்கங்களுக்கும் இயற்கையாகவே பொருந்தி போனதா என்பது ஆய்வுக்குரியது.இப்போது கலாம் என்பது உங்கள் கவிதையே சொல்வது போல அனைவருக்கும் நல்லவரான ஒரு நவீன மகாத்மா.அதை உடைத்து புரிய வைக்க ஒரு கேலிசித்திரமோ,எவ்வளவு தான் ஆழமான வரிகள் நிறைந்ததாக இருப்பினும் ஒரு கவிதையோ போதுமானதா என்பதை என்னால் நிச்சயமாக சொல்ல இயலவில்லை.இப்படி எழுதுவதால் இந்த கவிதையை நான் குறைத்து மதிப்பிடுவதாக ஆகாது.நான் வாசித்தவரை மே 17 இயக்க திருமுருகனது முகனூல் பதிவு தெளிவாக இருந்தது.அதனை விட விரிவாகவும் ஆழத்துடனும் வினவில் ஒரு பதிவு வரும் என நம்புகிறேன்.”சத்துணவு தந்த சரித்திர நாயகன்”,’மீனவநண்பன்”, “வள்ளல்” என்றெல்லாம் புகழப்பட்ட எம்ஜிஆர் அப்படியல்ல அவர் ஒரு சாடிஸ்ட் என்பதற்கு சென்னை மீனவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கி சூடு முதல் வடாற்காடு போலிமோதல் கொலைகள்,திரைத்துறையிலேயே அவரது அடாவடியான பழிவாங்கல்கள் வரை ஏராளமான தரவுகளை தந்து நிறுவ முடிகின்ற அளவிற்கு கலாமின் ‘ஆளுமையை’ உடைத்து உள்ளிருப்பதை காட்டுவது எளிமையானதல்ல. ஆனால் சாத்தியமற்றதும் அல்ல.

 6. ஆந்திரக்காட்டில் கரிக்கட்டயாய் கிடந்த இருபத்தியோரு உழைப்பாளிகள் == அவர்கள் செய்த
  உழைப்பு என்ன? யாருக்காக உழைத்தார்கள்? அவர்கள் உழைப்பினால் நாட்டுக்கு என்ன பலன்?

 7. First Man then only scientist,Modi was killed so many muslims at gujarat,why didnot asked questions to them and why he accept president post,our govt was done genoside at srilanga many tamils murdered ,why didnot asked questions to govt and rulars.Albert Einstein asked questions against to bad government and ruler.so kalaam very brilliant criminal future history will not be accepted.
  Selva,Chennai

  • இவ்வளவு பேசும் செல்வா அவர்களே,

   அந்த குஜராத் கலவரம் நடந்த பொது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?
   இலங்கையில் இறுதி போரில் தமிழர்கள் கொல்லப்படும்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்? இரண்டு நிகழ்வுகள் நடந்த போதும் அவர் ஜனாதிபதியாக இல்லை, உங்களையும் என்னையும் போன்ற சாதாரண பிரஜை தான்.

   சும்மா, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசிக்கொண்டிருக்காமல் உருப்படியாக ஏதாவது செய்யுங்கள்.

    • நீங்கள் போராடினீர்களா?

     இங்கு தமிழகத்திலிருந்தே குஜராத்தில் இருந்த குடும்பங்களை எப்படி போராடி காப்பாற்றினீர்கள்?
     எத்தனை குடும்பங்களுக்கு என்ன என்ன உதவிகள் செய்தீர்கள்?

     நீங்கள் கண்டித்தீர்களா?
     மோடி உங்கள் கண்டிப்புக்கு பயந்து கலவரத்தை நிறுத்தி விட்டாரா?

     பெரிய ஆள் ஐயா நீங்கள்.

     அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டில் எழுதி வைத்து கொண்டு பக்கத்திலேயே உட்கார்ந்து கொள்ளுங்கள். பின்னர் வரக்கூடிய சந்ததிகள் நீங்கள் குஜராத் கலவரத்தை கண்டித்தீர்கள், அதனால் மோடி நிறுத்தி விட்டார் என்று படித்து தெளிந்து கொள்வார்கள்.

     பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துரும்பு கூட இழைக்காதவர்கள் பேச வந்து விட்டார்கள்.

 8. //வயதான பிறகு தானுண்டு தன்னுடைய ஆராய்ச்சி உண்டு என இருந்தவரைப் பிடித்து ஜனாதிபதியாக ஆகுங்கள் என வாஜ்பாய் அழைத்த காரணத்தால் ஜனாதிபதி ஆனவர்.

  அய்யா அவருக்கு ஆராய்ச்சியின் மீது அளவு கடந்த ஆர்வம் இருந்தால் ,ஜனாதிபதி ஒரு வெட்டி வேலை என்னை உட்டுடுங்க சொல்லிருக்க வேண்டியதுதானே …..வாஜ்பாய் என்ன டெம்போ வச்சா கடத்திட்டா போனாரு
  இரண்டாவது ரவுண்டு வாயிப்பு கிடைக்குமானு பாத்துட்டு ,அதுக்கு வாயிபே இல்லையின்னு முடிவான கடைசியா மூட்டையை கட்டுனவர் .,திரும்பி வந்தும் ஒண்ணும் சீரியஸ் ஆராய்ச்சியில் செயல்பட்டமாதிரி தெரியவில்லை ,சீனியர் கோபிநாத் போல காலேஜ் ,பல்கலைகலகம்னு போய் பசங்ககிட்ட ,அம்பி ஒழுங்கா படி எவன் எக்கேடு போனாலும் நம்ம நல்ல படிச்சி முன்னுக்கு வந்தா போதும் என்ற சமுகத்தை உள்வாங்காத தனிமனித எழுச்சியை பரப்பிவந்தார் ,மக்களை மந்தபடுத்தும் நவீன கார்ப்பரேட் சாமியார்களின் வேலையை தான் செய்தார்

  //பிரதிபா பட்டேல், பிரணாப் ஆய்யோருடன் அப்துல் கலாமை ஒப்பிடுங்கள்.

  இவங்களோட ஒப்பிடுற மாதிரி ஒப்பிட்டு காந்தி (விமர்சனம் இருந்த போதும் ) ,அம்பேத்கர் போன்ற வரலாற்று ஆளுமைகளில் கொண்டு போய் கலாமை திணிக்க முயற்சி நடப்பதை நாம் அவர் அந்த அளவுக்கு வொர்த் இல்லன்னு சொல்லுறோம் .

  // மரண தண்டனையின் மீதான கருணை மனுக்கள் எதிலும் கையொப்பமிட மறுத்த தீரர்.

  இதான் இவரின் வெற்றி பூனைக்கு தோழன் பாம்புக்கு காவல்,மக்களோட மக்கள் இருப்பாரு அவங்க முன்னேற்றம் பத்தி பேசுவாரு ,ஆனா மூல சமூக பிரச்னையை பத்தி வாயை ட்கொரக்கமட்டரு அதே சமயம் ஆளும் கும்பல்கு ஒரு கஷ்டமான ஐர்ல ஜம்ப் அடிச்சி வந்து ,தெரியுதோ இல்லையோ போக்ஹ்ரன் வெற்றி ,fடி நல்லது ,பத்து நிமிஷம் ரவுண்டு அடிச்சிட்டு கூடன்குளத்துக்கு தரச்சான்று கொடுப்பாரு

  • சுந்தர்,

   அப்துல் கலாம் மாணவர்களை ஒழுங்காக படி என்று தான் சொன்னார்.
   எவர் எக்கேடு கெட்டாலும் படி என்று நீங்கள் குறுக்கு சால் ஓட்ட வேண்டாம்.

   சமூக பிரச்சினைகள் பற்றி திருவாளர் சுந்தர் பேசி பேசி சாதித்தது என்ன என்று அடியேன் அறிந்து கொள்ளலாமா? எத்தனை சமூக பிரச்சினைகள் திருவாளர் சுந்தர் அவர்கள் தீர்த்து வைத்தார் என்று அறிந்து கொள்ளலாமா?

   பேச்சு, பேச்சு ஒன்று தான் நம்மிடம் இருக்கிறது. செயலில்..
   அப்துல் கலாமை விமர்சிக்க தெரியும் சுந்தர் மக்கள் நலனுக்காக இது வரை செய்த அரும்பெரும் காரியங்களை பட்டியலிட முடியுமா? சும்மா, பேச வந்து விட்டார்கள்….

   • கற்றது கையளவுஅவர்களே, நம்ம ஊரில் ஒரு பண்பு, ஒன்றை விமர்சித்தால் ,நீ யர்ரு ஒனக்கு என்ன யோகிதை என்று வாயயை அடைப்பது .அப்படிஎன்றால் விமர்சன துறை என்ற தனி ஒரு கலை எதற்கு .டாஸ்மாக்க மூடுனா நீ யோக்கியமா ,பஹுபலி குப்பைனா , நீ என்ன படம் எடுத்து இருக்கே .

    அமரர் கலாம் அவர்களின் தனிப்பட்ட எளிய சுபாவம் ,அடிமட்டத்தில் இருந்து அவர் வளர்ச்சி ,உயர் நிலை அடைந்த உடன் எந்த சக்திகள் ,சமூக அமைப்புகள் அவருக்கு தடைகற்களை இட்டு இருக்குமோ இருந்திருக்குமோ அவற்றோடு சித்தாந்தரீதியில் சங்கமித்தல் , அரசு பாதுகாப்பு பொதுதுறை நிறுவனத்தில் அவர் பங்கு (குறிபிட்ட காலத்திற்கு பின்னல் அவர் பங்களிப்பு தொழிநுட்ப நிர்வாகம் அதிகமாக அறியபடுகிறது ),போக்ஹ்ரன்(அவர் அணு விஞ்ஞானி அல்ல ) ,திடீர் என்று ஒரு U டர்ன் , அரசயில் பதவி அதுவும் அலங்கார பதவி அதில் அவர் பங்களிப்பு , பின்பு 27 ஜூலை வரை.

