Saturday, July 4, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் ஊழல் பாட்டிலுக்கும் சுதந்திரம் - பாருக்கும் சுதந்திரம் !

பாட்டிலுக்கும் சுதந்திரம் – பாருக்கும் சுதந்திரம் !

-

ds poem 3சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..

ஃபுல்லுக்கும் சுதந்திரம்
குவார்ட்டருக்கும் சுதந்திரம்
போலீசுக்கும் சுதந்திரம்
பூட்ஸ் காலுக்கும் சுதந்திரம்
எதிர்த்து யாரும் கேட்டாக்கா
பொய் வழக்கு நிரந்தரம்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..

பாட்டிலுக்கு சுதந்திரம்
`பாருக்கும்’ சுதந்திரம்
பாட்டிலுக்கு சல்யூட் வைக்கும்
ஏட்டையாவுக்கு சுதந்திரம்
எதிர்த்து யாரும் கேட்டாக்கா
இடுப்பெலும்பு முறிஞ்சிடும்

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..ds poem 1

குடிகார தேசமாக
டாஸ்மாக்கு சுதந்திரம்
குறிஞ்சி, முல்லை, மருதமெல்லாம்..
குடிச்சு சாக சுதந்திரம்
இனி குடிக்கலேன்னு மறுத்தாலும்
அரசு, குரல்வளைய நெறிச்சிடும்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்..

ஆற்று மணல அள்ளி விற்க
மாஃபியாவுக்கு சுதந்திரம்
கிரானைட்டுக்கு வெடிவைக்க
குண்டர்களுக்கு சுதந்திரம்
கேனு கேனா தண்ணி உறிய
பெப்சி.. கோக்குக்கு சுதந்திரம்
ஏன்னு யாரும் கேட்டாக்கா
இருக்காது உயிர் போயிடும்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்

கழனி, காடு நிலத்தை பிடுங்க
கார்ப்பரேட்டுக்கு சுதந்திரம்
கரண்டு, கல்வி இயற்கையை சுரண்ட
அம்பானி, அதானிக்கு சுதந்திரம்
ஒரு தரம்.. இரண்டுதரம்.. மூணுதரம்
நாட்டை அமெரிக்காவுக்கும்
அந்நிய கார்ப்பரேட்டுக்கும் அடிமையாக்கும்
மோடி கும்பல் ஜோடிசேர சுதந்திரம்
மூணு வர்ண கொடியை ஏற்றும்
“நாலு வர்ண” பாசிசத்துக்கு சுதந்திரம்!

ds poem 2அன்னிய திமிருக்கு அடி பணியாமல்
மண்ணின் மானம் காத்த மருதுபாண்டி நெஞ்சுரம்
அடிமை விலங்கை அழித்தொழிக்க
ஆர்த்தெழுந்த ஒண்டிவீரன் போர்த்திறம்,
அல்லல்பட்டு செக்கிழுத்து
அடக்கு முறைக்கு சவால் விட்டார் வ.உ.சிதம்பரம்
பொதுவுடமை இந்தியாவை கனவுகண்ட
பகத்சிங் தோழர்களின் இன்னுயிர்
இந்த மண்ணின் அடிஉரம்…..
இது கார்ப்பரேட் ஆண்டைகளின்
காட்டுதர்பாருக்கா அடங்கிடும்,
போராட்ட தலைமுறை புதிது புதிதாய் எழுந்திடும்!

சுதந்திரம்.. சுதந்திரம்.. சுதந்திரம்
மக்களை ஏய்ப்பது இனி தகர்ந்திடும்!

__________________________

துரை.சண்முகம்

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. அன்னிய திமிருக்கு அடி பணியாமல்
  மண்ணின் மானம் காத்த மருதுபாண்டி நெஞ்சுரம்
  அடிமை விலங்கை அழித்தொழிக்க
  ஆர்த்தெழுந்த ஒண்டிவீரன் போர்த்திறம்,
  அல்லல்பட்டு செக்கிழுத்து
  //அடக்கு முறைக்கு சவால் விட்டார் வ.உ.சிதம்பரம்
  பொதுவுடமை இந்தியாவை கனவுகண்ட
  பகத்சிங் தோழர்களின் இன்னுயிர்
  இந்த மண்ணின் அடிஉரம்…..
  இது கார்ப்பரேட் ஆண்டைகளின்
  காட்டுதர்பாருக்கா அடங்கிடும்,
  போராட்ட தலைமுறை புதிது புதிதாய் எழுந்திடும்!//