    ஒருவரிரின் மரணத்திற்கு பிறகு யாராக இருப்பினும் நமது இரங்கலை தெரிவித்து விட்டு ,முதலில் அவர் வாழ்கை திறனாய்வுக்கு எத்தவரா என்று பார்கிறோம் ,நான் எல்லாம் அங்கயே அவுட்டு .

    அதனால் அவரை பற்றி முழுமையான ஆய்வை மேற்கொண்டு ,அவர்க்கு சரிதரித்தில் சரியான இடத்த கொடுங்கள் .அரசும் ,முதலித்துவ ஊடங்களும் உண்டாக்கும்….திணிக்கும் பொதுகருத்தை கொண்டு உருவாகப்படும் பிம்பங்கள் ,காலபோக்கில் அவர்களக்கு கொடுக்கப்படும் புனிதர்கள் பட்டம் ,இவற்றின் உள்ள அபத்தைதான் நான் பேசுகிறேன் .

    • மிக சரியான நடுநிலையான விமர்சனம் உங்களுடையது சுந்தர் . நன்றி

   • பாவம் செய்யாதவர்கள் கல்லேரியுங்கள் என்று சொன்ன அடுத்த கணமே , கூட்டம் கலைந்து விட்டதாம். இப்ப இல்ல சார் ,ரெண்டாயிரம் வருஷம் முன்னாடியே அப்படிதான் .

    • மக்கள் தான் அயோக்கியன்னு நீங்க மட்டும் இல்ல சார், உங்கள ஏவிவிடுகிற ஆளும் வர்க்கம் அரசு ஆரம்பித்ததில் இருந்து சொல்லிக்கிட்டுதான் இருக்காய்ங்க! என்ன ஒரு வித்தியாசம்! இந்த இராமன், கற்றது கையளவு போன்ற ஆள்கள் எல்லாம் விவாசயிகள் செத்தா அதுக்கு காரணம் மான்செண்டோ சட்டம் கிடையாது கலாம் கிடையாது; ஆனா காதல் தோல்வின்னு பேசுவாக!

 9. What type of an idiotic view expressed by the author of this horribly written poem with out any style or beauty. Vinavu should abandon its horrible anti brahmin venom one finds almost in each and every article. While I commend that many articles in Vinavu , are truly discussing important issues. the blatant anti brahmin statements are highly objectionable. Can Vinavu site even a single case of a Brahmin either breaking laws, practising or even speaking in favour of untouchability, spreading caste based venoms etc? Vinavu has not even reported the murder of Kabisthalam Brahmin priest by PMK workers leave alone condemning such attacks.

 10. உங்கள் கண்ணெதிரே அநீதி நடக்கும்போது
  அவற்றை கையால் தடுங்கள்,இயலாதபோது
  நாவினால் தடுங்கள் என்கிறது திருக்குரான்.
  இவர்???? வேறொன்றும் சொல்வதற்கில்லை.

  • ஐயா பஷீர்,

   அடுத்தவரை சொல்வதற்கு முன் நீங்கள் கையால், வாயால் தடுக்க வேண்டியது தானே? பாபர் மசூதி இடிக்கும் போதும், குஜராத் கலவரத்தின் போதும், இந்திராகாந்தி படுகொலை நடந்தபோது நடந்த சீக்கிய நண்பர்களின் படுகொலையின் போதும், சமீபத்தில் இலங்கையில் இறுதிப்போர் சமயம் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படும்போதும் நீங்கள் வேறு கிரகத்தில் இருந்தீர்களா? நீங்கள் உங்கள் கையால், வாயால் என்ன தடுத்தீர்கள்?

   சும்மா, வியாக்கியானம் பேசிக்கொண்டிருக்காதீர்கள் நண்பரே.
   அடுத்தவரை பற்றி பேசும் முன் நாம் என்ன செய்தோம் என்று கொஞ்சம் நினைத்து பார்ப்பது நல்லது.

 11. சமீபகாலமாக அப்துல் கலாம் அவர்களை பற்றி மிகவும் இழிவாக சித்தரிக்கும் வண்ணம் கட்டுரைகளும் பின்னூட்டங்களும் பதிவிடப்படுவதை கண்டு வருந்துகிறேன்.

  ஐயா, அவர் அரசியல்வாதி அல்ல, வெளிய கோஷம் போட்டுக்கொண்டு பின் மறைவாக கையூட்டு வாங்கும் நபர் அவரில்லை. அவர் தெருவில் இறங்கி போராடவில்லை என்று நீங்கள் கூறினால் நாட்டில் 99 விழுக்காடு மக்களும் அந்த வகையினை சேர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். அனைவரையும் திட்டி தீர்த்து விடுங்கள்.

  ஐடியல் மனிதர், என்று உலகில் எவரும் இல்லை. இருக்கும் மனிதர்களில் மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்க்கையில் ஒருவர் எப்படி தேறுகிறார் என்பதை பொறுத்து ஒருவரை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் கொள்கிறோம்.

  இந்தியாவில் ஜனாதிபதியாக 13 நபர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் என்னை பொறுத்தவரை இவரே மேலானவர் என்றே தோன்றுகிறது. பழைய ஜனாதிபதிகளின் காலத்தில் நான் வாழவில்லை. ஆகவே அவர்களை பற்றி சொல்ல முடியவில்லை. சமீப காலத்தில் ஜனாதிபதியாக இருந்த ஜெயில் சிங், வெங்கட்ராமன், கே.ஆர்.நாராயணன், பிரதீபா பாட்டில், தற்போதைய பிரணாப் முகர்ஜி, இவர்களோடு ஒப்பிட்டால் கலாம் எவ்வளவோ தேவலை. ஜனாதிபதி மாளிகையை விட்டு செல்லும்போது லாரி லாரியாக பரிசுப்பொருட்களை அள்ளிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளுடன் ஒப்பிடுகையில் இரண்டே சூட்கேசுகளோடு வெளியே வந்த அப்துல் கலாம் மேல் தான்.

  அப்துல் கலாம் குறித்து வினவில் கூறும் குற்றச்சாட்டுகளின் படி பார்த்தால் நாட்டில் ஒருவர் கூட அதில் தேற மாட்டார்கள். வினவில் கட்டுரை எழுதும் நண்பரில் இருந்து, அதில் பின்னூட்டம் இடும் நண்பர்கள் அனைவரும் தான். ஒருவரும் 1௦௦ சதவீதம் இல்லை. எல்லோரிடமும் சில நிறை குறை இருக்க தான் செய்கிறது.

  நாட்டில் நடக்கும் அநியாங்கள்,அனைத்துக்கும் அனைவரும் தெருவில் இறங்கி போராடுகிறோமா?

  பாஜக ஆதரவால், காங்கிரஸ் ஆதரவால் அவர் ஜனாதிபதி ஆனார். இருக்கட்டுமே. தற்போது பெரும்பானையான மக்கள் பாஜக ஆட்சிக்கு வாக்களித்தனரே.மிச்சம் இருப்போர் காங்கிரஸ், போலி கம்மியுநிஸ்ட்களுக்கும், மாயாவதி, முலாயம், லாலு, ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ போன்றோருக்கு வாக்களித்தனரே, அவர்கள் அனைவரையும் என்ன செய்ய போகிறீர்கள்?
  அனைவரையும் சுட்டு கொன்று விடலாமா? இல்லை ஒவ்வொரு மனிதர் இறக்கும் போதும் அவர்களை பற்றி கேவலமாக இழிவாக கட்டுரைகள், பின்னூட்டம் இட்டுக்கொண்டிருக்கலாமா?

  அவர் என்ன சொந்தபந்தங்களுக்கேல்லாம் கோடி கோடியாக சொத்து சேர்த்தாரா?அவர் மற்றவர்கள் போல சொகுசு வாழ்க்கையிலா இறந்து போனார்? ஐயா, இறக்கும் போதும் மாணவர்களுடன் உரையாடிக்கொண்டு தானே இருந்தார்.

  இலங்கை படுகொலை நடந்த போது அவர் ஜனாதிபதியாக இல்லை. அப்போது உங்களுக்கும், எனக்கும் இருந்த அதே நிலை தான் அவருக்கும். கையாலாகாத நிலை. நீங்களும் நானும் துப்பாக்கி ஏந்தி கொண்டு ராஜபக்சேவை ஏன் எதிர்த்து செல்லவில்லை. அதே நிலை தான் அவருக்கும். நிச்சயம் தமிழர்கள் படுகொலை அவருக்கு வருத்தம் அளித்திருக்கும். அதில் வேறு கருத்தே இல்லை. ஆனால் எல்லா விடயங்களுக்கும் தற்போதைய டிவிட்டர் பேஸ்புக் இளைஞர்கள் போல கருத்து கந்தசாமியாக கருத்து சொல்ல அவர் அரசியல்வாதி இல்லை. தனிப்பட்ட முறையில் நாட்டில் நடக்கும் எல்லா விடயங்களுக்கும் அவருடைய விருப்பு வெறுப்புகள் அனைத்தும் நமக்கு தெரியாத பட்சத்தில் அவர் கருத்து சொல்லவில்லை என்பதாலேயே அவரை எதிரியாக பாவிப்பது தவறு. இலங்கை விடயத்தில் அவர் வெளிப்படையாக சொல்லவில்லை என்றாலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு தண்டனை நிறைவேற்ற அனைத்து சந்தர்ப்பமும் இருந்தும் அவர் அதை செயல்படுத்தவில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே. இதிலிருந்து அவர் உள்மனதை பற்றி ஓரளவு நீங்கள் புரிந்து கொள்ளலாம்.

  ஒருவர் இறந்த பிறகு அவரை பற்றி இழிவாக பேசுவதை நாம் தவிர்ப்பது எதற்கு? நாம் அவ்வாறு பேசினால் அதனை மறுத்து கருத்து சொல்வதற்கு இறந்தவருக்கு ஒரு வாய்ப்பு இல்லை. அப்துல் கலாம் நல்லவர், எளிய மனிதர், ஊரை அடித்து உலையில் போடாதவர், என்னை பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த மனிதர். எத்தனயோ இளைஞர்களுக்கு உள்ளுக்குள் ஒரு எழுச்சியை உண்டாக்கியவர். அவரை பற்றி குறை கூறும் முன் நாம் அவரை குறை கூறும் அளவுக்கு அவரை மிஞ்சி விட்டோமா என்று ஆராய்ந்து பார்ப்போம் நண்பர்களே.

  உலகில் உள்ள எல்லோரை பற்றியும் கருத்து சொல்லும் கந்தசாமிகள் கொஞ்சம் நம்மை பற்றியும் நாம் சமுதாயத்துக்கு என்ன பயன் செய்தோம் என்றும் யோசித்து பார்த்தால் நல்லது.

  • அண்ணன் கக அப்துல் கலாம் நல்லவரா கெட்டவரா தெரியவில்லை இருந்தாலும் அவர் காசு பிடிங்கி பல்கலைக்கழகம் ,பொறியியல் கல்லூரிகளுக்கு எல்லம் சென்று உரையாற்றியது அவர்களின் பிஸினசை டெவலப்பன்னி விட்டது எல்லாம் எதுக்குனு விளக்குங்களேன் ,தனியார் மயமாக்கப்ப்டும் கல்வித்துறைக்கு எதிராக குரல் குடுக்க வேண்டாம் அட்லீஸ்ட் தனியார் கல்லூரிகளின் பிஸினஸ் டெவலப்மென்ட்டுக்கு உதவி செய்யாமலே இருந்திருக்கலாம் இல்லயா…

   • ஜோசப், நீங்களுமா?

    அப்துல் கலாம் அவர்களுக்கு மாணவர்களுடன் உரையாடுவது பிடிக்கும். அவரை விரும்பி அழைத்த கல்லூரிகளுக்கு அவர் சென்றுள்ளார். இதில் பிசினஸ் டெவெலப்மென்ட் என்ன உள்ளது. அப்துல் கலாம் இல்லை என்றால் வேறு ஒரு முக்கிய பிரமுகரை அந்த கல்லூரிகள் அழைத்திருக்க போகின்றன. அரசு கல்லூரிகளில் அவரை உரையாற்ற என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அரசு கல்லூரிகள் அவரை அழைத்து அவர் அதனை மறுத்த உதாரணங்கள் எங்காவது காட்ட முடியுமா?

    தவறு செய்தால் தட்டிக்கேளுங்கள். ஆனால் பொய்யான அவதூறுகளை வீசாதீர்கள் ஜோசப்.

    அவர் வருவதால் அந்த கல்லூரிக்கு பிசினஸ் கோடிக்கணக்காக குவியும் என்றால் அந்த கல்லூரிகள் கலாமிற்கு இந்நேரம் கோடிக்கோடியாக பணம் அளித்து அவர் கோடீஸ்வரர் ஆகி இருப்பார்.

    இறப்பதற்கு சிறிது நேரம் முன்பு கூட ஒரு பாதுகாப்பு அதிகாரிக்காக அவர் மனம் வருந்தியதை படித்திருப்பீர்கள். சாகும்போது அவர் கோடீஸ்வராராக சாகவில்லை. மாணவர்களுடன் உரையாற்றியபடியே இறந்தார்.

    தவறான வழிநடத்தப்பட்டு உள்ளீர்கள் ஜோசப்.

    • திரு.கற்றது கையளவு.. நீங்கள் மற்றவர்களின் கருத்துக்களுடன் ஜோசப் கருத்தை புரிந்து கொள்ள வேண்டாம் .. அப்துல் கலாம் பெயரில் முஸ்லீம் அடையாளம் உள்ளதே அதற்காக மட்டுமே வீசப்பட்ட விச அம்பு அது .. வேறு எந்த நல்ல நோக்கமும் கிடையாது ..

    • அண்ணன் ககை அப்துல் கலாம் போன்ற ஆராய்ச்சியாளர்கள் நம் நாட்டுக்கு செய்த ஆயுத கண்டுபிடிப்புகள் நம்க்கு பயன் தருபவை அதில் சந்தேகம் இல்லை எனக்கு, நமது மக்களின் பாதுகாப்பு முக்கியம் ஏவுகணைகள் மற்றும் ராக்கெட் ஆராய்ச்சியில் கலாம் அவரது சக விஞ்ஞானிகளின் கண்டு பிடிப்புகள் அவசியம், ஏனென்றால் இதே வினவில் பாகிஸ்தான் காரன் அனு குண்டு வச்சுறுக்கான் அவனிடம் வாய் சவுடால் விடும் அமைச்சர் என்ற ரீதியில் கட்டுரை படித்தாக நியாபகம் அதனால் நம் மக்களின் பாதுகாப்பை உருதி செய்ய ஆயுத ஆராய்ச்சி மட்டும் டெவலப்மென்ட் அவசியம் அதுக்காக் உழைத்த அப்துல் கலாமை பாராட்டலாம் ஜனாதிபதியாக்கி அழகு பர்த்தது எல்லாம் சரிதான் //இதில் பிசினஸ் டெவெலப்மென்ட் என்ன உள்ளது. அப்துல் கலாம் இல்லை என்றால் வேறு ஒரு முக்கிய பிரமுகரை அந்த கல்லூரிகள் அழைத்திருக்க போகின்றன.//தனது பிரபபல்ய்த்தை ஒரு சினிமாக்காரன் போல மற்றவர்கள் அதிலும் குறிப்பாக தனியார் கல்லூரிகளை பயன்படுதிக்கொள்ளவும் அதன் மூலம் அவர்கள் கொள்ளை அடிக்கவும் வழி வகை செய்தது மாணவர்களின் மேல் உள்ள அன்பினாலா இல்லை தனது பிரபல்யத்தை பயன் படுத்தி அவர்களும் காசு சம்பாதிக்கட்டும் நமக்கும் விளம்பரம் மட்டும் பொழுது போக்கு என்ற நப்பாசையா என்பதை அப்துல் கலாம் அரிந்தாறோ இல்லையோ நீங்கள் அறிந்து இருந்தால் சொல்லுங்களேன்…

 12. நான் இதற்கு முன்பு”அப்துல் கலாமின் உதடுகள் பேச மறந்தவை”…என்ற கேலிசித்திரத்திற்கு இட்ட பதிவினை மீன்டும் பதிவு செய்ய விரும்புகிறேன்.
  அதனை நிறைய தோழர்கள் கவனிக்கவில்லை.

  //அப்துல் கலாம் இந்தியாவின் ஆரம்பகால விஞ்ஞானி.
  சுதந்திர இந்தியாவின் முதற்கட்டமைப்பின் தலைவர்கள்,விஞ்ஞானிகள்.
  இவர்கள் அவர்கள் துறையின் தலைவர்களாக(Departmental Head,Project Directors etc)பொறுப்பாளர்களாக பதவியில் அமர்த்தப்பட்டனர்.
  இவர்களின் அப்போதைய தகுதி என்பது ஒரளவுக்கு இயற்பியல் சார்ந்த பட்டப்படிப்புடன் அப்போதைக்கு சீனீயர் என்ற முறையிலும்தான்.
  மற்றபடி இவர்கள் புதிய கண்டுபிடிப்புகளில்(Inventor or discoverer) வல்லவர் என்றோ நியமிக்கப்படவில்லை.
  இவர்களில் மிகுதியானவர்கள்(சத்திஷ்தாவன் போன்ற ஒரு சிலர் தவிர)
  அமெரிக்க உளவு மற்றும் விஞ்ஞாண,வின்வெளி நிறுவணங்களில் தொடர்பு ஏற்ப்படுத்திக்கொண்டு அவர்களுக்கு கொடுக்கப்பட்ட PROJECTS மற்றும் பனிகளை முடிந்தவரை நாசம்(FAILURE) அல்லது தாமதப்படுத்தீனார்கள்.
  திரு.அப்துல் கலாமும் இவர்களில் முக்கியமானவர் என்று இந்திய விஞ்ஞான உலகில் பரவலகா பேசப்பட்ட உண்மை.
  அதனாலயே அவரை ஜனாதிபதி பதவிக்கு முன்னெடுத்து செல்ல 1990 களில் எல்லா உயரிய பத்ம விருதுகளும் அளித்து தயார் செய்யப்பட்டார்.//

  • அளவுக்கு மீறிய அவதூறுகள்.

   இப்படிப்பட்ட அவதூறுகள் வீசும்போது அதற்கான ஆதாரங்களையும் சேர்த்து அளிக்க வேண்டும். சண்முகம் அவர்கள் ராஜபக்சேவுக்கு மாமா வேலை பார்த்தார் (ஒரு உதாரணத்திற்கு தான் சொல்கிறேன், தனிபட்ட முறையில் உங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு பகையும் முன்விரோதமும் இல்லை) என்று நான் அவதூறு கூறினால் அதற்கான தெளிவான ஆதாரத்தை நான் அளிக்க வேண்டும். அதை விடுத்து வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசினால் எந்த ஒரு பிரயோசனமும் இல்லை.

   அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை முடிந்தவரை நாசம் செய்தாரா???????????????

   அவர் நினைத்திருந்தால் அவரது அணு ஏவுகணை அறிவை இரானுக்கோ, வடகொரியாவிற்கோ விற்றிருந்தால் பெரும் பணக்காரராக இருந்திருப்பார். பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை செய்ததை தாங்கள் அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

   அவதூறுக்கும் ஒரு அளவு உண்டு. அதனை நீங்கள் மீறி விட்டீர்கள்.

   • குறைந்தபட்சம் அவருடைய ‘அக்னி சிறகுகள்’ படித்திரிக்கின்றீர்களா?

  • இது உங்களின் தவறான முன் முடிவு . இந்தியாவின் ஏவுகணை திட்டத்தை பொறுத்தவரையில் அது 100% வெற்றி . இதனை விரிவாக கூற வினவு இடம் அளிக்குமா என்று தெரியவில்லை.முயன்று பார்கின்றேன். கலாம் அவர்கள் படித்த பதிப்பு MIT யில் Aeronautical Engineering பற்றியது. அவர் அதில் Aerodynamics,Material Science என்று விமானம் தொடர்பான பல்வேறு பாடங்களையும் கற்றார். வேளையில் சேர்ந்த உடன் மிக எளிய செயற்கை கோள்களை வின்னிற்கு அனுப்பும் ராகெட்களை வடிவமைப்பதில் தேர்சி பெற்றார். பின்பு தான் அவர் இராணுவ ஏவுகணை திட்டத்துக்கு மார்றப்ட்ட்டார்.

 13. When Kalam was president he should have given Bharatha Rathna to Karunanidhi, T.R.Balu. Thirumavalavan, Krishnasamy AND Stalin. So we can not accept him as a good human being.

 14. கற்றது கையளவு அவர்களே
  எல்லாரையும் நீங்க என்ன செஞ்சீஞ்ங்கனு கேக்குறீங்களே… நாங்க என்ன ஜனாதிபதி பதவியிலயா இருந்தோம்?.. நாங்க செய்யுறதுக்கு..!அவர் விஞ்ஞானியா மட்டும் இருந்திருந்தா இந்தக் கேள்வியே எழுந்திருக்காது. பொது வாழ்க்கையில் ஈடுபட்டு ஜனாதிபதி பதவியில இருந்து அதிகாரத்த அனுபவிச்சதுனாலதான் அவருக்கு அந்த தார்மீக கடமை இருக்குன்னு சொல்றோம். இதுக்கு நீங்க பதில் சொல்லியே ஆகணும். அதவிட்டுட்டு சும்மா “நீ என்ன செஞ்ச”னு சொன்னதையே திரும்ப சொல்லி சப்பக்கட்டு கட்டக் கூடாது. நாங்க என்ன ஜனாதிபதி பதவியவா அனுபவிச்சோம்? நாங்க செய்யுறதுக்கு? நாட்டோட முதல் குடிமகன் அவர்தான். அதனால கட்டுரையாளர் சொன்ன பிரச்சினைகள் குறித்து முதல்ல அவர் என்ன செஞ்சார்?
  இன்னொரு விஷயம்.. ஜனாதிபதி பதவியை தேடிப்போய் குடுத்தாங்களாம். . இது உண்மையானு முலாயம் சிங் யாதவ கேட்டா தெரியும்னு வட இந்திய ஊடகங்கள் சொல்கின்றன.

  • அவர் ஜனாதிபதியாக இருந்தபோது மற்ற ஜனாதிபதிகள் என்ன செய்தார்களோ அவர்களை விட இவர் நன்றாகவே செய்தார். ஆனால் அவர் ஜனாதிபதியாக இல்லாத காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கெல்லாம் அவரை பொறுப்பேற்க வைக்க நினைப்பதை என்ன வென்று சொல்ல.

   முதலில் எல்லா விடயங்களுக்கும் கலாம் அவர்களின் கருத்து என்ன என்று தெரிந்து கொள்ள ஏன் இத்தனை பிரயத்தனப்படுகிரீர்கள்.அவர் அடிப்படையில் ஒரு விஞ்ஞானி. அரசியல்வாதி அல்ல. எல்லா விடயங்களுக்கும் கருத்து கந்தசாமியாக கருத்து சொல்வதற்கு ஏகப்பட்ட அரசியல்வாதிகள் உள்ளனர். அவர்களிடம் நீங்கள் போய் கேளுங்கள். கலாம் மேலே போய் விட்டார். இதற்கு மேலும் இதற்கு அவர் கருத்து தெரிவிக்கவில்லை, அதற்கு அவர் மெளனமாக இருந்தார் என்று சொல்வது சரியல்ல. இன்னும் சொல்லப்போனால் அவர் மெளனமாக இருந்ததால் தான் இன்று மூன்று தமிழர்கள் தூக்கில் தொங்காமல் இருக்கிறார்கள். புரிந்தவர்களுக்கு புரிந்தால் சரி.

 15. கற்றது கையளவு அவர்களே,

  எல்லோருடைய வாதத்திற்கும் ஆயத்த ஆடை போல் ஒரு விடை சொல்கிறீர்கள்.ஈழத்தமிழர்கள் இனக்கொலை,குசராத் படுகொலைகள்,மீனவர் கொலை,கல்விக்கொள்ளையர் கொள்ளை,என எதற்கும் கலாம் சுண்டு விரலையும் அசைத்தாரில்லை என விமர்சிப்பவர்களை ”நீ என்ன கிழித்தாய்’ என்ற ஒரே பதிலில் வாயடைக்க பார்க்கிறீர்கள்.ஆக கலாம் மக்கள் நலனுக்காக இன்னின்ன கிழித்தார் என்று உங்களால் சொல்ல முடியவில்லை.[யாராலும் முடியாது,எதையாச்சும் கிழிச்சுருந்தாதானே சொல்றதுக்கு ] .ஒன்றும் கிழிக்கவில்லை என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்கள்.

  சரி.இப்போது உங்க கேள்விக்கு வருவோம்.கலாமை விமர்சிக்கும் யாரும் நான் உட்பட இறந்து போகும்போது இத்தனை ”அனுதாப அலை ” பெருக்கெடுக்க போவதில்லை.இப்போது ஆளும் கும்பலும் அதன் ஊதுகுழல்களான ஊடகங்களும் அடிக்கும் வேப்பிலையில் அப்பாவி மக்கள் மயங்கி போய் சாமியாடுகிறார்களே,அத்தனை அனுதாபத்திற்கு உரியவர்தானா கலாம் என்பதுதான் கேள்வி.கலாமின் இறப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று சொல்கிறார்களே அது எந்த வகையில் மக்களுக்கு ஏற்பட்ட இழப்பு என விளக்க முடியுமா.அவர் வாழ்வுதான் மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது என்று சொல்ல முடியுமா.

  [தயவு செஞ்சு மாணவர்கள்ட்ட அன்பா பேசுனாரு,இளைஞர்களை கனவு காண சொன்னாரு 2020 ல் இந்தியா வல்லரசாகும்ன்னு ஆருடம் சொன்னாருன்னு நீங்களும் சொல்லிராதீங்க.கேட்டு கேட்டு காதுல குருதி வடியுது]

  கலாமின் இறப்பில் எனக்கும் ஒரு வருத்தமுண்டு.அவர் 2020 வரையாவது வாழ்ந்திருக்க வேண்டும்.அவரது வல்லரசு உளறலின் அபத்தத்தை ஓரளவுக்காவது மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பாயிருந்திருக்கும்.

  • கலாம் ஒன்றுமே செய்யவில்லை என்று ஒரே போடாக போட்டு விட்டீர்கள்.

   கண்ணை மூடிக்கொண்டு உலகம் இருண்டு உள்ளது என்போரை என்ன செய்ய முடியும்.

   2௦2௦ இல் இந்தியா வல்லரசாக ஆக வேண்டும் என்பது அவரது விருப்பம்.

   கலாமின் 2020 கனவை கிண்டல் அடிக்கிறீர்களே திப்பு, 1980 முதல் புரட்சி வரும், இதோ இனி வரும், நாளை வரும், என்று இயேசு பெருமான் விரைவில் பூமியில் தோன்ற போகிறார் என்று நமது கிருத்துவ போதகர்கள் சொல்வது போல புரட்சி வரப்போகிறது என்று கூறும் உங்களது கனவை யாராவது கிண்டல் அடித்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?

   அவரது ஆசை அது, உங்களது ஆசை இது.
   அவரது ஆசை நிறைவரலாம், நிறைவேறாமல் போகலாம்.

   தங்களது ஆசையும் நிறைவேறலாம், நிறைவேறாமலும் போகலாம்.
   அதனால் கனவே காண கூடாது, ஆசையே பட கூடாது என்று அனைவரும் சும்மா இருந்து விட முடியுமா நண்பரே?