 2. இந்தியாவிலேயே “பாருக்கு” பாதுகாப்பு கொடுத்தது…ஆத்தா மட்டும்தான்
  போலிசு பயிற்சியின்போதே பாரை பாதுகாப்பது எப்படீன்னு பயிற்சி உண்டாம்

 3. அரசுக்கு விசுவாசமாய் காவல்துறை இருப்பதாக தங்களின் தளம் காவல்துறையை கடுமையாக விமர்சனம் செய்வது ,காவல்துறையில் சில நல்லவர்களை புண்படுத்துவதாக உள்ளது,மேலும் ஒரு கூலிக்காரன் அவனது முதலாளி எதை கட்டளையிடுவானோ அதைதான் செய்யமுடியுமே தவிர நான் டாஸ்மாக்குக்கு காவல் காக்க மாட்டேன் என்பர் கூறி வீட்டுக்கு அனுப்பினால் அவர் குடும்பத்துக்கு யார் சோறு போடுவது?

  • அன்புத் தமிழன்,

   நாய்க்கும் மனிதனுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. எஜமானன் போட்ட எலும்புத் துண்டுக்காக அவன் கை நீட்டிய இடங்களுக்கெல்லாம் பாய்ந்து குதறும் நாய். அதற்கு பசியும் கறியும் மட்டுமே தெரியும். ஆனால் மனிதனுக்கு சிந்திக்கும் ஆற்றல் உள்ளது. எது சரி எது தவறு என்று பகுத்தறியும் ஆற்றலும் உண்டு.

   நாய் உருவில் காவல் துறை இருக்குமானால், அது என்ன செய்ய முடியும் எஜமானன் சொல்வதைத் தானே செய்ய முடியும், பாவம் என்று கூறலாம். ஆனால் மனித வடிவத்தில் திரியும் நாய்களை, குறிப்பாக ஏவல் நாய்களை .. என்ன செய்யலாம் ?..
   நீங்களே சொல்லுங்கள் தமிழன் ?.

 4. பாருக்கு பாதுகாப்பு அரசு ஆணை! ஏதோ காவல்துறையே பொய் உக்காந்து ஊத்தி கொடுப்பதுபோல் பாவிப்பது அறிவுள்ளவர்கள் கூறும் சொல் அல்ல! முதலில் அவர்களையும் தொழிலாளியாக பாருங்கள்! அப்புறம் பேசலாம்!

 5. http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=149132

  மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது :
  எஸ்.கண்ணப்பன் உத்தரவு

  மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களின் மனதில் பதிய வைத்து அறிவுரை வழங்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

  இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: ’’

  மதுக்கடைகளை மூடக்கோரி பொதுமக்கள் நடத்தும் போராட் டங்களில் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர் என்று தினமும் பத்திரிகைகளில் செய்திகள் வரு கின்றன. இது மாணவர்களின் கல்வி நலனை பாதிக்கக்கூடியதாக அமைந்துள்ளது.

  மாணவர்கள் பள்ளிப்பருவத்தில் தங்கள் கவனத்தை படிப்பில் மட்டுமே செலுத்தி முன்னேற் றத்துக்காக பாடுபட வேண்டும். அவர்களின் கவனம் வேறு எதிலும் சிதறாத வகையில் பாதுகாக்க வேண்டியது பெற்றோர்கள், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களையே சாரும்.

  மாணவர்களை வற்புறுத்தி போராட்டங்களில் ஈடுபடச் சொன்னாலும் அவர்கள் அதில் ஈடுபடக்கூடாது. கல்வி நலன் மற்றும் தங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொள்ள வேண்டும்.

  தலைமை ஆசிரியர்கள், தங்கள் பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின்போதும், வகுப்பு ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் நேரங்களிலும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். போராட்டங்களில் ஈடுபடக்கூடாது என்பதை அவர்களின் மனதில் பதிய வைக்க வேண்டும்.’’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க