   • கண்ணை மூடிக்கொண்டு இருட்டு என்பவர்கள் மீது உங்கள் ஞான ஒளியை கொஞ்சம் பாய்ச்சுங்களேன். இன்னின்ன வகையில் மக்களுக்கு பயனாக இருந்தது அவரது வாழ்க்கை என்று கொஞ்சமாவது சொல்ல முடியாததால் சாமர்த்தியமாக சமாளிக்க பாக்குறீங்க.சும்மா கலாம் அவரால முடிஞ்சத செஞ்சாருன்னும் ,குடியரசுத்தலைவர் பதவிக்கு உரிய வரம்புகள் பற்றியெல்லாம் வகுப்பு எடுக்குறீங்களே கண்டி சாதனைன்னு எதுவும் சொல்ல முடியல உங்களால.அப்படியானால் கே.ஆர்.நாராயணனும் S.D.சர்மாவும் இறந்த போது இல்லாத அழுகையும் கதறலும் கலாமுக்கு மட்டும் ஏன்.காரணம் பிறிதொரு பின்னூட்டத்தில் சொன்னதுதான்.காரணம் ஆளும் கும்பலின் நம்பகமான கையாள் கலாம்.நாற்றமெடுக்கும் இந்திய வல்லாதிக்க அரசு கொள்கைகளின் மீது பூசப்பட்ட மலிவான நறுமண திரவம் கலாம்.

    முடிஞ்சத செஞ்ச குடியரசுத்தலைவருக்கு,அரசு ஏவுன வேலையை செஞ்ச ஒரு ISRO பணியாளருக்கு உரிய மரியாதையை கொடுத்தால் போதும்.இம்மாந் தொலவு அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் தேவையில்லை.

    • உண்மை தான் திப்பு . AK 47 ஐ வடிவமைத்து இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் படையிடம் இருந்து காத்த ருஷ்ய வீரன் மிக்ஹைல் கலாஷ்நிகோவ் அவர்களுக்கு கொடுக்கப்படும் மரியாதையை நானும் இந்திய பாதுகாப்புக்காக அங்கினியை வடிவமைத்த ஒரு தமிழனுக்கு ,கலாமுக்கு கொடுக்கலாம் அல்லவா ?

     //முடிஞ்சத செஞ்ச குடியரசுத்தலைவருக்கு,அரசு ஏவுன வேலையை செஞ்ச ஒரு ISRO பணியாளருக்கு உரிய மரியாதையை கொடுத்தால் போதும்.இம்மாந் தொலவு அழுது ஆர்ப்பாட்டம் எல்லாம் தேவையில்லை.//

  • இது எல்லாம் கொஞ்சம் அதிகமான விமர்சம் திப்பு .! அவரின் மத்திய அரசு பணிகாலத்தில்[in ISRO and DRDO ] அவர் தன்னை ஈடுபடுத்திக்கொண்ட விண்வெளி , இராணுவம் ,சார்ந்த ஆய்வுகள் ,அதன் முடிவுகள் , அதன் இன்றைய பயன்பாடுகள் பற்றி வல்லரசு நாடுகளே[சீனா மற்றும் அமெரிக்கா ] இந்தியாவை பார்த்து அச்சம் கொள்கின்றன திப்பு . அவரின் குழுவின் முயற்சியில் உருவாக்கபட்ட அக்னி ஏவுகணை பீஜிங் வரை செல்லும் ஆற்றல் உடையது ,எதிரிக்கு அச்சம் அளிக்க கூடியது என்பதை எப்படி மறந்திர்கள் திப்பு பாய் ?

   கலாம் அரசு வேளையில் இருந்து ஓய்வு பெற்றதும் அவர் விரும்பியபடியே பள்ளிக்கூடம் தொடங்கிஇருக்கலாம் . அதனை விடுத்து பாதுகாப்பு ஆலோசகர் ,ஜனாதிபதி என்று ஓய்வு கால வாழக்கையில் அவர் பயணித்தது தேவையற்ற செயல். அவரிடம் இருந்த குணத்தையும் ,குறையையும் நாடி பாருங்களேன் திப்பு பாய் ! எடுத்தோம் கவிழ்த்தோம் என்ற விமர்சனம் எதற்கு ?

   //அவர் வாழ்வுதான் மக்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருந்தது என்று சொல்ல முடியுமா.//

   • \\அவரின் குழுவின் முயற்சியில் உருவாக்கபட்ட அக்னி ஏவுகணை பீஜிங் வரை செல்லும் ஆற்றல் உடையது ,எதிரிக்கு அச்சம் அளிக்க கூடியது //

    அண்டை நாடுகளை அச்சுறுத்தித்தான் ஒரு நாடு தனது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்.அப்பாவித்தனமாக ஆளும் வர்க்கத்தின் கள்ளப்பரப்புரைகளை நம்புகின்ற உங்களைப்போன்றோர் இரக்கப்பட வேண்டியவர்கள்.

    கலாம் கும்பலின் ஏவுகணைகளும் அணுகுண்டு வெடிப்புகளும் அண்டை நாடுகளுடன் ஆயுத போட்டியை கடுமையாக்கியதுதான் கண்ட பலன்.நாட்டின் முன்னேற்றத்துக்கு செலவிடப்பட்டிருக்கக் கூடிய பல இலட்சம் கோடி ரூபாய்களை இராணுவத்துக்கும் ஆயுத கொள்முதலுக்கும் வாரியிரைத்த [அதில் அடித்த கமிஷன் கொள்ளைகள் ஒரு புறம் இருக்கட்டும்] ஊதாரி கும்பலின் நம்பகமான கையாள்தான் கலாம்.நாற்றமெடுக்கும் இந்திய வல்லாதிக்க அரசு கொள்கைகளின் மீது பூசப்பட்ட மலிவான நறுமண திரவம்தான் கலாம்.

    • அண்டை நாடு என்று நீங்கள் அழைக்கும் சினா ஒன்றும் இந்தியாவின் நட்பு நாடு அல்லவென்பதை நீங்கள் அறிந்து ,இந்தோ-சினா போர் வரலாற்றை படித்து புரிந்து கொண்டு இருப்பிர்கள் என்று நம்புகிறேன். இந்தியாவின் பகை நாடான சீனா அணு ஆயுத ,கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை உற்பத்தியில் இந்தியாவிற்கு முப்பே தேர்சி பெற்ற நாடாக தான் உள்ளது. இத்தகைய சூழலில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அனுஆயுதமும் ,கண்டம் விட்டு கண்டம் அக்கினி ஏவுகணையும் அவசியமாகின்றது என்பதை நண்பர் திப்பு ஏன் உணர தவறுகின்றிர்கள் ?

     மேலும் இது வர்க்கம் சார்ந்த விடயம் அல்ல. தேசத்தின் பாதுகாப்பு பற்றியது. இந்தியாவில் எந்த வர்க்கம் ஆச்சியில் இருந்தாலும் இந்தியாவிற்கு அணு ஆயுதமும் , கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணையும் இந்தியாவிற்கு அதன் தேச பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் திப்பு பாய் .

     //அண்டை நாடுகளை அச்சுறுத்தித்தான் ஒரு நாடு தனது பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று நம்புகிறீர்கள்//

     • தற்போதைய காலகட்டத்தில் இயேசுநாதர் பாணியில் நீ ஒரு கன்னத்தில் அடித்தால் இன்னொரு கன்னத்தை காட்டினால் அதிலும் அடிப்பார்கள் திப்பு.

      கையில் ஆயுதம் இருக்கிறதென்று தெரிந்தால் அடிக்க வருபவன் சற்று யோசிப்பான்.

      இது உலக நியதி. இது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் என்ன சொல்ல…

      அஜ்மல் கசாப் துப்பாக்கியோடு அப்பாவி மக்களை கண்டபடி சுட்டபோது அவனிடம் அகிம்சை மொழியில் பேசி பயனில்லை என்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

      உங்கள் உண்மை எண்ணம் தான் என்ன? சீனா இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க ஆக்கிரமித்து இந்தியா சீனாவின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்பதா?

      பிலிப்பைன்ஸ் நாட்டில் கடற்பகுதியில் ஒரு பெரும்பகுதியை சீனன் ஆக்கிரமித்து விட்டான், தெரியுமா, தெரியாதா?

      • \\கையில் ஆயுதம் இருக்கிறதென்று தெரிந்தால் அடிக்க வருபவன் சற்று யோசிப்பான்.
       இது உலக நியதி. இது உங்களுக்கு விளங்கவில்லை என்றால் என்ன சொல்ல…//
       ஒப்பீட்டளவில் இந்தியா பாகிசுதானை விட இராணுவ வலிமையில் மிகைத்த நாடு.ஆனாலும் அவன் அத்துமீறி வந்து கார்கில் குன்றுகளை ஆக்ரமித்தானே அதுவும் நீங்க பொக்ரான்ல அணுகுண்டு வெடிச்ச ஆறுமாசத்துக்குள்ளார .உங்கள் ஆயுத வலிமை அவனை தடுக்கவில்லை.
       அப்புறம் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இருந்த நாடு சிக்கிம்.அந்த நாட்டை இராணுவ வலிமையில் இந்தியாவை மிகைத்த சீனா ஆக்கிரமித்து விடவில்லை.நீங்கதான் அந்த நாட்டையே ஆட்டைய போட்ருக்கீங்க.
       ஆகவே ஆயுத வலிமையே பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்ற உங்களது புரிதல் தவறானது.நாட்டின் பாதுகாப்பு உண்மையில் அரசின் கொள்கைகளிலும் அரச தந்திரத்திலும் தங்கியிருக்கிறது.புரிந்து கொள்ளுங்கள்.
       கத்தி எடுத்தவனுக்கு கத்திலதா சாவு ன்னு ஒரு பழமொழி உண்டு.இது தனி மனிதர்களுக்கு மட்டுமல்ல நாடுகளுக்கும் பொருந்தும்.

       • \\சீனா இந்தியாவை கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க ஆக்கிரமித்து இந்தியா சீனாவின் ஒரு பகுதி ஆக வேண்டும் என்பதா?//

        மாவோவின் மக்கள் சீன குடியரசு ஆட்சிக்கு வந்தவுடன் எல்லைகள் குறித்த அனைத்து வெளிநாட்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்தது.ஏனெனில் அவையெல்லாம் அநியாயமாக வலுவீனமாக இருந்த அந்நாட்டின் மீது திணிக்கப்பட்டவை.சீனாவுக்கு பதினான்கு நாடுகளுடன் எல்லை உள்ளது, தனது அத்தனை அண்டைநாடுகளுடனும் எல்லையை வரையறுத்துக் கொண்டுவிட்டது மக்கள் சீனம்.அவர்களுக்கு எல்லை பிரச்னை உள்ள ஒரே நாடு இந்தியாதான்.இதன்னியில் தெற்கு சீன கடல் பகுதியில் வியட்நாமுடன் பிரச்னை உள்ளது.
        நிற்க.

        மக்கள் சீனம் உருவான அதே கால கட்டத்தில் போலி விடுதலை அடைந்த இந்தியாவுக்கு ஏழு நாடுகளுடன் எல்லை உள்ளது,இந்தியாவுக்கு எல்லைப்பிரச்சனை இல்லாத அண்டை நாடே கிடையாது.அப்படியானால் யார் சரியான முறையில் நடந்து கொள்கிறார்கள் என்று புரிகிறதா.

        பி.கு.

        வியட்நாம் -சீனா சண்டையிலயும் இந்தியா மூக்கை நுழைக்கிறது.தெற்கு சீன கடல் பகுதியில் பெட்ரோல் எடுக்க துரப்பண பணிகள் மேற்கொள்ள வியட்நாமுடன் இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது.ஆக யார் வம்பு சண்டைக்கு அலையுறாங்கன்னு புரிகிறதா.

        • திப்பு,

         அநியாயத்துக்கு சீனாவுக்கு சொம்படிக்கிறீங்க. சீனாவுடன் இந்தியாவுக்கு மட்டும் தான் எல்லை பிரச்சினை உண்டா, மற்ற நாடுகளுடன் சீனாவுக்கு எல்லை பிரச்சினையே இலையா?

         வடகொரியா – சீனா : பைக்டு மலைப்பகுதி
         பூடான் – சீனா : செர்கிப் கோம்பா, தோ, துங்க்மார், கேசூர், கெசான், இத்சே கோம்பா, கொச்சார், நையான்ரி, ரிங்குங், சன்மார், தார்சேன், ஜூதுள்புக் பகுதிகள்
         இந்தியா – சீனா : அக்சாய் சீன் (China Occupied Kashmir), அருணாச்சல் பிரதேசம்
         வடகொரியா, தென்கொரியா – சீனா : ஜியண்டோ பகுதி
         வியட்நாம், தைவான் – சீனா : மக்கல்ச்பீல்டு படுகை பகுதி, பாராசெல் தீவு, ஸ்ப்ராட்லி தீவு,
         பிலிப்பைன்ஸ் – சீனா : ஸ்கார்பொரோ பகுதி
         ஜப்பான் – சீனா : சென்காகு தீவு
         பாகிஸ்தான் – சீனா : கில்சித் பல்திஸ்தான்
         ரசியா – சீனா : போல்ஷாய் தீவு
         பர்மா – சீனா : கச்சின் மாநிலம்

         சீனா அமைதியை விரும்புகிறதா????

         நான் தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் தான் உள்ளேன். உள்ளூர் மக்கள் சீனாவின் அட்டூழியங்களை கண்டு கொந்தளித்து வருகிறார்கள். அவர்களது மீனவர்களை சீன கடற்படை சுடுகிறது. பிலிப்பைன்ஸ் எல்லைக்குள் மண்ணை கொட்டி ஒரு செயற்கை தீவை உருவாக்கி அங்கு சீன கடற்படை தளம் அமைத்துள்ளது.

         கொஞ்சம் கம்மிகளின் செய்திகளை தாண்டி உலக விடயங்களையும் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

         காவிகளும் சரி, கம்மிகளும் சரி, அவர்களுக்கு வேண்டிய செய்திகளை மட்டுமே படித்து கொண்டு உலகம் அப்படித்தான் என்று நினைத்து கொள்கிறார்கள்.

         உலகம் மிகப்பெரிது. கொஞ்சம் கண்ணையும் மனதையும் திறந்து பாருங்கள்.

         • நமது பக்கத்து ஈழத்து நாட்டிலும் தான் அமெரிக்காகாரனும் சீனாக்காரனும் சேர்ந்து கொண்டு சண்டை போட்டான். அதை கலாம் முதற்கொண்டு கலாம் ரசிகர்களும் சேர்ந்தே ரசித்தார்கள். தற்போதுவரை இந்த துரோகத்திற்கு பதில் சொல்லதுப்பில்லை. ஆனால் சீனா எல்லைச் சண்டை என்று பிலிப்பைன்சை எல்லாம் எடுத்துக்காட்டி வாதிடுகிறார்கள். இது அவர்களை அம்பலப்படுத்த போதுமானது.

          அதே சமயம், நாப்பாம் குண்டுகளை வீசி தான் ஒரு வெறி நாய் என்று காட்டிக்கொண்ட அமெரிக்காகாரனை விட்டுவிட்டு வியட்நாம் என்று கதறுவது அசிங்கம்.

          காரணம் என்னவென்றால் இந்தப்பித்துக்குளிகளுக்கு சீன, அமெரிக்க, ரசிய, சப்பானிய ஏகாதிபத்தியங்களின் கொடூரங்கள் தெரியாது. ஆனால் அப்படிக்காட்டிக்கொண்டே, பெய்ஜிங்கிற்கு பொறுக்கித்தின்ன போய்விடுவார்கள். மணிலாக்காரனுக்கு தெரிந்தால் துடைப்பக்கட்டையால் அடித்து விரட்டுவார்கள் கற்றது கையளவை.

          பிசினஸ் பாக்கப்போறவனுக்கு வாழ்க்கையிலும் விழுமியங்களும் கிடையாது மதிப்பீடுகளும் கிடையாது. இதில் பெய்ஜிங் போகிற கற்றது கையளவிற்கு பட்டியல் ஒரு கேடா? இதில் கம்மிகள் காவிகள் என்று கவி வேறு. அசிம் பிரேம்ஜி ஆர் எஸ் எஸ்ஸுக்கு படியளந்துவிட்டு தேசப்பக்தி வேசம்போட்டதைப்போல் உள்ளது. பார்த்து வாலிபரே! நாறப்போகிறது!

          • No Substance. வெறும் பிதற்றல்.

           அதே மணிலா காரனும் தான் சீனாவுக்கு பணி நிமித்தமாக செல்கிறான். ஐயா தென்றல் சீனா பிலிப்பைன்சில் அடாவடித்தனமாக ஆக்கிரமிப்பு செய்வதை மறைத்து விட்டு அமெரிக்காவிற்கும் ஈழத்திற்கும் வியட்நாம்ர்கும் தாவுகிறீர்கள். நடத்துங்கள். சரக்கு தீர்ந்து விட்டது தெரிந்து விட்டது.

           அடாவடித்தனம் செய்வது சீன இராணுவம், சீன அரசு இவற்றுக்கு நீங்கள் ஆதரவு தெரிவிப்பீர்கள், ஆனால் எங்களை போல சீன மக்களுடன் இனைந்து பணியாற்றுபவர்களை பொறுக்கித்தின்னி என்று கூறக்கூடிய திமிர் உங்களுக்கு இருக்கிறது. ஆமாம், ஒசித்தின்னிகளுக்கு உழைத்து தின்பவர்களை கண்டால் பொறுக்கித்தின்னி என்று தான் திமிர் தனமாக பேச தோன்றும்.

           திப்பு சீனாவுக்கும் இந்தியாவுக்கும் மட்டும் தான் பிரச்சினை என்றார். அதற்கு சீனாவுடன் மற்ற நாடுகளுக்கு இருக்கும் எல்லை பிரச்சினைகள் எல்லாவற்றையும் தெளிவாக பட்டியலிட்டேன். பின் மேஜர், மைனர் பிரச்சினை என்று டெக்னிகல் சந்து பொந்துக்குள் அவர் ஒளிய பார்த்தார். பின் பிலிப்பைன்ஸ் நாட்டில் தற்போது மேஜராக ஒரு அடாவடித்தனத்தை சீனா நிகழ்த்தியதையும் விளக்கினேன். இப்போது அவரிடம் இருந்து பதில் வருவதற்கு முன் நீங்கள் வம்படியாக நானும் ரவுடி தான் என்று கூறிக்கொண்டே நான் கூறிய கருத்தினை திசை திருப்பி பாஜக, ஆர்எஸ்எஸ் என்று மடை மாற்றுகிறீர்கள். ஸ்டார்ட் மியுசிக்….

       • கத்தி எடுத்தவனுக்கு கத்தியல் தான் சாவு.
        ஆனால் பாதுகாப்புக்காக உறைக்குள் கத்தியை வைத்திருப்பவனுக்கு அது பாதுகாப்பு.

        ஒரு கன்னத்தில் அடித்தவனுக்கு மறு கன்னத்தை காட்டும் காலம் மலையேறிவிட்டது.

        அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாது என்று தெளிவாக விளக்கிய பின் உங்கள் விமர்சனம் தேவையில்லாதது.

        • அணு ஆயுதத்தை இந்தியா முதலில் பயன்படுத்தாதாம். சரணடைந்தவனை தூக்கில் போட்ட தொடை நடுங்கி இந்திய அரசாங்கம், அப்சல் குருவை நசுக்கிவிட்டு அசீமானந்தாவை சாமீனில் விட்ட இந்திய ஆளும் வர்க்கம், அணுகுண்டு என்று பீதியிட்டுகிறதாம். பாத்துங்கப்பு. பத்திரமா வைச்சுங்க. அப்புறம் பாகிஸ்தான் நாய்கள் மோண்டுவிட்டு அணுகுண்டு நமத்துப்போச்சுன்னு அத்வானி தலைமையிலே மதச்சண்டைய கிளறாதீக! அது சரி இதெல்லாம் பொறுக்கித்தின்னிகளுக்கு தெரியுமா க.கை?

         • தென்றல்,

          ஊர் ஊராக சுற்றுகிறேன். இல்லை என்று மறுக்கவில்லை. ஆனால் அதே சமயம் என் உழைப்பில் நான் உண்கிறேன். நான் உண்ணும் ஒவ்வொரு பருக்கை சோறிலும் என் உழைப்பு உள்ளது. இன்னொருவரின் நன்கொடையில் என் வாழ்வு ஓடவில்லை. உங்கள் மனசாட்சியை கேளுங்கள், உண்மையான பொறுக்கிதின்னி யார் என்பது உங்களுக்கே தெரியும். நான் விளக்க வேண்டிய அவசியமே இல்லை. இனியும் நீங்கள் என்னை பொறுக்கித்தின்னி என்று அவதூறு பரப்பினால் நானும் உங்களை “ஓசி தின்னி” என்று கூற வேண்டியதிருக்கும். நான் எப்போதும் இது போன்ற பேசுவதில்லை, ஆனால் பொறுமைக்கும் எல்லை உண்டு. நீங்கள் பேச வைக்கிறீர்கள் தென்றல். வாழ்த்துக்கள். உங்கள் அளவுக்கு என்னை தரம் தாழ்த்தி பேசுவதில் வென்று விட்டீர்கள்.

         • \\பாதுகாப்புக்காக உறைக்குள் கத்தியை வைத்திருப்பவனுக்கு அது பாதுகாப்பு.//

          வாதத்திற்கு பதில் சொல்லாத போங்காட்டம் இது.இந்தியாவிடம் அணுகுண்டு இருப்பது தெரிந்தும்,பொக்ரான் 2 அணுகுண்டு சோதனைக்கு பின் ஆறே மாதத்தில் பாக்.அத்துமீறி வந்து கார்கில் குன்றுகளை ஆக்ரமித்து ஒரு போருக்கு வித்திட்டதை,அதாவது ஆளும் வர்க்கங்களும் அதன் ஏவல் எடுபிடிகளும் பீற்றிக்கொள்வது போல அணுகுண்டு தடுப்பரணாக [deterrent] இருக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறேன்.அப்புறமும் உறை கத்தி பாதுகாப்பு என பம்மாத்து காட்ட வேண்டாம்.அது துப்புகெட்டதனம்.உங்களுக்கு வக்கு இருந்தால் இந்திய அளவிலாகட்டும்,அல்லது உலகளவிலாகட்டும் அணுகுண்டு ஆக சிறந்த தடுப்பரணாக செயல்பட்டிருக்கிறது என்று எடுத்துக்காட்டு தந்து விளக்குங்கள் பார்ப்போம்.

          உங்கள் அணுகுண்டுகளும் நீங்கள் மலை மலையாக குவித்து வைத்துள்ள ஆயுதங்களும் இந்திய பாக். எல்லையில் அமைதியை கொண்டு வர முடியவில்லை என்பது தெளிவாகி விட்டது.கார்கில்களும் ,இந்திய -பாக்.போர்களும் தொடர்கதையாகாமல் இருக்கவும்,இந்திய பாக். எல்லையில் நிரந்தரமாக அமைதி நிலவவும் நான் ஒரு வழி சொல்கிறேன்.இன்னொரு முறை துரோகி என நீங்கள் பாய்ந்து குதறினாலும் பரவாயில்லை.எம் நாட்டு மக்கள் நலனில் அக்கறை இருப்பதால் இதை சொல்லித்தான் ஆக வேண்டும்.

          காசுமீர் குறித்த ஐ.நா.தீர்மானம் சொல்கிறபடி காசுமீரிலிருந்து இந்தியா படைகளை விலக்கி கொள்ள முன் வர வேண்டும். பாகிசுதானும் படைகளை விலக்கிக் கொள்ள பன்னாட்டு சமூகம் மூலம் அழுத்தம் தர வேண்டும்.ஐ.நா.பார்வையாளர்கள் கண்காணிப்பில் இரு நாட்டு படைகளும் ஒரே சமயத்தில் காசுமீரிலிருந்து விலகி கொண்ட.பின் துப்பாக்கியின் நிழல் படியாத காசுமீரில் அமைதியான சூழலில் ஐ.நா.மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.இந்தியாவுடன் சேர்வதா,பாக்குடன் சேர்வதா,தனிநாடாக போவதா என்பதை அந்த மக்கள் முடிவு செய்யட்டும்.

          இதுதான் இந்தியாவின் மேற்கு எல்லையில் அமைதி நிலவுவதற்கான வழி.கட்டுச்சோத்துல பெருச்சாளிய வச்சு கட்டுன கதையா இருக்கு காசுமீர் பிரச்னையை தீர்க்காம இழுத்துக்கிட்டு கிடக்குறது.

          • எதிராளி முழு ஆயுத பலத்துடன் இருக்கும்போது நாம் நிராயுதபாணியாக இருப்பது அவ்வளவு உசிதமான செயல் அல்ல. அதுவும் பாகிஸ்தான் சீனா போன்ற அண்டை நாடுகளை வைத்துக்கொண்டு இந்தியா அமைதிப்புறாவாக இருப்பதாக காட்டிக்கொண்டால் அது பேராபத்தில் தான் முடியும். ஆயுதம் இருக்கும்போதே இத்தனை ஆட்டம் போடும் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ., ஆயுதம் ஏந்தாத நாடு இந்தியா என்று தெரிந்தால் இன்னும் என்னென்ன வேலைகள் செய்யும்? யோசியுங்கள்.

           உலக நாடுகள் கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் அடங்கி ஒடுங்கி விடுமா?
           என்ன காமெடி செய்கிறீர்கள் திப்பு.

           பின் லாடன் பாகிஸ்தானில் இல்லவே இல்லை. தாவூத் இப்ராகிம் இந்த பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பில் பிடிபட்ட அஜ்மல் கசாப் பாகிஸ்தானிலிருந்து செல்லவில்லை. ஹபீஸ் சையதிற்கும் மும்பாய் குண்டுவெடிப்புக்கும் சம்பந்தமே இல்லை. இதெல்லாம் தங்களது பாசத்துக்குரிய பாகிஸ்தான் நாட்டு அரசு கூறிய கருத்துக்கள்.

           உலகை ஏமாற்ற பாகிஸ்தானின் அரசு (இராணுவம் & ஐ.எஸ்.ஐ) உலக நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அமைதியான சூழலில் காஷ்மீர் இருக்க உதவிடுமா என்ன?

          • \\நிராயுதபாணியாக இருப்பது//

           நீங்க தண்டாயுதபாணியாவே இருந்துக்கங்க.ஆனால் ஆயுதங்களும் அணுகுண்டுகளும் அமைதியை கொண்டு வர முடியவில்லையே .அதுக்கு என்ன சொல்றீங்க.தண்டாயுதத்தை தூக்கிட்டே திரிஞ்சு எப்படி அமைதியை கொண்டு வர போறீங்க. அதை சொல்லுங்க நாங்களும் தெரிஞ்சுக்கிறோம்.

           \\உலக நாடுகள் கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் அடங்கி ஒடுங்கி விடுமா?//உலகை ஏமாற்ற பாகிஸ்தானின் அரசு (இராணுவம் & ஐ.எஸ்.ஐ) உலக நாடுகளின் கட்டளைக்கு அடிபணிந்து அமைதியான சூழலில் காஷ்மீர் இருக்க உதவிடுமா என்ன?//

           கார்கில் போர் எப்படி முடிவுக்கு வந்ததுன்னு சொல்ல முடியுமா.இதை படிச்சுப்பாருங்க.

           .http://www.telegraphindia.com/1140922/jsp/frontpage/story_18859867.jsp#.VdIo3rKqqko

           அடி தாங்க முடியாம அமெரிக்க எசமான்ட்ட உங்களவா ஓடிப்போய் பாக்.ராணுவத்தை விலக சொல்லுமாறு கெஞ்சி கூத்தாடியதெல்லாம் வெளி வந்து நாறுவது உங்களுக்கு தெரியாதா.அதுவும் 56 அங்குல மார்பு கொண்ட வீரரே ”என் கால்கட்டை மட்டும் அவிழ்த்து விட்டுப்பார்,உன் காலில் விழுந்து கெஞ்சுவேனடா ”என்ற 23 ஆம் புலிகேசியை எல்லாம் விஞ்சும் வண்ணம் அமெரிக்க அம்பிகளை எசமானுக்கு கடிதம் போட்டு கெஞ்ச சொன்னதெல்லாம் உங்களுக்கு தெரியாதா..

           இப்படி ஒரு அரசியல் தற்குறியாய் இருந்துகிட்டு காமடி பண்றேன்னு என்னை கிண்டல் பண்றீங்களாக்கும்.

           அப்புறம் பின் லாடன்,தாவூத் இப்ராகிம் ,பாகிசுதான் யோக்கியதை எல்லாம் தெரிந்ததுதான்.ஆனாலும் அவனுடன் எப்படி அமைதிப் பேச்சு நடத்துறீங்க.இரு தரப்பு ஒப்பந்தங்கள் போடுறீங்க.Most favoured state status கேட்டு அவனிடம் குழைந்து கொஞ்சிக்கிடப்பது ஏன்.குழாயடி சண்டை மாதிரி,வரப்பு தகராறு மாதிரி நாடுகளுக்கிடையேயான உறவையும் பகையையும் நெனைக்கிறீங்க போல இருக்கு..பன்னாட்டு உறவுகளில் நாடுகள் எப்படி நடந்து கொள்கின்றன என்று கொஞ்சம் விவரம் தெரிஞ்சுகிட்டு வாங்க.

          • சுட்டியில் எழுத்துப்பிழை ஏற்பட்டு வேலை செய்யவில்லை.சரியான சுட்டி.

           http://www.telegraphindia.com/1140922/jsp/frontpage/story_18859867.jsp#.VdKha7Kqqkq

           கார்கிலிலிருந்து பாக்.படைகளை விலக செய்ய பன்னாட்டு சமூகத்தால் முடியும்போது அதே வழியில் காசுமீரை விட்டு விலக வைக்க ஏன் முடியாது.அதற்கு இரு தரப்பும் இறங்கி வர வேண்டும்.ஒருவர் பொறை இருவர் நட்பு.

    • சுயசார்பு உள்ள, சொந்த தொழில் நுட்பத்தில் நம் சொந்த முதலீட்டில் உற்பத்தி செய்யபடும் ஏவுகணைகளுக்கும் அதனை ஆய்வு செய்து கண்டுபிடித்த கலாமுக்கும் சலாம் போடுவதை விடுத்து பன்னாட்டு ஆயுத உற்பத்தி நிறுவனங்களில் இருந்து ஆயதங்களை இறக்குமதி செய்யும் இன்றைய ,நேற்றைய காங்கிரஸ் ,பிஜேபி அரசுகளின் நடவடிக்கைகளுக்கு கலாம் எப்படி பொறுப்பாக முடியும் திப்பு பாய் ? கற்றது கையளவு வலது முனையில் இருந்து கலாமை கண் மூடி தனமாக ஆதரிக்கின்றார். அதே நேரத்தில் நீங்கள் இடது மூலையில் இருந்து கலாமை வரட்டு தனமாக எதிர்கின்றிர்கள்.

     //நாட்டின் முன்னேற்றத்துக்கு செலவிடப்பட்டிருக்கக் கூடிய பல இலட்சம் கோடி ரூபாய்களை இராணுவத்துக்கும் ஆயுத கொள்முதலுக்கும் வாரியிரைத்த…..

    • ஒரு பக்கம் ஆயுத கொள்முதலை எதிர்கின்றிர்கள் . மறுபக்கம் சுயசார்புடன் ,சுய தொழில் நுட்பத்தில் உருவாக்க பட்ட ஏவுகணைகளையும் எதிர்கின்றிகள்.100 கோடி மக்களுக்கு மேல் வாழும் இந்தியாவில் அதனை எந்த வர்க்கம் ஆண்டு கொண்டு இருந்தாலும் ,தேசத்தின் பாதுகாப்புக்கு சுயசார்புடன் ,சுய தொழில் நுட்பத்தில் உருவாக்க பட்ட ஏவுகணைகள் வேண்டாமா ?

  • //ஆக கலாம் மக்கள் நலனுக்காக இன்னின்ன கிழித்தார் என்று உங்களால் சொல்ல முடியவில்லை.[யாராலும் முடியாது,எதையாச்சும் கிழிச்சுருந்தாதானே சொல்றதுக்கு ] .ஒன்றும் கிழிக்கவில்லை என்று மறைமுகமாக ஒப்புக்கொள்கிறீர்கள்.//

   நாட்டிற்கு அவருடைய பங்களிப்பு என்ன ய்ந்பது க்கூடபுரியாமல் உளறுகிறார்கள் .

   ஒரு சினிமாவிலாவது அவர் நடித்து இருந்தால் ஒரு வேலை இதுகளுக்கு புரிந்து இருக்குமோ

 16. \\தனிப்பட்ட முறையில் நாட்டில் நடக்கும் எல்லா விடயங்களுக்கும் அவருடைய விருப்பு வெறுப்புகள் அனைத்தும் நமக்கு தெரியாத பட்சத்தில் அவர் கருத்து சொல்லவில்லை என்பதாலேயே அவரை எதிரியாக பாவிப்பது தவறு//

  அரசுப்பணியாளராக இருந்தவரை வேண்டுமானால் அவருக்கு தனிப்பட்ட முறையில் கருத்து கொண்டிருக்க உரிமை இருக்கின்றது.ஏனென்றால் அரசின் கொள்கை முடிவுகளை எடுப்பதில் ஒரு பணியாளர் செல்வாக்கு செலுத்த முடியாது.

  ஆனால் கலாம் பாதுகாப்பு,துறையில் விண்வெளி ஆய்வு துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரியாக ஆன பின்,பொது வாழ்வுக்கு வந்து விட்ட பின்,அரசுத்தலைவராக வந்த பின் ,தனிப்பட்ட கருத்து கொண்டிருப்பதாக சொல்வதே மோசடி.அரசின் முடிவுகள் அத்தனையையும் அமுல் படுத்தும் ஒருவர் அதற்கு எதிராக கருத்து கொண்டிருக்க கூடும் என்று காதில் பூ சுற்ற வேண்டாம்.

  • திப்பு,

   பாதுகாப்பு துறை, விண்வெளி ஆய்வுத்துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரியாக ஆனா பின் அவர் அந்த துறை சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசின் வழி நடப்பது இயல்பு. இதனாலேயே தனிப்பட்ட அளவில் அவர் எல்லா அரசு விடயங்களுக்கும் தார்மீக ரீதியாக ஆதரவு கொடுக்கிறார் என்று எப்படி நீங்கள் கருத்தில் கொள்ளலாம். தனிப்பட்ட அளவில் அவர் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளித்ததாக எனக்கு தெரியவில்லை.

   ஜனாதிபதியாக அவர் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட அரசு முடிவுகளில், அவர் கையொப்பமிட்ட சட்டங்கள் அனைத்திற்கும் அவர் பொறுப்பேற்க முடியும்.

   ஆனால் ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்பும், பதவியில் இருந்து விலகிய பின்னும் எடுக்கப்பட்ட எந்த ஒரு அரசு முடிவுக்கும் அவர் பொறுப்பாக முடியாது.

   தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவாகவோ, எதிராகவோ அவர் நடந்து கொள்ளவே இல்லை. அவர் மறைவிற்கு அனைத்து வர்க்கத்தினரும் வருத்தம் தெரிவித்தது அவரது அரசியல் ஆதரவினால் அல்ல, அவர் மேல் இருக்கும் அன்பினால்.

   • Ref : தென்றலின் கருத்து எண் 2.1.1.1

    கீழ்க்கண்ட [கலாம்] துரோகங்களுக்கு என்ன பதில்? -தென்றல்

    என்ற தலைப்பில் இதை தானே வலியுறித்தி கூறுகின்றது . இதற்கு கலாம் சார்பாக உங்கள் பதில் என்ன கற்றது கையளவு ?

    //ஜனாதிபதியாக அவர் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட அரசு முடிவுகளில், அவர் கையொப்பமிட்ட சட்டங்கள் அனைத்திற்கும் அவர் பொறுப்பேற்க முடியும்.//

    • //ஜனாதிபதியாக அவர் இருந்த காலத்தில் எடுக்கப்பட்ட அரசு முடிவுகளில், அவர் கையொப்பமிட்ட சட்டங்கள் அனைத்திற்கும் அவர் பொறுப்பேற்க முடியும்//

     ஜனாதிபதி பதவி என்பதன் அர்த்தத்தை புரிந்து கொள்ள முயற்சிக்கவும் . கவுசிலர் பதவி போல நினது கொண்டு உளர் வேண்டாம் . அரசியல் அமைப்பு பற்றி படியுங்கள்

   • \\பாதுகாப்பு துறை, விண்வெளி ஆய்வுத்துறையில் கொள்கை முடிவுகளை எடுக்கும் உயர் அதிகாரி……………….தனிப்பட்ட அளவில் அவர் எந்த ஒரு கட்சிக்கும் ஆதரவு அளித்ததாக எனக்கு தெரியவில்லை.//

    கட்சியையும் ஆட்சியையும் ஒன்னாப்போட்டு குழப்புறீங்க.முதலாளித்துவ அரசமைப்பில் ஆளுகின்ற கட்சிகள் மாறி மாறி வரலாம்.அரசு என்பது நிலையானது.அதன் கொள்கைகளும் நிலையானது..அவை கட்சிக்கு ஏற்ப மாறுவதில்லை.காங்கிரசும் பா.ச.க.வும் கடந்த கால் நூற்றாண்டு காலம் மாறி மாறி ஆண்டாலும் இடையில் ஓரிரு ஆண்டுகள் உதிரிகட்சிகள் ஆண்டாலும் தாரளமயமாக்கல் நிற்கவில்லை.காசுமீரையும் வட கிழக்கு மாநிலங்களையும் ஆக்கிரமிக்கும் மூர்க்கம் எள்ளளவும் மாறவில்லை.அவர்களுக்கிடையே நடைபெறும் மோதல்கள் மேம்போக்கானவை. ஆளும் வர்க்கத்துக்கு யார் சேவை செய்வது அதில் யார் அதிகமாக பொறுக்கி தின்பது என்ற போட்டியே அவர்களுக்கிடையே நடைபெறுகிறது.இதை அப்படியே கலாமுக்கு பொருத்தி பாருங